(-தேசிய மக்கள் சக்தி இளைப்பாறிய முப்படைக் கூட்டமைவின் ஊடக சந்திப்பு – 2024.09.02-) எங்களின் இராணுவ அங்கத்தவர்கள் தரைப்படை, கடற்படை, விமானப்படை அங்கத்தவர்கள் என்ற வகையில் நீண்டகாலம் கடமை புரிந்து உயர் தோ்ச்சியைப் பெற்று ஆற்றல்களை விருத்தி செய்து சமூகத்தில் சிறந்த பிரஜைகளாக வாழ்கிறார்கள். தேசிய மக்கள் சக்தியுடன் இளைப்பாறிய முப்படைக்கூட்டமைவின் அதிட்டன கூட்டமைவில் ஏறக்குறைய 40,000 போ் நாட்டில் முனைப்பாக செயலாற்றி வருகிறார்கள். இந்த நாட்டுக்காக ஒழுக்கமுடையவர்களாக பொறுப்புக்களை வெற்றிகரமாக ஈடேற்றி இளைப்பாறியுள்ளதோடு இந்த நாட்டுக்கு […]
(-தேசிய மக்கள் சக்தி இளைப்பாறிய முப்படைக் கூட்டமைவின் ஊடக சந்திப்பு – 2024.09.02-)
எங்களின் இராணுவ அங்கத்தவர்கள் தரைப்படை, கடற்படை, விமானப்படை அங்கத்தவர்கள் என்ற வகையில் நீண்டகாலம் கடமை புரிந்து உயர் தோ்ச்சியைப் பெற்று ஆற்றல்களை விருத்தி செய்து சமூகத்தில் சிறந்த பிரஜைகளாக வாழ்கிறார்கள். தேசிய மக்கள் சக்தியுடன் இளைப்பாறிய முப்படைக்கூட்டமைவின் அதிட்டன கூட்டமைவில் ஏறக்குறைய 40,000 போ் நாட்டில் முனைப்பாக செயலாற்றி வருகிறார்கள். இந்த நாட்டுக்காக ஒழுக்கமுடையவர்களாக பொறுப்புக்களை வெற்றிகரமாக ஈடேற்றி இளைப்பாறியுள்ளதோடு இந்த நாட்டுக்கு நோ்ந்துள்ள கவலைக்கிடமான நிலைமையை எம்மால் தெளிவாக காணக்கிடைத்தது. இந்த நிலைமையிலிருந்து மீண்டெழ நாம் ஈடேற்ற வேண்டிய செயற்பொறுப்பினை ஈடேற்றல் பற்றி விசாரித்தறியும்போது தேசிய மக்கள் சக்தி முன்னோக்கி வருகின்ற விதத்தை நாங்கள் கண்டோம். அவர்களுடன் நீண்டகாலமாக பேச்சுவார்த்தை நடத்தி எமது இரண்டாவது அரும்பணியாக 2021 இறுதியில் மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் அதிட்டன கூட்டமைவினை அமைத்துக்கொண்டோம். கழிந்து சென்ற இரண்டு வருட காலப்பகுதிக்குள் நாட்டுக்கு வெளியில் இருக்கின்ற எமது இளைப்பாறியவர்கள் கூட விசேட அர்ப்பணிப்பினை செய்தார்கள். நாங்கள் பெற்றுள்ள தொழில்சார் அறிவையும் ஆற்றலையும் நாட்டை கட்டியெழுப்புவதற்காக தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றுசோ்ந்து வழங்கத் தொடங்கினோம். எமது இளைய தலைமுறையினரைப் போன்றே ஒட்டுமொத்த மக்களையும் நாங்கள் நேசிக்கிறோம். நாங்கள் முனைப்பான சேவையில் இருந்த காலத்தில் மனிதப் பண்புடையவர்களாக மனிதாபிமான நடவடிக்கையை மேற்கொண்ட அனுபவங்களை உச்சளவில் பயன்படுத்தி இந்த விசேட பணிக்காக எமது ஒத்துழைப்பினை வழங்கிக்கொண்டிருக்கிறோம். அதனால் ஏனைய கட்சிகளும் அரசாங்கமும் நினைத்துப் பார்க்காத அதிர்ச்சிக்கு இலக்காகியுள்ளன. தேசிய மக்கள் சக்திக்கு எதிரான அரசியலில் ஈடுபட்டுள்ள கட்சிகளும் குழுக்களும் அதிட்டன முப்படைக் கூட்டமைவு சம்பந்தமாக பல்வேறு சேறுபூசல்களையும் குறைகூறல்களையும் எடுத்தியம்புகின்ற வீடியோக்களையும் போஸ்ட்களையும் ஊடகங்களில் பிரசுரித்து வருகின்றன. திசைக்காட்டிக்கு எதிராக செயலாற்றி வருகின்ற அரசியல் கட்சிகள்கூட ஊடக சந்திப்புக்களை நடத்தி அதிட்டன கூட்டமைவின் செயற்பாடுகள் பற்றி போலியான, பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன.
அதனால் யுத்தம் நடைபெற்ற கடந்த காலத்தில் இந்த அங்கத்தவர்கள் பாரிய மனிதாபிமான நடவடிக்கையை மேற்கொண்டவர்கள் என்பதை முதலிலேயே வழியுறுத்தினேன். நாங்கள் தேசிய மக்கள் சக்தியை நம்புகிறோம். அதைப்போலவே எமது செயற்பாடுகள் தொடர்பில் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். வளமான நாடு – அழகான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் நோக்குடன் செயலாற்றி வருவதோடு கொள்கை ரீதியாக செப்டெம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதி தோ்தலுக்கு உச்சளவிலான ஒத்துழைப்பினை வழங்கி மிகவும் அமைதியான தோ்தலுக்கு இடவசதி ஏற்படுத்திக் கொடுப்போம். அதன் பின்னரும் அமைதிச்சூழலை பேணிவருவது எமது தலையாய கடமையும் பொறுப்புமாகும். அதனை நாங்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டதாக தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து ஈடேற்றுவோம். ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுகின்ற அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இந்த நாட்டை அமைதியான வகையில் பேணிவர அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம். எங்கள் கூட்டமைவு நாட்டு மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பதற்காக அமைத்துக்கொண்ட ஒரு கூட்டமைவு அல்ல. தீவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மூலைமுடுக்குகள்தோறும் சென்று தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரான அநுர குமார திசாநாயக்கவின் பெருவெற்றிக்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம். செப்டெம்பர் 21 ஆம் திகதிக்கு பின்னர் நாட்டிலே பாரிய கலவரங்களை ஏற்படுத்துவதாகவும் அதில் அதிட்டன இளைப்பாறிய முப்படை கூட்டமைவை சோ்ந்தவர்கள் தொடர்புபடுவதாகவும் சேறுபூசிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறான குறைகூறல்களுக்கு செவிசாய்க்க வேண்டாமென நான் மிகுந்த பொறுப்புடன் மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறான நிலைமையொன்று ஏற்படுவதற்கு எந்த விதமான வாய்ப்பும் கிடையாது.
நாங்கள் அடிமட்டத்திலிருந்து முப்படையிலிருந்து இளைப்பாறியவர்களை சந்தித்த பின்னரே இந்த கூட்டமைவினை கட்டியெழுப்பினோம். அதனால் இந்த கூட்டமைவு மண்ணில் வளர்ந்த ஆணிவேரைக்கொண்ட மாபெரும் விருட்சமான தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்று சோ்ந்துள்ளது. எதிர்வரும் ஐந்தாம் தேதியும் ஆறாம் திகதியும் தபால் மூல வாக்குகளை அளிக்கையில் முப்படை அங்கத்தவர்களுக்கும் அந்த வாய்ப்பு உரித்தாகியிருக்கின்றது. எம்முடன் கடமையாற்றியவர்கள் என்ற வகையில் இந்த நாட்டுக்கு நோ்ந்துள்ள அவல நிலை பற்றி அனைவருக்கும் மிகச் சிறந்த புரிந்துணர்வு இருக்கிறது. அதனால் தபால் மூலம் வாக்களிக்கையில் விவேகமுள்ளவர்களாக நன்றாக சிந்தித்துப்பார்த்து செயலாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். முப்படை அங்கத்தவர்களுக்கு இற்றைவரை சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ள எந்தவொரு வசதியும் குறைவடைய மாட்டாது என்பதையும் குறிப்பாக கொள்கை ரீதியாக தேசிய மாகாநாட்டில் பிரகடனம் செய்துள்ளோம். முப்படையினரின் நன்மதிப்பு, அடையாளம் மற்றும் சட்டப்பூர்வமாக அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள வசதிகள் எதுவுமே குறைக்கப்படமாட்டாதென்பதை உறுதி செய்கிறோம். நாங்கள் கூறிய விடயங்களை திரிபுபடுத்தி பிரச்சாரம் செய்யுமளவிற்கு ஒரு சில குழுக்கள் அச்சமடைந்திருக்கின்றன. நாட்டின் அழிவிற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் அவ்விதமாக செயலாற்றி வருவதை நாங்கள் காண்கிறோம்.
சிவில் பாதுகாப்பு படையணி ஆற்றல் மிகுந்த ஏறக்குறைய 30,000 அங்கத்தவர்களை கொண்டதாக நாடு பூராவிலும் இயங்கி வருகிறது. அவர்களின் நன்மதிப்பை பாதுகாக்கின்ற வகையில் அவசியமான பயிற்சிகளை வழங்கி நாட்டுக்கு பயனுள்ள பணிகளில் ஈடுபடுத்துவோம். அவர்களின் தொழில் உறுதி நிலையை பாதுகாப்போம். இறந்த மற்றும் காணாமல் போன முப்படை அங்கத்தவர்களின் குடும்ப அங்கத்தவர்களுடன் தேசிய மக்கள் சக்தி நீண்ட உரையாடல்களை மேற்கொண்ட பின்னர் அதற்கான வேலைத்திட்டமொன்றை வகுத்துள்ளது. அதைப்போலவே ஓய்வூதியத்தில் நிலவுகின்ற முரண்பாடுகளை முடிவுறுத்த நடவடிக்கை எடுப்போம். செப்டெம்பர் 18 ஆம் திகதி நள்ளிரவுடன் தோ்தல் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் தோ்தல் முடிவடையும்வரை எங்களுடைய டீசேட்டுக்களை அணிய முடியாது. அந்த காலப்பகுதிக்குள் அதிட்டன டீசேட்க்களை அணிந்து செயலாற்றினால் அவர்கள் எங்களுடைய அங்கத்தவர்கள் அல்ல. அதிட்டன டீசேட்களை பாவித்து வீடியோ கிளிப் தயாரித்து போலியான கருத்தியல்களை முன்வைத்திருந்தார்கள். செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை நாங்கள் ஏதாவது பணியை மேற்கொள்வதாயின் இவ்விதமாக பகிரங்க ஊடக சந்திப்பினை நடாத்தி மக்களுக்கு விடயங்களை எடுத்துரைப்போம். இதற்கிணங்க எங்களுடைய செயற்பாடுகள் பற்றி மக்கள் வெளிப்படைத்தன்மையுடன் விளங்கிக்கொள்வது வசதியானதாக அமையும். தேசிய மக்கள் சக்தி மக்கள் மத்தியில் அடைந்துள்ள மாபெரும் வரவேற்பின் மத்தியில் பின்வாங்கியுள்ள குழுவினர் அவர்களின் அதிகாரத்தை பாதுகாத்துக்கொள்வதற்காக செயலாற்றுகின்ற விதத்தை மக்களால் இந்நாட்களில் நன்றாக விளங்கிக்கொள்ள முடியும். அதனால் சமூக வலைத்தளங்களை பாவித்து வருங்காலத்தில் பரிமாற்றிக்கொள்ளப்படுகின்ற பொய்யான விடங்களைக் கண்டு ஏமாந்து விடவேண்டாமென கேட்டுக்கொள்கிறோம்.
“பயங்கரவாதம், உயிர்த்தஞாயிறு தாக்குதல் அரசியல்வாதிகளின் பலவீனமான தலைமைத்துவம் காரணமாகவே தோன்றியதென்பதை கவலையுடனேனும் குறிப்பிடவேண்டும்.”
-அதிட்டன முப்படை கூட்டமைவின் இளைப்பாறிய எயார்வயிஸ் மாஷல் சம்பத் துய்யகொன்தா-
தேசிய மக்கள் சக்தி என்ற வகையில் நாங்கள் கொள்கை பிரகடனமொன்றை வெளியிட்டோம். அதன் 223 வது பக்கத்தில் “உயர்வான தேசிய பாதுகாப்பு – பாதுகாக்கப்பட்ட தேசம்” எனும் அத்தியாயத்தின் கீழ் எமது கொள்கைகைய முன்வைத்திருக்கிறோம். அது சம்பந்தமான விபரங்களை npp.lk இணையத்தளத்தில் பிரவேசித்து எவராலும் பார்க்க முடியும். அது சம்பந்தமாக விழிப்புணர்வு பெறுமாறு வேண்டுகோள் விடுக்கிறோம். எமது முப்படையில் தற்போது இருக்கின்ற பதவிகளுடன் தொடர்புடையதாக அரசாங்கத்தினால் சட்டபூர்வமாக வழங்கப்பட்டுள்ள அனைத்து வசதிகளையும் அவ்விதமாகவே வழங்குவோம். பொது மக்களுக்கு கிடைக்கின்ற சுகாதார வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகளை விருத்தி செய்வதன் மூலமாகவும் பயன் கிடைக்கின்றது. இளைப்பாறிய அங்கத்தவர்களுக்காக நிலவுகின்ற விடுமுறை விடுதிகளை உள்ளிட்ட வசதிகள் அவ்வண்ணமே வழங்கப்படும். முப்படையில் தொழில்சார் பயிற்சியை பெற்றவர்கள் இளைப்பாறிய பின்னர் ஈடுபடுவதற்கான தொழில்களை இழப்பதனால் யுக்ரேன் அல்லது ரஷ்யா போன்ற யுத்தக்களங்களுக்கு சென்று உயிராபத்திற்கு இலக்காகியுள்ளார்கள். கௌரவமான இளைப்பாற்று வாழ்க்கையை கழிப்பதற்கான வசதிகளின்மையால் அவர்கள் அத்தகைய அபாய நோ்வினை எதிர்நோக்கியிருக்கிறார்கள்.
முப்படையினர் பொலிஸாருடன் இணைந்து தேசிய பாதுகாப்பிற்காக அர்ப்பணிப்பு செய்து யுத்தகாலத்தில் கூட உச்ச அர்ப்பணிப்புடன் செயலாற்றியிருக்கிறார்கள். பயங்கரவாதம், உயிர்த்தஞாயிறு தாக்குதல் அரசியல்வாதிகளின் பலவீனமான தலைமைத்துவம் காரணமாகவே தோன்றியதென்பதை கவலையுடனேனும் குறிப்பிடவேண்டும். இன்றும் ஆட்சியாளர்கள் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அவ்வண்ணமே செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக உயர்நீதிமன்றம் கட்டளை பிறப்பித்த வண்ணம் இன்னமும் பதில் பொலிஸ் மா அதிபரொருவர் நியமிக்கப்படவில்லை. குறுகிய அரசியல் சிந்தனைகள் காரணமாக அந்த பொறுப்புக்களை தவறவிட்டிருக்கிறார்கள். குறுகிய அரசியல் இலாபம் கருதி ஆட்சியாளர்கள் செயலாற்றுகின்ற விதத்தை நன்றாக விளங்கிக்கொள்ளுமாறும் அவர்கள் நாடு பற்றி சிந்திக்காமல் செயலாற்றி வருகின்ற விதத்தை விளங்கிக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
நாங்கள் இந்த நிலைமையை மாற்றுவதற்காகவே தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்திருக்கிறோம். நாங்கள் சிவிலியன்கள் என்ற வகையில் சட்டபூர்வமாக தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் ஒருபோதுமே நாட்டுக்குள் வன்முறை உருவாகக்கூடிய வகையில் செயலாற்ற மாட்டோம் என்பதை வலியுறுத்துகிறோம். அது மாத்திரமன்றி முனைப்பான சேவையில் ஈடுபட்டிருந்ததுபோலவே இத்தருணத்திலும் அமைதியான ஒரு நாட்டில் பொதுமக்களின் பாதுகாப்புக்காகவே செயலாற்றிவருகிறோம்.
“தேசிய மக்கள் சக்தியில் எமது அரசியல் நடைமுறைகள் மக்களால் பாராட்டப்பட்டுள்ளன.”
-அதிட்டன முப்படை கூட்டமைவின் இளைப்பாறிய ரியர் அட்மிரால் பிரட் செனவிரத்ன-
நாங்கள் எந்த விதமான அரசியல் நன்மையையும் எதிர்பார்த்து இளைப்பாறிய முப்படை கூட்டமைவுடன் இணையவில்லை. நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற சமூக அநீதியின் முன்னிலையில் அமைதியாக இருக்க முடியாதென்பதால் நாங்கள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப செயலாற்றி வருகிறோம். ஏனைய அரசியல் கட்சிகளும் இளைப்பாறிய இராணுவ கூட்டமைவுகளை சோ்த்துக்கொண்டு அமைப்புக்களை கட்டியெழுப்ப முயற்சி செய்தனர். ஊழல்மிக்க அரசியல்வாதிகளும் அவர்களுடன் மரமும் தோலும்போல் இணைந்து செயலாற்றுகின்ற ஒரு சில உத்தியோகத்தர்களும் எமக்கு எதிராக கடந்த காலத்தில் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்கள். அதிட்டனவுடன் இணைந்துள்ள சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் அனைவரும் அரசியலுடன் எந்த விதமான தொடர்பும் இன்றி கௌரமாக கடமை புரிந்து முனைப்பான சேவையிலிருந்து இளைப்பாறியவர்களாவர். 40,000 மேற்பட்ட இளைப்பாறிய முப்படை அங்கத்தவர்கள் இந்த நிலைமை காரணமாகவே எம்மைச் சுற்றி இணைந்திருக்கிறார்கள். தேசிய மக்கள் சக்திக்குள் எமது அரசியல் நடைமுறை மக்கள் மத்தியில் மிகுந்த பாராட்டுதலுக்கு இலக்காகியுள்ளது. அரசியல் மேடைகளில் எம்மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்ற அரசியல்வாதிகளும் இளைப்பாறிய இராணுவ உத்தியோகத்தர்களும் சம்பந்தமாக கருணை அடிப்படையில் சிந்தித்துப்பார்ப்பதோடு அவர்கள் முனைப்பான அரசியலில் ஈடுபட்டிருந்த வேளையில் செயலாற்றிய விதம் சம்பந்தமாக பரிசீலனை செய்யுமாறு சமூகத்திடம் கேட்டுக்கொள்கிறோம். விசேட பிரமுகர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு பிரிவு அங்கத்தவர்களின் சட்டபூர்வமான உரிமைகள் எதுவும் மாற்றமடைய மாட்டாதென்பதை வலியுறுத்துகிறோம். அதைபோலவே இதுவரை எம்முடன் சோ்ந்திராத இளைப்பாறிய இராணுவ அங்கத்தவர்களை எம்முடன் இணைந்து கொள்ளுமாறும் மக்கள் நேயமுள்ள அரசாங்கமொன்றை உருவாக்க பங்களிப்புச் செய்யுமாறும் வேண்டுகோள் விடுக்கிறோம்.
“சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வாக்காளரின் மனதை திரிபுபடுத்துகின்ற செய்திகளை பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.”
-தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் அமைப்பின் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமரப்பெரும-
தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக மக்கள் அணிதிரண்டு கொண்டிருக்கின்ற விதத்தைக் கண்டு எதிரான குழுவினர் பதற்றமடைந்து மிகவும் கீழ்த்தரமான சேறுபூசல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று (01) நாங்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனிலுக்கு எதிராக முறைப்பாடொன்றை செய்தோம். அவர் 22 ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணியின் அங்கத்தவர்களால் மக்களின் ஆதனங்களை கொள்ளையடித்தல், வாகனங்களை கைப்பற்றிக்கொள்ளல் போன்ற செயல்களை புரிவார்களென பாரிய பீதிநிலையொன்றை சமூகத்தில் விதைக்க முயற்சி செய்கிறார். அதைபோலவே உயர்நீதிமன்றத்தினால் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வறிதாக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணாயக்கார மற்றுமொரு பீதியை கிளப்பி தேசிய மக்கள் சக்தியின் வெற்றியுடன் பாரிய மனிதப் படுகொலைகள் இடம்பெறுமென பிரச்சாரம் செய்து வருகிறார். 1977 தோ்தலின் பின்னர் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியவர்கள் யார் என்பதை நாங்கள் கண்டிருக்கிறோம். 1994 இல் இருந்து இற்றைவரை அவ்விதமான தோ்தல் வன்செயல்கள் இலங்கையில் இடம்பெறவில்லை. சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் இதுவரையும் அவர்கள் கூறுகின்ற விதத்தில் தோ்தல் வன்செயல்கள் உருவாகவில்லை. அதனால் 22 ஆம் திகதியோ அதன் பின்னரோ அவர் கூறுகின்ற விதத்திலான வன்செயல்கள் பற்றி மக்கள் அச்சமடைய தேவையில்லை. அதைபோலவே தபால் மூல வாக்காளர்களின் மனதை திரிபுபடுத்துகின்ற விதத்திலான செய்திகளை சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். தேசிய மக்கள் சக்தி தொடர்பில் தோன்றியுள்ள மக்கள் ஆதரவினை ஓரளவிற்கேனும் குறைக்க இவை மூலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாங்கள் மக்களின் நிலையான வைப்புக்களை அரசாங்கத்திற்கு கையகப்படுத்திக்கொள்வதாக தோழர் ஹந்துன்னெத்தி கூறினார் என நேற்று ஆங்கில செய்தித்தாளொன்றில் செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது. இந்த நாட்டின் மனிதர்களுக்கு ஆதனங்களை வைத்துக்கொள்வதற்கான உரிமை சட்டத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளது. பணம் என்பது மக்களின் ஆதனங்களில் ஒன்றாகும். சட்டமொன்றை விதிப்பதாயின் அதற்கு முன்னர் சட்ட மூலம் உயர்நீதிமன்றத்திற்கு செல்லும். உயர்நீதிமன்றம் பரிசீலனை செய்த பின்னர்தான் தொடர்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அரசாங்கமொன்று அதிகாரத்திற்கு வந்து விட்டது என்பதற்காக நினைத்தவாறு சட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளமுடியாது. பொய் பிரச்சாரங்களுக்கு ஏமாந்து விடவேண்டாம். எமது நாட்டு மக்களிடம் நான் அதனை மிகுந்த அன்புடனும் கௌரவத்துடனும் குறிப்பிடுகிறேன். அரசியல் சம்பந்தமாக மக்களில் பெரும்பாலானவர்கள் ஏற்கெனவே மேற்கொண்டுள்ள தீர்மானத்தை அவ்விதமே செயற்படுத்தி வரலாற்றில் முதல் தடவையாக மக்களின் ஜனாதிபதி என்ற வகையில் தோழர் அநுர குமார திசாநாயக்கவை நியமித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஊடகவியலாளர்களின் கேள்விக்கான பதில்
கேள்வி: மனுஷ நாணாயக்கார தொடர்பில் கடைப்பிடிக்கப்போகின்ற நடவடிக்கை என்ன?
பதில்: நாங்கள் ஏற்கெனவே பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனிலுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளோம். மனுஷ நாணாயக்காரவுக்கு எதிராக முறைப்பாடு செய்வோம். செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை செய்து வருகின்ற அனைத்து விதமான பொய் பிரச்சாரங்களுக்கும் சேறுபூசல்களுக்கும் எதிராக சட்டநடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
(-Colombo, August 30, 2024-) இன்று (30) முற்பகல் கொழும்பு விகாரமகாதேவி திறந்த வெளியரங்கில் இடம்பெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவை சங்கத்தினதும் தொழில்புரிகின்ற பட்டதாரிகள் சங்கத்தினாலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் இணைந்த சேவைகள் உத்தியோகத்தர்களின் தேசிய மாநாட்டில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார்.
(-Colombo, August 30, 2024-)
இன்று (30) முற்பகல் கொழும்பு விகாரமகாதேவி திறந்த வெளியரங்கில் இடம்பெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவை சங்கத்தினதும் தொழில்புரிகின்ற பட்டதாரிகள் சங்கத்தினாலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் இணைந்த சேவைகள் உத்தியோகத்தர்களின் தேசிய மாநாட்டில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார்.
(-Colombo, August 31, 2024-) தேசிய மக்கள் சக்தியின் தலைவர், ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க ஒரு தேசம் என்ற வகையில் இந்த சுற்றாடல் துறையை மையமாகக் கொண்ட மேலும் பல சட்டங்களால் இந்த துறை பாதுகாக்கப்பட்டு இருக்கிறது. அண்ணளவாக எடுத்துக்கொண்டால் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட சட்டங்களால் நேரடியாக சுற்றாடல் பாதுகாக்கப்பட்டு வருவதோடு, ஏனைய துறைகள் அமுலாக்கப்படும்போதும் சுற்றாடலை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாங்கள் இற்றைப்படுத்த வேண்டிய சட்டங்களை அவ்வாறு திருத்தியமைக்கலாம். ஐக்கிய நாடுகள் […]
(-Colombo, August 31, 2024-)
தேசிய மக்கள் சக்தியின் தலைவர், ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க
ஒரு தேசம் என்ற வகையில் இந்த சுற்றாடல் துறையை மையமாகக் கொண்ட மேலும் பல சட்டங்களால் இந்த துறை பாதுகாக்கப்பட்டு இருக்கிறது. அண்ணளவாக எடுத்துக்கொண்டால் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட சட்டங்களால் நேரடியாக சுற்றாடல் பாதுகாக்கப்பட்டு வருவதோடு, ஏனைய துறைகள் அமுலாக்கப்படும்போதும் சுற்றாடலை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாங்கள் இற்றைப்படுத்த வேண்டிய சட்டங்களை அவ்வாறு திருத்தியமைக்கலாம். ஐக்கிய நாடுகள் தாபனத்துடன் நாங்கள் சுற்றாடல் சம்பந்தமான பல்வேறு சமவாயங்களில் கைச்சாத்திட்டு இருக்கிறோம். எனவே, சர்வதேச ரீதியாகவும் நாங்கள் ஒருசில உடன்பாடுகளை செய்திருக்கிறோம். அதுமாத்திரமன்றி எங்களுடைய உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள ஒரு சில வழக்கு தீர்ப்புகளில் எமது சுற்றாடலை பாதுகாத்துக் கொள்வதற்கான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, கொள்கைகள், சட்டங்கள், சர்வதேச சமவாயங்கள் இவை அனைத்தும் எமக்கு இந்த சூழற்றொகுதியின் பாதுகாப்பினை உறுதி செய்கின்றன.
சட்டங்கள், சமவாயங்கள், வழக்குத் தீர்ப்புகளால் தரப்பட்டுள்ள காப்பீடு எந்தளவிற்கு பாதுகாக்கப்படுகிறது என்பது கேள்விக்குறியாகும்.
1998 இல் பொஸ்பேட் படிவு பற்றிய வழக்கு தீர்ப்பில் எமது நாட்டில் இருந்து பொஸ்பேட் ஏற்றுமதி செய்யப்படுவதை தடுப்பதற்காக வழி சமைத்து கொடுக்கப்பட்டது. ஆனால், நான் சுற்றிவளைத்து விற்க ஆரம்பித்தேன் என அமைச்சர் கூறினார். அதாவது, தற்போது இருக்கின்ற சட்டங்களின் ஓட்டைகளுக்குள் நுழைந்து அந்த வழக்குத் தீர்ப்பினை தவிர்த்து அதில் அகப்பட்டுக் கொள்ளாமல் நான் மீண்டும் அதனை தனியார் கம்பனியின் ஊடாக விற்பனை செய்வதில் வெற்றியடைந்தேன் என அமைச்சர் பாராளுமன்றத்தில் கூறினார். அதை அவர் ஒரு வெற்றியென கருதுகிறார். எனவே, இந்த சட்டங்கள், சமவாயங்கள், வழக்குத் தீர்ப்புகளால் தரப்பட்டுள்ள காப்பீடு எந்தளவிற்கு பாதுகாக்கப்படுகிறது என்பது கேள்விக்குறியாகும். அது எங்களுடைய அரசியல் அதிகாரத்துவத்தின் கையிலேயே இருக்கிறது. எனவே, அரசியல்வாதிகள் செயலாற்றுகின்ற விதம் மற்றும் சுற்றாடல் ஆர்வலர்கள் அதை நோக்குகின்ற விதம் என்பவற்றுக்கு இடையில் எமது நாட்டில் முரண்பாடு நிலவுகிறது. அதாவது, சுற்றாடலை பாதுகாப்பதற்கான பணியை சுற்றாடல் ஆர்வலர்கள் புரிந்து வருகின்ற அதேவேளையில் சுற்றாடல் நாசமாக்குகின்ற முன்னோடிப் பணியை அரசாங்கம் செய்வதால்தான் இந்த முரண்பாடு தோன்றுகிறது. எனவே, கடிதங்களை பார்த்தாலும், ஆர்ப்பாட்டங்களை பார்த்தாலும், தாக்கல் செய்த வழக்குகளை பார்த்தாலும் அவற்றில் பெரும்பாலானவை அரசாங்கத்திற்கு எதிரானவை ஆகும்.
சுற்றாடல் என்பது தொழிலையும் வாழ்க்கையையும் ஒருங்கிணைத்த துறையென நான் நினைக்கிறேன்.
எனவே, நான் ஏற்கெனவே குறிப்பிட்ட விடயங்களை கவனித்து பார்த்தால் அரசாங்கத்தின் செயற்பாடுகள் சுற்றாடலை பாதுகாக்க சார்பானவையா? எதிரானவையா? என்பதில் தான் இந்தப் பிரச்சினை தங்கியிருக்கிறது. முரண்பாடு இங்குதான் நிலவுகிறது. எனவே, எமது நாட்டில் எங்கேயாவது பாரியளவிலான மணல் கரைசேர்த்தல், சுற்றாடலை நாசமாக்கும் வகையில் சுரங்க அகழ்வு, அப்படியும் இல்லாவிட்டால் சுற்றாடலை அழிக்கின்ற கருத்திட்டங்கள், சுற்றாடலுக்கு கேடு விளைவிக்கும் கற்குழிகள் இவற்றை பற்றி கவனம் செலுத்தினால் இவற்றில் பெரும்பாலானவற்றிற்கு அரசியல் அதிகாரத்துடன் நேரடியான அல்லது மறைமுகமான தொடர்பு நிலவுகிறது. சற்று சிந்தித்து பாருங்கள், முத்துராஜவெல காணிகள் பற்றிய பிரச்சினையை. அதன் பின்னணியில் அரசியலும் பணத்தை ஈட்டிக்கொள்கின்ற நோக்கமுமே இருக்கின்றது. எனவே, நீங்கள் சுற்றாடலை பாதுகாக்க வேண்டும் என நினைத்துக்கொண்டு இருக்கையில் உங்களுக்கு எதிரானவர்களாக ஆட்சியாளர்களே செயலாற்றி வருகிறார்கள். நாங்கள் அரசியல்வாதிகள். நீங்கள் சுற்றாடல் துறை சார்ந்த சிறப்பறிஞர்கள். ஒரு சில தொழில்கள் இருக்கின்றன. அவர்களின் தொழில் ஒன்று, வாழ்க்கை இன்னொன்று. பொறியியலாளரை எடுத்துக்கொண்டால் அவரது தொழில் நிர்மாணத் தொழிற்றுறை. அவருடைய வாழ்க்கை அதைவிட வித்தியாசமாக நிலவுகிறது. ஆனால், சுற்றாடல் என்பது தொழிலையும் வாழ்க்கையையும் ஒருங்கிணைத்த துறையென நான் நினைக்கிறேன். அது அவர்களின் கல்வியின் ஒரு பகுதியோ, கடமையின் ஒரு பகுதியோ அல்லது சுற்றாடல் மீதான ஈடுபாடு பற்றியது மாத்திரமல்லாமல், தமது வாழ்க்கையுடன் கணிசமான தொடர்பினை கொண்டிருக்கிறது. ஆகவே, சுற்றாடல் ஆர்வலர்கள் ஈடுபட்டுள்ள பணிக்கும் அவர்களுடைய வாழ்க்கைக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு நிலவுகிறது. அதனால், ஒரு சிலர் உயிர் ஆபத்துக்களை எதிர்நோக்கி, அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்து, சில வேளைகளில் அவமதிப்புக்களை எதிர்நோக்கி தாக்குதல்களுக்கு இலக்காகி இதனை பாதுகாகத்துக் கொள்வதற்காக அரும்பணியாற்றி வருகிறார்கள். எனவே, எங்களுடைய வகிபாகம் என்ன? நாங்கள் அரசியல் தலைமைத்துவத்தை வழங்குகிறோம். அது எதற்காகவென்றால் சுற்றாடலை பாதுகாப்பதற்காக நீங்கள் எடுக்கின்ற முயற்சிக்கு உறுதுணையாக அமைவதற்காகும்.
இப்போது மிக அதிகமான தண்ணீர் கடைகள் அநுராதபுரத்தில் தான் இருக்கின்றன.
நாங்கள் எமது வாழ்நாள் பூராவிலும் அனுபவிக்கின்ற விடயங்கள் இருக்கின்றன. நீங்கள் அதனை சுற்றாடல் ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும் கற்று இருப்பீர்கள். என்னை எடுத்துக்கொண்டால், நான் அநுராதபுரத்தை சேர்ந்தவன். நாங்கள் சிறுபராயத்தில் காணிகளில் சிறிது ஆழத்திற்கு தோன்றினால் தண்ணீர் கிடைக்கும். ஆனால், இன்று அதைவிட பலமடங்குகள் தோண்டினாலும் தண்ணீர் கிடைக்காது. அதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டதென்பதை நாங்கள் உணர்கிறோம். அதை நாங்கள் இப்போது அனுபவித்து வருகிறோம். முன்னர் எங்களுடைய ஊர்களுக்கு அருகில் யானைகள் சஞ்சரித்தன. ஆனால், ஊருக்குள் நுழையவில்லை. இப்பொழுது நாங்கள் கேள்விப்படுகின்ற விடயம்தான் எங்களுடைய நகரங்களுக்கே யானைகள் வந்துவிட்டன. எனவே, ஏதோவொன்று நடந்துவிட்டதை நாங்கள் உணர்கிறோம். எமது வாழ்நாளில் அநுராதபுரத்தில் தண்ணீரை விற்பனை செய்யும் கடைகளைத் திறப்பார்கள் என நாங்கள் நினைக்கவில்லை. ஏனென்றால், நாங்கள் வக்கடையில் தண்ணீர் பருகியவர்கள். குளத்து நீரை நாங்கள் கைகளால் ஏந்திப் பருகியிருக்கிறோம். கிணறு வெட்டியும் தண்ணீர் குடித்திருக்கிறோம். அதனால், நாங்கள் எங்களுடைய வாழ்நாளில் அநுராதபுரத்தில் தண்ணீர் கடையை திறப்பார்கள் என நினைக்கவில்லை. இப்போது, மிக அதிகமான தண்ணீர் கடைகள் அநுராதபுரத்தில் தான் இருக்கின்றன.
எங்களுடைய எதிர்கால சந்ததியினர் இதைவிட பாரிய அனர்த்தங்களை எதிர்நோக்க வேண்டி நேரிடும்
அதைப்போலவே, மக்கள் பலவிதமான நோய்களுக்கு இலக்காகி வருகின்றார்கள். நாங்கள் கண்டிராத சிறுநீரகக் கோளாறு வியாபித்து வருகிறது. சுவாச நோய்களை எதிர்நோக்கி வருகிறார்கள். ஒரு வாரம் மழை பொழிந்தால் குளங்கள் கரைமேவிப் பாய்கின்றன. இரண்டு வாரம் வெய்யில் அடித்தால் குளங்கள் வற்றிப் போகின்றன. எனவே, இங்கு ஏதோவொரு பிரச்சினை ஏற்பட்டுள்ளதை நாங்கள் உணர்கிறோம். அதாவது, எங்கள் வாழ்நாளில் நாங்கள் கண்டிராத வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவுகள், பாரிய வரட்சி, மண்ணரிப்பு இவை எல்லாவற்றையும் இப்பொழுது நாங்கள் கண்டுகொண்டிருக்கிறோம். எனவே, இவை தொடர்பில் விஞ்ஞான ரீதியான முற்றாய்வுகளை செய்த அனுபவம் உங்களுக்கு இருக்கிறதென நாங்கள் நினைக்கிறோம். ஒட்டுமொத்தமாக நோக்கினால் இது எமது நாட்டில் சுற்றாடல் துறையில் ஏற்பட்டுள்ள மாபெரும் அழிவையே வெளிக்காட்டுகிறது. அதனை அனுபவிக்கின்ற தலைமுறையாக நாங்கள் மாறியிருக்கிறோம். எங்களுடைய எதிர்கால சந்ததியினர் இதைவிட பாரிய அனர்த்தங்களை எதிர்நோக்க வேண்டி நேரிடும். எனவே, ஒரு நல்லெண்ணம் கொண்ட தேவை எமக்கு இருக்கின்றது. நான் நினைக்கிறேன், இந்த நிலைமை 80ஆம் ஆண்டுக்குப் பின்னர்தான் துரிதமாகியதென. அந்தக் காலத்திலே 1977 தேர்தல் காலமென நினைக்கிறேன், அப்போது மஹிந்த சோம தேர்தலில் போட்டியிட்டார். ஹபரண வீதியில் மரத்தண்டுகளில் அந்தக் காலத்திலே “வளர்ந்த பின்னர் நாங்களும் மஹிந்த சோமவிற்கே” என காட்போர்டில் எழுதியொட்டி இருந்தார்கள். எனவே, ஹபரண காட்டினை அழித்தவர்கள் அவர்களே என்பது ஒரு பிரபல்யமான விடயமாகும்.
உங்களுடைய தேவையும் எங்களுடைய தேவையும் இணையாக பயணிக்கின்ற ஓர் அரசாங்கமே எமக்குத் தேவை.
எனவே, சுற்றாடலை பாதுகாத்து அதனை அனுபவித்த வாழ்க்கையை போன்றே அதனை அழித்ததன் பாதகவிளைவுகளை அனுபவிக்கின்ற வாழ்க்கையும் இப்போது எங்களுக்கு உரித்தாகியிருக்கிறது. இந்த மாற்றம் இரண்டு, மூன்று தசாப்தங்களில் ஏற்பட்டதென்றால் மேலும் சில தசாப்தங்கள் சென்றால் என்ன கதியேற்படும். எனவே, அரசியல் அதிகாரிகள் என்ற வகையில் எங்களுடைய அரசாங்கம் இந்த துறை பற்றி உங்களால் முன்வைக்கப்படுகின்ற திட்டங்களையும் அவசியப்பாடுகளையும் எங்களுடை தேவைகளாக கருதி இந்த சுற்றாடல் துறையில் ஏற்பட்டுள்ள அழிவை தடுத்து நிறுத்துவதற்கான எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். எனவே, எங்களுக்குத் தேவையான அரசாங்கம் முரண்பாட்டு அரசாங்கம் அல்ல. உங்களுடைய தேவையும் எங்களுடைய தேவையும் இணையாக பயணிக்கின்ற ஓர் அரசாங்கமாகும். இதற்கு முன்னர் அரச உத்தியோகத்தர்கள் என்ற வகையில் உங்களுக்கு உங்கள் கடமையை சரிவர ஆற்றமுடியாத நிலைமை இருந்தது. அரசியல் அதிகாரத்துவம் தன்னால் தயாரித்துக்கொள்ளப்பட்ட நிகழ்ச்சி நிரலை முன்னிலைப்படுத்துவதற்காக ஒன்றில் அரச அலுவலர்கள் அடிபணிய வேண்டும் அல்லது அதிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும். அதனால், பெரும்பாலான சுற்றாடல் துறையைச் சேர்ந்தவர்கள் சரிவர கடமையை ஆற்றமுடியாமல் அதிலிருந்து விலகிச் சென்றுள்ளார்கள். நாங்கள் உங்களுக்கு ஒரு உத்தரவாதம் அளிக்கிறோம். உங்களுடைய தேவையும் எங்களுடைய தேவையும் சமமாக பயணிக்கின்ற அரசாங்கத்தைத்தான் தேசிய மக்கள் சக்தி உருவாக்கும். அதுப்போலவே, எங்களுக்கு ஒரு சில துரித தேவைகள் அவசியமாகின்றன. தோழர் ரவீந்திர தொடர்படு அருவி முறைமை பற்றி சுட்டிக்காட்டினார். அரசியல்வாதிகள் உரத்த குரலில் அரசியல் மேடைகளில் அநுர திசாநாயக்க எத்தனை குளங்களை அமைத்தார் என கேட்கிறார்கள். நான் பண்டுகாபய மன்னன் அல்ல. எமது நாட்டிலே 32 ஆயிரம் குளங்கள் இருந்தன. தற்போது அதில் 14 ஆயிரம் குளங்களே எஞ்சியிருக்கின்றன. அதில் 12 ஆயிரம் குளங்கள் ஆபத்தினை எதிர்நோக்கியுள்ளன. எங்களுடைய முயற்சி எப்படிபட்டதாக அமைந்தது. ஆபத்தை எதிர்நோக்கியிருக்கின்ற இந்த குளத்தொகுதியை புனரமைப்பதாகும். இவை பலவிதமான அபாயங்களை எதிர்நோக்கியிருந்தன. ஒன்று, அவற்றின் நீரேந்து பரப்புகள் அழிவடைந்திருந்தமை. அதன் காரணமாக குளங்களில் வண்டல் நிரம்பியிருந்தன. குளக்கட்டு சிதைவடைந்திருந்தன. அணைக்கட்டின் மடை அழிவடைந்திருந்தன. வாய்க்கால் தொகுதி சீரழிந்திருந்தன. எனவே, எங்களுடைய முயற்சி குளங்களை கட்டுவதல்ல. இவர்களுக்கு விளங்கவில்லை. பாவம்! எத்தனை குளங்களை அமைத்தீர்கள் என கேட்கிறார்கள். இந்த சிறிய மற்றும் நடுத்தர அளவிளாக குளங்களை புனரமைப்பது எமது முயற்சியாக விளங்கியது. சிலவற்றை பழைய நிலைமைக்கே எங்களால் கொண்டுவர முடியதாது. ஏனென்றால், நீரேந்து பரப்பில் ஏற்படுத்திய அழிவுகளை இயல்புநிலைக்கு கொண்டுவர முடியாது. அந்தப் பிரச்சினையை நாங்கள் எதிர்நோக்கினோம். ஆனால், இயலுமான உச்ச அளவில் நாங்கள் இந்தக் குளங்களின் தொகுதியை புனரமைத்தேயாகவேண்டும்.
ஒட்டுமொத்த குளங்களின் தொகுதிக்கும் புத்துயிர் அளிப்பதே எமது நோக்கமாகும்.
எங்களுக்கு இரண்டு பருவங்களில் பருவ மழை கிடைக்கின்றது. இடைப்பட்ட காலத்திலும் மழை வீழ்ச்சி கிடைக்கிறது. எனவே, ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டால் எமது நாடு மிகச் சிறந்த மழைவீழ்ச்சியை கொண்ட நாடாகும். உலர் வலயத்தை எடுத்துக்கொண்டால் அங்குதான் மிக அதிகமான குளங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஏனென்றால், பருவகால மழைநீரை நாங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். மிக உயர்வான வெப்பநிலை நிலவுகிறது. எனவே, அவற்றில் சில தொடர்படு அருவி முறைமையாக விளங்கின. எனவே, அதுவொரு தனியான குளம் அல்ல. குளங்களின் தொகுதியாகும். நான் கமத்தொழில் அமைச்சராக இருந்த காலத்தில் மதவாச்சி தொகுதியில் நாங்கள் ஒரு தொடர்படு அருவி முறைமையையே மீண்டும் புனரமைத்தோம். அதாவது, தனியொரு குளத்தை அமைப்பதல்ல, ஒட்டுமொத்த குளங்களின் தொகுதிக்கும் புத்துயிர் அளிப்பதாகும். அதுதான் எங்களுடைய தேவையாக அமைந்தது. எனவே, அந்த துறைக்கு மீண்டும் புத்துயிர் அளிக்க வேண்டுமென நாங்கள் நம்புகிறோம். மழைநீரை சேமித்துக்கொள்ள வேண்டும். நீர்மட்டத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதற்கு எங்களுக்கு சிறிய மற்றும் நடுத்தர அளவிளான குளங்கள் மிகவும் முக்கியமானவையாகும்.
ஒருவருடத்திற்கு 470 யானைகள் என்பதை ஒரு குவியலாக எடுத்துக்கொண்டால் எப்படியிருக்கும்? அது வேதனை மிகுந்தது
அடுத்ததாக யானைக்கும் மனிதனுக்கும் இடையிலான மோதலை எடுத்துக்கொண்டால் 2023 ஆம் ஆண்டில் யானைகள் 139 பேரை கொன்றிருக்கின்றன. மனிதர்கள் 470 இற்கு கிட்டிய யானைகளை கொன்றிருக்கிறார்கள். எனவே, இந்த மோதல் ஒன்றிற்கு மூன்று என்ற விகிதத்திலேயே நிலவுகிறது. ஒருவருடத்திற்கு 470 யானைகள் என்பதை ஒரு குவியலாக எடுத்துக்கொண்டால் எப்படியிருக்கும்? நாங்கள் தனியாகத்தானே யானைகளை பார்க்கிறோம். ஆனால், 470 யானைகளை குவித்துப் பார்த்தால் அந்தக் காட்சியை எங்களால் தாங்கிக்கொள்ள முடியாது. இதனை நாங்கள் நிறுத்தியாக வேண்டும். எனவே, நாங்கள் இந்த யானைக் கடவைகளை மீள்நிறுவ வேண்டும். அவைகளின் சஞ்சரிப்பு மீது கவனம் செலுத்த வேண்டும். அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். துரிதமாக விஞ்ஞான ரீதியான யானை வேலிக்கு நாங்கள் செல்ல வேண்டும். நீண்டகால ரீதியாக அவற்றுக்கு தேவையான உணவை பெற்றுக்கொள்வதற்கான சூழற்றொகுதியை எவ்வாறு அமைத்துக்கொடுக்கப் போகிறோம். நீரைப் பெற்றுக்கொள்வதற்கான காட்டுக் குளங்கள் தொகுதியை காடுகளில் புனரமைக்க வேண்டும். ஆகவே, இந்த யானைக் கடவைகள் பற்றியும், காட்டுக்குளங்கள் பற்றியும் நாங்கள் மீளவும் கவனம் செலுத்தவேண்டும். மேலும் பல விடயங்கள் இதில் இருக்கின்றன. இயற்கையான தாவரங்களால் இதனை கட்டுப்படுத்த முடியுமா என நீண்டகால ரீதியில் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆனால், இது சம்பந்தமான முன்மொழிவுகள் எங்களிடம் இருந்தால் அதனை முன்வையுங்கள். அதுபற்றியும் நாங்கள் பரிசீலனை செய்யத் தயார்.
எமது நாட்டில் அண்ணளவாக ஒரு நாளுக்கு 7000 மெற்றிக் தொன் குப்பைகள் குவிகின்றன.
அடுத்தவிடயம், ஒரு நாளில் எமது நாட்டிலே பெருந்தொகையான குப்பைக் கூளங்கள் குவிகின்றன. அண்ணளவாக ஒரு நாளுக்கு 7000 மெற்றிக் தொன்கள். நாங்கள் கல்வி நிகழ்ச்சித் திட்டங்கள், மீள்பாவனை போன்ற திட்டங்களைத் தயாரித்தால் 7000 மெற்றிக் தொன் குப்பைக் கூளங்கள் ஒரு நாளில் குவிவதை கட்டுப்படுத்த முடியும். சரியான திட்டத்தை வகுத்தால் எங்களால் இதனை குறைத்துக்கொள்ள முடியும். சேர்கின்ற குப்பைகளின் கணிசமான பகுதியை மீள்சுழற்சி செய்ய முடியும். கனடாவில் இருக்கிறார், இலங்கையைச் சேர்ந்த ஒருவர். உங்களுக்குத் தெரியுமென் நினைக்கிறேன். நீண்ட தலைமயிரை வளர்த்துக்கொண்டு இருக்கிறார். சுதத் என்பது அவரது பெயர். அவர் கனடாவில் குப்பைக்கூள மீள்சுழற்சியில் மிகவும் உயர் மட்ட நிலையில் இருக்கிறார். நான் அவருடைய தொழிற்சாலைகளை பார்க்கப் போயிருக்கிறேன். அவர் தனது தொழில்நுட்பத்தையும் அறிவையும் எடுத்துக்கொண்டு இலங்கைக்கு வர தயார். அதாவது, கொலன்னாவ குப்பை மேடு தொடர்பானதாகும். நான் வந்தேன், ஆனால், ஒரு கம்பனியை உருவாக்கி கம்பனியில் நூற்றுக்கு ஐம்பது வீதமான பங்குகளை அவருக்குத் தருமாறு அமைச்சர் கூறினார். அதனால், நான் திரும்பிப் போனேன். நீங்கள் அரசாங்கத்தை அமைத்த நாளில் நான் பணத்தையும் எடுத்துக்கொண்டு, தொழில்நுட்பத்தையும் எடுத்துக்கொண்டு, அறிவையும் எடுத்துக்கொண்டு வருகிறேன். எனது பணத்திற்கு வட்டிக்கூட தேவையில்லை. உங்களுக்கு இயலுமான வரியை வருடந்தோறும் அந்த தொகையை எனக்கு மீளச்செலுத்துங்கள் என கூறினார். அவர்கள் வரத்தயார். எனவே, அரசியல் காரணமாகவே இவை தடைப்பட்டுள்ளன.
சுற்றாடலை பாதுகாப்பதில் பொது மக்களின் ஒத்துழைப்பு கட்டாயமாக கிடைக்க வேண்டும்
அடுத்ததாக, வெலிகம பக்கத்தில் கடற்கரை பிரதேசத்திலே நடந்தால் கால்களில் சொப்பின் பேக் சிக்கும். பெம்பஸ் சிக்கும். நான் கண்டிருக்கிறேன். ஏனென்றால், அவற்றை கடலில் எறிந்தால் அவை மீண்டும் கரையை வந்துசேரும். ரிவஸ்டன் பக்கத்திற்கு சென்று பார்த்தாலும் அப்படித்தான். பொலித்தீன் பைகள். பிளாஸ்டிக் போத்தல்கள் நிறைந்திருக்கும். ஆகவே, மக்களிடம் மனோபாவ ரீதியான மாற்றமும் சுற்றாடல் தொடர்பில் தேவை. ஒரு சட்டம் போட்டே எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முடியாது. சட்டங்கள் இருக்க வேண்டும். மரபுகள் நிலவ வேண்டும். சமூக விதிகள் நிலவ வேண்டும். அப்படித்தானே ஒரு சமூகம் நிலவவேண்டும். எனவே, சுற்றாடலை பாதுகாப்பதில் பொது மக்களின் ஒத்துழைப்பு கட்டாயமாக கிடைக்க வேண்டும். ஏனென்றால், பொது மக்களின் அன்றாட செயற்பாடுகள் சுற்றாடலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, இந்தப் பணியை வெற்றியீட்டச் செய்ய வேண்டுமானால், பொதுமக்களின் பாரிய ஒத்துழைப்பு தேவையென நாங்கள் நினைக்கிறோம். ஆகவே, உலகில் சுற்றாடல் ரீதியாக பல்வேறு வளங்களைக்கொண்ட ஒரு நாடு தான் இலங்கை. ஆனால், எங்களுடைய அரசியல் தலைவர்களால் அழிக்கப்பட்டு, அச்சுறுத்தலுக்கு இழக்காக்கப்பட்ட நாடாக மாறியிருக்கிறோம். எனவே, முதலாவது பணி இவற்றை நிறுத்துவது. அடுத்தது படிப்படியாக மீள்நிறுவுவது.
உங்களுடைய அறிவையும் எங்களுடைய தேவையையும் ஒன்றுசேர்த்து நாங்கள் சுற்றாடலை பேணுவோம்
இதற்கு முன்னர் ஒரு தேர்தலின்போது மஹிந்த ராஜபக்ஸ வெற்றிபெற்று மொனராகலையில் உரையாற்றியபோது, கடல்நீரை சுத்திகரித்து மொனராகலை மக்களுக்கு பருக கொடுப்பதற்கான கருத்திட்டமொன்றை ஆரம்பிப்பதாக கூறினார். நான் கேட்கிறேன், மொனராகல கடல் நீரை சுத்திகரித்து பருக வேண்டிய ஒரு பிரதேசமா? அது ஒரு சில உலக நாடுகளுக்கு ஏற்புடையதாகும். அவர்களே சுற்றாடல் மீது பாரிய சேதங்களை ஏற்படுத்தி அவர்களே அதிலிருந்து மீட்புப் பெறுதவற்கான வழிவகைகளையும் முன்வைக்கிறார்கள். அவை பாலைவனங்கள் இருக்கின்ற நாட்டுக்கான தீர்வுகள் ஆகும். எமது நாட்டுக்கு அவை பொருத்தமானவை அல்ல. எனவே, இதுதொடர்பான அறிவும் அனுபவமும் வாய்ந்தவர்களே நீங்கள். உங்களில் ஒரு சிலருக்கு அச்சுறுத்தல் நிலவுகிறது. என்னைவிட இதுபற்றிய அறிவுமிக்கவர்கள் நீங்களே. எனவே, உங்களுடைய அறிவையும் எங்களுடைய தேவையையும் ஒன்றுசேர்த்து நாங்கள் இதனை சாதிப்போம். அதற்காக அணித்திரள்வோம் எனக்கூறி விடைபெறுகிறேன். நன்றி!
(-Colombo, August 30, 2024-) இன்று (30) பிற்பகல் கொழும்பில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் திரு. Ajit Doval அவர்களை தேசிய மக்கள் சக்தியின் தலைவர், ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க சந்தித்தார். இரு நாடுகளுக்கும் இடையில் நிலவுகின்ற அரசியல் தொடர்புகள் மற்றும் ஜனாதிபதி தேர்தல் சார்ந்த அரசியல் நிலைமைகள் பற்றி இதன்போது கலந்துரையாடப்பட்டது. தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் விஜித ஹேரத்தும் இத்தருணத்தில் பங்கேற்றார்.
(-Colombo, August 30, 2024-)
இன்று (30) பிற்பகல் கொழும்பில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் திரு. Ajit Doval அவர்களை தேசிய மக்கள் சக்தியின் தலைவர், ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க சந்தித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையில் நிலவுகின்ற அரசியல் தொடர்புகள் மற்றும் ஜனாதிபதி தேர்தல் சார்ந்த அரசியல் நிலைமைகள் பற்றி இதன்போது கலந்துரையாடப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் விஜித ஹேரத்தும் இத்தருணத்தில் பங்கேற்றார்.
(-“நாடு அநுரவோடு” தேசிய மக்கள் சக்தியின் பெருவெற்றிக்கான கிண்ணியா கூட்டம் – 2024.08.28-) செப்டெம்பர் 21 ஆந் திகதி தேசிய மக்கள் சக்தியியின் அரசாங்கமொன்றை அமைத்துக்கொள்ள முடியும். சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள் அனைவரதும் நம்பிக்கையை வென்றெடுத்த அரசாங்கமொன்றே எமக்குத்தேவை. பெரும்பான்மை சிங்கள மக்களின் விருப்பத்துடன் மாத்திரம் அரசாங்கமொன்றை அமைத்துக்கொள்வதில் பலனில்லை. உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பு அவசியமாகும். கடந்த காலத்தில் எமது நாட்டில் இனவாத அரசியலே நிலவியது. தெற்கில் முற்றாகவே சிங்கள இனவாதமே வெற்றிபெறுகின்றது. அதற்கு மாறாக […]
(-“நாடு அநுரவோடு” தேசிய மக்கள் சக்தியின் பெருவெற்றிக்கான கிண்ணியா கூட்டம் – 2024.08.28-)
செப்டெம்பர் 21 ஆந் திகதி தேசிய மக்கள் சக்தியியின் அரசாங்கமொன்றை அமைத்துக்கொள்ள முடியும். சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள் அனைவரதும் நம்பிக்கையை வென்றெடுத்த அரசாங்கமொன்றே எமக்குத்தேவை. பெரும்பான்மை சிங்கள மக்களின் விருப்பத்துடன் மாத்திரம் அரசாங்கமொன்றை அமைத்துக்கொள்வதில் பலனில்லை. உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பு அவசியமாகும். கடந்த காலத்தில் எமது நாட்டில் இனவாத அரசியலே நிலவியது. தெற்கில் முற்றாகவே சிங்கள இனவாதமே வெற்றிபெறுகின்றது. அதற்கு மாறாக கிழக்கில் முஸ்லீம் இனவாதம் மேலோங்குகின்றது. அதைப்போலவே வடக்கிலும் தமிழ் இனவாதம் கட்டிவளர்க்கப்படுகின்றது. மக்கள் மத்தியில் இனவாதம் இல்லாவிட்டாலும் ஒரு இனவாதத்தால் மற்றுமொரு இனவாதத்தை கட்டிவளர்க்கக்கூடிய அரசியலை முன்னெடுத்துவர அரசியல்வாதிகள் முயற்சிசெய்தார்கள். 2019 இல் கோட்டாபய வெற்றிபெற்றமைக்கான பிரதான காரணம் இனவாதமாகும். 2015 இல் தோல்விகண்ட ராஜபக்ஷாக்கள் மீளவும் எழுச்சிபெற்றது ஊழல், மோசடி, ஜனநாயகம், தேசிய ஒற்றுமை போன்ற விடயங்களின் அடிப்படையிலல்ல. இவர்கள் அரச அனுசரணையுடன் முஸ்லீம் மக்களுக்கு எதிரான அரசியல் கருத்திட்டமொன்றை ஆரம்பித்தார்கள். மலட்டு கொத்து, மலட்டு உடைகள், மலட்டு மருத்துவர்களின் பின்னர் உயிர்த்தஞாயிறு தாக்குதலை நடாத்தினார்கள். 2019 ஏப்ரல் 19 ஆந் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட தினத்திலேயே கோட்டாபய வெற்றிபெறுவது உறுதியாயிற்று. அதற்கான காரணம் இனவாதமாகும்.
கொவிட் பெருந்தொற்றினால் மனிதர்கள் இறந்தால் ஏனைய நாடுகளில் நல்லடக்கம் மற்றும் தகனம்செய்தல் ஆகிய இரண்டையுமே மேற்கொண்டவேளையில் இலங்கை அரசாங்கம் மாத்திரம் தகனம் செய்யவேண்டுமென்ற முடிவினை எடுத்தது. இனவாதத்தின் அடிப்படையில் அமைக்கின்ற அரசாங்கம் இனவாதத்தின் அடிப்படையிலேயே செயலாற்றும். உங்கள் மார்க்க நம்பிக்கைக்கிணங்க உங்கள் உறவினரொருவர் இறந்தால் ஈமக்கிரியைகளை செய்யவேண்டியது உயிருடன் இருப்பவர்களின் பொறுப்பாகும். எனினும் அந்த நம்பிக்கைக்கு எதிராக தகனம் செய்யவேண்டியநிலை உங்களுக்கு ஏற்பட்டது. ஒருசிலர் அவர்களை தகனம்செய்யவேண்டி ஏற்படுமென அதனை மறைத்தார்கள். இனவாத அரசாங்கங்கள் இனவாதத்தின்படி நடந்துகொள்வதால் மேலும் வேதனைகள் அதிகரிக்கும். அதனால் இனவாதத்திற்கு கட்டுப்படாத இனவாதத்தை நிகழ்ச்சிநிரலில் கொண்டிராத அரசாங்கமொன்றை அமைத்திட வேண்டும். மொட்டு என்பது இனவாதத்தின் சேர்க்கையாகும். இப்போது அதன் ஒரு சிறுதுண்டு மகிந்தவுடனும் இருக்கிறது. 2019 இல் முஸ்லீம்களுக்கு எதிராக செயற்பட்ட எஞ்சிய பகுதி சஜித்துடனும் இருக்கிறது. முஸ்லீம் விரோத அரசாங்கத்தில் இருந்தவர்கள் தற்போது ரணில், சஜித், நாமலுடன் மூன்றாக பிரிந்து இருக்கிறார்கள். சஜித் பிரேமதாச கிழக்கிற்கு வரும்போது சம்பிக்க ரணவக்கவை ஒளித்துவைத்துவிட்டு ஹக்கீமோடு வருகிறார். ஆனால் தெற்கிற்கு போவது சம்பிக்கவுடனேயே. மாத்தறைக்கு ஹக்கீம் அல்லது ரிஷாட்டுடன் போவதில்லை. சம்பிக்க, திலங்க, கொடஹேவா போன்றவர்களுடனேயே அங்கு போகிறார். இது இரட்டைவேடமல்லவா? மகரகம இனவாத மேடையில் சம்பிக்கவும் திலங்கவும் ஒரே மேடையில் இருந்தார்கள். அவர்கள் இருவருமே தற்போது சஜித்தின் மேடையில். வரலாற்றில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இனவாத அரசியலை சுமந்துசென்றவர்கள் இப்போது மூன்றாகப் பிரிந்து உள்ளார்கள். வரலாற்றில் ஒருபோதுமே இனவாதத்தை தமது அரசியலுக்காக பாவித்திராத ஒரே இயக்கம் தேசிய மக்கள் சக்தி மாத்திரமாகும். நீங்கள் உண்மையாகவே இனவாதத்திற்கு எதிரானவர்களெனில் தேசிய மக்கள் சக்தியை மாத்திரமே தெரிவுசெய்துகொள்ள வேண்டும். இனவாதத்திற்கு எதிரானவர்களெனில் சஜித்திற்கோ ரணிலுக்கோ புள்ளடியிட வேண்டாம். இனவாதத்திற்கு எதிரான தேசிய ஒற்றுமைக்கான அரசாங்கம் தேவையென்றால் தேசிய மக்கள் சக்திக்கு மாத்திரமே புள்ளடியிட வேண்டும்.
முழுநாடுமே ஒரேவிதமாக பயணிக்கையில் கிழக்கு மாத்திரம் வித்தியாசமான பாதையில் போகுமா?
தெற்கின் பெரும்பான்மை சிங்கள மக்கள் திசைகாட்டியுடனேயே இருக்கிறார்கள். தெற்கு. சபரகமுவ, மேற்கு, வடமத்திய, மத்திய, வடமேல் ஆகிய எல்லா மாகாணங்களிலும் பெரும்பான்மை மக்கள் எங்களைச் சுற்றியே இருக்கிறார்கள். அவர்கள் எங்களிடம் கேட்பது “தோழர் கிழக்கு என்னவாகும்” என்று. முழுநாடுமே ஒரேவிதமாக பயணிக்கையில் கிழக்கு மாத்திரம் வித்தியாசமான பாதையில் போகுமா? இந்த தடவை தேசிய மக்கள் சக்தியை தெரிவுசெய்து கொள்ளுமாறு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். நடைபெறப்போவது ஜனாதிபதி தேர்தலாகும். இப்போது தேசிய மக்கள் சக்திக்கு வாக்குகளை அளித்து பொதுத்தேர்தல் வந்ததும் உங்கள் பிரதேசத்திற்கு அவசியமான உறுப்பினர்களைத் தெரிவுசெய்து கொள்ளுங்கள். ஆனால் அவ்வாறு தெரிவுசெய்யும்போதும் சரியானவரைத் தெரிவுசெய்யுங்கள். 2019 இல் முஸ்லீம் காங்கிரசிற்கு புள்ளடியிட்டு தௌபிக்கை பாராளுமன்றம் அனுப்பினீர்கள். பைசர் காசீமை பாராளுமன்றம் அனுப்பினீர்கள். அவர்கள் கோட்டாபயவை தோற்கடிப்பதற்காக வாக்கு கேட்டவர்கள். கோட்டாபயவின் அதிகாரங்களை அதிகரிப்பதற்காகவே அரசியலமைப்பிற்கான இருபதாம் திருத்தம் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டது. நீங்கள் கோட்டாபயவிற்கு எதிராக வாக்குகளை அளித்தாலும் அவர்கள் பாராளுமன்றம்போய் கோட்டாயவின் அதிகாரங்களை அதிகரிப்பதற்காக வாக்களித்தார்கள். ஜனாதிபதி தேர்தலில் எங்களுக்கு வாக்களித்து இறந்தகாலம் பற்றி சிந்தித்துப்பார்த்து பாராளுமன்றத் தேர்தலில் நீங்கள் விரும்புகின்ற தலைவருக்கு வாக்களியுங்கள். ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்களிடம் கொள்கைகள் கிடையாது, விடயங்கள் கிடையாது, அதனால் சேறு பூசிக்கொண்டு, குறைகளைக் கூறிக்கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் சிங்களப் பிரதேசங்களுக்குச் சென்று வந்தால் பெரஹெராவை நிறுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். நாங்கள் வந்ததும் தானம் வழங்குவதை நிறுத்திவிடுவதாக ஒருசில பிக்குமார்கள் கூறுகிறார்கள். சிங்கள மக்களிடம் அவ்வாறுகூறி முஸ்லீம் பிரதேசங்களுக்கு வந்ததும் “எங்கள் அரசாங்கத்தின்கீழ் நீங்கள் ஐந்துவேளை தொழுவதை நிறுத்துவதாக” கூறுகிறார்கள். வர்த்தகம் செய்ய இடமளிக்கமாட்டோமெனக் கூறுகிறார்கள். தாடி வளர்க்க இடமளிக்கமாட்டோமெனக் கூறுகிறார்கள்.
தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புகின்ற அரசாங்கமொன்றை நாங்கள் உருவாக்குவோம்.
இவ்வாறான குறைகூறல்கள், பொய்யான, திரிபுபடுத்திய தகவல்களை பரப்பி வருகிறார்கள். ஹக்கீம் அதைப்போன்ற ஒரு கதையைக் கூறினார். “முஸ்லீம் தாய்மார்களின் கருப்பையிலிருந்து பயங்கரவாதம் உருவாகியது” என நான் கூறினோமாம். சதாகாலமும் இனவாதம் என்கின்ற கருப்பையிலேயே வன்முறை உருவாகிறது என நான் கூறுகிறேன். சிங்கள இனவாதம் என்கின்ற கருப்பையில் வன்முறை தோன்றுகிறது. முஸ்லீம் இனவாதம் என்கின்ற கருப்பையில் முஸ்லீம் வன்முறை தோன்றுகிறது. தமிழ் இனவாதம் என்கின்ற கருப்பையில் தமிழ் வன்முறை உருவாகிறது. நான் இவ்வாறு கூறும்போது முஸ்லீம் தாய்மார்களின் கருப்பையில் பயங்கரவாதம் தோன்றியதாக நான் கூறினேன் என ஹக்கீம் கூறுகிறார். நான் சிங்களத்தில் கூறியது ஹக்கீமிற்கு விளங்கவில்லையா என்று தெரியாது. எனவே நான் கூறிய கூற்றினை சரியாக கூறும்படி நான் கூறினேன். அவ்வாறு கூறாவிட்டால் வழக்குப் போடுவேன் என. சரிசெய்யவில்லை என்பதால் வழக்குப்போட்டேன். எமது நாட்டு அரசியல் மேடைகளில் இனிமேலும் இனவாத கோஷங்களை எழுப்ப இடமளிக்கக்கூடாது. தேசிய மக்கள் சக்தியின் மேடையிலும் வேறு எந்த இடத்திலும் இனவாதக் கூற்றுகளை விடுக்க எமது அரசாங்கம் இடமளிக்க மாட்டாது. அவ்விதமாக தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புகின்ற அரசாங்கமொன்றை நாங்கள் உருவாக்குவோம்.
நீங்கள் திருட்டுகளுக்கு எதிரானவர்கள் என்றால் தேசிய மக்கள் சக்திக்கே வாக்களிக்கவேண்டும்.
அதைப்போலவே திருட்டுகளை நிறுத்தி இந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். திருட்டினை நிறுத்தினால் நீண்டகாலம் தாக்குப்பிடிக்கக்கூடிய வீதிகளை அமைக்கலாம். கடந்த காலத்தில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்ஜெக்ஷன் எனக்கூறி எமது நாட்டுக்குகொண்டுவந்த தண்ணீரை நோயாளிகளுக்கு ஏற்றினார்கள். இவ்வாறான திருட்டு, ஊழல், விரயத்தை தடுத்துநிறுத்துகின்ற அரசாங்கமொன்றை அமைத்திடவேண்டும். சஜித்தால் அவ்வாறான அரசாங்கமொன்றை அமைக்க முடியுமா? திருட்டுகளை நிறுத்துவதற்காக சஜித்திற்கு புள்ளடியிடுவதில் பலனில்லை. ரணிலுக்கு புள்ளிடியிடுவதாலும் பலனில்லை. இவ்வளவு திருடியிருக்கும்போது வாக்குகளை அளித்தால் அவர்கள் திருடினால் பரவாயில்லை என்று நினைப்பார்கள். எனவே நீங்கள் திருட்டுகளுக்கு எதிரானவர்கள் என்றால் தேசிய மக்கள் சக்திக்கே வாக்களிக்கவேண்டும்.
உங்களால் திருட்டினை நிறுத்தமுடியாமல் திருடுகின்ற ஒருவருக்கு வாக்குகளை அளித்தால் அது ஹராம்.
திருட்டுகளை நிறுத்திவிடுவது மாத்திரம் போதுமானதாக அமையமாட்டாது. திருடியவர்கள் தண்டிக்கப்படவும் வேண்டும். திருடர்களை பிடித்து கோல்பேஸ் மைதானத்திற்கு கொண்டுவந்து தோலை உரிப்பதாக 1994 இல் சந்திரிக்கா கூறினார். விஜேபால மெண்டிஸ் அரசாங்கத்தின் தென்னந்தோட்டங்களை கள்ளத்தனமாக எழுதிக்கொண்டமைக்காக தண்டனை வழங்குவதாகக் கூறினார். இரண்டு மூன்று வருடங்கள் கழிந்ததும் அவருக்கு அமைச்சர் பதவியைக் கொடுத்தார். 2015 இல் எயார்போர்ட்டை மூடுவதாக மைத்திரிபால சிறிசேன கூறினார். மூன்று வருடங்கள் கழியும்போது மைத்திரிபால சிறிசேன மகிந்த ராஜபக்ஷவிற்கு சட்டவிரோதமாக பிரதமர் பதவியைக் கொடுத்தார். மத்திய வங்கியை உடைத்த ரணில் விக்கிரமசிங்கவை சிறையில் அடைப்பதாக 2019 இல் கோட்டாபயவின் மேடையில் கூறினார்கள். அதற்காக நீங்கள் புள்ளடியிட்டாலும் இரண்டு மூன்று வருடங்களாகும்போது ஜனாதிபதி பதவியைக் கொடுத்தார்கள். அதனால் கள்வர்களைத் தண்டிப்பதற்கான அரசாங்மொன்றை அமைக்கவேண்டும். அதற்காக ரணிலுக்கு சஜித்திற்கு வாக்களிப்பதில் பயனில்லை. உங்களின் மார்க்கத்தின்படி உங்களால் திருட்டினை நிறுத்த முடியாவிட்டால் அதனை செய்யக்கூடிய ஒருவருக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென கூறப்படுகின்றது. பாராளுமன்றத்தில் இருந்த ஒரு முஸ்லீம் அமைச்சர்தான் என்னிடம் அவ்வாறு கூறினார். அவர் அமைச்சரவையில் இருந்தவேளையில் ஒருசில அமைச்சரவைப் பத்திரங்களை என்னிடம் கொடுத்தார். “தோழரே என்னால் திருட்டுகளை நிறுத்தமுடியாது. அதனால் நிறுத்தக்கடிய ஒருவருக்கு உதவி பரிய வேண்டுமென எங்களுடைய மார்க்கம் போதித்துள்ளது. அதனால் இந்த பத்திரங்களை நான் உங்களிடம் கொடுக்கிறேன்” என்று கூறினார். உங்களால் திருட்டினை நிறுத்தமுடியாமல் திருடுகின்ற ஒருவருக்கு வாக்குகளை அளித்தால் அது ஹராம். அப்படியானால் திருட்டுகளை நிறுத்துவதற்காக தேசிய மக்கள் மக்கள் சக்திக்கு வாக்குகளை அளிக்கவேண்டும். அதுதான் ஹலால். உங்கள் மார்க்கத்தின்படி பார்த்தாலும் இத்தடவை தேசிய மக்கள் சக்திக்கே புள்ளடியிட வேண்டும். திருட்டுகளை நிறுத்துவது மாத்திரமல்ல, திருடியவர்களுக்கு தண்டனை வழங்குவது மாத்திரமல்ல, திருடிய சொத்துக்களையும் பறிமுதல் செய்வோம்.
நானோ எமது உயர்பீடத்தில் இருப்பவர்களோ தொழில்முயற்சிகளில் ஈடுபடப்போவதில்லை
நாங்கள் வாக்குகளைக் கோருவது அதற்காகவே. அதுமாத்திரம் போதுமானதாக அமையமாட்டாது. நாட்டின் பொருளாதாரத்தையும் சீராக்க வேண்டும். நானோ எமது உயர்பீடத்தில் இருப்பவர்களோ தொழில்முயற்சிகளில் ஈடுபடப்போவதில்லை. அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே பார் லயிஷன் கொடுக்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்க அண்மையில் அவரது சகாக்களுக்கும் சஜித்தை சேர்ந்தவர்களுக்கும் பார் லயிஷன் பகிர்ந்தளித்தார். அதைப்போலவே பெற்றோல் ஷெட் பகிர்ந்தளித்தார். இரத்தினபுரியில் இரத்தினக்கல் சுரங்கங்களை அகழ்பவர்கள் அரசியல்வாதிகளே. மணல் பேர்மிற் வாங்குபவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களே. கிழக்கின் கடற்கரைப் பரப்பில் ஹோட்டல் அமைப்பவர்களும், கற்குழிகளை பேணிவருபவர்களும் அரசியல்வாதிகளே. நாங்கள் அவற்றைப் புரிவதற்காக வரப்போவதில்லை. இந்த நாட்டில் தொழில்முயற்சிகளில் ஈடுபடவேண்டியவர்கள் நீங்களே. அவற்றை முன்னேற்றுவதற்கான உதவிகளை செய்வதையே எமது அரசாங்கம் செய்யும். உங்களுக்கு சுற்றுலா ஹோட்டலை அமைக்க வேண்டுமானால் காணியை அரசாங்கம் வழங்கும். எமக்கு ஒரு கிளாஸ் தண்ணீர்கூட வேண்டாம். ஆனால் உரிய காலத்தில் ஹோட்டலை நிர்மாணிக்காவிட்டால், அதனை கையகப்படுத்தி இயலுமான ஒருவரிம் கையளிப்போம். அது நல்லதல்லவா? இந்த நாட்டில் மாத்திரம் பிஸ்னஸ் செய்தால் போதாது. உலகச் சந்தைக்கும் எமது தொழில்முயற்சிகளை கொண்டுசெல்ல வேண்டும். அவ்விதமாக கைத்தொழில்களையும் தொழில்முயற்சிகளயும் விருத்திசெய்து அரசாங்கம் வரி அறவிடும். அவ்விதமாக அறவிட்ட வரித்தொகைககள் எவ்வாறு ஈடுபடுத்தப்பட்டன என்பதை பற்றிய செய்தியை போஃனுக்கு எஸ்.எம்.எஸ். மூலமாக அறிவிக்கின்ற சிஷ்ஸ்டமொன்றை ஒரிரு வருடங்களில் கட்டியழுப்புவோம். கல்விக்காக, சுகாதாரத்திற்காக, பாதுகாப்பிற்காக, வீதிகளை அமைப்பதற்காக ஈடுபடுத்திய விதத்தை விபரங்களுடன் முன்வைப்போம். தேசிய ஒற்றுமையை உருவாக்குகின்ற, திருட்டுகளை நிறுத்துகின்ற, வெளிப்படைத்தன்மையுடன் செயலாற்றுகின்ற அரசாங்கமொன்றை கட்டியெழுப்புவதற்கான தொடக்கத் திகதி அடுத்த 21 ஆந் திகதியாகும்.
ஊரிலுள்ள வாக்குப்பெட்டிகளை திசைகாட்டிக்கு புள்ளியிட்ட வாக்குளால் நிரப்பவேண்டியது நீங்கள்தான்
நீங்கள் 21 அந் திகதி தெரிவு செய்வது புதிய அரசாங்கத்தையா? பழைய பாதையிலேயே போகப்போகிறீர்களா? எம்மால் விடயங்களை தெளிவுபடுத்த மாத்திரமே முடியும். எனினும் ஊரிலுள்ள வாக்குப்பெட்டிகளை திசைகாட்டிக்கு புள்ளியிட்ட வாக்குளால் நிரப்பவேண்டியது நீங்கள்தான். பழைய முஸ்லீம் கட்சிகள் பதற்றமடைந்துள்ளன. பெருமளவிலான இளம் முஸ்லீம் சமுதாயத்தினர் தேசிய மக்கள் சக்தியின் பெருவெற்றிக்காக செயலாற்றுவதால் அவர்கள் கலவரமடைந்திருக்கிறார்கள். இந்த மேடை இந்த புதிய இளைஞர்களால் நிரம்பியுள்ளது. அவர்கள் ஊருக்குப்போய் முதியர்களுடன் பேசுவார்கள். முகநூலில் எழுதுவார்கள், முச்சக்கரவண்டியை ஓட்டும்போது பேசுவார்கள். கடைக்கு வந்தால் பேசுவார்கள். அதனால் அந்த வாய்ப்பினை கைநழுவ விடவேண்டாம். நாட்டை வறுமையாக்கிய திருடர்களை விரட்டியடிக்க உகந்த தருணம் இதுவே. நாட்டை வளமாக்குகின்ற அரசாங்கமொன்றை அமைக்ககூடிய தருணம் இதுவே. அதோ அதற்காக எல்லோருடனும் பேசுங்கள். 21 ஆந் திகதி கிண்ணியா பிரதேசத்தின் வாக்குப்பெட்டிகளை திசைகாட்டிக்கான வாக்குகளால் நிரப்புவோம்.
(-பெருவெற்றிக்கான கந்தளாய் கூட்டம் – 28.08.2024-) நீங்கள் நீண்டகாலமாக வாக்களித்து வந்திருக்கிறீர்கள். ஆனால், இந்த தேர்தல்தான் தேர்தல் தினம் வரும்வரை மக்கள் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கின்ற தேர்தல். முன்பெல்லாம் தேர்தல் என்றால் வேட்பாளரின் கட்சியை சேர்ந்தவர்கள் அழைப்பார்கள், சப்பாடு, சாராயம், பணம் போன்றவற்றை கொடுப்பார்கள். அம்மாவுக்கு சில் புடவைகளை கொடுப்பார்கள். அப்பாவுக்கு சாராய போத்தல் கிடைக்கும். இது எல்லாமே வாக்காளர்களுக்கு கொடுக்கும் இலஞ்சம் ஆகும். ஆனால், இது மக்கள் முதல் தடவையாக சுயமாக முன்வந்து தேசிய மக்கள் […]
(-பெருவெற்றிக்கான கந்தளாய் கூட்டம் – 28.08.2024-)
நீங்கள் நீண்டகாலமாக வாக்களித்து வந்திருக்கிறீர்கள். ஆனால், இந்த தேர்தல்தான் தேர்தல் தினம் வரும்வரை மக்கள் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கின்ற தேர்தல். முன்பெல்லாம் தேர்தல் என்றால் வேட்பாளரின் கட்சியை சேர்ந்தவர்கள் அழைப்பார்கள், சப்பாடு, சாராயம், பணம் போன்றவற்றை கொடுப்பார்கள். அம்மாவுக்கு சில் புடவைகளை கொடுப்பார்கள். அப்பாவுக்கு சாராய போத்தல் கிடைக்கும். இது எல்லாமே வாக்காளர்களுக்கு கொடுக்கும் இலஞ்சம் ஆகும். ஆனால், இது மக்கள் முதல் தடவையாக சுயமாக முன்வந்து தேசிய மக்கள் சக்தியை வெற்றியீட்டச் செய்விப்பதற்காக உழைக்கின்ற தேர்தலாகும். கடைகள், முச்சக்கர வண்டிகள், சமூக வலைத்தளங்கள் எல்லாமே திசைகாட்டியின் சார்பில் தோற்றி வருகின்றன. நாங்கள் அவர்களை ஒருபோதுமே சந்தித்ததில்லை. மக்கள் மத்தியில் வளர்ந்துவரும் இந்த எழுச்சியை ரணிலுக்கோ, சஜித்துக்கோ என்ன செய்தாலும் தடுத்து நிறுத்த முடியாது.
இத்தடவை தேர்தலில் ஊழலுக்கு இடமில்லை
ஆனால், ரணில் விக்ரமசிங்க இறுதி நேரத்தில் ஏதாவது திருகுதாளம் போடுவார் என மக்கள் மத்தியில் ஒரு ஐயப்பாடு நிலவுகிறது. தேர்தலில் ஊழல்களை நடாத்த தேர்தல் பணியாளர்களின் உதவி தேவை. ஆனால், அரச அலுவலர்கள் எல்லோரும் திசைகாட்டிக்கே சார்பானவர்கள். எனவே, அந்த அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க உதவ மாட்டார்கள். அடுத்ததாக, அதுபோன்ற விசமத்தனமான வேலைகளை செய்ய பொலிசாரின் ஒத்துழைப்பு அவசியம். பொலிசாரும் ஒத்துழைக்க மாட்டார்கள். அவர்கள் வந்து இந்தக் கூட்டங்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறார்கள். அது அவர்களின் கடமை. ஆனால், அவர்கள் செயலாற்றுகின்ற விதத்தை பார்த்தால் அவர்கள் ஒரே மூச்சுடன் திசைகாட்டியின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பது தெளிவாகின்றது. அடுத்ததாக, இராணுவத்தினரின் ஒத்துழைப்பு தேவை. இராணுவத்தை பற்றி நினைத்துப்பார்க்க கூட ரணிலுக்கு முடியாது. அவர்களின் ஒத்துழைப்பும் தேசிய மக்கள் சக்திக்கே. எனவே, மக்களின் இந்த எதிர்பார்ப்பு மிகுந்த பயணத்தை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. எங்களுக்குத் தேவை சாதாரண வெற்றியல்ல. பலம்பொருந்திய வெற்றியாகும். எனவே, நாங்கள் உங்களிடம் வேண்டுகோள் விடுப்பது செப்டெம்பர் 21 ஆம் திகதி வரை வெற்றிக்காக உழைப்பது மாத்திரமல்ல, அதன்பின்னர் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காக அயராது உழைக்க அர்ப்பணிப்புடன் முன்வர வேண்டும்.
தேர்தல் வெற்றியின் பின்னர் பழிவாங்கலுக்கு களம் அமைத்திட மாட்டோம்.
செப்டெம்பர் 21 ஆம் திகதிக்கு பின்னர் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத ஏனைய கட்சியை சேர்ந்தவர்களை எந்தவிதத்திலும் நோகடிக்க வேண்டாம். அந்த அரசியல் கலாசாரம்தான் எமக்கு தேவை. நாங்கள் பிரிந்து சண்டை போட்டுக்கொள்ள வேண்டுமா? ஊர் பிளவுபட்டால் கூத்தாடிக்குத்தான் கொண்டாட்டம் என்பார்கள். அவர்கள் தேர்தலுக்குப் பின் ஏனைய தரப்பினரை தாக்கினார்கள், கொடுமைப்படுத்தினார்கள். இறுதியில் மஹிந்தவும் ரணிலும் ஒன்றுசேர்ந்து அரசாங்கத்தை அமைத்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு இடையில் கோபதாபங்கள் இருக்கவில்லை. மஹிந்த ராஜபக்ஸ, சஜித் பிரேமதாசவின் தங்கையை முன்னாள் ஜனாதிபதியின் மகள் என்பதற்காக கள்ளப்பணம் சம்மந்தமான பிரச்சினையில் இருந்து விடுவித்தார். ரணில் விக்ரமசிங்க ஷிரந்தி ராஜபக்ஸவை 350 இலட்சம் ரூபாவை கொடுத்து டொரின்டனில் ஒரு வீடு வாங்கிய வேளையில் பணம் எங்கே இருந்து வந்தது என்ற விசாரணை மேற்கொள்ளப்பட்ட வேளையில் அவரிடமிருந்து வாக்குமூலம் பெறக்கூடாது என தீர்மானித்தார். அவர்கள் அப்படித்தான்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் கள்வர்கள் தண்டிக்கப்படுவார்கள்
திருடியிருந்தால், மோசடி செய்திருந்தால் செப். 22 ஆம் திகதிக்கு பின்னர் கட்டாயமாக அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்குவோம். அது ஒரு பழிவாங்கல் அல்ல. தற்போது வைத்தியசாலையில் மருந்து கிடையாது, பிள்ளைக்கு உணவு கிடையாது, கல்வி கற்பதற்கான வசதி கிடையாது. அதற்கான காரணம் என்ன? பொதுப்பணத்தை இவர்கள் கோடிக்கணக்கில் கபளீகரம் செய்துவிட்டார்கள். எனவே, அது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமல்லவா? எங்களுடைய அயல்நாடான இந்தியாவை பாருங்கள். 80இன் பின்பகுதியில் இந்திய அமைதிப்படை வந்ததல்லவா உங்களுடைய பிரதேசத்திற்கு? அவர்கள் கடைக்குப்போய் சவர்க்காரத்தை சேகரித்தார்கள். சாப்பிடுவதற்காகவா? இல்லை. ஏனென்றால், அந்தக் காலத்திலே ஒரு சில பிரதேசங்களில் அந்த சவர்க்காரம் இல்லை. அவர்கள் விடுமுறைக்கு போகும்போது அவற்றை எடுத்துச் செல்வார்கள். தேங்காய் எண்ணெயும் அப்படித்தான். மல்வத்த அனுநாயக்க தேரர் என்னிடம் கூறினார், அந்தக் காலத்தில் இந்தியாவுக்கு ஒரு குடையை எடுத்துச் சென்றாலும் அதை வாங்கிக் கொள்வார்களாம். அந்த இந்தியா இப்பொழுது எந்த நிலையில் இருக்கிறது. சந்திரனுக்கு போகிறது. இந்த பிராந்தியத்துக்கு மருந்து வகைகளை, துணிமணிகளை, பைசிக்களை, முச்சக்கர வண்டிகளை, மோட்டார் வாகனங்களை, விதையினங்களை, உணவுப் பொருட்களை வழங்குகின்ற நாடாக இப்போது மாறியிருக்கிறது. அந்த தலைவர்களுக்கு இந்தியாவை எவ்வாறு உற்பத்தியில் உயர்ந்த இடத்திற்கு கொண்டுவர வேண்டும் என்ற தூரநோக்கு இருந்தது.
உற்பத்தி செய்து நாட்டை வளமுடையதாக்க வேண்டும் என்றால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அமைத்துக்கொள்ளுங்கள்.
எங்கள் ஆட்சியாளர்கள் கந்தளாய் சீனி ஆலையை மூடினார்கள். வாழைச்சேனை கடதாசி ஆலையை மூடினார்கள். பால்மா தொழிற்சாலையை மூடினார்கள். துல்ஹிரிய, மத்தேகொட, பூகொட நெசவாலைகளை மூடிவிட்டார்கள். உங்களுடைய ஊரில் இருந்த கைத்தறி நெசவாலைகள் எங்கே? அதற்குப் பதிலாக Buying and Selling பொருளாதாரமொன்றை உருவாக்கியுள்ளார்கள். இந்தியா உற்பத்தி செய்கிறது. நாங்கள் விலைக்கு வாங்குகிறோம். இந்தியா முட்டை உற்பத்தி செய்கிறது. நாங்கள் முட்டை வாங்கி பொரிக்கிறோம். இந்தியா உற்பத்திக்கு உயிர் கொடுத்ததால்தான் முன்னேற்றம் அடைந்தது. எமது நாட்டில் உற்பத்தி சீரழிக்கப்பட்டது. ஏனென்றால், இறக்குமதி செய்தால் சட்டை பைகள் நிறைகின்றன. சீனி வரி மோசடி ஞாபகமிருக்கிறதா? 1500 கோடி ரூபாய் வரி மோசடி. ஒரு கப்பல் நிறைய பசளை கொண்டுவந்தார்கள் ஞாபகம் இருக்கிறதா? அதில் ஒரு மூடையைக் கூட தரையிறக்கவில்லை. 60 இலட்சம் டொலரை செலுத்தினார்கள். அதாவது, 1800 மில்லின் ரூபாய். இந்தியாவில் இருந்து நெனோ உரத்தை கொண்டுவந்தார்கள். அதனை வயலுக்கு போட்டால் குண்டு வெடிப்பதை போல விளைச்சல் கிடைப்பதாக கூறினார்கள். இப்பொழுது மறுக்கிறார்கள். அவர்களுக்கு இந்த பொருளாதாரத்தை சீராக்க வேண்டுமென்ற உண்மையாக தேவை இருக்கவில்லை. நாடு வறுமைபட்டது. ஆனால், ஆட்சியாளர்கள் தனவந்தர் ஆகினார்கள். மஹிந்த வறியவரா? ரணில் வறியவரா? நாட்டின் உற்பத்தி அதிகரித்தால் அவர்களுக்கு கொமிசன் கிடைக்காது. ஆகவே, இந்த பொருளாதார பயணத்தை முழுமையாக திசைத்திருப்புகின்ற தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தை நாங்கள் அமைப்போம். வெங்காயம், மிளகாய் அங்கிருந்து கொண்டுவந்து சாப்பிட வேண்டுமென்றால், ரணிலின் அரசாங்கத்தை அமைத்துக்கொள்ளுங்கள். ஆனால், இந்த நாட்டில் உற்பத்தி செய்து நாட்டை வளமுடையதாக்க வேண்டும் என்றால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அமைத்துக்கொள்ளுங்கள்.
கிராமங்களில் வறுமை தாண்டவமாடுகின்றது
எமது ஊர்களில் வறுமை தாண்டவமாடுகிறது. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. பெற்றோர்கள் வறியவர்கள். அதனால் பிள்ளைகளும் வறியவர்கள். அதாவது, பரம்பரை வறுமையாகும். மற்றுமொரு வறுமை இருக்கிறது. நல்ல பயிர்ச்செய்கை இருந்தது. நல்லவொரு கடை இருந்தது. திடீரென பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. வயலுக்கு சேதமேற்பட்டது. வருமானத்தை இழந்தார்கள். கடனை மீளச் செலுத்த முடியவில்லை. அதனால், வறுமைபட்டார்கள். வீட்டில் வருமானத்தை ஈட்டுகின்ற கணவர் இருக்கின்றார். பிள்ளை இருக்கிறது. திடீர் அனர்த்தம் ஏற்பட்டு வருமான வழிவகை தடைப்படுகிறது. அதனால், வறுமையடைகிறார்கள். அதனால், எங்களுடைய கிராமப்புற மக்கள் வறுமை நிலையில் இருக்கிறார்கள். கழுத்தில் போட்டிருந்தா தங்கச்சங்கிலி எங்கே? வங்கியில். திருமண மோதிரம் எங்கே? வங்கியில். வங்கியைத்தான் திருமணம் முடித்தீர்களா? சின்னவனுக்கு கழுத்தில் போட்ட பஞ்சாயுதம் எங்கே? வங்கியில். கையில் போட்ட வளையல் எங்கே? வங்கியில். அதுதான் வறுமை.
தேசிய மக்கள் சக்தி கல்விக்கே முன்னுரிமை அளிக்கும்
எனவே, எங்களுடைய முதலாவது முக்கியமான வேலைத்திட்டம் வறிய மக்களை பொருளாதார வறுமையில் இருந்து மீட்டெடுப்பது. அதில் பிரதான இடம் வகிப்பது கல்வியாகும். வறுமைக்கோடும் கல்வியறிவற்ற நிலையின் கோடும் சமச்சீராகவே பயனிக்கிறது. கல்வியறிவு இல்லா விட்டால் வறுமை. வறுமை: என்றால் கல்வியறிவு இல்லை. எனவே, கிராமிய மக்கள் வறுமையில் இருந்து வெளியில் வர வேண்டுமானால் பிள்ளைகளுக்கு நன்றாக கல்வி புகட்ட வேண்டும். எனவே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த நாட்டின் கல்விக்கு முதன்மைதானம் வழங்கும். இப்பொழுது கல்வி பெற்றோருக்கு சுமையானதாக மாறியுள்ளது. பிள்ளை சாதாரண தரம் படித்தால், உயர்தரம் படித்தால் அது பெற்றோருக்கு சுமையாகும். உலகில் எந்தவொரு நாட்டிலும் அப்படியில்லை. ஆனால், எங்களுடைய தாய்மார்கள் வாழ்க்கையில் பெரும் பகுதியை கல்வி புகட்டுவதற்காகவே செலவழிக்கிறார்கள். அதனால், வசிக்கின்ற இடத்தில் இருந்து 3 கிலோ மீட்டருக்குள் பாடசால கிடைக்கத்தக்க வேலைத்திட்டமொன்றை நாங்கள் அமுலாக்குவோம். அதேபோல் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்திசெய்வோம். ஆசிரியர்கள் பயிற்சி பெற்ற பாடத்தையே போதிக்க வேண்டும். அழகியல் துறையில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் விஞ்ஞானம் பாடம் கற்பிக்கிறார்கள். இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும். அருகில் உள்ள பாடசாலைக்கு ஆசியரியர்களையும் வசதிகளையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமைத்துக் கொடுக்கும். பாடசாலைக்கு வருகின்ற ஒவ்வொரு பிள்ளையும் ஒன்று கல்வியில் முன்னேறிச் செல்ல வேண்டும். இல்லையென்றால் வாழ்க்கைத் தொழிலில் முன்னேறிச் செல்ல வேண்டும். ஒரு பிள்ளை கூட இடைநடுவில் பாடசாலையில் இருந்து விலகிவிடக் கூடாது. அதற்கான கல்வி முறைமையை அமுல்படுத்துவோம். கல்வி கற்ற பிள்ளை இருக்கின்ற ஒரு குடும்பம் நிச்சயமாக கரைசேரும்.
கிராமிய பொருளாதாரத்தை உயர்த்திவைப்போம்.
அடுத்தது, கிராமப்புற மக்கள் ஈடுபடுகின்ற பொருளாதாரம். பெரும்பாலானவர்கள் விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள். திருகோணமலையின் கரையோர பகுதிகளில் மீன்பிடித் தொழில். கந்தளாய் குளத்தை சார்ந்த பகுதிகளில் நன்னீர் மீன்பிடி. மகாவலி ஆற்றின் மருங்கில் மணல் கரை சேர்க்கிறார்கள். இவைதானே தொழில்கள். விவசாயத்தை கைவிட முடியுமா? முடியாது. ஆனால், விவசாயம் வருமானத்தை ஈட்டிக்கொடுக்கின்ற தொழில்துறையாக மாறவேண்டும். இன்றைய நிலைமை என்ன? வயலை விதைக்கிறார்கள். அது கடனுக்காகவே. உழுவதும் கடன் வாங்கியே. விதைநெல், உரம், விளைச்சல் பெறும் வரை கடையில் சமான் வாங்க வேண்டும். எல்லாமே கடனுக்குத்தான். நெல் மணிகள் விளையும் பருவத்தில் வயலுக்குப் போய் பார்த்தால் நெற்கதிர்கள் செழிப்பாக நிலத்தை நோக்கி வளைந்திருக்கும். விவசாயிகள் முகத்தில் சிரிப்பு தோன்றும். ஆனால், முன்னர்போல் அறுவடையை வீட்டுக்கு எடுத்து வருவதில்லை. முன்பெல்லாம் வீடுகளில் நெல் மூடைகளை குவித்து வைத்திருப்பார்கள். எனக்கு ஞாபகம் இருக்கிறது. சிறிய வயதில் எங்களுக்கு நெல் மூடைகள் மீது படுத்துறங்குவதில் அலாதி பிரியம். அந்த அளவுக்கு நெல் இருந்தது.
இப்போதைய நிலைமை என்ன? களத்து மேட்டிலேயே நெல் உலர்வதற்கு முன்பே விற்பனை செய்யப்படுகிறது. பணம் கைக்கு வருகிறது. வரும் வழியில் உரம் வாங்கிய கடைக்கு கடனை கொடுக்க வேண்டும். பொருட்கள் வாங்கிய கடைக்கு கொடுக்க வேண்டும். கிருமிநாசினி கடைக்கு கொடுக்க வேண்டும். விதை நெல் கடைக்கு கொடுக்க வேண்டும். வீட்டுக்கு வரும்போது வேதனையை தாங்க முடியாமல் மூக்கு முட்ட குடித்துவிட்டு வருவார்கள். அறுவடை செய்த நாளில் இது கட்டாயமாக நடக்கும். இதற்கான காரணம் என்ன? கவலையின் வெளிப்பாடு அதுதான்.
கடன் சுமைக்கு தீர்வு வழங்குகின்ற அபிவிருத்தி வங்கி முறையை உருவாக்குவோம்
எனவே, விவசாயிகள் கடன் சுமையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிறந்ததொரு ஆய்வினை மேற்கொண்டு கமக்காரர்களை இந்த கடன் சுமையில் இருந்து விடுவிக்கும். வங்கியில் இருந்து பெற்றுள்ள கடன்களில் ஓரளவினை வெட்டிவிடும். மீண்டும் கடன் பெறாது இருப்பதற்காக நாங்கள் அபிவிருத்தி வங்கியொன்றை உருவாக்குவோம். இப்பொழுது ஊரிலே கடன் வாங்கினால் 20 வீத மாதாந்த வட்டி செலுத்த வேண்டும். வங்கியில் இருந்து பெற்றால் வருடத்துக்கு நூற்றுக்கு 20 வீதம். நுண்கடனிடம் இருந்து வாங்கினால் ஒரு வாரத்திற்கு 1000 ரூபா. அதனால், கடன் பொறிக்குள் சிக்கிக் கொள்கிறார்கள். இந்தியா, சீனா, வியட்நாம் போன்ற ஒவ்வொரு நாட்டிலும் அபிவிருத்தி வங்கி இருக்கிறது. கமக்காரர்களுக்கு குறைந்த வட்டி வீதத்தில் கடன் வழங்குகிறார்கள். எனவே, கடன்மேடு குவிய மாட்டாது. நாங்கள் கமக்காரர்களை கடன் சுமையில் இருந்து அகற்றிக் கொள்ளலாம். எங்களுடைய ஊர்களை பற்றி சிந்தித்து பாருங்கள். கடன் வாங்க வெட்கப்படுவார். கடன்காரன் என்பதை அவப்பெயராக கருதுவார்கள். இப்போதைய நிலைமை என்ன? கடன்படாத ஒருவரை தேடி கண்டுபிடிக்க முடியுமா? எனவே, கமக்காரரை கடன் பொறியில் இருந்து மீட்டெடுப்பதற்கான திட்டமொன்றை நாங்கள் வகுத்திருக்கிறோம்.
விவசாயத் தொழிற்றுறையை மேம்படுத்துவோம்.
அடுத்ததாக, விவசாயத் தொழில் இலாபகரமானதாக அமைய வேண்டும். பாருங்கள் இந்தியாவின் முட்டை இலங்கைக்கு வரும்போதும் இலங்கையின் குளியாப்பிட்டிய முட்டை கந்தளாய்க்கு வரும்போதும் இலாபகரமானது எது? இந்திய முட்டை தான். அப்படியானால் இந்தியாவில் ஒரு கோழி இரண்டு முட்டைகள் வீதம் போடுகிறதா? அவர்கள் உற்பத்திக்கான செலவை குறைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆகவே, விளைச்சலை அதிகரித்தால் ஏக்கருக்கான செலவினை கட்டுப்படுத்திக் கொள்ளலாம். எனவே, விளைச்சலை அதிகரிப்பதற்கான திட்டம் இருக்க வேண்டும். அதற்காக நல்ல விதை நெல் இருக்க வேண்டும். எங்களுடைய விதை உற்பத்தி செய்யும் விவசாய பண்ணைகள் அனைத்துமே மூடப்பட்டு விட்டன. நாங்கள் அந்த பண்ணைகளுக்கும் விதை ஆராய்ச்சி நிலையங்களுக்கம் மீண்டும் புத்துயிர் அழிப்போம். இந்தக் கந்தளாய் விவசாய செயற் திட்டத்தின் ஒரு பகுதியினர் இருக்கிறார்கள். அவர்கள் விதை நெல்லை உற்பத்தி செய்வார்கள். கால்வாயின் ஒரு பக்கத்திலே விதை நெல்லை உற்பத்தி செய்வார்கள். ஆகவே, அவர்களிடம் இருந்து நியாயமான விலைக்கு விதை நெல்லை பெற்றுக்கொள்ள முடியும். இன்று ஒரு கிலோ விதை நெல் 500 ரூபாவை விட அதிகரித்துவிட்டது. விதை நெல் மாத்திரம் இருந்தால் போதாது. தண்ணீரும் தேவை. எங்களிடம் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பல குளங்கள் இருக்கின்றன. இவற்றை புனரமைக்க வேண்டும். எங்களுடைய பண்டைய மன்னர்கள் 32 ஆயிரம் குளங்களை அமைத்தார்கள். இப்பொழுது எஞ்சியிருப்பது 14 ஆயிரம் மாத்திரமே. ஒரு வாரம் மழை பெய்தால் குளங்கள் கரை மேவிப் பாயும். இரண்டு வாரம் வரட்சி என்றால் குளங்கள் வற்றிப் போய்விடும். குளங்களில் தண்ணீரை விட சேறும் வண்டல் படிவுகளுமே இருக்கும். குளத்து மேடுகளை நாசமாக்கினார்கள். ஹோட்டல்களை அமைத்தார்கள். ஆகவே, நாங்கள் இந்த குளங்களை புனரமைத்து இரு போகங்களிலும் தங்குதடையின்றி தண்ணீரை வழங்குவோம். இடைப்பட்ட போகமொன்று பற்றியும் நாங்கள் சிந்திக்க வேண்டும். முன்பெல்லாம் இடைபட்ட போகத்தில் பாசிப்பயறு பயிரிட்டோம். அவை அவரையினத் தாவரங்கள் என்பதால் அந்தப் பயிர்கள் மூலமாக மீண்டும் நிலத்துக்கு நைதரசன் கிடைக்கும். அதனால், மீண்டும் சிறுபோகத்தில் நன்றாக பயிர் செய்யலாம்.
விவசாய உள்ளீடுகளின் விலைகள் குறைக்கப்படும்.
அடுத்ததாக கிருமிநாசினிகளின் விலைகளை குறைப்போம். இப்பொழுது அறுவடை பெற்று மது அருந்தி தள்ளாடித்தள்ளாடி வீட்டுக்கு வருகின்றவர் இனிமேல் களத்து மேட்டில் நெல்லை விற்பனை செய்து மது அருந்தி மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வருவார். ஆனால், இந்த தேவை எங்களது ஆட்சியாளர்களிடம் இருக்கவில்லை. விவசாயிகளுக்கு அது மாத்திரம் போதாது. அதற்கான நல்லவொரு இடம்தான் கந்தளாய் சீனி ஆலை. மீண்டும் நாங்கள் அதை ஆரம்பிப்போம். நான் கமத்தொழில் அமைச்சராக இருந்த காலத்தில் அந்த காணி உரிமை கமத்தொழில் அமைச்சிடமே இருந்த்து. தொழிற்சாலை கைத்தொழில் அமைச்சரான அநுர பண்டார நாயக்கவிடமே இருந்த்து. சீன முதலீட்டாளர் ஒருவர் வந்தார். நான் அநுர பண்டார நாயக்கவை சந்தித்தேன். அநுர பண்டார நாயக்க திருடன் அல்ல. அநுர நீ விரும்பிதை செய் என்று எனக்கு கூறினார். லங்கா தீப செய்தித்தாளில் தலைப்புச் செய்தி “அநுரவும் அநுரவும் இணைந்து விட்டார்கள்” என வந்தது. எங்களுக்கு உங்களிடமிருந்து எதுவுமே வேண்டாம். நீங்கள் களு கங்கையில் இருந்து தண்ணீரை பெற்று கந்தளாய் வேலையை செய்யுங்கள் என சீன முதலீட்டாளரிடம் கோரிக்கை விடுத்தேன். இறுதியில் நான் அமைச்சு கைவிட்டு வந்தேன். சீன முதலீட்டாளர் சீனாவுக்கு திரும்பிச் சென்றார். காரணம் என்ன? வந்தவர்கள் பகா கேட்கத் தொடங்கினார்கள். அதனால், நாங்கள் கந்தளாய் சீனி ஆலையை ஆரம்பித்து கமக்கார்ர்களுக்கு புதிய வருமான வழியை சேர்ப்போம்.
விளைதிறன்கொண்ட பயன்பாடு
மற்றுமொரு விடயம் திருகோணமலையில் 99 எண்ணெய் குதங்கள் இருக்கின்றன. ஒரு குதத்தின் கொள்ளளவு 10 ஆயிரம் மெற்றிக் தொன் ஆகும். அண்ணளவாக 1 இலட்சம் மெற்றிக் தொன்னை களஞ்சியப்படுத்த முடியும். எங்களுக்கு அது அளவுக்கு அதிகமானதாகும். அங்கே எண்ணெயை களஞ்சியப்படுத்தினால் எங்களால் எண்ணெயை குளிக்கவும் எடுக்க முடியும். அப்படியானால் என்ன செய்ய வேண்டும்? திருகோணமலை துறைமுகம் வழியாக எண்ணெயை ஏற்றுமதி செய்கின்ற நாடாக இலங்கையை மாற்ற முடியும். திருகோணமலையில் தூய்மையகம் ஒன்றை தொடங்கி வெளிநாட்டு சந்தைகளுக்கு அனுப்ப முடியும். அதை எமது நாட்டின் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தால் மாத்திரம் சாதித்துவிட முடியாது. அந்தப் பணியை செய்யக்கூடிய சர்வதேச கம்பனியொன்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் ஒருங்கிணைந்து இப்போது இற்றுப்போய்க்கொண்டிருக்கின்ற இந்த எண்ணெய்க் குதங்களுக்கு புத்துயிர் அளிப்போம்.
புல்மோட்டையில் கனிய மணல் இருக்கிறது. அவை அலைகளால் கொண்டுவந்து கரைசேர்க்கப்படுகின்றது. ஆனால், நாங்கள் மூலப்பொருளாகவே அதனை பகுத்தெடுக்காமல் ஏற்றுமதி செய்கிறோம். தேசிய மக்கள் சக்தி அந்த இடத்துக்கு புதியவொரு இரசாயன தொழிற்சாலையை கொண்டுவந்து பெறுமதி சேர்த்த கனிம உற்பத்தியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும். எனவே, அப்போது இங்குள்ளவர்களுக்கு தொழில் வாய்ப்பு கிடைக்கும். கந்தளாய் இருக்கின்ற பிள்ளை தொழில் தேடி கொழும்புக்கு செல்ல வேண்டியதில்லை. ஊர் மக்கள் ஊரிலேயே இருந்து கொண்டு பொருளாதாரத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான வேலைத்திட்டத்தை தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் அமைத்துக் கொடுக்கும்.