Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

ஆர்ப்பாட்டம் முடிந்து இரு மாதங்கள் கடந்த பின்னர் வாக்குமூலம் பெறுவதற்காக NPP பெண் தலைவர்களை வெலிக்கடை பொலிஸ் அழைக்கிறது…

-Colombo, February 03, 2024-

நாளை (05) மாலை 3.00 மணிக்கு பொலிஸை சந்தித்து வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் நகரசபை உறுப்பினர் சமன்மலி குணசிங்க, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, சட்டத்தரணி தனுஷ்கி லியனபடபெந்தி ஆகியோருக்கு வெலிக்கடை பொலிஸ் அறிவித்திருக்கிறது.

கடந்த டிசம்பர் 04 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 2024 வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள் அமைச்சின் செலவுத்தலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பு பாராளுமன்ற சுற்றுவட்டத்தின் அருகில் முன்னெடுத்திருந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர்.