(-Jaffna, May 01, 2024-) நேற்றைய தினம் (01) தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மே தினக் கூட்டம் தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்றது. காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகிய இம்மேதினக் கூட்டத்தில் பெருந்திரளான வடக்கு மாகாண மக்கள் கலந்துகொண்டிருந்தனர். இக்கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் மற்றும் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர். […]
(-Jaffna, May 01, 2024-)
நேற்றைய தினம் (01) தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மே தினக் கூட்டம் தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்றது. காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகிய இம்மேதினக் கூட்டத்தில் பெருந்திரளான வடக்கு மாகாண மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இக்கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் மற்றும் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
நாட்டைக் கட்டியெழுப்பும் தீர்வுக்கு ஓரணியில் மக்கள் சக்தி திரண்டிருந்தது.
(-Colombo, May 01, 2024-) இன்றைய மேதினம் மிகவும் தீர்மானகரமானதாகும். இது ஊழல்மிக்க பிரபுக்கள் அமைப்பின்கீழ் நடாத்தப்படுகின்ற இறுதி மேதினம் என நாங்கள் நினைக்கிறோம். செத்தெம்பர் 17 இற்குப் பின்னர் ஒற்றோபர் 17 இற்கு முன்னர் சனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. அந்த சனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை வெற்றியீட்டச் செய்விப்பதற்கான அனைத்துத் திட்டங்களையும் நாங்கள் வகுத்து முடித்துவிட்டோம். 2025 மே தினம் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழேயே நடைபெறும். கொழும்பு மே தினத்தை […]
(-Colombo, May 01, 2024-)
இன்றைய மேதினம் மிகவும் தீர்மானகரமானதாகும். இது ஊழல்மிக்க பிரபுக்கள் அமைப்பின்கீழ் நடாத்தப்படுகின்ற இறுதி மேதினம் என நாங்கள் நினைக்கிறோம். செத்தெம்பர் 17 இற்குப் பின்னர் ஒற்றோபர் 17 இற்கு முன்னர் சனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. அந்த சனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை வெற்றியீட்டச் செய்விப்பதற்கான அனைத்துத் திட்டங்களையும் நாங்கள் வகுத்து முடித்துவிட்டோம். 2025 மே தினம் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழேயே நடைபெறும். கொழும்பு மே தினத்தை நடாத்த தேசிய மக்கள் சக்திக்கு இடவசதி போதாதென்பதை நாங்கள் உணர்ந்தோம். பொதுவாக நாங்கள் யாழ்ப்பாணத்தில் நடாத்துகின்ற மே தினத்திற்கு மேலதிகமாக அநுராதபுரம், மாத்தறை மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் மூன்று பிரதான மே தினங்களை நடாத்த தீர்மானித்தோம். அநுராதபுரம், மாத்தறை, கொழும்பு ஆகிய எல்லா இடங்களையும் ஒரே மக்கள் வெள்ளமாக மாற்றி தேசிய மக்கள் சக்தியின் மே தினத்தில் மக்கள் பங்கேற்றுள்ளார்கள்.
மே தினத்தைக் கொண்டாடுவது நாங்கள் மாத்திரமல்ல. செத்தம் வீதியில் நடாத்தப்படுகின்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மேடையில் மகிந்த ராஜபக்ஷவின் முன்னாள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், கோட்டாவின் அமைச்சர் நாலக்க கொடஹேவா, ரணிலின் முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச, கயந்த கருலணாதிலக, கிரிஎல்ல, ராஜித போன்ற கும்பல் இருக்கின்றது. மைத்திரிபால சிறிசேனவின் முன்னாள் அமைச்சர் டிலான் பெரேராவும் இருக்கிறார். கெம்பல் மைதானத்திற்குச் சென்றால் மகிந்த ராஜபக்ஷ, அவருடைய அரசாங்கத்தில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, கோட்டாவின் அரசாங்கத்தில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அங்கே இருக்கிறார். கள்ளன் – பொலீஸ் விளையாட்டில் ஈடுபட்டு இருபக்கமாக பிரிந்தார்களோ தெரியவில்லை. மாளிகாவத்தைக்குச் சென்றால் அங்கே மைத்திரிபால சிறிசேனவின் அமைச்சர் ஹரீன் பர்ணாந்து, மனுஷ நாணாயக்கார, ரணிலின் அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட அமைச்சர்கள் இருக்கிறார்கள். கிருளப்பனை பக்கத்தில் அநாதைகள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் நான்கு இடங்களில் இருக்கையில் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் மாத்திரம் நான்கு இடங்களில் இந்த நாட்டை மாற்றியமைப்பதற்காக ஏகோபித்து, ஒற்றுமையாக, ஐக்கியமாக ஒரு சக்தி என்றவகையில் அணிதிண்டிருக்கிறோம். இலங்கையில் முதல்த்தடவையாக பொதுமக்களின் கைகளுக்கு அதிகாரம் மாறுவதற்கான செயலாற்றி வருகிறோம். அதனால் ஊழல்மிக்க பிரபுக்கள் வர்க்கம் பதற்றமடைந்து தலைகால் புரியாமல் இருக்கிறார்கள்.
ஐ.ம.ச. என்பது முதிர்ச்சியற்ற, பச்சிளங் குழந்தைபோன்ற குழுவொன்றாகும். காலையும் மாலையும் அழுதுபுலம்புவதை சகித்துக் கொண்டிருக்க முடியாது. மே தினத்திற்காக நாங்கள் கேட்ட இடம் கிடைத்ததென்ற அவலக்குரல். தற்போது ஒருமாத காலமாக விவாதம் விவாதம் என புலம்பிக்கொண்டு இருக்கிறார்கள். அதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ம.வி.மு. இற்கும் இடையிலான விவாதம் என்ற புலம்பல். நாங்கள் விவாதத்திற்காக ஒழுங்கமைந்தவகையில் செயலாற்றி தோழர் நளிந்த ஜயதிஸ்ஸவை இணைப்பாளராக நியமித்து ஐ.ம.ச. பொதுச் செயலாளருக்கு நான்கு தினங்களை கடிதம் மூலமாக அறிவித்தோம். மே 07,09,13,14 ஆகிய தினங்களில் ஒன்றுவீதம் விவாதத்தை நடாத்த பொருத்தமான திகதியை தெரிவுசெய்து அறிவிக்குமாறும், அதன் பின்னர் விவாதம் நடாத்தப்படுகின்ற விதம் பற்றி கலந்துரையாடுவோம் எனக் கூறியதும் அந்த நான்கு நாட்களிலும் வேலையாம். நாங்கள் அவ்விதமாக நடந்துகொள்ளும் போது அவர்கள் மொணறாகல பிரதேசத்தின் பாடசாலையொன்றின் ஆரம்பப் பிரிவின் பிள்ளைகளைச் சூழவைத்துக்கொண்டு “நாங்கள் விவாதத்திற்கு பயமில்லை, கோழைகள் போல் தப்பிச்செல்ல மாட்டோம், நான் எந்தவொரு விவாதத்திற்கும் தயார்” எனக் கூறுகிறார். மயானத்திற்கு அருகில் போகும்போபது அதிகமாக பயந்தவர் உரத்த குரலில் கத்துவது போல். இந்த விவாதம் பற்றி நான் மேடையில் பேசுகின்ற முதலாவது தருணம் இதுவாகும். இந்த விவாத நோயைக் குணப்படுத்த வேண்டும். தோழர் நளிந்த ஜயதிஸ்ஸ கடந்த 24 ஆந் திகதி மே 20 ஆந் திகதிக்கு முன்னர் திகதியொன்றை அறிவிக்குமாறும் திட்டவட்டமாக நடந்துகொள்வோம் எனவும் அறிவித்தார். நாங்கள் கூறிய நான்கு நாட்களில் முடியாவிட்டால் அவர்களிடம் தினமொன்றைக் கேட்டோம். அவர்களிடம் அவர்களுக்கே உரித்தான அரசியல் நிகழ்ச்சிநிரலொன்று கிடையாது.
தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் எம்மீது நிலவுகின்ற மக்களின் விருப்பத்தை மக்கள் சக்தியாக மாற்றுகின்ற திட்டமொன்றை தயாரித்து அமுலாக்கினோம். நாங்கள் சரியானவகையில் கிராமங்களை ஒழுங்கமைத்தோம். இங்கே இருக்கின்ற பெரும்பாலானவர்கள் வட்டார சபையொன்றின் அங்கத்தவர்களாவர். எமது நாட்டின் பெண்கள் அரசியல் தொடர்பில் குறைவாக ஆர்வம் காட்டுவதால் அரசியல் மாற்றமொன்றிற்காக அவர்களை பங்கேற்கச் செய்விப்பதற்காக பெண்கள் அமைப்புக்களை கட்டியெழுப்பி மாவட்ட மாநாடுகளை நடாத்தி துல்லியமாக வேலைகளை நிறைவுசெய்தோம். இலங்கையின் மிகவும் ஒழுங்கமைந்த பெண்கள் இயக்கம் தேசிய மக்கள் சக்தியால் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அதைப்போலவே எமது நாட்டின் நீதிமன்றங்களில் 80% இற்கு அதிகமான அளவில் தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் அமைப்புகள் தாபிக்கப்பட்டு விட்டன. பொறியியலாளர்களை நிறுவன மட்டங்களிலும் மாவட்ட மட்டங்களிலும் ஏற்பாடுசெய்து யூலை 01 ஆந் திகதி அவர்களின் மாநாட்டினை நடாத்துவோம். இளைப்பாறிய முப்படையினர் கூட்டமைவானது ஜனரால்களிலிருந்து சாதாரண சிப்பாய்வரை பலம்பொருந்திய வகையில் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அதனைக் காப்பியடித்து சஜித் அமைத்ததன் பிரதானி பற்றி திருவாளர் பொன்சேகா அரிசி களவெடுத்ததால் அகற்றப்பட்டவர் எனக் கூறினார். எமது நாட்டின் நாகரிகத்திலும் வரலாற்றிலும் அளப்பரிய பணியை ஆற்றிய சங்கைக்குரியவர்களுடன் கலந்துரையாடி மிகப்பெரிய பிக்குமார்கள் இயக்கத்தை கட்டியெழுப்பி யூலை மாதத்தின் இறுதியளவில் பிரமாண்டமான பிக்குமார்கள் மாநாட்டினை நடாத்த தயாராகி வருகிறோம். ஏனைய அருட்தந்தைமார்களுடனும் குருக்கள்மார்களுடனும் கலந்துரையாடி வருகிறோம். இதன்படி தேசிய மக்கள் சக்தி மிகவும் ஒழுங்கமைந்த ஒரு சக்தியாக எம்மால் கட்டியெழுப்பப் பட்டுள்ளது.
நாங்கள் இந்த அரசியல் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் செயலாற்றி ஆங்காங்கே பிறர் பற்றிய ஒருசில விடயங்களையும் கூறிவருகிறோம். ஏனைய மேடைகளில் எம்மைப் பற்றி அடிக்கடி பேசிவருவதோடு அவர்களைப் பற்றி ஒருசில விடயங்களைக் கூறிவருகிறார்கள். அவர்களுக்கு அவர்களைப் பற்றிக்கூறுவதற்கு எதுவுமே கிடையாதென்பதால் எம்மைப் பற்றியே பிரலாபித்துக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையின் ஒட்டுமொத்த அரசியலையும் தேசிய மக்கள் சக்தியை கேந்திரப்படுத்தி நெறிப்படுத்துவதில் நாங்கள் வெற்றிபெற்றுள்ளோம். நாட்டைப் பற்றி பாரியளவில் பார்த்துக்கொண்டிருக்கின்ற புலம்பெயர் சமுதாயத்தை விளித்துப்பேச அவர்கள் போவதில்லை. நிவ்யோர்க்கிற்குப் போய் அரசி பங்கிட்டு மக்கள் வெள்ளத்தை திரட்ட முடியாதல்லவா! அதனைத் தவிர ஏனைய அனைத்துமே எமக்குப் பின்னால் வருகின்ற அரசியலாக மாறி இருக்கின்றது. வெற்றிப் படிநிலையை நோக்கி தேசிய மக்கள் சக்தியை உயர்த்திவைத்து இலங்கையின் அரசியல் பற்றிய பலம்பொருந்தி வகிபாகத்தை ஈடேற்றிக் கொண்டிருக்கிறார்கள். இளைப்பாறிய பொலீஸார் கூட்டமைவு யூன் மாதம் இரண்டாந் திகதி இளைப்பாறிய சிரேட்ட பொலீஸ் உத்தியோகத்தர்களின் தலைமையில் நடாத்தப்டபட திட்டமிடப்பட்டுள்ளது.
இன்னும் மூன்று மாதங்களில் சனாதிபதி தேர்தல் பிரகடனஞ் செயய்ப்பட உள்ளது. நீண்டகாலமாக மக்கள் விடுதலை முன்னணியுடன் முனைப்பாக செயலாற்றி 1995 இல் இருந்து மே தினங்களில் பங்குபற்றியவர்கள் இருக்கிறார்கள். பழைய தாய்மார்கள், தந்தையர், தோழர்கள் அவதூறுகளை தாங்கிக்கொண்டு 3% இற்கு வீழ்ச்சிடைகையில் பொறுமைகாத்து இதனை உயர்த்திப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். அந்த கௌரவமும் வீரவணக்கமும் அந்த தோழர்களுக்கு இருக்கின்றது. நாங்கள் வெற்றியை நோக்கிச்செல்ல அது மாத்திரம் போதுமானதாக அமையமாட்டாது. ஏனைய கட்சிகளுக்கு வாக்குகளை அளித்த, ஏனைய கட்சிகளுக்காக உழைத்தவர்கள் எம்மைநோக்கி வரவேண்டும். இங்கே இருக்கின்ற இலட்சக்கணக்கான மக்களை பார்க்கும் போது 2019 இல் எமக்கு வாக்களிக்காமல் பிறருக்கு வாக்களித்த பெருந்தொகையானோர் இருக்கிறார்கள். பழைய, எம்மைப் பிடித்துக்கொண்டு இருந்ததைப்போல் பண்டைய மரபுரிமையைப் பற்றிக் கூறுவதற்குப் பதிலாக நிகழ்காலத்தில் உயிர்வாழ வேண்டும். இந்த நாட்டுக்கு புதிய யுகமொன்றை உருவாக்குவதற்காக இலங்கையின் பலம்பொருந்திய மக்கள் இயக்கமொன்றை கட்டியெழுப்பிட வேண்டும். தேசிய மக்கள் சக்தி என்பது ஏனைய கட்சிளுக்கு எதிரான ஒரு கட்சியல்ல. அதைப்போலவே ஆளொருவருக்கு எதிராக கட்டியெழுப்பப்பட்ட இயக்கமுமல்ல. அனைத்து மக்கட் குழுக்களையும் பிரதிநிதித்துவம்செய்து இந்த நாட்டைக் கட்டியெழுப்புகின்ற மாபெரும் மக்கள் இயக்கம் இதுவாகும். பழைய கட்சிக் கோபதாபங்கள், கருத்துக்கள், பழைய கருத்தியல்கள், பழைய குப்பைகள் அனைத்தையும் வீசியெறிந்திட வேண்டும். நவீன இலங்கையின் பதிய மறுமலர்ச்சி யுகத்தை உருவாக்கி உலகத்தாருடன் முன்நோக்கிப் பயணிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
ஒருசிலர் கணிப்பிட்டில் கூறுகிறார்கள் 3%, 51% ஆக எப்படி மாறுமென்று. மூன்றரை இலட்சம் நான்கு இலட்சம் வாக்குகளாக காணப்பட்ட நிலைமை எவ்வாறு எழுபது இலட்சமாக மாறுமென கேள்வி கேட்கிறார்கள். அதைவிட சஜித் அருகில் இருப்பதாக கூறுகிறார்கள். அரசியல் என்பது அட்சர கணிதமல்ல. அரசியல் என்பது சமூக விஞ்ஞானமாகும். அரசியல் என்பது அட்சர கணிதமென்றால் 69 இலட்சத்தைப் பெற்ற கோட்டாபய இன்னமும் சனாதிபதியாக இருக்கவேண்டும். பாராளுமன்றத்தில் 2/3 ஐ பெற்ற மகிந்த இன்னமும் பிரதமராக இருக்கவேண்டும். இன்று அவர்கள் ஐந்தாவது நிறைவேற்று சனாதிபதி என்றே கூறுகிறார்கள். அரசியல் என்பது தொடர்வரிசைப்படி மாற்றமடைவதல்ல, பாய்ச்சலாகும். தேசிய மக்கள் சக்தி தற்போது இலங்கையின் மிகப்பெரிய அரசியல் பாய்ச்சலுக்கே தயாராகி வருகின்றது. எந்தவோர் அமைப்பும் மேற்கொள்கின்ற மதிப்பாய்வுகளில் தேசிய மக்கள் சக்தி உயர்ந்த இடத்திலேயே நிலவுகின்றது. மதிப்பாய்வுகளை ஒருபுறம் ஒதுக்கிவைத்தாலும் முச்சக்கர வண்டியில் ஏறினால், மருத்துவரிடம் மருந்து வாங்கச் சென்றால், சட்டத்தரணியிடம் வழக்கினை எடுத்துச் சென்றால், சாமான் வாங்க கடைக்குச் சென்றால், பஸ் வண்டியில் அருகில் அமர்ந்துள்ளவரிடம் கதைத்தால் எல்லாதே திசைகாட்டியைப் பற்றியதாகும். மேலே இருக்கின்ற மதிப்பாய்வுகளை ஒருபுறம் வைத்தாலும் மண்ணில் நிலவுகின்ற யதார்த்தம் வெற்றியை நெருங்கிக் கொண்டிருப்பதையே சுட்டிக் காட்டுகின்றது.
வெற்றியை ஆட்டங்கண்ட பல்லைப்போல் எடுத்துக்கொள்வது போதுமானதாக அமையமாட்டாது. உலகில் பாரிய மாற்றங்களை பலம்பொருந்திய அரசாங்கங்களே ஏற்படுத்தின. உலகின் எந்தவொரு நாட்டிலும் புதிய மாற்றம் இடம்பெற்றிருப்பின் அது பலப்பொருந்தி அரசாங்கங்களாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாங்கள் கைவைக்கப்போவது சிறியதொரு வேலையில்லை. 76 வருடங்களாக பயணித்துக்கொண்டிருக்கின்ற பாதையை மாற்றியமைப்பதற்காகவே வருகிறோம். 76 வருடகாலமாக பழக்கப்பட்ட அரச பொறியமைப்பொன்று இருக்கின்றது. பழக்கப்பட்ட மக்களும் இருக்கிறார்கள். பழக்கப்பட்ட சமூகமொன்று இருக்கின்றது. இந்த பாதையில் பயணிக்க நெறிப்படுத்தல் தேவையில்லை. வழமையான பாதையில் போகலாம். இந்த மாற்றத்தைச் செய்யவேண்டுமாயின் முதலில் பெரும்பான்மை மக்களின் அங்கிகாரம் அவசியமாகும். பலம்பொருந்திய மக்கள் சக்தி அவசியமாகும். எதிர்வும் மூன்று மாதங்களில் வீடுவீடாகச் செல்லுங்கள். ஒவ்வொரு பிரஜையையும் சந்தியுங்கள். நாட்டுக்கு ஏற்படுத்தியுள்ள அழிவு பற்றி எடுத்துக் கூறுங்கள். இந்த நிலைமையை மாற்றியமைப்பதற்காக தேசிய மக்கள் சக்தியிடம் உள்ள வேலைத்திட்டதை எடுத்துக் கூறுங்கள். கிராமங்கள் தோறும் திசைகாட்டியை வெற்றியீட்டச் செய்விப்பதற்காக மல்லுக்கட்டுகின்ற சமூகமொன்றை உருவாக்குங்கள். அநுராதபுரத்திலும் கொழும்பிலும் மாத்தறையிலும் யாழ்ப்பாணத்திலும் அனைவரையும் ஒன்றுசேர்த்தால் மூன்று இலட்சத்தைவிட அதிகமாகும். இதுவே பலம்பெருந்திய ஊடறுத்தல் படையணியாகும்.
நாங்கள் மாற்றியமைப்பது மரபுரீதியான அரசியலையாகும். இளைஞர் தலைமுறையினருக்கு மரபுரீதியான அரசியல் கசந்து போய்விட்டது. ஒட்டுமொத்த குடும்பமாக அரசியலுக்கு வருகின்ற முறையியலே நிலவுகின்றது. மகன்மார்கள், பாரியார்கள், தம்பிமார்கள் அந்த மேடைகளில் இருக்கிறார்கள். மாளிகாவத்தையில் பாட்டுப்பாட இந்தியாவில் இருந்து கொண்டுவந்திருக்கிறார்கள். அதன்படி ரணிலுக்கு வாக்களிக்கவும் இந்தியாவில் இருந்து கொண்டுவரவேண்டிய நிலையேற்படும். இந்த மேடையில் உள்ள நாம் எவருமே குடும்ப மரபுரிமையால் அரசியலுக்கு வந்தவர்கள் அல்ல. அரசியல் மேடைகளில் ஏறியிராத சம்பத் துய்யகொன்த்தா போன்ற முப்படைகளின் உயரதிகாரிகள், மருத்துவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், தொழில்வாண்மையாளர்கள் அனைவருமே இந்த மேடைக்கு வருகிறார்கள். மானிட உணர்வுகொண்ட எந்த ஒருவருக்கும் திறந்தநிலையிலுள்ள விரிவான மேடைதான் தேசிய மக்கள் சக்தியின் மேடை. பொதுப்பணத்தைக் கோடிக்கணக்கில் திருடிய அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அந்த மூன்று மேடைகளுக்கும் சென்றால் வீச்சு வலை போட்டு கள்வர்களைப் பிடிக்க இயலும். மாளிகாவத்தைக்குப் போனால் மத்திய வங்கிளை உடைத்தவர்களிலிருந்து அனைவருமே வீச்சு வலையில் அகப்படுவார்கள். கெம்பல் மைதானத்திற்குச் சென்றால் குடும்பத்திலுள்ள அனைவருமே மாட்டிக்கொள்வார்கள். மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கின்ற மரபுரீதியான அரசியலை மாற்றியமைத்து அந்த செல்வத்தை புனிததலத்திற்கு காணிக்கையாகக் கொடுத்த ஆதனத்தைப்போல் பாதுகாக்கின்ற புதிய அரசியல் கலாசாரம், மரபினை நாங்கள் கொண்டுவருவோம்.
அந்த பொருளாதாரத்தினால் நாடு முன்நோக்கி நகருமென அவர்கள் சதாகாலமும் கூறினார்கள். இந்த பொருளாதாரப் பயணத்தினால் நாடு நாசமடையுமென நாங்கள் பல தசாப்தங்காளக கூறிவந்தோம். மக்களை அதனை அவ்வாறே விளங்கிக்கொள்ளவில்லை. லீ குவான் யூ, மஹதீர் மொஹமட் வந்து சிங்கப்பூராக மலேசியாவாக மாற்றுவார்கள் என நினைத்தார்கள். 2022 அளவில் கடனை மீளச்செலுத்த முடியாமல் வங்குரோத்து நாடென உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்தப்பட்டது. இறுதியில் பிள்ளைகள் அனைவருமே பாஸ்போர்ட் அலுவலகத்தில் நித்திரையின்றி விழித்திருக்கவேண்டிய நிலையேற்பட்டது. நாட்டைவிட்டுச்செல்ல எல்லாவிதத்திலும் அழுத்தம்கொடுக்கின்ற மட்டமொன்று உருவாகியது. உற்பத்திப் பொருளாதாரத்தை சீரழித்து, முட்டையையும் தேங்காயையும் பொன்னாங்கண்ணிக் கீரையையும் அரசியையும் எல்லாவற்றையும் வெளிநாட்டிலிருந்து கொண்டுவருகின்ற மட்டத்தை ஏற்படுத்தினார்கள். துணிமணிகள், கடதாசி, புதிய கைத்தொழில் உற்பத்திகளை மேற்கொள்ளாத வங்குரோத்து நாட்டை உருவாக்கினார்கள். நாட்டின் வளங்களை விற்று ஒரு வருடத்தை ஓட்டிக்கொள்கின்ற பொருளாதாரத்தை உருவாக்கினார்கள். பண்டைய வளவுகளில் இருந்த நாசகார புத்திரர்களைப்போல் நடந்துகொண்டார்கள். இறுதியில் தற்போது யுக்கிரெயின் ரஷ்யா ஆகிய இருநாடுகளும் இலங்கையிலிருந்து யுத்தத்திற்காக கூலிப்படைகளை பெற்றுக்கொள்கின்ற நிலைமையை உருவாக்கினார்கள் பாரிய மனிதப்படுகொலை இடம்பெறுகின்ற இரண்டு நாடுகளுக்கிடையிலான யுத்தத்தில் கூலிப்படையினராக இராணுவத்தில் சேர்ந்துகொள்கின்ற இலங்கையர்களை உருவாக்கினார்கள்.
குற்றச்செயல்கள் மலிந்த ஒரு நாட்டை உருவாக்கி இருக்கிறார்கள். போதைப் பொருட்களை நாடு பூராவிலும் விரிவாக்கி, பெண்கள் துன்புறுத்தல், சிறுவர் துன்புறுத்தல் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் 439 யானைகளைக் கொன்று விலங்குகள்கூட வாழமுடியாத நாட்டை உருவாக்கி இருக்கிறார்கள். மலையகத்தை அழித்து, நீரூற்றுகள் வற்றிப்போய், ஆற்றுப் படுகைளை அகழ்ந்து தற்போது கடல்நீர் தெதுருஓயா ஊடாக உள்நாட்டுக்கு வருகின்றது. சுற்றுப்புறங்கள் உவர் நீரினால் நிரம்பி நாசமாக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவுகள் அதிகரித்து முழுநாடுமே அழிவடைகின்ற முறைமையொன்றே இருக்கின்றது. கூலி இராணுவத்தில் சேர்ந்து யுத்தம் புரியுமாறு இளைஞர்களுக்கு அழுத்தம்கொடுக்கின்ற ஒரு நாட்டில் இதிலேயே சஜித் பிரேமதாசாக்கள் தோணி ஒட்டுகிறார்கள். அந்த தோணியை ரவி கருணாநாயக்கமார்கள் தள்ளிவிடுகிறார்கள். அள்ளிச்செல்கின்ற ஆற்றுவெள்ளத்திற்கு எதிர்த்திசையில் தோணி ஓட்டவே நாங்கள் அதிகாரத்தைக் கோருகிறோம். ரணில் விக்கிரமசிங்கவும் ஹர்ஷ த சில்வாவும் குருவும் சீடனும் போன்றவர்கள். இவர்கள் புதியவர்களா, 2015 – 2019 பொருளாதாரப் அரசாங்கத்தின் பொருளாதாரக் குழுவில் எரான் விக்கிரமரத்ன, ஹர்ஷ ஒன்றாக இருந்தவர்களாவர். இது புதிய பொருளாதாரக் குழுவா? நாட்டுக்குப் புதிய பொருளாதார உபாயமாரக்கமொன்றைக் கொண்டுவரவே நாங்கள் தயாராகி வருகிறோம். அதற்காக மூலதனம், தொழில்நுட்பம், மூலப்பொருட்கள், திறன்கொண்ட உழைப்பு படையொன்று தேவை. உற்பத்தி செய்யப்படுகின்ற அந்த பண்டங்களை விற்பனைசெய்ய பலம்பொருந்திய சந்தையொன்று தேவை. இந்த கல்வித்திட்டமானது தொடர்ந்தம் நல்லெதொரு பிரஜையை உருவாக்குகின்ற ஒன்றல்ல. பிள்ளைகளுக்குச் சுமையாக பிள்ளைகளுக்கு ஊழ்வினையாக அமைந்துவிட்ட கல்வியாகும், அத்துடன் அம்மாவுக்கும் சுமையாகும். அம்மாவின் சுமையிலிருந்தும் பிள்ளையின் சுமையிலிருந்தும் விடுவித்துக்கொண்ட ஓர் உலகத்தடன் முன்நோக்கிச் செல்கின்ற அறிவின் திரட்சியைக்கொண்ட கல்வியொன்று அறிமுகம் செய்யப்படும்.
எமது ஒட்டுமொத்த விவசாயத்துறையுமே நாசமாக்கப்பட்டுவிட்டது. அதற்கு மீண்டும் உயிர்கொடுக்க வேண்டும். கப்பற் தொழில்த்துறையில் நாட்டை முன்நோக்கி நகர்த்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்படல் வேண்டும். பொருளாதாரத்துடன் இணைக்கப்படாதவர்கள் புழுதியாக மாற்றப்பட்டவர்கள் அங்குமிங்கும் அலைந்து திரிகிறார்கள். அவர்கள் பொருளாதாரத்தில் இருந்து அந்நியப்படுத்தப்பட்டுள்ளார்கள். கமக்காரர்கள், மீனவர்கள், இளைஞர்களை பொருளாதாரத்துடன் இணைத்துக்கொள்கின்ற புதிய வழிமுறைகளை அமுலாக்குவோம். பொருளாதாரத்தில் இருந்து பெறப்படுகின்ற பெறுபேறுகள் நியாயமானவகையில் மக்கள் மத்தியில் பகிர்ந்துசெல்ல வேண்டும். சமமான வகையிலல்ல. உழைக்கின்றவருக்கு நியாயமான பங்கு கிடைக்கவேண்டும். தற்போது பொருளாதாரம் மிகவும் குறைந்த எண்ணிக்கை கொண்டவர்களிடம் செறிவடைந்துள்ளது. அதனை விரிவாக்கிட வேண்டும். அதற்குள்ளே கைத்தொழிலதிபர்கள், புதிய தொழில்முயற்சியாளர்கள் முன்வந்து இளைஞர்களுக்கு தொழில் கிடைக்கும். அந்த பொருளாதாரத்தில் பிரஜைகளுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை, சிறந்த போக்குவரத்துச் சேவை வழங்கப்படும். முதியவர்களும் ஊனமுற்ற பிரஜைகளும் சமூகப்பொறுப்பு என்றவகையில் கவனிக்கப்படுவார்கள். எமது அரசாங்கத்தின்கீழ் முதலாவதாக உணவு, சுகாதாரம் மற்றும் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி உறுதிப்படுத்தப்படும். அடித்துச் செல்லப்படுகின்ற இந்த பாதையிலேயே அடித்துச் செல்லப்படுவதற்காக நாங்கள் வரவில்லை. அடித்துச் செல்கின்ற இந்த ஆற்றில் கடதாசி தோணிகளை ஓடவிட சஜித் பிரேதாசவினால் முடியும். வேறு எதனையுமே செய்ய முடியாது. எனினும் இதனை புதிய திசைக்கு திருப்பவே நாங்கள் வருகிறோம். புதிய அரசியல் கலாசாரமொன்று புதிய பொருளாதாரப் பயணமொன்று சகோதரத்துவமும் ஈடுபாடும்கொண்ட சமூகமொன்றைக் கட்டியெழுப்பவதற்காகவே. வெறுமனே சனாதிபதி அமர்வதற்காக அரசாங்கமொன்றை அமைப்பதில் நாங்கள் கைவைப்பதில்லை. புதிய மறுமலர்ச்சி யுகமொன்றை உருவாக்குகின்ற பணியிலேயே நாங்கள் கைவைக்கிறோம்.
ரணில் விக்கிரமசிங்க பழைய மரபின்படி அரசி கொடுத்து வாக்களைப் பெறுவதிலேயே கைவைத்துள்ளார். லயிற் பில், தண்ணீர் பில்லைக் குறைத்து மலையக மக்களின் சம்பளத்தை சற்று அதிகரிக்கவும் முயற்சி செய்கிறார். அது அரசியலல்ல, கப்பம், இலஞ்சம் வழங்குவதாகும். சஜி்த் ரணிலிடம் நவீன அரசியல் கிடையாது. சிஸ்டம் சேன்ஞ் பண்ண அதிகாரம் தேவையில்லையென அண்மையில் ரணில் கூறினார், எதிர்க்கட்சியில் இருந்துகொண்டெ செய்கிறாராம். அப்படியானால் அவரை எதிர்க்கட்சியிலேயே வைப்போம். பழைய அரசியலை நிராகரித்து கூத்தாட்டம் போடுகின்ற மே தினத்தை நாங்கள் மாற்றியமைக்கின்ற தீர்மானகரமான எல்லைக்கோடாக மாற்றிக்கொள்வோம். உழைக்கும் மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒரே ஒரேயொரு மே தின மேடை தேசிய மக்கள் சக்தியின் மேடை மாத்திரமேயாகும். குறிப்பாக கமக்காரர்களின் மாபெரும் அணிதிரளல் இன்று அநுராதபுரத்தில் நடைபெறுகின்றது. பெருந்திரளான மீனவர் சமூகத்தை முதன்மையாகக்கொண்ட குழுவினர் மாத்தறையில் குழுமி இருக்கிறார்கள். கொழும்பில் இந்நாட்டின் உழைக்கும் மக்கள் அணிதிரண்டு இருக்கிறார்கள். திருவாளர் சஜித் அவர்களே நீங்கள் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு சிஸ்டம் சேன்ஞ் பண்ணுங்கள். நாங்கள் அதிகாரத்தை வென்றெடுத்து களவு, விரயமான அரசியல், கப்பம் இலஞ்ச அரசியலை தடுத்துநிறுத்தி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி புதிய பொருளாதாரப் பயணத்தை தொடங்குவோம். உலகத்தார் முன்னிலையில் அபகீர்த்திக்கு இலக்காகியுள்ள நாட்டை கீர்த்திமிக்க நிலைமைக்கு கொண்டுவர அதிகாரம் தேவை. சஜித்திற்கு ரணிலுக்கு அரிசி பங்கிட அதிகாரம் தேவையில்லை. ஒரு முதலாளி இருந்தால் போதும். அவர்கள் புரிவது பிளவுபடுத்துகின்ற அரசியலாகும். தேசிய மக்கள் சக்தி இந்த நாட்டை புதிய மறுமல்ச்சி யுகத்திற்கு கொண்டுசெல்கின்ற அரசியலில் ஈடுபடும்.
பாரிய சுனாமி பேரழிவினால் நாசமடைந்த பேரலிய புகையிரத வீதியை 57 நாட்களில் மீளமைத்தோம். காலி பஸ் தரிப்பு நிலையத்தை அமைத்தோம். முகாம்களில் இருந்தவர்களின் பிள்ளைகளுக்காக சிறுவர் நிலையங்கள் அமைக்கப்பட்டன. எமது மருத்துவர்கள் உளநிலைசார்ந்த கிளினிக்குகளை நடாத்தினார்கள். அந்த பேரழிவில் இருந்து மக்களை மீட்டெடுப்பதற்காக நாங்கள் முகாம்களை அமைத்தோம். பின்னர் வீடுகளை அமைத்தோம். பாரிய வெள்ளப்பெருக்குகளின்போது கிணறுகளிலிருந்து நீரை இறைத்தோம். வீடுகளை அமைத்தோம். வயிற்றுப்பசி போக்க உணவு பங்கிட்டோம். முழு உலகத்தையும் பாதித்த கொவிட் பெருந்தொற்றின்போது ஒருசில வைத்தியாலைகளில் கட்டிடங்களை அமைத்தோம். எனினும் அவை எமது ஒட்டுமொத்தமானவை அல்ல. மக்கள் அனர்த்தங்களை எதிர்நோக்கிய எந்தவோர் இடத்திலும் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் பாசறைகளை அமைத்து இடையீடு செய்தோம். இப்போது தீர்மானகரமான முறையில் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இடையீடுசெய்ய வேண்டும். ரணில் இதற்கும் ஏதாவது முடிச்சுப்போடுவாரோ எனத் தெரியவில்லையென ஒருசிலர் கூறுகிறார்கள். கோவணத்தின் முடிச்சியை மாத்திரமே ரணிலுக்குப் போடமுடியும். எங்களுக்குத் தெரியாதா ரணில்! 2002 இல் அரசாங்கத்தை அமைத்தார். 2004 இல் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். 2015 இல் மைத்திரியுடன் அரசாங்கமொன்றை அமைத்தார். 2018 இல் விட்டுக்கு அனுப்பப்பட்டார். இன்று நாங்கள் சனநாயத்திற்காக இடையீடு செய்ததால் சற்று நிம்மதிப் பெருமூச்சு எடுத்தோம். டீ.எஸ். – கொத்தலாவல கட்டியெழுப்பிய கட்சி 2019 அளவில் ஒன்றுவரை வீழ்த்தப்பட்டது. அவர் சனாதிபதி தேர்தலில் தோல்வியுற்று சுருட்டிக்கொண்டு வீட்டுக்குப் போவார். நாங்கள் சனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதற்கான திட்டங்களை வகுத்துள்ளோம். நாங்கள் 25 அமைச்சுக்களை நிறுவி புதிய அமைச்சரவையை நிறுவி புதிய செயலாளர்கள் 25 பேரை நியமிப்போம். யார் பாதுகாப்புச் செயலாளராகப் போகிறார், இலஞ்சம் மற்றும் ஊழல்களை கண்டறிவதற்கான ஆணைக்குழுவிற்கு யாரை நியமிப்பபது என்ற வகையில் அடிப்படைத் திட்டங்களை வகுத்துள்ளோம். முதலாவது 24 மணத்தியாலங்களுக்குள் பாராளுமன்றத்தைக் கலைப்போம். முதலாவது சுற்றில் ரணில் வீட்டுக்கு, இரண்டாவது சுற்றில் அனைவருமே வீட்டுக்கு.
மிகவும் சிரமமான காலத்தை நாங்கள் கடந்து வந்திருக்கிறோம். அவதூறுகளுக்கு முகங்கொடுத்தோம். பொதுமக்களின் பணத்தை திருடியவர்கள் பதற்றமடையவேண்டும். ரணில் விக்கிரமசிங்க 1977 இல் அதிகாரத்தைப்பெற்று அரசியல் பழிவாங்கல்களை மேற்கொண்டு 1980 யூலை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களை வெளியில் போட்டு அபிவிருத்திச் சபை தேர்தலை கொள்ளையடிப்பதற்காக யாழ் நூலகத்தை தீக்கிரையாக்கினார்கள். கோட் அணிந்து டை போட்டுக்கொண்டிருக்கின்ற ரணிலின் டையில் இரத்தம் தோய்ந்துள்ளது. “பட்டலந்த கினிலேமவை” பாருங்கள். நிறைவேற்று சனாதிபதி பதவியை உருவாக்கிய ரணில் அரசியலமைப்பினை மாற்றிக்கொண்டு வருகையில் தமது வாழ்நாளில் ஊழல்மிக்க பிரபுக்கள் வம்சம் சவாலுக்கு இலக்காகுமென நினைத்தார்களா? தமக்கு தேவையான வகையில் அரசியலமைப்பினை மாற்றியமைத்துக்கொண்ட மகிந்த ராஜபக்ஷ அவ்வாறு நினைத்தாரா? மகனுக்கு வழிசமைத்த மகிந்த தான் தள்ளாடும் காலத்தில் இப்படி நடக்குமென நினைத்தாரா? 76 வருடங்களுக்குப் பின்னர் அவர்கள் நினைத்திராத அரசியலில், பிரகாசமிக்க அரசியல் திருப்பம், ஒளிருகின்ற அரசியல் திருப்பம், மக்களின் பாரிய எழுச்சியிலான அரசியல் திருப்பம் மூலமாக தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் வழங்கப்படுகின்றது.
மகிந்த, கோட்டாபய பேயாட்டம் ஆடும்போது சஜித்தின் தலையில் மகுடம் விழுமென நினைத்தார்கள். அவரது தலையில் பலாஇலை கிரீடமொன்று விழுகின்றது. காட்போட் வாளொன்று கிடைக்கின்றது. தற்போது அரசியல்வாதிகள் மாத்திரமல்ல ஒருசில ஊடக நிறுவனங்களும் ஊளையிடத் தொடங்கியுள்ளன. எந்தவோர் ஊடக நிறுவனத்திற்கும் அரசியல் இயக்கங்ளை விமர்சிப்பதற்கான உரிமை உண்டு. நாங்கள் தவறிழைத்தால் சுட்டிக்காட்டுங்கள். நாங்கள் அவற்றை திருத்திக் கொள்கிறோம். நாங்கள் ஒரு திறந்த அரசியல் இயக்கமாவோம். குற்றங்களையும் தவறுகளையும் புரிந்து நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு சிறையில் இருப்பவர்களுக்கு சனாதிபதி மன்னிப்பு வழங்கமாட்டோம். பிணைப்பணத்தை செலுத்திக்கொள்ள முடியாத அப்பாவியொருவர் பற்றி வேண்டுமானால் பரிசீலனை செய்வோம். நாங்கள் அனைவரிமும் கேட்டுக்கொள்வது தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். அந்த தவறுகளை ஏற்றுக்கொள்கின்ற திறந்த அரசியலே நாங்கள். எனினும் அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு அமைவாக மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதலுக்கு கட்டுப்படமாட்டோம். பயப்படவும் மாட்டோம். பெருந்தொயைான ஊடகங்கள், பெருந்தொகையான சமூக வலைத்தளங்களைச் சேர்ந்தவர்களில் பலர் எம்மோடு ஒரு வார்த்தைகூட பேசாமல் எம்மைப் பற்றி எழுதத் தொடங்கி உள்ளார்கள், கூறத் தொடங்கி உள்ளார்கள். இறுதியாகக் கூறுவது ஊர்களில் இருக்கின்ற ஏனைய அரசியல் நண்பர்களுடன் கலந்துபேசி, விழிப்புணர்வூட்டி, ஒரே அணியாக முன்நோக்கி வருமாறே. அடுத்த மே தினத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின்கீழ் சந்திப்போம்.
(-Matara, May 01, 2024-) தேசிய மக்கள் சக்தியைச்சேர்ந்த நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு கொண்டாடுகின்ற இறுதி மே தினக் கூட்டம் யாழ்ப்பாணம், அநுராதபுரம், கொழும்பு மற்றும் மாத்தறையில் மிகவும் பெருமையுடன் நடாத்தப்படுகின்றது. அடுத்த வருடத்தின் மே தினம் கொண்டாடப்படுவது தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழாகும். ஆயிரத்து எண்ணூற்றி எண்பத்தாறில் அமெரிக்காவின் ஹேமார்க்கற் நகரத்தில் எட்டு மணித்தியால வேலை நாளைக்கோரி வெள்ளைக்கொடியேந்தி பேராட்டம் நடாத்திய நிராயுதபாணிகளான மக்களுக்கு எதிராக அடக்குமுறை பிரயோகிக்கப்பட்ட தினத்தை அடிப்படையாகக்கொண்டு உலகமக்கள் மேதினத்தைக் […]
(-Matara, May 01, 2024-)
தேசிய மக்கள் சக்தியைச்சேர்ந்த நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு கொண்டாடுகின்ற இறுதி மே தினக் கூட்டம் யாழ்ப்பாணம், அநுராதபுரம், கொழும்பு மற்றும் மாத்தறையில் மிகவும் பெருமையுடன் நடாத்தப்படுகின்றது. அடுத்த வருடத்தின் மே தினம் கொண்டாடப்படுவது தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழாகும். ஆயிரத்து எண்ணூற்றி எண்பத்தாறில் அமெரிக்காவின் ஹேமார்க்கற் நகரத்தில் எட்டு மணித்தியால வேலை நாளைக்கோரி வெள்ளைக்கொடியேந்தி பேராட்டம் நடாத்திய நிராயுதபாணிகளான மக்களுக்கு எதிராக அடக்குமுறை பிரயோகிக்கப்பட்ட தினத்தை அடிப்படையாகக்கொண்டு உலகமக்கள் மேதினத்தைக் கொண்டாடுகிறார்கள். ஆட்சியாளர்களும் இந்த தினத்தைக் கொண்டாடி பல்வேறு கூத்துக்களை நடாத்துகிறார்கள். ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சிக் கும்பல், ஐக்கிய மக்கள் சக்தியின் எஞ்சியுள்ள குழுவினர் மற்றும் மொட்டின் குழுவினருடன் மே தினத்தைக் கொண்டாடுகின்ற விதத்தை எண்களால் வெளிப்படுத்தினாலும் தேசிய மக்கள் சக்தியின் பலத்தை வெளிக்காட்டி திசைகாட்டியைச் சேர்ந்த எங்களுக்கு போட்டி நிலவுவது எம்மிடமே என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரணிலுடனோ சஜித்துடனோ வேறு எவருடனோ எமக்கு போட்டியில்லை. எமக்கு இருப்பது அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டு இந்த தாய்நாட்டை செல்வந்த நாடாக்குகின்ற மற்றும் அழகுபடுத்துகின்ற போட்டி மாத்திரமே.
யாழ்ப்பாணத்திற்கு, அநுராதபுரத்திற்கு, கொழும்பிற்கு மற்றும் மாத்தறைக்கு ஒன்றுதிரண்டுள்ள இலட்சக்கணக்கான மக்கள் ஏகோபித்த குரலில் கூறிநிற்பது இந்த ஊழில்மிக்க கொடிய ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரவேண்டுமென்பதே. ரணில் விக்கிரமசிங்கவிற்கு நன்றி தெரிவிக்கின்ற மே தினக் கூட்டமொன்றை ஐக்கிய தேசிய கட்சி நடாத்துகின்றதாம். 1980 யூலை வேலைநிறுத்தத்தின்போது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஒருஇலட்சம்பேரை வீதியில் இறக்க ரணில் விக்கிரமசிங்க கையை உயர்த்தியதற்காகவா அவருக்கு நன்றி தெரிவிக்கப் போகிறார்கள்? அதைப்போலவே மத்திய வங்கியை கொள்ளையடித்தாலா? நேற்று இரவு எண்ணெய் விலையைக் குறைத்ததாக இன்று வீம்புவார்த்தை பேசுவதாலா? அதைப்போலவே பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக கெசற் வெளியிட்டதாலா? ரணில் விக்கிரமசிங்க என்னதான் செய்தாலும் விரட்டியடிக்கப்படவேண்டிய ஓர் ஆட்சியாளனாக மாறிவிட்டார். மக்களை ஏமாற்றி அரிசி பங்கிட்டாலும் காணி உறுதிகளை வழங்கினாலும் மீண்டும் ஏமாறப்போவதில்லை என மக்கள் சபதம் செய்துவிட்டார்கள். தேசிய மக்கள் சக்தியைச் சுற்றி மக்கள் குவிந்துள்ளதால் ரணில் விக்கிரமசிங்க பயந்துள்ள அளவே அதன் மூலமாக வெளிக்காட்டப்படுகின்றது. இன்று திரட்டியதைப்போன்றே மென்மேலும் இலட்சக்கணக்கில் மக்களை ஒன்றுதிரட்டி இந்நாட்டில் மக்கள் நேயமுள்ள ஆட்சியைக் கட்டியெழுப்ப ஒருவர்போல் ஒருங்கிணைவோம்.
இன்னும் ஓரிரு வாரங்களில் சஜித்தின் ஆத்தல்களைப் பார்க்க இயலுமென்று ஒருசிலர் கூறுகிறார்கள். எனினும் இது ஆத்தல் எடுப்பதற்கான தருணமன்று. எழுபத்தாறு வருடங்களாக நாட்டை வங்குரொத்து அடையச் செய்வித்த அனைத்து ஆட்சியாளர்களையும் வருகின்ற சனாதிபதி தேர்தலில் விரட்டியப்பதற்கான வாய்ப்பு எமக்கு கிடைத்துள்ளது. நாட்டையும் மக்களையும் மறுமலர்ச்சி யுகமொன்றுக்கு கொண்டுசெல்கின்ற காலகட்டத்தில் மக்கள் சக்தியை வழங்குகின்ற வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்களுடனும் உலகவாழ் மக்களுடனும் ஒன்றுசேர்ந்து நாங்களும் கொண்டாடுகிறோம். மே தினத்தைக் கொண்டாடுவதற்கான தார்மீக உரிமையைக் கொண்டுள்ள உழைக்கும் மக்கள், கமக்காரர்கள், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் அர்த்தமுள்ள நோக்கினைக் கொண்டதாக கொண்டாடுவதற்கான வாய்ப்பினை தேசிய மக்கள் சக்தி மாத்திரமே ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. நாட்டை வெற்றிபெறச் செய்விக்கின்ற தீர்வினைக் கொண்டு வருகின்ற மே தினக் கூட்டத்தினால் புதிய பலத்தையும் ஊக்கத்தையும் பெற்று நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அணிதிரள்வோம்.
“வரலாற்றுரீதியான மாற்றத்திற்கான தீர்மானகரமான தினமென்றவகையில் இன்றைய தினம் வரலாற்றில் சேர்கின்றது.”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய-
இலட்சக்கணக்கான மக்களின் முன்னிலையில் மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகின்ற எனது முதலாவது தருணம் இதுவாகும். என்னால் இந்த மே தினக் கூட்டத்தை ஒருபோதுமே மறந்துவிட முடியாது. உங்களுக்கும் அப்படித்தான் என்பதில் சந்தேகமில்லை. பல்வேறு காரணங்களால் வரலாற்றுரீதியான தனித்துவமான ஒரு கூட்டமாக இது மாறுகின்றது. கடந்த காலத்தில் மே தினக் கூட்டங்களை நடாத்தி, பல்வேறு போராட்டங்களை நடாத்தி, பிரஜைகளின் போராட்டத்தின் பின்னர் அனுபவங்களை சேர்த்துக்கொண்டு எதிர்காலம் பற்றி மிகுந்த திடசங்கற்பத்துடன் ஒரு நோக்கம் கொண்டவர்களாகவே நாங்கள் இங்கு குழுமியுள்ளோம். இந்த நாட்டுக்கு சமூகத்திற்கு மாற்றமுள்ள தருணமொன்று உருவாகின்ற நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவும் மாற்றியமைப்பதற்காகவும் நாமனைவரும் ஒன்றுசேர்ந்துள்ளோம். கூட்டுணர்வுடன், மனச்சாட்சி நன்றாகவே விழிப்படைந்து கூர்மையடைந்த மக்கள் பலமே இங்கு ஒன்றுசேர்ந்துள்ளது. இன்றைய தினத்தில் வரலாற்றில் புதிதாக எழுதப்படுகின்ற புரட்சிகரமான போராட்டக்காரர்கள் குழுமமொன்று ஒன்று சேர்ந்துள்ளது. மருத்துவர்கள், தாதியர், சட்டத்தரணிகள், பொறியியலாளர்கள், கமக்காரர்கள், மீனவர்கள், தொழிலாளர்கள் மற்றும் சம்பளம் பெறுகின்ற மற்றும் பெறாத நாமனைவரும் இந்நாட்டின் மிகவும் அகல்விரிவான மக்கள் பலத்திற்காக ஒன்றுசேர்ந்திருக்கிறோம். வாழ்க்கையில் முதல்த்தடவையாக மே தினக் கூட்டமொன்றில் பங்கேற்றுள்ளவர்கள் நாட்டை மாற்றியமைக்கின்ற மக்கள் சக்திக்காக இடையீடு செய்திருக்கிறோம்.
அதைப்போலவே பல வருடங்களாக போராடிய, போராட்டங்களில் ஈடுபட்ட, அடிதடிக்குள்ளாகிய, எண்ணற்ற தோல்விகளை அனுபவித்த, அளவுகக்திகமாக இழிவுபடுத்தப்பட்ட, சமூகத்தில் ஏளனத்திற்கு இலக்காகி எனினும் தமது அரசியல் நோக்கங்களை கைவிடாமல் திடசங்கற்பத்துடன் அனைத்து தோல்விகளையும் தாங்கிக்கொண்டு வெற்றிகரமான தருணம்வரை இருந்த குழுவினர் இங்கே இருக்கிறார்கள். அவர்களின் பலமும் புதிதாக சேர்கின்றவர்களின் பலமும் காரணமாகவே இன்று கண்ணுக்கெட்டிய தூரத்தில் வெற்றி புலப்படுகின்ற இடத்திற்கு வந்திருக்கிறோம். இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு உயிர்கொடுக்கின்ற பெண்களும் எம்மத்தியில் வரலாற்றில் முதல்த்தடவையாக மே தினத்தில் பங்கேற்கின்றவர்களும் இந்த இடத்தில் இருக்கிறார்கள். பெருந்தோட்டங்களில், ஆடைத்தொழிலகங்களில் போன்றே வெளிநாடுகளில் உழைக்கின்ற பெண்கள் இந்நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பினை பலப்படுத்தி இந்த மே தினத்தில் பங்கேற்றிருக்கிறார்கள். அதைப்போலவே சம்பளம் பெறாமல் மனைப்பெண்களாக உழைக்கின்றவர்களும் வேறு பல துறைகளில் பணிபுரிகின்ற பெண்களும் எமது அரசியல் செயற்பொறுப்பினை ஈடேற்றுவதற்காகவே எம்மோடு இணைந்திருக்கிறார்கள். இந்த நாட்டின் முதுகெலும்பு பெண்களாகிய நாங்களே என்பதை நன்றாக மனதில்கொள்ளவேண்டும். உலகிற்கே எடுத்துக்காட்டாக அமைந்து இந்த நாட்டை மாற்றியமைக்கின்ற சக்தியின் சமபங்காளிகளாக நாங்கள் ஒரே மூச்சடன் ஒன்றிணைந்து இருக்கிறோம்.
பல தசாப்தங்களாக சிறிய கும்பலிடமே அதிகாரம் பொதிந்திருந்தது. மன்னர் காலத்திலும் அப்படித்தான். சிறந்த மன்னர்களின்கீழ் புரிந்த அபிவிரத்திப் பணிகளின் எச்சங்களை இன்றும் எம்மால் காணமுடிகின்றது. காலனித்துவ யுகத்தில் சிறிய கும்பலொன்று இந்நாட்டின் செல்வங்களை சூறையாடின. அந்த சூறையாடலுடன் தொடர்பட்ட உள்நாட்டுச் சிறிய கும்பலிடம் ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தெட்டில் அதிகாரம் கைமாறியது. அன்று நிலவிய உலக நிலைமையின்படி இலவசக் கல்வி, இலவச சுகாதாரம் எமக்கு கிடைத்தாலும் இந்நாட்டின் பொதுமக்கள் அதிகாரத்தின் பங்காளிகாளக மாற்றிக்கொள்ளப்படவில்லை. ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தேழின் பின்னர் ஊழல், வன்முறை, இனவாதம் பிரயோகிக்கப்பட்டு எந்தவொரு கீழ்த்தரமான சதிவேலையையும் புரிந்து அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதை வாடிக்கையாக மாற்றிக்கொண்டார்கள். அதனை மாற்றியமைக்க முடியாது என பெரும்பாலானோர் சிந்திக்குமளவுக்கு இந்த ஊழல்மிக்க கும்பல் பலப்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஆட்சியாளர்களை விரட்டியடிப்பதற்கான பலம்பொருந்திய சக்தியைக் கட்டியெழுப்புகின்ற பங்காளிகளை இலட்சக்கணக்கில் இந்த கூட்டத்தில் நாங்கள் காண்கிறோம். இந்த மக்கள் பலத்தைக்கொண்டு நாங்கள் அரசாங்கத்தை அமைத்து வரலாற்றினை மாற்றியமைக்கின்ற மாற்றத்தின் பங்காளிகாளாக மாறியிருக்கிறோம். அதற்கு தலைமை வகிப்பவர்கள் நாங்கள் அனைவருமே. அந்த வரலாற்றுரீதியான மாற்றத்தின் தீர்மானகரமான நாளாக இன்றைய தினம் வரலாற்றில் சேர்கின்றது. அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டு மனிதம் மீதான மட்டற்ற அன்பு கொண்டவர்களாக நாட்டைக் கட்டியெழுப்பகின்ற செயற்பொறுப்பு எமக்கு இருக்கின்றது. இந்த மாற்றத்திற்காக எமது உயிரைக்கூட அர்ப்பணிக்க நாமனைவரும் தயார் என்பதை நாங்கள் அறிவோம்.
அரசாங்கமொன்றை மாற்றுவதற்குப் பதிலாக பாரதூரமான மாற்றமொன்றைச்செய்ய அணிதிரண்டு இருக்கிறோம் என்பதை நாமனைவரும் அறிவோம். அதற்காக புதிதாக கற்றுக்கொள்ள, ஆய்வுகளை மேற்கொள்ள மேலோட்டமாகவன்றி ஆழமாக சிந்திக்க அனைவரும் தூண்டப்பட்டு இருக்கிறோம். அதற்காக ஒழுக்கமுள்ள அமைப்பாண்மைசார்ந்த சுற்றுச்சூழல் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இங்கு இருக்கின்ற அன்பு, மகிழ்ச்சி, புத்துணர்ச்சி, இந்த வலிமை வேறு எங்குமே கிடையாது. அதனை எவராலும் காப்பியடிக்கவோ தோற்கடிக்கவோ முடியாதென்பதை நாங்கள் அவர்களுக்கு ஞாபகப்படுத்துகிறோம். நியாயமான, நேர்மையான, செல்வமிக்க, அன்புநிறைந்த ஒரு நாட்டுக்காக எதிர்வரும் சில மாதங்களில் திடசங்கற்பத்துடன் வெற்றியைநோக்கி வீறுநடை பயில அனைவருக்கும் பலமும் ஊக்கமும் கிடைக்கட்டுமாக.
“திசைகாட்டி இருப்பது சூழ்ச்சிகளால் வீழ்த்தக்கூடிய இடத்திலல்ல”
-மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா-
இன்னும் ஒருசில மாதங்களில் இந்நாட்டில் மக்கள்நேயமுள்ள ஆட்சியொன்றை நிறுவத் தயார் என்ற செய்தியை எடுத்துக்கொண்டு பல மாவட்டங்களிலிருந்து மாத்தறைக்கு வருகைதந்திருக்கின்ற அனைவருக்கும் முதற்கண் எங்கள் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம். மாத்தறை, கொழும்பு, அநுராதபுரம் மேதினக் கூட்டங்களில் பங்பேற்ற மக்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது அடுத்த ஆரசாங்கத்தை தேசிய மக்கள் சக்தி நிறுவும் என்பதாகும். பெண்களாகிய நாங்கள் ஒரே மூச்சுடன் மாவட்ட மாநாட்டுத் தொடரைப்போலவே இளைஞர் மாநாடுகளை நடாத்துவதற்கான வாய்ப்பு கிடைத்த வேளையிலும் ஒரே குழுவினரை எல்லா இடங்களுக்கும் கொண்டுசெல்வதாக கூறினார்கள். வங்குரோத்துநிலை காரணமாக அவ்வாறு கூறியவர்களிடம் நாட்டின் மூன்று திகைளிலும் பரந்து வாழ்பவர்கள் ஒரே குழுவினரா என நாங்கள் இப்போது கேட்கிறோம். அதுதான் தேசிய மக்கள் சக்தியின் பலம், தேசிய மக்கள் சக்தியின் நம்பிக்கை. நாங்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து பலவருடங்களாக கட்டியெழுப்பிய மாபெரும் மனிதக் குழுமமே இது. நாங்கள் எவ்வளவு பலம்பொருந்தியவர்கள் என எதிரிகள் கண்டுகொண்டிருக்கிறார்கள். மாத்தறை கடற்கரைப் பரப்பில் ஒரு இலட்ம் மக்களைப்போன்றே அநுராதபுரம் சல்காது மைதானமும் நிரம்பி வழிகின்றது. கொழும்பில் அவையனைத்தையும் விஞ்சிசென்ற குழுவினர் சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகிறார்கள். 1886 ஆம் ஆண்டில் அப்போதிருந்த ஆட்சியாளர்கள் அடக்குமுறையைப் பிரயோகித்தமையால் சர்வதேச தொழிலாளர் தினம் உருவாகியது. உரிமைகளைக்கோரி வீதியில் இறங்குகின்ற மக்களை அடக்கிய இந்நாட்டு ஆட்சியாளர்கள் இன்று மேதினத்தைக் கொண்டாடுகிறார்கள். ரணில் விக்கிரமசிங்கவின் மாமா 1987 மே தினத்தை தடைசெய்து நாராஹேன்பிற்ற அபயாராமய மீத துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு இருவரை படுகொலை செய்தார். அவர்களும் இன்று மே தினத்தைக் கொண்டாடுகிறார்கள்.
ஐக்கிய தேசிய கட்சி, பொதுஜன பெரமுண, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய எல்லாக் கட்சிகளும் காலாவதியாக மக்களிடமிருந்து பிரிந்துசென்று வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் வீழ்ந்துகொண்டிருப்பதென்பதும் வரலாற்றினை புதிதாக எழுதுகின்ற திடசங்கற்பம் கொண்ட முற்போக்கான மக்கள் அனைவரும் தேசிய மக்கள் சக்தியுடன் கைகோர்த்து உள்ளார்கள் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இங்கு குழுமியுள்ள எவருக்கும் வாக்குறுதி அளித்து, சாராயம் வழங்கி, காசு கொடுத்து அழைத்து வரவில்லை. அனைவரும் வட்டார சபைகள் மட்டத்தில் நன்கொடைப் பத்திரங்கள் மூலமாக பணத்தைச் சேகரித்து ஒரு சாப்பாட்டுப் பொதியை எடுத்துக்கொண்டு சிரமங்களுக்கு மத்தியில் இந்த இடத்திற்கு வந்த இலட்சக்கணக்கான மக்களே இருக்கிறார்கள். அவர்களின் பயணத்தை திசைதிருப்ப எவராலும் முடியாது. கிராம மட்டதிலான அமைப்பாண்மை வலையமைப்பு என்றவகையில் திடசங்கற்பம்கொண்ட மக்கள் ஒரு நோக்கத்துடனேயே இங்கு வந்திருக்கிறார்கள். இவ்வளவு பெருந்திரளான மக்களை பங்கேற்கச் செய்வித்தும் ஒழுக்கமுள்ளவர்களாக நாட்டை மாற்றியமைக்கின்ற சக்தியாக புரிந்துணர்வுடன் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நாட்டைக் கட்டியெழுப்புகின்ற ஒழுக்கத்துடன் தொண்டு அடிப்படையில் செயலாற்றுகின்ற சக்தி திசைகாட்டி மாத்திரமே என்பதை நீங்களும் நாங்களும் நாமனைவரும் நிரூபித்திருக்கிறோம். இங்கெ இருப்பவர்கள் கற்பாறையையும் சாகுபடி செய்யக்கூடியவர்களே என்பதை செயலால் நிரூபித்த திடசங்கற்பம்கொண்ட மக்களாவர். இன்னமும் எம்மோடு இணைந்திராத மக்களை ஒருங்கிணைத்து வரலாற்றில் முதல்த்தடவையாக அரசாங்கமொன்றை நிறுவுவோம் என சபதம் செய்கின்ற மக்களே இங்கு குழுமி இருக்கிறார்கள்.
ஏகாதிபத்திய வல்லரசுகள், ஆட்சியாளர்கள் உலகம் பூராவிலும் உள்ள மக்களை பாதிப்பிற்கு உள்ளாக்கி எமக்கு உயிர்வாழப் பொருத்தமான சூழலற்ற நிலைமையே எமக்கு மரபுரிமையாகி இருக்கின்றது. ஒரு பக்கத்தில் காசு மேடுகள் குவிந்து வருவதோடு மறு பக்கத்தில் ஏழ்மைநிலை குவிந்துவருகின்றது. வறுமை, வசதியின்மை, வயிற்றுப் பசி, கலவியில் இருந்து அந்நியப்படுத்துதல், சுகாதார வசதிகள் இன்மை போன்றே போதைப்பொருட்கள் விரிவாக்கப்பட்ட ஓர் உலகத்திலேயே இன்று நாங்கள் வசிக்கிறோம். ஏகாதிபத்தியவாதிகள் தற்போது ஆயுதங்களை உற்பத்திசெய்து யுத்தத்தையும் உருவாக்குகிறார்கள். மறுபுறத்தில் ஓளடதங்களை உற்பத்தி செய்து அந்த ஓளடதங்களை விற்பனை செய்வதற்காக நோயாளிகளையும் உருவாக்குகிறார்கள். அதைப்போலவே பல மாதங்களாக பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேயல் தாக்குதல் நடாத்துகின்றது. இவவாறான கவலைக்கிடமான நிலைமைகளே உலகம் பூராவிலும் காணப்படுகின்றன. உலகின் இந்த கொடுமைநிலையை முடிவுக்குக் கொண்டுவருகின்ற போராட்டத்திற்காக திசைகாட்டியைச் சேர்ந்த நாமனைவரும் இருகைகளையும் உயர்த்தி ஒத்துழைப்பு வழங்குவதாக வெளிப்படுத்துகிறோம். பாலஸ்தீன மக்களுக்கு நாங்கள் இந்த மேதினத்திலும் ஒத்தழைப்பினை தெரிவித்துக் கொள்கிறோம்.
எழுபத்தாறு வருடங்களாக மக்களின் வாக்குகளால் நியமிக்கப்பட்ட ஆட்சியாளர்கள் கைமாறாக மக்களுக்கு திருப்பிக் கொடுத்துள்ளது வங்குரோத்து அடைந்த நாட்டையாகும். அந்த வங்குரோத்து அடைந்த நாட்டில் இந்நாட்டில் சிறியசிறிய தேர்தல் விளையாட்டுகள் தொடங்கப்பட்டுள்ளன. மக்களை நரகத்தில் வாழவைத்து தேர்தல் காலத்தில் அந்த நரகத்திற்கு சற்று இன்ரவெல் கொடுப்பதை இதுவரை காலமும் ஆட்சியாளர்கள் செய்துவந்தார்கள். தேர்தல் எதையாவது பங்கிட்டு, ஏழ்மையை விதைக்கின்ற ரணில் விக்கிரமசிங்காக்கள் இருபது கிலோ அரிசியை பகிர்கிறார். இந்த அரசியல் கலாசாரத்தை நாங்கள் மாற்றியமைத்திட வேண்டும். அதைப்போலவே மோசடி, ஊழல், விரயத்தை தடுத்து திருடர்களுக்கு தண்டனை வழங்கவும் வேண்டும். திருடிய ஒவ்வொரு சதத்தையும் மீளவும் அறவிட்டுக் கொள்ளவும் வேண்டும். அதற்காக இருக்கின்ற ஒரே சக்தி தேசிய மக்கள் சக்தி மாத்திரமே என்பதை நாங்கள் மக்களுக்கு உறுதியாகக் கூறுகிறோம். மக்கள் பிரதிநிதி என்றவகையில் இதுவரை நியமித்த உறுப்பினர்களும் அமைச்சர்களும் பொதுப்பணத்தை விரயமாக்கி மெய்ப்பாதுகாவலர்கள் புடைசூழ செல்கின்ற வீதிகளை அமைத்தாலும் மேலும் பொதுப்பணத்தைச் செலவிட்டு அமைச்சரின் கையால் நாடாவை வெட்டுகின்ற கலாசாரத்தை நாங்கள் முற்றாகவே மாற்றிடுவோம். இன்றளவில் பொலீஸின் அரைவாசிப்பேர் ஈடுபடுத்தப்பட்டிருப்பது கள்வர்களை பிடிப்பதற்காக அல்ல: கள்வர்களைப் பாதுகாப்பதற்காகவே. நாட்டின் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த பொலீஸாரும் வாகனங்களும் தட்டுப்பாடாகவே இருக்கின்றது. எனினும் பொலீஸாரையும் பொலீஸ் வாகனங்களையும் விடுவித்து மக்கள் சேவைக்காக ஈடுபடுத்துவோமென நாங்கள் உறுதியாகக் கூறுகிறோம். இந்த கலாசாரத்தை மாற்றியமைக்கின்ற பாரதூரமான செயற்பொறுப்பு எம்மிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அந்நிய செலாவணியை ஈட்டக்கூடிய உற்பத்திப் பொருளாதாரமொன்றைக் கட்டியெழுப்பவேண்டும். அதனை அரசாங்கத்தினால் தனித்து சாதிக்க முடியாது. தனியார் பிரிவையும் மக்களையும் இணைத்துக்கொண்டு உற்பத்திப் பொருளாதாரமொன்றைக் கட்டியெழுப்பி அதன் பெறுபேறுகளை நியாயமானவகையில் மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். எமது நோக்கம் தொழில் முயற்சிகளை கையகப்படுத்துவதல்ல: நிலவுகின்ற தொழில் முயற்சிகளை பலப்படுத்தி தேசிய பொருளாதாரமொன்றைக் கட்டியெழுப்புவதாகும். மக்கள் மகிழ்ச்சியாக வாழக்கூடிய வாழ்க்கைத் தரமொன்றைக் கட்டியெழுப்புவதற்காகவே எமக்கு பொருளாதாரமொன்று அவசியமாகின்றது. இந்த சமூகப் பேரழிவினை மாற்றியமைக்கின்ற ஆழமான மாற்றத்திற்கு அவசியமான தேசிய மறுமலர்ச்சிக்காக முழு நாடுமே அணிதிரட்டப்பட வேண்டும். மே தினத்திற்காக மக்கள் இங்கு வந்ததைப்போலவே நாட்டைக் கட்டியெழுப்பவும் அணிதிரட்டப்பட வேண்டும். இதற்காக மக்களை அணிதிரட்டி நாங்கள் பயணிக்கையில் இதுவரை அதிகாரத்தில் இருந்தவர்கள் பதற்றமடைந்து பல்வேறு சூழ்ச்சிகளை புரிந்துவருகிறார்கள். இதுவரை திருடிய பொதுச்சொத்துக்களை திசைகாட்டி ஆட்சியின்கீழ் மீளக்கையகப்படுத்துவதைப் போன்றே அந்த திருடர்களைத் தண்டிப்பதும் கட்டாயமாக இடம்பெறும். ஐக்கிய மக்கள் சக்தி இந்நாட்களில் திசைகாட்டியை தோற்கடித்து அவர்கள் அதிகாரத்தை பெற்றுக்கொள்வதாக மேடைகள்தோறும் கூறிவருகின்றது. அரசாங்கத்தை தோற்கடிப்பதாக கூறுவதில்லை. அதுமாத்திரமல்ல, தேசிய மக்கள் சக்திக்கு எதிராக புதிதாக பொய், அவதூறு கற்பிக்கவும் தொடங்கி உள்ளார்கள். பொய்யாக சவால் விடுக்கவும் தொடங்கி உள்ளார்கள்.
இந்த சவால்களுக்கு தினங்களை ஒதுக்கி நாங்கள் பதிலளித்தோம். எனினும் அந்த நாட்களுக்கு வருவதில்லை. அதனால் அவர்களை தினமொன்றை கூறுமாறு அறிவித்தாலும் அதற்கும் வருவதில்லை. அத்தகைய சிறியசிறியவற்றுக்காக பதலளித்துக்கொண்டு இருப்பதைவிட இந்த மே தினத்தில் நாங்கள் உங்களுக்கு பெரிய செய்தியொன்றைக் கொடுக்கவேண்டி உள்ளது. ரணில் விக்கிரமசிங்கவின் மொட்டின் உயர்மட்ட தலைவர்களுடன் உளவுப்பிரிவைச் சேர்ந்த ஒருசிலரும் ஒன்றுசேர்ந்து திசைகாட்டியின் வெற்றியைத் தடுத்திட திட்டங்களை வகுத்துவருகின்றமை எமக்கு பதிவாகியுள்ளது. பொருட்களை பங்கிட்டு, இலஞ்சம் கொடுத்து, தேர்தலை பிற்பொட்டு திசைகாட்டியின் வெற்றியைத் தடுக்க இயலாதென்பதால் திசைகாட்டியை பிளவுபடுத்த பொய்யான செய்திகளை நிர்மாணித்த வருகிறார்கள். ஜே.வி.பி – என்.பி.பி. என இரண்டாகப் பிரிக்கின்ற பொய்யான செய்தியொன்றை அடுத்தவாரத்தில் பிரச்சாரம்செய்யத் தொடங்குவார்கள். எவரை பிரித்தாலும் திசைகாட்டியைச்சேர்ந்த எங்களைப் பிரிக்க முடியாதென்பதை உறுதியாக கூறிவைக்கிறோம். ஒரு பக்கத்தில் பிரச்சாரம்செய்ய திட்டமிட்டுள்ளார்கள், ஊர்களிலுள்ளவர்களை ஜே.வீ.பி. – என்.பி.பி. என இரண்டாகப் பிரிக்கத் திட்டமிட்டுள்ளார்கள். அதைப்போலவே மறுபுறத்தில் திசைகாட்டியின் நிருவாகத்தின்கீழ் ஜே.வீ.பி. ஐ சேர்ந்தவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதாக ஜே.வீ.பி. அல்லாதவர்களை பயமுறுத்துகின்ற பிரசாரத்தை அனுப்பிவைக்க திட்டமிட்டுள்ளார்கள். நாங்கள் நாங்கள் இருப்பது சதித்திட்டங்காளல் வீழ்த்தக்கூடிய இடத்தில் அல்லவென்பதை இந்த சதித்திட்டங்களுக்கு வலியுறுத்திக்கூறுகிறோம். திசைகாட்டி அடிமட்டத்தில், வட்டார மட்டத்தில் இருந்தே கட்டியெழுப்பப்பட்டுள்ளது. திசைகாட்டி அடிமட்டத்தில் இருந்தே கட்டியெழுப்பப்படுகின்றது. எதிரிகளுக்கு நாங்கள் கூறிக்கொள்வது திசைகாட்டியில் பிளவினை ஏற்படுத்துவது பற்றிக் கனவு காண்பதென்’றால். அது ஒரு பகல் கனவு மாத்திரமே. இந்த நாட்டைக் கட்டியெழுப்புகின்ற திடசங்கற்பத்துடன் தெம்புடன் முன்நோக்கி நகர்கின்ற ஒரே சக்தி திசைகாட்டி மாத்திரமே.
எம்மை பிளவுபடுத்துவதாகக் கூறினாலும் உண்மையாகவே பிளவுபடுவது யார்? இற்றைக்கு நான்கு வருடங்களுக்கு முன்னர் அறுபத்தொன்பது இலட்சம் வாக்குகளைப்பெற்ற மொட்டுக்கு தற்போது என்ன நேர்ந்துள்ளது? டலஸ் கழன்றுபோய்விட்டார். லன்சாவை உள்ளிட் கழுவொன்று கழன்றுபொதய்விட்டது. வியத் மக கழன்றுபொய்விட்டது. எவர்கள் எவரையும் நாங்கள் எடுப்பதில்லை என்பதால் எம்மிடம் வருவதில்லை. நாட்டை நாசமாகக் பங்களிப்புச் செய்த எவரையும் திசைகாட்டியுடன் சேர்த்துக்கொள்வதில்லை எனும் உறுதிமொழியை நாங்கள் கொடுக்கிறோம். மொட்டடின் மற்றுமொரு பகுதியினர் சஜித்துடன், வேறோரு பிரிவினர் ரணிலுடன். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் எக்கச்சக்கமான வழக்கு, தலைவர்கள் கிடையாது. செயலாளர்களும் தலைவர்களும் ஒரு குழுவினரை நியமிக்கையில் மற்றுமொரு குழுவினர் தடையுத்தரவினைப் பெறுகிறார்கள். அரசியல்ரீதியாக அநாதைகளாகி விட்டார்கள். நாங்கள் தேசிய மக்கள் சக்தியைக் கட்டியெழுப்பியதாலேயே ஐக்கிய மக்கள் சக்தி எனப் பெயரிட்டார்கள். நாங்கள் பெண்கள் மாநாட்டினை நடாத்துகையில் அதனை அதனைக் காப்பியடிக்கிறார்கள். அந்த இடத்தில் ஐக்கியம் – மக்கள் – சக்தி மூன்றுமே கிடையாது. அங்கு ஒற்றுமையே கிடையாது. ரணில் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவு நிதியங்களிலிருந்து சஜித்தின் கட்சியைச் செரந்து ஆறு, ஏழு பேருக்கு மாத்திரம் நாற்பது கோடியை வழங்கியுள்ளார். மேலம் சிலருக்கு பார் பேர்மிற் வழங்கப்பட்டுள்ளன.புதிய நாட்டை அமைக்கப் போவதாகக் கூறுகின்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்கள் ஏற்கென்வே ரணிலிடமிருந்து பார் பேர்மிற் பெற்றுள்ளார்கள். கண்டிப் பக்கம் இருக்கின்ற ஒருவர் இரண்டு பார் பேர்மிற்றுகளையும் இரண்டு கோடிக்கு விற்றுவிட்டார். அதற்கிடையில் விஜயமுனி த செய்ஸா சுயாதீனமாக இருக்கிறாராம். ஐக்கிய மக்கள் சக்தியின் துண்டுகள் உடைந்து, சிதைந்து வருகின்றதேயொழிய புதிதாக எவருமே சேர்வதில்லை.
சஜித் பிரேமதாச பாடசாலைப் பிள்ளைகளுடனேயே விவாதம் பற்றி பேசுகிறார். அந்த பிள்ளைகளையும் நண்பர்களே எள்றே கூற்றுகிறார். புதிதாக தொடங்கி இருப்பது ஜப்பானிய மொழியில் பேசிக் காட்டுவதையாகும். சஜித் பிரேமதாசவை சூழ உள்ளவர்களும் இந்த இந்த பெச்சுகள் காரணமாக நிரக்கதி நிலையுற்று இருக்கிறார்கள். நாட்டை நாசமாக்கியவர்கள் நாள்தொறும் நாசமாகி வருவது நிரூபிக்கப்பட்டு வருகின்றது. வரலாற்றில் ஒருபோதுமே இடதுசாரி, முற்போக்கான சக்திகளுக்கு இதுபோன்ற தருணமொன்று உருவாகவில்லை. அதனால் வரலாற்றில் முதல்த்தடவையாக உண்மையான அர்த்ததத்தில் மக்கள்நேயமுள்ள ஆட்சியொன்றை நிறுவ அனைவரும் ஒன்றுசேரவேண்டும். எனினும் அவர்கள் எழுப்புகின்ற அவதூறுகளைப் பார்க்கிலும் மிகவும் உயரத்திலேயே நாங்கள் இப்போது இருக்கிறோம். எண்பத்தெட்டு – எண்பத்தொன்பது பற்றி அவர்கள் தினந்தோறும் மந்திரம் ஓதினாலும் எவ்வளவுதான் குறைகூறல்கள், சேறு பூசுதல்களை மேற்கொண்டாலும் அரசியல் விவாதங்களக்கு வந்து மிருகங்கள் போல் கத்தினாலும் அவையனைத்திலும் மக்கள் அவர்களை விட்டு விலகிப் போகிறார்கள். மனச்சாட்சி உள்ள ஒவ்வொருவரும் தேசிய மக்கள் சக்தியைச் சுற்றிக் குழுமி பொதுமக்களின் அரசாங்கமொன்றை நிறுவி வரலாற்றினை பதிதாக எழுதுகின்ற பாரிய செயற்பொறுப்பு எம்மிடம் இருக்கின்றது. மே மாதத்தின் பதினைந்தாம் திகதி தொடக்கம் வட்டார சபைகள் மட்டத்தில் நடவடிக்கையென்றை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இன்னமும் எம்மை விளங்கிக்கொள்ளாத மக்கள் மத்தியில் சென்று விடயங்களை தெளிவுபடுத்தி எதிரியின் பொய்ப் பிரசாரங்களை தோற்கடித்திட வேண்டும். குறிக்காக திசைகாட்டி அரசாங்கமொன்றின்கீழ் எனைய கட்சியை சேர்ந்தவர்களை பழிவாங்குவதாக கூறி அனுப்புகின்ற செய்தியை தோற்கடித்திடவேண்டும். அரசியல் பழிவாங்கல் கலாசாத்தை எமது ஆட்சியின்கீழ் சதாகாலமும் முடிவுறுத்துவோம் என்பதை வலியுறுத்துகிறோம்.
எமது எதிரிகள் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் எனக் கூறி மக்களை பயமுறுத்துகின்ற பிரச்சாரங்களை அனுப்பிவைக்கிறார்கள். பொருட்களை பங்கிட்ட வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாதென்பதை உணர்ந்ததும் இவ்வாறான பிரச்சாரங்களை அனுப்பிவைத்து மக்களை பயமுறுத்துகின்ற பொய்யான குறைகூறல்களை புரிந்துணர்வுடன் தோற்கடித்திட வேண்டுமென்பதை மக்களுக்கு எடுத்துரைக்கவேண்டும். தமக்க தனிப்பட்டமுறையில் எதனையும் எதிர்பாராமல் இலட்சக்கணக்கான மக்களை ஒன்றுசேர்க்க இயலுமென்பதை மாத்தறை கடற்கரை பரப்பிற்கு வருகைதந்த மக்கள் நிரூபித்திருக்கிறார்கள். குடும்பங்களாக ஒன்றுசேர்ந்து புதிய நாட்டைக் கட்டியெழுப்பு தயார் என்பதை நிரூபித்துள்ளார்கள். எதிர்காலத்திற்காக நிகழ்காலத்தை நாங்கள் கையிலெடுக்க வேண்டும். எமது அம்மா, அப்பாவால் மீட்டெடுக்க முடியாமல் போனவை எம்மிடம் கையளிக்கப்பட்டுள்ளன. நாங்கள் அதனை எங்கள் பிள்ளைகளிடம் ஒப்படைக்கத் தேவையில்லை. கடன் சுமையில் இருந்து விடுபட்ட ஒரு நாட்டில் வசித்திட நாமனைவரும் விரும்புகிறோம். பிச்சையேந்தகின்ற பொருளாதாரத்திற்குப் பதிலாக பலம்பொருந்திய பொருளாதாரமொன்றை நாங்கள் கட்டியெழுப்ப வேண்டும். வளங்கள் நிறைந்த எங்கள் நாட்டு மக்கள் பிறரிடம் கையேந்தாமல் வாழக்கூடிய நிலையில் சுயகௌரவம்கொண்ட குழுவினர் வசிக்கனின்ற அழகான ஒர நாட்டை நாங்கள் கட்டியெழுப்பவேண்டும். போதைப்பொருட்களிலிருந்து விடுபட்ட பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு நிலவுகின்ற, ஒருவரையொருவர் பேணிப்பாதுகாக்கின்ற சமூகமொன்றை நாங்கள் நிர்மாணிப்போம். தனித்தனி மனிதர்களுக்குப் பதிலாக கூட்டுமனப்பான்மையால் பிணைந்த மனிதர்களாக வாழக்கூடிய சமூகமொன்றை நாங்கள் கட்டியெழுப்புவோம்.
இந்த வருடத்தில் இரண்டு தேர்தல்கள் நடைபெற உள்ளன. ஒற்றோபர் மாதத்தில் நடைபெறுகின்ற சனாதிபதி தேர்தலில் திசைகாட்டியின் வெற்றியை தடுக்கவலல்ல எநட்தவொரு பலவானும் கிடையாது. திசைகாட்டியின் தலைவர் தோழர் அநுர சனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று வரலாற்றில் முதல்த்தடவையாக எம்மைல “தோழர்” என அழைக்கப்படக்கூடிய ஒருவரை நியமித்தக்கொள்ளக்கூடிய வாய்ப்பு பிறந்துள்ளது. “சேர்”, “அதிமேதகு”, “உத்தமராம்” எனக் கூறாமல் “தோழர்”, “அண்ணா”, “தம்பி”, “மாமா” என அழைக்கக்கூடிய தலைவரொருவரை சனாதிபதியாக நியமித்துக்கொண்டு பாராளுமன்றத்தின் இந்த திருட்டுக் கும்பலை விரட்டியடித்து மக்கள் பிரதிநிதிகளை நியமித்துக்கொண்டு நாட்டைக் கட்டியெழுப்புகின்ற வேலைக்குப் பொருத்தமான பாராளுமன்றமொன்றை நியமித்துக்கொள்வோம். நாங்கள் நல்ல மனிதர்களால் பாராளுமன்றத்தை நிரப்பத் தயார். நாட்டைக் கட்டியெழுப்பவல்ல பலம்பொருந்திய அரசாங்கமொன்றை நாங்கள் அமைக்கத் தயார். நாட்டைக் கட்டியெழுப்பி நாமனைவரும் மகிழ்ச்சியுடன் வாழக்கூடிய நாட்டைக் கட்டியெழுப்புகின்ற ஆழமான செய்தியை இந்த மே தினத்தில் நாங்கள் வழங்குவோம். அதில் ஒரு பங்கு உங்களுக்கும் உண்டு வெற்றிக்காக உழைக்கவேண்டும். பேராட வேண்டும். எம்மால் சேர்க்கக்கூடிய அனைத்துச் சக்திகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். தொழிலாளர்கள், கைத்தொழிலதிபர்கள், தொழில்வாண்மையாளர்கள், பெண்கள், மாணவர்கள் அனைவரையும் கூட்டாக சேர்த்துக்கொண்டு ஒருபோதுமே தோற்கடிக்கமுடியாத மீளத்திருப்பமுடியாத பிரமாண்டமான சக்தியைப் பெற்று நாங்கள் கட்டியெழுப்புவோம்.
எமது பிரபல்யமான கவிஞர் ரத்ன ஸ்ரீ விஜேசிங்க எழுதிய கவிதையொன்றினைக் கூறி நாங்கள் விடைபெறுகிறோம்.
“எனவே நண்பர்களே பூக்கள் பூத்த மரமொன்றில்
சந்தேகமே இல்லை விளைச்சல் கிடைப்பது நிச்சயமே
மனதால் கைவிடாமல் மலர்களின் மென்மையை
வாரீர் மகரந்தச் சேர்க்கைக்கு சீக்கிரமாகக் குழுமி“
நாடு பூராவிலும் விளைச்சல் தருகின்ற மலர்கள் இலட்சக்கணக்கில் மலரந்துள்ளன. இந்த மலர்களை விளைச்சலாக்குகின்ற மகரந்தச் சேர்க்கையில் நாங்கள் ஈடுபடவேண்டும். அதற்காக ஒன்றிணைவோம். புதிய நாடு, புதிய நாளைய தினம், புதிய சமூகத்தை எமது வாழ்நாளில் எமது கண்ணெதிரில் கட்டியெழுப்பி, நாம் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்கின்ற பெருமைமிக்க பிரஜைகளாக மாறுகின்ற வெற்றிக்காக ஒன்றுசேர்வோம். அதற்காக அனைவரும் கைகோர்த்துக் கொள்ளுங்கள்.
(-Sri Lanka, May 01, 2024-) 2024 சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகின்ற இத்தருணத்தில் உலகம் பூராவிலும் உழைக்கும் மக்களை உள்ளிட்ட பொது மக்களுடன் தேசிய மக்கள் சக்தியும் தோழமையுடன் கைகோர்த்துக் கொள்கின்றது. சர்வதேச தொழிலாளர் தினமானது 1886 இல் சிக்காகோ நகரத் தொழிலாளர்கள் 8 மணித்தியால வேலை நாளைக் கோரி புரிந்த பேராட்டத்தையும் அந்த போராட்டத்தை ஆளும் வர்க்கத்தினர் அடக்கும்போது தொழிலாளர் உரிமைகளுக்காக உயிர்த்தியாகம்செய்த தொழிலாளர் தலைவர்களின் ஞாபகார்த்தமாகவும் உழைக்கும் மக்களின் சக்தி, போராட்டக்குணம் மற்றும் […]
(-Sri Lanka, May 01, 2024-)
2024 சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகின்ற இத்தருணத்தில் உலகம் பூராவிலும் உழைக்கும் மக்களை உள்ளிட்ட பொது மக்களுடன் தேசிய மக்கள் சக்தியும் தோழமையுடன் கைகோர்த்துக் கொள்கின்றது.
சர்வதேச தொழிலாளர் தினமானது 1886 இல் சிக்காகோ நகரத் தொழிலாளர்கள் 8 மணித்தியால வேலை நாளைக் கோரி புரிந்த பேராட்டத்தையும் அந்த போராட்டத்தை ஆளும் வர்க்கத்தினர் அடக்கும்போது தொழிலாளர் உரிமைகளுக்காக உயிர்த்தியாகம்செய்த தொழிலாளர் தலைவர்களின் ஞாபகார்த்தமாகவும் உழைக்கும் மக்களின் சக்தி, போராட்டக்குணம் மற்றும் எதிர்கால நோக்கங்களை உரத்;த குரலில் எடுத்துக்கூறுகின்ற ஒன்றாகும்.
உலகம் பூராவிலும் உழைக்கும் மக்களை உள்ளிட்ட பொது மக்கள் இத்தடவை சர்வதேச தொழிலாளர் தினத்தை வரலாற்றின் மிகப்பெரிய நெருக்கடிகள் மற்றும் அழுத்தங்களின் மத்தியிலேயே கொண்டாடுகிறார்கள். ஏகாதிபத்திய ஆட்சியும் அவர்களால் உலகம்மீது சுமத்தப்பட்டுள்ள வங்குரோத்து, அநீதியான நவ லிபரல் ஆட்சி முறைமையும் உழைக்கும் மக்களை உள்ளிட்ட பொதுமக்களுக்கு மிகவும் துன்பங்களும் அனர்த்தமும் நிறைந்த நிலைமையையே மரபுரிமையாகத் தந்துள்ளன.
21 வது நூற்றாண்டில் உலகம் பயணித்துக் கொண்டிருக்கின்ற போதிலும் உலக சனத்தொகையில் பெரும்பான்மையினர் வறியவர்களாக மாற்றப்பட்டுள்ளார்கள். உலகம் பூராவிலும் வயிற்றுப் பசியால் வாடுகின்ற அதனால் உயிரிழக்கின்ற மக்களின் எண்ணிக்கை எண்ணற்றதாகும். உலகம் பூராவிலும் பிள்ளைகள் கல்வியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள். இளைஞர்களுக்கு தொழில்கள் இல்லாதொழிக்கப்பட்டுள்ளன. உழைக்கும் மக்கள் தமது வரலாற்றில் போராடி உரித்தாக்கிக்கொண்ட உரிமைகளும் மீண்டும் பறித்தெடுக்கப்பட்டு வருகின்றன. 8 மணித்தியால வேலைநாளொன்றைக் கோரி போராடி அதனை வென்றெடுத்த போதிலும் மீண்டும் 8 மணித்தியாலங்களை விஞ்சியதாக வேலைசெய்ய நிலவுகின்ற நெருக்கடி உழைக்கும் மக்களை நிர்ப்பந்தித்துள்ளது. உயிர்வாழ்வதற்கு ஏற்ற சம்பளமென்பது இன்னமும் கனவாக மாத்திரமே அமைந்துள்ளது. சிறிய அளவிலான, நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளும் கைத்தொழில்களும் நாளுக்குநாள் சீரழிந்து வருகின்றன. சம்;பள உழைப்பாளிகளாக உழைக்கின்ற பெண்கள் மற்றும் வீட்டுவாசலை பாதுகாக்கின்ற பொருளாதாரத்திற்காக பிரயத்தனம் செய்கின்ற பெண்கள்மீது சுமத்தப்படுகின்ற அழுத்தம் அதிகரித்துள்ளது. அவர்கள் பாதுகாப்பற்ற நிலைக்கு இலக்காக்கப்பட்டுள்ளார்கள்.
அதைப்போலவே சுற்றாடலை நாசமாக்குதல், மோதல்கள், யுத்தம், பெருந்தொற்றுகள், போதைப்பொருள் போன்ற சமூகப் பேரழிவுகள் நடப்பு வழிமுறையின் உற்பத்திகளாக அமைவதோடு மனிதனால் உயிர்வாழ முடியாத அளவுக்கு உலகம் மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலைமையை மாற்றியமைப்பதற்காக போராடுமாறு எம் அனைவருக்கும் அழுத்தம் கொடுத்துள்ளது.
பல்வேறு நெருக்கடிகள், சவால்களுக்கு மத்தியிலேயே இலங்கையின் உழைக்கும் மக்களை முதன்மையாகக்கொண்ட பொது மக்கள் இத்தடவை மே தினத்தைக் கொண்டாடுகிறார்கள். இன்றளவில் இலங்கை பொருளாதாரரீதியாக வங்குரோத்து நிலையுறச் செய்வித்து வீழ்த்தப்பட்ட ஒரு நாடாகும். பல தலைமுறையினரால் செலுத்தித் தீர்க்கமுடியாத கடன் சுமை நாடு மீது சுமத்தப்பட்டுள்ளது. வரிச்சுமையைத் தாங்க முடியாதுள்ளது. நாளுக்குநாள் அதிகரித்து வருகின்ற பொருட்களின் விலை, வீழ்ச்சியடைகின்ற வாழ்க்கைத் தரம் மக்களை நெருக்கடிக்குமேல் நெருக்கடிக்குள் வீழ்த்த காரணமாக அமைந்துள்ளது.
இந்த பயங்கரமான நெருக்கடிக்குள் உழைக்கின்ற ஒட்டுமொத்த மக்களும், இளைஞர்களும், பிள்ளைகளும், பெண்களும், கலைஞர்களும், தொழில்வாண்மையாளர்களும், சிறிய அளவிலான கைத்தொழிலதிபர்களும், தொழில் முயற்சியாளர்களும், உற்;பத்தியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நிலவுகின்ற ஆட்சியின்கீழ் அவர்கள் கடைப்பிடிக்கின்ற மோசடி ஊழல் நிறைந்த கொள்ளைக்கார பொருளாதாரத்தின்கீழ் நாட்டுக்கு எதிர்காலப் பயணமே கிடையாது. நாடு அராஜகநிலை அடைந்துள்ளது. அதனால் இந்த கொடிய ஆட்சியையும், தவறான சமூக பொருளாதார முறைமையையும் உடனடியாக தோற்கடித்திட வேண்டும். நாங்கள் தேசிய மக்கள் சக்தி என்றவகையில் இத்தடவை சர்வதேச தொழிலாளர் தினத்தை மேற்படி சவாலைத் தாங்கிக்கொண்டே கொண்டாடுகிறோம்.
அதிகாரத்தைக் கைமாற்றக்கூடிய ஜனாதிபதி தேர்தலொன்றுக்கு அருகில் இருந்துகொண்டே நாங்கள் இத்தடவை மே தினத்தைக் கொண்டாடுகிறோம். இந்த வருடம் வெறுமனே தேர்தல் வருடம் மாத்திரமன்றி எமது நாட்டின் பெரும்பான்மையான மக்கள் திடசங்கற்பத்துடன் கூட்டாக, வரலாற்றினை புதிதாக எழுதுகின்ற வருடமாகவும் மாறியுள்ளது. 76 வருடகால தவறான ஊழல்மிக்க ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து நாட்டைப் புதிய பொருளாதார முறைமையொன்றை நோக்கி, தேசிய மறுமலர்ச்சியை நோக்;கி கொண்டு செல்கின்ற உண்மையான தேசிய சுதந்திரத்தை வென்றெடுக்கின்ற வருடமாகவும் மாறியுள்ளது. இத்தடவை மே தினத்தின் தேசிய மக்கள் சக்தியின் நோக்கமும் திடசங்கற்பமும் அதுவாகும்.
எமது நாட்டின் உழைக்கும் மக்களை முதன்மையாகக்கொண்ட பொது மக்கள் சக்தியை நோக்கிய ஒரேயொரு பாதை மாத்திரமே தற்போது இருக்கின்றது. இனிமேலும் நிலவுகின்ற ஆட்சியிடமிருந்து உரிமைகளைக் கோருவதில் பலனில்லை. இந்த ஆளுங் கும்பல் மக்களுக்கு உரிமைகளைக் கொடுக்காதிருப்பது மாத்திரமன்றி உழைக்கும் மக்;கள் வென்றெடுத்த உரிமைகளைக்கூட தினந்தோறும் அபகரித்து வருகின்றது. அதனால் உழைக்கும் மக்களை உள்ளிட்ட இந்நாட்டின் முற்போக்கான, இடதுசாரி மக்கள் சக்திகளின் பொறுப்பாக அமைவது இந்த கொடிய ஆட்சியை உடனடியாக முடிவுக்கு கொண்டுவந்து அதற்குப் பதிலாக புதிய மக்கள்நேயமுள்ள ஆட்;சியொன்றை நிறுவுவதாகும்.
நிகழ்கால ஆட்சிக்கு நாட்டைக் கட்டியெழுப்பவேண்டிய தேவையோ இயலுமையோ கிடையாது. அவர்கள் தொடர்ந்தும் நாட்;டையும் பொருளாதாரத்தையும் நாசமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். கடன் சுமையை அதிகரித்து வருகிறார்கள். நாட்டின் பெறுமதிமிக்க வளங்களை விற்றொழித்து பொதுப்பணத்தை மோசடி செய்து, திருடி விரயமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நிலைமையை தோற்கடித்து நாட்டைப் புதிய அரசியல் பாதையில் இட்டுச் செல்வதற்காகவே நாங்கள் புதிய மக்கள்நேயமுள்ள ஆட்சியை நிறுவவேண்டும்.
உற்பத்தியை அடிப்படையாகக்கொண்ட உறுதியான, பலம்பொருந்திய பொருளாதாரமொன்றை கட்டியெழுப்புவதும், பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அனைத்து மக்களை பங்கேற்கச் செய்விப்பதும், பொருளாதார உற்பத்திகளின் நன்மைகள் அனைவருக்கும் நியாயமானவகையில் பகிர்ந்துசெல்கின்ற திட்டத்தை தயாரிப்பதும் புதிய ஆட்சியொன்றின் அடிப்படை நடவடிக்கைகளாகும். அதைப்போலவே மோசடி, ஊழல், திருட்டுகளை நிறுத்தி புதிய அரசியல் கலாசாரமொன்றை கட்டியெழுப்புவதும் ஒழுக்கம், கூட்டுமனப்பான்மை, மனிதம்நிறைந்த சமூகமொன்றை உருவாக்கவேண்டியதும் எமது பொறுப்பாகும். அதற்காக மக்கள் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இத்தடவை மே தினத்திற்கான எமது திடசங்கற்பமும் அதுவே.
அதனால் இத்தடவை உழைக்கும் மக்கள் அனைவரும் உள்ளிட்ட பொதுமக்களும் இடதுசாரி, முற்போக்கான, ஜனநாயகரீதியான, தேசப்பற்றுடைய அனைத்துச் சக்திகளும் மேற்படி நோக்கங்களுக்காக ஒழுங்கமைய வேண்டுமெனவும், கூட்டாக கைகோர்த்துக்கொள்ள வேண்டுமெனவும், திடமாக நம்புகின்ற நாங்கள் சமூகத்திலும் பொருளாதாரத்திலும் அரசியலிலும் ஆழமான ஆக்கமுறையான மாற்றமொன்றுக்காக முன்வருமாறு சர்வதேச தொழிலாளர் தினத்தில் கேட்டுக்கொள்கிறோம்.
2024 மே 01
(-Colombo, April 27, 2024-) யாழ்ப்பாணம்காலை 10 மணிக்குதந்தை செல்வா கலையரங்கில் கொழும்புஊர்வலம் மாலை 2.00 மணிக்கு BRC மைதானத்தில் ஆரம்பமாகும்.கூட்டம் மாலை 3.30 மணிக்குCWW கண்ணங்கர மாவத்தையில். மாத்தறைஊர்வலம் மாலை 2.00 மணிக்கு ராஹுல சந்தியில் ஆரம்பமாகும்.கூட்டம் மாலை 3.30 மணிக்குமாத்தறை கடற்கரை பூங்காவில். அநுராதபுரம்ஊர்வலம் மாலை 2.00 மணிக்கு வலிசிங்க ஹரிஷ்சந்ர விளையாட்டரங்கில் ஆரம்பமாகும்.கூட்டம் மாலை 3.30 மணிக்குபொதுமக்கள் விளையாட்டரங்கில். உலக தொழிலாளர் தினத்தை அபிமானத்துடன் கொண்டாடுவோம்..! தேசிய மக்கள் சக்தி
(-Colombo, April 27, 2024-)
யாழ்ப்பாணம்
காலை 10 மணிக்கு
தந்தை செல்வா கலையரங்கில்
கொழும்பு
ஊர்வலம் மாலை 2.00 மணிக்கு BRC மைதானத்தில் ஆரம்பமாகும்.
கூட்டம் மாலை 3.30 மணிக்கு
CWW கண்ணங்கர மாவத்தையில்.
மாத்தறை
ஊர்வலம் மாலை 2.00 மணிக்கு ராஹுல சந்தியில் ஆரம்பமாகும்.
கூட்டம் மாலை 3.30 மணிக்கு
மாத்தறை கடற்கரை பூங்காவில்.
அநுராதபுரம்
ஊர்வலம் மாலை 2.00 மணிக்கு வலிசிங்க ஹரிஷ்சந்ர விளையாட்டரங்கில் ஆரம்பமாகும்.
கூட்டம் மாலை 3.30 மணிக்கு
பொதுமக்கள் விளையாட்டரங்கில்.
உலக தொழிலாளர் தினத்தை அபிமானத்துடன் கொண்டாடுவோம்..!
தேசிய மக்கள் சக்தி