(-Colombo, January 14, 2025-) “அறுவடைத் திருநாள்” என்று பொருள்படும் தைப்பொங்கல், உலகம்முழுவதும் உள்ள தமிழர்கள் மற்றும் இந்துக்களால் மிகுந்த பக்தியுடன்கொண்டாடப்படுகிறது. நிறைவான அறுவடைக்கு பங்களித்த சூரியன், பூமி, மழை மற்றும் பசுக்கள், உபகரணங்களுக்கு நன்றி செலுத்துவதுஇந்த நாளின் சிறப்பம்சமாகும். இந்த விழா ‘தை’மாதத்தின் முதல் நாளில்கொண்டாடப்படுகிறது. சூரியனின் வடக்கு நோக்கிச் செல்லும்’உத்தராயணம்’, தைப் பொங்கல் நாளில் தொடங்குகிறது. புதிய திசையைநோக்கிச் செல்லல், மனித சமூகத்தின் உள்ளக-வெளிப்புற சகவாழ்வுஎன்பனவே தைப்பொங்கல் பண்டிகையின் அர்த்தமாகும். இந்த நாட்டு மக்களின் […]
(-Colombo, January 14, 2025-)
“அறுவடைத் திருநாள்” என்று பொருள்படும் தைப்பொங்கல், உலகம்முழுவதும் உள்ள தமிழர்கள் மற்றும் இந்துக்களால் மிகுந்த பக்தியுடன்கொண்டாடப்படுகிறது. நிறைவான அறுவடைக்கு பங்களித்த சூரியன், பூமி, மழை மற்றும் பசுக்கள், உபகரணங்களுக்கு நன்றி செலுத்துவதுஇந்த நாளின் சிறப்பம்சமாகும். இந்த விழா ‘தை’மாதத்தின் முதல் நாளில்கொண்டாடப்படுகிறது. சூரியனின் வடக்கு நோக்கிச் செல்லும்’உத்தராயணம்’, தைப் பொங்கல் நாளில் தொடங்குகிறது. புதிய திசையைநோக்கிச் செல்லல், மனித சமூகத்தின் உள்ளக-வெளிப்புற சகவாழ்வுஎன்பனவே தைப்பொங்கல் பண்டிகையின் அர்த்தமாகும்.
இந்த நாட்டு மக்களின் நற்பண்புகள்,நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வுஎன்பவற்றை மேம்படுத்தி சமூக மாற்றத்திற்கான ஆரம்ப முயற்சியாகவும், சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறைக்கான புதிய ஒரு திசையின் தொடக்கமாக ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளசமயத்தில், தைப் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதுமகிழ்ச்சியளிக்கிறது. வரலாற்று ரீதியாக வேரூன்றிய ஆசிய மரபுகளில்மனிதனுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான பிணைப்பு பிரிக்கமுடியாதது. தைப்பொங்கல் தினத்தால் வெளிப்படுத்தப்படும் அந்த மரபுகள்இந்த திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
அதேபோல், தைப்பொங்கல் கொண்டாட்டம் மக்களின் கலாச்சாரவாழ்வில் புதிய நம்பிக்கைகளை கட்டியெழுப்புகிறது. நாட்டில்உருவாகியுள்ள புதிய உத்வேகத்துடன், இலங்கையர்களாகிய நம்அனைவருக்கும், “அழகான வாழ்க்கை” என்ற நம்பிக்கையை நம்இதயங்களில் சுமந்து, புத்தாண்டில் புதிய உற்சாகத்துடன் முன்னோக்கிக்கொண்டு செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்காக சுற்றுச்சூழல் முன்னேற்றத்திற்கு உகந்த முன்னுரிமை அளிக்கும் ஒரு புதிய கலாசாரநெறிமுறை இருப்பை உருவாக்குவதன் மூலம் நிலையான அமைதி, நல்லிணக்கம் என்பவற்றை மேம்படுத்துவதற்குத் தேவையான கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் தலைமை பொறுப்பு மற்றும்பொறுப்புக்கூறலை நாங்கள் ஏற்கிறோம்.
நாட்டிற்கும் மக்களுக்கும் பல நல்ல விடயங்களை நிறைவேற்றஉறுதிபூண்டு, நாட்டின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட நாங்கள், அந்தவாக்குறுதிகளை தடைகளுக்கு மத்தியிலும் பின்வாங்காததுணிச்சலுடனும் அசைக்க முடியாத உறுதியுடனும் நிறைவேற்றஉறுதிபூண்டுள்ளோம். இந்த நாட்டு மக்களின் முகங்களில் நீடித்தபுன்னகையைக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட இந்தசெயற்பாட்டில், புதிய அணுகுமுறைகளுடன், ஒற்றுமையுடனும்பங்கேற்புடனும் ஒன்றிணைய உங்கள் அனைவருக்கும் அழைப்புவிடுக்கிறேன். சுபமான ஆரம்பத்திற்கு இந்தப் பொங்கல் கொண்டாட்டம்பாரிய ஆசீர்வாதமாக அமைய வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.
இலங்கை மற்றும் உலகளாவிய இந்து பக்தர்கள் அனைவருக்கும்நல்லிணக்கம் மற்றும் நன்றியுணர்வு நிறைந்த, வளமான மற்றும்மகிழ்ச்சியான தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
அநுர குமார திசாநாயக்க
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு
2025 ஜனவரி 14 ஆம் திகதி
(-Colombo, January 12, 2025-) ஆராய்வு மட்டத்திலான கொள்கலன்களை வைப்பதற்காக புளூ மெண்டல் பகுதியில் ஐந்து ஏக்கர் பரப்பளவு கொண்ட இடம். தடயவியல் எழுதுவினைஞர்களை செயற்திறனுடன் பணியமர்த்த துறைமுகம் தொடர்பான சேவைகளில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள் உடன்பாடு இலங்கை சுங்கம் மற்றும் துறைமுகங்கள் தொடர்பான சேவைகளை வழங்கும் சங்கங்களுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையில் இன்று (12) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டது. இறக்குமதி செய்யப்படும் கொள்கலன்களின் சுங்கத்துறை விடுவிப்பில் ஏற்படும் […]
(-Colombo, January 12, 2025-)
ஆராய்வு மட்டத்திலான கொள்கலன்களை வைப்பதற்காக புளூ மெண்டல் பகுதியில் ஐந்து ஏக்கர் பரப்பளவு கொண்ட இடம்.
தடயவியல் எழுதுவினைஞர்களை செயற்திறனுடன் பணியமர்த்த துறைமுகம் தொடர்பான சேவைகளில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள் உடன்பாடு
இலங்கை சுங்கம் மற்றும் துறைமுகங்கள் தொடர்பான சேவைகளை வழங்கும் சங்கங்களுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையில் இன்று (12) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டது.
இறக்குமதி செய்யப்படும் கொள்கலன்களின் சுங்கத்துறை விடுவிப்பில் ஏற்படும் தாமதத்தை அடுத்த நான்கு நாட்களுக்குள் முடிவுக்குக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இலங்கை சுங்கம் உட்பட அரசதுறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்த ஜனாதிபதி , துறைமுகம் தொடர்பான சேவைகளை வழங்கும் சங்கங்களின் பிரச்சினைகள் குறித்தும் விரிவாக ஆராய்ந்தார்.
இதன் போது துறைமுக துறையை அபிவிருத்தி செய்வதற்கான குறுகிய கால மற்றும் மத்திய கால மற்றும் நீண்ட கால திட்டங்களைச் செயற்படுத்துவது அவசியமான போதும் தற்பொழுது எழுந்துள்ள சூழ்நிலையைத் தீர்க்க,அனைவரும் இணைந்து செயற்படுவதன் அவசியம் சுட்டிக்காட்டப்பட்டது.
தற்பொழுது எழுந்த சூழ்நிலையைத் தீர்க்க, ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களின்படி, அரச மற்றும் தனியார் துறைகளுக்கு இடையே உடன்பாடு எட்டப்பட்டன.
இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களுக்கு அனுமதி வழங்கும் செயல்பாட்டில் நிலுவையில் உள்ள தேக்கத்தைத் தீர்க்க, இலங்கை சுங்க அதிகாரிகள் வாரத்தில் ஏழு நாட்களும், 24 மணிநேரமும் பணியாற்ற உடன்பாட தெரிவித்துள்ளனர்.
பரிசோதனை மட்டத்திலுள்ள கொள்கலன்களை வைப்பதற்கான துரித நடவடிக்கையாக UCTயில் (Unity container Terminal) இடம் ஒதுக்க அமைச்சு முடிவு செய்துள்ளது. அதற்கமைய புளூ மெண்டல் பகுதியில் 5 ஏக்கர் காணியைப் பயன்படுத்த இதன் போது முடிவு செய்யப்பட்டது. ஜனவரி 31 ஆம் திகதிக்குள் இரண்டு ஏக்கர் நிலத்தை பெற்றுக் கொடுப்பதற்கும், எஞ்சிய நிலத்தை பெப்ரவரி 28 ஆம் திகதிக்குள் வழங்குவதற்கும் முடிவு செய்யப்பட்டது.
துறைமுக முனையத்தில் வேண்டுமென்றே கொள்கலன் லாரிகளை நிறுத்தி வைத்திருப்பது கொள்கலன் போக்குவரத்து நெரிசல் உக்கிரமடைய காரணம் என அடையாளம் காணப்பட்டதால், இந்தக் கொள்கலன் லாரிகளை நிறுத்துவதற்கு பேலியகொட பகுதியில் காணியொன்றை வழங்க அரசாங்கம் உடன்பாடு தெரிவித்தது.
இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களுக்கு சுங்கத்துறை விடுவிப்பு வழங்குவதில் இலங்கை தர நிர்ணய நிறுவனம், உணவு ஆணையாளர் திணைக்களம், தாவர தனிமைப்படுத்தல் பிரிவு ஆகியவற்றில் ஏற்படும் தாமதங்கள் குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. இந்த நிறுவனங்களில் ஊழியர் பற்றாக்குறை நிலவுவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அந்த வெற்றிடங்களை நிரப்பவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் நலன்புரி கொடுப்பனவுகளை அதிகரிக்கவும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
இதற்கான நிதி தேவை இருந்தால், துறைமுக அமைச்சினால் அதை வழங்க முடியும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களுக்கு சுங்கத்துறை விடுவிப்புக்கான நேரத்தில் பணிக்கு வராத தடயவியல் எழுதுவினைஞர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு தனியார் சங்கங்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தன. இந்த ஊழியர்கள் சரியான நேரத்தில் வேலைக்கு அழைத்து வரும் பொறுப்பு சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்களிடமே உள்ளது என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தினார்.
உணவு சார்ந்த பொருட்களுக்கு வெளிநாட்டு ஆய்வகங்களிலிருந்து பெறப்பட்ட சான்றிதழ்கள் கட்டாயம் என்பதையும்,அதில் ஏதேனும் முறைகேடுகள் நடத்திருந்தால், அரசாங்க சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு இறக்குமதியாளர்கள் உடன்பாடு தெரிவித்தனர்.
துறைமுக வளாகத்திற்குள் கொள்கலன்களை சுங்கத்துறை விடுவிப்பு வரையான காலம் வரை கட்டணமின்றி தரித்து வைப்பதற்கான காலத்தை இரண்டு நாட்களாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டதாகவும், அடுத்த ஜூன் மாதத்திற்குப் பிறகு இதனை ஒரு நாளாகக் குறைக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த அவசரகால செயல்முறையை ஜூன் 30 ஆம் திகதி வரை தொடர நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க , துறைமுகங்கள், சுங்கம் மற்றும் துறைமுகம் தொடர்பான ஏனைய சேவைகளை வழங்கும் தனியார் நிறுவனங்கள் யாவும் ஒரே குடும்பமாக செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.
தற்பொழுது வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கொள்கலன் வாகனங்களுக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற துறைமுக சேவை வழங்கும் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.
தொழில் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர்கள் ரஸ்ஸல் அப்பொன்சு, கபில பெரேரா, இலங்கை சுங்க அதிகாரிகள், இலங்கை துறைமுக அதிகாரிகள், இலங்கை தரநிர்ணய நிறுவன அதிகாரிகள் , உணவு ஆணையாளர் திணைக்கள அதிகாரிகள், இலங்கை கப்பல் ஏற்றுவோர் சங்கத்தின் அதிகாரிகள், கொள்கலன் உரிமையாளர்கள் சங்கத்தின் அதிகாரிகள், கொள்கலன் போக்குவரத்து செய்பவர்கள் சங்கத்தின் அதிகாரிகள் மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சுங்கத்துறை விடுவிப்பு அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
(-Colombo, January 01, 2025-) வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய நான்கு திசைகளையும் இணைத்து அனைத்து மக்களின் நம்பிக்கையையும் பெற்று 2024ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க எம்மால் முடிந்தது. அதற்கிணங்க, மக்கள் எதிர்பார்க்கும் சிறந்த ஆட்சியொன்றை உருவாக்கும் நோக்கில் அன்றிருந்த அரசியல் கலாசாரத்தில் பாரிய மாற்றத்தை மேற்கொண்டு, மக்கள் ஆணையின் பொறுப்புக்கூறல் மற்றும் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு நாம் தற்போது துரிதமாக செயற்பட்டு வருகின்றோம். கிராமிய வறுமையை ஒழித்தல், ‘கிளீன் ஶ்ரீலங்கா’ […]
(-Colombo, January 01, 2025-)
வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய நான்கு திசைகளையும் இணைத்து அனைத்து மக்களின் நம்பிக்கையையும் பெற்று 2024ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க எம்மால் முடிந்தது. அதற்கிணங்க, மக்கள் எதிர்பார்க்கும் சிறந்த ஆட்சியொன்றை உருவாக்கும் நோக்கில் அன்றிருந்த அரசியல் கலாசாரத்தில் பாரிய மாற்றத்தை மேற்கொண்டு, மக்கள் ஆணையின் பொறுப்புக்கூறல் மற்றும் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு நாம் தற்போது துரிதமாக செயற்பட்டு வருகின்றோம்.
கிராமிய வறுமையை ஒழித்தல், ‘கிளீன் ஶ்ரீலங்கா’ திட்டம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் ஆகியவை நாட்டின் முன்னணி அபிவிருத்தித் தேவைகளாக நாம் அடையாளம் கண்டுள்ளோம். அந்தப் பின்னணியில் சமூக, சுற்றாடல் மற்றும் நெறிமுறை புத்தெழுச்சியின் ஊடாக சமூகத்தை மேலும் மேம்பட்ட நிலைக்கு உயர்த்தும் நோக்கில் “கீளீன் ஶ்ரீலங்கா” வேலைத்திட்டம் புத்தாண்டு உதயத்துடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்த பரிமாற்றரீதியான அபிவிருத்திச் செயற்பாடுகளின் ஊடாக நாடென்ற ரீதியில் நாம் 2024 ஆம் ஆண்டில் நாம் அடைந்த பொருளாதார ஸ்திரத்தன்மையை மேலும் உறுதிப்படுத்த இருக்கிறோம். அனைவருக்கும் “வளமான நாடு – அழகான வாழ்வை” பெற்றுக் கொடுப்பதற்காக புதிய மனப்பாங்குகளை மேம்படுத்தி,புதிய உறுதிப்பாடுகளை மனதில் கொண்டு சகோதரத்துவத்துடன் முன்னோக்கி வருவதற்கு 2025 புதுவருட உதயத்துடன் சிறந்த வாய்ப்பு உருவாகியிருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன்.
சுதந்திரத்தின் பின்னர் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மக்கள் நேய அரசாங்கத்தை உருவாக்கி, அனைத்து மக்களும் ஒன்றிணைந்த அபிவிருத்தியடைந்த இலங்கை பற்றிய கனவை நனவாக்கும் வாய்ப்பு உங்களுக்கும் எமக்கும் கிடைத்துள்ளது. விட்டுக்கொடுக்க முடியாத இந்தப் பாரிய பொறுப்பு நம் அனைவரின் தோள்களிலும் சுமத்தப்பட்டுள்ளது. அந்தப் பொறுப்பு குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. இந்த நூற்றாண்டின் தவறவிட்ட சாதனைகளை மீண்டும் நாட்டுக்கு வென்று கொடுக்கவும் மக்களின் கனவுகளை நனவாக்கவும், 2025ஆம் ஆண்டு புத்தாண்டில் மேலும் வீரியத்துடனும் உறுதியுடனும் அர்ப்பணிக்க நடவடிக்கை எடுப்போம்.
தேசிய மறுமலர்ச்சிக்காக எங்களுடன் இணைந்து பங்காற்றும் உங்கள் அனைவருக்கும் செழுமையும் ஒற்றுமையும் புதிய நம்பிக்கையும் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
அநுர குமார திசாநாயக்க
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு
2025 ஜனவரி 01 ஆம் திகதி
(-Colombo, December 28, 2024-) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் பிரதானிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத பொருட்கள் நாட்டிற்குள் வருவதை தடுத்தல், விமான நிலையம், சுங்கத் திணைக்களத்திற்குள் நடக்கும் ஊழல்,மோசடிகளை மட்டுப்பத்தல்,சட்டவிரோதமான முறையில் நபர்கள் நாட்டிலிருந்து வௌியேறுவதை தடுப்பது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. அதற்காக, குடிவரவு குடியகல்வு திணைக்களம், […]
(-Colombo, December 28, 2024-)
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் பிரதானிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத பொருட்கள் நாட்டிற்குள் வருவதை தடுத்தல், விமான நிலையம், சுங்கத் திணைக்களத்திற்குள் நடக்கும் ஊழல்,மோசடிகளை மட்டுப்பத்தல்,சட்டவிரோதமான முறையில் நபர்கள் நாட்டிலிருந்து வௌியேறுவதை தடுப்பது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அதற்காக, குடிவரவு குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் ஆகிய மூன்று நிறுவனங்களிலும் இணை கமரா கட்டமைப்பு மற்றும் கண்காணிப்பு நிலையத்தை ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆலோசனை வழங்கினார்.
அதேபோல், தற்போதுள்ள ஸ்கேன் இயந்திரங்களுக்குப் பதிலாக மேம்படுத்தப்பட்ட நவீன ஸ்கேன் இயந்திரங்களைப் பயன்படுத்தி இந்த நிறுவனங்கள் ஊடாக நடக்கும் கடத்தல்களை தடுப்பதற்கு நடைமுறை சாத்தியமான புதிய செயல்முறையை ஆரம்பிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மேலும், நாட்டு மக்கள் மத்தியில் சுஙகம் தொடர்பில் தற்போது காணப்படும் தவறான புரிதல்கள் களையப்பட வேண்டும் எனவும், அதற்காக கடுமையான ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதன்போது வலியுறுத்தினார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, சுங்கப் பணிப்பாளர் நாயகம் சரத் நோனிஸ், குடிவரவுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் (பதில்) பீ.எம்.டி. நிலுஷா பாலசூரிய, நிதி அமைச்சின் பணிப்பாளர் நாயகம் (தேசிய வரவு செலவு) ஜூட் நிலுக் ஷான், விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் எயார் சீப் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
(-Colombo, December 26, 2024-) •கடன் மறுசீரமைப்பு நிறைவு •சிறு மற்றும் மத்திய தர தொழில் முனைவோருக்கு பல சலுகைகள் •குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு பாதுகாப்பு பொருளாதார நிலைப்படுத்தல் செயற்பாடுகள் மற்றும் மக்களுக்கான உத்தேச நிவாரணப் பொதிகள் தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (26) நடைபெற்றது. தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும […]
(-Colombo, December 26, 2024-)
•கடன் மறுசீரமைப்பு நிறைவு
•சிறு மற்றும் மத்திய தர தொழில் முனைவோருக்கு பல சலுகைகள்
•குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு பாதுகாப்பு
பொருளாதார நிலைப்படுத்தல் செயற்பாடுகள் மற்றும் மக்களுக்கான உத்தேச நிவாரணப் பொதிகள் தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (26) நடைபெற்றது.
தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோர் இந்த ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இதன்போது வௌியிடப்பட்ட ஊடக அறிக்கை
பொருளாதார ஸ்திரப்படுத்தல் செயல்முறை மற்றும் மக்களுக்கான நிவாரணப் பொதிகள் தொடர்பான ஊடக அறிக்கை
01.பொருளாதார ஸ்திரத்தன்மை
முன்னைய ஆட்சிகள் உருவாக்கிய படுகுழியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க, பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது முக்கியமானது.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்த வேளையில், நெருக்கடிக்கு காரணமாக இருந்தவர்கள் 2022 ஏப்ரலில் ஒருதலைப்பட்சமாக வெளிநாட்டுக் கடன் பெறுவதை நிறுத்தியிருந்ததுடன், 4 வருட காலத்திற்குள் 8 தவணைகளாக கிடைக்கப்பெறவிருந்த 3 பில்லியன் டொலர்கள் வரையிலான நீடிக்கப்பட்ட கடன் வசதிகளுக்கான (EFF) சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தில் நுழைந்திருந்தனர்.
மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய கடன் ஆகியவை நிலைத்தன்மை பகுப்பாய்விற்கு ஏற்ப மறுசீரமைப்பு செயல்முறை மூலம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் தாமதிப்பு மற்றும் கடினமான தன்மை காரணமாக, நாடு மேலதிகச் செலவுகளைச் செய்ய வேண்டியிருந்ததுடன் மக்கள் மீதான அதிக சுமை அதிகபடுத்தப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், பின்னர், சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரக் கண்ணோட்டத்திற்கு அமைய, அப்போதைய நிலைமைகளின் நன்மை, தீமைகள் என்ற இரண்டையும் கருத்தில் கொண்டு, நாட்டு மக்களின் நலனுக்கான மாற்றீடுகளுடன் அரசாங்கம் முன்னோக்கி பயணிக்கிறது.
அதன்படி, வேலைத்திட்டத்தின் அளவுகோள் மற்றும் அரச வருமான வழிமுறைகளுக்கு அமைய, உரிய தலையீடு மற்றும் காலோசிதமான முறையில் வசதிகளை வழங்குவதன் ஊடாக, 2024 நவம்பர் 26 ஆம் திகதி மூன்றாவது மீளாய்வில் பணிக்குழு மட்டத்திலான இணக்கப்பாட்டினை எட்ட முடிந்தது. சர்வதேச நாணய நிதிய பணிப்பாளர் சபை அனுமதிக்கு முன்னதாக, EFF இன் அடுத்த தவணையைப் பெற்றுகொள்வதற்கு அரசாங்கம் உரிய பங்குதாரர்களுடன் இணைந்து செயலாற்றி வருகிறது.
கடன் மறுசீரமைப்பு
இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மறுசீரமைப்பை உள்ளடக்கியுள்ளது. உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு 2023 ஜூலை மாதமளவில் நிறைவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பில் உள்ளடங்கும் பலதரப்பு கடன் மறுசீரமைப்பு பல்வேறு அடிப்படைகள் மற்றும் தர்க்கங்களுக்கு அமைய கடன் வழங்குநர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் மற்றும் தனியார் சர்வதேச பிணைமுறிகள் (ISB) என்பன வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பில் உள்ளடங்கும்.
இருதரப்புக் கடன்
17 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரான்ஸ், இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைத் தலைமைத்துவம் வகிக்கும் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழு (OCC), சீனா எக்சிம் வங்கி, சீனா அபிவிருத்தி வங்கி, ஏனைய உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களான (குவைட், சவூதி அரேபியா, ஈரான், பாகிஸ்தான்) மற்றும் ஏனைய வணிக கடன் வழங்குநர்களுடன் இணைந்து இருதரப்பு கடன் தொடர்பிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழு 2024 ஜூன் மாதத்தில் உரிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளதுடன், குறித்த தீர்வுகளின் (CoT) ஒப்பீட்டு நிலையை உறுதிசெய்து, இணக்கம் காணப்பட்ட கட்டமைப்பிற்குள் சீனாவுடனான கடன் 2023 ஒக்டோபர் மாதத்திற்குள் மறுசீரமைக்கப்பட்டிருந்தது. ஏனைய உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களான (குவைட், சவூதி அரேபியா, ஈரான், பாகிஸ்தான்) உள்ளிட்ட நாடுகளுடனான கடன் அண்ணளவாக 300 டொலர் மில்லியன்களாக காணப்படுவதுடன், இது ஏனைய முழுக் கடன் மறுசீரமைப்பு செய்தலில்1% ஆக காணப்படுகிறது. ஏனைய அனைத்து இருதரப்பு கடன் வழங்குநர்களும் இணங்கிய கட்டமைப்புக்குள் மறுசீரைப்புச் செய்ய தற்போதும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
சர்வதேச பிணைமுறி கடன் வழங்குநர்கள்
மிகவும் தாமதமான சர்வதேச பிணைமுறி கடன், மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள், இணக்கமின்மை, முன்மொழிவுகளை மாற்றுதல், DSA மற்றும் சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கைகளுக்கு இசைவாக மாற்றுதல் உள்ளிட்ட பல கட்ட பேச்சுவார்த்தைகளைக் கடந்துள்ளது.
இறுதியாக 2024 செப்டம்பர் 19 ஆம் திகதி கொள்கை அடிப்படையில் (AIP) ஜனாதிபதித் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இணக்கம் காணப்பட்டது. Ad Hoc Group (AHG) மற்றும் Local banking consortium இனால் கடந்த காலங்களில் செலுத்த வேண்டியிருந்த 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் உட்பட சர்வதேச பிணைமுறிக் கடன்களில் 14.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படுகிறது.
காலோசிதமான செயற்பாடுகளை முன்னெடுத்தல் மற்றும் புதிய வசதிகளை ஏற்படுத்துவதன் ஊடாக புதிய அரசாங்கம் நாட்டை பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி நகர்த்துவதற்கான வலுவான அரசியல் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது. நிதி ஸ்திரத்தன்மைக்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் சுயாதீனமான மூன்றாம் தரப்பினரால் பாராட்டப்பட்டுள்ளதுடன், அதற்கேற்ப தரப்படுத்தல்களும் உயர்த்தப்பட்டுள்ளன.
இந்த வெற்றிக்காகு சரியான முறையில் வழங்கப்பட்ட முன்னுரிமை மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தலுக்காக மேற்கொள்ளப்பட்ட பயனுள்ள நடவடிக்கைகள் ஆகியன முக்கிய காரணங்களாகியுள்ளன. இவ்வாறாக, இலங்கை மக்களுக்கு “வளமான நடு – அழகான வாழ்வு” இனை ஏற்படுத்திக்கொடுப்பதை நனவாக்க அரசாங்கம் தனது மறுசீரமைப்புச் செயற்பாடுகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்தது. இதன்படி, பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான தீர்மானமிக்க முயற்சியாக 2024 டிசம்பர் 20 ஆம் திகதி நடைமுறையில் உள்ள பிணைமுறி பரிமாற்றத்திற்காக புதிய பிணைமுறிகளை வௌியிடுவதை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதுடன், அதனை திறம்பட செயல்படுத்துவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
2. சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான வசதிகளை வழங்கல்
2.அ.1. பராட்டே சட்ட சலுகைகளை நீடித்தல்
பராட்டே சட்டத்தை நடைமுறைப்படுத்தும் திகதியை ஒத்திவைப்பதற்குப் பதிலாக, நீண்டகாலமாக காணப்படும் பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகள் காணப்படுவதை உறுதிசெய்ய, அரசாங்கம் பங்குதாரர் குழுக்களுடன் இணைந்துகொண்டுள்ளது. இதன் பலனாக, பராட்டே சட்டத்தின் அமுலாக்கம் இப்போது 2025 மார்ச் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
2.ஆ.2.நிவாரணப் பொதி
கால நீடிப்பினால் மாத்திரம் வியாபாரங்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை. மத்திய வங்கியின் தரவுகளின்படி, 25 மில்லியனுக்கும் குறைவான கடன் மூலதனத்தைக் கொண்ட கடனாளர்களில் 99% ஆனோர் வங்கிகளுடன் கலந்தாலோசித்து தங்களது கடன்களை
செலுத்தும் முறைக்கு இணங்க 12 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 25 – 50 மில்லியன்கள் வரையிலான கடன்கள் கொடுக்கல் வாங்கல் செய்தோருக்கும் 9 மாதங்கள் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதுடன், ஏனை கொடுக்கல் வாங்கல் செயற்பாட்டாளர்களுக்கும் 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட மற்றும் மத்திய வங்கியினால் செயற்படுத்தப்படும் இந்த நிவாரணப் பொதியில், குறிப்பாக குறைந்த வட்டி விகிதங்கள், மீள் செலுத்தும் காலம் நீடிப்பு, கடன் தரப்படுத்தலில் தளர்வு மற்றும் மதிப்பீட்டு சர்ச்சைகளை தீர்ப்பதற்கு வெளிப்படையான பொறிமுறையை ஏற்படுத்துவதன் மூலம் கடன் பெறுபவர்களுக்கு பெருமளவில் நிவாரணம் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த நிவாரண நடவடிக்கைகள், பொருளாதாரத்தில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்பை உறுதி செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்படுகிறது.
2. ஆ. பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை பெற்றுக்கொள்ள உதவி
2.ஆ.1. அஸ்வெசும குடும்ப பிள்ளைகள்.
சமூகத்தில் ஆபத்திற்குட்படக்கூடிய தொகுதியிலிருக்கும் பெற்றோர்களுடைய பிள்ளைகளின் கல்வி மீதான சுமையை குறைக்கும் வகையில் எதிர்வரும் பாடசாலை தவணைக்கு அத்தியாவசியமான பாடசாலை புத்தகங்கள் மற்றும் எழுதுவினைபொருட்கள் கொள்வனவு செய்வதற்கு ஒரு பிள்ளைக்கு 6,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அஸ்வெசும பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்காக இந்த சலுகை விரைவில் ஆரம்பிக்கப்படும்.
2.ஆ.2. அஸ்வெசு பெறாத குடும்பங்களின் பிள்ளைகள்
தற்போது அஸ்வெசும கிடைக்காத, ஆனால், நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருக்கும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு கல்வி அமைச்சின் பரிந்துரைக்கமைய இந்த சலுகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்செயற்பாட்டினை விரைவில் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதோடு, பொருளாதார ரீதியாக நெருக்கடிகளை எதிர்நோக்குகின்ற மற்றும் இந்த உதவித் தொகையினை பெற்றுக்கொள்ள தகுதியான சகல பிள்ளைகளுக்கும் இந்த சலுகையை வழங்கும் வேலைத்திட்டம் இன்னும் சில தினங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
தொழில் அமைச்சர் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் – கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ
பிரதி நிதி அமைச்சர் – கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும
(-Colombo, December 25, 2024-) இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கோலகலமாக கொண்டாடி வருகின்றனர். துன்பத்தில் இருந்து அனைவரையும் காப்பாற்ற இவ்வுலகின் அவதரித்த இயேசு கிறிஸ்து, ஒருபோதும் ஏழை, பணக்காரன் என்ற கண்ணோட்டத்தில் மக்களைப் பார்த்ததில்லை. அதனால்தான் அன்னார் கடவுளின் குழந்தையாக இவ்வுலகில் பிறந்த நாளில் மிகவும் ஏழ்மையான மற்றும் அப்பாவி மனித சமூகமாக இருந்த மேய்ப்பர்களிடையே பிறக்கத் தேர்ந்தெடுத்தார். இவ்வாறாகத் தான் தேவதூதர்கள் அவர்களுக்கு நற்செய்தியை கொண்டு […]
(-Colombo, December 25, 2024-)
இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கோலகலமாக கொண்டாடி வருகின்றனர். துன்பத்தில் இருந்து அனைவரையும் காப்பாற்ற இவ்வுலகின் அவதரித்த இயேசு கிறிஸ்து, ஒருபோதும் ஏழை, பணக்காரன் என்ற கண்ணோட்டத்தில் மக்களைப் பார்த்ததில்லை. அதனால்தான் அன்னார் கடவுளின் குழந்தையாக இவ்வுலகில் பிறந்த நாளில் மிகவும் ஏழ்மையான மற்றும் அப்பாவி மனித சமூகமாக இருந்த மேய்ப்பர்களிடையே பிறக்கத் தேர்ந்தெடுத்தார். இவ்வாறாகத் தான் தேவதூதர்கள் அவர்களுக்கு நற்செய்தியை கொண்டு வந்தார்கள். எனவே, நத்தார் தினத்தில் அடிப்படை அர்த்தம், வாத பேதங்களை ஒதுக்கி, மனிதநேயத்தின் பெயரால், மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் செயற்படுவதாகும். நத்தார் தினத்தின் உண்மையான அர்த்தமான அமைதியின் பின்னணியில் இருந்து இந்த நத்தார் பண்டிகையை கொண்டாடி வருவதை உளப்பூர்வமான மகிழ்ச்சியுடன் இங்கு குறிப்பிடுகிறோம்.
சகல மக்களும் ஒன்றாக ஒரே நோக்கத்துடன் கூட்டுப் பொறுப்பாகக் கருதி நாட்டின் எதிர்காலத்திற்காக ஒன்றிணைந்த ஒரு காலகட்டத்தை நாம் அடைந்துள்ளோம், அமைதி மற்றும் நல்லிணக்கத்தினால் பிணைந்து பூமியில் ஒரு புதிய விடியலின் அரவணைப்பை நாங்கள் அனுபவித்து வருகிறோம். அந்த பிரகாசமே இயேசு நமக்குக் கொண்டுவந்த அன்பின் விடியலாகும். பிரிவினையின் இருளில் இருந்து விலகி அமைதியுடன் ஆட்சி செய்யும் தோழர்களின் பூமியாக நமது நாடு படிப்படியாக மாற்றப்படுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். மனித சுதந்திரம் மற்றும் நீதியின் அடிப்படையில் யேசுநாதர் செய்த போராட்டத்தின் காரணமாக அவர் புனிதரானார். அந்த மனிதாபிமான சுதந்திரம் மற்றும் நியாயத்தை மதித்து அவருடைய வழிகாட்டுதலை உண்மையாக்க ஒரு அரசாங்கமென்ற வகையில் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
இன்று இலங்கைக்குத் தேவையான சமூக மாற்றம் என்பது பாரியதொரு சமூக மாற்றமாகும். சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு சில துறைகளில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு அப்பாற்பட்ட முழு சமூக மாற்றமாகும். இது ஒரு மறுமலர்ச்சியாகும். அந்தத் தேசிய மறுமலர்ச்சிக்காக மிகுந்த அர்ப்பணிப்பு, பொறுமை, நிதானம், அடங்காத துணிச்சல், இடையறாத முயற்சியுடன் பணியாற்றும் நமது அரசைச் சுற்றி திரண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் நம்பிக்கைகள் எந்த வகையிலும் வீழ்ச்சியடைய விடாது அவர்கள் எதிர்பார்க்கும் “வளமான நாடு-அழகான வாழ்க்கையை” உருவாக்கும் ஒரே குறிக்கோளுடன்,மென்மேலும் வீரியத்துடனும் உறுதியுடனும் என்னை அர்ப்பணிப்பேன் என்பதை புனித நத்தார் தினத்தில் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
சுயநலம் மற்றும் தீங்கான போட்டியை சமூக கட்டமைப்பு தள்ளப்பட்டுள்ள போதும் , கிறிஸ்மஸில் வெளிப்படுத்தப்படும் மனித பண்புகளை வளர்த்து, சமத்துவத்தை மதித்து, மற்றவர்களுக்கு மரியாதை செலுத்துவதன் மூலம், சகோதரத்துவத்தையும் சகவாழ்வையும் மதிப்பதன் மூலம், அந்த சமூக கட்டமைப்பை நல்வழிப்படுத்தி மகிழ்ச்சிகரமான சமூகமொன்றுக்காக பிரஜைகள் என்ற வகையில் நாம் அனைவரும் கைகோர்க்க உறுதி பூணுவோம்.
வலுவான மற்றும் நிலையான பொருளாதாரம், சமூக நீதியை இலக்காகக் கொண்ட உண்மையான உண்மையான அரசியல் கலாச்சாரம் மற்றும் மனிதநேயம் மற்றும் சுதந்திரம் நிறைந்த ஒரு அழகான நாட்டை உருவாக்க வலுவான உறுதியுடன் நம்மை அர்ப்பணிக்க இந்தப் புனித நத்தார் தினத்தில் நாம் அனைவரும் உறுதிபூணுவோம்.
இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் இனிய நத்தார் நல்வாழ்த்துக்கள்!
அநுரகுமார திசாநாயக்க
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு
2024 டிசம்பர் 23 ஆம் திகதி