(-Colombo, October 09, 2024-) பொருளாதார முன்னேற்றத்திற்கும் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளுக்கும் ஆதரவு. இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி சிறி வோல்ட் (Siri Walt) இன்று (09) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு வாழ்த்துத் தெரிவித்த தூதுவர் கலாநிதி சிறி வோல்ட், சுவிட்சர்லாந்து அரசாங்கம் மற்றும் அந்நாட்டு மக்களின் வாழ்த்துக்களையும் ஜனாதிபதிக்கு தெரிவித்தார். இலங்கையில் தற்போது செயற்படும் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் ஊடாக சுவிட்சர்லாந்து […]
(-Colombo, October 09, 2024-)
பொருளாதார முன்னேற்றத்திற்கும் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளுக்கும் ஆதரவு.
இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி சிறி வோல்ட் (Siri Walt) இன்று (09) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு வாழ்த்துத் தெரிவித்த தூதுவர் கலாநிதி சிறி வோல்ட், சுவிட்சர்லாந்து அரசாங்கம் மற்றும் அந்நாட்டு மக்களின் வாழ்த்துக்களையும் ஜனாதிபதிக்கு தெரிவித்தார்.
இலங்கையில் தற்போது செயற்படும் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் ஊடாக சுவிட்சர்லாந்து இலங்கைக்கு ஆதரவளிக்க உறுதி பூண்டுள்ளதாக உறுதிப்படுத்திய தூதுவர், ஊழலுக்கு எதிரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முயற்சிகளுக்கு சுவிட்சர்லாந்து ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் வலியுறுத்தினார்.
நேரடி வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சுற்றுலாத்துறையில் சுவிட்சர்லாந்தின் நிபுணத்துவத்தையும் இதன்போது எடுத்துரைத்த அவர், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதில் அந்த துறைகளில் இலங்கைக்கு ஆதரவை வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், அரசியலமைப்பு மறுசீரமைப்புகள் மற்றும் தொழிலாளர் இடம்பெயர்வு ஆகிய பகுதிகள் குறித்து இதன்போது சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டதுடன், அந்த துறைகளில் இலங்கையின் திறன்களை மேலும் மேம்படுத்துவதற்கு சுவிட்சர்லாந்து ஆதரவை வழங்கும் என்று தூதுவர் சிறி வோல்ட் உறுதியளித்தார்.
இலங்கைக்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையிலான வலுவான இராஜதந்திர உறவுகளையும், இலங்கையின் நிலைபேறான அபிவிருத்தி மற்றும் நிர்வாக விடயங்களில் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சுவிட்சர்லாந்தின் தொடர்ச்சியான ஒத்துழைப்பையும் தூதுவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
(-Colombo, October 09, 2024-) இலங்கையர்களுக்கு அதிக தொழில் வாய்ப்புகளை உருவாக்குவது குறித்து கவனம் இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் மியோன் லீ (Miyon Lee) இன்று (09) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு தூதுவர் மியோன் லீ வாழ்த்து தெரிவித்ததோடு தென்கொரிய அரசாங்கத்தின் வாழ்த்துச் செய்தியும் கையளிக்கப்பட்டது. இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு தென் கொரியாவின் அர்ப்பணிப்பை தூதுவர் மியோன் […]
(-Colombo, October 09, 2024-)
இலங்கையர்களுக்கு அதிக தொழில் வாய்ப்புகளை உருவாக்குவது குறித்து கவனம்
இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் மியோன் லீ (Miyon Lee) இன்று (09) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு தூதுவர் மியோன் லீ வாழ்த்து தெரிவித்ததோடு தென்கொரிய அரசாங்கத்தின் வாழ்த்துச் செய்தியும் கையளிக்கப்பட்டது.
இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு தென் கொரியாவின் அர்ப்பணிப்பை தூதுவர் மியோன் லீ உறுதிப்படுத்தியதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவு குறித்தும் நினைவுகூரப்பட்டன. இலங்கைக்கு அந்நியச் செலாவணி அனுப்புவதில் தென் கொரியா ஆறாவது இடத்தில் உள்ளதாகக் குறிப்பிட்ட தூதுவர், தென் கொரியாவில் உள்ள இலங்கையர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கி,நாட்டுக்கு பணம் அனுப்பும் தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மேலும், கொரிய சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா செல்வதற்கு ஈர்ப்புள்ள நாடாக இலங்கையை ஊக்குவிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு பொருளாதார ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் உறுதியளித்த தூதுவர், தென்கொரியாவும் கடந்த காலங்களில் இவ்வாறான பொருளாதார சவால்களை எதிர்கொண்டதாகவும், கொரியா பெற்ற அனுபவத்தை இலங்கையும் பயன்படுத்தி வெற்றிகொள்ள முடியும் எனவும் தெரிவித்தார். கொரியா எக்ஸிம் வங்கியின் முதலீட்டை அபிவிருத்தியின் முக்கிய அங்கமாகக் கருதி இலங்கையின் கிராமப்புற வறுமையை ஒழிப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
மேலும், தென் கொரிய தூதுவர் மியோன் லீ, சுகாதாரப் பாதுகாப்பு, ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்தல் ஆகிய துறைகளில் கொரியாவின் ஆதரவை உறுதி செய்தார். தென் கொரியாவில் தொழில்வாய்ப்பை எதிர்பார்க்கும் இலங்கையர்களை சிறந்த முறையில் தயார்படுத்தும் வகையில், கொரிய மொழிக் கல்வியை இலங்கையில் விரிவுபடுத்துவதற்கு தென் கொரியாவின் விருப்பத்தை தூதுவர் லீ மேலும் வலியுறுத்தினார்.
(-Colombo, October 09, 2024-) இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி வணக்கத்திற்குரிய பிரையன் உதைக்வே ஆண்டகை (Rev. Dr.Brian Udaigwe) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை இன்று (09) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற அநுரகுமார திசாநாயக்கவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த வத்திக்கான் பிரதிநிதி,கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும் இறைமைமிக்க வத்திக்கான் அரசின் பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ் அவர்களின் உளப்பூர்வமான வாழ்த்துச் செய்தியையும் ஜனாதிபதிக்கு கையளித்தார். புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையின் கீழ் […]
(-Colombo, October 09, 2024-)
இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி வணக்கத்திற்குரிய பிரையன் உதைக்வே ஆண்டகை (Rev. Dr.Brian Udaigwe) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை இன்று (09) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற அநுரகுமார திசாநாயக்கவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த வத்திக்கான் பிரதிநிதி,கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும் இறைமைமிக்க வத்திக்கான் அரசின் பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ் அவர்களின் உளப்பூர்வமான வாழ்த்துச் செய்தியையும் ஜனாதிபதிக்கு கையளித்தார். புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையின் கீழ் இலங்கை வெற்றிமிக்க மற்றும் சுபீட்சத்தை நோக்கிப் பயணிக்கும் எனத் தெரிவித்த வத்திக்கான் பிரதிநிதி உதைக்வே ஆண்டகை, அதற்காக தாம் மனமார வாழ்த்துவதாகவும் தெரிவித்தார்.
இலங்கையின் எதிர்காலம் குறித்து தனது சாதகமான கருத்தை வெளிப்படுத்திய உதைக்வே ஆண்டகை, மக்கள் எதிர்பார்க்கும் வகையில் நாட்டில் ஏற்கனவே சிறப்பான அபிவிருத்திகள் இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார். அது தொடர்பான ஜனாதிபதியின் தொலைநோக்குப் பார்வை மற்றும் அர்ப்பணிப்பைப் பாராட்டிய அவர், அந்த முயற்சிகள் அனைத்திற்கும் வத்திக்கான் ஆதரவளிக்கும் என்றும் தெரிவித்தார்.
இலங்கை எதிர்கொண்ட மிகவும் மோசமான அனுபவமான உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குறித்து தனது வருத்தத்தை தெரிவித்த உதைக்வே ஆண்டகை, அது தொடர்பில் வெளிப்படைத் தன்மையுடனும் நம்பகத்தன்மையுடனும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முயற்சியையும் பாராட்டினார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நீதி மற்றும் நியாயத்தை வழங்குவதற்காக ஜனாதிபதியின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு வத்திக்கானின் முழு ஆதரவையும் வழங்குவதாக உதைக்வே ஆண்டகை உறுதியளித்தார். இலங்கைக்கும் வத்திக்கானுக்கும் இடையிலான வலுவான இராஜதந்திர உறவுகள் தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், இலங்கை நாடு மற்றும் மக்களின் முன்னேற்றத்திற்காக இரு நாடுகளுக்குமிடையிலான பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு ஜனாதிபதியும் வத்திக்கான் பிரதிநிதி உடன்பாடு தெரிவித்தனர்.
(-Colombo, October 08, 2024-) இலங்கையின் பொருளதாரத்தை பலப்படுத்த தேவையான எந்தவொரு ஒத்துழைப்பையும் வழங்கத் தயாரென அமெரிக்கா உறுதியளித்துள்ளது. இலங்கையின் ஏற்றுமதி வர்த்தக பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்கத் தயாரென இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றிக்கு […]
(-Colombo, October 08, 2024-)
இலங்கையின் பொருளதாரத்தை பலப்படுத்த தேவையான எந்தவொரு ஒத்துழைப்பையும் வழங்கத் தயாரென அமெரிக்கா உறுதியளித்துள்ளது.
இலங்கையின் ஏற்றுமதி வர்த்தக பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்கத் தயாரென இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்தியினையும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளித்தார்.
இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம், ஐக்கிய அமெரிக்க அபிவிருத்தி முகவர் நிலையத்தின்(USAID) ஊடாக நிதி உதவிகளை வழங்கத் தயாரெனவும் தூதுவர் இதன்போது தெரிவித்தார். ஊழல் மோசடிகளை மட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கு அமெரிக்க தொழில்நுட்ப உதவிகளை வழங்குமெனவும் அவர் உறுதியளித்தார்.
சிறந்த அரச நிருவாகத்திற்காக வழங்கக்கூடிய எந்தவொரு உதவியையும் வழங்குவதோடு, பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்தில் அதற்கான உதவிகளை வழங்கவும் அவர் இணக்கம் தெரிவித்தார்.
மீள் புதுபிக்கத்தக்க வலுசக்தி, ஏற்றுமதி விவசாயத்தை உருவாக்குதல் மற்றும் கிராமங்களின் வறுமையை ஒழிப்பதற்காக புதிய ஜனாதிபதியால் முன்னெடுத்துச் செல்லப்படும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அமெரிக்க தூதுவர் உறுதியளித்தார்.
தற்போது செயற்படுத்தப்படும் கிராமிய பாடசாலைகளின் பகல் உணவு வேலைத்திட்டத்தை நகர பாடசாலைகளிலும் வழங்க உதவிகளை வழங்கவிருப்பதாகவும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் இலங்கை மற்றும் மாலைத்தீவிற்காக ஐக்கிய ராஜ்ஜியத்தின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் நிலையத்தின் பிரதி பணிப்பாளர் ஜஸ்டின் டிவென்ஷோ (Justin Divenanzo) மற்றும் பொருளாதார நிபுணர் கிறிஸ்டோபர் குஷ் (Christopher Gooch) உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.
(-Colombo, October 07, 2024-) இலங்கையின் சுற்றுலா,வலுசக்தி மற்றும் சிறு தொழில்துறைகளின் அபிவிருத்திக்கு நிதி உதவி வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி உறுதியளித்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி டகபூமி கடோனோவை (Takafumi Kadono) இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இதுவரையில் முன்னெடுக்கபட்டுவரும் அனைத்து ஒப்பந்தங்களும் அவ்வண்ணமே முன்னெடுத்துச் செல்லப்படும் என்றும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான […]
(-Colombo, October 07, 2024-)
இலங்கையின் சுற்றுலா,வலுசக்தி மற்றும் சிறு தொழில்துறைகளின் அபிவிருத்திக்கு நிதி உதவி வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி உறுதியளித்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி டகபூமி கடோனோவை (Takafumi Kadono) இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இதுவரையில் முன்னெடுக்கபட்டுவரும் அனைத்து ஒப்பந்தங்களும் அவ்வண்ணமே முன்னெடுத்துச் செல்லப்படும் என்றும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி டகபூமி கடோனோ (Takafumi Kadono) தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்துக்காக சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கு அவசியமான வசதிகளுக்கான நிதி உதவிகளை வழங்கவும் ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளது.
அதன்படி சுற்றுலாத்துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நிதி உதவிகளை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வேண்டுகோளுக்கு இணங்க வடக்கில் சுற்றுலாத்துறை அபிவிருத்தியை மேம்படுத்த உதவிகளை வழங்கவும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி டகபூமி கடோனோ இணக்கம் தெரிவித்தார்.
அதேபோல் இலங்கையில் வலுவச்தி மற்றும் சிறு தொழில் முயற்சிகளை மேம்படுத்த தேவையான நிதி உதவிகளை வழங்கவும், நிதித் துறையின் முன்னேற்றத்துக்கு தேவையான நிதி உதவிகளை வழங்கவும் ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி டகபூமி கடோனோ (Takafumi Kadono), இலங்கைக்கான முன்னெடுப்புக்களின் பிரதானி சொல்பொத் மெம்பேடோவா (Cholpon Mambetova), நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, பணிப்பாளர் நாயகம் டீ.ஏ.பி.அபேசேகர, பணிப்பாளர் உதேனி உடுகஹபத்துவ, சிரேஷ்ட பொருளாதார அதிகாரிகளான ஹஷிதா விக்ரமசிங்க மற்றும் லக்ஷினி பெர்னாண்டோ ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
(-Colombo, October 05, 2024-) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (05) பிற்பகல் அநுராதபுரம் வரலாற்று சிறப்புமிக்க ஜயஸ்ரீ மகா போதியை தரிசித்து ஆசி பெற்றார். அநுராதபுரத்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி முதலில் அடமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன நாயக்க தேரரை சந்தித்தி ஆசி பெற்றுக்கொண்டதோடு, அவரிடம் நலம் விசாரித்தார். அதனையடுத்து உடமலுவ விகாரைக்குச் சென்றிருந்த ஜனாதிபதி வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் அடஸ்தானாதிபதி தலைமையிலான மகா சங்கத்தினரால் செத் பிரித் பாராயணம் செய்து ஆசி வழங்கப்பட்டது. அநுராதபுரம் லங்காராம விகாராதிபதி […]
(-Colombo, October 05, 2024-)
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (05) பிற்பகல் அநுராதபுரம் வரலாற்று சிறப்புமிக்க ஜயஸ்ரீ மகா போதியை தரிசித்து ஆசி பெற்றார்.
அநுராதபுரத்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி முதலில் அடமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன நாயக்க தேரரை சந்தித்தி ஆசி பெற்றுக்கொண்டதோடு, அவரிடம் நலம் விசாரித்தார்.
அதனையடுத்து உடமலுவ விகாரைக்குச் சென்றிருந்த ஜனாதிபதி வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் அடஸ்தானாதிபதி தலைமையிலான மகா சங்கத்தினரால் செத் பிரித் பாராயணம் செய்து ஆசி வழங்கப்பட்டது.
அநுராதபுரம் லங்காராம விகாராதிபதி ரலபனாவே தம்மஜோதி நாயக்க தேரர், ருவன்வெலி, சேதவனாராம அதிபதி வண. ஈதலவெட்டுணுவெவே ஞானதிலக்க தேரர், தூபாராம விகாராதிபதி வண. கஹகல்லே ஞானிந்த தேரர், மிரிச்சவெட்டிய விகாராதிபதி வெலிஹேனே சோபித தேரர், அபயகிரி விகாராதிபதி கலாநிதி வண. கலஞ்சியே ரத்னசிறி தேரர், வரலாற்று சிறப்புமிக்க இசுறுமுனி விகாராதிபதி வண. மதவ சுமங்ல தேரர், அநுராதபுரம் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதி வண. நூகேதென்னே பஞ்ஞானந்த தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது உரையாற்றிய அட்டமஸ்தானாதிபதி வண.பல்லேகம ஹேமரதன தேரர், நாடு,தேசம், மதம் என்பவற்றை உயிரையும் இரண்டாம் பட்சமாக கருதி பாதுகாக்க வேண்டுமெனவும், நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பொறுப்பு ஜனாதிபதியின் மீது சாட்டப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
அதேபோல், வடமத்திய மாகாணத்திலிருந்து உருவான அரச தலைவர் என்ற வகையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு கைவிடமுடியாத பொறுப்பு சாட்டப்பட்டுள்ளது என்றும் வலியுறுத்தினார்.
மேலும், தற்போது நாட்டிலிருக்கும் அரசியல் சேற்றுக் குழியானது இந்நாட்டின் சுய நினைவுடன் கூடிய அறிவாளிகளுக்கு உகந்ததாக இல்லையென சுட்டிக்காட்டிய அவர், அந்த நிலைக்கு மாறாக நல்லதொரு அரசியல் கலாசாராத்தை நாட்டுக்குள் உருவாக்கும் இயலுமை ஜனாதிபதிக்கு உள்ளதென நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
நாட்டுக்கு தேசிய கொள்கையொன்று அவசியம் என்றும், புதிய பாராளுமன்றத்தில் எம்.பிக்களின் உதவிகளை பெற்றுக்கொண்டு நீண்ட காலத்துக்கு பொறுத்தமான சிறந்ததொரு தேசிய கொள்கையை உருவாக்க முடியுமாயின் அது சிறப்புக்குரியதாக அமையுமெனவும் அடமஸ்தானாதிபதி சுட்டிக்காட்டினார்.
அதனையடுத்து ருவன்வெலி மகா சாயவுக்கு சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ருவன்வெலி சைத்தியாதிகாரி வண. ஈதலவெட்டுணுவெவே ஞானதிலக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.
பின்னர் ருவன்வெலி சைத்தியவிற்கு அருகில் நடைபெற்ற மத நிகழ்வுகளில் பங்கேற்ற ஜனாதிபதிக்கு மகா சங்கத்தினர் செத் பிரித் பாராயணம் செய்து ஆசி வழங்கினர்.
வட மத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச,மாவட்ட செயலாளர் ரஞ்சித் விமலசூரிய, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க, அகில இலங்கை விவசாய சங்கத்தின் உப தலைவர் சுசந்த நவரத்ன , பேராசிரியர் சேன நாணயக்கார உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.