Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

NPP News

திருட்டு மருத்துவர்களே இங்கு இருக்கிறார்கள் ….நோயாளியைக் குணப்படுத்துவதற்காக அல்ல கொல்லப் பார்க்கிறார்கள்….

தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பேரவை உறுப்பினர் பேராசிரியர் அனில் ஜயந்த பர்னாந்து   எமது நாட்டை ஆள்பவர்களும் வரவு செலவினைத் தயாரிப்பவர்களும் மிகவும் ஊழில்நிறைந்த குழுவினரே என்பதை நீங்கள் ஏற்கெனவே அறிவீர்கள். ஊழல் கும்பலொன்றினால் தயாரிக்கப்படுகின்ற வரவுசெலவொன்றின் தொழில்நுட்ப விடயங்கள் வரவுசெலவுக்கு எவ்வாறு பயனுறுதிமிக்கதாக அமையுமென்பது பற்றி ஆராய்வது அவ்வளவுக்கு வெற்றிகரமானதாக அமையமாட்டாது. ஏனெனில் அவர்கள் இந்த வரவுசெலவினைத் தயாரிப்பது ஊழல்மிக்க முறைமையைப் பேணிவருவதற்காகவேயன்றி பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்காகவல்ல. எனினும் ஊழலற்ற உண்மையான தேவை நிலவுகின்ற குழுவினர் […]


தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பேரவை உறுப்பினர் பேராசிரியர் அனில் ஜயந்த பர்னாந்து  

எமது நாட்டை ஆள்பவர்களும் வரவு செலவினைத் தயாரிப்பவர்களும் மிகவும் ஊழில்நிறைந்த குழுவினரே என்பதை நீங்கள் ஏற்கெனவே அறிவீர்கள். ஊழல் கும்பலொன்றினால் தயாரிக்கப்படுகின்ற வரவுசெலவொன்றின் தொழில்நுட்ப விடயங்கள் வரவுசெலவுக்கு எவ்வாறு பயனுறுதிமிக்கதாக அமையுமென்பது பற்றி ஆராய்வது அவ்வளவுக்கு வெற்றிகரமானதாக அமையமாட்டாது. ஏனெனில் அவர்கள் இந்த வரவுசெலவினைத் தயாரிப்பது ஊழல்மிக்க முறைமையைப் பேணிவருவதற்காகவேயன்றி பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்காகவல்ல. எனினும் ஊழலற்ற உண்மையான தேவை நிலவுகின்ற குழுவினர் தயாரிக்கின்ற வரவுசெலவு என நாங்கள் நினைப்போம். அதிலும் ஒருசில குறைபாடுகள் நிலவக்கூடும். எனினும் அத்தகைய வரவுசெலவினைப் பற்றி ஆராய்வதும் முக்கியமானதாக அமையும்.  அதனையும் நாங்கள் அறிந்திருக்க வேண்டும்.

இந்த வரவுசெலவு எவருக்காக? இரண்டு கோடி மக்களுக்கான இந்த வரவுசெலவினை தயாரிப்பவர்கள் மிகவும் சிறிய குழுவினரே. அதனால் நலன்களுக்கிடையிலான முரண்பாடு தோன்றுகின்றது. ஊழல்மிக்க குழுவினர் அந்த தீர்மானங்களை எடுக்கும்போது இந்த நலன்கள் பற்றிய பிரச்சினை பல மடங்காகும். அதனால் இந்த வரவுசெலவினை எடுத்துக்கொண்டால் வெறுமனே மக்களுக்காகவன்றி அரசாங்கப் பலத்தை தக்கவைத்துக் கொள்கின்ற நோக்கத்திற்காக மாத்திரமே தயாரிக்கப்பட்ட வரவுசெலவாகும். அது நன்றாகத் தெளிவாகின்றது. ஏனெனில் இந்த வரவுசெலவு முன்மொழிவுகள் ஐஎம்எப் முன்மொழிவுளின்படியே தயாரிக்கப்பட்டுள்ளன.  2025 ஆம் அண்டளவில் அரசாங்கம் வரவுசெலவு மீதி 2.3 நேர்க்கணியம் எனக் காட்டவேண்டும்.  முதனிலை மீதியை 5.4 எதிர்க்கணிய மீதியிலிருந்து 2.3 நேர்க்கணிய மீதி வரை எடுத்துச் செல்வது இலகுவான கருமமல்ல. வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும். வட்டி தவிர்ந்த ஏனைய செலவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அதைப்போலவே மொத்த தேசிய உற்பத்தியும் இதில் தாக்கமேற்படுத்துகின்றது.    அதனால் இந்த புள்ளிவிபரங்களில் இருக்கின்ற விடயங்கள் யதார்த்தமானவையாக அமையப்போவதில்லை. பொருளாதாரம் வரவர சுருங்குகின்றது.

ஒட்டுமொத்த வரவுசெலவுப் பற்றாக்குறை 2400 பில்லியன் கணக்கில் அமைகின்றது. தற்போதைய நிலைமையின்படி வெளிநாட்டுப் பிரிவில் இருந்து கடன்பெறுவது சிரமமானதாகும்.  ஆனால் கடன் எடுப்பதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் அவ்விதமாக எடுக்கின்ற கடன்பற்றியும் எந்தவிதமான தெளிவும் கிடையாது. எனினும் உள்நாட்டுக்கடன் பெறுவதற்கான தூண்டுதல் அதிகமானதாகும். அவ்வாறு இடம்பெற்றால் வட்டிவீதம் மிகவும்  உயர்வடையும். அதன் மூலமாக பொதுமக்களுக்கு உணர நேரிடுகின்ற சுமை பற்றி அவர்கள்  பேசுவதில்லை. 

பெற்ற கடனை மீளச்செலுத்துவதற்காக கடன்பெறவேண்டிய நிலையேற்படுகின்றது. அதற்கிணங்க 5 ரில்லியன் ரூபாவுக்கு கிட்டிய கடன்பெற எதிர்பார்க்கப்படுகின்றது. அதன்மூலமாக தொடர்ந்தும் கடன்பொறிக்குள் சிக்குவதே இடம்பெறும்.  எனவே வரியை அதிகரிக்கவேண்டியது கட்டாயமானதாகும்.  மற்றைய விடயம்தான் நீண்டகாலத் திட்டங்கள் இல்லாத அரசாங்கம் குறுங்காலரீதியாக செய்கின்ற ஒரேவிடயம் கடன்பெறுவதாகும். அதனால்த்தான் இலாபமீட்டுகின்ற அரச நிறுவனங்களைக்கூட விற்கப் போகிறார்கள். விற்றுப்பெறுகின்ற பணத்தைக்கொண்டு அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதாகக்கூறி  பொருளாதாரத்தை விருத்திசெய்வதாகவும் கூறுவதில்லை. செய்யப்போவதோ வெளிநாட்டு ஒதுக்கங்களை அதிகரிப்பதையாகும். அது ஐஎம்எப் நிபந்தனையாகும்.

வரவுசெலவில் ஓர் அடிப்படை இல்லாவிட்டாலும் பல அழகான கூற்றுகள் இருக்கின்றன.  ஒவ்வோராண்டிலும் ஏற்றுமதி வருமானத்தை 03 பில்லியன் டொலர்களால் விருத்தி செய்யப் போகிறார்களாம். ஆனால் எவ்வாறு செய்வது எனக் கூறவில்லை.  இந்த எணிக்கையை 4 பில்லியன் டொலர்கள் எனவும் கூறியிருக்கலாம். 05 எனவும் கூறியிருக்கலாம். எனவே புத்திசாதுரியமான குழுக்கள் இவற்றைக் கேள்விக்குட்படுத்த வேண்டும். இலங்கையில் நிதிசார் அறிவு மிகவும் தாழ்ந்த மட்டத்திலேயே நிலவுகின்றது.  அது அரசாங்கத்திற்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் இந்த மக்களை தவறாக வழிநடாத்துகின்ற முன்மொழிவுகள் முன்வைக்கப்படுகின்றன. மற்றுமொரு முன்மொழிவாக அமைவது எதிர்வரும் 10 வருடங்களில் வெளிநாட்டு முதலீடுகளை ஆண்டுக்கு 03 பில்லியன் வீதம் அதிகரிக்கப் போகிறார்களாம். அவ்வாறு நோக்கினால் 10 வருடங்களுக்கு 30 பில்லியனாக அமையும். ஆனால் பழைய புள்ளிவிபரங்களைப் பார்த்தால் 40 வருடங்களுக்கான வெளிநாட்டு முதலீடுகள்  13 பில்லியன் டொலர்களாகும். எனவே எவ்வளவு திரிபுபடுத்தப்பட்ட புள்ளிவிபரங்களே இருக்கின்றதென்பது தெளிவாகின்றது. ஆனால் இவற்றைக் கூறி ஐஎம்எப் ஐ ஏமாற்ற முடியாது. அதனால் மக்களை ஏமாற்றுகின்ற வேலைகள் ஒருபுறம் இருக்கின்றன. ஐஎம்எப் இற்கு தேவையான புள்ளிவிபரங்கள் தனிவேறாக இருக்கின்றன. ஆனால் ஐஎம்எப் 2.9 பில்லியன் டொலர்களை வழங்கினாலும் இந்தப் பிரச்சினையை மீட்டெடுக்க முடியாதென்பதை நன்றாக ஞாபகத்திற் கொள்ளவும்.

அதன் பின்னர் சுற்றாடல் நேயமுள்ள பொருளாதாரமொன்றை அமைப்பதாகக் கூறுகிறார்கள். அது நல்லதல்லவா. டிஜிட்டல் பொருளாதாரம் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் 2019 அரசாங்கம் இதைவிட டிஜிட்டல் பொருளாதாரம் பற்றிப்பேசியது.  ஆனால் அவை உப்புச்சப்பற்ற கதைகள் மாத்திரமே. மேலும் 2025 அளவில் பொருளாதார வளர்ச்சி வேகத்தை 7 இற்கு 8 இற்கு கொண்டுவருவதாக கூறுகிறார்கள். இருக்கின்ற நிலைமையின்படி அதனை எவ்வாறு சாதிப்பது.  இவை வெற்றுப் பேச்சுகள் மாத்திரமே. இந்த நிலைமையில் இதற்கு துதி பாடுபவர்களும் இருக்கிறார்கள். அவ்வாறு செய்கின்ற புத்திஜீவிகள் குழுவொன்றும் இருக்கின்றது.  ஒருசிலர் அறிந்தே செய்கிறார்கள். மேலும் சிலர் அறியாமலேயே செய்கிறார்கள். அதனால் மக்களை வதைக்கின்ற ஊழல் பேர்வழிகள்  கும்பல் தமது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள செய்கின்ற முயற்சிக்கு உதவிபுரிய வேண்டாமென்று நான் அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். அதனால்த்தான் இந்த அரசாங்கம் மக்களுக்காகவன்றி மிகவும் ஊழில்நிறைந்த பேர்வழிகளைக் கொண்ட கும்பலுக்காகவே என நாங்கள் கூறுகிறோம். அதனால் நாங்கள் தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பேரவை என்றவகையில் மக்களுக்கு விழிப்புணர்வூட்ட முன்வந்தோம்.  முழுநாடுமே சத்திரசிகிச்சைக் கூடத்தைப் போன்றது எனக்கூறி இந்த நோயாளியை மீட்டெடுக்கப் போவதாகவே இவர்கள் எமக்கு காட்டுகிறார்கள்.  ஆனால் இங்கே இருக்கின்ற திருட்டு மருத்துவர் கும்பல் மக்களின் கைகால்களை கழற்றுகின்ற சித்திரவதைக் கூடமே என நாங்கள் கூறுகிறோம். நோயாளி தப்பப்போவதில்லை. நோயாளி மடியப் போகிறான். அதிலிருந்து காப்பாற்றுவதற்காக நாங்கள் இடையீடு செய்கிறோம்.

Show More

இது நோயாளி இறந்தாலும் வயிறு சுத்தமான வரவுசெலவு…..

இது நோயாளி இறந்தாலும் வயிறு சுத்தமான வரவுசெலவு…..தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார பேரவை உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி எமது தலைப்பு வரிச்சுமை விண்ணை நோக்கி வரவுசெலவு எவருக்காக? என இருந்தாலும் வரவுசெலவு விண்ணை நோக்கி வரிச்சுமை எவர் மீது? எனக் கூறினாலும் வித்தியாசமில்லை என்றே நான் நினைக்கிறேன். இது பெருநிலத்தின் வரவுசெலவுத் திட்டமன்று.  ஆனால் மண்ணில் கால்பதித்துள்ள மக்கள்மீது ஏற்றப்பட்ட வரிச்சுமையாகும். ரனிலின் கதை முழுமையாக வானத்திலேயே இருக்கின்றது.  மண்ணில் நிலவுகின்ற யதார்த்தத்தை பிரச்சினையை  உரசிக்கூட பார்க்காத […]

இது நோயாளி இறந்தாலும் வயிறு சுத்தமான வரவுசெலவு…..
தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார பேரவை உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி

எமது தலைப்பு வரிச்சுமை விண்ணை நோக்கி வரவுசெலவு எவருக்காக? என இருந்தாலும் வரவுசெலவு விண்ணை நோக்கி வரிச்சுமை எவர் மீது? எனக் கூறினாலும் வித்தியாசமில்லை என்றே நான் நினைக்கிறேன். இது பெருநிலத்தின் வரவுசெலவுத் திட்டமன்று.  ஆனால் மண்ணில் கால்பதித்துள்ள மக்கள்மீது ஏற்றப்பட்ட வரிச்சுமையாகும். ரனிலின் கதை முழுமையாக வானத்திலேயே இருக்கின்றது.  மண்ணில் நிலவுகின்ற யதார்த்தத்தை பிரச்சினையை  உரசிக்கூட பார்க்காத ஒரு வரவுசெலவே இது. 74 வருடகால சாபக்கேட்டினை குற்றஒப்புதலாக்கிய வரவுசெலவுதான் 77 வது வரவுசெலவு.  இதில் ஒருவிதமான விதியின் விளையாட்டு நிலவுகின்றது. ஏனெனில் 74 வருடகால சாபக்கேட்டுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களில் ஒருவரான ரனில் விக்கிரமசிங்கவினாலேயே இந்த வரவு செலவு சமர்பிக்கப்பட்டமை ஒருவகையில் விதியின் விளையாட்டாகும். ரனில் வரவுசெலவு உரையில் முதற்பக்கத்தில் கூறுகிறார் 75  வருடங்கள் கழிகின்ற எமது நாடு அடைந்துள்ள நிலைமை பற்றி எம்மால் திருப்தியடைய முடியுமா? நாங்கள் எங்கே தவறிழைத்தோம்? இதனைக் கூறுகின்றவர் யார்? முதலாவது இளைஞர் அலுவல்கள் அமைச்சர், இளம் அமைச்சர், கைத்தொழில் அமைச்சர், ஆறு தடவைகள் பிரதம அமைச்சர், தற்போது புண்ணியத்திற்காக கிடைத்த சனாதிபதி பதவி வகிப்பவர். ரனில் மக்களிடம் கேட்கிறார் என்ன நேர்ந்ததென. ரனில் வாழ்நாளில் மிகவும் அதிகமாக பாராளுமன்றத்திலேயே உணவு உட்கொண்டிருப்பார்.  பொதுப்பணத்திலேயே வாழ்ந்திருப்பார். இந்த அளவுக்கு பாராளுமன்றத்தில் இருந்தார். இந்தப் பாராளுமன்றத்தின் பெரும்பாலானவர்கள் அத்தகையவர்களே. எவருக்கு தவறு ஏற்பட்டதென்று அவர்கள் எங்களிடம் கேட்கிறார்கள்.    

அதன் பின்னர் மக்கள் விரும்புகின்ற தீர்மானங்களையன்றி சரியான தீர்மானங்களையே எடுக்கவேண்டுமெனக் கூறுகிறார். யார் வேண்டாமென்று கூறினார்கள். மக்கள் விரும்புகின்ற தீர்மானங்களன்றி சரியான தீர்மானத்தை எடுக்குமாறு கூறிய ரனில் அல்லவா பிறேஸ்லற் கொடுக்க அழைத்தவர். பிரதமர் என்றவகையில் வொக்ஸ்வெகன்  தொழிற்சாலையொன்றைக் கொண்டு வருவதாகக்கூறி தெங்கு மரங்களை வெட்டிச்சாய்த்தார். வொக்ஸ்வெகனும் கிடையாது: தெங்கு மரமும் கிடையாது.  குடையின் நிழலில் செல்பவர்களுக்கு வாகனம் தருவதாகக் கூறினார். அவ்வாறு செய்தவர்கள் சரியான தீர்மானங்களை எடுக்குமாறு இன்று கூறுகிறார்கள்.  பிறரிடம் கடன் வாங்கிச் செல்வதில் பயனில்லை என்று,    அவ்வாறு கூறுபவர் நாட்டை படுகுழிக்குள் வீழ்த்தி பளிங்குமெணிக்கே சூரசேன கொண்டுவந்த அரசாங்கமே தற்போது இருக்கின்றது.   அரசாங்கத்திற்கு அரசாங்கம் தமக்கு ஏனையவரைவிட அதிகமாக கடன் கிடைப்பதாக தம்பட்டம் அடிக்கவிலலையா?  கடன்பெறுவதை பெருமையாகக் கருதியவர்கள் தான் இன்று இந்த கதையைக் கூறுகிறார்கள். ரனில் இவற்றைக் கூறுவதில் பயனில்லை. ஏனென்றால் ரனிலையும் ரனிலின் கொள்கையையும் விரட்டியடிக்க  மக்கள் தீர்மானித்து விட்டார்கள். ரனில் தலைகீழாக நின்றுகொண்டு கூறினாலும் பிரயோசனமில்லை.  மக்கள் முடிவுகட்டிவிட்டார்கள் தருணம் வரும்வரை காத்திருக்கிறார்கள்.

வரவுசெலவு உரையை தொடக்கத்தில் இருந்து முடிவுவரை வாசித்துப் பாருங்கள். மக்களுக்கு விருப்பமான தீர்மானங்களின்றி எத்தகைய சரியான தீர்மானங்கள்  இருக்கின்றதென. இந்த வரவுசெலவில் இந்த நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கான சரியான தீர்வுகள் உள்ளனவா? பழைய பட்டோலைதான் இதில் இருக்கின்றது. இந்த வரவுசெலவில் கூறுவதற்கு ஏதாவது இருக்கின்றதா? எதிர்வரும் 04 மாதங்களுக்குள் தேர்தலொன்று வருமென்று. ஏன் சமுர்த்தி கொடுப்பனவு, முதியோர் கொடுப்பனவு என்பவற்றுக்காக 20 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.  அவற்றை மீண்டும் மக்களிடமிருந்தே அறவிடுவார்கள்.   அண்மையில் மீண்டும் 130 பில்லியன் ரூபா பணம்  அச்சடிக்கப்பட்டுள்ளது. வரி விதித்தார்கள். ஏதாவது சம்பளம் பெறுகின்ற அனைவராலும் இந்த வரிச்சுமையைத் தாங்கிக்கொள்ள முடியாது. தற்போது ஏதேனும் உயர் தொழில் புரிந்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கிவிட்டார்கள். நாட்டில் இருக்கின்ற கல்விமான்களை விரட்டியடிக்கின்ற  பொருளாதாரமே இது.

இந்த வரவுசெலவுதான் இவ்வளவுக்கு வருமானம் செலவுகளை விரிவாக்கிய வரவுசெலவாக அமைந்துள்ளது. 7.5 ரில்லியன் வரை செலவுகள் விரிவாக்கப்பட்டுள்ளன. அது கடன்வாங்கவேண்டிய தேவை காரணமாகவே. கடன் எல்லையை அதிகரிப்பதற்காக புரிந்த வேலையாகும். ஆனால் வரவுசெலவுப் பற்றாக்குறையை நிவர்த்திசெய்வதற்காக அரசாங்கம் எவ்வாறு கடன்பெறுவது, ஏனெனில் தற்போது கடன் செலுத்துவதில்லை. எனினும் 2.3 பில்லியன் டொலரைக் வெளிநாட்டுக் கடனாகப்பெற எதிர்பார்க்கப்படுகின்றது.  ரனில் வரவுசெலவு முடிவடைவதைற்கு முன்னர் எந்தெந்த நாடுகளிடமிருந்து கடன்பெறுவது என்பதைக்  கூறவேண்டும். வரவு செலவு என்பது ஓர் ஊகமாகும். அது யாதார்த்த பூர்வமானதாக அமையவேண்டும். மக்களால் தாங்கக்கூடியதாக அமைதல் வேண்டும். இப்போது இந்த வரவுசெலவு பற்றாக்குறையை தீர்த்துக்கொள்ள முடியாமல் போனால் என்ன நேரிடும்? கடன்பெற முடியாவிட்டால் மக்களிடமிருந்து அறவிட்டுக்கொள்ள வேண்டும். அதாவது அரச வங்கி முறைமையிடமிருந்து. இதற்கு முன்னரும் அரசியல் தீர்மானங்களுக்காக உள்நாட்டு வங்கி முறைமையிடமிருந்து கடன்பெற்று வங்கி முறைமையை நாசமாக்கினார்கள். இப்போதும் அதைத்தான் செய்யப்போகிறார்கள். இவ்வாறு நடந்துகொண்டால் 2008 இல் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட கதியும் கிரேக்கத்திற்கு ஏற்பட்ட கதியும் இலங்கைக்கு ஏற்படுவதை தடுக்க இயலாதென தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பேரவை என்றவகையில் நாங்கள் கூறிவைக்க வேண்டும். ஏனெனில் பொருளாதாரத்தின் முதுகெழும்பு எனப்படுவது வங்கி முறைமையாகும். அதனால் எமது பேராசிரியர் கூறினார் வரவுசெலவில் மெச் அடிக்கக்கூடியவகையில்  மைதானத்தை அமைத்துக்கொள்ள வேண்டுமென்று.    ஆனால் மைதானத்தை அமைத்துக்கொண்டாலும் மெச் அடிக்க ஆட்கள் இருக்கிறார்களா? ரனிலுடன் மகிந்தவுடன் சஜித்துடன் இந்த மெச் அடிக்க முடியாது.  அதனால் மெச் அடிக்க மிகவும் பொருத்தமான  அணியினைத் தெரிவுசெய்துகொள்ளுமாறு எமது நாட்டு மக்களுக்கு கூறுகிறோம்.

நாங்கள் வந்ததும் எம்மால் செய்யக்கூடியவற்றை 06 மாதங்களில் சாதித்துக் காட்டுவோம். ஆனால் 74 வருடங்களான தின்று நாசமாக்கிய நாட்டை 06 மாதங்களில் உருப்படியாக்க முடியுமா என்று எங்களிடம் கேட்கவேண்டாம்.  ஆனால் 06 மாதங்களுக்குள் ஊழல், மோசடி, விரயத்தை நிறுத்திக் காட்டுவோம். சரியான தீர்மானத்தை எடுக்குமாறு கூறிய ரனில் சனாதிபதி செலவுத் தலைப்பினைக் குறைத்தாரா? அவ்வாறு செய்யவில்லை. சனாதிபதி செலவுத் தலைப்பினை 50% ஆல் குறைத்துக் காட்டியிருந்தால் அது ஒரு சரியான தீர்மானமாகும். அமைச்சரவையின் செலவுகளைக் குறைத்துக் காட்டுவோம். உத்தியோகபூர்வ இல்லங்களின் செலவுகளைக் குறைத்துக் காட்டுவோம். பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ஒழித்துக் காட்டுவோம். அவ்வாறு கூறியிருந்தால் விண்ணுக்கு உயர்ந்த வரவுசெலவினை  சற்று மண்ணுக்கு தாழ்த்தி  இருக்கலாம். பாதுகாப்புச் செலவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் செலவழிக்க பணம் இருக்கிறதா என்று தெரியவில்லை.

அதன் பின்னர் ரனில் கூறுகிறார் ஊழல் பேர்வழிகளை சிறையில் போடுவதென்பது பேச்சு வழக்கு மாத்திரமே என்றாகும். ரனில் அவ்வாறு கூறாமல் அதனை யாதார்த்தமெனக் கூறுவதா?  மத்திய வங்கியை உடைத்து நாசமாக்கியவர்  வேறு என்ன கூறுவது? ஓர் ஊழில்பேர்வழி மற்றுமோர் ஊழல்பேர்வழிக்கு தண்டனை வழங்கமாட்டாரென தோழர் அநுர அடிக்கடி கூறுவார். அதனைத் தற்போது ரனில் கூறுகிறார் ஊழல்பேர்வழிகளைப் பற்றி என்னோடு பேசவேண்டாமென.  நாங்கள் திருடர்கள் தண்டிக்கப்படுவதை ரனிலிடமிருந்து எதிர்பார்ப்பதில்லை.  அதன் பின்னர் கூறகிறார் இந்த பொருளாதார முறைமையின் மாற்றமொன்றைப் பற்றி. சமூக சந்தைப் பொருளாதாரம் அல்லது சமூகப் பாதுகாப்பு திறந்த பொருளாதார முறைமையொன்றை அமைப்பாராம். அவர் என்ன கூறுகிறார்? திக்குமுக்காடிப் போயிருக்கிறார். தவறிவிட்டோம் என்பது விளங்குகின்றது. அதனை ஏற்றுக்கொள்ளாமல் பயிலா பாடுகிறார்.  இந்த நாட்டு மக்களை இனிமேலும் ஏமாற்ற முடியாது. தோல்வியை ஒப்புக்கொள்ளுங்கள். இந்த பொருளாதாரத்தின்கீழ் எவருக்கு பாதுகாப்பு கிடைத்தது. தமது பிள்ளைகளைப் பாதுகாத்துத் தருமாறு தாய்தந்தையர் பாடசாலைக்கு அருகில். போதைத்தூள், ஐஸ் முதலியவற்றிலிருந்து தமது பிள்ளைகளைப் பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை. தற்போது “த்ரைலோக்க விஜய பத்ரய”  மூவுலகையும் வென்றெத்த   இலை  (கஞ்சா) பற்றிப் பேசுகிறார்கள். அது வந்தால் அரசியல்வாதிகள் பிஸ்னஸ் தொடங்குவார்கள். மிகச்சிறந்த உதாரணம் இந்த நாட்டில் மிக அதிகமான பார் பேர்மிற் அரசியல்வாதிகளுக்கே இருக்கின்றன.

மற்றுமொரு பக்கத்தில் விற்பது பற்றிப் பேசுகிறார்கள். ஒர கட்டத்தில் நட்டமடைகின்ற நிறுவனங்களை விற்று இலாபமீட்ட முடியுமெனக் கூறினார்கள். தற்போது  வெளிநாட்டு ஒதுக்கத்தை அதிகரிக்க இலாபமீட்டுகின்ற நிறுவனங்களை விற்பனை செய்யவேண்டுமென்று கூறுகிறார்கள். மனச்சாட்சியுடன் இணங்காவிட்டாலும் வரவுசெலவுக்கு வாக்களிக்க நேரிடுமென ஆளுங்கட்சி உறுப்பினரொருவர் கூறுகிறார்.  அவர்களின் வரவுசெலவு குறுக்காகவே வேலை செய்யும் போல். இப்படிப்பட்டவர்கள்தான் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள். ரனில் அடுத்த வருடத்திற்காக சமர்ப்பிக்கின்ற வரவுசெலவில் கூறுவது 2048 இல் கூறுகின்றவையாகும். அடுத்த ஆண்டில் செய்கின்றவை பற்றி எந்தவிதமான கதையும் கிடையாது. செய்யவேண்டியது ஒன்றில் கடன்பெறுவது இல்லாவிட்டால் பணம் அச்சடிப்பது.   அப்படியும் இல்லாவிட்டால் உள்நாட்டு வங்கிகளிடமிருக்கின்ற பணத்தை எடுப்பது. நோயாளி இறந்தாலும் வயிறு சுத்தமானது என இருக்கிறார்கள்.

 அதனால்  இதனை மாற்றிமைக்க வேண்டும். இந்த ஊழில்மிக்க அரசியல் முறையை மாற்றியமைக்கவேண்டும். தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பேரவை  என்ற வகையில் நாங்கள் பேசுவது இந்த வரவுசெலவினைப் பற்றி மாத்திரமல்ல.  மக்களுடன் இந்த பொருளாதார உரையாடலை நாங்கள் ஆரம்பிப்போம். மக்களுடன் இந்த பயணத்தை மாற்றியமைக்கின்ற வலிமையுடன் நாங்கள் ஒருங்கிணைவோம்.

Show More

காய்ச்சல் ஏற்பட்டவேளையில்  பத்தியமான உணவினை உட்கொண்டாலும் நோயாளியை மீட்டெக்கவேண்டுமாயின்  ஊட்டச்சத்துமிக்க உணவு தேவை…

தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பேரவை உறுப்பினர் பேராசிரியர் ஜனக் குமாரசிங்க பொதுவாக  இத்தகைய மேடைகளில் ஏறும்போது எமக்கு மிகுந்த மகிழ்ச்சியும் வலிமையும் ஏற்படுகின்றது.  ஆனால் தற்போது அவ்வாறான மகிழ்ச்சி வலிமை ஏற்படுவதில்லை என்பதைக் கவலையுடன் கூறவேண்டி உள்ளது. இன்று பிறந்த மண்ணில் அநாதையாக விடப்பட்ட ஒருவனாகவே நான் என்னை உணர்கிறேன். நான் இந்த மேடைக்கு ஏறுவதற்கான காரணமும் அதுவே. 1948 இல் ஆசியாவில் மிகவும் பலம்பொருந்திய பொருளாதாரத்திற்கு உரிமை பாராட்டிய நாங்கள் , தலாவருமானத்தில் ஜப்பானைவிட […]


தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பேரவை உறுப்பினர் பேராசிரியர் ஜனக் குமாரசிங்க

பொதுவாக  இத்தகைய மேடைகளில் ஏறும்போது எமக்கு மிகுந்த மகிழ்ச்சியும் வலிமையும் ஏற்படுகின்றது.  ஆனால் தற்போது அவ்வாறான மகிழ்ச்சி வலிமை ஏற்படுவதில்லை என்பதைக் கவலையுடன் கூறவேண்டி உள்ளது. இன்று பிறந்த மண்ணில் அநாதையாக விடப்பட்ட ஒருவனாகவே நான் என்னை உணர்கிறேன். நான் இந்த மேடைக்கு ஏறுவதற்கான காரணமும் அதுவே.

1948 இல் ஆசியாவில் மிகவும் பலம்பொருந்திய பொருளாதாரத்திற்கு உரிமை பாராட்டிய நாங்கள் , தலாவருமானத்தில் ஜப்பானைவிட ஒரு டொலர் மாத்திரம்  பின்னால் இருந்த நாங்கள்  இன்று ஆசியாவில் மாத்திமல்ல முழு உலகிற்குமே சிக்கலாக அமைந்த பொருளாதாரமாக மாறியிருக்கிறோம். 1948 இல் இருந்து இதுவரை சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுகளை நீங்கள் வாசித்துப் பார்த்தால்,   நீங்கள் இலங்கையைப் பற்றி சரியான விளக்கமற்ற ஒருவராக இருப்பின்  நீங்கள் இதனை ஒரு கேதுமதீ இராச்சியம் (செல்வச் செழிப்புமிக்க தேசம்)  என நினைப்பீர்கள்.  அத்தனை அழகான முன்மொழிவுகள் வரவுசெலவு அறிக்கையில் அடங்கி இருந்தன. அதனால் எமக்கு இப்போது தேவை அழகான கருத்துக்கள் நிறைந்த சிறிய புத்தகமல்ல. இது மிகவும் தீர்வுக்கட்டமான தருணமாகும்.  எதிர்காலத்தில் பிறக்கின்ற பிள்ளைகளுக்கும் தீர்வுக்கட்டமானது. எங்கள் தகப்பன்மார்கள் சிறுபராயத்தில் கூறிய இந்த நாடு அபிவிருத்தி அடைந்து வருகின்ற ஒரு நாடு எனும் விடயத்தை நாங்கள் இன்று எமத பிள்ளைகளுக்கும் கூறிக்கொண்டு இருக்கிறோம்.

இந்த வரவுசெலவு சமர்ப்பிக்கப்படுகின்ற சுற்றுச்சூழலைப் பார்த்தால் நீண்ட   இறந்தகாலத்திற்குச் செல்லாமல் 2019 இல் வளர்ச்சி வேகம் 2.3 ஆகும். 2021 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி வேகம் 3.7 கேம். 2022 இல் 7.8 எதிர்க்கணியமாகும். ஆனால் அழகான விடயம் வரவுசெலவு அறிக்கையில் எதிர்வரும் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி வேகத்தை நூற்றுக்கு 03, 04 வரை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் உலக வங்கி, ஐ.எம்.எப். போன்ற அமைப்புகள் கொண்டுள்ள அபிப்பிராயம் போய்க்கொண்டிருக்கின்ற இந்த பயணத்தின்படி அடுத்த ஆண்டில் பொருளாதார வளர்ச்சி வேகம் 3.7 எதிர்க்கணியமாக அமையுமென்பதாகும்.  

அடுத்த வருடத்தில் அபிவிருத்தி நோக்கங்கள் மற்றும் வறுமையை ஒழிப்பதற்காக எம்மைப் போன்ற நாடுகளில் பொதுப்பணத்தை எவ்வாறு சேகரிப்பது மற்றும் உற்பத்திக்கான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல், சேவைகளுக்காக பணத்தை  ஒதுக்குதல் பற்றிய ஏதேனும் மதிப்பீட்டினை சமர்ப்பித்தலே வரவுசெலவின் பிரதான நோக்கமாகும். ஆனால் இன்று எமது நாட்டின் நிலைமைக்கிணங்க வரவுசெலவில் அதற்கு அப்பால்சென்ற குறிக்கோளை எதிர்பார்க்க வேண்டியுள்ளது. இன்று எமது நாட்டில் இரண்டு பிரதான பிரச்சினைகள் இருக்கின்றன. ஒன்றுதான் உற்பத்தி சீரழிகின்றமை. மற்றையது டொலர் தட்டுப்பாடு. அதனூடாக பணவீக்கம் அதிகரிக்கின்றது. மேலும் பல விடயங்கள் இடம்பெற்று வருகின்றன. எமது வெளிநாட்டு ஒதுக்கம் எதிர்க்கணியமாகி விட்டது.  இந்த வரவுசெலவில் இவற்றுக்கான தீர்வுகள் இருக்கின்றனவா? அத்தகைய எந்தவொரு முயற்சியும் தென்படுவதில்லை. அவற்றை முகாமை செய்வதாயின்  வரவுசெலவில் காணக்கூடிய இரண்டு பிரதான விடயங்கள் இருக்கின்றன. ஒன்றுதான் நாணயக்கொள்கை. அடுத்தது வருமான செலவினக் (பிஸ்கல்) கொள்கை. வரி வருமானத்தைப் பெற்றுக்கொண்டு அவற்றை அவசியமான இடங்களுக்கு ஈடுபடுத்துதல் பற்றித் தெளிவாக குறிப்பிடப்படல் வேண்டும்.  அப்படிப்பட்டவை இந்த வவுசெலவில் கிடையாது. மரபு ரீதியாக வந்த பாதையில் முன்நோக்கிச் செல்வதே எமக்குப் புலப்படுகின்றது.  மேலும் ஒருவருடத்திற்காக பயணிக்க சிறிது பணத்தை தேடிக்கொள்ள எதையாவது புரிவதைத்தான் காணக்கூடியதாக இருக்கின்றது. அதற்காகத்தான் வேறுவேறு வார்த்தைகளைப் பாவித்து அரச நிறுவனங்களை  விற்க முனைகிறார்கள்.

2020 சனாதிபதியின் செலவு 2292 மில்லியன். 2021 இல் 2598 மில்லியன். 2022 இல் 2315 மில்லியன். 2023 இல் உத்தேச செலவு 2610 மில்லியன். மாற்றம் இருக்கின்றதா? அதனால்த்தான் பழைய பயணப்பாதையே என்று நாங்கள் கூறுகிறோம். எந்தவிதமான வித்தியாசமும் கிடையாது.  இந்த பொருளாதாரம் சீரழிந்தாலும் வேண்டுமென்றே சீரழிக்கப்பட்ட ஒன்றாகும். உலகின் எந்தவொரு நாட்டிலும் பொருளாதாரத்தை நாசமாக்கியர்வர்கள் அந்த நாட்டைக் கட்டியெழுப்பியதில்லை. பேரரசனே இரண்டாம் உலகமகா யுத்தத்திற்கு ஜப்பானை இழுத்துச் செல்கிறான். 1948 அளவில் ஜப்பான் முற்றாகவே அழிந்துவிட்டது.  ஆனால் பேரரசனை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு  கல்விகற்ற புத்திஜீவிகளான நாட்டை நேசிக்கின்ற பிரிவினரே அந்த நாட்டைக் கட்டியெழுப்பினார்கள். ஆட்சி அதிகாரத்தில் கைவைக்க  பேரரசனுக்கு இடமளிக்கவில்லை. நாசமாக்கியவர்களாலேயே கட்டியெழுப்ப முடியுமென இன்றும் ஒருசிலர் நம்புகிறார்கள். அதனால்த்தான் இந்த மேடையில் ஏறும்போது  எனக்கு மகிழ்ச்சியாக இல்லை.   

அவசியமான களத்தை அமைத்துக் கொடுப்பதையே மத்திய வங்கியிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றது. உறுதியான விலைமட்டங்கள்.  உறுதியான பணவீக்கத்ததைக் கொண்டதாக  முதலீட்டாளர்களால் நம்பிக்கை வைக்கக்கூடிய களமாக அமையவேண்டும். தற்போது நூற்றுக்கு இருபது, முப்பது சதவீதங்களிலேயே வட்டி நிலவுகின்றது.  நீங்கள் வங்கியிடமிருந்து ரூபா நூறு கடன்பெற்றால் ரூ. 25, ரூ.26 வட்டியைச் செலுத்தவேண்டும். எந்தவொரு நாட்டிலும் அப்படி இருக்கின்றதென நான் நினைக்கவில்லை. ஆனால் ஒருசில கடன்களில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும். ஜப்பானில் உற்பத்திச் செயற்பாடுகளுக்காக எடுக்கின்ற கடன்களுக்கான வட்டி வீதம் 0.1% ஆகும். ஆனால் இலங்கையில் கடன்பெற்றால் என்ன கதி நேரிடும்? அதனால் மத்திய வங்கி மெச்சில் விளையாடுவதற்கான அழகான மைதானத்தை அமைத்துக்கொடுக்க வேண்டும். அத்தகைய நோக்கினைக் கொண்டதாக நாட்டை அபிவிருத்தி செய்தலே வரவு செலவில் ஈடேற்றப்படவேண்டும். அத்தகைய ஒரு நோக்கு இந்த வரவுசெலவில் இருக்கின்றதா? உதாரணமாக எடுத்துக்கொண்டால் நன்னீர் மீன்பிடித் தொழிற்றுறையை முன்னேற்ற 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்படுகிறதாம். சற்று நீங்கள் சிந்தித்துப் பாருங்கள் எமது நாட்டில் எத்தனை குளங்கள் உள்ளனவென்று? குளங்களின் எண்ணிக்கையால் வகுத்துப் பார்த்தால் இந்த முன்மொழிவுகளின் பெறுமதி உங்களுக்குத் தெரியும்.  கழுத்தை நெரித்தேனும் வரியை அறவிடுவதேயன்றி பொருளாதாரத்தை திசைதிருப்புவதற்கான முன்மொழிவுகள் கிடையாது. முச்சுத் திணறிக்கொண்டு நோய்ப்படுக்கையில் இருக்கின்ற ஒரு முதலீட்டாளரேனும் இருப்பாராயின் அவரையும் விரட்டியத்தே எதிர்வரும் ஆண்டினைக் கழிக்கப் போகிறார்கள். காய்ச்சல் ஏற்பட்டதும் பத்திய உணவு உட்கொண்டாலும் காய்ச்சலிலிருந்து மீட்புப்பெற ஊட்டச்சத்துமிக்க உணவினை நோயாளிக்கு கொடுக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒன்று இந்த வரவுசெலவில் கிடையாது. நாம் மகிழ்ச்சியாக இல்லை: எமது அறிவினை இந்த நாட்டுக்காக  பயன்படுத்த வாய்ப்பு கிடையாது.  ஆனால் அத்தகைய மேடையொன்றில் எமது அறிவினைப் பகிர்ந்துகொள்ளக் கிடைத்தமை ஓரளவு மகிழ்ச்சியைத் தருகின்றது.

Show More

உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பினைப் பொருட்படுத்தாமல்  பொலீஸாரை நெறிப்படுத்த ரனில் ராஜபக்ஷ அரசாங்கம் செயலாற்றிவருவதை கண்டிக்கிறோம்

சட்டத்தரணி ஹேமக்க சேனாநாயக்க பயங்கரவாத தடைச்சட்டத்தின்  ஏற்பாடுகளின் கீழ் எனக் கூறிக்கொண்டு போராட்டத்துடன் தொடர்புகொண்டவர்களை கைதுசெய்தல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதற்கு மேலதிகமாக பொலிஸ் கட்டளைச்சட்டத்தின் 77 வது பிரிவினை பலிகடாவாக்கிக்கொண்டு  ஆட்களை பொலீசுக்கு அழைப்பிக்க செயலாற்றியுள்ளார்கள். பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு ஆட்களை அழைப்பித்த பல பதிவேடுகள் எம்மிடம் இருக்கின்றன.  இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் எதிரரானவர் என்பவர் யாரென பொருள்கோடல் வழங்கப்படவில்லை. அதனால் சாதாரண மக்கள் வாழ்க்கைக்கு கடுமையான அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. உலக வரலாற்றில்  முதல்த்தடவையாக அன்பாக மேற்கொண்டுவந்த […]

சட்டத்தரணி ஹேமக்க சேனாநாயக்க

பயங்கரவாத தடைச்சட்டத்தின்  ஏற்பாடுகளின் கீழ் எனக் கூறிக்கொண்டு போராட்டத்துடன் தொடர்புகொண்டவர்களை கைதுசெய்தல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதற்கு மேலதிகமாக பொலிஸ் கட்டளைச்சட்டத்தின் 77 வது பிரிவினை பலிகடாவாக்கிக்கொண்டு  ஆட்களை பொலீசுக்கு அழைப்பிக்க செயலாற்றியுள்ளார்கள். பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு ஆட்களை அழைப்பித்த பல பதிவேடுகள் எம்மிடம் இருக்கின்றன.  இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் எதிரரானவர் என்பவர் யாரென பொருள்கோடல் வழங்கப்படவில்லை. அதனால் சாதாரண மக்கள் வாழ்க்கைக்கு கடுமையான அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. உலக வரலாற்றில்  முதல்த்தடவையாக அன்பாக மேற்கொண்டுவந்த போராட்டம்  காரணமாக அப்போது இருந்த சனாதிபதிக்கு தப்பியோட நேரிட்டது. அதன் பின்னர்  மக்கள் இறைமைத் தத்துவத்திற்கு எதிராக செயலாற்றி மொட்டு உறுப்பினர்களால் ரனில் விக்கிரமசிங்க சனாதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்டார்.  வரம்புமீறி மேலெழுகின்ற மக்கள் எதிர்ப்பின் மத்தியில் எத்தகைய தந்திரோபாயத்தைக் கையாண்டேனும் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான ஆற்றலைப் பாதுகாத்துக்கொள்ள ரனில் விக்கிரமசிங்கவினால் இயலாமல் போயுள்ளது. அந்த அச்சம் காரணமாக பயங்கரவாத தடைச்சட்டத்தை முறையற்றவகையில் பாவித்து மக்களை அச்சுறுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார்.

பங்கரவாத புலனாய்வுப் பிரிவு கொழும்பில் பேணிவரப்படுவதோடு மக்களை அம்பாறை, மொனறாகல, கெபித்திகொல்லேவ போன்ற  பிரதேசங்களிலிருந்து அச்சத்துடனும் சந்தேகத்துடனும் அழைப்பித்தலை மேற்கொண்டு வருகிறார்கள். மொட்டின் முந்திய நிலைமையின்படி தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின்  உரிமைகளுக்கு எதிராக தொடர்ச்சியாக செயலாற்றி வந்தது. குறிப்பாக தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் தமது பிறந்த மண்ணிலேயே பயங்கரவாதிகளென பெயர் குறிக்கப்படுவார்களா எனும் சந்தேகம் தோன்றுகின்றது. தற்போது இருப்பவர் 2015 – 2019 காலத்தில் இருந்த ரனில் விக்கிரமசிங்க அல்ல. மகிந்த ராஜபக்ஷவினால் பெயர்குறிக்கப்பட்டு  நாமல் ராஜபக்ஷவினால் வழிமொழியப்பட்ட ராஜபக்ஷ குடும்பத்தினால்  புனர்வாழ்வு அளிக்கப்பட்ட  ஒரு ரனில் விக்கிரமசிங்கவே இன்று இருக்கிறார்.  பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் அதனாலேயே சட்டவிரோதமாக கைதுசெய்யப்படுகிறார்கள். விவியன் குணவர்தன வழக்கில் மதிப்பிற்குரிய  உயர்நீதிமன்றம் கூறிய விதத்தில் நாட்டின் அடிப்படைச் சட்டத்தை மீறி தற்போது செயலாற்றி வருகிறார்கள். மதிப்பிற்குரிய உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை எவ்விதத்திலும் பொருட்படுத்தாமல் பொலீஸ் உத்தியோகத்தர்களை நெறிப்படுத்த  ரனில் – ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கம் செயலாற்றி வருகின்றது. இன்றளவில் வசந்த முதலிகேவும் சிறிதம்ம தேரரும்  70 நாட்களுக்கு மேலாக தடுத்துவைக்கப்பட்டிருந்தபோதிலும்  அவர்களுக்கு எதிராக பயங்கரவாதி என்கின்ற பொருள்கோடலில் உள்ளடக்கப்படக்கூடிய எதுவுமே இனங்காணப்பட முடியாமல் போயுள்ளது. இத்தகைய நிலைமையில் மக்களுக்கு ஏற்படுகின்ற பாதகநிலைமை தொடர்பில் தோற்ற தேசிய மக்கள் சக்தியைச்சேர்ந்த  பிரதிநிதிகள் என்றவகையில் நாங்கள் செயலாற்றுவோம். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு முரணாகச்சென்று பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தொல்பொருளியல் சட்டம், பொதுத் தொல்லைச்  சட்டம்  போன்ற சட்டங்களை பயன்படுத்தி மக்களைப் பயமுறுத்தி வருகின்ற செயற்பாடுகளை நாங்கள்   கடுமையாக கண்டிக்கிறோம். பாதிக்கப்படுகின்றவர்களுக்காக எந்தவொரு தருணத்திலும்  நாங்கள் தோற்றுவோம் என்பதை வலியுறுத்துகிறோம்.

சட்டவிரோதமாக செயலாற்றுகின்ற உத்தியோகத்தர்களை உயர்நீதிமன்றத்திற்கு அழைப்பிப்போம்.

தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் அமைப்பின் உப தலைவர் – சட்டத்தரணி சுனில் வட்டகல

கிருளப்பனையில் அமைந்துள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு தீவின் பல்வேறு திசைகளிலுமிருந்து  ஆட்களுக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. தாம் வதிகின்ற பிரதேசத்தில் உள்ள  பொலீஸ் நிலையத்திற்கு அழைத்தல் மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்தல் மூலமாக உளரீதியான மட்டமும் சம்பந்தப்பட்ட சட்டமும் ஒன்றுக்கொன்று வித்தியாசமானது. அரசாங்கத்தின் நோக்கத்தை எமக்கு மறைக்க முடியாது.  உண்மையான பிரச்சினைகளுக்கு அரசாங்கம் பதிலளிக்காததால் சமூகம் பற்றி  பொதுவில் சிந்திக்கின்ற மக்கள் , சிவில் அமைப்பு செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் அங்கத்தவர்கள் எதிர்ப்பார்கள். நிலவுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காத நிலைமையில் மக்கள் வீதியில் இறங்குவதைவிட செய்வதற்கு வேறு ஒன்றுமே கிடையாது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள், எரிபொருள் என்பவற்றை தாக்குப்பிடிக்கக்கூடிய   விலையில்  வழங்குவதற்குப் பதிலாக பிணைவழங்க முடியாத வகையிலான வழிமுறைகளை அரசாங்கம் தெரிவுசெய்துள்ளது.  பொது ஆதனங்கள் சட்டம், தொல்பொருளியல் சட்டம் என்பவற்றை பரீட்சித்துப்பார்த்து தோல்விகண்டவிடத்து  பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் 90 நாட்கள் தடுத்துவைத்து செயலாற்றுவதில் வெற்றிபெற முயற்சி செய்கிறார்கள்.  மாணவர் தலைவர் வசந்த முதலிகே எத்தகைய பயங்கரவாத செயலைப் புரிந்தார் என நாங்கள் அரசாங்கத்திடம் கேட்கிறோம். அரசாங்கத்தின் பயங்கரவாதம் மிகவும் நன்றாக தெளிவாகிய அனுபவமொன்று எனக்கு இருக்கின்றது. வசந்த முதலிகேவை நேர்காண சட்டத்தரணிகளுக்கு மாத்திரமே முடியுமென பிரச்சாரம் செய்திருந்தார்கள்.

அதற்கிணங்க 28 ஆந் திகதி நான் தோழர் வசந்த  முதலிகேவை 29 ஆந் திகதி சந்திக்க இடமளிக்குமாறு எழுத்தில் அறிவித்தேன். அடுத்த நாள் நானும் சோஷலிஸ இளைஞர் சங்கத்தின் எரங்க குணசேகரவும்  பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்குச் சென்றோம். ஆனால் முறையான அனுமதி இன்னமும் கிடைக்கவில்லை என்றுதான் அறிவித்தார்கள். ஆனால் நான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை பதில் வழங்கவில்லை. அதன் பின்னர் 011 233 5930 மற்றும் 071 840 1291  ஆகிய பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் தொலைபேசி இலக்கங்களுக்கு நாள் முழுவதும் அழைப்பினை எடுத்தேன். 52 தடவைகள் கையடக்கத் தொலைபேசிக்கு எடுத்தாலும் ஒருவருமே பதில் அளிக்கவில்லை.  ஒரு சட்டத்தரணி கைதில் இருக்கின்ற  சந்தேகநபரை சந்திக்க முடியாவிட்டால் இந்த நாட்டில் இருக்கின்ற சனநாயகம் என்ன? மூவரைக் கைதுசெய்து பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைத்து ஒருவரை சான்றுகள் கிடையாதெனக்கூறி விடுதலை செய்தார்கள். விசாரணை நியாயமாக நடைபெறுகின்றதென்பதை நிரூபிக்க அந்த ஆளை விடுதலை செய்தார்கள். செத்தெம்பர் 24 ஆந் திகதி சோஷலிச இளைஞர் சங்கம் நடாத்திய அமைதிவழி எதிர்ப்பு பேரணிமீது மேற்கொண்ட சட்டவிரோத தாக்குதல் சம்பந்தமாக அதனோடு தொடர்புடைய ஒவ்வொரு பொலீஸ் உத்தியோகத்தருக்கும் எதிராக உயர்நீதிமன்றத்தில் மாத்திரம் மூன்று வழக்குகளைப் போட்டிருக்கிறோம். அதற்கு மேலதிகமாக மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்வதற்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதனால் அரசாங்கத்தின் பொலீஸ் சற்று பயந்துள்ளது.  

நாங்கள் ஒரு விடயத்தை பொலீசுக்கு வலியுறுத்துகிறோம். இப்படிப்பட்ட வெட்கத்தனமான கொந்துராத்து வேலைகளைச் செய்யவேண்டாமென்று. தமக்கு இறுதியில் எஞ்சுவது வீட்டிலுள்ள மனைவி மாத்திரமே.  கட்டளையிடுகின்ற அரசியல்வாதிகள்  காணாமல் போய்விடுவார்கள். பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் உள்ளவர்களுக்கு நாங்கள் அதனை வலியுறுத்துகிறோம். சட்டத்தரணிகளுக்கும் பார்வையிட இடமளிக்காமல்  சிறைப்படுத்து வைத்துள்ள வசந்த முதலிகேவின் உயிருக்கு உத்தரவாதமளிப்பது யார்?  ரனில் ராஜபக்ஷவின் கொந்துராத்து வேலையை ஜாக்கிரதையாக புரியுமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம். அரசாங்கம் தொடர்ச்சியாக பெயிலாகின்ற சட்டங்களைக்கொண்டுவந்து முடியாதகட்டத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தைக் கொண்டுவந்து புரிகின்ற வேலைகளுக்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம். சோஷலிஸ இளைஞர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள்மீது நடாத்தப்பட்ட கீழ்த்தரமான தாக்குதலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக நாங்கள் இந்த இடத்திலேயே ஊடக சந்திப்பு ஒன்றை நடாத்திக் கூறினோம்.  அதனை அவ்வண்ணமே செய்தோம்.  உயர் பாதுகாப்பு வலய வர்த்தமானி அறிவித்தலைக் கொண்டுவரும்போதே உயர்நீதிமன்றத்தின் முன்னிலையில் நாங்கள் அதனை ஆட்சேபனைக்கு இலக்காகினோம். 26 ஆந் திகதி வழக்கினை பயில் பண்ணியதும் ஒற்றோபர் 01 ஆந் திகதி அரசாங்கம் உயர்பாதுகாப்பு வலய வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெற்றுக்கொண்டது. ஒற்றோபர் 28 ஆந் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவானது பொலீஸ் கட்டளைச் சட்டத்தின் 77/1 பிரிவின்கீழ் புரியப்படுகின்ற செயல்கள் சட்டவிரோதமானவை எனக் கூறியுள்ளது. பொலீஸ் கட்டளைச் சட்டம்  அரசியலமைப்பிற்கு  கட்டுப்பட்டதாகவே இருக்கின்றது என்பதை பொலீஸார் அறிந்துகொள்ள வேண்டும். பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலுமிருந்து ஆட்களுக்கு அழைப்பு விடு்கின்ற உத்தியோகத்தர்களை ஜாக்கிரதையாக செயலாற்றுமாறும் அவ்விதமாக செயலாற்றாவிட்டால் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நிறுத்துவோம் என்பதையும் வலியுறுத்துகிறோம். 

இந்த ஊடக சந்திப்பின்போது தேசிய மக்கள் சக்தியின் கொழும்புச் செயலாளர் சட்டத்தரணி தனுஷ்கி லியனபட்டபெந்தியும்  பங்கேற்றார்.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கான பதில்கள்.:-

கேள்வி :– தடுத்துவைத்துள்ள வசந்த முதலிகேவின் மாணவர்நிலைக்கு என்ன நேரிடும்?

பதில்:பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அல்லது தண்டனைச்சட்டத்தின்கீழ்  தடுத்துவைக்க இடமில்லாத  அரசியலமைப்பில் உறுதிசெய்யப்பட்டுள்ள எதிர்ப்புகளிலேயே  அவர் ஈடுபட்டிருந்தார்.  அவரது மாணவர்நிலை தொடர்பில் நிருவாகச் சிக்கல்கள் ஏற்படக்கூடும். ஆனால் விடுதலை பெறுகின்ற தினத்தில் அவருக்கு கல்விக்கான வாய்ப்பினை வழங்கவேண்டி ஏற்படும். பாரதூரமான பிரச்சினை அதுவன்று.  எந்தவொரு சமூகத் தொடர்புமற்று சிறைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள அந்த இளைஞனின் உயிருக்கு சம்பந்தப்பட்ட காலம் தொடர்பில்  யார் பொறுப்புக் கூறுவது?  அந்த காலத்தை அரசாங்கத்தினால் வழங்க முடியாது. அந்த அநியாயத்தைச் செய்யவேண்டாமென நாங்கள்  நாங்கள் வலியுறுத்துகிறோம். தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் என்றவகையில் சனநாயகக் கட்டமைப்பிற்குள் செயலாற்றி வருகின்றவர்கள் சம்பந்தமாக தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் தோற்றுவார்கள்.

கேள்வி : யாலவில் வெறியாட்டம் ஆடியவர்கள் பற்றிய நிலைப்பாடு என்ன?

பதில்:- ஒரு நாடு ஒரே சட்டம் எனும் எண்ணக்கருவினை எடுத்துக்கொண்டே கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தார். எனினும் இன்றளவில் “நீங்கள் எங்களுடன் இருப்பீர்களாயின் என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும். ஆனால் நீங்கள் எம்மை எதிர்த்த முதலாவது நொடியிலேயே  நாங்களை உங்களைப் பழிவாங்க நடவடிக்கை எடுப்போம். தேசத்துரோகிகளாக  மாற்றிடுவோம்”  என்ற செய்தியைக் கொடுத்துள்ளார். யால சம்பவத்துடன் தொடர்படையதாக அமுலாக்குவது அதன் நீடிப்பையாகும். அமைச்சர்களின் மைந்தர்களுக்கும் அவர்களின் மருமக்களுக்கும் சகபாடிகளுக்கும் நாட்டின் சட்டம் வலுவில் இல்லாதவகையிலேயே செயலாற்றுகிறார்கள். வாகனங்கள் பிரவேசிப்பதைத் தடைசெய்து, அந்த ஆட்களுக்கு ஏற்புடையதாக்கிக் கொள்வதில்லை. அவர்களின் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு ஒருவிதமாகவும்  வறியவர்களுக்கு உச்ச தண்டனை வழங்கி வருவதும் அதன் மூலமாகத் தெளிவாகின்றது.

Show More

தேசிய மக்கள் சக்தியின் கெஸ்பேவ தொகுதி மாநாடு

நாட்டைக் கட்டியெழுப்புகின்ற உண்மையான தேவை உள்ளவர்கள் தேசிய மக்கள் சக்தியை சுற்றி ஒருங்கிணைந்து வருகிறார்கள். இன்றளவில் அதிகாரத்தில் இருக்கின்ற ரனில் விக்கிரமசிங்கவிற்கு இந்நாட்டின் சுதேச பிள்ளைகள் பிரபாகரனைப் போலவே புலப்படுகிறார்கள்.  நாட்டை இந்த நிலைமைக்கு இழுத்துப்போட்டு போசாக்கின்மையால் அவதிப்படுகின்ற பிள்ளைகளின் வயிறுகள் முன்நோக்கி தள்ளப்படிருப்பது  ரனில் விக்கிரமசிங்கவிற்கு குண்டுகளை வயிற்றில் கட்டிக்கொண்டிருப்பது போலவே தெரிகின்றது. போர்த்துக்கேயர்கள் இந்த நாட்டுக்கு வரும்போது இருந்த குடிமக்கள் போன்றவர்களே ரனில் விக்கிரமசிங்கவிற்குத் தேவை. நாட்டு மக்கள் நாட்டின் குடிமக்களாக மாறுவதை ரனில் […]

நாட்டைக் கட்டியெழுப்புகின்ற உண்மையான தேவை உள்ளவர்கள் தேசிய மக்கள் சக்தியை சுற்றி ஒருங்கிணைந்து வருகிறார்கள்.

தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவையின் உறுப்பினர் தோழர் லக்ஷ்மன் நிபுண ஆரச்சி

இன்றளவில் அதிகாரத்தில் இருக்கின்ற ரனில் விக்கிரமசிங்கவிற்கு இந்நாட்டின் சுதேச பிள்ளைகள் பிரபாகரனைப் போலவே புலப்படுகிறார்கள்.  நாட்டை இந்த நிலைமைக்கு இழுத்துப்போட்டு போசாக்கின்மையால் அவதிப்படுகின்ற பிள்ளைகளின் வயிறுகள் முன்நோக்கி தள்ளப்படிருப்பது  ரனில் விக்கிரமசிங்கவிற்கு குண்டுகளை வயிற்றில் கட்டிக்கொண்டிருப்பது போலவே தெரிகின்றது. போர்த்துக்கேயர்கள் இந்த நாட்டுக்கு வரும்போது இருந்த குடிமக்கள் போன்றவர்களே ரனில் விக்கிரமசிங்கவிற்குத் தேவை. நாட்டு மக்கள் நாட்டின் குடிமக்களாக மாறுவதை ரனில் விரும்புவதில்லை. அன்று வெள்ளைக்காரன் இலங்கைக்கு வந்து  நிறைவேற்றிக்கொண்ட சட்டதிட்டங்களில் ரனில் விக்கிரமசிங்கவும் ராஜபக்ஷாக்களும்   மறைந்துகொண்டிருப்பது அதனாலாகும்.  ஆனால் தற்போது இருப்பது தேசிய மக்கள் சக்தியின் இடையீட்டினால் குடிமக்களாக மக்கள் மாற்றப்பட்டுள்ள நிலைமையாகும். ராஜபக்ஷாக்கள் நாட்டை உருப்படியாக்குவார்களென  ஒருகாலத்தில் மக்கள் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.  ஆனால் எழுபத்துநான்கு வருட ஆட்சியில் ரனில்  விக்கரமசிங்காக்கள், ராஜபக்ஷாக்கள் இறுதியாக மக்களைக் கொண்டுவந்திருப்பது மக்களுக்குப் பதிலாக குடிமக்களை வலுவூட்டுகின்ற தீர்வுக்கட்டமான  ஒரு யுகத்திற்காகும். 

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின்கீழ் மக்கள் வதைக்கப்படுவதை நிறுத்தி திருட்டுகள், மோசடிகள், ஊழல்களை நிறுத்தி புதிதாக சிந்திக்கின்ற மக்கள் நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றுசேர்கிறார்கள். இந்த நாட்டு மக்கள்  நாட்டைக் கட்டியெழுப்பி முன்நோக்கி நகர்வதை எவராலும் தடுக்க இயலாது. தற்போது எஞ்சியுள்ளது மிகவும் சிறிய ஒரு பகுதியே என ஒருசிலர் கூறுகிறார்கள். ஆனால் தேசிய மக்கள் சக்தியைச் சுற்றி இணைந்திருப்பவர்கள்  எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய குழுவினராவார்.  பல்வேறு தொழில்வாண்மையாளர்கள், தொண்டர் ஊழியர்கள் உண்மையான அதிர்வுடன் தொடர்ந்தும் எம்மைச்சுற்றி இருக்கிறார்கள். நாங்கள் கட்டியெழுப்புவது மகாராஜாக்களை அல்ல. நாட்டைக் கட்டியெழுப்புகின்ற உண்மையான தேவைக்காக கலைஞர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், மருத்துவர்கள் போன்ற எந்தவிதமான பேதமுமமின்றி தேசிய மக்கள் சக்தியைச் சுற்றி இருக்கிறார்கள்.

இந்த நாட்டைக் கட்டியெழுப்பி பிள்ளைகளின் எதிர்காலத்தை நலமானதாக்க எம்மை அர்ப்பணிப்போம்.

தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவையின்  உறுப்பினர் சகோதரி விறோய்  கெலீ பல்தசார்

நாம் அனைவருமே களைத்துப் போயுள்ளோம். இந்த கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கெஸ்பேவ தொகுதி மாநாட்டுக்கு வருகை தந்துள்ள பொருந்திரளான மக்கள் இந்த நாட்டுக்கு ஒரு செய்தியைக் கொடுக்கிறார்கள்.  அதுதான் எந்தவொரு சவாலின் மத்தியிலும் முன்நோக்கி நகருகின்ற மக்கள் தேசிய மக்கள் சக்தியைச் சுற்றி ஒருங்கிணைந்துள்ளார்கள் என்பதாகும். இந்த மாநாட்டுக்காக பெருமளவிலான பெண்கள் வந்திருப்பது மகிழ்ச்சி தருகின்றது.  பொருளாதாரச் சீரழிவின் மத்தியில் எமது குடும்பங்களின் உணவுப் பாங்கு நூற்றுக்கு எழுபது சதவீதத்தால் மாறியுள்ளமை மதிப்பாய்வுகள் மூலமாக வெளியாகி உள்ளது.

பிள்ளைகளுக்கு அவசியமான முறையான போசாக்கினைப் போன்றே முதியவர்களுக்கு அவசியமான உணவினை பெற்றுக்கொடுக்கவும் முடியாதுள்ளது. உட்கொள்கின்ற உணவிலிருந்து முறையான போசாக்கு கிடைப்பதல்லை. உணவுவேளைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகின்றது. போசாக்கின்மை பற்றி பலவிதமான புள்ளிவிபரத் தரவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.  கர்ப்பிணித் தாய்மார்களின் போஷாக்கின்மை நிலைமை வேகமாக அதிகரித்து வருவது எம்மனைவருக்கும் தெளிவாகி வருகின்றது. இவையனைத்தும் இடம்பெறுவது எமது கருமபலன் அல்லது ஆண்டவரின் சித்தப்படியே என சிலகாலம் நாங்கள்  நினைத்துக் கொண்டிருந்தோம்.  எமது மனதைத் தேற்றிக்கொள்ள நாங்கள் பலவற்றை பிரயோகித்தோம். ஆனால் இந்த பேரழிவு எழுபத்திநான்கு வருடங்களாக இந்த நாட்டை ஆட்சிசெய்த அரசியல்வாதிகளாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதென்பது தற்போது எமக்குத் தெளிவாகி உள்ளது.  இந்த நிலைமையைத் தாங்கிக்கொள்ள முடியாமல் வீதியில் இறங்குகின்ற தாய்மார்கள், தகப்பன்மார்கள் பற்றி ரனில் விக்கிரமசிங்க வித்தியாசமான ஒரு கதையையே கூறுகிறார். பிள்ளைகளை கூட்டிக்கொண்டு வீதிக்கு வருபவர்கள் பயங்கரவாதிகள் என ரனில் விக்கிரமசிங்க கூறுகிறார்.

அரசியல் என்பது எம்மிடமிருந்து ஒதுக்கப்பட்டுள்ள ஒன்றல்ல.  எமது வாழ்க்கை அரசியல்மயமானதே. நாங்கள் உண்கின்ற உணவுகள், நாங்கள் வீடுகளில் வசிக்கின்றவிதம், பஸ் ஒன்றில் சீட் கிடைக்காமல் போவது, தொழிலை இழத்தல் இவை அனைத்துமே அரசியலாகும். எமது வாழ்க்கை அரசியலாகுமென்பதை விளங்கிக்கொண்ட பெற்றோர்கள்  குடும்பத்தாருடன் ஆர்பாட்டங்களுக்காக வீதியில் இறங்குகிறார்கள்.  அரசியல் என்பது அரசியல்வாதிகளுக்கு மாத்திரமல்ல.  எமது பிள்ளைகளை இப்படிப்பட்ட அரசியல் நடவடிக்கைகளுக்கு கொண்டுவரக்கூடிய நிலைமை இருக்கவேண்டும். நான் குறிப்பாக பெண்களிடம் கூறிக்கொள்வது அரசியல் தேவையற்றதாக்கபட்ட ஒன்றல்ல. வாக்காளர்களில் பெரும்பகுதியினர் பெண்களே என்பதை நாமனைவரும் அறிவோம். வாக்குகளை பாவிக்கின்றவர்கள் மத்தியில் 56% பெண்களாவர். அதிகாரத்திற்கு வருகின்ற அரசாங்கங்களால் பிள்ளைகளின் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து சம்பந்தமாக   பல்வேறு தீர்மானங்களை மேற்கொள்ளப்பட்டாலும்  எமக்கு எந்தவிதமாக பெறுபேறும் கிடைக்கமாட்டாது.  தேசிய பாதுகாப்பிற்கு வரவு செலவில் 15%  ஒதுக்கப்பட்டாலும்  எமக்கு எந்தவிதமான பாதுகாப்பும் கிடைப்பதில்லை. பிள்ளைகள் என்றவகையில், பெண்கள் என்றவகையில் பெரிதாகக் கூறுகின்ற தேசிய பாதுகாப்பில் இருந்து எமக்கு என்ன கிடைக்கின்றது? கல்விக்ககாக வரவுசெலவில் 3%  இற்கு குறைவாகவே ஒதுக்கப்படுகின்றது. இவையனைத்திலும் நிலவுகின்ற பிரச்சினை எமக்குத் தெளிவாகின்றது. அப்படியானால் தீர்வு என்ன? தீர்வு எமது கைகளிலேயே இருக்கின்றது. அதைவிட சுதந்திரமான, அன்பான வாழ்க்கையைக் கட்டியெழுப்பிட நாமனைவரும் ஒன்றுசேர வேண்டும். நாங்கள் முனைப்பானவர்களாக மாறவேண்டும்.  சுயநலவாதிகளை உருவாக்குகின்ற இந்த சிஸ்டத்திற்குப் பதிலாக தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அனைவரும் கூட்டாக ஒருங்கிணைந்து  இந்த நாட்டைக் கட்டியெழுப்பி பிள்ளைகளின் எதிர்காலத்தை நலமானதாக்கிட அர்ப்பணிப்போமென அழைப்பு விடுக்கிறோம்.  நாங்கள்தான் இந்த நாட்டைப் பொறுப்பேற்க வேண்டும்.

வன்முறைக்குத் தூபமிடுவது ரனில்….. தேர்தல் வரைபடத்தை சுருட்டிக்கொள்ள நாங்கள் இடமளிக்கமாட்டோம்

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க

எமது நாட்டில் நீண்டகாலமாக பலவிதமான அரசியல் மாற்றங்களை மேற்கொள்ள சாதகமான எதிர்பார்ப்புடனேயே மக்கள் இடையீடு செய்தார்கள்.  எமது பிரச்சினகளைத் தீர்த்துக்கொள்ள அரசாங்கமொன்றை அமைத்துக் கொண்டதையிட்டு மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால் குறுகிய காலத்தில் ஏமாற்றத்திற்கு இலக்காகினார்கள். ஏன் இப்படி நடந்தது? மக்களின் எதிர்பார்ப்புக்களைவிட வித்தியாசமான எதிர்பார்ப்புகளே ஆட்சியார்களிடம் நிலவியது. இந்த நிலைமையின் கீழேயே மக்கள் மீண்டும்மீண்டும் ஏமாற்றத்திற்கு இலக்காகினார்கள்.

ஏமாற்றத்திற்கு இலக்காகிய  இந்த நிலைமையை தீர்வுக்கட்டமான வகையில் நாங்கள் மாற்றியமைத்திட வேண்டும். இந்த பணியைக் கட்டாயமாக ஈடேற்றுகின்ற நோக்கத்திற்காகவே  தேசிய மக்கள் சக்தி கட்டியெழுப்பப்பட்டுள்ளது.  இலங்கை ஒரு வறிய நாடு என்பதை உறுதிப்படுத்தவதற்காக அமைச்சரவைப் பத்திரத்தைப் போடுகிறார்கள். பாடசாலைக்குச் செல்கின்ற பிள்ளைகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. பாடசாலைப் பிள்ளைகள் மயக்கமுற்று வீழ்கிறார்கள். வைத்தியசாலைகளில் மருந்து கிடையாது. நோயாளிகள் இறக்கிறார்கள். கைத்தொழில்கள் சீரழிகின்றன. இவ்வாறான துன்பங்கள் ஒரு நாட்டுக்கு  மேலும் அவசியமா? நாங்களும் எமது பிள்ளைகளும் இந்த கவலைக்கிடமான நிலைமைக்கு இரையாகிவிட்டோம். இந்த நிலைமையை மாற்றியமைத்திட நிர்ப்பந்திக்கின்ற அனுபவங்கள் தராளமாக எமக்கு இருக்கின்றன. 

சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு நாட்டைவிட்டுச் செல்லவேண்டிய நிலையேற்பட்டது. மகிந்த ராஜபக்ஷவிற்கு அலரி மாளிகையிலிருந்து கள்ளத்தனமாக வெளியேறி கடற்படை முகாமொன்றில் தங்கவேண்டிய நிலையேற்பட்டது. பசில் ராஜபக்ஷவிற்கு வெளிநாடுசெல்ல பிளையிற் ஒன்றைத் தேடிக்கொள்ள முடியாமல் போயிற்று. பாரிய பர்வதம்போல் இருப்பதாக இருப்பதாக கூறிய பாசறை எமது கண்ணைதிரிலேயே சிதைவடைந்துள்ளது. அப்படியானால் மக்களிடமே பலம் இருக்கின்றதென்பது தெளிவாகின்றது. எனினும் இந்த மக்கள் சரிவர ஒழுங்கமையவில்லை. அந்த மக்களை ஒழுங்கமைத்தே தேசிய மக்கள் சக்தி தொகுதிக்கிளைகளை அமைத்து வருகின்றது. தொகுதிக்கிளைகளிடம் மூன்று பிரதான விடயங்கள் கைளிக்கப்பட்டுள்ளன. மீண்டுமொரு மக்கள் எழுச்சியின்போது அது தேசிய மக்கள்  சக்தியின் கீழேயே இடம்பெறவேண்டும்.  இல்லாவிட்டால் மக்கள் எழுச்சி விரயமாகிவிடும். அதைப்போலவே ஊர்மட்டத்தில் மக்களை ஒழுங்கமைவு செய்விக்கின்ற பொறுப்பு எம்மீது சுமத்தப்பட்டுள்ளது. நாடு வங்குரோத்து நிலையை அடைந்துள்ள  நிலைமையின் மத்தியில் மக்களை பாதுகாத்துக்கொள்வதும் அதன் மத்தியில் இருக்கின்ற முதன்மைப்பணியாகும். நாட்டின் உற்பத்தி சீரழிந்து. பணவீக்கம் பாரியளவில் உயர்வடைந்துள்ளது. தொழில்கள் அற்றுப்போய் வருகின்றன. மாதாந்த சம்பளம் பெறுகின்ற மக்களால் கடனை மீளச்செலுத்த முடியாது. இந்த அழுத்தத்திற்கு எதிராக மக்கள் கொதித்தெழுவார்கள்.  அத்தகைய எழுச்சியை வன்முறையின்பால் தள்ளிவிட அரசாங்கம் முயற்சிசெய்து வருகின்றது. அதனால் மிகவும் ஒழுங்கமைந்தவகையில் எழுச்சியடைகின்ற மக்கட் குழுக்களுக்கு எமது தொகுதிக் கிளைகள் தலைமைத்துவம் வழங்கவேண்டும். எதிரிக்கு சாதகமானதாக அமைகின்ற எதனையும் செய்யாதவிதத்தில் ஒழுங்கமைந்தவகையிலான தலைமைத்துவம் அளிக்க தொகுதிக்கிளை செயலாற்றவேண்டும். 

தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக தேர்தல்களுக்குத் தயாராகி வருகின்றது. எனினும் அரசாங்கம் தேர்தல்களைக்கண்டு அஞ்சுகின்றது. உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் பலவிதமாக தந்திரோபாயங்களைக் கையாளுகின்றது. ஒரு பாராளுமன்ற உறுப்பினராகக்கூட மக்கள் ஆணையற்ற ரனில் விக்கிரமசிங்கவிற்கு தேர்தலில் அடைகின்ற தோல்வியின் மத்தியில் தொடர்ந்தும் சனாதிபதி கதிரையில் அமர்ந்திருக்கமுடியாது.  அதைப்போலவே தேர்தலில் நியமித்துக்கொள்ளப்பட்ட  மகிந்த ராஜபக்ஷவை முதன்மையாகக்கொண்ட அரசாங்கம் மக்களால் விரட்டியடிக்கப்பட்டது.  இப்படியானால் நிகழ்கால அரசாங்கத்திற்கும் மக்கள் ஆணை கிடையாது. அதனால் அவர்கள் தேர்தலுக்குச் செல்லப்போவதில்லை. தேர்தலுக்குச் சென்றால்  அவர்களுக்கு கிடைத்த அறுபத்தொன்பது இலட்சம் மக்கள் ஆணை தற்போது எங்கே இருக்கின்றது என்பது தெளிவாகும். ரனிலும் ராஜபக்ஷவிற்கும் ஒன்றுசேர்ந்து தேர்தலுக்குச்செல்ல முடியாது. ஊர்மட்டத்தில் இந்த இருசாராரையும் ஒன்றுசேர்க்க முடியாது.  இத்தகைய நிலைமையில் தேர்தலை ஒத்திவைக்க இருதரப்பினரும் விரும்புகிறார்கள்.

அதிகாரமற்ற அரசாங்கம் தேர்தலை ஒத்திவைக்க பலவிதமான வியூகங்களை அமைத்துவருகின்றது. எனினும் தேசிய மக்கள் சக்தியின் தொகுதிக் கிளைகள் விசேட பொறுப்பினை ஏற்று போராட்டத்திற்கு தயாராவதைப்போன்றே தேர்தலுக்குத் தயாராகவும் வேண்டும். எனினும் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காக ஒருவரையொருவர் பின்தொடர்ந்துசென்று  தோற்கடிக்கின்ற மனோபாவத்திற்குப் பதிலாக நாட்டைக் கட்டியெழுப்புகின்ற கூட்டான உணர்வுடன் ஒருங்கிணைய வேண்டும். பிறரது வேதனையைத் தனது வேதனையாக எவ்வாறு மாற்றிக்கொள்வது எனும் கூட்டான உணர்வு எமக்குத் தேவை. அவ்வாறின்றி மேலிருந்து ஓர் அரசாங்கத்தை அமைத்துக்கொண்டோம் என்பதற்காக நாட்டை உருப்படியாக்கிவிட  இயலாது. சமூகத்தில் மாற்றமொன்று அவசியமாகும்.

ஒரு நாட்டுக்கு நேரிடக்கூடிய அனைத்துவிதமான அழிவுகளையும் இந்த நாட்டுக்கு கொடுத்துவிட்டார்கள். ரனில் விக்கிரமசிங்க திருகோணமலைக்குச் சென்று க அன்று தாங்கிகளை விற்றிருந்தால் இன்று எண்ணெய் இருந்திருக்கும் எனக் கூறுகிறார். எமது நாட்டுக்கு எண்ணெய் கிடைக்காமல் போனது தாங்கிகள் காரணமாக அல்ல: டொலர் இன்மை காரணமாகவே. ஐ.ஓ.சீ. கம்பெனிக்கு எட்டு தாங்கிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த எட்டு தாங்கிகளும் நிரப்பப்பட்டிருக்கவில்லை. அவசியமாகி உள்ளது இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான புதிய பொருளாதார திட்டமாகும், அரசியல் மாற்றமொன்றும்   அதற்காக அணிதிரட்டப்பட்ட மக்களின் தயார்நிலையுமாகும். நிலக்கரி கொண்டுவந்ததால் ஐநூறு மில்லியன் டொலருக்கு மேலாக இழந்துள்ளதாக கணக்காய்வாளர் தலைமை அதிபதி அறிக்கையிலிருந்து வெளியாகி உள்ளது.  உரத்தைக் கொண்டுவருகயைில் எட்டு மில்லியன் டொலரை இழந்துள்ளதாகவும், எண்ணெய் கொண்டுவருதல், உரம் கொண்டு வருதல், சீனி கொண்டுவருதல் போன்ற அனைத்து துறைகளிலும் புரிந்துள்ள நிதிசார் குற்றச்செயல்கள் பற்றி கணக்காய்வாளர் தலைமை அதிபதி அறிக்கைகளில் விடயங்கள் வெளிப்பட்டுள்ளன.  இவற்றுக்குப் பொறுப்புற்கூற வேண்டியவர்களுடன் ஒரு நாட்டை உருப்படியாக்கிட முடியாது.

பாடலொன்றை இரசிக்கின்ற, புத்தகமொன்றை வாசிக்கின்ற, திரைப்படமொன்றைப் பார்க்கின்ற, ஆரோக்கியமான வாழ்க்கையொன்றைப் பற்றிச் சிந்திக்கின்ற  கூட்டான கலாசாரமொன்றை உருவாக்கிட வேண்டும்.  அத்தகைய மக்களைக்கொண்ட தொகுதிக்கிளையின் மூன்று அடிப்படைப் பணிகள் இருக்கின்றன. மக்களின் எழுச்சிக்குத் தலைமைத்துவம் வழங்குதல், எதிர்வரும் தேர்தலில் தொகுதியை வெற்றிபெறச் செய்வித்தல்  தொகுதிக்குள்ளே மக்கள் மத்தியில் மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்காக  மேற்கொள்ளப்படுகின்ற உரையாடலொன்றை நடாத்துதல் என்பவையே அத்தகைய செயற்பொறுப்புகளாகும். இந்த பணிகளை வெற்றிபெறச் செய்வித்தால் எம்மால் வெற்றியை அடையமுடியும்.

நாம் எவருமே அரசாங்கத்தைப் பொறுப்பேற்பது காலத்தைக் கழிப்பதற்காக அல்ல. நாட்டை உருப்படியாகிடவே.  இவர்கள் ஒருவரையொருவர் பாதுகாத்து ஊழல்பேர்வழிகளை பாதுகாக்கிறார்கள். ஆனால் நாங்கள் இந்த ஊழல்பேர்வழிகளைத் தண்டித்து அவர்கள் கொள்ளையடித்த பொதுச் செல்வத்தை மீண்டும் அறவிட்டுக்கொள்வோம். அரச நிறுவனங்கள் பாரிய நட்டத்துடன் இயங்கிவருவது அரசாங்கத்திற்குச் சுமையாகுமென்ற பாரிய உரையாடலொன்று தற்போது நிலவுகின்றது. இந்த நிறுவனங்களில் அரசியல் நியமனங்கள் மூலமாக ஊழியர்களை நிரப்பி, அரச நிறுவனங்களை சிதைத்தார்கள். பொருளாதாரத்தின் புதிய வாய்ப்புகளை உருவாக்கி புதிய தொழில்முயற்சியாளர்களை அறிமுகஞ்செய்து தொழில்களை பிற்பிப்பதற்குப் பதிலாக தேர்தலை நோக்கமாகக்கொண்டு  அரச நிறுவனங்களில் தொழில்களை வழங்கினார்கள். எனினும் தேசிய மக்கள் சக்தி வெற்றிடங்கள் நிலவாத எந்தவோர் அரசாங்க நிறுவனத்திற்கும்  தொழில்களை வழங்க மாட்டாது. சுற்றுலாத்துறை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சித்துறை, கப்பற்றுறை  உள்ளிட்ட பலதுறைகள் பொருளாதாரத்தின் முதன்மைப் பிரிவுகளாக அபிவிருத்தி செய்யப்படும். இவ்விதமாக பொருளாதாரத்தை விரிவுபடுத்தியே எமது ஆட்சியின்கீழ் தொழில்கள் வழங்கப்படும்.

இதுவரை ஆட்சியாளர்கள் நாட்டை பின்நோக்கி இழுக்கின்ற பொருளாதார முறையினைக் கடைப்பிடிப்பதையே செய்துவந்தார்கள். நாங்கள் நாட்டை முன்நோக்கி நகர்த்துகின்ற பொருளாதாரத் திட்டங்களை அமுலாக்குவோம். புதிய இளைஞர் தலைமுறையினருக்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை  உருவாக்குவது எமது முதன்மை செயற்பொறுப்பாகும்.   நிகழ்கால இளைஞர்கள் காலை எட்டு மணியிலிருந்து  மாலை ஐந்து மணிவரை தொழில் புரிவதைவிட சுதந்திரமான  சந்தர்ப்பங்கள் பற்றிச் சிந்திக்கிறார்கள். அதற்கான ஊக்குவிப்புகளைக்கொண்ட இணைந்த, வினைத்திறன்மிக்க அரச சேவையொன்றை நாங்கள் கட்டியெழுப்புவோம். வெள்ளையர்கள் வெளியெறி எழுபத்திநான்கு ஆண்டுகளை விஞ்சிவிட்டபோதிலும் இன்னமும் வெள்ளைக்காரன் அறிமுகஞ்செய்த அரசசேவையே அமுலில் இருக்கின்றது. அதனை வினைத்திறன்மிக்க மக்கள் சேவையாக நாங்கள் மாற்றியமைப்போம்.    

கல்வியைப் பெறுகின்ற இளைஞர்கள் தொழிலொன்றில் ஈடுபடுதல் இன்றைய உலகில் இடம்பெறுகின்ற ஒன்றாகும்.  ஆனால் எமது நாட்டில் இருப்பது பொலநறுவையில் கல்வி பயில்கின்ற பிள்ளை தொழிலொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக கொழும்பை பார்த்துக்கொண்டு இருப்பதாகும். ஆனால் புத்தாக்கப் பொருளாதாரமொன்று மூலமாக அந்த பிள்ளைகளுக்கு பொலநறுவை பிரதேசத்திலேயே தொழில் வழங்கப்படவேண்டும். பொருளாதார வளர்ச்சியும் பொருளாதார அபிவிருத்தியும்  இவ்விதமாக புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கி உலகின் புதிய சந்தைகளை நோக்கிப் பிரவேசிப்பதன் மூலமாக மாத்திரமே உருவாகும். 

இந்த நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய ஊழலற்ற,  நேர்மையான குழுவினர் தேசிய மக்கள் சக்தியில் மாத்திரமே இருக்கிறார்கள். பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புகின்ற பணிக்காக நாங்கள் பொருளாதாரப் பேரவையொன்றை நிறுவியுள்ளோம். பேராசிரியர் அனில் ஜயந்த, பேராசிரியர் ஜனத் குமாரசிங்க, கலாநிதி சாந்த ஜயரத்ன, பேராசிரியர் தயானந்த  மற்றும் எமது தோழர் சுனில் ஹந்துன்னெத்தி  இந்த பேரவையில் செயலாற்றி வருகிறார்கள். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான  கைத்தொழிலாளர்களின் துறை தோழர் சத்துரங்கவின் தலைமையில் நிறுவப்பட்டுள்ளது. எமது பாதுகாப்புப் பேரவை பற்றி ஒருசிலர் கேட்கிறார்கள் முன்னாள் ஜெனரல்மார்களை உள்ளடக்கிய பாதுகாப்புப் பேரவையொன்றை நாங்கள் இந்த முப்பதாந் திகதி நிறுவுவோம்.  அதைப்போலவே வெளிநாட்டு உறவுகள் பற்றியும் நாங்கள் கவனஞ்செலுத்தியுள்ளோம்.  இன்றைய உலகில் எம்மைப் பற்றிய மிகவும் அவலட்சணமான பிரதிபிம்பமே நிலவுகின்றது. நாம் இழந்துள்ள சர்வதேச பிரதிபிம்பத்தை மிகவும் பலம்பொருந்தியவகையில் உலகின் முன்னிலையில் மிளிரச் செய்விக்கின்ற வெளியுறவுக் கொள்கையொன்றை நாங்கள் அமுலாக்குவோம்.

இணைத்தளத்தை வருடினால் பிரசன்ன ரணதுங்க பற்றி நீதிமன்றத்தினால் இரண்டரைகோடி தண்டனை வழங்கப்பட்ட கப்பம்பெறுனர் என்றே இருக்கின்றது. சொக்கா மல்லீ பற்றித் தேடினால் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட ஒருவராவார்.  மகிந்த ராஜபக்ஷவின் பெயரை இணையத்தளத்தில் தேடினால் “நிவ்யோர்க் டைம்ஸ்”  செய்தித்தாளில் வெளியிட்ட சீனக் கம்பெனியொன்றிடமிருந்து இலஞ்சம் பெற்றார் என்ற தகவல் வெளியே வரும். நாமலின் பெயரை அடித்தால் “கிறிஸ் கொடுக்கல்வாங்கல்” பற்றி அவுஸ்திரேலியாவின் ஊடகவியலாளர் வெளியிட்ட தகவல் தொடரொன்று வெளியில் வருகின்றது.  உலகத்தார் முன்னிலையில் நாட்டின் நற்பெயரை கறைபடியச் செய்வித்த இவர்களால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. மனித உரிமைகள், சட்டம், மகளிர் உரிமைகள், முதியோர்களின் உரிமை போன்ற உலகத்தை வென்றெடுக்கின்ற  அளவுகோல்கள் இருக்கின்றன.  அவற்றுக்கிணங்க எமது சமூகத்தை முன்னேற்றவேண்டும்.  சமூகப் பாதுகாப்புமிக்க நாடாக கட்டியெழுப்பவேண்டும். அத்தகைய நாட்டுக்குத்தான் சுற்றுலாத்தொழிற்றுறையை விருத்திசெய்ய முடியும். இத்தகைய நாடுகளுக்கே வெளிநாட்டு முதலீடுகள் வரும்.   அதற்கான நேர்மையான ஊழலற்ற குழுவொன்று தேசிய மக்கள் சக்தியிடம் இருக்கின்றது.

தேசிய மக்கள் சக்தியின் பொறுப்பினை வகிக்க தெரிவுசெய்யப்பட்ட எவருமே தமக்கு தனிப்பட்டவகையில் எதனையும் பெற்றுக்கொள்வதற்காக வந்தவர்கள் அல்ல. முன்னரைவிட அதிகமாக எம்மைப் பார்க்கின்ற, விருப்பம் தெரிவிக்கின்ற மக்களே இன்று இருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கையை உறுதிசெய்துகொண்டு எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில்  பெருவெற்றியை அடையவேண்டும். அடுத்த பொதுத் தேர்தலில் எமது அரசாங்கமொன்றை நிறுவுதல் பற்றிய சமிக்ஞை அந்த உள்ளூராட்சி தேர்தலில் வழங்கப்படல் வேண்டும். உள்ளூராட்சித் தேர்தலில் இந்த சமிக்ஞை சரிவர வழங்கப்பட்டால் மிகவும் குறுகிய காலத்தில் நிச்சயமாக பொதுத்தேர்தலில் எம்மால் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். நாங்கள் இந்த வேலையில் பிரவேசித்தது பகுதியளவிலான வெற்றியைப் பெறுவதற்காக அல்ல.  இந்த நாட்டை பேரழிவுக்கு உள்ளாக்கிய  இந்த நிலைமையிலிருந்து மீட்டெடுக்க வேறு எவருக்குமே முடியாது. நாமலின் மாமாவின் ஹோட்டலில் ஓர் இரவுக்கான அறை வாடகை “எயார் லங்கா” கம்பெனியின் விமானச்சீட்டு ஒன்றைவிட பல மடங்கு அதிகமானதாகும்.  விமானமொன்று தாமதித்தால் நாமலின் மாமாவின் ஹோட்டலிலேயே அறை வழங்கப்படுகின்றது. இவ்விதமாகத்தான் பிஸ்னஸ் நடைபெறுகின்றது. அப்படிப்பட்டவர்களால் இந்த நாட்டை மீட்டெடுக்க முடியுமா?

அமைச்சர்கள் செலுத்தியிராத லயிற் பில் பற்றி இந்நாட்களில் பேசப்படுகின்றது. அமைச்சர்களின் உத்தியோகபூர்வ வீடுகளின் பில் அமைச்சினால் செலுத்தப்படுகின்றது. அப்படியானால் எப்படி நிலுவை இருக்கலாம்? ஒருசிலர் அமைச்சர் பதவி இல்லாவிட்டாலும் உத்தியோகபூர்வ இல்லங்களிலேயே வசிக்கிறார்கள். எனினும் பில் அமைச்சினால் செலுத்தப்படுவதில்லை. அப்போதுதான் பற்றாக்குறை ஏற்படும். லயிற் பில் செலுத்தாதிருப்பது மாத்திரமல்ல. அவர்கள் உத்தியோகபூர்வ இல்லங்களிலும் பலவந்தமாகவே இருக்கிறார்கள். ஒருசிலர் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களில் இருப்பதற்காகவே அமைச்சர் பதவிகளை ஏற்கிறார்கள். நாமல் ராஜபக்ஷ தொப்புள் கொடியை அறுத்த நாளில் இருந்தே அரசாங்க இல்லங்களிலேயே வசிக்கிறார்.  மகிந்த கோட்டா தற்போது அரசாங்க இல்லங்களிலேயே  இருக்கிறார்கள். நிலக்கரி கொண்டுவர, எரிவாயு கொண்டுவர  இந்த சிரமமான தருணத்தில் வழங்கப்படுகின்ற உதவிகளிலிருந்தும் சூறையாடுகிறார்கள். இவர்கள் எத்தகைய ஆட்சியாளர்கள்? அதனால் அவர்களிடமிருந்து எமது நாட்டுக்கோ அல்லது பிள்ளைகளுக்கோ எந்தவிதமான எதிர்காலமும் கிடைக்கப்போவதில்லை. அதனால் இந்த கேடுகெட்ட கும்பலைத் தோற்கடித்து தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியொன்றை நிறுவ  நாமனைவருமே அணிதிரள்வோம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

Show More

கடன் மறுசீரமைப்பு என்பது பொருளாதாரப் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்ப்பது என்பதல்ல…..

2022.09.29 – தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பேரவையின் ஊடக சந்திப்பு தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கைகள் குழுவின் தலைவர், பட்டயக் கணக்காளர், ஸ்ரீ ஜயவர்தனபுர  பல்கலைக்கழகத்தின் வியாபாரக் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் அனில் ஜயந்த தேசிய மக்கள் சக்தியின்  பொருளாதாரப் பேரவை என்றவகையில் ஒரு நாடு அபிவிருத்தியை நோக்கி  பயணிக்கின்றமை, மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வடைதல் போன்ற விடயங்கள் சம்பந்தமாக  விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பொருளாதாரம் என்பது ஒரு நாட்டின் பண்டங்கள் மற்றும் சேவைகளை உற்பத்தி […]

2022.09.29 – தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பேரவையின் ஊடக சந்திப்பு

தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கைகள் குழுவின் தலைவர், பட்டயக் கணக்காளர், ஸ்ரீ ஜயவர்தனபுர  பல்கலைக்கழகத்தின் வியாபாரக் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் அனில் ஜயந்த

தேசிய மக்கள் சக்தியின்  பொருளாதாரப் பேரவை என்றவகையில் ஒரு நாடு அபிவிருத்தியை நோக்கி  பயணிக்கின்றமை, மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வடைதல் போன்ற விடயங்கள் சம்பந்தமாக  விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பொருளாதாரம் என்பது ஒரு நாட்டின் பண்டங்கள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்வதும், அதிலிருந்து பிறப்பிக்கப்படுகின்ற செல்வத்தை பகிர்ந்தளிப்பதும், தொழிவாய்ப்பினை உருவாக்குதல், வட்டி மற்றும் அந்நிய செலாவணி வீதத்தை தீர்மானித்தல், வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு ஒதுக்கங்களை பேணிவருதல் போன்ற பல்வேறு விடயங்கள் ஒன்றடனொன்று இணைவதாகும். பொருளாதாரத்தில் நிலவுகின்ற உண்மையான பிரச்சினைகள் பற்றிக் கலந்துரையாடி சரியான திசையை நோக்கி  கொண்டுசெல்ல முயற்சி செய்வதற்குப் பதிலாக ஆட்சியாளர்கள் இற்றைவரை தரவுகளை திரிபுபடுத்தி  பிரதான பொருளாதாரப் பிரச்சினைகளை மூடிமறைப்பதையே செய்துவந்தார்கள்.  தேசிய மக்கள் சக்தி இயலுமான எல்லாவேளைகளிலும் நிலவுகின்ற யதார்த்தத்தை சுட்டிக்காட்ட நடவடிக்கை எடுத்தது. அதனாலேயே தற்போது நாட்டில் கூட்டாக நாமனைவரும் ஒன்றுசேர்ந்து இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டுமென்ற புரிந்துணர்விற்கு வந்துள்ளோம்.  

தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பேரவையில் அந்தந்த உபதுறைகள் பற்றி அளவுசார்ரீதியான அறிவினைப் படைத்த புத்திஜீவிகள் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள். நாங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து பொருளாதாரம் சம்பந்தமான ஏதேனும் முற்றாய்வுசார்ந்த   புலனாய்வினை மேற்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக விஞ்ஞானரீதியான தகவல்களைக் கொண்டதாக விடயங்களை முன்வைக்கிறோம். நடப்பு நிலைமை பற்றி பகுப்பாய்வு செய்வதன் மூலமாக பெற்றுக்கொள்கின்ற விடயங்களுக்கிணங்க நாட்டில் நிலவுகின்ற மட்டுப்படுத்தப்பட்ட  வளங்களை முறைப்படி முகாமைசெய்து பொதுத்தேவைகளை நிவர்த்திசெய்தல் பற்றி பொதுமக்களுக்ககு விழிப்பூட்டி வருகிறோம்.  அதன் தொடக்கப் படிமுறையாக தெரிவு செய்யப்பட்ட துரிதமாக சமூகத்தின் கவனத்திற்கு இலக்காகவேண்டிய ஒருசில விடயஙகளை முன்வைக்கிறோம். இத்தருணமாகும்வேளையில் அரசாங்கம் தனது அதிகாரத்தை பேணிவரும் நோக்கத்துடன் தவிர்த்து வருகின்ற பொதுமக்களின் வாழ்க்கைக்கு தோன்றியுள்ள பொருளாதார நெருக்கடியின் பயங்கரமானதன்மை பற்றி  நாங்கள் வெளிப்படுத்த  தயார். பொருளாதார நெருக்கடிக்கு இந்த அரசாங்கம் அடிப்படையில் பொறுப்புக்கூற வேண்டியபோதிலும்  எவராலும் இந்த நெருக்கடியை தவிர்த்துச் செல்ல முடியாது.

அடிப்படையில் எடுத்துக்கொண்டால் நிலவுகின்ற கடன் சுமையை ஒரு நாடு என்றவகையில் தாங்கிக்கொள்ள முடியாது. வெளிநாட்டுக் கடன் பங்கு மிகவும் பெரிய அளவில் அதிகரித்துள்ளமை அதில் தாக்கமேற்படுத்தி உள்ளது. அதனால் கடன் மறுசீரமைத்தல் பற்றிய   பாரிய உரையாடல் தோன்றியுள்ளது. அரசாங்க அதிகாரத்தை எவர் வகித்தாலும், வகிக்க எதிர்பார்த்துக் கொண்டிருந்தாலும் அந்த எவருமே கடன் மறுசீரமைப்பினை செய்தே ஆகவேண்டும். கடன் மறுசீரமைப்பு செய்வதென்பது நாட்டின் அனைத்துப் பொருளாதார பிரச்சினைகளையும் தீர்த்துவைப்பது என்பதல்ல.  நாடு அபிவிருத்தியை நோக்கிச் செல்கிறது என்பதல்ல.  அடிப்படை அத்திவாரத்தை இட்டுக்கொள்ள,  மூச்செடுத்திட வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்வது என்பதாகும். இந்த உரையாடலில் சர்வதேச நாணய நிதியம் இடையீடு செய்துள்ளது. 1959 இல் இருந்தே நாங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் அங்கத்தவ நாடாவோம். அதன் அங்கத்தவர்களுக்கு கிடைக்கின்ற அனைத்துவிதமான சிறப்புரிமைகளும் எமக்கும் உரித்தானது. அவர்கள் தமது அங்கத்தவ நாடுகளுக்கு சென்மதி நிலுவை நெருக்கடியில் இருந்து விடுபட ஆலோசனை வழங்குதலையும் இடையீடு செய்தலையும் மேற்கொண்டு வருகிறார்கள். கடன் மறுசீரமைப்பு செய்வதற்கான நாணய நிதியம் இடையீடுசெய்து பேச்சுவார்த்தைகளை நடாத்துவது நல்லது.  ஆனால் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான திட்டம்  அல்லது அதன் பயணப்பாதையை நாணய நிதியம் வழங்குவதில்லை. அது அவர்களின் செயற்பொறுப்பன்று. எமது நாட்டை முன்னேற்றியும் அதன் திசையை தீர்மானிப்பதையும் நாங்கள்தான் செய்யவேண்டும். ஆனால் இதுவரை அரசாங்கம் அதற்கான திட்டங்களை வகுக்கவில்லை.

கடன் மறுசீரமைப்பினை மேற்கொள்ள இலங்கைக்காக கிளிபட் சான்ஸ் மற்றும் லசாட் எனப்படுகின்ற  இரண்ட சர்வதேச நிறுவனங்கள் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. கிளிபட் சான்ஸ் இடையீடுசெய்து  பூர்வாங்க பேச்சுவார்த்தையொன்றையும் நடாத்தியது.  அதன்போது தோன்றிய பல அடிப்படை விடயங்கள் மீது எமது கவனம் செலுத்தப்படல் வேண்டும். முதலில் அரசாங்க வருமானம் மற்றும் செலவினங்களுக்கிடையில் நிலவுகின்ற முதனிலை மீதி 2.3 நேர்க்கணியப் பெறுமதிவரை   2025 அளவில் கொண்டுசெல்ல முடியுமென அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் நிலவுகின்ற தகவல்களையும் தரவுகளையும் பகுப்பாய்வு செய்தவிடத்து அது இலகுவான கருமமல்லவென்பது எமக்கு விளங்குகின்றது.  இந்த நிலைமையை அடைந்தால் மாத்திரம் கடன்  நிலைபெறுதகு நிலைமையை அடையமுடியும். அதாவது செலுத்தவேண்டியுள்ள அளவினை தாக்குப்பிடிக்கக்கூடிய விதத்தில் அமைத்துக்கொள்வதாகும். நிலவுகின்ற நிலைமையின்கீழ் நாடுகளுக்கிணங்க கடன் பற்றிய சிக்கல் மாற்றமடைகின்றது. ஜப்பான் போன்ற நாட்டில் கடன்சுமை 250% ஆக அமைகின்றது.  ஆனால் அது அந்த நாட்டுக்கு தாக்குப்பிடிக்கக்கூடிய, செலுத்தக்கூடிய நிலைமையாகும்.  ஆனால் எமது போதியளவிலான வருமானம் ஈட்டப்படுதல் இல்லாமையால்  எமது கடன் நிலைபெறுதகுநிலை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 100% விட குறைவானதாக இருக்கவேண்டும்.   அப்படியானால்  எவ்வாறு கடன் நிலைபெறுதகுநிலையை ஏற்படுத்திக்கொள்வது  என்பதற்கான திட்டத்தை தயாரித்துக்கொள்ள வேண்டும்.   அரசாங்கத்தின் பக்கத்தில் முதனிலை வரவசெலவு மீதி 2.3 நேர்க்கணியத்திற்கு செல்கின்ற விதம் தெளிவுபடுத்தப்படுவதில்லை.

இந்த நிலைமையில் அரசாங்கம் அரசாங்க வருமானத்தில் கடன்வட்டியை செலுத்துவதை நீக்கி ஏனைய செலவுகளுடன் மொத்த தேசிய உற்பத்தியுடன் இணக்கஞ்செய்து நேர்க்கணியப் பெறுமானத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்து வருவதாக எமக்கு சந்தேகம் தோன்றியுள்ளது. இந்த மீதி 2021 இல் 6%  எதிர்க்கணியமாகும். 2020 இல் 4.6 எதிர்க்கணியமாக இருந்தது. இன்னும் இரண்டு வருடங்களில் 2025 அளவில் எப்படி 2.3 நேர்கணியமாக மாறுவது? மத்திய வங்கிக்கிணங்க 2023 இல்  பற்றாக்குறை 8% எதிர்க்கணியமாக இருந்து   2024 இல் நேர்க்கணியமாக மாறி 2025 இல் கூறுகின்ற இந்த இலக்கிற்குச் செல்வதாக குறிப்பிட்டுள்ளது. இந்த நிலைமையில் எமக்கு தெளிவாவது வட்டி தவிர்ந்ததாக அரசாங்கத்தின் பாரிய செலவுச்சுமை வகிக்கப்படுகின்ற  அரச சம்பளம் செலுத்துதலை மக்களை துன்புறுத்தலுக்கு இலக்காகி வெட்டிவிடுவதற்கான வாய்ப்பு  நிலவுகின்றதென்பதாகும். செலவுகளை வெட்டிவிடுவது எனக்கூறி அந்த இடத்திற்கே வருவதாக நாங்கள் நினைக்கிறோம். எனினும் செலவுகளுக்குள்ளே மோசடிகள், ஊழல்கள், விரயம் அனைத்துமே இருக்கின்றன. செய்யவேண்டியது மோசடி, ஊழல், விரயத்தை  நீக்குவதேயொழிய சம்பளத்தைக் குறைப்பதல்ல.  இவர்கள் கூறகின்ற 2.3 நேர்க்கணிய இலக்கிற்குச் செல்லவேண்டுமாயின் வருமானத்தை அதிகரித்துக்கொண்டு செலவுகளை வெட்டிவிட வேண்டும். நிலவுகின்ற கட்டமைப்பிற்குள்ளே வருமானத்தை அதிகரித்துக் கொள்வதாயின் பொருளாதாரத்தை விரிவாக்க வேண்டும். நிலவுகின்ற சொச்சத் தேசிய செல்வத்தில் அதிகமாக ஈட்டிக்கொள்ள அரசாங்கம் செயலாற்றினால் பொதுமக்கள் மிகுந்த அழுத்தத்தை சந்திப்பார்கள். அதன் மூலமாக இடம்பெறுவது பொதுமக்களின் நன்மையன்றி அரசாங்கம் தப்பித்துக் கொள்வதாகும். அதற்காக வரிமேல் வரி வரவுள்ளது.  நிவாரணங்களை வெட்டிவிடுதல் மற்றும் மின்சாரக் கட்டணப் பட்டியல் , நீர்க் கட்டணப் பட்டியல் போன்ற அனைத்துவிதமான செலவுகளும் அதிகரிக்கப்பட உள்ளன.

 இந்த ஆபத்தினை நாங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். விளங்கிக்கொள்வதன் மூலமாக நிலைவமையைத் தோற்கடித்திட வேண்டும். எந்தவோர் அரசாங்கத்திற்கும் அழிவுமிக்கவகையில் தேசிய வளங்களை விற்றொழித்திட முடியும். இன்றளவிலும் அதற்காக செயற்பாட்டுத் திட்டமொ்னறை அமுலாக்கியுள்ளது.   நாணய நிதியம் முன்வைத்துள்ள மற்றுமொரு நிபந்தனையாக அமைவது மின்சாரம், எரிபொருள் போன்ற அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் சேவைகளின் கிரயத்தை உள்ளடக்கத்தக்கவகையில் விலைகள் நிர்ணயிக்கப்பட வேண்டுமென்பதாகும். ஆனால் இதன்மூலமாக  ஏதேனும் அழுத்தத்திற்கு இலக்காகின்ற குழுக்களுக்கு நிவாரணம் வழங்கவும் நாணய நிதியம் முன்மொழிந்துள்ளது. எனினும் கேஸ் விலை, எரிபொருள் மற்றும் மின்சார விலை என்பவற்றில்  அவற்றின் உண்மையான உற்பத்திக் கிரயத்திற்கு மேலதிகமாக மோசடிகள், ஊழல்களில் ஒரு பகுதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது. பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நட்டமடைகையில் ஐ.ஓ.சீ. கம்பெனி இவ்வருடத்தின் இரண்டாவது காலாண்டில் பத்து பில்லியன் ரூபா நிகர இலாபத்தை வெளிக்காட்டி இருப்பது இதனால்த்தான். மற்றுமொரு பக்கத்தில் மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மை மற்றும் நிதிசார் உறுதிநிலைக்காக இடமளித்திட வேண்டும். தொழில்வாண்மைரீதியான பணிகளை மேற்கொள்ள மத்திய வங்கிக்கு ஏற்புடைய சுயாதீனத்தன்மை வழங்கப்பட வேண்டும். ஒரே நோக்கத்தில்   இருந்துகொண்டு  அரசாங்கத்தின் வரிக்கொள்கையை நடைமுறைப்படுத்த அரசாங்கம் இடமளி்க்க வேண்டும்.  ஆனால் அதிகாரத்தை பாதுகாத்துக்கொள்ள அல்லது பெற்றுக்கொள்வதற்காக வரிக்கொள்கையைக் கூட்டிக்குறைத்து நிதிசார் கொள்கையை பலிகொடுக்கின்ற நிலைமையை நாங்கள் காண்கிறோம். இன்றைய நிலைமையின்படி மத்திய வங்கி அமுல்படுத்துகின்ற நிதிசார் தந்திரோபாயங்களுக்கு அரசாங்கம்  ஒத்துழைப்பு வழங்காத முரண்பாடு உருவாகக்கூடும். 

ஏற்கெனவே நாங்கள் நாணய நிதியத்திடமிருந்து பதினாறு தடவைகள் விரிவான நிதி வசதிகளைப் பெற்றுக்கொண்டு சென்மதி நிலுவையை சமப்படுத்தல் பற்றிய சிக்கல்களைத் தவிர்த்துக்கொண்டுள்ளோம். ஆனால் சிறியசிறிய திருத்தங்களை செய்தோமேயொழிய எமது நாடு முறையான பாதையில் அபிவிருத்தியை நோக்கிச் செல்லவில்லை.  இத்தடவை 290 கோடி டொலர் நான்கு வருடங்களுக்குள் கிடைக்கின்றது. பயணிக்கின்ற இந்த பயனப்பாதையின்பேரில் இந்த கடன் தொகையின் பேரில் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்கமுடியுமென்ற முட்டாள்த்தனமான கருத்திற்குச் செல்லலாகாது. இந்த கடனை வழங்குகின்ற போது மேலோட்டமாக புலப்படாத அறவிடல்கள் இருக்கின்றன. வட்டி குறைவானதென்பது உண்மை. எனினும் தற்கோது வாக்குறுதி அளித்துள்ள 290 கோடிக்காக அதற்கு குறைவான தொகையை அரசாங்கம் அவர்களின் நிபந்தனைகளை ஈடேற்றுவதின்பேரில் பெற்றுக்கொடுத்தால் மொத்த கடன்தொகைக்குமே வட்டி அறவிடப்படும். அதைப்போலவே மறைவான சேவைகள் கட்டணமும் நிலவுகின்றது. நாங்கள் முதலாவது கடன் தவணையைப் பெற்றுக்கொண்ட  1964 இல் இருந்து கவனத்திற்கொண்டால் 1984 தொடக்கம் இற்றைவரை ஏறக்குறைய 350 கோடி கடன் தொகையே  வழங்கப்பட்டுள்ளது.   ஆனால் நாங்கள் அந்த காலப்பகுதிக்குள் செலுத்தியுள்ள மற்றும் வருங்காலத்தில் செலுத்தவுள்ள சேவைகள் கட்டணத்தையும் வட்டியையும் கணிப்பிட்டால் நூறு கோடி டொலருக்கு கிட்டிய அளவினை செலுத்த நேரிட்டுள்ளது.  நாணய நிதியம் எமது நாட்டில் நிலவுகின்ற அரசியல் நிலைமையின்பேரில் ஊழலைக் குறைத்தல் சம்பந்தமாகவும் விடயங்களை சுட்டிக்காட்டி உள்ளது. கடன் நிலைபெறுதகு திட்டம் பற்றி இற்றைவரை அரசாங்கம் திட்டமொன்றை சமர்ப்பிக்காவிட்டாலும்  வெகுவிரைவில் திட்டமொன்றை சமர்ப்பிப்பதாக புலனாகவில்லை. இந்த நிலைமையின்கீழ் நெருக்கடியிலிருந்து  கரைசேர்வதைப் பார்க்கிலும் மென்மேலும் ஆழமாகி வருகின்றமை தெளிவாகின்றது. எதிர்காலத்தில் தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பேரவை நிலவுகின்ற நிலைமை பற்றி மக்களுக்கு விடயங்களை எடுத்துரைக்கும். அதனூடாக நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி பற்றி சிறந்த உரையாடலொன்றை உருவாக்கிகொள்ள நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.

வரியை அதிகரிக்கச் சென்றால் பொருளாதாரம் மென்மேலும் சுருங்கும்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வியாபார கற்கைகள் பிரிவின் தலைவர் பேராசிரியர் ஜகத் குமாரசிங்க

இலவசக் கல்வி மூலமாக இந்த இடத்திற்கு வந்த எமக்கு நாட்டு மக்களுடன் சம்பந்தப்பட்ட அன்றாட சிக்கல்களின்போது ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் ஏற்படுகின்ற சிக்கல்களுடன் தொடர்புபடுவதற்கான பொறுப்பு இருக்கின்றது. பொருளாதாரம் தொடர்பான ஆராய்ச்சிகளிலிருந்து பெறப்படுகின்ற தரவுகள், அறிவு, தகவல்கள் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக  செயலமர்வுகளை நடாத்துதல் மற்றும் இத்தகைய ஊடக சந்திப்புகளின்போது விழிப்புணர்வூட்டுவது  அத்தகைய பொறுப்பின் ஒரு பகுதியாகும். மக்களின் அன்றாடப் பொருளாதாரம் போன்றே நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம்  பற்றி தொடர்ச்சியாக மக்களுக்கு விழிப்புணர்வூட்ட இந்த பொருளாதாரப் பேரவை மூலமாக நாங்கள் எதி்ர்பார்க்கிறோம். ஒருசில தரவுகள் கூருணர்வு மிக்கவையாகும். பொருளாதாரத்தை நெறிப்படுத்துபவர்கள் எவராக இருந்தாலும் பொருளாதாரத்தை நெறிப்படுத்துவதன் மூலமாக கிடைக்கின்ற நேர்க்கணிய அல்லது எதிர்க்கணிய பெறுபேறுகளை இறுதியாக அனுபவிப்பவர்கள் இந்நாட்டு மக்களாவர். பொருளாதாரம் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்ற, கருத்துக்களை வெளியிடுகின்ற, செயலமர்வுகளை நடாத்துகின்ற அனைவரைரயும் இந்த மேடைக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறோம்.  அரசாங்கத்திற்குக்கூட அவசியமான சந்தர்ப்பங்களில் நாங்கள் தரவுகள், ஊகங்களை வழங்கி  நிலவுகின்ற நெருக்கடியிலிருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்க எம்மை அர்ப்பணித்துள்ளோம்.  

நாணய நிதியத்திடமிருந்து ஏதேனும் நிவாரணத்தை நாங்கள் எதிர்பார்த்திருப்பின்  ஈடேற்றவேண்டிய அடிப்படை நிபந்தனைகள் மத்தியில் முதனிலை கணக்கின் நேர்க்கணிய மீதியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகும். இந்த நிலைமையை எற்படுத்திக்கொள்ள வேண்டுமாயின் வருமானத்தை அதிகரித்துக்கொண்டு செலவினங்களை குறைத்துக்கொள்ள வேண்டிய விதம் பற்றி பேராசிரியர் அனில் ஜயந்த தெளிவுபடுத்தினார்.  எந்தவொரு நாட்டிலும் அரச வருமானத்தின் பிரதான தோற்றுவாய் நேர் மற்றும் மறைமுக வரியாகும். தற்போதும் எமது நாடு  பாரிய வரிச் சதவீதத்தைக்கொண்ட நாடாகும். சாதாரண ஆளொருவர் தனது  வருமானத்தில் ஏறக்குறைய 40% ஐ வரியாகச் செலுத்துகின்ற நிலைமையே காணப்படுகின்றது.  அரசாங்கத்தின் வரிகள் அதிகரிக்கப்பட முனைகின்றவேளையில் பொரளாதாரத்தின் ஏனைய பேரண்ட பொருளாதார விடயங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் பேரண்ட மாறிகள்  என அழைக்கப்படுகின்ற கடன் வட்டி வீதம், பணவீக்கம், அந்நிய செலாவணி விகிதம், தொழிலின்மை வீதம் போன்ற அனைத்துமே ஒன்றுடனொன்று தொடர்புபட்டவையாகும். இந்த ஒவ்வொரு மாறி மீதும் ஏற்படுத்தபடுத்தப்படுகின்ற  தாக்கம் அல்லது மாற்றம் எனைய பொருளாதார மாறிகள் மீது  கட்டாயமாக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.  வரியை அதிகரிக்க முயற்சி செய்தால் அது நாட்டின் ஒட்டுமொத்த மக்களின்  வாழ்க்கையை நேரடியாகவே பாதிக்கின்றது.   அதைப்போலவே வட்டி வீதத்தை அதிகரிப்பதன் மூலமாக பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யப்பட்டு வருகின்றது. அது மத்திய வங்கியால் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கையாக அமைந்தது. அதன் மூலமாக பொருளாதாரத்திற்கு அதிர்ச்சியொன்று ஏற்படுத்தப்படுகின்றது.

அதன் மூலமாக பொருளாதாரத்திற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அதிர்ச்சிகளால் ஏனைய மாறிகளுக்கு தாக்கங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.   பிரதானமான அதிர்ச்சி வணிகத் தொழில் முயற்சியாளர்களுக்கு ஏற்பட்டதாகும்.  வங்கிக்கடன் பெறுவதன் மூலமாகவே அவர்களின் மூலதனம் உருவாக்கப்படுகின்றது.   அதற்கான கிரயமொன்றை ஏற்க நேரிடும்.  அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடொன்றில் தொழில்முயற்சி  முதலீடுகளில்  இருந்து கிடைகின்ற நன்மைகளுக்குள்ளே அடங்கியுள்ள இலாபம்  மொத்தக் கிரயத்தில் 10% -15% இற்கு இடைப்பட்ட அளவிலாகும். ஆனால் இன்றளவில் வட்டி வீதம் 25% ஐ கடந்துவிட்டது. இந்த நிலைமையின்கீழ் வங்கிகளிடமிருந்து கடன்பெற்று  முதலீடு செய்து பெறப்படுகின்ற நன்மைகளின் இலாபம்  அவரது வங்கிக் கடனைச் செலுத்தக்கூட போதுமானதாக அமையமாட்டாது.  இதனால் தொழில் முயற்சிகள் அனைத்துமே உறுதியற்ற நிலைமைக்கு மாறியுள்ளது. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் மாத்திரமன்றி பாரிய  அளவிலான தொழில் முயற்சிகள்கூட நிலைதடுமாறி உள்ளன.  புதியதாக தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பது நலிவடையச் செய்யப்பட்டுள்ளது. இதனால் எமது பொருளாதாரம் சுருங்கி வருகின்றது.  உலக வங்கி இது சம்பந்தமாக   செய்துள்ள எதிர்வுகூறலின்படி எதிர்வரும் ஆண்டில் 10 பில்லியன் டொலர்களை விஞ்சிய அளவில் இலங்கைப் பொருளாதாரம் சுருங்கக்கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  2023 ஆம் ஆண்டில் எமது பொருளாதாரம் 2011 இல் நிலவிய நிலைமைக்கு சரிந்துவிழுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசாங்கம் வரிகளை அதிகரித்துக்கொள்ள முயற்சி செய்வதன் மூலமாக  பொருளாதாரம் சுருங்குகின்ற வேகம் மேன்மேலும் துரிதமடையும். இதனால் எப்படியாவது தாக்குப்பிடித்துள்ள தொழில்முயற்சிகளுக்குக்கூட அச்சுறுத்தல் தோன்றக்கூடும். நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஒன்றுடனொன்று தொடர்புபட்ட பேரண்டப் பொருளாதார விடங்களுக்கிணங்க தொழில்முயற்சியாளர்கள் பெற்றுள்ள கடன்களுக்கான வட்டியைச் செலுத்துவதிலான பிரச்சினைகூட தோன்றக்கூடும். 

நாணய நிதியம் கடன் மறுசீரமைப்பிற்குச் செல்லுமாறு ஆலோசனை வழங்கவும் தற்போது கடன்தவணை மற்றும் வட்டியை செலுத்தமுடியாத நிலைமைக்கு  சரிந்து விழவும் வாய்ப்பு உண்டு. அத்தகைய நிலைமையில் பொருளாதாரத்தைக் மீட்டெடுக்கின்ற மற்றும்  பொருளாதாரத்தை முன்நோக்கிக் தள்ளுகின்ற வங்கிகளை உள்ளிட்ட நிதிமுறைமை போன்றே அதனோடு சம்பந்தப்பட்ட ஏனைய நிறுவனங்களும் பாரிய அபாயநேர்வுக்கு பயணிக்கக்கூடும்.   அதனால் இச்சந்தர்ப்பத்தில் மிகவும்  கவனமாக அபாயநேர்வு முகாமைத்துவத்தை மேற்கொள்வதில் அரசாங்கம் கவனஞ் செலுத்துதல் வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் எமது ஒட்டுமொத்த நிதி முறைமையும் கடுமையான அபாயநேர்வுக்கு இலக்காகக்கூடும். அத்தகைய நிலைமையானது மீண்டும் சரிசெய்துகொள்ள முடியாத பாதகவிளைவுகளைக் கொண்டுவரும்.  பொருளாதாரமொன்றின் நிதியாக்க வழிவகைகள் இவ்விதமாக  அபாயநேர்வுக்கு இலக்காகி உள்ளதைப்போலவே  வலுச்சக்தி பிறப்பாக்கமும் பாரிய ஆபத்தினை எதிர்நோக்கி உள்ளது. வலுச்சக்தி நாட்டின் தொழில்முயற்சிகளுக்கும் மக்கள் வாழ்க்கைக்கும் அத்தியாவசியமானதாகும்.  இன்றளவில் வலுச்கக்தி   வழங்கல் பாரதூரமான நெருக்கடியைச் சந்தித்துள்ளது.  பொருளாதாரத்திற்குள் மேலும் பல பிரதான விடயங்கள் பற்றி பேசக்கூடியபோதிலும் நிதி முறைமை மற்றும் வலுச்சக்தி வழங்கல் ஆகிய இரண்டு அடிப்படை விடயங்களுக்குள் பொருளாதாரம் மென்மேலும் படுகுழிக்குள் விழுகின்றதென்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். அதற்கான சரியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டும். வலுச்சக்தி வழங்கலில் உறுதிநிலையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

கடன் பெறுவதில் பிரச்சினை கிடையாது. கடனை முதலீடுசெய்து பெற்றுக்கொண்ட நன்மைகள் யாவை, கடனை சரியாக முகாமைசெய்து  முதலீடு செய்தார்களா எனும் கேள்வி எழுகின்றது. கடனை முறைப்படி முதலீடு செய்திருப்பின்  கடன் மீளச்செலுத்துதல் பற்றிய பிரச்சினை தற்போது எழுந்திருக்கமாட்டாது. கடன்களிலிருந்து கிடைக்கின்ற நன்மைகள் பொருளாதாரத்தை நோக்கிப் பாய்ந்துவராமை அடிப்படை பிரச்சினையாகும். நிதி முறைமையின் பாதுகாப்பு சம்பந்தமாக அது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. அது சம்பந்தமாக மிகவும் கவனமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. வலுச்சக்தி வழங்கலிலும் அப்படித்தான். இந்த இரண்டு பிரதான விடயங்களையும் முறைப்படி நெறிப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் நாட்டில் நிலவுகின்ற மாறிகளை முறைப்படி முகாமை செய்யாவிட்டால்  எமது பொருளாதாரம் ஒரே இடத்தில் உக்கிப்போகின்றவேளையில் ஏனைய நாடுகளின் பொருளாதாரங்கள்  எம்மைக் கடந்து வேகமாக முன்நோக்கி நகரும்.  வியட்நாம்,  பங்களாதேஷ், இந்தியா என்பவை தக்க உதாரணங்களாகும்.  இந்த நிலைமையில் சந்தேகமின்றி எமது பொருளாதாரம் வீழ்ச்சியடைவதை நிறுத்திக்கொள்ளவேண்டும். அதன்போது நிதி முறைமைக்கும் வலுச்சக்தி வழங்கலுக்கும்  தனித்துவமான கவனத்தைச் செலுத்தவேண்டும்.

பொருளாதாரமொன்றின் பிரதாபன என்ஜின் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில் தொகுதியாகும். சுதேச உற்பத்திகளை சர்வதேசத்திற்கு கொண்டுசெல்லல், பெருந்தொகையான தொழில்வாய்ப்புகளை உருவாக்குதல் இந்த துறைகளிலேயே இடம்பெறுகின்றது. எனினும் நிதி முறைமையும் எரிபொருள் வழங்கலும் நலிவடைந்தால் எமது பொருளாதாரம் இதைவிட இருள்மயமான நிலைமையை அடையும். தற்போது உள்ள சமிக்ஞைகள் எவ்விதத்திலும் நலமானவை அல்ல. தொழிலின்மை வேகமாக அதிகரித்து வருகின்றது. இத்தகைய பொருளாதார நெருக்கடியின்போது ஏனைய உலக நாடுகள் முன்னுரிமை அளிக்கவேண்டிய வரிசைக்கிரமத்தை தயாரிக்கின்றன. இன்று எமது நாட்டில் பிரதானமானதாக அமைவது அரசியல் உறுதிநிலையை ஏற்படுத்துவதாகும்.  அரசியல் ஸ்திரத்தன்மை நிலவாத இடத்தில் பொருளாதார உறுதிநிலை தாக்குப்பிடிக்க மாட்டாது.  பொருளாதாரத்தை மீட்டெக்க  அரசியல் உறுதிநிலை மிகவும் விரைவாக ஏற்படுத்தப்படல் வேண்டும். பொருளாதாரம் முன்நோக்கி பயணிக்கையில் வலுச்சக்திக்கும் பொருளாதாரத்திற்கும் இடையில் நேரக்கணியத் தொடர்பு நிலவும். அதைப்போலவே மூலதனவாக்கத்தின் கிரயத்திற்கும் பொருளாதாரம் முன்நோக்கி நகர்வதற்கும் இடையில் தொடர்பு நிலவுகின்றது.  இந்த  மாறிகளுக்கிடையிலான தொடர்புகள் மீது தீவிர கவனஞ்செலுத்தி முதன்மைத்தானத்திற்கு அமைவாக  பொருளாதாரத்தை சரியான இடத்தைநோக்கி நகர்த்த வேண்டிய பொறுப்பு நிலவுகின்றது.  ஒரு நாடு என்றவகையில் நாங்கள் பொறுப்பினை ஏற்கத் தயார். அது சம்பந்தமாக தொடர்ச்சியாக விழிப்புணர்வூட்டுதலை மக்கள் மத்தியில் மேற்கொள்வதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். 

இந்த ஊடக சந்திப்பிற்காக இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகத்தின் முன்னாள் முதநிலை ஆலோசகரும் இங்கிலாந்து றெடிங் பல்கலைக் கழகத்தின் முதுநிலை விரிவுரையாளருமான சாந்த ஜயரத்ன மற்றும்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  சுனில் ஹந்துன்னெத்தியும் பங்கேற்றனர். முதுநிலை விரிவுரையாளர் சாந்த ஜயரத்ன ஆங்கில மொழியில் விடயங்களை எடுத்துரைத்தார். 

Show More