(-Colombo, December 16, 2024-) இலங்கையில் முதலீடுகள் தொடர்பில் கவனம் செலுத்த விருப்பம் தெரிவிப்பு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (16) பிற்பகல் புதுடில்லியில் இந்திய முன்னணி வர்த்தகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்திய கைத்தொழில் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கலந்துரையாடலில் இந்தியாவின் முன்னணி தொழில் முனைவோர் கலந்து கொண்டனர். இலங்கையில் முதலீடு செய்வதற்கான சாதகமான சூழல் குறித்து விளக்கமளித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கையில் […]
(-Colombo, December 16, 2024-)
இலங்கையில் முதலீடுகள் தொடர்பில் கவனம் செலுத்த விருப்பம் தெரிவிப்பு
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (16) பிற்பகல் புதுடில்லியில் இந்திய முன்னணி வர்த்தகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இந்திய கைத்தொழில் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கலந்துரையாடலில் இந்தியாவின் முன்னணி தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.
இலங்கையில் முதலீடு செய்வதற்கான சாதகமான சூழல் குறித்து விளக்கமளித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கையில் முதலீடு செய்யுமாறு இந்திய தொழில் முனைவோரிடம் கோரிக்கை விடுத்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடு மற்றும் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இதன்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகளின் அடிப்படையில் இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளை விஸ்தரிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.
இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்த இந்திய முன்னணி வர்த்தகப் பிரதிநிதிகள் விருப்பம் தெரிவித்ததுடன், அதற்குத் தேவையான முதலீட்டு வசதிகளை வழங்க இலங்கை அரசாங்கம் உடன்பாடு தெரிவித்தது.
தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோவும் இந்த சந்திப்பில் கருத்துத் தெரிவித்தார்.
(-Colombo, December 16, 2024-) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இந்திய உப ஜனாதிபதி ஜக்தீப் தன்கருக்கும் இடையிலான சந்திப்பு இன்று (16) பிற்பகல் நடைபெற்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் கிடைத்த பெரு வெற்றிக்கு ஜனாதிபதி அநுர குமார திசானாயக்கவிற்கு இந்திய உப ஜனாதிபதி வாழ்த்துக்களை தெரிவித்தார். பொருளாதார ஒத்துழைப்பு, விவசாயம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் போன்ற விடயங்கள் குறித்து இதன் போது ஆராயப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்திய சுகாதார அமைச்சரும் பாரதீய ஜனதா […]
(-Colombo, December 16, 2024-)
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இந்திய உப ஜனாதிபதி ஜக்தீப் தன்கருக்கும் இடையிலான சந்திப்பு இன்று (16) பிற்பகல் நடைபெற்றது.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் கிடைத்த பெரு வெற்றிக்கு ஜனாதிபதி அநுர குமார திசானாயக்கவிற்கு இந்திய உப ஜனாதிபதி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பொருளாதார ஒத்துழைப்பு, விவசாயம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் போன்ற விடயங்கள் குறித்து இதன் போது ஆராயப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இந்திய சுகாதார அமைச்சரும் பாரதீய ஜனதா கட்சியின் தலைவருமான ஜகத் பிரகாஷ் நட்டாவிற்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது.
(-Colombo, December 16, 2024-) மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, மாண்புமிகு அமைச்சர்களே, கனவான்களே, கனவாட்டிகளே, ஊடகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நண்பர்களே! ஆயுபோவன்,வணக்கம், நமஸ்தே! இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் எனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக புதுடெல்லிக்கு வருகைதருவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு விடுக்கப்பட்ட அழைப்பிற்காகவும், அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கும் மேதகு ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களுக்கும், மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரு நாடுகளுக்கும் இடையே ஆழமாக […]
(-Colombo, December 16, 2024-)
மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களே,
மாண்புமிகு அமைச்சர்களே,
ஊடகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நண்பர்களே!
ஆயுபோவன்,வணக்கம், நமஸ்தே!
இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் எனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக புதுடெல்லிக்கு வருகைதருவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
எனக்கு விடுக்கப்பட்ட அழைப்பிற்காகவும், அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கும் மேதகு ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களுக்கும், மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரு நாடுகளுக்கும் இடையே ஆழமாக வேரூன்றிய நாகரீக உறவுகளையும் வலுவான இருதரப்பு ஒத்துழைப்பையும் மேம்படுத்த இந்த விஜயம் உதவியது.
ஜனநாயக ரீதியில் நிறுவப்பட்ட தேர்தல் முறைகள் மூலம் இரு நாட்டு மக்களும் தங்கள் கருத்துக்களை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர்.இந்தப் பின்னணி மற்றும் நிலையான அபிவிருத்தி, சமூக வலுவூட்டல் மற்றும் பௌதீக பாதையின் ஊடாக இருநாடுகளையும் வழிநடத்துவதற்கு மக்கள் வழங்கியுள்ள ஆணை என்பன இரு நாடுகளின் அரசியல் சூழலின் முக்கிய மைல்கல்லாக உள்ளது. இந்த நிலையிலே எனது இந்த விஜயம் அமைந்துள்ளது.
ஒரே மக்கள் ஆணையின் கீழ் இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றமாக இலங்கைப் பாராளுமன்றம் தற்போது மாறியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனது தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு இலங்கை மக்களால் கிடைத்த இந்த மகத்தான ஆதரவு இலங்கை வரலாற்றில் ஒருபோதுமில்லாத வரலாற்றுத் தருணமாகும். இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் ஒருபோதுமில்லாதவாறு வெளிப்படுத்தப்பட்ட மக்கள் ஆணை, எமது நாட்டில் புதிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்பக்கூடிய அரசியல் மாற்றத்திற்கான விதைகளை விதைத்துள்ளது. வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய திசைகளில் அமைந்துள்ள அனைத்து மாகாணங்களிலும் உள்ள பல்வேறு சமூகங்கள் மற்றும் பல்வேறு தரப்பு மக்களும் இந்த மக்கள் ஆணைக்கு பங்களித்தனர்.
எனது மக்களால் இத்தகைய முக்கியமான பொறுப்பை ஒப்படைத்த ஒரு தலைவர் என்ற வகையில், ஜனநாயகத்தின் நோக்கம் பல்வேறு அரசியல் கருத்துக்கள் மற்றும் குழுக்களின் சகவாழ்வில் உள்ளது என்பதை நான் தெளிவாக புரிந்துகொள்கிறேன்.
தர்ம போதனைகளைப் பகிர்ந்துகொள்வது முதல் எமது அபிவிருத்தி முன்னேற்றத்தின் ஒரு அங்கமாக இருப்பது வரை இந்தியா எப்போதுமே இலங்கையின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியின் ஒரு கட்டாய அங்கமாக இருந்து வருகிறது.
எனது இன்றைய இந்தியப் பயணம், நீண்டகாலம் தொட்டு நாம் அனுபவித்து வரும் இந்த நெருங்கிய நட்புறவின் வெளிப்பாடாகும்.
சிறிது நேரத்திற்கு முன்பு, பிரதமர் மோடியும் நானும் எங்கள் பிரதிநிதிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையை நிறைவு செய்தோம். எங்கள் உறவுகளின் தற்போதைய நிலை குறித்து விரிவாக மீளாய்வு செய்தோம். அத்தோடு எதிர்காலத்தில் அந்நியோன்ய ஆர்வம் செலுத்தும் துறைகளில் எமது ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் பற்றிய கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டோம்.
குறிப்பாக 2022ல் நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் போது மற்றும் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையின் போது இலங்கைக்கு வழங்கப்பட்ட வலுவான ஆதரவிற்காக பிரதமர் மோடி மற்றும் இந்திய அரசாங்கத்திற்கு நான் நன்றி தெரிவித்தேன்.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக் கட்டமைப்பில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விசேட இடத்திற்கு இணங்க, இலங்கையின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா முழு அர்ப்பணிப்புடன் இருப்பதாக பிரதமர் மோடி உறுதியளித்தார்.
இரு நாட்டு பாராளுமன்றங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு மட்டத்திலான அரசியல் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை பிரதமர் மோடியும் நானும் அடையாளங் கண்டுள்ளோம்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு மற்றும் முக்கிய துறைகளில் முதலீடுகள் குறித்தும் நாம் ஆராய்ந்தோம்.
பாதுகாப்பு , மின்சக்தி மற்றும் வலுசக்தி, பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி, கல்வி, விவசாயம் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு பற்றிய கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டோம்.
நிர்வாகம், சேவை வழங்கல் மற்றும் சமூக நலத் துறைகளை டிஜிட்டல் மயமாக்குவதில் இந்தியா அடைந்துள்ள வெற்றியைப் பாராட்டுகிறேன். இதேபோன்ற பொதுவான டிஜிட்டல் உள்கட்டமைப்பை இலங்கையில் ஏற்படுத்துவதற்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று பிரதமர் மோடி
என்னிடம் உறுதியளித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார உறவுகள் நமது உறவுக்கு வலுவான அடித்தளத்தை வழங்குகின்றன. நபர்களுக்கு இடையிலான வலுவான தொடர்புகளுக்காக இந்த பிணைப்புகளை மேலும் மேம்படுத்தும் நோக்கத்துடன், சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பைப் பற்றி நாம் ஆராய்ந்தோம்.
பிராந்திய மற்றும் பலதரப்பு சூழல்களில், உலகளாவிய தெற்கில் ஒரு முன்னணி நாடாக இந்தியாவின் பங்கை நான் பாராட்டினேன். அயோரா அமைப்பின் தலைவர் பதவி இலங்கைக்குக் கிடைப்பதற்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். பிரிக்ஸ் அமைப்பில் அங்கத்துவம் பெறுவதற்கான இலங்கையின் லட்சியத்திற்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவை நான் அவரிடம் கோரினேன்.
விசேட பொருளாதார வலயத்திற்கு அப்பால் கண்ட மட்டத்திலான எல்லைகளுக்கு அப்பால் எல்லைகளை ஸ்தாபிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் கண்ட எல்லை தொடர்பான ஆணைக்குழுவிற்கு இலங்கை முன்வைத்த கோரிக்கை தொடர்பாக இருதரப்பு தொழில்நுட்ப கலந்துரையாடல்களை மிக விரைவில் கூட்டுவதற்கு பிரதமர் மோடியின் தலையீட்டை நான் கோரினேன்.
அண்மையில் நடைபெற்ற மீன்பிடி தொடர்பான ஆறாவது கூட்டுச் செயற்குழுக் கூட்டத்திற்கு பாராட்டு தெரிவிக்கும் அதேவேளையில், மீன்பிடி பிரச்சினைக்கு நிலையான தீர்வு காண்பதில் கூட்டு அணுகுமுறையின் அவசியத்தையும் நாங்கள் ஆராய்ந்தோம். இரு நாடுகளிலும் தடைசெய்யப்பட்ட முறையில் மீன்பிடிப்பதினால் ஏற்படும் சீர்செய்ய முடியாத சுற்றுச்சூழல் பாதிப்பை உணர்ந்து, அந்த நடைமுறையை நிறுத்தவும், சட்டவிரோதமான, அறிக்கையிடப்படாத மற்றும் கண்காணிக்கப்படாத மீன்பிடித்தலை நிறுத்தவும் நடவடிக்கை எடுக்குமாறு நான் கோரிக்கை விடுத்தேன்.
பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு மற்றும் இரட்டை வரி விதிப்பைத் தவிர்ப்பது ஆகிய துறைகளில் இன்று கையெழுத்திடப்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்கள் தொடர்பில் மகிழ்ச்சியடைகிறேன்.
பரஸ்பர ரீதியில் வசதியான தினமொன்றில் இலங்கைக்கு வருகை தருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தேன்.
இந்தியாவின் பாதுகாப்புக்கும் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கும் பாதகமான எந்தவொரு வகையிலும் இலங்கை மண்ணை பயன்படுத்த அனுமதிக்காது என இந்தியப் பிரதமரிடம் உறுதியளித்தேன்.
எதிர்வரும் சில வருடங்களில் இந்தியாவுடனான உறவு மேலும் பலமடையும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது. இந்தியாவுடனான ஒத்துழைப்பை தொடர்ந்து முன்னேற்றி
விரிவாக்கத்திற்கு இலங்கை மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை மீண்டும் வலியுறுத்தி எனது உரையை நிறைவு செய்கிறேன்.
நன்றி
(-Colombo, December 16, 2024-) இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு இந்தியப் பிரதமருக்கு அழைப்பு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (16) பிற்பகல் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான ஹைதராபாத் மாளிகையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, இரட்டை வரி விதிப்பைத் தடுப்பது மற்றும் அரசு அதிகாரிகளின் திறன் மேம்பாடு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்திய-இலங்கை தலைவர்கள் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன. இந்தியாவின் வெளிவிவகாரக் […]
(-Colombo, December 16, 2024-)
இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு இந்தியப் பிரதமருக்கு அழைப்பு
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (16) பிற்பகல் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான ஹைதராபாத் மாளிகையில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, இரட்டை வரி விதிப்பைத் தடுப்பது மற்றும் அரசு அதிகாரிகளின் திறன் மேம்பாடு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்திய-இலங்கை தலைவர்கள் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன.
இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையில் இலங்கைக்கு விசேடமான இடமுள்ளது என்பதை தாம் நன்கு அறிவதாக கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நினைவு கூர்ந்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்திற்காக இந்தியாவை தெரிவு செய்தமை தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இதன்போது தெரிவித்தார்.
எதிர்கால நோக்குடன் இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை புதிய கோணத்தில் கொண்டு செல்லும் வகையில் பௌதீக, டிஜிட்டல் மற்றும் எரிசக்தி ஆகிய பிரதான தூண்களை பலப்படுத்துவதற்காக இலங்கைக்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதும், இரு நாடுகளுக்குமிடையே மின்சார வலையமைப்பு இணைப்பு மற்றும் பல் உற்பத்தி, பெற்றோலியக் குழாய் இணைப்பை ஏற்படுத்துவது என்பன குறித்தும் இக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
இந்திய அபிவிருத்தி ஒத்துழைப்பை தொடர்ந்து முன்னெடுக்கும் வகையில், அநுராதபுரம் புகையிரத பாதை சமிக்ஞைக் கட்டமைப்பு மற்றும் காங்கேசன்துறை துறைமுக புனரமைப்பு என்பவற்றுக்கு உதவி வழங்குவது தொடர்பிலும் இதன் போது நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்தியக் கல்வி ஒத்துழைப்பின் கீழ் அடுத்த வருடம் முதல் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாண பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 200 மாணவர்களுக்கு மாதாந்த புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. அடுத்த ஐந்து வருடங்களில் 1500 இலங்கை அரச ஊழியர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்க இந்தியப் பிரதமர் உடன்பாடு தெரிவித்தார்.
அத்தோடு வீடமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு ,இலங்கையில் விவசாயத்துறை, பால் உற்பத்தித்துறை மற்றும் கடற்றொழில்துறை முன்னேற்றம் என்பவற்றுக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கும்.
இந்தியாவின் பாதுகாப்புக்கும் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இலங்கை மண்ணை பயன்படுத்த ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இங்கு தெரிவிதார்.
பாதுகாப்பு ஒத்துழைப்பின் (Colombo Security Conclave)கீழ் கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாத ஒழிப்பு , இணையப் பாதுகாப்பு, கடத்தல் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றங்களுக்கு எதிராக போராடுதல், மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணம் போன்ற விடயங்களில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி பகல்போசன விருந்து வழங்கினார்.
இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்தார்.
(-Colombo, December 15, 2024-) இலங்கையில் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த இந்தியாவின் மிகப்பெரிய சந்தையை பயன்படுத்திக்கொள்வது குறித்து கவனம் இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தங்கியிருக்கும் புதுடில்லி ITC MAURYA ஹோட்டலுக்கு வருகைத் தந்த இந்திய நிதி மற்றும் நிறுவன அலுவல்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், (Dr.S.jayashankar) மற்றும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினர். இந்தியா […]
(-Colombo, December 15, 2024-)
இலங்கையில் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த இந்தியாவின் மிகப்பெரிய சந்தையை பயன்படுத்திக்கொள்வது குறித்து கவனம்
இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தங்கியிருக்கும் புதுடில்லி ITC MAURYA ஹோட்டலுக்கு வருகைத் தந்த இந்திய நிதி மற்றும் நிறுவன அலுவல்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், (Dr.S.jayashankar) மற்றும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினர்.
இந்தியா – இலங்கை பொருளாதார ஒத்துழைப்புக்களை பலப்படுத்திக்கொள்ளல் மற்றும் இருநாடுகளுக்கும் இடையிலான முதலீட்டு வாய்ப்புக்களை விரிவுபடுத்திக்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் இந்திய நிதி, நிறுவன அலுவல்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அதேநேரம் இந்திய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அதிகளவில் அழைத்து வருவது மற்றும் இலங்கையின் விவசாய நவீனமயமாக்கல், டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
ஜனாதிபதி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு சிநேகபூர்வமாக இடம்பெற்றதோடு, இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு இந்தியாவின் மிகப்பெரிய சந்தையை பயன்படுத்திக்கொள்வது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், இந்நாட்டின் சுற்றுலா, முதலீடு மற்றும் வலுசக்தி துறைகளில் ஒத்துழைப்பு வழங்குவற்கும் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இதன்போது இணக்கம் தெரிவித்தார்.
மீன்பிடித்துறை மற்றும் தேசிய ஒற்றுமை மேம்பாடு உள்ளிட்ட இருநாடுகளுக்கும் அன்னியோன்யமான விடயங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
அதனையடுத்து இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் (Shri Ajith Doval) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து வலயத்தின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடினார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்டோரும் இதன்போது கலந்துகொண்டனர்
(-Colombo, December 15, 2024-) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (15) பிற்பகல் 5.30 மணியளவில் புதுடில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தை சென்றடைந்தார். இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கலாநிதி எஸ்.முருகன் (Dr S.Murugan) , இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, (Santosh Jha), இந்து சமுத்திர வலயத்தின் மேலதிகச் செயலாளர் புனித் அகர்வால் (Puneet Agrawal), இந்திய உபசரணைப் பிரதானி அன்ஷுமன் கவூர் (Anshuman Gaur) உள்ளிட்ட இராஜதந்திரிகள் ஜனாதிபதிக்கு விமான நிலையத்தில் சிறப்பு வரவேற்பளித்தனர். […]
(-Colombo, December 15, 2024-)
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (15) பிற்பகல் 5.30 மணியளவில் புதுடில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தை சென்றடைந்தார்.
இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கலாநிதி எஸ்.முருகன் (Dr S.Murugan) , இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, (Santosh Jha), இந்து சமுத்திர வலயத்தின் மேலதிகச் செயலாளர் புனித் அகர்வால் (Puneet Agrawal), இந்திய உபசரணைப் பிரதானி அன்ஷுமன் கவூர் (Anshuman Gaur) உள்ளிட்ட இராஜதந்திரிகள் ஜனாதிபதிக்கு விமான நிலையத்தில் சிறப்பு வரவேற்பளித்தனர்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் விஜயம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் சிறப்பாக பிரசாரம் செய்திருந்ததுடன், புதுடில்லி நகரின் பிரதான சுற்றுவட்டாரத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் (Dr. S. Jayashankar), இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் (Shri Ajith Doval) உள்ளிட்டவர்களை இன்று (15) இரவு சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்டோரும் இந்த சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டுள்ளனர்.