Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

NPP News

“சிங்கள, தமிழ், முஸ்லிம் நாம் அனைவரும் ஒற்றுமையாக அரசாங்கமொன்றை அமைத்திடுவோம்.” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க-

(-“மறுமலர்ச்சிக்காக முழுநாடுமே ஒன்றாக”தேசிய மக்கள் சக்தியின் பேருவளை மக்கள் சந்திப்பு – 2024-07-15-) நீங்கள் இதுவரை வாக்குகளை அளித்ததும் அரசாங்கங்களை அமைத்துக்கொண்டதும் சாதகமான நோக்கத்துடனேயே. அச்சமும் சந்தேகமுமின்றி வாழக்கூடிய சாதகமான ஒரு நாட்டை எதிர்பார்த்தே. ஆனால் மக்களின் சாதகமான நோக்கங்கள் இருந்தாலும் அமைத்துக்கொண்டதோ பாதகமான அரசாங்கங்களையே. சட்டத்தை மீறுகின்ற, பொது ஆதனங்களை திருடுகின்ற, விரயம் செய்கின்ற, பொதுச்சொத்துக்களை விற்கின்ற, நாட்டை அபகீர்த்திக்குள்ளாகிய, கடனைச் செலுத்த முடியாத ஒரு நாடு, கல்வி சுகாதாரம் என்பவற்றை சீரழித்த அரசாங்கங்களையே அமைத்துக்கொண்டோம். […]

(-“மறுமலர்ச்சிக்காக முழுநாடுமே ஒன்றாக”தேசிய மக்கள் சக்தியின் பேருவளை மக்கள் சந்திப்பு – 2024-07-15-)

Beruwal-Public-Rally

நீங்கள் இதுவரை வாக்குகளை அளித்ததும் அரசாங்கங்களை அமைத்துக்கொண்டதும் சாதகமான நோக்கத்துடனேயே. அச்சமும் சந்தேகமுமின்றி வாழக்கூடிய சாதகமான ஒரு நாட்டை எதிர்பார்த்தே. ஆனால் மக்களின் சாதகமான நோக்கங்கள் இருந்தாலும் அமைத்துக்கொண்டதோ பாதகமான அரசாங்கங்களையே. சட்டத்தை மீறுகின்ற, பொது ஆதனங்களை திருடுகின்ற, விரயம் செய்கின்ற, பொதுச்சொத்துக்களை விற்கின்ற, நாட்டை அபகீர்த்திக்குள்ளாகிய, கடனைச் செலுத்த முடியாத ஒரு நாடு, கல்வி சுகாதாரம் என்பவற்றை சீரழித்த அரசாங்கங்களையே அமைத்துக்கொண்டோம். வாக்களித்து நியமித்துக்கொண்ட அரசாங்கங்கள் பற்றி எவராலும் மகிழ்ச்சியடைய முடியுமா?

உங்களுக்கு ஞாபகமிருக்கும் மைத்திரி – ரணில் அரசாங்கம் பற்றி. அந்த நாலரை வருடகாலத்தில் எமது நாடு 12.5 பில்லியன் டொலர்களை கடனாக பெற்றது. எமது நாடு மிகவும் அதிகமாக கடனை பெற்று கடன் பொறியில் சிக்க வைத்தது. மைத்திரி – ரணில் ஆட்சிக்காலத்திலாகும். இன்று நாங்கள் செலுத்த வேண்டியுள்ள அனைத்து விதமான சர்வதேச இறையாண்மை முறிகள் கடன் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் பெற்றவையாகும். ரணில் – மைத்திரி அரசாங்கத்தை அமைத்துக் கொண்டு 50 நாட்கள் கழிகையில் மத்திய வங்கிக்கு ஆப்பு வைத்தார்கள். அதற்கு சில மாதங்களுக்கு பின்னர் அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்றார்கள். படிப்படியாக இனவாதம் வளர்ச்சியடைந்தது. ரணில் விக்கிரமசிங்க அதனை வளர்ச்சியடைய இடமளித்தார். மலட்டு உடைகள் மலட்டுக் கொத்து ரொட்டி, மலட்டு மருத்துவர்கள் பற்றி பேசுகின்றபோது அந்த கருத்தியல்களுக்கு எதிராக ரணிலுடைய அரசாங்கம் எடுத்த தீர்மானங்கள் என்ன? சஜித் பிரேமதாச அதற்கு எதிராக பேசினாரா? நாட்டின் பாதுகாப்பினை அடிமட்டத்திற்கே வீழ்த்தினார்கள். பாரியளவில் தகவல்கள் கிடைத்திருக்கையில், தாக்குவதாக, தாக்குவது யார், தாக்குவது எப்போது, எந்த இடத்தில், நேரம் அவை அனைத்தும் பற்றிய தகவல்கள் இருக்கையில் நாட்டை பாதுகாத்தார்களா? தாக்குதல் இடம்பெற இடமளித்து இனவாத முரண்பாடொன்றை உருவாக்கினார்கள். சிந்தித்துப் பாருங்கள் ஆட்சியாளர்கள் உங்கள் எதிர்பார்ப்புக்களை ஈடேற்றினார்களா? பலர் 2019 இல் கோட்டாபயவை கொண்டு வர பெரும் எண்ணிக்கையிலான புள்ளடிகளை இட்டார்கள். எனினும் அவர் பொருளாதாரத்தை சிதைத்து வீழ்த்தினார் .கூட்டாளிகளுக்கு சீனி வரி மோசடியை மேற்கொள்ள இடமளித்தார். அரசாங்கம் 1500 கோடியை இழந்தது. தேங்காய் எண்ணெய் வரி மோசடியால் 350 கோடியை அரசாங்கம் இழந்தது. உரத்தை நிறுத்தினார்கள். கமநிலங்கள் தரிசு நிலங்களாக மாறின. முழு குடும்பமுமே அமைச்சர் பதவிகளை வகித்தது. நாட்டின் ஒட்டுமொத்த அதிகாரமும் ஒரு குடும்பத்தின் கையில் குவிந்தது.

Beruwal-Public-Rally

எங்களுடைய பொருளாதாரம் சீரழியத் தொடங்கியது. உலகத்திற்கே ஆப்பு வைத்த நாடாக மாறியது. இந்த நாட்டை இந்தளவு அழிவுக்கு கொண்டு வந்து தமது பிள்ளைகளின் எதிர்காலம் நாசமாக்கப்பட்டுள்ள வேளையில் தொடர்ந்தும் பழைய தோல்வி கண்ட கட்சிகள் மீது ஏன் நம்பிக்கை வைக்கிறீர்கள்? அவை இரண்டு கட்சிகள் அல்ல. ஒரே கும்பல்தான். அவர்களின் அரசியல் மேடையை பாருங்கள். ரணிலின் மேடையில் மொட்டுத் தலைவர்கள் இருக்கிறார்கள். மொட்டின் மேடையில் யு.என்.பி. தலைவர்கள் இருக்கிறார்கள். சஜித்தின் மேடையில் மொட்டுத்தலைவர்கள் இருக்கிறார்கள். எங்கே இவர்களை ஒவ்வொரு கட்சியையும் சோ்ந்தவர்களென இனங்காண்பது? அவர்கள் இரண்டு கட்சிகளை சோ்ந்தவர்கள் அல்ல. இது ஓர் அரசியல் திரிபு நிலையாகும். பெரும்பாலானவர்கள் ஐ.ம.ச. மொட்டுக்கு ஏறுவதற்கு முன்னர் எம்மைச் சுற்றி வந்தார்கள். “இந்த நாட்டை நாசமாக்குவதில் பங்களித்த, கடந்த காலத்தில் அரசாங்கங்களில் அமைச்சர் பதவிகளை வகித்த, ராஜபக்ஷாக்களுக்கு வாழ்த்துப்பாடிய எவரையும் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்திற்கு எடுக்கமாட்டோம்” என நாங்கள் கூறினோம். அங்குமிங்கும் தாவுகின்ற அரசியலை நிறுத்த வேண்டாமா? இவர்கள் அங்குமிங்கும் தாவுவது நாடு மீது கொண்டுள்ள நேசம் காரணமாகவா? தெளிவான வேலைத்திட்டமொன்றை கொண்டுள்ள ஒரே கட்சி தேசிய மக்கள் சக்தி மாத்திரமாகும். இன்று எங்களுக்கு தேவை ஒரு கொள்கைப்பிடிப்புள்ள அரசியலாகும்.

இவர்கள் அங்குமிங்கும் தாவினார்கள். அமைச்சுப் பதவிகளை பகிர்ந்து கொண்டார்கள். நாட்டுக்கு என்ன நோ்ந்தது? எங்களுடைய பிள்ளைகள் பாடசாலைக்கு செல்ல பைசிக்கிள் ஒன்றை வாங்குவது எப்படி என சிந்திக்கிறார்கள். ரோஹிதவின் பிள்ளைகள் திருமணத்திற்காக ஹெலிகொப்டரில் போகிறார்கள். எமது பிள்ளைகள் சிறிய கார் ஒன்றை வாங்குவது பற்றி சிந்திக்கிறார்கள். ஜனாதிபதியின் பிள்ளைகள் அண்டவெளிக்கு ரொக்கற் ஒன்றை எப்படி அனுப்புவதென சிந்திக்கிறார்கள். பிரஜையொருவர் வைத்தியசாலைக்குச் சென்றால் மருத்து வாங்குவது எப்படியென சிந்திக்கிறார். அவர்கள் சிங்கப்பூருக்கு போய் மருந்து வாங்குகிறார்கள். பிரஜையொருவர் தனது பாஸ்போர்ட்டுக்கு வீசா அடித்துக்கொள்ள சிந்திக்கையில் அவர்கள் அமெரிக்காவில், அவுஸ்ரேலியாவில் பாஸ்போர்ட்டுக்கு உரியவர்களாவர். அவர்கள் தம்மை கட்டி வளர்த்துக் கொண்டார்கள். எம்மவர்கள் அடிமட்டத்திற்கே வீழ்ந்தார்கள். அதனால் நாங்கள் ஒரு தடவை நியாயமான, நோ்மையான, சாதகமான அரசாங்கமொன்றை அமைத்திடுவோம். அதற்காக எதிர்வரும் ஜனாதிபதி தோ்தலில் தீர்மானமொன்றை எடுப்போம். எங்கள் பிள்ளைகளை நேசிப்போமேயானால் நாட்டை நேசிப்போமேயானால் இந்த தீர்மானத்தை எடுக்கவேண்டும்.

Beruwal-Public-Rally

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்களே. இன்று எல்லோரும் சட்டத்தின் முன் சமமானவர்களா? அப்படியானால் ரோஹித அபேகுணவர்த்தன, பிரசன்ன ரணதுங்க போன்றவர்கள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்ய முடியாது.

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்றின்கீழ் சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்களே. தற்போது எல்லோரமே சட்டத்தின் முன் சமமானவர்களா? அப்படியானல் ரோஹித அபேகுணவர்தன, பிரசன்ன ரணதுங்க போன்றவர்கள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்ய முடியாது. சட்டத்தின் முன் அனைவரும் சமமென்றால் ரணில் விக்கிரமசிங்க சனாதிபதியாக பதவிவகிக்க முடியாது. பிரஜாவுரிமையின்றி 04 வருடங்கள் பாராளுமன்றத்தில் இருந்து அமைச்சுப் பதவிகளை வகித்து டயனா வெளியில் இருக்க முடியாது, எமது நாட்டில் வறியவர்களுக்கும் பலவீனமானவர்‌களுக்கு பிறிதொரு சட்டம். நாங்கள் இந்த நாட்டில் பணம் – பலம் என்ற பேதமின்றி, ஏழை – பணக்காரன் என்ற பேதமின்றி அனைவரும் சட்டத்தின்முன் சமமாக மதிக்கப்படுகின்ற ஒரு நாட்டை உருவாக்குவோம். அதைப்போலவே குற்றச்செயல்கள், போதைப்பொருள், பாதாள உலக மோதல்கள் தற்போது இந்த நாட்டில் அதிகரித்துவிட்டது. இவையனைத்திற்குமே அரசியல் பாதுகாப்பு கிடைக்கின்றது, தற்போது போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும் போதைப்பொருளுக்கு பஞ்சமில்லை. இந்த நாட்டை குற்றச்செயல்களற்ற போதைப்போருட்களற்ற இராச்சியமாக மாற்றவேண்டுமாயின் அந்த வேலையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மேற்கொள்ளும்.

எமது நாட்டை பொருளாதாரரீதியில் மீட்டெடுக்கவேண்டும். அதற்காக அரசாங்கம் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான வசதிகளை வழங்கவேண்டும். நீங்கள் உங்களின் தொழில்முயற்சிகளை முன்னேற்றிக்கொள்ள வேண்டும். அரசாங்கம் செல்வத்தை ஈட்டுவதில்லை. செல்வத்தை ஈட்டுபவர்கள் தொழில்முயற்சியாளர்களே, கைத்தொழிலதிபர்களே. அவர்கள் ஈட்டுகின்ற செல்வத்திலிருந்து அரசாங்கம் ஒருதொகையை எடுத்துக்கொள்கிறது. தொழில்முயற்சிகளுக்கு நாங்கள் சிறந்த சுற்றுச்சூழலை அமைத்துக்கொடுப்போம். முதலில் நாங்கள் பலம்பொருந்திய அரசாங்க சேவையொன்றினை உருவாக்குவோம். எந்தவொரு பிரஜையும் அரசாங்க நிறுவனமொன்றுக்குச் சென்று தமது அலுவல்களை முறைப்படி செய்துகொள்வதற்கான வசதிகளை நாங்கள் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். இந்த ஆட்சியாளர்கள் பலம்பொருந்தியதாக இருந்த எங்கள் அரசசேவையை சீரழித்தார்கள். அரசியலில் இருந்து மீட்டெடுத்த, டிஜிட்டல்மயப்படுத்திய, ஆற்றல்களாலும் திறமைகளாலும் முன்நோக்கி நகரக்கூடிய பலம்பொருந்திய அரச சேவையை நாங்கள் உருவாக்கிடுவோம். அது தொழில்முயற்சி வளர்ச்சிக்கு அவசியமானதாகும். தொழில்முயற்சியாளர்களுக்குத் தேவையான டார்கட்டை அரசாங்கம் அமைத்துக்கொடுக்க வேண்டும். இரத்தினக்கல் கைத்தொழிலுக்கு, சுற்றுலாக் கைத்தொழிலுக்கு அவசியமான டார்கட்டை நாங்கள் அமைத்துக் கொடுப்போம். சுற்றுலாக் கைத்தொழிலை விருத்தி செய்வதற்கு அவசியமான திட்டங்களை நாங்கள் வகுத்துக் கொண்டிருக்கிறோம். தொழில்முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். இலக்குகளை காட்டுவோம்.

Beruwal-Public-Rally

தொழில்முயற்சிகளை முன்னேற்றுவதுதான் எமது எதிர்பார்ப்பு. தொழில்முயற்சிகளும் கைத்தொழில்களும் முன்னேற்றமடைய வேண்டும். தொழில்முயற்சிகள் முன்னேற்றமடையாமல் ஒரு நாடு முன்னேற மாட்டாது. திறைசேரிக்கு பணம் வரமாட்டாது. இந்த லயிற் பில் அதிகரிப்பு எங்கள் கைத்தொழில்களை பாதித்துள்ளது. எமது இறுதி இலக்கு என்றவகையில் நாங்கள் இரண்டு மூன்று வருடங்களுக்குள் மின்கட்டணத்தை பாரியளவில் குறைக்க எதிர்பார்க்கிறோம். இலங்கையில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான சராசரி பெறுமானத்தை 7.5 சதம் டொலருக்கு கொண்டுவர முடியும். 21 ரூபாய் என்ற அளவுக்கு மின்கட்டணத்தை குறைப்பதற்கான இயலுமை நிலவுகின்றது. இந்த மின்சாரக் கட்டணத்துடன் கைத்தொழில்களுக்கு முன்நோக்கி நகர முடியாது. இந்த நாடு தெற்காசியாவில் மிகஅதிகமான மின்சாரக் கட்டணம் அறவிடப்படுகின்ற நாடாகும். மின்சாரக் கட்டணம் இவ்வாறு நிலவுகையில் உலகத்தாருடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட இயலாது. குறைந்த விலையில் பொருட்களை உற்பத்திசெய்ய முடியாது. காற்றாலைகள் மூலமாக மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான மிகச்சிறந்த ஆற்றல்படைத்த ஒரு குழுவினரை நாங்கள் சந்தித்து வந்திருக்கிறோம். ஏற்கெனவே காற்று விசையிலிருந்தும் சூரிய வெப்பத்திலிருந்தும் மின்சாரத்தை உற்பத்திசெய்ய தொடங்கி இருக்கிறார்கள். ஒரு பிரதான கம்பெனி டெண்டர் சமர்ப்பித்துள்ளது, அண்மையில் டெண்டரொன்று திறக்கப்பட்டது, காற்றுவிசையினால் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்ற மின்நிலையமொன்று திறக்கப்பட்டது. ஒரு அலகு 4.8 சதம் டொலராக அமைகின்றது. எனினும் அரசாங்கம் அதானிக்கு 8.26 சதம் டொலருக்கு வழங்கப்போகின்றது. 40% அதிகமாகும். 20 வருடங்களுக்கு உடன்படிக்கை கைச்சாத்திடப்படுகின்றது, அவர்களின் ஒரே தொழில் இருக்கும்வரை வாரிச்சுருட்டிக் கொள்வதாகும். எமது நாட்டின் எதிர்காலம் பற்றி , எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி, எமது தொழில்முயற்சிகளை முன்னேற்றுதல் பற்றி அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை. நாட்டை வலுச்சக்தி நெருக்கடி எவ்வாறு பாதித்துள்ளது? ஆட்சியாளர்கள் இவையெதுவும் பற்றி சிந்திப்பதில்லை. நாங்கள் எமது அரசாங்கமொன்றை அமைத்திடுவோம். எமது பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக நீங்கள் உங்கள் தொழில்முயற்சிகளை சரிவர மேற்கொண்டு வாருங்கள். செல்வத்தை ஈட்டுங்கள். அதிலிருந்து நியாயமான வரித்தொகையொன்றை அரசாங்கத்திற்கு கொடுங்கள்.

எங்கள் பிரஜைகள் வரி செலுத்த விரும்புகிறார்கள். எனினும் செலுத்துகின்ற வரியைத் திருடுகிறார்களெனில் ஏன் வரி செலுத்தவேண்டுமென பிரஜைகள் கேட்கிறார்கள். அரசாங்கத்திற்கு சேரவேண்டிய பணம் வில்மாவின் வீட்டுக்குச் செல்கின்றது. வரி செலுத்துபவர் செயலற்றுப் போகிறார். அதைப்போலவே செலுத்துகின்ற வரியை விரயமாக்குகிறார்கள். ரணில் விக்கிரமசிங்க 875 கோடியை ஒதுக்கிக்கொண்டார். இந்த நாட்டை விருத்திசெய்யும்பொருட்டு செலவிடுவதற்காக அல்ல: தேர்தலுக்கு பங்கிடுவதற்காக எடுத்துக்கொண்டார். ரணில் வெளிநாடு செல்வதற்காக 20 கோடி ரூபாவை ஒதுக்கிக்கொண்டார். இது உங்களின் வரிப் பணம். வெளிநாடு செல்லும்போது ஐ.ம.ச. உறுப்பினர்களை அழைத்துச் செல்கிறார். அது அந்த உறுப்பினர்களை அரசாங்கத்திற்கு எடுப்பதற்காகவே. ரணில் பன்முகப்படுத்திய நிதியிலிருந்து 19 ஐ.ம.ச. உறுப்பினர்களுக்கு 120 கோடியை வழங்கினார். இது உங்களின் வரிப் பணம். சனாதிபதி கோல்பேஸிலிருந்து பாராளுமன்றத்திற்கு வருகையில் ஒரு அம்பியுலன்ஸ் பின்னால் வருகின்றது. அவர்கள் நோய்ப் பிண்டங்களா? உங்களின் செல்வத்தை இந்த ஆட்சியாளர்கள் விரும்பியவாறு செலவிடுகிறார்கள். நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக செலுத்துகின்ற வரியை விரயமாக்குவார்களாயின் எவருமே வரி செலுத்த விரும்பமாட்டார்கள். நாட்டின் வீதிகளை அமைத்திட, வைத்தியசாலைகளில் மருந்துகளைக் கொடுக்க, கல்வியை முன்னேற்றுவதற்காக கொடுக்கின்ற வரியை விரயமாக்குவதாயின் வரியை செலுத்த விரும்ப மாட்டார்கள். நீங்கள் தொழில்முயற்சிகளை மேற்கொள்க, செல்வத்தை ஈட்டுக, அரசாங்கத்திற்கு நியாயமான வரியை செலுத்துக என நாங்கள் கூறுகிறோம். அவ்விதம் அரசாங்கத்திற்கு கொடுக்கின்ற ஒவ்வொரு சதத்தையும் விரயமாக்காமல், திருடாமல் நாட்டுக்காக செலவிடுகின்ற அரசாங்கமொன்றை நாங்கள் அமைப்போம்.

Beruwal-Public-Rally

எம்மால் அரசாங்கமொன்றை அமைப்பதற்கான பலம் இன்று எம்மிடம் இருக்கின்றது. சிங்கள மக்களின் விருப்பத்துடன் மாத்திரம் அரசாங்கமொன்றை அமைப்பதில் பலனில்லை. சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைவரதும் நம்பிக்கை, நல்லாசியுடன் எதிர்பார்ப்பினைக் கொண்டதாக திசைகாட்டியின் அரசாங்கமொன்று உருவாக வேண்டும். நாங்கள் இதுவரை காலமும் பிறருக்கு எதிராகவே அரசாங்கங்களை அமைத்தோம். நாமனைவரும் ஒற்றுமையாக அரசாங்கமொன்றை அமைத்திடுவோம். நாங்கள் முன்நோக்கி நகரவேண்டுமாயின் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் ஒற்றுமையைக் கட்டியெழுப்பவேண்டும். ஒற்றுமையுடன் அரசாங்கமொன்றை அமைத்தால் எம்மால் கட்டங்கட்டமாக தேசிய ஒற்றுமையை உருவாக்க முடியும். அனைத்து மதங்களினதும் நியாயமான உரிமைகள், தமது மொழியில் பேச்சு மற்றும் அரசாங்கத்தடன் அலுவல்களை மேற்கொள்வதற்கான உரிமை, தமது கலாச்சாரம் பற்றிய உரிமை, அனைவருக்கும் நியாயமானவகையில் பொருளாதாரத்தில் பங்கேற்பதற்கான உரிமை இவற்றை உருவாக்கிட ஒற்றுமையாக அரசாங்கமொன்றை அமைத்திடவேண்டும். நாங்கள் அரசாங்கமொன்றை அமைத்திடுவொம். சந்தேகம்கொள்ள வேண்டாம். எனினும் எமக்கு முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும். நாங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து இந்த மாற்றத்தை ஏற்படுத்துவோம்.

மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு வந்து 54 வருடங்களாகின்றன. ரணில் அரசாங்கத்திற்கு வந்து 47 வருடங்களாகின்றன. தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்திற்கு வந்து 41 வருடங்களாகின்றன. இங்கே இருக்கின்ற பெரும்பாலானவர்கள் அதைவிட இளையவர்களாவர். இது போதும். நாட்டை மாற்றியமைத்திட வேண்டும். இவர்கள் பழைய, துருப்பிடித்த தலைவர்கள். இவ்விதமாக ஒரு நாடு முன்நோக்கி நகர முடியாது. ஒரு புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக நாங்கள் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். பேருவளை வாக்குப்பெட்டியில் அதிக எண்ணிக்கைகொண்ட வாக்குச்சீட்டுகளை திசைகாட்டிக்கு புள்ளடியிட்டு நிரப்புங்கள். அனைவரும் உழையுங்கள், அனைவரும் உரையாடுங்கள். இது நாங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து எற்படுத்தவேண்டிய மாற்றமாகும். நாங்கள் தேர்தலுக்காக ஒன்றைக்கூறி தேர்தலுக்குப் பின்னர் வேறு கதைகளைக் கூறுபவர்களல்ல. நாங்கள் தேர்தலின்போது மக்களுக்கு கொடுக்கின்ற நம்பிக்கையை தேர்தலுக்குப் பின்னரும் பாதுகாப்போம். கடந்த 2020 தேர்தலில் ரோஹித பாராளுமன்றம் சென்றார். நளிந்த பாராளுமன்றம் செல்லவில்லை. இப்போது நளிந்த போயிருந்தால் நல்லதென நினைக்கிறீர்கள் அல்லவா? ரோஹித்தவை ஏன் அனுப்பிவைத்தோம் என நினைக்கிறீர்கள் அல்லவா? தவறிழைத்த இடங்கள், கைநழுவிய இடங்கள் பல இருக்கின்றன. மீண்டும் தவறவிட முடியாது. இதுதான் வெற்றிபெறுவதற்கான, மாற்றியமைப்பதற்கான தருணம். நாமனைவரும் ஒன்றுசேர்ந்து இந்த மாற்றத்திற்கான இடையீட்டினைச் செய்வோம்.

Beruwal-Public-Rally
Show More

“திசைகாட்டி அதிகாரத்திற்கு வருவது நீண்டகாலமாக ஏமாற்றப்படுதலுக்கு இலக்காகிய மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்காகவே” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க-

(-“மறுமலர்ச்சிக்காக முழுநாடுமே ஒன்றாக” – தேசிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட மாநாடு – தம்புள்ள – 2024.07.13-) இங்கு குழுமியுள்ளவர்கள் மத்தியில் ஏற்கெனவே தேர்தல்களில் எமக்கு வாக்குகளை அளித்தவர்களைவிட ஏனைய அரசியல் கட்சிகளுக்கு வாக்குகளை அளித்தவர்களே அதிகமாக இருக்கிறார்கள். 30 வருடங்களாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, பொதுஜன பெரமுண, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பபினை பிரதிநிதித்துவம்செய்து ஜனக பண்டார தென்னக்கோன் 30 வருடங்களுக்கு மேலாக பாராளுமன்றத்தில் இருந்தார்கள். தற்போது ரணிலை பிரதிநிதித்துவம்செய்து வருகிறார்கள். கடந்த காலத்தில் ஐக்கிய […]

(-“மறுமலர்ச்சிக்காக முழுநாடுமே ஒன்றாக” – தேசிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட மாநாடு – தம்புள்ள – 2024.07.13-)

Dambulla-Public-Rally

இங்கு குழுமியுள்ளவர்கள் மத்தியில் ஏற்கெனவே தேர்தல்களில் எமக்கு வாக்குகளை அளித்தவர்களைவிட ஏனைய அரசியல் கட்சிகளுக்கு வாக்குகளை அளித்தவர்களே அதிகமாக இருக்கிறார்கள். 30 வருடங்களாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, பொதுஜன பெரமுண, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பபினை பிரதிநிதித்துவம்செய்து ஜனக பண்டார தென்னக்கோன் 30 வருடங்களுக்கு மேலாக பாராளுமன்றத்தில் இருந்தார்கள். தற்போது ரணிலை பிரதிநிதித்துவம்செய்து வருகிறார்கள். கடந்த காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர்களுக்கு, மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த எங்களுக்கு எவ்வளவு இடையூறுகளை விளைவித்தார்கள்? இரணகொல்லவில் சுட்டுக்கொண்டார்கள். அது யாருக்காக? ரணிலுக்கு எதிராக, மகிந்தவிற்காக, சந்திரிக்காவிற்காக. இப்போது ரணிலுக்காக. பொதுஜன பெரமுன தலைவர் தற்போது ரணிலின் உதவிக்காக இருக்கிறார். பொதுஜன பெரமுணவின் தேசிய அமைப்பாளர் பசில் இருக்கிறார். பொதுஜன பெரமுணவின் தம்புள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டார தென்னக்கோனும் இருக்கிறார். சஜித்தின் உதவிக்காக பொதுஜன பெரமுணவின் தவிசாளர் ஜீ.எல். பீரிஸ் இருக்கிறார். அந்த கட்சியின் பொருளாளர் டலஸ் அழகப்பெருமவும் இருக்கிறார். வரிசையாக நிற்கவைத்துப் பார்த்தால் ரணில், மகிந்த. பசில், நாமல், ஜனக பண்டார அந்த வரிசையில் இருக்கிறார்கள். அடுத்த வரிசையில் நிற்கவைத்தால் சஜித், ஜீ.எல்., டலஸ், டிலான் இருக்கிறார்கள். இந்த இரண்டு வரிசையிலும் யு.என்.பி. எது? மொட்டு எந்த வரிசையில்? நான் இதைத்தான் கூறினேன். ஊர் மக்கள் பிளவுபட்டு அரசியலில் ஈடுபட்டாலும் இவர்கள் அத்தனைபேரும் ஒன்றாகவே இருந்தார்கள். தற்போது எமக்குள்ள மகிழ்ச்சி ஊர்களில் இருக்கின்ற அனைவரும் தேசிய மக்கள் சக்தியைச் சுற்றி குழுமியிருப்பதாகும். தம்புள்ள நகரத்தில் சுட்டிக்காட்டப்படுவது அதுவாகும்.

அதிகமான அரசியல் உரையாடல்கள் அவசியமில்லை. நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற இவற்றை உற்றுநோக்கினால் அரசியலை விளங்கிக்கொள்ள அது நன்றாகவே போதும். யு.என்.பி. அரசாங்க காலத்தில் அலுவிஹாரே தம்புள்ளவிற்கு வரும்போது பொதுபெரமுணவைச் சேர்ந்தவர்கள் பயந்தவர்களாக இருக்கவேண்டும். ஜனக அதிகாரத்தைக் கைப்பற்றும்போது யு.என்.பி.யை சேர்ந்தவர்கள் பயந்தவர்களாக இருக்கவேண்டும. சுட்டுக்கொண்டார்கள். வீடுகளை தீக்கிரையாக்கினார்கள். வாகனங்களை தாக்கினார்கள். நாங்கள் அந்தக் காலத்தில் கூறினோம் அவர்கள் பிளவுபட்டவர்கள்போல் இருந்தாலும் இரவில் இரகசியமாக சந்திப்பார்களென. தற்போது பட்டப்பகலில் ஒன்றாக கைகோர்த்துக்கொண்டு ஒரே மேடையில் இருக்கிறார்கள். அவர்கள் இரண்டு அணிகளைச் சேர்ந்தவர்களல்ல: ஒரே அணியென்பதை அவர்கள் தற்போது நிரூபித்திருக்கிறார்கள். ஐம்பதுகளில் இருந்து பரம்பரைவழியாக யு.என்.பி., ஸ்ரீ லங்கா என மக்கள் பிரிந்திருந்தார்கள். சதாகாலமும் அவர்கள் மக்களுக்கு பொய் வாக்குறுதிகளை அளித்தார்கள். தம்புள்ள நகரத்தின் கடைகளுக்கு உறுதிகளை வழங்குவதாகக் கூறினார்கள். தற்போது மீண்டும் கூறத்தொடங்கி இருக்கிறார்கள். எனினும் ஒரு விடயத்தை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின்கீழ் நாங்கள் அவற்றுக்கு உறுதிகளை வழங்குவோம். அவற்றை எங்களுக்காக எடுப்பதற்கல்ல. பொருளாதார நிலையத்தை மையமாகக்கொண்டு இயங்கிவருகின்ற காடையர்கள் பலத்தை எமது அரசாங்கத்தின்கீழ் முடிவுக்கு கொண்டுவந்து, அனைவரையும் வியாபாரம் செய்யக்கூடியவகையிலான சுற்றாடலை உருவாக்கிக் கொடுப்போம். நாங்கள் அதிகாரத்திற்கு வருவது நீண்டகாலமாக ஏமாற்றப்படுதலுக்கு இலக்காகிய மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்காகவே.

Dambulla-Public-Rally

கடந்த காலத்தில் மக்கள் எரிபொருள் வரிசையில் இருக்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் வழங்க தனிவேறான ஷெட் ஒதுக்கப்பட்டிருந்தது. அவர்களை வரிசையில் வைக்காமல் மக்களை வரிசையில் காத்திருக்கவைத்தார்கள். தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் மாத்திரமே பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஷெட்டிலிருந்து எரிபொருள் பெறவில்லை. மக்கள் பிரச்சினைக்குள் விழும்போது அவர்கள் பிரச்சினைக்குள் விழாத ஆட்சியொன்று உருவாக்கப்பட்டிருந்தது. ஆளுங்கட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியில் இருந்தாலும் அவர்களுக்கு பிரச்சினை கிடையாது. இந்த நாட்களில் இருக்கின்ற பார் பேர்மிற்கள் அதிகளவில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால் சஜித் பிரேமதாச அதிகாரத்திற்கு வந்ததும் அவற்றை செல்லுபடியற்றதாக்குவதாகக் கூறினார் இயலுமானால் உங்கள் கட்சியின் ஒரு பாராளுமன்ற உறுப்பினரேனும் ரணிலிடமிருந்து பார் பேர்மிற் பெற்றுக்கொள்ளவில்லையெனக் கூறுமாறு நான் சஜித் பிரேமதாசவிற்கு சவால் விடுக்கிறேன். பார் பேர்மிற் மாத்திரமல்ல. பெற்றோல் ஷெட், எல்.ஆர்.சீ. காணிகளையும் ஒன்றாகவே பகிர்ந்து கொள்கிறார்கள். ஹந்தானையில் 10 எக்கர் காணிகளைப் பெற ஐ.ம.ச. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அடிக்கடி சனாதிபதி அலுவலகத்தில் நடமாடிக்கொண்டிருக்கிறார். தற்போது மகிந்தானந்த அழுத்கமகே பிரச்சினையைக் கிளப்பியுள்ளதால் தடைப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு பன்முகப்படுத்தப்பட்ட உறுப்பினர் நிதியங்கள் வழங்கப்பட்டு வருவதோடு 20 ஐ.ம.ச. உறுப்பினர்களுக்கும் அது வழங்கப்பட்டுள்ளது. அது மாத்திரமல்ல காவிந்த ஜயவர்தனவின் வீட்டில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு விருந்துபசாரமொன்று வழங்கப்பட்டது. அவர்கள் ஒருவருக்கொருவர் இடையில் பகிர்ந்துகொள்கின்ற அரசியலை நாங்கள் முடிவுக்கு கொண்டு வருவோம். இனிமேலும் ரணில் விக்கிரமசிங்கவை உள்ளிட்ட கும்பலைப்போன்றே சஜித் பிரேமதாசவை உள்ளிட்ட கும்பலுக்கும் அதிகாரத்தைப் பெற்றுக்கொடுப்பதனால் பலனில்லை.

அப்படியானால் தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரத்தைக் கொடுப்பதனால் பயன் விளையுமா என்பதைப் பற்றிப் பேசுவோம். தேர்தலைத் தடுக்க ரணில் விக்கிரமசிங்க முடிச்சுமேல் முடிச்சு போட்டாலும் சனாதிபதி தேர்தலை தடுக்கமுடியாது. லேனா என்பவர் நீதிமன்றத்தின் முன்னிலையில் வழக்குத் தாக்கல் செய்தமை தொடர்பில் ஒரிலட்சம் ரூபா அபராதம் அவருக்கு விதிக்கப்பட்டது. அதற்குப் பின்னர் மற்றுமொருவர் வழக்குத் தாக்கல் செய்திருக்கிறார். ரணில் விக்கிரமசிங்க என்னதான் முடிச்சி போட்டாலும் இறுதியில் எஞ்சுவது கழுத்துப்பட்டி முடிச்சி மாத்திரமாகும். பெரும்பாலும் ஒக்டோபர் 05 ஆந் திகதி சனாதிபதி தேர்தல் நடைபெறும். தேர்தலை நடத்தாமலிருக்க தேசிய மக்கள் சக்தி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இடமளிக்கமாட்டாது. தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து அதிகாரத்திற்கு கொண்டுவருமாறு கேட்கவே நாங்கள் தம்புள்ளைக்கு வந்திருக்கிறோம். இலங்கை என்பது உலகம் எற்றுக்கொள்ளாத வீசாகூட வழங்க மறுக்கின்ற நாடாக இழுத்துப்போடப்பட்டுள்ளது. எங்களுக்கு வீசா கொடுக்காவிட்டாலும் பசில் ராஜபக்ஷவிற்கு வீசா வழங்குகிறார்கள். அவரிடம் இரண்டு கடவுச் சீட்டுகள் இருக்கின்றன. ஒன்று அமெரிக்க கடவுச் சீட்டு. அதனை எடுத்தக்கொண்டு உலகின் எந்த நாட்டுக்கும் செல்ல முடியும். எனினும் எங்கள் கையில் இருப்பது கொச்சைப்படுத்தப்பட்ட இலங்கை கடவுச்சீட்டு ஆகும். 76 வருடங்கள் ஆட்சிசெய்து உலகம் எற்றுக்கொள்ளாத ஒரு நாடாக மாற்றியுள்ள இலங்கையை உலகம் ஏற்றுக்கொள்கின்ற அபிமானமிக்க பிரஜைகள் வசிக்கின்ற நாடாக தேசிய மக்கள் சக்தி கட்டியெழுப்பும். அதைப்போதலவே உலகத்திற்கு ஆப்புவைத்த குற்றச்செயல் மலிந்த நாடாக இன்று மாற்றப்பட்டுள்ள இலங்கையை படிப்படியாக கட்டங்கட்டமாக பெருமைமிக்க நாடாக மாற்றுவோம்.

ஒரு கோட்பாடு என்றவகையில் சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் சட்டத்தின் ஆட்சி அவ்விதமாக அமுலில் இல்லை. அவ்வாறு அமுலில் இருக்குமாயின் ஜனக பண்டார எவ்வாறு வெளியில் இருப்பது? சட்டத்தின் முன் சமமானவர் என்றால் அவருடைய மக்கன் ஏன் இந்தியாவுக்கு தப்பியோடிச் சென்றிருக்கிறார்? அவர்கள் சட்டத்தின் முன் சமமானவர்கள் அல்ல. பிரசன்ன ரணதுங்க. பிரேமலால் ஜயசேகர, தயா கமகே, டயனா கமகே வெளியில் இருக்கமாட்டார்கள். சட்டம் அவர்களுக்கு ஒருவிதமாகவும் பொதுமக்களுக்கு மற்றுமொரு விதமாகவும் இயங்குகின்ற யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, சட்டம் அனைவருக்கும் நியாயமாக அமுலாகின்ற நாடொன்றை நாங்கள் நிலைநாட்டுவோம். இந்த நாட்களில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற யுக்திய நடவடிக்கையில் சுறாக்கள் அகப்படாமல் எப்படி நெத்தலிகள் அகப்படுவது? யூன் மாத இறுதியளவில் போதைத்தூள் பாதாள உலகத்தைக் கட்டுப்படுத்துவதாகக்கூறிய தேசபந்து யுக்கிய இரண்டாம் கட்ட நடவடிக்கையை ஆரம்பித்தார். அவர்கள் ஒருபோதுமே எமது நாட்டில் போதைத்தூள் பெருந்தொற்றினை இல்லாதொழிக்க மாட்டார்கள். எமது நாட்டில் குற்றச்செயல்களையும் முடிவுக்கு கொண்டுவர மாட்டார்கள். சட்டமும் நீதியும் சமமாக அமுலாக்கப்படுகின்ற தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியால் மாத்திரமே குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த முடியும்.

Dambulla-Public-Rally

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் சிரேட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனெவிரத்ன அவர்கள் பாரிய பணியை ஆற்றினார். எமது நாட்டில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய படுகொலைகள் பற்றிய புலனாய்வுகளை மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவருவதற்காக: உயிர்த்தஞாயிறு தாக்குதலின் உண்மையான தாக்குதல்தாரிகளை பிடித்துக்கொள்வதற்காக பாடுபட்டார். அரசாங்கம் மாறியது. எல்லா விசாரணைகளையும் மூடிமறைத்தார்கள். விசாரணைகளை மேற்கொண்டுவந்த ஒருசில உத்தியோகத்தர்கள் நாட்டைவிட்டுச் செல்லவேண்டிய நிலையேற்பட்டது. ஒருசில உத்தியோகத்தர்களை ஒன்றரை வருடங்களாக சிறையில் வைத்தார்கள். தவறு என்ன? தவறாளிகளை மோப்பம்பிடித்துச் சென்றமையாகும். இந்த ஆட்சியாளர்கள் சதாகாலமும் குற்றச்செயல் புரிபவர்களின் பாதுகாவலர்களே. அவற்றின் பங்காளிகளே. இந்த அரசியல் எங்காவது முற்றுப்பெற வேண்டும். அரசாங்கம் அநியாயம் செய்யுமாயின், அமைச்சர்கள் குற்றச்செயல் புரிபவர்களை பாதுகாப்பார்களாயின் உங்களினதும் எங்களினதும் உயிர்கள் எப்போதுமே ஆபத்தில். அச்சத்துடனும் சந்தேகத்துடனும் நாட்டு மக்கள் வாழவேண்டிய அவசியமில்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமமாக வாழக்கூடிய ஒரு தேசத்தை உருவாக்கிடவேண்டும். இந்த நாட்டை உருப்படியாக்கிட முதலில் தேவைப்படுவது அதுவே.

எமது நாட்டில் கோடிக்கணக்கில் பொதுப்பணத்தை திருடுகின்ற அரசியல் நிலவுகின்றது. இந்த திறைசேரிக்கு வருவது உங்களின் பணமாகும். தொழில்வாண்மையாளர்களின் சம்பளம்மீது வரி விதித்தால் திறைசேரிக்கு பணம் வருகிறது. ஒருசில தொழில்வாண்மையாளர்கள் இதனைத் தாங்கிக்கொள்ள முடியாதெனக்கூறி வெளிநாடு செல்கிறார்கள். நீங்கள் கடைக்குப்போய் பொருட்களை விலைக்கு வாங்கினால், பெற்றோல் ஷெட்டுக்கு போய் எண்ணெய் அடித்துக்கொண்டால், நோய்க்கான பரிசோதனை ஒன்றைச் செய்துகொள்வதற்காக தனியார் மருத்துவமனைக்குச் சென்றால் அதில் ஒரு தொகை திறைசேரிக்கு வருகின்றது. பிள்ளைக்கு கற்பிக்கும்போது அரசாங்கத்திற்கு வரியொன்றைச் செலுத்தவேண்டும். உலகின் பெரும்பாலான நாடுகளில் மருத்துவப் பரிசோதனைகளுக்கு, மருத்துவ உபகரணங்களுக்கு, உணவுகளுக்கு வரி விதிப்பதில்லை. இந்த திறைசேரிக்கு பலவிதமான மக்களிடமிருந்து பணம் வருகின்றது. இந்த பணத்தைத்தான் அரசியல்வாதிகள் பகிர்ந்துகொள்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்க வரவுசெலவில் ஒதுக்கிக்கொண்ட பணத்திற்கு மேலதிகமாக 875 கோடி ரூபாவை ஒதுக்கிக்கொண்டார். அது மாத்திரமல்ல சஜித் பிரேமதாசவின் உறுப்பினர்களுக்கு 120 கோடியை ஒதுக்கிக்கொடுத்தார். ஒருபுறத்தில் இந்த பொதுப்பணம் விரயமாக்கப்படுகின்றது. அதைப்போலவே திறைசேரிக்கு வரவேண்டிய பணத்தை திருடுகிறார்கள். சீனி வரி மோசடியால் 1500 கோடி ரூபாவை வீட்டுக்குத் திசைதிருப்பினார்கள். பிணைமுறி மோசடியால் மத்திய வங்கிக்கு வரவிருக்கின்ற பணத்தில் 1100 கோடியை அர்ஜுன் அலோசியசின் வீட்டுக்கு திசை திருப்பினார். அந்த இடத்திலிருந்து குறுக்குவழியில் ரணிலின் வீட்டுக்கும் பணம் போனது. பொதுப்பணத்தை இவ்விதமாக விரயம்செய்து ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப முடியுமா? சஜித் பிரேமதாச ஐயாயிரம் மில்லியன் நிதியத்தை விரயமாக்கியதாக செய்தித்தாளில் செய்திகள் வெளியாகியிருந்தது. கலாச்சார நிதியம், வீடமைப்பு நிதியத்தை நாசமாக்கினார்கள். ஒரு பக்கத்தில் பெயர்ப் பலகைகளை அடிக்க, பெயரை அடித்துக்கொள்ள கோடிக்கணக்கில் பணத்தை விரயமாக்கினார்கள்.

Dambulla-Public-Rally

இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்களாக இருக்கவேண்டும். திறைசேரிக்கு வருகின்ற பணத்தை கோவில்சொத்து போல பாதுகாத்து, பிரஜைகளின் அலுவல்களுக்காக, நாட்டின் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக ஈடுபடுத்துகின்ற அரசாங்கமொன்றை நாங்கள் அமைப்போம். தற்போது தொழில்முயற்சிகள் சீரழிந்துவிட்டன. தற்போது தொழில்முயற்சிகளில் ஈடுபட அரசியல்வாதிகளின் அனுமதி தேவை. எமது நாட்டில் பெற்றோல் செட்களில் பெரும்பாலானவை அரசியல்வாதிகளின் கைகளிலேயே இருக்கின்றன. பார் போ்மிற்கள் அரசியல்வாதிகளின் கைகளிலேயே இருக்கின்றன. கேகாலையின் அமைச்சர் மூன்று பார் போ்மிற்களை ஒன்பது கோடி ரூபாவிற்கு விற்றார். (900 இலட்சம்) எலஹெர பக்கத்தில் பாரியளவிலான சுரங்கங்களை அகழ்பவர் குருணாகலில் இருந்த ஓர் அமைச்சராவார். மணல் கரைசோ்ப்பவர்களும் அவர்களேதான். பாசிக்குடாவின் கரையோரப் பரப்பில் இருக்கின்ற பெரும்பாலான காணிகள் அமைச்சர்களினதும் அவர்களின் பிள்ளைகளினதும் கைகளில் தான் இருக்கின்றன. நாங்கள் உங்களுக்கு ஓர் உத்தரவாதத்தைக் கொடுக்கிறோம். தேசிய மக்கள் சக்தியின் உயர்பீடங்களில் இருக்கின்ற எவருமே பார் வாங்குவதற்காக, மணல் கரைசோ்ப்பதற்காக, சுரங்கம் அகழ்வதற்காக, ஹோட்டல் கட்டுவதற்காக வரமாட்டார்கள். அதனைச் செய்பவர்கள் தொழில் முயற்சியாளர்களே. கனியவளங்களைச் சார்ந்ததாக, கறுவா, தேயிலை, சுற்றுலா கைத்தொழில், மீளப்புதிப்பிக்கத்தக்க வலுசக்தியில் பாரியளவிலான முதலீட்டு வாய்ப்புகள் நிலவுகின்றன. தற்போது எந்தவொரு பரிசுத்தமான முதலீட்டாளரும் இங்கு வருவதில்லை. தலைவரிலிருந்து அனைவருக்குமே இலஞ்சம் கொடுக்கவேண்டும். “எங்களுக்கு உங்களிடமிருந்து ஒரு கிளாஸ் பச்சை தண்ணீர்கூட வேண்டாம், நீங்கள் எதை கொண்டு வருகிறீர்கள்? நீங்கள் நாட்டுக்கு கொடுக்கின்ற நன்மைகள் என்ன?” என்றே வருகின்ற தொழில் முயற்சியாளர்களிடம் நாங்கள் கேட்போம். அது தான் எங்களின் ஒரே அளவுகோல்.

70 ஆம் தசாப்தத்தில் இந்தியாவில் குடைக் கைத்தொழில், புடவைக் கைத்தொழில், சவர்க்கார உற்பத்தி இருக்கவில்லை. இன்று இந்தியா சந்திரனுக்கு செல்கின்ற, பிராந்தியத்திற்கு மோட்டார் வாகனங்களை உற்பத்தி செய்கின்ற, உணவு உற்பத்தி செய்கின்ற, விதையினங்களை உற்பத்தி செய்கின்ற, ஔடதங்களை உற்பத்தி செய்கின்ற இந்தியாவை உருவாக்கியிருக்கிறது. எனினும் எம்மை எல்லாவற்றையும் இறக்குமதி செய்கின்ற நாடாக மாற்றியிருக்கிறார்கள். எமது ஆட்சியாளர்களுக்கு நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான நோக்கு இருக்கவில்லை. ஆட்சியாளர்களுக்கு இருந்த ஒரே நோக்கு தாம் எவ்வாறு தம்மை வளர்த்துக் கொள்வது? தமது ஏழேழு பரம்பரைக்கும் எவ்வாறு திரட்டிக்கொள்வது? என்பதாகும். இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான புதிய மறுமலர்ச்சி யுகமொன்றை நாங்கள் உருவாக்கிடவேண்டும். சட்டத்தின் முன் சமத்துவம் நிலவுகின்ற, ஊழல் – மோசடி – விரயம் ஒழிக்கப்படுகின்ற, தொழில் முயற்சியாளருக்கு நியாயமான வகையில் தொழிலில் ஈடுபடக்கூடிய, கமக்காரனுக்கு அவசியமான வசதிகளை வழங்குகின்ற மறுமலர்ச்சி யுகமொன்றை நாங்கள் உருவாக்கிடவேண்டும்.

எங்கள் நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய நிலைமாற்றமொன்று தேவை. கிராமிய மக்கள் வறுமை நிலையிலிருந்து விடுபடவேண்டுமானால் கிராமத்து பொருளாதாரத்தை முன்னேற்றவேண்டுமானால் பிள்ளைகளை கிராமத்திலிருந்து வெளியே எடுக்கவேண்டும். பிள்ளைகளை பழைய கடப்பாடுகளிலிருந்து கழற்றியெடுத்து உலகத்தில் இருக்கின்ற அறிவுடன் போட்டியிடுகின்ற சிறந்த உழைப்பாளியாக மாற்றவேண்டும். 2030 இல் உலகத்திற்கு 40 மில்லியன் மென்பொருள் பொறியியலாளர்கள் அவசியமாகின்றனர். அவர்களை எங்கள் கிராமங்களில் உருவாக்கவேண்டும். புதிய தலைமுறையினருக்கு உலகத்தை திறந்து விடவேண்டும். அதனை ஆரம்பிக்க அரசியல் நிலைமாற்றமொன்று அவசியமாகின்றது. வருகின்ற ஜனாதிபதி தோ்தலில் நிலைமாற்றத்திற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுப்போம். ஜனாதிபதி தோ்தலுக்கு இருக்கின்ற இரண்டரை மாதக்காலத்திற்குள் நாம் அனைவரும் நன்றாக உழைப்போம். யு.என்.பி. – ஸ்ரீ லங்கா வித்தியாசங்களை வைத்துக்கொள்ள வேண்டாம். நாம் அனைவரும் சமமான பிரஜைகளாக சமமான பங்காளிகளாக ஒன்றிணைவோம். அவர்கள் மேல் மட்டத்தில் ஒன்று சேர்வதைப்போல எம்மால் ஒன்று சேரமுடியாதா? இந்த தீர்மானகரமான திருப்பத்தை ஏற்படுத்திக்கொள்ள கிராமத்திலுள்ள நாம் அனைவரும் ஒன்றுசோ்ந்து சவால்களை ஏற்றுக்கொள்வோம்.

Dambulla-Public-Rally

“அரசாங்கத்திடம் கையேந்தாமல் சொந்தக்காலில் எழுந்திருக்கக்கூடிய பொருளாதாரமொன்றை மக்களுக்கு பெற்றுக்கொடுப்போம்”
-மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா-

சனாதிபதி தேர்தலை இலக்காகக்கொண்டு தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் நாடு பூராவிலும் பல கூட்டத் தொடர்களை நடாத்தி வருகிறோம். ரணில் விக்கிரமசிங்காக்கள் என்னதான் முயற்சி செய்தாலும் ஒக்டோபர் மாதத்தின் முதலாவது வாரமளவில் எமது நாட்டுக்கு ஒரு புதிய சனாதிபதியை நியமித்துக்கொள்ள வாய்ப்பு கிடைக்கின்றது. எமது நாட்டு மக்களைக் காட்டிக்கொடுத்த பிரபுக்களை அகற்றி மக்கள்நேயமுள்ள ஆட்சியை நிறுவத் தயார் என்ற செய்தியை எடுத்துக்கொண்டு நீங்கள் இந்த இடத்திற்கு வந்திருக்கிறீர்கள். 3 சதவீத வாக்குகளைப் பெற்றவர்கள் எப்படி அரசாங்க அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதென ஒருசிலர் எங்களிடம் கேட்கிறார்கள். வேறுநாட்களில் வேறு கட்சிகளுக்காக உழைத்தவர்களில் பலர் தற்போது திசைகாட்டியுடன் கைகோர்த்துக்கொண்டு இருப்பதாலேயே எமக்கு அரசாங்கமொன்றை நிறுவுவதற்கான இயலுமை கிடைக்கின்றது. இந்த வெற்றியின் முன்னோடிகள் நீங்கள் அனைவருமே.

ரணில் விக்கிரமசிங்கவிற்கு, மகிந்த ராஜபக்ஷவிற்கு, சஜித் பிரேமதாசவிற்கு வெற்றிபெற முடியுமானால் தேர்தலை விரைவில் நடாத்துவார்கள். இன்றளவில் சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர், மலாயர் அனைவருமே திசைகாட்டியின் வெற்றிக்காக செயலாற்றி வருவதோடு மாத்தளை மாவட்ட மக்களும் அந்த வெற்றிக்காக உயர்வான பங்களிப்பினை வழங்குவதற்காக ஒருங்கிணைந்து வருகிறார்கள். தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் திட்டமிட்ட அடிப்படையில் அமைப்புக்களைக் கட்டியெழுப்பியே செயலாற்றி வருகிறோம். அந்தந்த துறைசார்ந்த அனுபவம் வாய்ந்தவர்கள் ஒன்றுசேர்ந்து நாட்டைக் கட்டியெழுப்புகின்ற கொள்கைகளையும் செயற்பாட்டு வேலைத்திட்டங்களையும் வகுக்கின்ற அதேவேளையில் நாங்கள் அவற்றை அமுலாக்க அவசியமான அடி மட்டத்திலான அமைப்புகள் என்றவகையில் என்.பி.பி. வட்டார சபைகளை நிறுவினோம். இன்றளவில் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலும் தேர்தலை இலக்காகக்கொண்ட தேர்தல் தொழிற்பாட்டுக் குழுக்களை உருவாக்கி வருகிறோம். பல்வேறு புத்திஜீவி தொழில்வாண்மையாளர்களை ஒழுங்கமைத்து வருகின்ற அதேவேளையில் அண்மையில் விஞ்ஞானிகளின் மாநாடு ஒன்றினை நடத்தினோம். தொழில்சார் மட்டத்திலான சக்திகளை ஒன்றுசேர்த்து வருவதோடு இளைப்பாறிய முப்படைக் கூட்டமைவினையும் பொலிஸ் கூட்டமைவினையும் இறுதியாக இன்றளவில் கட்டியெழுப்பி வருகிறோம். முறைப்படி சட்டத்தை அமுலாக்கிட ஆட்சியாளர்களிடமிருந்து வாய்ப்பு கிடைத்திராத பெருந்தொகையான பொலீஸார் அதனைச் சுற்றி ஒருங்கிணைந்து வருகிறார்கள்.

ரஷ்யாவைப்போல் எமது நாட்டில் ஒக்டோபர் மாதத்தில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான தொடக்கத்தை எடுக்கின்ற மாதமாக மாற்றிக்கொள்வோம். தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் இவ்விதமாக மக்களை ஒழுங்கமைத்துச் செல்கின்ற வேளையில் ஏனைய கட்சிகள் சருகுகளை சேகரித்துக் கொண்டிருக்கின்றன. நாட்டை வீழ்த்துவதில் பங்களிப்புச்செய்த எந்தவோர் அரசியல்வாதியையும் தேசிய மக்கள் சக்தியுடன் இணைத்துக்கொள்ள மாட்டாமென்ற உத்தரவாதத்தை உங்களுக்கு கொடுக்கிறோம். கடந்த தடவை சஜித்தை அவதூறாக பேசியவர்கள் தற்போது சஜித்துடன் இருக்கிறார்கள். மறுபுறத்தில் சஜித்துடன் இருப்பவர்கள் ரணிலிடம் செல்ல முயற்சி செய்கின்ற அதேவேளையில் ரணிலுடன் இருப்பவர்கள் சஜித்திடம் போக முயற்சி செய்கிறார்கள். தற்போது மொட்டில் எதுவுமே எஞ்சவிவ்லை. பாராளுமன்றத்திற்கு உள்ளே இருக்கின்ற இற்றுப்போன தீய சக்திகளை அவர்கள் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். சஜித்தை குறைகூறிக்கொண்டிருந்த டலஸிற்கு சஜித்திடம் போக முடியும். ரணிலை திருடன் எனக்கூறிய மொட்டுக்கட்சியை சேர்ந்தவர்களால் ரணிலிடம் போகமுடியும். இவர்கள் கடந்த இரண்டு மூன்று வருடங்களில் எமக்கு அடி மட்டத்தில் பாரிய அரசியல் பாடத்தைக் கற்றுக்கொடுத்துள்ளார்கள். யு.என்.பி., ஸ்ரீ லங்கா என இதுவரை பிளவுபட்டிருந்தாலும் அவர்கள் அனைவரும் ஒரே ஊழல்மிக்க அரசியல் பிரபுக்கள் வம்சத்தினரே என்பதை அந்த காலப்பகுதிக்குள் நிரூபித்திருக்கிறார்கள். ரணிலிடமிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்காக கோட்டாபயவை வெற்றிபெறச் செய்விக்க வேண்டுமென கூறியவர்கள் இப்போது ராஜபக்ஷாக்களை காப்பாற்றுவதை ரணிலிடம் ஒப்படைத்துள்ளார்கள். ரணிலிடம் நாட்டை ஒப்படைப்பது நாட்டைக் காப்பாற்றுவதற்காக அல்ல: ராஜபக்ஷாக்களை காப்பாற்றுவதற்காகும். மகிந்த ராஜபக்ஷாக்கள் தமக்கு பாராளுமன்றத்தில் இருந்த மிகவும் நம்பிக்கையானவர் என்றவகையில் ரணில் விக்கிரமசிங்கவிடம் அதிகாரத்தைக் கொடுத்தார்கள். இந்த அணிகளைச்சேர்ந்த அனைவருமே ஒரு குழுவினர் என்பதை நிரூபித்துள்ளார்கள்.

Dambulla-Public-Rally

ரணில் விக்கிரமசிங்கவிற்கு நாட்டை ஒப்படைத்த 2022 ஆம் ஆண்டு முடிவடைகையில் ஒட்டுமொத்த அரச படுகடன் 83 பில்லியன் டொலராக அமைந்திருந்தது. தற்போது ஒட்டுமொத்த அரச படுகடன் 100 பில்லியன் டொலரை விஞ்சியுள்ளது. எனவே செய்து நற்செய்தியா? அதேவேளையில் எமது நாட்டில் 28,000 ஏக்கர் காணியுள்ள பாற்பண்ணைகள் உள்ளிட்ட எஞ்சியுள்ள வளங்களை விற்கப் போகிறார்கள் எனவே செய்தி நற்செய்தியா? இந்த அனைத்து நற்செய்திகளுக்கும் மத்தியில் எமக்கு தெளிவான நல்ல இலக்கொன்று இருக்கின்றது. எதிர்வரும் சனாதிபதி தேர்தலில் திசைகாட்டியின் வெற்றி நிச்சயம் என்ற நற்செய்தி எமக்கு கிடைத்துள்ளது. நாட்டை வீழ்த்திய ரணில் விக்கிரமசிங்கவினால் நாட்டைக் கட்டியெழுப்பமுடியுமா? தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர திசாநாயக்கவை சனாதிபதியாக்க வேண்டியது மற்றுமொரு அரசாங்கத்தை அமைத்துக்கொள்வதற்காக அல்ல. முழுநாட்டையும் பிரமாண்டமான நிலைமாற்றத்திற்கு இலக்காக்குவதே எமது தேவையாகும். தோழர் அநுர திசாநாயக்க சனாதிபதியாக உறுதிப்பிரமாணம் செய்துகொண்டதும் உடனடியாக இந்த உக்கிப்போன பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய மக்கள் அபிப்பிராயத்திற்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்போம். அந்த தேர்தலில் 130 ஆசனங்களுக்கு மேற்பட்ட பலம்பொருந்திய அரசாங்கமொன்றை நிறுவி நாட்டுக்கு அவசியமான மாற்றங்களை அமுலாக்குவோம். வீழ்ந்த நாட்டைக் கட்டியெழுப்பி நாட்டை வீழ்த்திய ஊழல் பேர்வழிகளுக்கு சட்டத்தினால் தண்டனைவழங்க நடவடிக்கை எடுப்போம். மக்களுக்கு மேலாக இருக்கின்ற உறுப்பினர்களின் அசிங்கமான அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைத்திடுவோம்.

இதுவரை பாரிய செலவினை ஏற்று அமைச்சர்களை வரவழைத்து அடிக்கல் நாட்டுகின்ற கருத்திட்டங்களை செய்வதையே மேற்கொண்டோம். சிறிய பாதையை திறந்துவைக்கவும் அமைச்சர்களை வரவழைப்பார்கள். குறைந்தபட்சம் மரநடுகை கருத்திட்டங்களில் மரநடுகைக்காக ஒரு சிறிய கிடங்கு வெட்டப்பட்டு பாரிய கம்பளம்மீது வருகின்ற அமைச்சர் கன்றினை நடுவதற்காக இறங்க மேலுமொரு பெரிய கிடங்கினை அகழவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. பாதுகாப்புப் பிரிவுகள் புடைசூழ அதிகாரத்தைக் காட்டிக்கொள்கின்ற கலாச்சாரத்தை நாங்கள் இல்லாதொழிப்போம். பணத்தையும் செல்வத்தையும் பாவித்து மக்களின் வாக்குகளைக் கொள்ளையடித்த நச்சு வட்ட அரசியலுக்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைப்போம். மக்களின் வாக்குகளால் நியமிக்கப்படுகின்ற இந்த ஆட்சியாளர்களால் மக்கள் வறுமையில் அமிழ்த்தப்படுகின்ற இந்த முறைமையை நாங்கள் முற்றாகவே முடிவுக்கு கொண்டுவருவோம். 1948 இல் சுதந்திரம் பெறுகையில் நாங்கள் கடனற்ற இராச்சியமாக விளங்கினோம். ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக கடன்பெற்று திருடித் தின்றதால் இன்று கடனை மீளச்செலுத்தமுடியாமல் வங்குரோத்து நாடாக தள்ளப்பட்டுள்ளது. கடனை மீளச்செலுத்துவதற்கான காலத்தை 2028 வரை பிற்போட்டு அதனை நற்செய்தி என அவர்கள் கூறுகிறார்கள். சிங்கப்பூர், தென் கொரியா, மலேசியா முன்நோக்கி பயணிக்கையில் எமது ஆட்சியாளர்கள் எமது நாட்டை பின்நோக்கி இழுத்துப் போட்டார்கள். அதனால் வெற்றியை அடைவதற்கான பாய்ச்சலொன்றைப் பாய்வதற்கு இலங்கை மக்கள் அனைவரும் தயார் என்பதை நாங்கள் நிரூபிக்க வேண்டும்.

Dambulla-Public-Rally

பொருளாதாரத்தில், சிந்தனையில் , கல்வியில், கலாச்சாரத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தவேண்டும். எமது நாட்டில் பண்டங்கள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்கின்ற பொருளாதாரமொன்றை கட்டியெழுப்புவதாக நாங்கள் கூறும்போது ரணில் உள்ளிட்ட குழுவினரும் அதனையே கூறுகிறார்கள். எமது பொருளாதாரத்தில் ஒட்டுமொத்த மக்களையும் பங்கேற்கச் செய்விக்கின்ற மற்றும் மக்களை நோக்கி அதன் பெறுபேறுகள் பாய்ந்துசெல்கின்ற செயற்பாட்டுத் திட்டமொன்றை தயாரித்திருக்கிறோம். நாங்கள் கட்டியெழுப்புவது மக்கள் பங்கேற்புடனான பொருளாதாரமொன்றை ஆகும். அந்த பொருளாதாரத்தின் நன்மைகள் ஒருசில குடும்பங்களுக்கல்ல: ஒட்டுமொத்த மக்களுக்கும் பாய்ந்துசெல்கின்ற பொறியமைப்பொன்றினை தயாரிப்போம். மாத்தளை மாவட்டத்தில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் வறியவர்களாகி தம்புள்ளையில் இருக்கின்ற வியாபாரிகள் செல்வந்தர்களாகின்ற பொருளாதாரத்திற்கு முற்றுப்புள்ளிவைத்து அனைவருக்கும் நியாயமான நன்மைகளை வழங்குகின்ற முறையியலொன்றை வகுப்போம். அதற்காக பொருத்தமான கல்வித்திட்டமொன்றை அமுலாக்கி பிள்ளைகள்மீது சுமத்தப்பட்டுள்ள அழுத்தத்தை நீக்கிடுவோம். பொதுப்பணத்தைக் கொள்ளையடித்து அவ்விதமாக திருடிய பணத்தில் சொச்சத்தொகையை ஈடுபடுத்தி ஐந்து கிலோ அரிசியைக் கொடுத்ததும் அதனை எடுப்பதற்காக மக்கள் திருடனை வணங்கிவிட்டும் போகின்ற நிலைமையே தற்போது நிலவுகின்றது. மிகவும் கவலைக்கிடமான இந்த முறையியலை மாற்றியமைப்போம். வறுமையைப் பேணிவருவதற்காக நிவாரணங்களை வழங்குவதற்குப் பதிலாக எமது ஆட்சியின்கீழ் சொந்தக்காலில் எழுந்து நிற்பதற்கான பொருளாதார முறைமையொன்றினை உருவாக்கிடுவோம். எனினும் வறுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்வரை நிவாரணங்கள் வழங்கப்படவேண்டிய அனைவருக்கம் சலுகைகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்துவோம். வெகுவிரைவில் வறுமையை ஒழித்துக்கட்டி திசைகாட்டி அரசாங்கமொன்றின்கீழ் மகிழ்ச்சியுடன் வசிக்கின்ற மக்களை உருவாக்குவோம்.

எமக்கு இருப்பது ஒரு சிறிய பணியல்ல: 76 வருடகால சாபக்கேடான அரசியல் பயணப்பாதையை மாற்றியமைப்பதாகும். இந்த மேடையில் இருப்பவர்கள் அதற்காக அர்ப்பணிப்புச்செய்ய வந்தவர்களேயொழிய வேறு எதையும் எதிர்பார்த்து வந்தவர்கள் அல்ல. இதைவிட சிறந்த வாழ்க்கை, அழகான வாழ்க்கை எமக்குத் தேவை. பெண்களும் பிள்ளைகளும் பயமின்றி சுதந்திரமாக வாழக்கூடிய, அன்பும் மதிப்பும் பாதுகாப்பும் நிறைந்த ஒரு நாட்டை நாங்கள் கட்டியெழுப்பவேண்டும். மக்கள் ஒருவரையொருவர் நேசிக்கின்ற அன்புநிறைந்த ஒரு தேசத்தை நாங்கள் கட்டியெழுப்பிட வேண்டும். அனைவருக்கும் மனிதத்துடன் கவனிப்பு காட்டுகின்ற ஒரு நாட்டை நாங்கள் கட்டியெழுப்பிட வேண்டும். இதுவரை எம்முடன் கைகோத்திராத அனைவருக்கும் இந்த செய்தியைக்கொடுத்து விழிப்புணர்வூட்டி, இன, மத பேதங்களற்ற ஒரே தேசத்தை கட்டியெழுப்புவதற்காக நாமனைவரும் கைகோர்த்திடுவோம். இந்த சனாதிபதி தேர்தலில் உத்தமராம் என கூறவேண்டி ஏற்படாத எமது தோழரொருவரை சனாதிபதியாக்கி, எமது பாராளுமன்றமொன்றை உருவாக்கி எமது நாட்டைக் கட்டியெழுப்புவோம். வரலாற்றினை புதிதாக எழுதுகின்ற தலைமுறையே நாங்கள். எமது பணியை நாங்கள் ஈடேற்றிடுவோம். எமது வாழ்நாளில் நாட்டைக் கட்டியெழுப்புவோம். அதற்காக அனைவருக்கும் ஆக்கமும் ஊக்கமும் கிடைக்கவேண்டுமென பிரார்த்திக்கிறோம்.

Dambulla-Public-Rally
Dambulla-Public-Rally
Dambulla-Public-Rally
Dambulla-Public-Rally
Dambulla-Public-Rally
Dambulla-Public-Rally
Dambulla-Public-Rally
Show More

“இந்த நேரத்தில் வேலைநிறுத்தம் என்பது மக்களை ஆட்சியாளர்களை நோக்கித் தள்ளிவிடுவதாகும்”-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் கே. டீ. லால்காந்த-

(-தேசிய தொழிற்சங்க நிலையத்தின் மறுமலர்ச்சியின் வருகைக்கான வேலைத்திட்டத்தை மக்கள்மயப்படுத்துதல் – 2024.07.11-) மூன்றாவது உலகத்தில் முன்னேற்றமடைந்து வருகின்ற ஒரு நாடு என நாங்கள் நீண்டகாலமாக பேசிவந்தோம். நான் பாடசாலை செல்கின்ற காலத்தில் அந்தக் கதையைக் கேட்டதும் எனக்கு 60 வயதாகின்ற வேளையிலாவது முன்னேற்றமடையுமென நினைத்தேன். எமது பிள்ளைகள் இளமைப் பருவத்தை அடையும்போது நாடு முன்னேற்றமடைந்திருக்குமென்ற ஓர் உணர்வு தோன்றியது. எனினும் 2022 ஏப்பிரல் மாதத்தில் நாங்கள் வங்குரோத்து அடைந்த நாடு என பிரகடனம் செய்யப்பட்டது. இப்போது நாங்கள் […]

(-தேசிய தொழிற்சங்க நிலையத்தின் மறுமலர்ச்சியின் வருகைக்கான வேலைத்திட்டத்தை மக்கள்மயப்படுத்துதல் – 2024.07.11-)

NTUC

மூன்றாவது உலகத்தில் முன்னேற்றமடைந்து வருகின்ற ஒரு நாடு என நாங்கள் நீண்டகாலமாக பேசிவந்தோம். நான் பாடசாலை செல்கின்ற காலத்தில் அந்தக் கதையைக் கேட்டதும் எனக்கு 60 வயதாகின்ற வேளையிலாவது முன்னேற்றமடையுமென நினைத்தேன். எமது பிள்ளைகள் இளமைப் பருவத்தை அடையும்போது நாடு முன்னேற்றமடைந்திருக்குமென்ற ஓர் உணர்வு தோன்றியது. எனினும் 2022 ஏப்பிரல் மாதத்தில் நாங்கள் வங்குரோத்து அடைந்த நாடு என பிரகடனம் செய்யப்பட்டது. இப்போது நாங்கள் பொருளாதார, சமூக, கலாச்சாரம் ஆகிய எல்லாத்துறைகளிலும் சீரழிந்த வங்குரோத்து அடைந்த ஒரு நாடாவோம். ஆட்சியாளனும் உத்தியோகபூர்வமாக அதனை ஏற்றுக்கொண்டான். உழைக்கும் மக்கள் என்றவகையில் அரச பிரிவு, அரச ஆதிக்கமுடைய பிரிவு மற்றும் பொருளாதாரத்தின் மிகமுக்கியான பகுதியான தனியார் பிரிவும் பெருந்தோட்டப் பிரிவும் இருக்கின்றது. அதைப்போலவே இளைப்பாறியவர்களின் வாழ்க்கை சம்பந்தமாகவும் பேசப்படவேண்டும். இந்த அனைத்துத் துறைகளும் சீரழிந்துள்ளன. தொழிற்சங்கக் கோரிக்கைகளை அடிப்படையாகக்கொண்ட அனைத்துப் போராட்டங்களும் இடம்பெறுவது முன்னர்கூறிய வங்குரோத்து நிலைமையின் கீழாகும். இதற்கு முன்னர் அவ்வாறான நிலைமையொன்று இருக்கவில்லை.

வங்குரோத்து நிலைமைக்கு உள்ளாகியதன் காரணமாகவே 2022 இல் அதுவரை நிலவிய அரசியல் காரணமாக மக்கள் பிளவுபட்டு பிரிந்தார்கள். அதன் ஒரு விளைவுதான் கோட்டாபய ராஜபக்ஷ பதவியைக் கைவிட்டு தப்பியோடவேண்டி ஏற்பட்டமை. போராட்டத்தின்போது மக்கள் அரசியல் கலாச்சாரத்தினால் பிளவுண்டு பிரிந்தார்கள். 2022 மே மாதம் 09 ஆந் திகதி பிரதமர் தப்பியோடினார். இந்த நாட்டில் நிலவிய அரசியலில் இருந்து பிளவுபட்டு பிரிந்துசென்ற மக்கள் வீதியில் இறங்கி போராட்டமொன்றை நடாத்தியதால் வித்தியாசமான நிலைமையொன்று உருவாகியது. பொருளாதார, அரசியல், சமூக, கலாச்சார சீரழிவினைப்போன்றே ஆட்சியாளர்கள் தப்பியோடியதால் அரசியலில் புதிய நிலைமையொன்று உருவாகியது. இன்றளவில் ஆட்சியாளர்கள் விரட்டியடிக்கப்பட வேண்டுமென்று உழைக்கும் மக்கள் அணிதிரண்டுள்ள அரசியலொன்று உருவாகி இருக்கிறது. சீரழிவிற்கான பதிலென்றவகையில் ஆட்சியாளர்களை விரட்டியடிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். ஆட்சியாளர்களைத் தவிர ஏனைய அனைவரும் பொதுவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதனால் ஆட்சியாளர்களை விரட்டியடித்து நாட்டுக்கு புதியதொரு நிலைமையை, மறுமலர்ச்சியை, இதற்கு முன்னர் எமது நாட்டில் தோன்றியிராத புதிய நிலைமையொன்றை உருவாக்கிக்கொள்ள நிர்மாணிக்கவேண்டிய தேவையுடன் முழுநாடுமே துடித்துக்கொண்டிருக்கிறது. அதற்கான போராட்டமொன்று நாட்டில் அமுலாகிக்கொண்டிருக்கிறது. அது தேர்தல் களத்தின் போராட்டமாகும்.

தேர்தல் களத்தின் போராட்டத்தினால் இதுவரை இருந்த ஆட்சியாளர்களால் வெற்றிபெற முடியாதென்பதை ஆட்சியாளர்களும் மக்களும் விளங்கிக்கொண்டுள்ளார்கள். உள்ளூரதிகாரசபைத் தேர்தலை பிற்போட்டமை, மாகாண சபைகள் தேர்தல் பற்றி ஒருவார்த்தைகூட பேசாதிருப்பது, ஜனாதிபதித் தேர்தலை நெருங்கிக் கொண்டிருக்கையில் பல்வேறு நடிப்புகள் மூலமாக வெற்றிபெற இயலாதென்பதை தெளிவாக உணர்ந்துகொண்டிருக்கிறார்கள். ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக பொதுத்தேர்தலை நடாத்துவது எனும் உரையாடலில் ஆரம்பித்த பல்வேறு கலந்துரையாடல்களை இன்னமும் களத்திற்கு கொண்டுவருகிறார்கள். பெரும்பாலும் ஒக்டோபர் 05 ஆந் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடாத்தப்படுமென நம்பப்படுகின்றது. இதுவரை காலமும் இருந்த ஆட்சியாளர்களை விரட்டியடித்து உழைக்கும் மக்களை முதன்மையாகக்கொண்ட முற்போக்கான மக்களின் ஆட்சியை அமைத்துக்கொள்வதை நாங்கள் நெருங்கிக்கொண்டிருக்கிறோம். அதனால் எமது தொழில்சார் போராட்ட நடவடிக்கைகளை இந்த நிலைமையை நன்றாக அலசிப்பார்த்தே தெரிவுசெய்வோம். அப்படியில்லாமல் போராட்ட நடவடிக்கைகளை தெரிவுசெய்வதற்கான உரிமை எவருக்கும் கிடையாது. உழைக்கும் வர்க்கத்திற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் தமக்கே உரியதாக ஆட்சியை தாபித்துக்கொள்ள நெருங்கிக்கொண்டிருக்கையில் எந்தவொரு வேண்டுகோள் சம்பந்தமாகவும் இந்தப் புதிய அரசியல் நிலைமை பற்றிக் கவனத்திற்கொள்ளப்பட்டே ஆகவேண்டும். நிலைமைகளுக்குப் புறம்பான போராட்டங்கள் கிடையாது.

அரச பிரிவு, அரச ஆதிக்கமுடைய பிரிவு, தனியார் பிரிவும் மற்றும் பெருந்தோட்டப் பிரிவும் போன்றே இளைப்பாறியவர்களின் போராட்டங்களுக்கு பதில்களை கண்டறிவது எப்படியென நிலவுகின்ற இந்த நிலைமையின் கீழேயே கருத்திற்கொள்ள வேண்டும். அதிலிருந்து விலகிய தீர்மானங்களை எடுக்க முற்போக்கான எவருக்குமே இயலுமை கிடையாது. சம்பள முரண்பாட்டு பிரச்சினை மற்றும் வேறு விடயங்களை அடிப்படையாகக்கொண்டு புகையிரத வேலைநிறுத்தமொன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. ரூபா 25,000 வரையான கொடுப்பனவினை பெற்றுக்கொள்வதற்காக மற்றுமொரு போராட்டம் நடைபெற்று வருகின்றது. அதற்கு முன்னர் மருத்துவர்களுக்கான ரூபா 25,000 கொடுப்பனவினை ரூபா 70,000 வரை அதிகரித்தார்கள். அது அதிகரிக்கப்பட வேண்டும். அது தொடர்பில் எந்தவிதமான சிக்கலும் கிடையாது. பதவிநிலைத் தரத்தில் உள்ளவர்களுக்கும் அதிகரிக்கப்பட்டது. அதேவேளையில் ஏனையோருக்கும் அதிகரிக்கப்பட வேண்டுமென்ற போராட்டமும் சரியானதே. ஆசியரியர்களின் போராட்டத்தின்போது தொழிற்சங்க கூட்டமைப்பொன்று இருக்கிறது. இந்தக் கூட்டமைப்பு வேலைநிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இற்றைவரை பெறப்படவேண்டிய சம்பள அதிகரிப்பின் 2/3 பகுதியை பெற்றுக்கொள்ள முன்வந்தார்கள். சுகாதாரத்துறையில் வேலைநிறுத்தமல்லாத ஆர்ப்பாட்டங்கள் இன்னமும் இடம்பெற்று வருகின்றன. இங்கு அனைத்து தொழிற்சங்கங்ககளும் முன்வைத்துள்ள கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவையாகும்.

NTUC

இந்த நிலைமையயில் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களின் எதிர்பார்ப்பு நிலவுகின்றது. குறிப்பாக கல்வி சம்பந்தமான சிக்கல் பாரதூரமானதாகும். கொரோனா பிச்சினையில் இருந்து பொருளாதார நெருக்கடி நிலைமை வரை பிள்ளைகளின் கல்வி சீரழிந்துள்ளது. இவ்வாறான நிலைமையில் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்தால் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் வலிக்கின்றது. இந்த ஆட்சியாளர்களை விரட்டியடித்து புதிய ஆட்சியாளர்களை நிறுவுவதற்கான போராட்டத்தில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பிள்ளைகள் அனைவரும் ஒரு பக்கத்திலேயே இருக்கிறார்கள். வேலைநிறுத்தத்தில் அது இரண்டாக பிளவுபடுகின்றது. பெற்றோர்களும் பிள்ளைகளும் ஒரு பக்கத்தில் நின்றுகொண்டு அதிபர்களும் ஆசிரியர்களும் மற்றைய பக்கத்தில் நிற்கிறார்கள். பற்றிக்கொள்ள வைக்கோல்கூட இல்லாதிருக்கின்ற ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஆட்சியாளர் கும்பல் பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளின் பக்கத்தில் நிற்கிறார்கள். பொதுமக்களின் சார்பில் தோற்றுவதற்காக வைக்கோலில்கூட தொங்கிக்கொள்ள ஆளுங் கும்பல் முயற்சிசெய்கின்றது. அதிபர் ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்தை ரணில் விக்கிரமசிங்க பற்றிப்பிடிப்பதற்கான கொடியாக மாற்றிக்கொள்கிறார்கள். தேசிய தொழிற்சங்க நிலையத்தின் தூரநோக்கின்படி இந்த நேரத்தில் ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் ஆட்சியாளர்களுக்கு தொங்கிப்பிடிப்பதற்கான வாய்ப்பினையும் பொதுவான போராட்டத்திற்கு பாதகமான நிலைமையையும் உருவாக்குகின்றது. இந்த ஆட்சியாளர்களை விரட்டியடிப்பதற்காக போராடுவோம் என்றே நாங்கள் அதிபர் ஆசிரியர்களுக்கு கூறுகிறோம். ஆம், இந்த ஆட்சியாளர்களிடமிருந்து 2/3 சம்பள அதிகரிப்பினை வென்றெடுக்கவும் முடியாது.

நாங்கள் வேலைநிறுத்தம் செய்யாமல் வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமென முன்மொழிகிறோம். எனினும் தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோமென கூறிவருகின்றன. தோழர் மகிந்த போன்ற ஒருவர் அப்படிப்பட்ட இடத்தில் வர்க்கத்தின் ஒற்றுமையை வைத்துக்கொள்வதற்கான நிலைமையை சமநிலைப்படுத்த வேண்டும். பொது நடவடிக்கைகளில் இருக்கவும் வேண்டும். இந்த தொழிற்சங்கங்களின் நோக்கினை தேசிய போராட்டமொன்றை நோக்கிக் கொண்டுவர உள்ளகப் போராட்டமொன்றை மேற்கொள்ள வேண்டியுள்ளது. வேலைநிறுத்தத்திற்குப் பதிலாக ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களை இணைத்துக்கொண்ட ஏனைய எதிர்கால நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளார்கள். அது ஒரு நல்ல நிலைமையாகும். சுகாதாரத்துறையின் கோரிக்கைகளைப் பெற்றுக்கொள்வதற்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபடவேண்டுமென முன்மொழியப்பட்டவேளையில் நாங்கள் அது பொறுத்தமற்றதெனக் கூறினோம். நாமனைவரும் ஒன்றுசேர்ந்து “கோரிக்கைகளை பெற்றுக்கொடுக்கமுடியாத ஆட்சியாளர்களை விரட்டியடிப்போம்” எனும் போராட்டக் கோஷத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டும். புகையிரத வேலைநிறுத்தமொன்றை மேற்கொள்வதானால் சில தினங்களுக்கு முன்னராக அதனை அறிவிக்குமாறு நீண்டகாலமாக நாங்கள் அந்த தோழர்களிடம் சுட்டிக்காட்டி இருக்கிறோம். வேலையை முடித்துக்கொண்டு பிற்பகல் வீடுசெல்ல வரும்போது வேலைநிறுத்தம் செய்யப்பட்டிருப்பின் பொதுமக்கள் எல்லையற்ற சிரமங்களை அனுபவிப்பார்கள். தொழிற்சங்க இயக்கம் இந்த விடயங்கள் பற்றி அதிக கவனம் செலுத்தவேண்டும்.

இந்த ஆட்சியாளர்கள் உழைக்கும் மக்களுக்கு பெற்றுக்கொடுத்த போராட்டக்களங்கள் இருந்தன. நடுவீதி ஒரு போராட்டக் களமாகும். நடுவீதியின் போராட்டத்தை தேசிய மட்டத்திற்கு கொண்டுவந்தால் அது வேலைநிறுத்தத்தைவிட பலம்பொருந்தியதாகும். ஆர்ப்பாட்டங்களுடன் பொதுமக்கள் இணைவார்களேயொழிய எதிர்க்கமாட்டார்கள். எனினும் ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டால் பெற்றொர்களும் பிள்ளைகளும் எதிர்ப்பதைப்போன்றே ஆட்சியாளர்களுக்கு தொங்கிப்பிடிக்க வைக்கோலும் அகப்பட்டுவிடும். கல்வி வெள்ளையறிக்கையைக் கொண்டுவந்து கல்வியை நாசமாக்க நடவடிக்கை எடுத்த ரணில் விக்கிரமசிங்க பிள்ளைகளின் கல்விக்காக தோற்றுகின்ற வீரர்களாக மாறவும் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொள்கிறார்கள். வேலை நிறுத்தத்தினூடாக சமூகம் இரண்டாக பிளவுபடுகிறது. ஆர்ப்பாட்டத்தின் பலம்பொருந்திய தன்மை சரியான கருத்தியல் வெற்றியின் மூலமாக கொண்டுவரப்படுகிறது. 5/6 பெருன்பான்மை பலத்தை கொண்டிருந்த அரசாங்கத்துடன் பொதுமக்கள் இருந்த 1980 ஜுலை வேலை நிறுத்த தருணத்தில் ஆட்சியாளர்களால் அதனை தாக்கி அடக்க இயலுமாயிற்று. இன்று பொதுமக்கள் அணிதிரண்டிருப்பது ஆட்சியாளர்களை விரட்டியடிப்பதற்காகும். அத்தகைய தருணத்தில் பொதுமக்களிடமிருந்து விலகி போராட்டத்தை கொண்டு செல்வதென்பது அறிந்தோ அறியாமலோ ஆட்சியாளனுக்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதாகும்.
இற்றைவரை பல்வேறு போராட்டக்களங்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோதிலும் பொதுமக்கள் போராட்டக்களத்தில் வெற்றிபெற முடியவில்லை. ஒன்றில் சக்திகள் அவற்றை அடக்கின. கட்சிகளை தடைசெய்தார்கள். எனினும் இலங்கையில் முதல் தடவையாக அவர்களின் போராட்டக்களமான தோ்தல் களத்திற்கு மிகவும் ஒழுங்கமைந்த வகையில் பொதுமக்கள் பிரவேசித்துள்ளார்கள். அதனால் தொழிற்சங்கங்களுக்கும் மக்களுக்குமிடையே பிளவினை ஏற்படுத்த ஆட்சியாளர்கள் அடிக்கடி முயற்சி செய்கிறார்கள். எனினும் ஆட்சியாளர்கள் வேறு வழியில் சென்று மக்களின் உரிமைகளை வழங்காமல் தோ்தலை பிற்போட முயற்சி செய்வார்களாயின் போராட்டக்களத்தை பலப்படுத்தி முன்கொண்டு செல்லவேண்டும். அவ்வாறு செய்யாமல் ஆட்சியாளர்களுக்கு பற்றிக்கொள்ள கொடியை வழங்க குறிப்பாக சுகாதாரம் மற்றும் கல்வித்துறையில் இடமளிக்கக்கூடாது. தொடர்ச்சியான வேலை நிறுத்தம் கிடையாது, தொடர்ச்சியான போராட்டங்கள் இருக்கின்றன. இப்பொழுது இடம்பெற்றுக்கொண்டிருப்பது கோல்பேஸ் போராட்டத்தின் மற்றுமொரு கட்டாகும். கோல்பேஸில் நிறைவு செய்ய முடியாமல் போன வெற்றியை தோ்தல் போராட்டக்களத்தில் பெற்றுக்கொள்ள அண்மித்து வருகிறோம். ஜனாதிபதி பணியாட்டொகுதியில் சம்பளம் பெறுகின்ற தொழிற்சங்க தலைவர்களென கூறிக்கொள்கின்றவர்கள் மக்களை பாதிக்கின்ற தொழிற்சங்க போராட்டங்களை வெளியில் போடுவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். புகையிரத வேலை நிறுத்தம் அப்படிப்பட்ட ஒன்றா என்கின்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது. பழைய மரபுகளை அடிப்படையாகக் கொண்டு போராடுகின்ற யுகமல்ல தற்போது இருப்பது. வித்தியாசமான நிலைமையே காணப்படுகின்றது. இந்த நிலைமையுடன் வித்தியாசமானதாக இருந்து புதிய போராட்டங்களை அறிமுகம் செய்யமுடியாவிட்டால் அது இதுவரை நிலவிய தொழிற்சங்க போராட்டங்களுக்கும் புரிகின்ற அநியாயமாகும். அறிந்தோ அறியாமலோ போராட்டத்தின் வெற்றிக்கொடியை ஏந்துவதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வார்களாயின் அதுவொரு துரோகச் செயலாகும்.

NTUC

மறுமலர்ச்சி யுகத்தை பெற்றுக்கொள்வதற்காக புதிய நிலைமைகளுடன் மாற்றமடைவதையே செய்ய வேண்டும். இந்த இடத்திற்கு அப்பால் மக்கள் நேயமுள்ள ஆட்சியொன்றை நிறுவுகின்ற சுற்றுச்சூழலில் தொழிற்சார் போராட்டங்கள் அனைத்தையும் மேற்கொண்டு வருகின்ற அதேவேளையில் தேசிய தொழிற்சங்க நிலையம் எந்தவிதமான வேலை நிறுத்தத்திலும் பங்கேற்காமை உறுதியானதாகும். ஏனைய தொழிற்சங்கங்களுக்கு நாங்கள் முன்மொழிவது அனைவரும் ஒன்றுசோ்ந்து இந்த ஆட்சியாளர்களை விரட்டியடிப்போம் என்பதாகும். உலக வரலாறு பூராவிலும் நிலவிய அனைத்துப் போராட்டங்களும் முற்போக்கானவையல்ல. பிற்போக்கான போராட்டங்களும் இருந்திருக்கின்றன. முற்போக்கான பகுதிகளுக்கிடையில் பிற்போக்கின் பகுதிகளும் போராடி வருகின்றன. போராட்டமொன்றை நடத்தக்கூடாத ஒரு நேரத்தில் அதிகமான போராட்டங்களை வேண்டி நிற்பது பிற்போக்கான குழுக்களே. இந்த நிலைமையை எம்மால் இனங்காணக்கூடியதாக இருக்கவேண்டும். ரணில் ராஜபக்ஷாக்களை ஒட்டுமொத்தமாக விரயடிப்பதற்கான வேலை நிறுத்தமொன்றுக்கு அழைப்பு விடுத்தாலேயொழிய தேசிய தொழிற்சங்க நிலையம் வேறு கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட போராட்டங்களில் ஈடுபடமாட்டாது. அதற்குப் பதிலாக போராட வேண்டிய எத்தனையோ விடயங்கள் இருக்கின்றன. கடந்த நாட்களில் “வேலை நிறுத்தம் செய்து கொண்டே போராடுவோமேயொழிய வேலை செய்து கொண்டு போராடுவதில்லை.” எனும் போராட்டக் கோஷமொன்று வந்தது. இந்த போராட்டக் கோஷம் ரணில்களின் இல்லாவிட்டால் ஐ.ம.ச. யின் ஒன்றே அன்றி பொதுமக்களின் ஒன்றல்ல. மேலெழுந்தவாரியாக நோக்கும்போது முற்போக்கான ஒன்றாக இருந்தாலும் ஆழமாக பார்த்தால் இந்தப் போராட்டக்கோஷம் மிகவும் பிற்போக்கானது. மஹிந்தாக்களை கோட்டாபயக்களை விரட்டியடித்தது வேலை செய்து கொண்டே முன்னெடுத்த போராட்டங்கள் மூலமாகவே.

ஆசிரியர்களின் பிள்ளைகளின் தேவைகளுக்காக பெற்றோர்களால் வீதியில் இறங்க முடியும். குறிப்பாக இந்த நேரத்தில் வேலை நிறுத்தம் என்பது மக்களை துரோகத்தனமான ஆட்சியாளர்களை நோக்கி தள்ளிவிடுவதாகும். அதாவது ஆட்சியாளர்களுக்காக புரிகின்ற போராட்டமாகும். எனினும் எங்களுடைய கோரிக்கைகளை பெற்றுக்கொடுக்க முடியாத ஆட்சியாளர்களை விரட்டியடிப்பதற்காக பொதுவான போராட்டமொன்றை செய்தோம். கோல்ஃபேஸ் போராட்டத்தை அரைவாசியில் நிறைவு செய்யாமல் பாராளுமன்றத்தைச் சுற்றி வளைக்கின்ற இடத்திற்கு ஒட்டுமொத்த மக்களையும் கொண்டுவந்திருப்பின் அந்தப் போராட்டம் நிறைவடையும். எனினும் கோல்ஃபேஸ் போராட்டத்தின் ஒரு சில தலைவர்கள் அந்தப் போராட்டம் முன்னேறிச் செல்ல இடமளிக்காதிருந்தது மாத்திரமல்ல அறிவித்தல்களைக்கூட வெளியிட்டார்கள். ஜனாதிபதியை விரட்டியடித்து பாராளுமன்றத்தை வைத்துக்கொண்டதன் மூலமாக மீண்டும் கட்டியெழுப்பிய ஜனாதிபதி பதவி காரணமாகவே மக்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கோல்ஃபேஸ் போராட்டத்தை அரைகுறையாக செய்தமையால் ரணில் விக்கிரமசிங்க எனப்படுகின்ற ஆட்சியாளர் ஒருவர் தொடர்ச்சியாக கொடிய பாராளுமன்றத்தினால் கட்டியெழுப்பப்பட்டு இற்றைவரை செயலாற்றி வருகிறார். 76 வருடகால ஆட்சியை விரட்டியடிக்க சரிவர செயலாற்றாவிட்டால் கோல்ஃபேஸ் போராட்டத்தைப் போன்றே இந்த வாய்ப்பும் கருச்சிதைவு அடையமுடியும். நாங்கள் அதற்கு இடமளிக்கக்கூடாது.

தோ்தல் போராட்டக்களத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் உயர்த்தி வைக்கின்ற வெற்றியின் கொடி ஏற்றிவைக்கப்படுவது முட்டாள்தனமான வேலை நிறுத்தங்களால் மீண்டும் செயலிழக்கக்கூடும். முட்டாள்த்தனமானவை எனக்கூறப்படுவது பொதுமக்களை பிளவுபடுத்துகின்ற செயற்பாடுகளுக்காகும். கோல்ஃபேஸ் போராட்டம் கருச்சிதைவு அடைந்ததுபோல் இந்த போராட்டமும் கருச்சிதைவடைந்தால் அது பாரிய அநியாயமாகும். தற்போது தொழிற்சங்க போராட்டத்தின் பிற்போக்காளர்கள் அளவுக்கு வேறு எவருமே போராட்டக்குணம் பொருந்தியவர்களல்ல. தோ்தல் களத்தில் போராட்டத்தை குற்றுயிராக்க தொழிற்சங்க பிற்போக்கான தன்மை வருமாயின் நாங்கள் அந்த கூட்டமைவுகளிலிருந்து வெளியேறி எங்களுடைய நிலைப்பாட்டின் பேரில் சரியான நடவடிக்கைகளை கொண்டு போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டும். உழைத்துக்கொண்டே போராட்டத்தில் ஈடுபடுகின்ற அடிப்படை போராட்டக்களத்தை பலப்படுத்துவதற்கான புதிய நடவடிக்கைகளை தேடிடுவோம். உழைக்கும் மக்களின் பலத்தை நிறுவி எங்களுடைய உரிமைகளை வென்றெடுப்போம்.

Show More

“இந்த சட்டம் போகின்ற வேகத்தையும் தேர்தல் நடத்தப்படுகின்ற வேகத்தையும் பார்த்தால் சட்டம் பாராளுமன்றத்திற்கு வரும்போது ரணில் வீட்டிலேயே” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க-

(-2024.07.11 ஆந் திகதி ஒருங்கிணைந்த சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையை சமர்ப்பித்து…-) ” அரசியலமைப்பு மற்றும் பிற ஏனைய சட்டங்களால் தேவைப்படுத்தப்பட்டுள்ளவாறு 2024 செப்டெம்பர் மாதம் 17 அந் திகதி தொடக்கம் ஒக்டோபர் 16 ஆந் திகதி வரையான காலப்பகுதிக்குள் சனாதிபதி தேர்தல் நடாத்தப்படவேண்டுமென இந்த சபை பிரேரிக்கின்றது.” மேலெழுந்தவாரியாக நோக்கும்போது இவ்வாறான பிரேரணையொன்று தேவைப்படமாட்டாது. அரசியலமைப்பிற்கும் அதற்கு நேரொத்தாக அமையத்தக்கதாகவும் ஆக்கப்பட்டுள்ள சட்டங்களுக்கும் அமைவாக இந்த சனாதிபதி தேர்தல் இந்த செப்டெம்பர் மாதம் 17 அந் […]

(-2024.07.11 ஆந் திகதி ஒருங்கிணைந்த சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையை சமர்ப்பித்து…-)

” அரசியலமைப்பு மற்றும் பிற ஏனைய சட்டங்களால் தேவைப்படுத்தப்பட்டுள்ளவாறு 2024 செப்டெம்பர் மாதம் 17 அந் திகதி தொடக்கம் ஒக்டோபர் 16 ஆந் திகதி வரையான காலப்பகுதிக்குள் சனாதிபதி தேர்தல் நடாத்தப்படவேண்டுமென இந்த சபை பிரேரிக்கின்றது.”

மேலெழுந்தவாரியாக நோக்கும்போது இவ்வாறான பிரேரணையொன்று தேவைப்படமாட்டாது. அரசியலமைப்பிற்கும் அதற்கு நேரொத்தாக அமையத்தக்கதாகவும் ஆக்கப்பட்டுள்ள சட்டங்களுக்கும் அமைவாக இந்த சனாதிபதி தேர்தல் இந்த செப்டெம்பர் மாதம் 17 அந் திகதிக்கும் ஒக்டோபர் 16 ஆந் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதிக்குள் நடாத்தப்படவேண்டும். அதனால் விசேட பிரேரணையொன்று நிறைவேற்றப்பட வேண்டியதில்லை. இந்த 17 ஆம் திகதியளவில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வருகின்றது. மக்கள் மத்தியில் பாரிய சந்தேகமும் குழப்பநிலையும் கொண்டுவரப்பட்டுள்ளதாலேயே இத்தகைய பிரேரணையொன்றைக் கொண்டுவரவேண்டி நேர்ந்துள்ளது. இது இன்று மாத்திரமல்ல உள்ளூரதிகாரசபைகள் தேர்தலும் பிற்போடப்பட்டது. மாகாணசபைகள் தேர்தல் ஐந்து வருடங்களுக்கு கிட்டிய காலமாக நடாத்தப்படவில்லை. அதனால் சனாதிபதி ஏதாவது தில்லுமுல்லு வேலையொன்றை சனாதிபதி தேர்தலுக்கும் போடுவாரென்ற அபிப்பிராயம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. உள்ளூரதிகார சபைகள் தேர்தல் நடைபெறாவிட்டால் ஆணையாளரொருவரால் நிருவகிக்கப்பட முடியும். மாகாண சபைகள் நிறுவப்பட்டிராவிட்டால் ஆளுனரொருவரால் நிருவகிக்கப்பட முடியும். எனினும் சனாதிபதியொருவர் இல்லாவிட்டால் அரசாங்கமும் கிடையாது. ஏனெனில் அமைச்சரவைக்கு தலைமை தாங்குபவர் சனாதிபதியாவார். அதனால் நாங்கள் உடன்படாத விடயங்கள் இருந்தாலும் எமது அரசியலமைப்பில் இது சம்பந்தமாக பரிபூரணமாக விடயங்கள் காட்டப்பட்டுள்ளன. சனாதிபதி பதவியை ஒருமணித்தியாலம்கூட வெற்றிடமாக வைக்கத்தக்கதாக தயாரிக்கப்படவில்லை. அதனால் எமது நாட்டில் கட்டாயமாக சனாதிபதியொருவர் இருத்தல் வேண்டும்.

அடுத்ததாக தோன்றுகின்ற பிரச்சினை இந்த சனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்களா அல்லது ஆறு வருடங்களா என்பதாகும். அரசியலமைப்பின் 30 (2) உறுப்புரையில் மக்களால் தெரிவுசெய்யப்படுகின்ற சனாதிபதி ஐந்து வருடங்கள் பதவிவகிப்பதாக மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும்’ 83 வது உறுப்புரையின் ‘ஆ’ பிரிவில் சனாதிபதியின் பதவிக்காலம் ஆறுவருடங்களை விஞ்சுமாயின் மக்கள் தீர்ப்பு அவசியமென குறிப்பிடப்படுகின்றது. இந்த பிரிவினை அடிப்படையாகக்கொண்டு பொதுச் செயலாளர் ரங்கே பண்டார ஒரு கூட்டத்தின்போது சனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து மற்றும் ஆறு என இருப்பதனால் அதனைத் தீர்ப்பதற்காக திருத்தமொன்றைக் கொண்டுவர அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதென கூறினார். எனினும் அவ்வாறான அமைச்சரவைப் பத்திரமொன்று கொண்டுவரப்படவில்லையென அமைச்சர்கள் கூறினார்கள். எனினும் அதன்பின்னர் அமைச்சரவைப் பத்திரமொன்று கொண்டுவரப்பட்டது. எனவே ரங்கே பண்டாரவும் பிரதிநிதித்துவம் செய்கின்ற இடத்தில் உரையாடலொன்று இடம்பெற்றுள்ளமை அதன்மூலமாக தெளிவாகின்றது. அதன் மூலமாக ஒரு மாளிகைக்குள் சூழ்ச்சி இடம்பெற்று வருவதே கூறப்படுகின்றது. வஜிர நீங்கள் கட்டாயமாக அந்த இடத்தில் இருக்கிறீர்கள். அது கட்டாயமானதாகும். இடம்பெற்றுள்ள உரையாடலை ரங்கே பண்டாரவால் ஒழுக்கத்துடன் பாதுகாக்க முடியாமல் அவர் வெளியில் பாய்ந்தார். அதன் பின்னர் அமைச்சரவை அத்தகைய பத்திரமொன்றைக் கொண்டுவந்தது. “ஆறு வருடங்களை விஞ்சி செல்கின்ற எனும் சொற்களுக்கு பதிலாக ஐந்து வருடங்களை விஞ்சி செல்கின்ற எனும் சொற்கள் மூலமாக அரசியலமைப்பின் 83 (ஆ) உறுப்புரையை திருத்தியமைப்பதற்காக அரசியலமைப்பிற்கு திருத்தமொன்றை சமர்ப்பிக்கும் பொருட்டு மேதகு ஜனாதிபதி அவர்களால் கொண்டுவரப்பட்ட பிரேரணை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது.” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எமது நாட்டில் அரசியல் அமைப்புக்கான பொருள்கோடல் வழங்குகின்ற அதிகாரம் இருப்பது அமைச்சரவைக்கோ பாராளுமன்றத்திற்கோ அல்ல: உயர்நீதிமன்றத்திற்கே ஆகும். பதவிக்காலம் ஐந்தா, ஆறா என்ற கேள்வியை மூன்று தடவைகள் உயர்நீதிமன்றம் தீர்த்து வைத்துள்ளது. 2018 ஜனவரி மாதத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2021 வரை பதவி வகிக்க முடியுமா என அபிப்பிராயத்தை வினவினார். அவ்வேளையில் உயர்நீதிமன்றத்தின் அபிப்பிராயம் ஐந்து வருடங்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவிக்கப்பட்டது. இரண்டாவது தருணம் 2019 ஆண்டு ஜனாதிபதி தோ்தல் பிரகடனம் செய்யப்பட்ட பின்னர் ஒருவர் நீதிமன்றத்திற்கு மனுவொன்றை தாக்கல் செய்து மீண்டும் அந்த நிலைமையை கேள்விக்குட்படுத்தினார். ஜனாதிபதியின் பதவிக்காலம் சம்பந்தமாக உயர்நீதிமன்றத்தின் பொருள்கோடலை பகிரங்கப்படுத்தும்வரை ஜனாதிபதி தோ்தல் நடத்தப்படுவதை தடுக்குமாறு தோ்தல்கள் ஆணைக்குழுவிற்கு கட்டளையொன்றை பிறப்பிக்குமாறு அவர் மனுவினை தாக்கல் செய்திருந்தார். எனினும் அதனை பரிசீலனைக்கு உட்படுத்தப்படாமலேயே நிராகரிக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்தது. அதன் பின்னர் திரு. லெனவ தாக்கல் செய்த மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமல்ல பதவிக்காலம் ஐந்து வருடங்களென தீர்மானித்து ஜனாதிபதி தோ்தல் ஒன்றும் நடாத்தப்பட்டுள்ளது. பொருள்கோடல் வழங்குதல் மாத்திரமன்றி நடைமுறையிலும் நடந்தேறியுள்ளது. அரசியலமைப்பு பற்றிய பொருள்கோடல் வழங்குவதற்கான அதிகாரத்தைக் கொண்டுள்ள உயர்நீதிமன்றம் மூன்று சந்தர்ப்பங்களில் பதவிக்காலம் பற்றிய தனது அபிப்பிராயத்தை தெரிவித்துள்ளது.

அரசியலமைப்புக்கான 19வது திருத்தத்தில் 83வது உறுப்புரை மீது கை வைக்காதிருந்தமைக்கான காரணம் அது மக்கள் தீர்ப்புக்கு ஏதுவாக அமையுமென்பதாலாகும். அதைப்போலவே 32 (ஆ) உறுப்புரையில் ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள் என திட்டவட்டமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் என்ன கூத்து இந்த கதிரையில் அமர்ந்திருப்பதற்காக? திட்டவட்டமாக அது பற்றி குறிப்பிடப்பட்டிருந்தாலும் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் மக்களினதும் கருத்தாக நிலவுவது ரணில் விக்கிரமசிங்க ஒரு கேம்காரன் என்பதால் ஏதாவது முடிச்சுப்போடுவார் என்று. வஜிர அபேவர்த்தன கூறுகிறார் மேலும் பத்து வருடங்கள் இருக்க வாய்ப்பு வழங்கவேண்டுமென்று. சாய்ந்து நிற்பதற்கு உங்களை வைக்கவேண்டும். ரங்கே பண்டார கூறுகிறார் இன்னும் ஒரு வருடம் வைத்துக்கொள்ள மக்கள் கருத்துக்கணிப்பினை நடத்தவேண்டுமென்று. இதனால் நாட்டில் ஒரு குழப்பநிலை உருவாகியிருக்கிறது. ரணில் மிகப்பெரிய சூத்திரதாரி, முடிச்சிபோடுபவர் என நினைத்துக்கொண்டிருப்பவர்கள் பாவம். ரணில் சூத்திரதாரியுமல்ல: முடிச்சிப்போடுபவருமல்ல. அந்த மண்டையால் அடித்த எல்லா கேம்களும் தோல்விகண்டு விட்டன. அவர் அப்படிப்பட்ட பாரிய கேம்காரர் என்றால் அவர் மிக அதிகமாக கட்சிக்குள்ளேயே கேம் அடித்தார். அவர் அரசாங்கத்தை நெறிப்படுத்தியதை விட கட்சித்தான் நெறிப்படுத்தியிருக்கிறது. 94 இருந்து 2019 வரை கட்சி தான் நெறிப்படுத்தியது. அவர் 2002 இல் இருந்து 2004 வரை அரசாங்கத்தை நெறிப்படுத்தினார். அதன் பின்னர் 2015 இல் இருந்து 2019 வரை நெறிப்படுத்தினார். தற்போது இரண்டு வருடங்களாக நெறிப்படுத்துகிறார். கட்சியை முப்பது வருடங்களாக நெறிப்படுத்தி கேம் அடித்து இறுதியில் பாராளுமன்றத்திற்கும் வரமுடியாமல் போயிட்டு அவர் அமைத்த ஒன்றுமே வெற்றிபெறவில்லை. அதனால் ஜனாதிபதி தோ்தலை தடுப்பதற்காக எடுக்கின்ற எந்தவொரு நடவடிக்கையும் வெற்றிபெறமாட்டாதென்பது தெளிவாகின்றது.

முன்னாள் ஜனாதிபதி கேம் மாஸ்டர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தன்னை படுகொலை செய்ய திட்டமிட்டவரின் தோள் மீது கையைபோடும் அளவிற்கு கேம் அடித்தார். இந்த திருத்தத்தை அவசர சட்டம் மூலமாக கொண்டு வர முயற்சி செய்கிறார். 2010 இல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அரசியலமைப்புக்கான 18 வது திருத்தத்தை ஒரு அவசர சட்டமூலமாகவே கொண்டுவந்தார். இரண்டு தடவைகளுக்கு பதிலாக அதற்கு மேலதிகமான தடவைகள் ஜனாதிபதி தோ்தலில் போட்டியிட முடியுமென திருத்தத்தை கொண்டுவந்தார். 2016 ஆம் ஆண்டில் அவருக்கு தோன்றுகின்ற சிக்கலொன்றுடன் சம்பந்தப்பட்ட விடையமொன்றை 2010 டிசம்பர் மாதத்தில் அரசியலமைப்பு திருத்தத்திற்கான அவசர சட்டமூலமாக கொண்டுவந்தார். புதிய பாராளுமன்றத்தில் 2/3 உடன் நிறைவேற்றிக்கொள்ள எதிர்பார்த்துக் கொண்டுவந்த திருத்தம் தோல்விகண்டது. அவசர சட்டமூலமாக கொண்டுவரப்படுவது மிகவும் பாதகமான தேவைகளுக்காகவே என்பதால் 19வது திருத்தத்தில் அந்த வாய்ப்பு நீக்கப்பட்டது. 21 வது திருத்தத்தில் அவசர சட்டமூலங்களை கொண்டுவருதல் தேசிய பாதுகாப்பு பற்றிய பிரச்சினை மற்றும் திடீர் அனர்த்த நிலைமை தோன்றியவிடத்து அவசியமான சட்டங்களை ஆக்குதல் ஆகிய இரண்டு தருணங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. அதைப்போலவே அரசியலமைப்பு திருத்தமொன்றை அவசர சட்டமூலம் ஒன்றாக கொண்டுவரமுடியாது என்பது விசேடமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் அவசர சட்டமூலம் என்ற வகையில் இந்த திருத்தம் பாராளுமன்றத்திற்கு வரமாட்டாது.

பதவிக்காலத்தை ஐந்து வருடங்களாக குறைக்கின்ற பிரேரணை ஒன்றைக் கொண்டுவந்து குழு நிலையில் கேம் அடிப்பாரோ என்ற சமூக உரையாடல் ஒன்றை உருவாக்குகிறார்கள். மாகாண சபைகள் தோ்தல் திருத்தச்சட்டத்தின் சாரத்திற்கு முற்றாகவே முரணான வகையில் திருத்தங்களை மேற்கொண்டார்கள். அதனால் சட்ட வரைஞர்கள் இந்த சட்டத்தின் உட்பொருளில் தாக்கம் ஏற்படுகின்ற திருத்தங்களை குழுநிலையில் கொண்டுவர முடியாதென்பதை உறுதி செய்தார்கள். அவசர சட்டமூலம் என்ற வகையில் கொண்டுவரவும் முடியாவிட்டால் எதற்காக அமைச்சரவை முன்மொழிவொன்று அங்கீகரிக்கப்பட்டது.? அமைச்சரவை திருத்தத்திற்கு இணங்க சம்பந்தப்பட்ட திருத்தங்கள் சட்டவரைஞர் திணைக்களத்தினால் வகுக்கப்படவேண்டும். அந்த சட்டமூலம் அமைச்சரவைக்கு வரவேண்டும். அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு ஒரு வாரம் காத்திருக்கவேண்டும். அதன் பின்னர் பாராளுன்றத்தில் இரண்டு வார காலம் இருக்கவேண்டும். அதற்கிடையில் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்து மூன்று வார காலம் பெற்றுக்கொடுக்க வேண்டும். இவ்விதமாக கிட்டத்தட்ட ஒன்பது வாரங்களுக்கு மேற்பட்ட காலம் எடுக்கும்.

அதைவேளையில் இந்த 17 ஆம் திகதி ஜனாதிபதி தோ்தலை பிரகடனம் செய்வதற்கான அதிகாரம் தோ்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கின்றது. தோ்தல்கள் ஆணைக்குழு 16 நாட்களுக்கும் 21 நாட்களுக்கும் இடையில் வேட்பு மனுக்களை கோரவேண்டும். 28 நாட்களுக்கும் 42 நாட்களுக்கும் இடையில் தோ்தல் நடாத்தப்படல் வேண்டும். இந்த சட்டம் போகின்ற வேகத்தையும் தோ்தல் நடாத்தப்படுகின்ற வேகத்தையும் பார்த்தால் சட்டம் பாராளுமன்றத்திற்கு வரும்போது ரணில் வீட்டில் இருப்பார். தனது காலத்திற்குள் எந்தவிதமான ஏற்புடைமையும் இல்லாத சட்டமாகும். உயர்நீதிமன்றத்தினால் மிகவும் சிறந்த முறையில் பொருள்கோடல் வழங்கப்பட்டுள்ள சட்டமொன்று சம்பந்தமாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த போன்ற ஒருவர் அமைச்சரவையில் ஏன் கையை உயர்த்தினார்.? இது ஒரு பைத்தியக்காரத்தனமான செயல் என விளங்கவில்லையா? உண்மையாகவே எடுத்துக்கொண்டால் 83 (ஆ) உறுப்புரை பயனற்ற ஒரு பிரிவாகும். உயிர் இல்லை. 32 (ஆ) உறுப்புரையில் உள்ளடக்கப்பட்டுள்ள திருத்தத்தின்படி 83 (ஆ) உறுப்புரை உயிரற்றதாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இறந்த உறுப்புரையொன்றை நீக்கவேண்டுமானால் பின்னொரு நேரத்திலே நீக்குவோம். முக்கியமான விடயம் என்னவென்றால் 83 வது பிரிவில் கைவைக்க வேண்டுமானால் மக்கள் தீர்ப்பு ஒன்று அவசியமாகும். ஜனாதிபதி தோ்தல் ஒன்று நடாத்தப்படுகின்ற வேளையில் மக்கள் கருத்துக்கணிப்பொன்றையும் கொண்டுவர முயற்சி செய்வதன் மூலமாக சமூகத்திலே பாரிய குழப்பநிலை உருவாகும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே இவை அனைத்தையும் செய்கிறார். அடிக்கடி சமூகத்தில் சந்தேகம், ஐயப்பாடு, குழப்பநிலை, அவநம்பிக்கையை உருவாக்குவது அவருடைய பொழுதுபோக்காக அமைந்துள்ளது. சமூகத்தை குழப்பநிலைக்கு தள்ளிவிட்டு சிரித்து மகிழ்வதை ரணில் விக்கிரமசிங்க தனது பொழுதுபோக்காக கொண்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் சந்தேகத்தையும் அவநம்பிக்கையையும் வளர்த்து சிரிப்பது அவருடைய பொழுதுபோக்காகும். ஒரு முடிச்சிப்போடுவார். ஆட்கள் அதற்கு பின்னால் போவார்கள். எல்லோருமே ஒன்று சோ்ந்து சிரிப்பார்கள். சிறுபிள்ளைத்தனமான மனோநிலையே இருக்கின்றது.

இப்படிப்பட்ட ஒருவருக்கு சுசில் பிரேமஜயந்த போன்ற ஒருவர் எதற்காக கீழ்படிவது? அமைச்சரவையில் இது பற்றி கூறியிருக்கலாமே. சட்டவல்லுனர், மிகப்பெரிய அறிவாளி விஜேதாச ராஜபக்ஷ அமைச்சரவையில் இருக்கிறாறே. அவர்கள் இதை அங்கீகரித்து அனுப்புகிறார்களே. சமூகத்தில் குழப்பநிலையை ஏற்படுத்த பல்வேறு முடிச்சிகள் போடப்படுவதை இன்று பாராளுமன்றத்தில் தோற்கடிக்கவேண்டும். ரணில் விக்கிரமசிங்க மேலேயிருந்து போடுகின்ற முடிச்சிகளுக்கு இந்த பாராளுமன்றம் கட்டுப்பட மாட்டாதென்பதை தோ்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கவேண்டும். பாராளுமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள சட்டங்களுக்கு நேரொத்ததாக ஜனாதிபதி தோ்தலை நடாத்த நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். அத்தகைய கோரிக்கையொன்று அவசியமில்லாவிட்டாலும் நிலவுகின்ற குழப்பநிலைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக இந்த பிரேரணையை நிறைவேற்றுகிறோம். ரணில் விக்கிரமசிங்க குழப்பமடைந்துள்ளார். நான் அறிந்த வகையில் அரசாங்கத்திற்குள் மூன்று வேட்பாளர்கள் போட்டியிடுவதற்கான தயார் நிலையில் இருக்கிறார்கள். அமைச்சரவைக்குள்ளேயே இருவர் இருக்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்க, விஜேதாச ராஜபக்ஷ இருவருமே ஜனாதிபதி வேட்பாளர்கள் எனக்கூறிக்கொள்கிறார்கள். எனினும் இருவரும் அமைச்சரவையில் ஒன்றுகூடுகிறார்கள். அதற்கு மேலதிகமாக ஆளுங்கட்சியின் தம்பிக்க பெரேரா அவர்களும் வேட்பாளராக போட்டியிடுவதாகக் கூறுகிறார். விஜேதாச வருவாரா, தம்மிக வருவாரா, நாமல் என்ன செய்வார், பசில் ராஜபக்ஷ என்ன செய்வார்? என்ற குழப்பநிலை ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருக்கிறது. அவர் தோ்தல் சம்பந்தமாக தனக்கு இருக்கின்ற குழப்பநிலையை சமூகம் மீது சுமத்தப் பார்க்கிறார். சமூகம் மீது சுமத்தாமல் அமைந்துள்ள குழப்ப நிலையிலிருந்து விடுபட முயற்சி செய்யுமாறு நாங்கள் அவரிடம் கூறிக்கொள்கிறோம்.

Show More

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்திற்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையிலான சந்திப்பு

(-Colombo, July 08, 2024-) ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (UNICEF) இலங்கைப் பிரதிநிதி திரு. Christian Skoog மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் தோழர் ஹரினி அமரசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (08) முற்பகல் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. எதிர்காலத்தில் நடாத்தப்படவுள்ள தேர்தல் காலப்பகுதிக்குள் சிறுவர்களுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைத்துக்கொள்ளல் மற்றும் பிள்ளைகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துதல் சம்பந்தமாக அரசியல் கட்சிகளுக்கு விழிப்புணர்வூட்டுவதற்கான UNICEF நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு […]

(-Colombo, July 08, 2024-)

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (UNICEF) இலங்கைப் பிரதிநிதி திரு. Christian Skoog மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் தோழர் ஹரினி அமரசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (08) முற்பகல் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

எதிர்காலத்தில் நடாத்தப்படவுள்ள தேர்தல் காலப்பகுதிக்குள் சிறுவர்களுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைத்துக்கொள்ளல் மற்றும் பிள்ளைகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துதல் சம்பந்தமாக அரசியல் கட்சிகளுக்கு விழிப்புணர்வூட்டுவதற்கான UNICEF நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு படிமுறையாகவே இந்த சந்திப்பு இடம்பெற்றது. தேர்தல் காலத்தில் சிறுவர்களின் உரிமைகள் மீறப்படாதிருப்பதற்காக மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பிற்கான தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் பற்றி இதன்போது UNICEF பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டதோடு எதிர்கால இலங்கையில் சிறுவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகின்ற சமூகமொன்றை தாபித்தல் தேசிய மக்கள் சக்தியின் எதிர்பார்ப்பு எனவும் வலியுறுத்தப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் UNICEF இலங்கை அலுவலகத்தின் தொடர்பாடல் பிரதானி திரு. Bismarck Swangin அவர்களும் இணைந்திருந்ததோடு UNICEF இலங்கை அமைப்பினால் சிறுவர்களின் பாதுகாப்பிற்காக தயாரிக்கப்பட்ட கொள்கைச் சட்டகம் இதன்போது தேசிய மக்கள் சக்தியிடம் கையளிக்கப்பட்டது.

Unisef-to-npp-sri-lanka
Show More

“புதிய அரசியல் கலாச்சாரத்தினால் மாத்திரமே பொருளாதார தீர்வினை அடையமுடியும்.” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க-

(-கால்நடை மருத்துவர்கள் மற்றும் கால்நடை வளங்கள் தொழில்வாண்மையாளர்களின்தேசிய மாநாடு – 2024 – 07- 06-) அரசியல் நிலைமாற்றமொன்றை மேற்கொள்ள அண்மித்துள்ள நேரத்திலேயே நாங்கள் இந்த உரையாடலை மேற்கொள்கிறோம். இந்த மாதம் 17 ஆம் திகதி ஜனாதிபதி தோ்தலை நடாத்துவதற்கான அதிகாரம் தோ்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கின்றது. எனினும் தோ்தல் நடாத்தப்படுமா இல்லையா என்கின்ற ஐயப்பாடு சமூகத்தில் நிலவுகிறது. எமது அரசியலமைப்பின் 19 வது திருத்தம் மூலமாக ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டுள்ள காலம் ஐந்து வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அரசியல் அமைப்பு […]

(-கால்நடை மருத்துவர்கள் மற்றும் கால்நடை வளங்கள் தொழில்வாண்மையாளர்களின்
தேசிய மாநாடு – 2024 – 07- 06-)

Vet-Summit

அரசியல் நிலைமாற்றமொன்றை மேற்கொள்ள அண்மித்துள்ள நேரத்திலேயே நாங்கள் இந்த உரையாடலை மேற்கொள்கிறோம். இந்த மாதம் 17 ஆம் திகதி ஜனாதிபதி தோ்தலை நடாத்துவதற்கான அதிகாரம் தோ்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கின்றது. எனினும் தோ்தல் நடாத்தப்படுமா இல்லையா என்கின்ற ஐயப்பாடு சமூகத்தில் நிலவுகிறது. எமது அரசியலமைப்பின் 19 வது திருத்தம் மூலமாக ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டுள்ள காலம் ஐந்து வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அரசியல் அமைப்பு பற்றிய பொருள்கோடலை வழங்குகின்ற உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மேற்படி பதவிக்காலம் ஐந்து வருடங்களென ஊகித்துள்ளனர். அரசியலமைப்பில் இருக்கின்ற சிறிய துவாரங்களை பயன்படுத்திக்கொண்டு விடாப்பிடியாக அதிகாரத்தில் தொங்கிக்கொண்டிருப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறான முயற்சியை மேற்கொண்டு வருபவர் மக்கள் ஆணை மூலமாக அதிகாரத்திற்கு வந்த ஒரு தலைவரல்ல. மக்கள் அவருக்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யக்கூட அதிகாரத்தை கொடுக்கவில்லை. பாராளுமன்றத்தினூடாக பெற்றுக்கொள்கின்ற அதிகாரத்தின் மூலமாக பலவந்தமாக அதிகாரத்தில் தொடர்ந்து இருப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து முயற்சிகளையும் தோற்கடிப்போம் என்பதை நாங்கள் உங்கள் முன்னிலையில் உறுதியாகக்கூறுகிறோம்.

இந்தப் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வாக அமைவது பொருளாதாரத் தீர்வேயன்றி அரசியல் தீர்வுகளல்லவென அவர் கூறினார். எங்களுடைய இந்த நெருக்கடியை தீர்த்துவைக்க ஆரம்பிக்கமுடிவது அரசியல் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க ஆரம்பித்தால் மாத்திரமே என நாங்கள் நம்புகிறோம். எந்தவொரு நாட்டையும் கட்டியெழுப்புவதற்காக மக்கள் ஆணையைக் கொண்ட ஆட்சியொன்று அவசியம். பொருளாதாரம் சீரழிந்துள்ள ஒரு நேரத்தில் அத்தியாவசியமான காரணியாக அமைவது அது சம்பந்தமாக மேற்கொள்ளப்படுகின்ற தீர்வுச் செயற்பாடுகள் கட்டாயமாக மக்களின் ஆணையிலிருந்து பிறப்பதாக அமையவேண்டும். இரண்டாவது விடயம் தான் நெருக்கடிக்கான தீர்வுகளை நெருக்கடியின் சிருஷ்டிக் கர்த்தாக்களால் கண்டுபிடிக்க முடியாதென்பது. பொதுமக்கள் அது தொடர்பில் நம்பிக்கை வைப்பதும் கிடையாது. இந்த நெருக்கடியின் பெரும் பங்கினை வகிப்பது இந்த அரசியல் கலாச்சாரமாகும். எமது நாட்டுக்கும் அத்தியாவசியமான பெருந்தொகையான கருத்திட்டங்கள் பின்நோக்கி நகர்ந்துள்ளன. அநாவசியமான கருத்திட்டங்கள் அமுலாக்கப்பட்டு வருகின்றன. உங்கள் திணைக்களத்தினால் விஞ்ஞான ரீதியான அடிப்படையின் பேரில் முன்வைக்கப்படுகின்ற விடயங்களை நிராகரித்து விலங்குகளை இறக்குமதி செய்தார்கள். அத்தியாவசிய கருத்திட்டங்களுக்கு பணத்தை ஒதுக்காமல் வேறுவேறு விடங்களுக்காக பணத்தை ஒதுக்குகிறார்கள். அங்கு இயங்கிவருவது மறைமுகமான அரசியல் கரமாகும். பொருளாதார தீர்வுக்கான பாதையை புதிய அரசியல் கலாச்சாரம் மூலமாக மாத்திரமே உருவாக்க முடியும். அரசியல் கலாச்சாரத்தின் நிலைமாற்றம் பாரியளவில் எமது கைகளிலேயே பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.

Vet-Summit

பகிரங்க சேவையும் பகிரங்க ஊழியர்களின் கணிசமான எண்ணிக்கையும் இந்த மறைமுகமான அரசியல் கரத்தினால் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது. கால்நடை வளங்கள் பற்றி என்னிடமிருப்பது மோப்பமாகும். உங்களிடமிருப்பது அறிவாகும். எந்தவொரு துறையையும் அபிவிருத்தி செய்கையில் அந்த தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள சிறப்பறிஞர்கள் பொறுப்பினை திட்டவட்டமாக குறிப்பிட்டு செயலாற்றத் தொடங்குவோம். அரசியல்வாதிக்கும் தொழில்வாண்மையாளருக்குமிடையில் வைத்துக்கொள்ளப்படவேண்டிய வரையறைகளை பிரித்தொதுக்கியிராமையால் பேரழிவுக்கு அது வழிசமைக்கின்றது. கொள்வனவு செய்வதற்கான ஒழுங்கமைந்த நடைமுறையை கடைப்பிடிப்பதன் மூலமாக தொழில்வாண்மையாளர் டென்டர் சபையில் கொள்வனவுகள் பற்றி தீர்மானிக்கவேண்டியுள்ளது. அரசியல்வாதி தொழில்வாண்மையாளரின் செயற்பொறுப்பினை ஒரு புறம் ஒதுக்கிவைத்துவிட்டு தான் தெரிவு செய்கின்ற ஒருவரிடம் கையளிக்க முயற்சி செய்கிறார். கரிம உரத்தை சீனாவிலிருந்து இறக்குமதி செய்கின்ற தருணத்தில் பாரிய சச்சரவு ஏற்பட்டது. இந்த உரத்தை இலங்கைக்கு இறக்குமதி செய்வதானால் எமது நாட்டில் விரிவடையாத நுண்ணங்கிகள் பிரவேசிப்பதால் எமது நாட்டுக்கு ஆபத்து விளையுமென்று அந்த துறையிலிருந்த விவசாய மற்றும் மண்ணியல் நிபுணர்கள் கூறினார்கள். அரசியல்வாதி ஆராய்ச்சி செய்கின்ற உத்தியோகத்தர்கள் ஒரு இன்ஜெக்ஷன் மூலமாக இவற்றில் நுண்ணங்கிகளை உட்புகுத்தியதாக கூறுகிறார். தமது பணியை முறைப்படி ஈடேற்றிய தொழில்வாண்மையாளர்களுக்கு சமூகத்தின் முன்னிலையில் அச்சுறுத்தலையும் அபகீர்த்தியையும் ஏற்படுத்தினார்கள். அந்த தொழில்வாண்மையாளர்கள் தமது நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்ளாமல் எமது நாட்டின் சுற்றாடல் முறைமையை பாதுகாப்பதற்காக மேற்கொள்கின்ற முயற்சிகள் தொடர்பில் நாங்கள் நன்றிக்கூற கடமைப்பட்டிருக்கிறோம். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இந்த சம்பந்தப்பட்ட விடயத்தை முறைப்படியே பிரித்தொதுக்களுக்கு இலக்காக்குவோம். கால்நடை வளங்கள் பற்றிய அபிவிருத்தித் தொடர்பான திட்டங்களை வகுக்க, அமுலாக்க, வழிகாட்டல்களை வழங்கவேண்டியது அமைச்சரல்ல. அதனை செய்யவேண்டியவர்கள் அது பற்றிய முறைமைச் சார்ந்த கல்வியறிவு பெற்றுள்ள அனுபவம்வாய்ந்த நீங்களேயாவீர்கள்.

நாட்டு மக்களின் போஷாக்கிற்கு அவசியமான பால், இறைச்சி, முட்டை, மீன் மற்றும் விவசாய உற்பத்திகளை கால்நடை வளங்கள் துறைமூலமாகவே பூர்த்தி செய்து கொள்கிறோம். நாங்கள் போஷாக்கு தேவை தொடர்பான பாரிய நெருக்கடியிலேயே இருக்கிறோம். வயது 5 வருடங்களுக்கு குறைவாக பிள்ளைகளின் 19% போஷாக்கின்மைக்கு இறையாகியுள்ளார்கள். கர்ப்பிணித் தாய்மார்களில் ஏறக்குறைய 22% வீதத்திற்கு கிட்டிய எண்ணிக்கை கொண்டோர் இரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். எடைகுறைந்த பிள்ளைகளின் பிறப்பு எண்ணிக்கை துரிதமாக அதிகரித்து வருகிறது. பிரஜை ஒருவரின் நாளாந்த பால் தேவை 200 மில்லிமீற்றராகும். ஒருவருடத்திற்கு 1600 மில்லியன் லீற்றர் பால் அவசியம். 2022 இல் சமர்ப்பித்த அறிக்கைக்கிணங்க 380 மில்லியன் இருந்தாலும் 2023 இல் 345 மில்லியன் லீற்றரே இருந்தது. ஒரு சிலர் பால் நுகரப்படுகின்ற அளவின்படியே கணிப்பிடுகிறார்கள். அதன்படி நாங்கள் 40% வீதத்தை உற்பத்தி செய்துள்ளதாக கூறுகிறார்கள். அது சரியான கணிப்பீடு அல்ல. எதிர்காலத்தில் நுகரப்படுகின்ற பாலின் அளவு மேலும் குறைவடையும். அதிலிருந்து கோரமுடியாது. பால் உற்பத்தி அதிகரித்துவிட்டதென எம்மால் கூறமுடியாது. நுகரப்படுகின்ற அளவு போதுமானதா என்பதைத்தான் நாங்கள் பார்க்கவேண்டும். அதற்கிணங்க நாங்கள் பாலில் தண்ணீரைவு கண்டுவிட்டோம் என எம்மால் கூறிவிட இயலாது. மக்களின் போஷாக்கு தேவையை நிறைவு செய்வதற்காக எமக்கு கால்நடை வளங்கள்துறை மிகவும் முக்கியமானது.

Vet-Summit

எமது நாட்டின் பால் உற்பத்தியில் 90% வீதத்திற்கு கிட்டிய அளவினை சிறிய உற்பத்தியாளர்களே வழங்குகிறார்கள். அந்த உற்பத்தியாளர்களின் ஏறக்குறைய 80% வீதமானவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே இருக்கிறார்கள். அது அவர்களின் பொருளாதாரத் தரத்தை பலப்படுத்த போதுமானதாக அமையவில்லை. எமது நாடு எதிர்நோக்கியுள்ள பிரதானமான பிரச்சினை வறுமையாகும். பாரம்பரிய ரீதியான வறுமை, ஏதேனும் அனர்த்தம் காரணமாக ஏற்படுகின்ற வறுமை, எதிர்பாராத நிலைமைகள் காரணமாக ஏற்படுகின்ற வறுமை, தொலைதூர கிராமிய குடியேற்றங்களில் பிறந்தமை காரணமாக பொருளாதார வாய்ப்புகளை இழந்துள்ளமையால் ஏற்பட்டுள்ள வறுமை என்பன அவையாகும். இந்த வறுமையை சமூகத்திலிருந்து ஒழித்துக்கட்டுவது எவ்வாறு என்பது நாங்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினையாகும். வறுமை நிலைக்குள்ளான மக்களை பொருளாதாரச் செயற்பாடுக்குள் அழைக்கவேண்டுமானால் அவர்களுக்கு தான் ஈடுபடுகின்ற பொருளாதார சாத்திய வளம் தமக்கு பலம்பொருந்திய வருமானத்தை பெற்றுக்கொடுக்கின்ற சாத்தியவளமாக விருத்தி செய்யப்படல் வேண்டும். வறுமையை ஒழித்துக் கட்டுவதற்காக பொருளாதார வாய்ப்புக்கள் அற்ற குழுக்களுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை விலங்கு வேளாண்மை கால்நடை வளங்கள் துறைமூலமாக உருவாக்கிக் கொடுக்கலாம். அதற்கான சாத்தியவளம் அதில் நிலவுகின்றது. கிராமிய வறுமைநிலையை ஒழித்துக்கட்டுவதற்காக கால்நடை வளத்துறைக்கு பாரிய பொறுப்பு கையளிக்கப்படுகின்றது. ஒரு காலகட்டத்தில் அரசாங்கத்தினால் இறக்குமதி செய்த ஒரு பசுவின் பெறுமதி நாலரை இலட்சமாக அமைந்தது. அரசாங்கம் இரண்டரை இலட்சம் மானியத்தை விவசாயி ஒருவருக்கு வழங்க தீர்மானித்தது. மிகவும் அதிகமான மானியத்தை இரண்டு அமைச்சர்களே பெற்றுக்கொண்டார்கள். அந்த அமைச்சர்களே வறுமையை ஒழித்துக்கொண்டார்கள். வறுமையை ஒழிப்பதற்காக அந்தந்த பொருளாதார சாத்தியவளங்கள் இலக்குகளைக் கொண்டதாக மக்களுடன் பயணிக்கவேண்டும்.

தமக்கு அவசியமான உணவு பொருட்களை அந்தந்த நாடுகள் உற்பத்தி செய்துகொள்ளவேண்டியதன் அவசியத்தை எமக்கு கொவிட்டுக்கு பிற்பட்ட நிலைமையினால் நிரூபிக்கப்பட்டுள்ளது. தேசிய பொருளாதாரத்திட்டமொன்றில் தமது அத்தியாவசியமான உணவுகளை தாம் உற்பத்தி செய்து கொள்ளவேண்டும் என்கின்ற எண்ணக்கரு முழுஉலகிலும் பேசப்பட்டு வருகின்றது. அதனால் புதிய பொருளாதாரத் திட்டமொன்றுக்கு நாங்கள் செல்லவேண்டும். எமது பொருளாதார நெருக்கடியின் இரண்டு தோற்றுவாய்கள் இருக்கின்றன. ஒன்று திறைசேரி வருடமொன்றுக்கு தேவையான அளவிலான ரூபாவை ஈட்டுவதில்லை. எமது வருமானம் ஆண்டொன்றுக்கு 4168 பில்லியன் ரூபாவாகும். கடன் செலுத்துதல், கடன் தவணை செலுத்துதல், அரசாங்க செலவினம் அனைத்தினதும் கூட்டுத்தொகை 11,277 பில்லியன் ரூபாவாகும். நாங்கள் திறைசேரிக்கு அவசியமான ரூபாவின் அளவினைப்போன்றே நாட்டுக்கு அவசியமான டொலர் அளவினையும் ஈட்டுவதில்லை. இதுவரை கடைப்பிடித்த பொருளாதாரக் கொள்கையின் பெறுபேறுதான் இது அரசாங்கம் செல்வத்தை ஈட்டுவது கிடையாது. வெளியில் உற்பத்தி செய்யப்படுகின்ற செல்வத்தின் ஒரு பகுதியை அரசாங்கம் எடுத்து செலவிட்டு வருகின்றது. கம்பெனிகளிடமிருந்து அதன் இலாபம் மீது வரி விதித்து ஒரு பகுதியை எடுத்துக்கொள்கிறது. வெளியிலுள்ள பொருளாதாரத்தை விருத்தி செய்து விரிவடையச் செய்விப்பதன் மூலமாக மாத்திரமே நெருக்கடிக்கு தீர்வினை கண்டறிய முடியும். வெளியிலுள்ள பொருளாதாரத்தை வளர்த்துக்கொள்ள வேண்டியது எமது திட்டமாக அமையவேண்டும். வெளியிலுள்ள பொருளாதாரத்தை வளர்த்துக்கொள்வது எப்படி? வெளியிலுள்ள பொருளாதாரத்தின் சாத்திய வளம் நிலவுகின்ற ஒரு இடம் தான் கால்நடை வளங்கள் துறை. அதனைச் சார்ந்த வகையில் பல கைத்தொழில்களை ஆரம்பிக்க முடியும். அந்தக் கைத்தொழில்களிலிருந்து தேசிய செல்வத்தை பிறப்பித்தவிடத்து அதில் ஒரு பங்கினை அரசாங்கத்தால் எடுத்துக்கொள்ள முடியும். பால் மற்றும் பால்சார்ந்த உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்காக 2022 ஆம் ஆண்டில் 68 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. (6,800 கோடி) இந்த உற்பத்தியை நாங்கள் அதிகரித்துக்கொண்டால் 200 மில்லியன் டொலருக்கு கிட்டியளவினை சேமித்துக்கொள்ள முடியும்.

Vet-Summit

15 ஆம் நூற்றாண்டிலிருந்து 19 ஆம் நூற்றாண்டுவரை கலைஞர்கள், விஞ்ஞானிகள், அரசியல் சிந்தனையாளர்கள் போன்றவர்கள் எதிர்கால உலகம் பற்றி சிந்தித்துப் பார்த்தார்கள். அவ்வாறு சிந்தித்துப் பார்த்த எதிர்காலம் இருபதாம் நூற்றாண்டிலே பௌதீக ரீதியாக கட்டியெழுப்பப்பட்டது. தொழிநுட்பத்தின் விஞ்ஞானத்தின் முன்னேற்றத்தினால் மனிதர்களுக்கு உண்ணக்கொடுக்க முடியுமென்ற நம்பிக்கை உருவாக்கப்பட்டது. அதைப்போலவே விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பத்துறைகளில் பாரிய மாற்றங்கள் இ்டம்பெற்றன. அந்த மாற்றத்திற்கு நோரொத்த வகையில் உலகின் பெரும்பாலான நாடுகள் தனது பொருளதாரத்தை வகுத்துக்கொண்டன. எமது பொருளாதாரத்தையும் அதற்கிணங்க வகுத்துக் கொள்வதற்கு பதிலாக நாங்கள் அவற்றின் நுகர்வோர்களாக மாறினோம். பாரிய ஔடத முன்னேற்றமொன்று இடம்பெற்றது. சுகாதாரம் பற்றி கண்டறிவதற்காக நவீன உபகரணங்கள் உருவாகின. எனினும் நாங்கள் செய்ததோ அவற்றை கொண்டு வந்து நுகர்ந்தது மாத்திரமே. விஞ்ஞானத்தில், தொழிநுட்பத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தை எங்களுடைய பொருளாதார அபிவிருத்திக்கான உபாகமார்க்கமாக எடுத்துக்கொள்வதில் நாங்கள் தோல்வியடைந்தோம்.

உற்பத்திக் கிரயத்தை குறைத்துக் கொள்ளவும், தரத்தை அதிகரித்துக்கொள்ளவும், உற்பத்தியிலும் இடையறாத தன்மையை பாதுகாத்துக்கொள்ளவும் தொழில்நுட்பத்திலும் விஞ்ஞானத்திலும் இடம்பெற்ற மாற்றத்தை நாங்கள் இணைத்துக்கொள்ள வேண்டும். போஷாக்கு தேவையை நிவர்த்தி செய்தல், வறுமையை ஒழித்துக்கட்டுதல் தேசிய பொருளாதாரம் எதிர்நோக்கியுள்ள சிக்கல்களை தீர்த்துக்கொள்வதற்காக கால்நடை வளங்கள் துறையை முக்கியமாக கருதுகிறோம். செல்லப்பிராணிகளின் பாதுகாப்பு மூலமாக தொழில்வாய்ப்புகளை பிறப்பிப்பதற்காகவும் கால்நடை வளங்கள் துறை முக்கியமானதாக அமைகின்றது. வெளியில் பொருளாதாரமொன்று கட்டியெழுப்பப்பட்டால் மாத்திரமே தொழில்வாய்ப்புகள் பிறக்கும். அதைப்போலவே நிகழ்கால இளைஞர் தலைமுறையினரின் உளப்பாங்குகள் சுதந்திரமான தொழில்களையே நோக்கியதாக இருக்கிறது. புதிய இளைஞனின் உளப்பாங்குகளுக்கு ஒத்துவரக்கூடிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுப்பதில் நாங்கள் தோல்வியடைந்திருக்கிறோம். எமது தேசிய பொருளாதாரத்திட்டத்தின் முக்கியமான ஒரு துறையாக கால்நடை வளங்கள்துறை வழங்கப்படுகிறது. எவ்வாறு நாங்கள் கால்நடை வளங்கள் துறையை அபிவிருத்தி செய்வது? உங்களை அதன் தொழில்நுட்ப வினைஞர்களாக, விஞ்ஞானிகளாக, ஆராய்ச்சியாளர்களாக இனங்கண்டுள்ள சரியானவற்றை அமுலாக்குவதற்கு அவசியமான அரசியல் தலைமைத்துவத்தை வழங்குவதுதான் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைச் சோ்ந்த எங்களின் பொறுப்பு. இந்த தொழிற்றுறையை விருத்தி செய்வதற்காக ஏற்கெனவே திட்டமொன்றை நாங்கள் வகுத்துள்ளோம்.

இந்த இடத்தில் மிகவும் முக்கியமானதாக அமைவது மனித வளமாகும். எமது உழைப்பு படையணியின் தொழில்வாண்மைத்துறையில் 15% வீதமானவர்களே இருக்கிறார்கள். தொழில்சார் உழைப்பு மூலமாகத்தான் ஏனைய உழைப்புகள் உற்பத்தித்திறன் மிக்கதாக அமையும். தொழில்சார் உழைப்புகளை நிர்மாணித்துக்கொள்வதற்காக நீண்ட நேரத்தையும் பாரிய செலவுச் சுமையையும் நாங்கள் வகிப்போம். பயிற்றப்பட்ட இந்த தொழில்சார் துறையை பாதுகாத்துக்கொள்ள வேண்டியது அரசியல்வாதியினதும் கொள்கைவகுப்போரதும் பொறுப்பாகும். தொழில்வாண்மையாளர்களின் உரிமைகளை நாங்கள் பாதுகாக்க வேண்டும். துறைசார்ந்த பாரிய அனுபவம் வாய்ந்த ஆராய்ச்சியாளர்களான நீங்கள் எமக்கு ஒரு திட்டத்தை தயாரித்துக் கொடுங்கள். நாங்கள் அவசியமான தலைமைத்துவத்தை வழங்குகிறோம். ஒரு இடத்தில் நாங்கள் முடிச்சுப்போட்டுக்கொள்ளுவோம். இந்த நாட்டை கட்டியெழுப்ப அனைவருக்கும் உண்மையான தேவை இருக்க வேண்டும். தோன்றியுள்ள இந்த அனர்த்தத்திலிருந்து இந்த தாய் நாட்டையும் எமது நாட்டு மக்களையும் மீடெடுக்க வேண்டு மென்ற ஒரே நூலினால் நாங்கள் முடிச்சுப்போட்டுக்கொள்வோம். நாங்கள் அனைவரும் ஒரே இணக்கப்பாட்டில் இருந்துகொண்டு நாட்டை புதிய திசைக்கு நிலைநாட்டுவோம். அதற்கான அனைவரையும் ஒன்றுசேருமாறு அழைப்பு விடுக்கிறோம்.

Vet-Summit
Show More