(தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 2024.04.24) தேசிய மக்கள் சக்தி என்றவகையில் மே தினத்தில் கலந்துகொள்ளல் பற்றி கலந்துரையாடும் நோக்கத்துடன் நாங்கள் இந்த ஊடக சந்திப்பினை நடாத்த தீர்மானித்தோம். மே முதலாந் திகதி சர்வதேச தொழிலாளர் தினமாகும். உலகம் பூராவிலும் இருக்கின்ற தொழிலாளர்கள் மே தினத்தில் தமது நோக்கங்களை, இலக்குகளை வென்றெடுப்பதற்காகவும் தமது ஒற்றுமையையும் பலத்தையும் காட்டுவதற்காதகவும் மே தினத்தைக் கொண்டாடுகிறார்கள். மே தினம் உருவாகின்ற தருணத்தில் உலகம் பூராவிலுமுள்ள உழைக்கும் மக்கள் பாரிய […]
(தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 2024.04.24)
தேசிய மக்கள் சக்தி என்றவகையில் மே தினத்தில் கலந்துகொள்ளல் பற்றி கலந்துரையாடும் நோக்கத்துடன் நாங்கள் இந்த ஊடக சந்திப்பினை நடாத்த தீர்மானித்தோம். மே முதலாந் திகதி சர்வதேச தொழிலாளர் தினமாகும். உலகம் பூராவிலும் இருக்கின்ற தொழிலாளர்கள் மே தினத்தில் தமது நோக்கங்களை, இலக்குகளை வென்றெடுப்பதற்காகவும் தமது ஒற்றுமையையும் பலத்தையும் காட்டுவதற்காதகவும் மே தினத்தைக் கொண்டாடுகிறார்கள். மே தினம் உருவாகின்ற தருணத்தில் உலகம் பூராவிலுமுள்ள உழைக்கும் மக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி இருந்தார்கள். நிகழ்கால உலகில் ஏகாதிபத்தியம் சிதைவடைந்ததன் காரணமாக உலகம் பூராவிலும் உள்ள மக்கள்மீது பாரிய சுமை ஏற்றப்பட்டுள்ளது. அதைப்போலவே உழைக்கும் மக்கள் வென்றெடுத்த உரிமைகள் கத்தரிக்கப்பட்டு வருகின்றன. மக்கள் உயிர்வாழ முடியாத நிலையை எதிர்நோக்கி இருக்கிறார்கள். உலகம் முழுவதிலும் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. அதைப்போலவே யுத்த தீச்சுவாலைகள் பற்றியெரிகின்றன.
இன்றளவில் இலங்கை பொருளாதாரரீதியாக வங்குரோத்து நிலைக்கு உள்ளாக்கிய ஒரு நாடாகும். செலுத்தித் தீர்க்க முடியாத கடன் சுமை ஆட்சியாளர்களால் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. செலுத்த முடியாத வரிச்சுமை மக்கள்மீது சுமத்தப்பட்டுள்ளது. ஊழல் – மோசடி, பொதுப்பணத்தை விரயமாக்குதல், அரசியல்வாதிகளால் மக்கள் ஏமாற்றப்படுதல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. வரலாற்றுக் காலந்தோட்டே மக்கள் வென்றெடுத்த உரிமைகள் தற்போது கத்தரிக்கப்பட்டு வருகின்றன. உலகம் பூராவிலும் போன்றே எமது நாட்டு மக்களும் பாரதூரமான பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகிறார்கள். 1886 இல் ஐக்கிய அமெரிக்காவின் சிக்காகோ நகரத்தில் உழைக்கும் மக்கள் ஏறக்குறைய 12 – 15 மணித்தியாலங்கள் வரையான சேவைக்காலத்திற்குப் பதிலாக எட்டு மணித்தியாலங்களைக்கொண்ட வேலைநாளைக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அப்போதைய ஆட்சியாளர்கள் அந்த ஆர்ப்பாட்டங்களை அடக்கினார்கள். ஒருசில தொழிலாளர் தலைவர்கள் தமது உயிர்களை இழக்கவேண்டிய நிலையேற்பட்டது. ஆயினும் அவர்களின் போராட்டம் வெற்றிபெற்றது. மேற்படி போராட்டத்தின் ஞாபகார்த்தமாக மே முதலாந் திகதியை சர்வதேச தொழிலாளர் தினமாக பிரகடனஞ் செய்து நடாத்தி வருகிறார்கள். 1886 இல் எட்டு மணித்தியால வேலைநாளை வென்றெடுப்பதற்காகவே போராட்டம் நடாத்தப்பட்டது. எனினும் தற்போது நவலிபரல்வாத செயற்பாடுகளின் மத்தியில் வென்றெடுத்த எட்டு மணித்தியால வேலைநாள் அபகரிக்கப்பட்டுள்ளது. பெண்களைக்கூட எட்டு மணித்தியாலங்களுக்கு மேலாக வேலைசெய்ய நிர்ப்பந்திக்கப்பட்டு வருகின்றது. அவ்வாறு வேலைசெய்வதன் மூலமாகக்கூட உயிர்வாழ போதுமான சம்பளம் கிடைக்காத நிலைமை உருவாகி உள்ளது.
இந்த காலகட்டமானது மக்களால் உரிமைகளை வென்றெடுக்கக்கூடிய காலகட்டமல்ல. உழைக்கும் மக்களுக்கு நாங்கள் கூறுவது இந்த ஆட்சியாளர்களிடம் உரிமைகளைக் கோருவதில் அர்த்தமில்லை. அவர்கள் உரிமைளை வழங்கத் தயாரில்லை. தோன்றியுள்ள நிலைமைகளின்கீழ் உரிமைகளை வழங்க இயலாது. இந்த கொடிய ஆட்சியை தோற்கடித்து அனைவருக்கும் நியாயத்தை நிலைநாட்டக்கூடிய நீதியான சமூகமொன்றை உருவாக்குவதுதான் எமது நாட்டின் முற்போக்கான மக்களுக்கு, இடதுசாரி மக்களுக்கு இருக்கின்ற ஒரேயொரு மாற்றுவழி. தேசிய மக்கள் சக்தி என்றவகையில் “நாட்டை கட்டியெழுப்பும் தீர்வுக்கு – மக்கள் சக்தி ஓரணியில்” எனும் தொனிப்பொருளைக் கொண்டதாக மே தினத்தை நடாத்த வேண்டுமென நாங்கள் தீர்மானித்தோம். தேசிய மக்கள் சக்தி கட்டியெழுப்பப்பட்ட பின்னர் நடாத்தப்படுகின்ற முதலாவது மே தினம் இதுவாகும். எதிர்காலத்தில் சனாதிபதி தேர்தல் நடாத்தப்படவுள்ள ஒரு தருணத்திலேயே இந்த மே தினம் நடாத்தப்படுகின்றது. இந்த மே தினம் சனாதிபதி தேர்தலுக்கு வலிமை சேர்க்கின்ற பிரமாண்டமான பாய்ச்சலாக அமையுமென நாங்கள் நம்புகிறோம். நாட்டைக் கட்டியெழுப்புகின்ற தீர்வுக்காக மக்கள் சக்தியை திசைகாட்டியை சுற்றி ஒன்றுசேர்ப்பதுதான் எமது நோக்கம். அதற்காக பெருந்திரளான மக்களை இணைத்துக்கொண்டு மே தினத்தை நடாத்த நாங்கள் தீர்மானித்துள்ளோம். இந்த வருடத்தில் உருவாக்குகின்ற பிரமாண்டமான பலத்தைப் பயன்படுத்தி, இந்த நாட்டை வங்குரோத்து அடையச்செய்வித்த கொடிய ஆட்சியை தோல்வியுறச் செய்வித்து, நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய மக்கள் நேயமுள்ள ஆட்சியை உருவாக்குவதே எமது நோக்கமாகும். அதற்கான சக்தியை அணிதிரட்டுவதே எமது நோக்கமாகும்.
பெருந்தொகையான மக்களை கொழும்பிற்கு ஒன்றுதிரட்டுவது சிரமமானதென்பதால் பெருமளவிலான மக்களை தொடர்புபடுத்திக் கொள்வதை நோக்கமாகக்கொண்டு நாங்கள் நான்கு இடங்களில் மே தினத்தை கொண்டாடுகிறோம். யாழ்ப்பாணம், அநுராதபுரம், கொழும்பு, மாத்தறை ஆகிய நான்கு பிரதான நகரங்களில் நான்கு மே தினக் கொண்டாட்டங்களை நடாத்த தீர்மானித்துள்ளோம். யாழ்ப்பாணத்தில் மே தினக் கூட்டத்தை முதலாந் திகதி காலைப்பொழுதிலும் ஏனைய மே தினக் கூட்டங்களை மாலைப்பொழுதிலும் நடாத்தக் கருதியுள்ளோம்.
நிலவுகின்ற இந்த கொடிய ஆட்சியை முடிவுறுத்துவதற்காக மக்களை அணிதிரட்டுவதே எமது தொனிப்பொருளாக அமைகின்றது. இன்றளவில் எமது நாட்டின் ஒவ்வோர் இனக்குழுவும் இந்த ஆட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. உயிர்வாழ்வது மிகவும் சிரமமானதாக மாறிவிட்டது. உழைக்கும் மக்களுக்கு சம்பள அதிகரிப்பு கிடைக்காததைப்போன்றே வரிச்சுமை அதிகரிப்பதும் பொருட்களின் விலையேற்றமும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. கல்வி நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதைப்போன்றே பிள்கைளுக்கு கற்பதற்கான வாய்ப்பு அற்றுப்போயுள்ளது. தனியார் கல்விக்கான விலைமட்டங்கள் அதிகரித்துள்ளன. பிள்ளைகளுக்கு கல்விபுகட்டுவது பெற்றோர்களுக்கு சுமையாக மாறிவிட்டது. மறுபுறத்தில் சுகாதாரத் துறையின் சீரழிவு காரணமாக நோயாளிகள் சிரமங்களை எதி்ர்நோக்கி வருகிறார்கள். பொதுவில் சமூகக் கட்டமைப்புகள் சீரழிந்து அராஜகநிலையுற்று சமூகத்தில் பாதுகாப்பற்ற நிலைமை தோன்றியுள்ளது. சிறுவர்களைப்போன்றே பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாமல் போயுள்ளது. இந்த சமூகம் மனிதர்களுக்கு மனிதர்களாக வாழமுடியாத நிலைமை உருவாகி இருக்கின்றது. இவ்வாறான நிலைமையைத் தாங்கிக்கொண்டு இத்தகைய சமூகமொன்று நிலவ இடமளிக்க நெறிமுறைசார்ந்த மக்களுக்கு உரிமை கிடையாது.
எமது நாட்டின் உழைக்கும் மக்கள், தொழில்வாண்மையாளர்கள், முற்போக்குச் சக்திகள் இந்த அனைவருக்குமே தெரிவுசெய்ய இருப்பது ஒரேயொரு மாற்றுவழிதான். எமக்கு கிடைக்கின்ற முதலாவது சந்தர்ப்பத்திலேயே இந்த ஆட்சியை மாற்றியமைத்து புதிய ஆட்சியொன்றைக் கட்டியெழுப்பவேண்டும். நாங்கள் செய்யவேண்டியது ஆட்சியொன்றைக் கட்டியெழுப்புவது மாத்திரமல்ல: நிலவுகின்ற இந்த சமூகத்தில் ஆழமான மாற்றமொன்றை ஏற்படுத்துவதாகும். இந்த கடன்வாங்கித் தின்கின்ற, விற்றுத் தின்கின்ற பொருளாதாரத்திற்குப் பதிலாக உற்பத்தியை அடிப்படையாகக்கொண்ட பலம்பொருந்திய, உறுதியான பொருளாதாரமொன்றை உருவாக்க வேண்டும். எம்மிடம் தேசிய மறுமலர்ச்சியொன்றின் செயற்பொறுப்பு கையளிக்கப்பட்டுள்ளது. அதற்காக மக்களை ஒருங்கிணைக்கின்ற மற்றும் உண்மையான சுதந்திரத்தை வென்றெடுக்கவேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது. அனைத்தையும் ஒன்றிணைத்த மக்கள் புலனுணர்வுமிக்கவர்களாக பங்களிக்கின்ற வேலைத்திட்டமொன்று எமக்கு அவசியமாகி உள்ளது. அதற்காக மக்களை அணிதிரட்டுகின்ற, பிரமாண்டமான அடியெடுப்பினை வைக்கின்ற தருணமாக மே தினத்தை மாற்றிக்கொள்வோம். அதற்காக 2024 மே தினத்தை சர்வதேச தொழிலாளர் தினத்தை தேசிய மக்கள் சக்தி என்றவகையில் விரிவான தொனிப்பொருளின் ஊடாக பொதுமக்களுக்கு அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்களை அணிதிரட்டுகின்ற தினமாக மாற்றிக்கொள்வோம். நாங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து இந்த சமூகத்தை மாற்றியமைக்கின்ற தீர்மானத்தை மேற்கொள்வோமென உழைக்கும் மக்கள், கமக்காரர்கள், தொழில்வாண்மையாளர்கள், மீனவர்கள், பெண்கள், இளைஞர் உள்ளிட்ட நாட்டு மக்கள் அனைவரிடமும் வேண்டுகோள் விடுக்கிறோம்.
எமது நாட்டின் தொழிலாளர்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தவர்களும் தொழிலாளர் உரிமைகளைப் பறித்தெடுப்பவர்களும் தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகிறார்கள். தொழிலாளர்கள் சம்பள அதிகரிப்பினைக்கோரி புரிகின்ற ஆர்ப்பாட்டங்கள் மீது தாக்குதல் நடாத்துபவர்களும் உழைக்கும் மக்களை அடக்கியாள்பவர்களும் இந்த மே தினத்தைக் கொண்டாடுகிறார்கள். அது நகைப்பிற்குரிய விடயமாகும். திரிபுநிலையாகும். மேதினத்தின் தூய்மையைக் கெடுப்பதற்காக மேற்கொள்கின்ற அத்தகைய முயற்சிகளை தோற்கடித்திட இடையீடு செய்யுமாறு நாங்கள் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம். உழைக்கும் மக்களை உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கே மே தினத்திற்கான உரிமை உண்டு. மக்களின் உரிமைகளைக் கொடுக்காத மக்களின் உரிமைகளைப் பறிக்கின்ற இந்த ஆட்சியைக் கவிழ்த்து மக்களாட்சியை உருவாக்குவதற்காக மக்களை அணிதிரட்டுகின்ற மே தினமாக இந்த மே தினத்தை மாற்றிக்கொள்வோமென உழைக்கும் மக்களை முதன்மையாகக்கொண்ட ஒட்டுமொத்த மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.
“2024 மே தினம் பெண்களாகிய எங்களுக்கு தனித்துவமான மே தினமாகப் போகின்றது.”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய-
தேசிய மக்கள் சக்தி என்றவகையில் நாங்கள் நடாத்துகின்ற முதலாவது மே தினத்திற்காக நான்கு இடங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. இலங்கையின் அரசியல் வரலாற்றில் தீர்மானகரமான இந்த வருடத்தில் நாட்டுக்கு அவசியமான நாட்டின் பிரஜைகள் கேட்கின்ற அந்த மாற்றத்திற்கான யுகத்தை ஆரம்பிக்கின்ற சமிக்ஞையை இந்த நான்கு மே தினக் கூட்டங்களில் வெளிப்படுத்த நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்த நாட்டின் உழைக்கும் மக்கள் அனைவரையும் சேர்த்துக்கொண்டு அந்த மாற்றத்திற்குத் தயார் என்பதை அறிவிக்கின்ற தருணமாக அமையுமென்ற எதிர்பார்ப்பு எம்மிடம் இருக்கின்றது. இந்த மே தினம் உழைக்கும் பெண்களுக்கு தனித்துவமான ஒன்றாக அமைய உள்ளது. இதுவரை வரலாற்றில் கண்டிராத, முதல்த்தடவையாக அரசியல்ரீதியாக பெண்கள் வலுவூட்டப்பட்டு, தமது பலத்தை வெளிக்காட்டத் தயாராக இருப்பதை நாங்கள் கண்டோம். இது பெண்களுக்கு அரசியல்ரீதியாக தலைமைத்துவத்தைப் பெறவும், ஒழுங்கமையவும், இடையீடுசெய்யவும் ஆற்றல் நிலவுகின்றதென்பதை நாட்டுக்கும் உலகிற்கும் வெளிக்காட்டிய காலமாகும்.
எமது பெண்கள் அனைத்துப் பொருளாதாரத் துறைகளிலும் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறார்கள். எமது நாட்டின் பெண்கள் இந்நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பின் முதன்மைத்தானம் வகிக்கிறார்கள். வெளிநாட்டுத் தொழில்த்துறையில், தேயிலைச் செய்கைத் துறையில், சுதந்திர வர்த்தக வலயத்தில், சுகாதாரத் துறையில், கல்வித்துறையை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் முதன்மை செயற்பொறுப்பு பெண்களால் ஆற்றப்படுகின்றது. இதற்கு மேலதிகமாக இந்த நாட்டின் குடும்பம், பிள்ளைகள், முதியவர்களை பேணிப்பாதுகாப்பதற்காக வீட்டிலும் சமூகத்திலும் பெண்கள் பாரிய செயற்பொறுப்பினை ஆற்றிவருகிறார்கள். அந்த கவனிப்புகளுக்காக அரசாங்கங்களால் வசதிகள், மதிப்பளித்தல், உரிய இடம் வழங்கப்படவில்லை. அவள் சுரண்டலுக்கு இலக்காகின்ற பிரதான பாத்திரமாக மாறியிருக்கிறாள். இந்த சுரண்டல் மூலமாக இந்த ஊழல்மிக்க பொருளாதாரம் பேணிவரப்பட்டுள்ளது. வரி அதிகரிக்கையில், பொருட்களின் விலை அதிகரிக்கையில் பெண்ணின் வாழ்க்கை மிகவும் சிக்கலானதாக அமைவதைப்போலவே சிரமமானதாகவும் அமைகின்றது. தனது வீட்டில், தொழில்புரியும் நிறுவனத்தில், சமூகத்தில் இந்த எல்லா இடங்களிலும் பெண்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளது. அதைப்போலவே அங்கு நிலவுகின்ற அனைத்து நிலைமைகளையும் முகாமைசெய்துகொண்டு குடும்பத்தைப் பேணிப்பாதுகாத்திட அவள் பாரிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாள். அதனாலேயே 2024 மே தினம் எங்களுக்கு தனித்துவமான தினமாக அமையப்போகின்றது. நாங்கள் அனைத்துப் பெண்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம், இதுவரை கொண்டுவந்த எழுச்சி, தமது பலத்தை வெளிக்காட்ட இந்த மே தினத்தை வாய்ப்பாக மாற்றிக்கொள்வீர்களென நாங்கள் நம்புகிறோம். இந்த நாட்டை மாற்றியமைக்கின்ற பிரதான சக்தி என்றவகையில் பெண்களாகிய நாங்கள் மே தினத்தன்று ஒன்றுசேர்வோமென அழைப்பு விடுக்கிறோம்.
“இத்தடவை மே தினக் கூட்டம் நாட்டின் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் மிகவும் முக்கியமான மே தினக் கூட்டமாக அமையும்”
-தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் நிபுணத்துவ மருத்துவர் டாக்டர் நிஹால் அபேசிங்க-
நாங்கள் தேசிய மக்கள் சக்தி என்றவகையில் ஏறக்குறைய ஐந்து வருடங்களாக சமூசமயமாகி வந்துள்ளோம். கடந்த வருடங்களில் நாங்கள் மக்கள் விடுதலை முன்னணியின் மே தின ஊர்வலங்களிலும் கூட்டங்களிலும் பங்குபற்றினோம். இத்தடவை நாங்கள் தேசிய மக்கள் சக்தியின் முதலாவது மே தினக் கூட்டத்தை நடாத்துகிறோம். சனாதிபதி தேர்தலுக்கு அருகாமையிலேயே இந்த முதலாவது மே தினக் கூட்டம் நடாத்தப்படுகின்றது. இந்த மே தினக் கூட்டம் நாட்டின் அனைத்துப் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மிகவும் முக்கியமான மே தினக் கூட்டமாக அமையும். இந்த ஊழல்மிக்க அரசியலை மாற்றியமைக்கின்ற தருணத்திலேயே நாங்கள் இருக்கின்றோம். 1886 இல் இருந்து 138 வருடங்’கள் கழிந்துள்ளபோதிலும் உலகின் உழைக்கும் மக்கள் மே தினத்தை தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக, தமக்கு சாதகமான தொழில்புரியும் பின்னணியை வென்றெடுக்க மற்றும் ஒழுங்கமைவதற்காக பயன்படுத்தி வருகிறார்கள். நாங்களும் உழைக்கும் மக்களுடன் தேசிய மக்கள் சக்தி என்றவகையில் இந்த மே தினத்தைக் கொண்டாடுகிறோம்.
இதற்கு முன்னர் மக்கள் விடுதலை முன்னணி மிகவும் பெருமையுடன், ஒழுங்கமைந்தவகையில், ஒழுக்கமாக மே தினக் கூட்டங்களை நடாத்திய வரலாறு இருக்கின்றது. இத்தடவை நான்கு கூட்டங்களையும் வெற்றிகரமானதாக அமைத்துக்கொள்ள தேசிய மக்கள் சக்திக்கும் பாரிய சவால் நிலவுகின்றது. மே முதலாந்திகதி காலை யாழப்பாணம் நகரத்தில் மே தினக்கூட்டமொன்று நடைபெறும். அநுராதபுரம் பொது விளையாட்டரங்கில், கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்திற்கருகில், மாத்தறை கடற்கரைப் பரப்பில் மூன்ற மே தினக் கூட்டங்கள் மாலையில் நடைபெறும். தேசிய மக்கள் சக்தியின் அனைத்துப் வட்டார சபைகளினதும் தோழர்களைப்போன்றே பெருந்திரளான மக்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்கத் தயாராகி வருகிறார்கள். அந்த பங்கேற்பு எதிர்வரும் தேர்தல் காலத்தில் பாரிய பாய்ச்சலாக சக்தியாக அமையுமென நாங்கள் நம்புகிறோம். தமது உடல், உள உழைப்பினை விற்று வாழ்கின்ற அனைவரதும் தினம் மே முதலாந் திகதியாகும். அந்த உன்னதமான தினத்தை எமது நோக்கங்களை வெற்றியடையச் செய்விக்கின்ற முதலாவது வாய்ப்பாக மாற்றிக்கொள்வோம். எமது நாட்டை மாற்றியமைக்கின்ற திசைக்கு, சாதகமான தேசத்தை உருவாக்குகின்ற திசைக்கு நெறிப்படுத்த இந்த மே தினத்தை பயன்படுத்திக்கொள்வோமென இந்நாட்டின் அனைத்து மக்களுக்கும், பாதிக்கப்பட்ட பிரிவுகளுக்கும் தேசிய மக்கள் சக்தியென்றவகையில் நாங்கள் அழைப்பு விடுகிறோம். அனைவரையும் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டங்களில் கலந்துகொள்ளுமாறு அமைப்பு விடுக்கிறோம்.
(ஊடக சந்திப்பு – பதுளை – 24.04.2024) உமாஒயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தோடு தொடர்புடைய 248 மில்லியன் டொலர் ஆரம்பத்திலேயே கசிந்திருந்தது. கனடாவின் டப்ளின் நிறுவனம் இத்திட்டத்துக்கு 155 மில்லியன் டொலரை மதிப்பீடு செய்திருந்தது. அதன்பின்னர் ராஜபக்ஸர்கள் 516 மில்லியன் டொலருக்கு மதிப்பீடு செய்திருந்தார்கள். அதற்கிடையில் அவர்கள் பள்ளக்கில் சென்றதாக அன்றைய காலத்தில் மகிந்த அமரவீர தெரிவித்திருந்தார். அரசாங்க பத்திரிகையில் இதுகுறித்து பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. சுற்றுச்சூழலை பற்றி சிந்திக்காமல் உமாஒயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை நிர்மாணிக்கையில் 25 கோடி டொலரை கொள்ளையடித்துள்ளனர். அந்தப் பணத்தை திருடியவர்கள் யார்? எவருடைய பொக்கெட்டுக்கு […]
(ஊடக சந்திப்பு – பதுளை – 24.04.2024)
உமாஒயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தோடு தொடர்புடைய 248 மில்லியன் டொலர் ஆரம்பத்திலேயே கசிந்திருந்தது. கனடாவின் டப்ளின் நிறுவனம் இத்திட்டத்துக்கு 155 மில்லியன் டொலரை மதிப்பீடு செய்திருந்தது. அதன்பின்னர் ராஜபக்ஸர்கள் 516 மில்லியன் டொலருக்கு மதிப்பீடு செய்திருந்தார்கள். அதற்கிடையில் அவர்கள் பள்ளக்கில் சென்றதாக அன்றைய காலத்தில் மகிந்த அமரவீர தெரிவித்திருந்தார். அரசாங்க பத்திரிகையில் இதுகுறித்து பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.
சுற்றுச்சூழலை பற்றி சிந்திக்காமல் உமாஒயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை நிர்மாணிக்கையில் 25 கோடி டொலரை கொள்ளையடித்துள்ளனர். அந்தப் பணத்தை திருடியவர்கள் யார்? எவருடைய பொக்கெட்டுக்கு அந்தப் பணம் சென்றது? அதுதொடர்பில் தேடியறிய வேண்டியதில்லையா? இதெற்கெதிராக நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அது தவறா? ஊழலுக்கு எதிராக செயற்பட்டமை தவறா?
பண்டாரவளையில் நடத்தப்பட்ட ஆர்ப்பட்டத்தின் காரணமாக பாதிப்பு ஏற்பட்டதாக ஹரிண் பெர்னாண்டோ பத்திரிகைக்கு கூறியுள்ளார். ரணில் விக்ரமசிங்கவுக்கு அருகில் உள்ள உதவியாளரே இவ்வாறு கூறுகின்றார்.
அபிவிருத்தி திட்டங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்லர். நாட்டில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால், இது அபிவிருத்தியல்ல. இதுவொரு ஊழல். எனவே, கோடிகளில் இலாபம் பெறுவதாக கூறுவதைப் போன்றே பல கோடிகளில் அதற்கான நட்டத்தையும் மதிப்பீடு செய்ய வேண்டும். தேசிய மக்கள் சக்தி தலைமையிலான எமது அரசாங்கத்தில் உமாஒயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் தொடர்பில் முழுமையான விசாரணையை நாங்கள் முன்னெடுப்போம்.
(-Colombo, April 23, 2024-) நேற்று (23) முற்பகல் மவிமு தலைமை அலுவலகத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரங்கள் திணைக்களத்தின் பிரதி அமைச்சரை உள்ளிட்ட தூதுக்குழுவினர் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார்கள். சீனத் தூதுக்குழுவினர் சார்பில் இந்த சந்திப்பில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரங்கள் திணைக்களத்தின் பிரதி அமைச்சரும் அந்தக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரங்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் […]
(-Colombo, April 23, 2024-)
நேற்று (23) முற்பகல் மவிமு தலைமை அலுவலகத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரங்கள் திணைக்களத்தின் பிரதி அமைச்சரை உள்ளிட்ட தூதுக்குழுவினர் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார்கள்.
சீனத் தூதுக்குழுவினர் சார்பில் இந்த சந்திப்பில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரங்கள் திணைக்களத்தின் பிரதி அமைச்சரும் அந்தக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரங்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் Lin Tao, இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் கவுன்சலர் Chen Xiangyuan, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் Li Jinyan, பிரதிப் பணிப்பாளர் Wen Jun , பிரதி அமைச்சரின் செயலாளர் Jin Yan, இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் Jin Enze, மொழிபெயர்ப்பாளர் Zhang Guyu ஆகியோர் பங்கேற்றனர்.
தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவம்செய்து தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர்களான விஜித ஹேரத், கலாநிதி ஹரினி அமரசூரிய, பேராசிரியர் அனில் ஜயந்த பர்னாந்து, சுனில் ஹந்துன்னெத்தி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த சந்திப்பின்போது நடப்பு அரசியல் நிலைமை, எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்கள் மற்றும் வளர்ந்துவரக்கூடிய அரசியல் நிலைமைகள் பற்றி குறிப்பாக இருதரப்பினர்களிடையே கலந்துரையாடப்பட்டது.
தேர்தல் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் தயார்நிலை, அதன்பொருட்டு கடைப்பிடிக்க எதிர்பார்த்துள்ள வழிமுறைகள் மற்றும் உபாயமார்க்கங்கள் பற்றியும் தோன்றியுள்ள நெருக்கடியான நிலைமையிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக முதலில் அரசியல் உறுதிநிலையை நாட்டில் உருவாக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.
தேசிய மக்கள் சக்தி அரசியல் துறையில் வேகமாக வளர்ந்துவந்து மக்கள் மத்தியில் பிரபல்யத்யத்தையும் கவர்ச்சியையும் அடைகையில் கடைப்பிடித்த வழிமுறைகள் மற்றும் அமைப்பாண்மைப் கட்டமைப்புகள் தொடர்பிலும் சீனத் தூதுக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
பல்வேறு மக்கள் குழுக்கள், சமூக அடுக்குகள் மற்றும் வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்களுடன் நிலவுகின்ற உறவுகள், நாட்டைக் கட்டியெழுப்புகையில் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள், கட்சிக் கட்டமைப்புகள் பற்றி தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இவ்வேளையில் சீனத் தூதுக்குழுவினரிடம் வலியுறுத்தினர்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் கொண்டுள்ள பரஸ்பர நம்பிக்கை, சமூக கலாசார உறவுகள் மற்றும் ராஜதந்திர உறவுகளை தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின்கீழ் மேலும் வளர்த்துக்கொள்வது மற்றும் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்கையில் மேற்படி உறவுகளைப் பிரயோகிக்கக்கூடிய விதங்கள் பற்றியும் இருதரப்பினருக்கும் இடையில் மேலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
(-Colombo, April 13, 2024-) 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 (உயிர்த்த ஞாயிறு தினம்) இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு நீதியை ஈடேற்றுவதற்கான தேசிய மக்கள் சக்தியின் உறுதியுரை பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் இன்று (18) முற்பகல் 11.00 மணிக்கு பொரளையில் உள்ள பேராயரின் இல்லத்தில் வைத்து தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களால் கையளிக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 (உயிர்த்த ஞாயிறு தினம்) கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ அடியார்களை […]
(-Colombo, April 13, 2024-)
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 (உயிர்த்த ஞாயிறு தினம்) இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு நீதியை ஈடேற்றுவதற்கான தேசிய மக்கள் சக்தியின் உறுதியுரை பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் இன்று (18) முற்பகல் 11.00 மணிக்கு பொரளையில் உள்ள பேராயரின் இல்லத்தில் வைத்து தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களால் கையளிக்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 (உயிர்த்த ஞாயிறு தினம்) கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ அடியார்களை இலக்காகக்கொண்டு தீவிரவாதிகள் குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட மிருகத்தனமான தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும், அத்தாக்குதலால் நிர்க்கதிக்குள்ளானவர்களுக்கும் நீதியை பெற்றுக்கொடுப்பதற்காக தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் முறையாக சட்டத்தை அமுல்படுத்தும் எனவும்,
மேற்படி தாக்குதலுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புபட்ட நபர்களுக்கு எதிராக முறைப்படி சட்டத்தை அமுலாக்குமெனவும் வலியுறுத்தும் 07 விடயங்கள் அந்த உறுதியுரையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவம் செய்து பேராசிரியர் கிறிசாந்த அபேசிங்க, சட்டத்தரணி சுனில் வட்டகல, ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமரப்பெரும, சிரேஷ்ட பேச்சாளர் ரொஹான் பெர்ணான்டோ, அருண சாந்த நோனிஸ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
புத்தாண்டுச் செய்தி (-Colombo, April 13, 2024-) இலங்கை சிங்கள மற்றும் தமிழ் மக்களால் புத்தாண்டின் பிறப்பினை நிமித்தமாகக்கொண்டு கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்ற பாரிய கலாசார வைபவம் இத்தடவை 13 ஆந் திகதி இடம்பெறுகின்றது. மரபுரீதியான நம்பிக்கைக்கிணங்க சூரியன் மீன ராசியில் இருந்து மேட ராசிக்கு இடம் மாறுவதால் வட்டமொன்று நிறைவடைவதன்பேரிலான புதிய வருடப் பிறப்பினைக் கொண்டாட ஒன்றுசேருமாறு சிங்கள தமிழ் மக்களுக்கு நாங்கள் வாழ்த்துக்களை கூறிக்கொள்ள விரும்புகிறோம். புது வருட வைபவமானது வீட்டிலுள்ள பொருட்கள் தொடக்கம் மக்கள் […]
புத்தாண்டுச் செய்தி
(-Colombo, April 13, 2024-)
இலங்கை சிங்கள மற்றும் தமிழ் மக்களால் புத்தாண்டின் பிறப்பினை நிமித்தமாகக்கொண்டு கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்ற பாரிய கலாசார வைபவம் இத்தடவை 13 ஆந் திகதி இடம்பெறுகின்றது. மரபுரீதியான நம்பிக்கைக்கிணங்க சூரியன் மீன ராசியில் இருந்து மேட ராசிக்கு இடம் மாறுவதால் வட்டமொன்று நிறைவடைவதன்பேரிலான புதிய வருடப் பிறப்பினைக் கொண்டாட ஒன்றுசேருமாறு சிங்கள தமிழ் மக்களுக்கு நாங்கள் வாழ்த்துக்களை கூறிக்கொள்ள விரும்புகிறோம்.
புது வருட வைபவமானது வீட்டிலுள்ள பொருட்கள் தொடக்கம் மக்கள் வாழ்க்கையுடன் தொடர்புடைய அனைத்துப் பிரிவுகளிலும் புதியதாக அமைதல் மற்றும் புதுப்பித்துக்கொள்ளலுடன் பின்னிப்பிணைந்துள்ளது மாத்திரமன்றி அது மீண்டும் மக்கள் வாழ்க்கைமீது சாதகமான தாக்கமேற்படுத்துகின்ற சமூக நிகழ்வாகவும் அமைகின்றது. சிலகாலமாக பேணிவந்த அநாவசியமானவற்றை நீக்கிவிட்டு வீடுவாசல்களைப்போன்றே வாழ்க்கையையும் புதுத்தன்மையால் நிரப்பிக்கொள்ள வாய்ப்புவசதிகளை அமைத்துக்கொடுக்கிறது. அந்த புதுத்தன்மையில் இற்றைவரை தாம் வந்த பயணத்தை புதியகோணத்தில் சிந்தித்துப் பார்க்கச் செய்விக்கின்ற அகத்தூண்டுதலும் உள்ளடங்குகின்றது.
நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிக்குள் மக்களில் பெரும்பாலானோருக்கு புதிய வருடத்தை தமது எதிர்பார்ப்பிற்கிணங்க கோலாகலமாக கொண்டாடுதல் பற்றி சிந்தித்துப் பார்ப்பதுகூட வேதனைமிக்க அனுபவமாக அமையக்கூடும். ஒரு வட்டத்தை நிறைவுசெய்ததன் மூலமாக புத்தாண்டு பிறந்தபோதிலும் நிலவிய மற்றும் நிலவிக்கொண்டிருக்கின்ற ஆட்சிகளால் 76 வருடகாலமாக இலங்கை சமூகத்தை மக்களின் எதிர்பார்ப்புகளை தவிடுபொடியாக்குகின்ற ஓரே மூர்க்கத்தனமாக வட்டத்திற்குள் பயணிக்கச் செய்வித்ததன் காரணத்தினாலேயே அவ்வாறு நேர்ந்துள்ளது. கிடைக்கின்ற முதலாவது தருணத்திலேயே நிலவுகின்ற மூர்க்கத்தனமான ஊழல்மிக்க சமூக பொருளாதார அரசியல் வட்டத்திலிருந்து நீங்கி வங்குரோத்து நிலையுற்றுள்ள நாட்டை அதிலிருந்து மீட்டெடுக்கின்றதும் முன்னேற்றமான மற்றும் நியாயமான சமூகநிலைக்கு உயர்த்திவைக்கின்றதுமான மக்கள்நேயமுள்ள ஆட்சியை தெரிவுசெய்வதற்காக பிறந்த புத்தாண்டு வாய்ப்புவசதிகளை திறந்துவைத்துள்ளது. அவ்வாறான நிலைமையில் மாத்திரமே புத்தாண்டில் ஏற்படுத்திக்கொள்கின்ற பிரார்த்தனைகள் உண்மையாகவே ஈடேறும்.
வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கின் அனைத்து இனங்களையும் சேர்ந்த மக்கள் பேதங்களை ஒழித்துக்கட்டி அத்தகைய சுபமூகூர்த்தம் பிறக்கும்வரையே மக்கள்நேயமுள்ள ஆட்சியின் அவசியப்பாட்டுக்காக அணிதிரண்டு கொண்டிருக்கிறார்கள். நாட்டுக்கும் மக்களுக்கும் உண்மையான வெற்றியை பெற்றுக்கொடுக்கின்ற புதிய தேசிய மறுமலர்ச்சிக்கான வரலாற்றுப் பயணத்தை தொடங்க புத்தாண்டு புதிய வலிமையாக அமையட்டுமாக என நாங்கள் நல்வாழ்த்துக் கூறுகிறோம்.
அநுர குமார திசாநாயக்க
தலைவர்
தேசிய மக்கள் சக்தி
2024.04.13
(ரமழான் பெருநாள் செய்தி – 2024.04.10) இஸ்லாமிய அடியார்களால் ஒரு மாத காலமாக அநுட்டித்த நோன்பு காலத்தின் நிறைவினைக் குறிக்கின்ற ரமழான் பெருநாள் இந்த ஏப்பிறல் மாதம் 10 ஆந் திகதி பிறந்துள்ளது. அந்த பெருநாளைக் கொண்டாட ஒன்றுசேர்கின்ற இலங்கை இஸ்லாமிய அடியார்களுக்கு தேசிய மக்கள் சக்தி தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. அன்றாட வாழ்க்கையில் சிரமங்களை பொறுமையுடன் தாங்கிக்கொண்டு ஒருமாத காலமாக அநுட்டிக்கின்ற நோன்பு மூலமாக சேமித்துக்கொள்கின்ற செல்வத்தை தமது சகோதர மக்களுக்கு உதவும்பொருட்டு பாவனைக்கு எடுத்தல் […]
(ரமழான் பெருநாள் செய்தி – 2024.04.10)
இஸ்லாமிய அடியார்களால் ஒரு மாத காலமாக அநுட்டித்த நோன்பு காலத்தின் நிறைவினைக் குறிக்கின்ற ரமழான் பெருநாள் இந்த ஏப்பிறல் மாதம் 10 ஆந் திகதி பிறந்துள்ளது. அந்த பெருநாளைக் கொண்டாட ஒன்றுசேர்கின்ற இலங்கை இஸ்லாமிய அடியார்களுக்கு தேசிய மக்கள் சக்தி தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
அன்றாட வாழ்க்கையில் சிரமங்களை பொறுமையுடன் தாங்கிக்கொண்டு ஒருமாத காலமாக அநுட்டிக்கின்ற நோன்பு மூலமாக சேமித்துக்கொள்கின்ற செல்வத்தை தமது சகோதர மக்களுக்கு உதவும்பொருட்டு பாவனைக்கு எடுத்தல் ரமழான் வைபவத்தின் நோக்கமாகும். ரமழான் வழிபாட்டு முறைகளானது நிகழ்கால ஊழல்மிக்க சமூக முறைமையால் மனிதர்கள் மத்தியிலிருந்து பலவந்தமாக தூரவிலக்கி வைத்துக் கொண்டிருக்கின்ற மனிதம் மற்றும் பொதுநலம் ஆகிய பண்புகளை மீண்டும் வாழ்க்கைக்குள் கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற பிரயத்தனமாக அமைகின்றது.
எழுபத்தாறு வருடகால ஊழல்மிக்க அரசியலால் நாடும் மக்களும் தள்ளப்பட்டுள்ள பொருளாதார மற்றும் சமூகப் பேரழிவினை நாங்கள் அனுபவித்து வருகிறோம். அத்துடன் அதிகாரவேட்கைமிக்க அரசியல் தேவைகளுக்காக இனவாதம், மதவாதத்தின் அடிப்படையில் மக்களை பிரித்துவைக்கின்ற கொடிய போக்குகள் மற்றும் அதற்காக பெருநிலத்தில் இரத்த ஆறு பெருக்கெடுத்தோடிய விதத்தை நாங்கள் கண்டிருக்கிறோம். எவ்வாறாயினும் இந்த ஊழல்மிக்க அதிகாரமோகம்கொண்ட அரசியல் கலாசாரத்தையும் அதன் மூர்க்கத்தனமான தேவைகளையும் இன்றளவில் ஒட்டுமொத்த மனித சமுதாயமும் உணர்ந்து நிராகரித்து முன்நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி தருகின்றது. இந்த மக்கள் அபிப்பராயத்தைக் கண்டே ஊழல்மிக்க ஆட்சியாளர்கள் அச்சமடைந்துள்ளார்கள். மக்கள் அனைவருக்கும் தமது இனத்தை விஞ்சியதாக சகோதரத்துவத்துடன் பின்னிப்பிணைந்த ஒரே இலங்கை தேசத்தவராக எழுச்சிபெற சகோதரத்துவத்தை அடிப்படையாகக்கொண்ட ரமழான் பெருநாள் காட்டுகின்ற வழியை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம்.
இலங்கை தேசத்தில் புதிய மறுமலர்ச்சி யுகமொன்றை ஆரம்பிக்க தயாராகியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வருடமொன்றில் ரமழானைக் கொண்டாடுகின்ற இஸ்லாமிய அடியார்களுக்கு சகோதரத்துவத்தின் நாமத்தால் ஒரே இலங்கைத் தேசத்தவராக கைகோர்த்துக்கொள்ளுமாறு நாங்கள் அழைப்பு விடுகிறோம்.
அநுர குமார திசாநாயக்க
தலைவர்
தேசிய மக்கள் சக்தி
2024.04.10