(தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 2024.04.08) இன்றளவில் சமூகத்தில் பேசுபொருளாக அமைந்துவிட்ட முக்கியமான கொள்கையொன்று சனாதிபதி அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. “தேசிய கல்விக் கொள்கைச் சட்டகம்” என அழைக்கப்படுகின்ற அந்த கொள்கைத்தொடர் மூலமாக இதுவரை ஓரளவுக்கேனும் பாதுகாக்கப்பட்டிருந்த இலவசக் கல்வி செயற்பாங்கின் முதுகெலும்பினை முறித்து பணம் ஈட்டுகின்ற ஒரு பொறியமைப்பாக மாற்றிக்கொள்வதற்கான திட்டம் வகுக்கப்பட்டு வருகின்றது. இது சம்பந்தமாக ஆர்வம் காட்டுகின்ற பல்கலைக்கழகங்களிலும் அதற்கு வெளியிலும் உள்ள குழுக்களிலும் அது பற்றிய உரையாடல் இடம்பெற்று வருகின்றது. […]
(தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 2024.04.08)
இன்றளவில் சமூகத்தில் பேசுபொருளாக அமைந்துவிட்ட முக்கியமான கொள்கையொன்று சனாதிபதி அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. “தேசிய கல்விக் கொள்கைச் சட்டகம்” என அழைக்கப்படுகின்ற அந்த கொள்கைத்தொடர் மூலமாக இதுவரை ஓரளவுக்கேனும் பாதுகாக்கப்பட்டிருந்த இலவசக் கல்வி செயற்பாங்கின் முதுகெலும்பினை முறித்து பணம் ஈட்டுகின்ற ஒரு பொறியமைப்பாக மாற்றிக்கொள்வதற்கான திட்டம் வகுக்கப்பட்டு வருகின்றது.
இது சம்பந்தமாக ஆர்வம் காட்டுகின்ற பல்கலைக்கழகங்களிலும் அதற்கு வெளியிலும் உள்ள குழுக்களிலும் அது பற்றிய உரையாடல் இடம்பெற்று வருகின்றது. இதனை கல்வி தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற மிகவும் பிற்போக்கான இடையீடாகவே நாங்கள் காண்கிறோம். அது சம்பந்தமாக பல விடயங்களை முன்வைக்க வேண்டியுள்ளது.
என்னதான் சிக்கல்களுக்கு மத்தியிலும் எமது நாட்டின் இலவசக் கல்வி இற்றைவரை நிலவுகின்றது. அதைப்போலவே அது பாதுகாக்கப்படவேண்டுமென நாமனைவரும் எற்றுக்கொள்கிறோம். எமது நாட்டை இந்த அளவக்கேனும் பேணிவர இலவசக் கல்விக் கொள்கை எந்தளவுக்கு பங்களிப்புச் செய்ததெனும் புரிந்துணர்வு எம்மனைவருக்கும் உண்டு. அறிமுகஞ் செய்துள்ள தேசிய கல்விக் கொள்கைச் சட்டகம் மூலமாக நிலவுகின்ற இந்த நிலைமையை பின்நோக்கித் தள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தனியார்மயமாக்கலின் திசையை நோக்கி ஆற்றுப்படுத்தப்பட்டிருப்பது பல்கலைக்கழக முறைமை மாத்திரமன்றி இந்த கொள்கைச் சட்டகத்திற்குள் பாடசாலைகளில்கூட இலவசக் கல்விக் கோட்பாடுகள் மீது தாக்குதல் நடாத்தப்படுவதை காணக்கூடியதாக இருக்கின்றது. மிகவும் எளிமையானவகையில் கல்வியின் நோக்கங்களை முன்வைத்து தூரநோக்கற்ற பிற்போக்கான விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த கொள்கைச் சட்டகம் பற்றிய பொறுப்பு வகிக்கின்ற ஒருவர் கிடையாது. எமது நாட்டின் கல்வி சம்பந்தமான கொள்கைகளை அமுலாக்குகின்ற செயற்பாங்கொன்று நிலவுகின்றது. அதில் தேசிய கல்வி ஆணைக்குழு கொள்கை வகுப்பதில் முன்னணி வகிக்கின்றது. எனினும் தேசிய கல்வி ஆணைக்குழுவிற்கு இதுபற்றித் தெரியாது. அது செயலற்றுப்போகச் செய்விக்கப்பட்டுள்ளது.
இந்த கொள்கைச் சட்டகம் பற்றி பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனம் ஓர் அறிவித்தலை விடுத்துள்ளது. உயர் கல்விக்கு இதனால் ஏற்படுகின்ற தாக்கம் பற்றி விபரமாக விடயங்கள் முன்வைக்கப்பட்டன. அதற்கு பிரதிபலிப்புச்செய்து கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் இந்த கொள்கை வெளியீடு எங்கிருந்து வந்ததென கேள்வி எழுப்புகிறார். கல்வி அமைச்சும் அது பற்றித் தெரியாது எனக் கூறுகிறது. அது சனாதிபதி அலுவலகத்தின் முத்திரை பொறிக்கப்பட்டே வெளியிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமான உத்தியோகபூர்வமான பொறுப்பினை வகிக்கின்ற தேசிய கல்வி ஆணைக்குழுவோ அல்லது கல்வி அமைச்சோ அறிந்திராதவகையில் இந்த அறிக்கைகள் எவரது தேவையின் பிரகாரம் வெளியிடப்படுகின்றதெனும் பாரதூரமான பிரச்சினை நிலவுகின்றது. பாராளுமன்றம், அமைச்சரவை, வேறு பொறுப்புக்கூறவேண்டிய நிறுவனங்கள் எதுவுமே அறிந்திராதவகையில் அரசியலமைப்புச் சபையைக்கூட பொருட்படுத்தாமல் சனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடந்து கொள்கிறார் என்பது இதன்மூலமாக மீண்டும் உறுதியாகின்றது. குழுக்கள் மூலமாக கொள்கைகளை வகுத்து, சம்பந்தப்பட்ட உத்தியோகபூர்வ கட்டமைப்பினை முற்றாகவே ஒதுக்கிவிட்ட மக்கள் ஆணையற்ற இந்த சனாதிபதி நடந்துகொள்கிறார். அது மிகவும் பயங்கரமானது. ரணில் விக்கிரமசிங்க முழுநாடுமே நிராகரித்த அரசியல் பாசறையொன்றின் பிரதிநிதியாவார். அவருக்கு எந்தவிதமான மக்கள் ஆணையும் கிடையாது. அரசியலமைப்பினால் விதிக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட பொறுப்புகள் மாத்திரமே இருக்கின்றன. இன்னும் சில மாதங்களில் அதுவும் அற்றுப்போய்விடும். அதற்கிடையில் நாட்டையும் மக்களையும் பாதிக்கின்ற தீர்மானங்களை மேற்கொள்ள அவருக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது. அவருக்கு எந்தவிதமான உரிமையும் அற்ற பிரதேசங்களில் அடாவடித்தனமாக பிரவேசித்து புரிகின்ற இந்த செயல்களுக்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்பதை வலியுறுத்துகிறோம்.
கல்வித்துறை சம்பந்தமாக இத்தருணத்தில் அரசாங்கத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் பலவிதமாக கொள்கைச் சட்டகங்களை முன்வைத்து வருகிறார்கள். ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து ஒன்று, விஜேதாச ராஜபக்ஷவின் குழுவிலிருந்து புதிய முன்மொழிவுகள், அமைச்சர் புதிய முன்மொழிவு பற்றிப் பேசுகிறார். அந்த ஒன்றுமே சரியாக சமர்ப்பிக்கப்படவில்லை. விஜேதாச ராஜபக்ஷவின் குழுவில் தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவம் செய்து நானும் இருந்தேன். அந்த குழு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நான் கையொப்பமிடவில்லை. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன அதில் கையொப்பமிட்டார். நான் கல்விச் சீர்திருத்தங்களை எதி்ர்ப்பதாலேயே கையொப்பமிடவில்லை என அவர் கூறினார். அந்த முன்மொழிவுகளுடன் நாங்கள் உடன்படவில்லை என்பதாலேயே கையொப்பமிடவில்லை. எனினும் அவருடைய கட்சியும் அது தொடர்பில் ஏகோபித்த அபிப்பிராயத்தில் இல்லை. அவர் குழுவின் முன்மொழிவுகளில் கையொப்பமிட்டாலும் அவருடைய தலைவரே பல்கலைக்கழக விரிவுரையாளர் மத்தியில் ” பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன இந்த அறி்க்கையில் கையொப்பமிட்டாலும் தலைவர் என்றவகையில் நான் அந்த அறிக்கையை ஏற்றுக்கொள்வதில்லை” எனக் கூறினார். எமது கொள்கைத் தீர்மானங்கள் பற்றி பேசுவதைவிட அவருடைய கட்சியில் ஏகோபித்த கருத்து நிலவாத விடயங்கள் பற்றி வலியுறுத்துவே நல்லதென பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்னவிற்கு நான் முன்மொழிகிறேன்.
“இனிமேல் உருவாகின்ற பல்கலைக்கழகங்களை மாகாண சபைகளுக்கு கையகப்படுத்த ரணில் முன்மொழிந்துள்ளார்”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் கலாநிதி திலீப விதாரண-
எமது நாட்டுக்கு 1931 இல் இலவசக் கல்வி அறிமுகஞ் செய்யப்பட்ட பின்னர் சமர்ப்பித்த மிகவும் பாரதூரமான திருத்தம் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு காலகட்டங்களில் பலவிதமான சவால்களுக்கு இலக்காகி வந்தபோதிலும் உயர் கல்விக் கொள்கையானது அடிப்படை அத்திவாரத்தில் அடிப்படை சாரத்தில் இதுவரைகாலமும் நிலவியது. 93 வருடகால இலவசக் கல்வி கொள்கைமீது விழுகின்ற பிரமாண்டமான தாக்குதலாக புதிய திருத்தங்களை அடையாளப்படுத்த முடியும். இங்கே இருப்பது இலவசக் கல்வியின் முழுமையான உட்பொருளை மாற்றியமைக்கின்ற முன்மொழிவுகளாகும். ரணில் விக்கிரமசிங்கவை முதன்மையாகக்கொண்ட நவ லிபரல் பார்வைக்கோணம் முன்மொழிகின்ற பிரதானமான நிபந்தனையாக அமைவது கல்வியிலிருந்து அரசாங்கம் விடுபட வேண்டுமென்பதாகும். சவால்களுக்கு இலக்காகினாலும் எண்ணக்கருரீதியாக ஆரம்பக் கல்வியில் இருந்து பல்கலைக்கழக கல்விவரை அனைத்து வலயங்களிலும் அமுலாக்கப்பட்டது. மாணவர்களுக்கு இனிமேலும் இலவசக் கல்வி கிடையாதென்பதே இதன் மூலமாக முன்மொழியப்படுகின்றது: பணம் செலுத்தியே கற்கவேண்டுமென்பதாகும். அரசாங்கத்தினால் உயர்கல்விக்காக இதுவரை ஈடுபடுத்திய பணம் நின்றுவிடுமென்பதும் பல்கலைக்கழக கல்வி முறைமை மாணவர்களிடமிருந்து சேர்க்கப்படுகின்ற பணத்தின் அடிப்படையிலும் அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற கடனின் அடிப்படையிலும் பேணிவரப்பட்டு கடன் செலுத்தவும் பல்கலைக் கழகங்களுக்கு முன்மொழியப்பட்டுள்ளது. உலகில் இன்றளவில் மோசமான நிலையை அடைந்துள்ள மாணவர்களுக்கு கடன்கொடுத்தலும் முன்மொழியப்பட்டுள்ளது. ஐக்கிய அமரிக்காவிலும் ஐக்கிய இராச்சியத்திலும் உயர்கல்வி பயில்கின்ற மாணவர்களால் பெறப்பட்ட இத்தகைய கடனைச் செலுத்தமுடியாமல் போனமையால் நேர்ந்துள்ள கவலைக்கிடமான நிலைமை பற்றி பாரதூரமான உரையாடல்கள் நிலவுகின்றன.
மத்திய அரசாங்கம் ஆரம்ப மற்றும் இரண்டாம்நிலை கல்வியிலிருந்து விலகி மாகாணசபை சட்டகத்திடம் கையளிக்கப்பட உள்ளது. தற்போது மத்திய அரசாங்கத்தின்கீழ் நிலவுகின்ற தேசிய பாடசலைகள்கூட மாகாண சபைகளிடம் கையளிக்க முன்மொழியப்பட்டுள்ளது. அதன் பிரதான அர்த்தத்தை விளங்கிக்கொள்வது மிகவும் முக்கியமானதாகும். 1987 இல் இருந்து சரிவர அமுலாக்கப்படாத பொறியமைப்பொன்றே மாகாண சபைகளில் இருக்கின்றன. அவ்வாறான இடத்திற்கு ஆரம்ப மற்றும் இரண்டாம்நிலைக் கல்வியை தள்ளிவிடுவதன் மூலமாக அரசாங்கம் முற்றாகவே கல்வியிலிருந்து நீங்குவதற்கான முதலாவது அடியெடுப்பு வைக்கப்படுகின்றது. 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மாகாணசபை தேர்தல்கள்கூட நடாத்தப்படவில்லை. அவ்வாறான இடத்திற்கு ஆரம்ப மற்றும் இரண்டாம்நிலைக் கல்வியை ஒப்படைக்கவே தயாராகி வருகிறார்கள். இனிமேல் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படுமாயின் அவற்றை மாகாண சபைகளிடம் கையளிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இதன் பின்னர் தேசிய பல்கலைக் கழகங்கள் உருவாக மாட்டாதென்பதே அதன் மூலமாக கூறப்படுகின்றது. அதைப்போலவே ஆரம்ப மற்றும் இரண்டாம்நிலை கல்விக்கான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்படுவது சம்பந்தப்பட்ட பாடசாலையின் மாணவர் எண்ணிக்கை மற்றும் இந்த பாடசாலைகளைப் பேணிவருகின்ற நிலைமையின் அடிப்படையிலேயே எனக் கூறப்படுகின்றது. அதன் மூலமாக இடம்பெறுவது தற்போது நிலவுகின்ற பிரபலமான, பலம்பொருந்திய பாடசலைகளுக்கு அரசாங்க நிதி ஒதுக்கப்படுதலாகும். சிறிய பாடசாலைகளுக்கு முழுமையாகவே நிதி கிடைக்காமல் போய்விடும். மறுபுறத்தில் கல்வியை வழங்குகின்ற மொழிமூலமாக ஆங்கிலம் முன்மொழியப்பட்டுள்ளது. ஆங்கில மொழிக்கு விசேட இடம் வழங்குகின்ற காரணத்தின்பேரில் இன்றளவில் ஓரளவுக்கேனும் பாதுகாக்கப்பட்டுள்ள சமூக நீதி முற்றாகவே இல்லாதொழிந்துவிடும்.
எந்தவொரு கொள்கைச் சட்டகத்தினதும் வரைவாளர்கள் யாரென முதலில் அறிமுகஞ் செய்யப்படுவர். எனினும் இங்கு அந்த பொறுப்பினை வகிக்கின்ற குழுவொன்று குறிப்பிடப்படவில்லை. எனினும் சமூக வலைத்தளத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த ஓர் அறிக்கையின்படி அது தொடர்பாக 25 பேர் இடையீடு செய்துள்ளார்கள். அவர்கள் மத்தியில் பல்கலைக்கழக விரிவுரையாளர் சம்மேளனம் கிடையாது. குறிப்பாக கல்விக் கொள்கைக்காக பல்கலைக்கழக விரிவுரையாளர் சம்மேளனம் தொடர்ச்சியாக இடையீடுசெய்து வருகின்றது. அதைப்போலவே அந்த 25 பேர் மத்தியில் எந்தவோர் ஆசிரியர் சங்கமோ மாணவர் சங்கமோ கிடையாது. கல்வியை ஒரு வியாபாரமாக காண்கின்ற பல்வேறு குழுமங்கள் இதில் இருக்கின்றன. அரச உத்தியோகத்தர் தவிர்ந்ததாக தனியார் பல்கலைக் கழகங்களை பிரதிநிதித்துவம் செய்பவர்கள், பாரியளவிலான கம்பெனிகள் மற்றும் நவலிபரல் பொருளாதாரத்தின் கோட்பாடு வகுப்பாளர்கள் ஒன்றுசேர்ந்து இந்த கொள்கைச் சட்டகத்தை வகுத்துள்ளார்கள். 1931 இல் இருந்து அமுலில் உள்ள இலவசக் கல்வியில் இருந்து பயன்பெற்றவர்களாலேயே இந்த திரிபுநிலையுற்ற கொள்கைச் சட்டகத்தைக் கொண்டுவந்திருப்பது பாரதூரமான ஒரு விடயமாக அமைகின்றது. இதுவரை காலமும் நிலவிய எந்தவோர் அரசாங்கமும் புரிந்திராத இந்தளவுக்கு பாரதூரமான தாக்குதல் எவ்வாறு இலவசக் கல்விமீது மேற்கொள்ளப்படுகின்றதென நாங்கள் கேள்வி கேட்கிறோம்.
“கல்வி தொடர்பான பொறுப்பிலிருந்து அரசாங்கத்தை விலக்குகின்ற கொள்கைச் சட்டகத்திற்கு எதிராக அணிதிரள வேண்டும்”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் கலாநிதி அநுர கருணாதிலக-
எமது நாட்டின் கல்வி சம்பந்தமாக இலவசக் கல்விச் சட்டத்தைப் போன்றே இலங்கை அடைந்துள்ள பொருளாதார, சமூக, கலாசார, சர்வதேச சமவாயம் எனும் இரண்டு அடிப்படை விடயங்கள் மிகவும் முக்கியமானவை. சர்வதேச சமவாயம் மூலமாக அனைவருக்கும் கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான உரிமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. சுதந்திரமான சமூக பிரஜை கல்வி மூலமாகவே உருவாக்கப்படுகிறான் என்பது ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. அதைப்போலவே அனைத்து இனங்களுக்கிடையிலும் பரஸ்பர புரிந்துணர்வு, சமாதானம் மற்றும் ஒற்றுமை பிரஜைகளின் கல்வி மூலமாகவே உறுதிசெய்யப்படுவதாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. எந்தவொரு மட்டத்திலுமான கல்வியை பெற்றுக்கொள்வதற்கான சமமான அணுகுமுறை பிரஜைகளுக்கு இருக்கவேண்டுமென்பது எற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகும். தமது இயலுமை மற்றும் தோற்றுவாய்களின் அடிப்படையில் அரச கல்வியை விரிவாக்குவதிலான உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்பது குறிப்பிடப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேசரீதியாக எற்றுக்கொள்ளப்பட்ட இந்த கோட்பாடுகள் அனைத்தையும் மறந்து வகுத்த கொள்கைச் சட்டகமொன்று சனாதிபதியால் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கைச் சட்டகத்தை அமுலாக்கினால் தரமான கல்வி சமூகத்தின் ஒரு பிரிவினருக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படுவதை தவிர்க்க இயலாது. இன்றளவில் ஆரம்பக் கல்வியில் இருந்து உயர்கல்வி வரை நிலவுகின்ற வேற்றுமைகளை மென்மேலும் விரிவாக்கி உறுதிசெய்ய இந்த முன்மொழிவுகள் வழிசமைக்கின்றன.
முதலீடுகளும் வளங்களும் என பெயரிடப்பட்டுள்ள தலைப்பின்கீழ் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியில் இருந்து வருடம் 12 வரை கல்வி பயில்கின்ற பிள்ளைகளுக்கு செலுத்துவதற்குள்ள இயலுமைக்கு தடையேற்படாதவண்ணம் செயற்படவேண்டுமெனக் குறிப்பிடப்படுகின்றது. புறப்பாடவிதானச் செயற்பாடுகளையும் உள்ளிட்டதாக பாடசாலைகளில் பணம் அறவிட இன்றளவில் நிலவுகின்ற தடைகள் அனைத்தையும் நீக்குவதாகக் குறப்பிடப்பட்டுள்ளது. அதைப்போலவே பல்கலைக் கழகங்கள் சம்பந்தமான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினை ஒழித்து தனிவேறான தேசிய உயர் கல்வி ஆணைக்குழு எனும் நிறுவனமொன்றை அறிமுகஞ்செய்து அரச, அரசதுறைல்லாத, தேசிய மற்றும் மாகாண உயர் கல்வி நிறுவனங்களில் கல்விக்கான தரத்தை சான்றுரைப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ளது. உயர் கல்வி நிறுவனங்களுக்கு நிதி வழங்குகின்ற செயற்பாங்கிலிருந்து நீங்கி கல்வியின் தரத்தை வகுப்பது மாத்திரம் தேசிய கல்வி ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படுகின்றது. பணத்தை அறவிடல், மாணவர்களை சேர்த்துக்கொள்ளல், நிருவாகத்தை உள்ளிட்ட அனைத்து அலுவல்களையும் கையளிக்க முன்மொழியப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தமது பணத்தை தேடிக்கொள்ள வேண்டுமென்பதே இதன் கருத்தாகும். சிலவேளைகளில் பல்கலைக்கழகங்களுக்கு சேர்த்துக்கொள்வதற்கான தரநியமங்களைக் குறைத்து அதிகமாக மாணவர்களை சேர்த்துக்கொண்டு அதிகமாக பணத்தை ஈட்டிக்கொள்ளவும் இதன் மூலமாக வாய்ப்பு கிடைக்கும். மறுபுறத்தில் பணத்தை பிறப்பித்துக்கொள்வதற்காகவே ஆக்கப்பட்ட பாடநெறிகளை அறிமுகஞ்செய்யவும் கவனஞ் செலுத்தப்படும்.
இதுவரை இலவசக் கல்விச் செயற்பாங்கு ஓரளவுக்கேனும் பாதுகாக்கப்பட்டிருந்த முதுகெலும்பினை சிதைத்து பணம் ஈட்டுகின்ற பொறியமைப்பாக மாற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. சனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை முதன்மையாகக்கொண்டு இந்த புதிய கொள்கைச் சட்டகம் முன்வைக்கப்பட்டுள்ளமை தெளிவாகின்றது. அரசாங்கத்தினால் கல்விக்காக பணம் ஈடுபடுத்தப்படுதல், தரமான கல்வியை வழங்குதல், அனைவருக்கும் கல்வியை வழங்குவதற்கான பொறுப்பிலிருந்து அரசாங்கம் விலகுதல் ஆகிய அனைத்து விடயங்களையும் ஒரே தடவையில் முடிவுக்கு கொண்டுவருகின்ற உத்தேச கொள்கைச் சட்டகத்திற்கு எதிராக அனைவரும் அணிதிரள வேண்டும்.
(53 வது ஏப்ரல் வீரர்கள் ஞாபகார்த்தம் – பொலநறுவை 2024.04.05 53) நாமனைவரும் பொலநறுவையில் ஒன்றுசேர்ந்திருப்பது ஏப்ரல் வீரர்களின் 53 வது ஞாபகார்த்தத்தின் நிமித்தமாகும். அதைப்போலவே ஞாபகார்த்த ஒன்றுகூடல்கள் காலி பத்தேகமவிலும் புத்தளம் நாத்தண்டியாவிலும் நடைபெறுகின்றது. இந்த சமூகத்தை மாற்றியமைப்பதற்காக பொதுமக்களின் கைகளில் அதிகாரத்தை பெற்றுக்கொள்ளும் நம்பிக்கையுடன் செயலாற்றிக் கொண்டிருக்கின்ற தருணத்தில் 1971 போராட்டத்தில் உயிர்த்தியாகம்செய்த எமது அன்புக்குரிய தோழர்கனை நினைவுகூர்ந்து அவர்களின் அனுபவங்களை நாங்கள் பெற்றுக்கொள்வது அவசியமாகும். அன்றும் எமது நாடு பயணித்துக்கொண்டிருந்த வங்குரோத்து நிலைமையைக் […]
(53 வது ஏப்ரல் வீரர்கள் ஞாபகார்த்தம் – பொலநறுவை 2024.04.05 53)
நாமனைவரும் பொலநறுவையில் ஒன்றுசேர்ந்திருப்பது ஏப்ரல் வீரர்களின் 53 வது ஞாபகார்த்தத்தின் நிமித்தமாகும். அதைப்போலவே ஞாபகார்த்த ஒன்றுகூடல்கள் காலி பத்தேகமவிலும் புத்தளம் நாத்தண்டியாவிலும் நடைபெறுகின்றது. இந்த சமூகத்தை மாற்றியமைப்பதற்காக பொதுமக்களின் கைகளில் அதிகாரத்தை பெற்றுக்கொள்ளும் நம்பிக்கையுடன் செயலாற்றிக் கொண்டிருக்கின்ற தருணத்தில் 1971 போராட்டத்தில் உயிர்த்தியாகம்செய்த எமது அன்புக்குரிய தோழர்கனை நினைவுகூர்ந்து அவர்களின் அனுபவங்களை நாங்கள் பெற்றுக்கொள்வது அவசியமாகும்.
அன்றும் எமது நாடு பயணித்துக்கொண்டிருந்த வங்குரோத்து நிலைமையைக் கண்டோம். இற்றைக்கு இரண்டு வருடங்களாக கரைசேர்க்க முடியாத அளவுக்கு வங்குரோத்து அடைந்துள்ளது. மக்கள் பாதிக்கப்பட்டுள்ள தாங்கிக்கொள்ள முடியாத இந்த பொருளாதாரத்தில் இருந்து விடுபட்டு மாற்றுவழியில் பயணிக்கவேண்டியது அவசியமாகும். அரசியல்ரீதியாகவும் நாடு வீழ்த்தப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார கொள்கைகளைத் தீர்மானிப்பது சர்வதேச நாணய நிதியமாகும். அதைப்போலவே நாட்டைக் கட்டியெழுப்ப அவசியமான வளங்களை வேகமாக விற்று அடிமைப்பட்ட நாடாக மாற்றப்பட்டுள்ளது. 1971 இல் போராடிய எமது சகபாடிகள் சிந்தித்தது மண்டியிட்டு வாழ்வதைவிட சுதந்திரம் பெறவேண்டியது அவசியமென்பதாகும். இன்றும் பெயரளவிலான சுதந்திரமே எமக்கு இருக்கின்றது. அதனால் புதிய சதந்திரப் போராட்டமொன்று அவசியமாகி இருக்கின்றது. மகிந்த ராஜபக்ஷாக்களின் அரசியல் பாசறையை உள்ளிட்ட இந்த ஆட்சியாளர்களை மக்கள் முழுமையாகவே நிராகரித்துள்ளார்கள். ரணில் விக்கிரமசிங்கவும் பசில் ராஜபக்ஷவும் சனாதிபதி தேர்தலுக்கு முன்னராக பொதுத்தேர்தலை நடாத்துவது பற்றி பேசியதற்கான காரணம் ராஜபக்ஷாக்களுக்கு சனாதிபதி தேர்தலுக்காக முன்வைக்க வேட்பாளரொருவர் இல்லாமையாகும். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் இன்றளவில் கட்சியின் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான போராட்டமொன்று நிலவுகின்றது. நாங்கள் இந்நாட்டின் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். டலஸ் அழகப்பெருமவுடன் விலகிய குழு பிரிந்து ஒரு பகுதி ஐ.ம.சக்தியுடன் இணைந்துள்ளது. இதனால் குழப்பமடைந்த ஐ.ம.சக்தியின் மற்றுமொரு குழு பிளவுபட்டு ஐக்கிய தேசிய கட்சியுடன் இணையத் தயாராகி வருகின்றது. நாடு பொருளாதாரரீதியாக வீழ்ச்சியடைந்தது மாத்திரமன்றி இதுவரை ஆட்சிசெய்த குழுக்களுக்கு பாரதூரமான அரசியல் நெருக்கடியொன்றும் உருவாகி இருக்கின்றது. அதேவேளையில் நாங்களும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக நாங்கள் மக்களை ஒழுங்கமைத்து வருகிறோம். எதிர்வரும் சனாதிபதி தேர்தலில் உறுதியாக திசைகாட்டியை வெற்றிபெறச்செய்விக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
ஒரு மாறுபட்ட ஆட்சியை நிறுவவே நாங்கள் முயற்சி செய்கிறோம். அந்த ஆட்சி மூலமாக வீழ்த்தப்பட்டுள்ள நாட்டை மீட்டெடுத்து பலம்பொருந்திய உறுதியான பொருளாதாரமொன்றை உருவாக்கிட வேண்டும். அதனை அமைத்திட பிரமாண்டமான மக்கள் பங்கேற்பு அவசியமாகும். நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் பங்கேற்கச் செய்விக்கின்ற தேசிய எழுச்சியொன்று தேவை. நாட்டை புதிய மறுமலர்ச்சியை நோக்கி ஆற்றுப்படுத்த ஒட்டுமொத்த மக்களையும் அணிதிரட்டி கற்பாறையைக்கூட சாகுபடி செய்கின்ற திடசங்கற்பத்துடன் நாங்கள் செயலாற்றி வருகிறோம். நீதியான நாடு, நியாயமான சமூகம் மற்றும் அடிமைத்தனமற்ற மனிதனை உருவாக்குவதே 1971 இல் போராடிய எமது தோழர்களின் எதி்ர்பார்ப்பாக அமைந்தது. நாங்கள் கட்டியெழுப்புகின்ற பொருளாதாரத்தின் நன்மைகள் எவருக்கும் நியாயமாக பகிர்ந்துசெல்ல வேண்டும். திறந்த பொருளாதாரத்தில் பெரும்பாலான மக்கள் சுயநலம் எனப்படுகின்ற பனிக்கட்டி நீரில் அமிழ்த்தப்பட்டு கல்விப்பருவம்தொட்டே கூட்டுமனப்பான்மையைக் கைவிட்டு மனிதநேயத்தை இழந்துள்ளார்கள். பிறரின் வேதனைகளை உணர்கின்ற ஒத்துணர்வுகொண்ட கூட்டுச் சமூகமொன்றையே நாங்கள் உருவாக்கிடவேண்டும். எமது சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பும் மதிப்பும் கிடையாது. கேடுகெட்ட கருத்துக்களைக்கொண்ட மனிதர்களுடன் நாட்டை முன்நோக்கி நகர்த்த முடியாது. 1971 இன் தோழர்களிடம் மனிதம், நன்மதிப்பு, போராட்டக்குணம், மக்கள்மீது அன்புசெலுத்துதல் நன்றாகவே இருந்தது. மக்கள்மீது அன்புசெலுத்துமாறே அவர்கள் எமக்கு போதித்தார்கள். சமூகத்தில் நிலவவேண்டியது பகைமை, கயமை, துன்பம், மோதல்கள் அல்ல: அன்பு மாத்திரமே. ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தக்கூடிய சமூகத்தையே நாங்கள் நிர்மாணிக்கவேண்டும். சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களை நாட்டைக் கட்டியெழுப்புகின்ற போராட்டக் கோஷத்திற்காக ஒன்றுசேர்க்ககூடிய ஒரே சக்தி தேசிய மக்கள் சக்தி மாத்திரமேயாகும். வீழ்த்திய தேசத்தைக் கட்டியெழுப்புவோம் என்றே தோழர் அநுர வடக்கிற்குச் சென்று கூறினார். தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்பி இலங்கைத் தேசத்தைக் கட்டியெழுப்புவோம் என்ற போராட்டக் கோஷத்தை நாங்கள் முன்னெடுத்துச் செல்வோம். அதற்காக பாரிய செயற்பொறுப்பினை நாங்கள் ஆற்றவேண்டி உள்ளது.
நாங்கள் புதுவிதமாக சிந்திக்காவிட்டால் புதிய சமூகமொன்றைக் கட்டியெழுப்ப முடியாது. எம்மிடம் கூட்டுமனப்பான்மை இல்லாவிட்டால் கூட்டான சமூகமொன்றைக் கட்டியெழுப்ப முடியாது. நாங்கள் பிறரை நேசிக்காவிட்டால் அன்புநிறைந்த சமூகமொன்றை எம்மால் கட்டியெழுப்ப முடியாது. நாங்கள் அர்ப்பணிப்பு செய்யாவிட்டால் ஒரு நாட்டைக் கட்டியெழுப்பிட முடியாது. மானிட இனம்மீது அன்புசெலுத்த, அர்ப்பணிப்புச்செய்ய, கூட்டாக போராட்டம் நடாத்த கற்றுக்கொள்ள இருக்கின்ற ஒரே இடம் 1971 தோழர்களின் உயர்த்தியாகம் செய்கின்ற முன்மாதிரியாகும். நாங்கள் அதிலிருந்து தெம்புபெற்றவர்களாவோம். பிரமாண்டமான சமூக மாற்றத்திற்கன பொறுப்புக்கூறுதலும் பொறுப்புவகித்தலும் எம்மிடம் இருக்கின்றது. 76 வருடங்களாக குறிப்பாக 1977 இன் பின்னர் அழித்த சமூகமே எமக்கு இருக்கின்றது. எல்லாவற்றினதும் விலையை அறிந்த ஆனால் பெறுமதியை அறியாத சமூகமே கடந்த நாற்பது வருடங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. எளிமையான அரசாங்க மாற்றமல்ல சமூகத்தை ஆழமாக மாற்றவேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது. இதற்காக நாங்கள் அணிதிரண்டு வருவதோடு, எதிரிகள் மிகவும் பதற்றமடைந்துள்ளார்கள். அதனால் ஒரு புறத்தில் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்தவர்கள் பொருளாதாரக் கொள்கைபற்றி விவாதிக்க வருமாறு எமக்கு சவால் விடுத்துள்ளார்கள். பிரதமர் ரணிலின்கீழ் 05 வருடங்கள் அரசாங்கத்தில் இருந்து பன்னாட்டு இறையாண்மை முறிகளிலிருந்து இலங்கைக்கு மிகஅதிகமான வெளிநாட்டுக் கடன்களைப்பெற்று இந்த பொறிக்குள் எம்மை சிக்கவைத்தவர்களே எம்மை விவாதத்திற்கு அழைக்கிறார்கள். அங்குமிங்கும் தாவுகின்ற உறுதியான கொள்கைப்பிடிப்பற்ற ஆட்களுக்குப் பதிலாக சனாதிபதி தேர்தலில் முக்கியமானதாக அமைவது வேட்பாளர்களாக முன்வருகின்ற கட்சித்தலைவர்கள் காரணமாக எங்கள் கட்சித்தலைவர் தோழர் அநுர திசாநாயக்கவுடன் அவர்களின் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களை விவாதத்திற்கு வருமாறு நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம். இப்பொது அவர்கள் அதற்கு முன்னர் மற்றவர்கள் செய்வது நல்லதா கூடாதா என கேட்கிறார்கள். தொலைக்காட்சி அலைவரிசைகளும் அதற்கு தயாராகி வருகின்றன. சஜித் பிரேமதாச தனியாக எதனையும் கூறினாலும் தொலைக்காட்சி விவாதங்களுக்கு வந்ததில்லை. சஜித் பிரேமதாச விவாதத்திற்கு வருவாராயின் நாங்களும் மகிழ்ச்சியடைவோம்.
மறுபுறத்தில் மத்தியகிழக்கில் எண்ணெய் விற்பனை செய்வதைப்போல் எமது நாட்டின் வளங்களை விற்பதற்காக அங்கீகாரம் தருபவர்கள் வாதப்பிரதிவாதங்களை முன்வைத்து விவாதமொன்று பற்றி கூறுகிறார்கள். மத்தியகிழக்கில் எண்ணெய் விற்கிறார்களேயொழிய எண்ணெய்க் கிணறுகளை விற்பார்களா? அவர்கள் எண்ணெய்ப் படிவுகளையன்றி உற்பத்திகளையே விற்கிறார்கள். இவர்களுக்கு அது புரியவில்லை. அதோ அந்த எளிமையான விடயங்களை விளங்கிக்கொள்ள முடியாதவர்களுக்கு நாங்கள் கூறுவது விற்றுத்தின்கின்ற கொள்கைக்குப் பதிலாக நாட்டை சீராக்குகின்ற கொள்கைக்குச் செல்லவேண்டும். மறுபுறத்தில் கூறுவதாயின் வேறு விவாதமொன்றில் ஈடுபட நாங்கள் அதனை அந்த நேரத்தில் பார்த்துக்கொள்வோம். தற்போது அவர்கள் குறிப்பாக தொலைக்காட்சி உரையாடல்களின்போது விடயரீதியாக பதிலளிக்க முடியாமல் போகின்றபோது 88 – 89 பற்றிப் பேசுகிறார்கள். 1971 உடன் தொடர்புடையதாக திரிபுபடுத்தப்பட்டுள்ள வரலாறு பற்றியும் நாங்கள் சற்று பேசவேண்டும். வரலாற்றினை எழுதுபவர்கள் வெற்றியாளர்களே. 1971 பற்றி அவர்களின் கருத்துப்படி எம்மை கிளர்ச்சிகாரர்கள் என்றே கூறுகிறார்கள். 55 வயதிற்கு மேற்பட்டவர்களை கொலைசெய்வதாக அக்காலத்தில் ஒரு பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள். 1980 தசாப்பதத்தின் இறுதியில் அப்படித்தான். அவர்கள் பிரமாண்டமான அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு வரலாற்றினை அவர்கள் எழுதினார்கள். அவர்கள் தவறாக எழுதிய வரலாற்றினை நாங்கள் வெகு விரைவில் மீண்டும் எழுதுவோமென வலியுறுத்துகிறோம். அந்த வரலாற்றினை புதிதாக எழுதுகின்ற தலைமுறையினர் நாங்களே. உண்மையில் 88 தொடங்கியது அதற்கு நீண்டகாலத்திற்கு முன்னரே, அதாவது 1978 இல் இருந்தாகும். அதனை அறிந்திராதவர்களுக்கு நாங்கள் கூறிக்கொள்வது 78 – 90 வரையான பாரிய காலப்பகுதியில் ஜயவர்தன – பிரேமதாச பீதிநிலையொன்று நிலவியதென்பதையாகும். அந்த வரலாற்றினை நாங்கள் சரிவர விளங்கிக்கொள்ள வேண்டும்.
1977 தேர்தலில் 5/6 பங்கு பலத்தை எடுத்துக்கொண்டுவந்த ஜே.ஆர் ஜயவர்தன அரசியலமைப்பினை மாற்றியமைத்து புதிய அரசியலமைப்புடன் நிறைவேற்று சனாதிபதி பதவியை அறிமுகஞ் செய்தார். நிறைவேற்று சனாதிபதி பதவியால் பெண்ணை ஆணாகவும் ஆணைப் பெண்ணாகவும் மாற்றுவதைத்தவிர ஏனைய எல்லாவற்றையும் செய்யமுடியுமென அன்று அவர் கூறினார். அவர் தனது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் இராஜிநாமா கடிதங்களை வாங்கி சடைப்பைக்குள் போட்டுக்கொண்டார். ஜே. ஆர். தனது கட்சிக்குக்கூட சனநாயகத்தை கொடுக்கவில்லை என்பதை தற்போது பிதற்றிக்கொண்டிருக்கின்ற நண்பர்களுக்கு கூறிக்கொள்கிறேன். அதன் பின்னர் 1980 யூலை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக அத்தியாவசிய சேவைகள் கட்டளைகளை விதிக்கிறார். அவசரகாலச் சட்டத்தை அமுலாக்கி ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட ஊழியர்களை வெளியில் போட்டார். அத்துடன் நின்றுவிடாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களை மயானத்திற்கு அனுப்புவதாக கூறினார். வேலைநிறுத்தங்கள் மற்றும் அமைதிவழி ஆர்ப்பாட்டங்களுக்கு தாக்குதல் நடாத்துவதற்காக தனிவேறான காடையர் கும்பல்களை உருவாக்கினார். உபாலி விஜேவர்தனவின் திவயின செய்தித்தாள் அந்த காடையர் கும்பலுக்கு “தக் கூட்டுத்தாபனம்” எனும் பெயரைக் குறித்தது. 1980 யூலை வேலைநிறுத்தத்தில் முன்னர் அந்த காடையயர்களை பிரயோகித்து தாக்குதல் நடாத்தி சோமபால எனும் தொழிலாளரை படுகொலை செய்தார்கள். அதைப்போலவே நாடு பூராவிலும் காடையர் அமைச்சர் குழுவொன்று இருந்தது. 1978 இன் பின்னர் நாங்கள் பகிரங்க அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கையில் எம்மீது தாக்குதல் நடாத்தினார்கள். கெக்கிராவ மகிந்தசோம, கடுவெல போல் பெரேரா, மகியங்கனை கெப்டன் செனெவிரத்ன போன்ற காடையர் அமைச்சர்கள் பீதிநிலைமிக்க ஆட்சியை முன்னெடுத்து வந்தார்கள்.
அதன் பின்னர் 1981 மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தல் நடாத்தப்பட்டது. அமைச்சர்கள் காடையர்களை கூட்டிக்கொண்டு யாழ்ப்பாணத்திற்குச்சென்று தெற்காசியாவின் பெறுமதிமிக்க நூல்நிலையத்திற்கு தீவைத்து தேர்தல் பீதிநிலையை உருவாக்கினார்கள். அதற்காக மூன்று காமிணிமார்கள் முன்னணியில் செயற்பட்டார்கள். காமிணீ திசாநாயக்க, காமிணி ஜயவிக்ரம பெரேரா மற்றும் காமிணீ லொக்குகே. வடக்கில் யுத்தமொன்று உருவாகவும் இந்த நிலைமை வழிகோலியது. 1982 இல் கல்வியை நாசமாக்க ரணில் இடையீடுசெய்து கொண்டுவந்த வெள்ளையறிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்செய்த மாணவர்களை பொலீஸ் குதிரைகளை ஈடுபடுத்தி தாக்கினார்கள். அந்த காலத்தில் எமது தலைமையில் நிலவிய மாணவர் இயக்கத்தினால் அந்த தாக்குதலுக்கு இலக்காகி வெள்ளையறிக்கையை தோற்கடிக்க இயலுமாயிற்று. அதில் நின்றுவிடாமல் மகளிர் தினமொன்றில் பேரணியில்சென்ற சமசமாஜக் கட்சியின் விவியன் குணவர்தனவை தாக்கினார்கள். அதைப்போலவே சர்வதேச விழிப்புலனற்றோர் தினத்தில் விழிப்புலனற்றோர் நடாத்திய நியாயமான கோரிக்கைகளை முன்வைத்த ஆர்ப்பாட்டம்மீது தாக்குதல் நடாத்தினார்கள். “தார்மீக சமுதாயம்” நூலை எழுதிய பேராசிரியர் எதிரிவீர சரத்சந்திர அவர்களை சாக்டையில் தள்ளிவிட்டுத் தாக்கினார்கள். அதைப்போலவே ஒருசில வழக்குத் தீர்ப்புகளை வழங்கிய நீதவான்களின் வீடுகளுக்கு எதிரில்சென்று “ஊ” சத்தம் போட்டு கல்லெறிந்தார்கள். கோனவல சுனில் எனப்படுகின்ற ஐக்கிய தேசிய கட்சியைச்சேர்ந்தவரும் பெண்கள்மீது வல்லுறவு புரிந்தவருமான காடையனுக்கு சனாதிபதி மன்னிப்பு வழங்கி விடுதலைசெய்து குழு தீவுக்குமான சமாதான நீதிவான் பதவியைக் கொடுத்தார்கள். ஜே. ஆரின் காடையர்கள் கெட்டம்பே பன்சலையை சுற்றி முள்ளுக்கம்பி வேலி அடித்தார்கள். அத்துடன் நின்றுவிடாமல் 1983 பொதுத்தேர்தலை நடத்தாமல் அதிகாரத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்காக 1982 திசெம்பர் மாதத்தில் மக்கள் கருத்துக் கணிப்பினை நடாத்தி படுமோசமான ஊழல்மிக்க தேர்தலொன்றை வரலாற்றில் சேர்த்தார்கள். 1983 கறுப்பு ஜுலையை அதன் பின்னரே நிர்மாணித்தார்கள். நாங்கள் இங்கு குறிப்பிடுவது ஊர்களில் இருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் பற்றியல்ல. ஜயவர்தன ஆட்சியால் கறுப்பு ஜுலை உருவாக்கப்பட்டு அப்பாவித் தமிழ் மக்களை கொலைசெய்து முன்னெடுத்துவந்த அழிவு பற்றியாகும். “சிறி பத்துல’ திரைப்படத்தை இயக்கிய நிர்மாணிப்பாளராக கே. வெங்கட்டை உயிருடன் தீமூட்டிக் கொன்றார்கள். நாட்டில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான எந்தளவு சொத்துக்களை அழித்தார்கள்? அந்த கறுப்பு ஜுலையை பயன்படுத்தி மக்கள் விடுதலை முன்னணி, கமியுன்ஸ்ட் கட்சி மற்றும் நவ சமசமாஜக் கட்சியை தடை செய்தார்கள். ஏனைய இரண்டு கட்சிகளின் தடையை பின்னர் நீக்கி மக்கள் விடுதலை முன்னணியின் தடையை தொடர்ச்சியாக பேணிவந்தார்கள். நாங்கள் எந்த தவறினையும் புரிந்திருக்கவில்லை. அவர்கள் உருவாக்கிய ஜுலை கலவரத்தைப் பயன்படுத்தி சனநாயக அரசியலில் ஈடுபட்டிருந்த மக்கள் விடுதலை முன்னணியை தடைசெய்தமை பற்றி என்ன கூறுகிறீர்கள் என 1988-1989 ஐ நோக்கி விரல்களை நீட்டுபவர்களிடம் நாங்கள் கேட்கிறோம். அது எமக்கு எதிராக நடைமுறைப்படுத்திய அரசியல் சூழ்ச்சியாகும்.
அத்துடன் நின்றுவிடாமல் எமது கட்சித் தலைவர்களின் தலைவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபா வீதம் கேட்புவிலை குறித்தார்கள். றோஹண விஜேவீர, உபதிஸ்ஸ கமநாயக்க, சோமவஞ்ச அமரவீர போன்ற ஐவரை பிடித்துத் தருபவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபா வீதம் செலுத்துவதாக பிரச்சாரம் செய்தார்கள். எமது நாட்டைச்சேர்ந்த எவருமே அந்த ஐம்பதாயிரம் ரூபாவை பெற்றுக்கொள்ளச் செல்லவில்லை. எமது கட்சியை தடைசெய்ததும் தடையை நீக்கிக்கொள்வதற்கான அரசியலிலேயே நாங்கள் ஈடுபட்டோம். தடைசெய்த ஒருவருடம் ஆகையில் நாடு பூராவிலும் “மக்கள் விடுதலை முன்னணியைத் தடைசெய்து ஒரு வருடமாகிறது. தடையை உடனடியாக நீக்கு” என போஸ்டர் ஒட்டினார்கள். இவ்வாறு சென்று அரசாங்கம் 1987 இல் இந்தியாவுக்கு கட்டுப்பட்டு இந்திய – இலங்கை உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது. அதற்கெதிராக நாடு பூராவிலும் எதிர்ப்பு தோன்றியது. உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக வந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்காக நடாத்தப்பட்ட மரியாதை அணிவகுப்பில் கடற்படை சிப்பாய் ஒருவர் றயிபல் பிடியினால் அவரைத் தாக்கினார். அவர் எங்கள் கட்சியின் தோழர் ஒருவரல்ல. இந்த உடன்படிக்கைக்கு எதிராக நாடு பூராவிலும் மக்கள் இலட்சக் கணக்கில் ஊர்வலமாக பயணித்தார்கள். கொழும்பு கோட்டை அரச மரத்தடிக்கு வந்து ஊர்வலம்மீது துப்பாக்கிப் பிரயோகம்செய்து 147 அமைதிவழி மக்களை ஜே.ஆரின் அரசாங்கம் படுகொலை செய்தது. அதோ அவ்விதம் களமிறங்கிய அடக்குமுறைக்கு பதிற்செயல் புரிந்தமையே இடம்பெற்றது. எம்மைத் தடைசெய்திருந்தவேளையில் ஓர் இயக்கமென்றவகையில் பிரதிபலிப்பினைச் செய்யவேண்டியநிலை எமக்கு ஏற்பட்டது. 1998 என்பது ஒரு செயலல்ல: பதிற்செயலாகும். சனநாயகத்திற்கெதிராக மாபெரும் பீதிநிறைந்த ஆட்சிக்கு எதிராக நாங்கள் காட்டிய பதிற்செயலாகும். எமது நாட்டு மக்களை படுகொலைசெய்வதற்காக அவர்கள் உத்தியோகபூர்வமற்ற இராணுவங்களை அமைத்தார்கள். “பச்சைப் புலிகள்”, “கறுப்பு பூனைகள்”, “கிறா” ,”பிறா” போன்றவற்றை அமைத்துக்கொண்டு எமது நாட்டு இளைஞர்களை ஆயிரக்கணக்கில் கொலைசெய்தார்கள். பல கொலைகளை செய்து அவற்றைத் தடைசெய்திருந்த எம்மீது சுமத்தினார்கள். விஜய குமாரதுங்க படுகொலை ஐக்கிய தேசிய கட்சியால் மேற்கொள்ளப்பட்டதென்பது அது சம்பந்தமாக சனாதிபதி ஆணைக்குழுவில் வெளிப்பட்டதென்பதை சந்திரிக்கா பண்டாரநாயக்க பகிரங்கமாகவே கூறினார். அவர் பின்னர் விதவிதமான கதைகளைக் கூறினாலும் சனாதிபதி ஆணைக்குழுவில் விடயங்கள் வெளிப்பட்டிருந்தன. பிரபல பாடலாசிரியரான பிரேமகீர்த்தியின் படுகொலையை எம்மீது சுமத்தினார்கள். திரு. பிரேமகீர்த்தியின் மனைவி, பிள்ளைகள் மகிந்த ராஷபக்ஷவிடம் நேரடியாகவே கூறியிருந்த விடயம் பிரேமவை கொலைசெய்தவர் மகிந்த ராஜபக்ஷவுடன் இருப்பதாகவே. அத்தகைய பீதிநிலை இயக்கத்தை முன்னெடுத்துவந்து 60,000 பேருக்கு கிட்டிய எமது நாட்டு மக்களை கொன்று குவித்தார்கள். அவற்றுக்குப் பிரதிபலிப்புச் செய்கையில் இடம்பெறக்கூடாத சில விடயங்கள் இடம்பெற்றன. அந்த காலத்தில் ரணில் விக்கிரமசிங்கவை முதன்மையாகக்கொண்ட அமைச்சர்கள் நாடு பூராவிலும் பல்வேறு சித்திரவதைக் கூடங்களை பேணிவந்தார்கள். ஒன்றுதான் ரணிலின் பட்டலந்த. றிச்சர்ட் த சொய்சா, சட்டத்தரணி விஜேதாச லியனஆரச்சி போன்றவர்களை படுகொலை செய்யுமளவுக்கு பல பாரிய குற்றச்செயல்கள் மேற்கொள்ளப்பட்டன. வரலாற்றினை திரிபுபடுத்தி கேள்விகேட்பதற்குப் பதிலாக ஜே.ஆர். மற்றும் பிரேமதாச ஆட்சியைக் கேள்விக்குட்படுத்துமாறு எம்மிடம் கேள்விகேட்பவர்களிடம் நாங்கள் கூறுகிறோம்.
மிகவும் கடினமான நிபந்தனைகளுக்கு மத்தியில் வன்முறைசாராமல் அரசியலில் ஈடுபட முடியுமென 1990 இன் பின்னர் நாங்கள் நிரூபித்திருக்கிறோம். கொழும்பு மாவட்டத்தின் சம்மிக்க சுதந்த, ஆர்ப்பாட்டமொன்றின்போது மாத்தளை தோழர் சிறிதாச, அம்பலாங்கொடை தோழர் நய்துவாவடு உள்ளிட்ட தோழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். கட்டுவனவில் ஜுலம்பிட்டியே அமரே துப்பாக்கிப் பிரயோகம்செய்து கூட்டமொன்றில் இருந்த இருவரை படுகொலை செய்தார். நாங்கள் வன்முறையில் பிரவேசிக்கவில்லை. 88 – 89 பற்றி நாங்கள் தனியாகப் பேசுவோம். தற்போது தோல்வியால் வெறிபிடித்து எதிரிகள் பதற்றமடைந்துள்ளார்கள். அதனால் தேசிய மக்கள் சக்தியின் பயணப்பாதையை தடுத்துநிறுத்த முயற்சிசெய்துகொண்டு இருக்கிறார்கள். எமக்கொரு பொறுப்பு இருக்கின்றது. வரலாற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். நல்லவற்றை சேமித்துக்கொள்ளவும் அகற்றிக்கொள்ள வேண்டியவற்றை அகற்றிக்கொள்ளவும் இயலுமான ஒரே அரசியல் இயக்கம் மக்கள் விடுதலை இயக்கம் மாத்திரமேயாகும்.
1971 போராட்டத்தின்போது தோழர்களின் மனங்களில் நம்பிக்கையொன்று இருந்தது. இந்த உக்கிப்போன் சமூகத்திற்கப் பதிலாக சாதகமான, நியாயமான சமூகமொன்றை கட்டியெழுப்ப, சகோரத்துவமும் கூட்டுமனப்பான்மையும் நிறைந்த சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கான தேவை நிலவியது. போராடியது அதற்காகத்தான். தற்போது 53 வருடங்களுக்குப் பின்னர் எமது நாடு மாறிவிட்டது. அந்த சமூகத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பு பிறந்துள்ளது. ஒட்டுமொத்த மக்களுடனேயே அந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும். நாட்டை மாற்றியமைத்திட ஒருசில தலைவர்களால் மாத்திரம் முடியாது. ஒரு தலைவரால் கட்சிக்கு தலைமைத்துவம் வழங்க முடியும். இன்று நாங்கள் பெருமளவிலான மக்களை ஒழுங்கமைத்து மிகவும் பிரமாண்டமான அரசியல் இயக்கமொன்றாக மாற்றுவதில் வெற்றியடைந்துள்ளோம். இடதுசாரி, முற்போக்கான, சனநாயகரீதியான, தேசப்பற்றுள்ள அனைத்துச் சக்திகளும் ஒன்றுசேர்ந்துள்ளன. எமது சமூகம் இறுதியில் நம்பிக்கை வைக்கக்கூடிய ஒரேயோர் அரசியல் இயக்கம் மக்கள் விடுதலை முன்னணியை உள்ளடக்கிய தேசிய மக்கள் சக்தியே என சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது. 1971 இன் தோழர்கள் புரிந்த அர்ப்பணிப்பும் அவர்களின் பார்வைக் கோணத்தின் மூலமாகவுமே அந்த இடத்திற்கு இந்த இயக்கத்தைக் கொண்டுவர இயலுமாயிற்று. சாதகமான சமூகமொன்றைக் கட்டியெழுப்ப வேண்டும்: கட்டியெழுப்ப இயலுமென அவர்கள் நினைத்தார்கள். அந்த சமூகம் எங்கள் முன்னிலையில் அணிதிரண்டு இருக்கின்றது. வெறிபிடித்த எதிரிகள் தொடர்ந்தும் மேலும் பலவற்றைச் செய்யலாம். இந்த பக்கத்திலிருந்து அவதூறு கற்பிக்கிறார்கள். மறுபக்கத்தில் மக்களை விலைக்கு வாங்க முயற்சிசெய்து வருகிறார்கள்.
ஆளுங் குழுக்களுக்கு மக்கள் முன்னிலையில் சதாகாலமும் இரண்டு பதிகள்தான் இருந்தன. ஒன்றில் அடக்குமுறை அல்லது அவாநிறைவினைக் கொடுப்பதாகும். இக்காலத்தில் அவர்களிடம் அதிகாரம் இல்லையென்பதால் அடக்குமுறை சிரமமானதாக அமைந்துள்ளது. அதைப்போலவே எம்மை விலைக்கு வாங்கவும் முடியாது. தற்போது சாமான்களை பகிர்ந்தளிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். பிள்ளைகளுக்கு உணவு பகிர்ந்தளிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இற்றைக்கு சில மாதங்களுக்கு முன்னர் சாப்பாடு கிடைக்காத பிள்ளைகள் பாடசாலைக் கூட்டங்களில் மயக்கமாகி விழுந்தார்கள். அதன்போது ஆசிரியர்களின் தயவே கிடைத்தது. அன்று அது ரணிலுக்கு புலப்படவில்லை. எமது நாட்டின் மிகப்பெரிய நெருக்கடி இந்த இலவசமாகக் கொடுத்ததே எனக்கூறிய ரணில் தற்போது பண்டிகைப் பருவத்தில் 20 கிலோ அரிசியைப் பங்கிடத் தொடங்கி உள்ளார். எங்களுக்கு ஐந்து நாட்களுக்கு உண்ணக்கொடுத்து ஐந்து வருடங்கள் நாட்டைத் தின்னக் கேட்கிறார்கள். எமக்கு கொள்கைப்பிடிப்புள்ள அரசியல் தேவையாகும். நோக்கின் பேரில் கொள்கையின் பேரில் நாட்டை மாற்றியமைப்பதற்கான அரசியல் அவசியமென முதலில் கற்பித்த குழுவினர்தான் 1971 தோழர்கள். ஐந்து கிலோ அரிசிக்காக எமது வாக்குகளை மாற்றியமைக்க மாட்டோமென நாங்கள் சமூகத்திற்கு கூறவேண்டும். எம்மெதிரில் எவ்வளவுதான் சிரமங்கள் சவால்கள் வந்தாலும் எவர் முன்னிலையிலும் மண்டியிடாத ஒரு குழுவினர் என்பதை உறுதிசெய்துள்ளார்கள். நாங்கள் அவதூறுகளால் துவண்டுவிடப் போவதில்லை. இங்கிலாந்தின் வின்சன்ற் சேர்ச்சில் கூறியுள்ளார் “ நீங்கள் பயணிக்கையில் உங்களைப் பார்த்துக் குரைக்கின்ற ஒவ்வொரு நாய்க்கும் கல்லால் அடிக்க நின்றுவிட்டால் பயணத்தை முடிக்க இயலாது” என. தோழர் லெனின் ஒருதடவை “வஸ்கா எனும் பூனை செவிசாய்க்கும், ஆனால் தொடர்ச்சியாக கடித்துக்கொண்டெ போகும்.” எனக் கூறினார். அவர்கள் என்னதான அவதூறாக பேசினாலும் தடைகளை ஏற்படுத்தினாலும் இந்த போராட்டத்தை நாங்கள் வெற்றிபெறாமல் திரும்பப் போவதில்லை என 53 வது ஏப்ரல் ஞாபகார்த்த தினத்தில் உறுதியாகக் கூறுகிறோம்.
நீங்களும் நாங்களும் நீண்டகாலமாக ஒரு கனவினை மனங்களில் அழுத்தி வைத்திருந்தோம். எமது பிள்ளைகளுக்கும் ஒட்டுமொத்த மக்களுக்கும் மகிழ்ச்சியுடன் வாழக்கூடிய சமூகமொன்றை உருவாக்குங்கள். ஒவ்வொருவரினதும் துன்பத்தை காண்கின்ற, ஒத்துணர்வினைக்கொண்ட, நெஞ்சில் ஈரமுள்ள மனிதர்கள் இருக்கின்ற சமூகத்தை உருவாக்குங்கள். பலம்பொருந்திய பொருளாதாரமொன்றை அமைத்து அதன் நன்மைகள் அனைவருக்கும் பகிர்ந்து செல்கின்ற சமூகமொன்றை உருவாக்குங்கள். எமது நாட்டை உலகில் பலம்பொருந்தியதாக விளங்குகின்ற ஒரு நாட்டை உருவாக்குங்கள். மிகவும் கடினமான நீண்ட பயணத்தை மேற்கொண்டோம். கவிஞர் ரத்ன ஸ்ரீ சுறியதைப்போல் ” வந்த பயணம் கடினமானது – ஒருகட்டத்தில் நாங்கள் வீழ்ந்தது உண்மைதான் – எனினும் அந்த இடத்தில் நின்றுகொண்டு – அழுதுபுலம்ப வேண்டியதில்லை – நாங்கள் போகவேண்டும்” நாங்கள் அதனை நம்பினோம். எங்கள் வெற்றி கண்ணுக்கெட்டிய தூரத்திற்கு வந்துவிட்டது. எமது நாட்டை உலகிலுள்ள மிகவும் அழகான நாடாக மாற்றவேண்டி உள்ளது. அதற்காக 1971 போராட்டத்தில் உயிர்த்தியாகம்செய்த தோழர்களின் அனுபவங்களை சேர்த்துக்கொள்வோம். தெம்பு, பலம், நம்பிக்கையை சேர்த்துக்கொள்வோம். நோக்கத்தின்பால் நிலைதளராமல் பயணிக்கின்ற பண்பினை சேர்த்துக்கொள்வோம். நாமனைவரும் ஒன்றாகப் பிணைந்து ஒரே குழுவாக இந்த போராட்டத்தில் வெற்றிபெறுவோம்.
(இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் வட மாகாண மாநாடு – 2024.04.04 ஆந் திகதி யாழ்ப்பாணத்தில்) எமது நாடு பொருளாதாரரீதியாக வீழ்ச்சியடைந்துள்ள ஒரு நாடாகும். வடக்கு தெற்கு பேதமின்றி பிரஜைகளுக்கு நல்ல உணவு வேளையொன்று கிடையாது. வைத்தியசாலைகளில் மருந்து கிடையாது. பிள்ளைகளுக்கு தொழில் கிடையாது. எமது பெண்கள் பாரியளவில் நுண்நிதிக்கடன்களில் சிறைப்பட்டுள்ளார்கள். எமது நாடு பெற்றகடனைச் செலுத்தமுடியாத பொருளாதாரத்தில் சிறைப்பட்டுள்ளது, எந்தவொரு முதலீட்டாளரும் வருகைதராத நாடாக மாறியுள்ளது. புதிய கடனைப் பெறமுடியாத அளவுக்கு உலகத்தில் நம்பிக்கை சிதைந்துவிட்டது. […]
(இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் வட மாகாண மாநாடு – 2024.04.04 ஆந் திகதி யாழ்ப்பாணத்தில்)
எமது நாடு பொருளாதாரரீதியாக வீழ்ச்சியடைந்துள்ள ஒரு நாடாகும். வடக்கு தெற்கு பேதமின்றி பிரஜைகளுக்கு நல்ல உணவு வேளையொன்று கிடையாது. வைத்தியசாலைகளில் மருந்து கிடையாது. பிள்ளைகளுக்கு தொழில் கிடையாது. எமது பெண்கள் பாரியளவில் நுண்நிதிக்கடன்களில் சிறைப்பட்டுள்ளார்கள். எமது நாடு பெற்றகடனைச் செலுத்தமுடியாத பொருளாதாரத்தில் சிறைப்பட்டுள்ளது, எந்தவொரு முதலீட்டாளரும் வருகைதராத நாடாக மாறியுள்ளது. புதிய கடனைப் பெறமுடியாத அளவுக்கு உலகத்தில் நம்பிக்கை சிதைந்துவிட்டது. இந்த நாட்டை மீட்டுக்கவேண்டிய அவசியம் எமக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டுக்கு என்ன நேர்ந்துள்ளது? இந்த நாட்டை எவ்வாறு மீட்டெடுப்பது என்பது பற்றிப் பேசுவதற்காகவே நாங்கள் இங்கு வந்திருக்கிறோம்.
எமது நாட்டினல் தோன்றியுள்ள இந்த நெருக்கடி இயற்கை அனர்த்தமொன்றின் பிரச்சினையா? பாரிய வெள்ளப்பெருக்கு, சூறாவளி, சுனாமியால் ஏற்படுத்தப்பட்ட பிரச்சினையா? இல்லை. இது எமது நாட்டை நீண்டகாலமாக ஆட்சிசெய்த குழுக்களால் ஏற்படுத்தப்பட்ட பிரச்சினையாகும். குறிப்பாக எமது நாடு கடைப்பிடித்த அரசியல் கொள்கையும், பொருளாதாரக் கொள்கையும் இந்த நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நெருக்கடியில் இருந்து மீட்புப்பெற முடியுமானால் இந்த அரசியல் கலாசாரமும் பொருளாதாரக் கொள்கையும் மாற்றமடைய வேண்டும். இந்த வருடத்தில் சனாதிபதி தேர்தல் நடைபெறுமென்பது எமக்குத் தெரியும். வடக்கின் மக்கள் சனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆர்வம் காட்டுவதில்லை என்பதை நாங்கள் கண்டிருக்கிறோம். எமது நாட்டுக்கு சனாதிபதியொருவரைத் தெரிவுசெய்தலானது கொழும்பின் தலைவரொருவரை நியமித்துக்கொள்கின்ற சிங்கள மக்களின் வேலையென்ற கருத்து நிலவுகின்றது. எமது நாட்டில் தெரிவுசெய்யப்பட்ட சனாதிபதிமார்கள் கடைப்பிடித்த கொள்கைகள் வடக்கிற்கும் தெற்கிற்கும் அழிவுமிக்க தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. அதனால் நாட்டுக்கு தலைவர்களை தெரிவுசெய்கையில் வடக்கு மக்களின் முனைப்பான இடையீடு அவசியமென நாங்கள் நினைக்கிறோம்.
நாங்கள் உங்களை சந்திக்க வந்தது 13 பிளஸ் தருகிறோம், பெடரல் தருகிறோம், நீங்கள் எங்களுக்கு வாக்குகளை அளியுங்கள் எனக் கேட்பதற்காக அல்ல. நாங்கள் உங்களை சந்திக்க வந்தது இந்த நாடு வீழ்ந்துள்ள அழிவில் இருந்து எவ்வாறு மீட்டெடுப்பது என்பதுபற்றி பேசுவதற்காகவே. நீண்டகாலமாக எமது தலைவர்கள் கடைப்பிடித்த கொள்கைகளால் எமது நாட்டை மீட்டெடுக்க முடியுமா என்பதைப் பற்றி பேசுவதற்காகவே. எமது நாட்டுக்கு புதிய பாதையொன்று தேவை என்பதே எம்மனைவரதும் எதிர்பார்ப்பாகும். எனவே புதிய பாதையை தேடிக்கொள்வது பற்றி பேசுவதற்காகவே நாம் வந்திருக்கிறோம். எமது நாட்டை மாற்றியமைத்திட வேண்டுமாயின் இந்த அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டும். எமது நாட்டின் அரசியல் கலாசாரம் என்ன? மிகவும் அழிவுமிக்க பொலி்ட்டிகல் கல்ச்சரே இந்த நாட்டில் நிலவுகின்றது. ஊழல் மோசடிகளால் நிரம்பி வழிகின்றது. திறைசேரிக்கு வருகின்ற பொதுமக்களின் செல்வம் அமைச்சர்களின் கணக்குகளுக்கு கபடத்தனமாக வியாபாரிகளின் கணக்குளுக்கு திசைதிருப்பப்பட்டுள்ளது. திறைசேரிக்கு வந்த பணத்தை அரசியல்வாதிகள் விரயமாக்குகிறார்கள், திருடுகிறார்கள்.
உங்களுக்குத் தெரியுமா தரங்குன்றிய மருந்து சம்பந்தமாக குற்றச்சாட்டக்கு இலக்காகிய சுகாதார அமைச்சர் சிறைப்படுத்தப்பட்டுள்ளார். நாட்டின் சனாதிபதிக்கு மத்திய வங்கி கொள்ளையடித்தல் பற்றிய குற்றச்சாட்டு நிலவுகின்றது. நிகழ்கால பிரதமர் பாராளுமன்றத்தில் உரத்த குரலில் சனாதிபதியை வங்கித் திருடன் எனக் கூறினார். இந்த ஊழல்மிக்க அரசியல் கலாசாரத்தை மாற்றியமைத்திட வேண்டாமா?
எமது நாட்டின் வடக்கு மக்களும் தெற்கின் மக்களும் இந்த ஊழல்பேர்வழிகளின் பிடியில் சிக்கியுள்ளார்கள். இந்த ஊழல்பேர்வழிகள் வடக்கிலும் தெற்கிலும் எமது பிள்ளைகளின் எதிர்காலத்தை அழித்துக்கொண்டிருக்கிறார்கள். எமது நாட்டைக் கட்டியெழுப்ப இந்த ஊழலைத் தடுத்துநிறுத்த வேண்டும். தேசிய மக்கள் சக்தியாகிய நாங்கள் அதனை சாதிப்போம் என்பதை நாங்கள் உறுதியாகக் கூறுகிறோம். மக்களின் பணத்தை விரயமாக்குகின்ற அரசியலை நிறுத்தவேண்டுமல்லவா? எமது நாட்டின் எந்தவிதமான நிதிப் பிரமாணங்களுக்கு அமைவாகவும் எந்தவோர் அமைச்சரினதும் வீடுகளுக்கான லயிற் பில் செலுத்த முடியாது. பாராளுமன்றத்தினால் அமைச்சருக்கு அவசியமான நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. எனினும் அமைச்சர்களின் வீடுகளின் நீர்க் கட்டணம், லயிற் பில் மக்களின் பணத்திலிருந்தே செலுத்தப்படுகின்றது. ஒருசில அமைச்சர்களின் மாதாந்த லயிற் பில் ஒருஇலட்சத்து முப்பதாயிரம் ஆகும். செலுத்துவதோ மக்களின் பணத்தைக்கொண்டு, கழிப்பறை வசதிகள் வழங்கப்படுவதும் மக்களின் பணத்திலேயே. அமைச்சருக்கு, பாரியாருக்கு, அவரது பிள்ளைகளுக்கு அரசாங்கப் பணத்தில் வாகனம் வழங்கப்படுன்றது. இந்த விரயமிக்க அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்கக்கூடாதா?
சனாதிபதிக்கு வெளிநாட்டு விஜயங்களுக்காக வரவுசெலவில் பணம் ஒதுக்கப்படுகின்றது. ஒதுக்கப்படுகின்ற அந்த பணத்தை சனாதிபதி ஆண்டின் தொடக்கத்திலேயே செலவழித்து முடித்துவிட்டார். கடந்த தினமொன்றில் 200 மில்லியன் ரூபாவை அவருடைய வெளிநாட்டு விஜயங்களுக்காக ஒதுக்கிக்கொண்டார். தனி ஒருவருக்காக அவ்வளவு பெருந்தொகையான பணத்தை செலவிடவேண்டுமா? இது எமது வைத்தியசாலைக்கு மருந்து கொள்வனவு செய்ய, பிள்ளைகளுக்கு கற்பிக்க , வசதிகளை வழங்க, கிராமத்து வீதிகளை அமைக்க, குடிநீர் வழங்கல் கருத்திட்டமொன்றை அமுலாக்க உள்ள பணமாகும். ஒருசிலர் இதனை நாசமாக்கி வருகிறார்கள். அதோ அந்த அரசியல் கலாசாரத்தை நாங்கள் நிறுத்த வேண்டும்.
அது மாத்திரமல்ல எமது நாட்டில் குற்றச்செயல்கள், போதைத்தூள் வியாபாரத்தின் பின்னணியில் இருப்பவர்கள் அரசியல்வாதிகளாவர். குற்றச்செயல் புரிபவர்கள், போதைத்தூள் வியாபாரிகள் நாட்டை ஆட்சி செய்கிறார்கள். அத்தகைய ஒரு நாடு எவ்வாறு முன்நோக்கி நகர்வது? எமது நாட்டில் சட்டமொன்று இருக்கிறது. சிறியவர்களுக்கு சட்டம் அமுலாக்கப்படுகின்றது. மேலே இருப்பவர்கள் சட்டத்திருந்து தப்பித்துக் கொள்கிறார்கள். நிகழ்கால பொலீஸ் மா அதிபர் உயர்நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்ட ஒருவராவார். அவருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு இருக்கின்றது. அப்படிப்பட்ட ஒருவரால் எவ்வாறு நாட்டில் நீதி நியாயமாக நிலைநாட்டப்படும்? அனைத்துக் கட்டமைப்புகளும் சீரழிந்துள்ளன. அப்படிப்பட்ட ஒரு நாடு எவ்வாறு முன்நோக்கி நகரும்? உங்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு பொலீசுக்குச் சென்றால் நியாயம் கிடைக்குமென்ற நம்பிக்கை இருக்கின்றதா? இப்படிப்பட்ட நம்பிக்கை கிடையாது. எம்மெதிரில் இருப்பது ஒரு சீரழிந்த நாடாகும். வடக்கில் தெற்கில், கிழக்கில் பேதமின்றி நாங்கள் சீரழிந்த தேசத்திற்கு இரையாகி உள்ளோம்.
இவ்வளவு அழிவு ஏற்பட்டுள்ள நிலையில், ஒரு நாட்டுக்கு புரியக்கூடிய அத்தனை அட்டூழியங்களையம் செய்துள்ள நிலையில் அவர்கள் எவ்வாறு அதிகாரத்தில் இருப்பது? அவர்கள் அதிகாரத்தைப் பேணிவருவதிலான இரகசியம் என்ன? அவர்கள் இனவாதத்தாலேயே அதிகாரத்தைப் பேணிவருகிறார்கள். ஏனைய அத்தனை பிரச்சினைகளையும் கீழடக்கி உள்ளநிலையில் சிங்களத் தலைவர்கள் நாடு, சமயம், தேசத்தைக் காப்பாற்றுவோம் எனும் பலகையைப் பிடித்துக்கொண்டு நாட்டை கிளர்ந்து விடுகிறார்கள். அதுதான் அவர்களின் இருப்பு, வடக்கு கிழக்கிலும் அப்படித்தான். இனவாதத்தை இந்த அழிவுமிக்க அரசியல்வாதிகள் இவர்களின் இருப்பிற்காக பிரதான காரணியாக மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். எம்மிடம் தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு நோக்கு இருக்கவில்லை. பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் எமது ஒற்றுமையைத் தடுத்தார்கள். வெள்ளைக்காரர்கள் எம்மை பிரித்தே ஆட்சிசெய்தார்கள். 1505 இல் இருந்து 1948 வரை வெளிநாட்டு வல்லரசுகளின் ஆதிக்கத்திற்கு நாங்கள் கட்டுப்பட்டிருந்தோம். 1815 தொடக்கம் 1948 வரை முழு நாடுமே வெள்ளைக்காரரின் ஆட்சியின்கீழ் இருந்தது. 133 வருடங்களின் பின்னர் நாட்டைப் பொறுப்பேற்ற கறுப்பு வெள்ளைக்காரர்கள் அதைவிட அதிகமாக எம்மை பிளவுபடுத்தினார்கள். எம்மால் தேசிய ஒற்றுமையை நிர்மாணிக்க முடியாமல் போயிற்று. 1948 இல் சசுதந்திரம் பெற்று 1949 இல் குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டுவருகிறார்கள். மலையக மக்களின் அரசியல் உரிமையை இல்லாதொழித்தார்கள். அதற்கெதிராக 1949 இல் திருவாளர் செல்வநாயகம் “தமிழ் அரசுக் கட்சியை” உருவாக்குகிறார். 1956 இல் மொழிப்பிரச்சினையும் 1958 இல் தமிழ் சிங்கள கலவரமும் தோன்றியது. 1981 இல் யாழ் நூல்நிலையம் தீக்கிரையாக்கப்பட்டது. 1983 இல் யூலை கலவரங்களை உருவாக்கினார்கள். 2009 இல் யுத்தம் நிறைவடைகின்றது. யுத்தம் நிறைவடைந்தபின்னர் இந்த பிரச்சினை தீர்ந்ததா? 2015 அளவில் மலட்டுக்கொத்து, மலட்டு உடைகள் வருகின்றன. 2019 இல் உயிர்த்தஞாயிறு தாக்குதல் இடம்பெறுகின்றது. ஒட்டுமொத்த வரலாறுமே முரண்பாட்டு வரலாறாகும்.
எமது நாட்டின் பிரதான அரசியல் பிரவாகங்கள் என்பது மற்றவருக்கு எதிரான அரசியலாகும். தெற்கின் சிங்கள மக்கள் வடக்கிற்கு எதிராகவே ஒழுங்கமைக்கப்படுகிறார்கள். வடக்கின் தமிழ் மக்கள் சிங்கள மக்களுக்கு எதிராகவே ஒழுங்கமைக்கப்படுகிறார்கள். முஸ்லீம் மக்களை சிங்கள மக்களுக்கு எதிராகவே ஒழுங்கமைக்கிறார்கள். எமது பாட்டன்மார்கள், தந்தையர்கள், தாய்மார்களே அந்த அரசியலைப் புரிந்தார்கள். அதன் விளைவு என்ன? எமது பரம்பரையைச் சேர்ந்தவர்கள் யுத்தம் புரிந்துகொண்டார்கள். அது மீண்டும் இடம்பெற இடமளிக்க வேண்டுமா? எமது பரம்பரையின் இரத்தத்தால் இந்த பெருநிலம் நனைந்தது. பெற்றோர்களின் கண்ணீர் ஆறு பெருக்கெடுத்தோடியது. மனைவியர் கணவனை இழந்தார்கள். பெற்றோர் பிள்ளைகளையும் பிள்ளைகள் பெற்றோரரையும் இழந்தார்கள். முழுநாடுமே கவலைக்கிடமான நிலையை அடைந்தது.
நாங்கள் இந்த இனவாத அரசியல் கலாசாரத்தை தோற்கடித்திட வேண்டும். அது எமது எதிர்காலத் தலைமுறையினருக்காகவே. நாங்கள் வடக்கின் உண்மையான அரசியல் தலைவர்களுக்கு கூறுவது நீங்கள் உண்மையாகவே தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி சிந்திப்பீர்களாயின் எம்மோடு இணையுங்கள். வடக்கின் அரசியலை பிரச்சினைகளை தீர்த்துவைக்கின்ற அரசியலாக நாங்கள் மாற்றிடுவோமென நாங்கள் வடக்கின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். நாமனைவரும் ஒன்றுசேர்ந்து ஓர் அரசாங்கத்தை அமைத்திடுவோம். நாங்கள் புதிதாக சிந்திப்போம். நாங்கள் அன்றாடம் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளுக்கு கூருணர்வற்றவர்களாக இருக்கக்கூடும். எனினும் உங்களின் வேதனையை நாங்கள் உணர்கிறோம். நாங்கள் புதியதொரு தேசத்தை உருவாக்க வேண்டும். எமது நாட்டில் இரண்டு பிரதான மொழிகள் இருக்கின்றன. இந்த இரண்டு மொழிகளுக்கு சம உரிமை உண்டு. அரசுடன் தனது மொழியில் அலுவல்களை மேற்கொள்வதற்கான உரிமை உண்டு. தமிழ் பிரஜையொருவர் பொலீசுக்குச் சென்று தனது மொழியில் முறைப்பாடு செய்வதற்கான உரிமை உண்டு. அரசாங்கத்திற்கு தனது மொழியில் கடிதமொன்றை அனுப்பினால் தனது மொழியிலேயே பதில் கிடைக்கவேண்டும். அதனால் அரச நிறுவனங்களுக்கு, முப்படையினருக்கு, அரசாங்கத்தின் முக்கியமான துறைகளுக்கு தமிழ் இளைஞர்களின் வீதத்தை அதிகரிக்க வேண்டுமென நாங்கள் நினைக்கிறோம்.
சமயமும் அப்படித்தான். சமயமென்பது தனது நம்பிக்கையாகும். நீங்கள் பிறப்பது இந்து தமிழ் சூழலில். உங்களின் சமயம், உங்களின் கலாசாரம் இந்த – தமிழ் கலாசாரமாக அமைகின்றது. நான் பிறப்பது சிங்கள, பௌத்த சூழலில். எனது கலாசாரம் சிங்கள பௌத்த கலாசாரமாகும். உங்களின் நம்பிக்கையைத் தாழ்த்தி எனது நம்பிக்கையை உயர்வானதாகக் கருதமுடியுமா? ஒவ்வொருவருக்கும் தனது சமயத்தை அனுட்டிப்பதற்கான பாதுகாப்பதற்கான உரிமை உறுதிப்படுத்தப்படுகின்ற தேசமொன்றை நாங்கள் உருவாக்கவேண்டும். வரலாற்றுரீதியான தொல்பொருள் கட்டுபிடிக்கப்படுகையில் நாங்கள் சண்டையிடத் தொடங்குகிறோம். எமது பொறுப்பு என்ன? இந்த தொல்பொருட்களை தேசிய மரபுரிமையாகக்கருதி, பாதுகாத்து, பேணி, எதி்ர்கால சந்ததியினருக்காக பாதுகாப்பதுதான் எமது பொறுப்பு. வரலாறுசார்ந்த இடங்கள் தோன்றுவது நாங்கள் பிரச்சினைபட்டுக் கொள்ளவேண்டிய ஒரு விடயமா? எம்மொவ்வரினதும் கலாவார வேறுபாடுகள் நிலவுகின்றன. உங்களின் பிரதான வைபவமான தைப்பொங்கல், முஸ்லீம்களின் பிரதான வைபவமான ரமழான், சிங்களவர்களின் பிரதான வைபவம் வெசாக் வைபவமாகும். கத்தோலிக்கர்களின் பிரதான வைபவம் நத்தார் வைபவமாகும். அவை எமது கலாசார அடையாளங்கள். நாங்கள் சமூகமொன்றை எந்த இடத்திற்கு கட்டியெழுப்ப வேண்டும்? ஒரு கலாசாரத்தை புறந்தள்ளுகின்ற மற்றைய கலாசாரம் உயர்வானது எனக்கூறுகின்ற சமூகத்திற்கா? பிறரது கலாசாரத்தை எற்றுக்கொள்கின்ற மதிப்பளிக்கின்ற சமூகமொன்று எமக்குத் தேவையில்லையா? இந்த தலைமுறையைக் கட்டியெழுப்புகின்ற அவசியப்பாடு எமக்கு நிலவுகின்றது. இந்த பண்டைய, இனவாத, பழங்குடிவாத மரபுகள் அனைத்தும் பண்டைய சமூகத்திற்கே சொந்தமானவையாகும். இனவாதம், சமயவாதத்தை நிராகரி்க்கின்ற மற்றவரின் அடையாளத்திற்கு மதிப்பளிக்கின்ற புதிய சமூகமொன்று எமக்குத்தேவை. அதனால் நாமனைவரும் பழைய ஆடைகளைக் கலைந்தெறிந்து புதிய ஆடைகளை அணிவதற்கான காலம் தற்போது பிறந்துள்ளது. நாங்கள் பழைய பேயின் பழைய அங்கி்யையே அணிந்துகொண்டிருக்கப் போகிறோமா? பகைமை, குரோதம், இரத்தம், முரண்பாடுகள், துப்பாக்கிச் சன்னங்கள், வெடிமருந்துகளின் மணம் வீசுகின்ற அங்கியை அணிந்தகொண்டு முன்நோக்கி நகரப்போகிறோமா? அதற்காக கூட்டு முயற்சியில் ஈடுபடுவோம் என்றே நாங்கள் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.
நாங்கள் வாடிக்கையாளர்களா? நான் வியாபாரியல்ல. வாடிக்கையாளன் அல்ல. என்னை உள்ளிட்ட எமது இயக்கமும் இந்த நாட்டை மீட்டெடுக்க கூட்டு முயற்சியில் ஈடுபடுவோமென நான் முன்மொழிகிறேன். எமது எதிர்காலப் பிள்ளைகள் யுத்தம் புரியாத ஒரு நாடு எமக்குத்தேவை. எமது எதிர்கால சந்ததிக்கு இந்த நாட்டைக் கட்டியெழுப்பி உயர்வாழ சிறந்த சுற்றுச்சூழலொன்று அவசியமாகும். எமக்கு புதிய அரசியலொன்று அவசியமாகும். அதோ அந்த புதிய அரசியலுக்காக ஒன்றுபடுவோமென நாம் முன்மொழிகிறோம். எங்களுக்கு வாக்களியுங்கள் என நான் உங்களிடம் கேட்கப்போவதில்லை. நாங்கள் ஒன்றுசேர்ந்து கூட்டு முயற்சியில் ஈடுபடுவோமென்றே நான் நாங்கள் முன்மொழிகிறோம். பொருளாதாரம் பயணித்துக்கொண்டிருக்கின்ற திசை நல்லதா? சட்டத்தின் ஆட்சி நல்லதா? எங்கள் கல்வி நல்லதா? எங்கள் கமக்காரர்களின் வாழ்க்கை, மீனவர்களின் வாழ்க்கை பற்றிய எதிர்பார்ப்பினை வைக்கமுடியுமா? எமது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி நம்பிக்கை வைக்க முடியுமா? அவை எதுவுமே இல்லாத ஒரு நாடுதான் இது.
இந்த பிரச்சினைகள் அனைத்துமே எமது அரசியல் அதிகாரநிலை ஏற்படுத்திய பிரச்சினைகளாகும். நெருக்கடிக்கான காரணம் அரசியல் எனில் தீர்வு இருப்பதும் அரசியலில்தான். எமது நாட்டின் இனவாதம் அரசியல் இனவாதமாகும். தத்தமது இருப்பு மற்றும் அதிகாரத்தை இனவாதத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பியுள்ள அரசியலாகும். அதனை எவ்வாறு மாற்றியமைப்பது? இனவாத அரசியலுக்கு எதிராக தேசிய ஒற்றுமைக்கான அரசியலை கையில் எடுப்பதன் மூலமாகத்தான். தெற்கின் பெரும்பாலானவர்கள் இனவாதத்திற்கெதிரான கொடியை ஏந்தியுள்ளமை எமக்கு பெருமிதத்தை தருகின்றது. இனவாதக் குழுக்கள் இருப்பின் இனவாதத்திற்கெதிரான தேசிய ஒற்றுமைக்கான போராட்டத்தை முன்னெடுப்போம். இது எமது தலைமுறையின் பொறுப்பாகும்.
அதைப்போலவே இந்த நாட்டைக் கட்டியெழுப்ப பொருளாதாரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும். எமக்கு வரலாற்றில் கைத்தொழிலாக்கம் பற்றிய ஓரளவு நோக்கு இருந்தது. அவையனைத்துமே அழிவடைந்தன. பரந்தனில் இரசாயன ஆலையொன்று இருந்தது. வாழைச்சேனையில் கடதாசி ஆலையொன்று, காங்கேசன்துறையில் சீமெந்து ஆலையொன்று இருந்தது. தற்போது அந்த கைத்தொழிலாக்கம் எங்கே? வடக்கின் சிறிய கிராமங்களில் நெசவு நிலையங்கள் இருந்தன. அந்த நிறுவனங்கள் அனைத்துமே விற்கப்பட்டன. அல்லது மூடப்பட்டன. தேசிய பொருளாதாரத்தின் முதுகெலும்பு முற்றாகவே தகர்க்கப்பட்டது. யாழ்ப்பாணத்தின் காரமான மிளகாய், முருங்கை, சின்னவெங்காயம் எமது ஊரின் சந்தைக்கு வந்தது. இன்று அவையனைத்துமே அழிக்கப்பட்டுவிட்டது. இந்த அரசியல் அதிகாரநிலையிடம் எமது உற்பத்திகளை முன்னெடுத்துச் செல்வதற்கான திட்டங்கள் இருக்கவில்லை. வட மாகாணத்தில் சிறப்பான பாலுற்பத்தி நிலவியது. இன்று எதையுமே உற்பத்திசெய்ய முடியாத தேசமாக மாற்றப்பட்டுள்ளது.
சுதந்திரம் பெற்ற பின்னர் இந்தியாவின் தேசிய தலைவர்களுக்கு நாட்டை எந்த திசையில் கொண்டுசெல்ல வேண்டுமென்ற நோக்கு இருந்தது. இந்திய நோக்கு அவர்களால் கட்டியெழுப்பப்பட்ட எதிர்காலம் இன்று வெற்றியை அடைந்துள்ளது. சந்திரனுக்குச் செல்லும் இந்தியா, பிராந்தியத்திற்கு வாகனங்கள், மருந்துகள், உணவு, தொழில்நுட்பத்தை வழங்குகின்ற இந்தியா எவ்வாறு உருவாக்கப்பட்டது? அது இந்தியாவின் அப்துல் கலாமிற்கு சனாதிபதியாக, மன்மோகன் சிங்கிற்கு பிரதமராக, குறைந்த சாதியைச் சேர்ந்தவரென எற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பெண்ணுக்கு சனாதிபதி பதவியை வகிக்க இயலுமாகி உள்ளது. பல்வேறு இனத்தவர்கள் இருக்கின்ற, பல்வேறு மதநம்பிக்கைகள் நிலவுகின்ற, பல்வேறு கலாசாரங்கள் நிலவுகின்ற ஒரு நாட்டை ஒருகொடியின்கீழ் கொண்டுவர இயலுமாகி உள்ளது. எமது வரலாறு மோதல்கள் நிரப்பிய ஒன்றாகும். புதிய அரசியல் மாற்றத்தை தொடங்குவோம். வடக்கின் தமிழ்த் தலைவர்களிடம் கேட்டுக்கொள்வது நாங்கள் ஒன்றுபடுவோம். வடக்கின் கிழக்கின் தெற்கின் மக்கள் அனைவரும் பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்ற அரசாங்கமொன்றை அமைத்திடுவோம். அதற்காக நாங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம். நாங்கள் வைத்த இந்த சிறிய அடியெடுப்பினை எமது நாட்டின் பாரிய வெற்றியில் நிறைவடையுமென நாங்கள் நம்புகிறோம்.
(அம்பாறை மாவட்ட பெண்கள் மாநாடு – 2024.03.31 – தேசிய மக்கள் சக்தி) இந்த மாநாட்டினை வெற்றியீட்டச் செய்விப்பதற்காக பல மாதங்களாக பாடுபட்டோம். இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணியாகும். பெண்கள் அரசியல்ரீதியாக பலப்படுத்தப்பட்டு, அரசியல்ரீதியாக ஒழுங்கமைந்து, இவ்விதமாக ஒன்றுசேர்ந்த தருணத்தை உலகில் வேறு எங்குமே கண்டதில்லை. இது எமக்கு ஒரு புதிய அனுபவமாகும். நாட்டை வித்தியாசமான ஓர் இடத்திற்கு உயர்த்திவைக்கக்கூடிய பெண் தலைமைகளை உருவாக்குவதையே நாங்கள் இங்கு செய்திருக்கிறோம். அரசியல் பற்றிக் கனவில்கூட சிந்தித்திராத […]
(அம்பாறை மாவட்ட பெண்கள் மாநாடு – 2024.03.31 – தேசிய மக்கள் சக்தி)
இந்த மாநாட்டினை வெற்றியீட்டச் செய்விப்பதற்காக பல மாதங்களாக பாடுபட்டோம். இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணியாகும். பெண்கள் அரசியல்ரீதியாக பலப்படுத்தப்பட்டு, அரசியல்ரீதியாக ஒழுங்கமைந்து, இவ்விதமாக ஒன்றுசேர்ந்த தருணத்தை உலகில் வேறு எங்குமே கண்டதில்லை. இது எமக்கு ஒரு புதிய அனுபவமாகும். நாட்டை வித்தியாசமான ஓர் இடத்திற்கு உயர்த்திவைக்கக்கூடிய பெண் தலைமைகளை உருவாக்குவதையே நாங்கள் இங்கு செய்திருக்கிறோம். அரசியல் பற்றிக் கனவில்கூட சிந்தித்திராத எமது பெண்கள் அரசியல் தலைமைத்துவத்தை ஏற்கத் தயார் என்பதை வெளிக்காட்டி இருக்கிறார்கள். பெண் தலைமைகள் புதிதாக உருவாகின்றன. அது இந்த நாட்டுக்கு தீர்மானகரமானதாகும். நாங்கள் நிச்சயமாக இதனை மாற்றியமைத்திடுவோம். பெண்களின் பலத்தை நாட்டுக்கு மாத்திரமல்ல முழு உலகிற்குமே வெளிக்காட்ட எம்மால் இயலுமானதாகி உள்ளது. பெண்களாகிய எங்களுக்கு வாய்ப்பு வழங்கினால் அதிலிருந்து உச்ச பயனைப்பெற்று உச்ச அளவிலான அழுத்தத்தைக்கொடுக்க இயலுமான பலம் எம்மிடம் பொதிந்துள்ளது.
இந்தியாவில் அருந்ததி ரோய் என ஒரு பிரசித்திபெற்ற எழுத்தாளர் இருக்கிறார். அவர் ஓர் இடத்தில் எழுதி இருக்கிறார் “புதிய உலகத்தை உருவாக்க முடிவது மாத்திரமல்ல, புதிய உலகமொன்று உருவாகி வருகின்றது, அமைதியாக அதற்குச் செவிசாய்த்தால் அந்த புதிய உலகம் முச்செடுப்பதை எம்மால் உணர முடியும்” என்று. அந்த புதிய உலகத்தை நீங்கள் உருவாக்கி வருகிறீர்கள். இனிமேலும் அது எமக்கு ஒரு கனவு அல்ல. புதிய உலகம் உருவாகிக் கொண்டிருக்கிறது. நாங்கள் புதியதோர் உலகத்தை அமைத்து வருகிறோம். மிகவும் நியாயமான, அனைவருக்கும் அபிமானத்துடன் வாழக்கூடிய, சமத்துவத்திற்கு மதிப்பளிக்கின்ற அன்புநிறைந்த புதிய உலகமொன்றை நீங்கள் தற்போது நிர்மாணித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இதற்காக இந்த வருடத்தில் எமக்கு ஒரு தீர்மானகரமான பணி இருக்கிறது. இந்த தேர்தலை வென்றெடுப்பது மாத்திரமல்ல: இந்த தேர்தலில் பெண்களாகிய நாங்கள் ஒன்று சேர்ந்து எப்படியாவது வெற்றிபெறவும் வேண்டும். எமது தோழர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைப்போம். எமது தோழர் அநுரவை சனாதிபதியாக்கிடுவோம். அத்துடன் எமது வேலை நின்றுவிட மாட்டாது. நாங்கள் நாட்டை சீராக்கிட வேண்டும். நாங்கள் ஏற்படுத்த எதிர்பார்த்துள்ள அந்த சமூக மாற்றத்தை பாதுகாத்துக்கொள்ளவும் நாங்கள் முன்வரவேண்டும். இதன் பாரதூரத்தன்மையை இதன் ஆழத்தை நாங்கள் நன்றாக விளங்கிக்கொள்ள வேண்டும். இது மற்றுமொரு மாற்றம் பற்றிய கதையல்ல. இது மற்றுமொரு தேர்தல் பற்றியதுமல்ல. இதுவரை அதிகாரத்திற்கு வந்த ஒவ்வோரு கட்சியும் மாற்றத்தை ஏற்படுத்துவதாக வாக்குறுதி அளித்தது. யு.என்.பி. பீதிநிலை தீர்ந்து சந்திரிக்கா குமாரதுங்கவை நியமிக்க முதலில் வீதியில் இறங்கியவர்கள் பெண்களே. சந்திரிக்கா அம்மையாரும் மாற்றத்திற்கான வாக்குறுதி அளித்தார். 2015 இல் நல்லாட்சி அரசாங்கமும் மாற்றத்திற்கான வாக்குறுதியை அளித்தது. தேசிய மக்கள் சக்தி இந்த மாற்றத்தை ஏற்படுத்துவது எவரதும் வாக்குறுதியின் பேரில் அல்ல. இந்த மாற்றத்தை செய்பவர்கள் நாங்களே. இதுவரை காலமும் நாங்கள் வாக்குகளை அளித்துவிட்டு ஒருபுறம் பார்த்துக்கொண்டிருக்கவேண்டி நேர்ந்தது. எமக்காக செய்கின்ற அபிவிருத்திகளை பார்த்துக்கொண்டிருக்கவேண்டி நேர்ந்தது. இந்த முடிவுகளை எடுக்கின்ற இடங்களில் நாங்கள் இல்லை. நாங்கள் கூறுபவற்றுக்கு செவிசாய்ப்பதுமில்லை: எமது கருத்துக்களை கேட்பதுமில்லை. இந்த கொள்கைகள் எமக்காகவல்ல என்பதை அறிந்திருந்தும் செய்வதற்கு ஒன்றுமே இருக்கவில்லை. எமது பணத்தை மோசடி செய்கிறார்கள் என்பதை அறிந்திருந்தும் ஊழல் புரிகிறார்கள் என அறிந்திருந்தும், எமது பிள்ளைகள் பசியில் இருக்கிறார்கள் என்பதை அறிந்திருந்தும் நாங்கள் பெருமூச்சு விட்டுக்கொண்டு இருந்தோமேயொழிய அவற்றை மாற்றியமைப்பதற்கான அதிகாரம் எமக்கு இருக்கவில்லை.
ஆனால் இந்த செயற்பாங்கினூடாக நாங்கள் அதிகாரத்திற்கு வருவதே இடம்பெறுகின்றது. நாங்கள் அனைவருமே பாராளுமன்றம் செல்வோம் என்பதல்ல. இலங்கை வரலாற்றில் முதல்த்தடவையாக அதிக எண்ணிக்கை கொண்ட பெண் உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்ப முடியுமென நாங்கள் நம்புகிறோம். ஊரில், வேலைத்தலத்தில், பாடசாலையில், வைத்தியசாலையில் நாங்கள் இருக்கிறோம். நாங்கள் இருக்கின்ற எல்லா இடங்களிலும் இந்த நாட்டை மாற்றியமைக்கின்ற செயற்பாங்கில் நாங்கள் முனைப்பாக பங்கேற்கிறோம். அதனால் யாருமே இதனை வேறு எவராவது செய்யும்வரை காத்திருக்கப் போவதில்லை. இந்த தடவை இந்த மாற்றத்தைச் செய்யப்போவது நாங்களே. அந்த செயற்பாங்கின் தீர்வுக்கட்டமான ஒரு பணியென்றவகையில் எமக்கு செவிசாய்க்கின்ற ஒருவரை நாங்கள் சனாதிபதியாக்க வேண்டும். இந்த வருடத்தில் இது நடைபெறும். அதன் பின்னர் எமக்கு செவிசாய்க்கின்ற பெண்கள், எம்மீது கூருணர்வுகொண்’ட பெண்கள், எமது கதைகளுக்கு பெறுமதிசேர்க்கின்ற எமது குரலுக்கு செவிசாய்க்கின்ற அரசாங்கமொன்றை அமைத்திடவும் வேண்டும். அவையிரண்டுமே எமது முதன்மைப் பணிகள்.
அதற்காக நாங்கள் எதிர்வரும் ஆறு மாதங்களில் அயராது உழைக்கவேண்டும். ஏற்கெனவே நாங்கள் பல அர்ப்பணிப்புகளைச் செய்துதான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறோம். இந்த உழைப்பினை நாங்கள் ஒருபொதுமே விரயமாக்கிட முடியாது. நாமனைவரும் ஒன்றுசேர்ந்து பொதுவான நோக்கத்துடன் இந்த நாட்டை சீராக்குகின்ற வேலையைத்தான் செய்துகொண்டிருக்கிறோம். எம்மிடமிருந்து எப்போதுமே எதிர்பார்த்தது அர்ப்பணிப்பு, தாங்கிக்கொள்ளல். ஒருபோதுமே பங்கேற்பினை கோரவில்லை. எமது சக்தியிலிருந்து பயன்பெறவில்லை. எமது வாக்குகளால் அதிகாரத்திற்கு வந்து எம்மை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு பயணிக்கின்ற அரசாங்கங்கள்தான் இதுவரை நியமிக்கப்பட்டன. இந்த தருணத்தில் எம்மைத் தவிர்த்துச்செல்ல முடியாது. எம்மை பங்கேற்கச் செய்விக்காமல் பயணிக்க இயலாதென்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்துவருகிறார்கள். அதனால்த்தான் ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பெண்களை விளித்துப்பேசுவதற்கான நிகழ்ச்சிகளைத் தொடங்கி இருக்கிறார்கள். அது நல்லது. ஆனால் தேசிய மக்கள் சக்தியில் ஒரு வித்தியாசம் நிலவுகின்றதென்பது எமக்குத் தெரியும்.
நாங்கள் நியமிக்கின்ற ஒர் அரசாங்கத்தை வேலைத்திட்டத்தைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு இருக்கின்றது. இதுவரை காலமும் இந்த நாட்டில் சிறப்புரிமைகளைப்பெற்று இந்த நாட்டை ஆட்சிசெய்வது தமது பிறப்புரிமையெனக் கருதிக்கொண்டிருந்த ஆட்சியாளர்கள் பதற்றமடைந்துள்ளார்கள். அதனால்த்தான் அவர்கள் கட்சிகள் என்றவகையில் பிளவுபட்டிருந்தாலும் தேசிய மக்கள் சக்தியை தோற்கடிக்க வேண்டுமென்ற இடத்தில் அவர்கள் அனைவருமே ஒருங்கிணைந்துள்ளார்கள். இது அவர்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற இந்த சமூக மாற்றத்தைக் கண்டு அஞ்சுவதை பறைசாற்றுகிறது. இங்கு இடம்பெறுவது வெறுமனே அரசாங்க மாற்றமல்ல என்பதை அவர்கள் அறிவார்கள். அதைவிட பாரதூரமான சமூக மாற்றத்திற்காகவே தயாராகி வருகிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். மக்கள் நேயமுள்ள கொள்கைகளை அமுலாக்கக்கூடிய மக்கள் நேயமுள்ள அரசாங்கத்தை நியமிக்கவும் இந்த முறையியலுக்கூடாக நாட்டை முன்னேறவும்தான் நாங்கள் தயாராகி வருகிறோம் என்பது தெரியும். இந்த முறையியலின்கீழ விசேட சிறப்புரிகள் கிடைக்கமாட்டாது. நாட்டின் சட்டம் ஆட்சியாளர்களுக்கும் பொதுவானதே. தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் நாட்டின் சட்டம் அனைவருக்கும் ஏற்புடையது. இவ்வளவு காலமும் நாட்டில் சட்டத்தை சரிவர அமுலாக்காமையே நாட்டில் நிலவியது. சட்டத்தை அமுலாக்க அரசியல்வாதிகள் இடமளிக்கவில்லை. திசைகாட்டி அரசாங்கமொன்றின்கீழ் சட்டம் சுயாதீனமானதாக அமையும். சட்டத்தை அமுலாக்கி மக்கள் பணத்தை களவாடிய, மக்களை பாதிப்பிற்கு உள்ளாக்கிய, அத்தகைய கொள்கைகளை வகுத்தவர்களுக்கு முறையான தண்டனை கிடைக்கும். பழிவாங்கும் கலாசாரம் எம்மிடம் இல்லை. குறிப்பாக பெண்களாகிய எங்களுக்குத் தெரியும் பழிவாங்கலினால் ஏற்படுகின்ற சேதத்தை நாங்கள் அனுபவித்திருக்கிறோம். திசைகாட்டி தொடர்பில் பொய்யான பயத்தை உருவாக்க மேற்கொள்கின்ற முயற்சியை தோற்கடிக்க வேண்டியது உங்கள் அனைவரதும் பொறுப்பாகும். இங்கு வர விரும்புகின்றவர்களை நாங்கள் சேர்த்துக்கொள்ள வேண்டும். வரலாற்றில் நிலவிய எமது பிரிவினைகளை மறந்து அனைவரையும் விளித்துப்பேசி நாட்டை சீராக்குகின்ற இந்த வரலாற்று வேலைத்திட்டத்துடன் ஒன்றுசேருமாறு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். அம்பாறை மாவட்டம் பல்வகை கலாசாரம் நிலவுகின்ற மாவட்டமாகும். நீங்கள் பிரிவினைகளின் பாதகவிளைவுகளை நன்றாக அனுபவித்துள்ளீர்கள். அனைவரையும் பிரிவினைகளுக்குப் பதிலாக ஒன்றுசேர்க்கின்ற, பகைமைக்குப் பதிலாக அன்பு செலுத்துகின்ற சமூகமொன்றை உருவாக்க உங்களின் தலைமைத்துவம் எமக்குத்தேவை. அதற்காக தயாராகுங்கள், பலமடையுங்கள், ஒழுங்கமையுங்கள். அறிவால் பலமடையுங்கள். உங்களின் பங்களிப்பு எமக்கு கிடைப்பது பாரிய நம்பிக்கையைப்போன்றே பாரிய பக்கபலமுமாகும். அந்த நம்பிக்கையைக் கொடுத்தமைக்காகவும் அன்பை எமக்கு வழங்கியமைக்காகவும் உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
“எமது பிள்ளைகளுக்காக இந்த நாட்டை சீர்படுத்துவோம். சிங்கள, தமிழ் , முஸ்லீம் தேசிய ஒற்றுமையைக் கட்டியழுப்புவோம்.”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்-
இந்த திகாமடுல்ல மாவட்டம் தீகாயு குமாரனின் மாவட்டமாகும். கமத்தொழிலுக்கு பெயர்பெற்ற கலாசார அடையாளங்கள் பலவற்றைக்கொண்ட பன்வகைமை நிறைந்த மாவட்டமாகும். திகாமடுல்லவிற்கே தனித்துவமான மொழி, நாட்டார் இலக்கியம், தனிவேறான உணவுக் கலாசார் நிலவுகின்றது. அதைப்போலவே மரபுகள், வழிபாட்டு முறைகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டால் திகாமடுல்ல மக்கள் தனித்துவமான மக்கள் பிரிவினராவர். நிகழ்கால சனத்தொகையில் அதிகமானவர்கள் 41% இற்கு கிட்டிய முஸ்லீம் சனத்தொகையாகும். 35% – 38% இற்கு கிட்டியோர் சிங்களவர்களாவர், 18% – 21% இற்கு இடையில் தமிழ் மக்கள். இன ஒற்றுமை, தேசிய ஒற்றுமையை அடிப்படையாகக்கொண்ட மகிழ்ச்சியாக வாழவேண்டிய தேவை நிலவுகின்ற நிலையில் சிங்கள, தமிழ், முஸ்லீம்களாகிய நாங்கள் அனைவருமே ஒன்றாக வசிக்ககூடிய அரசியல் முறைமையொன்று, பொருளாதார நியாயம் என்பவற்றை வழங்கக்கூடிய மேடைதான் இந்த தேசிய மக்கள் சக்தியின் மேடையாகும்.
எமது பொருளாதாரத்திற்குள்ளே, சனத்தொகைக்குள்ளே பாரிய பங்களிப்பினை வழங்குகின்ற, சனத்தொகையில் அதிகமாக பங்கினை வகிக்கின்ற பெண்களாகிய எங்களுக்கு உரித்தாகியுள்ள நிலைமை எத்தகையது? இலங்கையில் பெண்கள் ஈடேற்றுகின்ற மனைசார் பாதுகாப்பு பொருளாதாரம் பற்றி பாராளுமன்றத்தில் உரைநிகழத்திய முதலாவது பெண் உறுப்பினர் ஹரினி அமரசூரிய ஆவார். இதுவரை தமது வர்க்கப் பரம்பரையில், தந்தைவழி மரபுரிமையில், கணவனை இழந்தமையால் பாராளுமன்றத்திற்கு வந்திருந்தாலும் இந்த நாட்டில் அல்லற்படுகின்ற பெண்களின் மேற்படி பாதுகாக்கின்ற பணி பற்றி பேசியதில்லை. ஒரு நோக்கினைக்கொண்ட அரசியல் இயக்கமென்றவகையில் பெண்களின் தலைமையில் பெண்களுக்குப் பொறுப்புக்கூறுகின்ற அரசியல் இயக்கமென்றவகையில் புள்ளடி இடுவதற்காக மாத்திரம் பாவித்த பெண்கள் பலத்தை ஓர் அரசியல் பிரவாகமாக சமூகத்தின் இயக்கவிசையாக , சமூகச் சக்திகளை தீர்மானிக்கின்ற பிரதான சக்தியாக மாற்றிய ஒரே அரசியல் இயக்கம் தேசிய மக்கள் சக்தியாகும். வீட்டிலுள்ள பிள்ளைகளுக்கு உண்ணக்கொடுப்பது, கல்வியை வழங்குவது, வீட்டில் ஒரே இடத்தில் முடங்கிப்போயுள்ள முதியோர் தலைமுறையை பேணிப்பாதுகாப்பது பெண்ணின் கட்டாயமான பணியாக மாறியுள்ளது. உலகின் முன்னேற்றமடைந்த நாடுகளில் தமது நாட்டில் உள்ள பிரஜைகளை, தமது நாட்டில் உள்ள பிள்ளைகளை போசாக்குடைய பிரஜைகளாக மாற்றுவது அந்த நாட்டு அரசாங்கங்களின் பொறுப்பாகும்.
நாங்கள் கட்டியெழுப்பிய நாடு எத்தகையது? இதுவரைகாலமும் எந்தவிதமான நோக்குமின்றி செயலாற்றிய அரசியல் பாசறைகளைச் சேர்ந்த தலைவர்களின் கண்கள் திறக்க ஆரம்பித்துள்ளன. இந்த நாட்டின் பிரஜைகளுக்காக பொறுப்புக்கூறுகின்ற அரசாங்கமொன்று கிடையாது எனும் செய்தியைக்கொடுத்து தேசிய மக்கள் சக்தி நாளுக்குநாள் மக்களைத் தட்டியெழுப்பும்போதுதான் இந்த பெண்கள் விழிப்படைந்தார்கள். அனைத்து மாவட்டங்களிலும் ஒருவர்போல் எழுச்சிபெறுகிறார்கள். 52% ஆக அமைந்த பெண்கள் தற்போது இந்த நாட்டின் அரசியல் மாற்றமடையவேண்டும்: மக்களுக்குப் பொறுப்புக்கூறுகின்ற மக்கள்நேயமுள்ள அரசாங்கமொன்று உருவாக்கப்பட வேண்டுமென்பதை விளங்கிக்கொண்டுள்ளார்கள். நாட்டின் கல்விக்காக ஒதுக்குகின்ற செலவுத்தலைப்பு வெட்டப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் ஒதுக்கப்பட்ட செலவுத் தலைப்பினை வெட்டிவிட்டு இந்த ஆட்சியாளர்கள் சொர்க்கசுகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கைவிடுகின்ற அரச பொறுப்பினை நீங்களும் நாங்களும் சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்து தாங்கிக்கொண்டிருக்கிறோம். அரசாங்கத்தின் பொறுப்பு வரி செலுத்துகின்ற மக்களின் பிள்ளைகளை பாதுகாப்பது, பிள்ளைகளுக்கு போசாக்கு வழங்குவது, வைத்தியசாலைகளுக்கு மருந்துகளை வழங்குவது, போக்குவரத்திற்கான ஏற்புடைய வசதிகளை வழங்குவது என்பவையாகும். இந்த பொறுப்பினை ஈடேற்றத் தவறியுள்ள அரசாங்கத்தினால் இனிமேலும் அவ்வாறு இருக்கமுடியாது. தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் இந்த பொறுப்பு பற்றி வீடுவீடாகச்சென்று எடுத்துரைக்கிறோம். உங்களின் உரிமையை நாங்கள் கோரிநிற்கிறோம். இந்த நாட்டுக்கு மக்களுக்கு பொறுப்புக்கூறுகின்ற அரசாங்கமொன்று உருவாகவேண்டும். அதனைத்தான் மக்கள்நேயமுள்ள அரசாங்கமெனக் கூறுகிறோம். இந்த நாட்டில் துன்பப்படுகின்ற ஒவ்வொரு பெண்ணுக்கும் தனக்கென ஒரு வாழ்க்கை இருக்கின்றது. இந்த வாழ்க்கையைத் தாங்கிக்கொள்ள முடியாத எத்தனை தாய்மார்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்? தமது பிள்ளைகளுக்கு நஞ்சூட்டி தாமும் தமது உயிரையும் மாய்த்துக்கொள்கிறார்கள். பெற்றோர்கள் தற்கொலை புரிகின்ற நிலைமை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. இதுவரை இந்த நாட்டை ஆட்சிசெய்தவர்கள் மக்களை இந்த கவலைக்கிடமான நிலைக்கு தள்ளியுள்ளார்கள். பொறுப்பினைத் தவறவிடுகின்ற அரசாங்கம் ஒரு நாட்டுக்கு அவசியமில்லை. மக்களுக்கு பொறுப்புக்கூறுகின்ற அரசாங்கமொன்றைத்தான் நாங்கள் அமைத்துக்கொள்ள வேண்டும்.
இன்று உயிர்த்தஞாயிறு தாக்குதல் இடம்பெற்று சரியாக ஐந்து வருடங்கள் நிறைவடைகின்ற நாளாகும். இன்றும் நீதி கிடைத்திராத பிரச்சினையான விளங்குகின்றது. நேற்று நீங்கள் கண்டீர்கள் கருணா அம்மான் புதிய கட்சியொன்றை அமைத்துக்கொண்டு ரணிலுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருக்கிறார். நாட்டை அழித்த தலைவர்கள் தமது அதிகாரத்திற்காக அன்று பிள்ளைகளை பலவந்தமாகக் கொண்டுசென்று யுத்தத்திற்காக பாவித்த கருணா அம்மாவுடன் அரசியல் போராட்டக் களத்தில் தோள்மீது கைபோட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நாட்டில் யுத்தத்தை உருவாக்கி அப்பாவி சிங்கள, தமிழ், முஸ்லீம் பிள்ளைகளை அழித்த தலைவர்கள் தற்போது தமது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக இன்று அவர்களால் ஒன்றுசேர முடிகின்றது. சிங்கள, தமிழ், முஸ்லீம்களாகிய நாமனைவரும் இனவாத இந்த கொடிய கும்பலை விரட்டியடிப்பதற்காக தேசிய மக்கள் சக்தியை சுற்றி ஒன்றுசேர வேண்டும். தாய்மார்களில் 14% தமது பிள்ளைகளுக்கு உண்ணக் கொடுப்பதற்காக ஒருவேளை பட்டினியாக இருக்கிறார்கள். தேசிய மக்கள் சக்தியைச்சேர்ந்த நாங்கள் கூறுவது நாங்கள் இந்த நாட்டில் தங்கியிருப்போம். எமது பிள்ளைகளுக்காக இந்த நாட்டை சீராக்குவோம். சிங்கள, தமிழ், முஸ்லீம் தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவோம். அதற்காக செயலாற்றக்கூடிய ஒரே அரசியல் இயக்கம் தேசிய மக்கள் சக்தி மாத்திரமாகும். அதற்காக நாங்கள் பலம்பொருந்தியவகையில் எழுச்சிபெற வேண்டும். நாங்கள் இந்த நாட்டில் புள்ளடி இடுவதற்காக மாத்திரம் அந்த பெண்களின் பலத்தை சமூகத்தை மாற்றியமைக்கின்ற புதிய தேசிய மறுமலர்ச்சிக்காக பெண்களின் பலத்தை ஒன்றிணைத்த அரசியல் இயக்கம் தேசிய மக்கள் சக்தியாகும். அது உங்களின் பிள்ளைகளுக்கு சுதந்திரம், விடுதலை, சமாதானம் மற்றும் மகிழ்ச்சியைத் தருவதாக அமையும்.
(-Colombo, April 01, 2024-) ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு இடையில் இன்று (01) முற்பகல் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தமது செயற்றிட்டங்கள் பற்றி தேசிய மக்கள் சக்திக்கு தெளிவுப்படுத்திய ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் பிரதிநிதிகள், நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடியினால் உக்கிரமடைந்துள்ள வறுமை உள்ளிட்ட சமூக பொருளாதார பிரச்சினைகள் தொடர்பாக கவனம் செலுத்தியதுடன், அவர்களது அறிக்கையில் இதுகுறித்த தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் […]
(-Colombo, April 01, 2024-)
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு இடையில் இன்று (01) முற்பகல் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன்போது இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தமது செயற்றிட்டங்கள் பற்றி தேசிய மக்கள் சக்திக்கு தெளிவுப்படுத்திய ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் பிரதிநிதிகள், நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடியினால் உக்கிரமடைந்துள்ள வறுமை உள்ளிட்ட சமூக பொருளாதார பிரச்சினைகள் தொடர்பாக கவனம் செலுத்தியதுடன், அவர்களது அறிக்கையில் இதுகுறித்த தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.
இந்தச் சந்திப்பின் போது குறித்த செயற்றிட்டத்துக்கான இலங்கை வதிவிட பிரதிநிதி அஸுசா குபோடா (Azusa Kubota), கொள்கை நிபுணரான சந்திரிக்கா கருணாரத்ன, ஊடக நிபுணர் சத்துரங்க ஹபுஆரச்சி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
(-Colombo, March 31, 2024-) மலையக இந்து குருமார் சம்மேளனத்தைச் சேர்ந்த இந்து குருமார்கள் இன்று (31) தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்களை மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர். இதன்போது மலையக மக்களின் வீடு மற்றும் காணிப் பிரச்சினைகள், மலையகத்தில் இந்து சமயத்தையும் கலாச்சாரத்தையும் மேம்படுத்துதல் பற்றிய விடயங்களையும் மலையக இந்து குருமார்கள் தோழர் அநுர குமார திசாநாயக்கவின் கவனத்திற்கு கொண்டுசென்றனர். நீண்ட நேரம் இடம்பெற்ற இந்த […]
(-Colombo, March 31, 2024-)
மலையக இந்து குருமார் சம்மேளனத்தைச் சேர்ந்த இந்து குருமார்கள் இன்று (31) தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்களை மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர்.
இதன்போது மலையக மக்களின் வீடு மற்றும் காணிப் பிரச்சினைகள், மலையகத்தில் இந்து சமயத்தையும் கலாச்சாரத்தையும் மேம்படுத்துதல் பற்றிய விடயங்களையும் மலையக இந்து குருமார்கள் தோழர் அநுர குமார திசாநாயக்கவின் கவனத்திற்கு கொண்டுசென்றனர்.
நீண்ட நேரம் இடம்பெற்ற இந்த உரையாடலில் மலையக மக்கள் முகம்கொடுக்கின்ற பிரச்சினைளுக்கு எவ்வாறான அரசியல் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பது மற்றும் நடப்பு அரசியல், பொருளாதார நிலைமைகள் குறித்தும் தோழர் அநுர குமார திசாநாயக்க தெளிவுப்படுத்தினார்.
இது ஆக்கபூர்வமான கலந்துரையாடலாக அமைந்திருந்தது.