(-Colombo, March 13, 2024-) இன்று (13) முற்பகலில் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் திரு. எரிக் வோல்ஷ் (Eric Walsh) மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இரண்டாவது செயலாளர் (அரசியல்) திரு. பெற்றிக் பிக்கரிங்கும் (Patrick Pickering) தேசிய மக்கள் சக்தியின் சார்பாக தோழர் விஜித ஹேரத்தும் பங்கேற்றனர். இன்றளவில் இலங்கையில் […]
(-Colombo, March 13, 2024-)
இன்று (13) முற்பகலில் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் திரு. எரிக் வோல்ஷ் (Eric Walsh) மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இரண்டாவது செயலாளர் (அரசியல்) திரு. பெற்றிக் பிக்கரிங்கும் (Patrick Pickering) தேசிய மக்கள் சக்தியின் சார்பாக தோழர் விஜித ஹேரத்தும் பங்கேற்றனர்.
இன்றளவில் இலங்கையில் நிலவுகின்ற சமூக பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை பற்றி விரிவான உரையாடல் இடம்பெற்றதோடு தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான தேசிய மக்கள் சக்தியின் திட்டங்கள் பற்றியும் இருதரப்பினருக்கும் இடையில் கருத்துக்கள் பரிமாற்றிக்கொள்ளப்பட்டன. கனடாவில் வசிக்கின்ற இலங்கையரை சந்திப்பதற்கான தோழர் அநுர குமார திசாநாயக்கவின் கனடா விஜயத்திற்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளவும் உயர்ஸ்தானிகர் இதனை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொண்டார்.
(தேசிய மக்கள் சக்தி பொருளாதாரப் பேரவையின் ஊடக சந்திப்பு – 2024.03.12) இன்றளவிலான நாட்டின் பொருளாதார நிலைமை எவ்வாறு தோன்றியது? அதற்கு பொறுப்புக்கூறவேண்டியவர் யார்? அதனை எவ்வாறு தீர்த்துக்கொள்ள வேண்டும்? என்பது பற்றிய முறைசார்ந்த உரையாடலை மேற்கொள்வதற்குப் பதிலாக அவையனைத்திற்குமே பொறுப்புக்கூறவேண்டிய குழுவினாலேயே இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து கரைசேர்வதற்குள்ள ஒரே வழி ஐ.எம்.எஃப். எனவும், ஐ.எம்.எஃப். உடன் கொடுக்கல்-வாங்கலை மேற்கொள்ளப் பொருத்தமான குழு இந்த குழுவே என்பதும், அந்த கொடுக்கல்-வாங்கலை முன்னெடுத்துச் செல்வதன்மூலமாக இந்த பிரச்சினையைத் தீர்த்துவைக்க […]
(தேசிய மக்கள் சக்தி பொருளாதாரப் பேரவையின் ஊடக சந்திப்பு – 2024.03.12)
இன்றளவிலான நாட்டின் பொருளாதார நிலைமை எவ்வாறு தோன்றியது? அதற்கு பொறுப்புக்கூறவேண்டியவர் யார்? அதனை எவ்வாறு தீர்த்துக்கொள்ள வேண்டும்? என்பது பற்றிய முறைசார்ந்த உரையாடலை மேற்கொள்வதற்குப் பதிலாக அவையனைத்திற்குமே பொறுப்புக்கூறவேண்டிய குழுவினாலேயே இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து கரைசேர்வதற்குள்ள ஒரே வழி ஐ.எம்.எஃப். எனவும், ஐ.எம்.எஃப். உடன் கொடுக்கல்-வாங்கலை மேற்கொள்ளப் பொருத்தமான குழு இந்த குழுவே என்பதும், அந்த கொடுக்கல்-வாங்கலை முன்னெடுத்துச் செல்வதன்மூலமாக இந்த பிரச்சினையைத் தீர்த்துவைக்க முடியுமெனவும் கூறி சமூகத்திலே ஒரு கட்டுக்கதையை உருவாக்கி வருகிறார்கள். அந்த நிலையில் மக்கள் எதிர்நோக்குகின்ற உண்மையான நிலைமையை தெளிவுபடுத்திக் கூறவேண்டியுள்ளது.
கடந்த இரண்டு தசாப்தங்களில் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமே ஆட்சிசெய்திருப்பின் இவ்வாறான நெருக்கடியை எதிர்நோக்க நேர்ந்திருக்கமாட்டாது. நாடு பாரியளவிலான அபிவிருத்தியை அடைந்திருக்கும் என்பதைப்போலவே ஐ.எம்.எஃப். இன் கதை ஏற்புடையதாக அமையமாட்டாது. அவர்களின் ஊழல்மிக்க முறைமைக்குள்ளே ஒரே தீர்வுதான் இருக்கின்றதென அவர்கள் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். அந்த தீர்வு அவர்களிடம் மாத்திரமே இருக்கின்றதெனக் கூறுகிறார்கள். அந்த தருணத்தில் நாங்கள் அதிகாரத்தை எடுத்திருப்பின் ஐ.எம்.எஃப். இடம் செல்லாமல் மிகவும் இலகுவாக தீர்த்துக்கொள்ளக்கூடிய நிலைமையே உலகில் திறந்திருந்தது. கடன்கொடுனர்களுடன் முறைசார்ந்த பேச்சுவார்த்தைக்கு சென்றிருக்கலாம். ஊழல், மோசடிகளில் ஈடுபட்டிராத குழுவிற்கு மாத்திரமே அவ்வாறு செல்லக்கூடியதாக இருந்தது. இங்கு நிகழ்காலத்தில் இருக்கின்ற பிரச்சினைக்கு ஐ.எம்.எஃப். இடம் செல்லவேண்டி ஏற்பட்டுள்ளது. அதனால் இத்தருணத்தில் தேசிய மக்கள் சக்தி என்ன செய்துகொண்டிருக்கிறது? உண்மையிலேயே இத்தருணத்தில் எமக்கு அதிலிருந்து வெளியே வருவதற்கான இயலுமை கிடையாது. உடன்படிக்கையின் பிரகாரம் ஐ.எம்.எஃப். அரசாங்கத்திடம் முன்வைத்த பொருளாதார உறுதிநிலையை ஏற்படுத்திக்கொள்ள “ஒட்டுமொத்த பொருளாதார உறுதிநிலையை ஏற்படுத்திக்கொள்வதற்காக உங்களுக்கு கிடைக்கின்ற வருமானத்தை முகாமைசெய்துகொள்க. உங்களின் நாட்டை முன்னேற்றுவதற்கான உங்களின் திட்டத்தை எடுத்துக்கொண்டு வாருங்கள்” என்பதுதான். அரசாங்கம் அந்த அளவுகோல்களை எடுத்துக்கொண்டு நாட்டைக் கரைசேர்க்கின்ற திட்டத்திற்குப் பதிலாக அதன்மூலமாக தோன்றுகின்ற அனைத்துச் சுமைகளையும் மக்கள்மீது சுமத்துகின்ற நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஐ.எம்.எஃப். வருமானத்தை முகாமைசெய்துகொள்ளுமாறு கூறுகையில் வருமானம் ஈட்டுகின்ற வழிவகைகளை முன்னேற்றுவதையே செய்யவேண்டும். வருமானத்தில் விரயம் ஏற்படுகின்ற இடங்களை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும். அதற்குப் பதிலாக அரசாங்கம் வருமானத்தை நாசமாக்கிக் கொள்வதையும் சாதாரண மக்கள்மீது வரிச்சுமையை சுமத்துவதையும் மாத்திரமே செய்துள்ளது. ஊழல் மோசடி இடம்பெறுவதை நிறுத்திவிடவில்லை.
எங்களுக்கு இந்த பிரச்சினையின்போது மக்களிடமிருந்து ஆணையொன்றை கோரவேண்டியுள்ளது. மீண்டும் ஐ.எம்.எஃப். உடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு குறிப்பாக உயர்மட்டத்தில் நிலவுகின்ற மாறிகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் அரசாங்கத்தின் பிஸ்கால் (நிதி) முகாமைத்துவத்தை எவ்வாறு மேற்கொள்வது என்பதும் பற்றிய பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அரசாங்கத்தின் வருமானத்தை தயாரித்துக்கொள்கின்ற விதம், அந்நிய செலாவணியை ஈட்டிக்கொள்கின்றவிதம் எத்தகையது என்பதாகும். அதைப்போலவே பெற்றுள்ள இந்த கடன் பற்றிய புலனாய்வினை மேற்கொண்டு, அதுபற்றிய விசாரணை அறிக்கையுடன் எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தைவிருத்தி செய்வதற்கான அபிவிருத்தித் திட்டத்துடன் அவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்கான இயலுமை எமக்கு இருக்கின்றது. மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்களை அகற்றி கூட்டாக முன்நோக்கி நகர்வதற்காகவே மீண்டும் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படுகின்றது. நாங்கள் இதற்கு முன்னரும் ஐ.எம்.எஃப். ஐ சந்தித்தோம். எமது நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தினோம். அவர்கள் பேச்சுவார்த்தைக்கான இணக்கத்தை தெரிவித்தார்கள். இந்த வார இறுதியில் நாங்கள் மீண்டும் ஐ.எம்.எஃப். உடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள எதிர்பார்க்கிறோம்.
இதன் உண்மையான பிரதிவாதிகளை மறைத்துவைத்து அரசாங்கம் முன்நோக்கி நகர முயற்சி செய்தாலும் அது சிரமமானதாக அமைகின்றது. ஐ.எம்.எஃப். மீண்டும் ஆளுகை பற்றிய விடயங்களை கண்டறியவும் பகுப்பாய்வு செய்யவும் நடவடிக்கை எடுத்தது. அதன்போது ஆளுகையில் நிலவுகின்ற பலவீனங்கள், மோசடிகளுக்கு வழிசமைக்கின்ற விதம், மோசடிகளுடன் தொடர்புபடுகின்றவிதம் பற்றி விபரமாக முன்வைத்துள்ளது. 2023ல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டாலும் அதன் நடைமுறை செயற்பாடுகளுக்குச் செல்லவில்லை. சட்டங்கள் அமுலாக்கப்படாவிட்டால் சட்டங்களை நிறைவேற்றுதல் போன்றவற்றை மேற்கொண்டாலும் பலனில்லை. ஏனைய அரசாங்கங்களைப்போலவே ஐ.தே.க. அரசாங்கமும் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டது. அதைப்போலவே மத்தியவங்கி பிணைமுறி மோசடியை மேலெழுந்தவாரியாக எடுத்துக்கொண்டால் ஆவணங்களில் பார்த்தால் எல்லாவேளையிலும் சட்டத்திற்குள்ளேதான் மோசடிகள் செய்யப்பட்டுள்ளன. அத்தருணமாகும்போது திறைசேரி உண்டியல் பிணைமுறிகள் விநியோகிக்கப்படுகின்ற முறையியல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. டிரெக்ற் முறைக்குப் பதிலாக ஒப்ஷன் மெதட் மாற்றப்பட்டது. மேலெழுந்தவாரியாக பார்க்கையில் ஒப்ஷன் திட்டம் நல்லது. அவர்கள் உள்ளக தகவல்களைப் பாவித்து இந்த வேலையை வடிவாகச் செய்தார்கள். இன்றும் அது பற்றிய தகவல்கள் பதிவாகி இருக்கின்றன. ஆளுகை பற்றிய விடயங்கள் புலனாய்வு அறிக்கைகள் பலவற்றில் வந்துள்ளன. இந்த அரசாங்கங்கள் அதில் தலையீடு செய்வதில்லை. இன்றும்கூட திறைசேரி மற்றும் பிணைமுறி உண்டியல்களை வழங்குகையில் நிதிச்சந்தையில் இருக்கின்ற குழுக்களால் அதிகாரத்தை வகிக்கின்ற ஒருசிலரால் நுணுக்கமான முறையில் வட்டிவீதமும் தகவல்களும் அங்குமிங்கும் நகர்த்தப்பட்டு மக்களின் பணத்தை மக்களுக்கே கடனாகக்கொடுத்து இடையீட்டாளர்கள் என்றவகையில் ஒன்றுசேர்ந்து பில்லியன் கணக்கில் செல்வத்தை ஈட்டுகின்ற அநீதியான முறைமையொன்று அமுலில் இருக்கின்றது. அதைப்போலவே ஸ்பெஷல் கொமொடிட்டி டெக்ஸ் ” விசேட வியாபாரப் பண்ட வரி” இது நல்ல வரியொன்றின் பண்பு அல்ல. எல்லாநேரத்திலும் இது பாவிக்கப்பட்டது உற்பத்தியாளனை பாதுகாக்கவோ அல்லது பாவனையாளரை பாதுகாக்கவோ அல்ல. அவர்களுக்கு நெருக்கமான ஒருசிலருக்கு அநுகூலங்களை பெற்றுக்கொள்வதற்காகும். இரண்டு சந்தர்ப்பங்களில் புரிந்தார்கள். இரண்டு சந்தர்ப்பங்களில் சீனி வரி மோசடியைப் புரிந்தார்கள்.
2015 அரசாங்கக் காலத்தில் நெருக்கடியொன்று தோன்றுகையில் அந்திய செலாவணியைத் தேடிக்கொள்வதற்காக ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக உற்பத்தியை அதிகரித்து பன்வகைமைப்படுத்தலுக்குச் செல்லவேண்டும். அதற்குப் பதிலாக அரசாங்கங்கள் ஏதேனும் உபாயமுறைகளைப் பாவிக்கின்றன. அதில் பிரதானமான ஒன்றுதான் மீள்ஏற்றுமதி எனப்படுகின்ற மோசடியை மறைப்பதாகும். உலர் பாக்கு (கருங்கா), மிளகு, தேயிலை மீள் ஏற்றுமதி செய்தலை அதன்கீழ் மேற்கொண்டார்கள். உலகின் தேயிலை எற்றுமதியில் முதலாமிடத்தில் இருந்த இலங்கை மீள் ஏற்றுமதியின்கீழ் 5 ஆம் இடத்திற்கு விழுந்தது. அந்த அரசாங்கங்கள் இந்த மோசடியை தொடர்ச்சியாக புரிந்துவந்தன. இன்று முழுநாடுமே நெருக்கடியில் இருக்கின்றது. எனினும் அரசாங்கம் மீண்டும் அதே இடத்திற்குச்செல்ல முனைகிறது. 2024 பெப்ரவரி 19 ஆந் திகதிய 2372/04 ஆம் இலக்கமுடைய அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை அமைச்சரவை அங்கீகாரம் ஊடாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்துக்கொள்வதற்காக பெறுமதி சேர்த்த பண்டங்களின் உற்பத்திக்காக ஒருசில பண்டங்களை இறக்குமதிசெய்ய இடமுண்டு. இலகுவில் திருடக்கூடிய இஞ்சி, மிளகு, சாதிக்காய், சாதிபத்திரி, ஏலம் போன்ற பண்டங்களை இறக்குமதிசெய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஐ.எம்.எஃப். முன்வைத்த ஆளுகை பற்றிய புலனாய்வு அறிக்கைகளில் பல விசேட துறைகளில் அபாய அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. “உங்கள் நாட்டின் ஆட்சி மிகவும் சிக்கலானது. குறிப்பாக அரச செயற்பாடுகள் சிக்கல் நிறைந்தவையாகும். அவற்றை தவிர்த்துக் கொள்ளாவிட்டால் மக்கள் மென்மேலும் சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும். அதைப்போலவே அரசாங்கத்தின் செயற்பாடுகளில் வருமான முகாமைத்துவம் தொடர்பிலான பலவீனங்கள் நிலவுகின்றன. குறிப்பாக கொள்வனவுகளில்.” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. புறொகியுமன்ற் மெனேஜ்மன்ற் மிகவும் ஊழல் நிறைந்தது. அன்சொலிசிடட் டெண்டர்களுக்குச் செல்லும்போது போட்டித்தன்மை கோரப்படுவதில்லை. அமைச்சருக்கோ அல்லது அவருடைய குழுக்களுக்கோ பாரியளவிலான கொமிஸ்பெறுதலை நோக்கிச் செல்வதற்கான இயலுமை கிடைக்கிறது. கொள்வனவு செயற்பாடு வெளிப்படைத்தன்மைமிக்கதாக அமையவில்லை. போட்டித்தன்மை கிடையாது. வலுச்சக்தித்துறை மிகவும் முக்கியமானதாகும். அது ஒரு சேவை மாத்திரமல்ல, பொருளாதாரத்துடன் பின்னிப்பிணைந்துள்ளது. எதிர்காலத்தடன் தொடர்புபடுகின்றது. இந்த அரசாங்கம் அந்த வலுச்சக்தியை முறைப்படி நெறிப்படுத்தி, புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி மூலங்களை முன்னேற்றி, நாட்டின் வலுச்சக்தியை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கி, சந்தையை விரிவாக்கி நாட்டை முன்னேற்றுவதற்குப் பதிலாக அதிலும் மோசடி – ஊழல்களைப் புரிய நடவடிக்கை எடுக்கின்றது.
அண்மையில் பேசப்பட்ட விடயங்கள், அவுஸ்திரேலியாவுக்கு கொடுத்த, இந்தியாவுக்கு கொடுக்கப்போகின்றவற்றின் பவர் பேர்சஸ்களின் உடன்படிக்கைகளை எடுத்துக்கொண்டால் அவற்றின் விலைமட்டங்கள் மிகவும் உயர்வானவை. புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி முகவராண்மைகளிலிருந்து பெற்றுக்கொண்ட அறிக்கைக்கு அமைவாக 2021 வரை அந்தந்த வலுச்சக்திகளின் உற்பத்திக் கிரயம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2010 தொடக்கம் 2021 வரை புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி 10 வருடங்களுக்குள் சூரிய வலுச்சக்தியில் 88% உம் காற்றுவிசையில் 68% உம் படுவேகமாக உற்பத்திக்கிரயம் குறைவடைந்துள்ளது. அதைப்போலவே அதன் கொள்திறன் அதிகரிக்கின்றது. அத்தகைய மூலங்கள் மீதே நாங்கள் கவனஞ்செலுத்த வேண்டியுள்ளது. இந்த அறிக்கைக்கிணங்க எமக்கு செலவாகின்ற கிரயம் ஒரு கிலோ வொற்றுக்கு ரூபா 10 இற்கும் 15 இற்கும் இடைப்பட்டதாகும். ஆனால் நாங்கள் பத்து வருடங்கள் போன்ற எதிர்காலத்திற்காக ரூபா 50 அளவில் கொள்வனவுசெய்வதற்காக பவர் பேர்சஸிங்கிற்கு போகிறோம். நாட்டுக்கு மக்களுக்கு எவ்வாறான தாக்கம் ஏற்பட்டாலும் இந்த ஆட்சியாளர்கள் தமது பைகளை நிரப்பிக்கொள்ன முனைகிறார்கள். இந்த குழுக்கள் எமது முன்னிலையில் படைக்கின்ற காட்சியானது வெறுமனே நாங்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் பொருளாதார, சமூக, அரசியல் நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக புரிகின்ற வேலை மாத்திரமன்று. அதனை ஒரு சாதனமாகப் பாவித்து அவர்கள் திருடவும் தமது சுகபோகங்களை அதிகரித்துக்கொள்ளவும் எத்தனிக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு அதிகாரம் அத்தியாவசியமாகின்றது. அதனாலேயே தொடர்ந்தும் அதிகாரத்தில் இருப்பதற்காக பல்வேறு தந்திரோபாயங்களை பிரயோகித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த தகவல்களை பகுப்பாய்வுசார்ந்தவகையில் பாருங்கள், அதன் பின்னர் விளங்கி்க்கொள்ளுங்கள் என நாங்கள் தொழில்வாண்மையாளர்களிடம் முன்மொழிகிறோம். இந்த நாட்டை ஊழல்மிக்க முறையியலில் இருந்து காப்பாற்றிக்கொள்கின்ற திசையை நோக்கி மாற்றியமைத்திட நடவடிக்கை எடுப்போம்.
“பொதுமக்களின் வேலைத்திட்டத்துடன் பொதுமக்களின் அரசாங்கத்தையே நாங்கள் நடைமுறைப்படுத்துவோம்”
-தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பேரவையின் உறுப்பினர் சுனில் ஹன்துன்னெத்தி-
ஜனாதிபதி இடையீடுசெய்து அமைத்துக்கொண்ட ஐ.எம்.எஃப். உடன் கலந்துரையாடலில் நாங்கள் ஏன் பங்கேற்றகவில்லை எனும் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்துவதற்காகவும் நாட்டில் தோன்றியுள்ள பொருளாதார நிலைமைகள் பற்றிப் பேசுவதற்காகவும் நாங்கள் இந்த ஊடக சந்திப்பினை நடாத்துகிறோம். ஐ.எம்.எஃப். உடன் எமது ஆட்சியாளர்கள் ஒன்றுசேர்ந்து அறைகளில் செய்துகொண்ட உடன்படிக்கைகளை அமுலாக்குவதற்கு முன்னராக அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவில்லை. பசில் ராஜபக்ஷ நிதியமைச்சராக செயலாற்றுகின்றவேளையில் நிவ்யோர்க்கில் ஐ.எம்.எஃப். உடனான பேச்சுவார்த்தைகளின் ஆவணங்கள், கைச்சாத்திட்ட உடன்படிக்கை ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக செயலாற்றியவேளையில் பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியான பின்னர் அந்த பசில் ராஜபக்ஷ கள்ளத்தனமாக கைச்சாத்திட்ட உடன்படிக்கை தற்போது அமுலாக்கப்படுகின்றது. ரணில் விக்கிரமசிங்கவும் அவற்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. சர்வதேச நாணய நிதியம் அவற்றை இணையத்தளங்களில் பிரசுரித்த பின்னரே நாங்கள் அவற்றை எடுத்துக்கொண்டு பாராளுமன்றத்தில் கேள்விக்குட்படுத்த தொடங்கினோம். ரணில் விக்கிரமசிங்காக்கள் இந்த நாட்டை நெருக்கடிக்குள் தள்ளியதும் அவ்வாறு நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்கான உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டதும் எதிர்க்கட்சியை சேர்ந்த எங்களுடன் கலந்துபேசி இணக்கப்பாட்டிற்கு வராமலேயே ஆகும்.
இப்போது அதன் விளைவுகளை தாங்கிக்கொள்ள முடியாமல் போனதன்பின்னர் மென்மேலும் நெருக்கடிக்குச்சென்று எம்மை பேச்சுவார்த்தைக்காக அழைப்பதில் அர்த்தமில்லை. ஐக்கிய மக்கள் சக்தியின் ஹர்ஷ த சில்வா பாராளுமன்றத்தில் ரணில் விக்கிரசிங்கவிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்கவே இந்த பேச்சுவார்த்தைக்காக எம்மை அழைத்துள்ளார்கள். இந்த நெருக்கடியில் இருந்து கரைசேர எம்மையும் பங்காளிகளாக ஆக்கிக்கொள்கிறது எனும் அபிப்பிராயத்தை சமூகமயப்படுத்தவே அரசாங்கம் முயற்சிசெய்கிறது. எம்மையும் சிக்கவைக்கவே முயற்சி செய்கிறார்கள். ஐ.எம்.எஃப். இற்கு எங்களுடனும் எங்களுக்கு ஐ.எம்.எஃப். உடனும் பேச்சுவார்த்தை மேற்கொள்ள அவசியமெனில் அதற்கான வழிமுறையொன்று இருக்கிறது. இதற்கு முன்னரும் ஐ.எம்.எஃப். உடன் எமது பொருளாதாரப் பேரவை பேச்சவார்த்தையில் ஈடுபட்டது. மீண்டும் 14 ஆந் திகதியும் பேச்சுவார்த்தை நடாத்த முன்மொழியப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கையை அங்காங்கே பொறுக்கியெடுத்து ரணில் விக்கிரமசிங்க பேசத்தொடங்கி உள்ளார். ரணில் விக்கிரமசிங்க குளியாபிட்டிய பொதுக்கூட்டத்தில் 2019 ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் முன்வைத்த “தேசத்தின் எதிர்பார்ப்பு” கொள்கைப் பிரகடனத்தில் இருக்கின்ற முன்மொழிவுகள் நடைமுறைச்சாத்தியமானவையல்ல எனக் கூறினார். விக்கிரமசிங்காக்கள், ராஜபக்ஷாக்கள் கூட்டாக வீழ்த்திய நாட்டை மீட்டெடுப்பதற்காக எமது முன்மொழிவுகள் நடைமுறைச்சாத்தியமானவையல்ல எனக் கூறுபவர்கள் நாட்டைக் கடனாளியாக்கிய, இரண்டுகோடியே இருபத்தொரு இலட்சம் மக்களுக்கு இருப்பதற்கான நாட்டை இல்லாதொழித்த, நாட்டில் பிறக்கின்ற பிள்ளையை ரூபா 12 இலட்சத்திற்கு மேற்பட்ட தொகைக்கு கடன்காரராக்கிய, கல்வியை சீரழித்த, இளைப்பாறியவர்களுக்கு ஒய்வுகால வாழ்க்கையை இல்லாதொழித்த ரணில் விக்கிரமசிங்காக்களும் ராஜபக்ஷாக்களுமேயாவர். 2018 மத்தியவங்கி அறிக்கை தரவுகளுடன் தொடர்புடையதாகவே நாங்கள் இந்த கொள்கைகளை தயாரித்துள்ளோம். அந்த தரவுகளுக்கிணங்க 2025 இல் தேசிய மக்கள் சக்தியின் வேலைத்திட்டத்தின்கீழ் நாங்கள் நாட்டை மேம்படுத்துகின்ற விதத்தைக் கூறியிருக்கிறோம். மத்திய வங்கியைக் கொள்ளையடிக்கின்ற விதத்தில், சேமலாப நிதியத்தைக் கொள்ளையடிக்கின்ற விதத்தில் 2022 இல் நாட்டை வங்குரோத்து நிலைக்குள்ளாக்குகின்ற திட்டம் ரணில் விக்கிரமசிங்காக்களுக்கே தெரியும்.
மக்களை ஏமாற்றுவதற்காக ரணில் விக்கிரமசிங்காக்களுக்கு , சஜித் பிரேமதாசாக்களுக்கு இன்றும் புரியவேண்டியதாக இருப்பது கீழ்த்தரமான வேலைகளாகும். பத்து இருபது கிலோ அரிசியை பகிர்ந்தளிப்பதாகும். மக்களை பிச்சையேந்துகின்ற நிலைக்கு ஆளாக்கி, மீண்டும் அந்த கண்கட்டுவித்தையை காட்ட முனைகிறார்கள். எமது இந்த பொருளாதாரக் கொள்கைகள் புத்திஜீவிகளைக்கொண்ட சபையுடன் பொதுமக்களுடன் கலந்துரையாடி தயாரிக்கின்ற கொள்கைகளாகும். இவை பெரிதும் நடைமுறைச்சாத்தியமானவை. எந்தவொரு தோல்விகரமான இலக்கினையும் நாங்கள் எடுக்கவில்லை. நாங்கள் இந்த நாட்டில் அமுலாக்குவது மக்களின் அரசாங்கத்துடனான மக்களின் வேலைத்திட்டத்தையாகும். நாங்கள் அனைவரும் பொருளாதார இலக்கிற்காக பொறுப்புக்கூறுவோம். ஒருசில ஊடகங்களில் வலுச்சக்தி பற்றிப் பேசி எம்மை கேலிசெய்துள்ளார்கள். எமது பெண்கள் விறகு அடுப்புக்களில் சமைக்க தயாராக வேண்டிவருமெனக் கூறுகிறார்கள். கொள்கைப் பிரகடனத்தில் 82 வது பக்கத்தில் வலுச்சக்தி தொடர்பான 23 நடவடிக்கைகளைக் குறிப்பிட்டுள்ளோம். அதிலொன்றுதான், உயிர் மூல சக்திவலுத் தோற்றுவாய்களின் (விறகு, தேங்காய் சிரட்டைக் கரி) பாவனை பற்றிய ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதோடு மேற்படி தோற்றுவாய்களின் பாவனை தொடர்பான உபகரணங்களை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு அடுப்பில் இறங்குவது என்பதல்ல. நாங்கள் 2019 இல் சமர்ப்பித்தது எதிர்வரும் மூன்று வருடங்களில் நடைமுறைப்படுத்தக்கூடிய 23 செயற்பாடுகளையாகும்.
தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கையைத் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கான விமர்சனம் இல்லாவிடத்து சொற்களைப் பொறுக்கிக்கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் இந்த கொள்கைகளை வாசியுங்கள். கலந்துரையாடுங்கள். 2024 ஆம் ஆண்டிலிருந்து இந்த நாட்டை சீராக்குகின்ற புதிய திட்டங்களை அமுலாக்கத் தயார். நாங்கள் அதுபற்றி கலந்துரையாடி வருகிறோம். தேசிய புத்திஜீவிகள் அமைப்பு மற்றும் கிராம மட்டத்திலான எங்களின் அமைப்பு ஒன்றுசேர்ந்து நாட்டுக்கான தேசிய கொள்கைத் தொடரைப் போன்றே ஊருக்கு, மாவட்டத்திற்குமான திட்டங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் எதிர்காலத்தில் இந்த நாட்டை கட்டியெழுப்புகின்ற உண்மையாக தீர்வுகளை அமுலாக்கக்கூடிய மிகவும் நடைமுறைச்சாத்தியமான கொள்கைத் தொடர் பற்றி மக்களுடன் உரையாடி வருகிறோம்.
“போகிற பேய் கூரையையும் பொத்துக்கொண்டு போவதைப்போல்” ரணில் விக்கிரமசிங்காக்கள், ராஜபக்ஷாக்கள் இந்த இரண்டு மூன்று மாதங்களில் இந்த நாட்டின் வளங்களை விற்றுத்தீர்க்க தயாராகி வருகிறார்கள். அவர்களால் மீண்டும் அதிகாரத்திற்கு வரமுடியாதென்பது அவர்களுக்குத் தெரியும். ஸ்ரீலங்கன் விமான சேவையை பழித்தொழித்து விற்றுத்தீர்க்க நிமல் சிறிபால த சில்வா முனைந்துவருகிறார். உலகின் மிகவும் பெறுமதியான பயணமுடிவிடத்தைக்கொண்ட ஸ்ரீலங்கன் விமான சேவை பற்றி நிமல் சிறிபால த சில்வா ஊடகங்களில் தோன்றி உலகத்தார் மத்தியில் அவநம்பிக்கையை எற்படுத்துகிறார். ஸ்ரீலங்கன் விமான சேவையை சொச்சத்தொகைக்கு விற்றுத் தீர்ப்பதே அவருடைய பிரயத்தனமாகும். அதைப்போலவே ஸ்ரீலங்கன் விமான சேவையின் கடன்மேட்டினை பொறுப்பேற்குமாறு திறைசேரியிடம் கோருகிறார். அவர்களின் ஊழல்மிக்க எயார் பஸ் கொடுக்கல் – வாங்கல், ராஜபக்ஷாக்களின் உறவினர்களை போட்டுக்கொண்டு நாய்க்குட்டிகளைக்கொண்டுவர விரயமிக்க விமானங்களை அனுப்பியவை இருக்கின்றன. எயார் பஸ் கொடுக்கல் – வாங்கலில் கபில சந்திரசேனாக்கள் இலஞ்சம் வாங்கியதாக இங்கிலாந்து நீதிமன்றத்தில் அம்பலமாகியதென்பதை நாங்கள் அறிவோம். அவை இந்நாட்டு மக்களின் கடன் அல்லது தண்டப்பணமல்ல. அந்த சுமையை திறைசேரியிடம் கையளித்து கொமிஷன் வாங்குவதற்காக நிமல் சிறிபால த சில்வாவிற்கு விற்கத் தயாராகி வருகிறார்கள். அத்துடன் மின்சார சபையை விற்பனை செய்வதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களை செயலிழக்கச் செய்வித்து, உரிமைகளை மிதித்து நசுக்கி, இலாபத்தில் இயங்குகின்ற மின்சார சபையை விற்கத் தயாராகி வருகிறார்கள். இந்நாட்டு மக்கள் அவரைத் தெரிவுசெய்ய மாட்டார்களென்பதை அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவார். அதனால் மின்சார சபையை விற்று ஒருதொகைப் பணத்தை தேடிக்கொள்ள அவர் முயற்சி செய்கிறார்.
ரெலிகொம், கேஸ் முதலியவற்றறை விற்கத் தயாராகி வருகிறார்கள். மன்னார் வடிநிலத்தின் காற்றுவிசை மின்நிலையக் கருத்திட்டத்தை அதானிக்கு கொடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மன்னார் பற்றி விசேடமாக குறிப்பிடவேண்டியுள்ளது. அது மிகுந்த கூருணர்வுகொண்ட பிரதேசமொன்றாக சர்வதேசரீதியாக இனங்காணப்பட்ட இடம்பெயர் பறவைகள் வருகின்ற இடமாகும். வருடமொன்றில் ஏறக்குறைய 15 மில்லியன் இடம்பெயர் பறவைகள் இலங்கை ஊடாக பயணிக்கின்றன. அதனைக் கூறுவது “குளோபல் பயோலொஜிகல் சென்டர்” ஆய்விற்கிணங்க வெளியிட்ட விடயமாகும். இலங்கையின் சுற்றாடலியலாளர்களும் சுற்றாடல் விஞ்ஞானிகளும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்கள். அத்தகைய இடமொன்றில் காற்றுவிசை மின்னுற்பத்தி நிலையத்தை அமைக்கப் போகிறார்கள். மக்கள் வசிக்கின்ற ஏறக்குறைய 10,000 ஏக்கர் காணியை கையப்படுத்துவதற்கான திட்டங்களை தயாரித்துள்ளார்கள். 25 வருடங்களுக்கு 97 சதம் டொலர் விலையில் காற்றுவிசையைக் கொள்வனவுசெய்ய திட்டங்களை வகுத்துள்ளார்கள். இதனை தற்போது 22 சதம் டொலருக்கு கொள்வனவுசெய்ய முடியும். எமக்கு 2044 வரை கொள்வனவுசெய்ய வேண்டி நேரிடும்.
இந்த நாட்டின் பாராளுமன்றமோ நீதிமன்றமோ இந்நாட்டு மக்களோ இவற்றை இவ்வாறு விற்பதற்கான அதிகாரத்தை ரணிலுக்கு வழங்கவில்லை. அவர் மக்கள் ஆணையற்ற சனாதிபதியாவார். சனாதிபதி தேர்தலுக்கு ஐந்தாறு மாதங்கள் இருக்கையில் இவ்விதமான ஏலவிற்பனை சூதாட்டத்தில் ஈடுபடுவார்களாயின் பல எதிர்காலத் தலைமுறையினருக்கு பொறுப்புக்கூற வேண்டியுள்ள வலுச்சக்தி, விமான சேவை மற்றும் ஏனைய நிறுவனங்களை விற்கத் தீர்மானிப்பர்களாயின் இந்நாட்டு மக்கள் அதனை எதிர்க்க வேண்டும். அதைப்போலவே மக்கள் ஆணையற்ற ஓர் அரசாங்கத்திடமிருந்தே கொள்வனவு செய்ய முனைகிறார்கள். அடுத்து வரப்போவது மக்கள் ஆணையைக்கொண்ட அரசாங்கமாகும். மக்கள் ஆணையைக்கொண்ட அரசாங்கங்களிடம் மக்களின் பலத்தை முழுமையாகவே கையளிப்போம். நீங்கள் கொள்வனவுசெய்தவை பற்றி தீர்மானியுங்கள். அதனால் கொள்வனவு செய்வதற்காக கேட்புவிலை முன்வைப்பவர்களிடம் அது பற்றியும் கவனித்துப் பாருங்கள் எனும் கோரிக்கையை விடுக்கிறோம். இந்த ரணில் விக்கிரமசிங்க – ராஜபக்ஷ கூட்டு ஆட்சிக்கு இனிமேலும் எமது நாட்டின் வளங்களை விற்பதற்கான ஆணை கிடையாது. மக்கள் ஆணையை உரசிப் பார்ப்பதற்காக தயாராகிவருகின்ற இத்தருணத்தில் எந்தவொரு வழிமுறை ஊடாகவும் விற்கவோ கொள்வனவு செய்யவோ தயாராகி வருவார்களாயின் அந்த கொடுக்கல்-வாங்கலை அடுத்த தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்துடனேயே தீர்த்துக்கொள்ள வேண்டிநேரிடும். அதனால் இந்த கொடுக்கல் – வாங்கலுக்கு நீங்கள் தயாராகவேண்டாம். எமது நாட்டின் வளங்களை விற்கத் தயாராகின்ற இந்த கொடுக்கல் – வாங்கல் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். விற்பதற்கான மக்கள் ஆணை அரசாங்கத்திற்கு கிடையாது. தனியார் துறையை பலப்படுத்துவதென்பதும் அரச வளங்களை விற்பதென்பதும் ஒன்றல்ல: இரண்டு செயற்பாங்குகளாகும்.
(தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட மகளிர் மாநாடு – 2024.03.10, ஹோமாகம) இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் ஓர் அரசியல் மாற்றத்திற்கான கட்டம் மலர்ந்துள்ளது. அதனால் ஆளுங் குழுவினர் பொதுத் தேர்தலை நடாத்துவதா சனாதிபதி தேர்தலை நடாத்துவதா என்ற தடுமாற்றத்தில் இருக்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்க சனாதிபதி தேர்தலை நடாத்தவே நினைக்கிறார். பொதுத் தேர்தலை நடாத்துவதாயின் வேட்பாளர்களை தேடிக்கொள்ளவும் அவரால் முடியாது. ராஜபக்ஷாக்களுக்கு சனாதிபதி தேர்தலுக்காக குடும்பத்திலிருந்து வேட்பாளரொருவரைத் தேடிக்கொள்ள இயலாதென்பதால் பொதுத்தேர்தலை முதலில் நடாத்தினால் நல்லதென ராஜபக்ஷாக்கள் […]
(தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட மகளிர் மாநாடு – 2024.03.10, ஹோமாகம)
இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் ஓர் அரசியல் மாற்றத்திற்கான கட்டம் மலர்ந்துள்ளது. அதனால் ஆளுங் குழுவினர் பொதுத் தேர்தலை நடாத்துவதா சனாதிபதி தேர்தலை நடாத்துவதா என்ற தடுமாற்றத்தில் இருக்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்க சனாதிபதி தேர்தலை நடாத்தவே நினைக்கிறார். பொதுத் தேர்தலை நடாத்துவதாயின் வேட்பாளர்களை தேடிக்கொள்ளவும் அவரால் முடியாது. ராஜபக்ஷாக்களுக்கு சனாதிபதி தேர்தலுக்காக குடும்பத்திலிருந்து வேட்பாளரொருவரைத் தேடிக்கொள்ள இயலாதென்பதால் பொதுத்தேர்தலை முதலில் நடாத்தினால் நல்லதென ராஜபக்ஷாக்கள் நினைக்கிறார்கள். ஐமச போன்ற கட்சி ஊர்களில் எஞ்சியுள்ள வாக்குகளை சேகரித்துக்கொள்வது பற்றி சிந்திக்கிறது. குழுக்கள் மூன்றாகப் பிரிந்திருந்தாலும் ஒரே குழுவான இவர்களுக்கு யூலை மாதம் 22 ஆந் திகதிவரை சனாதிபதி தேர்தல் நடைபெறுமா அல்லது பொதுத் தேர்தல் நடைபெறுமா என சிந்தித்துக்கொண்டிருக்க நேரிடும். அதைப்போலவே பொதுவாக பாராளுமன்ற அமர்வு நடைபெறுகின்ற தினங்களில் காலை ஒன்பது மணி தொடக்கம் மாலை ஐந்து மணிவரை விவாதம் நடைபெறும். இந்த நேரத்தில் எமக்கு கிடைப்பதோ பத்து நிமிடங்கள் தான். அவர்களுக்கு ஏழு மணித்தியாலங்களும் ஐம்பது நிமிடங்களும் கிடைகின்றது. அந்த மொத்த நேரத்திலும் எம்மை இலக்காகவைத்து தாக்குதல் நடாத்துகிறார்கள். ஒருசில தொலைக்காட்சி விவாதங்களில் நான்கு அறிவிப்பாளர்களும் ஓர் அரசியல்வாதியும் இருப்பார்கள். அந்த ஐவரும் எம்மைப்பற்றிக் கதைத்து தாக்குவார்கள். அவர்கள் அனைவரும் இலங்கையில் ஒருபோதுமே இருந்திராத அரசியல் மன அழுத்தத்திற்கு இரையாகி உள்ளார்கள்.
இன்று ஹோமாகமவில் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ள தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் புதல்வியரைக் கண்டால் அவர்களின் மனஅழுத்தம் மென்மேலும் வேகமாக அதிகரிக்கும். நாங்கள் எதிர்கொண்டிருப்பது வெறுமனே அரசாங்கத்தை மாற்றுவது மாத்திரமல்ல. இலங்கை வரலாற்றில் பலம்பொருந்திய அரசியல், பொருளாதார, சமூக மாற்றத்தை ஏற்படுத்த தயாராகி வருகிறோம். அதனால் இதுவரை நாட்டை ஆட்சிசெய்த குழுக்கள் இறுதிவரை அவர்களின் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள முயற்சி செய்கிறார்கள். தமது அரசியல் பலத்தை பாதுகாத்துக்கொண்டாலும் லசந்த விக்கிரமதுங்கவை படுகொலைசெய்து மேலும் பல ஊடகவியலாளர்களை தாக்கினார்கள். தனது கணவனை இழந்த வேதனையைத் தாங்கிக்கொண்டிருக்கின்ற சந்தியா எக்னெலிகொடவிற்கும் நீதி கிடைக்கவேண்டுமல்லவா? பேனையை நெறிப்படுத்தி, தனது கருத்தியலை வெளிப்படுத்தியதால் அவர்கள் எவருமே படுகொலை செய்யப்படலாகாது. “சண்டே லீடர்” செய்தித்தாளில் பல பக்கங்களை லசந்த விக்கிரமதுங்க ரணிலுக்காகவே நிரப்பினார். தற்போது ரணில் விக்கிரமசிங்’க சனாதிபதி ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார். லசந்த விக்கிரமதுங்க பற்றிய விசாரணைகள் கிடையாது. இந்த நாட்டு மக்களின் நிதிசார் குற்றச்செயல்களை மேற்கொள்வதில் முக்கிய கட்டம் மத்தியவங்கி கொள்ளை மூலமாக மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் புரிந்த நிதிசார் கொள்ளைகள் பற்றி விசாரித்தறிந்து தண்டனை வழங்குவதாகக்கூறிய குழுமங்கள் தற்போது ரணில் விக்கிரமசிங்கவைப் போன்றே ஐக்கிய மக்கள் சக்தியை சூழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் தண்டனை பெறவேண்டிய இந்த குற்றச்செயல்களிலிருந்து பாதுகாப்புப்பெறுவதற்காக பல்வேறு தந்திரோபாயங்களை பிரயோகிக்கிறார்கள். பரம்பரையை மையமாகக்கொண்டு வருகைதந்த இந்த மோசடியான, ஊழல்மிக்க ஆட்சி பொதுமக்களுக்கு கைமாமாறுகின்ற கட்டத்திற்கு வந்துள்ளது.
அரசியலில் பிரவேசிக்க எதிர்பார்க்கின்ற இளைஞர்களுக்காக எமது ஆட்சியின்கீழ் புதிய கதவுகள் திறக்கப்படும். அவர்களின் தலைமுறைவழியில் வந்த அரசியல், சாதாரண மக்களின் பிள்ளைகளிடம் கைமாறுவதை தடுப்பதற்காக புரியக்கூடிய அனைத்துவிதமான சூழ்ச்சிகளையும் புரிகிறார்கள். மத்திய கொழும்பில் மைதானமொன்றை நிரப்பி அரிசி கொண்டுவந்திருக்கிறார்கள். இலங்கை வரலாற்றில் மிகஅதிகமான பணத்தொகையை இந்த தேர்தலுக்காக அவர்கள் பாய்ச்சுகிறார்கள். ஆனால் 2022 மே மாதம் 09 ஆந் திகதிக்கு முன்னர் இருந்த மக்களை ஏமாற்றக்கூடியதாக இருந்தபோதிலும் தற்போது இருப்பவர்கள் அனுபவங்கள் வாயிலாக கற்றுக்கொண்ட, மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தைக்கொண்ட அரசாங்கத்தைப்போலவே அறுபத்தொன்பது இலட்சம் வாக்குளால் நியமிக்கப்பட்ட சனாதிபதியொருவரை விரட்டியடித்த மக்களாவர். ஈராக்கில் சதாம் ஹுசெயினை விரட்டியடிக்க அமெரிக்க இராணுவம் தரையிறங்கியது. லிபியாவிலும் அப்படித்தான். எனினும் 69 இலட்சம் வாக்குகளைப்பெற்ற ஆட்சியாளனை ஒரு துண்டு கல்லைக்கூட கையில் எடுக்காமல் மக்கள் விரட்டியடித்தார்கள். எனவே அவர்கள் விளையாட முனைவது நாங்கள் அரசியல் புரிகின்ற புதிய மக்களுடனேயே. ரனில் விக்கிரமசிங்காக்கள், மகிந்த ராஜபக்ஷாக்கள், சஜித் பிரேமதாசாக்கள் பழைய மக்களுடனேயே அரசியல்புரிய எத்தனிக்கிறார்கள் நாங்கள் அரசியல் புரிவது 2022 மே மாதம் 09 ஆந் திகதிக்குப் பின்னர் மாறிய புதிய மக்களுடனேயே. அவர்களின் ஒரு பிரச்சார அலைவரிசைக்காக எமது பல்லாயிரக்கணக்கான பிரச்சார வாய்கள் இருக்கின்றன. நீங்கள் எங்கே சென்றாலும் அவர்களின் குறைகூறல்கள், சேறுபூசுதல்கள், திரிபுடுத்தல்களுக்கு எதிராக சரியானதை விளக்கிக்கூறுங்கள்.
ரணிலின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்துச்செல்ல மூன்று நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒரு நிறுவனம் தயாரித்துள்ள பிரச்சாரத்தில் ரணிலைப் பற்றி நான்கில் ஒன்றைக் கூறுகையில் எம்மைப்பற்றி நான்கில் மூன்றைக் கூறுகிறார்கள். எம்மைப் பற்றித் தயாரிக்க கொடுத்திருப்பதும் எம்மவர் ஒருவரிடமே. எண்பத்தெட்டு, எண்பத்தொன்பது காலப்பகுதி பற்றி பயத்தை உருவாக்குவதற்காக ஒரு பிரச்சாரம் தயாரிக்கப்படுகின்றது. இரண்டாவதில் நாங்களும் சிறிதுகாலம் அரசாங்கங்களில் இருந்ததாக கூற முயற்சி செய்யப்பட்டுள்ளது. மூன்றாவதில் இது பரீட்சித்துப்பார்க்க உகந்த தருணமல்ல எனக் கூற விளைகிறார்கள். பணத்தைப் பாய்ச்சி, அறிவித்தல்களை படைக்கின்ற, செய்தித்தாள்களை அச்சிடுகின்ற பிரச்சாரங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. எமது நாட்டு மக்களின் செல்வத்தைக் கொள்ளையடித்து மக்களை இந்த படுகுழிக்குள் இழுத்துப்போட்ட ஆட்சியாளர்கள் சம்பந்தமாக நியாயமான விசாரணைகளை மேற்கொண்டு தண்டனை வழங்குவதற்கான அவசியம் எமக்கு இருக்கின்றது. இங்கு வருகை தந்திருக்கின்ற எவரும் தமது தனிப்பட்ட நோக்கங்களுக்காக வந்தவர்கள் அல்ல. இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் இதைவிட சாதகமான வாழ்க்கையைக் கட்டியெழுப்புதல் பற்றிய பொதுவான நோக்கம் மாத்திரமே எம்மிடம் இருக்கின்றது. அந்த நோக்கத்தை வேறு எவராலும் காப்பியடிக்க முடியாது. பௌத்த இலக்கியத்தில் குறிப்பிடப்படுகின்ற வட்டுக்குருவிகளை வேட்டையாடுவதற்காக வேடன் விரித்த வலையிலிருந்து கூட்டாக விடுபட்டுச்செல்கின்ற தலைமைத்துவத்தை போதிசத்துவ வட்டுக்குருவி வழங்கியது. “பெண்களாகிய நாங்கள் ஒரே மூச்சுடன்” எனும் தொனிப்பொருளின்கீழ் இந்த நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே ஒன்றுசேர்ந்துள்ளார்கள். நாங்கள் அதற்காக திட்டங்களை வகுத்து மேடையில் பேசினாலும், அந்த செயற்பாங்கின் அதிகமான சுமையைத் தாங்குவது, முனைப்பாக இயங்குவது, மேடையின் முன்னால் குழுமியுள்ள நீங்கள் அனைவருமே. அதனை வெற்றியின்பால் நெறிப்படுத்துவதற்கான ஆக்கத்தையும் ஊக்கத்தையும் உங்களுக்காக பிரார்த்திக்கிறோம்.
தேர்தல் வெற்றியென்பது இறுதியானதல்ல, நாட்டைக் கட்டியெழுப்புவதன் தொடக்கமாகும். அதன் முதன்மைப் பணி மக்களின் உணவவேளை வழங்கப்படுவதை உறுதிசெய்வதாகும். எமது நாட்டின் பாரியளவிலான அரிசியாலை உரிமையாளர்கள் ஒருசிலரின் தனியுரிமைச் சந்தையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின்கீழ் சிதைத்து நியாயமான விலையில் பாவனையாளர்களுக்கு அரிசியை வழங்கவும் கமக்காரனுக்கு நியாயமான விலையை வழங்கவும் பொறியமைப்பொன்றினை வகுப்போம். மரக்கறி, பழங்கள் தொடர்பான சந்தையையும் அதைப்போலவே மீண்டும் அமைத்திட அறுவடைக்குப் பிந்திய விரயத்தை குறைத்திடுவோம். தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின்கீழ் முதலில் பிரஜைகளுக்கு நியாமான விலையில் போசாக்கான உணவுவேளையொன்றை உறுதிசெய்வோம். நச்சுத்தன்மையற்ற உணவுவேளையொன்று வழங்கப்படுவதை உறுதிசெய்வோம். இரண்டாவதாக பிரஜைகளின் சுகாதாரத்தை பாதுகாப்பதற்கான குறுங்கால வழிமுறைகளைக் கடைப்பிடிப்போம். பரிசோதனை வசதிகள், ஔடதங்களை போதியளவில் வழங்குதல் என்பவற்றை ஓரிரு மாதங்களில் உறுதிசெய்வோம். பிள்ளைகளின் கல்விக்கு மூன்றாவது அவசரத் தேவையென்றவகையில் முன்னுரிமை வழங்குவோம். தான் படுகின்ற துன்பத்தை தனது பிள்ளைக்கு கொடுக்காதிருக்கும் நோக்கத்துடன் பெற்றோர்கள் கல்விக்காக பாரிய அர்ப்பணிப்பினைச்செய்து வருகிறார்கள். இன்றளவில் ஒட்டமொத்த பாடசாலை முறைமையுமே சீரழிந்துள்ள நிலைமையை மாற்றியமைத்து மீண்டும் அதுபற்றிய நம்பிக்கையை உருவாக்கிடுவோம். கல்வியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி அனைத்து தொழில்களுக்கும் பொருத்தமான கல்வியை வழங்குவதற்கான நீண்டகால திட்டங்களை அமுலாக்குவோம். அதற்கான சமூக மனோபாவ மாற்றத்தையும் நாங்கள் ஏற்படுத்துவோம். தற்போது வீட்டுக்குச் சுமையாக மாறியுள்ள பிள்ளையின் கல்வியை அதிலிருந்து விடுவித்து அரசாங்கத்தின் பொறுப்பாக மாற்றிடுவோம். அறிவினாலும் திறன்களாலும் நிரம்பிய பிரஜைகளை உருவாக்குகின்ற கல்வியே எமக்குத் தேவை. உலகத்துடன் போட்டியிடக்கூடிய பிள்ளைகளை உருவாக்குகின்ற கல்வியே எமக்குத்தேவை. தேர்தல் காலத்தினல் படிவங்களை பூர்த்திசெய்கின்ற, சாராய கிளாசிற்கு அடிமைப்படுகின்ற, நாமலின் பின்னால் செல்கின்ற பிள்ளைகளே அவர்களுக்குத் தேவை. உலகின் புதிய அறிவினை உறிஞ்சியெடுத்து முன்நோக்கி நகர்கின்ற சமூக ஒழுக்கத்தைக்கொண்ட பிள்ளைகளை உருவாக்குகின்ற கல்வியையே நாங்கள் உருவாக்குவோம். அதைப்போலவே ஒழுக்கமான சட்டத்தை மதிக்கின்ற சமூகத்தை உருவாக்கிட இதுவரை பயணித்த பாதையிலிருந்து எதிர்காலத்தில் நாட்டைக் கட்டியெழுப்புகின்ற மாற்றத்தை ஏற்படுத்தவல்ல அரசாங்கமொன்றை அதிகாரத்திற்கு கொண்டுவரவேண்டும். அதன் பின்னர் பெண்களுக்கும் மடியில் தவழ்கின்ற பிள்ளைக்கும் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுகின்ற நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான மாற்றத்திற்கான வெற்றிக்காக துணிச்சலுடன் வீறுநடை போடுமாறு அழைப்பு விடுகிறோம்.
“நிர்மாணிக்கின்ற புதிய உலகத்தை பாதுகாத்திட பெண்களாகிய நாங்கள் பலம்பொருந்தியவகையில் ஒன்றுசேர்வோம்”
-தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய-
பெண்களாகிய நாங்கள் ஒரே மூச்சில் திசைகாட்டிக்கே மாநாட்டுக்கு தடையேற்படுத்த கொழும்பு மாவட்டத்தில் பல்வேறு தந்திரோபாயங்கள் மேற்கொள்ளப்பட்டன. மாவட்டம் முழுவதிலும் பல்வேறு பொருட்களை பகிந்தளித்துள்ளார்கள். சமுர்த்தி உள்ளவர்களை கூட்டத்திற்காக அழைப்பு விடுத்திருக்கிறார்கள். இவையனைத்தின் மத்தியிலும் எமது மாநாட்டினை வெற்றிகரமானதாக ஆக்கிக்கொண்டமைதான் இலங்கையின் அரசியல் மாறியுள்ளதென்பதற்கான மிகச்சிறந்த சான்று. வெறுமனே பெண்கள் சிலரை சேர்த்துக்கொண்ட இயக்கமல்ல இது. கலந்துரையாடல்களை மேற்கொண்டு, ஆய்வுகளை மேற்கொண்டு பெண்களின் தலைமைத்துவத்திற்கான விசேட மேடையொன்றினை ஒவ்வொருவரையும் சேர்த்துக்கொண்டு அமைக்கிறோம். இது பெரும்போக்கினை மாற்றியமைத்து அனைவருடனும் கூட்டாக செல்கின்ற பயணமாகும். பாராளுமன்றத்தை உள்ளிட்ட மக்கள் நிறுவனங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை எண்களால் அதிகரிப்பது எமது அடிப்படை நோக்கமல்ல. பாரதூரமான சமூக மாற்றமொன்றை மேற்கொண்டு அனைத்துத் துறைகளிலும் அழுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவது எமது அடிப்படை நோக்கமாகும். துன்பங்களை பராமரித்து வருகின்ற கட்டமைப்புகளை மாற்றியமைப்பதே எமது அரசியலாகும். துன்பங்களால் பிரதானமாக பாதிக்கப்பட்டவர்களான பெண்களாகிய நாங்கள் விழிப்புணர்வுடையவர்களாக இடையீடுசெய்து இந்த முறைமையை மாற்றியமைப்பதற்கான உரிமை இருக்கின்றது.
அனைத்து துறைகளையும் பரிசீலனைசெய்து விரிவானதும் ஆழமானதுமான மாற்றத்தை ஏற்படுத்துவதே எமது பெண்கள் சமவாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த மாற்றத்தை ஏற்படுத்த எமக்கு அதிகாரம் அவசியமாகும். இந்த ஆழமான மாற்றத்திற்காக செயலாற்றுகின்ற எமக்கு எதிராக உள்ள அனைவரையும் தோற்கடிக்கின்ற வருடமாக அமைவதாலே 2024 ஆம் ஆண்டு எமக்கு தீர்வுக்கட்டமானதாக அமைகிறது. இனிமேலும் பெண்களாகிய நாங்கள் ஏமாறத் தயாரில்லை. எமது இயக்கத்தின் வெற்றி காரணமாக ஏனைய அரசியல் கட்சிகளும் பெண்களைப்பற்றி சிந்திக்கத் தொடங்கி உள்ளனவெனில் நாங்கள் அதற்காக மகிழ்ச்சி அடைகிறோம். எமக்கு இது ஒரு தேர்தல் உபாயமார்க்கம் மாத்திரமல்ல. அழுத்தத்தை எதிர்த்துநின்று, நிலவுகின்ற முறைமையை மாற்றியமைப்பதை முன்னெடுத்து வருகையில் தற்போது ஒட்டுமொத்த பெண்களையும் குறிவைத்து சேறுபூசத் தொடங்கி இருக்கிறார்கள். இதற்கு முன்னரும் தலைவிகளை இலக்குவைத்து புரிந்த தாக்குதல்களும் குறைகூறல்களும் பல்வேறு வழிமுறைகள் ஊடாக அமுலாக்கப்பட்டுள்ளன. சதாகாலமும் இந்த உலகிற்கு புதிய உயிரினங்களை உருவாக்குவது பெண்களாகிய நாங்கள்தான். அந்த புதிய உயிர்களைப் பேணிப்பாதுகாப்பதும் நாங்கள்தான். இந்த பதிய உலகத்தை நிர்மாணிப்பது போன்றே அந்த புதிய உலகத்தை பாதுகாத்திட பெண்களாகிய நாங்கள் மென்மேலும் வலிமையுடன் ஒன்றுசேர்வோம்.
“ஒட்டுமொத்த பெண்களுக்கும் தலைமைத்துவம் வழங்குகின்ற ஒரே இயக்கம் தேசிய மக்கள் சக்தியாகும்”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்-
இற்றைவரை நாட்டை ஆட்சிசெய்தவர்கள் இலங்கைக்கு பெற்றுத்தந்துள்ள சமூக, பொருளாதார, அரசியல் சீரழிவு காரணமாக நாங்கள் அனைவரும் கண்டுகொண்டிருந்த கனவு கலைக்கப்பட்டுள்ளது. நாங்கள் இதுவரை சிறைப்பட்டிருந்த அரசியல் கட்சிகளை மறந்து எமது பிள்ளைகளுக்காக சுதந்திரமாக மூச்செடுக்கக்கூடிய ஒரு நாட்டை சிங்கள, தமிழ், முஸ்லீம் அனைவருக்காகவும் உருவாக்கிட திடசங்கற்பத்துடன் அணிதிரண்டுள்ளோம். உலகின் ஏனைய நாடுகள் பெற்றுள்ள கலாசார மற்றும் சமூக சுதந்திரத்தை நிலவுகின்ற ஊழல்மிக்க அரசியல் முறைமையே இழக்கச்செய்துள்ளது. இந்த கொள்ளைக்கார பொருளாதாரத்தையும் ஊழல்மிக்க அரசியலையும் முடிவுக்கு கொண்டுவந்து முன்நோக்கி நகர நாமனைவரும் யதார்த்தத்தில் அணிதிரண்டிருக்கிறோம். எனினும் இதுவரை நாட்டை ஆட்சிசெய்தவர்கள் எம்மைப் பிரித்து ஆட்சிசெய்து அவர்களின் பரம்பரைகளுக்காக அனைத்தையும் செய்துகொண்டார்கள். சம்பிரதாயபூர்வமாக மூதாதையர்களின் மரபுரிமையால் அரசியலில் ஈடுபடுவதற்குப் பதிலாக பெண்களுக்கு உண்மையான வெற்றியை பெற்றுக்கொடுக்கக்கூடிய பெண்களாகிய நாங்கள் ஒரே முச்சுடன் தேசிய மக்கள் சக்தியைச்சுற்றி அணிதிரண்டு வருகிறோம்.
ஒட்டுமொத்த பெண்கள் தலைமுறையினருக்கும் முன்னணிக்குவர ஊக்கமளித்த, பலம்சேர்த்த, வழிகாட்டிய மற்றும் தலைமைத்துவம் வழங்கிய ஒரே அரசியல் இயக்கம் தேசிய மக்கள் சக்தி மாத்திரமே என்பதை நாங்கள் மிகவும் வலியுறுத்திக் கூறுகிறோம். இதற்கு அப்பால் நாங்கள் எத்தகைய நாட்டை உருவாக்கிக்கொள்ள வேண்டும்? அமைதிநிறைந்த, சகவாழ்வுகொண்ட, சுதந்திரமான கலாசாரத்தை உருவாக்குகின்ற ஆட்சியொன்று எமக்கு அவசியமாகி உள்ளது. அதற்குள்ளே பெண்களாகிய எங்களை அநீதிக்கு, அநியாயத்திற்கு, சமத்துவமின்மைக்கு இழுத்துப்போடுகின்ற அனைத்து நிபந்தனைகளையும் அகற்றி பொருளாதார நியாயத்தைக்கொண்ட கலாசார சுதந்திரத்தை உருவாக்கிகொள்ள வேண்டும். அத்தகைய ஆட்சியை உருவாக்கிக் கொள்வதற்காக நாங்கள் முண்டியடித்துக் கொண்டிருக்கிறோம். தேசிய மக்கள் சக்தியால் மாத்திரமே அந்த ஆட்சியை உருவாக்க முடியும். இதுவரை நாங்கள் பயணித்த பாதையில் விரிக்கப்பட்டிருந்த சவால்களை சிங்கள, தமிழ், முஸ்லீம்களாகிய நாங்கள் ஒரே முச்சுடன் ஒன்றிணைந்தால் மாத்திரமே வெற்றிகொள்ளமுடியும். எமது பிள்ளைகளுக்காக தடைகளின்றி முன்னேறிச்செல்லக்கூடிய ஒரு நாட்டை உருவாக்குகின்ற பொறுப்பு எமது தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது. இதுவரை ஒன்றுசேராத அனைவரையும் எம்மோடு இணையுமாறு அழைப்பு விடுக்கிறோம்.
“வியட்நாம் பெண்கள் சுரங்கங்களிலிருந்து வெளியே வந்ததுபோல் எமது பெண்களும் இடையறாமல் வெளியில் வந்துகொண்டிருக்கிறார்கள்.”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணஆரச்சி-
அரசியலின்றி உயிர்வாழ முடியாது என நிரூபிக்கப்பட்டவிடத்து வியட்நாமிய பெண்கள் சுரங்கங்களிலிருந்து வெளியே வந்து அமெரிக்க இராணுவத்துடன் போராடியதைப்போல் எமது நாட்டுப் பெண்கள் இடையறாமல் வெளியில்வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு முன்னர் நாங்கள் வீடுகளுக்குச்சென்று அரசியல் பேசும்போது பெண்கள் அந்த உரையாடலில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் தற்போது அவர்கள் முன்னணிக்கு வந்து வியட்நாமிய பெண்கள் அமெரிக்க இராணுவத்தை விரட்டியடித்ததைப்போல் துணிச்சலுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஒற்றோபர் 17 ஆந் திகதிக்கு முன்னர் ஒரு நாளில் நடைபெறுகின்ற எந்தவொரு தேர்தலின்போதும் அமெரிக்க இராணுவத்தை விரட்டியடிப்பதற்காக சுரங்கங்களிலிருந்து வெளியில் வந்த பெண்களைப்போல் இந்த பெண்கள் வாக்குச் சாவடிகளுக்குச் செல்வார்கள். அந்த தருணம் வந்ததும் காற்சட்டை கழன்று வீழ்ந்தாலும் தொங்கிப்பிடித்துக் கொண்டிருக்கின்ற இந்த ஆட்சியாளர்களை உள்ளிட்ட அனைவருக்கும் பதவிகளைக் கைவிட்டு ஓடவேண்டி நேரிடும்.
மக்களிடமிருந்து திருடிய பணத்தைக்கொண்டு கொழும்பு மாவட்டம் பூராவிலும் பகிர்ந்தளிக்கின்ற பொருட்களை பெற்றுக்கொள்வதில் தவறுகிடையாது. மிகுந்த சிரமங்களின் மத்தியில் வசிக்கின்ற பெண்கள் பாரிய அர்ப்பணிப்புச்செய்து, இந்த இடத்திற்கு வந்திருக்கிறார்கள், வியட்நாமிய பெண்கள் மிகுந்த அர்ப்பணிப்புச்செய்து தமது தாய்நாட்டை காப்பாற்றிக் கொள்வதற்காக போராடியவாறு இந்த சிலமாதங்களாக அர்ப்பணிப்புச்செய்து கொழும்பு மாவட்டத்தின் வெற்றியை உச்சத்திற்கு உயர்த்திவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
(-Colombo, March 08, 2024-) இன்றைய தினம் (08) பிற்பகல் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இலங்கைக்கான கியூபத் தூதுவர் Andrés Marcelo Garrido அவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இச்சந்திப்பில் கியூபத் தூதுவர் அலுவலகத்தின் பிரதான செயலாளர் Mrs. Maribel Duarte Gonzalez அவர்களும் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் பிமல் ரத்நாயக்க அவர்களும் கலந்துகொண்டனர். இதன்போது […]
(-Colombo, March 08, 2024-)
இன்றைய தினம் (08) பிற்பகல் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இலங்கைக்கான கியூபத் தூதுவர் Andrés Marcelo Garrido அவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இச்சந்திப்பில் கியூபத் தூதுவர் அலுவலகத்தின் பிரதான செயலாளர் Mrs. Maribel Duarte Gonzalez அவர்களும் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் பிமல் ரத்நாயக்க அவர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது நீண்டகாலமாக கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் இருந்த அரசியல் தொடர்புகள் பற்றியும் நிகழ்காலத்தில் தேசிய மக்கள் சக்தியின் அரசியல் செயற்பாடுகள் குறித்தும் விலாவரியாக கலந்துரையாடப்பட்டது.
நீண்ட காலத்துக்கு முன்பாக கியூபா மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடை பற்றியும் இன்றளவில் கியூபாவுக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள நேரடி தொடர்புகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம், பிரச்சினைக்குரிய பகுதிகள் பற்றியும் கியூபத் தூதுவர் தோழர் அநுர குமார திசாநாயக்கவிடம் தெளிவுபடுத்தினார்.
113 ஆவது சர்வதேச மகளிர் தினம் சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 08 ஆம் திகதியில் வருகிறது. பெண்களுக்கென ஒரு நாள் அவசியம் எனும் விடயம் 1910 இல் கம்யூனிஸ்ட் அகிலத்தில் முன்மொழியப்பட்டது. பெண்களை சமூகத்தின் சக்தியாக அணிதிரட்டும் மற்றும் அவர்களின் வலிமையை வெளிப்படுத்தும் நாளாக இடதுசாரிய அர்த்தத்தில் இத்தினத்தின் செயற்பாடுகள் சீரமைக்கப்பட்டன. இம்முறை சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இலங்கையில் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன், தேசிய மக்கள் சக்தியின் தலைமையில் பெண்கள் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகள் […]
113 ஆவது சர்வதேச மகளிர் தினம்
சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 08 ஆம் திகதியில் வருகிறது. பெண்களுக்கென ஒரு நாள் அவசியம் எனும் விடயம் 1910 இல் கம்யூனிஸ்ட் அகிலத்தில் முன்மொழியப்பட்டது. பெண்களை சமூகத்தின் சக்தியாக அணிதிரட்டும் மற்றும் அவர்களின் வலிமையை வெளிப்படுத்தும் நாளாக இடதுசாரிய அர்த்தத்தில் இத்தினத்தின் செயற்பாடுகள் சீரமைக்கப்பட்டன.
இம்முறை சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இலங்கையில் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன், தேசிய மக்கள் சக்தியின் தலைமையில் பெண்கள் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகள் அதைப்போலவே மக்களின் வாழ்வில் சிக்கல்களை தோற்றுவித்துள்ளவர்களுக்கும், அநீதியான நடப்பு அரசியல் முறைக்கும் எதிராக பெண்களை ஸ்தாபனமயப்படுத்தும் நோக்குடன் நாடு முழுவதும் பிரமாண்டமான ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்குசெய்யப்பட்டிருந்ததுடன், பெருந்தொகையான பெண்களின் பங்களிப்புடன் இச்செயற்பாடு வெற்றிகரமாக இடம்பெற்றது.
~களுத்துறை~
~பதுளை~
~கண்டி~
~அனுராதபுரம்~
சிவபெருமானுக்கு நன்றிதெரிவிப்பதற்காக நலமான எதிர்பார்ப்புகளை மனதிலேந்தி இராப்பொழுதில் விரதமிருக்கின்ற இலங்கைவாழ் சிவனடியார்களுக்கு எமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.!
சிவபெருமானுக்கு நன்றிதெரிவிப்பதற்காக நலமான எதிர்பார்ப்புகளை மனதிலேந்தி இராப்பொழுதில் விரதமிருக்கின்ற இலங்கைவாழ் சிவனடியார்களுக்கு எமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.!