2023.10.11 தேசிய மக்கள் சக்தியின் செய்தியாளர் சந்திப்பில்…
ரணில் ராஜபக்ஷ அரசாங்கம் இந்நாட்டின் தேசிய வளங்களை விற்பதற்காக தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற நடவடிக்கைகளின் புத்தம்புதிய படிமுறை இந்நாட்டின் நீரை விற்பனை செய்தலுடன் தொடர்புடைய புதிய சட்டமொன்றை ஆக்கி வருவதாகும். அதுபற்றி மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக மாத்திரமன்றி இந்நாட்டை நேசிக்கின்ற சுற்றாடல் அமைப்புகள், அரசியல் கட்சிகளை உள்ளிட்ட சிவில் அமைப்புகளை குடிமக்கள் ஒன்றுதிரட்டி அதனை தோற்கடித்திட செயலாற்ற வேண்டும். எமது நாட்டில் 3000 ஆண்டுகளுக்கு கிட்டிய வரலாற்றில் நீரை அடிப்படையாகக்கொண்ட நாகரிகம் உலகின் ஏனைய நாடுகளைப் பார்க்கிலும் வித்தியாசமான வகையில் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. எனினும் எமது நாட்டில் இருப்பது மனித உழைப்பின் மூலமாக கட்டியெழுப்பப்பட்ட நீர்ப்பாசன நாகரிகமாகும். அதாவது மனிதனால் கட்டியெழுப்பப்பட்ட நீர்ப்பாசனத் தொழிற்றுறை மூலமாக நாகரிகத்தைக் கட்டியெழுப்பிய ஒருசில நாடுகள் மத்தியில் எமது நாடும் ஒன்றாகும். அதியுயர் நீர் முகாமைத்துவத்தைக் கொண்டதாக எமது நாகரிகம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
அத்தகைய வரலாற்றினைக்கொண்ட நீர்சார்ந்த நாகரிகம் இருக்கையில் நிகழ்கால ஆட்சியாளர்கள் வெறுமனே ஒரு வர்த்தகப் பண்டமாக மாத்திரம்நீரை இனங்கண்டுள்ளார்கள். அதற்கிணங்க நீர்வளத்தை விற்றுத்தீரக்க அரசாங்கம் நடவக்கை எடுத்து வருகின்றது. எனினும் எதிர்காலத்திற்காக நீர்வளத்தைப் பாதுகாப்பது எம்மனைவருக்கும் கையளிக்கப்பட்டுள்ள பொறுப்பாகும். நிகழ்கால அரசாங்கம் மாத்திரமன்றி குறிப்பாக சனாதிபதி சந்திரிக்கா பண்’டாரநாயக்கவின் காலத்தில் இருந்தே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அன்று நீர்ப்பாசன அமைச்சராக விளங்கிய சரத் அமுணுகம இதற்கான சட்டங்களை முன்வைத்தார். அதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்கவின் 2001 இல் தொடங்கிய ஆட்சிக்காலத்தில் “றீகேனிங் ஸ்ரீலங்கா” நிகழ்ச்சித்திட்டத்தின் கீழும் நீரை விற்பனைசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது புத்தம்புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. 2020 ஒக்டோபர் 12 ஆந் திகதி அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் நீரை விற்பனைசெய்வதை மீண்டும் அறிமுகஞ்செய்ய ஒருங்கிணைந்த அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டது. அதில் நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணாயக்காரவும் நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷவும் ஒருங்கிணைந்த அமைச்சரவைப் பத்திரம் என்றவகையில் கையொப்பமிட்டிருந்தார்கள். வக்கடையில் கரங்களைக் கழுவி வேட்புமனுவில் கையொப்பமிட வந்ததாக கூறுகின்றவர்கள் தேசத்தின் சாவுமணிக் அடிக்க நீரை விற்பதற்கான சட்டத்தை இவ்வாறுதான் கொண்டுவந்தார்கள். நீரை தனியார்மயமாக்கிட தொடர்புடைய அடிப்படைக் கட்டமைப்பினை “பொது தியபெத்ம – பொதுவான நீர்ப்பிரிமேடு” முகாமைத்துவம் செய்வதற்கான குழு எனும் பெயரில் கொண்டுவர முயற்சி செய்தார்கள்.
மகிந்த ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் இரண்டாவது அமைச்சரவைப் பத்திரமும் சமர்ப்பிக்கப்பட்டு நீரை விற்பனை செய்வதற்கான ஏற்புடைய குழு பெயர் குறிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் சீ.எம். மத்துமபண்டாரவின் தலைமையின்கீழ் குழுவிற்கு பத்து அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டார்கள். 2003 இல் ரணிலின் அரசாங்கம் நீரை விற்பதற்கான சட்டத்தை ஆக்கியதும் இதே பேராசிரியர்தான். 20 வருடங்களுக்குப் பின்னரும் இன்னமும் அந்த ஆபத்து அவ்விதமாகத்தான் வருகிறது. அன்று சோஷலிஸ கமக்காரர் சங்கம் என்றவகையில் நீரை விற்பனை செய்வதற்கு எதிராக நாங்கள் தலைமைத்துவம் வழங்கினோம். உலக நீர்த்தினமாக பிரகடனஞ் செய்யப்பட்டுள்ள மார்ச்சு 22 ஆந் திகதி இலங்கையின் 18 பிரதான குளங்களின் மேடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான கமக்காரர்கள் புடைசூழ இந்த நாடு கட்டியெழுப்பிய நீர்வளத்தை விற்பனைசெய்ய இடமளியோமென சபதம் செய்தார்கள். எனினும் இருபது வருடங்களுக்குப் பின்னரும் அதே சூனியத்தை அறுக்கவேண்டியநிலை எமக்கு ஏற்பட்டுள்ளது.
நிகழ்காலப் பிரதமர் தினேஷ் குணவர்தன 2023 யூன் 28 இல் புதிய அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்தார். ” இலங்கையின் தேசிய நீர்க்கொள்கை வரைவு” அதன்மூலமாக அறிமுகஞ் செய்யப்பட்டது. வரைவுடன் நின்றுவிடாமல் அதனோடு தொடர்புடைய ஏனைய அமைச்சுக்களையும் சேர்த்துக்கொண்டு சட்டத்தை ஆக்கவே தற்போது தொடங்கியுள்ளார்கள். தினேஷ் குணவர்தன சமர்ப்பித்த வரைவில் 2003 இல் சமர்ப்பித்த பணிகள் அவ்வண்ணமே இருக்கின்றன. நீரை விற்பனை செய்வதற்கான தாபனஞ்சார் கட்டமைப்பு பற்றி 08 வது பிரிவில் காட்டப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி என்றவகையில் நாங்கள் வலியுறுத்துவது வரலாற்றில் நிலவியதுபோல் தலைசிறந்த நீர் முகாமைத்துவம் நிலவவேண்டும் என்பதாகும். எனினும் முகாமைத்துவத்தின் நாமத்தால் வருகின்ற நீரை விற்பனை செய்வதற்கான செய்பாங்கினை சரிவர இனங்கண்டு தோற்கடித்திட வேண்டும். நாட்டுக்கு அனைத்து வளங்களும் கிடைக்கவேண்டுமாயின் உரிய நேரத்தில் மழை கிடைக்கவேண்டுமென பௌத்த தர்மத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகில் நீருக்கான தலைசிறந்த தொனிப்பொருள் வாசகத்தை பராக்கிரமபாகு மன்னரே 900 வருடங்களுக்கு முன்னர் முன்வைத்தார். “வானிலிருந்து விழுகின்ற ஒரு துளி நீரையும் மானிட வர்க்கத்தின் பாவனைக்கு எடுக்காமல் கடலில் சேர இடமளிக்க மாட்டேன்” எனக் கூறினார். அதன்வழி சென்று அன்று இருந்த இந்நாட்டுப் பிரசைகள் பல்லாயிரக்கணக்கான குளங்களைக் கட்டினார்கள். அதற்கிணங்கவே நாடு பூராவிலும் முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட குளங்களை அமைத்தார்கள்.
நாங்கள் வலியுறுத்துவது யாதெனில் தேசிய மக்கள் சக்தி நீர் முகாமைத்துவத்தை ஆதரிக்கின்றது. ஆனால் அந்த போர்வையில் மூடிக்கொண்டு வருகின்ற விற்பனை செயற்பாங்கிற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம். தினேஷ் குணவர்தன முன்வைத்த பிரேரணைக்கிணங்க “தேசிய நீர்வளங்கள் சபை” என அழைக்கப்படுகின்ற நிறுவனமொன்று தாபிக்கப்படும். அதைப்போலவே “தேசிய நீர்வளங்கள் செயலகம்”. மற்றும் “நீர்வளங்கள் மேன்முறையீட்டுச் சபை” என மூன்று நிறுவனங்கள் தாபிக்கப்படும். இவ்விதமாக மூன்று நிறுவனங்கள் தாபிக்கப்பட்டு உத்தியோகத்தர்களை நியமிக்கின்ற அதிகாரம் சனாதிபதியிடம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய சுற்றாடல் வானிலை தரங்கள் பற்றிய புத்திஜீவியொருவர் தலைவராக நியமிக்கப்படுவாரென குறிப்பிடப்பட்டிருந்தாலும் ஏற்கெனவே அவர் நியமிக்கப்பட்டுவிட்டார். காலநிலை மாற்றங்கள் கற்கைக்காக ரணில் ராஜபக்ஷ இன்றளவில் நியமித்துள்ள அந்த ஆள் நாமனைவரும் அறிந்த எரிக் சோல்ஹயிம். அவருக்கு டொலரிலேயே சம்பளம் செலுத்தப்படுகின்றது. அவரை இந்த நிறுவனங்களுக்கும் நியமிப்பாரென நாங்கள் நம்புகிறோம். மாலைதீவின் மொஹமட் நசீம் மற்றுமொரு ஆலோசகராக நியமிக்கப்பட்டு டொலரில் சம்பளம் செலுத்தப்படுகின்றது. 2003 இன் செயற்பாங்கின் மறைவில் இருந்த சதிகார எரிக் சோல்ஹயிம் நீண்டகால நோக்குடனேயே நியமிக்கப்பட்டுள்ளார். விவசாயம்சார்ந்த புத்திஜீவியொருவர், நீர்வளங்கள் முகாமைத்துவ புத்திஜீவிகள் இருவர் என்றவகையில் சானாதிபதியால் இந்த பேரவைக்கு உத்தியோகத்தர்களாக நியமிக்கப்படுவர். அதற்கிணங்க பார்க்கும்போது சனாதிபதியுடன் நெருக்கமான குழுவொன்று நீரை விற்பனைசெய்தலுடன் தொடர்புடைய செயற்பாங்கிற்காக நியமிக்கப்படுவது தெளிவாகின்றது. இந்த கருத்திட்டங்களுக்கான முதலீடாக எடுக்கப்படுகின்ற டொலர்களில் தரகு பெறுகின்ற ஆட்சியாளர்கள் இதுவரை முன்னெடுத்துவந்த செயற்பாங்ககுகளைப் பார்க்கிலும் இது பயங்கரமானதென்பதை நாங்கள் மக்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம்.
அது சம்பந்தமாக கடந்த ஆகஸ்ற் 29 ஆந் திகதி சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிட்ட கடிதத்தில் அமைச்சரவை செயலாளர் டபிள்யு.டீ.ஜே. பர்னாபந்துவின் கையொப்பத்துடன் சனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு அமைச்சு செயலாளர், கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சுக்களின் செயலாளர்கள் பலருக்கு நீர்ச்சட்டமொன்றை தயாரிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அந்த சட்டத்தை தயாரிக்கையில் உள்ளடக்கவேண்டிய சில தீர்மானங்கள் காட்டப்பட்டுள்ளன. முகாமைத்துவம் சம்பந்தமாக தற்போது செயலாற்றி வருகின்ற நீரப்பாசனத் திணைக்களம், இலங்கை மகாவலி அதிகாரசபை மற்றும் நீர்வளச் சபை ஆகிய நிறுவனங்களின் செயற்பொறுப்பினை மீளாய்வுசெய்து நிகழ்காலத்திற்கு ஒத்துவரக்கூடியவகையில் அந்த நிறுவனங்களை மறுசீரமைத்த பின்னர் இந்த மூன்று நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து தனி நிறுவனமொன்று நீர் முகாமைத்துவத்திற்காக நிறுவப்படவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. மனைத் தேவைகள், விவசாயம் போன்றே கைத்தொழில்கள், வலுச்சக்தி மற்றும் சேவைகள் ஆகிய அலுவல்களுக்காக எமது நாட்டின் நீர் பாவிக்கப்படுகின்றது. அவை மத்தியில் முதன்மை வகிப்பது விவசாயமாகும். பிரதமர் தினேஷ் குணவர்தன சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தில் இந்நாட்டின் நீர்வளங்களை கணிப்பீடுசெய்து மேற்பரப்பு நீர் 52 பில்லியன் கனமீற்றர், தரைக்கீழ் நீர் 07 பில்லியன் கனமிற்றர் மற்றும் கடனீரேரி சார்ந்ததாக 07 பில்லியன் கனமீற்றர் இருப்பதாக புள்ளிவிபரத் தரவுகள் காட்டுகின்றன. இதன்படி எமது நாட்டில் 66 பில்லியன் கன மிற்றர் நீர் இருக்கின்றது.
அதைப்போலவே மழைவீழ்ச்சி மூலமாக ஆண்டுக்கு 130 பில்லியன் கனமீற்றர் நீர் கிடைக்கின்றது. உலகின் சராசரி வருடாந்த மழைவீழ்ச்சி 750 மில்லி மீற்றராகும். எனினும் எமது நாட்டின் சராசரி வருடாந்த மழைவீழ்ச்சி 900 மில்லிலீற்றராகும். நாங்கள் வரண்ட அல்லது கடிமான எனக் கூறுகின்ற பிரதேசங்களில்கூட உலகின் சராசரி நிலைமையைப் பார்க்கிலும் உயர்வான இடத்தில் இருக்கிறோம். இலங்கையின் சராசரி மழைவீழச்சி வருடத்திற்கு 2080 மில்லி லீற்றர் ஆகும்.
எதிர்காலத்தில் பெருமைமிக்க ஒரு நாட்டைக் கட்டியெழுப்பிட உதவுகின்ற இந்த நீர்வளத்தின் உரிமையைப் பெற்றுக்கொள்ள பல்தேசியக் கம்பெனிகள் ஏறக்குறைய 30 வருடங்களாக முயற்சிசெய்து வருகின்றன. சந்திரிக்காவின் காலத்தில் நீர்வளத்தைக் கொள்வனவுசெய்ய மூன்று பல்தேசிய கம்பெனிகள் இந்நாட்டுக்கு வந்தன. பல வாரங்கள் தங்கி இருந்தன. எனினும் எமது பிரமாண்டமான எதிர்ப்பின் மத்தியில் அவை விரட்டியடிக்கப்பட்டன. அவ்விதமாக பாதுகாத்துக்கொண்ட நீர்வளத்தையே தற்போது விற்க முனைகிறார்கள். இலங்கையின் நீர் நுகர்வின் 88% விவசாயத்திற்காகவே பயன்படுத்தப்படுகின்றது. குடிநீர் மற்றும் மனைசார் தேவைகளுக்காக 6% உம் வலுச்ச்கதி மற்றும் கைத்தொழில்களுக்கு 6% உம் நுகரப்படுகின்றது. கைத்தொழில்களுக்காக 88% நீரை வழங்குகின்ற நீர்ப்பாசனத் திணைக்களத்தை இல்லாதொழித்து தனிவேறான நிறுவனமொன்று உருவாக்கப்படுகின்றது. இந் நிறுவனத்தினால் அமுலாக்கப்பட நீர் வள முகாமைத்துவச் சட்டம் என ஒரு சட்டம் கொண்டுவரப்படுகிறது. அந்த சட்டத்தில்தான் நீரை விற்பதற்கான வாசகங்கள் இருக்கின்றன. அதைப்போலவே “நெற்செய்கை மற்றும் ஏனைய செய்கைகளுக்காக அத்தியாவசிய நீரை மாத்திரம் பாவிக்க ஆவனசெய்யவேண்டும்” எனவும் குறிப்பிடப்படுகின்றது. அதற்காக நெற்செய்கையை உள்ளிட்ட ஏனைய செய்கைகளுக்கு நீரைப் பாவிப்பதற்கான அளவுகோல்கள் அறிமுகஞ் செய்யப்படுவதாக அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நீர் ஆட்சியாளர்களுக்கா உரித்தானது? இயற்கையால் பொதுமக்களுக்கும் விலங்குகளுக்கும் கொடையாக அளித்த நீரை விற்பதற்கான உரிமை இந்த ஆட்சியாளர்களுக்கு இருக்கின்றதா? விற்பது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரத்தில் “நீர்ச்சந்தை எண்ணக்கருவினை அமுலாக்குவதற்கான இயலுமை பற்றி விரிவாக கற்றாராய்தல் ” என மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவைப் பத்திரங்களின் உண்மையான நோக்கம் இந்த இடத்தில்தான் வெளிப்படுகின்றது. நீர்ச்சந்தை என்றால் என்ன? சந்தையிலிருந்து நீரைக் கொள்வனவுசெய்ய இருப்பவர்கள் யார்? இந்த நாட்டின் நீரில் 88% விவசாயத்திற்காகவே பாவிக்கப்படுகின்றதென அமைச்சரவைப் பத்திரத்தில் கையொப்பமிட்டவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். விவசாயத்திற்காக பாவிக்கப்படுகின்ற நீரிலிருந்து அறவிடவே தயாராகி வருகிறார்கள். நீர்ச்சந்தை இருப்பது இங்கு தானே. மனைசார் தேவைகளுக்காக நீரைப் பாவிக்கின்ற 6 வீதமானவர்கள் ஏற்கெனவே விலைச்சிட்டைக் கட்டணத்தைச் செலுத்தி வருகிறார்கள். வலுச்சக்தி மற்றும் கைத்தொழில் தேவைகளுக்காகவும் செலுத்தி ஏற்கெனவே வருகிறார்கள். விவசாயத்திற்காக எடுக்கின்ற 88% அளவுக்கு விலையை அறவிடவே இவர்கள் தயாராகி வருகிறார்கள். இந்த முயற்சியை முறையிலெயே கிள்ளியெறிய வேண்டும்.தேசத்திற்கு சாவுமணி அடிக்கின்ற இந்த நீர்ச்சட்டத்திற்கு இடமளிக்க வேண்டாமென நாங்கள் இந்நாட்டு மக்களுக்கு கூறுகிறோம்.
இந்த அமைச்சரவைப் பத்திரம் மாத்திரமல்ல நீரை சந்தைப்படுத்துவதற்கான தனியார் கம்பெனிகளுக்கு கொடுத்து பேரவலமாக மாறியுள்ள உலக நாடுகள் பற்றி நாமறிவோம். கொலொம்பியா, பொலீவியா ஆகிய நாடுகளுக்கு ஏற்பட்ட கதி பற்றி நாமறிவோம். தற்போது மூன்றுவேளை உண்ணமுடியாமல் இருக்கின்ற மக்களின் கிணறுகளுக்கும் ஒரு தொகை பணத்தைச் செலுத்த வக்கடைக்கு மீற்றர் பொருத்த வந்த பின்னர் கத்திக்கொண்டிருப்பதில் பலனில்லை. இப்போதே விளங்கிக்கொண்டு ஆபத்தினை தடுக்க நாம் அனைவரும் செயற்பட வேண்டும். அதற்காக தலைமைத்துவம் அளித்திட நாங்கள் தயார். அதற்கான இலங்கை காலநிலை நிதியம் தனியார் துறையினால் ஈடுபடுத்தப்படுவதோடு, சர்வதேச முகாமைத்துவ நிறுவனங்களையும் சேர்த்துக்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. 70 வது தசாப்தத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, நாணய நிதியம் கூட்டுச்சேர்ந்து நீரை விற்பனைசெய்ய உலக மட்டத்திலான நிறுவனமொன்றை அமைக்கத் தயாராகியது. அதற்காக லத்தீன் அமெரிக்காவிற்கு, ஆபிரிக்காவிற்கு போன்றே ஆசியாவின் பல்வேறு இடங்களுக்குச்சென்றும் அந்த நிறுவனத்தை தாபிக்க காணிகளைத் தேடிக்கொள்ள முடியாமல் போயிற்று. ஆனால் அந்த நிறுவனத்தை அமைக்க இலங்கை அரசாங்கம் இடமளித்தது. நீரை தனியாரமயப்படுத்துவதற்கான நிறுவனம் பத்தரமுல்ல, பெலவத்தையில் தாபிக்கப்பட்டுள்ளது. அது தான் “இமி” எனப்படுகின்ற நிறுவனமாகும். சோல்ஹயிமையும் போட்டுக்கொண்டு உலக வங்கியின் அறிவுறுத்தல்களின்படி புரியப்போகின்ற இந்த அழிவு பற்றிய தகவல்களைக் கற்றாராய்ந்து இந்த முதலாவது ஊடக சந்திப்பில் நாங்கள் நாட்டுக்கு தகவல்களை அம்பலப்படுத்துவோம். 2001 றீகேனிங் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தைக் கொண்டுவந்த ரணிலின் அரசாங்கத்தின் ஆயுட்காலம் குறுகி வீடுசெல்லவேண்டிய நிலையேற்பட்டது. அந்த ரணில் இன்று ராஜபக்ஷாக்களின் கரங்களை பற்றிக்கொண்டு நீர் வளத்தை விற்க எடுக்கின்ற முயற்சியை தோற்கடித்திட வேண்டும். இந்த சட்டத்தை உடனடியாக தோற்கடித்திட ஒட்டுமொத்த மக்களையும் எம்மோடு கூட்டுச்சேருமாறு கேட்டுக்கொள்கிறோம்.