(-Colombo, September 27, 2024-) இந்நாட்டில் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் கௌரவ அநுரகுமார திசாநாயக்கவிற்கு உலக வங்கிக் குழுமம் வாழ்த்து தெரிவித்துள்ளது. உலக வங்கியின் தெற்காசிய வலயத்தின் தலைவர் மார்டின் ரயிஸர், சர்வதேச நிதி கூட்டுத்தாபனத்தின் ஆசிய மற்றும் பசுபிக் வலய உப தலைவர் ரிகார்டோ புலிட் ஆகியோர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள விசேட செய்தியில் இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்துக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளனர். தற்போது இலங்கையின் பொருளாதாரம் மீளக் கட்டமைப்பதற்கு […]
(-Colombo, September 27, 2024-)
இந்நாட்டில் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் கௌரவ அநுரகுமார திசாநாயக்கவிற்கு உலக வங்கிக் குழுமம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
உலக வங்கியின் தெற்காசிய வலயத்தின் தலைவர் மார்டின் ரயிஸர், சர்வதேச நிதி கூட்டுத்தாபனத்தின் ஆசிய மற்றும் பசுபிக் வலய உப தலைவர் ரிகார்டோ புலிட் ஆகியோர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள விசேட செய்தியில் இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்துக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.
தற்போது இலங்கையின் பொருளாதாரம் மீளக் கட்டமைப்பதற்கு தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கள் அவசியம் என்பதை அறிந்துகொண்டுள்ளதோடு, பொருளாதார வளர்ச்சி,செழுமை, மற்றும் அபிவிருத்திக்கான வாய்ப்புகள் ஒரே அளவான முக்கியத்துவத்தை கொண்டவை என்றும் அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் மிகவும் பாதிக்கப்படும் நிலையிலிருப்போரின் தேவைகளை பூர்த்தி செய்வதை போலவே அனைத்தும் உள்ளடங்களான அபிவிருத்திக்கு இலங்கையின் புதிய நிருவாகத் தலைமைக்கு உலக வங்கிக் குழுமத்தின் ஆதரவை பெற்றுத்தர அர்ப்பணிப்பதாகவும் அந்த கடித்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
(-Colombo, September 25, 2024-) கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் 09 மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் விவரம் வருமாறு, 01-ஹனீஸ் யூசுப் – மேல் மாகாண ஆளுநர் 02-சரத் பண்டார சமரசிங்க அபயகோன் – மத்திய மாகாண ஆளுநர் 03-பந்துல ஹரிஸ்சந்திர – தென் மாகாண ஆளுநர் 04-திஸ்ஸ குமாரசிரி வர்ணசூரிய – வடமேல் மாகாண ஆளுநர் 05-வசந்த குமார விமலசிறி – வட மத்திய மாகாண ஆளுநர் 06-நாகலிங்கம் சேதநாயகன் […]
(-Colombo, September 25, 2024-)
கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் 09 மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்று நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் விவரம் வருமாறு,
01-ஹனீஸ் யூசுப் – மேல் மாகாண ஆளுநர்
02-சரத் பண்டார சமரசிங்க அபயகோன் – மத்திய மாகாண ஆளுநர்
03-பந்துல ஹரிஸ்சந்திர – தென் மாகாண ஆளுநர்
04-திஸ்ஸ குமாரசிரி வர்ணசூரிய – வடமேல் மாகாண ஆளுநர்
05-வசந்த குமார விமலசிறி – வட மத்திய மாகாண ஆளுநர்
06-நாகலிங்கம் சேதநாயகன் – வட மாகாண ஆளுநர்
07-ஜயந்த லால் ரத்னசேகர – கிழக்கு மாகாண ஆளுநர்
08-சம்பா ஜானகி ராஜரத்ன – சபரகமுவ மாகாண ஆளுநர்
09- கபில ஜயசேகர -ஊவா மாகாண ஆளுநர்
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
(-Colombo, September 25, 2024-) புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சுகளின் செயலாளர்கள் உள்ளிட்ட 15 பேர் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.அவர்களின் பெயர் விவரம் வருமாறு. 01 ஜீ.பீ.சுபுதந்திரி – பிரதமரின் செயலாளர்02 டபிள்யூ.எம்.டீ.ஜே.பெர்னாண்டோ -அமைச்சரவையின் செயலாளர்03 கே.டீ.எஸ்.ருவன்சந்திர -போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு04 கே.எம்.எம்.சிறிவர்தன – நிதி, பொருளாதார அபிவிருத்தி,தேசிய கொள்கைகள், திட்டமிடல் மற்றும் சுற்றுலா அமைச்சு05 அருணி விஜேவர்தன – வெளிவகார அமைச்சு06 ஜே.எம்.டீ.ஜயசுந்தர – கல்வி, விஞ்ஞான மற்றும் […]
(-Colombo, September 25, 2024-)
புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சுகளின் செயலாளர்கள் உள்ளிட்ட 15 பேர் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களின் பெயர் விவரம் வருமாறு.
01 ஜீ.பீ.சுபுதந்திரி – பிரதமரின் செயலாளர்
02 டபிள்யூ.எம்.டீ.ஜே.பெர்னாண்டோ -அமைச்சரவையின் செயலாளர்
03 கே.டீ.எஸ்.ருவன்சந்திர -போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு
04 கே.எம்.எம்.சிறிவர்தன – நிதி, பொருளாதார அபிவிருத்தி,தேசிய கொள்கைகள், திட்டமிடல் மற்றும் சுற்றுலா அமைச்சு
05 அருணி விஜேவர்தன – வெளிவகார அமைச்சு
06 ஜே.எம்.டீ.ஜயசுந்தர – கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு
07 கே.மஹேசன் – மகளிர்,சிறுவர் மற்றும் இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சு
08 எம்.எம்.நயிமுதீன் -வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சு
09 ஏ.எம்.பீ.எம்.பீ. அத்தபத்து -கிராமிய மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சு
10 பாலித குணரத்ன மஹீபால -சுகாதார அமைச்சு
11 டபிள்யூ.பீ.பீ.யசரத்ன -நீதி, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழில் அமைச்சு
12 பீ.கே.பிரபாத் – சந்திரகீர்த்தி சுற்றாடல், வனஜீவராசிகள், வன வளங்கள், நீர் வழங்கல், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு
13 எம்.பீ.என்.எம். விக்ரமசிங்க – விவசாயம், காணி, கால்நடை , நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சு
14 எச்.எஸ்.எஸ். துய்யகொந்த – பாதுகாப்பு அமைச்சு
15 டீ.டபிள்யூ.ஆர்.பீ. செனவிரத்ன – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு
16 ரஞ்சித் ஆரியரத்ன -புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சு
17 பேராசிரியர் கே.டீ.எம். உதயங்க ஹேமபால – வலுசக்தி அமைச்சு
(-Colombo, September 24, 2024-) நாட்டின் புதிய பிரதமராக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். கலாநிதி ஹரிணி அமரசூரிய இலங்கையின் 28வது பிரதமர் ஆவார். இதேவேளை, இன்று நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ளஅமைச்சர்கள் பின்வருமாறு: ஜனாதிபதி கௌரவ. அநுரகுமார திஸாநாயக்க 01. பாதுகாப்பு02. நிதி, பொருளாதார அபிவிருத்தி,தேசிய கொள்கைகள், திட்டமிடல் மற்றும் சுற்றுலா03. வலுசக்தி04. விவசாயம், காணி, கால்நடை , […]
(-Colombo, September 24, 2024-)
நாட்டின் புதிய பிரதமராக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
கலாநிதி ஹரிணி அமரசூரிய இலங்கையின் 28வது பிரதமர் ஆவார்.
இதேவேளை, இன்று நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ளஅமைச்சர்கள் பின்வருமாறு:
ஜனாதிபதி கௌரவ. அநுரகுமார திஸாநாயக்க
01. பாதுகாப்பு
02. நிதி, பொருளாதார அபிவிருத்தி,தேசிய கொள்கைகள், திட்டமிடல் மற்றும் சுற்றுலா
03. வலுசக்தி
04. விவசாயம், காணி, கால்நடை , நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள்
பிரதமர் கௌரவ.ஹரிணி அமரசூரிய
05. நீதி, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழில்
06. கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பம்
07. பெண்கள், சிறுவர்கள் மற்றும் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு
08. வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி
09. சுகாதாரம்
விஜித ஹேரத்
10. புத்தசாசனம், மத மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை
11. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து
12. பொதுமக்கள் பாதுகாப்பு
13. வெளிவிவகாரம்
14. சுற்றாடல், வனஜீவராசிகள், வன வளங்கள், நீர் வழங்கல், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்
15. கிராமிய மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை
பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணராச்சி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுனில் ஹந்துன்நெத்தி, பிமல் ரத்நாயக்க, டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ, வசந்த சமரசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எச்.எஸ்.சம்பத் துய்யகொந்த உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
(-Colombo, September 24, 2024-) கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகமாக வைத்தியர் நஜித் இந்திக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை ரன்ன மத்திய கல்லூரி மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான வைத்தியர் நஜித் இந்திக்க, கொழும்பு மருத்துவ பீடத்தில் தனது மருத்துவ பட்டப்படிப்பை நிறைவு செய்தார். கடந்த 05 வருடங்களில் பல அரச வைத்தியசாலைகளில் வைத்தியராகவும் வைத்திய அதிகாரியாகவும் இவர் கடமையாற்றியுள்ளார். வைத்தியர் நஜித் இந்திக்க பல்கலைக்கழக மாணவர் செயற்பாட்டாளர் மற்றும் […]
(-Colombo, September 24, 2024-)
கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகமாக வைத்தியர் நஜித் இந்திக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை ரன்ன மத்திய கல்லூரி மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான வைத்தியர் நஜித் இந்திக்க, கொழும்பு மருத்துவ பீடத்தில் தனது மருத்துவ பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.
கடந்த 05 வருடங்களில் பல அரச வைத்தியசாலைகளில் வைத்தியராகவும் வைத்திய அதிகாரியாகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.
வைத்தியர் நஜித் இந்திக்க பல்கலைக்கழக மாணவர் செயற்பாட்டாளர் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
(-Colombo, September 23, 2024-) புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (23) கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையைச் சந்தித்து ஆசி பெற்றார். பொரளை பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, பேராயரைச் சந்தித்து நலம் விசாரித்ததுடன் சிறிது நேரம் உரையாடலில் ஈடுபட்டார். இங்கு கருத்து தெரிவித்த பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, இலங்கையின் பெரும்பான்மையான மக்களின் விருப்பத்தினால் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். இந்தச் […]
(-Colombo, September 23, 2024-)
புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (23) கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையைச் சந்தித்து ஆசி பெற்றார். பொரளை பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, பேராயரைச் சந்தித்து நலம் விசாரித்ததுடன் சிறிது நேரம் உரையாடலில் ஈடுபட்டார்.
இங்கு கருத்து தெரிவித்த பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை,
இலங்கையின் பெரும்பான்மையான மக்களின் விருப்பத்தினால் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். இந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கையில் தேவையான மாற்றத்தை ஏற்படுத்தும் பாரிய பொறுப்பை நாட்டு மக்கள் அவரிடம் ஒப்படைத்துள்ளனர். இது பொறுப்பு வாய்ந்த மற்றும் கடினமான பணியாக இருக்கலாம். அதற்காக அவருக்கு நாம் முழு ஆதரவையும் ஆசிகளையும் வழங்குவோம் என்று உறுதியளிக்கிறோம். குறிப்பாக இந்நாட்டின் வறிய மக்களைப் பற்றி சிந்தித்து உங்கள் பணியை தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இதன்போது, ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தவும் மற்றும் உண்மையை வெளியே கொண்டுவரத் தேவையான அடித்தளத்தை தயார் செய்ய முடிந்த அனைத்தையும் செய்வதாக ஜனாதிபதி தனக்கு உறுதியளித்ததாகத் தெரிவித்தார்.
கொழும்பு உயர் மறைமாவட் துணை ஆயர்களான மெக்ஸ்வெல் சில்வா ஆண்டகை, ஜே.டி. அந்தோணி ஆண்டகை, அன்டன் ரஞ்சித் ஆண்டகை, கொழும்பு பேராயர்களின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி, கொழும்பு பேராயரின் செயலாளர் அருட்தந்தை ஜோசப் இந்திக்க, பொருளாளர் அருட்தந்தை ஜூட் சமந்த பெர்னாண்டோ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி றியன்சி அர்சகுலரத்ன உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.