Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

NPP News

ஜப்பான் வாழ் இலங்கை தொழில்வாண்மையாளர்களின் சந்திப்பு

(-Japan, July 22, 2024-) நேற்று (22) பிற்பகல் Tokyo Prince இல் இடம்பெற்ற ஜப்பான் வாழ் இலங்கையர்களின் தொழில்வாண்மையாளர்கள் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார். இதன்போது, எதிர்காலத்தில் திசைகாட்டியின் அரசாங்கத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பொருளாதார வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் முதலீடுகள் தொடர்பாகவும் கருத்து பரிமாறப்பட்டது.

(-Japan, July 22, 2024-)

நேற்று (22) பிற்பகல் Tokyo Prince இல் இடம்பெற்ற ஜப்பான் வாழ் இலங்கையர்களின் தொழில்வாண்மையாளர்கள் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார்.

இதன்போது, எதிர்காலத்தில் திசைகாட்டியின் அரசாங்கத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பொருளாதார வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் முதலீடுகள் தொடர்பாகவும் கருத்து பரிமாறப்பட்டது.

Show More

ஜப்பான் வெளிவிவகார அமைச்சருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு

(-Japan, July 22, 2024-) தற்போது ஜப்பானுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் TSUGE Yoshifumi அவர்களுக்கும் இடையில் இன்று (22) பிற்பகல் குறித்த அமைச்சின் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இன்றளவில் இலங்கையில் நிலவுகின்ற பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்தும் இரு நாடுகளுக்கு இடையில் நீண்டகாலமாக இருந்துவருகிற நட்புறவு குறித்தும் இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளின் அடுத்தக்கட்ட நகவர்வுகள் சம்பந்தமாகவும் இதன்போது […]

(-Japan, July 22, 2024-)

தற்போது ஜப்பானுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் TSUGE Yoshifumi அவர்களுக்கும் இடையில் இன்று (22) பிற்பகல் குறித்த அமைச்சின் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இன்றளவில் இலங்கையில் நிலவுகின்ற பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்தும் இரு நாடுகளுக்கு இடையில் நீண்டகாலமாக இருந்துவருகிற நட்புறவு குறித்தும் இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளின் அடுத்தக்கட்ட நகவர்வுகள் சம்பந்தமாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில் ஜப்பான் வெளிவிகார அமைச்சர் ஜப்பானுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

இந்த சந்திப்பில் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு ஆசிய விவகாரங்கள் திணைக்களத்தின் தென்மேற்கு ஆசியப் பிரிவின் பணிப்பாளர் Tsutsumi Taro அவர்களும் அந்தப் பிரிவின் பிரதி பணிப்பாளர் IWASE Kiichiro அவர்களை உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் தேசிய மக்கள் சக்தியின் ஜப்பான் குழுவின் உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Meeting-with-Foriegn-Minister
Show More

“ரணில் விக்கிரமசிங்கவைப்போல் அரசியலமைப்பினை மீறிய தலைவரொருவர் இலங்கை வரலாற்றில் இல்லை” -சட்டத்தரணி சுனில் வட்டகல-

(-Colombo, July 21, 2024-) நிகழ்கால அரசாங்கம் அரசிலமைப்பினை அடிப்படையாகக்கொண்டு சமூகத்தில் ஐயப்பாட்டினை உருவாக்க முனைந்து வருகின்றது. இந்த ஐயப்பாட்டின் மூலாரம்பம் சனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்களா, ஆறு வருடங்களா என்கின்ற உரையாடல். இந்த ஐந்தா, ஆறா என்கின்ற உரையாடல் உயர்நீதிமன்றத்தினால் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட உரையாடலாகும். அதனை மீண்டும் களத்திற்கு கொண்டுவந்தவர் ரணில் விக்கிரமசிங்க ஆவார். எந்நேரமும் ஐயப்பாட்டுடன் வாழ்கின்ற ரணில் விக்கிரமசிங்க அதனை சமூகமயப்படுத்த முயற்சி செய்துகொண்டிருக்கிறார். ஐந்து வருடங்களா ஆறு வருடங்களா என்கின்ற உரையாடல் […]

(-Colombo, July 21, 2024-)

LNPP-press

நிகழ்கால அரசாங்கம் அரசிலமைப்பினை அடிப்படையாகக்கொண்டு சமூகத்தில் ஐயப்பாட்டினை உருவாக்க முனைந்து வருகின்றது. இந்த ஐயப்பாட்டின் மூலாரம்பம் சனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்களா, ஆறு வருடங்களா என்கின்ற உரையாடல். இந்த ஐந்தா, ஆறா என்கின்ற உரையாடல் உயர்நீதிமன்றத்தினால் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட உரையாடலாகும். அதனை மீண்டும் களத்திற்கு கொண்டுவந்தவர் ரணில் விக்கிரமசிங்க ஆவார். எந்நேரமும் ஐயப்பாட்டுடன் வாழ்கின்ற ரணில் விக்கிரமசிங்க அதனை சமூகமயப்படுத்த முயற்சி செய்துகொண்டிருக்கிறார். ஐந்து வருடங்களா ஆறு வருடங்களா என்கின்ற உரையாடல் முதன்முதலில் 19 வது திருத்தம் உயர்நீதிமன்றத்திற்கு வந்தவேளையிலேயே முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அந்த உரையாடல் உயர்நீதிமன்றத்தினால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அதனை மீண்டும் மைத்திரிபால சிறிசேன கிளப்பினார். அவருடைய பதவிக்காலம் நிறைவடைய அண்மித்துக்கொண்டு இருக்கையில் தன்னால் ஆறு வருடங்கள் இருக்க முடியுமா என்பது பற்றிய அபிப்பிராயத்தை உயர்நீதிமன்றத்திடம் வினவினார். உயர்நீதிமன்றம் அந்த பதவிக்காலம் ஐந்து வருடங்கள் என வெளிப்படுத்தியது. அதன் பின்னர் லெனவ என்பவர் 19 வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆட்சேபனை தெரிவித்த முதலாவது சந்தர்ப்பத்திலேயே உயர்நீதிமன்றம் ஐந்து வருடங்களென தீர்ப்பளித்து ஒரு இலட்சம் ரூபா வழக்குக்கட்டணத்தை செலுத்துமாறு கட்டளையிட்டது. அதன் பின்னர் ஒரு சட்டத்தரணியைக்கொண்டு இந்த கேள்வியை மீண்டும் கேட்டார்கள். அவர்மீது ஐந்து இலட்சம் ரூபா வழக்குக் கட்டணம் விதிக்கப்பட்டு ஐந்து வருடங்களே என தெளிவுபடுத்தப்பட்டது. இன்றளவில் சனாதிபதியின் பதவிக்காலம் அரசியலமைப்பின் 30 (2) உறுப்புரையின்படியும் உப பிரிவுகளின்படியும் ஐந்து வருடங்களே என்பது எமக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

நிலைமை இவ்வாறு இருக்கையில் நீதியமைச்சர் தனிக்கடதாசியில் வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டார். அவரே, “இதனை நாங்கள் சனாதிபதி தேர்தலுக்குள் கொண்டுவர மாட்டோம், அதனை முன்னெடுத்துச் செல்லவேண்டாம்” என அவருடைய செயலாளருக்கு அறிவித்ததாகக் கூறினார். அவ்வாறு கூறியிருக்கையில் ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் தனிக்கடதாசியில் வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டார். மக்கள் தீர்ப்பிற்குச் செல்வதா, அதனால் சனாதிபதி தேர்தலுக்கு தடையேதும் ஏற்படுமா என்ற விடயத்தின் அடிப்படையில் தற்போது சமூகத்தில் மீண்டும் ஓர் ஐயப்பாட்டினை உருவாக்கி வருகிறார்கள். இந்த வர்த்தமானியில் இருப்பது இரண்டு பதங்களுக்கிடையிலான போட்டியாகும். ஒரு பிரிவில் கூறப்படுகின்றது “ஆறு வருடங்களை விஞ்சியதாக” எனப்படுகின்ற பதங்களை “ஐந்து வருடங்கள் வரை” என்பதாக மாற்றப்படுவதாகும். இந்த இரண்டு பதங்களுக்காக 1000 கோடி ரூபா பணத்தைச் செலவிட ரணில் விக்கிரமசிங்க எதிர்பார்க்கிறார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பணமில்லை எனக்கூறி ரணில் விக்கிரமசிங்க முழுமையாகவே சுருக்கிக்கொண்டது எமக்கு ஞாபகம் இருக்கிறது. இன்று வெளிநாடு சென்றுள்ள உழைப்பாளிகளினதும் ஏற்றுமதி வருமானத்தையும் அடிப்படையாகக்கொண்டு கடன் மறுசீரமைப்பிற்குள்ளே சிரமத்துடன் பேணி வருகிறார். இது சனாதிபதி தேர்தலுக்கான அழைப்பு விடுக்கப்படவுள்ள தருணமாகும். தயவுசெய்து சீக்கிரமாக இந்த சிக்கலைத் தீர்த்துவைக்குமாறு நாங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கூறுகிறோம். சனாதிபதி தேர்தல் நடைபெறுகின்ற தினத்தையும் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற திகதியையும் உடனடியாக வெளிப்படுத்துங்கள். இனிமேலும் காலம்தாழ்த்தாமல் இந்த திகதியை அறிவிப்பதன் மூலமாக இந்த நிலைவமையை ஓரளவிற்கு தணிக்கலாம். சனாதிபதி தேர்தல் நடைபெறுவதை ரணில் விக்கிரமசிங்கவின் தில்லுமுல்லுகளால் நிறுத்திவிட முடியாது. இந்த வர்த்தமானப் பத்திகை சபாபீடத்தில் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். அதன் பின்னர் பொதுமக்களுக்கு மனுக்களை சமர்ப்பிக்க இரண்டுவாரகால அவகாசம் கொடுக்கவேண்டும். உயர்நீதிமன்றம் மனுவினை ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைக்க மேலுமொரு வாரம் தேவை. பாராளுமன்றத்தில் விவாதத்திற்கான திகதியைக் குறிக்க மேலும் ஒரு வாரம் வரை எடுக்கும். அந்த விவாதத்தின் பின்னர் வாக்கெடுப்பு நடைபெற்று சனாதிபதி தன்னுடைய கையொப்பத்தை இடவேண்டும். இது மக்கள் தீர்ப்பிற்குச் செல்லவேண்டுமென உயர்நீமன்றம் தீர்மானித்தால் அதற்கு சனாதிபதி கையொப்பமிட வேண்டும். கையொப்பமிட்டு ஒரு மாதத்திற்குள் மக்கள் தீர்ப்பிற்கான அழைப்பு விடுக்கவேண்டும்.

இந்த செயற்பாங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கையில் சனாதிபதி தேர்தல் செயற்பாங்கு நின்றுவிட மாட்டாது. இந்த நாடு சிரமத்துடன் கழித்துவருகின்ற காலமே இது. தமது அசிங்கமான அயோக்கியத்தனமான அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்காகவே உயர்நீதிமன்றம் தீர்த்துவைத்த விடயமொன்று மீண்டும் களமிறக்கப்படுகின்றது. ரணில் விக்கிரமசிங்கவைப்போல் அரசியலமைப்பினை மீறிய தலைவரொருவர் இலங்கை வரலாற்றில் இல்லை. உண்மையைக் கூறுவதானால் ரணில் விக்கிரமசிங்க இந்த தேர்தலில் போட்டியிடுகிறாரா இல்லையா என்பது இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. அவர் போட்டியிடுவதற்கு ஒரு கட்சி கிடையாது. அவருக்கு ஏற்பட்டுள்ள ஐயப்பாட்டினை அரசியலமைப்பு மூலமாக நாட்டின் ஐயப்பாடாக மாற்ற முனைகிறார். இது உயர்நீதிமன்றத்திற்கு வந்தால் நாங்கள் வாதாட எதிர்பார்த்திருக்கிறோம். ஆறு வருடங்களை விஞ்சுவதாயின் மக்கள் தீர்ப்பிற்குச் செல்லவேண்டியது அவசியமென்றே இந்த பிரிவில் இருக்கின்றது. காலத்தைக் குறைப்பதாயின் உண்மையாகவே அத்தகைய ஒன்று அவசியமா என வாதம்செய்ய எதிர்பார்க்கிறோம். இது உயர்நீதிமன்றத்தினால் தீர்க்கப்பட்ட ஒரு பிரச்சினையாகும். அப்படியானால் இதனை பாராளுமன்றத்தில் 2/3 மூலமாக எம்மால் தீர்த்துக்கொள்ள முடியுமா என பார்க்கவேண்டும். முடியுமானால் மக்கள் தீர்ப்பிற்குச் செல்லவேண்டியதில்லை. இயலுமானால் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் 2/3 ஐ எடுத்துக் காட்டட்டும்.

இன்று இந்த அரசாங்கம் ஒட்டுமொத்த சமூகத்தையுமே சந்தேகத்திற்கு ஐயப்பாட்டுக்கு இலக்காக்கி இருக்கின்றது. பயப்படவேண்டாமென மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். இந்த பிரச்சினையை தேசிய மக்கள் சக்தி சரியாக விளங்கிக்கொண்டுள்ளது. இந்த தந்திரோபாயங்களுக்கு மாட்டிக்கொள்ள வேண்டாம். சனாதிபதி தேர்தலை எவராலும் தடுக்க இயலாது. இனிமேலும் காலத்தை வீணடிக்காமல் இயலுமானவரை சிக்கிரமாக வேட்பு மனுத் திகதியையும் தேர்தல் திகதியையும அறிவிக்குமாறு நாங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு விடுக்கிறோம். அப்போது இந்த பிரச்சி்னையில் அரைவாசி தீர்ந்துவிடும். தேசிய மக்கள் சக்தியின் வலிமையைக்கண்டு அஞ்சி ரணில் விக்கிரமசிங்க என்னதான் நாடகம் ஆடினாலும் இந்த பயணத்தை திசைதிருப்ப முடியாது. ரணில் விக்கிரமசிங்க இந்த சமூகத்தை ஐயப்பாட்டுடன் கொண்டுசெல்வதை உடனடியாக நிறுத்தவேண்டும். அதற்கான தீர்வினை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்குமென நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

LNPP-press

“சிவில் அமைப்புக்களோ மக்களோ வழக்கொழிந்த ஒரு பிரிவினை திருத்தியமைக்குமாறு கோரவில்லை”
-சட்டத்தரணி ஜே. எம். விஜேபண்டார-

அரசியலமைப்பிற்கான 19 வது திருத்தத்தி்ன் பின்னர் இந்த நாட்டில் தேர்தலால் நியமிக்கப்பட்ட சனாதிபதியொருவரின் பதவிக்காலம் ஐந்து வருடங்களாகும். அதைப்போலவே பதவி வெற்றிடம் ஏற்பட்டமை காரணமாக நியமிக்கப்படும் பின்தொடருகின்ற சனாதிபதியொருவர் பதவி வகிக்கக்கூடிய காலம் நீங்கிச்சென்றவரின் பதவிக்காலத்தைக் கழித்தபின்னர் எஞ்சுகின்ற காலப்பகுதி மாத்திரமாகும். அதனால் இலங்கையின் அரசியலமைப்பின்படி ஐந்து வருடங்களை விஞ்சியதாக இருக்கக்கூடிய சனாதிபதியொருவர் கிடையாது. உயர்நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதி ஆயத்தினால் இது கடந்த வாரத்திலும் பிரகடனஞ்செய்யப்பட்டது. அரசியலமைப்பின் 83 (ஆ) பிரிவில் இருக்கின்ற ” வருடங்களை விஞ்சியதாக நீடிப்பதாயின்” எனும் சொற்றொடர்கள் வழக்கொழிந்த சொற்றொடர்களாக மாறியுள்ளன.

அரசியலமைப்பில் வழக்கொழிந்த ஒரு சொல்லைத் தீர்த்துவதற்காக காலத்தை வீணடிப்பதோ மக்கள் தீர்ப்பொன்றினை நடாத்துவதோ எனக்கூறுவது பயங்கரமான அநியாயமாகும். இலங்கை ஒரு வங்குரோத்து நாடாக மாறி கேஸ் விலை, பாடசாலை உபகரணங்களின் விலை, உணவுப்பொருட்களின் விலை, மின்சாரம், நீர் ஆகியவற்றின் விலைகள் மிகவும் அதிகமாக உயர்வடைந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ள ஒரு தருணத்தில் சட்டப்படி உரிய தேர்தலை தவிர்ந்த மேலுமொரு மக்கள் தீர்ப்பினை நடாத்த வேண்டுமென எவரேனும் தீர்மானிப்பதாயின் அவர் ஒரு பொருளாதாரக் கொலைகாரனாவார். தவறான பொருளாதாரக் கொள்கைகளை முன்னெடுத்து அதற்கிணங்க நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு ஆளாக்குதல் தொடர்பில் உயர்நீதிமன்றம் ஒரு வழக்குத்தீர்ப்பினை அளித்துள்ளது. பசில் ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ உளய்ளிட்ட சிலர் பொருளாதாரத்தை படுகொலை செய்தமை தொடர்பில் மனித உரிமைகளை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்கப்பட்டது. கட்டாயமாக நடாத்தவேண்டிய ஜனாதிபதி தோ்தல் நடாத்தப்படவேண்டிய நேரத்தில் அதற்குள்ளே மக்கள் தீர்ப்பொன்றினை நடாத்தி இந்த வறிய நாட்டில் பெருந்தொகையான பணத்தை செலவிட முற்படுவார்களாயின், உயர் நீதிமன்றம் ஏற்கெனவே வழங்கியுள்ள தீர்ப்புகளுக்கிணங்க அதுபற்றிய தீர்மானங்களை எடுத்தவர் பாரதூரமான பொருளாதார கொலைக்காரனாக மாறுவார். அது நடைபெறக்கூடாத ஒன்றாகும்.

போராட்டத்தின் பின்னர் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை நீங்கிச்சென்ற பின்னர் இந்த நாட்டில் சிவில் அமைப்புக்கள், சட்டத்தரணிகள் சங்கங்கள், மத அமைப்புக்கள் அனைத்துமே ஒற்றுசோ்ந்து இந்த நாட்டில் பொதுத் தோ்தல் ஒன்றை நடத்தி மக்கள் விரும்புகின்ற அரசாங்கத்தை அமைத்துக்கொள்ள இடமளிக்குமாறே கோரிக்கை விடுத்தார்கள். மக்களின் அந்த கோரிக்கையை உதறித்தள்ளிவிட்டு திரிபு நிலையடைந்த அரசாங்கமொன்றை மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்த அரசாங்கமே அமைத்துக்கொண்டது. திரிபு நிலையடைந்த அரசாங்கமொன்றை அமைத்துக்கொண்டு அமைச்சரவையொன்றையும் நியமித்துக் கொண்டார்கள். அவ்விதம் திரிபு நிலையில் நியமிக்கப்பட்ட அமைச்சரவையும் ஜனாதிபதியும் இந்த நேரத்திலேயே அரசியலமைப்பை திருத்தவேண்டுமென தீர்மானிக்கிறார்கள். இந்த நாட்டில் சிவில் அமைப்புக்கள் அல்லது மக்கள் வழக்கொழிந்த பிரிவொன்றினை திருத்துமாறு வேண்டுகோள் விடுக்கவில்லை. பாராளுமன்றத்தில் இருக்கின்ற தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் வேறு சிறிய கட்சிகளின் உறுப்பினர்களும் நீங்கலாக பாராளுமன்றத்தின் 150 க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் தோ்தலுக்கு அஞ்சியவர்களாவர். இது போராட்டத்தால் நிராகரிக்கப்பட்டவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட பாராளுமன்றமாகும். வெளியில் என்ன தான் கூறினாலும் உள்ளே ஒன்றிணைந்து இந்த ஜனாதிபதி தோ்தல் நடாத்தப்படுவதற்கு இடையூறு விளைவிக்க முயற்சி செய்தாலும் நாட்டின் அதியுயர் சட்டத்தை மிதிப்பதற்கான உரிமை எவருக்கும் கிடைக்கமாட்டாது.

அதியுயர் சட்டத்தின்படி ஜனாதிபதி தோ்தல் பிரகடனம் செய்யப்படல் வேண்டும். ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தோ்தல் நடாத்தி முடிக்கப்படல் வேண்டும். அதனை எவராலும் மாற்ற முடியாது. எதிர்வரும் ஜனாதிபதி தோ்தலில் எவ்வாறு போட்டியிடுவதென நிச்சயித்துக் கொள்ள முடியாவிட்டாலும் இந்த அமைச்சரவையும் ஜனாதிபதியும் போட்டியிட முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். ஜனாதிபதியும் ஒரு போட்டியாளாராவர். போட்டியிடவுள்ள ஜனாதிபதியும் அமைச்சரவையும் அரசியலமைப்பினை திருத்துவதற்கான தீர்மானமொன்றை தான்தோன்றித்தனமாக கொண்டுவந்து அந்த முன்மொழிவின் அடிப்படையில் மக்களின் வாக்குப்பலத்திற்கு இடையூறு விளைவிக்கவோ ஜனாதிபதி தோ்தலுக்கான பணத்தை வேறு பக்கத்திற்கு திசைத்திருப்பி மக்கள் தீர்ப்பினை நோக்கி சுழற்றிவிட முயற்சி செய்வார்களாயின், ஒரு போட்டியாளர் ஏனைய போட்டியாளர்களுக்கு எதிராக எடுக்கின்ற மிலேச்சத்தனமான நெறிமுறைகளுக்கு புறம்பான செயலாகும். இதற்கு முழுச்சமூகமுமே கண்டனம் தெரிவிக்கவேண்டும். இவர்கள் காலத்தை வீணடிப்பதையே செய்ய முனைகிறார்கள்.

ஜனாதிபதி தோ்தல் கட்டாயமாக நடைபெறும். தேசிய மக்கள் சக்தி கட்டாயமாக போட்டியிடும். ஏனைய அனைவருமே ஒன்று சோ்ந்து ஒருவர் அல்லது இருவர் அல்லது ஒரு சிலராக வரலாம். அரசியலமைப்பின் 3 வது உறுப்புரையில் விபரிக்கப்பட்டுள்ள இறைமைத் தத்துவம் மக்களின் பாராதீனப்படுத்த முடியாத உரிமையாகும். அரசியலமைப்பின் 04 வது உறுப்புரையில் 05 தத்துவங்கள் காட்டப்பட்டுள்ளன. மக்களால் பாராளுமன்றத்திடம் அல்லது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிராத இரண்டு தத்துவங்கள்தான் அடிப்படை உரிமைகளும் வாக்களிக்கின்ற உரிமையுமாகும். அது பாராளுமன்றத்திற்கு கையளிக்கப்பட்ட ஒரு அதிகாரமல்ல. வாக்குப்பலம் மக்கள் கொண்டுள்ள பாராதீனப்படுத்த முடியாத அதிகாரமாகும். அதற்காக பாராளுமன்றம் சட்டங்களை விதித்தல் அல்லது சட்டங்களை விதிக்க முயற்சி செய்வதனூடாக இடையூறு விளைவிப்பதற்கான எந்தவிதமான உரிமையும் கிடையாது. அவ்வாறு செய்வது அரசியலமைப்பின் 3 மற்றும் 4 ஆகிய உறுப்புரைகளை மீறுவதாக அமையும். எவரேனும் ஜனாதிபதியொருவர் ஏலாமை நிலையினால் அல்லது வலுக்குறைவினால் அல்லற்படுவாராயின் அது குற்றப்பிரேரணையொன்றை கொண்டு வருவதற்கு ஏதுவாக அமையத்தக்க விடயமாகும். அரசியலமைப்பில் பாவிக்கப்படாத ஒரு பிரிவு இருக்கிறது. சனாதிபதி தேர்தலொன்றின் முன்னிலையில் மக்கள் தீர்ப்புக்கு ஏதுவாக அமையக்கூடிய அரசியலமைப்புத் திருத்தமொன்றை மேற்கொள்ள முயற்சி செய்வது மிகவும் கபடத்தனமான செயலாகும். இன்றேல் மனநோயாகும். எவ்வாறு இருப்பினும் இது குடியுரிமையை இல்லாதொழிக்கக்கூடிய பாரதூரமான அரசியலமைப்பு மீறலாகும். இந்த மீறல் தொடர்பில் அமைச்சரவையும் பின்தொடர்ந்த ஜனாதிபதியும் பொறுப்புக்கூறவேண்டும். ஜனாதிபதி தோ்தலுக்கான மாற்றீடாக மக்கள் தீர்ப்பொன்றினை நடாத்த முடியாது. அவ்வாறு நடைபெற இடமளிக்கவும் ஆகாது.

ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு முன்னர் நடாத்தப்படுகின்ற ஜனாதிபதி தோ்தலுக்கு முழு நாடுமே தயாராகுங்கள். உங்களுடைய பண்டங்களின் விலைகள் அதிகரித்த விதம் பற்றி சிந்தியுங்கள். பிள்ளைகளின் பாடசாலை உபகரணங்களின் விலைகள் அதிகரித்த விதத்தை சிந்தித்துப்பாருங்கள். பொருளாதார கொலைகாரார்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கிய விதம் பற்றி சிந்தித்துப்பாருங்கள். குற்றச் செயல் புரிந்தவர்கள், கொள்ளைக்காரர்கள் பாராளுமன்றத்தில் இருப்பது பற்றி சிந்தித்துப் பாருங்கள். எல்லா அரசாங்கங்களிலும் அமைச்சர் பதவிகளை வகித்து எல்லாவற்றுக்கும் கையை உயர்த்தி இந்த நிலைமை உருவாக காரணமாக அமைந்தவர்கள் பற்றி சிந்தித்துப்பாருங்கள். நீங்கள் எதிர்நோக்கியுள்ள பாரதூரமான பிரச்சினைகள் பற்றி சிந்திப்பதை மாற்றியமைக்க மேற்கொள்ளப்படுகின்ற மிலேச்சத்தனமான பிரயத்தனமே இது. அந்த பிரயத்தனங்களை கண்டிக்க வேண்டும்.

LNPP-press

LNPP-press

LNPP-press
Show More

“மறுமலர்ச்சிக்காக முழு நாடுமே ஒன்றாக” எனும் தொனிப்பொருளில் நேற்று (21) முற்பகல் கொட்டகலை மலையகம் மக்கள் சபை நிகழ்வு இடம்பெற்றது.

(-Colombo, July 22, 2024-) இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர், நுவரெலியா மாவட்டத் தலைவர் மஞ்சுள சுரவீர, தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினர் கலாநிதி பி.பி. சிவப்பிரகாசம் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

(-Colombo, July 22, 2024-)

இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர், நுவரெலியா மாவட்டத் தலைவர் மஞ்சுள சுரவீர, தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினர் கலாநிதி பி.பி. சிவப்பிரகாசம் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

Show More

“உலகின் எந்தவொரு நாட்டுடனும் போட்டியிட்டு பயணிக்கக்கூடிய ஒரு நாட்டை உருவாக்குவதே திசைகாட்டியின் எதிர்பார்ப்பு” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க-

(-ஜப்பானின் Tsukuba இலங்கை மக்கள் சந்திப்பு – 2024 . 07 . 21-) வாரத்தின் களைப்பான வேலைகளுக்குப் பின்னர் ஓய்வுநாளில் எம்மை செவிமடுக்க வந்தமை எமக்கு பலத்தையும் தெம்பினையும் நம்பிக்கையையும் பெற்றுக்கொடுக்கின்றது. ஜப்பானில் நாங்கள் நடாத்திக் கொண்டிருப்பது தேர்தலுக்கு முன்னராக நடைபெறுகின்ற இறுதி வெளிநாடுகளிலுள்ள இலங்கையருடனான சந்திப்பாகும். வெளிநாடு சென்றுள்ள இலங்கையருடனான இறுதி சந்திப்பினை ஜப்பானில் நடாத்த தீர்மானித்தமைக்கான காரணம் எமது நாட்டின் பொருளாதாரத்தில் பங்கேற்கக்கூடிய பாரிய குழுவொன்று ஜப்பானில் இருப்பதாலாகும். அதைப்போலவே அறிவு, அனுபவம், […]

(-ஜப்பானின் Tsukuba இலங்கை மக்கள் சந்திப்பு – 2024 . 07 . 21-)

AKD-JApan-Meeting

வாரத்தின் களைப்பான வேலைகளுக்குப் பின்னர் ஓய்வுநாளில் எம்மை செவிமடுக்க வந்தமை எமக்கு பலத்தையும் தெம்பினையும் நம்பிக்கையையும் பெற்றுக்கொடுக்கின்றது. ஜப்பானில் நாங்கள் நடாத்திக் கொண்டிருப்பது தேர்தலுக்கு முன்னராக நடைபெறுகின்ற இறுதி வெளிநாடுகளிலுள்ள இலங்கையருடனான சந்திப்பாகும். வெளிநாடு சென்றுள்ள இலங்கையருடனான இறுதி சந்திப்பினை ஜப்பானில் நடாத்த தீர்மானித்தமைக்கான காரணம் எமது நாட்டின் பொருளாதாரத்தில் பங்கேற்கக்கூடிய பாரிய குழுவொன்று ஜப்பானில் இருப்பதாலாகும். அதைப்போலவே அறிவு, அனுபவம், திறன்கள் கொண்ட குழுவினரைப்போலவே பாரிய இளைஞர் சமுதாயமொன்றும் ஜப்பானில் இருக்கிறது. உங்களின் அந்த வலிமையையும் பலத்தையும் எமது நாட்டின் நிலைமாற்றத்திற்காக பலம்பொருந்தியவகையில் சேர்த்துக்கொள்கின்ற நோக்கத்துடன் வெளிநாடு சென்றுள்ள இலங்கையருக்கான இறுதி சந்திப்பினை ஜப்பானில் நடாத்துகிறோம். எனது வெளிநாட்டு விஜயங்களுக்காக 700 இலட்சம் செலவாகியதாக ஒருவர் கூறியிருந்தார். இலங்கைக்கு திரும்பிச்சென்றதன் பின்னர் சிலநாட்களுக்குள் வெளிநாட்டு விஜயங்களுக்கான அனைத்தச் செலவுகள் பற்றிய விபரங்களையும் மக்களிடம் சமர்ப்பிக்க எதிர்பார்க்கிறேன். அதைப்போலவே ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி பதவியை வகிக்கின்ற காலப்பகுதிக்குள் வெளிநாட்டு விஜயங்களுக்காக செலவிட்ட தொகைகளையும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பர்னாந்துவும் வெளிநாட்டுத் தொழில்வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்காரவும் செய்த செலவினங்கள் பற்றியும் அறிவிக்கவேண்டுமென நினைக்கிறேன். நாங்கள் செலவிட்டிருப்பது அரசாங்கப் பணத்தையல்ல என்பதையும் உறுதியாகக் கூறுகிறோம். வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்மீது சிலர் பாரிய குற்றச்சாட்டினை முன்வைத்து இத்தடவை வாக்களிக்க செல்லவேண்டாமென்ற கதைகளைக் கூறியுள்ளார்கள்.

பலர் நாட்டைவிட்டுச் சென்றமைக்கான காரணம் எமது நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையாகும். அதைப்போலவே எமது நாட்டின் அரசியல் மாற்றமொன்றை ஏற்படுத்துவது தொடர்பில் வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்களுக்கு விசேட உரிமை இருக்கின்றது. ஏனெனில் இன்றும் எமது நாடு ஓடிக்கொண்டிருப்பது வெளிநாடுகளில் தொழில்புரிபவர்கள் அனுப்பிவைக்கின்ற பணத்திலாகும். கடந்த வருடம் அண்ணளவாக 5900 மில்லியன் டொலர்களை அனுப்பிவைத்திருக்கிறார்கள். இவ்வருடத்தில் இன்றளவில் 3000 மில்லியன் டொலர்களை விஞ்சியுள்ளது. இந்த இரண்டு வருடங்களுக்குள் அனுப்பிவைத்துள்ள பணம் 10,000 மில்லியன் டொலர்களை விஞ்சியிருக்கிறது.

அரசாங்கத்திற்கு சொந்தமான வெளிநாட்டு ஒதுக்கங்களின் அளவு அதில் அரைவாசியாகும். எமது நாட்டின் அரசியலால் அந்நியர்களாக்கப்பட நிர்ப்பந்தித்துள்ள உங்களுக்கு எமது நாட்டில் புதிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான புனிதமான உரிமை இருக்கின்றது. அந்த உரிமையை ஏற்றுக்கொள்வது தேசிய மக்கள் சக்தி மாத்திரமே. இந்த மாதம் கழிவதற்கு முன்னராக தோ்தல்கள் ஆணைக்குழுவினால் வேட்பு மனுக்கள் கோரப்படுகின்ற தினம் மற்றும் தோ்தல் நடைபெறுகின்ற தினம் பற்றி அறிவிக்கப்படுமென நாங்கள் நினைக்கிறோம். அவ்வாறு இருக்கையில் ரணில் விக்கிரமசிங்க தோ்தலுக்காக போட்டியிடுவது தொடர்பில் தான் கொண்டுள்ள ஐயப்பாட்டினை சமூகத்திற்கு விடுவித்துள்ளார். அவர் தோ்தலில் போட்டியிடுவாராயின் எந்த கட்சியிலிருந்து? தோ்தல் சின்னம் என்ன? ரணிலுக்கு மகிந்த ஒத்துழைப்பு வழங்குவாரா? போன்ற சிக்கல்கள் காரணமாக அவர் ஐயப்பாட்டுடனேயே இருக்கிறார். நீதிமன்றத்தினூடாக பிற்போட எடுத்த முயற்சிகள் இரண்டுமே உயர் நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது. அதனால் அரசியல் அமைப்புக்கான 22 வது திருத்தத்தை வர்த்தமானியில் பிரசுரித்து ஒரு குழப்பநிலையை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். இந்த அரசியலமைப்பு திருத்தச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அங்கு இரண்டு வாரங்கள் கழிய இடமளித்து, அடுத்த மூன்று வாரங்கள் நீதிமன்ற அலுவல்களுக்காக ஒதுக்கப்பட்டு, அந்த மூன்று வாரங்களுக்கு பின்னர் நீதிமன்றத் தீர்ப்பு பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டு, பாராளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை நடாத்தி பாராளுமன்றத்தில் 2/3 வாக்குப்பலத்துடன் அங்கீகாரம் பெறப்படவேண்டும். அதன் பின்னர் மக்கள் தீர்ப்பொன்றுக்கு அழைப்பு விடுப்பதற்கு ஏதுவாக தோ்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கவேண்டும். இந்த செயற்பாங்கு இடம்பெற்றுக்கொண்டிருக்கையில் ரணில் விக்கிரமசிங்க வீட்டுக்குச் செல்லவேண்டி நேரிட்டிருக்கும்.

AKD-JApan-Meeting

மக்கள் தீர்ப்புக்குச் செல்வதாயின் 1000 கோடி ரூபா செலவாகும். ஆனால் உயர்நீதிமன்றத்தினால் ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள் என்பது ஏற்கெனவே உறுதிசெய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் மூன்று சந்தர்ப்பங்களில் வழங்கிய தீர்ப்புகள் மூலமாக பதவிக்காலம் ஐந்து வருடங்களே என்பது தீர்மானிக்கப்பட்டுவிட்டது. தேசிய மக்கள் சக்தியை சோ்ந்த நாங்கள் எந்தவொரு தேர்தலுக்கும் தயார். ஜனாதிபதி தேர்தல் உரிய வகையில் நடாத்தப்படும். ரணில் வீட்டுக்குச்செல்லவேண்டிநேரிடும். அவர் அமைதியாக வீட்டுக்குச் செல்வார். தலைவர்களை வீட்டுக்கு அனுப்புகின்ற முதலாவது தருணம் இதுவல்ல. எமது நாட்டில் நீண்டகாலமாக மக்கள் தலைவர்களை வீட்டுக்கு அனுப்பி புதிய தலைவர்களை கொண்டுவந்திருக்கிறார்கள். எனினும் இதுவரை மிகவும் சிறப்பாக சட்டம் அமுலாக்கப்படுகின்ற, ஒழுக்கம் நிலவுகின்ற, எந்தவொரு தொழிலையும் புரிபவருக்கு தரமான உணவுவேளையொன்றை பெற்றுக்கொள்வதற்கான இயலுமை கிடைப்பதைப்போலவே அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் நிறைவடைந்த ஒரு நாடு உருவாக்கப்படவில்லை. இன்று நிலவுவது நாங்கள் எதிர்பார்த்த அடிப்படை விடயங்களில் மிகவும் வறுமைப்பட்ட ஒரு நாடாகும். பொருளாதாரத்தில் மாத்திரமல்ல உளப்பாங்குகளில், சட்டத்தை அமுலாக்குவதில், சுற்றாடலை சுத்தமாக வைத்துக்கொள்வதில் வறுமைப்படுள்ளதோடு, குற்றச்செயல்கள் நிறைந்த, போதைப்பொருட்கள் நிறைந்த, மோசடி, ஊழல்கள், விரயங்கள் நிறைந்த ஒரு நாடு உருவாக்கப்பட்டுள்ளது. உலகத்திற்கு கடன் செலுத்திக்கொள்ள முடியாத அளவுக்கு நாடும் பிரஜைகளும் வறுமைப்பட்ட மிகவும் பாதகமான கடினமான வாழ்க்கை உரித்தாகிய மக்கள் இருக்கின்ற ஒரு நாடாக இலங்கை ஏன் மாறியது?

எஸ்.பீ. திசாநாயக்க கண்டியில் அறுபதாம் தசாப்தத்தில் கொரியாவும், சிங்கப்பூரும், வியட்நாமும் எம்மைவிட தாழ்ந்த மட்டத்தில் இருந்தாலும் இன்றளவில் அந்த நாடுகள் எம்மை விட உயர்ந்த மட்டத்தில் இருப்பதாக கூறினார். இந்தக்காலப்பகுதிக்குள் நாட்டை ஆட்சி செய்தவர்கள் யார்? 1970 இல் பாராளுமன்றத்திற்கு வந்த மஹிந்த ராஜபக்ஷ தற்போது 54 வருடங்களை கழித்திருக்கிறார். இங்கு குழுமியுள்ள பெறும்பாலானோரின் வயது 54 வருடங்களை விட குறைவானதாகும். பாராளுமன்ற உறுப்பினர் பதவி, அமைச்சர் பதவி, எதிர்கட்சி தலைவர் பதவி, பிரதமர் பதவி மற்றும் 10 வருடங்கள் ஜனாதிபதி பதவியையும் வகித்து மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக்கொண்டு இருக்கிறார். ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திற்கு வந்த 1977 இலிருந்து இதுவரை 47 வருடங்களாக இருக்கிறார். தினேஷ் குணவர்தன 1983 லேயே பாராளுமன்றத்திற்கு வந்தார். தற்போது 41 வருடங்களாகின்றன. நான் இங்கு குறிப்பிட்டது பிரதானமான மூன்று பேர்களின் விபரங்களேயாகும். அவர்கள் ஆட்சி செய்த ஐந்து தசாப்தங்களுக்கு கிட்டிய காலப்பகுதிக்குள் வியட்நாம், தென்கொரியா, சிங்கப்பூர் எம்மை விட மேலே உயர்ந்து நாங்கள் இருந்த இடத்தை விட கீழே இறங்கி வங்குரோத்து அடைந்துவிட்டோம். 1950 இல் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 316 மில்லியன் டொலர்களாகும். தென்கொரியாவின் ஏற்றுமதி வருமானம் 25 மில்லியன் டொலர்களாகும். இன்று எங்களின் ஏற்றுமதி வருமானம் 12 பில்லியன் டொலர்களாகும். தென்கொரியாவில் 688 பில்லியன் டொலர்களாகும். வியட்நாம் 1980 இல் 400 மில்லியன் டொலர்களை ஏற்றுமதி வருமானமாக பெற்றது. அன்று இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1500 மில்லியன் டொலர்களாகும். ரணில் விக்கிரமசிங்காக்கள் அரசாங்கத்தை அமைத்துக்கொள்ள அண்மித்திருந்த காலத்தில் அந்த நிலைமையிலிருந்த இலங்கையில் தற்போது ஏற்றுமதி வருமானம் 12 பில்லியன் டொலர்களாக அமைகின்றபோது வியட்நாமில் 452 பில்லியன் டொலர்களாகும். உலகில் தோன்றியுள்ள புதிய மாற்றங்களுக்கு நேரொத்த வகையில் எமது நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைத்து முன்னெடுத்துச் செல்லவில்லை. பொருளாதார ரீதியாக சீரழிந்த ஒரு நாட்டில் ஒழுக்கம் நிலவமாட்டாது. அதைபோலவே குற்றச் செயல்கள் அற்ற ஒரு நாடு உருவாகவும் மாட்டாது. சாதகமான சமூகம் உருவாகவும் மாட்டாது பிறருக்கு மதிப்பளிக்கின்ற சமூகமொன்று உருவாகவும் மாட்டாது. சாதகமான சுற்றாடல் தொகுதியொன்று நிலவவும் மாட்டாது. நீங்கள் ஜப்பானின் பெரும்பாலான பண்புகள் பற்றி பேசி வருகையில் இலங்கை இந்த அரசியல் காரணமாகவே அனர்த்தத்திற்கு இலக்காகி இருக்கிறது. பழைய பாணியிலான அரசியல் கலாச்சாரம் காரணமாக பொதுமக்கள் இரவு விழுந்த கிடங்கில் பகலிலும் விழுகின்ற மட்டத்திற்கே 76 வருடங்களாக பயணித்துள்ளார்கள். 76 வருடகால இந்த பயணப்பாதையை நாம் அனைவரும் ஒன்று சோ்ந்து மாற்றியமைப்போம் என்ற செய்தியைக் கொடுக்கவே நாங்கள் உங்களை சந்திக்க வந்திருக்கிறோம்.

AKD-JApan-Meeting

அந்த அழிவுமிக்க பயணப்பாதையை மாற்றியமைப்பதற்கான மிகச் சிறந்த வாய்ப்பு உருவாகியிருக்கிறது. இதற்கு முன்னர் தேசிய மக்கள் சக்தியை சோ்ந்த நாங்கள் அதிகாரத்தை கோரினாலும் சமூகம் அதிகாரத்தை கொடுக்க தயார் நிலையில் இருக்கவில்லை. அதனால் நாங்கள் பாராளுமன்றத்தின் ரிமோட் கொன்ரோலை எங்களிடம் கொடுக்குமாறும் மற்றுமொரு சந்தர்ப்பத்தில் திறவுகோலை எங்களிடம் ஒப்படைக்குமாறும் வேண்டுகோள் விடுத்து இவ்வளவு தூரம் பயணித்திருக்கிறோம். கடந்த சில தசாப்தங்களில் மக்களின் சிந்தனைகள் பெருந்தொகையான கள்வர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைத்து அந்த கள்வர்களை பிடிப்பதற்காக ஜே.வி.பி. யின் மூன்று நான்கு பேரை அனுப்பிவைப்பதிலேயே இருந்தது. அரசாங்கம் தவறான வேலைகளை செய்யும்போது அவற்றை அம்பலத்திற்கு கொண்டுவர அவர்கள் இருந்தால் நல்லது எனும் எண்ணக்கருவே நிலவியது. எனினும் தற்போது மக்களின் மனங்களில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமொன்றை அமைக்கவேண்டும் என்பது நிலைகொண்டுள்ளது. எங்களுடைய தேவை இருக்கின்றதென்பதற்காக அதிகாரத்தை எடுத்துவிட முடியாது. அதனையொத்த தேவை மக்களின் பக்கத்திலும் உருவாக்க வேண்டும். நாங்கள் இதுவரை செய்தது தாக்குப்பிடித்துக் கொண்டிருப்பதேயாகும். 3% இற்கு வீழ்ந்தாலும் நாங்கள் பற்றிப்பிடித்துக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு சிலர் எமக்குக் கூறியது மக்களுக்கு தேவையில்லை என்றால் நீங்களும் கைவிட்டுவிட்டு வீட்டுக்கு போங்கள் என்றாகும். எனினும் நாங்கள் பற்றிப்பிடித்துக்கொண்டிருந்தோம். இன்று வடக்கு, தெற்கு என்கின்ற பேதமின்றி, சிங்கள,தமிழ்,முஸ்லிம் பேதமின்றி, உள்நாட்டில் வெளிநாட்டில் வசிக்கின்ற இலங்கையர் என்ற பேதமின்றி தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்றை கட்டியெழுப்ப வேண்டுமென்ற நிலைப்பாட்டிற்கு வந்திருக்கிறார்கள். எங்களிடமும் உங்களிடமும் கையளிக்கப்பட்டுள்ள செயற்பொறுப்பு அதனை வெற்றியை நோக்கி நெறிப்படுத்துவதாகும்.

எனினும் இந்த தோ்தல் இலங்கை வரலாற்றில் மிகவும் அசிங்கமான சம்பவங்கள் இடம்பெறுகின்ற தோ்தலாக அமையக்கூடும். இது வெறுமனே ஒரு எளிமையான தோ்தல் அல்ல. ஜனாதிபதி தோ்தல் 1982 இலிருந்து நடாத்தப்பட்டுள்ளது. எனினும் அத்தகைய எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நடத்துவார்களா இல்லையா என்கின்ற சந்தேகம் நிலவவில்லை. எனினும் இன்னமும் 19வது அரசியலமைப்பு திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு ஐயப்பாட்டு நிலைமையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த தோ்தல் அந்தளவிற்கு தனித்துவமானது என்பதாலேயே இன்னமும் ஐயப்பாட்டினை பேணிவருகிறார்கள். இந்த தோ்தலின்போது அரச அதிகாரத்தை பாரியளவில் பிரயோகிப்பதற்காக ரணில் விக்கிரமசிங்க மேலதிகமாக 875 கோடி ரூபாவை ஒதுக்கிக் கொண்டார். உறுமய கருத்திட்டம் முற்றாகவே அவருடைய தோ்தல் இயக்கம் ஒன்றாகும். அரச ஊழியர்களின் சம்பளத்தையும் 5000 ரூபாவினால் அதிகரிக்கப்போகிறார். வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் பணத்தை நாடுபூராவிலும் விரயமாக்கிக்கொண்டு மனுஷ நானாயக்கார இயங்கி வருகிறார். இளைஞர்கள் சேவைகள் மன்றத்திற்கு மேலதிகமாக 400 மில்லியன் அண்மையில் தோ்தல் வேலைகளுக்காக ஒதுக்கப்பட்டது. இலங்கை வரலாற்றில் ஒருபோதுமே இல்லாத வகையில் ஆளுநர்களின் ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டார்கள். லக்ஷ்மன் யாப்பாவின் அனைத்து நியமனங்களையும் இரத்துச் செய்ய செயலாற்றிய தோ்தல்கள் ஆணைக்குழுவிற்கு நாங்கள் நன்றிகூற கடமைப்பட்டிருக்கிறோம். அது மாத்திரமல்ல விரிவான ஊடக இயக்கமொன்றும் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு சில ஊடகங்கள் எம்மைக் குறிவைத்து தாக்குதல் நடாத்த தொடங்கியுள்ளன. எல்லாவற்றையும் விட உயரத்தில் இருப்பதாகக்கூறினாலும் ஒரு சிலர் அடியிலிருந்து இயங்கி வருவது புலனாகின்றது. இந்த நிலைமாற்றத்தை தடுப்பதற்காக அவர்களின் பக்கத்தில் இருந்து மேற்கொள்ளக்கூடிய எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உள்ளார்கள். மக்கள் எங்களுக்கு வழங்குகின்ற ஊக்கமும் நம்பிக்கையுமே தேசிய மக்கள் சக்தியின் வலிமையும் எதிர்பார்ப்புமாக அமைகின்றது. அதன் அடிப்படையில் வெற்றியை நோக்கி எங்களால் நெறிப்படுத்த முடியும். நிச்சயமாக எங்களால் வெற்றிபெற முடியும்.

AKD-JApan-Meeting

எங்கள் நண்பர்களும் வாழ்த்துக்கூறுபவர்களும் எங்களுடைய உயிர் பாதுகாப்பு பற்றி குறிப்பாக பேசுகிறார்கள். அவ்வாறான சந்தேகம் ஏற்பட இது எப்படிப்பட்ட சமூகம்? எவராவது அபேட்சகர் ஒருவரை சகித்துக்கொள்ள முடியாமல் கொலை செய்யப்படுவார் என்கின்ற சந்தேகம் எழுமாயின் நாங்கள் உயிர்வாழ்வது எப்படிப்பட்ட ஒரு நாட்டில்? தனிப்பட்ட முறையில் எங்களுடைய பாதுகாப்பு அல்ல பிரச்சினை, அத்தகைய ஒரு சிந்தனை ஏற்படுகின்ற ஒரு சமூகம் இருப்பது எவ்வளவு பயங்கரமானது? அத்தகைய உணர்வு ஏற்படுகின்ற பின்னணியே இந்த ஆட்சியாளர்களை விரட்டியடிக்க போதுமானது. தம்மால் இணங்க முடியாத தலைவர் ஒருவர் ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்காக அவரை படுகொலை செய்யவேண்டுமென்ற சிந்தனை உருவாகுமானால் அதற்கு பின்னால் இருக்கின்ற எமது நாட்டின் அரசியல் எவ்வளவு பயங்கரமானது? எல்லா விதத்திலும் செல்வம் கொழிக்கின்ற ஒரு நாட்டை உருவாக்குவதற்காகவே நாங்கள் வெற்றிபெற வேண்டும். பொருளாதார ரீதியாக, உளப்பாங்கு ரீதியாக, சட்டத்தின் ஆட்சியில் வெற்றிபெற்ற, ஒருவரையொவர் மதிக்கின்ற, இயற்கை சுற்றாடல் நிறைந்த ஒரு நாட்டை, உலகின் நவீனமான விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத்தினை உறிஞ்சி எடுத்துக்கொள்வதில் வெற்றிபெற்ற ஒரு நாட்டை நாங்கள் உருவாக்கவேண்டும். தேசிய மக்கள் சக்தியின் எதிர்பார்ப்பு உலகத்தில் எந்தவொரு நாட்டுடனும் சரிசமமாக நிற்கக்கூடிய ஒரு தேசத்தை உருவாக்குவதாகும்.

நாங்கள் எந்த இடத்தில் ஆரம்பிக்க வேண்டும்? ஒருவருக்கொருவர் இடையில் சந்தேகம், அவநம்பிக்கை, வன்மம், குரோதத்தை வளர்த்தெடுத்ததால் முன்னேற்றமடைந்த ஒரு தேசம் உலகில் இல்லை. அவை மூலமாக வறிய நாடுகள் மாத்திரமே உருவாக்கப்படும். எமது நாட்டில் தேசிய ஒற்றுமையை உருவாக்குவது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதானமான பணிகளின் ஒன்றாகும். பிரதானமாக பேசப்படுகின்ற இரண்டு மொழிகளும் நான்கு மதங்களை பின்பற்றுகின்ற மக்களும் எமது நாட்டில் இருக்கிறார்கள். தமிழ் இந்துக்களின் கலாச்சாரம், சிங்கள பௌத்தர்களின் கலாச்சாரம், முஸ்லிம் இஸ்லாமியர்களின் கலாச்சாரம் ஆகிய பன்வகைமை நிறைந்த ஒரு நாடு கலாச்சாரத்துறையில் நிலவுகின்றது. பன்வகைமையை ஏற்றுக்கொண்டு ஒருவரை ஒருவர் மதித்து முன்னோக்கி நகர்கின்ற ஒரு நாட்டை உருவாக்க வேண்டும். தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தை கட்டியெழுப்புவதற்காக எடுக்கின்ற பிரயத்தனத்தை அந்த ஒற்றுமை உருவாகியிருக்கிறது. கடந்த காலத்தில் பிறருக்கு எதிரான அரசியலில் ஈடுபடுவதன் மூலமாகவே அரசாங்கங்கள் உருவாக்கப்பட்டன. 2019 இன் தோ்தலாது முஸ்லிம் மக்களுக்கு எதிராக கட்டியெழுப்பப்பட்ட மாபெரும் ஆழிப்பேரலையாகும். கோட்டாபய அந்த பேரலை மூலமாகவே அதிகார பீடத்திற்கு கொண்டுவரப்படுகிறார். பேருவளை, அளுத்கம பிரதேசங்களில் முஸ்லிம் மக்கள் பெருவாரியாக வசித்தாலும் மொட்டுக்கட்சியின் வேட்பு மனுவில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் கூட இருக்கவில்லை. தேசிய மக்கள் சக்தி மீது பெரும்பான்மை சிங்கள மக்கள் நம்பிக்கை வைத்திருந்தாலும் அப்படிப்பட்ட அரசாங்கமொன்றை நாங்கள் அமைப்பதில் பயனில்லை. தமிழ் மக்களின் நம்பிக்கை, முஸ்லிம் மக்களின் நம்பிக்கை உள்ளிட்ட பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையைக் கொண்டதாக தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்றை அமைத்திடவேண்டும். கட்டியெழுப்பப்படுகின்ற ஆட்சிக்குள்தான் ஒற்றுமை என்பது உருவாகும். இந்த முயற்சியூடாக சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் நம்பிக்கையால் கட்டியெழுப்பப்படுகின்ற அரசாங்கமொன்று வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்ற பேதமின்றி அனைவரதும் அரசாங்கமொன்று உருவாக்கப்படும். நாங்கள் அரசாங்கமொன்றை அமைப்பதற்குள்ளேயே ஒற்றுமை கட்டி வளர்க்கப்படும். எமது தலைமுறையினர் பெருநிலம் நனையும் அளவிற்கு இரத்தமும் கண்ணீரும் பாய்ந்து செல்கின்ற யுத்தமொன்றை புரிந்துள்ளது. எங்களுடைய பிள்ளைகளின் தலைமுறையினருக்கு ஒற்றுமையைக் கொண்ட ஒரு தேசத்தை கட்டியெழுப்புவது தேசிய மக்கள் சக்தியின் பிரதானமான பணியாகும்.

AKD-JApan-Meeting

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கின்ற எண்ணக்கரு இருந்தாலும் பணமும் பலமும் படைத்தவர்கள் சட்டத்தால் பாதுகாக்கப்படுகிறார்கள். வறிய, பலவீனமானவர் தண்டிக்கப்படுகிறார். சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள் என்ற நிலைமையை உருவாக்குகின்ற ஆட்சியை தேசிய மக்கள் சக்தி முன்னெடுக்கும். அதனை எங்களால் மாத்திரமே சாதிக்க முடியும். சட்டத்திலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்கான குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், முறையற்ற வகையில் செல்வத்தை ஈட்டுபவர்கள் எங்களுடன் இல்லை. பலம் பொருந்திய ஒரு நாட்டை கட்டியெழுப்புகையில் வினைத்திறன் மிக்க அரச சேவையொன்று எமக்கு அவசியமாகின்றது. இன்று அரச சேவையிலிருந்து கருமம் ஒன்றை ஈடேற்றிக் கொள்ள செல்பவரும் அரச ஊழியரும் ஆகிய இரு சாராருமே திருப்தியடைந்தவர்களாக இல்லை. பதவியுயர்வு, இடமாற்றம், ஆட்சோ்ப்பு முற்றாகவே அரசியலின் பிடிக்குள் கட்டுப்பட்டுள்ளது. அரசியல் அதிகார நிலையின் இரையாக மாற்றப்பட்டுள்ள அரச சேவையை புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வினைத்திறன் மிக்க உயர்வான அரசசேவையாக மாற்றிடுவோம்.

அதைபோலவே உலகின் ஏனைய நாடுகளுடன் சமாந்திரமான அங்கீகரிப்பினை பெறுகின்ற நாடாக மாற்றியமைக்க வேண்டும். இன்று எமது நாட்டின் பாஸ்போர்ட் ஹய்ட்டி போன்ற நாடுகளின் நிலைமைக்கு இழுத்துப் போடப்பட்டுள்ளது. உலகத்தின் முன்னிலையில் கொச்சப்படுத்தப்பட்டுள்ள இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் சிந்திப்பது தமக்கு கிடைக்கின்ற முதலாவது சந்தர்ப்பத்திலே நாட்டிலிருந்து வெளியேறுவதேயாகும். உலகின் முன்னிலையில் அபகீர்த்தியடைந்துள்ள நிலையிலிருந்து மீட்டெடுத்து மதிப்பளிக்கப்படுகின்ற ஒரு நாடாக இலங்கையை மாற்றியமைப்பது தேசிய மக்கள் சக்தியின் முதன்மை பணியாகும். உலகத்தார் முன்னிலையில் எமது நாட்டை அபகீர்த்திக்குள்ளாக்க பங்களிப்புச் செய்த பசில் ராஜபக்ஷவின் கடவுச்சீட்டு அமெரிக்கன் கடவுச்சீட்டாகும். எம்மால் தீர்த்துவைக்கப்படவேண்டிய சமூக பிரச்சினைகளுக்கு விடையளிக்கையில் முதலில் பொருளாதார நிலைமாற்றமொன்று அவசியமாகின்றது. நானோ எமது கட்சியின் உயர் பீடங்களில் இருக்கின்ற எவருமோ வியாபாரத்தில் ஈடுபடபோவதில்லை. ஹோட்டல்களை நிறுவ, பார்களை திறக்க, மணல் கரைசோ்க்க, கல்லுடைக்க, சுற்றுலா ஹோட்டல்களை அமைக்க, பெற்றோல் ஷெட் போட நாங்கள் எவருமே வரப்போவதில்லை. பொருளாதாரத்தின் ஒரு சில செயற்பாடுகளை நெருங்கிய குழுக்களின் கைகளில் சிறைப்படுத்துகின்ற பொருளாதார சனநாயகத்தை இல்லாதொழிப்போம். இலங்கையின் பொருளாதாரத்தை புதிய உற்பத்தி பொருளாதாரமொன்றின் பால் ஆற்றுப்படுத்துவதற்காக இருக்கின்ற அனைத்து சாத்திய வளங்களையும் மதிப்பீடு செய்து முறைப்படி ஈடுபடுத்துவோம். மின்சாரம், நீர், கப்பற் கைத்தொழில், IT தொழில்நுட்பம் போன்ற சேவைகளை வழங்குகின்ற சாத்திய வளங்களை முறைப்படி பயன்படுத்துவோம். எமது மனித வளத்தை முறைப்படி நெறிப்படுத்தக்கூடிய புதிய கல்விசார் மாற்றங்களை ஏற்படுத்துவோம். பல துறைகளில் ஒருங்கிணைந்த முகாமைத்துவ ஆற்றல்களை உறிஞ்சி எடுத்த தேசிய திட்டமொன்றின் பேரில் நெறிப்படுத்துவோம். இவ்விதமாக நாட்டை கட்டியெழுப்புவதற்காக தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக நீங்களும் உங்கள் நண்பர்கள் உறவினர்களை ஊக்குவித்து தோ்தலுக்காக அணிதிரளுங்கள். உங்கள் சமூக வலைத்தள கணக்குகளூடாக அவர்களை விழிப்படைய செய்வியுங்கள். அத்தோடு நின்று விடாமல் தோ்தல் நெருங்கும்போது இலங்கைக்கு வருகை தாருங்கள். நாம் அனைவரும் ஒன்று சோ்ந்து இந்த அழிவினை தோற்கடிப்பதற்காக முனைப்பாக இடையீடு செய்வோம்.

AKD-JApan-Meeting

சபையிலிருந்து முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்கள்

கேள்வி: ஆட்சியாளர்கள் இதுவரை புரிந்த தவறுகள் தொடர்பில் உங்களுடைய ஆட்சியின் கீழ் எவ்வாறு செயற்பட போகிறீர்கள்?

பதில்: எங்களிடம் எவரையும் பழிவாங்கும் நோக்கம் கிடையாது. அந்த எவர் தொடர்பிலும் எங்களுக்கு தனிப்பட்ட பகைமையும் கிடையாது. மக்களின் சொத்துக்களை கோடிக்கணக்கில் கொள்ளையடித்ததாலேயே எமது நாடு இவ்வளவு வறிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் மருந்து இல்லாமல் ஒரு தாய் இறப்பதாயின், உணவு இல்லாமல் பிள்ளை ஒன்று இறக்குமாயின், தனது பச்சிளம் குழந்தையை தனியாக விட்டுவிட்டு வெளிநாடு செல்லவேண்டிய நிலை ஏற்படுமாயின், அவை அனைத்தும் ஏற்பட்டிருப்பது மக்களின் பணத்தை அவர்கள் கொள்ளையடித்ததாலேயே. அது தொடர்பில் நிச்சயமாக அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். அவரிடம் எல்லா தகவல்களும் இருப்பதாகவும் என்னிடம் வெற்றுக்கோப்புகளே இருக்கின்றதெனவும் ரணில் விக்கிரமசிங்க கடந்த தினம் ஒன்றில் கூறினார். ஊழலை கட்டுப்படுத்துவதற்கான செயலகத்திற்கு பெருமளவிலான முறைப்பாடுகள் கிடைத்தன. பழைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் செயலாற்றத் தொடங்கிய சந்தர்ப்பத்தில் புதிய முறைப்பாடுகள் வரத்தொடங்கின. அவை மத்தியில் ரவி கருணாநாயக்க சம்பந்தமாக பிராடோ ஊர்தி மோசடி சம்பந்தமான முறைப்பாடொன்றும் வந்தது. வெளிநாடுகளிலிருந்து கறவைப்பசுக்களை கொள்வனவு செய்தல் மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் மோசடிகள் பற்றி பி. ஹரிசனுக்கு எதிராக முறைப்பாடுகள் வந்தன. காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் காணி மோசடிகள் பற்றியும் முறைப்பாடுகள் வந்தன.

பழைய முறைப்பாடுகள் தொடர்பில் செயலாற்றிக்கொண்டிருக்கையில் புதிய முறைப்பாடுகள் வந்து குவிந்தமையால் ரணில் விக்கிரமசிங்க இந்த அலுவலகத்தை மூடிப்போட்டார். அது மாத்திரமல்ல, ரணில் விக்கிரமசிங்க சம்பந்தமான முறைப்பாடுகளும் வந்தன. ரணில் விக்கிரமசிங்க பற்றிய இரண்டு கோப்புகளை உள்ளிட்ட அனைத்து முறைப்பாடுகளும் பற்றிய தகவல்கள் என்னிடம் இருக்கின்றன. அவர்களை சட்டத்தின் முன் கொண்டு செல்வதோடு கையகப்படுத்தக்கூடிய அனைத்து ஆதனங்களையும் கையகப்படுத்துவோம். ஊழல் மோசடி மாத்திரமல்ல கால ஓட்டத்திலே மூடி மறைக்க முயற்சித்த பல குற்றங்களும் இருக்கின்றன. லசந்த விக்கிரமதுங்க, தாஜுடீன், எக்நெலிகொட போன்ற படுகொலைகளும் அரசியல் சூழ்ச்சிக்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டமை போன்ற குற்றச் செயல்கள் சம்பந்தமாகவும் முறையான விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்துவோம். பரப்பரப்பினை ஏற்படுத்திய குற்றச் செயல்கள் பற்றி விசாரணைகளை மேற்கொண்ட ஷாணி அபேசேகர மற்றும் ரவி செனெவிரத்ன போன்றவர்கள் தேசிய மக்கள் சக்தியின் இளைப்பாறிய பொலிஸ் கூட்டமைவின் பிரதானிகளாக இருக்கிறார்கள். அவர்களை பழிவாங்கலுக்கு இலக்காக்கினார்கள். எங்களுடைய நாட்டின் பாதாள உலகத்தை அரசியல்வாதிகளே நெறிப்படுத்துகிறார்கள். அவை அனைத்தும் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டு சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்துவோம்.

கேள்வி: முதலீடுகளை இலங்கைக்கு கொண்டு வருகின்ற சந்தர்ப்பங்களில் இதுவரை இடம்பெற்று வருகின்ற மிகப் பெரிய கொமிஸ் தொகை கோரல்களை நிறுத்த முடியுமா?

பதில்: எந்தவொரு தொழில் துறையும் முறையான சாத்திய வளங்களை கொண்டுள்ளதாவென ஆராய்ந்து பார்த்தல் வேண்டும். அதன்படி ஆக்கவிளைவுமிக்க எந்தவொரு கருத்திட்டத்திற்கும் ஒரு கிளாஸ் பச்சை தண்ணீர் கூட வாங்கிக் கொள்ளாமல் முதலீடுகளை ஈடுபடுத்துவோம். எத்தனை தொழில்கள் உருவாக்கப்படும்? எந்தளவு ஏற்றுமதி வருமானத்தை ஈட்டிக்கொள்ள முடியும்? எந்தளவுக்கு எங்களுடைய வளங்களை பயன்படுத்திக் கொள்வதில் வெற்றி பெறுகிறோம்? ஆகிய விடயங்களை உறுதி செய்து கொள்வது மாத்திரமே எமக்கு தேவை. இலங்கையில் ஒரு சீனிக் கம்பெனி வீசியெறியப்படுகின்ற கரும்பு கழிவுகளிலிருந்து மின்சாரத்தைப் பிறப்பிக்க தொடங்கியது. அந்த மின்சார உற்பத்தி அவருடைய தொழிற்சாலையின் தேவையை விட அதிகமானதாகும். மேலதிகமான அந்த மின்சாரத்தை தேசிய முறைமையுடன் சோ்த்துக்கொள்வதற்கான வாய்ப்பினை பெற்றுக்கொள்வதற்கான அமைச்சருடன் பேச்சு வார்த்தை மேற்கொள்ளப்பட்டது. அமைச்சரின் முன்மொழிவாக அமைந்தது யாதெனில் அமைச்சரின் மருமகனின் கம்பெனியொன்றை நிறுவி அந்த கம்பெனிக்கே வழங்கி அதனூடாக தேசிய முறைமைக்கு வழங்குவதாகும். அதைபோலவே நீங்கள் கூறியவாறு கழிவுப்பொருள் மீள்சுழற்சிக்காக வந்தவர்களிடம் அமைச்சர் தொழில் முயற்சியிலிருந்து 50% ஐ அவருக்கு கொடுக்குமாறு கூறியிருந்தார். அதனால் மக்களின் தேவையும் ஆட்சியாளின் தேவையும் ஒரே இலக்காக அமைகின்ற ஆட்சியொன்றை நாங்கள் நிறுவுவோம். பசில் ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெற்றுக்கொள்வதற்காகவே அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டார்கள். நாங்கள் மக்களின் நோக்கங்களும் ஆட்சியாளனின் நோக்கங்களும் ஒன்றாக அமைகின்ற ஆட்சியை நிறுவிக்கொள்வோம்.

கேள்வி: உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலில் எனது கணவரும் இரண்டு மகள்மார்களும் இறந்தார்கள். நான் மாத்திரம் காயங்களுடன் உயிர் பிழைத்தேன். இன்றைக்கு அந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு ஐந்து வருடங்களும் மூன்று மாதங்களும் கழிந்துள்ளன. அது சம்பந்தமாக நான் நிதிரீதியான நட்டஈட்டினை எதிர்பார்ப்பதில்லை. அதற்கான நீதி எவ்வாறு நிலைநாட்டப்படும்?

பதில்: கேட்டுக்கொண்டிருக்க முடியாத ஒரு உணர்வு அது தொடர்பில் எனக்கிருக்கிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று சில நாட்களுக்கு பின்னர் நான் ஒரு கூற்றினை வெளியிட்டேன். வேட்டையாடிச் செல்வது யார் என்று பார்த்தால் துப்பாக்கியை கட்டியவர் யாரென அறிந்து கொள்ள முடியுமென. தாக்குதலை மேற்கொண்ட சந்தர்ப்பத்திலும் அந்த சந்தேகம் எமக்கிருந்தது. அதன் பின்னர் பாராளுமன்ற தெரிகுழு, ஜனாதிபதி ஆணைக்குழு அதைபோலவே மேலும் விசாரணை நிறுவனங்கள் இது பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டன. விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டாலும் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டிய ஒரு சில இடங்கள் எஞ்சியுள்ளன. வவுணதீவில் படுகொலை செய்யப்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பற்றிய விசாரணைகள் முறைப்படி மேற்கொள்ளப்பட்டிருந்தால் சஹரானின் குண்டுத்தாக்குதல் இடம்பெற்றிருக்க மாட்டாது. எனினும் அந்த விசாரணைகளை மாஜி எல்.ரி.ரி.ஈ. யின் உறுப்பினர் ஒருவர் மீது திசை திருப்பினார்கள். மற்றுமொரு பக்கத்தில் ஏப்ரல் 04 ஆம் திகதி தாக்குதலை நடாத்துதல் பற்றிய தகவல்கள் வந்திருந்தன. ஏப்ரல் 09 ஆம் திகதி தாக்குதலை நடத்துபவர் யார் என்ற தகவல்கள் வந்திருந்தன. ஏப்ரல் 20 ஆம் திகதி நாளைய தினம் தாக்குதல் நடாத்தப்படும் என்ற தகவல் வந்திருந்தது. ஏப்ரல் 21 ஆம் திகதி காலை 7.00 மணிக்கு தாக்குதல் நடாத்தப்படப்போகின்ற இடங்கள் பற்றிய தகவல்கள் வந்தன. இந்த தகவல்களை நன்றாக புலனாய்வு செய்தால் அதனை தடுப்பதற்கு அத்தியாவசியமான தகவல்கள் சில கிடைக்கவில்லை என்பது புலனாகின்றது. கிட்டிய ஒருவர் தகவல்களை வழங்கினாலும் பாணந்துறை பிரதேசத்தின் வீடொன்றிலிருந்து தாக்குதல் நடாத்துவதற்கான திட்டம் தீட்டப்பட்டிருந்தமைக்கான தகவல் கிடைத்திருக்கவில்லை. தாக்குதலுக்கு அவசியமான பொருட்கள் பத்தரமுல்ல பிரதேசத்திலிருந்து கொள்வனவு செய்யப்பட்டமை பற்றிய தகவல்கள் கிடைப்பதுமில்லை. அப்படியானால் தாக்குதல் பற்றிய தகவல்களை கொடுத்தவர் யாரென கண்டறியவேண்டும். மூன்றாவதாக தாஜ் சமுத்ரா ஹோட்டலிலிருந்து வந்த ஜமீல் குண்டை வெடிக்கச் செய்யாமல் திரும்பிச் சென்றார். அவர் தெஹிவள பிரதேசத்தில் குண்டை வெடிக்கச் செய்விக்க முன்னர் இராணுவ உளவுப்பிரிவு ஜமீலின் வீட்டிற்கு சென்றது. அது எவ்வாறு இடம்பெற்றதென கண்டுபிடிக்க வேண்டும். தாக்குதலுக்கு பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு அதற்கான பொறுப்பினை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டவர் யாரென்பதையும் கண்டுபிடிக்க வேண்டும். மாத்தளையிலிருந்த பொடி சஹரானை நெறிப்படுத்திய ஒருவர் பொறுப்பினை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிடம் ஏற்றுக்கொள்ளுமாறு அழுத்தம் கொடுக்குமாறு பணிப்புரை விடுத்திருந்தார். அவ்வாறு பேசியவர் யாரென்பதை கண்டுபிடிக்க வேண்டும். கட்டுவாப்பிட்டியவில் குண்டினை வெடிக்கச் செய்வித்தவரின் மனைவி இறக்கவில்லை என்பது இரண்டு டி.என்.ஏ. பரிசோதனைகள் மூலமாக அம்பலமாகியது. மூன்றாவது பரிசோதனையில் அவர் இறந்துவிட்டதாக கூறப்பட்டது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலமாக வெளிப்பட்ட இந்த விடயங்களை சரியாக தெளிவுப்படுத்திக்கொள்ள வேண்டும்.

வெடிமருந்துகளை அதிவேக நெடுஞ்சாலை ஊடாக போக்குவரத்து செய்கையில் வாகனத்தை பரிசோதனை செய்யவேண்டாமென பணிப்புரை விடுத்தது யாரென்பதை கண்டறியவேண்டும். நீண்டதொரு விசாரணையல்ல, இந்த சிக்கல்களை தீர்த்துக்கொண்டு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவோம். அதைபோலவே தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகம் மீது சந்தேகத்துடனும் வன்மத்துடனும் நோக்குகின்ற நிலைமை உருவாக்கப்பட்டது. கர்தினால் ஆண்டகையின் இடையீடு இடம்பெற்றிராவிட்டால் எமது நாடு பாரிய தீப்பிழம்பாக மாறியிருக்கும். வேதனைகளுக்கு இலக்கானவர்களின் பொறுப்பினை கர்தினால் ஆண்டகை ஏற்றுக்கொண்டு செயலாற்றியமை தொடர்பில் இன்றும் நாங்கள் நன்றிகூற கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால் அந்த பொறுப்பினை ஏற்றுக்கொண்டமைக்காக இன்று அவர் மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த சகோதரியை இந்த பிரச்சினை மிகவும் பாதித்துள்ளதை போன்றே சமூகத்திற்கும் அவ்விதமான உணர்வினையே ஏற்படுத்தியுள்ளது. அரசியல் அதிகாரத்திற்காக இத்தகைய திட்டமிட்ட தாக்குதல்களை நடத்துவது மிகவும் பாரதூரமானது. அதைபோலவே தாக்குதல்களை தடுத்து நிறுத்தவேண்டியவர்களே தாக்குதலை திட்டமிடுபவர்களாக அமைந்தால் நாளைய தினமும் நாங்கள் பாதுகாப்பற்றவர்களே. அதனால் இந்த தாக்குதல் காலத்தினால் அல்லது வரலாற்றினால் அல்லது கண்ணீரினால் முற்றுப்பெற இடமளித்தலாகாது. தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்றின் கீழ் இந்த அத்தனை தகவல்களையும் நாங்கள் வெளிப்படுத்துவோம். இவ்வாறான அனர்த்தமொன்று மீண்டும் ஏற்படாதிருக்க இதற்கு பொறுப்புக்கூறவேண்டியவர்களை தராதரம் பாராமல் சட்டத்தின் முன் கொண்டு வருகின்ற பொறுப்பினை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.

கேள்வி: இலங்கையின் நிர்மாணத்துறையின் செயலாற்றக்கூடியவர்கள் ஜப்பானில் இருக்கிறார்கள். இப்போது இருக்கின்ற கயிற்றுப்பாலமல்ல, அவர்களை எமது நாட்டுக்கு வரவழைத்துக்கொள்ளக்கூடிய சக்திவாய்ந்த பாலத்தை அமைத்துக்கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பதில்: ஒரு சில துறைகளுக்கு அவசியமான மூலதனம் எம்மிடம் கிடையாது. ஒரு சில துறைகளுக்கு அவசியமான தொழில்நுட்பம் எம்மிடம் கிடையாது. மூலதனத்தையும் தொழில்நுட்பத்தையும் நாட்டுக்குள்ளே கொண்டு வந்து முதலீடு செய்வதன் மூலமாக பெற்றுக்கொள்கின்ற இலாபத்தில் நியாயமான ஒரு பங்கினை இலங்கை அரசாங்கத்திற்கு கொடுங்கள். எங்களுடைய வரிக்கொள்கைகளிலும் தனியார்துறையை பங்கேற்கச் செய்வதற்கான கோட்பாடு அதுவாகும்.

கேள்வி: நான் இலங்கை இராணுவத்தின் விசேட அதிரடிப் படையணியில் முனைப்பாக செயலாற்றிய வேளையில் ஊனமுற்ற ஒரு சிப்பாய். எனக்கு இப்போது ஜப்பானின் பிரஜாவுரிமை இருக்கிறது. எனினும் யுத்தத்தினால் ஊனமுற்ற 12,000 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் சொச்சத் தொகையை ஓய்வூதியமாக பெற்று வசித்துக்கொண்டிருக்கிறார்கள். அவ்வாறான ஊனமுற்றவர்களுக்காக உங்களுடைய ஆட்சியின் கீழ் கடைப்பிடிக்கின்ற வழிவகை என்ன?

பதில்: ஆகஸ்ட் 04 ஆம் திகதி இளைப்பாறிய முப்படை கூட்டமைவின் தேசிய மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தந்த துறைகளில் உள்ளவர்கள் எதிர்நோக்குகின்ற சிக்கல்கள் பற்றி ஆராய்ந்து கொள்கைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் சம்பந்தமாக எடுக்கின்ற தீர்மானங்கள் பற்றி 04 ஆம் திகதி வெளிப்படுத்த இருக்கிறோம்.

……………………………………………….

இந்த மக்கள் சந்திப்புக்காக தொழில் முயற்சியாளர்கள், தொழில்வாண்மையாளர்கள் போன்றே பெருந்தொகையான புத்திஜீவிகள் பங்கேற்றதோடு அவர்களை பிரதிநிதித்துவம் செய்து பேராசிரியர் ஸ்ரீகாந்த ஹேரத், பேராசிரியர் கீர்த்தி எச். குருகே, ஜப்பான் தேசத்தவரான சந்தவா மெஹெருமசா, வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாணவர் சங்கத்தின் ஜப்பான் பிரதிநிதி யோனிக் ஹான்ஸ், ஜப்பானின் இலங்கை தொழில் முனைவோர் சங்கத்தின் தலைவர் ஜகத் ராமநாயக்க, சௌரு எக்ஸ்போர்ட் நிறுவனத்தின் தலைவர் ஜயந்த ஹெட்டியாராச்சி, சோவியத் ரஷ்யாவின் லுமும்பா நட்புறவுச் சங்கத்தின் தலைவர் இளைப்பாறிய இராணுவ பிரிகேடியர் மொஹமட் சனுய் இஸ்ருப், மீடியா ஸ்கிறீன் எஞ்ஜினியரின் நிறுவனத்தின் முகாமையாளர் கலாநிதி தம்பிக்க மான்னக்கார, ஜப்பான் – ஸ்ரீ லங்கா தேசிய பேரவையின் தலைவர் ருக்மன் ஸ்ரீலால் வடுதந்திரி, பி.எச். குலோபல் டிரேடிங் நிறுவனத்தின் தலைவர் ஹர்ஷ குணசேன, நயோசா ருச்சிரன் டிரேடர்ஸ் தலைவர் நெவில் ஹெந்தா விதாரண, அறிஸ்டா ஜப்பான் நிறுவனத்தின் தலைவர் விஷ்மி இஸ்மயில், சிகா சிங்கராஜ தொழில் முயற்சியின் அதிபதி கமல் காரியவசம், தேசிய மக்கள் சக்தியின் கியோட்டோ கிளையின் லக்மினி களு ஆராச்சி, பெஸ்போன்ட் நிறுவனத்தின் பணிப்பாளர் அஜுவட், தேசிய மக்கள் சக்தியின் நகொயா கிளையின் சானக சம்பத், தேசிய மக்கள் சக்தியின் கியோட்டோ கிளையின் ஆனந்த, என்.கே.ஆர். எக்ஸ்போர்ட் நிறுவனத்தின் தலைவர் குமார குணதிலக ஆகியோர் மங்கள விளக்கேற்றி வைத்தனர்.

Show More

ஜப்பானுக்கு அநுர

(-Colombo, July 19, 2024-) எதிர்வரும் இரு நாட்களில் ஜப்பானில் வாழ்கின்ற இலங்கையர்களுடனான சந்திப்பு மற்றும் தொழில்வாண்மையாளர்களுடனான சந்திப்பு ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக புறப்பட்டுச் சென்ற தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க ஜப்பானில் Narita சர்வதேச விமானநிலையத்தில் இலங்கையர்களால் வரவேற்றப்பட்ட தருணம்…

(-Colombo, July 19, 2024-)

எதிர்வரும் இரு நாட்களில் ஜப்பானில் வாழ்கின்ற இலங்கையர்களுடனான சந்திப்பு மற்றும் தொழில்வாண்மையாளர்களுடனான சந்திப்பு ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக புறப்பட்டுச் சென்ற தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க ஜப்பானில் Narita சர்வதேச விமானநிலையத்தில் இலங்கையர்களால் வரவேற்றப்பட்ட தருணம்…

AKD-Japan
Show More