Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

NPP News

தேசிய மக்கள் சக்தி அநுரவிற்காக கட்டுப்பணம் வைப்புச் செய்தது!

(-2024-08-06 – தோ்தல்கள் செயலகம், ஜனாதிபதி தோ்தலுக்கான கட்டுப்பணம் வைப்புச் செய்யப்பட்ட வேளையில்-) எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆந் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக போட்டியிடுகின்ற தோழர் அநுர குமார திசாநாயக்கவிற்காக கட்டுப்பணம் வைப்புச்செய்தல் இன்று (06) முற்பகல் இராஜகிரிய தேர்தல்கள் அலுவலகத்தில் இடம்பெற்றது. தேசிய மக்கள் சக்தியின் சார்பில் இத்தருணத்திற்காக பொதுச்செயலாளர் டாக்டர் நிஹால் அபேசிங்க, தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் […]

(-2024-08-06 – தோ்தல்கள் செயலகம், ஜனாதிபதி தோ்தலுக்கான கட்டுப்பணம் வைப்புச் செய்யப்பட்ட வேளையில்-)

Electionteam

எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆந் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக போட்டியிடுகின்ற தோழர் அநுர குமார திசாநாயக்கவிற்காக கட்டுப்பணம் வைப்புச்செய்தல் இன்று (06) முற்பகல் இராஜகிரிய தேர்தல்கள் அலுவலகத்தில் இடம்பெற்றது.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் இத்தருணத்திற்காக பொதுச்செயலாளர் டாக்டர் நிஹால் அபேசிங்க, தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் ஹரினி அமரசூரிய, தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் முனீர் முளப்பர், தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் ஹினிதும சுனில் செனெவி, தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் மஹிந்த ரத்நாயக்க, தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் விறாய் கெலீ பல்தசார், தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் எரங்க குணசேகர, சனாதிபதி சட்டத்தரணி உபுல் குமரப்பெரும, சட்டத்தரணி சுனில் வட்டகல உள்ளிட்ட குழுவினர் சமுகமளித்தனர்.

தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமர சூரிய, தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று குழு உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் தோழர் விஜித ஹேரத், தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று குழு உறுப்பினர் மௌலவி முனீர் முலபர் மற்றும் சோசியலிச இளைஞர் சங்கத்தின் தேசிய நிறைவேற்று குழு உறுப்பினர் சதீஷ் செல்வராஜ் அத்தருணத்தில் கருத்து தெரிவித்தனர்.

ElectionHarini

“நாட்டை நாகரிகமடைந்த நிலைமைக்கு உயர்த்தி வைக்கக்கூடிய”தலைவர் ஒருவரை நியமித்துக் கொள்வதற்கான வாய்ப்பு பிறந்துள்ளது”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று பேரவை உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹிரினி அமரசூரிய-

நாங்கள் நீண்டகாலமாக உழைத்ததும் நீண்டகாலமாக காத்திருந்ததும் இந்த தருணம் வரும்வரையே. இலங்கைக்கு சமூக நீதியை ஏற்படுத்துகின்ற, தெளிவான தூரநோக்கினைக் கொண்ட, நாகரிகமான தலைவர் ஒருவரை தெரிவு செய்து கொள்வதற்கான வாய்ப்பு வரும்வரை நாங்கள் நீண்ட காலமாக காத்திருந்தோம். வரலாற்று ரீதியான மாற்றமொன்றை ஏற்படுத்தி நாட்டை நாகரிகமடைந்த நிலைமைக்கு உயர்த்தி வைக்கக்கூடிய தலைவர் ஒருவரை நியமித்துக் கொள்வதற்கான வாய்ப்பு நாளுக்கு நாள் நெருங்கி வந்துகொண்டிருக்கிறது.

எமது கட்சியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்கவின் வேட்பு மனுக்காக நாங்கள் இன்று கட்டுப்பணத்தை வைப்புச் செய்தோம். இன்னும் 48 நாட்களில் நாட்டு மக்களை உயர்த்தி வைக்கக்கூடிய அந்த தோழரை, அந்த தலைவரை நியமித்துக் கொள்வதற்கான வாய்ப்பு வருகிறது. இன்று இந்த தருணத்தில் அந்த வரலாற்று ரீதியான சந்தர்ப்பத்தின் பங்காளிகளாக அமையக்கிடைத்ததையிட்டு நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம்.

Election-Vijitha

“நாட்டை அநுரவிடம் ஒப்படைக்க மக்கள் தயாராகவே இருக்கிறார்கள்”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்-

ஜனாதிபதி தோ்தலுக்காக எமது கட்சியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்கவிற்காக நாம் அனைவரும் வந்து கட்டுப்பணத்தை வைப்புச் செய்தோம். 15 ஆம் திகதி வேட்பு மனுவை ஒப்படைப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம்.

எமது நாட்டை பொருளாதார ரீதியாக சீரழித்து ஊழல்மிக்க, கீழ்த்தரமான, அசிங்கமான அரசிலை முன்னெடுத்து வந்த யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து நாட்டை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டமொன்றை கொண்ட அரசியலை வெற்றிபெற செய்விக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். நாட்டின் பெரும்பான்மை மக்கள் இந்த தினம் வரும்வரை வழிமேல் விழிவைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நிலவுகின்ற அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைத்து நாட்டை அதலபாதாளத்திலிருந்து மீட்டெடுக்கின்ற வேலைத்திட்டத்தை கொண்டுள்ள அநுரவிடம் நாட்டை ஒப்படைக்க தயாராக இருக்கிறார்கள். தேசிய மக்கள் சக்தி நாட்டு மக்களின் வாக்குகளால் அநுரவிடம் நாட்டை ஒப்படைக்கத் தயார். இந்த செய்தியை நாங்கள் இந்த சந்தர்ப்பத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் கொடுக்கிறோம்.

தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் மௌலவி முனீர் முளப்பர்

Election-Muneer

சோஷலிச இளைஞர் சங்கத்தின் தேசியக்குழு உறுப்பினர் சதீஸ் செல்வராஜ்

Election-Sadeesh
Show More

“திசைகாட்டியால் மாத்திரமே அரசியலை மக்களுக்கு பொறுப்புக்கூறுகின்ற தொழிலாக மாற்றமுடியும்” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க-

(-இளைப்பாறிய முப்படையினர் கூட்டமைவின் தேசிய மாநாடு – மாளிகாவத்த பி.டீ. சிறிசேன மைதானத்தில் – 2024.08.04-) மேடையில் அமர்ந்துள்ள அனைவரும் கடந்த காலத்தில் மேற்கொண்ட முயற்சியின் பெறுபேறு கிடைத்தள்ளது. முன்னாள் கடற்படை தளபதி றியர் அட்மிரால் சிறிமெவன் ரணசிங்க இத்தருணத்திற்கு வந்துள்ளமை எமக்கு பாரிய தெம்பினைத் தருகின்றது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பொறுப்பாக பணியாற்றிய சிரேட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர பெருந்தொகையான குற்றச்செயல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டதால் வேட்டையாடலுக்கு இலக்காகினார். அவரைப்போன்றே அனைவருக்கும் நீதியை நிலைநாட்டவேண்டியது […]

(-இளைப்பாறிய முப்படையினர் கூட்டமைவின் தேசிய மாநாடு – மாளிகாவத்த பி.டீ. சிறிசேன மைதானத்தில் – 2024.08.04-)

Aditana-National-Rally-Anura

மேடையில் அமர்ந்துள்ள அனைவரும் கடந்த காலத்தில் மேற்கொண்ட முயற்சியின் பெறுபேறு கிடைத்தள்ளது. முன்னாள் கடற்படை தளபதி றியர் அட்மிரால் சிறிமெவன் ரணசிங்க இத்தருணத்திற்கு வந்துள்ளமை எமக்கு பாரிய தெம்பினைத் தருகின்றது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பொறுப்பாக பணியாற்றிய சிரேட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர பெருந்தொகையான குற்றச்செயல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டதால் வேட்டையாடலுக்கு இலக்காகினார். அவரைப்போன்றே அனைவருக்கும் நீதியை நிலைநாட்டவேண்டியது எமது பொறுப்பாகும். பொதுவாக இராணுவ படையணியொன்றில் 600 – 700 பேர் வரை இருப்பார்கள். இப்படிநோக்கினால் 30 – 40 படையணிகளைச் சேர்ந்தவர்கள் இங்கு இருக்கிறார்கள். எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு வெற்றிபெறக்கூடியவர்கள் இங்கு குழுமியிருக்கிறார்கள். இது சிலவேளைகளில் பிறரின் கோபாவேசத்தை தூண்டுகின்ற மாநாடாக அமையக்கூடும். அண்மையில் உளவுத்துறை சமர்ப்பித்த அறிக்கையின்படி இரண்டு பிரதான விடயங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. வெளிநாடுகளிலுள்ள இலங்கையர் பாரிய ஆர்வத்துடன் தேசிய மக்கள் சக்தியை சுற்றிக் குழுமி வருகின்றமையும் இளைப்பாறிய முப்படை அங்கத்தவர்கள் தேசிய மக்கள் சக்தியைச் சுற்றிக் குழுமிவருகின்றமையும் காரணமாக தேசிய மக்கள் சக்தி வெற்றிக்கம்பத்தை நோக்கி வீறுநடை போடுகின்றதென்பது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. எழுந்துவருகின்ற சக்தி எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆந் திகதி மகத்தான வெற்றிபெறுவதை எவராலும் தடுக்க இயலாது.

75 வருடகால வரலாற்றினை ஒருபுறம் வைத்துவிட்டு கடந்தகால சம்பவங்களை எடுத்துநோக்கினால் கவலைக்கிடமான தன்மையை விளங்கி்க்கொள்ள முடியும். இதைவிட அருவருப்பான அரசியல் நிகழ்வுகளை இனிமேலும் காணமுடியுமா? பிரசன்ன ரணதுங்க கப்பம் பெற்றமை, மஹிந்தானந்த நிதிசார் குற்றச்செயல் புரிந்தமை பற்றிய குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டவேளையில் ரணில் விக்கிரமசிங்கவே பிரதமர். ரத்வத்தே சிறைச்சாலைக்குள் அத்துமீறிப் பிரவேசித்து கைத்துப்பாக்கியை கைதிகளின் தலையில் வைத்து அச்சுறுத்தினார் என்பதை அவர்கள் அறிவார்கள். மறுபுறத்தில் ஐ.ம.ச. கட்டியெழுப்பபடுகையில் தவிசாளராக தெரிவுசெய்யப்பட்ட பீல்ட் மார்ஷல் இப்போது வெளியில், மொட்டின் தவிசாளர் ஜீ. எல். பீரிஸ் இப்போது உள்ளே. மஹிந்த ராஜபக்ஷவை அப்பச்சி என அழைத்த எஸ் எம். சந்திரசேனவும் ரோஹித அபேகுணவர்தனவும் இப்போது ரணிலை அப்பச்சி என அழைக்கிறார்கள். எவ்வளவு அருவருப்பான அரசியல்? இது வெட்கமற்ற அரசியல். ரணிலை சிறைக்கு அனுப்பும்வரை நித்திரைகொள்ள மாட்டேன் எனக்கூறிய மஹிந்தானந்த இப்போது ரணில் மடியில் உறங்குகிறார். மத்திய வங்கியை பட்டப்பகலில் பகற்கொள்ளையடித்தவர் ரணில் எனக் கூறிய பந்துல குணவர்தன இப்போது எங்கே இருக்கிறார்’? இந்த அரசியலுக்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். பிரசைகள் மீது, தாய்நாடு மீது பொறுப்பற்றவகையில் செயலாற்றுகின்ற யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அரசியலை தாய்நாட்டுக்குப் பொறுப்புக்கூறுகின்ற தொழிலாக தேசிய மக்கள் சக்தியால் மாத்திரமே மாற்றியமைக்க முடியும்.

Aditana-National-Rally-Crowd

இராணுவத்தின் சிப்பாய்கள் என்றவகையில் நீங்கள் உறுதிப்பிரமாணம்செய்து அரசியலமைப்பினை பாதுகாப்பதற்காக உயிரைக்கூட அர்ப்பணித்துள்ளீர்கள். நாட்டின் சுயாதீனத்தன்மை, தன்னாதிக்கத்தை பாதுகாப்பதற்காக உங்கள் அருகில் இருந்த நண்பன் உயிரிழக்கையில், அங்கங்களை இழந்திருக்கையில் நீங்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்றிய போதிலும் அந்த உறுதிப்பிரமாணத்தை மீறவில்லை. உங்கள் உடலை சன்னங்கள் ஊடறுத்து, கண்கள் குருடாகி, கைகால்கள் முடமாகி இருக்கின்ற வேளையில் ஆட்சியாளன் அரசியலமைப்பை மீறுகிறான். சந்திரிக்கா தனது ஆட்சிக்காலத்தில் அன்பர்களுக்கு காணி பகிர்ந்தளித்து தவறாளியாகிறார். பொருளாதாரத்தை வீழ்த்தியமை தொடர்பில் உயர் நீதிமன்றம் மஹிந்தவை தவறாளியாக்கியது. மைத்திரிபால சிறிசேன நிலா வெளிச்சத்தில் அரசியல் சதித்திட்டத்தை தீட்டியமை, பாராளுமன்றத்தை கலைத்தமை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுத்துக்கொள்ளாமல், றோயல் பார்க் யுவதியை படுகொலை செய்தவரை ஜனாதிபதி தத்துவத்தைக் கொண்டு விடுதலை செய்தமை முதலியவற்றுக்காக உயர்நீதிமன்றத்தினால் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டார். கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக நிலவிய பல வழக்குகளை ஜனாதிபதி விடுப்பாட்டு உரிமையின் கீழ் அகற்றிக்கொண்டார். பொருளாதாரத்தை சீர்குலைத்தமை தொடர்பிலும் அவர் குற்றவாளியாக்கப்பட்டார். அடிப்படை உரிமை மீறல் மனு சமர்ப்பிக்கப்பட்டமை காரணமாக பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட தேசபந்து தென்னக்கோனின் தொழில் இடை நிறுத்தம் செய்யப்படவேண்டுமென உயர் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தது. பிரதமர் தினேஷ் குணவர்தன அந்தக் கட்டளைக்கு சவால் விடுத்ததோடு சபாநாயகருடனும் பிரதம நீதியரசருடனும் கலந்து பேசி பிரச்சினையை தீர்த்துக்கொள்ளுமாறு ரணில் விக்கிரமசிங்க கூறினார். குற்றச் சாட்டப்பட்டவரும் நீதிமன்ற நீதியரசயொருவரும் கலந்து பேசி வழக்கு தீர்ப்பு அளிப்பது எந்த நாட்டிலே? இன்னமும் உயர்நீதிமன்றம் சபாநாயகருடன் பேச்சுவார்த்தை நடத்தாமை தொடர்பில் நாங்கள் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளோம். வழக்கு தீர்ப்பினை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால் பொலிஸ் மா அதிபர் என்ற வகையில் ஒரு கையொப்பத்தை இட்டுக்காட்டுமாறு நாங்கள் தேசபந்து தென்னக்கோனுக்கு சவால் விடுக்கிறோம். பொலிசுக்கு கொடுக்கப்பட்டுள்ள கடமைகளை ஈடேற்ற தேசபந்துவே தேவையா? அப்படியானால் நிறுவனங்களின் பயன் என்ன? வேலையைத்தான் செய்ய வேண்டுமானால் அடுத்ததாக இருக்கின்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரை பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கலாம். ஆனால் ரணிலுக்கு தேவையான வேலைகளை செய்து கொள்ள தேசபந்து தென்னக்கோனே தேவை. பட்டப்பகலிலே நீதிமன்றத்துடன் ஜனாதிபதி மோதுவாரென்றால், பட்டப்பகலில் ஜனாதிபதி சட்டத்தை மீறுவாரென்றால் உங்களின் தொழிலால் ஆற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயற்பொறுப்பின் பயன் என்ன? அப்படியானால் சட்டத்தின் ஆட்சி பாதுகாக்கப்படுகின்ற ஒரு நாட்டை உருவாக்குவதில் தடையேற்படுத்துகின்ற ஆட்சிக்குழு விரட்டியடிக்கப்பட வேண்டும். அதற்காக பாராதீனப்படுத்த முடியாத உரிமையும் கடமையும் உங்களுக்கு இருக்கிறதென நான் நம்புகிறேன்.

நீங்கள் எங்களுடைய தாய் நாட்டின் சுயாதீனத்தன்மையையும் தன்னாதிக்கத்தையும் பாதுகாக்க எவ்வளவு தான் அர்ப்பணிப்பு செய்தாலும் பொருளாதார ரீதியாக சீரழிந்த ஒரு நாட்டிலே அதனை சாதிக்க முடியாது. எமது நாட்டின் நிதி அதிகாரம் பாராளுமன்றத்திடமே இருக்கிறது. அரசாங்கமே வரவு செலவுத் திட்டத்தை வகுகின்றது என்பது எமக்கு தெரியும். எமது நாட்டின் வரிகளை தீர்மானிப்பதும் வரவு செலவு ஆவணத்தை தயாரிப்பதும் சர்வதேச நாணய நிதியமாகும். பொருளாதாரம் சீரழிந்த ஒரு நாட்டின் சுயாதீனத்தன்மையும் தன்னாதிக்கமும் கானல் நீராகும். கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் ஆண்டொன்றில் 36,000 கப்பல்கள் பயணிக்கின்றன. கொழும்புத்துறைமுகம் உலகில் 24 வது இடத்தை வகிப்பதோடு இந்தியாவின் ஜவஹர்லால் நேரு துறைமுகம் 34 வது இடத்தையே வகிக்கிறது. எங்களுடைய துறைமுகத்தில் ஒரு ஜெட்டியை இந்தியாவுக்குக் கொடுத்தால் அடுத்த ஜெட்டியை சீனாவுக்கு கொடுக்கவேண்டும். நுரைச்சோலை மின்னிலையம், அம்பாந்தோட்டை துறைமுகம், புகையிரத வீதிகளை அமைத்தல் போன்ற கருத்திட்டங்களில் இந்தியாவும் சீனாவும் போட்டிபோட்டுக் கொள்கின்றன. தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் தேசிய பாதுகாப்பும் சுயாதிபத்தியமும் பாதுகாக்கப்படுகின்ற வேலைத்திட்டமே அமுலாக்கப்படும். எம்மைவிட சிறிய நாடான சிங்கப்பூர் சுயாதிபத்தியத்தை பாதுகாத்துக் கொண்டிருப்பது பொருளாதார ரீதியாக பலமடைந்ததாலேயே ஆகும். அந்த நிலைமைக்கு எமது நாட்டை மாற்றுவது எமது அடிப்படை பொறுப்பாகும்.

Aditana-National-Rally-Crowd-Back

நீண்டகாலமாக மக்கள் விடுதலை முன்னணி என்ற வகையில் நாட்டில் நிலவிய உண்மையான பிரச்சினைகள் பற்றி பொருளாதார பிரச்சினைகள் பற்றி மக்களுக்கு விடயங்களை எடுத்துரைப்போம். எனினும் அவர்கள் உருவாக்கிய இனவாத அரசியல் ஏனைய எல்லா விடயங்களையும் மூடிமறைத்து முழு நாட்டினதும் கவனத்தை யுத்தத்தின் பால் வழிப்படுத்தியது. 1948 இல் பெருந்தோட்ட மக்களின் குடியுரிமை நீக்கப்பட்டது. 56 இல் ஒரு பிரச்சினையை உருவாக்கி 1958 இல் ‘ශ්‍රී’ எழுத்தை அழித்தமை, 1965 இல் “டட்லியின் வயிற்றில் மசாலை வடை” எனக்கூறி பேரணி நடத்தியமை, 1972 இல் தமிழ் ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்டு 1976 இல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியாக மாற்றிக் கொண்டு வட்டுக்கோட்டை மாகாநாட்டில் தனி நாடு பிரகடனம் செய்யப்பட்டமை வரை பிரேரணைகள் அங்கீகரித்துக் கொள்ளப்பட்டன. 1977 இல் அந்த பிரேரணைக்கு மக்கள் ஆணையை பெற்றுக்கொள்வதற்காக உதய சூரியன் சின்னத்தில் தோ்தலில் போட்டியிட்டார்கள். ஜே.ஆர். ஜயவர்தனவின் அதிகார வெறியாட்டத்தில் 1981 இல் அபிவிருத்தி சபை தோ்தல் வாக்குகளை கொள்ளையடித்து யாழ் நூலகத்தை தீக்கிறையாக்கினார்கள். யாழ் மக்களின் ஆன்மீக பிணைப்பு நிலவிய நூலகத்தை தீக்கிரைக்காக்கும்போது அவர்களுடைய இதயங்கள் வெடித்துச் சிதறமாட்டாதா? 1983 இல் கறுப்பு ஜுலை உருவாக்கப்பட்டது. 1982 இல் நடத்தப்படவிருந்த பொதுத்தோ்தல் முறைப்படி நடத்தப்பட்டிருந்தால் யாழ் மக்களின் குரல் பாராளுமன்றத்தில் ஒலித்திருக்கும். எனினும் ஜே.ஆர் ஜயவர்தன தன்னுடைய 5/6 பெரும்பான்மை அதிகாரத்தை பேணி வர செயலாற்றியதன் காரணமாக வடக்கில் ஆயுத போராட்டத்திற்கு வழிசமைத்து 1983 இல் கறுப்பு ஜுலை காரணமாக தற்கொலை குண்டுதாரிகள் உருவாகுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தார். 1999 ஜனாதிபதி தோ்தலில் டவுன் ஹோல் குண்டு வெடிப்பு காரணமாகவே சந்திரிக்கா ஜனாதிபதியாகிறார். 2005 இல் ஜனாதிபதி தோ்தலில் யுத்தமே முக்கிய இடம் வகித்தது. 2010 ஜனாதிபதி தோ்தலில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த கௌரவத்திற்காக இரண்டாவது தடவையாகவும் மஹிந்த ஜனாதிபதியாக்கப்படுகிறார். சரத் பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளராக வருவதும் யுத்தத்திற்கு தலைமைத்துவம் வழங்கியதாலேயே. 2019 இல் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின் உருவாக்கிய குண்டுப்பீதி காரணமாகவே கோட்டாபய ஜனாதிபதியாகிறார். அவர்கள் யுத்தத்தை உருவாக்கி நீண்ட காலமாக அவர்களின் இருப்பினை உறுதி செய்து கொண்டாலும் இப்போது ரணிலும் மஹிந்தவும் யுத்தம் இல்லாமல் போனதால் சோர்வடைந்திருக்கிறார்கள். மீண்டும் ஒரு மதப்பூசலை ஏற்படுத்துவதற்காக வடக்கிலும் தெற்கிலும் முயற்சி செய்து வருகிறார்கள் என்பது எமக்கு தெரியும். அதனாலேயே அவர்களுக்கு தேசபந்து வேண்டும். அவர்கள் ஒருபோதுமே யுத்தத்தில் பாதிப்படைந்தவர்களாக மாறாமல் தமது அரசியலுக்காக அதனை பயன்படுத்தி வந்தார்கள்.

யோஷித்த ராஜபக்ஷவை கடற்படையில் சோ்த்துக் கொள்வதற்காக அதுவரை ஆட்சோ்ப்புக்கு இருந்த குறைந்த பட்ச தகைமையை குறைத்தார்கள். அத்துடன் நின்று விடாமல் பெரிய பிரித்தானியாவில் ஒரு பாடநெறிக்காக ஒருகோடியே எண்பது இலட்சம் ரூபா பொதுப்பணத்தை செலவிட்டார்கள். அதன் பின்னர் யுக்கிரேனுக்கு ஒரு பாடநெறிக்காக அனுப்பி 36 இலட்சம் ரூபாவுக்கு கிட்டிய பொதுப் பணத்தை செலவிட்டார்கள். அதன் பின்னர் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவுடன் இணைத்து 27 தடவைகள் வெளிநாடு செல்வதற்காக வாய்ப்பளித்தார்கள். இந்த நாட்டில் சாதாரண பெற்றோர்களின் பிள்ளைகள் யுத்தத்திற்கு பலியாகின்ற வேளையில் அவர்களின் பிள்ளைகள் யுத்தத்தின் பயனாளிகளாக மாறினார்கள். வடக்கிலுள்ள தாய் தந்தையர்களும் தமது பிள்ளைகள் தொடர்பில் இன்னமும் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இராணுவ சேவையில் இணைந்து ஒழுக்கத்தையும் அறிவையும் வளர்த்துக் கொண்டு ஏனைய தொழில்களை விட முன்கூட்டியே இளைப்பாறுவதற்கான வாய்ப்பு உருவாக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் உழைப்பு வளம் வீணாகிச் செல்ல இடமளிக்காமல் குறிப்பாக தனியார் பாதுகாப்புச் சேவையில் ஈடுபடுத்தப்படுவதற்கான திட்டங்களை வகுப்போம். பாதுகாப்பு படைகளின் ஆட்சோ்ப்பு, பதவியுயர்வு மற்றும் இடமாற்றம் முறையான நடைமுறைமுக்கு இணங்க மேற்கொள்ளப்படுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்போம். எதிரிகள் அவர்களுடைய பிரச்சாரத் திட்டங்களை எம்மைப்பற்றிய ஒரு அச்ச உணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது தொடர்பிலேயே கவனம் செலுத்தி வகுத்து வருகிறார்கள். சமுர்த்தி நலன்பெறுநர்களை சந்திக்க சென்ற தேசிய மக்கள் சக்தி வந்தால் மானியங்களை வெட்டிவிடுமென அச்சுறுத்தி வருகிறார்கள். பாதுகாக்கப்பட வேண்டிய மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தேசிய மக்கள் சக்தியின் முதன்மைச் செயற்பொறுப்பாகும்.

Aditana-National-Rally

இன்றளவில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சுதந்திரமாக பாய்ந்து வர இடமளிக்காத பகைவர்கள் தனியார் முதலீட்டார்ளர்கள் சம்பந்தமாக பல்வேறு அவதூறுகளை கூறிக்கொண்டு பொய்ப்பிரச்சாரங்களை நடாத்தி வருகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலானதாகக் கூறிக்கொள்கின்ற ஊடகம் சஜித்தின் மறைவில் இருந்து கொண்டு மேற்கொண்டு வருகின்ற பிரச்சாரங்களை நாங்கள் அறிவோம். கறுப்புப்பணம் எல்லாவற்றையும் எமக்கெதிராக இந்த தோ்தலின் போது பயன்படுத்துகிறார்கள். சட்டவிரோதமான அனைத்துச் செயற்பாடுகளையும் உயர்ந்த அளவில் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்ற தோ்தலே இது. அந்த அனைத்திற்குமே முகம் கொடுக்கக்கூடிய பாரிய மக்கள் படையணி எம்மைச்சுற்றி இருக்கிறது. எதிரியின் முன்னால் தப்பியோடிச் செல்லாத, எதிரியின் முன்னால் மண்டியிடாத, சிரமங்களை பொருட்படுத்தாமல் வெற்றியை நோக்கி வீறுநடை போட்ட உங்களின் துணிச்சலையும் நம்பிக்கையையும் இந்த சின்னஞ்சிறிய மாயாஜால வித்தைகளால் சிதைத்துவிட முடியாது. ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்ஷ, சஜித் பிரேமதாஸ கறுப்பு பணத்தையும் ஊடகப்பலத்தையும் பிரயோகிப்பார்களானால் அவை அனைத்தையும் எஞ்சிச் செல்லக்கூடிய இளைப்பாறிய முப்படையினர் கூட்டமைவினைச் சோ்ந்தவர்கள் தேசிய மக்கள் சக்தியை சூழ்ந்திருக்கிறார்கள். தமக்கு கிடைக்கின்ற சொச்சத் தொகை ஓய்வூதியத்தை செலவிட்டு ஒரு திட்டவட்டமான நோக்கத்திற்காகவே இங்கு வந்திருக்கிறீர்கள். இந்த விதமான கோபமூட்டல்களுக்கு அகப்படாமல், உச்ச அளவிலான சனநாயகத்துடன், உச்ச அளவிலான அமைதியுடன், எந்தவிதமான விஷமத்தனமான செயலுக்கும் அகப்படாமல், பொறுப்புடையவர்களாக தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக அர்ப்பணிப்பு செய்யவேண்டியது அவசியமாகும். இங்கு வருகை தந்துள்ள அனைவரும் ஊர்களுக்குச் சென்று எழுப்புகின்ற குரலை பொய் பிரச்சாரம் செய்கின்ற தொலைக்காட்சி அலைவரிசைகளால் மழுங்கடிக்க செய்ய முடியாது. தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக உச்ச நம்பிக்கையுடனும் அர்ப்பணிப்புடனும் செயலாற்றுகின்ற குழுவினரே இங்கு குழுமியிருக்கிறார்கள். உணவு வேளையொன்று இல்லாத, கூரைவேய தகடு இல்லாத, சீமெந்து மூடையொன்றை வாங்க முடியாத அப்பாவி மக்களை பகைவனின் சூழ்ச்சிகள் மூலமாக ஏமாற்றுவதற்கு மீண்டும் மீண்டும் முயற்சி செய்வார்கள். ஏமாறுவதிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக திடசங்கற்பத்துடன் பலம் பொருந்திய வகையில் உங்கள் செயற்பொறுப்பினை நீங்கள் ஆற்றுங்கள். நீங்கள் இராணுவத்தில் ஈடேற்றியதும் யுத்தத்தில் ஈடேற்றியதும் அத்தகைய செயற்பொறுப்பினையே. இப்போது எஞ்சியருப்பது தோ்தலின் செயற்பொறுப்பாகும். அதனை நீங்கள் முழுமையாக ஈடேற்றுவது திண்ணமே.

Aditana-National-Rally-Fred-Senewirathne

Aditana-National-Rally-Pushpamali-Ramanayake

Aditana-National-Rally-Harshana-Nanayakkara

Aditana-National-Rally-Sampath-Thuyiyakontha

Aditana-National-Rally-Public

Aditana-National-Rally-Aruna-Jayasekara

Aditana-National-Rally-Band

Aditana-National-Rally-Stage
Show More

“இருளை இறந்தகாலத்திடம் ஒப்படைத்துவிட்டு எமது நாட்டுக்கு வளமான விடியலை உருவாக்கிட முடியும்” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க-

(-மாற்றுத்திறனாளிகள் (வலதுகுறைந்த ஆட்கள்) பற்றிய தேசிய மக்கள் சக்தியின் தேசிய கொள்கையையும் வேலைத்திட்டத்தையும் வெளியிடுதல் – கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரி – 2025.08.03-) பல்வேறு துறைகளில் உடலியலாமை நிலையுற்றவர்கள் தம்மை பாதித்துள்ள நிலைமைகள் பற்றிய விபரங்களை பலவிதமாக எம்மிடம் முன்வைத்தார்கள். அதைப்போலவே தமது திறன்களையும் ஆற்றல்களையும் இந்த மேடையில் வெளிக்காட்டினார்கள். அவற்றைப் பார்க்கும்போது நாங்கள் எந்தளவுக்கு இரக்கமற்ற சமூகமொன்றில் எவ்வளவு நியாயமற்ற சுற்றுச்சூழலில் வாழ்கிறோம் என்பதே ஞாபகத்திற்கு வருகின்றது. நான் ஒரு உத்தரவாதத்தைக் கொடுக்கிறேன். நீங்கள் […]

(-மாற்றுத்திறனாளிகள் (வலதுகுறைந்த ஆட்கள்) பற்றிய தேசிய மக்கள் சக்தியின் தேசிய கொள்கையையும் வேலைத்திட்டத்தையும் வெளியிடுதல் – கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரி – 2025.08.03-)

Ekwa-Ath-Nohara

பல்வேறு துறைகளில் உடலியலாமை நிலையுற்றவர்கள் தம்மை பாதித்துள்ள நிலைமைகள் பற்றிய விபரங்களை பலவிதமாக எம்மிடம் முன்வைத்தார்கள். அதைப்போலவே தமது திறன்களையும் ஆற்றல்களையும் இந்த மேடையில் வெளிக்காட்டினார்கள். அவற்றைப் பார்க்கும்போது நாங்கள் எந்தளவுக்கு இரக்கமற்ற சமூகமொன்றில் எவ்வளவு நியாயமற்ற சுற்றுச்சூழலில் வாழ்கிறோம் என்பதே ஞாபகத்திற்கு வருகின்றது. நான் ஒரு உத்தரவாதத்தைக் கொடுக்கிறேன். நீங்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு கடுகளவேனும் பங்கமேற்பட இடமளிக்கமாட்டோம். எமது நாடு பாரிய சீர்குலைவினை எதிர்நோக்கியதால் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களாக இருப்பது நீங்கள்தான். நாடு எவ்வளவுதாள் சீர்குலைவிற்கு இலக்காகியிருப்பினும் அது தொடர்பில் எந்தவிதமான குற்றச்சாட்டும் இங்கு குழுமியுள்ள உங்கள் மீது முன்வைக்கப்படவில்லை. கண்கள் தெரிகின்ற , காதுகள் கேட்கின்ற, சரியான அசைவுகளைக் கொண்டுள்ளவர்கள்தான் நீண்டகாலமாக எங்கள் நாட்டை ஆட்சிசெய்தார்கள். அதன் பாதகவிளைவுகள் ஒட்டுமொத்த சமூகத்தையும் ஆரத்தழுவி உள்ளன. உங்களைப் பார்க்கும்போது, உங்களின் பேச்சுகளை செவிமடுக்கும்போது, உங்கள் திறமைகள் வெளிப்படுத்தப்படுகையில் நாங்கள் ஏன் இவ்வளவு தாமதித்திருக்கிறோம் என்ற உணர்வு எமக்கு ஏற்படுகின்றது. இந்த இருளை இறந்தகாலத்திடம் ஒப்படைத்துவிட்டு எமது நாட்டுக்கு வளமான விடியலை உருவாக்கிட முடியுமென்ற நம்பிக்கை எம்மிடம் நிலவுகின்றது.

எம்மோடு பல்கலைக்கழகத்தில் கல்விபயின்ற சகோதரர்கள், பழகிய குழுவினர் இங்கே இருக்கிறார்கள். இடைக்கிடையே சந்தித்திருக்கிறோம். சந்தித்த எல்லாச் சந்தர்ப்பங்களையும்விட இன்று எம்மனைவரதும் கண்கள் அகலத்திறந்துவிட்டன என நினைக்கிறோம். எம்மனைவருக்காகவும் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்றை அமைத்துக்கொள்வோமென அழைப்பு விடுக்கிறோம். நாம் எதிர்நோக்குகின்ற சிக்கல்களை கடவுளின் விருப்பம் அல்லது பூர்வஜென்மபலன் என நினைத்து மனதை தேற்றிக்கொண்டோம். உலகம் முன்நோக்கி நகர்ந்து கைத்தொழில் புரட்சி இடம்பெறுகையில் அந்த கைத்தொழில் புரட்சியால் உறிஞ்சிக்கொள்ள முடியாமல் போன பிரிவினரை வலதுகுறைந்த ஆட்கள் என அழைத்தோம். அவர்களை தனிமைப்படுத்தினோம். எனினும் சமூகத்தின் மற்றுமொரு படிமுறையில் அவர்களை கவனித்துக்கொள்வது இரக்கசிந்தை அல்லது புண்ணிய கருமம் எனவும் பிறர்மீது பரிவிரக்கம் காட்டுதல் போன்ற உணர்விற்கு கட்டுப்படுத்தி நலனோம்பலை வழங்கினோம். எனினும் ஐக்கிய நாடுகள் அங்கீகரித்தக்கொண்ட பிரேரணைக்கிணங்க இந்த மக்களின் உரிமைகள் என்றவகையிலான அடிப்படை விடயங்கள் அறிமுகஞ்செய்யப்பட்டு நீண்ட முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. ஒருசில அரசுகள் இந்த சமுதாயத்திற்கு சமத்துவமான உரிமைகளை வழங்கியுள்ளன.

Ekwa-Ath-Nohara

பொலிஸில்சென்று ஒருவரிடம் கேள்விகேட்கும்போது “ஊமைபோல் இருக்காமல் பேசு” எனக் கூறுவார்கள். அந்த இடத்தில் இருப்பது பேசாதித்தல் பற்றிய பிரச்சினையல்ல. அவமதிப்பிற்கு உள்ளாக்குதலும் அச்சுறுத்தலுமாகும். மற்றுமொரு சந்தர்ப்பத்தில் “செவிடன்போல் இருக்கவேண்டாம்” என்பார்கள். மற்றவரை நோகடித்திட, பிறரை அவமதிக்க மற்றவர்களின் உறுப்புகளை பயன்படுத்திக் கொள்கிறார்கள். நாமனைவரும் தவப்புதல்வர்களல்ல. ஒருசில பண்புகளால் ஒருசில பரிபூரணமின்மை நிலவுகின்றது. நீங்களும் மற்றவர்களைப்போல் சமத்துவமான உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கான கொள்கைகளை வகுப்பதும் அமுலாக்குவதுமே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கியமான குறிக்கோளாகும். தேர்தலின்போது முன்வைக்கப்படுகின்ற கொள்கை வெளியீட்டினை பாரதூரமானதாக எடுத்துக்கொள்ள வேண்டாமென தொலைக்காட்சி உரையாடலின்போது ஆட்சியாளர்கள் கூறியது எமக்கு ஞாபகமிருக்கிறது. எனினும் கொள்கை வெளியீடு என்பது ஏதேனுமோர் அரசியல் இயக்கத்தை அதிகாரத்திற்கு கொண்டுவருவதற்காக ஏற்படுத்திக்கொள்கின்ற இணக்கப்பாடாகும். அதனால் கொள்கை வெளியீடுதான் வாக்காளர்களுக்கும் ஆட்சியாளனுக்கும் இடையில் கட்டியெழுப்பப்படுகின்ற உடன்பாடு. இந்த உடன்பாட்டினை சிதைக்க, ஒருபுறம் ஒதுக்கிவைக்க, பொருட்படுத்தாமல்விட எமக்கு உரிமையில்லை. நாங்கள் இந்த உடன்பாட்டினை அமுலாக்குவதற்காக கடப்பாடு கொண்டுள்ளோம்.

ஒரு யுகத்தில் இருந்த குழப்பமான பிரச்சினைகள் இன்று குழப்பமானவையல்ல. ஏதெனுமொரு இயலாமைநிலை கொண்டுள்ள ஒருவருக்கு சமூகத்தில் ஏனையோர் அனுபவித்து வருகின்ற அனைத்தையும் அனுபவிப்பது சிரமமான கருமமல்ல. பொருட்படுத்தாமல் விடுவதே இடம்பெற்றுள்ளது. இயலாமைநிலையுற்ற எவரும் எந்த மட்டத்தில் இருந்தாலும் செலியுலர் போனை பாவிக்கக்கூடிய நிலைமைக்கு தொழில்நுட்பம் முன்னேற்றமடைந்துள்ளது. தற்போது நிலவுகின்ற பெரும்பாலான சிக்கல்களை மருத்துவவியலில் மற்றும் தொழில்நுட்பத்தில் போன்றே சமூக உளப்பாங்குகளால் தீர்த்துவைக்க முடியும். இந்த 21 ஆம் நூற்றாண்டில் நீங்கள் இனிமேலும் உரையாடலுக்கு ஏற்புடையதாகாத பிரஜைகளாக வாழவேண்டியதில்லை. மனித சமுதாயம் அடைந்துள்ள பெருவெற்றிகளை இலக்குகளைக்கொண்டதாக நெறிப்படுத்தி உங்களை உள்ளிட்ட அனைவருக்கும் மனிதநேயமிக்க சமூகமொன்றை உருவாக்க முடியும். அதனாலேயே தேசிய மக்கள் சக்தியைச்சேர்ந்த நாங்கள் “ஒன்றாக பிடி தளராது” என்பதை தொனிப்பொருளாக கொண்டுள்ளோம்.

Ekwa-Ath-Nohara

குறிப்பாக கல்வி சம்பந்தமாக இருக்கின்ற தடைகளை நீக்குவதைப்போலவே தொழில்வாய்ப்புகள் சம்பந்தமாக அனைவருக்கும் நியாயமான அணுகலை வழங்குவோம். வலதுகுறைந்த ஒரு பிள்ளை இருக்கின்ற குடும்பத்திலுள்ள அனைவரும் வேதனையுற்று, சிரமங்களை எதிர்நோக்கி, பொருளாதாரத்திற்கு சுமையாகிவிட்ட நிலைமையிலிருந்து மீட்டெடுக்கவேண்டும். பொருளாதாரத்திற்கு ஏதேனும் பெறுமதியை பெற்றுக்கொடுப்பதற்காக அவர்களின் ஆற்றல்களை பயன்படுத்துவது தேசிய மக்கள் சக்தியின் பிரதானமான ஒரு செயற்பாடாகும். வலதுகுறைந்தவர்களின் சுகாதாரம் மற்றும் நல்வழியுரிமை மீது விசேட கவனஞ் செலுத்தப்படவேண்டியுள்ளது. அது பற்றிக் கவனஞ்செலுத்தி அவர்களின் பாதுகாப்பு மற்றும் நீதி தொடர்பிலான அடிப்படைப் பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும். குறிப்பாக வலதுகுறைந்த பெண் பிள்ளைகள் எதிர்நோக்குகின்ற கவலைக்கிடமான நிலைமைகள் செய்தித்தாள்கள்வாயிலாக வெளிக்கொணரப்பட்டுள்ளன. சீக்கிரமாக மனோபாவரீதியான மாற்றங்கள் ஏற்படவேண்டும். பிறர்மீது ஒத்துணர்வுகொண்ட சமூகத்தைக் கட்டியெழுப்பவேண்டியது அவசியமாகும். அதனூடாகவே பாதுகாப்பு கட்டியெழுப்பப்படும். வலதுகுறைந்த ஆட்களை சமூகத்தில் முனைப்பான பங்காளிகளாக மாற்றுவது எமது அடிப்படை நோக்கமாகும். எமது இந்த கொள்கைகளின் உற்பத்தித்திறன் இருப்பது தரவுகளிலல்ல, மனிதத்துவத்திலாகும். தற்போது இருப்பது மனிதத்துவம் மற்றும் நீதி பற்றிய பிரச்சினையாகும். உங்களையும் எங்களையும் உள்ளிட்ட அனைவரையும் முன்நோக்கி நகர்த்துகின்ற வழிமுறைகளை நிச்சயமாக நாங்கள் அமுலாக்குவோம். நாங்கள் ஒன்றாக பிடி தளராது முன்நோக்கிச் செல்வோமென அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம்.

Ekwa-Ath-Nohara

Ekwa-Ath-Nohara

Ekwa-Ath-Nohara

Ekwa-Ath-Nohara

Ekwa-Ath-Nohara

Ekwa-Ath-Nohara
Ekwa-Ath-Nohara
Ekwa-Ath-Nohara
Show More

“நாட்டை கட்டியெழுப்புவதற்கான தேசிய மக்கள் சக்தியின் கொள்கையின் முதலாவது இடம் கல்விக்கே வழங்கப்படுகிறது.”-தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க-

(இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய ஆசிரியர் மாநாடு – 02.08.2024 – மாளிகாவத்தை P.D. சிறிசேன மைதானம்) ஆசிரியர் சேவை சங்கத்தின் மிகப் பிரமாண்டமான தேசிய ஆசிரியர் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தமைக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை ஓரிடத்திற்கு கொண்டுவர பலர் உழைத்திருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி. இப்பொழுது எமது நாட்டில் ஜனாதிபதி தோ்தல் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. வேட்பு மனு கோரப்படுகின்ற தினமும் தோ்தல் நடத்தப்படுகின்ற தினமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் எந்தவொரு பிரஜைக்கும் தேசிய […]

(இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய ஆசிரியர் மாநாடு – 02.08.2024 – மாளிகாவத்தை P.D. சிறிசேன மைதானம்)

Teachers-Summit

ஆசிரியர் சேவை சங்கத்தின் மிகப் பிரமாண்டமான தேசிய ஆசிரியர் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தமைக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை ஓரிடத்திற்கு கொண்டுவர பலர் உழைத்திருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி.

இப்பொழுது எமது நாட்டில் ஜனாதிபதி தோ்தல் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. வேட்பு மனு கோரப்படுகின்ற தினமும் தோ்தல் நடத்தப்படுகின்ற தினமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் எந்தவொரு பிரஜைக்கும் தேசிய மக்கள் சக்தியின் வெற்றிபற்றிய கடுகளவேனும் சந்தேகமும் ஐயப்பாடும் இருந்திருப்பினும் இந்த பல்லாயிரக்கணக்கில் கூடியுள்ள ஆசிரியர்களை கண்டதும் அந்த சந்தேகம், ஐயப்பாடு மறைந்துபோயிருக்கும். இந்த பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் ஒன்றுசோ்ந்து வெளிக்காட்டுவது செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியின் உறுதியான வெற்றியையேயாகும்.

எமது நாடு பாரிய கவலைக்கிடமான நிலையை அடைந்துள்ளதை நாம் அறிவோம். இந்த சீர்குலைவு எல்லா துறைகளையும் ஊடறுத்துச் செல்கின்றது. கல்வி, சுகாதாரம், சட்டம் மற்றும் பொருளாதாரம் ஆகிய எல்லா துறைகளிலும் சீர்குலைந்த ஒரு நாடே இருக்கிறது. ஆகவே சீர்குலைந்த, சீரழிந்த எமது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான, எதிர்காலம் இழக்கச் செய்விக்கப்பட்டுள்ள எமது பிள்ளைகளின் மற்றும் வாழ்க்கையே இல்லாத நிலைக்கு இட்டுச்செல்லப்பட்டுள்ள எமது பிரஜைகளின் வாழ்க்கையை மேம்படச் செய்வதற்கான ஒரு பாரிய பொறுப்பு எம்மனைவருக்கும் இருக்கிறது. அந்த சுபீட்சமான எதிர்காலத்திற்காக நாம் இந்த அரசியல் அதிகாரத்தை மாற்றியமைத்தாக வேண்டும்.

76 வருடங்கள் பழமையான, தோல்விகண்ட, அழிவுமிக்க அரசியல் பயணப்பாதையிலிருந்து நாம் விலகிச் செல்லவேண்டும். இந்த நாட்டைக் கட்டியெழுப்புவற்கும் முன்னேற்றுவதற்குமான ஆரம்பப் புள்ளி அதுதான். நாங்கள் பல விடயங்களைப் பற்றி பேசலாம். தோன்றியுள்ள நிலைமைகள் பற்றி குற்றச்சாட்டுக்களை முன்வைக்கலாம். அவை பற்றிய விமர்சனங்களை முன்வைக்கலாம். ஏற்பட்டுள்ள நிலைமைகள் பற்றி விரக்தியடைந்திருக்கலாம்.ஆனால் எந்த இடத்திலிருந்தாலும் இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதைப் பற்றி ஒரு முடிவினை நாங்கள் எடுப்பதானால் அதனை சாதிக்க முடிவது பொதுமக்களின் இயக்கமொன்றின் கைகளுக்கு அதாவது, தேசிய மக்கள் சக்தியின் கைகளுக்கு அதிகாரத்தை மாற்றிக் கொள்வதன் மூலமாக மாத்திரமே ஆகும். இந்த அதிகாரத்தை பரிமாற்றிக் கொள்ளாமல், இந்த அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல், இந்த பழைய தோல்விகண்ட அரசியல் அதிகாரத்துவத்தை விரட்டியடிக்காமல் எங்களுடைய நாட்டை இம்மியளவும் முன்னோக்கி நகர்த்த முடியாது. எனவே நாங்கள் செப்டெம்பர் 21 ஆம் திகதி அதற்கான தொடக்கத்தை ஆரம்பித்து வைக்கவேண்டும். எனவே, பல்லாயிரக்கணக்கான ஆசிரியப் பெருந்தகைள் அந்த வெற்றியைப் பெற்றுக்கொடுப்பார்கள் என்று தீவிரமாக நம்புகிறேன்.

Teachers-Summit

இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதில் பிரதானமான செயற்பொறுப்பு கல்விக்கே இருக்கிறது. அண்மைக்காலமாக முன்னேற்றமடைந்த நாடுகளை நாங்கள் எடுத்துப்பார்த்தால் அத்தகைய ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாடுகளை முன்னேற்றுவதற்கான பிரதான பங்கினை வகித்தது கல்வியாகும். உங்களுக்கு ஞாபகமிருக்கும், இலவசக் கல்விச் சட்டம் அங்கீகரிக்கப்படுகையில் கன்னங்கர அவர்கள் விடுத்த ஒரு கூற்று இருக்கிறது.

செங்கல்லினால் கட்டப்பட்டிருந்த உரோமாபுரியை பளிங்குக் கற்களால் முழுநிறைவு செய்ததாக ஒகஸ்டஸ் பேரரசன் பெருமித்துடன் கூறினார். அதிக விலைக்கு இருந்த கல்வியின் விலையை குறைப்பதாகவும் மூடப்பட்ட புத்தகமாக எங்களுக்கு தென்பட்ட கல்வியே திறந்த ஆவணமாக மாற்றியதாகவும் தனவந்தர்களுக்கு மாத்திரம் மரபுரிமையாக இருந்த கல்வியை பாமரர்களின் மரபுரிமையாக மாற்றியதாகவும் பெருமிதத்துடன் கூற அரசுக் கழகத்திற்கு இயலுமானதென்றால், அந்த சுயவர்ணிப்பு ஒகஸ்டஸ் பேரரசனின் வர்ணிப்பை விட எவ்வளவு மேலானது. அதாவது வரம்புகள் விதிக்கப்பட்டிருந்த கல்வியை மூடப்பட்டிருந்த புத்தகத்தை ஒரு சமூகக்குழுவிற்கு மாத்திரம் கல்விக்கான கதவுகள் திறக்கப்பட்டிருந்த நிலையில் அந்த புத்தகத்தை பிரித்து புரட்டி பாமர்களுக்கு கல்விக்கு அவசியமான கதவுகளை திறந்து விடமுடியுமானால் அது உரோமாபுரியை பளிங்கு கற்களால் முழுநிறைவு செய்ததாகக் கூறப்படுகின்ற உன்னதமான கதையைவிட தலைசிறந்ததாக அமையும். அதன் அர்த்தம் என்ன? இந்த நாட்டை கல்வியின் மூலமாகவே முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதல்லவா?

சிங்கப்பூர் பிரதமர் ஒரு கட்டத்தில் கூறினார், சிங்கப்பூர் கொண்டுள்ள ஒரே வளம் மனித வளம் மாத்திரமே என்று. அந்த மனித வளத்தை முன்னேற்றாமல் சிங்கப்பூருக்கு எதிர்காலம் கிடையாதென அவர் கூறுகிறார். சிங்கப்பூரின் ஊழியர் படையின் 41 வீதம் பட்டதாரிகளாவர். ஊழியர் படையின் 21 சதவீதமானோர் தொழில்சார் டிப்ளோமா தாரிகளாவர். ஊழியர் படையின் 63 வீதமானவர்கள் ஒன்றில் பட்டதாரிகள் அல்லது டிப்ளோமாதாரிகள். இலங்கையின் உழைப்புப்படையின் 15 சதவீதத்தினரே அந்த தகைமையைக் கொண்டிருந்தார்கள். எனவே எமது நாட்டின் எதிர்காலம் எந்தளவு முன்னேற்றகரமான மனித வளத்தை கொண்டுள்ளது என்பதிலேயே தங்கியுள்ளது. 2017 ஆம் ஆண்டிலே பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் 99 ஆயிரத்திற்கு கிட்டிய எண்ணிக்கையுடையோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்கள். இதில் 83 வீதமானவர்கள் க.பொ.த. சாதாரண தர வகுப்பை விட குறைந்த தரத்தை சோ்ந்தவர்கள். 64 வீதமானவர்கள் எட்டாம் வகுப்பிற்கு குறைவானவர்கள். கல்விக்கும் குற்றச் செயலுக்கும் இடையிலான தொடர்புதான் அதன் மூலமாக வெளிக்காட்டப்படுகிறது.

கல்வியறிவு இல்லாவிட்டால் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கான போக்கு அதிகமானதாகும். அதனால் தான் குற்றச் செயல் புரிபவர்களில் 83 வீதமானவர்கள் க.பொ.த. சாதாரண தர வகுப்பை விட குறைந்தவர்கள். எமது நாட்டில் போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களில் நூற்றுக்கு 74 வீதமானவர்கள் எட்டாம் வகுப்பிற்கு குறைந்தவர்கள். எனவே போதைப்பொருளுக்கும் கல்விக்குமிடையில் ஒரு தொடர்பு நிலவுகின்றது. எமது நாட்டில் வறுமைக்கோட்டினை கீறினால் அதுவும் கல்வி அறிவின்மையும் ஒரே சீராக பயணிக்கிறது. வறியவர் என்றால் கல்வியறிவற்றவர்கள். கல்வியறிவு இல்லையேல் வறியவர்கள். எனவே இந்த வறுமை நிலைபற்றிய பிரச்சினையின்போது நாங்கள் கிராமிய வறுமை நிலையிலிருந்து மீட்பு பெறுவதானால் அதற்கான பாதை கல்வியூடாகவே வரையப்பட்டுள்ளது. குற்றச் செயல்களை குறைப்பதற்கான பாதையும் அவ்வாறே. சட்டத்தையும் ஒழுக்கத்தையும் உருவாக்குவதற்கான பாதையும் அவ்வாறே. போதைப்பொருளற்ற நாடும் கல்வி மூலமாகவே. செல்வந்த நாடும் கல்வி மூலமாகவே. எனவே எமது நாட்டை முன்னெடுத்துச் செல்லக்கூடிய மிக முக்கியமான கருவி கல்வியென நாங்கள் நினைக்கிறோம். எனவே நாட்டை கட்டியெழுப்புவதற்கான தேசிய மக்கள் சக்தியின் கொள்கையின் முதலாவது இடம் கல்விக்கே வழங்கப்படுகிறது.

Teachers-Summit

உலகின் பெரும்பாலான நாடுகளில் கல்வியினூடாக பல பொருளாதார அபிவிருத்தி உபாயமார்க்கங்கள் வகுக்கப்பட்டுள்ளது. எங்களுடைய அயல் நாடான இந்தியாவை எடுத்துக்கொண்டால் அவர்கள் கல்வியிலேயே கருத்தினை செலுத்தியிருக்கிறார்கள். கடந்த வருடத்தில் IT துறையில் அறிவின் பங்கு மிகவும் உயர்வானது. ஒரு சங்கிலியை எடுத்துக் கொண்டால் சங்கிலியை உருவாக்குகின்ற பங்கினைவிட தங்கத்தின் பங்கு அதிகமாகும். இந்தியா கடந்த வருடத்தில் IT தொழிற்துறையின் பங்கு 253 பில்லியனாகும். 253 பில்லியன் டொலர் பங்கினை அந்தப் பொருளாதாரம் வகிக்கிறது. அதில் இந்தியா 199 பில்லியனை IT தொழிற்துறையை ஏற்றுமதி செய்வதன் மூலமாகவே பெற்றுக்கொள்கிறது. அதாவது IT தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு வெளியில் விற்று 199 பில்லியன் டொலர்களை வருமானமாக பெறுகிறது. சிங்கப்பூரில் IT தொழில்துறையின் வருமானம் 47 பில்லியன் டொலராகும். தென்கொரியாவின் ICT தொழிற்றுறை ஏற்றுமதி வருமானம் 233 பில்லியன் டொலராகும். எங்களுடைய ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானமே 12 பில்லியன் டொலர்களாகும். எனவே சீரழிந்துள்ள இந்த நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரே வழிவகை கல்விதான். எங்களுடைய முன்னேற்றப்பாதையின் சுக்கான் கல்விதான். வேறு வழியில்லை. எங்களிடம் எண்ணெய் வளம் கிடையாது. தங்க வயல்கள் கிடையாது. கேஸ் படிவுகள் கிடையாது. செம்புப்படிவுகள் கிடையாது. நிலக்கரிப்படிவுகள் கிடையாது. துத்தநாகம் நிறைந்த நாடு அல்ல. வணிக வளங்கள் நிறைந்தவொரு நாடல்ல. எனவே எமது நாட்டின் பிரதான வளம் மனித வளமாகும். எமது கல்விக்கு ஒரு நீண்ட வரலாறுண்டு. மஹிந்த தேரரின் வருகையுடன் எங்களுக்கு ஒழுங்கமைந்த ஒரு கல்வி கிடைக்கின்றது. எனவே எமது நாட்டின் பொருளாதார சீரழிவையும் மலிந்துபோயுள்ள குற்றச் செயல்களையும் சமூக நெருக்கடியையும் கல்வி மூலமாகவே தீர்த்து வைக்க முடியும்.

ஆப்பிள் கம்பனி உற்பத்தி செய்கின்ற ஐபோனுக்கு, அதன் டிஸ்பிளேவுக்கு, அதன் பெட்டரிக்கு பொதுவாக அதன் மொத்த பெறுமதியில் 33 வீதம் தான் இருக்கிறது. அதாவது, அதன் ஆக்கக்கூறுகளின் பெறுமதி 33 வீதமாகும். உற்பத்தி மற்றும் ஒன்று சோ்ப்பவர்களின் பங்கு 2.3 வீதமாகும். விநியோகம் மற்றும் சில்லறை வியாபாரத்திற்கு 3.2 வீதம் ஆப்பிள் கம்பனியின் இலாபம் நூற்றுக்கு 54 வீதமாகும். அதாவது மிக அதிகமான பங்கு அதனை நிர்மாணிப்பவர்களுக்கு அதாவது அறிவுக்கே கிடைக்கிறது. உலகம் அந்த இடத்தில் தான் இருக்கிறது.

உலகில் மிகப்பெரிய போக்குவரத்து நிறுவனம் ஊபர் (Uber) ஆகும். ஆனால் அவர்களுக்கு சொந்தமாக ஒரு வாகனம் கூட கிடையாது. ஆனால் உலகில் இலட்சக்கணக்கான வாகனங்கள் ஓடுகின்றன. ஓடுகின்ற ஒவ்வொரு வாகனத்திலிருந்தும் 25 வீதம் ஊபர் கம்பெனிக்கு கிடைக்கிறது. எதற்காக ஒரே ஒரு மென்பொருள் முறைமைக்காகும். இந்த மென்பொருள் முறைமைதான் அவர்களுக்கு அந்த செல்வத்தை திரட்டித்தருகிறது. எனவே உலகின் முன்னேற்றம் புதிய அறிவின் சொந்தக்காரர்களை சென்றடைகிறது. அவர்கள் தான் எதிர்கால உலகம்.

நீராவி இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் மிக அதிகமான கப்பற் பலத்தை கொண்டவன் தான் உலகில் ஆதிக்கம் செலுத்தினான். அடுத்த யுகத்தில் மிக அதிகமான பீரங்கி பலத்தை கொண்டவன் உலகத்தை ஆதிக்கம் செலுத்தினான். அதன் பிறகு மிக அதிகமாக பண பலம் படைத்தவன் உலகத்தில் ஆதிக்கம் செலுத்தினான். ஐக்கிய அமெரிக்காவின் வோல் ஸ்றீட் தான் உலகில் ஆதிக்கம் செலுத்தியது. மிக அதிகமான நிதிப்பலம் அங்குத்தான் இருந்தது. ஒரு விடயத்தை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். எதிர்காலத்தில் உலகில் ஆதிக்கம் செலுத்தப்போவது அதிக தொழில்நுட்ப அறிவுப்படைத்தவர்கள் தான். எனவே இந்த பாரம்பரிய பொருளாதாரத்திலிருந்து மீட்பு பெறவேண்டுமானால் அதற்கான ஒரே வழி கல்விதான். எனவே நான் உங்களுக்கு வலியுறுத்திக்கூறுவது தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் முதன்மைத்தானமும் முக்கிய இடமும் கல்விக்குத்தான் வழங்கப்படும். கல்வி என்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

எமது நாட்டில் நூற்றுக்கு 68 வீதமான குடும்பங்களுக்கு முறையான உணவு கிடையாது. ஒரு சிலர் கூறுகிறார்கள் கல்வியை சந்தைப்படுத்த வேண்டுமென்று. நாங்கள் அதற்கு முற்றிலுமே எதிரானவர்கள். அறிவு என்பது ஒரு வர்த்தகப் பண்டமல்ல. கல்வி இலாபம் ஈட்டுகின்ற ஒரு வழிமுறையல்ல. நன்றாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். கல்வி மறுக்கப்பட்ட சமூகம் ஒரு நியாயமான சமூகமல்ல. எனவே தேசிய மக்கள் சக்தி அரச கல்வியை மென்மேலும் பலப்படுத்தும். இலவச கல்வியை மென்மேலும் பலப்படுத்தும். ஆனால் பணம் படைத்தவர்கள் பணம் செலுத்தி கற்கவேண்டுமென்று நினைத்தால் அவர்களுக்கு அரசாங்கத்தினால் ஒழுங்குறுத்தப்படுகின்ற கல்வி நிலையங்களில் கல்வி கற்கலாம். புதிய அறிவு தேவை என விரும்பினால் இப்போது புதிய அறிவு பிறப்பிக்கப்படுகின்ற மேற்குலக நாடுகளுக்குச் சென்று அந்த கல்வியை பெற்றுக்கொள்ளலாம். அதனை நாங்கள் எதிர்க்கமாட்டோம். எனவே எமது கல்வி மூன்று விதமானதாக அமையும். ஒன்று அரசாங்க கல்வி, இரண்டாவது அரசாங்கத்தினால் ஒழுங்குறுத்தப்படுகின்ற தனியார் கல்வி, மூன்றாவது வெளிநாட்டுக் கல்வி. ஆனால் கல்விக்கான அடிப்படை பொறுப்பினை அரசாங்கம் வகிக்க வேண்டும். 2023 இல் எத்தியோப்பியா மொத்த தேசிய உற்பத்தியில் 3.7 ஐ கல்விக்காக ஒதுக்குகிறது. கென்னியா 4.6 சதவீதம். கிர்கிஸ்தான் 6.21 சதவீதம். இலங்கை 1.2 சதவீதம். அதாவது எத்தியோப்பியாவை விட குறைந்த சதவீதமே எமது நாட்டின் கல்விக்காக ஒதுக்கப்படுகிறது. எனவே எங்களுடைய முதலாவது வரவு செலவு திட்டத்திலேயே கல்விக்கான ஒதுக்கீட்டினை அதிகரிக்க நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

Teachers-Summit

2017 இல் இலங்கையிலிருந்து மூன்று இலட்சத்து மூவாயிரம் போ் வெளிநாட்டுத் தொழில்களுக்காக சென்றிருக்கிறார்கள். இதில் இரண்டு இலட்சத்து தொண்ணூற்றி ஏழாயிரம் போ் பயிற்றப்பட்ட, பகுதியளவில் பயிற்றப்பட்ட, பயிற்றப்படாத உழைப்பாளிகளாகவே சென்றிருக்கிறார்கள். 6000 போ் தான் உயர் தொழில்களுக்கு சென்றிருக்கிறார்கள். எனவே உலகில் பண்டங்கள் சந்தையையும் நாங்கள் கைப்பற்றவில்லை. முன்னேற்றமடைந்த உழைப்புச் சந்தையையும் நாங்கள் கைப்பற்றவில்லை. உணவு சமைக்கவும் பிள்ளைகளை பராமரிக்கவும் வாகனங்களை ஓட்டுவதற்காகவுமே நாங்கள் செய்கிறோம்.

எமது நாட்டின் கல்வித்துறையில் பாரிய மறுசீரமைப்பு அவசியமாகின்றது. எமது நாட்டிலே 10,000 இற்கு மேற்பட்ட பாடசாலைகள் இருக்கின்றன. இதில் அன்னளவாக 5400 பாடசாலைகளில் 200 மாணவர்களுக்கு குறைவாகவே இருக்கிறார்கள். 1423 பாடசாலைகளில் 50 பிள்ளைகளை விட குறைந்தவர்களே இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு பாடசாலையை நாங்கள் எப்படி பாடசாலை என்று கூறுவது? ஒரு பேச்சுப்போட்டியை நடத்த முடியுமா? இல்ல விளையாட்டுப் போட்டியை நடத்த முடியுமா? அண்மையில் நான் வியலுவிற்குச் சென்றேன். பாடசாலையில் 19 மாணவர்கள். 5 ஆசிரியர்கள். எனவே இந்த பாடசாலை முறைமையின் சீரழிவினையும் அதிகமாக கவனத்தில் கொள்கிறோம். ஒரு பிள்ளை பாடசாலைக்குச் செல்லக்கூடிய உச்ச அளவிலான தூரம் 4 கிலோ மீற்றராகும். அதனால் எங்களுடைய பாடசாலை முறைமையை மீள் இடஅமைவு செய்விக்க வேண்டும். மனித வளமும் விரயமாகிறது. பௌதீக வளமும் விரயமாகிறது. இது ஒரு அர்த்தமற்ற கல்வியாகும். எனவே நாங்கள் இந்த பாடசாலை முறைமையையும் ஒழுங்குறுத்த வேண்டும். பாடசாலையில் சோ்கின்ற பிள்ளைகளில் நூற்றுக்கு 9 வீதமான மாணவர்கள் 10 ஆம் வகுப்பிற்கு முன்னதாகவே பாடசாலையை விட்டு விலகிச் செல்கிறார்கள். ஒவ்வொரு வருடத்திலும் இந்த எண்ணிக்கை ஏறக்குறைய 30,000 ஆக அமைகிறது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 10 ஆம் வகுப்பிற்கு முன்னர் எந்தவொரு பிள்ளையையும் பாடசாலையிலிருந்து விலகிச் செல்ல இடமளிக்கமாட்டாது.

எமது நாட்டின் கல்வி ஒரு எளிய நோ்கோட்டின் அடிப்படையிலேயே இருக்கிறது. முதலாம் வகுப்பில் ஆரம்பிக்கிறது. ஆண்டு 5 இல் புலமைப்பரிசில். அதன் பின்னர் க.பொ.த. சாதாரண தர பரீட்சை. அதன் பின்னர் உயர்தர கணிதம், விஞ்ஞானம். எந்த பிள்ளையிடமும் எதிர்பார்ப்பு என்னவென்று கேட்டாள் மருத்துவர் அல்லது பொறியியலாளர் என்று தான் கூறுவார்கள். சமூகத்திற்கு எல்லா விதமான தொழில்களும் அவசியம். சிகை அலங்காரம் செய்பவர் தேவை. இலக்ரிஷியன் தேவை. தொழில்நுட்ப உத்தியோகத்தர் தேவை. சாரதி தேவை. இல்லாவிட்டால் சமூகம் நிலவமாட்டாது. எனவே கல்வி என்பது ஒரு நோ்கோட்டு பாதையில் அமைந்துவிட கூடாது. எங்களுடைய ஒவ்வொரு பெற்றோரினதும் ஒவ்வொரு பிள்ளையினதும் எதிர்பார்ப்பு ஆரம்பப் பட்டப்படிப்பாகும். எனினும் உலகிலே ஆரம்ப பட்டமென்பது ஒரு அடிப்படைக் கோட்பாடாகும். ஆனால் இன்றைய உலகத்திலே அதற்கு அப்பால் சென்ற பட்டப்பின்படிப்பு அவசியமாகிறது. கோட்பாட்டினை நடைமுறையில் பிரயோகித்துப் பார்க்க பட்டப்பின்படிப்பு அவசியமாகிறது. வெளிநாடுகள் பெரும்பளவில் பட்டப்பின் படிப்பு நிறுவனங்கள் மீதே கவனம் செலுத்தி வருகிறது.

எனவே நாங்கள் கல்வியில் ஒரு புதிய கட்டத்தை நோக்கி நகரவேண்டும். எனவே இலங்கையில் முழுநேர பட்டப்பின் படிப்பு நிறுவனத்தை உருவாக்குவோம். அதுதான் தேசிய மக்கள் சக்தியின் திட்டமாகும். எனவே இந்த உற்பத்தியின் தரத்தை தீர்மானிக்கின்றவர்கள் ஆசிரியர்களாகிய நீங்களே. உங்களுக்கும் பொருளாதாரக் கடப்பாடுகள் இருக்கின்றன. அதனை நிவர்த்தி செய்யக்கூடிய தொழிலாக ஆசிரியர் தொழிலை மாற்றுவோம். எனவே தற்போது நிலவுகின்ற சம்பள முரண்பாடு தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அதிக அக்கறையுடன் செயலாற்றும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பாடசாலை பிள்ளைகளை எந்தவொரு அரசாங்கம் நடவடிக்கைகளிலும் ஈடுபட அனுமதிக்கமாட்டாது. CTB அரசியல், CEB அரசியல், துறைமுகம் அரசியல், நீர்வளச்சபை அரசியல், எல்லாமே அரசியல். குறைந்தபட்சம் பாடசாலையையாவது அரசியலிலிருந்து பிழைக்கவைக்க வேண்டும். ஆசிரியர்களின் இடமாற்றம், பதவியுயர்வு, ஏனைய வாய்ப்புகளை வழங்குதலை அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு இணங்க செய்ய மாட்டோம். கடந்த காலத்தில் மாகாண சபைகளில் முதலமைச்சரின் விருப்பு வெறுப்புக்கு இணங்கவே இவை எல்லாமே நடைபெற்றது. எனவே இந்த கலாச்சாரத்தை நாங்கள் மாற்றியமைக்க வேண்டும். எமது பிள்ளைகளின் எதிர்காலமும் நாட்டின் எதிர்காலமும் உங்கள் கையில் தான் தங்கியிருக்கிறது. எனவே நாங்கள் கல்வியையும் உங்கள் தொழிலையும் உங்கள் தொழில் கௌரவத்தையும் பெற்றுக்கொடுப்பதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கமொன்றை அமைத்திடுவோம்.

Teachers-Summit

“ஆசிரியர் மாநாட்டுக்கு ஆவலுடன் வந்த நீங்கள் செப்டெம்பர் 21 வெற்றியை உறுதிசெய்துள்ளீர்கள்”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர், தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் கே. டீ. லால்காந்த-

எமது நாட்டின் ஆசிரியர்கள்தான் கோட்டாபய ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்புகின்ற போராட்டத்தை ஆரம்பித்து வைத்தவர்கள். கோட்டாபயவின் ஆட்சிக்கு எதிராக ஆசிரியர்கள், அதிபர்கள் போராட்டத்தை ஆரம்பித்ததாக அரசியல் விமர்சகர்கள் கடந்த காலத்தில் எழுதியிருந்தார்கள். அதைப்போலவே 76 வருடகால மூர்க்கத்தனமான ஆட்சிக்கு முற்றுப்பள்ளி வைக்கின்ற முதன்மைச் செயற்பொறுப்பினை ஆற்றுவதும் ஆசிரியர்களே என்பதை நாங்கள் நம்புகிறோம். இன்று இந்த மாநாட்டுக்கு வந்து நீங்கள் இந்த நாட்டின் பல அரசியல்வாதிகளை பயமுறுத்தி இருக்கிறீர்கள். முதன்முதலில் பயந்தவர் சஜித் பிரேமதாச. அடுத்ததாக ரணிலை பயமுறுத்தினீர்கள். இன்று பிற்போக்கான சக்திகள் அனைத்துமே பயந்துள்ளன. முற்போக்கான சக்திகள் அனைத்துமே மகிழ்ச்சியடைந்துள்ளன. செப்டெம்பர் 21 வெற்றியை நீங்கள் உறுதிசெய்திருக்கிறீர்கள். இதுவரை காலமும் வெற்றிபெற்றிராத முற்போக்காளர்களினதும் பாதிக்கப்படவர்களினதும் வெற்றியை இந்த ஆசிரியர் மாநாடே உறுதிசெய்துள்ளது என்பது திண்ணம். ஆசிரியர் சம்பளம் மற்றும் ஏனைய பிரச்சினைகள் சம்பந்தமாக கடந்த காலத்தில் நாங்கள் பல போராட்டங்களை நடாத்தினோம். தேர்தல் எனும் போராட்டக் களத்திற்கு இதற்கு முன்னர் இந்த ஈனியா பிரபுக்கள் எம்மை வரவிடவில்லை. ஒருசில இடதுசாரி சக்திகளுக்கு சிறிய சிலவற்றைக் கொடுத்து அடக்கியாண்டார்கள். அடக்கமுடியாமல்போன தலைவர்களை படுகொலை செய்தார்கள். இலங்கையில் முதல்த்தடவையாக தேர்தல் போராட்டக் களத்திற்கு பாதிக்கப்பட்ட மற்றும் முற்போக்கான சக்திகளுடன் ‘திசைகாட்டி’ ஒன்றுசேர்ந்து போராட்டக் களத்தின் கொடியை உயர்த்திப்பிடித்து வெற்றிகீதம் இசைத்துக் கொண்டிருக்கின்ற வேளையில்தான் இன்று இந்த மாநாடு நடைபெறுகின்றது. தேர்தல் போராட்டக் களத்திற்காக தமது ஊரில் இருக்கின்ற அமைப்புகளுடன் தொடர்புபட்டு வாக்குப்பெட்டியை திசைகாட்டிக்கு புள்ளடியிட்ட மூன்றிலிரண்டு பங்கு வாக்குகளால் நிரப்புங்கள். அந்த தேர்தல் களத்தில் பெருவெற்றிபெற்று “மறுமலர்ச்சி யுகத்திற்கு” அத்திவாரத்தை அமைத்துக்கொடுக்குமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறோம்.

Teachers-Summit

“ஆசிரியர் என்றவகையிலும் தாய்மார் என்றவகையிலும் நாட்டில் நிலவுகின்ற பிரச்சினையை நாங்கள் அதிகமாக உணர்கிறோம்”
-இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர் விஷாகா அபேரத்ன-

இன்றைய சமூகம் எந்த நிலையில் இருக்கின்றதென்பது பற்றிய ஒரு பொதுவான புரிந்துணர்வு எமக்கு இருக்கின்றது. ஆசிரியத்தொழிலில் அதிகமாக இருக்கின்றவர்கள் அன்புக்குரிய ஆசிரியைகளே. அவர்கள் இந்த நாட்டில் வசிக்கின்ற தாய்மார்கள் ஆவர்.ஆசிரியர் என்றவகையிலும் தாய்மார் என்றவகையிலும் நாட்டில் நிலவுகின்ற பிரச்சினையை நாங்கள் அதிகமாக உணர்கிறோம். நாங்கள் அந்த பிரச்சினை தொடர்பில் அதிகமான கூருணர்வு கொண்டிருக்கிறோம். சமையலறையில் அடுப்பில் மூட்டப்படுகின்ற நெருப்பினைவிட இதயத்தில் அதிகமான நெருப்பு எரிகின்றதென்பதை நாங்கள் அறிவோம். வகுப்பறையில் வேதனைகளை வெளிப்படுத்திக்கொள்ளக்கூட முடியமல் இருக்கின்ற பிள்ளைகளை நாங்கள் காண்கிறோம். சமூகவலைத்தளங்களில் இந்த பிள்ளைகளின் உணவு வேளைகள் பற்றிய தகவல்களை வெளிக்கொணர்ந்திருந்தார்கள். இரண்டு மூன்று பிள்ளைகள் இருக்கின்ற குடும்பங்களில் எந்தப் பிள்ளைக்கு கல்வி புகட்டுவது எனும் கேள்வி எழுகின்றது. பாடசாலை செல்லவேண்டிய வயதில் உள்ள பிள்ளைகளில் 40% பாடசாலை செல்லமுடியாத நிலையில் இருக்கிறார்கள். பிறரிடம் உடைகளை வாங்கி அணிகின்ற 20% இருக்கிறார்கள். கொழும்பில் மாத்திரமல்ல தொலைதூரப் பிரதேசங்களில்கூட இந்த துன்பப்படுகின்ற ஆசிரியைகள் தமது பிள்ளைக்கு தாயாக அமைவதைவிட பாடசாலையில் அந்த பிள்ளைகளுக்கு தாயாக அமைகிறார்கள். எமது பிள்ளைகளின் எதிர்காலத்தை கட்டியழுப்ப வேண்டுமென்ற ஏகோபித்த எதிர்பார்ப்பு இருக்கின்றது. இந்த எதிர்பார்ப்பினை சுமந்துகொண்டு இங்கு வந்து புதிய மறுமலர்ச்சிக்காக மேலும் ஊக்கத்துடன் செயற்படுவோமென கேட்டுக்கொள்கிறேன்.

Teachers-Summit

“தொழில்சார் போராட்டங்களில் ஈடுபட்டாலும் நாட்டின் முன்னிலையில் அளப்பரிய பொறுப்பு எம்மிடம் கையளிக்கப்பட்டுள்ளது”
-இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் மஹிந்த ஜயசிங்க-

ஆசிரியரை எங்குதான் துன்பத்திற்கு இலக்காக்கவில்லை? ஒட்டுமொ்த மக்களைப்போன்றே ஆசிரியர்களயும் துன்பத்தில் ஆழ்த்துவதற்கு எதிராக ஒரே கூட்டத்தில்சேர்ந்து கடந்தகாலம் பூராவிலும் போராட்டங்களில் ஈடுபட்டோம். இந்த ஒற்றுமையை சிதைக்க நிகழ்கால அரசாங்கமும் எதிர்க்கட்சியும் பல்வேறு சதிவேலைகளை செய்தன. அந்த சதிவேலைகள் அனைத்துமே தோல்விகண்டுள்ளதென்பதை இந்த மாபெரும் தேசிய மாநாடு உறுதிசெய்துள்ளது. இந்த மைதானம் அதிபர்களாலும் ஆசிரியர்களாலும் நிரம்பி வழிவதன் மூலமாக அந்த வெற்றிபற்றிய செய்தியே பறைசாற்றப்படுகின்றது. அனைத்துவிதமான துன்பங்களாலும் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் அதிலிருந்து விடுபடுவதற்கான சரியான வழியைக் காட்டவே இந்த மாநாடு நடாத்தப்படுகின்றது.

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய மாநாடு என இதனைக் குறிப்பிட்டாலும் இது அனைத்து ஆசிரியர்களையும் பிரதிநிதித்துவம் செய்கின்ற பாரிய மாநாடாகும். ஆட்சியாளர்கள் முன்னிலையில் மண்டியிடாமல், ஆட்சியாளர் முன்னிலையில் இடைநிலை சமாதானங்களின்றி, ஆட்சியாளர்கள் கொடுப்பதை எடுத்துக்கொண்டு மௌனிகளாக இருப்பதற்குப் பதிலாக சவால்களை விடுத்து கடந்தகாலம் பூராவிலும் எங்கள் நோக்கங்களை நெருங்கியிருக்கிறோம். வரலாற்றுக்காலம் பூராவிலும் தொழில்சார் போராட்டங்களை மேற்கொண்டாலும் எம்மனைவருக்கும் பாரிய செயற்பொறுப்பு கையளிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு மாத்திரம் போராட்டங்களை மட்டுப்படுத்த உலகின் போசாக்கின்மையில் ஆறாவது இடத்தைப் பெற்றுள்ள பிள்ளைகள் இருக்கின்ற ஒரு நாட்டைச்சேர்ந்த எமக்கு உரிமையில்லை. எல்லாவிதத்திலும் சீர்குலைக்கப்பட்டுள்ள ஒரு நாட்டில் கல்வியை மாத்திரம் வேறுபடுத்தி எடுக்கமுடியாது. நாட்டை ஒட்டுமொத்தமாக கட்டியெழுப்புவதில் ஒரு பங்கு கல்விக்கு இருக்கிறது. பாடசாலை மட்டத்தில் பாடசாலை சபைகளை கட்டியெழுப்பி மறுமலர்ச்சி யுகத்திற்கு தொடக்கத்தை பெற்றுக்கொடுக்கின்ற செப்டெம்பர் 21 ஆந் திகதிய வெற்றிக்காக நாமனைவரும் எம்மை அர்ப்பணிப்போம். எமது நாட்டின் ஒட்டுமொத்த ஆசிரியர் படையணி நியாயமான சம்பளத்தைக்கோரி வீதிகளில் போராடிய யுகத்தை முடிவுக்கு கொண்டுவந்து கௌரவமான ஆசிரியர் சேவையை உறுதிசெய்துகொள்வதற்காக அனைவரும் அணிதிரள்வோம்.

Show More

இலங்கை வணிகப் பேரவைக்கும் தோழர் அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு…

(-Colombo, August 01, 2024-) நேற்று (01) பிற்பகல் ம.வி.மு. பிரதான அலுவலகத்தில் இலங்கை வணிகப் பேரவையின் தலைவர் திரு. துமிந்த ஹுலங்கமுவ உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இலங்கை வணிகப் பேரவையினால் உருவாக்கப்பட்டுள்ள “Vision 2030 – ஐந்து வருட பொருளாதார திட்டம்” வெளியீட்டுப் பிரதியும் இதன்போது தோழர் அநுரவிடம் கையளிக்கப்பட்டது. இந்தச் சந்திப்பில் இலங்கை வணிகப் பேரவையின் உப தலைவர் […]

(-Colombo, August 01, 2024-)

நேற்று (01) பிற்பகல் ம.வி.மு. பிரதான அலுவலகத்தில் இலங்கை வணிகப் பேரவையின் தலைவர் திரு. துமிந்த ஹுலங்கமுவ உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இலங்கை வணிகப் பேரவையினால் உருவாக்கப்பட்டுள்ள “Vision 2030 – ஐந்து வருட பொருளாதார திட்டம்” வெளியீட்டுப் பிரதியும் இதன்போது தோழர் அநுரவிடம் கையளிக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பில் இலங்கை வணிகப் பேரவையின் உப தலைவர் கிறிஷான் பாலேந்திர, பிரதி உப தலைவர் பிங்குமால் தெவரதந்திரி மற்றும் பணிப்பாளர் சபை பிரதிநிதிகளான அமல் கப்ரால், சரத் கனேகொட, சுபுன் வீரசிங்க, வினோத் ஹய்ட்ராமணீ உள்ளிட்ட முக்கியஸ்தவர்களும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர்களான பேராசிரியர் அனில் ஜயந்த மற்றும் பேராசிரியர் ஹர்ஷன சூரியப்பெரும ஆகிய தோழர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

Show More

மில்கோ மற்றும் NLDB ஐ விற்பதற்கு எதிரான வழக்கு இன்று…

(-Colombo, August 01, 2024-) மில்கோ நிறுவனம் மற்றும் தேசிய பெருந்தோட்ட அபிவிருத்திச் சபையிடம் (NLDB) உள்ள காணிகளை விற்பனை செய்வதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுளள மனு தொடர்பான விவாதம் இன்று (01) முற்பகல் 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. கைத்தொழில் மற்றும் விவசாய நிலங்களை பாதுகாக்கும் மக்கள் இயக்கத்தினால் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அகில இலங்கை கமக்காரர்கள் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன கருத்து தெரிவிக்கையில், மில்கோ நிறுவனம் மற்றும் […]

(-Colombo, August 01, 2024-)

மில்கோ நிறுவனம் மற்றும் தேசிய பெருந்தோட்ட அபிவிருத்திச் சபையிடம் (NLDB) உள்ள காணிகளை விற்பனை செய்வதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுளள மனு தொடர்பான விவாதம் இன்று (01) முற்பகல் 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

கைத்தொழில் மற்றும் விவசாய நிலங்களை பாதுகாக்கும் மக்கள் இயக்கத்தினால் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அகில இலங்கை கமக்காரர்கள் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன கருத்து தெரிவிக்கையில்,

மில்கோ நிறுவனம் மற்றும் தேசிய பெருந்தோட்ட அபிவிருத்திச் சபையிடம் உள்ள காணிகள் இலங்கையின் பெறுமதிமிக்க வளங்கள் ஆகும். நாட்டை கட்டியெழுப்புவதற்கு இந்த வளங்களில் இருந்து பயன்பெறுவதற்கான வளர்ச்சியடைந்த வேலைத்திட்டம் எம்மிடம் இருக்கிறது.

அதற்காக இந்த வளங்களை பாதுகாக்க வேண்டும். உயர் நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” என்றார்.

Show More