(-Colombo, August 15, 2024-) செப்டெம்பர் 21 ஆந் திகதி நடைபெறுகின்ற சனாதிபதி தேர்தலுக்காக இன்று (15) முற்பகல் தேர்தல்கள் செயலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க வேட்புமனுவை தாக்கல்செய்தார். இந்த தருணத்தில் தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் டாக்டர் நிஹால் அபேசிங்க, தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வட்டகல ஆகிய தோழர்களும் சமுகமளித்தனர். வேட்பு மனுவை தாக்கல்செய்த பின்னர் தேர்தல்கள் செயலகத்திற்கு வெளியில் வந்த தோழர் அநுர குமார […]
(-Colombo, August 15, 2024-)
செப்டெம்பர் 21 ஆந் திகதி நடைபெறுகின்ற சனாதிபதி தேர்தலுக்காக இன்று (15) முற்பகல் தேர்தல்கள் செயலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க வேட்புமனுவை தாக்கல்செய்தார்.
இந்த தருணத்தில் தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் டாக்டர் நிஹால் அபேசிங்க, தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வட்டகல ஆகிய தோழர்களும் சமுகமளித்தனர்.
வேட்பு மனுவை தாக்கல்செய்த பின்னர் தேர்தல்கள் செயலகத்திற்கு வெளியில் வந்த தோழர் அநுர குமார திசாநாயக்கவை வருகை தந்திருந்தவர்கள் அமோகமாக வரவேற்றனர்
(-சம்பள நிர்ணயச் சபைக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது – 12.08.2024-) இன்று (12) சம்பள நிர்ணயச் சபையில் தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளம் தொடர்பில் முடிவெடுப்பதற்கான கூட்டம் கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தில் 10 தொழிற்சங்கங்களும், முதலாளிமார் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை உள்ளிட்ட கம்பனிகளின் 07 பிரதிநிதிகளும், அரச அதிகாரிகள் 03 பேரும் கலந்துகொண்டனர். இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் யூ.என்.பி.யின் தொழிற்சங்கமான தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் தோட்டத் தொழிலாளர்களின் […]
(-சம்பள நிர்ணயச் சபைக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது – 12.08.2024-)
இன்று (12) சம்பள நிர்ணயச் சபையில் தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளம் தொடர்பில் முடிவெடுப்பதற்கான கூட்டம் கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தில் 10 தொழிற்சங்கங்களும், முதலாளிமார் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை உள்ளிட்ட கம்பனிகளின் 07 பிரதிநிதிகளும், அரச அதிகாரிகள் 03 பேரும் கலந்துகொண்டனர்.
இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் யூ.என்.பி.யின் தொழிற்சங்கமான தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான பிரேரணையை கொண்டுவந்தன.
அதாவது, அந்தப் பிரேரணையில் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளமாக 1350 ரூபாவை வழங்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன், மேலதிக கொடுப்பனவாக 350 ரூபாவை வழங்கவேண்டும் என்றும் முன்வைக்கப்பட்டிருந்தது.
இதன்போது, கம்பனிகளும் தங்களது 5 கோரிக்கைகளை முன்வைத்தன.
அவர்களது முதலாவது கோரிக்கை, “தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வை கேட்டு 03 வருடங்களுக்கு போராட்டமோ அல்லது வேறு எந்த நடவடிக்கையையோ முன்னெடுக்கக் கூடாது.” என்பதாகும்.
இரண்டாவது, “1 கிலோ கிராம் கொழுந்துக்கு 50 ரூபா கொடுக்கப்படும்.” என்பதாகும்.
மூன்றாவதாக, ”மேலதிக கொடுப்பனவு 350 ரூபாவாகும். ஆகவே, அந்த 350 ரூபாவுக்கான கொழுந்தை மாத்திரம் தான் பறிக்க வேண்டும்” என்பதாகும்.
இதுகுறித்து காரசாரமான வாதவிவாதங்கள் நடைபெற்றன. 1350 ரூபாவுக்கு ஆதரவாக 11 பேரும் எதிராக 03 பேரும் வாக்களித்தோம். மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பெருந்தோட்ட தொழிற்சங்கமான அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் எமது எதிர்ப்பை வெளிப்படுத்தினோம். செங்கொடிச் சங்கத்தின் சார்பாக 02 பேர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆகவே, மேலதிமான 8 வாக்குகளால் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சாதகமாக செயற்பட்ட தொழிற்சங்கங்களும் கம்பனிகளும் அரச அதிகாரிகளும் தோட்டத் தொழிலாளர்ளை ஏமாற்றியுள்ளதுடன், அவர்களது போராட்டங்களையும், உரிமைகளையும் காட்டிக்கொடுத்துள்ளனர். இதனை நாங்கள் வன்மையாக்க கண்டிக்கிறோம்.
(-Colombo, August 12, 2024-) ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைப் பிரதிநிதி Takafumi Kadono அவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (12) பிற்பகல் ம.வி.மு. தலைமையகத்தில் இடம்பெற்றது. ஆசிய அபிவிருத்தி வங்கியால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தி பணிகள் பற்றிய மீளாய்வு செய்த அந்த பிரதிநிதிகள், எதிர்காலத்திலும் இலங்கைக்கு உதவி புரிவதற்காக அந்த அமைப்பின் தயார் நிலை பற்றியும் விடயங்களை எடுத்துரைத்தார்கள். இந்தச் சந்திப்பில் […]
(-Colombo, August 12, 2024-)
ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைப் பிரதிநிதி Takafumi Kadono அவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (12) பிற்பகல் ம.வி.மு. தலைமையகத்தில் இடம்பெற்றது.
ஆசிய அபிவிருத்தி வங்கியால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தி பணிகள் பற்றிய மீளாய்வு செய்த அந்த பிரதிநிதிகள், எதிர்காலத்திலும் இலங்கைக்கு உதவி புரிவதற்காக அந்த அமைப்பின் தயார் நிலை பற்றியும் விடயங்களை எடுத்துரைத்தார்கள்.
இந்தச் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் பிமல் ரத்நாயக்க கலந்துகொண்டிருந்தார்.
(-Colombo, August 12, 2024-) இலங்கைக்கான பாலஸ்தீனத்தின் தூதுவர் கலாநிதி சுஹய்ர் ஷயிட் அவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (12) பிற்பகல் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. தனது பதவிக்காலம் நிறைவடைந்து சொந்த நாட்டுக்கு திரும்புவதாகக் கூறிய தூதுவர், பாலஸ்தீனத்தில் காசாவில் இடம்பெற்று வருகின்ற மனிதாபிமானமற்ற படுகொலைகளுக்கு எதிராக குரல் எழுப்பியதற்காகவும் பாலஸ்தீனத்தினத்திற்காக ஒத்துழைப்பு வழங்கியதற்காகவும் இதன்போது நன்றி தெரிவித்தார். இந்தச் சந்திப்பில் தேசிய […]
(-Colombo, August 12, 2024-)
இலங்கைக்கான பாலஸ்தீனத்தின் தூதுவர் கலாநிதி சுஹய்ர் ஷயிட் அவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (12) பிற்பகல் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.
தனது பதவிக்காலம் நிறைவடைந்து சொந்த நாட்டுக்கு திரும்புவதாகக் கூறிய தூதுவர், பாலஸ்தீனத்தில் காசாவில் இடம்பெற்று வருகின்ற மனிதாபிமானமற்ற படுகொலைகளுக்கு எதிராக குரல் எழுப்பியதற்காகவும் பாலஸ்தீனத்தினத்திற்காக ஒத்துழைப்பு வழங்கியதற்காகவும் இதன்போது நன்றி தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் பிமல் ரத்நாயக்க கலந்துகொண்டிருந்தார்.
(-ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் வேட்புமனுவில் கையொப்பமிட்ட சந்தர்ப்பத்தில் – ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் – 12.08.2024-) பெரும் நெருக்கடிக்குள் இருந்த ஆளும் குழுவினால் எமது நாடு அழுத்தப்பட்டுள்ளது. இதிலிருந்து எமது நாட்டையும் மக்களையும் மீட்டெடுப்பதற்கான சவாலை தேசிய மக்கள் சக்தி ஏற்றுக்கொள்ளத் தயார். எனவே, இன்று நாங்கள் இட்ட இந்த கையொப்பம் நிச்சயமாக வெற்றிக்கான கையொப்பமிடலாக அமையும். ஏனென்றால், இப்பொழுது ஏனைய பாசறைகள் ஒவ்வொரு குழுவாகப் பிரிந்து, சிதைந்து அழுக்குகளை சேகரிக்கும் நிலைக்கு மாறியுள்ளது. தேசிய மக்கள் […]
(-ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் வேட்புமனுவில் கையொப்பமிட்ட சந்தர்ப்பத்தில் – ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் – 12.08.2024-)
பெரும் நெருக்கடிக்குள் இருந்த ஆளும் குழுவினால் எமது நாடு அழுத்தப்பட்டுள்ளது. இதிலிருந்து எமது நாட்டையும் மக்களையும் மீட்டெடுப்பதற்கான சவாலை தேசிய மக்கள் சக்தி ஏற்றுக்கொள்ளத் தயார். எனவே, இன்று நாங்கள் இட்ட இந்த கையொப்பம் நிச்சயமாக வெற்றிக்கான கையொப்பமிடலாக அமையும்.
ஏனென்றால், இப்பொழுது ஏனைய பாசறைகள் ஒவ்வொரு குழுவாகப் பிரிந்து, சிதைந்து அழுக்குகளை சேகரிக்கும் நிலைக்கு மாறியுள்ளது. தேசிய மக்கள் சக்தியாகிய நாம் ஒன்றரை வருடங்களுக்கு முன்னரே எமது பயணத்தை சரியாக ஆரம்பித்தோம். நாங்கள் மிகவும் பலம்பொருந்திய வகையிலும் ஒழுங்கமைந்த வகையிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டி இற்றைவரை இந்தப் பயணத்தை தொடர்ந்துகொண்டிருக்கின்றோம். இன்னும் எங்களுக்கு ஒரு மாதத்தை விட சற்று அதிகமான நாட்கள்தான் இருக்கின்றன. இந்தக் கொஞ்ச நாட்களில் நாங்கள் மிகவும் பலம்பொருந்திய வகையில் எமது தேர்தல் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வோம். கிராமங்களில் மிகவும் வலிமைமிக்க ஒரு ஒழுங்கமைப்பும் அதைப்போலவே, தேசிய மக்கள் சக்திக்கு சொந்தமான பலம்பொருந்திய குழுக்களும் இருக்கின்றன. எனவே, இந்த தேர்தலை நிச்சயமாக எங்களால் வெற்றிகொள்ள முடியும்.
இந்த தேர்தலுக்கப் பின்னர் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான சவாலையும், எமது நாட்டை வளமான நாடாக மாற்றுவதற்கான சவாலையும், மக்களுக்கு நல்ல வாழ்க்கையை உரித்தாக்கிக் கொடுப்பதற்கான சவாலையும் தேசிய மக்கள் சக்தி ஏற்றுக்கொள்ளத் தயார். எனவே, இன்று இட்ட இந்தக் கையொப்பம் இந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிகரமான கையொப்பமிடலாக அமையும் என்பது நிச்சயம்.
(-Colombo, August 12, 2024-) எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக இன்று (12) முற்பகல் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க வேட்பாளர் வேட்புமனுவில் கையொப்பமிட்டார். இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் தோழர் டாக்டர் நிஹால் அபேசிங்க, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வாவை உள்ளிட்ட தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர்கள் சிலரும் […]
(-Colombo, August 12, 2024-)
எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக இன்று (12) முற்பகல் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க வேட்பாளர் வேட்புமனுவில் கையொப்பமிட்டார்.
இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் தோழர் டாக்டர் நிஹால் அபேசிங்க, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வாவை உள்ளிட்ட தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.