(-Colombo, October 16, 2024-) • கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப அமைச்சுக்களின் முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடலில் ஜனாதிபதி தெரிவிப்பு மாணவர்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்கி, அனைத்து மாணவர்களுக்கும் கல்விக்கான பிரவேசத்தை வழங்கும் பாடசாலைக் கல்வி சீர்திருத்தமொன்றை மேற்கொள்வது குறித்து விசேட கவனம் உலகளாவிய தேவைகளை கருத்திற் கொண்டு இலங்கையின் கல்வி தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கையின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் மனித வளத்தை மேம்படுத்துவதற்காக மாணவர்களை அறிவாற்றல் […]
(-Colombo, October 16, 2024-)
• கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப அமைச்சுக்களின் முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடலில் ஜனாதிபதி தெரிவிப்பு
மாணவர்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்கி, அனைத்து மாணவர்களுக்கும் கல்விக்கான பிரவேசத்தை வழங்கும் பாடசாலைக் கல்வி சீர்திருத்தமொன்றை மேற்கொள்வது குறித்து விசேட கவனம்
உலகளாவிய தேவைகளை கருத்திற் கொண்டு இலங்கையின் கல்வி தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
இலங்கையின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் மனித வளத்தை மேம்படுத்துவதற்காக மாணவர்களை அறிவாற்றல் நிறைந்தவர்களாக மாற்ற வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அடுத்த பத்து ஆண்டுகளில் உலகிற்கு தேவையான மனித வளத்தை உருவாக்கும் பொறுப்பு கல்வி அதிகாரிகளை சார்ந்துள்ளது. அதற்கான பரந்த நோக்குடன் கல்வித் திட்டங்களைத் தயாரிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (16) நடைபெற்ற கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சுக்களின் முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற அமைச்சுக்களின் முன்னேற்ற மீளாய்வின் போது கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப அமைச்சுக்களினால் செயற்படுத்தப்படும் ஐந்து திட்டங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
பாடசாலைக் கல்வி நவீனமயமாக்கல், ஆசிரியர் கல்வி, இடைநிலைக் கல்வி, தொழில்நுட்பக் கல்வி, தகவல் தொழில்நுட்பக் கல்வியின் மேம்பாடு என்பன தொடர்பில் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
இது தொடர்பான திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தனர்.
இலங்கையிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் மிகவும் செயற்திறனுள்ள பாடசாலைகளாக மாற்றப்பட வேண்டும் என்பதோடு மாணவர்களுக்குச் விருப்பமான சூழலை உருவாக்கி சகல மாணவர்களும் கல்விக்கான பிரவேசத்தை வழங்கும் வகையில் பாடசாலைக் கல்வியை மறுசீரமைப்பது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம் ஆகிய உயர்தர பாடங்களை கற்பிக்கும் பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும் ஆராயப்பட்டது.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
(-Colombo, October 15, 2024-) இன்றைய சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு தினத்துடன் இணைந்ததாக, கொடி விற்பனை வாரத்தை முன்னிட்டு இன்று (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க அவர்களுக்கு முதல் கொடி அணிவிக்கப்பட்டது. இலங்கை பார்வையற்ற பட்டதாரிகள் சபையின் தலைவர் சுகத் வசந்த டி சில்வா ஜனாதிபதியின் செயலாளருக்கு கொடியை அணிவித்தார். கொடி விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தில் பார்வையற்ற மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்குவதுடன் அவர்களின் நலனுக்கான வசதிகள் […]
(-Colombo, October 15, 2024-)
இன்றைய சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு தினத்துடன் இணைந்ததாக, கொடி விற்பனை வாரத்தை முன்னிட்டு இன்று (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க அவர்களுக்கு முதல் கொடி அணிவிக்கப்பட்டது.
இலங்கை பார்வையற்ற பட்டதாரிகள் சபையின் தலைவர் சுகத் வசந்த டி சில்வா ஜனாதிபதியின் செயலாளருக்கு கொடியை அணிவித்தார்.
கொடி விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தில் பார்வையற்ற மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்குவதுடன் அவர்களின் நலனுக்கான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டார்.
பின்னர், இலங்கை பார்வையற்ற பட்டதாரி சபை உறுப்பினர்களுடன் சமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதியின் செயலாளர், அவர்கள் முன்வைத்த பிரச்சினைகள் குறித்தும் அவதானம் செலுத்தியதுடன், எதிர்காலத்தில் அவற்றுக்கு தீர்வு வழங்குவது குறித்து ஆராய்வதாகவும் தெரிவித்தார்.
இலங்கை பார்வையற்ற பட்டதாரிகள் சபையின் செயலாளர் சமோத் நயனாநந்த மற்றும் சங்கத்தின் அதிகாரிகள் குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
(-Colombo, October 15, 2024-) – வலுசக்தி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலில் ஜனாதிபதி தெரிவிப்பு வலுசக்தி அமைச்சில் இன்று (15) முற்பகல் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துகொண்டார். ஏனைய நாடுகளில் வலுசக்தித் துறைக்கு உயர்ந்த நிலை வழங்கப்பட்டுள்ளதைப் போன்று இலங்கையிலும் வலுசக்தித் துறைக்கு முன்னணி இடம் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, வலுசக்தி அமைச்சு என்பது நிதி வருமானங்களைப் பெறும் அமைச்சு எனவும், அதிக வருமானம் கிடைக்கும் போது […]
(-Colombo, October 15, 2024-)
– வலுசக்தி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலில் ஜனாதிபதி தெரிவிப்பு
வலுசக்தி அமைச்சில் இன்று (15) முற்பகல் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துகொண்டார்.
ஏனைய நாடுகளில் வலுசக்தித் துறைக்கு உயர்ந்த நிலை வழங்கப்பட்டுள்ளதைப் போன்று இலங்கையிலும் வலுசக்தித் துறைக்கு முன்னணி இடம் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, வலுசக்தி அமைச்சு என்பது நிதி வருமானங்களைப் பெறும் அமைச்சு எனவும், அதிக வருமானம் கிடைக்கும் போது முறைகேடுகள் இடம்பெறலாம் என்ற கருத்து சமூகத்தில் நிலவுவதாகவும் குறிப்பிட்டார்.
இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தமது விருப்பத்தை எதிர்பார்ப்புடன் பயன்படுத்தி யுள்ளதாகவும், அந்த ஆணைக்கு தான் பொறுப்புக் கூறக் கடமைப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
பழைய அரசியல் கலாசாரத்தின் மீதான எதிர்ப்பு, பிரஜைகள் எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் அரச சேவையின் செயற்பாடுகள் தொடர்பான பிரஜையின் அதிருப்தி காரணமாக புதிய அரசியல் சம்பிரதாயத்தினை மக்கள் எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சிக்கு மோசடி, ஊழல் மற்றும் வீண்விரயம் என்பனவே காரணமாக அமைந்ததென மக்கள் நம்புவதாகவும், அதனை
தடுப்பதற்காகவே இம்முறை மக்கள்ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, அரச பொறிமுறை முழுவதும் பரவியுள்ள மோசடி மற்றும் ஊழலைத் தடுப்பதற்காக மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைப் தான் பாதுகாப்பதாகவும் தெரிவித்தார்.
அரச ஊழியர்களும் தங்களின் பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற தங்களை அர்ப்பணிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.
பொதுச் சொத்துக்கள், சமூகத்தின் சொத்தாக பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், அந்தச் சொத்துக்களை மோசடி அல்லது ஊழலுக்கு உட்படுத்த எவருக்கும் உரிமை இல்லை எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
பிரஜைகளை திருப்திப்படுத்தும் வகையில் வினைத்திறன்மிக்க மற்றும் செயற்திறன்மிக்க அரச சேவையை உருவாக்குவதற்கு தற்போதைய அரச உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பு அவசியமானது எனவும், அதற்காக எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
இந்த முறை மக்கள் ஆணையின் கட்டமைப்பு, நோக்கம் மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு அரச உத்தியோகத்தர் கடமை உணர்வுடனும் பொறுப்புடனும் செயற்பட வேண்டுமென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்குரிய அரசியல் தலைமைத்துவத்தை வழங்க தமது தரப்பு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அரச உத்தியோகத்தர் தனது கடமை எல்லைக்குள் மேற்கொள்ளும் மக்கள்நல அனைத்து செயற்பாடுகளுக்கும் தாம் முன் நிற்பதாகவும், செய்யக்கூடாத ஒன்றைச் செய்தால் அது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்கத் தயங்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.
வலுசக்தித் துறையில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மற்றும் அடுத்த சில ஆண்டுகளில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் பற்றியும் இதன்போது விரிவான மற்றும் நீண்ட மீளாய்வு நடத்தப்பட்டது.
அடுத்த மூன்று ஆண்டுகளில் வலுசக்தித் துறையின் இலக்குகளை எவ்வாறு அடைவது என்பது குறித்தும், மக்களுக்கு வழங்கக்கூடிய குறுகிய மற்றும் நீண்ட கால நிவாரணங்கள் குறித்தும் இங்கு மேலும் கலந்துரையாடப்பட்டது.
வலுசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால,மின்சார சபைத் தலைவர் கலாநிதி திலக் சியம்பலாபிடிய, மின்சார சபை பொது முகாமையாளர் பொறிறியலாளர் கே.ஜீ.ஆர்.எப்.கொமெஸ்டர், பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் ஜனக்க ராஜகருணா உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
(-Colombo, October 11, 2024-) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதிகள் குழுவினர் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தனர். உலக உணவுத் திட்டத்தின் ஊடாக இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கு பிரதிநிதிகள் இதன்போது இணக்கம் தெரிவித்தனர். இலங்கையில் உணவு நெருக்கடி நிலைமை தற்போது மிகக் குறைவாக உள்ள போதிலும், தேவை ஏற்படும் போது புதிய வேலைத்திட்டங்கள் மூலம் இலங்கைக்கு ஆதரவளிக்க உலக உணவுத் […]
(-Colombo, October 11, 2024-)
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதிகள் குழுவினர் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தனர்.
உலக உணவுத் திட்டத்தின் ஊடாக இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கு பிரதிநிதிகள் இதன்போது இணக்கம் தெரிவித்தனர்.
இலங்கையில் உணவு நெருக்கடி நிலைமை தற்போது மிகக் குறைவாக உள்ள போதிலும், தேவை ஏற்படும் போது புதிய வேலைத்திட்டங்கள் மூலம் இலங்கைக்கு ஆதரவளிக்க உலக உணவுத் திட்டத்தின் தலைவர்கள் ஜனாதிபதியின் செயலாளரிடம் விருப்பம் தெரிவித்தனர்.
உலக உணவுத் திட்டத்தின் உள்ளூர் பணிப்பாளர் அப்துல் ரஹீம் சித்திக், அரசாங்க பங்காளித்துவ அதிகாரி முஸ்தபா நிஹ்மத், உலக உணவுத் திட்டத்தின் பிரதி வதிவிடப் பிரதிநிதி ஜெர்ட் ரெபெல்லோ, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ரொஷான் கமகே ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்
(-Colombo, October 10, 2024-) கந்தளாய் சீனித் தொழிற்சாலைக்குச் சொந்தமான 11,000 ஏக்கர் காணியை குறுகிய கால பயிர் செய்கைக்காக விவசாயிகளுக்கு வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (10) அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். அதற்கமைய ஐந்து ஏக்கரை விட குறைவான காணி இவ்வாறு வழங்கப்படவுள்ளதுடன், அதற்கென ஒழுங்கான பொறிமுறைமையொன்றை தயாரிக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சின் அதிகாரிகளை ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று(10) பிற்பகல் சந்தித்த […]
(-Colombo, October 10, 2024-)
கந்தளாய் சீனித் தொழிற்சாலைக்குச் சொந்தமான 11,000 ஏக்கர் காணியை குறுகிய கால பயிர் செய்கைக்காக விவசாயிகளுக்கு வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (10) அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
அதற்கமைய ஐந்து ஏக்கரை விட குறைவான காணி இவ்வாறு வழங்கப்படவுள்ளதுடன், அதற்கென ஒழுங்கான பொறிமுறைமையொன்றை தயாரிக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சின் அதிகாரிகளை ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று(10) பிற்பகல் சந்தித்த போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் செயற்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்ததோடு, எதிர்கால திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடினார்.
விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம். விக்ரமசிங்க, காணி ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஹேமசிறி லியனகே மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
(-Colombo, October 10, 2024-) அமெரிக்க பசுபிக் கடற்படையின் கட்டளை அதிகாரி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர், (Admiral Steve Koehler, a 4-star U.S. Navy Admiral and Commander of the U.S. Pacific Fleet) இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். இந்து சமுத்திரத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதுகாப்பு சவால்களுக்கு முகங்கொடுத்தல், கடல்சார் பிராந்தியங்கள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவது மற்றும் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்துவது […]
(-Colombo, October 10, 2024-)
அமெரிக்க பசுபிக் கடற்படையின் கட்டளை அதிகாரி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர், (Admiral Steve Koehler, a 4-star U.S. Navy Admiral and Commander of the U.S. Pacific Fleet) இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.
இந்து சமுத்திரத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதுகாப்பு சவால்களுக்கு முகங்கொடுத்தல், கடல்சார் பிராந்தியங்கள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவது மற்றும் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதம் போன்ற சர்வதேச அச்சுறுத்தல்களுக்கு எதிராக போராடுவதில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்த அட்மிரல் கோஹ்லர், போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளையும் பாராட்டினார்.
கடற்படைப் பிரிவின் மனிதவள பயிற்சிக்கு அமெரிக்காவின் ஆதரவு தொடர்ந்தும் இலங்கைக்கு வழங்கப்படும் என அமெரிக்க பசுபிக் கடற்படையின் கட்டளை அதிகாரி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர் ஜனாதிபதியிடம் உறுதியளித்தார்.