Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

NPP News

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கிய அரச விருந்துபசாரத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆற்றிய உரை

(-Colombo, December 17, 2024-) இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களே, பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, மாண்புமிகு அமைச்சர்கள், விசேட விருந்தினர்கள், ஆயுபோவன்,வணக்கம், நமஸ்தே, மாலை வணக்கம், ஜனாதிபதி அவர்களே, உங்கள் அன்பான கருத்துக்களை நான் மிகவும் உயர்வாகக் கருதுகிறேன். உங்கள் நாட்டில் எனது குழுவுக்கும் எனக்கும் அளிக்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்கு உங்களுக்கும் இந்திய அரசுக்கும் மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எமது இந்திய நண்பர்களுக்கு இலங்கை மக்களின் அன்பான வாழ்த்துக்களையும் […]

(-Colombo, December 17, 2024-)

President Anura Kumara Dissanayake's Speech at the State Banquet hosted by Her Excellency Droupadi Murmu, President of India

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களே, பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, மாண்புமிகு அமைச்சர்கள், விசேட விருந்தினர்கள்,

ஆயுபோவன்,வணக்கம், நமஸ்தே, மாலை வணக்கம்,

ஜனாதிபதி அவர்களே, உங்கள் அன்பான கருத்துக்களை நான் மிகவும் உயர்வாகக் கருதுகிறேன்.

உங்கள் நாட்டில் எனது குழுவுக்கும் எனக்கும் அளிக்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்கு உங்களுக்கும் இந்திய அரசுக்கும் மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எமது இந்திய நண்பர்களுக்கு இலங்கை மக்களின் அன்பான வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

President Anura Kumara Dissanayake Speaking at the State Banquet hosted by Her Excellency Droupadi Murmu, President of India

மாண்புமிகு ஜனாதிபதி அவர்களே,

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் இராஜதந்திரம் மற்றும் புவியியல் நெருக்கத்திற்கு அப்பாற்பட்டவை. எங்கள் உறவு நாகரீக ரீதியில் பிணைந்துள்ளதோடு அது பரஸ்பர மரியாதை, ஒத்துழைப்பு மற்றும் கூட்டு செயற்பாடாக வரையறுக்கப்படுகிறது.

இந்து சமுத்திரக் கரையிலிருந்து உப கண்டத்தின் மையப்பகுதி வரை, நமது நாடுகளின் வலுவான உறவுகளில் உள்ளார்ந்த மரபுகள், மதிப்புகள் மற்றும் எதிர்காலத்திற்கான பார்வை ஆகியவற்றின் பொதுவான பாரம்பரியத்தால் நாம் பிணைக்கப்பட்டுள்ளோம். எனவே, எனது முதல் உத்தியோகபூர்வ அரச விஜயத்தை நான் இந்தியாவுக்கு மேற்கொண்டமை ஆச்சரியப்படும் விடயமல்ல.

இந்த பழமையான நட்பை மேலும் வலுப்படுத்த எனது நிர்வாகம் உறுதிபூண்டுள்ளது. பொருளாதார மீட்சி, அபிவிருத்தி மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கிய எனது நாட்டின் பயணத்தில், இந்தியா எமக்கு மேலான ஒத்துழைப்பை வழங்கும் நம்பகரமான நண்பராகவும், உறுதியான பங்காளியாகவும், நெருங்கிய அண்டை நாடாகவும் மாறியுள்ளது. தேவைப்படும் சமயங்களில் இலங்கைக்கு இந்தியா அளித்து வரும் ஆதரவையும் தளராத ஒத்துழைப்பையும் நான் மிகவும் பாராட்டுகிறேன்.

இலங்கை ஒரு புதிய சகாப்தத்தின் வாசலில் நிற்கும் வேளையில், அதன் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதும், மக்களிடையேயான தொடர்புகளை மேம்படுத்துவதும், பிராந்திய மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை முன்னேற்றுவதும் மிக முக்கியமானது. எதிர்காலத்தில் மிகப்பெரிய சாத்தியங்கள் உள்ளன.

President Anura Kumara Dissanayake at the State Banquet hosted by Her Excellency Droupadi Murmu, President of India

இந்து சமுத்திர பிராந்தியத்தின் அமைதி, ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதில் நமது இரு நாடுகளின் பங்கு மிகவும் முக்கியமானது.

எங்கள் கூட்டாண்மையின் பலம் கூட்டுச் செயற்பாட்டில் தங்கியுள்ளது. சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தீர்ப்பது, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது அல்லது உலகளவில் அனைத்து குடிமக்களுக்கும் பயனளிக்கும் பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்துவது எதுவாக இருந்தாலும், கூட்டு முயற்சிகள் மூலம் மட்டுமே எல்லைகளைத் தாண்டிய புதிய மற்றும் அதிகரிக்கும் சவால்களை எதிர்கொள்ள முடியும்.

எதிர்கால சந்ததிகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட மற்றும் ஒன்றுக்கொன்று சார்ந்திருக்கும் உலகின் அபிவிருத்திக்கு 21 ஆம் நூற்றாண்டின் வாய்ப்புகளைப் பயன்படுத்துவதற்கு, உலகளாவிய தெற்கின் ஒரு தலைவராக இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பை பேண இலங்கை உறுதிபூண்டுள்ளது.

President Anura Kumara Dissanayake Speaking at the State Banquet hosted by Her Excellency Droupadi Murmu, President of India

மாண்புமிகு ஜனாதிபதி அவர்களே,

இந்த சந்தர்ப்பம், அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கான முயற்சியில் நம்மை இணைவதற்கு எம்மை சமீபமாக்கும், காலத்தினால் அழியாமல் நீடிக்கும், எமது தேசங்கள் இரண்டுக்கும் இடையில் செழுமையடையும் நீண்டகால நட்பின் அனுட்டிப்பாக அமையட்டும் என்றும் நான் பிரார்த்திக்கிறேன்.

இந்திய அரசாங்கமும் மக்களும் எமக்கு வழங்கும் அசைக்க முடியாத ஆதரவு மற்றும் நட்புக்காக எனது கௌரவத்துடன் கூடிய நன்றியைத் தெரிவிக்கிறேன். எமது ஒத்துழைப்பு மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கும் அதேநேரம், நாம் ஒன்றாகச் செல்லும் பயணம் நமது நாடுகளை போலவே முழு பிராந்தியத்திற்கும் செழிப்பைக் கொண்டுவரும் என்று நான் நம்புகிறேன்.

நன்றி!

Show More

ஜனாதிபதி புத்தகயாவில் தரிசனம்

(-Colombo, December 17, 2024-) இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (17) காலை புத்தகயாவிற்கு சென்று சித்தார்த இளவரசர் ஞானம் பெற்ற இடத்தில் அமைந்துள்ள மகாவிகாரை மற்றும் ஸ்ரீ மகா போதி என்பவற்றைத் தரிசித்து ஆசி பெற்றுக்கொண்டார். பௌத்தர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த புத்த பெருமானின் வாழ்க்கையுடன் தொடர்புள்ள மிகப் புனிதமான நான்கு இடங்களில் ஒன்றாக புத்தகயா காணப்படுவதோடு 2002 ஆம் ஆண்டு புத்தகயா மகாவிகாரை உலக மரபுரிமையாக யுனொஸ்கோவினால் பிரகடனம் […]

(-Colombo, December 17, 2024-)

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (17) காலை புத்தகயாவிற்கு சென்று சித்தார்த இளவரசர் ஞானம் பெற்ற இடத்தில் அமைந்துள்ள மகாவிகாரை மற்றும் ஸ்ரீ மகா போதி என்பவற்றைத் தரிசித்து ஆசி பெற்றுக்கொண்டார்.

பௌத்தர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த புத்த பெருமானின் வாழ்க்கையுடன் தொடர்புள்ள மிகப் புனிதமான நான்கு இடங்களில் ஒன்றாக புத்தகயா காணப்படுவதோடு 2002 ஆம் ஆண்டு புத்தகயா மகாவிகாரை உலக மரபுரிமையாக யுனொஸ்கோவினால் பிரகடனம் செய்யப்பட்டது.

இந்திய மகாபோதி சங்கத்தின் பொதுச் செயலாளர் வண. பெலவத்தே சீவலி தேரர் மற்றும் சாரநாத் மையத்தின் விகாராதிபதி வண. ரத்மல்வல சுமித்தானந்த தேரர் ஆகியோர் இதன்போது ஜனாதிபதிக்கு ஆசிர்வாதம் வழங்கினர்.

வௌிநாட்டு அலுவல்கள், வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோரும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

Show More

புதிய சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன

(-Colombo, December 17, 2024-) புதிய சபாநாயகராக பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன ஏகமனதாக நியமிக்கப்பட்டார். புதிய சபாநாயகராக பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன பொருத்தமானவர் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய முன்மொழிந்ததோடு , சபாநாயகர் பிமல் ரத்நாயக்க அதனை வழிமொழிந்தார். புதிய சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்மொழியப்படுவதாக முன்னர் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், […]

(-Colombo, December 17, 2024-)

New Speaker Of The Parliment Dr Jagath Wikramanayake

புதிய சபாநாயகராக பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன ஏகமனதாக நியமிக்கப்பட்டார்.

புதிய சபாநாயகராக பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன பொருத்தமானவர் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய முன்மொழிந்ததோடு , சபாநாயகர் பிமல் ரத்நாயக்க அதனை வழிமொழிந்தார். புதிய சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்மொழியப்படுவதாக முன்னர் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், புதிய சபாநாயகர் தெரிவின் போது வேறு எந்தப் பெயரும் முன்வைக்கப்படவில்லை.

இதன்படி, புதிய சபாநாயகராக பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன ஏகமனதாக நியமிக்கப்பட்டார்.

Show More

நீண்ட கால நட்புறவை வலுப்படுத்துவது குறித்து இந்திய-இலங்கை ஜனாதிபதிகளுக்கிடையில் கலந்துரையாடல்

(-Colombo, December 16, 2024-) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (16) பிற்பகல் புதுடில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, ​​இந்திய-இலங்கை இடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்துவது மற்றும் பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து கருத்துப் பரிமாறப்பட்டது. சிநேகபூர்வ சந்திப்பின் பின்னர் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு இராப்போசன விருந்து வழங்கினார். வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை […]

(-Colombo, December 16, 2024-)

President Anura Kumara Dissanayake Welcomed By President Of India

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (16) பிற்பகல் புதுடில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது, ​​இந்திய-இலங்கை இடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்துவது மற்றும் பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து கருத்துப் பரிமாறப்பட்டது.

சிநேகபூர்வ சந்திப்பின் பின்னர் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு இராப்போசன விருந்து வழங்கினார்.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோரும் இந்த சந்திப்பில் இணைந்து கொண்டனர்.

Sri Lankan President With Indian President
Show More

ஜனாதிபதிக்கும் இந்திய முன்னணி வர்த்தக பிரதிநிதிகளுக்குமிடையில் கலந்துரையாடல்

(-Colombo, December 16, 2024-) இலங்கையில் முதலீடுகள் தொடர்பில் கவனம் செலுத்த விருப்பம் தெரிவிப்பு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (16) பிற்பகல் புதுடில்லியில் இந்திய முன்னணி வர்த்தகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்திய கைத்தொழில் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கலந்துரையாடலில் இந்தியாவின் முன்னணி தொழில் முனைவோர் கலந்து கொண்டனர். இலங்கையில் முதலீடு செய்வதற்கான சாதகமான சூழல் குறித்து விளக்கமளித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கையில் […]

(-Colombo, December 16, 2024-)

இலங்கையில் முதலீடுகள் தொடர்பில் கவனம் செலுத்த விருப்பம் தெரிவிப்பு

President Anura Kumara Dissanayake at the discussion with leading Indian business representatives

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (16) பிற்பகல் புதுடில்லியில் இந்திய முன்னணி வர்த்தகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இந்திய கைத்தொழில் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கலந்துரையாடலில் இந்தியாவின் முன்னணி தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.

President Anura Kumara Dissanayake welcome at the discussion with leading Indian business representatives

இலங்கையில் முதலீடு செய்வதற்கான சாதகமான சூழல் குறித்து விளக்கமளித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கையில் முதலீடு செய்யுமாறு இந்திய தொழில் முனைவோரிடம் கோரிக்கை விடுத்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடு மற்றும் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

President Anura KuIndian business representatives at the discussion with Sri Lankan President And The Team

இதன்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகளின் அடிப்படையில் இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளை விஸ்தரிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்த இந்திய முன்னணி வர்த்தகப் பிரதிநிதிகள் விருப்பம் தெரிவித்ததுடன், அதற்குத் தேவையான முதலீட்டு வசதிகளை வழங்க இலங்கை அரசாங்கம் உடன்பாடு தெரிவித்தது.

தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோவும் இந்த சந்திப்பில் கருத்துத் தெரிவித்தார்.

President Anura Kumara Dissanayake greeted by a leading Indian business representative
Show More

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இந்திய உப ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு – இந்திய சுகாதார அமைச்சரையும் சந்தித்தார்

(-Colombo, December 16, 2024-) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இந்திய உப ஜனாதிபதி ஜக்தீப் தன்கருக்கும் இடையிலான சந்திப்பு இன்று (16) பிற்பகல் நடைபெற்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் கிடைத்த பெரு வெற்றிக்கு ஜனாதிபதி அநுர குமார திசானாயக்கவிற்கு இந்திய உப ஜனாதிபதி வாழ்த்துக்களை தெரிவித்தார். பொருளாதார ஒத்துழைப்பு, விவசாயம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் போன்ற விடயங்கள் குறித்து இதன் போது ஆராயப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்திய சுகாதார அமைச்சரும் பாரதீய ஜனதா […]

(-Colombo, December 16, 2024-)

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இந்திய உப ஜனாதிபதி ஜக்தீப் தன்கருக்கும் இடையிலான சந்திப்பு இன்று (16) பிற்பகல் நடைபெற்றது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் கிடைத்த பெரு வெற்றிக்கு ஜனாதிபதி அநுர குமார திசானாயக்கவிற்கு இந்திய உப ஜனாதிபதி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பொருளாதார ஒத்துழைப்பு, விவசாயம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் போன்ற விடயங்கள் குறித்து இதன் போது ஆராயப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இந்திய சுகாதார அமைச்சரும் பாரதீய ஜனதா கட்சியின் தலைவருமான ஜகத் பிரகாஷ் நட்டாவிற்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது.

Show More