Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

NPP News

ஜனாதிபதி வாக்களித்தார்

(-Colombo, November 14, 2024-) “வடக்கு,கிழக்கு,தெற்கு,மேற்கை ஒன்றிணைக்கும் ஆட்சியை அமைப்போம்” – வாக்களித்த பின்னர் ஜனாதிபதி தெரிவிப்பு இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (14) முற்பகல் மருதானை பஞ்சிகாவத்த அபயசிங்காராமவில் தனது வாக்கை அளித்தார். வாக்களித்த பின்பு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி தேசிய மக்கள் சக்தி வலுவான பாராளுமன்றத்தை அமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். மக்களுக்கு ஏற்புடையதான சட்டங்களை நிறைவேற்றி, புதிய பாராளுமன்ற கலாசாரத்தை உருவாக்க […]

(-Colombo, November 14, 2024-)

President Anura Kumara Dissanayake At Voting Place

“வடக்கு,கிழக்கு,தெற்கு,மேற்கை ஒன்றிணைக்கும் ஆட்சியை அமைப்போம்”

– வாக்களித்த பின்னர் ஜனாதிபதி தெரிவிப்பு

இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (14) முற்பகல் மருதானை பஞ்சிகாவத்த அபயசிங்காராமவில் தனது வாக்கை அளித்தார்.

வாக்களித்த பின்பு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி தேசிய மக்கள் சக்தி வலுவான பாராளுமன்றத்தை அமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

President Anura Kumara Dissanayake Speaking To The Media At The Voting Place

மக்களுக்கு ஏற்புடையதான சட்டங்களை நிறைவேற்றி, புதிய பாராளுமன்ற கலாசாரத்தை உருவாக்க முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி வடக்கு,கிழக்கு,தெற்கு,மேற்கை ஒன்றிணைக்கும் ஆட்சியை அமைக்கும் என்றும் ஜனாதிபதி உறுதிபட கூறினார்.

President Anura Kumara Dissanayake Greeting The People At The Voting Place

ஜனாதிபதி தேர்தல் வெற்றியின் பின்னர் நாட்டில் காணப்பட்ட ஜனநாயக ரீதியிலான சுதந்திரத்தை இனிவரும் தேர்தல் காலங்களிலும் எதிர்பார்ப்பதாகவும், தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் மக்கள் அதை உணர்ந்துள்ளனர் என்றும் அதனையே இந்நாட்டின் தேர்தல் கலாசாரமாக மாற்ற எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

196 பாராளுமன்ற உறுப்புரிமைக்காக 8361 வேட்பாளர்கள் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றனர். 29 ஆசனங்கள் தேசிய பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்படும்.

Show More

சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறைகளுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் கவனம்

(-Colombo, November 11, 2024-) சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினர் வங்கிகளில் பெற்ற கடன்கள் குறித்து அறிக்கை தயாரிக்கத் தீர்மானம் சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறைகளுக்கான சலுகை வழங்குவது குறித்து, நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஜி.என்.ஆர்.டி அபொன்சு மற்றும் இலங்கை வங்கிகள் சங்கம், நிதி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினர் […]

(-Colombo, November 11, 2024-)

Parate Meeting With The Senior Additional Secretary to the President for Finance and Economic Affairs, Mr. G. N. R. D. Aponsu

சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினர் வங்கிகளில் பெற்ற கடன்கள் குறித்து அறிக்கை தயாரிக்கத் தீர்மானம்

சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறைகளுக்கான சலுகை வழங்குவது குறித்து, நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஜி.என்.ஆர்.டி அபொன்சு மற்றும் இலங்கை வங்கிகள் சங்கம், நிதி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

Parate Meeting Discussion

சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினர் கடன் சுமையால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.

பராட்டே சட்டத்தை (Parate Execution) அமுல்படுத்துவது தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் அது எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதியுடன் காலாவதியாகிறது. இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

Team At The Parate Meeting

பொருளாதாரத்தின் உற்பத்தித் திறனை மேம்படுத்த வங்கித் துறைக்கு வழங்கக்கூடிய ஆதரவு மற்றும் தற்போது சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினர் பெற்றுக்கொண்டுள்ள கடன்கள் குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினர் வங்கிகளில் பெற்ற கடன் தொடர்பான அறிக்கை யொன்றைத் தயாரிக்கவும் இக்கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

At The Parate Meeting

தற்போது வங்கிகள் பராட்டே சட்டத்தின் கீழ் சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கு வழங்கப்பட்ட கடன்களை வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதுடன், அது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் இதன்போது கலந்துரை யாடப்பட்டது.

இலங்கை மத்திய வங்கியின் வங்கி கண்காணிப்பு பணிப்பாளர் ஆர். ஆர். எஸ். டி சில்வா ஜயதிலக, இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட உதவிப் பணிப்பாளர் ஏ.எம்.ஏ.டி. அமரகோன், வரையறுக்கபட்ட இலங்கை வங்கிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் இந்திரஜித் போயகொட, யூனியன் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி டில்ஷான் ரொட்ரிகோ, சம்பத் வங்கியின் சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளர் மனோஜ் அக்மீமன, இலங்கை வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் சம்பத் பெரேரா, கொமர்ஷல் வங்கியின் உதவிப் பொது முகாமையாளர் நளின் சமரநாயக்க, ஹட்டன் நஷனல் வங்கியின் தலைமை மீட்பு மற்றும் புனர்வாழ்வு அதிகாரி நிரோஷ் பெரேரா, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி பிங்குமால் தேவரதந்திரி ஆகியோரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Show More

மாத்தறை நில்வலா உப்பு நீர் தடுப்புப் பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான காரணங்களைக் கண்டறிந்து உடனடி தீர்வுகளை வழங்க ஜனாதிபதியின் செயலாளர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

(-Colombo, November 8, 2024-) மாத்தறை நில்வலா ஆற்றில் கட்டப்பட்டுள்ள உப்பு நீர் தடுப்பு, அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு அதிகரிப்பதற்கு காரணமாக இருப்பதாகவும், விளைச்சல் நிலங்களுக்குள் கடல்நீர் வருவதால், பயிர்கள் சேதமடைவதாகவும் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து, உடனடித் தீர்வுகளை வழங்குவது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று , ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நீர்ப்பாசன மற்றும் நீர் வழங்கல் சபை அதிகாரிகளுக்கு இடையில் இன்று (08) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. […]

(-Colombo, November 8, 2024-)

Secretary to the President Ordering Urgent Investigation regarding into Salinity Barrier’s Role in Matara Nilwala River Flooding

மாத்தறை நில்வலா ஆற்றில் கட்டப்பட்டுள்ள உப்பு நீர் தடுப்பு, அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு அதிகரிப்பதற்கு காரணமாக இருப்பதாகவும், விளைச்சல் நிலங்களுக்குள் கடல்நீர் வருவதால், பயிர்கள் சேதமடைவதாகவும் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து, உடனடித் தீர்வுகளை வழங்குவது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று , ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நீர்ப்பாசன மற்றும் நீர் வழங்கல் சபை அதிகாரிகளுக்கு இடையில் இன்று (08) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

Secretary to the President At The Secretary to the President Orders Urgent Investigation regarding into Salinity Barrier’s Role in Matara Nilwala River Flooding

அங்கு, உப்பு நீர் தடுப்பு கட்டப்பட்டதால், வெள்ள நிலைமை மற்றும் விவசாய நிலங்களுக்கு உப்பு நீர் வரும் நிலை ஏற்படுகின்றதா என்பதையும் அதற்கான நிரந்தரத் தீர்வுகளை வழங்குவது முறையான ஆய்வுக்குப் பின்னரே செய்யப்பட வேண்டும் என்றும் அந்த நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்திருந்த பொறியாளர்கள் தீர்மானித்த்துடன், இது தொடர்பில் ஆராய்ந்து தீர்வுகளை முன்வைப்பதற்காக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பிரிவின் ஆதரவைப் பெறுவதற்கு முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஜனாதிபதியின் செயலாளர் ஒப்புதல் வழங்கினார்.

அத்துடன், இதற்கான பரிந்துரைகளை தயாரிக்குமாறு ஆலோசனை வழங்கிய கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பிரிவினால் மேற்கொள்ளப்படும் ஆய்வறிக்கையின் அடிப்படையில் அதற்கான தீர்வை வழங்குமாறும், அந்தப் பணிகளை திட்டத்தின் இரண்டாம் கட்டமாக நடைமுறைப்படுத்துமாறும் மேலும், அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டுக் கோரிக்கையை சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கினார்.

Team And Secretary to the President At The Ordering Urgent Investigation regarding into Salinity Barrier’s Role in Matara Nilwala River Flooding

மாத்தறை மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்துவதற்கு முறையான வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும், அந்த வேலைத்திட்டத்தை நீர்ப்பாசனம் மற்றும் நீர்வழங்கல் சபை இணைந்து நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் ஜனாதிபதியின் செயலாளர் இதன்போது வலியுறுத்தினார்.

உப்பு நீர் தடுப்பினால் நில்வலா ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள மக்கள் தமது விளைநிலங்களை இழத்தல் உட்பட வாழ்வாதாரத்தில் பாதகமான விளைவுகள் ஏற்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதியின் செயலாளர், அந்த நிலைமையை விரைவாக மாற்ற வேண்டியது அரசாங்கம் மற்றும் அதிகாரிகளின் பொறுப்பு என்றும் வலியுறுத்தினா்.

மேலும், மாத்தறை பிரதேசத்தில் ஏற்படும் வெள்ளப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு இதன்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Show More

ஜனாதிபதியின் செயலாளருக்கும் மாலைதீவு உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

(-Colombo, November 1, 2024-) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் (MASOOD IMAD) ஆகியோருக்கு இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. மாலைதீவு ஜனாதிபதி விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும், மாலைதீவு உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியின் செயலாளரிடம் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேலும், மாலைதீவு மற்றும் இலங்கையின் சுற்றுலா, […]

(-Colombo, November 1, 2024-)

  • இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் (MASOOD IMAD) ஆகியோருக்கு இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

மாலைதீவு ஜனாதிபதி விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும், மாலைதீவு உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியின் செயலாளரிடம் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மேலும், மாலைதீவு மற்றும் இலங்கையின் சுற்றுலா, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளை முன்னேற்றுவது குறித்தும் கலந்துரையாடபட்டது.

மாலைதீவு பிரதி உயர்ஸ்தானிகர் பாத்திமத் கினாவும்(fathimath Ghina)இச்சந்திப்பில் கலந்துகொண்டார்.

Show More

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான பிரதான ஆலோசகர் ஒருவர் நியமனம்

(-Colombo, November 1, 2024-) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதான ஆலோசகராக கலாநிதி ஹான்ஸ் விஜயசூரியவை நியமித்துள்ளார். பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துதல், தேசிய போட்டித்தன்மை மற்றும் அனைத்து பிரஜைகளுக்கும் குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கும் எதிர்பார்ப்புடன், பிராந்தியத்தில் மிகவும் முன்னேறிய நாடுகளுக்கு இணையாக இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தமது தொலைநோக்குப் பார்வை மற்றும் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில் ஜனாதிபதி இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் […]

(-Colombo, November 1, 2024-)

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதான ஆலோசகராக கலாநிதி ஹான்ஸ் விஜயசூரியவை நியமித்துள்ளார்.

பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துதல், தேசிய போட்டித்தன்மை மற்றும் அனைத்து பிரஜைகளுக்கும் குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கும் எதிர்பார்ப்புடன், பிராந்தியத்தில் மிகவும் முன்னேறிய நாடுகளுக்கு இணையாக இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தமது தொலைநோக்குப் பார்வை மற்றும் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில் ஜனாதிபதி இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் ஆகிய துறைகளை உலகத் தரத்திற்கு மேம்படுத்துவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். பிரஜைகளை வலுவூட்டுவதற்காக டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதிகள் (DPI) நிறுவுவதன் மூலம் பல்துறை டிஜிட்டல் பரிமாற்றத்திற்கு அரசாங்கம் உறுதியான அர்ப்பணிப்புடன் உள்ளது.

அதன்படி, வேகமான டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு மற்றும் அனைத்து பிரஜைகளினதும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் வழிவகுக்கும் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி தொடர்பான பாரம்பரிய அபிவிருத்தி வாய்ப்புகளை உள்வாங்கக் கூடிய வகையில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கலாநிதி ஹான்ஸ் விஜயசூரியவின் நியமனம் மேலே குறிப்பிட்ட தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கான ஒரு முக்கிய படியாகும்.

சர்வதேச தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையில் பிரபலமானவரான கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, தற்போது ஆசியாடா நிறுவனத்தின் (Axiata Group Bhd) தொலைத்தொடர்பு வணிகத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி மற்றும் குழும நிறைவேற்றுப் பணிப்பாளராக பணியாற்றுவதுடன், அவர் குறிப்பிட்ட காலத்தின் பின்னர் அந்த பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்த காலகட்டத்தில், கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய நிறைவேற்று அல்லாத தலைவராக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் (ICTA) பணிப்பாளர் சபைக்கு தலைமை வகிப்பார். இதன் மூலம் அரசாங்கம் எதிர்பார்க்கும் டிஜிட்டல் பரிமாற்றத்திற்கான குறித்த வேலைத்திட்டங்களைத் திட்டமிடல் மற்றும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

குறித்த நியமனத்தின் பின்னர் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான நிறுவன கட்டமைப்பிற்குள் பல நிறைவேற்றுத் தலைமைப் பாத்திரங்களை அவர் வகிக்க உள்ளார். இதற்கு மேலதிகமாக, ஜனாதிபதியின் விடயப்பரப்பின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்ட அமைச்சான டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேற்பார்வையிடும் உயர்மட்ட நிறுவனமான டிஜிட்டல் பொருளாதார அதிகார சபையின் தலைவர் ஆகிய இரண்டு பதவிகளையும் அவர் வகிப்பார்.

Show More

சமூக நலன்புரிப் பலன்களை வழங்கும் வேலைத்திட்டங்களை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பாக கவனம்

(-Colombo, November 1, 2024-) இந்நாட்டில் முன்னெடுக்கப்படும் சமூக நலன்புரிப் பலன்களை வழங்கும் வேலைத்திட்டங்களை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பான கலந்துரையாடல் இன்று (01) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது. அரிசி விலையை ஸ்திரப்படுத்தல் மற்றும் அரிசி தட்டுப்பாட்டுக்கு நீண்ட கால தீர்வு காண்பதற்கு நெல் களஞ்சிய கட்டமைப்பை டிஜிட்டல் மயமாக்குவதன் முக்கியத்துவம் மற்றும் அஸ்வெசும மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான சமூக நலன்புரித் திட்டங்கள் உள்ளிட்ட சேவைகளை டிஜிட்டல் மயமாக்குதல் […]

(-Colombo, November 1, 2024-)

  • நெல் களஞ்சிய கட்டமைப்பை உரிய பொறிமுறையில் முன்னோக்கிக் கொண்டு செல்ல டிஜிட்டல் மயப்படுத்தல்
  • அரிசி விலையை ஸ்திரப்படுத்தவும், அரிசி தட்டுப்பாட்டுக்கு நீண்டகால தீர்வு காணவும் நடவடிக்கை

இந்நாட்டில் முன்னெடுக்கப்படும் சமூக நலன்புரிப் பலன்களை வழங்கும் வேலைத்திட்டங்களை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பான கலந்துரையாடல் இன்று (01) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.

அரிசி விலையை ஸ்திரப்படுத்தல் மற்றும் அரிசி தட்டுப்பாட்டுக்கு நீண்ட கால தீர்வு காண்பதற்கு நெல் களஞ்சிய கட்டமைப்பை டிஜிட்டல் மயமாக்குவதன் முக்கியத்துவம் மற்றும் அஸ்வெசும மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான சமூக நலன்புரித் திட்டங்கள் உள்ளிட்ட சேவைகளை டிஜிட்டல் மயமாக்குதல் குறித்து இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

எதிர்வரும் புதிய பாடசாலை தவணையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படவுள்ள நிவாரண விநியோகத் திட்டம் மற்றும் உர மானியத் திட்டம் என்பவற்றை டிஜிட்டல் மயமாக்குவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

டயலொக் ஆசியாடா தனியார் நிறுவனத்தின் குழும பிரதான நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க, மிலேனியம் IT நிறுவனத்தின் பிரதம தொழில்நுட்ப அதிகாரி மகேஷ் விஜேநாயக்க உள்ளிட்ட துறைசார் நிபுணர்கள் குழுவும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Show More