(-Colombo, March 26, 2024-)
கடந்த மார்ச் 22 ஆம் திகதி ரஷ்யாவின் தலைநகரமான மொஸ்கவ்வில் அமைந்துள்ள கலையரங்கத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வதற்காக இலங்கைக்கான ரஷ்ய தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள இரங்கல் குறிப்பேட்டில் தேசிய மக்கள் சக்தி அனுதாப குறிப்பை பதிவு செய்துள்ளது.
இன்று (26) முற்பகல் ரஷ்ய தூதுவரகத்துக்குச் சென்றிருந்த தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தேசிய மக்கள் சக்தியின் அனுதாபக் குறிப்புகளை எழுதினார்.