Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

தேசிய மக்கள் சக்தியின் பெண் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை காரியாலயத்தில்

-Colombo, November 16, 2023-

காசா துண்டுநிலத்தில் உடனடியாக யுத்த நிறுத்தமொன்றுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் தாபனத்தை வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தியின் மகளிர் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகத்திற்கும் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்திற்கும் (OHCHR) இன்று கடிதமொன்றை சமர்ப்பித்துள்ளனர்.

சர்வதேச மனிதாபிதான சட்டத்திற்கு அமைவாக பாலஸ்தீனத்தில் பெண்கள் மற்றும் சிறுவர் உரிமைகள் மீறப்படுவதற்கு எதிராக அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அனைத்து தரப்பினர்களுடனும் உடனடியாக ஒத்துழைத்துச் செயலாற்றுமாறும் இந்த கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கலாநிதி ஹரினி அமரசூரிய (பாராளுமன்ற உறுப்பினர்)> சமன்மலீ குணசிங்க (தேமச நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர்)> டாக்டர் ஸ்;வஸ்திகா சமரதிவாகர (தேமச உறுப்பினர்) ஆகியோரால் ஐக்கிய நாடுகள் தாபனத்தின் சிரேட்ட மனித உரிமைகள் ஆலோசகர் ரகு மேனனிடம் இன்று இந்த கடிதம் கொழும்பு ஐக்கிய நாடுகள் தாபன அலுவலக வளாகத்தில் கையளிக்கப்பட்டது.

மேலும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நலன்புரி சேவைகளை வெட்டிவிடுகின்ற நடவடிக்கைகளின் தாக்கங்கள் மற்றும் பெண்களினதும் சிறுவர்களினதும் பாதுகாப்பிற்கான வரவுசெலவு ஏற்பாடுகள் குறைக்கப்பட்டமையை உள்ளிட்ட இலங்கையின் நிகழ்கால சமூக – பொருளாதார மற்றும் அரசியல் சூழமைவு பற்றிய கலந்துரையாடலும் இடம்பெற்றது.