(-Colombo, August 26, 2024-) நேற்று (26) The Taprobane Entertainment இல் இடம்பெற்ற கொழும்பு “முஸ்லிம் சகோதரத்துவ சந்திப்பு” நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டிருந்தார். “வளமான நாடு – அழகான வாழ்க்கை” ஐ உருவாக்கிக் கொடுக்கின்ற புதிய மறுமலர்ச்சிப் பாதைக்கு நாட்டை இட்டுச் செல்கின்ற 2024 ஜனாதிபதித் தேர்தலின் பெருவெற்றிக்காக கொழும்பு வாழ் முஸ்லிம் மக்கள் பலர் இணைந்துகொண்டிருந்தனர்.
(-Colombo, August 26, 2024-)
நேற்று (26) The Taprobane Entertainment இல் இடம்பெற்ற கொழும்பு “முஸ்லிம் சகோதரத்துவ சந்திப்பு” நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டிருந்தார்.
“வளமான நாடு – அழகான வாழ்க்கை” ஐ உருவாக்கிக் கொடுக்கின்ற புதிய மறுமலர்ச்சிப் பாதைக்கு நாட்டை இட்டுச் செல்கின்ற 2024 ஜனாதிபதித் தேர்தலின் பெருவெற்றிக்காக கொழும்பு வாழ் முஸ்லிம் மக்கள் பலர் இணைந்துகொண்டிருந்தனர்.
(தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் கூட்டம் – P.D. சிறிசேன மைதானம், மாளிகாவத்தை. – 25-08-2024) தோழர் அநுர குமார திசாநாயக்கவை ஜனாதிபதி ஆக்குகின்ற, அந்த வெற்றியை பெரு வெற்றியாக மாற்றுகின்ற பெண்களின் பலமே இது. “பெண்களின் சக்தி ஒரே மூச்சுடன் – நாளைய தினத்திற்காக நாடு அநுரவோடு” அதுவே எங்களுடைய தொனிப்பொருள். தேசிய மக்கள் சக்தியின் பெண்களாகிய நாங்கள் ஒரே மூச்சுடன் ஒன்றிணைந்து இந்த நாட்டை புதிய மறுமலர்ச்சியை நோக்கி கொண்டு செல்கின்ற பாதையை அந்த […]
(தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் கூட்டம் – P.D. சிறிசேன மைதானம், மாளிகாவத்தை. – 25-08-2024)
தோழர் அநுர குமார திசாநாயக்கவை ஜனாதிபதி ஆக்குகின்ற, அந்த வெற்றியை பெரு வெற்றியாக மாற்றுகின்ற பெண்களின் பலமே இது. “பெண்களின் சக்தி ஒரே மூச்சுடன் – நாளைய தினத்திற்காக நாடு அநுரவோடு” அதுவே எங்களுடைய தொனிப்பொருள். தேசிய மக்கள் சக்தியின் பெண்களாகிய நாங்கள் ஒரே மூச்சுடன் ஒன்றிணைந்து இந்த நாட்டை புதிய மறுமலர்ச்சியை நோக்கி கொண்டு செல்கின்ற பாதையை அந்த வெற்றியை குறிக்கும் முகமாக இந்த இடத்தில் ஒன்றிணைந்துள்ளோம்.
நாங்கள் கடந்த பல வருடங்களாக வறட்சிக்கு தாக்குப்பிடித்துக் கொண்டு இருந்தவர்களாவோம். வறட்சிக்கு முகம் கொடுத்து அன்பான குடும்பத்தை பாதுகாத்துக் கொண்ட துணிச்சல் மிக்க பெண்களே நீங்கள். பெண்கள் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டிருப்பது ஒரு வகையிலே கோழைத்தனமாகும். எமது நாட்டின் அரசியல்வாதிகள் பல்வேறு துறைகளில் பெண்களை சிறைப்படுத்தி வைத்திருந்தார்கள். பெண்கள் பலவீனமானவர்கள், அவர்களுக்கு ஒன்றுமே விளங்காது, பெண்களுக்கு அரசியல் தேவையில்லை, பெண்கள் மரக்கட்டைகளாக வாழ்ந்து மடிந்து போகவேண்டுமென நினைத்தார்கள். உங்களை செல்லாக்காசாக நினைத்துக் கொண்டிருந்த வேளையில் நீங்கள் சுற்றுமுற்றும் பார்த்தீர்கள். அந்த நேரத்தில் தான் பெண்களாகிய நாங்கள் ஊருக்குள் வந்து உங்கள் வீட்டுக் கதவுகளை தட்டினோம்.
அவர்கள் தேசிய மக்கள் சக்தியை சுற்றி குழுமினார்கள். திடசங்கற்பம் கொண்டார்கள். இந்த அரசியலை மாற்ற முடியாது, சதாகாலமும் அவர்கள் தான் மன்னர்கள் என நினைத்தார்கள். சதாகாலமும் பாதிக்கப்பட்ட நசுக்கப்பட்ட அழுது புலம்பிய பெண்கள் தான் நாங்கள். நாங்கள் அவர்களை சந்தித்து அவர்களின் பெறுமதியை எடுத்துரைத்தோம். அவர்களின் சாத்திய வளங்களை, வலிமைகளை உணர்ந்து இன்று முழு நாட்டிலுமுள்ள பெண்கள் இந்த நாட்டை மாற்றியமைக்க வேண்டுமென ஒரே மூச்சுடன் முன்வந்தார்கள். அவர்கள் மறுமலர்ச்சியை நோக்கிய பயணத்திற்கு வலிமைசோ்க்கவே முன்வந்திருக்கிறார்கள். எமது கைகளில் ஒரு பாரிய பணி சுமத்தப்பட்டிருக்கிறது. அது தான் தேசிய மக்கள் சக்தியின் தோழர் அநுர குமார திசாநாயக்கவை வெற்றியீட்ட செய்விப்பது. அந்த வெற்றியின் பங்களாளிகளாக நீங்கள் மாறவேண்டும். இந்த நாட்டை மாற்றியமைப்பதற்கான திடசங்கற்பம் கொண்ட பெண்களாக மாறவேண்டும். அதற்காக உங்களை அன்புடன் அழைக்கிறேன்.
“பெண்கள் அரசியலில் பிரவேசித்தது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி தருகின்ற விடயமாகும்”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பேராசிரியர் வசந்தா சுபசிங்க-
பெண்கள் அரசியலில் பிரவேசித்தது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி தருகின்ற விடயமாகும். தோழர் அநுர குமார திசாநாயக்கவின் வெற்றியை முழு உலகுமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. செப்டெம்பர் 21 ஆம் திகதி என்பது அரசியல்வாதிகளால் வீழ்த்தப்பட்ட நாட்டை நிமிர்த்தி வைக்கின்ற தினமாகும். அந்த வெற்றிக்கான உங்களின் அர்ப்பணிப்பே இது. எமது நாட்டின் வரலாற்றினை பொன்னெழுத்துக்களால் குறிக்கின்ற யுகத்தை நாங்கள் ஏற்படுத்திக் கொடுப்போம். இயற்கையாகவே இருக்கின்ற பால் நிலை வித்தியாசத்தை தவிர்த்த வேறு எந்த விதமான வித்தியாசமும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் கிடையாது. பெண்கள் என்பதனால் மாத்திரமே நாங்கள் பல்வேறு பிரச்சினைகளை அனுபவித்து வருகிறோம். வறுமையை அதிகமாக அனுபவிப்பவர்கள் பெண்களே.
இலங்கை பெண்களை எடுத்துக் கொண்டால் வீட்டில், களத்தில், களத்துமேட்டில், ஆலையில், வேலைத்தளத்தில் அவளுக்கு பெரும் பங்கினை ஆற்றவேண்டியுள்ளது. இந்த எல்லா இடத்திலும் பெண்களுக்கு பாரிய செயற்பொறுப்பு நிலவுகின்றது. அந்த பெண்களின் பிரதிநிதித்துவம் தான் இது. இலங்கையின் குடும்பங்கள் பற்றிய கணக்கெடுப்பினை செய்தால் 25 சதவீதமான குடும்பங்கள் பெண்களை தலைமையாகக் கொண்டதாகவே இருக்கின்றன. அந்த தாய்மார்களும் சகோதரிகளும் தான் குடும்பங்களையும் கவனத்திற்கொண்டு பொருளாதார செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே அதற்காக தேசிய மக்கள் சக்தி பாரிய பணியை ஆற்றவேண்டியுள்ளது.
எமது பாடசாலைகளில், வைத்தியசாலைகளில், பல்கலைக்கழகங்களில் அதைபோலவே வெளிநாட்டு சேவைகளில், பெண்களே அதிகமாக பொருளாதார பங்கினை ஆற்றி வருகிறார்கள். எனவே அவர்களின் பாதுகாப்பிற்கான கொள்கையை நாங்கள் வகுத்திருக்கிறோம். வெளிநாடுகளில் தொழில் புரிகின்ற எமது அன்புக்குரிய சகோதரிகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆனால் அவர்களின் உரிமைகள் முறையாக அவர்களுக்கு கிடைப்பதில்லை. அவர்கள் அடிமை சேவகம் புரிந்து வருகிறார்கள். வேலைக்கேற்ற சம்பளம் அவர்களுக்கு கிடைப்பதில்லை. பாதுகாப்பு கிடையாது. இந்த பிரச்சினைகள் பற்றி தேசிய மக்கள் சக்தி அதிக கவனம் செலுத்தியுள்ளது. எனவே பெண்களுக்கு சிறந்த பயிற்சியளிக்கப்பட்டு சிறந்த சம்பளத்துடன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழிக்கக்கூடிய வகையில் எங்களுடைய அரசாங்கத்தினூடாக அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்க வேண்டும். எனவே வெளிநாடு சென்றுள்ள பெண்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியமொன்றை நாங்கள் பரிந்துரைக்கின்றோம்.
வெளிநாடுகளிலுள்ள தூதரகங்கள் நடந்து கொள்கின்ற விதம் பற்றி நாங்கள் அறிவோம். எனவே வெளிநாடுகளில் பணியாற்றுபவர்கள் மீது கரிசனைகொண்ட வெளிநாட்டு தூதரக சேவையொன்றை நாங்கள் உருவாக்குவோம். ஆகவே நாங்கள் இந்த தூதரக சேவையை வசதி நிறைந்த சேவையாக மாற்றுவோம். பெண்கள் அடிமைத்தனமான பாலியல்சேவைக்காக அனுப்பிவைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு கிடையாது. எனவே வெளிநாட்டு தொழில்வாய்ப்பு முகவர் நிலையங்களும் அரசாங்கமும் அவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்கவேண்டும். எனவே செப்டெம்பர் 21 ஆம் திகதி தோழர் அநுர குமார திசாநாயக்கவின் வெற்றி பெண்கள் சமத்துவம் அனுபவிக்கின்ற சமூகத்தை உருவாக்கிக் கொடுக்கும். இந்த செய்தியை உங்கள் ஊருக்கும் உறவினருக்கும் எடுத்துச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
“இலங்கையின் வரலாற்றின் புதிய பக்கத்தை எழுதக்கூடிய பெறுமதிமிக்கவர்கள் பெண்கள்”
-பொதுநலவாய அமைப்பு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றெடுத்த விளையாட்டு வீராங்கனை புஷ்பமாலி ராமநாயக்க-
நான் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளமையையிட்டு பெருமிதமடைகிறேன். இவ்வளவு பிரமாண்டமான ஒரு மேடையில் ஏறி எமது நாடு வீழ்ந்துள்ள படுகுழியிலிருந்து மீட்டெடுப்பதற்காக ஒரு சில வார்த்தைகளையேனும் கூற கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். எமது நாடு 76 வருடங்களாக சாபக்கேட்டுக்கு இலக்காகியிருக்கிறது. இந்த ஊழல்மிக்க அரசியல்வாதிகளின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய காலம் இப்பொழுது பிறந்திருக்கிறது. அதற்காக கைகோர்த்து செயற்படுவதற்காகவே நாங்கள் இங்கு குழுமியிருக்கிறோம். அதற்காக நாங்கள் தோழர் அநுர குமார திசாநாயக்கவை தோ்ந்தெடுத்திருக்கிறோம்.
இவ்வளவு காலமும் எமது நாட்டுக்கு மன்னர்களே தலைவர்களாக வந்தார்கள். இப்பொழுது முதல் தடவையாக மண்ணில் கால் பதித்த மக்களின் இதயத்துடிப்பினை உணர்ந்த மண்ணின் மைந்தனொருவர் தலைவராகப் போகிறார். செப்டெம்பர் 21 ஆம் திகதி அதற்காக நாங்கள் எங்களை அர்ப்பணிப்போம். அதற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம். இலங்கையில் வாக்காளர்களில் அதிகமான எண்ணிக்கை கொண்டவர்கள் பெண்களே. குடும்பத்திலும் தீர்மானமெடுக்கின்ற செயற்பாட்டில் பெண்களே அதிக பங்களிப்பினை கொண்டிருக்கிறார்கள். பெண்களின் வாக்குகள் மூலமாக மாத்திரம் தேசிய மக்கள் சக்திக்கு பெரு வெற்றியை பெற்றுக்கொடுக்க முடியும் என்பதை மனதிற்கொள்ளுங்கள். இலங்கையின் வரலாற்றின் புதிய பக்கத்தை எழுதக்கூடிய பெறுமதிமிக்கவர்களாக உங்களால் மாற முடியும். நாங்கள் வெற்றியை நெருங்கிவிட்டோம். அதனை பெருவெற்றியாக மாற்றுகின்ற பொறுப்பு உங்கள் கைகளில் இருக்கின்றது. அதற்காக உங்கள் அனைவருக்கும் அழைப்புவிடுக்கிறேன்.
“தோழர் விஜித ஹேரத் தான் 2003 ஆம் ஆண்டில் எங்கள் முஸ்லிம் மாணவிகளுக்கு பர்தா துணியை பெற்றுக்கொடுத்தார்”
-தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர் ஆசிரியை ஹய்மன் சுலைமான்-
இன, மத, சாதிபேதமின்றி நாட்டின் எதிர்காலத்திற்காக தூரநோக்குடைய மூன்றாவது மில்லேனியத்தின் சவால்களுக்கான தீர்வினைகொண்டுள்ள சகோரத்துவத்துடன் அனைவரையும் சமமாக மதிக்கின்ற மனிதத்துவம் நிறைந்த ஒரே தலைமைத்துவத்தைக் கொண்ட ஒரே கட்சியாக அமைவது தேசிய மக்கள் சக்தியாகும். நாட்டை வெற்றியீட்டச் செய்விக்க அர்ப்பணிக்க விரும்புகின்ற ஒவ்வொருவரும் ஒன்று சேரவேண்டிய இடம் இந்த தேசிய மக்கள் சக்தியாகும்.
இதுவரையும் வேறெந்த கட்சியின் மேடையிலும் ஏறியிராத எனக்கு மறுமலர்ச்சிக்காக தமிழில் உரையாற்ற வாய்ப்புக்கிடைத்தமையை நான் பெற்ற பேறாக கருதுகிறேன். எங்களுடைய தமிழ் பேசும் சகோதர சகோதரிகளை தட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு இருக்கிறது. அந்த பொறுப்பினை ஈடேற்ற இந்த மேடையை நான் பயன்படுத்திக் கொள்ளப்போகிறேன்.
நான் உரையாற்றும்போது அதனை இனவாதம் அல்லது மதவாதம் என நினைத்துவிட வேண்டாம். எம்மை பாதுகாக்கவென எம்மால் நியமிக்கப்பட்ட தலைவர்கள் எங்களை ஏமாற்றுவதால் நாங்கள் உங்களிடம் ஏமாறாப்போவதில்லை என்ற செய்தியை இந்த மேடையிலிருந்து கொடுக்க நான் விரும்புகிறேன். ஒரு பிரபலப் பாடசாலையில் விஞ்ஞான ஆசிரியையாகிய நான் இந்த இடத்தில் இந்த நேரத்தில் உங்கள் முன் ஏன் தமிழில் உரையாற்ற வந்திருக்கிறேன் என்றால் 76 வருடங்களாக இந்த நாட்டையும் எம்மையும் ஏமாற்றி இந்த நாட்டை பிளவுப்படுத்திருக்கும் இந்த குப்பை அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்புவதே அதன் நோக்கமாகும்.
இவர்கள் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. ஆனால் நிறம் மாத்திரம் வித்தியாசமானவை. என்னுடைய இரத்தத்திலும் பச்சை நிறம் தான் ஊறியிருந்தது. பச்சை நிறத்திற்காக புள்ளடியிடுவதே எனது வேலையாக இருந்தது. யானை அல்லது டெலிபோன் என்றால் புள்ளடியிடுவேன். முஸ்லிம் அரசியல்வாதிகளாக இருக்கலாம் ஏனைய அரசியல்வாதிகளாக இருக்கலாம். தோ்தல் காலத்தில் மாத்திரம் எம்மீது கரிசனைக காட்டுவார்கள். ஆடு நனையுதென்று ஓநாய் அழுகிறதாம். அதுபோல எமது துன்பங்கள் துயரங்கள் கஷ்டங்கள் எல்லாம் அவர்களுக்கு ஞாபகம் வந்துவிடும். ஓடோடி வருவார்கள். எங்களுடைய கஷ்டங்களை போக்குவதாக வாக்குறுதியளிப்பார்கள். ஆனால் இதுவரை எந்த பிரச்சினையையும் தீர்க்கவில்லை.
ரவூப் ஹக்கீம் அவர்களே இந்த பேச்சு உங்களுக்காகத்தான். நீங்கள் அரசியல் வங்குரோத்து நிலையை அடைந்திருக்கிறீர்கள். தேசிய மக்கள் சக்தியின் உண்மைத்தன்மை மக்களை சென்றடையாமல் எவ்வாறு பிரபல மீடியாக்கள் தடுக்கின்றனவோ அதைப்போலத்தான் இன்டனெஷனல் மீடியாக்களும் முஸ்லிம்களின் உண்மை நிலையை மக்களுக்கு சென்றடைவதை தடுத்துக் கொண்டிருக்கின்றன. அது தான் உண்மை. நீங்கள் அதை செய்வதை தவறவிட்டு அரசியல் வங்குரோத்து நிலைக்கு வந்த பின்னர் அந்த விடயத்தை தூக்கிப்பிடித்துக் கொண்டு முஸ்லிம்களின் கவனத்தை திசைதிருப்புகிறீர்கள். கடந்த 30 வருடங்களாக தோல்வியடைகின்ற கட்சிகளின்பால் முஸ்லிம்களை வழிநடத்தி முஸ்லிம் மக்களை கேவலமான நிலையில் வைத்திருக்கிறீர்கள். உங்களுக்கு திடீரென என்ன கவலை வந்திருக்கிறது.
முஸ்லிம் பெண்களுக்காக என்ன செய்தீர்கள்? முஸ்லிம் பெண் மாணவிகளுக்கான காற்சட்டை துணிகளை இதுவரை பெற்றுக்கொடுத்தீர்களா? தோழர் விஜித ஹேரத் தான் 2003 ஆம் ஆண்டில் எங்கள் மாணவிகளுக்கு பர்தா துணியை பெற்றுக்கொடுத்தார். நீங்கள் உண்மையை மறைத்து எங்களை ஏமாற்றி வாக்குகளை பறித்து சுகபோகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். இன்றுடன் உங்களுடைய ஏமாற்று வித்தையை நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களிடம் மும்மொழித் திறமை இருப்பது உங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக அல்ல. முஸ்லிம் சமூகத்தை பாதுகாத்துக் கொள்வதற்கே. இதுவரை ஒன்றுமே செய்யாமல் இருந்துகொண்டு அநுர திசாநாயக்கவின் குறைகளை சொல்லிக் கொண்டு சஜித்தை வெல்லவைக்கப் போகிறீர்களா? ஒன்றுமே விளங்காத புத்தித்தெளிவில்லாத ஒருவரை இந்த நாட்டின் தலைவனாக்கப் போகிறீர்களா? அதற்கு எந்த மதம் இடம் தந்தது என்று சிந்தியுங்கள்.
எதிர்வரும் பாராளுமன்ற தோ்தலில் குளிர்காய்வதற்காகவே நீங்கள் இதனை செய்து வருகிறீர்கள். இனவாதத்தைத் தூண்டி சகோதரத்துவத்தை குழிதோண்டி புதைக்கின்ற மோசமான வேலையில் ஈடுபடவேண்டாம். இந்த கிழட்டு முஸ்லிம் தலைமைகளைக் கண்டு ஏமாந்து விடவேண்டாம். புதிய சிந்தனைகொண்ட இளைய தலைமைகளை தேடியெடுங்கள். உங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளுங்கள். ஸ்ரீ லங்கா முஸ்லிம்கள் என்ற பெருமையோடு இந்த நாட்டில் நிம்மதியாக கௌரவத்துடன் சரிசமமாக வாழவேண்டுமா? அப்படியானால் திசைகாட்டியை வெற்றியீட்டச் செய்வித்து தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவை தோ்தெடுங்கள். அது தான் உங்களுடைய வெற்றிக்கும் விடுதலைக்குமான ஒரே வழி என்று கூறி விடைபெறுகிறேன்.
“பெண்களுக்கும் சிறார்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கின்ற யுகத்தை உருவாக்குவோம்”
-தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் சங்கத்தின் செயற்பாட்டாளர் சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி-
பெண்கள் மலர்களைப் போன்றவர்கள். ஆனால் தேவையேற்பட்டால் கூர்மையுள்ள வாளாக, கத்தரிக்கோலாக, ஒரு விறகுக்கட்டாக இணையக்கூடியவர்கள் என்பதை வெளிக்காட்டிய திசைகாட்டியின் அன்புக்குரிய சகோதரிகளே உங்களை நான் மதிக்கிறேன், நேசிக்கிறேன். பெண்கள் இனிமேலும் அரசியல் ரீதியாக உறங்கிக்கொண்டிருப்பவர்களல்ல என்பது இன்று இங்கே திரண்டிருக்கின்ற பெண்களைப் பார்க்கும்போது நிரூபணமாகின்றது. இரண்டாவது விடயம் 76 வருடகாலமாக ஆட்சியாளர்கள் முன்னெடுத்து வந்த அயோக்கியத்தனமான, காடைத்தனமான அரசியல் பேச்சுகள் செப்டெம்பர் 21 இல் முடிவடைந்துவிடும் என்பதாகும்.
மூன்றாவது செய்தி இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 9 வது ஜனாதிபதி தோழர் அநுர குமார திசாநாயக்க என்பதை நீங்கள் எடுத்துக்காட்டுகிறீர்கள். பெண்களாகிய எங்களின் வாக்குகளால் தான் அவர் ஜனாதிபதி தோழராக மாறுகிறார் என்பதை ஜனாதிபதி தோ்தலில் போட்டியிடுகின்ற அத்தனை வேட்பாளர்களுக்கும் நாங்கள் கூறிவைக்கிறோம். நாங்கள் பாடசாலைக்கு, தொழிலுக்கு, பல்கலைக்கழகத்திற்கு, பொது போக்குவரத்துச் சேவை மூலமாகவே போகிறோம். இந்த நாட்டின் பொதுபோக்குவரத்தை பாவிக்கின்ற பெண்களின் 90 சதவீதமானவர்கள் பாலியல் தொல்லைகளுக்கு இலக்காகிறார்கள். அதிலும் பொலிசில் முறைப்பாடு செய்து நூற்றுக்கு நான்கு வீதம் எனப்படுகின்ற சிறிய அளவிலேயே சட்டநடவடிக்கையை எடுக்கிறார்கள். இந்த பிரச்சினைக்கு நாங்கள் பதில் தேடவேண்டாமா? இந்த நாட்டில் பெரும்பான்மையானவர்கள் பெண்களே. அப்படியானால் இதுவரைகாலமும் ஆட்சியாளர்கள் கடுமையான உறக்கத்திலா இருந்தார்கள். செப்டெம்பர் 22 ஆம் திகதிக்குப் பின்னர் பெண்களின் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகொடுக்கப் போகிறோம். தனக்கு அநீதி ஏற்பட்ட வேளையில் சட்டத்தின் முன் செல்ல பெண்கள் தயக்கம் காட்டுகிறார்களென்றால் மனதில் சந்தேகமும் ஐயமும் இருக்குமென்றால் சட்டத்தில் ஒரு பிரச்சினை இல்லையா? சட்டம் மீதான நம்பிக்கை பற்றிய பிரச்சினை இல்லையா? உங்கள் இதயத்தை தட்டிக் கேட்டுப்பாருங்கள் அப்படியொரு பிரச்சினை இல்லையா? சட்டத்தை அறிந்திராமை தண்டனையிலிருந்து விடுபட ஒரு காரணமாக அமையமாட்டாது என எங்களுக்கு கற்பித்திருந்தாலும் இந்த நாட்டின் பிரஜைகளில் பெரும்பான்மையினருக்கு சட்டம் பற்றிய குறைந்தபட்ச புரிந்துணர்வுகூட கிடையாது. எனவே பாடசாலைக் கல்விப் பாடவிதானத்தில் சட்டத்தை உள்ளடக்கி பாடசாலை சிறார்களுக்கு சட்டம் பற்றிய குறைந்தபட்ச அறிவினை பெற்றுக்கொடுக்க வேண்டும். சட்டத்தின் முன் கேள்விக்குட்படுத்துகின்ற ஒரு சமூகத்தை உருவாக்க நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
குற்றச்செயல் இடம்பெற்றதும் பெண் அச்சமடைந்தால் முறைப்பாடு செய்த பின்னர் வழக்கு விசாரணை தொடங்கினால் பிணையில் செல்கின்ற சந்தேக நபர் மூலமாக தொடர்ந்தும் தனக்கோ தனது குடும்ப அங்கத்தவருக்கோ உறவினர்களுக்கோ அழுத்தம் ஏற்படும் என்ற காரணத்தினால் பெண்கள் சட்டத்தின் முன் செல்லமாட்டார்கள். உலகில் முன்னேற்றமடைந்த சட்டங்கள் நிலவுகின்ற நாடுகளில் பிணையில் செல்கின்ற சந்தேக நபர்களை அவதானிப்பதற்கான தொழில்நுட்ப முறையியல்கள் மூலமாக அவர்களின் நடத்தைகளை அவதானித்து வருகின்றனர். எங்களுடைய நாட்டில் அப்படி இடம்பெறுகிறதா? அந்த பிரச்சினைக்கு நாங்கள் பதில் கொடுப்போம். எங்களுடைய நாட்டில் சட்டத்தை அமுலாக்குகின்ற நிறுவனங்களை நாங்கள் ஒழுங்குபடுத்துவோம். அதற்கு பொறுத்தமான உத்தியோகத்தர்களை நியமிப்போம். அவர்கள் சட்டத்தை மீறினால் அனைவருக்கும் முன்னால் அவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுலாக்குவோம். சட்டம் தாமதமாவது என்பது சட்டம் நிராகரிக்கப்படுவதாகும்.
எங்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் சிக்கல் ஏற்பட்டால் நாங்கள் பெண்கள் அது எங்களுடைய தலைவிதியென பெண்கள் நினைத்தால் அந்த மனோபாவத்திலிருந்து இந்த நாட்டை மாற்றியமைக்க வேண்டுமென்ற செய்தியை இதுவரை எமது நாட்டை ஆட்சி செய்தவர்கள் உங்களுக்கு கொடுத்தார்களா? இருக்கின்ற சட்டங்கள் போதும். ஆனால் அவை முறையாக அமுலாக்கப்படுவதில்லை. அது மண்ணில் யதார்த்தமாக மாறவேண்டும். இறுதியாக ஒரு செய்தியைக்கூற விரும்புகிறேன். 2010 இல் ஸ்கொட்லாந்து பொலிஸ் எமது நாட்டின் சமுதாய பொலிசுக்கு எந்த விதமான கட்டணமும் அறவிடாமல் மூன்று நோக்கங்களுக்காக ஒரு விசேட பயிற்சியை அளித்தது. முதலாவது, இந்த நாட்டில் பெண்களுக்கு இடம்பெறுகின்ற பாலியல் துன்புறுத்தல்கள் நிறுத்தவேண்டும். இரண்டாவது, நோக்கம் வீட்டுக்குள் கூட தனது கூரைக்கு அடியில்கூட பெண்களுக்கு துன்புறுத்தல் இடம்பெற்றால் அதனை நிறுத்தவேண்டும். மூன்றாவது, அதைபோலவே பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் சமூகத்தில் இடம்பெறுகின்ற பாரபட்சம் காட்டப்படுதலை ஒழித்துக் கட்டுங்கள். அப்படித்தான் பயிற்சியளித்தார்கள். பயிற்சியை எவ்வளவு நன்றாக கொடுத்தார்கள் என்றால் இந்த பயிற்சியை இடைநடுவில் நிறுத்தவேண்டுமென ஸ்கொட்லாந்து அரசாங்கம் தீர்மானிக்கிறது. காரணமென்ன? பொலிஸ் கைதில் இருக்கும்போதே எங்களுடைய சந்தேக நபர்கள் துன்புறுத்தப்பட்டு படுகொலை செய்யப்படுகிறார்கள்.
அதாவது எமது நாட்டில் மனித உரிமை மீறப்படுதல் பற்றி பாரிய உரையாடல் இடம்பெற்றுக்கொண்டிருந்தது. தொடர்ச்சியாக பெண்கள் மற்றும் சிறுவர் மீது பாரபட்சம் காட்டப்பட்டது. அதனால்தான் ஸ்கொட்லாந்து அரசாங்கம் பயிற்சியை நிறுத்திக் கொண்டது. எமது நாட்டின் ஜனாதிபதி எமது நாட்டின் பிரதமர் எமது நாட்டின் பொலிஸ் மா அதிபர் இதற்கு பதிலளித்தாரா? இல்லை. சட்டவிரோத தடுத்து வைத்தலுக்கு துன்புறுத்தலுக்கு எதிராக குற்றச்சாட்டப்பட்ட ஒருவர் பொலிஸ் மா அதிபராக்கப்பட்ட ஒரு நாடு தான் இது. அப்படிப்பட்ட பொலிஸ் மா அதிபர் ஒருவரின் கீழ் பெண்களாகிய எங்களுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும்? செப்டெம்பர் 22 ஆம் திகதியிலிருந்து பிரமாண்டமான அரண்போல இருக்கின்ற பெண்களாகிய நாங்க
(-Colombo, August 21, 2024-) இன்று (21) முற்பகல் ஜயந்த வீரசேகர மாவத்தையில் அமைந்துள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைமை அலுவலகத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அமைப்பின் பிரதானி மதிப்பிற்குரிய அஷ் சேக் முஃப்தி ஏ.ஜே.ஏ. ரிஷ்வி, மதிப்பிற்குரிய அஷ் சேக் அர்கம் நுரஅமித் மற்றும் கலாநிதி ஏ.ஏ.அஹமட் அஷ்வர் ஆகியோரை தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க சந்தித்தார். இன்றளவில் நாட்டில் நிலவுகின்ற அரசியல் நிலைமைகள் பற்றி […]
(-Colombo, August 21, 2024-)
இன்று (21) முற்பகல் ஜயந்த வீரசேகர மாவத்தையில் அமைந்துள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைமை அலுவலகத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அமைப்பின் பிரதானி மதிப்பிற்குரிய அஷ் சேக் முஃப்தி ஏ.ஜே.ஏ. ரிஷ்வி, மதிப்பிற்குரிய அஷ் சேக் அர்கம் நுரஅமித் மற்றும் கலாநிதி ஏ.ஏ.அஹமட் அஷ்வர் ஆகியோரை தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க சந்தித்தார்.
இன்றளவில் நாட்டில் நிலவுகின்ற அரசியல் நிலைமைகள் பற்றி முஃப்திமார்களுடனும் நிர்வாக மௌலவிமார்களுடனும் கலந்துரையாடிய அநுர குமார திசாநாயக்க அவர்கள், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நல்லாசியையும் பெற்றுக்கொண்டார்.
இத்தருணத்தில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் விஜித ஹேரத் என்னுடன் இணைந்துகொண்டார்.
(-ஜம்மியத்துல் உலமா அமைப்பினரை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது – 21.08.2024-) அண்மையில் பிரதானமாக பேசப்படுகின்ற ஒரு விடயம் தான் பாராளுமன்றத்தில் நான் கூறிய ஒரு விடயத்தை திரிபுபடுத்தி கொண்டுச் செல்கிறார்கள். குறிப்பாக நான் கண்டேன், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் இதனைப் பற்றி பகிரங்கமாக கூறிவருகிறார். அரசியல் ரீதியாக நிர்க்கதி நிலையுற்றுள்ள குழுக்களின் பிரதான பணியாக அமைந்துள்ளது என்னவென்றால் தேசிய மக்கள் சக்தியை இலக்காகக் கொண்டு பொய்யான தகவல்களை பரப்புவதாகும். தேசிய மக்கள் சக்தி […]
(-ஜம்மியத்துல் உலமா அமைப்பினரை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது – 21.08.2024-)
அண்மையில் பிரதானமாக பேசப்படுகின்ற ஒரு விடயம் தான் பாராளுமன்றத்தில் நான் கூறிய ஒரு விடயத்தை திரிபுபடுத்தி கொண்டுச் செல்கிறார்கள். குறிப்பாக நான் கண்டேன், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் இதனைப் பற்றி பகிரங்கமாக கூறிவருகிறார். அரசியல் ரீதியாக நிர்க்கதி நிலையுற்றுள்ள குழுக்களின் பிரதான பணியாக அமைந்துள்ளது என்னவென்றால் தேசிய மக்கள் சக்தியை இலக்காகக் கொண்டு பொய்யான தகவல்களை பரப்புவதாகும்.
தேசிய மக்கள் சக்தி அனைத்து மதங்களினதும் சுதந்திரமான வழிப்பாட்டு உரிமைகளையும் அனைத்து கலாச்சார உரிமைகளையும் பேணி பாதுகாத்து முன்னெடுத்துவருவதை ஏற்றுக்கொள்கின்ற ஒரு அரசியல் இயக்கமாகும். மொழி ரீதியாக, மத ரீதியாக அதைப்போலவே கலாச்சார ரீதியாக எமது நாட்டில் பிளவுகளை வைத்துக்கொள்ளக்கூடாது. நாங்கள் இலங்கையர்கள் என்ற வகையில் ஒன்று சேரவேண்டுமென நம்புகின்ற ஒரு இயக்கமாகும். அன்று நான் பாராளுமன்றத்தில் மிகவும் தெளிவாக சுட்டிக்காட்டியது எமது நாட்டில் வன்முறையும் முரண்பாடுகளும் உருவாவது அந்தந்த சமூகத்தில் நிலவுகின்ற தீவிரவாத அரசியலின் காரணமாகவேயாகும்.
எங்களுக்குத் தெரியும் சிங்கள சமூகத்தில் தீவிரவாத செயற்பாடுகள் தான் வன்முறைகளுக்கு அழைப்புவிடுக்கின்றன. அதைபோலவே தமிழ் சமூகத்தில் நிலவுகின்ற தீவிரவாத கூற்றுக்கள் தீவிரவாத செயற்பாடுகள் தான் வன்முறைக்கு வழிசமைத்தன. அதைபோலத்தான் முஸ்லிம் சமூகத்திலும் தீவிரவாத செயற்பாடுகள் தான் வன்முறைக்கு வழிசமைத்தது. அது ஒட்டுமொத்த மக்களுமல்ல. அந்த தீவிரவாதத்தில் ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களும் இல்லை. அந்த தீவிரவாதத்தில் ஒட்டுமொத்த சிங்கள மக்களும் இல்லை. அந்த தீவிரவாதத்தில் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் இல்லை. எனினும் அத்தகைய மிகவும் சிறிய குழுக்கள் நிலைமையை திரிபுப்படுத்தி உண்மையான இறைவனோ அல்லது புத்த பிரானோ உபதேசித்த விடயங்களுக்கு பதிலாக அதற்கு தாமாகவே வியாக்கியானம் கற்பித்து சமூகத்தை தீவிரவாதத்தை நோக்கி கொண்டு செல்கின்றன.
அதோ அந்த தீவிரவாதம் தான் அந்த சமூகத்தின் தோன்றுகின்ற தீவிரவாதம் தான் வன்முறைகளின் கருவறையாக மாறுகின்றன. அந்த விடயங்களை நாங்கள் மிகவும் தெளிவாக எடுத்துரைத்த பின்னர் அது பற்றிய மிகுந்த குறைக்கூறல்கள் வட்சப் மூலமாக சஞ்சரித்து வருவதை நாங்கள் அறிகிறோம். நாங்கள் அனைத்து மக்களிடமும் வேண்டிக்கொள்வது கடந்த காலங்களில் இந்த நாட்டில் இனவாத அரசியல் மேலோங்கும்போது எங்களுடைய நடைமுறைகளை சற்று பாருங்கள். நாங்கள் எந்த விதமான இனவாதத்திற்கும் கட்டுப்படாத, மிகவும் சிரமமான தருங்களில் கூட இனவாதத்திற்கு பதிலாக தேசிய ஒற்றுமைக்காக பாடுபட்ட இயக்கமாகும்.
எனவே திடீரென தோ்தல் மேடைகளில் சிங்கள பௌத்தத்திற்கு எதிரான இயக்கமொன்று முஸ்லிம்களுக்கு எதிரான இயக்கமொன்று முஸ்லிம் மக்களின் மதவுரிமைகளுக்கு எதிரான இயக்கமொன்று அவர்களின் மார்க்க நம்பிக்கைகளுக்கு எதிரான இயக்கமொன்று என எம்மை குற்றச்சாட்ட தொடங்கியிருக்கிறார்கள். இவை எல்லாமே எமக்கு எடுத்துக்காட்டுவது சரித்த ஹேரத்தின் திஸ்ஸ அத்தநாயக்கவின் ரவூப் ஹக்கீமின் அரசியல் வங்குரோத்து நிலைமையையும் நிர்க்கதி நிமையையுமேயாகும். மக்களின் உண்மையான பிரச்சினைகள் பற்றிய தீர்வோ அதனை தீர்ப்பதற்கான ஆற்றலோ இவர்களுக்கு கிடையாது. எனவே இவர்களின் ஒட்டுமொத்த அரசியலும் குறைக்கூறல்கள் மற்றும் பொய்யான தகவல்களை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. கரு சம்பந்தப்பட்டு திருபுபடுத்தப்பட்ட செய்திகளை பரப்புகிறார்கள். நாங்கள் குறிப்பாக ஜம்மியத்துல் உலமா அமைப்பிற்கு இந்த இனவாத போக்கு பற்றியும் பொய்யான விடயங்கள் பற்றியும் எமது சார்பிலான விடயங்களை எடுத்துரைத்தோம்.
(-Colombo, August 19, 2024-) நேற்று (19) பிற்பகல் ஸ்ரீ மஹா போதி மஹா விகாரையில் அநுராதபுர அட்டமஸ்தானாதிபதி நுவரகலாவியே பிரதான சங்க நாயக்க கலைமுதுமாணி அதிசங்கைக்குரிய பல்லேகம ஹேமரத்தன நாயக்க தேரரை தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் தோழர் அநுர குமார திசாநாயக்க சந்தித்தார். இன்றளவில் நாட்டில் நிலவுகின்ற அரசியல் நிலைமை பற்றி அவருடன் கலந்துரையாடிய தோழர் அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் ஜனாதிபதி தோ்தலில் வெற்றி பெறுவதற்கான நல்லாசியையும் பெற்றுக்கொண்டார். அதே நாள் […]
(-Colombo, August 19, 2024-)
நேற்று (19) பிற்பகல் ஸ்ரீ மஹா போதி மஹா விகாரையில் அநுராதபுர அட்டமஸ்தானாதிபதி நுவரகலாவியே பிரதான சங்க நாயக்க கலைமுதுமாணி அதிசங்கைக்குரிய பல்லேகம ஹேமரத்தன நாயக்க தேரரை தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் தோழர் அநுர குமார திசாநாயக்க சந்தித்தார்.
இன்றளவில் நாட்டில் நிலவுகின்ற அரசியல் நிலைமை பற்றி அவருடன் கலந்துரையாடிய தோழர் அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் ஜனாதிபதி தோ்தலில் வெற்றி பெறுவதற்கான நல்லாசியையும் பெற்றுக்கொண்டார்.
அதே நாள் பிற்பகல் தருணத்தில் ருவன்வெலிசாய மஹா விகாரையில் அனுநாயக்க தேரரை தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் தோழர் அநுர குமார திசாநாயக்க சந்தித்தார்.
இன்றளவில் நாட்டில் நிலவுகின்ற அரசியல் நிலைமை பற்றி அவருடன் கலந்துரையாடிய தோழர் அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் ஜனாதிபதி தோ்தலில் வெற்றி பெறுவதற்கான நல்லாசியையும் பெற்றுக்கொண்டார்.
இத்தருணத்தில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் வசந்த சமரசிங்க பங்கேற்றார்.
(-தேசிய மக்கள் சக்தியின் விசேட ஊடக சந்திப்பு – 19.08.2024 – ம.வி.மு. தலைமை அலுவலகத்தில்-) குறிப்பாக இந்த ஊடக சந்திப்புக்கான அழைப்பு விடுக்கப்பட்டமைக்கான காரணம் தேசிய மக்கள் சக்தியின் தோ்தல் இயக்கம் தொடர்பில் பதற்றமடைந்துள்ள குழுக்கள் முன்வைக்கின்ற குறைகூறல்கள் பற்றிய எங்கள் தரப்பிலான கருத்துக்களை முன்வைப்பதற்காகும். இந்த ஊடக சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் பல்வேறு பங்குதாரர்களான அமைப்புகளை பிரதிநிதித்துவம் செய்கின்ற தோழர்கள் பங்குபற்றுகிறார்கள். எங்களுக்குத் தெரியும் தற்போதய அரசியல் மிகவும் தீவிரமான பாசறைகளாக மாறியிருக்கின்றனது. […]
(-தேசிய மக்கள் சக்தியின் விசேட ஊடக சந்திப்பு – 19.08.2024 – ம.வி.மு. தலைமை அலுவலகத்தில்-)
குறிப்பாக இந்த ஊடக சந்திப்புக்கான அழைப்பு விடுக்கப்பட்டமைக்கான காரணம் தேசிய மக்கள் சக்தியின் தோ்தல் இயக்கம் தொடர்பில் பதற்றமடைந்துள்ள குழுக்கள் முன்வைக்கின்ற குறைகூறல்கள் பற்றிய எங்கள் தரப்பிலான கருத்துக்களை முன்வைப்பதற்காகும். இந்த ஊடக சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் பல்வேறு பங்குதாரர்களான அமைப்புகளை பிரதிநிதித்துவம் செய்கின்ற தோழர்கள் பங்குபற்றுகிறார்கள்.
எங்களுக்குத் தெரியும் தற்போதய அரசியல் மிகவும் தீவிரமான பாசறைகளாக மாறியிருக்கின்றனது. எங்களின் எதிர் தரப்பான பாசறைகளின் ஒரே நோக்கமாக அமைவது இந்த பாராளுமன்றத்தில் நீண்டகாலமாக அமைச்சுப் பதவிகளை வகித்த அரசாங்கங்களை அமைத்தவர்களே இருக்கிறார்கள். அவர்களின் தோ்தல் இயக்கம் இந்த சிறப்புரிமைகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதாகும். அதாவது இந்த நாட்டை அதலபாதாளத்தில் தள்ளிவிட்ட மோசடிகள் ஊழல்கள் நிறைந்த கலாச்சாரத்தை ஏற்படுத்திய குழுக்கள் பகிர்ந்து கொள்வதிலான மல்லுக்கட்டலில் ஈடுபட்டுள்ளார்கள். ரணில் விக்கிரமசிங்க ஒரு பகுதியை அபகரித்துக் கொள்ள முயற்சி செய்கிறார். நாமல் ராஜபக்ஷ ஒரு பகுதியை வைத்துக்கொள்ள முயற்சி செய்கிறார். சஜித் பிரேமதாஸ ஒன்றுசோ்ந்த குப்பை மேடுகளை சோ்த்துக் கொள்ள முயற்சி செய்கிறார். அதுதான் அவர்களின் தோ்தல் இயக்கம்.
தேசிய மக்கள் சக்தியின் தோ்தல் இயக்கத்திற்கு நாங்கள் நீண்ட காலமாக தயாராகி வந்தோம். அதற்காக நாங்கள் பல்வேறு துறைகளை சார்ந்த அமைப்புக்களுடன் செயலாற்றி வந்தோம். சட்டத்தரணிகள் குழுக்கள், பொறியியலாளர்கள், கலைஞர்கள், தொழில்வாண்மையாளர்கள் இளைப்பாறிய முப்படை கூட்டமைப்பைச் சோ்ந்தவர்கள், அதைபோலவே ஏனைய இளைப்பாறியவர்கள், வலது குறைந்தோர், கமக்காரர்கள், மீனவர்கள், இவர்கள் அத்தனைபேரையும் நாங்கள் திட்டமிட்ட அடிப்படையில் அணிதிரட்டி வருகிறோம்.
அதனால் மக்கள் பலமே எங்களின் சக்தியாக மாறியிருக்கிறது. அவர்களின் சக்தியாக மாறியிருப்பது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்த அங்குமிங்கு தாவிக்கொண்டிருக்கின்றவர்களை ஒன்றுசோ்க்கின்ற அரசியலாகும். அதனால் தற்போது இந்த அரசியல் போராட்டக் களத்தில் கொள்கைப்பிடிப்புள்ள ஒரே ஒரு அரசியல் பாசறைதான் இருக்கிறது. தேசிய மக்கள் சக்தியின் அரசியல் பாசறையே அது. ஏனைய அரசியல் பாசறைகள் அனைத்துமே கொள்கை என்னவென்று கண்டுபிடிக்க முடியாத கட்சிகள் எது என அடையாளம் காணமுடியாத அளவிற்கு கலப்படைந்த பாசறைகளாக மாறியுள்ளது.
அதனால் நான் நினைக்கிறேன் இந்த தோ்தல் இயக்கத்தின் இந்த பாசறைகளின் பிரிகையிடலை உற்றுநோக்கினால் தேசிய மக்கள் சக்தியின் பலமான தன்மையும் அவர்களின் பலவீனமான தன்மையும் தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க நாங்கள் கடந்த 17 ஆம் திகதி எங்களுடைய தோ்தல் இயக்கத்தை தென்னிலங்கையில் தொடங்கினோம். தங்காலை, மாத்தறை, காலியில் பிரதான கூட்டத்தொடர்களை நடாத்தி நேற்றும் கிரிபத்கொட, கொலன்னாவ, கடுவெல மக்களை சந்தித்தோம்.
மக்கள் எம்மை நோக்கி பெருந்திரளாக அணிதிரண்டு வந்தார்கள். எங்களுடைய ஒட்டுமொத்த தோ்தல் இயக்கமும் நாட்டுக்கு என்ன நோ்ந்தது? அதாவது இவர்கள் வரலாற்றில் என்ன செய்தார்கள்? தற்போது நாட்டிலுள்ள நிலைமை என்ன? இதிலிருந்து மீட்டெடுப்பதற்கான வழிமுறை என்ன? ஆகிய விடயங்களை தெளிவுபடுத்தவும் அதிலிருந்து மீட்டெடுப்பதற்கான வழிமுறைகள் என்னவென்பதையும் அதற்கான மக்களின் இடையீடு பற்றியும் தெளிவுபடுத்துவதும் தான் எமது ஒட்டுமொத்த தோ்தல் இயக்கத்தின் உள்ளடக்கமாகும்.
ஆனால் எங்களுடைய எதிர்தரப்பினரின் தோ்தல் இயக்கம் என்ன? அவர்கள் மிகவும் பதறிப்போயிருக்கிறார்கள். நீண்டகாலமாக அங்குமிங்கும் ஊசலாடிக்கொண்டிருந்த அரசியல் இத்தகைய தனித்துவமான அரசியல் நிலைமாற்றமாக மாறுமென அவர்கள் ஒருபோதுமே எதிர்பார்க்கவில்லை. அந்த ஊழல் மிக்க நாசகார கும்பலிடமிருந்து பொதுமக்களின் இயக்கமொன்றுக்கு அதிகாரம் கைமாறுமென அவர்கள் கனவில் கூட நினைத்துப்பார்க்கவில்லை. இங்கும் அங்கும் மாறி மாறி தாவிக்கொண்டு அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள முடியுமென அவர்கள் சதாகாலமும் நினைத்தார்கள். சில வேளைகளில் மக்கள் அரசாங்கங்களை மாற்றுகிறார்கள். மக்கள் அரசாங்கங்களை மாற்றும்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் தரப்பினை மாற்றிக்கொள்கிறார்கள். இறுதியாக பார்க்கும்போது இவர்களில் பெரும்பாலானவர்கள் ஒன்றில் அமைச்சுப் பதவியை வகித்தவர்கள் அல்லது நீண்டகாலமாக பிரதியமைச்சர் பதவியை வகித்தவர்கள் அல்லது நீண்டகாலமாக அரசாங்கத்தில் இருந்தவர்களாவர்.
இவர்கள் தான் இப்பொழுது மூன்று குவியல்களாக பிரிந்திருக்கிறார்கள். நாங்கள் ஒரு பலம்பொருந்திய இயக்கம் என்ற வகையில் இதற்கு முகம்கொடுத்திருக்கிறோம். அவர்களின் சதாகால அரசியல் சூதாட்டமாக நிலவியது அங்குமிங்கும் அரசியல்வாதிகளை பொறுக்கியெடுத்து தோ்தல் மேடைகளில் ஏற்றி நாங்கள் இணைப்பிரியாத நண்பர்கள் என்று கூறி மக்களை ஏமாற்றுவதாகும். இப்போது அந்த அரசியல் முற்றாகவே நீங்கிவிட்டது.
கொள்கைப்பிடிப்புள்ள, திட்டமிட்ட அடிப்படையிலான அரசியலில் தேசிய மக்கள் சக்தி பிரவேசித்துள்ளது. அதனால் எதிரிகள் கட்டுக்கடங்காமல் பதறிப்போயிருக்கிறார்கள். மிகவும் பொய்யான, சமூகம் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளாத குறைகூறல்களை முன்வைத்து வருகிறார்கள். நாங்கள் அதிகாரத்திற்கு வந்தால் எத்கந்த விகாரையின் பெரஹெராவை நிறுத்துவோம் என குருணாகலில் ஐக்கிய மக்கள் சக்தி மேடையில் ஒரு உறுப்பினர் கூறினார்.
நான் இதைப்பற்றி ஒருபோதுமே கூறவேண்டுமென நினைக்கவில்லை. அந்த கூற்றினைவிடுத்த உறுப்பினர் முப்பது நாற்பது தடவைகளுக்கு மேல் எங்களை எடுத்துக்கொள்வீர்களாக என எங்களுக்கு பின்னால் வந்து கெஞ்சிக்கொண்டிருந்தார். அவர் எனக்கு வட்சப் மூலமாக செய்திகளை அனுப்பிவைத்திருக்கிறார் எங்களுக்கு சார்பாக அவர் குரல் கொடுத்ததாக, அந்த வீடியோக்களை எங்களுக்கு அனுப்பிவைத்துள்ளார். பாருங்களே உங்களுக்காக நான் எவ்வளவோ குரல் கொடுத்திருக்கிறேன் என்று. இவற்றையெல்லாம் நான் கூறவேண்டுமென நினைக்கவே இல்லை. ஆனால் இப்போது அவர் மேடையில் ஏறிக் கூறுகிறார் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் பெரஹெராக்களை நிறுத்திவிடுவதாக. அதனால் அதற்கு பின்னர் எங்களுடன் இணைந்து கொள்வதற்காக வரிசையில் நின்றுக்கொண்டிருந்தார். எனவே இவர்கள் மிகவும் கொச்சைத்தனமான குறைக்கூறல்களில் பிரவேசித்துள்ளார்கள். எனவே இந்த நாட்டின் நாகரீகம், இந்த நாட்டின் ஒழுக்கநெறிகள் கட்டியெழுப்பப்பட்டுள்ள விதத்தை நன்றாக உணர்ந்து கொண்ட அரசியல் இயக்கமே நாங்கள். ஒவ்வொரு மக்கள் சமுதாயத்திற்கும் தனக்கென தனித்துவமான அடையாளங்கள் இருக்கின்றன.
தனித்துவமான கலாச்சார வைபவங்கள் இருக்கின்றன. தேசிய மக்கள் சக்தியின் எதிர்பார்ப்பு என்ன? அந்த தனித்துவமான கலாச்சார வைபவங்கள், சமய விழாக்கள், தனித்துவமான மதச் சம்பிரதாயங்கள் என்பவற்றை நன்றாக பாதுகாத்து, அவற்றுக்கு மதிப்பளித்து அவற்றை பாதுகாத்து வருங்கால சந்ததியினருக்கு ஒப்படைப்பதே தேசிய மக்கள் சக்தியின் நோக்கமாகும். ஆனால் அதற்கு எதிரான கருத்துக்களையே முன்வைத்து வருகிறார்கள்.
அதைப்போலவே நீங்கள் கண்டிருப்பீர்கள் இரத்தினபுரி பக்கத்திற்கு போய் நாங்கள் வந்ததும் சுரங்க வேலைகளை நிறுத்தி விடுவதாக கூறினார்கள். நாங்கள் வருவது இந்த நாட்டில் இரத்தினக்கல் கைத்தொழிலை விருத்தி செய்து, எங்களுடைய ஒட்டுமொத்த கொள்கை பிரகடனத்திலும் அதிகமான பங்கினை எங்களுடைய கனிம வளங்களை விருத்தி செய்தல் பற்றி குறிப்பிட்டிருக்கிறோம். எங்களுடைய இரத்தினக்கல் வளங்கள் இப்போது வீணாகிக்கொண்டிருக்கிறது. இரத்தினக்கல் கைத்தொழிலை எங்களால் விருத்தி செய்ய முடியும். இப்போது இரத்தினக்கற்களே இல்லாத ஹொங்கொங் போன்ற நகரங்கள் தான் இரத்தினக்கல் கேந்திர நிலையமாக மாறியுள்ளன. அதனை இலங்கைக்கு கொண்டுவருவது எங்களுடைய நோக்கமாகும். ஆனால் அதற்கு நோ்எதிரான கருத்துக்களையே அவர்கள் கூறிவருகிறார்கள்.
இப்போது புனைந்துள்ள புத்தம்புதிய கதை என்ன? சமூகத்தில் பீதிநிலையை விதைத்து வருகிறார்கள். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வந்தால் இப்படி நடக்கும், அப்படி நடக்கும் எனக்கூறுகிறார்கள். நாங்கள் தெளிவாகக்கூறுகிறோம் எமது நாட்டின் வரலாற்றில் அரசாங்கங்கள் மாறினால் எதிர் தரப்பினரை பழிவாங்குகின்ற வரலாறு தான் நிலவியது. உங்களுக்குத் தெரியும் 1977 இல் ஜே.ஆர். ஜயவர்தன அரசாங்கத்தை அமைத்ததும் பொலிசுக்கு விடுமுறை வழங்கினார். பொலிஸிலிருந்த இளைப்பாறிய டி.ஐ.ஜி இற்கு அது தெரியும். அவ்வாறு விடுமுறை வழங்கி வீடுகளை தீக்கிறையாக்க, மக்களை படுகொலை செய்ய இடமளித்தார். அவர்கள் அப்படித்தான் தோ்தல் வெற்றியை கொண்டாடினார்கள். பின்னர் வீடுகளைத் தாக்கி தீமூட்ட தொடங்கினார்கள். மற்றவர்கள் மீது உலை எண்ணையை ஊற்றித்தான் பெற்றோலியக்கூட்டுத்தாபனத்தில் தோ்தல் வெற்றியை கொண்டாடினார்கள். அந்த ஊழியர்களுக்கு வேலைக்கு வர இடமளிக்காமல் தான் இ.போ.ச. வெற்றியை கொண்டாடும். அந்த ஊழியர்களை கேற்றுக்கு உள்ளே வர இடமளிக்காமல் தான் துறைமுகத்திலுள்ளவர்கள் வெற்றியை கொண்டாடுவார்கள். அவ்வாறான அசிங்கமான அரசியல் கலாச்சாரம் தான் எமது நாட்டில் நிலவியது. நாங்கள் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்றை அமைக்கிறோம் என்றால் என்ன? எங்களுக்கு வாக்களித்த – எங்களுக்கு வாக்குகளை அளிக்காத எவருக்குமே இருக்கின்ற ஜனநாயக ரீதியான உரிமைக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். தமக்கு விருப்பமான அரசியலில் ஈடுபட, வாக்குகளை அளிக்க வாக்காளர்களுக்கு உரிமை உண்டு. ஆனால் எங்களுக்கு அரசாங்கம் என்ற வகையில் அந்த அனைவரையும் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு உண்டு. நாங்கள் எங்களுடைய அங்கத்தவர்களிடம் கேட்டுக்கொள்வதும் இந்த நாட்டுக்கு அறிவிப்பதும் தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு பின்னர் எந்த விதமான எதிர் தரப்பினருக்கும் எதிர் தரப்பினருக்கு வாக்களித்தவர்களுக்கும் ஒரு துளியேனும் பங்கமேற்படக்கூடிய வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என்பது தான். அதற்கு தேசிய மக்கள் சக்தி இடமளிக்கமாட்டாது. எங்களுடைய பொறுப்பு அது தான்.
அடுத்ததாக இவர்கள் குறைக்கூற தொடங்கியிருக்கிறார்கள் நாங்கள் தொழில் முயற்சிகளை பறிமுதல் செய்யப்போகிறோமென. நாங்கள் இவற்றை அளவிற்கு அதிகமாகவே கூறிவந்திருக்கிறோம். எனவே தற்போது அவர்களுடைய ஒட்டுமொத்த தோ்தல் இயக்கமும் குறைக்கூறல் என்கின்ற தொனிப்பொருளிலேயே இயங்கி வருகிறது. நான் கண்டேன் ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கிறார் ராஜபக்ஷ தப்பியோடிய வேளையில் அரசாங்க பொறுப்பினை ஏற்குமாறு எங்களுக்கு அழைப்பு விடுத்தார்களாம் நாங்கள் ஓடி ஒளிந்தோமென. ரணில் விக்கிரமசிங்க அவர்களே நீங்கள் ஒரு ஜனாதிபதி. ரணிலின் அளவிற்கு அதைக்கூறினால் பரவாயில்லை. ஆனால் ஜனாதிபதி பதவிக்கு அவ்வாறான விடயங்களை கூறுவது பொறுத்தமற்றது. நன்றாகவே தெரியும் தேசிய மக்கள் சக்திக்கு கோட்டாபயவோ மஹிந்தராஜபக்ஷவோ அரசாங்க பொறுப்பினை ஏற்றுக்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கமாட்டார்கள். எங்களுக்கு அழைப்பு விடுக்கவுமில்லை. அதற்காக நாங்கள் ஆச்சர்யப்படபோவதுமில்லை. நீங்கள் நினைக்கிறீர்களாக ராஜபக்ஷாக்கள் ஒரு தாம்பாளத்தில் வைத்து எங்களுக்கு இதை ஒப்படைப்பார்கள் என்று. அப்படி ஒப்படைக்க மாட்டார்கள். மே மாதம் 12 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபயவிற்கு ஒரு கடிதத்தை எழுதினோம். இந்த நெருக்கடியை தீர்த்து வைக்க தேசிய மக்கள் சக்தி தயார். எங்களுக்கு அதிகாரத்தை தாருங்கள் என்று. குறைந்தபட்சம் அந்த கடிதம் கிடைத்தது என்றுகூட எங்களுக்கு பதில் கிடைக்கவில்லை. அடுத்ததாக பாராளுமன்றத்தில் நான் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் ஜனாதிபதி பதவிக்காக போட்டியிட்டேன். எங்களுக்கு வாக்களித்திருக்கலாமே. அன்று பாராளுமன்றத்தில் நாங்கள் மூன்று போ் மாத்திரமே இருந்தோம். எங்களுக்கு சார்பாக பாராளுமன்றத்தில் எவருமே வாக்களிக்கவில்லை. அதற்கான காரணம் என்ன? அவர்கள் ஒருபோதுமே எங்களுக்கு அப்படி அதிகாரத்தை கொடுக்கமாட்டார்கள். ஏன்? அவர்களுக்கு தெரியும் தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரத்தை பெற்றுக்கொடுப்பதென்பது ஊழலுக்கும் மோசடிக்குமான முற்றுப்புள்ளியென. அவர்களுக்கு தண்டனை வழங்குவதை நாங்கள் பிரதான காரணமாக கொண்டிருக்கிறோமென்று. எனவே ரணில் விக்கிரமசிங்கவும் அவருடைய கையாட்களும் தொடர்ச்சியாக நாங்கள் தப்பியோடினோமென கூறிவருகிறார்கள். ஆனால் நாங்கள் அப்படி தப்பியோடியவர்களல்ல. தேசிய மக்கள் சக்தியை சோ்ந்த நாங்கள் ஒருபோதுமே பயந்து ஓடுபவர்களல்ல. இந்த சவாலை நாங்கள் ஏற்றுக்கொள்வதும் பயந்தோடுவதற்காக அல்ல. சீரழிந்துள்ள நாட்டை, பொருளாதாரம் சீரழிந்துள்ள விதத்தை, குற்றச் செயல்கள் மலிந்துள்ள விதத்தை, கடனை மீளச்செலுத்த முடியாதுள்ள விதத்தை கண்டு நாங்கள் தப்பியோடத்தான் வேண்டும். ஆனால் நாங்கள் அந்த பொறுப்பினை ஏற்றுக்கொள்ளத் தயார். ரணில் விக்கிரமசிங்கவுக்கு நான் கூற விரும்புவது நீங்கள் ரணிலாக நடந்து கொள்வதில் தவறில்லை. ஆனால் ஜனாதிபதி பதவியின் அந்தஸ்த்தினை விளங்கிக்கொண்டு நடக்கவேண்டும். அதைத்தான் கூறுகிறேன். எனவே உங்களுடைய தோ்தல் இயக்கத்தின் பிரதான தொனிப்பொருள் குறைக்கூறலாகும்.
வரலாற்றில் ஏற்பட்ட ஒரு சில படுகொலைகளுடன் அவர்கள் தோ்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அவ்வாறு அந்த இயக்கத்தை தயாரித்துக் கொண்டிருப்பவர்கள் எங்களுக்கு தகவல்களை கூறிவருகிறார்கள். ரணில் விக்கிரமசிங்கவிடம் நான் கூறுவது முதலில் அவ்வாறு தயாரிப்பவர்களிடம் ஒரு வாக்கெடுப்பினை நடத்துமாறு. தேசிய மக்கள் சக்தி உண்மையை அடிப்படையாகக் கொண்டே தனது தோ்தல் இயக்கத்தை முன்னெடுத்து வருகிறது. இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்துடனாகும். இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான நோ்மை, விடய அறிவுபடைத்த, நாட்டை கட்டியெழுப்புவதற்கான தென்புடையவர்களாக இடையீடு செய்கின்ற ஒரு குழுவை உள்ளடக்கியதுதான் தேசிய மக்கள் சக்தி. அது தான் அதிகாரத்தை கோரி நிற்கிறது. எனவே ரணில் விக்கிரமசிங்க என்ன கூறினாலும் சஜித் பிரேமதாஸ என்ன கூறினாலும் இந்த செப்டெம்பர் 21 ஆம் திகதி மக்களிடம் கேட்டுக்கொள்வது நீங்கள் விழிப்புடன் இருங்கள். தோன்றியுள்ள நிலைமையை மாற்றியமைப்பதற்கான மிகவும் பொறுத்தமான வாய்ப்பே உருவாகியிருக்கிறது. முதல் தடவையாக மக்களின் அரசாங்கமொன்றை அமைப்பதற்கான தருணம் உதயமாகியிருக்கிறது. இந்த நிலைமையை கைநழுவிச் செல்ல இடமளிக்காமல் நாம் அனைவரும் ஒன்று சேருவோமென எமது நாட்டின் வாக்களர்களுக்கும் புதுப் பிரஜைகளுக்கும் அழைப்புவிடுக்கிறோம்.