(-Colombo, December 28, 2024-) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் பிரதானிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத பொருட்கள் நாட்டிற்குள் வருவதை தடுத்தல், விமான நிலையம், சுங்கத் திணைக்களத்திற்குள் நடக்கும் ஊழல்,மோசடிகளை மட்டுப்பத்தல்,சட்டவிரோதமான முறையில் நபர்கள் நாட்டிலிருந்து வௌியேறுவதை தடுப்பது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. அதற்காக, குடிவரவு குடியகல்வு திணைக்களம், […]
(-Colombo, December 28, 2024-)
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் பிரதானிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத பொருட்கள் நாட்டிற்குள் வருவதை தடுத்தல், விமான நிலையம், சுங்கத் திணைக்களத்திற்குள் நடக்கும் ஊழல்,மோசடிகளை மட்டுப்பத்தல்,சட்டவிரோதமான முறையில் நபர்கள் நாட்டிலிருந்து வௌியேறுவதை தடுப்பது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அதற்காக, குடிவரவு குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் ஆகிய மூன்று நிறுவனங்களிலும் இணை கமரா கட்டமைப்பு மற்றும் கண்காணிப்பு நிலையத்தை ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆலோசனை வழங்கினார்.
அதேபோல், தற்போதுள்ள ஸ்கேன் இயந்திரங்களுக்குப் பதிலாக மேம்படுத்தப்பட்ட நவீன ஸ்கேன் இயந்திரங்களைப் பயன்படுத்தி இந்த நிறுவனங்கள் ஊடாக நடக்கும் கடத்தல்களை தடுப்பதற்கு நடைமுறை சாத்தியமான புதிய செயல்முறையை ஆரம்பிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மேலும், நாட்டு மக்கள் மத்தியில் சுஙகம் தொடர்பில் தற்போது காணப்படும் தவறான புரிதல்கள் களையப்பட வேண்டும் எனவும், அதற்காக கடுமையான ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதன்போது வலியுறுத்தினார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, சுங்கப் பணிப்பாளர் நாயகம் சரத் நோனிஸ், குடிவரவுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் (பதில்) பீ.எம்.டி. நிலுஷா பாலசூரிய, நிதி அமைச்சின் பணிப்பாளர் நாயகம் (தேசிய வரவு செலவு) ஜூட் நிலுக் ஷான், விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் எயார் சீப் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
(-Colombo, December 26, 2024-) •கடன் மறுசீரமைப்பு நிறைவு •சிறு மற்றும் மத்திய தர தொழில் முனைவோருக்கு பல சலுகைகள் •குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு பாதுகாப்பு பொருளாதார நிலைப்படுத்தல் செயற்பாடுகள் மற்றும் மக்களுக்கான உத்தேச நிவாரணப் பொதிகள் தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (26) நடைபெற்றது. தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும […]
(-Colombo, December 26, 2024-)
•கடன் மறுசீரமைப்பு நிறைவு
•சிறு மற்றும் மத்திய தர தொழில் முனைவோருக்கு பல சலுகைகள்
•குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு பாதுகாப்பு
பொருளாதார நிலைப்படுத்தல் செயற்பாடுகள் மற்றும் மக்களுக்கான உத்தேச நிவாரணப் பொதிகள் தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (26) நடைபெற்றது.
தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோர் இந்த ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இதன்போது வௌியிடப்பட்ட ஊடக அறிக்கை
பொருளாதார ஸ்திரப்படுத்தல் செயல்முறை மற்றும் மக்களுக்கான நிவாரணப் பொதிகள் தொடர்பான ஊடக அறிக்கை
01.பொருளாதார ஸ்திரத்தன்மை
முன்னைய ஆட்சிகள் உருவாக்கிய படுகுழியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க, பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது முக்கியமானது.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்த வேளையில், நெருக்கடிக்கு காரணமாக இருந்தவர்கள் 2022 ஏப்ரலில் ஒருதலைப்பட்சமாக வெளிநாட்டுக் கடன் பெறுவதை நிறுத்தியிருந்ததுடன், 4 வருட காலத்திற்குள் 8 தவணைகளாக கிடைக்கப்பெறவிருந்த 3 பில்லியன் டொலர்கள் வரையிலான நீடிக்கப்பட்ட கடன் வசதிகளுக்கான (EFF) சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தில் நுழைந்திருந்தனர்.
மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய கடன் ஆகியவை நிலைத்தன்மை பகுப்பாய்விற்கு ஏற்ப மறுசீரமைப்பு செயல்முறை மூலம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் தாமதிப்பு மற்றும் கடினமான தன்மை காரணமாக, நாடு மேலதிகச் செலவுகளைச் செய்ய வேண்டியிருந்ததுடன் மக்கள் மீதான அதிக சுமை அதிகபடுத்தப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், பின்னர், சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரக் கண்ணோட்டத்திற்கு அமைய, அப்போதைய நிலைமைகளின் நன்மை, தீமைகள் என்ற இரண்டையும் கருத்தில் கொண்டு, நாட்டு மக்களின் நலனுக்கான மாற்றீடுகளுடன் அரசாங்கம் முன்னோக்கி பயணிக்கிறது.
அதன்படி, வேலைத்திட்டத்தின் அளவுகோள் மற்றும் அரச வருமான வழிமுறைகளுக்கு அமைய, உரிய தலையீடு மற்றும் காலோசிதமான முறையில் வசதிகளை வழங்குவதன் ஊடாக, 2024 நவம்பர் 26 ஆம் திகதி மூன்றாவது மீளாய்வில் பணிக்குழு மட்டத்திலான இணக்கப்பாட்டினை எட்ட முடிந்தது. சர்வதேச நாணய நிதிய பணிப்பாளர் சபை அனுமதிக்கு முன்னதாக, EFF இன் அடுத்த தவணையைப் பெற்றுகொள்வதற்கு அரசாங்கம் உரிய பங்குதாரர்களுடன் இணைந்து செயலாற்றி வருகிறது.
கடன் மறுசீரமைப்பு
இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மறுசீரமைப்பை உள்ளடக்கியுள்ளது. உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு 2023 ஜூலை மாதமளவில் நிறைவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பில் உள்ளடங்கும் பலதரப்பு கடன் மறுசீரமைப்பு பல்வேறு அடிப்படைகள் மற்றும் தர்க்கங்களுக்கு அமைய கடன் வழங்குநர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் மற்றும் தனியார் சர்வதேச பிணைமுறிகள் (ISB) என்பன வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பில் உள்ளடங்கும்.
இருதரப்புக் கடன்
17 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரான்ஸ், இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைத் தலைமைத்துவம் வகிக்கும் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழு (OCC), சீனா எக்சிம் வங்கி, சீனா அபிவிருத்தி வங்கி, ஏனைய உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களான (குவைட், சவூதி அரேபியா, ஈரான், பாகிஸ்தான்) மற்றும் ஏனைய வணிக கடன் வழங்குநர்களுடன் இணைந்து இருதரப்பு கடன் தொடர்பிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழு 2024 ஜூன் மாதத்தில் உரிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளதுடன், குறித்த தீர்வுகளின் (CoT) ஒப்பீட்டு நிலையை உறுதிசெய்து, இணக்கம் காணப்பட்ட கட்டமைப்பிற்குள் சீனாவுடனான கடன் 2023 ஒக்டோபர் மாதத்திற்குள் மறுசீரமைக்கப்பட்டிருந்தது. ஏனைய உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களான (குவைட், சவூதி அரேபியா, ஈரான், பாகிஸ்தான்) உள்ளிட்ட நாடுகளுடனான கடன் அண்ணளவாக 300 டொலர் மில்லியன்களாக காணப்படுவதுடன், இது ஏனைய முழுக் கடன் மறுசீரமைப்பு செய்தலில்1% ஆக காணப்படுகிறது. ஏனைய அனைத்து இருதரப்பு கடன் வழங்குநர்களும் இணங்கிய கட்டமைப்புக்குள் மறுசீரைப்புச் செய்ய தற்போதும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
சர்வதேச பிணைமுறி கடன் வழங்குநர்கள்
மிகவும் தாமதமான சர்வதேச பிணைமுறி கடன், மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள், இணக்கமின்மை, முன்மொழிவுகளை மாற்றுதல், DSA மற்றும் சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கைகளுக்கு இசைவாக மாற்றுதல் உள்ளிட்ட பல கட்ட பேச்சுவார்த்தைகளைக் கடந்துள்ளது.
இறுதியாக 2024 செப்டம்பர் 19 ஆம் திகதி கொள்கை அடிப்படையில் (AIP) ஜனாதிபதித் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இணக்கம் காணப்பட்டது. Ad Hoc Group (AHG) மற்றும் Local banking consortium இனால் கடந்த காலங்களில் செலுத்த வேண்டியிருந்த 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் உட்பட சர்வதேச பிணைமுறிக் கடன்களில் 14.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படுகிறது.
காலோசிதமான செயற்பாடுகளை முன்னெடுத்தல் மற்றும் புதிய வசதிகளை ஏற்படுத்துவதன் ஊடாக புதிய அரசாங்கம் நாட்டை பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி நகர்த்துவதற்கான வலுவான அரசியல் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது. நிதி ஸ்திரத்தன்மைக்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் சுயாதீனமான மூன்றாம் தரப்பினரால் பாராட்டப்பட்டுள்ளதுடன், அதற்கேற்ப தரப்படுத்தல்களும் உயர்த்தப்பட்டுள்ளன.
இந்த வெற்றிக்காகு சரியான முறையில் வழங்கப்பட்ட முன்னுரிமை மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தலுக்காக மேற்கொள்ளப்பட்ட பயனுள்ள நடவடிக்கைகள் ஆகியன முக்கிய காரணங்களாகியுள்ளன. இவ்வாறாக, இலங்கை மக்களுக்கு “வளமான நடு – அழகான வாழ்வு” இனை ஏற்படுத்திக்கொடுப்பதை நனவாக்க அரசாங்கம் தனது மறுசீரமைப்புச் செயற்பாடுகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்தது. இதன்படி, பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான தீர்மானமிக்க முயற்சியாக 2024 டிசம்பர் 20 ஆம் திகதி நடைமுறையில் உள்ள பிணைமுறி பரிமாற்றத்திற்காக புதிய பிணைமுறிகளை வௌியிடுவதை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதுடன், அதனை திறம்பட செயல்படுத்துவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
2. சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான வசதிகளை வழங்கல்
2.அ.1. பராட்டே சட்ட சலுகைகளை நீடித்தல்
பராட்டே சட்டத்தை நடைமுறைப்படுத்தும் திகதியை ஒத்திவைப்பதற்குப் பதிலாக, நீண்டகாலமாக காணப்படும் பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகள் காணப்படுவதை உறுதிசெய்ய, அரசாங்கம் பங்குதாரர் குழுக்களுடன் இணைந்துகொண்டுள்ளது. இதன் பலனாக, பராட்டே சட்டத்தின் அமுலாக்கம் இப்போது 2025 மார்ச் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
2.ஆ.2.நிவாரணப் பொதி
கால நீடிப்பினால் மாத்திரம் வியாபாரங்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை. மத்திய வங்கியின் தரவுகளின்படி, 25 மில்லியனுக்கும் குறைவான கடன் மூலதனத்தைக் கொண்ட கடனாளர்களில் 99% ஆனோர் வங்கிகளுடன் கலந்தாலோசித்து தங்களது கடன்களை
செலுத்தும் முறைக்கு இணங்க 12 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 25 – 50 மில்லியன்கள் வரையிலான கடன்கள் கொடுக்கல் வாங்கல் செய்தோருக்கும் 9 மாதங்கள் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதுடன், ஏனை கொடுக்கல் வாங்கல் செயற்பாட்டாளர்களுக்கும் 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட மற்றும் மத்திய வங்கியினால் செயற்படுத்தப்படும் இந்த நிவாரணப் பொதியில், குறிப்பாக குறைந்த வட்டி விகிதங்கள், மீள் செலுத்தும் காலம் நீடிப்பு, கடன் தரப்படுத்தலில் தளர்வு மற்றும் மதிப்பீட்டு சர்ச்சைகளை தீர்ப்பதற்கு வெளிப்படையான பொறிமுறையை ஏற்படுத்துவதன் மூலம் கடன் பெறுபவர்களுக்கு பெருமளவில் நிவாரணம் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த நிவாரண நடவடிக்கைகள், பொருளாதாரத்தில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்பை உறுதி செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்படுகிறது.
2. ஆ. பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை பெற்றுக்கொள்ள உதவி
2.ஆ.1. அஸ்வெசும குடும்ப பிள்ளைகள்.
சமூகத்தில் ஆபத்திற்குட்படக்கூடிய தொகுதியிலிருக்கும் பெற்றோர்களுடைய பிள்ளைகளின் கல்வி மீதான சுமையை குறைக்கும் வகையில் எதிர்வரும் பாடசாலை தவணைக்கு அத்தியாவசியமான பாடசாலை புத்தகங்கள் மற்றும் எழுதுவினைபொருட்கள் கொள்வனவு செய்வதற்கு ஒரு பிள்ளைக்கு 6,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அஸ்வெசும பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்காக இந்த சலுகை விரைவில் ஆரம்பிக்கப்படும்.
2.ஆ.2. அஸ்வெசு பெறாத குடும்பங்களின் பிள்ளைகள்
தற்போது அஸ்வெசும கிடைக்காத, ஆனால், நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருக்கும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு கல்வி அமைச்சின் பரிந்துரைக்கமைய இந்த சலுகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்செயற்பாட்டினை விரைவில் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதோடு, பொருளாதார ரீதியாக நெருக்கடிகளை எதிர்நோக்குகின்ற மற்றும் இந்த உதவித் தொகையினை பெற்றுக்கொள்ள தகுதியான சகல பிள்ளைகளுக்கும் இந்த சலுகையை வழங்கும் வேலைத்திட்டம் இன்னும் சில தினங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
தொழில் அமைச்சர் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் – கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ
பிரதி நிதி அமைச்சர் – கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும
(-Colombo, December 25, 2024-) இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கோலகலமாக கொண்டாடி வருகின்றனர். துன்பத்தில் இருந்து அனைவரையும் காப்பாற்ற இவ்வுலகின் அவதரித்த இயேசு கிறிஸ்து, ஒருபோதும் ஏழை, பணக்காரன் என்ற கண்ணோட்டத்தில் மக்களைப் பார்த்ததில்லை. அதனால்தான் அன்னார் கடவுளின் குழந்தையாக இவ்வுலகில் பிறந்த நாளில் மிகவும் ஏழ்மையான மற்றும் அப்பாவி மனித சமூகமாக இருந்த மேய்ப்பர்களிடையே பிறக்கத் தேர்ந்தெடுத்தார். இவ்வாறாகத் தான் தேவதூதர்கள் அவர்களுக்கு நற்செய்தியை கொண்டு […]
(-Colombo, December 25, 2024-)
இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கோலகலமாக கொண்டாடி வருகின்றனர். துன்பத்தில் இருந்து அனைவரையும் காப்பாற்ற இவ்வுலகின் அவதரித்த இயேசு கிறிஸ்து, ஒருபோதும் ஏழை, பணக்காரன் என்ற கண்ணோட்டத்தில் மக்களைப் பார்த்ததில்லை. அதனால்தான் அன்னார் கடவுளின் குழந்தையாக இவ்வுலகில் பிறந்த நாளில் மிகவும் ஏழ்மையான மற்றும் அப்பாவி மனித சமூகமாக இருந்த மேய்ப்பர்களிடையே பிறக்கத் தேர்ந்தெடுத்தார். இவ்வாறாகத் தான் தேவதூதர்கள் அவர்களுக்கு நற்செய்தியை கொண்டு வந்தார்கள். எனவே, நத்தார் தினத்தில் அடிப்படை அர்த்தம், வாத பேதங்களை ஒதுக்கி, மனிதநேயத்தின் பெயரால், மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் செயற்படுவதாகும். நத்தார் தினத்தின் உண்மையான அர்த்தமான அமைதியின் பின்னணியில் இருந்து இந்த நத்தார் பண்டிகையை கொண்டாடி வருவதை உளப்பூர்வமான மகிழ்ச்சியுடன் இங்கு குறிப்பிடுகிறோம்.
சகல மக்களும் ஒன்றாக ஒரே நோக்கத்துடன் கூட்டுப் பொறுப்பாகக் கருதி நாட்டின் எதிர்காலத்திற்காக ஒன்றிணைந்த ஒரு காலகட்டத்தை நாம் அடைந்துள்ளோம், அமைதி மற்றும் நல்லிணக்கத்தினால் பிணைந்து பூமியில் ஒரு புதிய விடியலின் அரவணைப்பை நாங்கள் அனுபவித்து வருகிறோம். அந்த பிரகாசமே இயேசு நமக்குக் கொண்டுவந்த அன்பின் விடியலாகும். பிரிவினையின் இருளில் இருந்து விலகி அமைதியுடன் ஆட்சி செய்யும் தோழர்களின் பூமியாக நமது நாடு படிப்படியாக மாற்றப்படுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். மனித சுதந்திரம் மற்றும் நீதியின் அடிப்படையில் யேசுநாதர் செய்த போராட்டத்தின் காரணமாக அவர் புனிதரானார். அந்த மனிதாபிமான சுதந்திரம் மற்றும் நியாயத்தை மதித்து அவருடைய வழிகாட்டுதலை உண்மையாக்க ஒரு அரசாங்கமென்ற வகையில் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
இன்று இலங்கைக்குத் தேவையான சமூக மாற்றம் என்பது பாரியதொரு சமூக மாற்றமாகும். சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு சில துறைகளில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு அப்பாற்பட்ட முழு சமூக மாற்றமாகும். இது ஒரு மறுமலர்ச்சியாகும். அந்தத் தேசிய மறுமலர்ச்சிக்காக மிகுந்த அர்ப்பணிப்பு, பொறுமை, நிதானம், அடங்காத துணிச்சல், இடையறாத முயற்சியுடன் பணியாற்றும் நமது அரசைச் சுற்றி திரண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் நம்பிக்கைகள் எந்த வகையிலும் வீழ்ச்சியடைய விடாது அவர்கள் எதிர்பார்க்கும் “வளமான நாடு-அழகான வாழ்க்கையை” உருவாக்கும் ஒரே குறிக்கோளுடன்,மென்மேலும் வீரியத்துடனும் உறுதியுடனும் என்னை அர்ப்பணிப்பேன் என்பதை புனித நத்தார் தினத்தில் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
சுயநலம் மற்றும் தீங்கான போட்டியை சமூக கட்டமைப்பு தள்ளப்பட்டுள்ள போதும் , கிறிஸ்மஸில் வெளிப்படுத்தப்படும் மனித பண்புகளை வளர்த்து, சமத்துவத்தை மதித்து, மற்றவர்களுக்கு மரியாதை செலுத்துவதன் மூலம், சகோதரத்துவத்தையும் சகவாழ்வையும் மதிப்பதன் மூலம், அந்த சமூக கட்டமைப்பை நல்வழிப்படுத்தி மகிழ்ச்சிகரமான சமூகமொன்றுக்காக பிரஜைகள் என்ற வகையில் நாம் அனைவரும் கைகோர்க்க உறுதி பூணுவோம்.
வலுவான மற்றும் நிலையான பொருளாதாரம், சமூக நீதியை இலக்காகக் கொண்ட உண்மையான உண்மையான அரசியல் கலாச்சாரம் மற்றும் மனிதநேயம் மற்றும் சுதந்திரம் நிறைந்த ஒரு அழகான நாட்டை உருவாக்க வலுவான உறுதியுடன் நம்மை அர்ப்பணிக்க இந்தப் புனித நத்தார் தினத்தில் நாம் அனைவரும் உறுதிபூணுவோம்.
இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் இனிய நத்தார் நல்வாழ்த்துக்கள்!
அநுரகுமார திசாநாயக்க
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு
2024 டிசம்பர் 23 ஆம் திகதி
(-Colombo, December 23, 2024-) பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழிப்பதற்கான ஆசிய பசுபிக் குழுவின் மூலம் நடத்தப்பட இருக்கும் இலங்கையின் பரஸ்பர மதிப்பீட்டிற்கான முக்கிய தயார்படுத்தல் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று(23) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கியினதும் நிதியியல் உளவறிதல் பிரிவினதும் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். அமைச்சுக்கள், ஒழுங்குமுறைப்படுத்தல் நிறுவனங்கள் மற்றும் சட்ட அமுலாக்கல் முகவராண்மை நிறுவனங்கள் உள்ளடங்கலாக […]
(-Colombo, December 23, 2024-)
பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழிப்பதற்கான ஆசிய பசுபிக் குழுவின் மூலம் நடத்தப்பட இருக்கும் இலங்கையின் பரஸ்பர மதிப்பீட்டிற்கான முக்கிய தயார்படுத்தல் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று(23) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கியினதும் நிதியியல் உளவறிதல் பிரிவினதும் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அமைச்சுக்கள், ஒழுங்குமுறைப்படுத்தல் நிறுவனங்கள் மற்றும் சட்ட அமுலாக்கல் முகவராண்மை நிறுவனங்கள் உள்ளடங்கலாக தொடர்புள்ள 24 நிறுவனங்களுக்காக வடிவமைக்கப்பட்ட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்ட திட்டங்களை துரிதமாக நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை நிதியியல் உளவறிதல் பிரிவு இங்கு வலியுறுத்தியது.
நிதியியல் நடவடிக்கைச் செயலணியினால் (FATF) தயாரிக்கப்பட்டு பரிந்துரைகளை முன்னெடுப்பதற்கான சட்ட ரீதியிலான மறுசீரமைப்புகள், இயலளவு விருத்தி, முகவராண்மைகளுக்கிடையிலான மேம்பட்ட கூட்டிணைப்பு, அனைத்தையுமுள்ளடக்கிய புள்ளிவிபரங்களை பேணுதல் என்பவற்றுக்கு இந்த செயற்பாட்டுத் திட்டம் முன்னுரிமையளித்துள்ளது.
இத்திட்டங்களுடன் முழுமையான இணக்கப்பாட்டினை உறுதிசெய்வதற்கு பிரத்தியேகமான குழுக்களை நியமிக்குமாறும், அதன் முன்னேற்றத்தினை உன்னிப்பாக கண்காணிக்குமாறும் நிதியியல் உளவறிதல் பிரிவு,பொறுப்புடைய அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அத்தோடு இந்தச் செயற்பாடு தொடர்பில் ஒத்துழைப்புடன் அர்ப்பணிக்குமாறு கோரிய ஜனாதிபதி, இலங்கையின் நிதிக்கட்டமைப்பு ஸ்தீரத்தன்மையைப் பாதுகாத்து நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் சர்வதேச நம்பிக்கையினை மேம்படுத்துவதற்கும் அதன் ஊடாக சாதகமான பெறுபேறுகளை பெறவும் பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியீடலை ஒழிப்பதற்கு பலமான மற்றும் செயற்திறனுள்ள கட்டமைப்பொன்று அவசியம் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்சன சூரியப்பெரும மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் இணைந்து கொண்டனர்.
(-Colombo, December 17, 2024-) கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களை தகனம் செய்ததன் மூலம் சமய மரபுகளுக்கும் அம்மக்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதியை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கடந்த அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானம் எந்தவகையிலும் நியாயப்படுத்தப்படக்கூடிய ஒன்றல்ல. இது மிகவும் உணர்ச்சியற்ற மற்றும் மிகவும் கொடூரமான ஒரு தீர்மானம். ஒரு மரணத்திற்குப் பின்னர் நிறைவேற்றப்படும் சம்பிரதாயங்கள் மூலம் குடும்பத்தினர் தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தவும் துக்கத்தைக் குறைக்கவும் […]
(-Colombo, December 17, 2024-)
கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களை தகனம் செய்ததன் மூலம் சமய மரபுகளுக்கும் அம்மக்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதியை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கடந்த அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானம் எந்தவகையிலும் நியாயப்படுத்தப்படக்கூடிய ஒன்றல்ல. இது மிகவும் உணர்ச்சியற்ற மற்றும் மிகவும் கொடூரமான ஒரு தீர்மானம். ஒரு மரணத்திற்குப் பின்னர் நிறைவேற்றப்படும் சம்பிரதாயங்கள் மூலம் குடும்பத்தினர் தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தவும் துக்கத்தைக் குறைக்கவும் முடிகிறது. அதனால்தான் இதற்கு சமய ரீதியான பெறுமானம் வழங்கப்பட்டுள்ளது.
கொவிட் தொற்றுநோய் போன்ற நிச்சயமற்ற சூழ்நிலையில் இத்தகைய மரபுகள் மிகவும் முக்கியமானவை. இப்படியான சந்தர்ப்பத்தில் இத்தகையதொரு கொடூரமான தீர்மானத்தை மேற்கொண்டமையை எந்தவகையிலும் அனுமதிக்க முடியாது. அதற்கு அரசியல் அல்லது வேறு எந்த நியாயமும் செல்லுபடியாகாது. விஞ்ஞான அடிப்படையின்றி இதுபோன்றதொரு தீர்மானத்தை மேற்கொள்வது நியாயமற்றது. அதனால், எந்த ஒரு பிரிவினருக்கும் இதுபோன்ற துன்பத்தை ஏற்படுத்தும் அல்லது சமய மரபுகளை அவமதிக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் எமது அரசாங்கம் ஒருபோதும் மேற்கொள்ளாது.
ஏதேனும் ஒரு சம்பவம் நடந்தால் அது அப்போதைய அரசியல் கலாசாரத்தின் அடிப்படையில் அந்த அதிகாரிகள் மேற்கொண்ட தீர்மானம் என்று நாம் நினைக்கிறோம். அந்த கலாசாரத்தை நாம் மாற்றுவோம். மீண்டும் மக்களைப் பாதிக்கும் இவ்வாறான தீர்மானங்களை அதிகாரிகள் எடுக்க இடமளிக்க மாட்டோம் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.
இதன்மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதை நாம் அறிவோம். அதற்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து கலந்துரையாட நாங்கள் தயாராக உள்ளோம்.
(-Colombo, December 17, 2024-) சீன பொதுமக்கள் அரசியல் ஆலோசனை சம்மேளனத்தின் (CPPCC) தேசியக் குழுவின் உப தலைவர் Qin Boyong அவர்கள் டிசம்பர் 17ம் திகதி, பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் வைத்து, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்தார். Qin Boyong உள்ளிட்ட தூதுக்குழுவை வரவேற்ற பிரதமர், இரு நாடுகளுக்குமிடையில் நீண்டகாலமாக காணப்படும் நட்புறவை வரவேற்றதுடன் இரு தரப்பு தொடர்புகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் கவனம் செலுத்தினார். நோய்க்கட்டுப்பாடு, நிலையான அபிவிருத்தி மற்றும் பல்துறைகளின் வர்த்தக […]
(-Colombo, December 17, 2024-)
சீன பொதுமக்கள் அரசியல் ஆலோசனை சம்மேளனத்தின் (CPPCC) தேசியக் குழுவின் உப தலைவர் Qin Boyong அவர்கள் டிசம்பர் 17ம் திகதி, பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் வைத்து, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்தார்.
Qin Boyong உள்ளிட்ட தூதுக்குழுவை வரவேற்ற பிரதமர், இரு நாடுகளுக்குமிடையில் நீண்டகாலமாக காணப்படும் நட்புறவை வரவேற்றதுடன் இரு தரப்பு தொடர்புகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் கவனம் செலுத்தினார். நோய்க்கட்டுப்பாடு, நிலையான அபிவிருத்தி மற்றும் பல்துறைகளின் வர்த்தக மற்றும் கைத்தொழில் தொடர்புகளை வலுப்பத்துவது தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.
இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong, பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹாவத்த, பிரதமரின் ஊடக செயலாளர் விஜிதா பஸ்நாயக்க, வெளிவிவகார அமைச்சின் கிழக்கு ஆசியா தொடர்பான பணிப்பாளர் நாயகம் எஸ்.ருவந்தி தெல்பிட்டிய மற்றும் குறித்த பிரிவின் பணிப்பாளர் உதானி குணவர்தன உள்ளிடட அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.