(-பெருவெற்றிக்கான களுத்துறை கூட்டம் – 18-09-2024-) இன்று பிரச்சார வேலைத்திட்டத்தின் இறுதி நாள். தோ்தல் சனிக்கிழமை. பெறுபேறு ஞாயிற்றுக்கிழமை என்ன நடக்கும்? இது வெற்றிபெறக்கூடிய ஒரு தோ்தல் நிச்சயமாக தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறும். நீண்ட காலமாக எமது நாட்டு மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்திருந்தார்கள். அதற்காக அயராது உழைத்தார்கள். பல காலமாக பல்வேறு இன்னல்களை மக்கள் எதிர்நோக்கினார்கள். நீதி, நியாயத்திற்காக போராடினார்கள். பல விதமான போராட்டங்களை நடாத்தினார்கள். ஆனால் எங்களால் இறுதி வெற்றியை பெற்றுக்கொள்ள முடியவில்லை. […]
(-பெருவெற்றிக்கான களுத்துறை கூட்டம் – 18-09-2024-)
இன்று பிரச்சார வேலைத்திட்டத்தின் இறுதி நாள். தோ்தல் சனிக்கிழமை. பெறுபேறு ஞாயிற்றுக்கிழமை என்ன நடக்கும்? இது வெற்றிபெறக்கூடிய ஒரு தோ்தல் நிச்சயமாக தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறும். நீண்ட காலமாக எமது நாட்டு மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்திருந்தார்கள். அதற்காக அயராது உழைத்தார்கள். பல காலமாக பல்வேறு இன்னல்களை மக்கள் எதிர்நோக்கினார்கள். நீதி, நியாயத்திற்காக போராடினார்கள். பல விதமான போராட்டங்களை நடாத்தினார்கள். ஆனால் எங்களால் இறுதி வெற்றியை பெற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் இந்த செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி அந்த வெற்றியை எங்களால் பெற்றுக்கொள்ள முடியுமென நினைக்கிறோம். உண்மையை எடுத்துக்கொண்டால் எமது மூதாதையர் எங்களுடைய பழைய தலைமுறையினர் இந்த துன்பங்களிலிருந்து விடுபட அநீதிக்கு எதிராக நியாயமான ஒரு சமூகத்திற்காக இந்த அநாகரிகத்திற்கு பதிலாக நாகரிகத்திற்காக நீண்டகாலமாக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டார்கள். அந்த முயற்சிகளுக்கான பெறுபேறு எதிர்வரும் 21 ஆம் திகதி கிடைக்குமென்பது நிச்சயம். இந்த வெற்றியின்போது நாங்கள் ஆற்றிய ஒரு பணி இருந்தது. நாங்கள் திட்டங்களை வகுக்கிறோம். வேலைத்திட்டத்தை வகுக்கிறோம். வேலையை செய்யக்கூடிய குழுவினரை இனங்காண்கிறோம். கருத்தியலை சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்வதற்காக இவ்வாறான கூட்டங்களை நடாத்துகிறோம். அது எங்களின் பங்கு. ஆனால் இந்த வெற்றிக்கான மிக பெரிய பங்கினை எங்கள் முன் இருக்கின்ற நீங்கள் தான் செய்கிறீர்கள். நீங்கள் பல வருடங்களாக வட்டார சபைகளை அமைத்து, பெண்கள் சபைகளை அமைத்து, வீடுவீடாகச் சென்று எத்தனை தடவைகள் மக்களை சந்திக்க போயிருப்பீர்கள். நாங்கள் ஒவ்வொருவரையும் சந்தித்து இந்த கட்டத்தை அடைந்திருக்கிறோம்.
தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை பிரார்த்திக்கின்ற மக்களின் முகங்களில் தெரிகின்ற எதிர்பார்ப்பினை நீங்கள் பாருங்கள்
இதற்கு முன்னர் தோ்தல் தினம் பற்றி நாட்களை எண்ணிக்கொண்டிருந்தவர்கள் அரசியல்வாதிகள் தான். ஆனால் இலங்கையில் முதல் தடவையாக தோ்தல் எப்போது நடைபெறும் என இந்த தடவை மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அது வரலாற்றில் முதல் தடவையாகும். ஒரு சிலர் கூறுகிறார்கள் தேசிய மக்கள் சக்தியின் இந்த எழுச்சி ஒரு வகையான பகைமையின் வெளிப்பாடு என்று. ஏனைய கட்சிகள் மீதான பகைமை. அத்துடன் விரக்தியே இதற்கான காரணமென கூறுகிறார்கள். அது ஆரம்ப காலகட்டமாக அமையலாம். ஏனைய இயக்கங்களிலிருந்து பிரிந்து செல்ல, விலகிச் செல்ல விரக்தி நிலை காரணமாக அமையக்கூடும். ஆனால் இன்று தேசிய மக்கள் சக்தியைச் சுற்றி குழுமியிருக்கும் மக்கள் விரக்தி அல்லது பகைமை காரணமாகவன்றி எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்பு காரணமாகவே மக்கள் எம்மைச் சுற்றி குழுமியிருக்கிறார்கள். நீங்கள் பாருங்கள் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை பிரார்த்திக்கின்ற மக்களின் முகங்களில் தெரிகின்ற எதிர்பார்ப்பினை. எதிர்காலம் பற்றிய கனவு அவர்களுடைய முகங்களில் தெரிகின்றது. அதனாலேயே இலட்சக்கணக்கான மக்கள் எம்மைச் சுற்றி குழுமியிருக்கிறார்கள்.
நீண்ட ஒரு பயணத்திற்கான காரணம் முதலாவது சிறிய அடியெடுப்பே என்பது எங்களுக்கு தெரியும்
செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி அதற்கான முதலாவது அடியெடுப்பு வைக்கப்படும். நீண்ட ஒரு பயணத்திற்கான காரணம் முதலாவது சிறிய அடியெடுப்பே என்பது எங்களுக்கு தெரியும். அது தான் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி அடியெடுப்பு. நாங்கள் மக்களிடம் கேட்டுக்கொள்வது 21 ஆம் திகதி காலையிலேயே வாக்களிப்பு நிலையத்திற்கு செல்லுங்கள். திசை காட்டியின் முன்னால் புள்ளடியிட்டு வாக்குகளை பதிவு செய்யுங்கள். 1, 2, 3 அதைப்பற்றியெல்லாம் யோசிக்க வேண்டாம். பெயர் இருக்கிறது சின்னம் இருக்கிறது. புள்ளடியிடுங்கள் அது போதும். அவ்வளவு தான். பெறுபேறுகள் வெளிவரும்போது நாங்கள் வெற்றியடைந்திருப்போம். வெற்றிக்கு பின்னர் நாங்கள் எந்த விதமான மோதலிலும் ஈடுபடக்கூடாது. ஏனைய கட்சியைச் சோ்ந்தவர்களுக்கு ஏனைய கட்சிக்காக உழைத்தவர்களுக்கு எந்த விதத்திலும் தொந்தரவு செய்ய வேண்டாம். நாங்கள் எமது நாட்டின் அரசியல் கலாச்சாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். நாங்கள் தோ்தல் காலத்தில் அவர்களுக்கு விடயங்களை எடுத்துக்கூறுகிறோம். மாற்றமடையுமாறு வேண்டுகோள் விடுக்கிறோம். ஆனால் வேறொரு கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதற்கான அவர்களுடைய உரிமையை வாக்களிப்பதற்கான உரிமையை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஏனென்றால் அது சனநாயக ரீதியான உரிமை. எனவே எமது வெற்றிக்கு பின்னர் வரலாற்றில் இடம்பெற்றது போல் தாக்குதல், துப்பாக்கிச் சூடுகள், சீரீபீ என்றால் கறுப்பெண்ணை ஊற்றுதல், துறைமுகமென்றால் கடமைக்கு வரவிடாமை, சமுர்த்தி வெட்டுதல், இடமாற்றம் செய்வதாக அச்சுறுத்துதல் இவை எதுவுமே இடம்பெறலாகாது. ஏனென்றால் தோ்தல் வரை நாங்கள் பிரிந்திருக்கலாம். தோ்தலுக்கு பின்னர் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காக நாங்கள் அவர்கள் அனைவரையும் ஒன்றுசோ்த்துக் கொள்ளவேண்டும்.
வாகனங்கள் புடைசூழ மக்களின் பணத்தை விரயமாக்கிக் கொண்டு பயணிக்கின்ற இந்த கலாச்சாரத்தை இல்லாதொழிப்போம்.
எனவே எதிர்தரப்பினர் திட்டமிட்ட அடிப்படையிலான சதிவேளைகளில் ஈடுபட்டு மோதல்களை உருவாக்க எத்தனித்தால் நீங்கள் ஒருபோதுமே அதில் பங்கேற்க வேண்டாம். நாங்கள் பொலிஸாரிடம், முப்படையினரிடம் அவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகார எல்லைக்குள் மோதல்கள் ஏற்படுவதை தடுப்பதற்காக அவர்களின் கடமையை ஈடேற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம். எமது நாட்டு அரசியலில் மோசடி, ஊழல், விரயம் என்பவையே மையப்பொருளாக இருக்கிறது. நாங்கள் அவை ஒழிக்கப்பட்ட ஒரு கலாச்சாரத்தை இலங்கை அரசியலில் அறிமுகம் செய்வோம். அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆட்சியாளர்கள் மக்களுக்கு மேலாக இருக்கின்ற நிலைமை தான் காணப்படுகிறது. அவர்கள் சட்டத்திற்கு மேலாக இருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரும் சட்டத்திற்கு கட்டுப்படுகின்ற அரசியல் நிலைமையை நாங்கள் உருவாக்குவோம். வாகனங்கள் புடைசூழ மக்களின் பணத்தை விரயமாக்கிக் கொண்டு பயணிக்கின்ற இந்த கலாச்சாரத்தை இல்லாதொழிப்போம். பிரஜைகளுடன் சமமாக இருக்கக்கூடிய அரசியலை தேசிய மக்கள் சக்தி உருவாக்கும். இதனை நாங்கள் கட்டம் கட்டமாக சாதிப்போம். எமது நாட்டில் எந்தவொரு நேரத்திலும் எந்தவொரு இடத்திலும் இனவாதத்திற்கு, மதவாதத்திற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம். இனவாத, மதவாத முரண்பாடுகள், அவ்வாறான கூற்றுக்கள், கருத்தியல்கள் இனிமேல் இலங்கையில் நிலவ முடியாது. இலங்கையில் தேசிய ஒற்றுமை பற்றிய எதிர்பார்ப்பு மாத்திரமே நிலவ முடியும். நாங்கள் எங்கள் தோ்தல் இயக்கத்தில் அந்த முன்மாதிரியை நன்றாகவே வெளிக்காட்டியிருக்கிறோம். எங்களுடைய தோ்தல் மேடையில் இனவாத, மதவாத போராட்டக்கோஷங்களுக்கு இடமில்லை.
பிறரது கலாச்சார அடையாளங்களை எமது அரசியலுக்கு பிரயோகித்துக்கொள்வது இந்த யுகத்தின் தலைசிறந்த அரசியல் எடுத்துக்காட்டாகும்.
ஆனால் இறுதிக்கூட்டத்தில் கவலையுடனேனும் தெரிவித்துக்கொள்ள வேண்டிய விடயம் சஜித் பிரேமதாசவின் ஒட்டுமொத்த பாசறையுமே இனவாத, மதவாத முரண்பாட்டுக்கான கருத்தியலை விதைத்து வருகின்றது. நாங்கள் வந்ததும் பெரஹேராக்களை நிறுத்துவோமாம். பிக்குமார்களுக்கு தானம் கிடைக்காமல் போய்விடுமாம். தேசிய கொடியை மாற்றியமைத்தல், மதச்சார்பற்ற நாட்டை உருவாக்குதல் போன்ற மிகவும் கீழ்த்தரமான குறைகளைக் கூறத்தொடங்கினார்கள். பிக்குமார்களுக்கு தானம் கொடுக்கும்போது யு.என்.பி., ஸ்ரீலங்கா எனப் பிரிந்தா கொடுக்கிறார்கள்? மறுபுறத்தில் முஸ்லீம் மக்கள் மத்தியில்சென்று ஹஜ்ஜி, ரமழான் ஆகிய இரண்டு வைபவங்களை நடாத்த விடாமல் ஒன்றுக்கு மாத்திரம் மட்டுப்படுத்துவதாக கூறுகிறார்கள். ஐந்து தடவைகள் தொழுவதை ஒரு தடவைக்கு மட்டுப்படுத்துவதாக கூறினார்கள். ஒருபோதுமே தேர்தல் மேடைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாத இனவாத, மதவாத, பழங்குடிவாத போராட்டக் கோஷங்களை சஜித் பிரேமதாசவின் தேர்தல் இயக்கத்தில் பிரயோகி த்தார்கள். ஒருவிதத்தில் நான் வியப்படையப் போவதில்லை. சஜித் பிரேமதாசவிற்கு இந்த நாட்டின் பொருளாதாரம், சனநாயகம் உள்ளிட்ட ஆழமான எண்ணக்கருக்கள் பற்றிய கருத்து கிடையாது. அவருடைய அரசியல் சேறுபூசுதலும் பொய் கூறுவதும் தான். யானைகளின் அட்டகாசம் நிலவுகின்ற பிரதேசங்களுக்குச்சென்று யானை மந்திரம் மனனம்செய்வித்தல் மூலமாக தீர்வு பெற்றுக்கொடுப்பதாக ஆழமான நோக்கினைக்கொண்ட ஒருவர் கூறுவாரா? எமது நாடு முகங்கொடுத்துள்ள ஆழமான தோற்றுவாய்கள், அவை வளர்ந்தவிதம், தீர்வுகளைக் காணுதல் பற்றிய எந்தவிதமான கருத்தும் கிடையாது. பிறரது கலாச்சார அடையாளங்களை எமது அரசியலுக்கு பிரயோகித்துக்கொள்வது இந்த யுகத்தின் தலைசிறந்த அரசியல் எடுத்துக்காட்டாகும். தேசிய மக்கள் சக்தியே அதனைக் பெற்றுக்கொடுத்தது என்பதையிட்டு மகிழ்ச்சி அடைகிறோம். நாங்கள் வடக்கிற்கு சென்று இந்த கதையை எவ்வாறு கூறுகின்றோமோ அதேபோல்தான் கிழக்கிற்கும் போய் கூறுகிறோம். தெற்கிற்கும் அதைத்தான் கூறுகிறோம். தேசிய மக்கள் சக்தியால் மாத்திரமே அவ்வாறு கூறமுடியும். நாங்கள் அதற்காக மகிழ்ச்சியடைகிறோம். ஆரம்பத்தில் எமக்கு தெற்கில் மாத்திரம்தான் வெற்றிகிடைக்குமென்ற ஐயப்பாடு நிலவியது. தெற்கில் மாத்திரம் பெறுகின்ற வெற்றி எமது எதிர்கால அரசியல் இலக்குகளுக்கு போதுமானதாக அமையமாட்டாது. அண்மையில் நாங்கள் கிழக்கிலங்கையில் பல நகரங்களில் கூட்டங்களை நடாத்தினோம். அந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் இதனையொத்த வகையில் எமக்கு செவிசாய்க்க வந்திருந்தார்கள். யாழ்ப்பாணம் சென்று பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், வங்கி உத்தியோகத்தர்களை உள்ளிட்ட தொழில்வாண்மையாளர்களை நாங்கள் சந்தித்தோம். பெருந்தொகையான வடக்கு மக்கள் தேசிய மக்கள் சக்திமீது விருப்பம்கொண்டவர்களாக இருப்பதாக அவர்கள் கூறினார்கள். வடக்கை பிரதிநிதித்துவம் செய்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் தபால்மூல வாக்களிப்பபு எமக்கு எப்படி எனக் கேட்டேன். ஆரம்பத்தில் நூற்றுக்கு 10 சதவீதமாக அமையுமென நினைத்தாலும் இப்போது அது நூற்றுக்கு 40 வீதத்தை விஞ்சிசென்றுவிட்டதாக அனுமானிப்பதாகக் கூறினார்.
கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, வீடமைப்பு, உணவு என்பவை ஓர் அரசாங்கத்தால் கைவிட முடியாத பொறுப்பாகும்.
குறுகிய காலத்திற்காக உயிர்வாழ்வதில் சிரமங்களை எதிர்நோக்குகின்ற மக்களுக்கு ரூபா 10,000 இல் இருந்து ரூபா 17,500 வரையான கொடுப்பனவினை செலுத்துவோம். ஆசியாவில் மிகவுயர்ந்த மின் கட்டணம் எமது நாட்டிலேயே அறவிடப்படுகின்றது. உணவு, சுகாதாரம், கல்வி ஆகியவற்றுக்கு முழுமையாகவே வரிவிலக்கு அளிப்போம். பொருளாதாரம் பற்றிய ஆழமான மாற்றங்களை ஏற்படுத்த முன்னராக மக்களுக்கான இந்த நலன்புரி பணிகளைச்செய்வோம். கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, வீடமைப்பு, உணவு என்பவை ஓர் அரசாங்கத்தால் கைவிட முடியாத பொறுப்பாகும். குறுகிய காலத்தில் பயணிகள் போக்குவரத்தில் நூற்றுக்கு 70 வீதத்தை பொதுப்போக்குவரத்தில் அடக்குவது எமது நோக்கமாகும். ஆரோக்கியமான வாழ்க்கைக்காக சிறந்த சுகாதாரசேவையை வழங்கவது எமது நோக்கமாகும்.
நெருக்கடியின் சிருஷ்டிகர்த்தா ரணில் விக்கிரமசிங்க ஆவார்
அடுத்த 21 ஆந் திகதி வெறுமனே ஆட்சியாளர்களை மாற்றியமைப்பது மாத்திரம் இடம்பெறப் போவதில்லை. பலநூற்றாண்டு காலமாக நாங்கள் கண்ட கனவினை ஈடேற்றுவதே எமது நோக்கமாகும். இதைவிட சிறந்த நாட்டை உருவாக்குகின்ற யுகப் புரட்சியையே நாங்கள் செய்யப்போகிறோம். உற்பத்திக்கு உயிர்கொடுக்கக்கூடிய அனைத்து இடங்களையும் இனங்கண்டு மீளவும் உயிர்கொடுத்து மறுமலர்ச்சியை ஏற்படுத்துவோம். அதற்காக கமக்காரன், மீனவன், தொழிலாளி, இளைஞன் மாத்திரமன்றி அரச ஊழியர்களைப்போன்றே பொலீஸாரை உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் தத்தமது துறைகளில் இலக்ககளைக் கொண்டவர்களாக இயங்குவார்கள். அடிமட்டத்திற்கே விழுந்த நாட்டை கட்டியெழுப்புவதையே நாங்கள் செய்வோம். அந்த பயணத்தின்போது தேசிய மக்கள் சக்தி அதிகாரத்திற்கு வந்தால் எரிவாயு இல்லாமல் போய்விடும், எரிபொருள் இல்லாமல் போய்விடும் என ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார். அவர் என்ன எரிவாயுப் படிவுகளின் உரிமையாளரா? உண்மையை எடுத்துக்கொண்டால் இந்த எல்லா வரிசைகளினதும் மூலகர்த்தா ரணில் விக்கிரமசிங்க ஆவார். அப்பாவி கோட்டாபய தலையைக் கொடுத்தார். உண்மை அதுதான். 2022 ஏப்பிறல் மாதத்தில் கடனைச்செலுத்த முடியாமல் ஆப்பு வைத்தவர் ரணில்தான். அதற்கான காரணம் சர்வதேச இறையாண்மை முறிகள் மூலமாக பெறப்பட்ட கடன்களை மீளச்செலுத்த முடியாமல் போனமையாகும். மின்சாரத்தை பிற்பிக்க எரிபொருள் கொண்டுவர பணம் இல்லாமல் போயிற்று. நெருக்கடியின் சிருஷ்டிகர்த்தா ரணில் விக்கிரமசிங்க ஆவார். மக்களுக்கு எஅத்தியாவசிய பண்டங்கள் இடையறாமலும், தரமிக்கவையாகவும், தட்டுப்பாடின்றியும் வழங்குவதற்காகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறுவப்படுகின்றது. நாட்டில் டொலர் தட்டுப்பாட்டிளை உருவாக்கிய ரணில் விக்கிரமசிங்க இன்று கூறுகிறார் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் ஒரு டொலர் ரூபா 400.00 ஆக மாறுமென்று. ஆனால் அந்த நிலைமையை உருவாக்கியவர்கள் ரணில் விக்கிரமசிங்கவே. சேனைகளும் வயல்வெளிகளும் பாழடைந்தன. கங்குங் கீரை, வெங்காயம், பயறு, உளுந்து, கவ்பி, குரக்கன் , முட்டை, விதையினங்கள், மருந்துவகைகள் எல்லாமே வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டமையே ரணில் விக்கிரமசிங்க கடைப்பிடித்த பொருளாதாரக் கொள்கையாகும். எல்லாவற்றையும் சீரழித்து பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை மாத்திரமே டொலர்களை ஈட்டுவதற்கான ஒரே வழிவகையாக மாற்றிக்கொண்டார். பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைப்பதை டொலர் ஊற்றாக மாற்றிக்கொண்டார். டொலர் தட்டுப்பாடு தோன்றுகையில் இருப்பவற்றை விற்று டொலர்களை கடனாகப் பெற்றார். பொருளாதாரம் அவ்வாறுதான் வீழ்ச்சியடைந்தது.
பலநூற்றாண்டு காலமாக கைநழுவிய வெற்றியைப் பெற்றுக்கொள்ள கைதளராமல் ஒன்றுசேருமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த நிலைமையை திசைதிருப்பி டொலர் வெளியில் பாய்ந்துசெல்வதை தடுத்து டொலர் உள்ளே பாய்ந்துவருகின்ற நிலைமையை வளர்த்துக்கொள்கின்ற வழிமுறைகளை அமுலாக்கும். 1977 இல் பாராளுமன்றத்திற்கு வந்து எந்த நாட்டை ஒரு சப்பலாக மாற்றிக்கொண்டு இற்றைவரை பல்வேறு பதவிகளை வகித்து இன்னமும் பற்றிப்பிடித்துக்கொண்டு இருக்கிறார். மகிந்த ராஜபக்ஷாக்கள் பாராளுமன்றத்திற்கு வந்து ஐந்து வருடங்களுக்கு மேலாகின்றது. அவரும் நாட்டை ஒரு சப்பலாகவே பாவித்து வருகிறார். பழங்குடிடவாத, தோல்விகண்ட நாடாக மாற்றிய ஆட்சியாளர்களிடமிருந்டது 21 ஆந் திகதி விடுவித்துக்கொள்வோம். கோட்டாபய நிர்க்கதியுற்றவராக இந்த நாட்டை நிர்க்கதி நிலைக்கு ஆளாக்கினார். 69 இலட்சம் மக்களே வெட்கித் தலைகுனிந்தார்கள். 2015 இல் ரணில் – மைத்திரி ஹைபிரிட் அரசாங்கத்தை அமைத்துக்கொள்ள இலட்சக்கணக்கில் வாக்குகளை அளித்தவர்களும் நிர்க்கதி நிலையை அடைந்தார்கள். இந்த நிலைமைகள் அனைத்தையும் மாற்றியமைத்திட 2024 செப்டெம்பர் மாதம் 21 அந் திகதி வாக்குகளை அளித்ததாக பல தசாப்தங்களுக்குப் பின்னரேனும் பெருமிதமாகக் கூறக்கூடியவகையில் இந்த நாட்டை மாற்றியமைத்திவோம். பலநூற்றாண்டு காலமாக கைநழுவிய வெற்றியைப் பெற்றுக்கொள்ள கைதளராமல் ஒன்றுசேருமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.
(-Colombo, September 16, 2024-) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தினம் அல்லது மீலாத் – உன் – நபி தினம் இன்றைய (16) தினம் ஆகும். அதனை வைபவரீதியாக கொண்டாடுகின்ற இலங்கைவாழ்; இஸ்லாமிய அடியார்களுக்கு தேசிய மக்கள் சக்தியின் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். பலவீனமுற்று, பலம்பொருந்திய பூர்வீகக் குடிகளின் கட்டுப்பாட்டுக்கு இலக்காகி அரபு பிரதேசத்தில் பரந்து காணப்பட்ட சிறிய சிறிய ஆட்சிப் பிரதேசங்களை ஒன்றுசேர்த்து அரபுப் பிரதேசத்திற்கு பலம்பொருந்திய இராச்சியமொன்றை உருவாக்கித் தந்தவர் நபிகள் […]
(-Colombo, September 16, 2024-)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தினம் அல்லது மீலாத் – உன் – நபி தினம் இன்றைய (16) தினம் ஆகும். அதனை வைபவரீதியாக கொண்டாடுகின்ற இலங்கைவாழ்; இஸ்லாமிய அடியார்களுக்கு தேசிய மக்கள் சக்தியின் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.
பலவீனமுற்று, பலம்பொருந்திய பூர்வீகக் குடிகளின் கட்டுப்பாட்டுக்கு இலக்காகி அரபு பிரதேசத்தில் பரந்து காணப்பட்ட சிறிய சிறிய ஆட்சிப் பிரதேசங்களை ஒன்றுசேர்த்து அரபுப் பிரதேசத்திற்கு பலம்பொருந்திய இராச்சியமொன்றை உருவாக்கித் தந்தவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களாவார். அது எவராலும் சாதிக்க இயலுமென எவருமே நம்பியிராத யுகமொன்றில் வித்தியாசமாக சிந்தித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த வித்தியாசமான சிந்தனைக்கான ஆரம்பகர்த்தாவாகவும் அதனை நடைமுறைப்படுத்திய மார்க்க அறிஞராகவும் விளங்கினார்.
ஒட்டுமொத்த இலங்கைவாழ் மக்களும் சகோதரத்துவத்தின் நாமத்தால் ஒன்றாக கைகோர்த்துக்கொண்டு புதிய மாற்றத்தின் அருகில் நிலைகொண்டுள்ள தருணத்தில் வித்தியாசமாக சிந்தித்து, நாட்டின் மரபுரீதியான பயணத்தை மாற்றியமைக்கின்ற உண்மையான மாற்றத்துடன் அணிதிரள மீலாத் உன் நபி தினம் இலங்கைவாழ் இஸ்லாமிய அடியார்களுக்கு வலிமையையும் ஊக்கத்தையும் வழங்குமென நாங்கள் வாழ்த்துக் கூறுகிறோம்.
அநுர குமார திசாநாயக்க
தலைவர்
தேசிய மக்கள் சக்தி
2024.09.16
(-“நாடு அநுரவோடு” தேசிய மக்கள் சக்தியின் பெருவெற்றிக்கான கூட்டம் – தலவாக்கலை – 2024.09.15-) எமக்குத் தேவை மக்கள் ஆட்சியாளருக்கு பயந்துவாழ்கின்ற ஒரு நாடு அல்ல. இதுவரை காலமும் இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் எவ்வாறு வாக்குகளைப் பெற்றார்கள்? உண்ணக் கொடுத்து, குடிக்கக் கொடுத்து, பயமுறுத்தி வாக்குகளைப் பெறுகிறார்கள். குறிப்பாக பெருந்தோட்ட மக்களைப் பயமுறுத்தி வாக்குகளைப் பெறுகிறார்கள். பணியவைத்து வாக்குகளைப் பெறுகிறார்கள். இதனை நாங்கள் மாற்றியமைக்க வேண்டாமா? இந்த மலையக மக்கள் சதாகாலமும் அடிமைகளாக வாழவேண்டுமா? பயந்து வாழவேண்டுமா? […]
(-“நாடு அநுரவோடு” தேசிய மக்கள் சக்தியின் பெருவெற்றிக்கான கூட்டம் – தலவாக்கலை – 2024.09.15-)
எமக்குத் தேவை மக்கள் ஆட்சியாளருக்கு பயந்துவாழ்கின்ற ஒரு நாடு அல்ல.
இதுவரை காலமும் இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் எவ்வாறு வாக்குகளைப் பெற்றார்கள்? உண்ணக் கொடுத்து, குடிக்கக் கொடுத்து, பயமுறுத்தி வாக்குகளைப் பெறுகிறார்கள். குறிப்பாக பெருந்தோட்ட மக்களைப் பயமுறுத்தி வாக்குகளைப் பெறுகிறார்கள். பணியவைத்து வாக்குகளைப் பெறுகிறார்கள். இதனை நாங்கள் மாற்றியமைக்க வேண்டாமா? இந்த மலையக மக்கள் சதாகாலமும் அடிமைகளாக வாழவேண்டுமா? பயந்து வாழவேண்டுமா? ஹங்குரன்கெத்த மக்கள் எஸ்.பீ. இற்கு பயந்து வாழவேண்டுமா? மலையக மக்கள் தொண்டமான்களுக்கு திகாம்பரத்திற்கு பயந்து வாழ்ந்திருக்கிறார்கள். எமக்குத் தேவை மக்கள் ஆட்சியாளருக்கு பயந்துவாழ்கின்ற ஒரு நாடு அல்ல. மக்களைப் பற்றிச் சிந்தித்து அவர்களின் எதிர்பார்பபுகளை ஈடேற்றி நாட்டை ஆட்சிசெய்கின்ற அரசாங்கமே இப்போது எங்களுக்குத் தேவை. சுதந்திரமான மக்களை நாங்கள் கட்டியெழுப்பவேண்டும். அதனால் இந்த செப்டெம்பர் 21 ஆந் திகதி நாங்கள் நல்லதொரு முடிவினை எடுப்போம். இப்பொழுது முழுநாட்டினதும் மக்கள் அந்த முடிவினை எடுக்க தயாராகி இருக்கிறார்கள்.
மலையக மக்கள் என்றவகையில் உங்களின் முடிவு என்ன?
எமது நாட்டில் அரசாங்கங்கள் எவ்வாறு அமைக்கப்பட்டன? மலையகத் தலைவர்களின் ஒத்துழைப்பினை பெறுகிறார்கள். தலைவர்களுக்கு அமைச்சர் பதவிகளைக் கொடுக்கிறார்கள். தலைவர்களுக்கு கப்பம் கொடுக்கிறார்கள். பணம் கொடுக்கிறார்கள். தலைவர் வந்து மக்களை ஏமாற்றுகிறார். ஆனால் இப்போது நாட்டு மக்கள் விழிப்படைந்துவிட்டார்கள். தென்மாகாணத்தில் மில்லியன் கணக்கான மக்கள் தேசிய மக்கள் சக்தியுடன் ஒருங்கிணைந்துள்ளார்கள். அதைப்போலவே கிழக்கிலங்கை முஸ்லீம்கள் பல்லாயிரக்கணக்கில் இன்று தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றுசேர்ந்திருக்கிறார்கள். அதைப்போலவே வடக்கின் தமிழ் மக்களின் நம்பிக்கையும் தற்போது தேசிய மக்கள் சக்தியின் பக்கம் திரும்பியுள்ளது. மலையக மக்கள் என்றவகையில் உங்களின் முடிவு என்ன? ஆம், அதுதான் தேசிய மக்கள் சக்தியை வெற்றியீட்டச் செய்விப்பது. ஹங்குரன்கெத்த, வலப்பனை, கொத்மலை, நுவரெலியா – மஸ்கெலியா தொகுதிகளில் நாங்கள் அமோக வெற்றியீட்ட வேண்டும். இன்று நீங்கள் ஒரு கிளாஸ் சாராயத்திற்காகவா இங்கே குழுமியிருக்கிறீர்கள்? சாப்பாட்டுப் பொதிக்காகவா? இல்லை. நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்காகவே. இன்று நாங்கள் முதல்த்தடவையாக நாட்டு மக்கள் என்ற வகையில் பொதுத்தேவைக்காக ஒன்றுசேர்ந்திருக்கிறோம். இது ஒரு விசேடமான தருணமாகும். நாட்டு மக்கள் புதிய மாற்றத்திற்காக அணிதிரண்டு இருக்கிறார்கள்.
இதுவரை நிலவியது மக்களின் அரசாங்கங்கள் அல்ல
நாங்கள் நீண்டகாலமாக மேற்கொண்ட முயற்சிகளின் பெறுபேறுகள் செப்டெம்பர் 21 அந் திகதி உறுதியாகின்றது. தோட்டங்களில் வசிக்கின்றவர்களின் வாழ்க்கை பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள். அவர்களுக்கு வசிக்க பொருத்தமான வீடு கிடையாது. சரியான கழிப்பறை வசதிகள் கிடையாது. தோட்டத்திற்குச் செல்ல சரியான பாதை கிடையாது. பிள்ளைகளுக்கு கல்வி வசதி கிடையாது. உங்கள் பிள்ளைகளுக்கு சரியான ஒருவேளை உணவு கிடையாது. மருந்து வாங்கிட வழியில்லை. முழு வாழ்க்கையும் துன்பம் நிறைந்தது. நீங்கள் இவ்வாறு வசிக்கவேண்டியவர்களா? இல்லை. இதனை நாங்கள் மாற்றியமைத்திட வேண்டும். இதுவரை நிலவியது மக்களின் அரசாங்கங்கள் அல்ல: மேலே இருக்கின்ற தலைவர்களின் அரசாங்கமாகும். அவர்கள்தான் நாட்டை ஆட்சிசெய்தார்கள். அவர்களுக்காகவே தீர்மானங்களை மேற்கொண்டார்கள்.
நாங்கள் போதைப்பொருளற்ற ஒரு நாட்டை உருவாக்குவோம் என்பது உறுதியானது
பெருந்தோட்டத் தமிழ்த் தலைவர்களின் பிள்ளைகள் இங்கே கல்வி பயில்கிறார்களா? இல்லை. ஒன்றில் கொழும்பிலுள்ள பெரிய பாடசாலைகளில். இல்லாவிட்டால் வெளிநாடுகளில். தோட்டங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு கல்வி பயில பாடசாலை கிடையாது, பாடப் புத்தகங்களை கொள்வனவுசெய்ய பணம் கிடையாது. வசதிகள் கிடையாது. வாழ்க்கை வீணே நாசமாகி வருகிறது. இதனை மாற்றியமைத்திடவே நாங்கள் அதிகாரத்தைக் கோரிநிற்கிறோம். மக்கள் பட்ட துன்பங்கள் போதும். நாங்கள் மலையக மக்களை உள்ளிட்ட நாட்டின் அனைத்து மக்களினதும் பிரச்சினைகளைத் தீர்க்கின்ற அரசாங்கமொன்றை அமைப்போம். தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமென்பது மக்களைப் பற்றிச் சிந்தித்து பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கின்ற அரசாங்கமாகும். நாங்கள் இந்த நாட்டில் முதல்த்தடவையாக பெரியபுள்ளிகளின் அரசாங்கத்திற்குப் பதிலாக மக்களின் அரசாங்கமொன்றை அமைப்போம். தற்போது இந்த மலையகப் பிரதேசங்களில் போதைத்தூள் பெருந்தொற்று வியாபித்துள்ளது. போதைத்தூளற்ற மலையகமொன்று எமக்குத் தேவையில்லையா? போதைத்தூளற்ற ஒரு நாடு எமக்குத் தேவையில்லையா? தேவை. ஏன் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த முடியவில்லை? நுவரெலியாவுக்கு தூள் கொண்டுவருபவர் யார்? இந்த பிரதேசத்தைச்சேர்ந்த அரசியல்வாதிகளே கொண்டுவருகிறார்கள். அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின்போது திகாம்பரமும் வேலுகுமாரும் பங்கேற்றார்கள். இருவரும் ஒரே கட்சியில் இருந்தவர்கள். திகாம்பரம் நுவரெலியாவில் இருந்தும் வேலுகுமார் கண்டியில் இருந்தும் பாராளுமன்றம் சென்றார்கள். வேலுகுமார் ரணிலுக்கும் திகாம்பரம் சஜித்திற்கும் ஒத்துழைப்பு வழங்க தீர்மானித்தார்கள். இருவரும் தொலைக்காட்சி விவாதமொன்றுக்கு வந்தார்கள். என்ன நேர்ந்தது? திகாம்பரம் வேலுகுமாருக்கு என்ன கூறினார்? பார்குமார் என்று கூறினார். வேலுகுமார் திகாம்பரத்திற்கு என்ன கூறினார்? குடுதிகா என்று கூறினார். அது ஏன்? அவர்களே கூறுகின்ற விதத்தில் அவர்கள் தான் இந்த போதைப்பொருள் வியாபாரத்தில் இருக்கிறார்கள். இங்கு மாத்திரமல்ல, முழு நாட்டிலுமே அப்படித்தான். அரசியல்வாதிகள் தான் நாட்டில் போதைப்பொருள் வியாபாரத்தின் திரைமறைவில் இருப்பவர்கள். போதைப்பொருளால் எமது ஊர், எமது நாடு, எமது பிள்ளைகள் காப்பாற்றப்பட வேண்டுமானால் பொய்யாக இரு பக்கத்தில் பிரிந்து இந்த நாட்டு மக்களை ஏமாற்றுகின்ற அரசியல்வாதிகளை தோற்கடிக்க வேண்டும். தேசிய மக்கள் சக்தியையே வெற்றிபெறச் செய்விக்க வேண்டும். நாங்கள் போதைப்பொருளற்ற ஒரு நாட்டை உருவாக்குவோம் என்பது உறுதியானது. போதைப் பொருட்களை முற்றாகவே கட்டுப்படுத்துவோம். நாட்டிலிருந்து ஒழித்துக் கட்டுவோம். பிள்ளைகளைப் பற்றிய பயமின்றி சந்தேகமின்றி பெற்றோர்கள் வாழக்கூடிய ஒரு நாட்டை நாங்கள் கட்டியெழுப்புவோம். பிள்ளை தூள் பாவிக்குமாயின் கல்வி கற்க மாட்டாதெனில் இந்த அரசியல்வாதிகள் அதை விரும்புவார்கள். அப்போது தான் அவர்கள் விரும்பியவாறு நாட்டின் பொதுப்பணத்தை கொள்ளையடிக்க முடியும்.
நீங்கள் இந்தியாவுக்கு போனால் இலங்கை தமிழர் என்று தானே கூறுகிறார்கள்?
இந்த மலையகத்தில் வசிக்கின்ற மக்கள் இலங்கைக்கு வந்து இப்போது 200 வருடங்களாகிவிட்டன. அந்த சகோதர மக்கள் எங்கிருந்து வந்தார்கள் என நாங்கள் கேட்பதில் பயன் உண்டா? தமிழ் நாட்டிலிருந்து வந்தார்களா? கேரளாவிலிருந்து வந்தார்களா? என கேட்பதில் பயன் இருக்கிறதா? இப்போது நீங்கள் இந்த நாட்டிலே பிறந்திருக்கிறீர்கள். இந்த நாட்டுக்கே வியர்வையை சிந்துகிறீர்கள். இந்த மண்ணுக்கே உரமாகுகிறீர்கள். அப்படியானால் நீங்கள் எப்படி இந்திய தமிழர்களாக முடியும்? நீங்கள் தமிழ் மொழியை பேசுகின்ற இலங்கை பிரஜைகள். நீங்கள் இந்த நாட்டின் மக்கள். நீங்கள் இந்தியாவுக்கு போனால் இலங்கை தமிழர் என்று தானே கூறுகிறார்கள். இலங்கையில் இருக்கும்போது இந்திய தமிழர்கள் என்று கூறுகிறார்கள். இவர்கள் எமது நாட்டின் பிரஜைகள். நாட்டின் பொருளாதாரத்தின் பங்காளிகள். இந்த தேயிலைத் தோட்டங்கள் உங்களின் உழைப்பால் செழிப்படைந்தன. உங்களின் முதாதைகள் தான் இந்த மலைநாட்டில் பயிர் செய்ய ஆரம்பித்தவர்கள். நோய் நொடிகளுக்கு இறையாகி பட்டினியால் வாடி செத்து மடிந்தார்கள். அவ்வாறு துன்பங்களை அனுபவித்துத்தான் நீங்கள் இந்த நாட்டை பிரஜைகள் ஆகினீர்கள். இன்றும் வாழ்க்கையில் மாற்றமில்லை. 1 1/2 இலட்சம் குடும்பங்களுக்கு தமக்கென ஒரு அங்குல நிலம் கூட இல்லை. ஒரு நாட்டில் வசிக்கின்ற மக்கள் ஒரு அங்குல நிலம் கூட இல்லாமல், வீடு இல்லாமல், கழிப்பறை இல்லாமல் இருப்பார்கள் எனில் அந்த பிரச்சினையை தீர்த்து வைக்கவேண்டுமல்லவா? நீங்கள் மனிதர்கள் இல்லையா? தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் இந்த அனைத்துப் பிரஜைகளினதும் வீடமைப்பு பிரச்சினைக்கு தீர்வுகொடுக்கும். வழங்கக்கூடிய எல்லா இடங்களிலிருந்தும் பொருத்தமான காணிகளை நாங்கள் உங்களுக்கு பெற்றுக்கொடுப்போம். உங்களால் பயிர் செய்ய, வீடுகளை அமைத்துக்கொள்ள, குடும்பத்தார் அனைவரும் ஒன்றாக சீவிக்க தொடங்க முடிகின்ற வாழ்க்கையொன்றை நாங்கள் கட்டியெழுப்புவோம். தோட்டத்தில் உள்ள பிள்ளைகள் தமது வாழ்க்கையிலிருந்து வெளியே வர, தொந்தரவுகளிலிருந்து வெளியே வருவதற்கான சிறந்த கல்வியை எங்களுடைய ஆட்சியின் கீழ் உங்கள் பிள்ளைகளுக்கு பெற்றுக்கொடுப்போம் என்பதை உறுதியாக கூறுகிறோம்.
தமது மொழியில் அரசாங்கத்துடன் செயலாற்றுவதற்கான உரிமையை நாங்கள் உறுதி செய்வோம்
இந்த பிரதேசங்களின் பிள்ளைகள் தமது வறுமையிலிருந்து வெளியில் வருவதற்குள்ள பிரதான வழிவகையாக ஒழுங்கமைந்த நவீன கல்வி வசதிகள் நிலவுகின்ற, ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவாத பாடசாலைகளை நாங்கள் இந்த பிரதேசங்களுக்கும் பெற்றுக்கொடுப்போம். ஒவ்வொரு பிள்ளையையும் கவனித்துக் கொள்கின்ற அரசாங்கமொன்றை ஒவ்வொரு பிள்ளையினதும் கல்வியை உறுதி செய்கின்ற அரசாங்கமொன்றை நாங்கள் கட்டியெழுப்புவோம். நீங்கள் இந்த பிரதேசத்திலுள்ள அரசாங்க நிறுவனங்களுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுகையில் மொழிப்பிரச்சினை காரணமாக பாரிய சிரமங்களை எதிர்நோக்கியிருக்கிறீர்கள். தத்தமது மொழிகளில் எந்தவொரு பிரஜையும் சிரமங்களின்றி அரசாங்கத்துடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவதற்கான ஆட்சியொன்றை நாங்கள் அமைப்போம். நாங்கள் இந்த நாட்டின் மொழிப்பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கொடுப்போம். நீங்கள் அரசாங்க அலுவலகமொன்றுக்கு தமிழ் மொழியில் கடிதமொன்றை அனுப்பினால் தமிழ் மொழியில் கடமை புரியக்கூடிய உத்தியோகத்தர்களை அரச சேவைக்கு சோ்த்துக் கொள்வோம். அதனை ஈடேற்றும்வரை தற்காலிகமாக அதற்கான மொழிபெயர்ப்பாளர்களை ஈடுபடுத்துவோம். தமது மொழியில் அரசாங்கத்துடன் செயலாற்றுவதற்கான உரிமையை நாங்கள் உறுதி செய்வோம். அப்போது தான் நீங்களும் இந்த நாட்டின் பிரஜைகள் என்பதை நீங்கள் உணர்வீர்கள். அதுமாத்திரமல்ல உங்களுக்கு உயிர்வாழ்வதற்கு ஏற்ற வருமான வழிவகை தேவை. புதிய தொழில்வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். கொழும்பு வீடுகளில் பிள்ளைகளை பார்த்துக்கொள்ள, ஹோட்டல்களில் வெய்ட்டர் வேலையை செய்வதுதானா மலையக இளைஞர்களின் தொழிலாக அமைய வேண்டும்? நீங்கள் புதிய உயர் தொழில்களுக்கு செல்லக்கூடிய வகையில் இந்த கல்வி வாய்ப்புகளை விரிவாக்க வேண்டும். புதிய தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். குறிப்பாக நுவரெலியா மாவட்டம் சுற்றுலா தொழில் துறைக்கு பொருத்தமான மாவட்டமாகும். அதில் தொழில்கள் உருவாக வேண்டும். வருடத்திற்கு நாற்பது இலட்சம் சுற்றுலா பயணிகளை கொண்டுவர நாங்கள் எதிர்பார்த்திருக்கிறோம். அவர்கள் நுவரெலியாவிற்கும் வருவார்கள். புதிய ஹோட்டல்கள் உருவாகும். புதிய பொழுதுபோக்குகள் உருவாகும். மலையக விவசாயிக்கு பயிர்ச் செய்ய அவசியமான வசதிகளைப் போன்றே தமது உற்பத்திகளை நியாயமான விலைக்கு சந்தைப்படுத்தவும் விளைச்சல் விரயமாவதை தடுப்பதற்கும் அவசியமான திட்டங்களை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம்.
பெருந்தோட்டத்துறையில் பிரதான பிரச்சினையான போஷாக்கின்மை நிலவுகின்றது
பெருந்தோட்டத்துறையில் பிரதான பிரச்சினையான போஷாக்கின்மை குறிப்பாக கர்ப்பிணி தாய்மார்கள் எதிர்நோக்கியுள்ள இரத்தச்சோகை ஆகிய நிலைமைகளுக்கு பரிகாரம் காண்பதற்காகவும் பெருந்தோட்டங்களில் மாத்திரமன்றி முழுநாட்டிலுமே அந்த நிலைமைக்கு தீர்வுகாண்பதற்காகவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் திட்டமிட்டிருக்கிறோம். இந்த 21 ஆம் திகதி வெற்றிக்கு பின்னர் சிங்கள, தமிழ், முஸ்லிம், மலாயர், பறங்கியர் ஆகிய நாங்கள் அனைவரும் ஒன்றுசோ்ந்து அந்த அழகான நாட்டை கட்டியெழுப்புவது உறுதியாகும்.
(-“நாடு அநுரவோடு” தேசிய மக்கள் சக்தியின் பெருவெற்றிக்கான கூட்டம் – அநுராதபுரம் – 2024.09.14-) தேசிய மக்கள் சக்திக்கு வரலாற்றுரீதியான வெற்றியை இந்த அநுராதபுர மக்கள் கொண்டுவருவார்கள் என்பது எமது நம்பிக்கையாகும். இந்த மேடையில் இன்று நூற்றுக்கணக்கான பிக்குமார்கள் வருகைதந்து மதத்தைப் பாவித்து எமக்கெதிராக முன்வைக்கின்ற பொய்யான குறைகூறல்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்கள். நாங்கள் மிகவும் ஒழுங்கமைந்தவகையில் இந்த தேர்தல் இயக்கத்தை முன்னெடுத்து வந்தோம். இன்றளவில் எமது தேர்தல் இயக்கம் இந்த நாட்டின் பொதுமக்களால் தமது கைகளில் […]
(-“நாடு அநுரவோடு” தேசிய மக்கள் சக்தியின் பெருவெற்றிக்கான கூட்டம் – அநுராதபுரம் – 2024.09.14-)
தேசிய மக்கள் சக்திக்கு வரலாற்றுரீதியான வெற்றியை இந்த அநுராதபுர மக்கள் கொண்டுவருவார்கள் என்பது எமது நம்பிக்கையாகும். இந்த மேடையில் இன்று நூற்றுக்கணக்கான பிக்குமார்கள் வருகைதந்து மதத்தைப் பாவித்து எமக்கெதிராக முன்வைக்கின்ற பொய்யான குறைகூறல்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்கள். நாங்கள் மிகவும் ஒழுங்கமைந்தவகையில் இந்த தேர்தல் இயக்கத்தை முன்னெடுத்து வந்தோம். இன்றளவில் எமது தேர்தல் இயக்கம் இந்த நாட்டின் பொதுமக்களால் தமது கைகளில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இப்போது சஜித், ரணில் இந்த நிலைமையில் மிகவும் பதற்றமடைந்திருக்கிறார்கள். எங்களுக்கு எதிராக பலவிதமான சேறுபூசல்கள், குறைகூறல்கள், பொய்யான தகவல்களை மொத்தமாக பரப்பி வருகிறார்கள். நாங்கள் அவர்களுக்கு கூறவேண்டியது நீங்கள் தாமதித்துவிட்டீர்கள் என்பது தான். இந்த வெற்றியை இப்போது நிறுத்திவிட முடியாது. இந்த வெற்றியை பெருவெற்றியாக உயர்த்தி வைப்பதுதான் எங்களுடைய பொறுப்பு. நாங்கள் நேற்று அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை, ஒலுவில், சாய்ந்தமருது, சம்மாந்துறை, நிந்தவூர் ஆகிய பல இடங்களில் கூட்டங்களை நடத்தினோம்.
ராஜபக்ஷாக்கள் மீண்டும் மீண்டும் கூறிக்கூறி உக்கிப்போன மதவாத, இனவாத போராட்டக் கோஷங்களை இப்போது தோளில் சுமந்து செல்பவர்கள் சஜித் அணியைச் சோ்ந்தவர்களாவர்.
அந்த இடங்களில் முஸ்லிம் மக்கள் பல்லாயிரக்கணக்கில் இந்த நாட்டை மாற்றியமைப்பதற்காக எம்மைச்சுற்றி அணிதிரண்டுள்ள விதத்தை நாங்கள் கண்டோம். அதனால் இலங்கையில் முதல் தடவையாக மிகவும் தனித்துவமான அரசாங்கமொன்று அமையப்போகிறது. அது எப்படிப்பட்ட அரசாங்கம்? இதுவரை காலமும் பிறருக்கு எதிரான அரசாங்கங்களே அமைக்கப்பட்டன. வடக்கு கிழக்கிலுள்ள இனத்துவங்களுக்கு எதிரான அரசாங்கங்கள். அரசியல் மேடைகளில் “தேசம் ஆபத்தில். ஏனைய இனங்களைச் சோ்ந்த மக்கள் பெரும்பான்மை இனத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தேசத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக அவர்களுக்கு வாக்குகளை அளிக்குமாறு” கூறினார்கள். மதத்தை காப்பாற்றிக் கொள்ள அவர்களுக்கு வாக்குகளை அளிக்குமாறு கூறினார்கள். இப்போதும் அந்த வகையிலான தோ்தல் இயக்கமொன்றை அமுலாக்க அவர்கள் முயற்சி செய்கிறார்கள். ராஜபக்ஷாக்கள் மீண்டும் மீண்டும் கூறிக்கூறி உக்கிப்போன மதவாத, இனவாத போராட்டக் கோஷங்களை இப்போது தோளில் சுமந்து செல்பவர்கள் சஜித் அணியைச் சோ்ந்தவர்களாவர். அந்த போராட்ட கோஷங்கள் ராஜபக்ஷாக்களையும் அழித்தொழித்த போராட்டக் கோஷங்களாகும். அவை இலங்கையின் இடதுசாரி இயக்கத்திற்கு எதிராக 1960 களிலிருந்து கூறிக்கொண்டிருப்பவையாகும். இப்போது அவை இற்றுப்போன போராட்டக் கோஷங்களாகும். அதனால் சில புதிய பொருட்களை தேடிக்கொள்ளுங்கள் என நான் சஜித் பிரேதாசவிற்கு கூறுகிறேன். அந்த பழைய சாமான் கடையிலிருந்து சாமான்களை கொண்டுவராதிருக்குமாறு கூறுகிறேன்.
நாங்கள் சுதந்திரம் பெறும்போதும் பிளவுபட்டிருந்தோம். சுதந்திரத்திற்கு பின்னரும் எங்களை பிளவுபடுத்தினார்கள்
வடக்கு, கிழக்கு, தெற்கு ஆகிய எல்லா பிரதேசங்களிலும் வசிக்கின்ற மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்த அரசாங்கமொன்றை முதல் தடவையாக அமைக்கப்போகிறோம். சிங்கள, தமிழ், முஸ்லிம், மலாயர், பறங்கியர் ஆகிய அனைத்து மக்களினதும் நம்பிக்கையை வென்றெடுத்த அரசாங்கமொன்று. இந்த நாட்டில் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கு இருந்த வரலாற்று ரீதியான வாய்ப்புக்களை இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் கைவிட்டுவிட்டார்கள். வெள்ளைக்காரனின் ஆட்சியின் கீழும் இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் உருவாகக்கூடிய வகையில் ஒருவரையொருவர் பிரித்தே எமது நாட்டை ஆட்சி செய்தார்கள். 1818 கலகத்தின்போது வெள்ளைக்காரனுக்கு எதிராக எமது நாட்டு மக்களால் ஒன்று சேரமுடியாமல் போய்விட்டது. 1848 இலும் அதுவே இடம்பெற்றது. 1919 இல் சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்கள் ஒன்றுசோ்ந்து இலங்கை தேசிய காங்கிரஸை கட்டியெழுப்பினார்கள். மிகவும் குறுகிய காலத்தில் அது சிதைவடைந்தது. 1928 இல் பண்டாரநாயக்க தனிவேறான சிங்கள மகா சபையை அமைக்கத்தொடங்கினார்கள். தமிழ் காங்கிரஸ் தனிவேறாக உருவாகக் தொடங்கியது. சோனகர் சங்கம் தனிவேறாக உருவாகியது. எதிரிக்கு எதிராக ஒன்று சோ்ந்து போராடுவதற்கு பதிலாக பிளவுபட தொடங்கினார்கள். அந்தந்த கூட்டமைப்புகளின் தலைவர்கள் கள்ளத்தனமாகச் சென்று புறங்கூறி ஒரு சில அவா நிறைவுகளை கேட்கத் தொடங்கினார்கள். தேசம் பிளவுபட்டது. 1948 இல் சுதந்திரம் பெறும்போதும் நிலைமை அப்படித்தான். இந்தியா சுதந்திரமடைகின்ற வேளையில் அந்த நாட்டின் வலதுசாரி, இடதுசாரி தலைவர்கள் அனைவருமே ஒன்று சோ்ந்து இந்திய சுதந்திர போராட்டத்திற்கு தலைமைத்துவம் வழங்கினார்கள். நாங்கள் சுதந்திரம் பெறும்போதும் பிளவுபட்டிருந்தோம். சுதந்திரத்திற்கு பின்னரும் எங்களை பிளவுபடுத்தினார்கள். 1948 சுதந்திரம் கிடைக்கிறது. 1949 இல் குடியுரிமைச்சட்டம் நிறைவேற்றப்படுகிறது. அந்த சட்டத்தை கொண்டுவந்து பெருந்தோட்டத்தைச் சோ்ந்த மக்களின் வாக்குரிமையை பறித்தார்கள். 1930 களில் வடக்கில் பலம்பொருந்திய தமிழ் இளைஞர் இயக்கமொன்று இருந்தது. அவர்கள் பகுதியளவிலான சுதந்திரம் வேண்டாம் என்று கூறி முழுமையான தன்னாதிக்கத்தை கோரி போராடினார்கள். எமது நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக்கொள்வதற்காக யாழ்ப்பாணத்தின் இளைஞர் இயக்கம் பாரிய செயற்பொறுப்பினை ஆற்றியது. எனினும் அதிகாரத்தை பெற்ற எமது ஆட்சியாளர்கள் அதிகாரத்திற்காகவே எம்மை பிரித்தார்கள்.
ஒருவருக்கொருவர் முட்டிமோதிக்கொள்கின்ற நாடாக இந்த நாட்டை மாற்றினார்கள்.
நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தமிழ் இளைஞர்கள் 1949 இல் கொண்டுவந்த குடியுரிமைச் சட்டம் காரணமாக தமிழரசுக் கட்சியென தனிவேறான கட்சியொன்றை உருவாக்கிக் கொள்கிறார்கள். வடக்கிற்கு தனியான ஆட்சியொன்றை கோரினார்கள். 1956 அளவில் மொழிப் பிரச்சினையொன்று உருவாக்கப்படுகிறது. 1958 அளவில் ஸ்ரீ எழுத்தில் கறுப்பெண்ணை பூசப்படுகிறது. மீண்டும் சிங்கள, தமிழ், முஸ்லிம் கலவரம் ஆரம்பிக்கின்றது. 1965 இல் டட்லியின் வயிற்றில் மசாலை வடை என்று பேரணி செல்ல தொடங்குகிறார்கள். மீண்டும் 1972 இல் தமிழர் ஐக்கிய முன்னணி அமைக்கப்படுகிறது. 1976 இல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி உருவாக்கப்படுகிறது. எல்லா தமிழ் கட்சிகளும் ஒன்றுசோ்ந்து வட்டுக்கோட்டை சம்மேளனம் என கூறி தனிவேறான அரசசொன்றுக்கான மக்கள் ஆணையை கோரி நிற்கிறது. 1978 இல் பயங்கரவாத தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படுகிறது. மக்களை அடக்க தொடங்குகிறார்கள். 1981 இல் மாவட்ட அபிவிருத்திச் சபை தோ்தலின் போது அன்று யாழ்ப்பாணத்திற்கு சென்ற ரணில், காமினி திசாநாயக்க, ஜே.ஆர். வடக்கு மக்களின் வாக்குரிமையை கொள்ளையடித்தார்கள். யாழ் நூலகத்திற்கு தீ வைத்தார்கள். மீண்டும் மீண்டும் மோதல்களை உருவாக்கினார்கள். 1983 இல் மீண்டும் கறுப்பு ஜுலையை உருவாக்கினார்கள். நாடு பூராவிலும் கடைகளையும் சினிமா தியேட்டர்களையும் தீக்கிரையாக்கினார்கள் எம்மை பிளவுபடுத்தினார்கள். பிரித்தார்கள். ஒருவருக்கொருவர் முட்டிமோதிக்கொள்கின்ற நாடாக இந்த நாட்டை மாற்றினார்கள். 1984 அளவில் பிரபாகரன் தற்கொலை குண்டுதாரிகளை உருவாக்கினார். அதன் பின்னர் சிவில் யுத்தம் ஒன்று ஆரம்பிக்கிறது. மிருகத்தனமான மனித படுகொலைகள் தொடங்குகின்றது. நாட்டை பாரிய அனர்த்தத்திற்கு இரையாக்கியனார்கள். 2009 இல் யுத்தம் முற்றுப்பெற்றது. சில நாட்கள் தான் உருண்டோடியது. தோ்தல் நெருங்கும்போது மலட்டுக் கொத்து, மலட்டு ஆடைகள், மலட்டு மருந்துவர்கள் இருப்பதாக கூறத்தொடங்கினார்கள். உயிர்த்த ஞாயிறு தாக்குதலை உருவாக்கினார்கள். மக்களை பிரித்தார்கள். அது தானே நடந்தது.
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி நாட்டை போதைப்பொருள் அனர்த்தத்திலிருந்து விடுவித்துக்கொள்ளும்
வெள்ளைக்காரர்கள் எங்களை பிரித்தார்கள். கறுப்பு வெள்ளைக்காரர்களும் எங்களை பிரித்தார்கள். அதனால் இந்த நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம், மலாயர், பறங்கியர் ஆகிய நாம் அனைவரும் ஒரே இலங்கை தேசத்தவரை கட்டியெழுப்புதல் பற்றிய எதிர்பார்ப்புடன் இருந்தோம். எமது ஆட்சியாளர்கள் அதற்கு வாய்ப்பளிக்கவில்லை. எம்மை பிரித்தார்கள். முட்டி மோதுகின்ற நிலைமையை உருவாக்கினார்கள். யுத்தத்தை உருவாக்கினார்கள். வடக்கையும் தெற்கையும் அழித்தார்கள். இப்போது எங்களுக்கு முதல் தடவையாக சிங்கள, தமிழ், முஸ்லிம், மலாயர், பறங்கியர் ஆகிய அனைவருமே ஒன்றாக சோ்ந்து ஒரே கொடியின் நிழலில் இருக்க தேசிய ஒற்றுமையை மலரச் செய்விக்கின்ற வாய்ப்பு உருவாகியிருக்கிறது. சஜித் பிரேதாசாக்கள் பழைய மதவாத, இனவாத அழுக்குத் துணிகளை சலவை செய்ய தொடங்கியிருக்கிறார்கள். இந்த அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். நாங்கள் எல்லா சமயங்களுக்கும் மதிப்பளிப்பவர்கள். இந்த நாட்டில் பல நூற்றாண்டுகளாக மக்கள் பிரார்த்திக்கின்ற தேசிய ஒற்றுமையை உறுதி செய்கின்ற அரசாங்கத்தை நாங்கள் செப்டெம்பர் 21 ஆம் திகதிக்கு பின்னர் நிறுவுவோம். அநுராதபுரம் எமது நாகரிகத்தின் நகரகமாகும். இன்று போதைத்தூள் தாண்டவமாடுகிறது. போதை பொருட்கள் பெரும் தொற்றாக மாறியிருக்கிறது. இந்த முழு நாட்டையும் அந்த அனர்தத்திலிருந்து விடுவித்துக் கொள்ள வேண்டும். இந்த அனர்த்தங்கள் அனைத்தினதும் திரைமறைவில் இருப்பவர்கள் ஆட்சியாளர்களே. அரசியல்வாதிகளின் அனுசரணை கிடைக்காமல் இந்த குற்றச் செயல் மிக்க தீத்தொழில் நிலவமாட்டாது. இந்த அனைத்து அனர்த்தங்களிலிருந்தும் தேசிய மக்கள் சக்தி இந்த நாட்டை முற்றாகவே விடுவித்துக் கொள்ளும் என நாங்கள் உறுதியாக கூறுகிறோம். எமது வெற்றியை மகத்தான வெற்றியாக உயர்த்திப்பிடிக்கவே முழு நாடும் செப்டெம்பர் 21 ஆம் திகதிவரை காத்திருக்கிறது. நாங்கள் அனைவரும் ஒன்று சோ்ந்து அதன் பின்னர் இந்த நாட்டை கட்டியெழுப்புவோம்.
(-“நாடு அநுரவோடு” தேசிய மக்கள் சக்தியின் பெருவெற்றிக்கான கூட்டம் – சாய்ந்தமருது – 2024.09.13-) இந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி நிச்சயம். நீண்ட காலமாக இந்த ஆட்சியாளர்கள் எமது நாட்டை ஆட்சிசெய்தார்கள். நாடும் மக்களும் வறுமையின் அடிமட்டத்திற்கே வீழ்ந்தது. ஆட்சியாளர்கள் கட்டியெழுப்பப்பட்டார்கள், நாடு வீழ்ந்தது. நாங்கள் செப்டெம்பர் 21 ஆந் திகதி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று அரசாங்கமொன்றை அமைப்போம். இந்த நாட்டைக் கட்டியெழுப்புகின்ற தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்றை நாங்கள் அமைத்துக்கொள்வோம். இந்த தேர்தலில் […]
(-“நாடு அநுரவோடு” தேசிய மக்கள் சக்தியின் பெருவெற்றிக்கான கூட்டம் – சாய்ந்தமருது – 2024.09.13-)
இந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி நிச்சயம்.
நீண்ட காலமாக இந்த ஆட்சியாளர்கள் எமது நாட்டை ஆட்சிசெய்தார்கள். நாடும் மக்களும் வறுமையின் அடிமட்டத்திற்கே வீழ்ந்தது. ஆட்சியாளர்கள் கட்டியெழுப்பப்பட்டார்கள், நாடு வீழ்ந்தது. நாங்கள் செப்டெம்பர் 21 ஆந் திகதி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று அரசாங்கமொன்றை அமைப்போம். இந்த நாட்டைக் கட்டியெழுப்புகின்ற தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்றை நாங்கள் அமைத்துக்கொள்வோம். இந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி நிச்சயம். தெற்கில் வசிக்கின்ற சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள் அனைவரும் தேசிய மக்கள் சக்தியுடன் கைகோர்த்து இருக்கிறார்கள். சாய்ந்தமருதுவில் வசிக்கின்ற முஸ்லீம் மக்களின் தீர்மானம் என்ன? நீங்கள் உரத்தகுரலில் கூறுவதுபோல் தேசிய மக்கள் சக்தியை வெற்றியீட்டச் செய்விப்பது உறுதியானது.
உங்கள் கலாச்சார அடையாளத்தை ஏற்றுக்கொண்டு சுதந்திரமான நாட்டை உருவாக்குவதுதான் தேசிய மக்கள் சக்தியின் எதிர்பார்ப்பு.
எமது வெற்றியை தடுப்பதற்காக இன்று பல்வேறு தரப்பினர்கள் எமக்கு எதிரான சேறுபூசுதல்களிலும் பொய்யான தகவல்களை பரப்புவதிலும் ஈடுபட்டுள்ளார்கள். அண்மையில் ஹிஸ்புல்லா இங்கு வந்தாரா? அவர் வந்து எம்மைப்பற்றிய பல அவதூறுகளையும் பொய்களையும் கூறியிருக்கிறார். முஸ்லீம் மக்கள் மதரீதியாக கொண்டாடுகின்ற இரண்டு தருணங்கள் இருக்கின்றன. ஒன்று றமழான் வைபவம். அடுத்தது ஹஜ்ஜி வைபவம். நாங்கள் வந்ததும் இதில் ஒன்றை நிறுத்துவோமென ஹிஸ்புல்லா கூறியுள்ளார். அவருடைய மண்டையை பரிசோதித்துப் பார்க்கவேண்டும். மக்களை பள்ளிவாசலுக்குப்போக அனுமதிக்கமாட்டோமெனவும் கூறியுள்ளார். இவர்கள் முஸ்லீம் மக்கள் மத்தியில் வந்து அவ்வாறான கதைகளைக் கூறுகிறார்கள். ஐக்கிய மக்கள் சக்தியின் திஸ்ஸ அத்தநாயக்க நாங்கள் அதிகாரத்திற்கு வந்ததும் கண்டி பெரஹெராவை நடாத்த விடமாட்டோம் என்று கூறுகிறார். அவர்களின் மேடைகளில் ஏறுகின்ற ஒருசில பிக்குமார்கள் நாங்கள் வந்தால் தானம் கிடைக்கமாட்டாதெனக் கூறுகிறார்கள். இவை அரசியல் கதைகளா? அவை அரசியல் விமர்சனங்களா? அவை குறைகூறல்கள். அவைதான் பொய்கள். உண்மையாகவே மதம் பற்றிய கௌரவம் இருக்குமானால், மதம் சம்பந்தமான சுதந்திரத்தை உண்மையாகவே எதிர்பார்ப்பின் அவற்றை அரசியல் மேடைகளில் கூறக்கூடாது. அவை மதவாதத்தைக் கிளப்புகின்ற பேச்சுகள். எமது நாடு சிங்கள, தமிழ், முஸ்லீம், மலாயர், பறங்கியர் வசிக்கின்ற நாடு. சிங்களவர்களுக்கு தமக்கே உரித்தான கலாச்சாரமொன்று, தமிழர்களுக்கு துனித்துவமான கலாச்சாரமொன்று. முஸ்லீம்களுக்கு தனித்துவமான கலாச்சாரமொன்று என்றவகையில் பல கலாச்சாரங்களைக்கொண்ட மக்கள் வசிக்கின்ற நாடே எமது நாடு. அதனால் இந்த நாட்டின் எதிர்காலம் இந்த பன்வகைமைகொண்ட மக்கட்குழுக்கள் மத்தியில் ஒற்றுமை நிலவினால் மாத்திரமே நிலைத்திருக்கும். அதனால் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி உங்களின் மதத்தை பின்பற்றுவதற்கான உரிமை, மொழியைப் பேசுவதற்கான உரிமையை வழங்குகின்ற ஆட்சியாகும். உங்கள் கலாச்சார அடையாளத்தை ஏற்றுக்கொண்டு சுதந்திரமான நாட்டை உருவாக்குவதுதான் தேசிய மக்கள் சக்தியின் எதிர்பார்ப்பு.
இந்த நாட்டில் தூள் வியாபாரம், பாதாள உலகின் பின்னணியில் அரசியல்வாதிகள் இருப்பது உங்களுக்குத் தெரியும். இந்த தேர்தலுக்காக அவர்கள் செலவுசெய்வது தூள் வியாபாரிகளின் பணத்தையாகும். எமது நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டவேண்டும். தூள் வியாபாரத்தை ஒழித்துக்கட்ட வேண்டும். அதோ அந்த வேலையை செய்வது தேசிய மக்கள் சக்தியாகும். இந்த ஆட்சியார்கள் ஒருபோதுமே அதனை செய்யமாட்டார்கள். விரும்பிய எல்லாவற்றையும் வெளிநாடுகளிலிருந்து கொண்டுவந்து இங்கே விற்பனை செய்கின்ற வழிமுறையையே அவர்கள் விரும்புகிறார்கள். அப்போதுதான் ஆட்சியாளர்களக்கு கொமிஸ் கிடைக்கும். ரணிலின் அரசாங்கத்தில் படகுகள் கரையில் குவிந்துள்ளன, மாலைதீவிலிருந்து கருவாடு இறக்குமதி செய்கிறார்கள். மீன்களுக்கு வாக்குரிமை இருந்தால் ரணிலுக்கே வாக்குகள் கிடைக்கும். நாங்கள் இந்த நாட்டில் கடலுக்குச் செல்கின்ற அனைத்து மீனவர்களுக்கும் அவசியமான நிவாரணங்கள் அனைத்தையும் வழங்குவோம். இந்தப் பிரதேசத்தில் கடலரிப்பு காரணமாக கரையோரம் உள்நாட்டை நோக்கி வருகின்றது. ஒருசில தென்னந்தோட்டங்கள், கட்டிடங்கள் கடலில் அமிழ்ந்துள்ளன. அதனால் இந்த கரையோரத்தைப் பேணிப்பாதுகாத்து கடலரிப்பினைத் தடுக்க அவசியமான சுற்றாடல் ஆய்வு மேற்கொள்ளப்படவேண்டும். அவ்வாறுசெய்து பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிச்சயமாக அதனைச்செய்யும். இந்நாட்டின் இளைஞர்கள் தொழிலைத் தேடிக்கொள்வதென்பது கனவாகும். இயலுமானவர்கள் தொழில்தேடி வெளிநாடு செல்கிறார்கள். நாங்கள் மக்கள் வாழக்கூடிய அழகான ஒரு நாட்டை உருவாக்கிடவேண்டும். அதற்காக செப்டெம்பர் 21 ஆந் திகதி தேசிய மக்கள் சக்தியை வெற்றியீட்டச் செய்விப்போம். நாட்டை சீராக்குகின்ற அரசாங்கமொன்றைக் கட்யெழுப்புவோம். திருட்டுகளை நிறுத்துகின்ற, மக்களின் சொத்துக்களை திருடிய அரசியல்வாதிகுளக்கு தண்டனை வழங்குகின்ற அரசாங்கமொன்றை, திருடிய பொதுமக்களின் சொத்துக்களை பறிமுதல்செய்கின்ற, உண்மையான மக்கள்நேயமுள்ள அரசாங்கமொன்றை நாங்கள் இந்த நாட்டில் கட்டியெழுப்புவோம். செப்டெம்பர் 21 ஆந் திகதி தேசிய மக்கள் சக்தியின் வெற்றி நிச்சயமே. உறுதியானதே.
தேசிய ஒற்றுமை நிலவுகின்ற ஒரு நாடே எங்களுக்குத் தேவை.
இப்போது ஹிஸ்புல்லா பொய்யான உண்மையற்ற விடயங்களை பரப்பத் தொடங்கியிருக்கிறார். நாங்கள் எங்கள் கொள்கைப் பிரகடனத்தை வெளியிட்டுள்ளோம். எதேனும் மதம் பற்றி, கலாச்சாரம் பற்றி, மொழி பற்றி எவரேனும் தீவிரவாதக் கருத்தினைப் பரப்புவாராயின் அதற்கெதிராக முறைப்பாடுசெய்து சட்டத்தினால் தண்டனை வழங்கவதற்கான ஆணைக்குழுவொன்றை நியமிப்போம். அரசியலில் மதவாதக் கூற்றுகளை வெளியிடுவதை, இனவாதக் கூற்றுகளை வெளியிடுவதை நிறுத்துவதுதான் தேசிய சக்தி அரசாங்கத்தின் பொறுப்பாகும். தேசிய ஒற்றுமை நிலவுகின்ற ஒரு நாடே எங்களுக்குத் தேவை. அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ்கின்ற நாடே எமக்குத் தேவை. அதனால்த்தான் உங்களை சந்திக்க வந்திருக்கிறோம். செப்டெம்பர் 21 ஆந் திகதி நாங்கள் வெற்றிபெற வேண்டும். தெற்கிலுள்ள மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்து மாத்திரமல்ல கிழக்கிலுள்ள உங்களின் நம்பிக்கையும் எமக்குத் தேவை. வடக்கிலுள்ள மக்களின் நம்பிக்கையும் எமக்குத் தேவை. இலங்கையில் முதல்த்தடவையாக தெற்கின் மக்களும் கிழக்கின் மக்களும் வடக்கின் மக்களும் மலையக மக்களும் ஏற்றுக்கொள்கின்ற அரசாங்கமொன்றை அமைத்திடுவோம். சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள் அனைவரதும் நம்பிக்கையை வென்றெடுத்த ஓர் அரசாங்கத்தை நாங்கள் அமைத்திடுவோம்.
ஒற்றுமையின் இயக்கமொன்று தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் அரசியல் கட்சிகள் போட்டிக்கு வருவது எப்படியென உங்களுக்குத் தெரியும். சஜித் வருவது ஹக்கீமை தோளில் வைத்துக்கொண்டே. ரணில் வருவது அதாவுல்லாவை தோளில் வைத்துக்கொண்டே. நாங்கள் வருவது மக்களை தோளில் வைத்துக்கொண்டு உங்களின் நம்பிக்கையால்தான். அதோ அவ்வாறான ஒற்றுமையின் இயக்கமொன்று தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. அது தமிழ் மக்களை, சிங்கள மக்களை, முஸ்லீம் மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற கட்சியையோ தலைவர்களையோ பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒன்றல்ல. அதுதான் தேசிய மக்கள் சக்தி. இன்று இங்கே பல்லாயிரக்கணக்கான முஸ்லீம் மக்கள் எமது சகோதர சகோதரிகள் ஒன்றுசேர்ந்து எமக்கு கூறுவது என்ன? எம்மை நம்பியமைக்காக உங்களுக்கு நன்றி. நீங்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு துளியளவிலேனும் சேதமேற்படத்தாமல் அதனைப் பாதுகாப்போமென நாங்கள் உங்களுக்கு உத்தரவாதமளிக்கிறோம்.
இனவாதத்தில் வீழ்ந்திடாத, அந்த சேற்றில் அமிழ்ந்துவிடாத ஒரே அரசியல் இயக்கம் தேசிய மக்கள் சக்தி மாத்திரமே.
2015 இல் மகிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்தது உங்களுக்குத் தெரியும். அவர்கள் மீண்டும் அரசியலில் கரைசேர ஒரு பாதையைத் தேடிக்கொண்டு இருந்தார்கள். அவர்களால் திருட்டுகளை நிறுத்துகிறோம் எனக்கூறி அதிகாரத்தைப் பெறமுடியாது, சனநாயகத்தை நிலைநாட்டுவொம் எனக்கூறி அதிகாரத்தைப் பெறமுடியாது, 2015 இன் பின்னர் நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க முடியுமெனக்கூறி அதிகாரத்தைப் பெற முடியாது. அதனால் ராஜபக்ஷாக்கள் அதிகாரத்தைப் பெறுவதற்கான வீதி வரைபடமொன்றை தயாரித்து விரித்தார்கள். அதற்காக முஸ்லீம் மக்களுக்கு எதிரான இனவாத இயக்கமொன்றை ஆரம்பித்தார்கள். உண்டால் மலடாகுகின்ற கொத்து ரொட்டி தயாரிப்பதாகக் கூறினார்கள். மீண்டும் வருவதற்காக இனவாதத்தை விதைக்கத் தொடங்கினார்கள். முஸ்லீம் கடைகளில் மலட்டு உடைகளை விற்பதாகக் கூறினார்கள். அவற்றை அணிந்தால் மலட்டுத்தன்மை ஏற்படுமெனக் கூறினார்கள். இனவாதத்தைக் கிளப்பினார்கள். சிங்களப் பெண்களை மலடாக்குகின்ற மலட்டு மருத்துவர்கள் இருப்பதாகக் கூறினார்கள். 2019 இல் நாட்டைக் காப்பாற்றிக்கொள்ள மதத்தைப் பாதுகாத்துக்கொள்ள அவரை வெற்றியீட்டச் செய்விக்குமாறு கோட்டாபய கூறினார். சிங்கள மக்கள் முண்டியடித்துக்கொண்டு போய் வாக்குகளைப் போட்டு வெற்றிபெறச் செய்வித்தார்கள். இப்போது அந்த மொட்டு எங்கே? அந்த மொட்டு அரசாங்கம்தான் கொவிட் பெருந்தொற்றுவேளையில் முஸ்லீம்கள் இறந்தால் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்காமல் தகனம் செய்யுமாறு கூறியது. இப்போது அந்த மொட்டின் பெரும்பான்மையினர் ரணிலோடுதான் இருக்கிறார்கள். இப்போது மொட்டின் தலைவர் ரணில். ஏனையோர் எவருடன் இருக்கிறார்கள்? மொட்டின் தவிசாளர் ஜீ்.எல். பீரிஸ் உள்ளிட்ட இனவாதத்தை விதைத்தவர்கள் முஸ்லீம் ஜனாஸாக்களை தகனம்செய்யுமாறு தீர்மானிக்கையில் அமைச்சரவையில் இருந்த ஜீ. எல். பீரிஸ், டலஸ் அழகப்பெரும, நாலக்க கொடஹேவா இன்று எங்கே இருக்கிறார்கள். சஜித் பிரேமதாசவிடம். இனவாதக் கும்பல்கள் எல்லாமே இன்று அவர்களிடமே இருக்கின்றது. அதனால் நீங்கள் ரணிலைப் பார்த்தாலும் மொட்டின் அரைப்பகுதியுடன். சஜித்தைப் பார்த்தாலும் மொட்டின் அரைப்பகுதியுடன். அவர்கள் அனைவருமே இனவாதத்தை விதைத்தவர்கள். அதோ அந்த இனவாதத்தில் வீழ்ந்திடாத, அந்த சேற்றில் அமிழ்ந்துவிடாத ஒரே அரசியல் இயக்கம் தேசிய மக்கள் சக்தி மாத்திரமே. நான் உங்களிடம் கேட்கிறேன் யாரை தெரிவுசெய்யப் போகிறீர்கள்? தெரிவுசெய்ய வேண்டியது தேசிய மக்கள் சக்தியையாகும்.
அங்குமிங்கும் தாவுகின்ற இந்த அரசியலை நிறுத்தவேண்டாமா?
இந்த அரசியலில் ஓர் அசிங்கமான சூதாட்டம் நிலவுகின்றது. அங்குமிங்கும் தாவிக்கொண்டு இருக்கிறார்கள். அங்கும் வாங்கிக் கொள்கிறார்கள்: இங்கும் வாங்கிக் கொள்கிறார்கள். இப்போது அதாவுல்லா எந்தப் பக்கத்தில்? அங்குமிங்கும் தாவுகின்ற இந்த அரசியலை நிறுத்தவேண்டாமா? இந்த அசிங்கமான அயோக்கியத்தனமான அரசியல் காரணமாகவே எமது நாடு நாசமாகியது. கடந்த மாதம் ஏசுகிறார்கள்: இந்த மாதம் போய் கட்டிப்பிடிக்கிறார்கள். இதனை மாற்றியமைத்திட வேண்டாமா? வேண்டும். இப்போது அந்த கீதா நோனாவைப் பாருங்கள். சென்ற வாரம் ரணில்தான் டொப் எனக் கூறுகிறார். இந்த வாரம் சஜித் தான் டொப் எனக் கூறுகிறார். அவர்களுக்கு வெட்கம் கிடையாது. எடுப்பவர்களுக்கும் வெட்கம் கிடையாது.
வடக்கிற்குச் சென்றும், கிழக்கிற்குச் சென்றும், தெற்கிற்குச் சென்றும் ஒரே கதையைக் கூறுகின்ற ஒரே இயக்கம் தேசிய மக்கள் சக்தி மாத்திரமே.
மகரகம பொதுபல செனையின் மேடையில் ஏறிய சம்பிக்க ரணவக்க இப்போது சஜித்துடன். றிசாட் பதுர்தீன் அவரும் சஜித் பிரேமதாசவுடன். சஜித் பிரேமதாச கிழக்கிற்க வரும்போது ஹக்கீமை அழைத்து வருகிறார், சம்பிக்கவை ஒளித்துவைத்துவிட்டு வருகிறார். மாத்தறைக்குப் போகும்போது ஹக்கீமை ஒளித்துவைத்துவிட்டு சம்பிக்கவை கூட்டிக்கொண்டு போகிறார். மன்னாருக்கு போகும்போது றிசாட் பதுர்தீனை கூட்டிக்கொண்டு போகிறார். சம்பிக்கவை ஒளித்துவைத்துவிட்டுப் போகிறார். காலிக்குப்பொகும்போது றிசாட்டை ஒளித்துவைத்துவிட்ட சம்பிக்கவை கூட்டிக்கொண்டு போகிறார். கொள்கைப்பிடிப்பு இல்லாத அரசியல்வாதி. இன்று வடக்கிற்குச் சென்றும், கிழக்கிற்குச் சென்றும், தெற்கிற்குச் சென்றும் ஒரே கதையைக் கூறுகின்ற ஒரே இயக்கம் தேசிய மக்கள் சக்தி மாத்திரமே. நாங்கள் இந்த விளையாட்டை மூடிமறைத்து “பிளே’ பண்ணவில்லை. அவர்கள் மறைமுகமாகவே விளையாடுகிறார்கள். அவர்களைத் தோற்கடித்திட இந்த அசிங்கமான விளையாட்டே போதும். இவையனைத்தையும் கருத்தில்கொண்டு நாங்கள் செப்டெம்பர் 21 ஆந் திகதி நல்லதொரு முடிவினை எடுக்கவேண்டும். அவர்கள் வருவது பகிர்ந்துகொள்வதற்காகவே. சிறப்புரிமைகளைக் கைவிடுகின்ற அரசியல்வாதிகள் இருக்கின்ற ஓர்அரசாங்கத்தை நாங்கள் அமைத்திடுவோம்.
எமது நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டவேண்டும்
இந்த நாட்டில் தூள் வியாபாரம், பாதாள உலகின் பின்னணியில் அரசியல்வாதிகள் இருப்பது உங்களுக்குத் தெரியும். இந்த தேர்தலுக்காக அவர்கள் செலவுசெய்வது தூள் வியாபாரிகளின் பணத்தையாகும். எமது நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டவேண்டும். தூள் வியாபாரத்தை ஒழித்துக்கட்ட வேண்டும். அதோ அந்த வேலையை செய்வது தேசிய மக்கள் சக்தியாகும். இந்த ஆட்சியார்கள் ஒருபோதுமே அதனை செய்யமாட்டார்கள். விரும்பிய எல்லாவற்றையும் வெளிநாடுகளிலிருந்து கொண்டுவந்து இங்கே விற்பனை செய்கின்ற வழிமுறையையே அவர்கள் விரும்புகிறார்கள். அப்போதுதான் ஆட்சியாளர்களக்கு கொமிஸ் கிடைக்கும். ரணிலின் அரசாங்கத்தில் படகுகள் கரையில் குவிந்துள்ளன, மாலைதீவிலிருந்து கருவாடு இறக்குமதி செய்கிறார்கள். மீன்களுக்கு வாக்குரிமை இருந்தால் ரணிலுக்கே வாக்குகள் கிடைக்கும். நாங்கள் இந்த நாட்டில் கடலுக்குச் செல்கின்ற அனைத்து மீனவர்களுக்கும் அவசியமான நிவாரணங்கள் அனைத்தையும் வழங்குவோம். இந்தப் பிரதேசத்தில் கடலரிப்பு காரணமாக கரையோரம் உள்நாட்டை நோக்கி வருகின்றது. ஒருசில தென்னந்தோட்டங்கள், கட்டிடங்கள் கடலில் அமிழ்ந்துள்ளன. அதனால் இந்த கரையோரத்தைப் பேணிப்பாதுகாத்து கடலரிப்பினைத் தடுக்க அவசியமான சுற்றாடல் ஆய்வு மேற்கொள்ளப்படவேண்டும். அவ்வாறுசெய்து பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிச்சயமாக அதனைச்செய்யும். இந்நாட்டின் இளைஞர்கள் தொழிலைத் தேடிக்கொள்வதென்பது கனவாகும். இயலுமானவர்கள் தொழில்தேடி வெளிநாடு செல்கிறார்கள். நாங்கள் மக்கள் வாழக்கூடிய அழகான ஒரு நாட்டை உருவாக்கிடவேண்டும். அதற்காக செப்டெம்பர் 21 ஆந் திகதி தேசிய மக்கள் சக்தியை வெற்றியீட்டச் செய்விப்போம். நாட்டை சீராக்குகின்ற அரசாங்கமொன்றைக் கட்யெழுப்புவோம். திருட்டுகளை நிறுத்துகின்ற, மக்களின் சொத்துக்களை திருடிய அரசியல்வாதிகுளக்கு தண்டனை வழங்குகின்ற அரசாங்கமொன்றை, திருடிய பொதுமக்களின் சொத்துக்களை பறிமுதல்செய்கின்ற, உண்மையான மக்கள்நேயமுள்ள அரசாங்கமொன்றை நாங்கள் இந்த நாட்டில் கட்டியெழுப்புவோம். செப்டெம்பர் 21 ஆந் திகதி தேசிய மக்கள் சக்தியின் வெற்றி நிச்சயமே. உறுதியானதே.
(-தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கண்காணிப்பு நிலையத்தின் ஊடக சந்திப்பு – 2024.09.14-) தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கண்காணிப்பு நிலையத்திற்கு கிடைகின்ற முறைப்பாடுகளை பிரதேச மற்றும் வட்டாரசபை மட்டத்தில் கண்காணிப்பதற்கான கண்காணிப்பாளர்களை நியமித்திருக்கிறோம். தொடக்கத்திலிருந்து இற்றைவரையான காலப்பகுதியை ஒட்டுமொத்தமாக நோக்கினால் தேர்தல் சட்டமீறல்களில் துரித அதிகரிப்பு காணப்படுகின்றது. தேர்தல் சட்டங்களை மீறுதல் பற்றிய 392 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதோடு, சட்டவிரோதமான பிரச்சாரம் 186, சட்டரீதியான தேர்தலுக்கு தடையேற்படுத்துதல் 06, வன்செயல்கள் 30, மக்கள் அபிப்பிராயத்திற்கு முறையற்ற அழுத்தம் […]
(-தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கண்காணிப்பு நிலையத்தின் ஊடக சந்திப்பு – 2024.09.14-)
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கண்காணிப்பு நிலையத்திற்கு கிடைகின்ற முறைப்பாடுகளை பிரதேச மற்றும் வட்டாரசபை மட்டத்தில் கண்காணிப்பதற்கான கண்காணிப்பாளர்களை நியமித்திருக்கிறோம். தொடக்கத்திலிருந்து இற்றைவரையான காலப்பகுதியை ஒட்டுமொத்தமாக நோக்கினால் தேர்தல் சட்டமீறல்களில் துரித அதிகரிப்பு காணப்படுகின்றது. தேர்தல் சட்டங்களை மீறுதல் பற்றிய 392 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதோடு, சட்டவிரோதமான பிரச்சாரம் 186, சட்டரீதியான தேர்தலுக்கு தடையேற்படுத்துதல் 06, வன்செயல்கள் 30, மக்கள் அபிப்பிராயத்திற்கு முறையற்ற அழுத்தம் பிரயோகித்தல் 120, அரச வளங்களின் முறையற்ற பாவனை 73 மற்றும் அரச உத்தியோகத்தர்களை பாவித்தல் 39 என்றவகையில் பதிவாகியுள்ளது. சமூக ஊடகங்களை பாவித்து தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் தோழர் அநுர குமார திசாநாயக்கவை மையப்படுத்தி பாரிய சேறுபூசுதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடமென உணர்த்தக்கூடியவகையில் தயாரித்த போலியான தகவல்களையும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களை திரிபுபடுத்தியும் தொகுத்தமைத்து தயாரித்த காணொளிகளைப்போன்றே தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் தோழர் அநுர குமார திசாநாயக்கவின் பெயரில் தயாரித்த போலியான மருத்துவ அறிக்கை போன்றவற்றை பிரசுரித்துள்ளார்கள். அந்த மருத்துவ அறிக்கை உண்மையானதென காட்டுவதற்காக தேசிய மக்கள் சக்தியின் கடிதத்தலைப்பின்கீழ் தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணி திரு. சுனில் வட்டகலவின் போலியான கையொப்பத்துடன் தயாரித்த போலியாவணத்தையும் சமூகமயப்படுத்தி உள்ளார்கள். அது சம்பந்தமாக புலன்விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சமூக ஊடக முறைப்பாடுகள் பிரிவிற்கு விடயங்களை முன்வைத்தோம்.
தேர்தல்கள் சட்டம் மாத்திரமன்றி அதற்கு அப்பால்சென்ற தண்டனைச் சட்டக்கோவையில் காட்டப்பட்டுள்ள போலியாவணம் புனைதல் எனும் குற்றச்செயலையும் புரிந்துள்ளார்கள். போலியான மருத்துவக் குறிப்பினை பிரசுரித்த பின்னர் ஆசிரி வைத்தியசாலையின் உத்தியோகபூர்வ “பேஸ் புக்” தளத்திலிருந்து மும்மொழியிலும் அறிவித்தல்களை விடுத்து சம்பந்தப்பட்ட மருத்துவக் குறிப்பு போலியானதென சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இந்த போலியான குறிப்பினை தொலைக்காட்சி உரையாடலொன்றின்போதும் காட்டுவதற்காகவும் பிரயோகித்தார்கள். தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் பொலீசுக்கும் முறைப்பாடு செய்தாலும் அவற்றை தடுத்துநிறுவத்துவதற்காக தெளிவான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை புலனாகவில்லை. நியாயமான தேர்தலொன்றை நடத்துவது மாத்திரமன்றி அதற்காக பின்புலத்தை அமைத்துக் கொடுக்க வேண்டியதும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும். தேர்தல்கள் சட்டத்தை ஒருபுறம் வைத்தாலும் சாதாரண சட்டம் சீராக அமுலாக்கப்படுகின்றதென நாங்கள் நல்லெண்ணத்துடன் நம்பிக்கை வைத்திருக்கிறோம். “புதிய பாதை தேசிய இயக்கம்” எனும் அமைப்பினை உருவாக்கிக்கொண்ட ஒருவர் அதன் செயலாளராக அனில் சாந்த பர்னாந்து என்ற பெயரில் தோற்றி, ஊடக கலந்துரையாடலொன்றையும் நடாத்தினார். அவர் 21 ஆந் திகதிக்குப் பின்னர் மதம்சார் வன்முறையொன்று வருமெனவும் மக்கள் விடுதலை முன்னணி ஆயுதங்களை சேகரித்து வருவதாகவும் பாரதூரமான ஒரு கூற்றினை வெளியிட்டுள்ளார். இல்லாத பீதிநிலையை சமூகத்தில் உருவாக்கிட முயற்சிக்கின்ற அவர்கள் தேர்தல்கள் சட்டத்திற்கும் அப்பால்சென்ற சிவில் மற்றும் கலாச்சார உரிமைகள் பற்றிய சர்வதேச சமவாயத்தை (ஐ.சீ.சி.பி. ஆர்.) மீறுவதில் ஈடுபட்டுள்ளார். மக்கள் மத்தியில் சமூக சகவாழ்வினை இல்லாதொழிக்க மேற்கொள்கின்ற முயற்சியாகும்.
இந்த சர்வதேச சமவாயத்திற்கிணங்க இந்த நாட்டில் விதிக்கப்பட்டுள்ள சட்டங்களை எவ்வளவு பலம்பொருந்தியதாக அமுலாக்கினார்கள் என்பது கடந்த காலங்களில் நன்றாகவே சித்தரிக்கப்பட்டது. சமூகத்தில் சட்டத்திற்கிணங்க நடந்துகொள்ளத் தெரியாவிட்டால் அந்த ஆட்களை சட்டத்தினால் கட்டிப்போட வேண்டும். தமது மண்டைகளில் இருக்கின்ற திரிபுநிலைகளை சமூகமயப்படுத்தி மற்றவர்களின் மனதை திரிபுபடுத்துகின்ற வகையில் நடந்துகொள்வார்களாயின் இது ஒரு பாரதூரமான நிலைமையாகும். அமைதியான சுயாதீனமான தேர்தலுக்கான சுற்றுச்சூழல் கட்டியெழுப்பப்பட்டுள்ளவேளையில் இவ்வாறான ஆட்கள் மேற்கொண்டு வருகின்ற திகிலூட்டுகின்ற பிரச்சாரங்கள் சம்பந்தமாக சட்டம் கடுமையாக அமுலாக்கப்படல் வேண்டும். இவ்வாறான செயல்கள் தொடர்பில் நாட்டில் சட்டத்தை அமுலாக்குகின்ற நிறுவனங்கள் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும்.
கடந்த 07 ஆந் திகதி தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் மாநாட்டுக்கு நாடு பூராவிலும் பரந்துள்ள சட்டத்தரணிகள் வருகைதந்திருந்தவேளையில் ஒரு போத்தல் தண்ணீர் மாத்திரமே கொடுத்தோம். எனினும் அன்றைய தினம் மாலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் சந்திப்பின் பின்னர் இராப்போசன விருந்து மதுபானத்தை உள்ளிட்டதாகவே வழங்கப்பட்டது. அது சம்பந்தமாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நாங்கள் அதனை நடாத்துவதற்கு முன்னராகவே முறைப்பாடு செய்தபோதிலும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காலைவேளையில் 2,800 இற்கு மேற்பட்டோர் கலந்துகொண்ட எமது சட்டத்தரணிகள் மாநாடு நடாத்தப்பட்டபோதிலும் மாலையில் அவர்கள் அதே வளவில் நடாத்திய மாநாட்டில் தேர்தல் சட்டத்தை மீறி செயலாற்றி உள்ளார்கள். சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கையளிக்கப்பட்டுள்ள தத்துவங்களின்படி சனாதிபதி வேட்பாளர்கள் அனைவருக்கும் நியாயமாக நடந்துகொள்வார்களென நாங்கள் எதிர்பார்க்கிறோம். தேர்தல் சட்டத்தைப்போன்றே தண்டனைச் சட்டக்கோவையையும் மீறுதல் தொடர்பில் அந்த நிறுவனம் கடுமையாக இயங்கிவருமென நாங்கள் நம்புகிறோம்.
“தேர்தல்கள் ஆணைக்குழு தனது தத்துவங்களின்படி துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்”
-தேசிய மக்கள் சக்தியின் தேர்தல்கள் கண்காணிப்பு நிலையத்தின் பிரதானீ இளைப்பாறிய சிரேட்ட பிரதிப் பொலீஸ் மா அதிபர் மார்க் குணவர்தன-
இன்று முதல் ஜனாதிபதி தேர்தலுக்கு சரியாக ஏழு நாட்கள் மாத்திரமே இருக்கின்றன. ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான சட்டத்தின்படி சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடாத்துவதற்கான பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவிடமே இருக்கிறது. அந்த பொறுப்பினை நடைமுறையில் ஈடேற்றுகையில் பொலீஸாரும் ஏனைய அரச சேவைகளும் உதவி புரிகின்றன. இவ்விதமாக நடாத்தப்படுகின்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற தோழர் அநுர குமார திசாநாயக்கவின் பெருவெற்றி நாட்டின் எல்லாபக்கங்களிலும் உறுதியாகி உள்ளது. நாங்கள் இதுவரை முன்வைத்துள்ள முறைப்பாடுகள் சம்பந்தமாக தேர்தல்கள் ஆணைக்குழுவிடமிருந்து எந்தவிதமான நியாயமும் கிடைக்கவில்லை. 2024 செப்டெம்பர் மாதத்தில் இலங்கை மன்றக் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் விருந்துபசாரமொன்ற நடைபெற்றது. இதுவும் மக்கள் அபிப்பிராயத்தை மாற்றுவதற்கான உபசரிப்பாக நிலவுகின்றது. அதைப்போலவே சுகாதார அமைச்சர் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு “வோட்டர்ஸ் எஜ்” ஹோட்டலில் கூட்டமொன்றை நடாத்துவதற்காக அழைப்பு விடுத்திருந்தார். அது நடாத்தப்பட்டது. எந்தவிதமான தயக்கமும் அச்சமுமின்றி சனாதிபதியின் உத்தியோகபூர்வ “பேஸ்புக் கணக்கில்” இது நேரலையாக பிரசுரமாகியது. அவர்கள் சட்டத்தை மீறி எம்மை குறைகூறுகிறார்கள்.
கடந்த 13 ஆந்திகதி நிரொஷன் பாதுக்க இணைப்பாக்கம்செய்து “சினமன் லேக்’ ஹோட்டலில் போசன விருந்தொன்று நடாத்தப்பட்டது. அதில் ஒரு பீங்கான் சாப்பாட்டின் பெறுமதி ரூபா 5,500 விட அதிகமாகும். அதைப்போலவே பிலியந்தலையில் சனாதிபதியின் கூட்டமொன்றை நடாத்த நீர்கொழும்பு டிப்போவிலிருந்து லங்கம சாரதிகள், நடாத்துனர்கள் மற்றும் ஏனைய குழுவினரை ஈடுபடுத்தி சட்டவிரோதமான போக்குவரத்து அலுவல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஏதாவது நடந்தபின்னர் அந்த இடங்களுக்குச் செல்வதில் பலனில்லை. எனினும் எதிர்காலத்திலேனும் தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ள தத்துவங்களுக்கு அமைவாக துரித நடவடிக்கைகள் எடுக்கப்படுமென நம்புகிறோம். அதன் மூலமாக உண்மையாகவே சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படுமென நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
“வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை கடுகளவேனும் குறைத்துவிட முடியாது”
-தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கண்காணிப்பு நிலையத்தின் அங்கத்தவர் இளைப்பாதறிய பொலீஸ் அத்தியட்சகர் எச்.யூ. பியனந்த-
இன்னும் ஆறு நாட்களில் இந்நாட்டின் ஜனாதிபதியாக எவரை நியமித்துக்கொள்ள வேண்டுமென்பதை பெரும்பான்மையான மக்கள் தீர்மானித்து விட்டார்கள். அதனைத் தாங்கிக்கொள்ள முடியாமல் ஏனைய பிரதான வேட்பாளர்கள் பலவிதமான வன்செயல்களுக்கு தூபமிட்டு வருகிறார்கள். எனினும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் மிகுந்த கவனத்துடன் கீழ்மட்ட அங்கத்தவர்கள் வரை வார்த்தையால்கூட எந்தவிதமான துன்புறுத்தலையும் புரியவேண்டாமென வேண்டுகோள் விடுத்துள்ளார். அவ்வாறு இருக்கையில் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பிரதான அலுவலகத்திற்கும் பம்பல தேர்தல் அலுவலகத்திற்கும் கறுப்பெண்ணெய் வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக நேற்று (13) மொனறாகலையில் நடைபெற்ற எமது கூட்டத்தில் கலந்துகொண்டு திரும்பிக்கொண்டிருந்த மக்கள்நிறைந்த பஸ்வண்டிமீது புத்தல, மஹபொடயாய பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தின் முன்னால்வைத்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இன்றளவில் தேசிய மக்கள் சக்தியை சுற்றி மக்கள் திரண்டுவருவதை தாங்கிக்கொள்ள முடியாமலேயே இவ்வாறான தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறார்கள். எமக்கு இதுபற்றி அறிவித்ததும் புத்தல பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவித்து இது சம்பந்தமாக வெளிப்படைத்தன்மைகொண்ட விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு அறிவித்தோம். நாங்கள் எதிர்பார்ப்பது சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலாகும். அவர்கள் எமது கூட்டமைவைச்சேர்ந்த மூவரைத் தாக்கியுள்ளதோடு அவர்களில் ஒரு பெண்ணும் அடங்குகிறார். அவருக்கு ஆறு தையல்கள் போடப்படப்பட்டுள்ளது. எமக்கு கிடைத்த தகவலின்படி சீ.பீ.ஐ. 1077 இலக்கமுடைய அல்ட்டோ காரில்வந்த குழுவினர் மதுபானங்களை பகிர்ந்தளித்து தாக்குதல் நடாத்த தூண்டியுள்ளார்கள். அது சம்பந்தமாக சாகர எனும் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் ஒரு வாக்குமூலத்தை வழங்கியவேளையில் மதுபானம் வழங்கி பஸ் வண்டிகளுக்கு தாக்குதல் நடாத்துமாறு அறிவுறுத்தியதை ஏற்றுக்கொண்டுள்ளார். அரசியல் கட்சியொன்றைச் சேர்ந்தவர் அல்லது குழுவினர் எதேனும் வன்செயலை கட்டவிழ்த்துவிட்டால் பொலீஸார் முறைப்படி செயலாற்றுவார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு. புத்தல தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் அனைவரையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம். இவ்வாறான வன்முறைச்செயல்களை கட்டவிழ்த்துவிட்டு தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை கடுகளவேனும் குறைத்துவிட முடியாது. புத்தல தாக்குதலுடன் தொடர்புடைய அண்ணன், தம்பி ஆகிய பிரதான சந்தேகநபர்கள் பொலீஸில் சரணடைந்துள்ளார்கள். இந்த நாட்டின் அமைதியை விரும்புகின்ற பிரஜைகள் இவ்வாறான செயல்களுக்கு ஒருபோதுமே இடமளிப்பார்கள் என்பதை நாங்கள் நம்பமாட்டோம்.