சமூக நீதியை நிலைநாட்டுவதே எங்கள் அரும்பணியின் பிரதான எதிர்பார்ப்பாகும். அனைவருக்கும் சம வாய்ப்புகள் மட்டுமின்றி நியாயமான விளைவுகளையும் அனுபவிக்கும் சமுதாயத்தை நாங்கள் நோக்காகக் கருதுகிறோம். வர்க்கம், இனம், மதம், மொழி, சாதி, இருப்பிடம் அல்லது பாலினம் என்ற வேறுபாடுகள் இல்லாமல், ஒவ்வொரு தனிமனிதனும் நிறைவான வாழ்க்கையை வாழவும், சமமான நிலையில் சமூகத்தில் பங்கேற்கவும் கூடிய சமூகத்தை உருவாக்குவதே எங்கள் குறிக்கோளாகும். வாய்ப்புகள், வளங்கள் மற்றும் சலுகைகள் நியாயமாக பங்கிடப்படும் ஒரு சமூகத்திற்காக நாங்கள் பாடுபடுகிறோம்.
இன்றைய சிக்கலான உலகில், மக்களின் அடிப்படைத் தேவைகளைப் போலவே புதிய தொழில்நுட்பத்தை அணுகுவதும், ஓய்வு நேரமும் இன்றியமையாததாக இருப்பதை நாம் அறிவோம். நாங்கள் செழிப்பை அளவிடுவதற்கு பொருளாதார வளர்ச்சிக்கு மேலதிகமாக குடிமகனின் வாழ்க்கைத் தரத்தில் காணப்படும் தரமான வளர்ச்சியையும் கணக்கில் கொள்கிறோம். பொருளாதார ஜனநாயகம், அதனுடன் இணைந்து போகும் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலையான வளர்ச்சி மூலம் அசைக்க முடியாத பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
தனிநபர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் உரிமைகள் மற்றும் பொறுப்புகளை ஒப்புக் கொள்ளும்போது சமூகம் செழிப்புறும் என்பதனை நாம் நம்புகிறோம். இரக்கம், கருணை, ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு சமூகத்தை உருவாக்குவதே எமது நோக்காகும். ஒவ்வொரு நபரும் உறவு, பாதுகாப்பு மற்றும் சகிப்புத்தன்மை போன்ற உணர்வுகளை அனுபவிக்கும் வலுவான சமூகத்தை வளர்ப்பதையே நாம் நோக்காகக் கொண்டுள்ளோம்.
வருங்கால சந்ததியினர் நம்மை விட சிறந்த உலகத்தை பெற்றுக்கொள்ளும் சமுதாயத்தை கட்டியெழுப்ப நாங்கள் உறுதி பூணுகிறோம். இந்த அர்ப்பணிப்பானது நீண்ட கால அடிப்படையில் நமது சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கானதாகும். இயற்கை மற்றும் மனிதர்களுக்கிடையிலான இணக்கமான சகவாழ்வினை நாங்கள் விரும்புகிறோம். குறுகிய கால ஆதாயங்களுக்காக வளங்களைச் சுரண்டுவதற்குப் பதிலாக, எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு பொறுப்பாக வளங்களைப் பயன்படுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம்.
ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கத்திலும் காணப்பட்ட ஊழல் கலாச்சாரத்தினால் பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார அம்சங்களை சிதைத்து, அரசாங்கம் மற்றும் அரச நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது. குடிமகன் எல்லாவற்றையும் செய்வதற்கு சட்டத்திற்குள்ளால் ஊடுருவ வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளான். இவற்றை எல்லாம் மனதில் கொண்டு, ஊழல், நேசவாதம் மற்றும் உறவினர் வரப்பிரசாதங்களை துடைத்தெறிந்து, நிர்வாகத்தின் அனைத்து மட்டங்களிலும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
தேசிய மக்கள் சக்தி இலங்கையை உலகின் விருத்தியடைந்த ஒரு நாடாக உயர்த்தி வைக்கவும் மக்களுக்கு அபிமானமும் மகிழ்ச்சியும்கொண்ட வாழ்க்கையை உரித்தாக்கிக் கொடுக்கவும் வல்ல முன்னேற்றமடைந்த விஞ்ஞானரீதியான கொள்கைத் தொடரொன்றை அமுலாக்கும்பொருட்டு தன்னிச்சையாக அர்ப்பணிக்கின்ற ஊழலற்ற மனிதக் குழுமத்தை உள்ளடக்கிய அரசியல் இயக்கமாகும்.
2019 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி இலங்கையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின்கீழ் பதிவுசெய்யப்பட்ட ஓர் அரசியல் கட்சியாகும். அதன் உத்தியோகபூர்வ சின்னம் திசைகாட்டியாகும்.
மேலும் படிக்கஒவ்வொரு குடிமகனின் கருத்துகளுக்கும் ஆலோசனைகளுக்கும் முக்கியத்துவம் அளித்து அவற்றை வெளிப்படுத்தும் உரிமை நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும்.