(-Colombo, September 23, 2024-) கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் இன்று பிற்பகல் (23) வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகையை தரிசித்து ஆசி பெற்றார். தலதா மாளிகை வளாகத்தை வந்தடைந்த ஜனாதிபதியை தலதா மாளிகையின் தியவடன நிலமே நிலங்க தேல பண்டார சம்பிரதாய முறைப்படி வரவேற்றார். பின்னர், தலதா மாளிகையில் சமய வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதிக்கு மகா சங்கத்தினர் செத் பிரித் பாராயணம் செய்து ஆசீர்வதித்தனர். வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா மாளிகை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள விசேட […]
(-Colombo, September 23, 2024-)
கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் இன்று பிற்பகல் (23) வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகையை தரிசித்து ஆசி பெற்றார்.
தலதா மாளிகை வளாகத்தை வந்தடைந்த ஜனாதிபதியை தலதா மாளிகையின் தியவடன நிலமே நிலங்க தேல பண்டார சம்பிரதாய முறைப்படி வரவேற்றார்.
பின்னர், தலதா மாளிகையில் சமய வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதிக்கு மகா சங்கத்தினர் செத் பிரித் பாராயணம் செய்து ஆசீர்வதித்தனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா மாளிகை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள விசேட பார்வையாளர் புத்தகத்தில் நினைவுக் குறிப்பு ஒன்றையும் ஜனாதிபதி பதிவிட்டார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.டி. லால் காந்தவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
(-Colombo, September 23, 2024-) இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் உப சரத்து 52 (1) இல் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி, கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களினால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக டி.டபிள்யூ. ஆர். பி. செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். ரவீ செனவிரத்ன, கொழும்பு பல்கலைக்கழகத்தில் மனித உரிமைகள் தொடர்பில் முதுமாணிப் பட்டம் பெற்றவர். ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரான அவர், விசேட அதிரடிப் படையின் ஆரம்பகால உறுப்பினராகவும், அரச புலனாய்வுப் […]
(-Colombo, September 23, 2024-)
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் உப சரத்து 52 (1) இல் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி, கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களினால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக டி.டபிள்யூ. ஆர். பி. செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
ரவீ செனவிரத்ன, கொழும்பு பல்கலைக்கழகத்தில் மனித உரிமைகள் தொடர்பில் முதுமாணிப் பட்டம் பெற்றவர். ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரான அவர், விசேட அதிரடிப் படையின் ஆரம்பகால உறுப்பினராகவும், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதிப் பணிப்பாளராகவும், தாய்லாந்துக்கான இலங்கைத் தூதரகத்தின் முன்னாள் முதல் செயலாளராகவும், இன்டர்போல் இலங்கைக் கிளையின் முன்னாள் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
(-Colombo, September 23, 2024-) பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக ஓய்வுபெற்ற விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். துய்யகொந்த நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 52 (I) பிரிவின் ஊடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. சீன தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழக பாதுகாப்புக் கல்வி தொடர்பான விஞ்ஞானப் பட்டதாரியான அவர், கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழக விஞ்ஞானப் பட்டதாரியுமாவார். எம் ஐ 24 தாக்குதல் ஹெலிகொப்டர் […]
(-Colombo, September 23, 2024-)
பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக ஓய்வுபெற்ற விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். துய்யகொந்த நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 52 (I) பிரிவின் ஊடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
சீன தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழக பாதுகாப்புக் கல்வி தொடர்பான விஞ்ஞானப் பட்டதாரியான அவர், கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழக விஞ்ஞானப் பட்டதாரியுமாவார்.
எம் ஐ 24 தாக்குதல் ஹெலிகொப்டர் படையின் முன்னாள் கட்டளை அதிகாரி, அனுராதபுரம் விமானப்படை தளத்தின் முன்னாள் கட்டளை அதிகாரி, சீன துறைமுக விமானப்படை கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி, பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி மற்றும் விமானப்படை தலைமையகத்தில் முன்னாள் பயிற்சிப் பணிப்பாளரான அவர் வீரவிக்ரம விபூஷண ரணவிக்ரம மற்றும் ரண சூர பதக்கங்களையும் வென்றுள்ளார்.
(-Colombo, September 23, 2024-) புதிய ஜனாதிபதி செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். களனிப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானத்துறையில் கௌரவப் பட்டம் பெற்றுள்ள குமாநாயக்க, ஜப்பானின் National Graduate Institute for Policy Studies (GRIPS) நிறுவனத்தில் அபிவிருத்தி பொருளாதாரம் தொடர்பான கலாநிதிப் பட்டம் பெற்றுள்ளதோடு அரச நிதி முகாமைத்துவம் மற்றும் அரச பொருளியல் தொடர்பில் (Public Economics) முதுமாணிப் பட்டம் […]
(-Colombo, September 23, 2024-)
புதிய ஜனாதிபதி செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
களனிப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானத்துறையில் கௌரவப் பட்டம் பெற்றுள்ள குமாநாயக்க, ஜப்பானின் National Graduate Institute for Policy Studies (GRIPS) நிறுவனத்தில் அபிவிருத்தி பொருளாதாரம் தொடர்பான கலாநிதிப் பட்டம் பெற்றுள்ளதோடு அரச நிதி முகாமைத்துவம் மற்றும் அரச பொருளியல் தொடர்பில் (Public Economics) முதுமாணிப் பட்டம் பெற்றுள்ளார்.
அவர் மாத்தறை ராகுல கல்லூரியின் பழைய மாணவராவார்.
கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, சுங்கத்துறையில் ஊழல் ஒழிப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டுள்ளதோடு அந்த ஆய்வுகள், சர்வதேச வெளியீடுகள் பலவற்றில் பிரசுரமாகயுள்ளன.
அவர் உலக சுங்க அமைப்பின் (World Customs Organization) சுங்க நவீனமயமாக்கல் தொடர்பான பட்டய ஆலோசகர் என்பதோடு பணிவிணக்க மேம்பாடு தொடர்பான நிபுணர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலக சுங்க அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி பல நாடுகளுக்கு விஜயம் செய்து சுங்க இணக்க மேம்பாடு தொடர்பான பல நிகழ்வுகளில் இவர் பங்கேற்றுள்ளார்.
1997 ஆம் ஆண்டு சுங்க அதிகாரியாக சேவையில் இணைந்த அவர் இலங்கை சுங்கத் திணைக்கள பிரதிப் பணிப்பாளராகவும் சேவையாற்றியுள்ளார்.
(-Colombo, September 22, 2024-) பல நூற்றாண்டு காலமாக நாங்கள் கண்ட கனவே இறுதியில் நனவாகிக்கொண்டிருக்கிறது. இந்த கனவை நனவாக்குவதற்காக பல சிரமங்களுக்கு மத்தியில் இலட்சக்கணக்கான நீங்கள் அனைவரும் கடந்த காலத்தில் மேற்கொண்ட முயற்சி பலனளித்துள்ளது. அதற்காக என்னால்உங்களுக்கு நன்றிகூற முடியாது. அதற்கான காரணம் அது என்னுடையதல்ல, எமது கூட்டுமுயற்சியின் பெறுபேறாகும். இது எம்மனைவரதும் வெற்றியாகும். நாங்கள் மாத்திரமல்ல இந்த வெற்றிக்காக பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் தமது இரத்தம், கண்ணீர், வியர்வையை மாத்திரமன்றி உயிர்களைக்கூட தியாகம்செய்துள்ளார்கள். எமக்கு முந்திய […]
(-Colombo, September 22, 2024-)
பல நூற்றாண்டு காலமாக நாங்கள் கண்ட கனவே இறுதியில் நனவாகிக்கொண்டிருக்கிறது. இந்த கனவை நனவாக்குவதற்காக பல சிரமங்களுக்கு மத்தியில் இலட்சக்கணக்கான நீங்கள் அனைவரும் கடந்த காலத்தில் மேற்கொண்ட முயற்சி பலனளித்துள்ளது. அதற்காக என்னால்உங்களுக்கு நன்றிகூற முடியாது. அதற்கான காரணம் அது என்னுடையதல்ல, எமது கூட்டுமுயற்சியின் பெறுபேறாகும். இது எம்மனைவரதும் வெற்றியாகும்.
நாங்கள் மாத்திரமல்ல இந்த வெற்றிக்காக பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் தமது இரத்தம், கண்ணீர், வியர்வையை மாத்திரமன்றி உயிர்களைக்கூட தியாகம்செய்துள்ளார்கள். எமக்கு முந்திய தலைமுறையினர் எம்மிடம் கையளித்த குறுந்தடியில் வீணாகிப்போய்விடாத அவர்களின் முடிவிலா அர்ப்பணிப்பே பொதிந்துள்ளது. அதன் சுமையை நாங்கள் நன்றாகவே அறிவோம். எதிர்பார்ப்புகள் நிறைந்த உங்களின் இலட்சக்கணக்கான விழிகள் எமக்கு தெம்பூட்டுகின்றன. இலங்கையின் வரலாற்றினை புதிதாக எழுதவேண்டுமென எமக்கு அழைப்பு விடுக்கின்றன.
கனவை முழுமையாகவே யதார்த்தபூர்வமானதாக அமைத்துக்கொள்வதற்காக இந்த மண்ணுக்கு புத்தம்புதிய ஆரம்பமொன்று அவசியமாகும். சிங்கள, தமிழ், முஸ்லீம்களாகிய எம்மனைவரதும் ஒன்றுசேர்ந்த வலிமை ஆரம்பிக்கின்ற யுகத்தின் அடிக்கல்லாக அமையும். அதன்மீதுதான் புதிய மறுமலர்ச்சி யுகம் கட்டியெழுப்பப்படும்.
வாருங்கள் நாங்கள் அதற்காக கைகோர்த்துக்கொள்வோம்!
(-பெருவெற்றிக்கான நுகேகொடை கூட்டம் – 18-09-2024-) இலங்கை வரலாற்றில் பல்வேறு அரசாங்கங்கள் உருவாகியுள்ளன. அவ்வனைத்து அரசாங்கங்களும் கடந்த காலங்களில் தமது அரசியல் வெற்றிகளுக்காக இனவாதத்தை, மதவாதத்தை, குல மரபினை பயன்படுத்திக் கொண்டார்கள். எனினும், நாங்கள் தேசிய நல்லிணக்கத்திற்கு உயிரூட்டியவண்ணம் இந்த வெற்றியை அண்மித்துள்ளோம். இந்த இறுதி கூட்டத்திலே கூறுவதற்கு தீர்மானித்திருக்காவிட்டாலும் கூட இந்த அரசியல் மேடையில், எமது நாட்டின் இந்த அரசியல் போர்க்களத்தில் இந்த இனவாத மதவாத கோஷங்கள் அகற்றப்பட வேண்டுமென்பதை ஓரளவுக்காவது வலியுறுத்த வேண்டும் என […]
(-பெருவெற்றிக்கான நுகேகொடை கூட்டம் – 18-09-2024-)
இலங்கை வரலாற்றில் பல்வேறு அரசாங்கங்கள் உருவாகியுள்ளன. அவ்வனைத்து அரசாங்கங்களும் கடந்த காலங்களில் தமது அரசியல் வெற்றிகளுக்காக இனவாதத்தை, மதவாதத்தை, குல மரபினை பயன்படுத்திக் கொண்டார்கள். எனினும், நாங்கள் தேசிய நல்லிணக்கத்திற்கு உயிரூட்டியவண்ணம் இந்த வெற்றியை அண்மித்துள்ளோம். இந்த இறுதி கூட்டத்திலே கூறுவதற்கு தீர்மானித்திருக்காவிட்டாலும் கூட இந்த அரசியல் மேடையில், எமது நாட்டின் இந்த அரசியல் போர்க்களத்தில் இந்த இனவாத மதவாத கோஷங்கள் அகற்றப்பட வேண்டுமென்பதை ஓரளவுக்காவது வலியுறுத்த வேண்டும் என எண்ணினேன். நீங்கள் பார்த்திருப்பீர்கள் சஜித் பிரேமதாசவின் அனைத்து தேர்தல் மேடைகளும் மீண்டும் இனவாதம் மதவாதம் நடத்தையை நோக்கமாகக் கொண்டவையாகவே இருந்தன. ஆரம்பத்தில் அவர்கள் கண்டி மற்றும் குருநாகல் கூட்டங்களில் குறிப்பிடுகிறாரகள், தேசிய மக்கள் சக்தி அதிகாரத்திற்கு வந்தவுடன் கண்டி பெரகராவை நிறுத்தி விடுவார்கள். எத்கந்துவிகாரை பெரகரவை நிறுத்தி விடுவார்கள். அவை என்ன? எமது நாகரீகம் கட்டியெழுப்பப்படும் பொழுது ஒரு தேசமாக, எமக்கான கலாசார மரபுரிமைகள் அவை.
அவை ஐக்கிய மக்கள் சக்திக்கோ எமக்கோ ரணிலுக்கோ மொட்டு கட்சிக்கோ தொடர்புடையவையல்ல. அவை எமது தேசிய மரபுரிமைகள். எமது நாகரீகத்தில் எமக்கு எஞ்சியுள்ள கலாசார பெறுமதிகள். ஆனால் சஜித் பிரேமதாச போன்றோர் அவற்றை மிகவும் அருவருக்கத்தக்க வகையில் தமது அரசியல் போர்க்களத்தில் கோஷமாகக் கொண்டார்கள். நாம் ஆட்சிக்கு வந்தால் பௌத்த தேரர்களுக்கு தானம் வழங்குதல் நிறுத்தப்படும் என்றார்கள். நாங்கள் கேட்பது ஒன்று தான் இந்த நாட்டில் தேரர்களுக்கு அரசாங்க வர்த்தமானி அறிவித்தலின் மூலம் தானங்கள் வழங்கப்படுவதில்லை. அரசாங்கச் சுற்றறிக்கையின் மூலம் அல்ல பிக்குகளுக்கு தானம் வழங்குவது. எமது நாட்டில் நாகரீகம் கட்டியெழுப்பப்பட்ட விதம். எமது நாட்டில் பௌத்த மதத்தவர்கள் தாம் வளர்த்துக் கொண்டுள்ள சமய நம்பிக்கையின் இயல்புகள், அவர்கள் தமது சமயத்தைக் குறித்து கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்படுத்தல்கள், இவை அரசாங்கமொன்று மாறியதன் காரணமாக மாற்றமடையுமா? அவ்வாறான கீழ்மட்ட நிலைக்கு சஜித் பிரேமதாச போன்றோர் இந்த தேர்தல் செயற்பாட்டைக் கொண்டு வந்தார்கள்.
அதுமட்டுமல்ல, பௌத்த சிங்கள மக்களுக்கு இவ்வாறு கூறிக்கொண்டு, கிழக்கிற்குச் சென்று அவரது சீடர் ஹிஸ்புல்லாஹ் கூறுகிறார், தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்தால் இப்பொழுது முஸ்லிம்கள் ராமஸான் கொண்டாடுகிறார்கள். ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடுகிறார்கள். தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் இரண்டில் ஒன்று தேர்ந்தெடுக்க வேண்டுமாம். இரண்டும் முடியாதாம். எமக்கு வேறு வேலையில்லை தானே. இஸ்லாமியர்கள் ஒரு நாளில் ஐந்து வேளை தொழுகையில் ஈடுபடுகிறார்கள். ஹிஸ்புல்லாஹ் சஜித்தின் மேடையில் கூறுகிறார், நாம் ஆட்சியமைத்தால் ஐந்து வேளை தொழ அனுமதிக்க மாட்டோமாம். தாடி வைத்துக் கொள்ள அனுமதிக்க மாட்டோமாம். கீழ்த்தரமான அரசியல். அதனால் சஜித் பிரேமதாசவின் இந்த கைவிடப்பட்ட நிலைமையை இந்த வங்குரோத்து நிலைமையைக் குறித்து நாங்கள் வருந்துகின்றோம்.
ஆனால் இந்த தேர்தலின் பின்னர் எமது நாட்டில் எந்த மூலையிலாவது இனவாதத்தைத் தூண்டும்படியான, இனவாதத்தை ஊக்குவிக்கும்படியான, மற்றவரை அசட்டைச் செய்யும்படியான, அடுத்தவரின் அடையாளங்களுக்கு மதிப்பளிக்காத வகையிலான, அடுத்தவரின் அடையாளங்களைத் தனிமைப்படுத்தும்படியான எந்தவொரு நடவடிக்கைக்கும், எந்தவொரு வெளிப்பாடுகளுக்கும் தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் இடமில்லை. இந்த நாட்டை மீட்டெடுக்க அந்த இடத்திலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். ஆனால் மறுபக்கம் நான் சஜித் பிரேமதாசவைக் குறித்து பெரிதாகக் கலவரமடையவில்லை.