Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

NPP News

ஜப்பான் தூதுவருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு

(-Colombo, March 19, 2024-) இலங்கைக்கான ஜப்பானின் தூதுவர் மியுகோஷி ஹிடெகி (Mizukoshi Hideaki) அவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம் (19) முற்பகல் ம.வி.முவின் தலைமையகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது ஜப்பான் தூதரகத்தின் பதில் பிரதானி திரு. Katsuki Kotaro மற்றும் இரண்டாம்நிலை செயலாளர் திருமதி. Imai Kaori அவர்களும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் விஜித ஹேரத் […]

(-Colombo, March 19, 2024-)

இலங்கைக்கான ஜப்பானின் தூதுவர் மியுகோஷி ஹிடெகி (Mizukoshi Hideaki) அவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம் (19) முற்பகல் ம.வி.முவின் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின்போது ஜப்பான் தூதரகத்தின் பதில் பிரதானி திரு. Katsuki Kotaro மற்றும் இரண்டாம்நிலை செயலாளர் திருமதி. Imai Kaori அவர்களும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் விஜித ஹேரத் அவர்களும் இணைந்துகொண்டிருந்தனர்.

இன்றளவில் இலங்கையில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நிலவரம் குறித்து இருதரப்பும் விரிவாக கலந்துரையாடியதுடன், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது. சர்வதேச நாணய நிதியத்தின் இடையீடுகள் பற்றிய தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு குறித்தும் ஜப்பானின் இராஜதந்திர பிரதிநிதிகளிடம் தெளிவுப்படுத்தப்பட்டதுடன், எதிர்காலத்தில் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு ஜப்பான் தயாராகவுள்ளதாகவும் இதன்போது ஜப்பான் பிரதிநிதிகள் மூலமாக எடுத்துரைக்கப்பட்டது

Japan-Embassador-Meets-NPP
Japan-Embassador-Meets-NPP
Show More

“வாலிபத்திற்கு அவசியமான புதிய சமூகத்தைக் கொண்டுவருவதே தேசிய மக்கள் சக்தியின் எதிர்பார்ப்பாகும்.” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க-

(தேசிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட இளைஞர் கூட்டம் – 2024.03.17) தேசிய மக்கள் சக்தியின் இளைஞர் இயக்கம் இந்த நாட்டின் பலம்பொருந்திய இயக்கம் மாத்திரமன்றி இந்த நாட்டை மாற்றியமைக்கத் தயாராகி வருகின்ற இளைஞர் இயக்கமுமாகும். வரப்போகின்ற புதிய அரசியல் மாற்றத்திற்காக இளைஞர் தலைமுறையினரை ஒன்றுசேர்ப்பதற்காக மாத்தறையில் இருந்து ஆரம்பித்த பணி இலங்கையின் பிரமாண்டமான இளைஞர் மலர்ச்சியாக மாறுவதில் ஐயமில்லை. அரசியல் எமது வேலையல்ல: அது தாய்தந்தையருக்கு ஒருசில குடும்பங்களுக்கு சொந்தமான வேலையென்றே நினைத்தார்கள். இளைஞர் தலைமுறையினர் […]

(தேசிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட இளைஞர் கூட்டம் – 2024.03.17)

NPP-Youth-Conference

தேசிய மக்கள் சக்தியின் இளைஞர் இயக்கம் இந்த நாட்டின் பலம்பொருந்திய இயக்கம் மாத்திரமன்றி இந்த நாட்டை மாற்றியமைக்கத் தயாராகி வருகின்ற இளைஞர் இயக்கமுமாகும். வரப்போகின்ற புதிய அரசியல் மாற்றத்திற்காக இளைஞர் தலைமுறையினரை ஒன்றுசேர்ப்பதற்காக மாத்தறையில் இருந்து ஆரம்பித்த பணி இலங்கையின் பிரமாண்டமான இளைஞர் மலர்ச்சியாக மாறுவதில் ஐயமில்லை. அரசியல் எமது வேலையல்ல: அது தாய்தந்தையருக்கு ஒருசில குடும்பங்களுக்கு சொந்தமான வேலையென்றே நினைத்தார்கள். இளைஞர் தலைமுறையினர் தமது வாழ்க்கையை வெற்றிப் பாதையில் இட்டுச்செல்வது எவ்வாறு என கனவு கண்டுகொண்டு திட்டங்களை ஆக்கிக்கொண்டிருந்தார்கள். தற்போது அவர்களின் கனவுகள் அவர்களின் கண்ணெதிரிலேயே நாசமடைந்துள்ளன. எமது சமூகத்தில் பல இளைஞர் குழுக்கள் இருக்கின்றன. உயர் கல்வி பயின்ற, ஓரளவு சொத்துக்கள் இருக்கின்ற, மொழிகள் பற்றிய திறன்கள் படைத்த, சர்வதேசத்துடன் தாக்குப்பிடிக்கவல்ல அறிவுபடைத்த குழுவினர் இருக்கிறார்கள். அவர்கள் தமது வாழ்க்கையைப் பாதுகாப்பானதாக வைத்துக்கொள்வதற்காக உலகில் முன்னேற்றமடைந்தவையென கருதப்படுகின்ற அவுஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, நியுசிலாந்து முதலியவற்றைத் தமது பயணத்தின் இலக்காக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். மற்றுமொரு குழுவினர் பெற்றோர்களின் சுமை தமது தோள்மீது சுமத்தப்பட்ட, தமது எதிர்காலக் கனவுகள், எதிர்பார்ப்புகள் சிதைந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தமது எதிர்பார்ப்புகளை ஈடேற்றிக்கொள்வதற்காக இஸ்ரேயல், கொரியா, மத்தியகிழக்கிற்கு பாய்ந்துசெல்ல முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். மற்றுமொரு குழுவினர் பாடசாலைக் கல்வியை இடைநடுவில் கைவிடவேண்டிய நிலையேற்பட்ட. பாடசாலைப் பருவத்திலேயே வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்காக ஏதெனுமொரு பணியில் ஈடுபட நேரிட்ட குழுவினராவர். அவர்களுக்கு வாழ்க்கை, நோக்கம், இலக்கு கிடையாது. அந்த குழுவில் தற்போது பெருந்தொகையானோர் சேர்ந்து வருகிறார்கள். அந்த குழுவினர் தேசபந்துவின் இலக்காக மாறியுள்ளார்கள். அவர்கள் பாதுகாப்பற்ற, வாழ்க்கை தொடர்பிலான பெறுமதியற்ற அலைந்துதிரிகின்ற இளைஞர் தலைமுறையினராவர். ஜகத் மனுவர்ண “கொடிகஹ யட்ட” திரைப்படத்தில் அந்த இளைஞர் தலைமுறையினரின் வாழ்க்கையையே காட்டினார்.

இந்த நாட்டை மிகவும் பாதுகாப்பான ஒரு நாடாக மாற்றவேண்டும். இந்நாட்டின் இளைஞர் தலைமுறையினரை தமது எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்புகள் நிறைந்த இளைஞர் தலைமுறையினராக மாற்றவேண்டும். எமது கண்ணெதிரில் அமுலாகிவருகின்ற கவலைக்கிடமானநிலை இந்த நிலைமையை மாற்றியமைக்க முன்னணிக்கு வருமாறு எம்மை நிர்ப்பந்தித்துள்ளது. இதனை நாங்கள் எங்கிருந்து மாற்றியமைப்பது? பயணித்துக் கொண்டிருக்கின்ற அரசியல் பாதையை புதிய திசையை நோக்கி மாற்றியமைப்பதன் மூலமாக மாத்திரமே இந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அம்மா அப்பாவின் அரசியலை நாட்டுக்கும் மக்களுக்கும் உங்களுக்கும் மரபுரிமையாக்கிக் கொடுத்துள்ள இந்த கவலைக்கிடமான நிலைமையில் இருந்து விடுவித்துக் கொள்வதுதான் புரிய வேண்டிய முதலாவது போராட்டம். அத்தகைய அரசியல் மாற்றமொன்று எமது நாட்டுக்கு அவசியமாகும். எமது நாட்டின் அரசியல் எவருடைய பெயருக்கு எழுதப்பட்டுள்ளது? மாத்தறை விஜேசேகரவெனில் அவருடைய மகனுக்கு. சிறிசேனவெனில் அவருடைய மகன் மனோஜ் சிறிசேனவிற்கு. மகிந்த ராஜபக்ஷவின் உறவுக்கார மகன்மார்களுக்கு. சில குடும்பங்களின் கைகளில் இந்த அரசியல் சுழன்றுகொண்டிருக்கின்றது. அந்த சிறிய கும்பல் கீழுள்ள வர்க்கத்தின் மிதிக்கப்படுகின்ற இளைஞர்களின் மீட்பளிப்பவர்களாக பெயர்சூட்டிக்கொண்டு இருக்கிறார்கள். சனாதிபதிக்கு ஒரு மகன் பிறந்தால் அந்த மகனின் நெற்றியில் சனாதிபதிநிலை பொறிக்கப்பட்டுள்ளதென அவர்கள் நினைக்கிறார்கள். பிரேமதாசவின் மகன், மகிந்த ராஜபக்ஷவின் மகன், விஜேசேகரவின் மகன் அவர்கள் பிறக்கின்றபோதே சனாதிபதி பதவி, அமைச்சர் பதவி பிரம்மாவால் பொறிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். எமது நாட்டு அரசியல் சில குடும்பங்களின் கைகளில் தேசியரீதியாகவும் பிரதேசரீதியாகவும் பிரிந்து சென்றுள்ளது. எமது ஆற்றல்கள் நிறைந்த அவசியப்பாடு நிலவுகின்ற இளைஞர் தலைமுறையினருக்கு அரசியலின் கதவுகள் மூடிவிடப்பட்டுள்ளன.

இங்கே இருக்கின்ற எவருமே அரசியலை நெற்றியில் பொறித்துக்கொண்டு வந்தவர்கள் அல்ல. பிரம்மா நெற்றியில் பொறித்ததால் அரசியல் பொறுப்பினை ஏற்றுக்கொண்டவர்களுமல்ல. நாங்கள் ஏன் இந்த அரசியலில் பிரவேசிக்கிறோம்? எமது கண்ணெதிரில் நீதியற்ற நியாயமற்ற சமூகமொன்று இருக்கிறது. எமது இளைஞர் தலைமுறையின் வாழ்க்கை அழிந்து வருகின்றது. இந்த சமூக மாற்றத்திற்காக இடையீடுசெய்வதற்காக, தலைமைத்துவம் வழங்குவதற்காக, ஒன்றுசேர்ப்பதற்காகவே நாங்கள் அனைவரும் இந்த அரசியலை தெரிவுசெய்திருக்கிறோம். இதனை மாற்றியமைப்பதற்கான நோக்கமொன்று இருக்கின்றது. அதற்கான தெம்புநிறைந்த அவசியப்பாடு நிலவுகின்றது. எத்தகைய அரசியல் இந்த நாட்டுக்குத் தேவை? இளைஞர்களை வரிசையாக நிறுத்திவைத்து உயரமானவரா, குள்ளமானவரா என பார்த்து “உயரமானவரெனில் சிக்கியூரிட்டி. குள்ளமானவரெனில் தொழிலாளர்” என தொழில்களை பிரித்துக்கொடுக்கின்ற அரசியலா நாட்டுக்குத் தேவை! இதுவா இளைஞர் தலைமுறையினருக்கு உரித்தாக்கிக் கொடுத்துள்ள அரசியல். தேர்தல் காலத்தில் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தொழில் தருவதாகக்கூறி எவ்வளவுதான் போஃம் கடதாசி நிரப்பினார்கள்? நிபுண ரணவக்க எவ்வளவு அப்ளிகெஷன் நிரப்பினார்கள்? அவர்கள் மேலே இருந்துகொண்டு எமக்கு தொழிலாளர் பதவிகளைத் தருகிறார்கள். அவர்களுக்கு மூளை இருந்தாலும் இல்லாவிட்டாலும் சனாதிபதிநிலை, அமைச்சர்பதவி நெற்றியில் பொறிக்கப்பட்டுள்ளது. இதனை மாற்றியமைத்திட வேண்டுமாயின் புதிய அரசியல் மாற்றத்தை கைப்பற்றியே ஆகவேண்டும்.

NPP-Youth-Conference

நான் பள்ளிப் பருவத்திலேயே அரசியலில் பிரவேசித்தேன். என்னை உள்ளிட்ட பெரும்பாலானவர்களின் ஒட்டுமொத்த இளமைப் பருவமுமே இந்த புதிய மாற்றத்திற்காக அயராது உழைத்தது: மல்லுக்கட்டியது. பல்வேறு தோல்விகளின் மத்தியில் கண்ணெதிரில் மரணங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கையில் கைவிட்டுவிடாமல் அரசியல் மாற்றமொன்றுக்காக இந்த அரசியலைத் தெரிவுசெய்து இந்த பயணப்பாதையில் வந்தோம். பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு, இகழ்ச்சிகளை தாங்கிக்கொண்டு வந்த எங்களுக்கு தற்போது கண்ணுக்கெட்டிய தூரத்திற்கு வெற்றி வந்துள்ளது. எங்களால் இந்த வெற்றியை அடையமுடியும். இந்த வருடத்தின் ஒற்றோபர் இறுதியளவில் புதிய அரசாங்கமொன்று: புதிய ஆட்சியொன்று. இந்த அரசாங்கத்திற்கு பிரதான பணியொன்று கையளிக்கப்படுகின்றது. இந்த சமூகத்தை முழுமையான மாற்றத்திற்கு இலக்காக்கிட வேண்டும். மக்களின் முனைப்பான இடையீடு மூலமாக மாத்திரமே அதனை சாதிக்கலாம். அரசாங்கமொன்றை அமைத்து எதிர்பார்ப்புகளை அடைவதற்கு அவசியமான வேலைகளைச்செய்ய வேண்டும். “எக்ஸ்” பரம்பரையைச் சேர்ந்த நாங்கள் பாதுகாப்பான தொழில், சேமிப்புடனான வங்கிக் கணக்கொன்று, ஒழுங்கமைந்த சமூகக் கட்டமைப்பு நிலவுகின்ற சமூகத்தில் எதையாவது பெற்றுக்கொண்டு வசிக்கின்ற ஒருவராக மாறுவார்கள். “இசெட்” பரம்பரையைச் சேர்ந்த நீங்கள் வெளிப்படைத்தன்மையை எதிர்பார்க்கிறீர்கள். நீங்கள் அரசாங்கத் தொழிலொன்றுக்காக நேர்முகப்பரீட்சைக்கு போகிறீர்கள். நீங்கள் உதிர்கிறீர்கள், வேறொருவர் தெரிவுசெய்யப்படுகிறார். எங்கள் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் அது அப்படித்தான் என பொறுத்துக் கொள்வார்கள். “இசெட்” பரம்பரையைச் சேரந்தவர்கள் அது எவ்வாறு இடம்பெற்றது என வினவுவார்கள். போராட்டத்திற்குச் சென்று “வைத்தியசாலைக்கு எவ்வாறு மருந்து வாங்கினீர்கள்” எனக் கேட்டார்கள். அந்த வெளிப்படைத்தன்மை அவசியமாகும். இந்த தொழிலுக்காக இவர்கள் எவ்வாறு தெரிவுசெய்யப்பட்டார்கள்? ஒப்பந்தக்காரரை எவ்வாறு தெரிவுசெய்தீர்கள்? நீங்கள் எழுதிய பேப்பருக்கு கிடைத்த புள்ளிகளின் எண்ணிக்கை யாது? இன்று கேள்வி கேட்கிறார்கள். “இசெட்” பரம்பரை வெளிப்படைத்தன்மையை எதிர்பார்க்கிறது. அது உங்கள் பரம்பரையின் பண்பு. நாங்கள் உருவாக்குவது நிகழ்கால வாலிபம் எதிர்பார்க்கின்ற வெளிப்படைத்தன்மையைப் பாதுகாக்கின்ற தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தையாகும்.

இந்த “இசெட்” பரம்பரை படைக்குந்திறனை எதிர்பார்க்கின்றது. ஒரே இடத்தில் சிறைப்பட்ட, ஒரே இடத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட பரம்பரையல்ல. உங்களுக்குள் கட்டியெழுப்பப்படுகின்ற படைக்குந்திறனை வேகமாக வெளிப்படுத்தவேண்டிய தேவை உங்களுக்கு உண்டு. எங்கள் பரம்பரையினர் எமக்கு அமைத்துக்கொடுத்த பாதையில் பயணிக்கிறார்கள். இந்த பரம்பரையினர் பல துணைப் பாதைகளில் பயணிக்கிறார்கள். பொருளாதாரரீதியாக சமூகரீதியாக மேல்மட்டத்திற்கு வந்த பலர் இருக்கிறார்கள். அது வேறு விசாலமான பாதைககள் மூலமாகவே. எனினும் எங்கள் சமூகம் உங்கள் படைக்குந்திறனை உறிஞ்சிக்கொள்ளக்கூடிய சமூகமா? எமது தலைவர்கள் கிறிஸ்துவிற்கு முற்பட்டகால மனோபாவத்துடன் பழைய சமூக எண்ணக்கருக்களுடன் செயலாற்றுகின்றவர்கள். அவர்கள் மேடைகளில் ஏறும்போது ஐந்து விரல்களிலும் நவரத்தினங்கள் பதித்த ஐந்து மோதிரங்கள். ஒவ்வோர் ஆலயத்திலிருந்தும் கொடுத்த கயிறுகளை முடிச்சுப்போட்ட கைகள். பசில் ராஜபக்ஷ வழக்குகளிலிருந்து தப்பித்துக்கொள்ள ஆலயங்களுக்குச் செல்கிறார். ஒரு வழக்கிற்கு ஒன்றுவீதம் தாயத்துகளை முடிச்சிப்போட்டுக் கொள்கிறார். இந்த தோல்விகண்ட பழங்குடித்தலைவர்கள் உங்களின் படைக்குந்திறனை அடைத்து வைத்திருக்கிறார்கள். இந்த பிள்ளைகளின் படைக்குந்திறனை விருத்திசெய்வதற்கு அவசியமான சமூக பொருளாதார வடிவங்களை தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் கட்டியெழுப்பும்.

NPP-Youth-Conference

சுயாதீனத்தன்மை “இசெட்” பரம்பரையின் பண்பாகும். எமது இளமைப் பருவத்தில் ஆசிரியர்கள் பெற்றோர்களால் அமைக்கப்பட்ட சட்டகத்திற்குள்ளே அவர்களால் உருவாக்கப்பட்ட பாதையில் பயணிக்கவேண்டி இருந்தது. கடப்பாடுகளைக்கொண்ட பிரஜைகளாக வாழவேண்டி இருந்தது. புதிய தலைமுறையினர் மரபுரீதியான தொழில்களை விரும்புவதில்லை. இனிமேலும் எசமானுக்கு கட்டுப்பட்டு ஒரே மாதிரியான தொழிலைப்புரிய விரும்புவதில்லை. நீங்கள் சுயாதீனத்தன்மையை வேண்டிநிற்கிறீரகள். எமது பொருளாதார மாதிரி சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோரை இலக்காகக்கொண்டே வகுக்கப்பட்டுள்ளது. அவர்களே எமது பொருளாதாரத்தின் எஞ்சினாக அமைந்துள்ளார்கள். ஐ.ரீ. இல் உலகச் சந்தையில் ஒரு பங்கினைக் கைப்பற்றிக்கொள்வது எமது பொருளாதார நோக்காக மாறியுள்ளது. சுற்றுலாக் கைத்தொழிலை ஹோட்டல் தொழிற்றுறையில் இருந்து சுற்றுலாத்துறை தொழில்முயற்சியாக மாற்ற அவசியமான நோக்கினை நாங்கள் வகுத்திருக்கிறோம். சுயாதிபத்தியம்கொண்ட சுயாதீனமான தொழிலில் ஈடுபடுவதற்கான உரிமையை உறுதிசெய்திருக்கிறோம். நீங்கள் வேகமாக வளர்கின்ற ஒரு பரம்பரையாகும். நீங்கள் வேகமாக வளர்ச்சியடைந்தாலும் நாட்டின் பொருளாதாரம் ஆமைவேகத்தில் உங்களுக்குப் பின்னால் வருகின்றது. அவர்கள் என்ன கூறுகிறார்கள்? உங்களுக்கு கொடுக்க பொருத்தமான தொழில்கள் கிடையாது என்கிறார்கள். உங்களின் அறிவுக்கு ஏற்றவகையிலான பொருளாதாரமொன்றை கட்டியெழுப்ப அவர்கள் தவறியுள்ளமையே இங்குள்ள பிரச்சினையாகும். பொருளாதாரம் ஒரே இடத்தில் உக்கிப் போகின்றது. நீங்கள் உங்களுக்கும் நாட்டுக்கும் பயனற்ற ஒருவராக மாறுவீர்கள். நீங்கள் வேகமாக வளர்ச்சியடைவதற்கு இணையான வேகத்தில் சமூக பொருளாதார மாற்றத்தை அடையாவிட்டால் உங்களுக்கு இந்த சமூகம் பொருத்தமற்ற சமூகமாக மாறிவிடும். உங்கள் வளர்ச்சிக்கு இணையான வேகமான பொருளாதாரமென்றை நாங்கள் உருவாக்குவோம்.

இந்த சமூகத்தில் நிலவுகின்ற மற்றுமொரு விசேட பண்பு மிகவும் விரைவாக மாற்றியமைத்துக் கொள்கின்ற தன்மையாகும். வேகமாக மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய சமூகமொன்றுக்கு வேகமாக மாறக்கூடிய சமூகமொன்று அவசியமாகும். சமூகமொன்று வேகமாக மாற்றமடையாவிட்டால் உங்களின் சாத்தியவளங்கள், உங்களின் உண்மைநிலை, உங்களின் உள்ளார்ந்த திறனுக்கேற்ப சமூகம் அவசியமான மாற்றத்தைக் கொண்டுவந்து கொடுக்காவிட்டால் நீங்கள் “எக்ஸ்” பரம்பரையாக மாறிவிடுவீர்கள். உங்கள் பரம்பரையிடம் விட்டுக்கொடுப்பு இருக்கின்றது. எனினும் பொருளாதரமும் தலைவரும் கல்லை விழுங்கியவர்கள் போல் இருந்தால் அரசாங்கங்களால் பலனில்லை. அதைப்போலவே நீங்கள் ஏனைய பரம்பரைகளைவிட உளச் சுகாதாரம் பற்றி சிந்திக்கின்றவர்கள். உங்களுக்கு இரசனை, மகிழ்ச்சி, அன்பு, உளத் திருப்தி அவசியமாகின்றது. 2010 – 2024 காலத்தில் பிறந்த “அல்பா” பரம்பரையினர் அதைவிட வித்தியாசமானவர்கள். 2024 தொடக்கம் 2039 வரை பிறக்கின்ற “பீட்டா” பரம்பரையினர் அதைவிட வித்தியாசமானவர்கள். நாங்கள் தற்போது அரசியல் புரிவது “இசெட்” பரம்பரையைச் சேர்ந்த பிள்ளைகளுடனாகும். எதிர்காலம் “அல்பா” பரம்பரைக்குச் சொந்தமானதாகும். எனினும் தலைவர்கள் பழங்குடிமரபினரான தலைவர்களாகி நவீனத்துவத்தைக் காண்பதில் தோல்விகண்ட தலைவர்களெனில் நவீன பரம்பரையின் பிள்ளைகளுக்கு எதிர்காலம் பற்றிச் சிந்திக்க முடியாது.

புதிய வாலிபம் வெளிப்படைத்தன்மையை எதிர்பார்க்கின்றது. விட்டுக்கொடுப்பு அவசியமாகும், உங்களின் வேகமான வளர்ச்சிக்கு ஒத்துவரக்கூடிய வேகமான சமூக மாற்றமொன்று அவசியமாகும். உங்களின் படைக்குந்திறனை விடுவிப்பதற்கான சமூகமொன்று அவசியமாகும். அதோ அந்த புதிய சமூகத்தை எடுத்துவருவதுதான் தேசிய மக்கள் சக்தியின் எதிர்பார்ப்பாகும். “எக்ஸ்” பரம்பரையைச்சேர்ந்த நாங்கள் ‘இசெட்” பரம்பரையைச் சேர்ந்த உங்களிடம் இந்த சுக்கானை ஒப்படைத்துவிட்டு வீட்டில், கதிரையில் அமர்ந்து “இசெட்” பரம்பரையைச் சேர்ந்தவர்கள் இந்த நாட்டை எவ்வாறு ஆளப்போகிறார்கள் என்பதை பார்க்க ஆசைப்படுகிறோம். “இசெட்” பரம்பரையின் கைக்கு இந்த பெட்டனை எவ்வாறு பெற்றுக்கொடுப்பது, அவர்கள் வெறுமனே பெட்டனைக் கைவிட மாட்டார்கள். அதனால் புராதன பழங்குடி பரம்பரையிடமிருந்து இந்த பெட்டனை எங்கள் கைக்கு எடுத்து “இசெட்” பரம்பரையின் கையில் இந்த பெட்டனை மாற்றி இந்த நாட்டை வேகமாக எவ்வாறு முன்நோக்கி கொண்டுபோகப் போகிறார்கள் என்பது நாங்கள் பார்க்க ஆசைப்படுகின்ற அழகான காட்சியாகும். அந்த யுகத்திற்கு ஒத்துவராத, அந்த யுகத்தடன் பொருந்தாத, அந்த யுகத்துடன் முட்டிமோத முடியாத அரசியலாக மாறுவதில் பலன் உண்டா? “எக்ஸ்” பரம்பரையைச் சேரந்த எங்களின் பொறுப்பு “இசெட்” பரம்பரையின் கைக்கு இந்த சுக்கானை ஒப்படைப்பதாகும். முதலில் பழங்குடிப் பரம்பரையிடமிருந்து “எக்ஸ்” பரம்பரையைச்சேர்ந்த எமது கைகளுக்கு அதிகாரத்தை எடுப்போம். மிகவும் குறுகிய காலப்பகுதிக்குள் இந்த நாட்டு ஆட்சி ஆதிகாரத்தின் சுக்கானை “இசெட்” பரம்பரையின் கைக்கு கொடுப்போம். அதற்காக நாமனைவரும் ஒன்றுசேர்வோமாக.

NPP-Youth-Conference
NPP-Youth-Conference
NPP-Youth-Conference
NPP-Youth-Conference
NPP-Youth-Conference
NPP-Youth-Conference
NPP-Youth-Conference
NPP-Youth-Conference
Show More

“இதுவரை பிரிந்திருந்து ஆட்சியமைத்த யுகத்திற்கு நாம் முடிவுகட்டுவோம்!தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் ஐக்கியத்தை உறுதிப்படுத்துகின்ற அரசாங்கத்தை கட்டியெழுப்புவோம்.”-தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க-

(தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட மாநாடு – 16.03.2024 – கிளிநொச்சி கூட்டுறவு கலாச்சார மண்டபத்தில்) நிலவுகின்ற பிரச்சினைகள் எதுவும் சுயமாக தோன்றியவை அல்ல. எமது நாட்டில் அரசியல் அதிகாரம் கொண்டுள்ள அரசியற் கட்சிகளால் பிரச்சினைகள் உருவாக்கப்பட்டன. அதனால், தமிழ் மக்களாகிய நீங்களும், பொது மக்கள் என்ற அடிப்படையில் நாம் எல்லோரும் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகளில் இருந்து வெளிவருவதற்காக அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்வோம். அரசியல் தீர்வினை எட்டாமல் இதிலிருந்து மீளமுடியாது. ஒடுக்கப்பட்ட, துன்பத்தில் ஆழ்த்தப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட வடக்கு, […]

(தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட மாநாடு – 16.03.2024 – கிளிநொச்சி கூட்டுறவு கலாச்சார மண்டபத்தில்)

நிலவுகின்ற பிரச்சினைகள் எதுவும் சுயமாக தோன்றியவை அல்ல. எமது நாட்டில் அரசியல் அதிகாரம் கொண்டுள்ள அரசியற் கட்சிகளால் பிரச்சினைகள் உருவாக்கப்பட்டன. அதனால், தமிழ் மக்களாகிய நீங்களும், பொது மக்கள் என்ற அடிப்படையில் நாம் எல்லோரும் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகளில் இருந்து வெளிவருவதற்காக அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்வோம். அரசியல் தீர்வினை எட்டாமல் இதிலிருந்து மீளமுடியாது. ஒடுக்கப்பட்ட, துன்பத்தில் ஆழ்த்தப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு, மலையகம், தெற்கு உள்ளிட்ட எல்லா பகுதிகளிலும் வாழ்கின்ற மக்களின் ஒத்துழைப்புடன் நாம் புதிய அரசாங்கத்தை நிர்மாணிக்க வேண்டும்.

இவ்வருடம் கட்டாயமாக ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வேண்டும். நீங்கள் பல விதங்களில் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொண்டிருக்கிறீர்கள். தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்த வேட்பாளருக்கு வாக்களித்திருக்கிறீர்கள். தெற்கு அரசியல் கட்சிகளுக்கு வாக்களித்திருக்கிறீர்கள். அதைப்போல, தேர்தலை புறக்கணித்திருக்கிறீர்கள். இவ்வாறு பல முடிவுகளை ஜனாதிபதித் தேர்தலின்போது நீங்கள் எடுத்திருக்கிறீர்கள்.

பொதுவாக வடபகுதி மக்கள் ஜனாதிபதித் தேர்தலை தமது தேர்தலாக கருதுவது இல்லை. கொழும்புத் தலைவரை தேர்ந்தெடுத்தல், சிங்களத் தலைவரை தேர்ந்தெடுத்தல் எனும் அபிப்பிராயமே பெரும்பாலான தமிழ் மக்கள் மத்தியில் இருக்கிறது. அதனால், ஜனாதிபதி தேர்தல் என்பது தெற்கிற்கானது என்றும் வடக்குக்கானது அல்லவென்றும் கருதுகிறார்கள். ஜனாதிபதித் தேர்தல் கொழும்பிற்கானது; கிளிநொச்சிக்கானது அல்லவென்றா நீங்களும் நினைக்கிறீர்கள்? அதனால், இதுவரை பிரிந்திருந்து ஆட்சியமைத்த காலத்திற்கு நாம் முடிவுகட்டுவோம். அதற்காகவே, உங்களை சகோதரத்துவத்துடன் அழைப்பதற்கு நாங்கள் கிளிநொச்சிக்கு வந்தோம். எல்லா மக்களும் பிரதிநிதித்துவம் செய்கின்ற அரசாங்கத்தை நாம் ஸ்தாபிப்போம். எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலென்பது தெற்கிற்கானது மட்டுமல்ல! இது எல்லா மக்களினதும் எதிர்பார்ப்பையும் எதிர்காலத்தையும் தீ்ர்மானிக்கின்ற தேர்தலாகும்.

சிங்கள பிரதேசங்களில் தேசிய மக்கள் சக்திக்கு இன்றிருக்கின்ற வரவேற்பினை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். மாபெரும் மக்கள் படை எம்முடன் இணைந்திருக்கிறது. நாங்கள் சிங்கள் மக்கள் மத்தியில் மாத்திரம் வெற்றிபெறுவதால் பலனில்லை. தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவில்லாத அரசாங்கம் இருந்து என்ன பயன்? அரசாங்கத்தை கைப்பற்றிய பின்னர் ஒற்றுமையை நிலைநாட்டுவது மாத்திரமல்ல, அதற்கு முன்னரே அரசாங்கத்தை அமைக்கவும் நாம் ஐக்கியப்பட வேண்டும்.

கடந்த காலத்தில் இருந்த கருத்துதான் அரசாங்கத்தை அமைத்தப் பின்னர் மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாகும். ஆனால், தமிழ், சிங்கள, முஸ்லிம் நாம் அனைவரும் ஒன்றிணைந்து அரசாங்கத்தை அமைக்க வேண்டுமென்றே நாங்கள் எதிர்பார்க்கிறோம். தெற்கின் அரசாங்கம், வடக்கின் அரசாங்கம், கிழக்கின் அரசாங்கம் என்பதற்குப் பதிலாக மக்களை ஒன்றிணைத்த நமது நாட்டுக்கான ஒரு புதிய அரசாங்கத்தை நாம் ஸ்தாபிப்போம். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் விசாலமானன பாதை திறந்திருக்கிறது. வடக்கின் ஒத்துழைப்பு இல்லாமல் அந்த அரசாங்கத்தை அமைத்துப் பயனில்லை. அதனால், எம்மோடு இணைந்துகொள்ளுங்கள் என்று நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.

தெற்கின் சிங்கள மக்கள் நீண்ட காலமாகவே ஆட்சியாளர்களிடம் ஏமாந்தார்கள். அவர்கள் திருட்டு ஆட்சியாளர்களை உருவாக்கினார்கள். மக்களது சொத்துக்களை வீண்விரயமாக்கும் தலைவர்களை உருவாக்கினார்கள். சிங்களத் தலைவர்களை சுற்றியிருந்த ஒரு கும்பலின் நன்மைக்காக அரசாங்கத்தை அமைத்தார்கள். ஆட்சியாளரின் மனைவி, மகன், மகள் ஆட்சிக்கு வருவதற்கான அரசாங்கத்தை உருவாக்கினார்கள். ஜனாதிபதிக்கு மகன் பிறப்பதே அடுத்த ஜனாதிபதியாக வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பில்தான். அவ்வாறுதானே தெற்கில் நடக்கிறது? மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதயாகினார் மகன் அடுத்த ஜனாதிபதியாக வருவதற்கு கனவு காண்கிறார். ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியாகினார். மகன் அடுத்த ஜனாதிபதியாக வருவதற்கு கனவு காண்கிறார். இது தவறான அரசியல் முன்னுதாரணம் ஆகும். தாம் புரிந்த தவறை தெற்கில் உள்ள சிங்கள் மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். அதனால், இலட்சக்கணக்கான மக்கள் தேசிய மக்கள் சக்தியோடு கைகோர்த்திருக்கிறார்கள். அதுப்போல, கிளிநொச்சிவாழ் மக்களும் நாம் அமைக்கப்போகும் புதிய அரசாங்கத்தில் பங்குதாரர்களாக மாறவேண்டும். நாம் எல்லோரும் ஒன்றுசேர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நாம் பிரிந்து தனித்தனியாக நிற்க வேண்டுமா? உங்களுக்கும் எமக்கும் இடையில் இருக்கின்ற வித்தியாசம் என்ன? நீங்கள் தமிழ் மொழியில் கதைக்கிறீர்கள். நான் தமிழ் மொழியில் கதைக்கிறேன். நீங்கள் இந்து மதத்தைப் பின்பற்றுகிறீர்கள். நான் பௌத்த தர்மத்தை கடைப்பிடிக்கிறேன். உங்களுக்கென்று தனித்துவமான கலாச்சார மரபுகள் இருக்கின்றன. சிங்கள மக்களுக்கு அதுபோலத்தான். ஆனால், தமது குழந்தைகள் மீது வைத்திருக்கும் அன்பில் தமிழ், சிங்களம் பாகுபாடு இருக்கிறதா? வயிற்றுப் பசிக்கு வேறுபாடு இருக்கிறதா? எமது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்புகளில் வேறுபாடு இருக்கிறதா? தமது பிள்ளைகள் நல்ல தொழிலுக்கு செல்லவேண்டும் என்று சிந்திக்கின்ற பெற்றோர்களின் கனவுகளில் சிங்களம், தமிழ் என்ற பாகுபாடு இருக்கிறதா? நோய்த்தாக்குதலுக்கு உள்ளாகும்போத ஏற்படும் வேதனையில் வேறுபாடு இருக்கிறதா? நாம் பிறந்த பின்புலத்திற்கு அமைய, பெற்றோருக்கு அமைய நாம் பேசும் மொழி தமிழாகவோ, சிங்களமாகவோ இருக்கிறது. கடைப்பிடிக்கும் சமயம் இந்துவாகவோ, பௌத்தமாகவோ இருக்கிறது. கலாச்சாரத்திலும் வேறுபாடு இருக்கிறது. ஆனால், இவற்றுக்கு அப்பால் நாம் எல்லோரும் மனிதர்கள். வேறுபட்ட சமூகமாயினும் வேதனை, துக்கம், கண்ணீர் எல்லாம் இருக்கிறது. அதுபோலத்தான் மகிழ்ச்சியின்போதும் புன்முறுவல் பூக்கிறது. எமக்கு ஆசாபாசம் எல்லாம் இருக்கிறது. நாம் ஏன் பிளவுப்பட்டிருக்க வேண்டும். ஏன் சண்டையிட்டுக்கொள்ள வேண்டும்? ஏன் மோதிக்கொள்ள வேண்டும். அந்த யுகத்துக்கு நாம் முற்றுப்புள்ளி வைப்போம்.

எங்களது கால மக்கள் மோதிக்கொண்டார்கள். யுத்தம் செய்தார்கள். வடக்கிலும் தெற்கிலும் நமது வர்க்கத்தைச் சேர்ந்த மக்கள் உயிரிழந்தார்கள். எங்களுக்கு என்ன மிஞ்சியிருக்கிறது? பெற்றோர் பிள்ளைகளை இழந்துள்ளனர். எமக்கிடையில் சந்தேகம், விரோதம் வளர்ந்திருக்கிறது. இன்றும்கூட தெற்கில் உள்ள சிறிய கும்பல் இனவாதபோக்கில் செயற்படுகின்றது. வடக்கிலும் அவ்வாறான கும்பல் இருக்கின்றது. ஆனால் பொதுமக்கள் இனவாதிகளா? நீங்கள் அனுராதபுரத்திற்குச் செல்லும்போது அங்குள்ள சிங்கள மக்கள் உங்களை இனவாத கண்ணோட்டத்தில் பார்ப்பதாக நீங்கள் உணருகிறீர்களா? அல்லது அநுராதபுரத்தில் இருந்து கிளிநொச்சிக்கு வருபவர்களை நீங்கள் சிங்களவர்கள் என்று அவதூறு செய்கிறீர்களா? அப்படியில்லை. சாதாரண மக்கள் மத்தியில் இனவாதம் கிடையாது. நாம் சகோதரத்துடன் வாழ்ந்த மக்கள். கோவில் திருவிழாக்களை ஒன்றாக கொண்டாடிய மக்கள். ஆனால், நடந்திருப்பது என்ன? அரசியல்வாதிகள் எம்மை பிரித்தார்கள். நீண்டகாலமாகவே மக்களை பிளவுப்படுத்தும் அரசியலே இங்கு இருக்கிறது. ஆனால், எமது அயல்நாடான இந்தியாவைப் பாருங்கள். 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடையும்போது அவர்களிடம் நாட்டைக் கட்டியெழுப்புதற்கான ஒரு திட்டம் இருந்தது. வேறுப்பட்ட மொழி, கலாச்சாரம், வழிபாட்டு முறைகளை கொண்ட மக்களை ஒரே குடையின் கீழ் ஒன்றிணைத்தார்கள். அப்துல் கலாம் ஜனாதிபதியாகினார். சீக்கியரை பிரதமராக கொண்டுவந்தனர். தற்போது ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்மணி ஜனாதிபதியாக இருக்கிறார். இந்தியர்களின் ஒற்றுமை இந்தியாவுக்கு பெரும் வெற்றிகளை ஈட்டித்தந்தது. ஆனால் நமது நாட்டின் நிலைமை என்ன? 1948 இல் எமது நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தது. 1949 இல் குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்து மலையக மக்களின் குடியுரிமையைப் பறித்தார்கள். அதனை எதிர்த்து செல்வநாயகம் அவர்கள் தமிழரசுக் கட்சியை ஸ்தாபித்தார். ஆட்சியாளர்கள் 1956 இல் மொழிப்பிரச்சினையை உருவாக்கினார்கள். 1958 இல் சிங்கள – தமிழ் மோதலை உருவாக்கினர். 1958 இன் இடைக்காலத்தில் ஸ்ரீ எழுத்துக்கு கருப்புச் சாயம் பூசினார்கள். 1965 இல் டட்லியின் வயிற்றில் மசாள் வடை என்று ஊர்வலம் சென்றார்கள். 1976 இல் வட்டுக்கோட்டை மாநாடு நடத்தப்பட்டது. 1977 தேர்தலில் தனி நாட்டை உருவாக்க உதய சூரியனுக்கு வாக்களிக்குமாறு கேட்டனர். 1981 இல் யாழ். நூரகத்திற்கு தீவைக்கப்பட்டது. 1983 இல் கொழும்பில் இரண்டாம் மற்றும் நான்காம் குறுக்குத் தெருக்கள் தீக்கிரையாக்கப்பட்டன. 83 கறுப்பு ஜூலையைத் தொடர்ந்து தற்கொலை குண்டுதாரிகள் உருவாகினர். 2009 இல் யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. 2015 இல் மலட்டுக்கொத்து என்ற கட்டுக்கதையை கொண்டுவந்தார்கள். 2016 இல் மலட்டுத்தனத்தை ஏற்படுத்தக்கூடிய ஆடைகள் என்ற புரளியை கிளப்பிவிட்டார்கள். 2019 இல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றது. சுதந்திரத்தின் பின்னரான நம்முடைய வரலாறு என்ன? நாம் ஒருவருடன் ஒருவர் மோதிக்கொண்டதே வரலாறாக உள்ளது. இந்த வரலாற்றுக்கு முடிவுக்கட்ட வேண்டாமா? எமது பிள்ளைகள் மோதிக்கொள்ளக்கூடிய எதிர்காலத்தை நாம் உருவாக்க வேண்டுமா? குழந்தைகளை யுத்தத்திற்குள் தள்ளவேண்டுமா? இதனை தடுத்து நிறுத்தவேண்டும். அதனைத்தான் நாங்கள் முன்வைக்கின்றோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இலங்கையின் முதற் தடவையாக வடக்கு, கிழக்கு, தெற்கு, மலையகத்தை சேர்ந்த மக்கள் பிரதிநிதித்தும் செய்யக்கூடிய ஓர் அரசாங்கத்தை நாம் உருவாக்குவோம். தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தை ஸ்தாபிப்போம்.

மக்களை துண்டாடுகின்ற அரசாங்கம் வேண்டாம். ஒரு சமூகத்துக்கு எதிராக இன்னொரு சமூகத்தை ஏவிவிடுகின்ற அரசாங்கம் வேண்டாம். ஐக்கியமான அரசாங்கத்தை கட்டியெழுப்புவோம். நாம் அதனை நிர்மாணிப்போம். துன்பநிலையில் இருந்து நாம் மீண்டெழுவோம். “சமஷ்டி தருகிறோம், 13 பிளஸ் தருகிறோம். எங்களுக்கு வாக்களியுங்கள்.” என்று நாங்கள் கேட்கப்போவதில்லை. நாங்கள் உங்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்ய வரவில்லை. “நாங்கள் பெடரல் தருகிறோம். நீங்கள் எமக்கு வாக்களியுங்கள்.” என்று கேட்டால் அது பிஸ்னஸ். “நாங்கள் 13 பிளஸ் தருகிறோம். நீங்கள் எமக்கு வாக்களியுங்கள்.” என்று கேட்டால் அது கொடுக்கல் வாங்கல். நாங்கள் உங்களை சந்திக்க வந்தது பிஸ்னஸ் செய்வதற்கோ, கொடுக்கல் வாங்கல் செய்வதற்கோ அல்ல. நாங்கள் வந்ததன் நோக்கம் நாம் எல்லோரும் இணைந்து நமக்கான அரசாங்கத்தை உருவாக்கி எமது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வோம் என்று அழைப்பு விடுப்பதற்கே ஆகும். அரசியல்வாதிகள் வியாபாரிகளாக இருக்க கூடாது.

எமது அரசாங்கத்தில் வடக்கை பிரதிநிதித்துவம் செய்கின்ற அமைச்சர் நிச்சயமாக இருப்பார். இனவாதிகள் அல்லாத தமிழ் அரசியல் தலைவர்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம். எமது அரசாங்கத்தின் பங்குதாரர்களாக இருங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளோம். அதன்பின்னர் ஒன்றாக இணைந்து பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வோம் என்று கூறியிருக்கின்றோம்.

மொழிப்பிரச்சினைக்கு எமது ஆட்சியில் நிச்சயம் தீர்வினை வழங்குவோம் என்று உறுதியளிக்கிறோம். நீங்கள் இந்த மண்ணில் பிறந்தவர்கள். உங்களது தாய்மொழி தமிழ். அரசுடன் தமிழ் மொழியில் பரிவர்த்தனையில் ஈடுபடுவதற்கான உரிமையை நாங்கள் உறுதிப்படுத்துவோம். நீங்கள் ஜனாதிபதிக்கு தமிழ் மொழியில் கடிதம் எழுதினால் பதில் உங்களுக்கு தமிழ் மொழியில் கிடைக்க வேண்டும். மொழியின் உரிமையை நாம் ஒன்றுசேர்ந்து உறுதிப்படுத்துவோம். அதுமட்டுமல்ல, எல்லா பிரஜைகளினதும் கலாச்சார அடையாளங்களுக்கு மதிப்பளிக்கின்ற, கலாச்சார தனித்துவத்தைப் பாதுகாக்கின்ற, அவற்றை மேம்படுத்தக்கூடிய நாட்டை நாங்கள் கட்டியெழுப்புவோம்.

ஆனால் இன்று நடந்திருப்பதென்ன? வடக்கில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் கோவிலோ, விகாரையோ, தேவாலயமோ தென்பட்டால் மோதிக்கொள்கிறோம். ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முந்தைய எமது வரலாற்றில் அங்கு ஒரு கோவில் இருந்திருக்க கூடும். விகாரை இருந்திருக்க கூடும். அது எமது வரலாறு. அந்த வரலாற்றுக்காக நாம் ஏன் மோதிக்கொள்ள வேண்டும். நாம் அதனை ஆய்வு செய்து பாதுகாத்து எதிர்கால பரம்பரம்பரைக்கு ஒப்படைப்போம். வரலாற்றில் கோவில் இருந்ததற்காக, விகாரை இருந்ததற்காக நிகழ்காலத்தில் நாங்கள் அடித்துக்கொள்ள வேண்டுமா? இங்கு என்ன நடக்கிறது? வரலாற்றுச் சின்னம் ஒன்று தென்படுமாயின் அது இந்நாட்டின் எல்லா மக்களினதும் சொத்தாகும். அதற்குத்தான் தொல்பொருள் சின்னம் என்கின்றோம். அதற்கு மதபாகுபாடு, இனபாகுபாடு கிடையாது. அது எங்களுடைய வரலாறு. ஆனால், இன்று என்ன நடந்துகொண்டிருக்கிறது? அதை மையப்படுத்தி இன்று சண்டைகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. இங்கு அமர்ந்திருக்கும் உங்களுக்கு அதுதொடர்பில் முரண்பாடு இருக்கிறதா? ஆனால், அது வடக்கிலும் தெற்கிலும் இருக்கக் கூடிய அரசியல்வாதிகளுக்கு பெரும் பிரச்சினையாக இருக்கிறது. வரலாற்றுச் சின்னம் நிகழ்காலத்தில் வாழுகின்ற தமிழ், சிங்கள, முஸ்லிம் எம் எல்லோரினதும் வரலாற்று பெறுமதியாகும். அவ்வாறில்லாமல் வரலாற்றைத் தேடித்தேடி நாம் மோதிக்கொள்ள வேண்டுமா? அந்தக் கலாச்சார அடையாளங்களின் தனித்துவத்தை பாதுகாக்க வேண்டும். அதுமட்டுமல்ல, பொலிஸில், இராணுவத்தில் உங்களது பிள்ளைகள் பங்கேற்பதற்கான வாய்ப்பினை நாங்கள் விரிவுப்படுத்துவோம்.

நாம் தற்போது மிகப்பெரிய பிரச்சினைக்கு முகம்கொடுத்திருக்கிறோம். வடக்கு கடற்பரப்பில் எமது கடல் வளத்தை இந்திய மீனவர்கள் கவர்ந்து செல்கிறார்கள். இந்தியாவில் அண்மையில் மாநிலத் தேர்தலொன்று நடைபெறவிருப்பதால் மீனவர் பிரச்சினையை வளரவிட்டுப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். வடக்கு கடல் தமிழர்களுக்கானதென்றும், வடக்கு கடல் சிங்களவர்களுடையதென்றும் ஒரு காலத்தில் யுத்தம் செய்தோம். ஆனால், இன்று வடக்கு கடற்பரப்பு யாருடையது? இந்தியாவினுடையது.

உங்களுக்குத் தெரியும் மன்னார் பிரதேசத்தில் காற்றாலை மின்சக்தியை உருவாக்க முடியும். அது எமது நாட்டு எதிர்காலத்தின் பெறுமதியான வளம். நல்ல காற்று வீசுகின்றது. அந்தக் காற்றின் சக்தியின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். ஒரு காலத்தில் மன்னாரில் நிலத்திற்காக யுத்தம் நிலவியது. ஆனால், இன்று அந்தப் பகுதியின் காற்றாலை மின்னுற்பத்திக்கு சொந்தக்காரர்களாக யார் இருக்கிறார்? அது இந்தியாவின் அதானிக்கு உரிமையாகிவிட்டது. இங்கு என்ன நடந்திருக்கிறது.

புன்னக்கரை நீர்த்தேக்கத்தில் மாபெரும் சூரியசக்தி மூலம் மின்சக்தியை உருவாக்க திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால், அதில் ஒரு அலகினை 52 ரூபாவுக்கு பெற்றுக்கொள்வதற்கு அவுஸ்திரேலிய நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்படுகிறது. ஆனால், நாங்கள் சண்டையிட்டுக்கொள்கிறோம். எமது செல்வங்கள் வெளிநாட்டு நிறுவனங்களை நோக்கிச் செல்கின்றன. அதனால், நீங்கள் பிறந்து வாழ்ந்த உங்கள் நிலத்தின் உரிமையை உங்களுக்கு உறுதி செய்ய வேண்டும். அதனை நாங்கள் செய்துகாட்டுவோம்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் பெற்றல் செட்களை பகிர்ந்துகொள்ள தெற்கின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சண்டைபிடித்துக்கொண்டார்கள். யுத்தத்தின் பின்னர் விசாலமான காணிகளை அரசியல்வாதிகளின் அடியாட்களுக்கு கொடுத்தார்கள். இன்று வடக்கில் உள்ள விசாலமான கடற்கரையின் பெரும்பகுதி தெற்கில் உள்ள அரசியல்வாதிகளுக்கு சொந்தமாக இருக்கிறது. தெற்கில் இருக்கக்கூடிய நிலங்களும் அவர்களுக்குத்தான் சொந்தமாக இருக்கிறது. உங்களது நிலத்தின் உரிமையை நாங்கள் உங்களுக்கு உறுதிப்படுத்துகிறோம்.

எனக்குத் தெரியும், 1984 ஆம் ஆண்டில் இங்கு குடியேறிய தமிழ் மக்கள் இருக்கிறார்கள். இன்றும் அவர்கள் வாழுகின்ற குடியிருப்புக்கு உறுதிப்பத்திரம் கிடையாது. உங்களது இடத்திற்கான உரிமையை உறுதிப்படுத்த வேண்டும். அதேப்போல, தேசிய ரீதியில் நீங்கள் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகளுக்கு நாம் ஒன்றிணைந்து அரசாங்கத்தினை அமைப்பதன் ஊடாக தீர்வினைப் பெற்றுக்கொள்வோம். அரசியலமைப்புச் சட்டத்தில் எவ்வகையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது பற்றி ஆராய்வோம். அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான மாற்றத்தை ஏற்படுத்துவோம். அதுமட்டும் போதுமா? உங்களுக்கு முறையாக மூன்று உணவுவேளை கிடைக்கிறதா? உங்களது பிள்ளைகளுக்கு தொழில்வாய்ப்புகள் கிடைக்கிறதா? பிள்ளைகளுக்கு கல்வி கிடைக்கிறதா? எதுவுமே கிடைப்பதில்லை. அவை அரசியல் பிரச்சினை ஆகும். அவற்றினை நாம் தீர்க்க வேண்டும். தேசிய மக்கள் சக்தியின் முதலாவது அரசாங்கம் குறைந்த காலத்தில் எல்லா மக்களினதும் மூன்றுவேளை உணவினை உறுதி செய்வோம். இன்று பலர் ஒருவேளை சாப்பிட்டால் இன்னொருவேளை சாப்பிடுவதில்லை. குழந்தைகளுக்கு போசாக்கான உணவு இல்லை. அனேகமான தாய்மார் அரைவயிற்றுடன் நித்திரை கொள்கிறார்கள். எந்தவொரு உயிரினத்தினதும் அடிப்படை தேவை உணவு. அவ்வாறான உணவினை வழங்க முடியாத அரசாங்கம் எதற்காக? சரியான உணவினை பெற்றுக்கொள்ளாமல் வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? அதனால் முதலாவதாக மக்களின் உணவுப்பிரச்சினைக்கு நாங்கள் தீர்வினை வழங்குவோம். “அரசாங்கத்தை பெற்றுக்கொண்டு 2048 இல் நாட்டை கட்டியெழுப்புவோம், அப்பொழுது உங்களுக்கு உண்ண உணவு தருவோம்.” என்று ரணில் விக்ரமசிங்க கூறியதுபோல எங்களால் கூறமுடியாது.

அடுத்ததாக மருத்துவம், அனேகமாக வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர்கள் இந்நாட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். வைத்தியசாலைகளில் மருந்துகள் இல்லை. மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை அமைச்சர் திருடியிருக்கிறார். சிந்தித்துப் பாருங்கள். உணவுக்கும் குடிபானத்துக்கும் விசத்தை சேர்க்க மாட்டோம் என்ற கலாச்சாரம் எமது நாட்டில் இருந்தது. ஆனால், என்ன நடந்திருக்கிறது? மருந்து விசம் கலக்கப்பட்டிருக்கிறது. அப்படியான அமைச்சர்களால் கட்டியெழுப்பப்பட்ட நாடு இது. நாங்கள் கொழும்பு நீதியரசருக்கு நன்றி கூறினோம். ஏனெனில், நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்படும் வரை பிணை வழங்கப்படமாட்டாது என்று கெஹெலியவுக்கு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவரைப்போலவே, இன்னும் நிறைய பேர் பாராளுமன்றத்திற்குள் இருக்கிறார்கள். அவர்கள் திருடுவதற்கு 2048 வரை பார்த்துக்கொண்டிருப்பதில்லை. இன்றும் கொள்ளையடிக்கிறார்கள். வீண்விரயம் செய்வதற்கு அவர்கள் 2048 வரை பார்த்துக்கொண்டிருப்பதில்லை. இன்றும் வீண்விரயம் செய்கிறார்கள். கடந்த தினங்களில் யாழ்ப்பாணத்தில் விமானப்படையின் கண்காட்சி இடம்பெற்றது. அதற்காக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த தென்னகோன் ஹெலிகொப்டரில் வந்தார். பாதுகாப்பு ஆலோசகர் அவர் இன்னொரு ஹெலிகொப்டரில் வந்தார். அடுத்து சவேந்திர சில்வா தனியொரு ஹெலிகொப்டரில் வந்தார். பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்னவும் ஹெலிகொப்டரில் வந்தார். ஆனால், மக்கள் 2048 வரையில் மருந்துகளை பெற்றுக்கொள்ள காத்திருக்க வேண்டும். என்ன ஆட்சியாளர்கள் இவர்கள்? ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டு சுற்றுலாவுக்கென்று வரவுசெலவில் நிதியை ஒதுக்கிக் கொள்கிறார். வருடம் முடிவதற்கு முன்பே அவருக்கு ஒதுக்கிக்கொண்ட பணத்தை சுற்றுலா சென்றே முடித்துவிட்டார். அதனால், அண்மையில் பாராளுமன்றத்தில் சுற்றுலா செல்வதற்காகவேண்டி அவருக்கு மேலும் 2000 இலட்சம் ரூபா ஒதுக்கிக்கொடுக்கப்பட்டது. மக்களுக்கு உணவில்லை. வைத்தியசாலைகளில் மருந்தில்லை. அவற்றைப் பெற்றுக்கொள்ள 2048 வரை இருக்கச்சொல்கிறார். ஆனால், ரணில் விக்ரமசிங்க சுற்றுலா செல்வதற்கான பணம் தீர்ந்ததென்று மேலும் 2000 இலட்சம் ரூபாவை ஒதுக்கிக்கொள்கிறார்கள். ஆனால், தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் உங்களது மருந்து தேவையை பூர்த்தி செய்யும்.

மூன்றாவதாக குழந்தைகளினுடைய கல்வி. பிள்ளைகளுக்கு பாடபுத்தகங்களை பெற்றுக்கொள் முடிவதில்லை. கல்வியில் ஈடுபடுவதற்கு போசாக்கான உணவு இல்லை. அணிந்துகொள்வற்கு நல்ல சப்பாத்து இல்லை. இப்படித்தான் பிள்ளைகள் இருக்க வேண்டுமா? பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை பெற்றுக்கொடுப்பதற்கே எதிர்பார்க்கிறார்கள். அதற்காக கஸ்டப்படுகிறார்கள். சிறந்த கல்வியே பெற்றோர்களின் பிரார்த்தனையும் ஆகும். நாங்கள் முதற்கட்டமாக உணவு, மருத்தும், கல்வி ஆகிய மூன்றையும் பிரஜைகளுக்கு உறுதிப்படுத்துவோம். அதன் பின்னர் மேலும் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தேவைப்படுகின்றன. கிளிநொச்சி மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் வளமான விவசாய நிலங்கள் இருக்கின்றன. இங்குள்ள மக்கள் கடுமையான உழைப்பாளர்கள். யுத்தம் நிறைவடைந்து குறுகிய காலப்பகுதிக்குள் நான் கிளிநொச்சிக்கு வந்தேன். எமது கணேசப்பிள்ளை தோழரின் வீட்டில் சிறிய தென்னை மரங்கள் இருந்தன. அம்மரங்களில் நல்ல பிரதிபலன் இன்று கிடைக்கிறது. அதுப்போலத்தான் இங்கு பலரின் விவசாய நிலங்களும் இருக்கின்றன. அவர்களுக்கு சரியான, விதை, உரம், கிருமிநாசினி மற்றும் முறையான வடிகாலமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தால் இந்த கிளிநொச்சி மாவட்ட விவசாய நிலங்களில் இருந்து முழு இலங்கை மக்களுக்கும் உணவினை வழங்க முடியும். ஆனால், என்ன நடந்திருக்கிறது? சரியான நீர்வழங்கல் திட்டம் இல்லை. கோடைக்காலத்தில் நிலம் வெடிக்கும் அளவுக்கு வரட்சி. மழைக்காலத்தில் மண் கழுவிச்செல்லும் நிலைமை. இதனை சரியாக முகாமைத்துவம் செய்யவேண்டும். சரியாக முகாமைத்துவம் செய்தால் உங்களது தண்ணீர் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும். பாழடைந்திருக்கின்ற கிளிநொச்சி மாவட்ட விவசாய நிலங்களை இங்குள்ள தாய், தந்தையரின் கரங்களினால் வளம் மிக்கதாக மாற்றியமைக்க முடியும். அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம். அதற்கான வேலைத்திட்டத்தினை உருவாக்குவோம். ஆனால், இங்குள்ள பிரச்சினை என்ன? கஸ்டப்பட்டு அறுவடை செய்தாலும் அதனை விற்கமுடிவதில்லை. ஒரு கிலோ பொலநறுவை, அம்பாறை நெல்லை விட கிளிநொச்சியில் ஒரு கிலோ நெல்லின் விலை குறைவு. கிளிநொச்சி விவசாயிகள் பாடுபடாமல் வேறுவழியிலா அதைப் பெறுகிறார்கள்? நியாயம் கிடைக்க வேண்டும். பொலநறுவை, அம்பாறையில் நெல் வாங்குவதை விட இங்கு இலாபம் என்று எனக்கு பல ஆலை உரிமையாளர்கள் கூறியிருக்கிறார்கள். நாட்டின் ஏனைய பகுதிகளை விட கிளிநொச்சியின் நெல் விலை குறைவு. ஏனைய பகுதிகளை விட இப்பகுதியில் மரக்கறிகளின் விலையும் குறைவு. அவற்றுக்கு சரியான விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

யுத்தத்தின் பின்னரும் எமது மக்களின் வாழ்க்கை நல்லதொரு நிலைமைக்கு திரும்பவில்லை. இவ்வாறான பல பிரச்சினைகளுக்கு நீங்கள் முகம்கொடுத்துள்ளீர்கள். அதனால் நீங்கள் இரு வகையான பிரச்சினைக்கு முகம்கொடுக்கிறீர்கள். முதலாவது, தமிழ் மக்கள் என்ற வகையில் முகம்கொடுக்கின்ற பிரச்சினை. இரண்டாவது, பொதுவாக எல்லா மக்களும் முகம் கொடுக்கும் பிரச்சினையில் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளீர்கள். இந்த பிரச்சினையில் இருந்து நாம் விடுபட வேண்டாமா?

அரசாங்கத்தை கைப்பற்றிய உடனடியாகவே இவற்றையெல்லாம் சரிசெய்யமுடியும் என்று நான் கூறவில்லை. ஆனால், இந்த நாட்டை மாற்றுவதற்கு எம்மால் செயற்பட முடியும். நல்ல திசைக்கு கொண்டு செல்ல முடியும். பிரிந்திருக்கின்ற மக்களை ஒன்று சேர்க்க முடியும். மொழியில், பண்பாட்டு கலாச்சாரங்களில் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். உணவு, சுகாதாரம், கல்வி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பாதையை உருவாக்க முடியும். அதனை செய்வதற்கு அரசியல் அதிகாரத்தை நாம் கைப்பற்ற வேண்டும். அதனால், அரசாங்கத்தை கைப்பற்றிக்கொள்வதென்பது முடிவு கிடையாது. அதுதான் இந்நாட்டை கட்டியெழுப்புதற்கான தொடக்கப்புள்ளி ஆகும். குறிப்பாக, ஜனாதிபதித் தேர்தலில் வடக்கில் வாழ்கின்ற உங்களின் ஆதரவை எங்களுக்குத் தாருங்கள். இனவாதம், அடிப்படைவாதம் இல்லாத நடுநிலையான தமிழ்த் தலைவர்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களுடன் நாங்கள் கலந்துரையாடுகின்றோம். நாங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் யாழ்ப்பாணம் செல்லவிருக்கிறோம். அங்குள்ள அரசியல் தலைவர்களுடன் நாங்கள் கலந்துரையாட தயாராக இருக்கிறோம். பிரிந்திருந்த காலத்திற்கு முடிவு கட்டுவோம். மோதிக்கொண்ட காலத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம். பிற இனத்தவரை சந்தேகத்துடனும், குரோத்ததுடனும் பார்த்த காலத்தை நிறைவுக்கு கொண்டுவருவோம். அதை வரலாற்றின் ஒரு பகுதியாக மாற்றுவோம். நாம் எல்லோரும் ஒன்றிணைந்து எதிர்காலத்திற்காக ஐக்கியப்பட்ட ஒரு அரசாங்கத்தை கட்டியெழுப்புவோம். அதற்காக உங்களது ஆதரவினை எமக்குத் தாருங்கள்.

NPP-Kilinochchi-District-Conference
NPP-Kilinochchi-District-Conference
NPP-Kilinochchi-District-Conference
NPP-Kilinochchi-District-Conference
NPP-Kilinochchi-District-Conference
Show More

“பெண்களாகிய எங்களுக்கு பொருத்தமான இடம் தீர்வுக்கட்டமான சமூக மாற்றத்திற்காக செயலாற்றுகின்ற திசைகாட்டியாகும்” -தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய-

(-லண்டன் பெண்கள் மாநாடு – 2024.03.16) நாங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறோம் எனும் அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வேண்டுமென நினைத்தேன். “பெண்களாகிய நாங்கள் ஒரே மூச்சுடன்” என்ற தொனிப்பொருளில் ஏறக்குறைய 16 மாவட்டங்களில் நாங்கள் மாநாடுகளை நடாத்தினோம். இதுவரை கடந்துவந்த பயணம்பற்றி சற்று சிந்திக்க எனக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அது 2019 இல் தேசிய மக்கள் சக்தி ஆரம்பிக்கப்படுகையில் இலங்கையின் அரசியல் பரப்பெல்லையில் சனாதிபதி தேர்தலுக்கு தயாராகி வருகின்ற தருணமாகும். முதலில் நாங்கள் பெண்கள் சாசனமொன்றை முன்வைத்தோம். தோழர் […]

(-லண்டன் பெண்கள் மாநாடு – 2024.03.16)

NPP-Gahanu-Api-London
NPP-Gahanu-Api-London

நாங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறோம் எனும் அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வேண்டுமென நினைத்தேன். “பெண்களாகிய நாங்கள் ஒரே மூச்சுடன்” என்ற தொனிப்பொருளில் ஏறக்குறைய 16 மாவட்டங்களில் நாங்கள் மாநாடுகளை நடாத்தினோம். இதுவரை கடந்துவந்த பயணம்பற்றி சற்று சிந்திக்க எனக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அது 2019 இல் தேசிய மக்கள் சக்தி ஆரம்பிக்கப்படுகையில் இலங்கையின் அரசியல் பரப்பெல்லையில் சனாதிபதி தேர்தலுக்கு தயாராகி வருகின்ற தருணமாகும். முதலில் நாங்கள் பெண்கள் சாசனமொன்றை முன்வைத்தோம். தோழர் அநுரவை தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக முன்வைத்தவேளையில் கொழும்பு பொது நூலகத்தில் கூட்டமொன்றை நடாத்தி அந்த பெண்கள் சாசனத்தை நாங்கள் அவரிடம் சமர்ப்பித்தோம். அவர் அதனை எற்றுக்கொண்டார். அத்தருணத்தில் இருந்து பெண்கள் சாசனம் தேசிய மக்கள் சக்தியின் அங்கீகாரத்திற்கு இலக்காகியது. பொதுத் தேர்தலில் பெண்களாகிய எங்களுக்கு 50% பிரதிநிதித்துவம் அவசியமென்பது விசேட கோரிக்கையாகும்.

தோழர் அநுர உரையாற்றகின்ற வேளையில் இந்த 50% பிரதிநிதித்துவத்துடன் இணங்குவதாகக் கூறினார். அதைப்போலவே மேடையில் இருந்த அத்தனை பெண்களையும் வேட்பாளர்களாக முன்வரத் தயாராகுமாறும் கூறினார். எமக்கு 50% தேவையெனக் கோரினாலும் பெண்களாகிய எமக்கு அரசியலில் ஈடுபடுவது அவ்வளவுதூரம் இலகுவானதல்லவென்பதை அத்தருணத்திலேயே விளங்கிக்கொண்டோம். சிலவிதங்களில் அரசியலுடன் தொடர்புபடுகின்ற நாங்களும் வேட்பாளர்களாக மாற இவ்வளவுதூரம் விரும்பாவிட்டால் எம்மெதிரில் இருக்கின்ற சவால் எத்தகையதென்பதை விளங்கிக்கொண்டோம். திரைக்குப் பின்னால் இருந்துகொண்டு எவ்வளவுதான் செயலாற்றினாலும் சாசனத்தை நடைமுறைச் சாத்தியமானதாக அமைத்துக்கொள்ள பெண்கள் அரசியலுக்கு வருதல் பற்றிய சவாலை வென்றெடுக்க வேண்டுமென்பதை விளங்கிக்கொண்டோம். அதோ அந்த உரையாடலுக்குள் நாங்கள் இவ்வளவுதூரம் பயணித்துள்ளதோடு ஏனைய கட்சிகளும் பெண்களை அரசியலில் சேர்த்துக்கொள்ளல் பற்றி சிந்திக்கத் தொடங்கின. “எமக்கு பூச்சாடியாகவேண்டிய அவசியமில்லை” என நாங்கள் முன்னர் கூறினோம். நிலவுகின்ற நிலைமையை மாற்றியமைத்திடவே நாங்கள் அரசியலில் ஈடுபடவேண்டும். ஒட்டுமொத்தமாக வன்முறைசார்ந்த, அருவருப்பான குறிப்பாக பெண்களாகிய நாங்கள் அருவருக்கின்ற அரசியலை மாற்றியமைத்திடவே நாங்கள் முன்வந்திருக்கிறோம். நிலவுகின்ற அரசியல் கலாசாத்தை மாற்றியமைத்து புதிய அர்த்தமொன்றைக் கொடுக்க வேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது. அரசியல் பெரும்போக்கில் பிரவேசித்து சமூகத்தை ஒட்டுமொத்தமாக மாற்றியமைத்து முன்நோக்கி நகர்வதற்காக நாங்கள் தெரிவுசெய்த திசைகாட்டி அதற்குப் பொருத்தமான இடமென்பது இன்றளவில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எமக்கு அவசியமாவது தேர்தலில் வெறுமனே மண்டைகளை மாற்றுகின்ற அரசியலல்ல.பெண்களாகிய எங்களுக்கு பொருத்தமான இடம் தீர்வுக்கட்டமான சமூக மாற்றத்திற்காக செயலாற்றுகின்ற திசைகாட்டியே என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

NPP-Gahanu-Api-London

இந்த பயணத்தின்போது 2021 அளவில் அரசியலுக்கு மக்களின் பங்கேற்பினை பெற்றுக்கொள்வதற்காக வட்டார சபைகளை தாபிக்கத் தீர்மானித்தோம். கிராமத்தின் தலைமைத்துவத்தை பெற்றுக்கொள்ள ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலும் வட்டார சபைகளை நிறுவத் தொடங்கினோம். அடிமட்டத்தில் அரசியல் கட்டமைப்பினைக் கட்டியெழுப்புவதற்காக இலங்கையின் 14,000 கிராம அலுவலர் பிரிவுகளில் ஏறக்குறைய பதினோறாயிரம் வட்டாரங்களில் வட்டார சபைகளை நிறுவி குறைந்தபட்சம் பதவிவகிப்போரில் 30% பெண்களை பங்கேற்கச் செய்விக்க தீர்மானித்தோம். இந்த சபைகளில் பெண்களின் பங்கேற்பினை பெற்றுக்கொள்வது ஆரம்பத்தில் மிகவும் சிரமமானதாக அமைந்தது. பல சவால்களுக்கு முகங்கொடுத்த பின்னர் தனிவேறாக பெண்கள் சபைகளை நிறுவ நாங்கள் தீர்மானித்தோம். நினைத்துப்பார்க்க முடியாதவகையில் பெண்கள் அதனைச்சுற்றிக் குழுமத் தொடங்கினார்கள். பெண்களுக்கு பாதுகாப்பானவகையில் பெண்களின் தலைமையின்கீழ் அரசியல் மேடையொன்று உருவாகும்வரை காத்திருந்த பெண்களின் பெரும்பான்மையினர் வியத்தகுவகையில் முன்வந்தார்கள். இலங்கையின் தொழில்களிலும், வீடுகளிலும், பொருளாதாரத்தின் பிரதான துறைகளிலும் அதிகமான சுமையை இழுப்பவர்கள் பெண்களே. இலங்கைக்கு டொலர்களை ஈட்டித்தருகின்ற பிரதானதுறைகளில் அதிகமான பங்களிப்பினை வழங்குபவர்கள் பெண்களே. எனினும் அவர்களுக்கு முறையான அங்கீகாரம் நன்மதிப்பு கிடைக்கவில்லை. சம்பளம் பெறாமல் புரிகின்ற கவனிப்பு வேலைகள் வரவர கடினமானதும் துன்பமானதுமாக மாறியுள்ளன. இலங்கையில் சமூகப் பாதுகாப்பு படிப்படியாக கத்தரிக்கப்பட்டு வருகையில் அந்த சுமை பெண்களின் தோள்மீது சுமத்தப்பட்டது. உதாரணமாக கல்விக்காக அரசாங்கம் செலவிடுகின்ற வளங்கள் வெட்டப்பட்டு வருகின்ற நிலையில் பெண்கள்மீது சுமத்தப்பட்ட சுமையின் அளவு அதிகமானதாகும். அதைப்போலவே அரசாங்கம் பாடசாலை மாணவர்களின் பைகளில் போதைப்பொருட்களை பரிசோதிக்கின்ற அளவுக்குச் சென்றுள்ளது. அந்த சுமையும் பெண்களின் தோள்மீதே சுமத்தப்பட்டுள்ளது. மேலதிக வகுப்புகளுக்கு பிள்ளைகளை கூட்டிக்கொண்டு போதலும் வருதலும் அம்மாவிடமே கையளிக்கப்பட்டுள்ளது.

நான் இங்கு ஒரு துறையைப் பற்றி மாத்திரமே பேசினேன். கல்வி, சுகாதாரம், சுமூகப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீர்குலைதல் பெண்கள் மீதே அதிகளவான அழுத்தத்தைக் கொடுத்துள்ளது. ஆண்கள் பெண்கள் என்ற பேதமின்றி வங்கிக்கடன் பெறக்கூடிய இயலுமை குறைவடைந்த நிலையில் நுண்நிதிக்கடன்களுக்கு பெண்களே இரையாகவும் துன்புறுத்தலுக்கும் இலக்காகினர். யுத்தம் மற்றும் கலவரங்களால் தோன்றிய அழுத்தங்களையும் பெண்களே அதிகமாக தாங்கிக்கொண்டிருப்பதோடு 2022 இல் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தமையால் மேலும் பாரிய அடி விழுந்தது. கோல்பேஸ் போராட்டம் என அழைத்தாலும் நாடு முழுவதிலும் போராட்டங்கள் நிலவின. இந்த எதிர்ப்புகளின்போது முன்னணி வகித்தவர்கள் பெண்களே. இதயங்களில் தாங்கிக்கொண்டிருந்த மேலும் பொறுத்திருக்க முடியாத துன்பங்களின் மத்தியில் வீட்டுக்குள்ளே இருந்து வெளியில் வரத் தொடங்கினார்கள். ஓர் அரசியல் இயக்கமென்றவகையில் நாங்கள் அந்த பெண்கள் ஒன்றுசேரக்கூடிய அரசியல் இடப்பரப்பொன்றை நிர்மாணித்து பெண்கள் சபைகளை தாபித்தோம். 2023 திசெம்பர் 30 ஆந் திகதி மாத்தறையில் தொடங்கிய கூட்டத்தின் பின்னால் ஒரு பாரிய செயற்பாங்கு இருக்கின்றது. நீங்கள் காண்கின்ற மிகவும் வெற்றிகரமான கூட்டத்தின் பின்னால் பலமாதக்கணக்கான பெரும்பாலான செயற்பாடுகள் கிராமிய மட்டத்தில் ஏற்பாடு செய்யப்படுதலும் தலைமைத்துவம் வழங்கியதும் மூலமாக இந்த நிலைமை தோன்றியுள்ளது. எதிர்காலத்தில் மென்மேலும் பலமடைந்து கட்டியெழுப்பப்பட்ட நிறைவேற்றுக் குழுக்கள் கூடி திசைகாட்டியில் தொடர்ச்சியாக பணியாற்றி வருகின்றன.

NPP-Gahanu-Api-London
NPP-Gahanu-Api-London

இலங்கையின் பெண்கள் இவ்விதமாக அவர்களின் தலைமைத்துவத்திற்கு இத்தகைய பலம்பொருந்திய செய்தியைக்கொடுக்க முன்வருவார்களென அவர்கள் ஒருபோதுமே நினைத்திருக்கவில்லை. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற உன்னதமான விடயம் அதுவாகும். நாங்கள் எதிர்பார்க்கின்ற சமூக மாற்றத்திற்காக அணிதிரள்கின்ற மிகச்சிறந்த சக்தியும் அதுவாகும். பெண்களின் பலம், ஒன்றுசேர்ந்து ஒரே நோக்கத்தின்பால் முன்நோக்கி நகர்கின்றது. எமது நாட்டின் ஊழல்மிக்க அரசியல் கலாசாரம் சமூகச் சீர்குலைவு போன்ற எதிர்மறையான பல்வேறு நிலைமைகளுக்குள் மிகவும் உன்னதமான எதிர்பார்ப்பொன்றும் இருக்கிறது. பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்காகவும் அணிதிரள்கின்ற தேசிய மக்கள் சக்தி இருக்கின்றது. இங்கு இடம்பெற்றுக்கொண்டிருப்பது தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை வெற்றிபெறச் செய்விக்கின்ற எளிமையான விடயமல்ல. 17 அந் திகதி இளைஞர் மாநாடு தொடங்குகின்றது. இது இலங்கை பிரஜையை உருவாக்கி அவர்களின் இடையீட்டுடன் பாரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தப் போகின்ற பயணமாகும்.

வெளிநாடு சென்றுள்ள நீங்களும் இத்தருணத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து இலங்கையை மாற்றியமைக்கின்ற ஒரு தருணமாகக் எற்று செயலாற்றுங்கள். இனிமேலும் இருப்பவர்கள் மக்களை சுரண்டிவாழுகின்ற அரசியல் கலாசாரத்தை ஏற்றுக்கொள்கின்ற பிரஜையல்ல. இதனை விளங்கிக்கொள்ளாத அரசியல் கட்சிகள் அவர்களின் ஏமாற்றுவேலைகள் மூலமாக தொடர்ந்தும் அதிகாரத்தில் இருப்பது பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். பிரஜைகள் இருப்பது வெறுமனே பொருளாதார நெருக்கடியொன்றை, அரசியல் நெருக்கடியொன்றை தீர்த்து வைத்தல் போன்ற குறுகிய இடத்திலல்ல. சமூக மாற்றத்திற்காக அணிதிரள்கின்ற இடத்திலாகும். இது நாட்டை புதிய பாதையில் மாற்றியமைப்பதற்காக ஒன்றுசேரவேண்டிய தருணமாகும். இந்த மாற்றத்தை எளிமையான கொள்கைகளால் ஏற்படுத்தவிட முடியாது. அந்த சமூக மாற்றத்திற்காக “பெண்களாகிய நாங்கள் ஒரே மூச்சுடன்” நாட்டுக்குள்ளே மாத்திரமன்றி வெளிநாடுகளிலும்கூட அணிதிரண்டு கொண்டிருக்கிறோம். உடல்ரீதியாக இலங்கைக்கு வெளியில் இருந்தாலும் இந்த மாற்றத்திற்காக பல்வேறு பிரிவுகளில் பங்கேற்கலாம். தொலைபேசி அழைப்பு, சமூக வலைத்தள செய்தியொன்றை வழங்கி இலங்கையில் இருக்கின்ற உங்களுக்கு நெருக்கமானவர்களை விழிப்புணர்வூட்டுங்கள். இந்த வருடத்தை நாட்டில் தீர்வுக்கட்டமான மாற்றமொன்றை புரிகின்ற வருடமாக மாற்றியமைத்திடுவோம்.

NPP-Gahanu-Api-London
NPP-Gahanu-Api-London
NPP-Gahanu-Api-London
Show More

“மக்கள்மீது சுமையேற்றப்பட்டிருத்தல் மற்றும் அரச வளங்களை விற்பனைசெய்தல் பற்றிய வாசகங்களை எமது ஆட்சியின்கீழ் மீண்டும் திருத்துவோம் என்பதை அறிவித்தோம்” -தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்-

(தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 2024.03.14) கொழும்பு ஷெங்ரில்லா ஹோட்டலில் இன்று (14) காலை சர்வதேச நாணய நிதியம் மற்றும் தேசிய மக்கள் சக்தி பிரதிநிதிகளுக்கிடையிலான உரையாடலொன்று இடம்பெற்றது. தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் என்றவகையில் நானும் முதித்த நாணயக்காரவும், பொருளாதாரப் பேரவையின் அங்கத்தவர்களான கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, பேராசிரியர் அனில் ஜயந்த, பேராசிரியர் சீதா பண்டார மற்றும் சுனில் ஹந்துன்னெத்தியும் பங்கேற்றோம். நாணய நிதியத்தின் பீற்றர் புறூவரும் மூன்று […]

(தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 2024.03.14)

கொழும்பு ஷெங்ரில்லா ஹோட்டலில் இன்று (14) காலை சர்வதேச நாணய நிதியம் மற்றும் தேசிய மக்கள் சக்தி பிரதிநிதிகளுக்கிடையிலான உரையாடலொன்று இடம்பெற்றது. தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் என்றவகையில் நானும் முதித்த நாணயக்காரவும், பொருளாதாரப் பேரவையின் அங்கத்தவர்களான கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, பேராசிரியர் அனில் ஜயந்த, பேராசிரியர் சீதா பண்டார மற்றும் சுனில் ஹந்துன்னெத்தியும் பங்கேற்றோம். நாணய நிதியத்தின் பீற்றர் புறூவரும் மூன்று பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இந்த கலந்துரையாடலின் அடிப்படை சாரத்தை மக்களுக்கு அறிவிப்பதற்காக இந்த செய்தியாளர் சந்திப்பினை நடாத்துகிறோம்.

அரசாங்கம் நாணய நிதியத்திடம் சென்றமையின் பிரதான நோக்கம் உள்நாடு மற்றும் வெளிநாட்டுரீதியாக இந்நாட்டினால் பெறப்பட்டுள்ள கடன்களை மறுசீரமைத்துக் கொள்வதாகும். இது பற்றி வெளிப்படுத்தி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு நீண்டகாலம் கழிந்துள்ளது. எனினும் வெளிநாட்டுக்கடன் இன்னமும் மறுசீரமைக்கப்படவில்லை. எமது பிரதிநிதிகள் இதுபற்றி ஐ.எம்.எஃப். பிரதிநிதிகளிடம் வினவினோம். வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கான காலவரையறை யாது ? அதன் முன்னேற்றம் எப்படிப்பட்டது? என்பதை நாங்கள் கேட்டோம். மறுசீரமைப்பு நடவடிக்கைகளை நிறைவுசெய்ய கழிகின்ற திட்டவட்டமான காலமொன்றைக் கூறமுடியாதென அவர்கள் தெளிவுபடுத்தினார்கள். சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசாங்கம் எதிர்பார்த்த மறுசீரமைப்பு இன்னமும் இடம்பெறவில்லையெனவும் அவர்கள் தெளிவாகவே கூறினார்கள். கடனை மீளச்செலுத்துவதற்கான சலுகைக்காலமொன்றை பெற்றுக்கொள்ளல், கடன் வட்டிவீததத்தைக் குறைத்துக்கொள்ளல், ஏதேனும் கடன் அளவினை முழுமையாக வெட்டிவிடுதல் போன்ற வழிமுறைகளை எதிர்பார்த்தாலும் அத்தகையதொன்று இடம்பெறவில்லை என்பதை அவர்கள் தெளிவாகவே கூறினார்கள்.

எமது நாட்டில் ஊழல், மோசடிகளை நிறுத்துவது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றியும் நாங்கள் விசாரித்தோம். ஊழல், மோசடிகளை நிறுத்துதல் பற்றி அரசாங்கம் உடன்படிக்கைகளை செய்திருந்தபோதிலும் நடைமுறையில் சாதகமான எதையுமே செய்யவில்லை. அதுமாத்திரமன்றி பாரதூரமான முன்மாதிரிகளை வழங்கி கோப் குழுவில் தோழர் சுனில் ஹந்துன்னெத்தியின் தலைமையில் மத்திய வங்கி பிணைமுறி மோசடி பற்றிய முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் தற்போது மற்றுமொரு திருடனை அதன் தவிசாளர் பதவிக்கு நியமித்துள்ளார்கள். கோப் குழுவின் தவிசாளர் பதவி எதிர்க்கட்சிக்கே வழங்கவேண்மென நிலவிய மரபினையும் மீறியே ரணில் விக்கிரமசிங்க உலகிற்கு இந்த முன்னுதாரணத்தைக் கொடுத்துள்ளார். ஐ.எம்.எஃப். உடன் அரசாங்கம் என்னதான் உடன்படிக்கைகளை செய்துகொண்டாலும் நடைமுறையில் நம்பிக்கை சிதைக்கப்பட்டுள்ளதென்பதை நாங்கள் சுட்டிக்காட்டினோம்.

ஐ.எம்.எஃப். பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையொன்றுக்காக சனாதிபதி கடந்த தினமொன்றில் எதிர்க்கட்சிக்கு அழைப்பு விடுத்திருந்தார். எனினும் இந்த பேச்சவார்த்தைக்காக ஐ.எம்.எஃப். பிரதிநிதிகள் வருகைதராமை பற்றி நாங்கள் வினவினோம். அரசாங்கம் அத்தகைய கலந்துரையாடலுக்காக தமக்கு அழைப்பு விடுக்கவில்லை என்பதை அவர்கள் தெளிவாகவே கூறினார்கள். எனினும் ஐ.எம்.எஃப். பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்காக எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்ததாகவே சனாதிபதி மக்களுக்கு கூறினார். எனினும் முழு நாட்டடினதும் மக்களை ஊடகங்களினூடாக ஏமாற்றுகின்ற வேலையை அரசாங்கம் செய்திருந்தது. ஐ.எம்.எஃப். உடனான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு, அனைத்துக் கட்டணங்களையும் உயர்த்தி, வரிகளை அதிகரித்து, நாட்டின் வளங்களை விற்றுக்கொண்டிருக்கின்ற ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் இவ்விதமாக பாரிய வஞ்சனையில் ஈடுபட்டு ஐ.எம்.எஃப். பிரதிநிதின் இல்லாமல் அரசாங்கப் பிரதிநிதிகள் மாத்திரம் பங்கேற்ற கூட்டமொன்றுக்கு எதிர்க்கட்சியை அழைத்திருந்தார். நாணய நிதியத்துடன் கைச்சாத்திட்ட தொழில்நுட்ப ஒத்துழைப்பு அறிக்கையை சமர்ப்பியாமை பற்றி பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வினவி இருந்தார். அந்த அறிக்கையை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என ஐ.எம்.எஃப். பிரதிநிதிகள் எம்மிடம் கூறினார்கள். அரசாங்கம் எதையுமே மறைப்பதில்லையென பிரச்சாரம் செய்தாலும் இந்த முக்கியமான அறிக்கைகள் எவற்றையும் நாட்டுக்கு வெளிப்படுத்தவில்லை. பசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராக இருந்தவேளையில் ஐ.எம்.எஃப். உடன் கைச்சாத்திட்ட உடன்படிக்கைகள் பற்றி அன்று ரணில் விக்கிரமசிங்கவும் கேள்விக்குட்படுத்தினார். அந்’த இரகசிய அறிக்கைகள் எவற்றையும் சமர்ப்பிக்க முடியாதென அன்று பசில் ராஜபக்ஷ கூறினார். தற்போது ரணில் விக்கிரமசிங்கவும் அவ்வாறே நடந்து கொள்கிறார்.

இலங்கையின் பொருளாதாரம் சிதைவடைந்தது மாத்திரமன்றி அரசாட்சி முறையில் பாரதூரமான பலவீனங்கள் நிலவுகின்றதென்பதை நாங்கள் ஐ.எம்.எஃப். பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்தோம். நிலவுகின்ற அரசியல் கலாசாரத்தை மாற்றியமைத்திடாமல் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாதெனவும் நாங்கள் வலியுறுத்தினோம். தற்போது கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கையின் பிரகாரம் மக்கள்மீது சுமையேற்றப்படுதல் மற்றும் அரச வளங்களை விற்பனை செய்தல் தொடர்பான வாசகங்களை எமது ஆட்சியின்கீழ் திருத்தியமைப்பமென நாங்கள் அறிவித்தோம். அதனை மையப்படுத்தியே நாங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். இந்த அடிப்படை நிலைப்பாட்டில் இருந்துகொண்டே கடன் மறுசீரமைப்பு பற்றிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டுமென நாங்கள் சுட்டிக்காட்டினோம்.

கேள்வி : சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 19 மற்றும் 20 ஆகிய தினங்களில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதா?

பதில்: சபாநாயகரின் நடத்தையை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பக்கச்சார்புடையதாகும். பொலீஸ் மா அதிபரை நியமிக்கையில் அவர் நடந்துகொண்டவிதம் முற்றிலும் சட்டவிரோதமானது. தேசபந்து தென்னக்கோனை நியமிக்க நால்வர் ஆதரவாகவும் இருவர் எதிர்த்தும் இருவர் அமைதியாகவும் இருந்தார்கள். அமைதியாக இருந்த இருவரும் எதிரானவர்களென பொருள்விளக்கம் கொடுத்து சபாநாயகரின் வாக்கு அளிக்கப்பட்டது. அது சட்டவிரோதமானது. அந்த நேரத்தில் வாக்கினை அளிக்காமல் பின்னர் கடிதம் மூலமாக அறிவித்திருக்கவேண்டும். சபாநாயகரின் நடைமுறைகள் தொடர்ச்சியாக பக்கச்சார்புடையதாகும். அதனால் அவருக்கு எதிராக நாங்கள் நிச்சயமாக வாக்கினை அளிப்போம்.

கேள்வி : .எம்.எஃப். கலந்துரையாடலின்போது விடயங்களை முன்வைக்கும்வரை மண்ணில் நிலவுகின்ற யதார்த்தத்தை அவர்கள் அறிந்திருக்கவில்லையா?

பதில்: ஒருசில விடயங்களை அறிந்திருக்கவில்லை. கோப் குழுவின் தவிசாளர் பதவிக்கான நியமனம் பற்றி அறிந்திருக்கவில்லை. பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நியமன செயற்பாங்கு பற்றி எம்மிடமிருந்தே அவர்கள் அறிந்துகொண்டார்கள். ஒருசில விடயங்களை அவர்கள் நன்றாகவே உறுதிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். உதாரணமாக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பற்றி அவர்கள் நுவரெலியாவுக்குச்சென்று கற்றாராய்ந்திருந்தார்கள்.

கேள்வி : இலங்கை மக்கள் சிரமத்துடனேயே வசிக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியுமா?

பதில் : நாங்கள் அவர்களுக்கு ஆதாரங்களுடன் எடுத்துரைத்தோம். அவர்கள் விளங்கிகொண்டார்களா என்பதை அவர்ளிடம்தான் கேட்கவேண்டும்.

கேள்வி : உங்கள் ஆட்சியின்கீழ் நிபந்தனைகளை திருத்தியமைக்க அவர்கள் இணங்கினார்களா? அரசாங்கத்திற்கு அரசாங்கம் மாறுகின்ற நிபந்தனைகளை அவர்கள் விரும்புகிறார்களா?

பதில்: இணக்கப்பாடுகள் பற்றிய உரையாடல் இடம்பெறவில்லை. நாங்கள் எமது நிலைப்பாட்டினை தெளிவாக எடுத்துரைத்தோம். ஐ.எம்.எஃப். உடனான கலந்துரையாடல் தொடர்பில் எமக்கு ஆட்சேபனை கிடையாதெனவும் அந்த நிபந்தனைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளமை சம்பந்தமான விடயங்கள் மீளாய்வு செய்யப்பட வேண்டுமெனவும் நாங்கள் தெளிவுபடுத்தினோம்.

கேள்வி : நடப்பு அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அவர்கள் திருப்தியடைகிறார்களா?

பதில்: அரசியல் விடயங்கள் பற்றிக் கலந்துரையாடவில்லை. அவர்கள் சமர்ப்பித்த அறிக்கையில் உள்ள 129 விடயங்கள் பற்றி பெரும்பாலானோருக்கு புரிந்துணர்வு கிடையாதென அவர்கள் கூறினார்கள். அரசியல் விடயங்கள் பற்றி நாங்கள் கருத்துரைக்கவும் இல்லை. அவர்கள் கருத்துரைக்கவும் இல்லை.

கேள்வி : .எம்.எஃப். உடன்படிக்கையில் பாதகமான பகுதிகள் இருப்பதாக நீங்கள் கூறினீர்கள். மோசடி ஊழலை ஒழித்தல் மற்றும் விற்றுத் தீர்த்தலுக்கு மேலதிகமாக வேறு நிபந்தனைகளும் இருக்கின்றனவா?

பதில்: 2022 மார்ச்சு மாதம் இரண்டாம் திகதி கைச்சாத்திட்ட நாணய நிதியத்துடனான அடிப்படை புரிந்துணர்வு உடன்படிக்கை ஐந்து பிரதான விடயங்களை அடிப்படையாகக்கொண்ட கொள்கையென அவர்கள் கூறியிருந்தார்கள். வரியை அதிகரித்தலும் வரி நிவாரணங்களை நீக்குதலும், அரசாங்கத்திற்குச் சொந்தமான பொறுப்புமுயற்சிகளை மறுசீரமைத்தல், ரூபாவை மிதக்கவிடுதல், வலுச்சக்திக் கிரயத்தின்பேரில் விலையைத் தீர்மானித்தல் மற்றும் ஊழலுக்கெதிராக போராடுதல். இந்த ஐந்து விடயங்களை அடிப்படையாகக்கொண்டு ஏனைய தொழில்நுட்ப விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் அன்று “பஃஸ்ற் எகேன்ஸ்ற் கரப்ஷன்” எனக் கூறினார்கள். அந்த செயற்பாங்கு நடைமுறையில் அமுலில் இல்லை என்பதை நாங்கள் சுட்டிக்காட்டினோம். உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உள்ளிட்ட வருமானம் பெறக்கூடிய நிறுவனங்களில் பரபரப்பினை ஏற்படுத்தவல்ல ஊழல்கள் தற்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. மதுவரித் திணைக்களத்தின் ஸ்ரிக்கர் மோசடி இன்றும் நடைபெற்று வருகின்றது. மத்தியவங்கி பிணைமுறிக்கு பொறுப்புக்கூறவேண்டிய பிரதான நிறுவனம் இன்றும் வரிமோசடியை பாரியளவில் புரிந்து வருகின்றது. கள்ள ஸ்ரிக்கர் அச்சடிப்பதை இன்றும் நிறுத்த முடியவில்லை.

Show More

IMF மற்றும் NPP பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு

(-Colombo, March 14, 2024-) சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைத் தொழிற்பாடுகள் பிரதானி பீற்றர் புறூவர் (Peter Breuer) உள்ளிட்ட குழுவினருக்கும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று இன்று (14) முற்பகல் கொழும்பு செங்ரிலா ஹோட்டலில் நடைபெற்றது. ஏறக்குறைய ஒன்றரை மணித்தியாலம் நடைபெற்ற இந்த சந்திப்பில் இலங்கையின் கடன்மறுசீரமைப்பினதும் மோசடி, ஊழல்களை தடுத்தலுடன் தொடர்புடைய செயற்பாங்குகளினதும் முன்னேற்றம் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு மக்களுக்கு இதுவரை வழங்கப்பட்டிராத தொழில்நுட்ப ஒத்துழைப்பு அறிக்கை பற்றியும் தேசிய மக்கள் […]

(-Colombo, March 14, 2024-)

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைத் தொழிற்பாடுகள் பிரதானி பீற்றர் புறூவர் (Peter Breuer) உள்ளிட்ட குழுவினருக்கும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று இன்று (14) முற்பகல் கொழும்பு செங்ரிலா ஹோட்டலில் நடைபெற்றது.

ஏறக்குறைய ஒன்றரை மணித்தியாலம் நடைபெற்ற இந்த சந்திப்பில் இலங்கையின் கடன்மறுசீரமைப்பினதும் மோசடி, ஊழல்களை தடுத்தலுடன் தொடர்புடைய செயற்பாங்குகளினதும் முன்னேற்றம் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு மக்களுக்கு இதுவரை வழங்கப்பட்டிராத தொழில்நுட்ப ஒத்துழைப்பு அறிக்கை பற்றியும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளால் விசாரிக்கப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்தைப் பிரதிநிதித்துவம்செய்து திரு. பீற்றர் புறூவருக்கு மேலதிகமாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி வதிவிடப் பிரதிநிதி சேர்வத் ஜஹான், கெட்சியரினா ஸ்விட்சென்கா (Katsiaryna Svieydzenka) மற்றும் மானவீ அபேவிக்ரம ஆகியோரும் உரையாடலில் பங்கேற்றனர்.

இந்த சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவம்செய்து தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் முதித்த நாணயக்கார மற்றும் பொருளாதாரப் பேரவையின் அங்கத்தவர்களான பேராசிரியர் அனில் ஜயந்த, பேராசிரியர் சீதா பண்டார, கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும மற்றும் சுனில் ஹந்துன்னெத்தி ஆகியோர் பங்குபற்றினர்.

Show More