2023.10.11 தேசிய மக்கள் சக்தியின் செய்தியாளர் சந்திப்பில்…
எமது நாட்டு மக்களுக்கு நீருடன் பாரிய ஆன்மீக ரீதியான தொடர்பு நிலவுகின்றது. கலாசாரரீதியாக, சமயரீதியாக உணவு மற்றும் குடிநீருக்கு மேலதிகமாகவே பாவிக்கிறார்கள். விசேட தருணங்களில் ஒரு தம்ளர் நீரைக் கொடுத்தே வரவேற்கிறார்கள். உணவு உண்ண கடைக்குச் சென்றால் முதலில் பெரிய கிளாஸ் ஒன்றில் தண்ணீர் தருவார்கள். ஐரோப்பாவில் நீர் சம்பந்தமாக உள்ளக அழுத்தத்தின்பேரில் அளவீடு ஒன்றைக் கண்டுபிடிக்கையில் எமது நாட்டு மக்கள் தரத்திற்கிணங்க நீருக்கு பெறுமதியொன்றைக் கொடுத்தார்கள். எமது நாட்டில் ஆவியாக்கம் காரணமாக நீர்தேக்கங்களில் உவர்த்தன்மை அதிகரிக்கின்றது. உயர்ந்த இடத்திலிருந்து தாழ்ந்த இடத்திற்கு நீரை வழங்குகையில் தாழ்வான இடத்தில் நீரைப் பெறுகின்றவர்களுக்கு உவர்த்தன்மை அதிகரிக்கின்றது. அதனாலேயே உயர்ந்த இடத்திலிருந்து வில்லுவிற்கு நீரை விடுவித்து இயற்கைச் சுற்றாடல் முறை ஊடாக நீரை முகாமைசெய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். இவ்விதமாகத்தான் மேலேயுள்ள கிராமத்திலிருந்து கீழேயுள்ள கிராமத்திற்கு நீர் வழங்கப்பட்டது. அதற்காக குளச் செயலாளரொருவர் நியமிக்கப்பட்டிருந்தார். அளவுசார்ரீதியாக மாத்திரமன்றி, தரரீதியாகவும் எமது நாட்டில் இவ்விதமே நீர் முகாமை செய்யப்பட்டது.
அத்தகைய வரலாற்றினைக் கொண்டிருந்த எங்களுக்கு நீரை முகாமைசெய்யவேண்டிய விதம்பற்றி கற்றுக்கொடுக்க தற்போது எரிக் சோல்ஹயிம் போன்றவர்கள் மட்டுமன்றி சர்வதேச அமைப்புகளும் உருவாகியுள்ளன. பிரமாண்டமான பல்தேசிய கம்பெனிகளின் நிதியளிப்புகளுடன் அந்த சர்வதேச நிறுவனங்களக்கு பணம் பாய்ச்சப்படுகின்றது. வடகீழ், தென்மேல் பருவமழை மாத்திரமன்றி இடைப் பருவக்கால மழை மூலமாகவும் நீர் கிடைப்பதோடு அதற்கு மேலதிகமாக புயல்காற்று மூலமாகவும் கிடைக்கின்ற மழைநீர் மேலிருந்து கீழ்நோக்கி பாய்ந்தோடுகின்றது. எமது நாட்டின் இந்த புவியியல் இடஅமைவு காரணமாக மேற்பரப்பு நீரும் நி்றைந்துள்ளது. மேற்பரப்பு நீருக்கு மேலதிகமாக உள்ளகத்தில் நீர்ப்பீடமொன்றும் இருக்கின்றது. எமது நாட்டில் வரலாற்றுக்காலம் பூராவிலும் நீர்த் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொண்ட உருவாகிய நீர்க் கலாசாரமொன்றின் உரிமை நிலவுகின்றது.
மக்களுடன் நீருக்கு இருக்கின்ற ஆன்மீகத் தொடர்பினைத் தகர்த்து வணிகப் பெறுமதியைக் கொடுக்க பலவிதமான செயல்முறைகளை கடைப்பிடிக்கிறார்கள். இந்த ஆன்மீகத் தொடர்பினை தகர்ப்பதற்கான ஆரம்பப் படிமுறையாகவே நகர்சார்ந்த கால்வாய் வழிகளும் ஆறுகளும் குப்பைக் கான்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. களனிகங்கை எந்தளவு அழிவுமிக்கவகையில் அசுத்தமாக்கப்பட்டுள்ளதென்பது தற்போது தெளிவாகின்றது. நீருக்கு வணிகப் பெறுமதி அளிக்கப்பட்டு புரியப்போகின்ற இந்த முயற்சியால் மக்கள் மென்மேலும் பாதாளத்தில் தள்ளப்பட்டுள்ளார்கள். கல்வி, சுகாதாரம், பெற்றோலியம் போன்றே இன்றளவில் நீரும் வணிகப் பெறுமதிகொண்ட ஒன்றாக மாற்றப்படுவதற்கான “றீகேனிங் ஸ்ரீலங்கா” நடவடிக்கை மீண்டும் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நாங்கள் பாடசாலை செல்கின்ற காலகட்டத்தில் நிலவிய “நீரை செல்வம்போல் பாதுகாத்திடுவோம்” எனும் மேற்கோள் வாசகத்தின் ஊடாக எமது மக்கள் உயிரைப்போல் பாதுகாத்த நீர் வணிகமயமாக்கலுக்கு குறுக்கப்பட்டுள்ளது. நீரைக் காப்பாற்றிக்கொள்ளும் பேராட்டத்திற்கு தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றுசேருமாறு நாங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம்.