(-Colombo, October 10, 2024-) கந்தளாய் சீனித் தொழிற்சாலைக்குச் சொந்தமான 11,000 ஏக்கர் காணியை குறுகிய கால பயிர் செய்கைக்காக விவசாயிகளுக்கு வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (10) அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். அதற்கமைய ஐந்து ஏக்கரை விட குறைவான காணி இவ்வாறு வழங்கப்படவுள்ளதுடன், அதற்கென ஒழுங்கான பொறிமுறைமையொன்றை தயாரிக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சின் அதிகாரிகளை ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று(10) பிற்பகல் சந்தித்த […]
(-Colombo, October 10, 2024-)
கந்தளாய் சீனித் தொழிற்சாலைக்குச் சொந்தமான 11,000 ஏக்கர் காணியை குறுகிய கால பயிர் செய்கைக்காக விவசாயிகளுக்கு வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (10) அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
அதற்கமைய ஐந்து ஏக்கரை விட குறைவான காணி இவ்வாறு வழங்கப்படவுள்ளதுடன், அதற்கென ஒழுங்கான பொறிமுறைமையொன்றை தயாரிக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சின் அதிகாரிகளை ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று(10) பிற்பகல் சந்தித்த போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் செயற்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்ததோடு, எதிர்கால திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடினார்.
விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம். விக்ரமசிங்க, காணி ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஹேமசிறி லியனகே மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
(-Colombo, October 10, 2024-) அமெரிக்க பசுபிக் கடற்படையின் கட்டளை அதிகாரி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர், (Admiral Steve Koehler, a 4-star U.S. Navy Admiral and Commander of the U.S. Pacific Fleet) இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். இந்து சமுத்திரத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதுகாப்பு சவால்களுக்கு முகங்கொடுத்தல், கடல்சார் பிராந்தியங்கள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவது மற்றும் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்துவது […]
(-Colombo, October 10, 2024-)
அமெரிக்க பசுபிக் கடற்படையின் கட்டளை அதிகாரி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர், (Admiral Steve Koehler, a 4-star U.S. Navy Admiral and Commander of the U.S. Pacific Fleet) இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.
இந்து சமுத்திரத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதுகாப்பு சவால்களுக்கு முகங்கொடுத்தல், கடல்சார் பிராந்தியங்கள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவது மற்றும் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதம் போன்ற சர்வதேச அச்சுறுத்தல்களுக்கு எதிராக போராடுவதில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்த அட்மிரல் கோஹ்லர், போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளையும் பாராட்டினார்.
கடற்படைப் பிரிவின் மனிதவள பயிற்சிக்கு அமெரிக்காவின் ஆதரவு தொடர்ந்தும் இலங்கைக்கு வழங்கப்படும் என அமெரிக்க பசுபிக் கடற்படையின் கட்டளை அதிகாரி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர் ஜனாதிபதியிடம் உறுதியளித்தார்.
(-Colombo, October 10, 2024-) ➢ துருக்கியில் இலங்கையர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது குறித்து கவனம் துருக்கி குடியரசின் தூதுவர் செமி லுதுபி துர்குட்(Semih Lütfü Turgut) இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்த தூதுவர், துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்டோகன் மற்றும் துருக்கி மக்களின் வாழ்த்துச் செய்தியையும் ஜனாதிபதியிடம் கையளித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு அனுப்பி […]
(-Colombo, October 10, 2024-)
➢ துருக்கியில் இலங்கையர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது குறித்து கவனம்
துருக்கி குடியரசின் தூதுவர் செமி லுதுபி துர்குட்(Semih Lütfü Turgut) இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்த தூதுவர், துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்டோகன் மற்றும் துருக்கி மக்களின் வாழ்த்துச் செய்தியையும் ஜனாதிபதியிடம் கையளித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் துருக்கி ஜனாதிபதி எர்டோகன் “இலங்கையின் ஜனாதிபதியாக நீங்கள் தெரிவு செய்யப்பட்டதற்கு எனது நாட்டின் சார்பாகவும், மக்களின் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.உங்கள் பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய வேண்டுமெனவும் வாழ்த்துகிறேன்.உங்கள் தலைமையில் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டம் இலங்கை முழுவதும் வாழும் மக்களுக்கு சமாதானத்தையும் செழிப்பையும் கொண்டு வரவும் அவர்களை வலுப்படுத்தவும் உதவும் என்று நான் உண்மையாக நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாத்துறை, வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் துருக்கிக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் துருக்கி தூதுவருடன் ஜனாதிபதி கலந்துரையாடினார். துருக்கியில் புலம்பெயர் தொழிலாளர்களின் கேள்வி அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டிய துருக்கித் தூதுவர், எதிர்காலத்தில் இலங்கையர்களுக்கு பல்வேறு துறைகளிலும் அதிக வேலை வாய்ப்புகள் அளிக்கப்படும் என உறுதியளித்தார்.
துருக்கியில் கல்வி கற்க இலங்கை மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் கல்வித் துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தவும் தூதுவர் உடன்பாடு தெரிவித்தார்.
துருக்கி-இலங்கை இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் அடையாளமாக துருக்கிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் கலந்துகொள்ளுமாறு துருக்கித் தூதுவர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு அழைப்பு விடுத்தார்.
(-Colombo, October 10, 2024-) இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் ஹிஷாம் அபு தாஹா (Hisham Abu Taha) இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். இச்சந்திப்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த தூதுவர் அபுதாஹா, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டியதற்காக பலஸ்தீன அரசாங்கத் தினதும் மக்களினதும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். பலஸ்தீனத்திற்கு இலங்கை வழங்கும் நீண்டகால ஆதரவைப் பாராட்டிய தூதுவர், பலஸ்தீன் எதிர்நோக்கிய சர்வதேசப் பிரச்சினைகளில், இலங்கை பின்பற்றிய நிலையான நடவடிக்கைகளுக்கு […]
(-Colombo, October 10, 2024-)
இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் ஹிஷாம் அபு தாஹா (Hisham Abu Taha) இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.
இச்சந்திப்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த தூதுவர் அபுதாஹா, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டியதற்காக பலஸ்தீன அரசாங்கத் தினதும் மக்களினதும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
பலஸ்தீனத்திற்கு இலங்கை வழங்கும் நீண்டகால ஆதரவைப் பாராட்டிய தூதுவர், பலஸ்தீன் எதிர்நோக்கிய சர்வதேசப் பிரச்சினைகளில், இலங்கை பின்பற்றிய நிலையான நடவடிக்கைகளுக்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.
எதிர்காலத்திலும் இலங்கையின் நட்புறவையும் ஒத்துழைப்பையும் தொடர்ந்தும் பேண பலஸ்தீன் எதிர்பார்ப்பதாகவும் தூதுவர் வலியுறுத்தினார்.
பலஸ்தீன மக்கள் எதிர்நோக்கும் விசா பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடிய தூதுவர் அபுதாஹா, இரு நாடுகளுக்கும் இடையிலான மனிதவள தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்தக் கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்தார்.
இந்தச் சந்திப்பில், இலங்கைக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் நிலவும் வலுவான உறவுகள் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இரு தரப்பினதும் அர்ப்பணிப்பு உறுதி செய்யப்பட்டது.
(-Colombo, October 10, 2024-) முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்தை (PTA)மேலும் வலுப்படுத்த இரு தரப்பும் இணக்கம் இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அந்தலிப் எலியாஸ் (Andalib Elias) இன்று(10)முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். இந்த சந்திப்பில் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு உயர்ஸ்தானிகர் எலியாஸ் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கத்தின் தலைவரான முஹம்மத் யூனுஸ் அவர்களின் வாழ்த்துச் செய்தியும் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டது. இங்கு ஜனாதிபதியும் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகரும் இரு […]
(-Colombo, October 10, 2024-)
முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்தை (PTA)மேலும் வலுப்படுத்த இரு தரப்பும் இணக்கம்
இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அந்தலிப் எலியாஸ் (Andalib Elias) இன்று(10)முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.
இந்த சந்திப்பில் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு உயர்ஸ்தானிகர் எலியாஸ் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கத்தின் தலைவரான முஹம்மத் யூனுஸ் அவர்களின் வாழ்த்துச் செய்தியும் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டது.
இங்கு ஜனாதிபதியும் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகரும் இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடினர்.
பங்களாதேஷின் உயர்ஸ்தானிகர் மற்றும் ஜனாதிபதி திசாநாயக்க ஆகியோர் பங்களாதேஷில் இலங்கையின் முதலீடு மற்றும் அங்கு பணிபுரியும் பெருமளவான இலங்கை பணியாளர்கள் குறித்தும் விசேடமாக கலந்துரையாடினர். மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் இங்கு வலியுறுத் தப்பட்டது.
அத்துடன், வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் தற்போதுள்ள முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்தை (PTA) வலுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மற்றும் உயர்ஸ்தானிகர் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் உறுதியளித்தனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவது மற்றும் பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் இந்த சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
(-Colombo, October 10, 2024-) இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) பஹீம் உல் அஸீஸ் ஹி (Major General (Retd) Faheem Ul Aziz HI (M) இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய ஜனாதிபதிக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்த பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கு பாகிஸ்தானின் அர்ப்பணிப்பையும் வலியுறுத்தினார். இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால உறவை நினைவுகூர்ந்த பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், […]
(-Colombo, October 10, 2024-)
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) பஹீம் உல் அஸீஸ் ஹி (Major General (Retd) Faheem Ul Aziz HI (M) இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய ஜனாதிபதிக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்த பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கு பாகிஸ்தானின் அர்ப்பணிப்பையும் வலியுறுத்தினார். இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால உறவை நினைவுகூர்ந்த பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், பாகிஸ்தான் ஜனாதிபதி அஸீப் அலி சர்தாரியின் விசேட வாழ்த்துச் செய்தியையும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளித்தார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் “இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நெருங்கிய உறவை நான் பெரிதும் பாராட்டுகிறேன். ஜனநாயகம், பன்மைத்துவம், சட்டத்தின் ஆட்சி, பரஸ்பர புரிதல் மற்றும் மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் எமது ஒத்துழைப்பின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற நான் எதிர்பார்க்கிறேன்.
இது நம் இரு நாடுகளுக்கும் நல்ல நிகழ்வுகளை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்” என்று பாகிஸ்தான் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால அரசியல் மற்றும் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஆகியோர் கலந்துரையாடியதுடன், பாதுகாப்புத் துறையில் பாகிஸ்தானின் ஆதரவு இலங்கைக்கு வழங்கப்படும் என உயர்ஸ்தானிகர் உறுதியளித்தார்.
கல்வித் துறையில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் ஒத்துழைப்பு குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. தற்போது, மருத்துவக் கல்விக்காக இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தானில் புலமைப்பரிசில்கள் வழங்கப்படுவதுடன், எதிர்காலத்தில் விவசாயம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளுக்கான வாய்ப்புகள் வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
கிராமிய வறுமையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கையின் கால்நடைத் துறையின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வலுவான உறவு இந்தச் சந்திப்பில் மேலும் உறுதிப்படுத்தப்பட்டதுடன், பல்வேறு துறைகளில் அந்த உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர்.