(தேசிய மக்கள் சக்தியின் கூட்டம் – சிலாபம் – 2024.07.28) கடந்த 50-60 வருட காலமாக இந்த நாட்டு மக்களுக்கு ரணில் விக்கிரமசிங்கவும் மஹிந்த ராஜபக்ஷவும் ஒருவருக்கொருவர் எதிராக ஆயுதமேந்திக்கொண்டு போராடுபவர்களாகவே புலப்பட்டார்கள். பச்சை நிறம் – நீல நிறம் என பிளவுபட்ட அவர்கள் பொய்யான காட்போட் வாள்களை ஏந்தி போரிட்டார்கள். ஆனால் ஊரிலுள்ள மக்கள் உண்மையாக பிளவுற்று சண்டைபோட்டுக் கொண்டார்கள். ஆனமடுவையின் ரங்கே பண்டார, இறந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் நடுத்தெருவில் சுட்டுக்கொள்ளவில்லையா? அவர்களால் தொடர்ந்தும் பகைவர்கள்போல் […]
(தேசிய மக்கள் சக்தியின் கூட்டம் – சிலாபம் – 2024.07.28)
கடந்த 50-60 வருட காலமாக இந்த நாட்டு மக்களுக்கு ரணில் விக்கிரமசிங்கவும் மஹிந்த ராஜபக்ஷவும் ஒருவருக்கொருவர் எதிராக ஆயுதமேந்திக்கொண்டு போராடுபவர்களாகவே புலப்பட்டார்கள். பச்சை நிறம் – நீல நிறம் என பிளவுபட்ட அவர்கள் பொய்யான காட்போட் வாள்களை ஏந்தி போரிட்டார்கள். ஆனால் ஊரிலுள்ள மக்கள் உண்மையாக பிளவுற்று சண்டைபோட்டுக் கொண்டார்கள். ஆனமடுவையின் ரங்கே பண்டார, இறந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் நடுத்தெருவில் சுட்டுக்கொள்ளவில்லையா? அவர்களால் தொடர்ந்தும் பகைவர்கள்போல் பிரிந்து சண்டைபோட முடியாது. அதனால் அவர்களுக்கு ஒரே மேடையில் ஏறவேண்டிய நிலையேற்பட்டது. களுத்துறையில் இடம்பெற்ற கூட்டத்தில் ஒரு கதிரையில் ரணில் விக்கிரமசிங்க, அடுத்த கதிரையில் மஹிந்த ரரஜபக்ஷ, இன்னுமொரு கதிரையில் ரவி கருணாநாயக்க, அடுத்த கதிரையில் பசில் ராஜபக்ஷ, அடுத்தாக வஜிர அபேவர்தன மற்றுமொரு கதிரையில் ரோஹித அபேகுணவர்தன. அந்த மேடை யானையுடையதா மொட்டுக்கட்சியினுடையதா? ரணிலைப் பார்த்ததும் யானைப்போல் தான் இருந்தது. அடுத்த கதிரையில் உள்ள மஹிந்தவைக் கண்டதும் மொட்டுபோல் தெரிகிறது. இப்பொழுது அது யானையுமல்ல மொட்டுமல்ல ஒரு பூட்டு ஆகும்.
இதுவரை காலமும் நாட்டின் அதிகாரமும் ஒன்றில் பச்சை நிறத்திடம் அல்லது நீல நிறத்திடமே இருந்தது. நீல நிற ஊழல் போ்வழிகளுக்கு பச்சை நிற அரசாங்கத்திடமிருந்தும் பச்சை நிற ஊழல் போ்வழிகளுக்கு நீல நிற அரசாங்கத்திடமிருந்தும் பாதுகாப்பு கிடைத்தது. இருப்பவர்கள் பாரிய திருட்டுக்களுக்கும் குற்றச் செயல்களுக்கும் பங்காளிகளாக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்டம் அமுலாகவில்லை. நிச்சயமாக செப்டெம்பர் 21 ஆம் திகதி மக்கள் வெற்றிபெறுவார்கள். அந்த வெற்றியை தடுக்க அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். 875 கோடி ரூபாவை ஒதுக்கிக் கொண்டு தோ்தல் இயக்கத்திற்காக பணத்தை செலவிட்டு வருகிறார்கள். கைவிடவேண்டாம் பங்கிடுகின்ற எல்லாவற்றையும் வாங்கிக் கொள்ளுங்கள். திருடிக் குவித்த பணத்திலிருந்து இந்த காலத்தில் இப்படியாவது மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பது நல்லது. பகிர்ந்தளிக்காமல் சேமித்துக் கொண்ட பணத்தை தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் நிச்சயமாக பறிமுதல் செய்யும்.
அதைபோலவே பொய்யான தகவல்களையும் குறைகூறல்களையும் பாரியளவில் பகிர்ந்தளிக்கின்ற தோ்தல் இயக்கமாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலரை தெரிவு செய்து அவர்களுக்காக இயங்கி வருகின்ற ஊடகங்கள் இருக்கின்றன. எனினும் நாங்கள் சந்திக்காத இலட்சக்கணக்கான மக்கள் தேசிய மக்கள் சக்திக்காக தோற்றி வருகிறார்கள். அவர்கள் அரச பலத்துடன் ஒரு சில அரச உத்தியோகத்தர்களை இணைத்துக் கொண்டு தோ்தல் நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஊர்களில் நிறுவியுள்ள சமுதாய பாதுகாப்பு குழுக்களை ரணில் விக்கிரமசிங்கவின் பிரச்சார அலுவல்களுக்காக ஈடுபடுத்த பிரதேச ஓ.ஐ.சி. இற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தேசபந்துவை இடைநிறுத்தியமைக்காக ரணில் ஏன் இவ்வளவு கோபப்பட வேண்டும். அதனால் தான் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறார். தினேஷ் குணவர்தனவும் ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார். முடியுமானால் பாராளுமன்றத்திற்கு வெளியில் வந்து அதனைக் கூறுங்கள். தேசபந்து தான் இன்னமும் பொலிஸ் மா அதிபர் என நினைப்பாரேயானால் ஒரு கையொப்பத்தை இட்டுக்காட்டவும்.
எங்களிடம் அரச அதிகாரம் கிடையாது, ஊடக அதிகாரமும் கிடையாது, பெருஞ் செல்வத்தின் அதிகாரமும் கிடையாது. எங்களிடம் இருப்பது சிலாபம் நகரத்திற்கு ஆற்று வெள்ளம்போல் திரண்டு வந்துள்ள மக்களின் பலமாகும். எதிர்வரும் இரண்டு மாதங்களில் இதுவரை செயலாற்றியதை போல் ஏழு எட்டு மடங்கு செயலாற்றுங்கள். உங்கள் வாக்குப்பெட்டிகளை திசைக்காட்டிக்கே புள்ளடியிட்ட வாக்குச் சீட்டுகளால் நிரப்புங்கள். அதன் பின்னர் பாராளுமன்றத்தை சுத்தப்படுத்துகின்ற அரசாங்கமொன்று அமைக்கப்பட வேண்டும். மக்கள்மீது எல்லையற்ற அழுத்தத்தைக் கொடுத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் விசேட கொடுப்பனவுகளை வழங்கி வேலை செய்கின்ற விதத்தை நாங்கள் கண்டோம். எண்ணெய் விலை அதிகரித்ததும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான எரிபொருள் கொடுப்பனவினை ஒரு இலட்சம் ரூபாவால் அதிகரித்துக் கொடுக்க தீர்மானித்தார்கள். நானும் எங்களுடைய ஹரினி தோழரும் தோழர் விஜித ஹேரத்தும் அதிகரித்த ஒரு இலட்சம் ரூபா கொடுப்பனவினை எங்களுக்கு வழங்கவேண்டாமென சபாநாயகருக்கு எழுத்தில் அறிவித்தோம். பார் பேமிட்டுக்களை பெற்று இரண்டு மூன்று கோடி ரூபாவிற்கு விற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். கேகாலையின் இராஜாங்க அமைச்சர் மூன்று பார் பேமிட்டுக்களை பெற்று ஒன்பது கோடி ரூபாவிற்கு விற்றிருக்கிறார். சஜித் பிரேமதாஸ அதிகாரத்திற்கு வந்ததும் அதனை இரத்துச் செய்வதாக கூறினார். ஐக்கிய மக்கள் சக்தியை சோ்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த பேமிட்டுக்களை வாங்கவில்லை எனக்கூறினால் நான் அதனை நிரூபிப்பேன். பெற்றோல் ஷெட்டுகளை பெற்று விற்கிறார்கள். செப்டெம்பர் 21 ஆம் திகதி வெற்றிக்கு பின்னர் இந்த அயோக்கித்தனமான பாராளுமன்றத்தை கலைத்து நல்ல பாராளுமன்றமொன்றை அமைத்துக் கொள்ள வாய்ப்பு வழங்குவோம்.
மக்களுக்கு உணவும் கல்வியும் சுகாதாரமும் வழங்கப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம். மக்களுக்கு உணவின்றி மருந்தின்றி 2048 வரை காத்திருக்கும்படி ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார். நாட்டை நாசமாக்கியவர்கள் நாட்டை கட்டியெழுப்புவதாகக் கூறுவது கேலிக்கூத்து. இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக நாட்டை மாற்றியமைக்கின்ற வறுமையிலிருந்து மீட்டெடுக்கின்ற குற்றச் செயல்களும் போதைப்பொருட்களுமற்ற சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட்ட புதிய நிலைமாற்றத்திற்காக நாம் அனைவரும் ஒன்று சேருவோம். பிரஜைகளுக்கு புதிய வாழ்க்கையை பெற்றுக்கொடுக்கின்ற புதிய தேசிய மறுமலர்ச்சி யுகமொன்றை கட்டியெழுப்புவோம்.
“வரலாற்றில் முதல் தடவையாக மக்களின் ஜனாதிபதி ஒருவரை நியமித்துக் கொள்வோம்”
-மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா-
2022 இல் ஏற்பட்ட மக்கள் போராட்டம் மூலமாக ஆட்சியாளர்களை விரட்டியடித்தாலும் முழுமையான வெற்றியை அடைந்து கொள்ள முடியாமல் ரணில் விக்கிரமசிங்க பின்தொடருகின்ற ஜனாதிபதியாகியுள்ளார். போராட்டத்தில் வெற்றிபெற முடியாமல் போன அனைவருக்கும் தோ்தலில் வெற்றியை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. தற்போது நடைபெற போவது அரசியல்வாதிகள் விரும்பாவிட்டாலும் மக்கள் ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் விரும்புகின்ற தோ்தலாகும். ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷ, சஜித் பிரேமதாஸ ஆகிய அனைவருக்கும் விரும்பாத தோ்தலாக மாறியிருப்பது 76 வருட கால இருண்ட கும்பல்களின் ஆட்சிக்கு பதிலாக பொதுமக்களின் ஆட்சியொன்று நிறுவப்படுவதாலாகும். வெற்றிக்கு அவசியமான அனைத்து காரணிகளும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. நீங்களும் நாங்களும் ஒருங்கிணைத்திருப்பது மற்றுமொரு ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக மாத்திரமல்ல. நாங்கள் “புதிய தேசிய மறுமலர்ச்சி” என்பதையே தொனிப்பொருளாக கொண்டுள்ளோம். மீண்டும் எழுச்சி பெறவேண்டியது அவசியமாகும். கடந்த 50 – 60 வருடங்களிலும் எந்தவிதமான வெற்றியையும் பெறாமல் கடன் வாங்கித் தின்று கடன் மேடு ஒன்றினை உருவாக்கியிருக்கிறோம். ரணில் விக்கிரமசிங்க அதிகாரத்திற்கு வரும்போது ஒட்டுமொத்த கடன் 83 பில்லியன் டொலராகும். இப்போது 100 பில்லியன் டொலரைத் தாண்டிவிட்டது.
மக்கள் மீது வற் வரி விதிக்கப்பட்டு மாதச் சம்பளம் பெறுகின்றவர்கள் மீது 36 வீதம் வரை வரி விதிக்கப்பட்டு மென்மேலும் வரி சுமத்தப்பட்டுள்ளது. அவர் நாட்டை மீட்டெடுக்கவில்லை. வீழ்ந்த மஹிந்த ராஜபக்ஷாக்களையே மீட்டெடுத்துள்ளார். எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்பு வீழ்த்தப்பட்ட நாட்டை கட்டியெழுப்புவதாகும். எமது நாட்டிலே இருக்கின்ற பெரும்பாலனவர்கள் தமது கைகளால் ஏதேனும் பணியைச் செய்து வருமானத்தை ஈட்டிக்கொள்கின்ற மக்களாவார்கள். அவர்களின் தொழில் துறைகளுக்கு தடையேற்படுத்தப்பட்டுள்ளது. அதனால் புத்தளம் மாவட்டத்தில் ஓடு, செங்கல் தொழிற்சாலைகள் பல மூடப்பட்டு விட்டன. மூடப்பட்டுள்ள இந்த கைத்தொழில்களுக்கு கைகொடுத்து உயர்த்தி விடுவது திசைக்காட்டியின் கொள்கையாகும். அரசியல்வாதிகள் தொழில் முனைவோரிடமிருந்து கப்பம் பெறுவதை நிறுத்துவது எங்களுடைய செயற்பொறுப்பாகும்.
இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் ஊழலும் மோசடியும் கட்டாயமாக நிறுத்தப்பட வேண்டும். குற்றம் புரிந்தவர்கள் கட்டாயமாக சட்டத்தின் முன் கொண்டுவரப்பட்டு தண்டிக்கப்படல் வேண்டும். உரிமையாளர்களற்ற எத்தனையோ சடலங்கள் கிடைக்கின்றன. அவை பற்றி விசாரிக்கக்கூடாதா? ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைப் பற்றி விசாரித்தறியவேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடாத்திய குற்றவாளிகள் பற்றி விசாரித்தறிய வேண்டும். ஒரு மனிதனை ஜனாதிபதியாக்குவதற்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றதென்பதை நாங்கள் அறிவோம். அவர்கள் தான் இந்த நாட்டிலே இனவாதத்தை தூண்டிவிட்டார்கள். முஸ்லிம், தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள இனவாதத்தை தூண்டி விட்டவர்கள் அவர்களே. வாக்குகளை பெறுவதற்காக முஸ்லிம் மக்களுக்கு எதிராக சிங்கள மக்களை தூண்டிவிட்டார்கள். அதேநேரத்தில் சிங்கள மக்களை பாதுகாக்கவே தான் முன்மொழிவதாக கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த கருத்திற்கு ஊடகங்கள் பரவலான பிரச்சாரத்தை பெற்றுக்கொடுத்தன. மானுடத்திற்கு எதிரான குற்றச் செயல் புரிந்தவர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்படல் வேண்டும். அதிகாரத்திற்காக அசிங்கமான, கீழ்த்தரமான, அநாகரிகமான அரசியலில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்த வேண்டும். தேசிய மறுமலர்ச்சியின் முதலில் செய்ய வேண்டியது சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையே தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதாகும்.
இலங்கை தேசியத்தை கட்டியெழுப்புவதற்கான முதலாவது அடியெடுப்பு செப்டெம்பர் 21 ஆம் திகதியே ஆரம்பிக்கிறது. அந்த நாள் கட்டாயமாக வரலாற்றின் குறிக்கப்படுகின்ற நாளாக மாறும். நாங்கள் புதிய ஒரு ஜனாதிபதியை நியமிப்போம் அவர் ஒரு “சோ்” அல்ல. அவர் ஒரு “தோழர்” ஆவார். “அதிமேதகு ஜனாதிபதி உத்தமர்” எனப்படுகின்ற குற்றச் செயல் புரிபவர்கள் யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து மக்களையும் நாட்டையும் பாதுகாத்துக் கொள்கின்ற ஒருவரை ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும். கூட்டாக செயலாற்றக்கூடிய கூட்டான கருத்துக்களுக்கு இடமளிக்கின்ற ஒரே இயக்கம் தேசிய மக்கள் சக்தியாகும்.
நாங்கள் வருவது ஒரு நல்ல நோக்கத்துடனாகும். எவரையும் பழிவாங்குவதற்காக வருவதில்லை. பல வருடங்களாக கைவிட முடியாத கனவொன்றினை மனதில் வைத்துக்கொண்டு நாங்கள் வந்திருக்கிறோம். நாம் அனைவரும் மகிழ்ச்சியாக வாழக்கூடிய கனவினை ஏந்திக்கொண்டு வந்திருக்கிறோம். உழைத்தோம். தோ்தலில் வெற்றிபெற்றோம். தோல்வியடைந்தோம். எனினும் நோக்கத்தை கைவிடவில்லை. நாங்கள் விலைபோகவில்லை. கொள்கையை விட்டுச் செல்லவுமில்லை. என்றாவது ஒரு நாள் மக்கள் எங்களுக்கு செவிசாய்ப்பார்கள் என்பதை நம்பி கொள்கைப்பிடிப்புள்ளவர்களாக பயணித்தோம். அரசியலை காட்டிக்கொடுக்காமல், அயராது உழைத்து, அர்ப்பணிப்புடன் இவ்வளவு தூரம் பயணித்திருக்கிறோம். எதிர்வரும் இரண்டு மாதங்களில் எவரையும் கைவிடாமல் அனைவரிடமும் சென்று உரையாடி எவராலும் தோற்கடிக்க முடியாத மக்கள் பலத்தை கட்டியெழுப்புவோம். வரலாற்றில் முதல் தடவையாக மக்களின் ஜனாதிபதி ஒருவரை வெற்றியீட்டச் செய்விப்போம்.
“சுதந்திரத்தை அனுபவிக்கக்கூடிய பொருளாதார ஆற்றலை அனைவருக்கும் கட்டியெழுப்ப வேண்டும்”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று பேரவை உறுப்பினர் சதுரங்க அபேசிங்க-
நெருக்கடிக்கு இலக்காகி உள்ள ஆட்சியாளர்கள் இறுதிச் சுற்றிலே ஐ.எம்.எப். இடமிருந்து கடன் பெற்று வெளிநாட்டு கடன் செலுத்துவதை பிற்போட்டுக் கொண்டு போராட்டத்தினால் விரட்டியடிக்கப்பட்ட தலைவர்களை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வர முயற்சி செய்து வருகிறார்கள். அந்த ஊழல் போ் வழிகள் பற்றி எமது நாட்டின் இளைஞர்களை உள்ளிட்ட மக்கள் அனைவராலும் விளங்கிக் கொள்ள முடியுமென நான் நம்புகிறேன். பொருளாதார கொள்கைகளை உள்ளிட்ட கொள்கைகளை அறிமுகம் செய்து அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்கான கூட்டு செயற்பாங்கிற்கு நாங்கள் வந்துள்ள பின்னணியில் மக்களை வெற்றியீட்டச் செய்விக்கின்ற கூட்டத்தில் இந்த கொள்கை ரீதியான வாக்குறுதிகளை அளிக்கிறோம். எங்களுடைய பெற்றோர்கள் நாங்கள் இழந்துள்ள உலகத்தின் மிக உயர்ந்த கல்வியை உங்கள் பிள்ளைகளுக்கு பெற்றுக்கொடுப்போம். அது மாத்திரமல்ல பாடசாலையிலிருந்து வெளியில் வரும்போது அவர்களுடைய இயலுமைக்கேற்ற வகையில் அரசாங்க அல்லது தனியார் துறையில் தொழில்களை புரிவதற்கு அல்லது ஒரு தொழில் முயற்சியாளராக செயற்படுவதற்கு அவசியமான கல்வியை புதிதாக அறிமுகம் செய்வோம். அவர்களுடைய கல்விக்கு உள்நாட்டில் மாத்திரமல்ல வெளிநாடுகளிலும் நன்மதிப்பொன்றினை பெற்றுக்கொடுப்பது எமது நோக்கமாகும். இன்று வெளிநாட்டு தொழில்கள் என நாங்கள் அனுப்பிவைப்பது அந்த நாடுகளில் உள்ள பிரஜைகள் விரும்பாத தொழில்களையாகும்.
அதைப்போலவே எமது பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வழங்குகின்ற சட்டத்தின் சமத்துவத்தை உருவாக்குவதாக வாக்குறுதியளிக்கிறோம். நான் அந்த பாதுகாப்பான வாழ்க்கையை கழித்தேன். நான் 26 வயதிலேயே தொழில் செய்ய தொடங்கினேன். மாலை 6.30 மணியளவில் வேலையை முடித்துவிட்டு இரண்டு பிள்ளைகளுடன் நேரத்தைக் கழிக்க தொடங்குவேன். உல்லாசமான வார இறுதியை கழித்தேன். அதைபோலவே அனைத்து பிரஜைகளுக்கும் பொருளாதார சுதந்திரம் கிடைக்க வேண்டும். வாரத்திற்கு 40 மணித்தியாலம் வேலை செய்தால் வாழ்க்கையின் ஒரு பகுதி என்ற வகையில் சுதந்திரத்தை அனுபவிப்பதற்கான பொருளாதார இயலுமை கட்டியெழுப்படல் வேண்டும். இந்த கலாச்சார வாழ்க்கையை அடைவதற்கான வாய்ப்பு 76 வருடங்களுக்கு பின்னர் நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் கிடைத்துள்ளது. அதனை யதார்த்தமாக மாற்றிக் கொள்ள புத்தளம் மாவட்ட மக்கள் திசைக்காட்டியின் வேட்பாளரான தோழர் அநுர குமார திசாநாயக்கவிற்கு மகத்தான வெற்றியை பெற்றுக் கொடுப்போம்.
“நிலவுகின்ற துன்பகரமான நிலைமையை மாற்றியமைப்பதற்கான பொறுப்பினை திசைகாட்டி ஏற்றுக்கொள்ள தயார்”
-தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நிறைவேற்றுச் சபை உத்தியோகத்தர் கயான் ஜானக்க-
எதிர்வரும் ஜனாதிபதி தோ்தலுக்காக புத்தளம் மாவட்ட மக்கள் பல்வேறு பிரிவுகளில் ஒழுங்கமைந்து மிகச்சிறப்பாக தயாராகி இருக்கிறார்கள். மீனவர், கமக்காரர், பெண்கள், உழைக்கும் மக்கள் என்றவகையில் ஒழுங்கமைத்துவந்த பயணத்தின் வெற்றிகரமான பெறுபேறு கிடைத்துள்ளது. இந்த மாவட்டத்தின் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலும் வட்டார சபைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த இரண்டு மாதத்திற்குள் தோ்தல் அமைப்புக்களை தாபித்து வருகிறோம். ஒவ்வொரு தோ்தல் தொகுதிக்கும் தோ்தல் குழுக்களை நிறுவுதல் அடுத்த பத்தாம் திகதி அளவில் நிறைவு பெறும். இன்று இத்தருணமாகும்போது பாடசாலை செல்கின்ற பிள்ளைகளில் 14 இலட்சம் போ் பட்டினியாக பாடசாலைக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. நிலவுகின்ற துக்ககரமான நிலைமையை மாற்றியமைக்கின்ற பொறுப்பினை தேசிய மக்கள் சக்தி ஏற்றுக்கொள்ளத் தயார். எதிர்காலத்தில் மேலும் பலமடைந்து தோ்தல் வெற்றிக்காக மிகுந்த பலத்துடனும் வலிமையுடனும் அணிரள்வோம் என அழைப்பு விடுக்கிறோம்.
“யானைக்கும் – மனிதனுக்கும் இடையிலான மோதலுக்கு திசைகாட்டியின் சுற்றாடல் குழுவின் கீழ் தீர்வுகள் வகுக்கப்பட்டு விட்டன.”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று பேரவை அங்கத்தவர் பேராசிரியர் சந்தன அபேரத்ன-
தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் குழுக்களின் மத்தியில் மீன்பிடி அலுவல்கள் சம்பந்தமான தயாரிக்கப்படுகின்ற கொள்கையில் புத்தளம் மாவட்டத்தின் மீனவர்கள் மீது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் மீன்பிடித் துறைமுகங்களும் படகுத்துறைகளும் அழிவடைய இடமளித்தல், மீன்பிடி கருவிகளில் விலைகள் தாக்குப்பிடிக்க முடியாததாக அமைதல் மற்றும் எரிபொருள் விலையேற்றம் சம்பந்தமாக எங்களுடைய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மிகுந்த சிரமங்களின் மத்தியில் அறுவடை செய்து வருகின்ற மீன் விளைச்சலுக்கு நியாயமான விலை இதுவரை கிடைப்பதில்லை. அது சம்பந்தமாக அடிப்படை திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளதோடு இந்த மாவட்டத்தில் அபிவிருத்தி செய்யக்கூடிய சுற்றுலா தொழிற்றுறையில் சாத்தியவள கற்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்றளவில் உல்லாசப் பயணிகளுக்கு வீசா வழங்கும்போது கூட கொள்ளையடிக்கின்ற ஆட்சியொன்று நிலவுகின்றது. அதற்கு மேலதிகமாக எமது மாவட்டத்தில் இயங்கி வந்த சீமெந்து தொழிற்சாலை மூடப்பட்டு விட்டது. அதற்கு பதிலாக இந்த மாவட்டத்தில் அபிவிருத்தி செய்யக்கூடிய தொழிற்சாலைகளை பற்றிய விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. யானைக்கும் மனிதனுக்கும் இடையிலான மோதலுக்கு இரையாகியுள்ள கருவலகஸ்வெவ, நவகத்தேகம உள்ளிட்ட பிரதேசத்தில் நிலவுகின்ற பாரதூரமான பிரச்சினையை தீர்த்து வைக்க சுற்றாடல் குழுவின் கீழ் தீர்வுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. செப்டெம்பர் 21 ஆம் திகதி தோழர் அநுர ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் இந்த அபிவிருத்தித்திட்டங்கள் அனைத்தும் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.
“நாங்கள் அனைத்து பிரஜைகளுக்கும் சாதகமான எதிர்காலமொன்றை அமைத்துக் கொடுப்பதற்காகவே பல்வேறு சக்திகளை ஒன்று திரட்டினோம்”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவையின் உறுப்பினர் மௌலவி முனீர் முலஃப்பர்-
சுற்றுப்புற பிரதேசங்களில் ரணில் ஜனாதிபதி என்று போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள். நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அது செப்டெம்பர் 21 ஆம் திகதி மாத்திரமே. நிச்சயமாக தோழர் அநுர குமார திசாநாயக்க தோ்தலில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். “ஒன்றாக வெற்றிபெறுவோம்” என்று போராட்டக் கோஷத்தை தொடங்கியிருக்கிறார்கள். அந்த வெற்றி எவருக்காக? இந்த நாட்டு மக்களுக்கு அல்ல. அது அவர்களின் வகுப்பைச் சோ்ந்தவர்களுக்கு. மக்களின் வெற்றி இருப்பது தேசிய மக்கள் சக்தியிடம் மாத்திரமே என்பதை வலியுறுத்தி கூறவிரும்புகிறேன். அவர்கள் உங்களுக்கு அருகில் வந்து பல வருடங்களாக பல்வேறு சக்திகளை அமைத்துக் கொண்டது அவர்களுக்கு அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காகவே. தேசிய மக்கள் சக்தி நாடு பூராவும் சென்று பல்வேறு சக்திகளை சோ்த்துக் கொண்டது அரசாங்கமொன்றை அமைத்துக் கொள்வதற்காக அல்ல; நாட்டின் மக்கள் அனைவருக்கும் சாதகமான எதிர்காலமொன்றை அமைத்துக் கொடுப்பதற்காகவே. மொட்டுக் கட்சியில் இருக்கின்ற திருடர்கள் அத்தனை பேரும் ஐக்கிய மக்கள் சக்தி மேடையில் ஏறியதும் எப்படி நல்லவர்களாக மாறுவார்கள் என சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. தேசிய மக்கள் சக்தியை சுற்றி இணைந்திருப்பவர்கள் கள்வர்களுடன் இருந்த சக்திகளல்ல. மக்களுடன் இருந்த சக்திகளே என்பதை நாங்கள் வலியுறுத்த வேண்டும். ஊழலற்றவர்களாக செயலாற்றக்கூடிய ஒரே சக்தி தேசிய மக்கள் சக்தி மாத்திரமே என்பதை முழு நாடுமே விளங்கிக்கொண்டுள்ளது.
“විඳි දුක් අවසන් කර ලස්සන රටක් හදන්න අපි හැමෝම එක්වෙන්න ඕනෑ”
-ජාතික ජන බලවේගයේ ජාතික විධායක සභික සමන්මලී ගුණසිංහ-
මේ රටේ ගැහැනුන් වන අපි ගමක් ගමක් ගානේ, ආයතනයක් ආයතනයක් ගානේ ගොස්, ගැහැනුන්ට අවදි වෙන්න කියලා ආරාධනා කළා. තම තමන්ගේ ලෝකවල් හදාගෙන තම තමන්ගේ පවුල්වලට අනාගතය නිර්මාණය කරන්න හදපු අතීතයෙන් මිදී අපේ රටේ ගැහැනුන් එළියට ඇවිත් සිටින්නෙ මේ රටේ ජනතාව, අනාගතය සහ දරුවන් ජයග්රහණය කරවන්නයි. මෙතෙක් කල් මේ රටේ ජනතාව සමග ගැහැනුන් විදිහට අපිත් සොයා යමින් තිබූ පාර හැමෝම පැැහැදිලි කරගෙන තිබෙනවා. සැප්තැම්බර් 21 දක්වා ඒ ගමන ධෛර්යයෙන් යන්න ඕනෑ. ඒ වගේම අපේ යහළුවන්, නෑදෑයන්, සියලු දෙනාටම ජාතික ජන බලවේගයේ පවුලත් එක්ක එකතු වෙන්න ඕනෑ කියලා ආදරයෙන්, ආරාධනා කරන්න ඕනෑ. මේ දිස්ත්රික්කයේ කර්මාන්ත ගණනාවකට විභවයක් තිබුණාට ආදරණීය අම්මලා වැඩිපිරිසක් ඉන්නේ මැදිපෙරදිග රැකියාවලයි. සහෝදරියන් වැඩි පිරිසක් ඉන්නේ විදේශ රැකියාවලයි. සැමියන් විශාල පිරිසක් ඉන්නේ විදේශ රටවලයි. එහෙම නැත්නම් නිදහස් වෙළඳ කලාපයේ කුකුල් පැටවුන් වගේ කාමරවලට ගාල් කර තිබෙනවා. අපි හැමෝම මේ දක්වා විඳි දුක් අවසන් කර, ලස්සන රටක් හදන්න අපි හැමෝම එක්වෙන්න ඕනෑ.
(-Galle, July 26, 2024-) இன்று (26) காலியில் இடம்பெற்ற ”முஸ்லிம் சகோதரத்துவ சந்திப்பு” நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார். புதிய தேசிய மறுமலர்ச்சிக்காக காலி மாவட்ட முஸ்லிம் உறவுகள் தோழர் அநுரவுடன் ஒன்றிணைந்துக் கொண்டனர்.
(-Galle, July 26, 2024-)
இன்று (26) காலியில் இடம்பெற்ற ”முஸ்லிம் சகோதரத்துவ சந்திப்பு” நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார். புதிய தேசிய மறுமலர்ச்சிக்காக காலி மாவட்ட முஸ்லிம் உறவுகள் தோழர் அநுரவுடன் ஒன்றிணைந்துக் கொண்டனர்.
(-தேசிய மக்கள் சக்தியின் மஹியங்கனை கமக்காரர் கூட்டம். – 2024.07.25-) கடந்த சில மாதங்களாக தேர்தலை நடாத்தவார்களா இல்லையா என்ற உரையாடல் சமூகத்தில் நிலவியது. அது ரணில் விக்கிரமசிங்க தேர்தலை எதிர்கொள்ளாமல் பலவந்தமாக அதிகாரத்தில் இருப்பதற்காக செயலாற்றிக் கொண்டடிருந்தமையாலாகும். அவர் ஏதோ ஒரு அதிர்ஷ்டம் காரணமாக சனாதிபதி கதிரையில் அமர்ந்தார். தேர்தலுக்குச் சென்றால் கதிரையிலிருந்து கீழேதான். அதனால் தேர்தலை தவிர்த்துக் கொள்வதற்காக சனாதிபதி பதவிக்காலம் பற்றி நீதிமன்றத்திடம் வினவினார். அதந்த வினவலுக்கு ஒரு இலட்சம் தண்டப்பணம் விதிக்கப்பட்டது. […]
(-தேசிய மக்கள் சக்தியின் மஹியங்கனை கமக்காரர் கூட்டம். – 2024.07.25-)
கடந்த சில மாதங்களாக தேர்தலை நடாத்தவார்களா இல்லையா என்ற உரையாடல் சமூகத்தில் நிலவியது. அது ரணில் விக்கிரமசிங்க தேர்தலை எதிர்கொள்ளாமல் பலவந்தமாக அதிகாரத்தில் இருப்பதற்காக செயலாற்றிக் கொண்டடிருந்தமையாலாகும். அவர் ஏதோ ஒரு அதிர்ஷ்டம் காரணமாக சனாதிபதி கதிரையில் அமர்ந்தார். தேர்தலுக்குச் சென்றால் கதிரையிலிருந்து கீழேதான். அதனால் தேர்தலை தவிர்த்துக் கொள்வதற்காக சனாதிபதி பதவிக்காலம் பற்றி நீதிமன்றத்திடம் வினவினார். அதந்த வினவலுக்கு ஒரு இலட்சம் தண்டப்பணம் விதிக்கப்பட்டது. மீண்டும் அரசியலமைப்பின் 19 வது திருத்தம் தவறானதெனக்காட்டி அதனை தீர்த்துக்கொள்ளும்வரை தேர்தலை பிற்போடுமாறு கோரி ஒரு வழக்கினை தாக்கல் செய்தார்கள். வழக்கினை தாக்கல் செய்தவருக்கு ஐந்து இலட்சம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. அடுத்ததாக 22 வது திருத்தம் ஐந்து வருடங்களே என்பதை உறுதிசெய்து கொள்வதற்காக திருத்தமொன்று கொண்டுவரப்பட வேண்டுமெனக் கூறினார்கள். அந்த செயற்பாங்கு நிறைவடையும் போது சனாதிபதி தேர்தல் நடாத்தப்பட்டு ரணில் வீட்டுக்கும் போய்இருப்பார்.
தற்பொது மாகாண சபைகளின் அதிகாரம் ஆளுனர்களிடமே இருக்கின்றது. அளுனர்களால் இணைப்புச் செயலாளர்களை நியமித்துக்கொள்ள முடியுமென ரணில் கூறினார். அவ்வாறுகூறி பிரதேச தலைவர்களுக்கு அதிகாரத்தைக் கொடுக்க முனைந்தார். தேர்தல்கள் ஆணைக்குழு அதனை நிறுத்தியது. அதன் பின்னர் ஊர்களில் சமுதாய ஆலோசனைக் குழுக்கள் போன்ற ஒன்றை உருவாக்கி அரசாங்கத்தின் பணத்தை கட்சி ஆதரவாளர்கள் ஊடாக செலவிட முயன்றார். உயர்நீதிமன்றம் அதனையும் தடுத்தது. அதன் பின்னர் குற்றச்சாட்டுக்குஇலக்காகிய ஒருவரை பொலிஸ் மா அதிபராக்கினார்கள். உயர்நீதிமன்றம் அதனையும் நிறுத்தியது. இலங்கை வரலாற்றில் முதல்த்தடவையாக பொலிஸ் மா அதிபரை தொழில் இடைநிறுத்தம் செய்தது. இப்போது பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிக்க வேண்டும் அதற்கான அதிகாரம் சனாதிபதிக்கே உண்டு. அதற்கும் ஏதாவது தில்லுமுல்லுபண்ண விளைகிறார்கள். பொலிஸ் திணைக்களத்தை செயலிழக்கச் செய்வித்து தேர்தலை அதன் மூலமாகவேனும் நிறுத்தமுடியுமா எனப் பார்க்கிறார்கள். சனாதிபதி தெரத்தலுக்கு மத்தியில் பாராளுமன்றத்தைக் கலைத்தல் பற்றிய பேச்சும் அடிபடுகிறது. அவ்வாற இடம்பெற்றால் ரணில் அன்றைய தினமே வீடு செல்வார். தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து மக்கள் ஆரம்பித்துள்ள அரசியல் பயணம் தற்போது வளர்ச்சியடைத்துள்ளது.
தமது பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்காகவும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவும் இங்கே இருப்பவர்கள் பல தடவைகள் வாக்குகளை அளித்திருக்கிறார்கள். உலகம்வேகமாக முன்நோக்கி நகர்ந்தது. எனினும் இறுதியாக எமது நாடு பொருளாதாரரீதியாக வீழ்த்தப்பட்டது. 1980 இல் வியட்நாமின் ஏற்றுமதி வருமானம் 40 கோடியாகும். இலங்கையில் 150 கோடியாகும். இன்று எமது ஏற்றுமதி வருமானம் 12 பில்லியன் டொலர்களாகும். வியட்நாமில் 420 பில்லியன் டொலர்களாகும். தென்கொரியா 1950 இல் 25 மில்லியன் டொலராகும். எங்கள் எற்றுமதி வருமானம் 316 மில்லியன் டொலராகும். இன்று எமது
ஏற்றுமதி வருமானம் 12 பில்லியன் டொலர்களாகும். தென்கொரியாவில் 685 பில்லியன் டொலராகும். இது மகிந்த, ரணில், தினேஷ் பல வருடங்கள் ஆட்சிசெய்த நாடாகும். நாங்கள் எவ்வளவு பின்நோக்கிச் சென்றுள்ளொம். சுக்கான் எவருடைய கையில் இருந்தது. இந்த ஆட்சியாளர்கள் தோல்வியின் அடித்தளத்திற்கே சென்றுள்ளார்கள். தமது இருப்பிற்காக சிறிய சிறிய வேலைகளை செய்து வருகிறார்கள். பொய்வாக்குறதிகளை அளித்து வாக்குகளைப்பெற்று தமது வேலைகளை செய்துகொண்டார்கள். வீதியை அமைத்தோம், லயிற் கொடுத்தோம், மதகுகளை அமைத்தோம் என்று கூறி வாக்குகளைப்பெற்று அவர்கள் கரை சேர்ந்தார்கள். நாடு பின்நோக்கி நகர்ந்தது. பொருளாதாரம் சீரழிந்து விட்டதென்பது அவர்களுக்கு ஒரு பிரச்சினையல்ல. மக்கள் பலநாட்கள் எரிபொருள் வரிசையில் இருக்கையில் அவர்களுக்கு தனிவேறான ஷெட் கொடுக்கப்ட்டது. அதில் எண்ணெய் அடித்துக்கொள்ளாத ஒரேயொரு கட்சி தேசிய மக்கள் சக்தி மாத்திரமே. எண்ணெய் விலை அதிகரிக்கையில் மக்களால் தாங்கிக்கொள்ள முடியாதிருக்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் கொடுப்பனவினை ஒரு இலட்சம் ரூபாவினால் எரிபொருள் கொடுப்பனவினை அதிகரித்தார்கள். தேசிய மக்கள் சக்தி மாத்திரமே அதனை பெற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் வகுத்த கொள்கை காரணமாகவே எண்ணெய் தட்டுப்பாடு எற்பட்டது.
மக்கள் பச்சை நிறத்திற்கு, நீல நிறத்திற்கு எந்த நிறத்திற்கு வாக்களித்தாலும் இறுதிப் பெறுபேறு இதுதான். நாங்கள் பழைய கதைகளை மற்ந்துிடுவோம். அனைவரும் ஒன்றுசேர்ந்து பொதுமக்களின் அரசாங்கமொன்றை அமைத்திடுவோம். எங்கள் ஊடகங்களால் பாரிய அழுத்தம் கொடுக்க முடியும். ஏனைய காலங்களில் சுயாதீனமாக செயற்பட்டாலும் தேர்தல் நெருங்குககையில் ஊடகங்களும் தமது பாசறைகளை அமைத்துக்கொள்கின்றன. அந்த பாசறைகளுக்கு தேவையான அளவில் பணம் பம்ப் பண்ணப்படுகின்றது. தேர்தல் இயக்கத்திற்காக கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கப்படுகின்றது. இலங்கையில் முதல்த்தடவையாக எங்கள் பொலீஸை தேர்தல் இயக்கத்திற்காக ஈடுபடுத்தினார்கள். சமுதாய பாதுகாப்பு குழுக்களை சேரக்கத் தொடங்கினார்கள். ஓ.ஐ.சீ. கூறுகின்ற அளவுக்கு பிரதேசத்தின் ஜீப் வண்டிகள், உணவு, கதிரைகளை கொண்டுவரவேண்டும். வெல்லவாயவில் நான் கண்டேன் பிரதேசத்தின் ஜீப் வண்டிகள், உணவு, கதிரைகளை ஏற்றிக்கொண்ட டிரக் வண்டிகள் தேர்தல் வேலைகளுக்காக அங்கே. அவர்கள் அரச அதிகாரத்தைப் பயன்படுத்தியே தேர்தல் வேலைகளை செய்துவருகிறார்கள்.
இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணத்தை இலட்சக்கணக்கில் செலவிட்டு இசை நிகழ்ச்சியை நடாத்துகிறார்கள். அவை தொடர்பில் கணக்காய்வு விவாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும். எந்தவிதமான சட்டவிரோதமான கொடுப்பனவுகளுக்கும் நீங்கள் கையொப்பமிட வேண்டாமென நாங்கள் அமைச்சு செயலாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம். உங்கள் மீது எமக்கு தீவிர நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் இருக்கின்றது. இந்த வேலையை நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள் இரச உளவுச்செவை மதிப்பாய்வு ஒன்றினை மேற்கொண் வந்தது. அது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கான காரணம் அந்த மதிப்பாய்வினை செய்துகொண்டிருந்தவர்கள் தேசிய மக்கள் சக்திக்கு சார்பானவர்கள் என்பதாலாகும். தற்போது நாடு பூராவிலும் “இந்த தடவை திசைகாட்டிக்கே” என்ற செய்தியுடன் நாட்டு மக்கள் அணிதிரண்டுள்ளார்கள். ரணிலும் பணத்தாலும் பலத்தாலும் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை தடுத்துவிட முடியாது. இப்போது அவர்கள் அனைவரும் ஒரே மேடையில். பழைய பகைகளை மறந்துவிடவேண்டியநிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அவர்கள் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக ஒரே மேடையில் குழுமி வருகிறார்கள். எமக்க மிகவும் குறுகிய காலமே இருக்கிறது. இந்த மஹியங்கன தொகுதியை அதிகப்படியான மேலதிக வாக்குகளால் வெற்றிபெறச்செய்விப்பதற்காக அயராது உழைக்கவும்.
அடுத்ததாக நாங்கள் இந்த நாட்டைக் கட்டியெழுப்பவேண்டும். சட்டத்தின் மன் அனைவருமே சமமானவர்களே. பணம் – பலம் பேதிமின்றி சட்டம் அனைவருக்கும் சமமானதாக அமையவேண்டும். எங்கள் அரச சேவையை வினைத்திறன் கொண்டமதாக மாற்றியமைத்திட வேண்டும். ஆட்சேர்ப்பு, பதவியுயர்வு, இடமாற்றம் என்பவற்றை அரசியல் தலையீடுகள் அற்றவையாக மாற்றுவோம். அர்ப்பணிப்புடன் முன்நோக்கி நகர்கின்ற ஓர் அரச சேவையை உருவாக்கிடுவோம். தொழில்முயற்சியொன்றை மேற்கொள்ள, கல் வேலைத்தலமொன்றை அமைக்க, ஹோட்டலொன்றைப்போட அரசியல்வாதிக்கு பகா கொடுக்கின்ற யகத்திற்க முற்றுப்புள்ளி வைப்போம். கடந்த 44 வருடங்களிலும் நேரலடி வெளிநாட்டு முதலீடு 22000 கோடி டொலராகும். வியட்நாமிற்கு 2022 அம் அண்டில் மாத்திரம் 2300 கொடி டொலர்களாகும். பரிசுத்தமான முதலீட்டாளர்கள் எவருமே இலங்கைக்கு வருவதில்லை. புதிய கைத்தொழில்களை சேவைகளை ஆரம்பிக்க வருமாறு நாங்கள் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். எமது நாட்டு ஊழலும் மோசடியுமற்ற நாடாக மாறவேண்டும். தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமே அந்த வேலையை செய்யும்.
நாங்கள் எதிர்நோக்குகின்ற பிரதான பிரச்சினை கிராமிய வறுமைநிலையாகும். வறுமை காரணமாக பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி கிடையாது, நோயக்கு மருந்து கிடையாது, நல்ல போசாக்கான உணவுவேளையொன்று கிடையாது. மகிழ்ச்சியும் பொழுதுபோக்கும் கிடையாது. கலாச்சார வாழ்க்கையொன்று கிடையாது. சமூக அங்கீகாரம் கிடையாது. நாங்கள் வசிப்பதோ 70 அல்லது 80 வருடங்கள்தான். எமது பிரஜை வறுமையின் கிளட்டினுக்கு இரையாகி செத்துமடிய வேண்டுமா? இந்த பேரழிவிலிருந்து எங்கள் மக்களை விடுவித்துக்கொள்ள வேண்டாமா? தேசிய மக்கள் சக்தியாகிய நாங்கள் கிராமிய வறுமையை ஒழிக்கின்ற அரசாங்கமொன்றையே அமைத்திடுவோம். எமது கிராமிய கமக்காரன் வயலை விதைத்து, விளைச்சலை பெற்று, களத்துமேட்டிலேயே நெல்லை விற்கிறான். கடனை மீளச்செலுத்தி, உரக் கடைக்கும் , சாமான வாங்குகின்ற கடைக்கும் செலத்திய பின்னர் கையில் பணம் எஞ்சுவதில்லை. கமக்காரன் கடன்பொறிக்குள் சிக்கி இருக்கிறான். இந்த கடன்பொறிலிருந்து கழற்றி எடுக்காவிட்டால் கமககாரரின் வாழ்க்கையை முன்னேற்ற முடியாது. மெண்டிஸ், தயா கமகே போன்றவர்களின் கடன்கள் கோடிக்கணக்கில் வெட்டிவிடப்படகின்றது. கமக்கரர்களை கடன் சுமையிலிருந்து மீட்டெடுப்பதற்கான திட்டமொன்றை நாங்கள் வகுத்திடுவோம். 2001 இல் சந்திரிக்கா அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லாமலபோன வேளையில் எமது 10 உறுப்பினர்கள் இருந்தார்கள். நாங்கள் ஒத்துழைப்பு தருகிறோம் ஆனால், கமக்காரரின் கடன்களை வெட்டிவிடவேண்டுமென நாங்கள் கூறினோம். அன்று சந்திரிக்கா நன்னடத்தை அரசாங்கக் காலத்தில் 25,000 ரூபாவிற்கு குறைவான எல்லாக் கடன்களையும் வெட்டிவிட்டார். அதைப்போலவே நாங்கள் மிகவும் குறைந்த வட்டியில் கடன் வழங்குவதற்கான அபிவிருத்தி வங்கிகளை நிறுவுவோம். எந்தவிதமான ஆதனங்களின் பிணையுமின்றி கடன்பெறுவதற்கான வசதிகளை நாங்கள் வழங்குவோம்.
விவசாயத்தை நவீனமயமாக்குவதற்காக புதிய தொழில்நுட்பத்தை நாங்கள் கொண்டுவரவேண்டும். பலம்பொருந்திய பயிர்ச்செய்கைத் திட்டமொன்று அவசியமாகும். தற்பொது விசாய சந்த்தையில் விலைத்தளம்பல் அதிகமாக இடம்பெற்று வருகின்றது. இன்றைய உலக சந்தை தரவுகளின் அடிப்படையிலேயே இயங்குகின்றது. மோப்பம்பிடித்து பயிர்செய்த காலம் மலையேறிவிட்டது. நாங்கள் கமக்காரனுக்கு பயிர்ச்செய்கைக்கு அவசியமான தரவுகளைப் பெற்றுக்கொடுப்போம். அப்போது உங்களால் உற்பத்திக்க அவசியமான நிலையான விலையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
எமது பிள்ளைகளை கிராமிய பொருளாதாரத்தில் இருந்து வெளியில் எடுக்கவேண்டும். அதனை சாதிக்க கல்வி அவசியம். நாங்கள் மிகச்சிறந்த கல்விக் கொள்கையொன்றை வகுத்திடுவோம்.கல்வியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம். இன்றைய கல்வித் திட்டம் பெற்றோருக்கு பாரிய சுமையாகும். தேசிய மக்கள் சக்தியின்கீழ் கல்வியென்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். பிரதேச செயலகத்திற்கு உத்தியோகத்தர்களை நியமிப்போம். ஒரு உத்தியோகத்தருக்கு மூன்று நான்கு பாடசாலைகள் ஒப்படைக்கப்படும். தொடர்ச்சியாக பிள்ளை பாடசாலைக்கு வராவிட்டால் உத்தியோகத்தர் பிள்ளையின் வீட்டுக்குச்செல்லவேண்டும். அந்த பிள்ளையை பாடசாலைக்கு எடுத்துச்செல்லவேண்டும். பிள்ளைகள் இடைநடுவில் கல்வியை கைவிட்டுச்செல்ல முடியாதவகையில் கல்விச் சீர்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும். 2030 அளவில் உலகிற்க 19 மில்லியன் மென்பொருள் பொறியியலாளர்கள் தேவைப்படுகிறார்கள். வீட்டிலிருந்தே தொழில்புரிய முடியும். அவற்றக்கு அவசியமான 4 ஜீ, 5 ஜீ, ஃபைபர் வசதிகளை நாங்கள் கிராமங்களுக்கு வழங்குவோம். அதனால்த்தான் ரெலிகொம்மை விற்க நாங்கள் இடமளிப்பதில்லை. ரெலிகொம்மை பாதுகாத்து இன்ரநெற் வலையமைப்பு கிராமங்களுக்கும் கிடைக்கத்தக்க வகையில் நாங்கள் அமைத்துக்கொடுப்போம். உலகிற்க அவசியமான பொறியியலாளர்களில் ஒரு தொகுதிய மஹியங்களை பிள்ளைகளுக்கும் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் நாங்கள் கல்வித்துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவோம். இலங்கையில் மதலத்தடவையாக பொதுமக்களின் அரசாங்கமொன்றை அமைத்திடுவோம். அதுதான் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம். அதற்காக நாமனைவரும் ஒன்றுசேர்வோம்.
இந்த உலகில் முன்னேற்றமடைந்த நாடாக மாற்றும்வரை ஒவ்வொரு பிரஜைக்கும் உணவு வழங்குகின்ற பொறுப்பினை நாங்கள் எற்றுக்கொள்கிறோம். தேசிய மக்கள் சக்தியின் முதலாவது படிமுறை சிறந்த சுகாதார சேவை, பிரஜைகளுக்கு உணவு, உணவு பெற்றுக்கொள்வதற்கான வசதியற்றவர்களுக்கு மானியம் வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்றை நாங்கள் அமைத்திடுவோம். எமது அரசாங்கத்தை நாங்களே அமைத்துக்கொள்வோம். இது எங்கள் வாழ்க்கையில் மிகமுக்கியமான காலப்பகுதியாகும். இந்த நாட்டினதும் மக்களினதும் தலைவிதியை தீர்மானிக்கின்ற இரண்டு மாதங்களாகும். கைவிடவேண்டாம். ஒன்றிணைவோம். மாற்றியமைத்திடுவோம்.
(-Colombo, July 25, 2024-) சுற்றுலாத்துறை எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான தேசிய மக்கள் சக்தியின் கொள்கை அணுகுமுறையை விளக்குவதற்காக கொழும்பு Kingsburry ஹோட்டல் வளாகத்தில் இன்று (24) பிற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கை ஹோட்டல் சங்கத்தின் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார்.
(-Colombo, July 25, 2024-)
சுற்றுலாத்துறை எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான தேசிய மக்கள் சக்தியின் கொள்கை அணுகுமுறையை விளக்குவதற்காக கொழும்பு Kingsburry ஹோட்டல் வளாகத்தில் இன்று (24) பிற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கை ஹோட்டல் சங்கத்தின் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார்.
(-தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் – ஊடக சந்திப்பு – 2024.07.25-) பொலிஸ் மா அதிபரின் பதவியை தற்காலிகமாக தடைசெய்து உயர்நீதிமன்றம் நேற்று (25) இடைக்கால தடையுத்தரவினை பிறப்பித்தது. அதைப்போலவே பொருத்தமான ஒருவரை பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு பணிப்புரை விடுத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பொறுப்புக்கூறவேண்டிய இரண்டு பிரதான அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். முதலாவதாக சபாநாயகர் அளித்த சட்டவிரோதமான வாக்களிப்பு காரணமாகவே இந்த சிக்கலின் கேந்திரம் உருவாகியது. ரணில் விக்கிரமசிங்க இந்த சிக்கலின் பிரதானமான […]
(-தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் – ஊடக சந்திப்பு – 2024.07.25-)
பொலிஸ் மா அதிபரின் பதவியை தற்காலிகமாக தடைசெய்து உயர்நீதிமன்றம் நேற்று (25) இடைக்கால தடையுத்தரவினை பிறப்பித்தது. அதைப்போலவே பொருத்தமான ஒருவரை பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு பணிப்புரை விடுத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பொறுப்புக்கூறவேண்டிய இரண்டு பிரதான அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். முதலாவதாக சபாநாயகர் அளித்த சட்டவிரோதமான வாக்களிப்பு காரணமாகவே இந்த சிக்கலின் கேந்திரம் உருவாகியது. ரணில் விக்கிரமசிங்க இந்த சிக்கலின் பிரதானமான பங்காளியாகிறார். தேசபந்து தென்னக்கோன் பதில் பொலிஸ் மா அதிபராக இருந்ததோடு நிரந்தரமான பொலிஸ் மா அதிபராக நிறைவேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினாலேயே நியமிக்கப்பட்டார். இந்த இருவரும் செய்த நியமனங்கள் சம்பந்தமாகவே உயர்நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் பற்றிய விசாரணை மேற்கொள்ளப்பட்டன. தேசபந்துவின் நியமனத்தை இடைநிறுத்தி ஒரு நாள் கழிந்தபோதிலும் ரணில் விக்கிரமசிங்கவின் பக்கத்தில் பதில் பொலிஸ் மா அதிபரொருவர் தொடர்பில் எந்தவோர் அணுகலையும் காணக்கூடியதாக இல்லை. அதன் காரணமாக நாட்டு மக்களிடையே பாரதூரமான ஐயப்பாடு தோன்றியுள்ளது. எனினும் உயர்நீதிமன்றம் பல சந்தர்ப்பங்களில் தீர்த்துவைத்த ஒரு விடயத்தை ஆயிரம் கோடி ரூபா செலவிட்டு அரசியலமைப்புத் திருத்தமொன்றாக கொண்டுவர தயாராகி வருகிறார்கள்.
ஜே. ஆர். ஜயவர்தனவின் காலத்தில் உயர்நீதிமன்றம் மீது கல்லெறிந்த வரலாறு இருக்கின்றது. மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் தமக்குச் சார்பற்ற தீர்ப்பினை வழங்கியமை காரணமாக பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை குற்றப்பிரேரணையொன்று மூலமாக விரட்டியடித்தார்கள். அரசாங்கத்தின் தேவை உயர்நீதிமன்றத்தினால் ஈடேறாத சந்தர்ப்பங்களில் நிறைவேற்றுத்துறை இடையீடு செய்து வேறொரு முரண்பாட்டினை உருவாக்குகின்றது. ரணில் விக்கிரமசிங்க தெங்கு அபிவிருத்தி சபையில் ஆற்றிய உரையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஏற்றுக்கொள்வதில்லையென குறிப்பால் உணர்த்தினார். மஹியங்கனையில் நடைபெற்ற காணி உறுதி வழங்கும் வைபவத்தில் மக்களின் நீதித்துறை தத்துவம் பாராளுமன்றத்திடமே இருக்கிறதெனக் கூறினார். அரசாங்கம் கொண்டுவந்த கொள்கை ரீதியான விடயங்கள் சம்பந்தமாக உயர் நீதிமன்றத்தில் கேள்விக்குட்படுத்தினார். எனினும் இந்த கீழ்த்தரமான செயல்களின் போது உயர்நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியதும் அதனை தாக்கிப் பேசுகிறார்.
மனித உரிமைகளை மீறிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமித்த தருணம் சம்பந்தமாக தீர்ப்பளித்தமையால் அரசாங்கம் நீதிமன்றத்துடன் முரண்பாட்டு நிலையொன்றுக்கு செல்ல முயற்சிப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. நீதிமன்றத்தின் தீர்ப்பினை அமைச்சரவையின் முன்னிலையில் ஆய்வுக்குட்படுத்துவதாக நேற்று கூறப்பட்டிருந்தது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை அமைச்சரவையில் ஆய்வுக்குட்படுத்துவது அர்த்தமற்ற செயலாகும். அதைப்போலவே பொலிஸ் மா அதிபர் ஒருவர் இல்லாமையால் தோ்தல் பிற்போடப்படும் என்ற பிரச்சினை கிளப்பப்பட்டுள்ளது. இது சரியான வேலையல்லவா? அப்படியானால் இவரும் பதில் ஜனாதிபதி அல்லவா. ரணில் விக்கிரமசிங்க மக்கள் ஆணையை பெறவில்லையே. அப்படியானால் பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவரால் முறைப்படி தோ்தல் அலுவல்களை ஈடேற்ற முடியும். இதனை எவ்விதத்திலும் நீதித்துறைக்கும் நிறைவேற்றுத் துறைக்கும் இடையிலான முரண்பாடுவரை ஓட்டிச் செல்ல வேண்டாமென நாங்கள் வலியுறுத்துகிறோம். நீதிமன்ற தீர்ப்பு சம்பந்தமாக கவலைப்படுவது ரணில் விக்கிரமசிங்கவின் தேவையாக இருந்த போதிலும் அது நாட்டின் தேவை அல்ல. உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு எவ்விதத்திலும் தோ்தலை பிற்போட காரணமாக அமையமாட்டாதென்பதை நாங்கள் இந்நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கிறோம். அரசாங்கத்திற்கு நாங்கள் வலியுறுத்திக் கூறுவது இந்த நிலைமையை சாதகமானதாக முகாமைத்துவம் செய்து செயற்படுவதேயொழிய முரண்பாட்டுக்கு செல்லக்கூடாது என்பதாகும்.
“நிறைவேற்றுத்துறைக்கு அவசியமான விதத்தில் தீர்ப்பளிப்பதற்கான கடப்பாடு நீதிமன்றத்திற்கு கிடையாது.”
-ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமரப்பெரும-
நிறைவேற்றுத்துறையினால் நீதித்துறைக்கு எதிராக ஒரு விதமான குழப்பநிலையை உருவாக்குவதற்கு கடந்த காலப்பகுதியில் முயற்சி செய்யப்பட்டது. பாராளுமன்றத்தில் ஜனாதிபதி விடுத்த கூற்று குறிப்பாக கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். இலங்கைக்கு உயர்நீதிமன்றமொன்று தேவையில்லை என்ற விடயமா அதன் மூலமாகக் கூறப்படுகிறது? அப்படியில்லாவிட்டால் நீதிமன்ற முறைமையை வேண்டாம் என்பதா? நிறைவேற்றுத்துறைக்கு அவசியமான வகையில் தீர்ப்புகளை அளிப்பதற்கான கடப்பாடு நீதிமன்றத்திற்கு கிடையாது. அரசியலமைப்புக்கான 17 வது திருத்தத்தின் பின்னர் தோன்றிய வளர்ச்சிகளுடன் அரசியலமைப்பு திருத்தப்பட்டது. நீதிமன்றங்களுக்கு நீதியரசர்களை நியமிக்கின்ற நிறுவனமாக அரசியலமைப்பு சபை ஒரு சுயாதீனத்தன்மை மிக்க நிறுவனம் என்ற வகையிலேயே பெயர் குறிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் விதப்புரையை அரசியலமைப்பு பேரவை அங்கீகரிக்கவில்லை. சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று நிறுவனங்களாக பிரிக்கப்பட்ட வழியுரிமையொன்று இருக்கிறது. எனினும் நேற்று அவசரமாக நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சம்பந்தமாக ஆழமாக ஆராய்ந்து அமைச்சரவையின் தீர்மானத்தை அறிவிப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். நீதித்துறை தத்துவத்தை அமைச்சரவையோ பாராளுமன்ற தெரிகுழுவோ மீளாய்வு செய்ய முடியுமென்பதற்கான ஏற்பாடுகள் அரசியலமைப்பில் கிடையாது. இது நீதித்துறை மீதான அப்பட்டமான அழுத்தம் கொடுத்தலாகும்.
நீதியரசர்களின் தீர்ப்புகளை பரிசீலனை செய்வதற்கான தகைமை அமைச்சரவைக்கு இருக்கிறதா? இல்லை. எந்த விதத்திலும் அத்தகைய இயலுமை கிடையாது. எஸ்.பீ.திசாநாயக்க நீதிமன்றத்தை அவமதித்த விதத்திலான செயல் ஒன்றுதான் இங்கே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2010 இன் பின்னர் இவ்வாறான நிலைமைக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது. ‘ஹெஜிங்’ உடன்படிக்கை கைச்சாத்திட்ட காலத்தில் பெற்றோல் விலையை குறைக்குமாறு உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை நிறைவேற்றுத்துறை அமுலாக்கவில்லை. அதன் பின்னரும் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிராக பிரச்சினையொன்றை முன்வைத்தார்கள். ஷிராணி பண்டாரநாயக்க அம்மையாரை பிரதம நீதியரசர் பதவியிலிருந்து விரட்டியடிக்க நடவடிக்கை எடுத்தார்கள். பாராளுமன்ற தெரிகுழுவொன்று மூலமாக ஷிராணி பண்டாரநாயக்காவை பிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்கினார்கள். அந்த செயற்பாடுகளின் பெறுபேறு என்ற வகையில் தான் 2015 இல் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் போகவேண்டி நேரிட்டது. நல்லாட்சி அரசாங்கமொன்றை நிறுவுவதாக மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்கள் விடுத்த கூற்று சம்பந்தமாக மக்கள் நல்லலெண்ணத்துடன் சிந்தித்து அதிகாரத்தை கொடுத்தார்கள். எனினும் அதே ரணில் விக்கிரமசிங்க இப்போது செயலாற்றிக் கொண்டிருப்பது மீண்டுமொரு அதிகார மாற்றத்திற்கு மக்களை தூண்டுவதாக அமைகின்றது. நீதித்துறை பற்றிய நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு நிறைவேற்றுத்துறைக்கும் சட்டவாக்கத்துறைக்கும் இருக்கின்றது. அதனை ஒரு புறம் வைத்துவிட்டு தன்னை மகிழ்விக்காத தீர்ப்பினை வழங்கிவிட்டார்கள் என்பதற்காக கோபாவேசத்துடன் கத்திக் கொண்டிருப்பதில் பயனில்லை. முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் சம்பந்தமான வழக்கு விசாரணை முடியும்வரை பொலிஸ் மா அதிபர் பதிவியின் பணிகளை ஆற்றுவதை இடைநிறுத்துவதே தீர்ப்பாக அமைகிறது. இந்த பணிப்புரையை தேசபந்து தென்னக்கோன் மீறினால் நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக தவறாளியாகப் போகின்றவர் அவரே.
உயர்நீதிமன்ற தீர்ப்பின் இரண்டாவது பாகத்தில் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பொருத்தமான ஒருவர் நியமிக்கப்படவேண்டுமென்பதே கூறப்படுகிறது. அதன்படி இரண்டு பணிப்புரைகள் உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளன. அந்த பணிப்புரைகளை அமுலாக்காமை நீதிமன்றத்தை அவமதித்ததாக அமையும். தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் என்ற வகையில் நீதிமன்றத்துடன் விளையாட சட்டவாக்கத்துறைக்கோ நீதித்துறைக்கோ முடியாதென்பதையே நாங்கள் வழியுறுத்துகிறோம். நாட்டு மக்கள் நீதித்துறை மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு பங்கமேற்படக்கூடிய வகையில் செயலாற்றுவதாயின் தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் என்ற வகையில் நாங்கள் அதற்கு எதிராக செயலாற்றுவோம்.
“தமது தேவைகளை ஈடேற்றிக்கொள்ள எதிர்பார்த்தவர்கள் தமது நாடகத்தை எதிர்காலத்தில் நடித்துக்காட்ட முடியும்.”
-சட்டத்தரணி சுசந்த தொடாவத்த-
ஒன்பது மனுக்களை பரிசீலனை செய்ய பின்னரே தேசபந்து தென்னக்கோன் பொலிஸ் மா அதிபர் பதவியில் செயலாற்றுவதற்கான இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த தீர்ப்பினை வழங்கும் பொருட்டு நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட ஒரே விடயம் அரசியலமைப்பு சபையினால் இந்த நியமனம் செய்யப்பட்டது என்பதற்காக அல்ல. மனுதாரர் தரப்பினால் மேலும் பல விடயங்கள் நீதிமன்றத்திடம் முன்வைக்கப்பட்டிருந்தன. அவை மத்தியில் முதன்மை விடயமாக அமைந்துள்ளது. இந்த நாட்டில் பொலிஸ் மா அதிபர் பதவியை வகிக்க தேசபந்து தென்னக்கோன் என்பவர் பொருத்தமற்றவர் என்பதாகும். அதற்கு 2022 மே மாதம் ஒன்பதாம் திகதி சுதந்திரமானதும் அமைதியானதுமான போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த காடையர்களுடன் இவர் வந்திருந்தமை பிரதான காரணமாகும். காலிமுகத்திடல் தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேசபந்து தென்னக்கோனை ஒரு பிரதிவாதியாக்குமாறு சட்டத்துறை தலைமை அதிபதியால் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. அதைப்போலவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுத்துக்கொள்ளாமை, பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரை கொடூரமாகவும் மனிதாபிமானமற்ற வகையிலும் சித்திரவதைக்கு உள்ளாக்கிமைக்கான தவறாளியாகியுள்ளமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அவருக்கு எதிராக நிலவுகின்றன. அரசியலமைப்பு சபை முறைப்படி நியமித்திருந்தாலும், அவர் இந்த பதவிக்கு பொறுத்தமற்றவர் என்பதையே மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். அவர் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமனம் பெறமுன்னர் பொலிஸை ஒரு நாடக அரங்காக மாற்றினார். பொலிஸ் மா அதிபராக முன்னரும் அதன் பின்னரும் அவருடைய நடத்தைகள் பொலிஸ் மா அதிபர் என்பதற்கு பதிலாக அரசியல்வாதி ஒருவரின் நிலைமையை வெளிக்காட்டியது. பொலிஸ் மா அதிபர் சீருடையை அணிந்து கொண்டு இனிமேலும் கோமாளியாக ஆடமுடியாது. தேசபந்து தென்னக்கோனை நியமித்து தமது தேவைகளை ஈடேற்றிக்கொள்ள எதிர்பார்த்தவர்கள் எதிர்காலத்தில் அவர்களுடைய நாடகத்தை நடித்துக்காட்ட முடியும். தேசபந்து இல்லாமல் ‘யுக்திய’ தோல்வியடையும், பாடசாலை பிள்ளைகளின் பைகளில் போதை பொருட்கள் இருக்க ஆரம்பிக்கும் போன்ற புனைகதைகள் எதிர்காலத்தில் வரக்கூடும்.
அதனால் நாங்கள் விழிப்புடன் இருக்குமாறு இந்நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். இந்த நாட்டிலே தெளிவான சட்டமொன்று இருக்கிறது. பொலிஸ் மா அதிபர் பதவி இந்த ஆளினால் வெற்றிடமாகும்போது பதில் கடமையாற்ற பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிக்க வேண்டிய பொறுப்பு இருக்கின்றது. அதற்கான தகைமைகளைக் கொண்ட சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் இருக்கிறார்கள். தேசபந்து இல்லையென்பதற்காக இந்த நாட்டின் வழமையான மக்கள் வாழ்க்கைக்கு எந்தவிதமான பிரச்சினையும் ஏற்படமாட்டாது. தேசபந்து தென்னக்கோன் என்பவரை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்கியமை காரணமாக இந்த நாட்டிலே நீதியான, சட்டத்தை மதிக்கின்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மிக்க மகிழ்ச்சியடைவார்கள் என்பது எமக்கு தெரியும்.
(-ஊடகச் சந்திப்பு, மவிமு தலைமை அலுவலகத்தில்-) தோ்தலை இலக்காகக் கொண்டு பண்டங்களை வாங்குவதற்கான செயற்பாங்கில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பினை பெற்றுக்கொண்டு நாட்டை கட்டியெழுப்பியதாகவும் 2048 இல் நாட்டை அபிவிருத்தி செய்வதாகவும் கூறிக்கொண்டே ஜனாதிபதி பல்வேறு இடங்களுக்கு செல்கிறார். அதே வேளையில் இலங்கையில் அமுலாக்கப்பட்டு வருகின்ற பெறுகை செயற்பாங்கு மீது ஜனாதிபதி ஏற்படுத்தியிருந்த அழிவுமிக்க ஒரு சில தீர்மானங்களை வெளிப்படுத்த வேண்டியுள்ளது. நிதி, பொருளாதார உறுதிநிலை, தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற பதவி என்ற […]
(-ஊடகச் சந்திப்பு, மவிமு தலைமை அலுவலகத்தில்-)
தோ்தலை இலக்காகக் கொண்டு பண்டங்களை வாங்குவதற்கான செயற்பாங்கில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பினை பெற்றுக்கொண்டு நாட்டை கட்டியெழுப்பியதாகவும் 2048 இல் நாட்டை அபிவிருத்தி செய்வதாகவும் கூறிக்கொண்டே ஜனாதிபதி பல்வேறு இடங்களுக்கு செல்கிறார். அதே வேளையில் இலங்கையில் அமுலாக்கப்பட்டு வருகின்ற பெறுகை செயற்பாங்கு மீது ஜனாதிபதி ஏற்படுத்தியிருந்த அழிவுமிக்க ஒரு சில தீர்மானங்களை வெளிப்படுத்த வேண்டியுள்ளது. நிதி, பொருளாதார உறுதிநிலை, தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற பதவி என்ற வகையில் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த அமைச்சரவை நிருபம் மீது இதன்போது நாங்கள் விசேட கவனம் செலுத்துகிறோம்.
“அரச வணிகக்கூட்டுத்தாபனத்திடமிருந்து பண்டங்கள் மற்றும் சேவைகளை ஒரு விலைக்கோரலின் பெயரில் அரச நிறுவனங்களால் கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பினை வழங்குதல்” எனும் தலைப்பில் அமைச்சரவை நிருபமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. மே 14 ஆம் திகதி சமர்ப்பித்த இந்த அமைச்சரவை நிருபத்தின் மூலமாக பெறுகை செயற்பாங்கினை கடைப்பிடிக்காமல் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் நேரடியாகவே அரச வணிகக்கூட்டுத்தாபனத்திடமிருந்து ஐம்பது மில்லியன் ரூபா வரையான பண்டங்களை நேரடியாக கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த கொள்வனவுகளின்போது அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கியொன்றுடன் கூட்டாக சமர்ப்பிக்க வேண்டிய அங்கீகரிக்கப்பட்ட பிணைமுறியொன்று தேவையில்லையெனவும் காட்டப்பட்டுள்ளது.
எளிமையாக கூறுவதானால் ஐந்து கோடி ரூபாவிற்கு பண்டங்களை டென்டர் கோராமல் ஒரே தடவையில் கொள்வனவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தோ்தல் பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலைமையில் சீக்கிரமாக பண்டங்களை பெற்று பகிர்ந்தளிப்பதற்காக இந்த வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதென்பது இதன் மூலமாக புலனாகின்றது. காகிதாதிகளிலிருந்து பெறுமதியான பொருட்களை வழங்குவதற்காக அரச நிறுவனங்களில் பதிவு செய்து கொண்டுள்ள வழங்கலாளர்களைக் கூட நீக்கிவிட்டு இந்த கொள்வனவுகளை மேற்கொள்ளலாம். அரசாங்கத்திற்கு வழங்கலொன்றை மேற்கொள்ளும்போது முறியொன்றை சமர்ப்பிக்க வேண்டிய நிலைமை தனியார் துறையினருக்கு ஏற்பட்டாலும் வணிக கூட்டுத்தாபனத்திற்கு அவ்வாறான பிணைமுறி அவசியமில்லையென்பதால் பாரதூரமான முறைகேடு உருவாகும். அரச வணிகக் கூட்டுத்தாபனம் திறந்த சந்தையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்களிடமிருந்து சம்பந்தப்பட்ட பொருட்களை கொள்வனவு செய்ய நோ்வதன் மூலமாக கறுப்புச் சந்தை கொடுக்கல் வாங்கல் ஒன்று உருவாகும். பண்டங்களின் தரம் பற்றி பாரதூரமான பிரச்சினை உருவாகும். நிழற்படப்பிரதி கருவி, டிஜிடல் டுப்ளிகேட்டஸ், பொதுவான கணனி மற்றும் மடிக்கணனிகள், மல்டிமீடியா புரொஜக்டர்ஸ், அச்சிடல் கருவிகள், மத வழிப்பாட்டுத் தளங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கான பெற்றோல் மற்றும் டீசல் ஜெனரேடர்கள், ஒலிபெருக்கிக் கருவிகள் மற்றும் தொலைக்காட்சி கருவிகள் என்பவற்றை பாரியளவில் கொள்வனவு செய்ய தயாராகி வருகிறார்கள்.
எந்தவிதமான தரப்பரிசோதனைகளுமின்றி வணிகக் கூட்டுத்தாபத்திடமிருந்து இந்தப் பண்டங்களை கொள்வனவு செய்ய அனுப்பற்கட்டளைகளை வழங்குதல் முற்றாகவே பெறுகை ஆணைக்குழுவை பொருட்படுத்தாமல் விடுவதாகும். தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு மாத்திரம் 200 கோடி ரூபா பெறுமதியான பண்டங்களை வாங்குவதற்கு தயாராகி வருகிறார்கள். இந்தக் கொள்வனவுகள் துரிதமாக கொள்வனவு செய்யப்பட வேண்டியவை என காட்டப்பட்டுள்ளன. இந்தக் கொள்வனவுகளுக்காக செயற்படுகின்ற விதம் பற்றிய பல தகவல்கள் எமக்கு கிடைத்திருக்கின்றன.
அனைத்து கொள்வனவுகளும் தனியான நிறுவனமொன்றினால் மேற்கொள்ளப்படுதல் சிக்கலானதாகும்
மத்திய மாகாண கல்வி அமைச்சின் முன்னாள் பிரதம கணக்காளர் எச்.எம்.பி. புஞ்சி பண்டா
பெறுகை செயற்பாங்கினை மேற்கொள்ளல் சம்பந்தமாக 2008 இல் வழிகாட்டிகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறைந்த கிரயத்துடன் தரமிக்க பண்டங்களை உரிய நேரத்தில் வழங்குதல், உரிய தரத்திற்கும் சம்மந்தப்பட்ட அளபுருக்களுக்கும் அமைவாக பெற்றுக்கொள்ளல், தகைமை பெற்ற தரப்பினர்கள் பெறுகை செயற்பாங்கில் பங்கேற்பதற்கான நியாயமான வாய்ப்பினை வழங்குதல் என்ற வகையில் அடிப்படை விடையங்கள் காட்டப்படுள்ளன.
எனினும் தனி நிறுவனமொன்றுக்கு கொள்வனவு செய்தல்கள் அனைத்தையும் வழங்குவதன் மூலம் ஆகக்குறைந்த கிரயத்தில் தரமிக்க பண்டங்களை வழங்குவதற்கான இயலுமை வணிகக் கூட்டுத்தாபனத்திற்கு இருக்கின்றதா எனும் சந்தேகம் எழுகின்றது. அதைப்போலவே உரிய தரத்தை உள்ளிட்ட நிபந்தனைகள் மத்தியில் குறிப்பாக வெளிப்படைத்தன்மை கொண்டதாக செயலாற்றுவதற்கான இயலுமை சிக்கலானதாகும். இயந்திர சாதனங்கள் போன்ற பண்டங்களை கொள்வனவு செய்த பின்னர் சேவை வழங்குதல் பற்றியும் பழுதுபார்த்தல் மற்றும் உதிரிப்பாகங்களை பெற்றுக்கொள்ளல் பற்றிய சிக்கல்களும் அடிப்படையில் நிலவுகின்றன.
“அனைத்து கொள்வனவுகளும் தனியான நிறுவனமொன்றினால் மேற்கொள்ளப்படுதல் சிக்கலானதாகும்”
-மத்திய மாகாண கல்வி அமைச்சின் முன்னாள் பிரதம கணக்காளர் எச்.எம்.பி. புஞ்சி பண்டா-
பெறுகை செயற்பாங்கினை மேற்கொள்ளல் சம்பந்தமாக 2008 இல் வழிகாட்டிகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறைந்த கிரயத்துடன் தரமிக்க பண்டங்களை உரிய நேரத்தில் வழங்குதல், உரிய தரத்திற்கும் சம்மந்தப்பட்ட அளபுருக்களுக்கும் அமைவாக பெற்றுக்கொள்ளல், தகைமை பெற்ற தரப்பினர்கள் பெறுகை செயற்பாங்கில் பங்கேற்பதற்கான நியாயமான வாய்ப்பினை வழங்குதல் என்ற வகையில் அடிப்படை விடையங்கள் காட்டப்படுள்ளன.
எனினும் தனி நிறுவனமொன்றுக்கு கொள்வனவு செய்தல்கள் அனைத்தையும் வழங்குவதன் மூலம் ஆகக்குறைந்த கிரயத்தில் தரமிக்க பண்டங்களை வழங்குவதற்கான இயலுமை வணிகக் கூட்டுத்தாபனத்திற்கு இருக்கின்றதா எனும் சந்தேகம் எழுகின்றது. அதைப்போலவே உரிய தரத்தை உள்ளிட்ட நிபந்தனைகள் மத்தியில் குறிப்பாக வெளிப்படைத்தன்மை கொண்டதாக செயலாற்றுவதற்கான இயலுமை சிக்கலானதாகும். இயந்திர சாதனங்கள் போன்ற பண்டங்களை கொள்வனவு செய்த பின்னர் சேவை வழங்குதல் பற்றியும் பழுதுபார்த்தல் மற்றும் உதிரிப்பாகங்களை பெற்றுக்கொள்ளல் பற்றிய சிக்கல்களும் அடிப்படையில் நிலவுகின்றன.
“தோ்தல் கொள்ளைகளிலும் தீத்தொழிலிலும் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்”
-இளைப்பாறிய முதுநிலை உதவி கணக்காய்வாளர் தலைமை அதிபதி ரம்யா லாலனி-
கள்வனுக்கு முன்னராக வாழைக்குலை வேலியைத் தாண்டியது போல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன குறிப்பாக பண்டங்களை பகிர்ந்தளிப்பதற்கான அமைச்சரவை நிருபத்தை சமர்ப்பித்து பொறுப்பு வழங்கப்பட்டுள்ள வணிக கூட்டுத்தாபனம் பற்றி கணக்காய்வாளர் தலைமை அதிபதி சமர்ப்பித்துள்ள அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள விடங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது முக்கியமானதாகும். ஒப்பந்தக்காரர்களுடன் உடன்படிக்கைகளை செய்திராமை, பிணைமுறி பாதுகாப்பு பெற்றிராமை, பெறுகைத்திட்டம் தயாரிக்கப்பட்டிராமை போன்ற பல குறைபாடுகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. முட்டை இறக்குமதி செய்வதற்கான அனுமதி இந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டமையால் 2023 மார்ச் தொடக்கம் மே வரை 16.5 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. தற்காலிக களஞ்சியமென்ற வகையில் கம்பெனியொன்றின் இடவசதி பாவனைக்கு எடுக்கப்பட்டுள்ளதோடு அந்த கம்பெனியால் அது பிரிதொரு கம்பெனிக்கு ஒப்படைக்கப்பட்டதால் களஞ்சிய வாடகையாக 07 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளது. 2023 கணக்காய்வு அறிக்கைக்கு இணங்க நெல் களஞ்சியப்படுத்துவதற்காக 2015 இல் பாரிய பொதியிடல்கள் இறக்குமதி செய்யப்பட்டு அழிவடைய இடமளித்துள்ளமை வெளியாகியிருக்கிறது. இந்த பொதியிடல்கள் 107.37 மில்லியனை செலவிட்டு பிலிப்பைன்ஸிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 48 மில்லியன் பெறுமதியான பொதியிடல்கள் 8 வருடங்களாக அழிவடைய இடமளிக்கப்பட்டுள்ளது. அரச வணிகக் கூட்டுத்தாபனத்தில் கடுமையான வினைத்திறமையீனமும் தீவிரமான நிதிசார் சேதமும் இடம்பெற்றுள்ளமை இதன் மூலமாக தெளிவாகின்றது. 2020 கொரோனா பெருந்தொற்றுக்காலத்தில் நடமாடும் விற்பனை நிலையங்களை பேணி வந்ததால் 10 மில்லியன் ரூபா நட்டத்தை உள்ளிட்ட பல நட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
அரசாங்க பெறுகை நடவடிக்கைகள் சம்பந்தமான ஒழுங்குறுத்தல் பொறுப்பு தேசிய பெறுகை ஆணைக்குழுவிடமே கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள இந்த அமைச்சரவை நிருபத்துடன் தொடர்புடைய விடயங்கள் சம்பந்தமாக நாங்கள் நேற்று (22) முறைப்பாடு செய்தோம். இந்த செயற்பாங்கினை வலுவிழக்கச் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தோம். ஜனாதிபதி தோ்தல் கைக்கெட்டிய தூரத்தில் இருக்கும்போது பண்டங்களை பகிர்ந்தளிப்பதற்காக அமுலாக்கியுள்ள இந்த செயற்பாட்டினூடாக அமைச்சர்களுடன் தொடர்புடைய கம்பெனிகளுக்கு இந்த வழங்கலுக்கான வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ள பல சம்பவங்கள் கடந்த காலத்தில் இடம்பெற்றுள்ளன. பொது மக்களுக்கு வழங்கப்படுகின்ற சேவைகள் தொடர்பில் எங்களுடைய எந்த விதமான எதிர்ப்பும் கிடையாது. எனினும் பண்டங்களை பகிர்ந்தளித்தலை மேற்கொண்டு தோ்தலை கொள்ளையடிக்கவும் தீத்தொழிலில் ஈடுபடவும் வாய்ப்பளிப்பதை உடனடியாக நிறுத்தவேண்டியுள்ளது. வாக்காளர்கள் என்ற வகையிலும் இதனை எதிர்ப்பதற்கான உரிமை எங்களுக்கு இருக்கிறது. சம்பந்தப்பட்ட ஒழுங்குறுத்தல் நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக நாங்கள் இந்த விடயங்களை வெளிப்படுத்துகிறோம்.