Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

NPP News

NPP meets Commerce Chamber members

A meeting between the Ceylon Chamber of Commerce and Jathika Jana Balawegaya (NPP) was held yesterday (12), at the JVP Head Office in Battaramulla. Attention was drawn to the economic crisis and the difficulties faced by the business community. Vice President Duminda Hulangamuwa, Deputy Vice President Krishan Balendra, Board Member Sarath Ganegoda, and Secretary Manjula […]

A meeting between the Ceylon Chamber of Commerce and Jathika Jana Balawegaya (NPP) was held yesterday (12), at the JVP Head Office in Battaramulla.

Attention was drawn to the economic crisis and the difficulties faced by the business community.

Vice President Duminda Hulangamuwa, Deputy Vice President Krishan Balendra, Board Member Sarath Ganegoda, and Secretary Manjula de Silva represented the Ceylon Chamber of Commerce.

In addition, NPP Leader Anura Kumara Dissanayake, Parliamentarian Vijitha Herath, National Executive Member Muditha Nanayakkara, and Economic Council Member Dr. Shantha Jayaratne represented the NPP.
(Ceylon Today)

Show More

We give tourism a high priority in building the national economy…

Anura Kumara Dissanayake Leader of the National People’s Power Some people have met us before and discussed the issues in the tourism sector and some people are meeting for the first time to discuss with us. I like to thank all those who participated in this event. Here we hope to listen to you more […]

Anura Kumara Dissanayake Leader of the National People’s Power

Some people have met us before and discussed the issues in the tourism sector and some people are meeting for the first time to discuss with us. I like to thank all those who participated in this event. Here we hope to listen to you more and briefly present some points related to our vision.

What place did the tourism business occupy in the economy before the covid epidemic and the Easter attack? The largest number of tourists came to Sri Lanka in 2018. About 2.3 million people came and earned an income of about 4.3 billion dollars. It contributed about 4.9% to the Gross National Product. They had provided about four hundred thousand direct and indirect jobs and made it their livelihood. It is clear from these figures and information that the tourism sector holds an important place in the economy from any angle. Among the many fundamentals of our economy, we need to determine where to place the tourism industry. That is where our economic strategy becomes important. Several significant areas must be taken into consideration while making this economic strategy. We believe that the location of our country, the natural resources of this country, the nature of the human resource, the nature of geopolitics, and the civilization that this country has built on as the basic five factors that are of great importance.

We believe that amongst these sectors, the tourism sector belongs to the sector that consists of the country’s resources. Our country has got one of the best coasts. It has many climate zones, great biodiversity, a lot of ancient heritage, and also the hospitality of the people is highly valued. Tourism, which is built on natural resources, is one of the most important areas of our country. The long-term economic consequences we are currently facing have centered around two main problems. There is a shortage of dollars as well as a shortage of rupees. The most talked about is the shortage of dollars. But even the rupees used in the country are in short supply. Our foreign trade loss in 2021 is 8.2 billion dollars. 6.7 billion dollars will be spent to pay the loan installments. That means an additional amount of more than 14.8 billion dollars is needed for these two things only. Almost 7 billion dollars were being received from foreign workers to cover it. Almost 4 billion dollars were received from tourism. In that situation, there is a deficit of nearly 3.5 billion dollars for these two fields alone.

In solving the dollar crisis that our country is facing; some answers can be found through the development of tourism. But there is a bigger crisis regarding the rupee than the dollar crisis. Total government revenue in 2021 is 1.4 trillion. The total expenditure of the government, excluding the payment of debt installments, is 3.5 trillion. In other words, when the treasury receives Rs. 40/-, the government spends Rs. 100/-. That means there is a 60% revenue deficit. A large portion of government revenue comes from taxes. Tax revenues rise as the economy expands. If the economy shrinks, revenues to the treasury will fall. The Monetary Fund has stated that our economy will shrink by – 8.7% this year. That means the national income is predicted to shrink to 72 billion dollars. Then the revenue to the treasury will fall further. Spreading tourism is also important in solving the rupee crisis.

11% of the land is used for our agriculture. Protecting this land is a major challenge. It is impossible to develop land for agriculture. Because of this, tourism is an area that can be expanded within the economy. Rural poverty and the loss of new economic opportunities for rural youth are serious situations in people’s lives. Because of this, nearly one million people have made the three-wheelers their economic livelihood. One million people were drawn here by the failure to create new job opportunities for the youth. From that point of view, the tourism sector is important for providing job opportunities in rural areas. Now we have reached the peak of Colombo centered economy. Therefore, the economy has to be expanded to the rural people. Tourism is an important sector for that. There are a large number of villages and towns across the country that can be promoted as tourist villages. It is important to develop our economy into a tourism economy.

It is necessary to bring tourists for that purpose. Related to that, there are fields like natural beauty, the study of building civilizations, and the study of biodiversity, and for that, first of all, the image of Sri Lanka is very important. Now there is a very bad picture regarding this. They said that they will send a team to see if they steal from the World Bank by giving them a loan to bring fertilizer. In the ongoing discussion before the United Nations Human Rights Commission, there is also talk about avoiding economic crimes to protect civil and human rights. Therefore, they look into economic crimes. What is the European Parliament, the English Parliament talking about us? What is being talked about in Kenya? What did the Prime Minister of Bangladesh say about us? No matter how favorable the ecosystem and resource system that the tourism business possesses, if Sri Lanka does not have a good image, the tourism business will be hit hard. This is why we are building the image of Sri Lanka with tourism. That is the first thing to do.

Secondly, this sector should be protected in case of any movement in the economy. For example, fuel shortage affects all sectors including the industrial system of our country. However, if tourism is an important part of the economic strategy, priority should be given to this sector. The Asia Cup cricket tournament was supposed to be held in Sri Lanka but was moved to Dubai under the current situation. But because of this, Sri Lanka Cricket received an additional 2 million dollars, the chairman of the Cricket Institute had said. If you think about cricket only, it is important. But if you think of it as a country, there was a problem that a tourist couldn’t come to. If about eight teams came to Sri Lanka for the Asian Cup, now the image will be built in a way that Sri Lanka is safe. But after that, they played the match in Dubai and published advertisements saying “Visit Sri Lanka”. During the cricket tournament, it was to be shown about providing the necessary security to the tourists. If you think only about the cricket institution, it is cheaper to hold the match in Dubai. But if tourism is a part of the overall economy of the country, then the match should be played here. What is the image of the country if accommodation, transport facilities, and management cannot be provided for eight teams? If tourism is an important sector of the economy, priority should be given to protecting this sector in case of any disturbance.

Thirdly, tourism is a sensitive field. This field may fluctuate depending on the situation in Sri Lanka, such as the Easter attack, as well as the situation in the world. In such cases, a protection fund should be established to provide stable protection. In 2007, the financial collapse of the US financial market put the banking system at risk. But the US government released 700 billion dollars to the banking system. There was a lot of criticism for spending this money to save the banking system when ordinary citizens were in crisis. But to secure the economic system, that government bore the cost. It is our responsibility to protect tourism in this way. It is important to have a travel protection fund in situations like the recent crises that have affected tourism. During the covid epidemic, almost every country used money from the treasury to protect their economies. We are creating a care fund to face such situations.

Tourism is not limited to a narrow field. It is a combination of many fields like transportation, health, entertainment, etc. Therefore, a centralized center is needed for tourism. Therefore, a tourism commission should be appointed to represent all these areas. Also, we need a commission representing the groups engaged in this field. Such commissions are needed to settle internal conflicts and differences in this field. And more than 99% of this sector depends on the private sector. If so, our primary role is to develop related infrastructure. The fifth position of our vision has been devoted to tourism. Sixth, we need to change the attitude towards tourism in our history. The engagement of women in this field is limited to 6%. But the attitude in this regard is not good. Education and literature should be created to develop those attitudes. We select these six areas as a political movement interested in tourism.

We have a vision of building the image of the country, intervening to solve the crisis in the field, and establishing the development of the six main focus areas under our rule. We have a vision of where this business should be taken by 2030. Our role is to set goals, create infrastructure, create attitudinal changes, provide financial facilities and implement legal regulations. We are ready to openly comment and discuss this.

Show More

கடன் மறுசீரமைப்பு என்பது பொருளாதாரப் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்ப்பது என்பதல்ல…..

2022.09.29 – தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பேரவையின் ஊடக சந்திப்பு தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கைகள் குழுவின் தலைவர், பட்டயக் கணக்காளர், ஸ்ரீ ஜயவர்தனபுர  பல்கலைக்கழகத்தின் வியாபாரக் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் அனில் ஜயந்த தேசிய மக்கள் சக்தியின்  பொருளாதாரப் பேரவை என்றவகையில் ஒரு நாடு அபிவிருத்தியை நோக்கி  பயணிக்கின்றமை, மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வடைதல் போன்ற விடயங்கள் சம்பந்தமாக  விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பொருளாதாரம் என்பது ஒரு நாட்டின் பண்டங்கள் மற்றும் சேவைகளை உற்பத்தி […]

2022.09.29 – தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பேரவையின் ஊடக சந்திப்பு

தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கைகள் குழுவின் தலைவர், பட்டயக் கணக்காளர், ஸ்ரீ ஜயவர்தனபுர  பல்கலைக்கழகத்தின் வியாபாரக் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் அனில் ஜயந்த

தேசிய மக்கள் சக்தியின்  பொருளாதாரப் பேரவை என்றவகையில் ஒரு நாடு அபிவிருத்தியை நோக்கி  பயணிக்கின்றமை, மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வடைதல் போன்ற விடயங்கள் சம்பந்தமாக  விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பொருளாதாரம் என்பது ஒரு நாட்டின் பண்டங்கள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்வதும், அதிலிருந்து பிறப்பிக்கப்படுகின்ற செல்வத்தை பகிர்ந்தளிப்பதும், தொழிவாய்ப்பினை உருவாக்குதல், வட்டி மற்றும் அந்நிய செலாவணி வீதத்தை தீர்மானித்தல், வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு ஒதுக்கங்களை பேணிவருதல் போன்ற பல்வேறு விடயங்கள் ஒன்றடனொன்று இணைவதாகும். பொருளாதாரத்தில் நிலவுகின்ற உண்மையான பிரச்சினைகள் பற்றிக் கலந்துரையாடி சரியான திசையை நோக்கி  கொண்டுசெல்ல முயற்சி செய்வதற்குப் பதிலாக ஆட்சியாளர்கள் இற்றைவரை தரவுகளை திரிபுபடுத்தி  பிரதான பொருளாதாரப் பிரச்சினைகளை மூடிமறைப்பதையே செய்துவந்தார்கள்.  தேசிய மக்கள் சக்தி இயலுமான எல்லாவேளைகளிலும் நிலவுகின்ற யதார்த்தத்தை சுட்டிக்காட்ட நடவடிக்கை எடுத்தது. அதனாலேயே தற்போது நாட்டில் கூட்டாக நாமனைவரும் ஒன்றுசேர்ந்து இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டுமென்ற புரிந்துணர்விற்கு வந்துள்ளோம்.  

தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பேரவையில் அந்தந்த உபதுறைகள் பற்றி அளவுசார்ரீதியான அறிவினைப் படைத்த புத்திஜீவிகள் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள். நாங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து பொருளாதாரம் சம்பந்தமான ஏதேனும் முற்றாய்வுசார்ந்த   புலனாய்வினை மேற்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக விஞ்ஞானரீதியான தகவல்களைக் கொண்டதாக விடயங்களை முன்வைக்கிறோம். நடப்பு நிலைமை பற்றி பகுப்பாய்வு செய்வதன் மூலமாக பெற்றுக்கொள்கின்ற விடயங்களுக்கிணங்க நாட்டில் நிலவுகின்ற மட்டுப்படுத்தப்பட்ட  வளங்களை முறைப்படி முகாமைசெய்து பொதுத்தேவைகளை நிவர்த்திசெய்தல் பற்றி பொதுமக்களுக்ககு விழிப்பூட்டி வருகிறோம்.  அதன் தொடக்கப் படிமுறையாக தெரிவு செய்யப்பட்ட துரிதமாக சமூகத்தின் கவனத்திற்கு இலக்காகவேண்டிய ஒருசில விடயஙகளை முன்வைக்கிறோம். இத்தருணமாகும்வேளையில் அரசாங்கம் தனது அதிகாரத்தை பேணிவரும் நோக்கத்துடன் தவிர்த்து வருகின்ற பொதுமக்களின் வாழ்க்கைக்கு தோன்றியுள்ள பொருளாதார நெருக்கடியின் பயங்கரமானதன்மை பற்றி  நாங்கள் வெளிப்படுத்த  தயார். பொருளாதார நெருக்கடிக்கு இந்த அரசாங்கம் அடிப்படையில் பொறுப்புக்கூற வேண்டியபோதிலும்  எவராலும் இந்த நெருக்கடியை தவிர்த்துச் செல்ல முடியாது.

அடிப்படையில் எடுத்துக்கொண்டால் நிலவுகின்ற கடன் சுமையை ஒரு நாடு என்றவகையில் தாங்கிக்கொள்ள முடியாது. வெளிநாட்டுக் கடன் பங்கு மிகவும் பெரிய அளவில் அதிகரித்துள்ளமை அதில் தாக்கமேற்படுத்தி உள்ளது. அதனால் கடன் மறுசீரமைத்தல் பற்றிய   பாரிய உரையாடல் தோன்றியுள்ளது. அரசாங்க அதிகாரத்தை எவர் வகித்தாலும், வகிக்க எதிர்பார்த்துக் கொண்டிருந்தாலும் அந்த எவருமே கடன் மறுசீரமைப்பினை செய்தே ஆகவேண்டும். கடன் மறுசீரமைப்பு செய்வதென்பது நாட்டின் அனைத்துப் பொருளாதார பிரச்சினைகளையும் தீர்த்துவைப்பது என்பதல்ல.  நாடு அபிவிருத்தியை நோக்கிச் செல்கிறது என்பதல்ல.  அடிப்படை அத்திவாரத்தை இட்டுக்கொள்ள,  மூச்செடுத்திட வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்வது என்பதாகும். இந்த உரையாடலில் சர்வதேச நாணய நிதியம் இடையீடு செய்துள்ளது. 1959 இல் இருந்தே நாங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் அங்கத்தவ நாடாவோம். அதன் அங்கத்தவர்களுக்கு கிடைக்கின்ற அனைத்துவிதமான சிறப்புரிமைகளும் எமக்கும் உரித்தானது. அவர்கள் தமது அங்கத்தவ நாடுகளுக்கு சென்மதி நிலுவை நெருக்கடியில் இருந்து விடுபட ஆலோசனை வழங்குதலையும் இடையீடு செய்தலையும் மேற்கொண்டு வருகிறார்கள். கடன் மறுசீரமைப்பு செய்வதற்கான நாணய நிதியம் இடையீடுசெய்து பேச்சுவார்த்தைகளை நடாத்துவது நல்லது.  ஆனால் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான திட்டம்  அல்லது அதன் பயணப்பாதையை நாணய நிதியம் வழங்குவதில்லை. அது அவர்களின் செயற்பொறுப்பன்று. எமது நாட்டை முன்னேற்றியும் அதன் திசையை தீர்மானிப்பதையும் நாங்கள்தான் செய்யவேண்டும். ஆனால் இதுவரை அரசாங்கம் அதற்கான திட்டங்களை வகுக்கவில்லை.

கடன் மறுசீரமைப்பினை மேற்கொள்ள இலங்கைக்காக கிளிபட் சான்ஸ் மற்றும் லசாட் எனப்படுகின்ற  இரண்ட சர்வதேச நிறுவனங்கள் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. கிளிபட் சான்ஸ் இடையீடுசெய்து  பூர்வாங்க பேச்சுவார்த்தையொன்றையும் நடாத்தியது.  அதன்போது தோன்றிய பல அடிப்படை விடயங்கள் மீது எமது கவனம் செலுத்தப்படல் வேண்டும். முதலில் அரசாங்க வருமானம் மற்றும் செலவினங்களுக்கிடையில் நிலவுகின்ற முதனிலை மீதி 2.3 நேர்க்கணியப் பெறுமதிவரை   2025 அளவில் கொண்டுசெல்ல முடியுமென அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் நிலவுகின்ற தகவல்களையும் தரவுகளையும் பகுப்பாய்வு செய்தவிடத்து அது இலகுவான கருமமல்லவென்பது எமக்கு விளங்குகின்றது.  இந்த நிலைமையை அடைந்தால் மாத்திரம் கடன்  நிலைபெறுதகு நிலைமையை அடையமுடியும். அதாவது செலுத்தவேண்டியுள்ள அளவினை தாக்குப்பிடிக்கக்கூடிய விதத்தில் அமைத்துக்கொள்வதாகும். நிலவுகின்ற நிலைமையின்கீழ் நாடுகளுக்கிணங்க கடன் பற்றிய சிக்கல் மாற்றமடைகின்றது. ஜப்பான் போன்ற நாட்டில் கடன்சுமை 250% ஆக அமைகின்றது.  ஆனால் அது அந்த நாட்டுக்கு தாக்குப்பிடிக்கக்கூடிய, செலுத்தக்கூடிய நிலைமையாகும்.  ஆனால் எமது போதியளவிலான வருமானம் ஈட்டப்படுதல் இல்லாமையால்  எமது கடன் நிலைபெறுதகுநிலை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 100% விட குறைவானதாக இருக்கவேண்டும்.   அப்படியானால்  எவ்வாறு கடன் நிலைபெறுதகுநிலையை ஏற்படுத்திக்கொள்வது  என்பதற்கான திட்டத்தை தயாரித்துக்கொள்ள வேண்டும்.   அரசாங்கத்தின் பக்கத்தில் முதனிலை வரவசெலவு மீதி 2.3 நேர்க்கணியத்திற்கு செல்கின்ற விதம் தெளிவுபடுத்தப்படுவதில்லை.

இந்த நிலைமையில் அரசாங்கம் அரசாங்க வருமானத்தில் கடன்வட்டியை செலுத்துவதை நீக்கி ஏனைய செலவுகளுடன் மொத்த தேசிய உற்பத்தியுடன் இணக்கஞ்செய்து நேர்க்கணியப் பெறுமானத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்து வருவதாக எமக்கு சந்தேகம் தோன்றியுள்ளது. இந்த மீதி 2021 இல் 6%  எதிர்க்கணியமாகும். 2020 இல் 4.6 எதிர்க்கணியமாக இருந்தது. இன்னும் இரண்டு வருடங்களில் 2025 அளவில் எப்படி 2.3 நேர்கணியமாக மாறுவது? மத்திய வங்கிக்கிணங்க 2023 இல்  பற்றாக்குறை 8% எதிர்க்கணியமாக இருந்து   2024 இல் நேர்க்கணியமாக மாறி 2025 இல் கூறுகின்ற இந்த இலக்கிற்குச் செல்வதாக குறிப்பிட்டுள்ளது. இந்த நிலைமையில் எமக்கு தெளிவாவது வட்டி தவிர்ந்ததாக அரசாங்கத்தின் பாரிய செலவுச்சுமை வகிக்கப்படுகின்ற  அரச சம்பளம் செலுத்துதலை மக்களை துன்புறுத்தலுக்கு இலக்காகி வெட்டிவிடுவதற்கான வாய்ப்பு  நிலவுகின்றதென்பதாகும். செலவுகளை வெட்டிவிடுவது எனக்கூறி அந்த இடத்திற்கே வருவதாக நாங்கள் நினைக்கிறோம். எனினும் செலவுகளுக்குள்ளே மோசடிகள், ஊழல்கள், விரயம் அனைத்துமே இருக்கின்றன. செய்யவேண்டியது மோசடி, ஊழல், விரயத்தை  நீக்குவதேயொழிய சம்பளத்தைக் குறைப்பதல்ல.  இவர்கள் கூறகின்ற 2.3 நேர்க்கணிய இலக்கிற்குச் செல்லவேண்டுமாயின் வருமானத்தை அதிகரித்துக்கொண்டு செலவுகளை வெட்டிவிட வேண்டும். நிலவுகின்ற கட்டமைப்பிற்குள்ளே வருமானத்தை அதிகரித்துக் கொள்வதாயின் பொருளாதாரத்தை விரிவாக்க வேண்டும். நிலவுகின்ற சொச்சத் தேசிய செல்வத்தில் அதிகமாக ஈட்டிக்கொள்ள அரசாங்கம் செயலாற்றினால் பொதுமக்கள் மிகுந்த அழுத்தத்தை சந்திப்பார்கள். அதன் மூலமாக இடம்பெறுவது பொதுமக்களின் நன்மையன்றி அரசாங்கம் தப்பித்துக் கொள்வதாகும். அதற்காக வரிமேல் வரி வரவுள்ளது.  நிவாரணங்களை வெட்டிவிடுதல் மற்றும் மின்சாரக் கட்டணப் பட்டியல் , நீர்க் கட்டணப் பட்டியல் போன்ற அனைத்துவிதமான செலவுகளும் அதிகரிக்கப்பட உள்ளன.

 இந்த ஆபத்தினை நாங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். விளங்கிக்கொள்வதன் மூலமாக நிலைவமையைத் தோற்கடித்திட வேண்டும். எந்தவோர் அரசாங்கத்திற்கும் அழிவுமிக்கவகையில் தேசிய வளங்களை விற்றொழித்திட முடியும். இன்றளவிலும் அதற்காக செயற்பாட்டுத் திட்டமொ்னறை அமுலாக்கியுள்ளது.   நாணய நிதியம் முன்வைத்துள்ள மற்றுமொரு நிபந்தனையாக அமைவது மின்சாரம், எரிபொருள் போன்ற அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் சேவைகளின் கிரயத்தை உள்ளடக்கத்தக்கவகையில் விலைகள் நிர்ணயிக்கப்பட வேண்டுமென்பதாகும். ஆனால் இதன்மூலமாக  ஏதேனும் அழுத்தத்திற்கு இலக்காகின்ற குழுக்களுக்கு நிவாரணம் வழங்கவும் நாணய நிதியம் முன்மொழிந்துள்ளது. எனினும் கேஸ் விலை, எரிபொருள் மற்றும் மின்சார விலை என்பவற்றில்  அவற்றின் உண்மையான உற்பத்திக் கிரயத்திற்கு மேலதிகமாக மோசடிகள், ஊழல்களில் ஒரு பகுதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது. பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நட்டமடைகையில் ஐ.ஓ.சீ. கம்பெனி இவ்வருடத்தின் இரண்டாவது காலாண்டில் பத்து பில்லியன் ரூபா நிகர இலாபத்தை வெளிக்காட்டி இருப்பது இதனால்த்தான். மற்றுமொரு பக்கத்தில் மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மை மற்றும் நிதிசார் உறுதிநிலைக்காக இடமளித்திட வேண்டும். தொழில்வாண்மைரீதியான பணிகளை மேற்கொள்ள மத்திய வங்கிக்கு ஏற்புடைய சுயாதீனத்தன்மை வழங்கப்பட வேண்டும். ஒரே நோக்கத்தில்   இருந்துகொண்டு  அரசாங்கத்தின் வரிக்கொள்கையை நடைமுறைப்படுத்த அரசாங்கம் இடமளி்க்க வேண்டும்.  ஆனால் அதிகாரத்தை பாதுகாத்துக்கொள்ள அல்லது பெற்றுக்கொள்வதற்காக வரிக்கொள்கையைக் கூட்டிக்குறைத்து நிதிசார் கொள்கையை பலிகொடுக்கின்ற நிலைமையை நாங்கள் காண்கிறோம். இன்றைய நிலைமையின்படி மத்திய வங்கி அமுல்படுத்துகின்ற நிதிசார் தந்திரோபாயங்களுக்கு அரசாங்கம்  ஒத்துழைப்பு வழங்காத முரண்பாடு உருவாகக்கூடும். 

ஏற்கெனவே நாங்கள் நாணய நிதியத்திடமிருந்து பதினாறு தடவைகள் விரிவான நிதி வசதிகளைப் பெற்றுக்கொண்டு சென்மதி நிலுவையை சமப்படுத்தல் பற்றிய சிக்கல்களைத் தவிர்த்துக்கொண்டுள்ளோம். ஆனால் சிறியசிறிய திருத்தங்களை செய்தோமேயொழிய எமது நாடு முறையான பாதையில் அபிவிருத்தியை நோக்கிச் செல்லவில்லை.  இத்தடவை 290 கோடி டொலர் நான்கு வருடங்களுக்குள் கிடைக்கின்றது. பயணிக்கின்ற இந்த பயனப்பாதையின்பேரில் இந்த கடன் தொகையின் பேரில் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்கமுடியுமென்ற முட்டாள்த்தனமான கருத்திற்குச் செல்லலாகாது. இந்த கடனை வழங்குகின்ற போது மேலோட்டமாக புலப்படாத அறவிடல்கள் இருக்கின்றன. வட்டி குறைவானதென்பது உண்மை. எனினும் தற்கோது வாக்குறுதி அளித்துள்ள 290 கோடிக்காக அதற்கு குறைவான தொகையை அரசாங்கம் அவர்களின் நிபந்தனைகளை ஈடேற்றுவதின்பேரில் பெற்றுக்கொடுத்தால் மொத்த கடன்தொகைக்குமே வட்டி அறவிடப்படும். அதைப்போலவே மறைவான சேவைகள் கட்டணமும் நிலவுகின்றது. நாங்கள் முதலாவது கடன் தவணையைப் பெற்றுக்கொண்ட  1964 இல் இருந்து கவனத்திற்கொண்டால் 1984 தொடக்கம் இற்றைவரை ஏறக்குறைய 350 கோடி கடன் தொகையே  வழங்கப்பட்டுள்ளது.   ஆனால் நாங்கள் அந்த காலப்பகுதிக்குள் செலுத்தியுள்ள மற்றும் வருங்காலத்தில் செலுத்தவுள்ள சேவைகள் கட்டணத்தையும் வட்டியையும் கணிப்பிட்டால் நூறு கோடி டொலருக்கு கிட்டிய அளவினை செலுத்த நேரிட்டுள்ளது.  நாணய நிதியம் எமது நாட்டில் நிலவுகின்ற அரசியல் நிலைமையின்பேரில் ஊழலைக் குறைத்தல் சம்பந்தமாகவும் விடயங்களை சுட்டிக்காட்டி உள்ளது. கடன் நிலைபெறுதகு திட்டம் பற்றி இற்றைவரை அரசாங்கம் திட்டமொன்றை சமர்ப்பிக்காவிட்டாலும்  வெகுவிரைவில் திட்டமொன்றை சமர்ப்பிப்பதாக புலனாகவில்லை. இந்த நிலைமையின்கீழ் நெருக்கடியிலிருந்து  கரைசேர்வதைப் பார்க்கிலும் மென்மேலும் ஆழமாகி வருகின்றமை தெளிவாகின்றது. எதிர்காலத்தில் தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பேரவை நிலவுகின்ற நிலைமை பற்றி மக்களுக்கு விடயங்களை எடுத்துரைக்கும். அதனூடாக நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி பற்றி சிறந்த உரையாடலொன்றை உருவாக்கிகொள்ள நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.

வரியை அதிகரிக்கச் சென்றால் பொருளாதாரம் மென்மேலும் சுருங்கும்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வியாபார கற்கைகள் பிரிவின் தலைவர் பேராசிரியர் ஜகத் குமாரசிங்க

இலவசக் கல்வி மூலமாக இந்த இடத்திற்கு வந்த எமக்கு நாட்டு மக்களுடன் சம்பந்தப்பட்ட அன்றாட சிக்கல்களின்போது ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் ஏற்படுகின்ற சிக்கல்களுடன் தொடர்புபடுவதற்கான பொறுப்பு இருக்கின்றது. பொருளாதாரம் தொடர்பான ஆராய்ச்சிகளிலிருந்து பெறப்படுகின்ற தரவுகள், அறிவு, தகவல்கள் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக  செயலமர்வுகளை நடாத்துதல் மற்றும் இத்தகைய ஊடக சந்திப்புகளின்போது விழிப்புணர்வூட்டுவது  அத்தகைய பொறுப்பின் ஒரு பகுதியாகும். மக்களின் அன்றாடப் பொருளாதாரம் போன்றே நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம்  பற்றி தொடர்ச்சியாக மக்களுக்கு விழிப்புணர்வூட்ட இந்த பொருளாதாரப் பேரவை மூலமாக நாங்கள் எதி்ர்பார்க்கிறோம். ஒருசில தரவுகள் கூருணர்வு மிக்கவையாகும். பொருளாதாரத்தை நெறிப்படுத்துபவர்கள் எவராக இருந்தாலும் பொருளாதாரத்தை நெறிப்படுத்துவதன் மூலமாக கிடைக்கின்ற நேர்க்கணிய அல்லது எதிர்க்கணிய பெறுபேறுகளை இறுதியாக அனுபவிப்பவர்கள் இந்நாட்டு மக்களாவர். பொருளாதாரம் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்ற, கருத்துக்களை வெளியிடுகின்ற, செயலமர்வுகளை நடாத்துகின்ற அனைவரைரயும் இந்த மேடைக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறோம்.  அரசாங்கத்திற்குக்கூட அவசியமான சந்தர்ப்பங்களில் நாங்கள் தரவுகள், ஊகங்களை வழங்கி  நிலவுகின்ற நெருக்கடியிலிருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்க எம்மை அர்ப்பணித்துள்ளோம்.  

நாணய நிதியத்திடமிருந்து ஏதேனும் நிவாரணத்தை நாங்கள் எதிர்பார்த்திருப்பின்  ஈடேற்றவேண்டிய அடிப்படை நிபந்தனைகள் மத்தியில் முதனிலை கணக்கின் நேர்க்கணிய மீதியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகும். இந்த நிலைமையை எற்படுத்திக்கொள்ள வேண்டுமாயின் வருமானத்தை அதிகரித்துக்கொண்டு செலவினங்களை குறைத்துக்கொள்ள வேண்டிய விதம் பற்றி பேராசிரியர் அனில் ஜயந்த தெளிவுபடுத்தினார்.  எந்தவொரு நாட்டிலும் அரச வருமானத்தின் பிரதான தோற்றுவாய் நேர் மற்றும் மறைமுக வரியாகும். தற்போதும் எமது நாடு  பாரிய வரிச் சதவீதத்தைக்கொண்ட நாடாகும். சாதாரண ஆளொருவர் தனது  வருமானத்தில் ஏறக்குறைய 40% ஐ வரியாகச் செலுத்துகின்ற நிலைமையே காணப்படுகின்றது.  அரசாங்கத்தின் வரிகள் அதிகரிக்கப்பட முனைகின்றவேளையில் பொரளாதாரத்தின் ஏனைய பேரண்ட பொருளாதார விடயங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் பேரண்ட மாறிகள்  என அழைக்கப்படுகின்ற கடன் வட்டி வீதம், பணவீக்கம், அந்நிய செலாவணி விகிதம், தொழிலின்மை வீதம் போன்ற அனைத்துமே ஒன்றுடனொன்று தொடர்புபட்டவையாகும். இந்த ஒவ்வொரு மாறி மீதும் ஏற்படுத்தபடுத்தப்படுகின்ற  தாக்கம் அல்லது மாற்றம் எனைய பொருளாதார மாறிகள் மீது  கட்டாயமாக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.  வரியை அதிகரிக்க முயற்சி செய்தால் அது நாட்டின் ஒட்டுமொத்த மக்களின்  வாழ்க்கையை நேரடியாகவே பாதிக்கின்றது.   அதைப்போலவே வட்டி வீதத்தை அதிகரிப்பதன் மூலமாக பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யப்பட்டு வருகின்றது. அது மத்திய வங்கியால் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கையாக அமைந்தது. அதன் மூலமாக பொருளாதாரத்திற்கு அதிர்ச்சியொன்று ஏற்படுத்தப்படுகின்றது.

அதன் மூலமாக பொருளாதாரத்திற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அதிர்ச்சிகளால் ஏனைய மாறிகளுக்கு தாக்கங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.   பிரதானமான அதிர்ச்சி வணிகத் தொழில் முயற்சியாளர்களுக்கு ஏற்பட்டதாகும்.  வங்கிக்கடன் பெறுவதன் மூலமாகவே அவர்களின் மூலதனம் உருவாக்கப்படுகின்றது.   அதற்கான கிரயமொன்றை ஏற்க நேரிடும்.  அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடொன்றில் தொழில்முயற்சி  முதலீடுகளில்  இருந்து கிடைகின்ற நன்மைகளுக்குள்ளே அடங்கியுள்ள இலாபம்  மொத்தக் கிரயத்தில் 10% -15% இற்கு இடைப்பட்ட அளவிலாகும். ஆனால் இன்றளவில் வட்டி வீதம் 25% ஐ கடந்துவிட்டது. இந்த நிலைமையின்கீழ் வங்கிகளிடமிருந்து கடன்பெற்று  முதலீடு செய்து பெறப்படுகின்ற நன்மைகளின் இலாபம்  அவரது வங்கிக் கடனைச் செலுத்தக்கூட போதுமானதாக அமையமாட்டாது.  இதனால் தொழில் முயற்சிகள் அனைத்துமே உறுதியற்ற நிலைமைக்கு மாறியுள்ளது. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் மாத்திரமன்றி பாரிய  அளவிலான தொழில் முயற்சிகள்கூட நிலைதடுமாறி உள்ளன.  புதியதாக தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பது நலிவடையச் செய்யப்பட்டுள்ளது. இதனால் எமது பொருளாதாரம் சுருங்கி வருகின்றது.  உலக வங்கி இது சம்பந்தமாக   செய்துள்ள எதிர்வுகூறலின்படி எதிர்வரும் ஆண்டில் 10 பில்லியன் டொலர்களை விஞ்சிய அளவில் இலங்கைப் பொருளாதாரம் சுருங்கக்கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  2023 ஆம் ஆண்டில் எமது பொருளாதாரம் 2011 இல் நிலவிய நிலைமைக்கு சரிந்துவிழுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசாங்கம் வரிகளை அதிகரித்துக்கொள்ள முயற்சி செய்வதன் மூலமாக  பொருளாதாரம் சுருங்குகின்ற வேகம் மேன்மேலும் துரிதமடையும். இதனால் எப்படியாவது தாக்குப்பிடித்துள்ள தொழில்முயற்சிகளுக்குக்கூட அச்சுறுத்தல் தோன்றக்கூடும். நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஒன்றுடனொன்று தொடர்புபட்ட பேரண்டப் பொருளாதார விடங்களுக்கிணங்க தொழில்முயற்சியாளர்கள் பெற்றுள்ள கடன்களுக்கான வட்டியைச் செலுத்துவதிலான பிரச்சினைகூட தோன்றக்கூடும். 

நாணய நிதியம் கடன் மறுசீரமைப்பிற்குச் செல்லுமாறு ஆலோசனை வழங்கவும் தற்போது கடன்தவணை மற்றும் வட்டியை செலுத்தமுடியாத நிலைமைக்கு  சரிந்து விழவும் வாய்ப்பு உண்டு. அத்தகைய நிலைமையில் பொருளாதாரத்தைக் மீட்டெடுக்கின்ற மற்றும்  பொருளாதாரத்தை முன்நோக்கிக் தள்ளுகின்ற வங்கிகளை உள்ளிட்ட நிதிமுறைமை போன்றே அதனோடு சம்பந்தப்பட்ட ஏனைய நிறுவனங்களும் பாரிய அபாயநேர்வுக்கு பயணிக்கக்கூடும்.   அதனால் இச்சந்தர்ப்பத்தில் மிகவும்  கவனமாக அபாயநேர்வு முகாமைத்துவத்தை மேற்கொள்வதில் அரசாங்கம் கவனஞ் செலுத்துதல் வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் எமது ஒட்டுமொத்த நிதி முறைமையும் கடுமையான அபாயநேர்வுக்கு இலக்காகக்கூடும். அத்தகைய நிலைமையானது மீண்டும் சரிசெய்துகொள்ள முடியாத பாதகவிளைவுகளைக் கொண்டுவரும்.  பொருளாதாரமொன்றின் நிதியாக்க வழிவகைகள் இவ்விதமாக  அபாயநேர்வுக்கு இலக்காகி உள்ளதைப்போலவே  வலுச்சக்தி பிறப்பாக்கமும் பாரிய ஆபத்தினை எதிர்நோக்கி உள்ளது. வலுச்சக்தி நாட்டின் தொழில்முயற்சிகளுக்கும் மக்கள் வாழ்க்கைக்கும் அத்தியாவசியமானதாகும்.  இன்றளவில் வலுச்கக்தி   வழங்கல் பாரதூரமான நெருக்கடியைச் சந்தித்துள்ளது.  பொருளாதாரத்திற்குள் மேலும் பல பிரதான விடயங்கள் பற்றி பேசக்கூடியபோதிலும் நிதி முறைமை மற்றும் வலுச்சக்தி வழங்கல் ஆகிய இரண்டு அடிப்படை விடயங்களுக்குள் பொருளாதாரம் மென்மேலும் படுகுழிக்குள் விழுகின்றதென்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். அதற்கான சரியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டும். வலுச்சக்தி வழங்கலில் உறுதிநிலையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

கடன் பெறுவதில் பிரச்சினை கிடையாது. கடனை முதலீடுசெய்து பெற்றுக்கொண்ட நன்மைகள் யாவை, கடனை சரியாக முகாமைசெய்து  முதலீடு செய்தார்களா எனும் கேள்வி எழுகின்றது. கடனை முறைப்படி முதலீடு செய்திருப்பின்  கடன் மீளச்செலுத்துதல் பற்றிய பிரச்சினை தற்போது எழுந்திருக்கமாட்டாது. கடன்களிலிருந்து கிடைக்கின்ற நன்மைகள் பொருளாதாரத்தை நோக்கிப் பாய்ந்துவராமை அடிப்படை பிரச்சினையாகும். நிதி முறைமையின் பாதுகாப்பு சம்பந்தமாக அது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. அது சம்பந்தமாக மிகவும் கவனமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. வலுச்சக்தி வழங்கலிலும் அப்படித்தான். இந்த இரண்டு பிரதான விடயங்களையும் முறைப்படி நெறிப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் நாட்டில் நிலவுகின்ற மாறிகளை முறைப்படி முகாமை செய்யாவிட்டால்  எமது பொருளாதாரம் ஒரே இடத்தில் உக்கிப்போகின்றவேளையில் ஏனைய நாடுகளின் பொருளாதாரங்கள்  எம்மைக் கடந்து வேகமாக முன்நோக்கி நகரும்.  வியட்நாம்,  பங்களாதேஷ், இந்தியா என்பவை தக்க உதாரணங்களாகும்.  இந்த நிலைமையில் சந்தேகமின்றி எமது பொருளாதாரம் வீழ்ச்சியடைவதை நிறுத்திக்கொள்ளவேண்டும். அதன்போது நிதி முறைமைக்கும் வலுச்சக்தி வழங்கலுக்கும்  தனித்துவமான கவனத்தைச் செலுத்தவேண்டும்.

பொருளாதாரமொன்றின் பிரதாபன என்ஜின் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில் தொகுதியாகும். சுதேச உற்பத்திகளை சர்வதேசத்திற்கு கொண்டுசெல்லல், பெருந்தொகையான தொழில்வாய்ப்புகளை உருவாக்குதல் இந்த துறைகளிலேயே இடம்பெறுகின்றது. எனினும் நிதி முறைமையும் எரிபொருள் வழங்கலும் நலிவடைந்தால் எமது பொருளாதாரம் இதைவிட இருள்மயமான நிலைமையை அடையும். தற்போது உள்ள சமிக்ஞைகள் எவ்விதத்திலும் நலமானவை அல்ல. தொழிலின்மை வேகமாக அதிகரித்து வருகின்றது. இத்தகைய பொருளாதார நெருக்கடியின்போது ஏனைய உலக நாடுகள் முன்னுரிமை அளிக்கவேண்டிய வரிசைக்கிரமத்தை தயாரிக்கின்றன. இன்று எமது நாட்டில் பிரதானமானதாக அமைவது அரசியல் உறுதிநிலையை ஏற்படுத்துவதாகும்.  அரசியல் ஸ்திரத்தன்மை நிலவாத இடத்தில் பொருளாதார உறுதிநிலை தாக்குப்பிடிக்க மாட்டாது.  பொருளாதாரத்தை மீட்டெக்க  அரசியல் உறுதிநிலை மிகவும் விரைவாக ஏற்படுத்தப்படல் வேண்டும். பொருளாதாரம் முன்நோக்கி பயணிக்கையில் வலுச்சக்திக்கும் பொருளாதாரத்திற்கும் இடையில் நேரக்கணியத் தொடர்பு நிலவும். அதைப்போலவே மூலதனவாக்கத்தின் கிரயத்திற்கும் பொருளாதாரம் முன்நோக்கி நகர்வதற்கும் இடையில் தொடர்பு நிலவுகின்றது.  இந்த  மாறிகளுக்கிடையிலான தொடர்புகள் மீது தீவிர கவனஞ்செலுத்தி முதன்மைத்தானத்திற்கு அமைவாக  பொருளாதாரத்தை சரியான இடத்தைநோக்கி நகர்த்த வேண்டிய பொறுப்பு நிலவுகின்றது.  ஒரு நாடு என்றவகையில் நாங்கள் பொறுப்பினை ஏற்கத் தயார். அது சம்பந்தமாக தொடர்ச்சியாக விழிப்புணர்வூட்டுதலை மக்கள் மத்தியில் மேற்கொள்வதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். 

இந்த ஊடக சந்திப்பிற்காக இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகத்தின் முன்னாள் முதநிலை ஆலோசகரும் இங்கிலாந்து றெடிங் பல்கலைக் கழகத்தின் முதுநிலை விரிவுரையாளருமான சாந்த ஜயரத்ன மற்றும்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  சுனில் ஹந்துன்னெத்தியும் பங்கேற்றனர். முதுநிலை விரிவுரையாளர் சாந்த ஜயரத்ன ஆங்கில மொழியில் விடயங்களை எடுத்துரைத்தார். 

Show More

We all should unite to save the country from bankruptcy

Anura Dissanayake – Leader of the National People’s Power Gotabaya Rajapaksa had shown us that he is a very strong leader. Gotabhaya Rajapakse was well-known for white van culture and also as a person who kidnapped and killed journalists. But what happened? In the face of the biggest popular uprising seen in our lifetime, he […]

Anura Dissanayake – Leader of the National People’s Power

Gotabaya Rajapaksa had shown us that he is a very strong leader. Gotabhaya Rajapakse was well-known for white van culture and also as a person who kidnapped and killed journalists. But what happened? In the face of the biggest popular uprising seen in our lifetime, he had to flee secretly. He had the power of the President, the power of the Commander-in-Chief, the power to direct the police, a cabinet of ministers, and the power of two-thirds of the Parliament. His brother was the prime minister. The other brothers were ministers. Two sons were ministers. Even after all this, he had to flee before the power of the people. For the first time in Sri Lanka, they have shown that they are in power before the eyes of the people. But for a long time, the rulers had not allowed the power of the people to come out. They had created a set of people who live in fear not only of the minister, the member of the province but also of the member of the pradeshiya sabha. As a result of the rise of the people, a situation was created where the MPs could not at least attend a funeral house. Earlier, it was people who could not reach them, but now it is they who could not come to people.

What we should do is accumulate the dispersed power in an organized way. The aragalaya is a great inspiration. There was a great uprising of the people. But the result is partial. Ranil Wickramasinghe, who could not get votes to even come to the parliament, became the president. So, everyone has at least a little bit of disappointment. It is sad not to be able to reach the maximum victory. But the second uprising will take place under the leadership and direction of the National People’s Power. That’s why we need to be organized. Scattered agitation and booing can only express one’s anger and pain; The problem will remain unsolved. The real solution can be obtained only by building an organized power. Although many people are confused and worried, we are not. We are forming divisional councils in all grama niladari divisions in Sri Lanka.

Real achievement can be achieved if the people rise to a goal in an organized manner, with proper leadership, and with a proper purpose. If we look at the general election map, this president has more than two years left. Parliament is valid for a little less than three years. But we can’t wait any longer. The ruling parties have destroyed the economy of our country. Last April 12th was Black Day in our country. The Governor of the Central Bank announced a decision that we will not pay the foreign loans we have taken. That means that our country is officially bankrupt. Sri Lanka is now a swindler to the world. The situation is not simple. For a long time, we have been telling the people that the final consequence of this journey will be the bankruptcy of our country. Now, as a country, bankruptcy has been officially announced. Because of this, no country will give us a loan. They will just lend us small amounts. Even the beggars of Tamil Nadu send their collected money to our country. The situation the data reveal is alarming. A little bit of oil tanks reaching our country does not mean that the problem is solved. The amount of foreign debt due from April is 2490 million dollars. By March, the debt was paid and some oil was also brought. In September, there is only a little more oil without paying the debt. The reality is our economy is worse than in March. Every organization in the world has warned in this regard.

The Governor of the Central Bank had recently stated that the second uprising would be more dangerous than the first uprising of the people. The central bank governor told the country that there will be a second uprising because of food scarcity, and there may be great bloodshed in the country. Should we wait three more years for an election in this situation? Can anyone say that these rulers will solve the problems? If the child faints and falls at school if there is no medicine for cancer if the farmer does not have fertilizer, what will happen? Six hundred thousand people have lost their jobs in the construction industry alone. Despite the loss of money in the treasury, more and more ministers are swearing in and embezzling people’s money. We all have to start changing this situation in the country. We have to build a human life where people can enjoy a work of art and literature by discussing it with them. For that, let’s all come together to bring victory to the National People’s Power in the village and the country.

Hold an election or make the country a prison

Tharaka Nanayakkara, Attorney-at-Law, District Executive Member of the National People’s Power

In any election, which will be held first, all of us in the National People’s Power pledge to win the Akuressa seat at the top. While following every step to suppress the government led by Ranil Rajapaksa, we will be continuing this journey on the democratic path. According to the Official Secrets Act, gazette notices were issued and high-security zones were designated. The rally of the Socialist Youth Union did not enter the high-security zones and the Kurunduwatta police were informed in advance, but a large number of people were arrested and brutally attacked. The Court has already granted bail to all those arrested. There are two ways to stop public protests. One is to allow the public to form a new government. Or instead of declaring high-security zones in several places, making the whole country a prison and issuing gazettes. People can no longer bear that much pressure and are taking to the streets.

A battle must be fought to safeguard the child’s right to not be deprived of the rice packet

Saroja Savithri Paulraj, National Executive Member of the National People’s Power

As a woman and as a mother, I have discussed this with many people. As a school teacher, I know the real situation of those children. It is not possible to hold a 15-minute morning assembly at school as students faint and fall. Earlier we used those children whether they had breakfast. Now a large number of people do not have not only breakfast but dinner too. Also, parents have not been able to afford bus fares to send their kids to school all five days. We are all gathered for the fight to win your child’s right to food and right to education. This is not a battle for personal privileges or rights. Now there is a set of people who have come together with understanding to truly find answers for the people who are under pressure as a country. Therefore, we are demanding to give the people the opportunity to form a government democratically. If not, it is emphasized that we will go to the streets and come forward to win our rights.

The award of love received from the people is appreciated above all awards

 Veteran actor Dr. Prasannajit Abeysuriya

Our life, our future, our education, and our culture are all decided by a political party that comes to power.  None of the political parties that have come to power so far have loved this country and its people.  That is why this country has fallen into this situation and it has become a tragedy.  In this situation, we realized that we are not doing enough to reach the people through our artistic work and creations alone.  We understood that we must give our support to a clear political movement that loves this country and can rebuild this country.  Therefore, we stood together with the National People’s Power in such a way that we could walk down the street without fear or shame. I personally took a decision that we did not regret that we made a mistake even at the last minute.  Many artists have taken this decision. I appreciate the award from the people these days because of our politics more than the other awards we have received.  We get that love from the people in a way that we have never received before all other awards.  The people’s award is the biggest award I have received.

We are developing plans for building the country at the electoral division level

Sunil Handunnetthi, National Executive Member of the National People’s Power

The general public is now saying that only the National People’s Power can take over this country and build the country without theft, fraud, and corruption.  We are asked about things like our foreign policy, economic policy, and foreign debt issue. People are gathering all over the country expressing so much faith in us. There are various leaders like Ranil Wickramasinghe of the United National Party, Sajith Premadasa who broke away from that party, and Maithripala Sirisena of the Sri Lanka Freedom Party. Earlier we were asked who is our leader like the leaders of new parties.  Now they say to Anura Kumara Dissanayake, “we are ready to hand over this country soon.  Accept it quickly.”  People also have the question of who to vote for at the village level when it comes to an election.  It started in Akuressa, to give answers to that question for the whole of Sri Lanka. Those who reside in Akuressa seat in Matara district have received the answer to this question. In the next two months, we are working on completing the executive councils in all seats in Matara district.  In a National People’s Power government, plans are made to build relevant seats and solve people’s problems.  Our general economic program is to build a productive economy and involve the people in it and provide benefits.  Accordingly, a formal plan is prepared by collecting data in each electoral division.  We are working to provide that example to Sri Lanka.  We say that on the day we create a debt-free country, and on the day we create a free man, we all become the giants who strived to create such a country.

This country can be changed in five years with a correct system

Upul Kumarapperuma, National Executive Member of the National People’s Power

As a lawyer, I think that the foundation of certainty in a country’s legal system is the main factor in building a country.

As of today, the question has arisen as to whether there is a law in this country, and if there is a law, what kind of law is it?  Let me tell you a simple example from a point that we all understand.  It takes at least 15 years to solve a child abuse case in our country.  If a 12-year-old girl is abused, a complaint is made to the police, and after the police investigation, the investigation report is sent to the Attorney General, and after many years, the Attorney General’s Department submits an indictment to the High Court.  By the time this process takes place, the child will be in her twenties. Will that child remember all this time about the crime which happened? And they are ashamed at a young age.  Some evidence may have been destroyed.  Eyewitnesses may die.  Other evidence may be destroyed by that time.  There are such big flaws in the legal system of our country.  Also, appointments and promotions in the public sector are made based on political influence.  This situation should be changed.  Under our rule, no official of the government will be allowed to act in a biased manner. And don’t you feel pain when some of your friends leave the country every day?  Let’s change this whole system.  Here is the energy to change it, the honesty to change it, the ability to change it, and the power to change it.  This country can be changed in five years with the correct system.

Show More

Towards a tourism economy (Video) 

Towards a tourism economy | සංචාරක ආර්ථිකයක් කරා… | Anura Dissanayake | 2022.09.27

Towards a tourism economy | සංචාරක ආර්ථිකයක් කරා… | Anura Dissanayake | 2022.09.27

Show More

நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டெக்க நாமனைவரும் அணிதிரள வேண்டும்

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர திசாநாயக்க கோட்டாபய ராஜபக்ஷ மிகவும் பலம்வாய்ந்த தலைவரென எமக்கு எடுத்துக்காட்டி இருந்தார்கள். வெள்ளை வேன் கலாசாரம்,  ஊடகவியலாளர்களை கடத்திச் சென்ற, ஊடகவியலாளர்களை படுகொலைசெய்த ஒருவர் என்றவகையில் கோட்டாபய ராஜபக்ஷ சமூகமயப்படுத்தப்பட்டிருந்தார். ஆனால் என்ன நடந்தது? எமது வாழ்நாளில் கண்ட மிகப்பெரிய மக்கள் எழுச்சியின் மத்தியில் கள்ளத்தனமாக தப்பியோடவேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது.  அவரிடம் சனாதிபதி அதிகாரம், பொலீஸாரை நெறிப்படுத்துகின்ற அதிகாரம், அமைச்சரவை, பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் இருந்தது. அவரது […]

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர திசாநாயக்க

கோட்டாபய ராஜபக்ஷ மிகவும் பலம்வாய்ந்த தலைவரென எமக்கு எடுத்துக்காட்டி இருந்தார்கள். வெள்ளை வேன் கலாசாரம்,  ஊடகவியலாளர்களை கடத்திச் சென்ற, ஊடகவியலாளர்களை படுகொலைசெய்த ஒருவர் என்றவகையில் கோட்டாபய ராஜபக்ஷ சமூகமயப்படுத்தப்பட்டிருந்தார். ஆனால் என்ன நடந்தது? எமது வாழ்நாளில் கண்ட மிகப்பெரிய மக்கள் எழுச்சியின் மத்தியில் கள்ளத்தனமாக தப்பியோடவேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது.  அவரிடம் சனாதிபதி அதிகாரம், பொலீஸாரை நெறிப்படுத்துகின்ற அதிகாரம், அமைச்சரவை, பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் இருந்தது. அவரது அண்ணன் பிரதமராகி இருந்தார். ஏனைய அண்ணன்மார்கள் அமைச்சர்களாகி இருந்தார்கள். இரண்டு மகன்மார்கள் அமைச்சர்களாகி இருந்தார்கள். அவையனைத்துமே இருந்தும் மக்களின் சக்தியின் மத்தியில் தப்பியோடவேண்டி நேரிட்டது.  இலங்கையில் முதல்த்தடவையாக  மக்களின் கண்ணெதிரில் அதிகாரம் தம்மிடமே இருக்கின்றதென்பதை காட்டியுள்ளார்கள். ஆனால் நீண்டகாலமாக ஆட்சியாளர்கள் மக்களின் அந்த பலத்தை வெளியே வரவிடாமல் அடக்கி வைத்திருந்தார்கள். அமைச்சருக்கு பிரதேசத்தின் பாராளுமன்ற உறுப்பினருக்கு மாத்திரமன்றி பிரதேச சபை உறுப்பினருக்கும்  பயந்து வாழ்கின்ற மக்களை உருவாக்கி வைத்திருந்தார்கள். ஆனால் மக்களின் எழுச்சியின் மத்தியில் உறுப்பினர்களுக்கு குறைந்தபட்சம் சாவு வீடொன்றுக்கு வரமுடியாத நிலை உருவாக்கப்பட்டது. அதற்கு முன்னர் மக்களால் அவர்களிடம் செல்ல முடியாது.  தற்போது அவர்களால் மக்களிடம் செல்ல முடியாது.

 பரந்துள்ள பலத்தை ஒழுங்கமைந்தவகையில் ஒருங்கிணைக்கவேண்டிய நிலையே எங்களுக்கு இருக்கின்றது. போராட்டம் பாரிய ஒரு அனுபவமாகும். மக்களின் பாரிய எழுச்சி இடம்பெற்றது. எனினும் பெறுபேறு பகுதியளவானதே.  பாராளுமன்றத்திற்கு வரக்கூட வாக்குகளைப் பெறமுடியாத ரனில் விக்கிரமசிங்க சனாதிபதியானார். அதனால் எவருக்கும் சிறியதோர் எதிர்பார்ப்புச் சிதைவு இருக்கின்றது. உச்ச வெற்றியை நோக்கிச் செல்லமுடியாமை  பற்றிய கவலை இருக்கின்றது. ஆனால் இரண்டாவது எழுச்சி தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவத்துடனும் நெறிப்படுத்தலுடனுமே இடம்பெறும். அதனாலேயே நாங்கள் ஒழுங்கமைய வேண்டும். பரவலாக ஆர்ப்பாட்டம் செய்து கூக்குரலிட்டு தமது வேதனையையும் கோபத்தையும் வெளிப்படுத்த மாத்திரமே முடியும்: பிரச்சினை தீர மாட்டாது. ஒழுங்கமைந்த சக்தியொன்றைக் கட்டியெழுப்புவதன் மூலமாக மாத்திரமே உண்மையான தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும்.  பெரும்பாலானவர்கள் பதற்றமடைந்தாலும்  நாங்கள் பதற்றமடையப் போவதில்லை. இலங்கையில் உள்ள அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளிலும் நாங்கள் தொகுதி அமைப்புகளை நிறுவுவோம்.

ஒழுங்கமைந்தவகையில், முறையான தலைமைத்துவத்துடன், சரியான நோக்கத்துடன்  இலக்கினை நோக்கி மக்கள் எழுச்சிபெற்றால்  உண்மையான வெற்றியை பெற்றுக்கொள்ள முடியும். பொதுவான தேர்தல் தேசப்படத்தைப் பார்த்தால் இந்த சனாதிபதிக்கு மேலும் இரண்டு வருடங்களுக்கு மேற்பட்ட காலம் இருக்கின்றது. பாராளுமன்றம் மூன்று வருடங்களுக்கு சற்று குறைந்த காலத்திற்கு செல்லுபடியாகும். ஆனால் எம்மால் இனிமேலும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. ஆட்சிக் குழுக்கள் எமது நாட்டை முற்றாகவே நாசமாக்கி விட்டன. கடந்த ஏப்பிறல் 12 ஆந் திகதி  எமது நாட்டின் கறுப்புத் தினமாகும். நாங்கள் பெற்றுள்ள வெளிநாட்டுக் கடன்களை  இனிமேலும் செலுத்த முடியாதென மத்திய வங்கி ஆளுனர் தீர்மானமொன்றை வெளியிட்டார்.  அதாவது எமது நாடு வங்குரோத்து நிலையடைந்து விட்டதென்பதை உத்தியோகபூர்வரீதியாக அறிவிப்பதாகும். இலங்கை தற்போது உலகத்திற்கே கடனாளியாகி விட்டது. நிலைமை எளிமையானதல்ல. இந்த பயணப்பாதையின் இறுதிப் பாதகவிளை எமது நாடு வங்குரோத்து நிலையடைவதே என நாங்கள் நீண்டகாலமாக மக்களுக்கு கூறிவந்தோம். தற்போது ஒரு நாடு என்றவகையில் உத்தியோகபூர்வரீதியாக  கடனிறுக்க வகையற்றுப் போயுள்ளதென்பது வெளிப்படுத்தப்பட்டுவிட்டது.  இதனால் எந்தவொரு நாடும் எமக்கு கடன் தரமாட்டாது. சிறியசிறிய உதவிகளை வழங்குவது மாத்திரமே. தமிழ்நாட்டின் பிச்சைக்காரர்கள்கூட சேகரித்துக்கொண்ட பணத்தை எங்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். புள்ளிவிபரங்களுக்குள்ளே மறைந்துள்ள நிலைமை மிகவும் பயங்கரமானது. எண்ணெய் வந்துவிட்டது என்பதற்காக பிரச்சினைகள் தீரவில்லை. ஏப்பிறல் மாதத்தில் இருந்து செலுத்தவேண்டியுள்ள வெளிநாட்டுக் கடனின் அளவு 2490 மில்லியன் டொலர்களாகும். மார்ச்சு மாதமளவில் கடனையும் செலுத்தி சிறிதளவு எண்ணெயையும் கொண்டு வந்தார்கள். செத்தெம்பர் மாதத்தில் கடனைச் செலுத்தாமல் எண்ணெய் சற்று அதிகமாக இருக்கிறது மாத்திரமே.  உண்மைநிலை எமது பொருளாதாரம் மார்ச்சு மாதத்தைவிட பயங்கரமானது. உலகின் எல்லா அமைப்புகளும் இது சம்பந்தமாக எச்சரிக்கை விடுத்திருந்தன.   

மத்தியவங்கி ஆளுனர் அண்மையில் மக்களின் முதலாவது எழுச்சியைப் பார்க்கிலும் இரண்டாவது எழுச்சி பயங்கரமானது எனக் கூறியிருந்தார். உணவு இன்மையால் இரண்டாவது எழுச்சி இடம்பெறுமெனவும் நாட்டில் பாரிய இரத்தவெள்ளம் பாயக்கூடுமெனவும்  மத்திய வங்கி ஆளுனர் நாட்டுக்கு கூறியுள்ளார். இந்த நிலைமையின்கீழ் தேர்தலுக்காக மேலும் மூன்று வருடங்கள் பொறுமையாக காத்திருக்க வேண்டுமா?   இந்த ஆட்சியாளர்கள்  பிரச்சினைகளை தீர்த்துவிடுவார்களென எவராலும் கூறமுடியுமா? பிள்ளை மயக்கமுற்று பாடசாலையில் விழுமாயின், புற்றுநோய்க்கு மருந்து இல்லாவிட்டால், உழவனுக்கு உரம் இல்லாவிட்டால் என்ன நேரும்? நிர்மாணத்துறையில் மாத்திரம் ஆறு இலட்சம் பேருக்கு தொழில்கள் அற்றுப்போய்விட்டன.  திறைசேரியில் பணம் இல்லாவிட்டாலும் மென்மேலும் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்செய்து  மக்களின் பணத்தை நாசமாக்குகிறார்கள். இந்த நிலைமையில் இருந்து நாட்டை மாற்றியமைக்க வேண்டியது நாம் அனைவருமே. மக்களுடன் உரையாடலை மேற்கொண்டு அவர்களுடன் கலை, இலக்கிய படைப்புகளை இரசித்திடக்கூடிய   மனித வாழ்க்கையை நாங்கள் உருவாக்கிட வேண்டும். அதற்காக தேசிய மக்கள் சக்தியின் கொடியை ஊரிலும் நாட்டிலும் வெற்றியீட்டச் செய்விக்க அனைவரும் ஒன்றுசேர்வோம்.  

தேர்தலை நடாத்துங்கள், இன்றேல் முழுநாட்டையுமே சிறைச்சாலையாக மாற்றிவிடுங்கள்

தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட நிறைவேற்றுச்சபை உறுப்பினர் சட்டத்தரணி தாரக்க நாணாயக்கார

முதலில் அழைப்புவிடுக்கப்படுகின்ற  எந்தவொரு தேர்தலிலும் அக்குரெஸ்ஸ தொகுதியை அமோக வெற்றியீட்டச் செய்விக்க தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாமனைவருமே எம்மை அர்ப்பணிக்கிறோம். ரனில் ராஜபக்ஷவை முதன்மையாகக்கொண்ட அரசாங்கம் அடக்கியாள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு  வருகையில் நாங்கள் சனநாயக வழியிலேயே இந்த பயணத்தை மேற்கொண்டு வருகிறோம். அரச இரகசியங்கள் சட்டத்தின்படி எனக் கூறிக்கொண்டு வர்த்தமானி அறிவித்தல்களை பிரசுரித்து பலத்த பாதுகாப்பு வலயங்களை பிரகடனஞ் செய்துள்ளார்கள்.  சோஷலிஸ இளைஞர் சங்கத்தின் ஆர்ப்பாட்டப் பேரணி பலத்த பாதுகாப்பு வலயத்திற்குள் பிரவேசிக்காமல்  கறுவாத்தோட்ட பொலீஸாருக்கு முன்னறிவித்தல் வழங்கியிருந்த வேளையில் மிலேச்சத்தன்மான தாக்குதலை நடாத்தி  பெருந்தொகையானோரைக் கைதுசெய்தார்கள். கைதுசெய்யப்பட்ட அனைவருக்கும் நீதிமன்றம் ஏற்கெனவே பிணை வழங்கியுள்ளது. தோன்றுகின்ற மக்கள் ஆர்பாட்டங்களை நிறுத்துவதற்கான இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன. ஒன்று புதிய ஆட்சியொன்றை அமைத்துக்கொள்ள மக்களுக்கு வாய்ப்பளிப்பதாகும். அப்படியில்லாவிட்டால் அங்குமிங்கும் பலத்தபாதுகாப்பு வலயங்களை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்குப் பதி்லாக முழு நாட்டையும் சிறைச்சாலையாக மாற்றி வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதாகும்.  மக்கள் அந்த அளவிலான அழுத்தத்துடன்  தொடர்ந்தும் தாங்கிக்கொண்டு இருக்காமல் வீதியில் இறங்குவார்கள்.

பிள்ளை இழக்கின்ற சோற்றுப்பொதியின் உரிமையை வென்றெடுப்பதற்கான போராட்டமொன்று இருக்கின்றது.

   

தேசிய மக்கள் சக்தியின் தேசிய  நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

பெண்கள் என்ற வகையிலும் ஒரு தாய் என்றவகையிலும் நான் பெருந்தொகையானோருடன் உரையாடி இருக்கிறேன். பாடசாலை ஆசிரியை என்றவகையில் அந்த பிள்ளைகளின் உண்மையான நிலைமை எனக்குத் தெரியும். பாடசாலையில் 15 நிமிட காலைவேளைக் கூட்டத்தை நடாத்த முடிவதில்லை. மயக்கமுற்று பிள்ளைகள் விழத்தொடங்குகிறார்கள்.  முன்னர் நாங்கள் அந்தப் பிள்ளைகளிடம் காலை உணவு உண்டீர்களா எனக் கேட்டோம்.  தற்போது பெருந்தொகையானோருக்கு காலையில் மாத்திரமல்ல இரவு உணவும் கிடையாது.  அதைப்போலவே ஐந்து நாட்களும் பாடசாலைக்குவர பஸ் கட்டணங்களை தாங்கிக்கொள்ள பெற்றோர்களால் முடியாதுள்ளது. உங்கள் பிள்ளை இழக்கின்ற சோற்றுப்பொதியின் உரிமை,   கல்விக்கான உரிமையை வென்றெடுப்பதற்கான போராட்டத்திற்காக நாங்கள் அனைவரும் குழுமியுள்ளோம். அது தனிப்பட்ட சிறப்புரிமைகள் அல்லது உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டமல்ல. தற்போது இருப்பவர்கள் ஒரு நாடு என்றவகையில் அழுத்தத்திற்கு இலக்காகியுள்ள மக்களுக்கு உண்மையாகவே தீர்வுகளைக் கண்டறிவதற்காக புரிந்துணர்வுடன் ஒன்றுசேர்ந்துள்ள மக்களாவர். அதனால் சனநாயகரீதியாக மக்களுக்கு ஆட்சியை அமைத்துக்கொள்வதற்கான வாய்ப்பினை வழங்குமாறு அழுத்தம் கொடுக்கிறோம்.  அவ்வாறு இடம்பெறாவிட்டால் வீதியில் இறங்கி எமது உரிமையை வென்றெடுப்பதற்காக வீதிக்கு வருவோம் என்பதை வலியுறுத்துகிறோம்.

 அனைத்து விருதுகளையும் விட மக்களிடமிருந்து கிடைக்கின்ற  அன்பின் விருதிற்கு மதிப்பளிக்கிறோம்

பழம்பெரும் நடிகர் கலாநிதி பிரசன்னஜித்  அபேசூரிய

அதிகாரத்திற்கு வருகின்ற அரசியல் கட்சியால்  எமது வாழ்க்கை, எமது எதிர்காலம், எமது கல்வி மற்றும் எமது கலாசாரம் ஆகிய அனைத்துமே தீர்மானிக்கப்படுகின்றது. இற்றைவரை அதிகாரத்திற்கு வந்த எந்தவோர் அரசியல் கட்சியும் இந்த நாட்டையும் மக்களையும் நேசித்தவை அல்ல. அதனால்த்தான் இந்த நாடு இத்தகைய கவலைக்கிடமான நிலைமைக்கு வீழ்ந்துள்ளது. இந்த  நிலைமையின்கீழ் நாங்கள் எமது படைப்புக்களால் மாத்திரம்  மக்கள் முன் செல்வதில் பலனில்லை என்பதை விளங்கிகொண்டோம்.  இந்த நாடு மீது அன்பு செலுத்துகின்ற, இந்த நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய தெளிவான அரசியல் இயக்கத்திற்கு நாங்கள் எமது ஒத்துழைப்பினை வழங்கியே ஆகவேண்டுமென்பதை நாங்கள் விளங்கிக்கொண்டோம். அதனால் பயமின்றி, வெட்கமின்றி, வீதியில் இறங்கி பயணிக்கக் கூடியவகையில்  தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணைந்தோம். இறுதித் தருணத்தில் நாங்கள் தவறிழைத்துவிட்டோம் என்ற பச்சாதாபமற்ற தீர்மனமொன்றை நான் தனிப்பட்டவகையில் எடுத்தேன். பல கலைஞர்கள் இந்த முடிவினை எடுத்துள்ளார்கள். நாம் பெற்றுள்ள ஏனைய விருதுகளைப் பார்க்கிலும்   தனிப்பட்ட வகையில் நான் தற்போது எமது அரசியல் காரணமாக மக்களிடமிருந்து கிடைக்கின்ற விருதினை பெரிதும் மதிக்கிறோம். மக்களிடமிருந்து கிடைக்கின்ற அந்த அன்பு  ஏனைய அனைத்து விருதுகளையும் பார்க்கிலும் என்றுமே கிடைத்திராத வகையில் தற்போது எமக்கு கிடைத்து வருகின்றது.  நான்பெற்ற மிகப்பெரிய விருது மக்களின் இந்த விருதாகும்.

 தேர்தல் தொகுதி மட்டத்தில் நாட்டை கட்டியெழுப்புவதற்கான திட்டங்களை நாங்கள் தயாரிப்போம்

தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி

இந்த நாட்டைப் பொறுப்பேற்று திருட்டுகள், மோசடிகள், ஊழல்களின்றி  தேசிய மக்கள் சக்தியால் மாத்திரமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியுமென தற்போது பொதுமக்கள் அறிவார்கள். எமது வெளியுறவுக் கொள்கை, பொருளாதாரக் கொள்கை, வெளிநாட்டுக் கடன் தொடர்பான சிக்கல் போன்றவை பற்றி எம்மிடம் கேட்கிறார்கள். மக்கள் எம்மீது அவ்வளவு நம்பிக்கையை வெளிப்படுத்தி நாடுபூராவிலும் எம்முடன் இணைந்து வருகிறார்கள்.   ஐக்கிய தேசிய கட்சியின் ரனில் விக்கிரமசிங்க, அந்த கட்சியில் இருந்து பிரிந்துசென்ற சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மைத்திரிபால சிறிசேன போன்ற பல்வேறு தலைவர்கள் இருக்கிறார்கள். எம்மிடம் இதற்கு முன்னர் புதிய கட்சிகளின் தலைவர்களைப்போல் எமது கட்சியின் தலைவர் யாரென எம்மிடம் கேட்டார்கள். இப்போது அநுர குமார திசாநாயக்கவிற்கு கூறுகிறார்கள் “இந்த நாட்டை சீக்கிரமாக ஒப்படைக்க நாங்கள் தயார். சீக்கிரமாக ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று. தேர்தலின்போது கிராம மட்டத்தில் எவருக்கு வாக்களிப்பது எனும் கேள்வியும் மக்களுக்கு இருக்கின்றது.  முழுநாட்டிலும்  இந்த கேள்விக்கு பதிலளிக்க அக்குரெஸ்ஸவில் தொடங்கி இருக்கிறார்கள்.  தேர்தல் தொகுதி அடிப்படையில் மாத்திரமன்றி  ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவு மட்டத்திலும் தொகுதி அமைப்பு தேசிய மக்கள் சக்தியால் அறிமுகஞ் செய்யப்பட்டுள்ளது. மாத்தறை மாவட்டத்தில் அக்குரெஸ்ஸ தொகுதியைச் சேர்ந்தவர்களுக்கு இனிமேல் அவ்வாறான கேள்வியொன்று கிடையாது. எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் மாத்தறை மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும்  நிறைவேற்றுச் சபையை பூர்த்திசெய்ய நாங்கள் நடவடிக்கை எடுப்போம். தேசிய மக்கள் சக்தியின்  அரசாங்கமொன்றில் சம்பந்தப்பட்ட தேர்தல் தொகுதிகளைக் கட்டியெழுப்ப, மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்படும். எமது பொதுவான பொருளாதார வேலைத்திட்டம் உற்பத்திப் பொருளாதாரமொன்றைக் கட்டியெழுப்பி மக்களை அதனோடு தொடர்புபடுத்தி பெறுபேறுகளை பெற்றுக்கொடுப்பதாகும். அதற்கு அமைவாக ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் தரவுகளை சேகரித்து முறையான திட்டமொன்று வகுக்கப்படும். அந்த முன்மாதிரியை அக்குரெஸ்ஸவில் இருந்து முழுநாட்டுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கடன் இல்லாத நாடு உருவாக்கப்படுகின்ற நாளில், அடிமையற்ற மனிதன்  உருவாக்கப்படுகின்ற நாளில் அந்த நாட்டை உருவாக்குகின்ற அசுர மனிதர்களாக நாங்கள் அனைவரும் மாறுவோமென கேட்டுக்கொள்கிறேன்.  

சரியாக திட்டமுறைமையின் ஊடாக ஐந்து வருடங்களில் இந்த நாட்டை மாற்றியமைத்திட முடியும்

தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர்  சட்டத்தரணி உபுல் குமரப்பெரும

ஒரு நாட்டின் சட்ட முறைமையின் திட்டவட்டமான தன்மையின் அத்திவாரம் நாட்டைக் கட்டியெழுப்புகின்ற பிரதான காரணியென ஒரு சட்டத்தரணி என்றவகையில் நான் கருதுகிறேன். இன்றளவில் இந்நாட்டில் சட்டமொன்று இருக்கின்றதா, சட்டமொன்று இருக்குமாயின் அது எந்த சட்டம் எனும் கேள்வி எழுந்துள்ளது. எமக்கு விளங்குகின்ற இடத்தில் இருந்து பேசுவதற்காக எளிமையான உதாரணமொன்றைக் கூறுகிறேன். எமது நாட்டில் சிறுவர் துர்ப்பிரயோக வழக்கு ஒன்றைத் தீர்த்துக்கொள்ள 15 வருடங்களாவது கழிகின்றது. 12 வயதுடைய சிறுமியொருத்தி துரப்பிரயோகத்திற்கு இலக்காகினால் பொலீஸில் முறைப்பாடுசெய்து, பொலீஸ் புலன் விசாரணைகளின் பின்னர் புலனாய்வு அறிக்கைகள்  சட்டத்துறை தலைமை அதிபதி திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு பல வருடங்களுக்குப் பின்னர் சட்டத்துறை தலைமை அதிபதி திணைக்களத்தினால் மேல்நீதிமன்றத்திற்கு குற்றப்பகர்வு சமர்ப்பிக்கப்படுகின்றது.  இந்த செயற்பாங்கு நிறைவடைகையில் அந்த சிறுமிக்கு வயது இருபதுகளாக மாறிவிடும். தனக்கு சிறிய வயதில் நேர்ந்த குற்றச்செய்ல் சம்பந்தமாக இவ்வளவு காலமாக நினைவில் இருக்குமா?  அதைப்போலவே அவர்கள் இளம் வயதில் வெட்கப்படுவார்கள். ஒரு சில சாட்சியங்கள் அழிந்துபோயிருக்கலாம். கண்ணால் கண்ட சாட்சியாளர்கள் இறந்திருக்கலாம். வேறு சாட்சிகளும் அழிந்திருக்கலாம். எமது நாட்டின் சட்ட முறைமையில் அத்தகைய பாரிய வழுக்கள் நிலவுகின்றன. அதைப்போலவே அரசதுறை நியமனங்கள் மற்றும் பதவியுயர்வு வழங்குதல் அரசியல் அழுத்தத்தின்பேரில் இடம்பெறுகின்றது. இந்த நிலைமையை மாற்றியமைத்திட வேண்டும். எமது ஆட்சியின்கீழ் எந்தவோர் அரச அலுவலருக்கும் பக்கச்சார்புடையவர்களாக செயலாற்ற இடமளிக்கமாட்டோம்.  அதைப்போலவே உங்களின் நண்பர்கள் பலர் தினந்தோறும் வெளிநாடு செல்லும்போது உங்களுக்கு வேதனை தோன்றவில்லையா?  நாங்கள் இந்த ஒட்டுமொத்த முறைமையையும் மாற்றிடுவோம். அதனை மாற்றயமைப்பதற்கான பலம், அதனை மாற்றியமைப்பதற்கான நேர்மை, மாற்றியமைப்பதற்கான திறன் மற்றும் ஆற்றல் இங்கே இருக்கின்றது. சரியான முறையியலின் கீழ்  ஐந்து வருடங்களுக்குள் இந்த நாட்டை மாற்றியமைக்க முடியும்.

Show More