Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

“புதிய அரசியல் கலாச்சாரத்தினால் மாத்திரமே பொருளாதார தீர்வினை அடையமுடியும்.” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க-

(-கால்நடை மருத்துவர்கள் மற்றும் கால்நடை வளங்கள் தொழில்வாண்மையாளர்களின்
தேசிய மாநாடு – 2024 – 07- 06-)

Vet-Summit

அரசியல் நிலைமாற்றமொன்றை மேற்கொள்ள அண்மித்துள்ள நேரத்திலேயே நாங்கள் இந்த உரையாடலை மேற்கொள்கிறோம். இந்த மாதம் 17 ஆம் திகதி ஜனாதிபதி தோ்தலை நடாத்துவதற்கான அதிகாரம் தோ்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கின்றது. எனினும் தோ்தல் நடாத்தப்படுமா இல்லையா என்கின்ற ஐயப்பாடு சமூகத்தில் நிலவுகிறது. எமது அரசியலமைப்பின் 19 வது திருத்தம் மூலமாக ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டுள்ள காலம் ஐந்து வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அரசியல் அமைப்பு பற்றிய பொருள்கோடலை வழங்குகின்ற உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மேற்படி பதவிக்காலம் ஐந்து வருடங்களென ஊகித்துள்ளனர். அரசியலமைப்பில் இருக்கின்ற சிறிய துவாரங்களை பயன்படுத்திக்கொண்டு விடாப்பிடியாக அதிகாரத்தில் தொங்கிக்கொண்டிருப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறான முயற்சியை மேற்கொண்டு வருபவர் மக்கள் ஆணை மூலமாக அதிகாரத்திற்கு வந்த ஒரு தலைவரல்ல. மக்கள் அவருக்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யக்கூட அதிகாரத்தை கொடுக்கவில்லை. பாராளுமன்றத்தினூடாக பெற்றுக்கொள்கின்ற அதிகாரத்தின் மூலமாக பலவந்தமாக அதிகாரத்தில் தொடர்ந்து இருப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து முயற்சிகளையும் தோற்கடிப்போம் என்பதை நாங்கள் உங்கள் முன்னிலையில் உறுதியாகக்கூறுகிறோம்.

இந்தப் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வாக அமைவது பொருளாதாரத் தீர்வேயன்றி அரசியல் தீர்வுகளல்லவென அவர் கூறினார். எங்களுடைய இந்த நெருக்கடியை தீர்த்துவைக்க ஆரம்பிக்கமுடிவது அரசியல் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க ஆரம்பித்தால் மாத்திரமே என நாங்கள் நம்புகிறோம். எந்தவொரு நாட்டையும் கட்டியெழுப்புவதற்காக மக்கள் ஆணையைக் கொண்ட ஆட்சியொன்று அவசியம். பொருளாதாரம் சீரழிந்துள்ள ஒரு நேரத்தில் அத்தியாவசியமான காரணியாக அமைவது அது சம்பந்தமாக மேற்கொள்ளப்படுகின்ற தீர்வுச் செயற்பாடுகள் கட்டாயமாக மக்களின் ஆணையிலிருந்து பிறப்பதாக அமையவேண்டும். இரண்டாவது விடயம் தான் நெருக்கடிக்கான தீர்வுகளை நெருக்கடியின் சிருஷ்டிக் கர்த்தாக்களால் கண்டுபிடிக்க முடியாதென்பது. பொதுமக்கள் அது தொடர்பில் நம்பிக்கை வைப்பதும் கிடையாது. இந்த நெருக்கடியின் பெரும் பங்கினை வகிப்பது இந்த அரசியல் கலாச்சாரமாகும். எமது நாட்டுக்கும் அத்தியாவசியமான பெருந்தொகையான கருத்திட்டங்கள் பின்நோக்கி நகர்ந்துள்ளன. அநாவசியமான கருத்திட்டங்கள் அமுலாக்கப்பட்டு வருகின்றன. உங்கள் திணைக்களத்தினால் விஞ்ஞான ரீதியான அடிப்படையின் பேரில் முன்வைக்கப்படுகின்ற விடயங்களை நிராகரித்து விலங்குகளை இறக்குமதி செய்தார்கள். அத்தியாவசிய கருத்திட்டங்களுக்கு பணத்தை ஒதுக்காமல் வேறுவேறு விடங்களுக்காக பணத்தை ஒதுக்குகிறார்கள். அங்கு இயங்கிவருவது மறைமுகமான அரசியல் கரமாகும். பொருளாதார தீர்வுக்கான பாதையை புதிய அரசியல் கலாச்சாரம் மூலமாக மாத்திரமே உருவாக்க முடியும். அரசியல் கலாச்சாரத்தின் நிலைமாற்றம் பாரியளவில் எமது கைகளிலேயே பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.

Vet-Summit

பகிரங்க சேவையும் பகிரங்க ஊழியர்களின் கணிசமான எண்ணிக்கையும் இந்த மறைமுகமான அரசியல் கரத்தினால் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது. கால்நடை வளங்கள் பற்றி என்னிடமிருப்பது மோப்பமாகும். உங்களிடமிருப்பது அறிவாகும். எந்தவொரு துறையையும் அபிவிருத்தி செய்கையில் அந்த தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள சிறப்பறிஞர்கள் பொறுப்பினை திட்டவட்டமாக குறிப்பிட்டு செயலாற்றத் தொடங்குவோம். அரசியல்வாதிக்கும் தொழில்வாண்மையாளருக்குமிடையில் வைத்துக்கொள்ளப்படவேண்டிய வரையறைகளை பிரித்தொதுக்கியிராமையால் பேரழிவுக்கு அது வழிசமைக்கின்றது. கொள்வனவு செய்வதற்கான ஒழுங்கமைந்த நடைமுறையை கடைப்பிடிப்பதன் மூலமாக தொழில்வாண்மையாளர் டென்டர் சபையில் கொள்வனவுகள் பற்றி தீர்மானிக்கவேண்டியுள்ளது. அரசியல்வாதி தொழில்வாண்மையாளரின் செயற்பொறுப்பினை ஒரு புறம் ஒதுக்கிவைத்துவிட்டு தான் தெரிவு செய்கின்ற ஒருவரிடம் கையளிக்க முயற்சி செய்கிறார். கரிம உரத்தை சீனாவிலிருந்து இறக்குமதி செய்கின்ற தருணத்தில் பாரிய சச்சரவு ஏற்பட்டது. இந்த உரத்தை இலங்கைக்கு இறக்குமதி செய்வதானால் எமது நாட்டில் விரிவடையாத நுண்ணங்கிகள் பிரவேசிப்பதால் எமது நாட்டுக்கு ஆபத்து விளையுமென்று அந்த துறையிலிருந்த விவசாய மற்றும் மண்ணியல் நிபுணர்கள் கூறினார்கள். அரசியல்வாதி ஆராய்ச்சி செய்கின்ற உத்தியோகத்தர்கள் ஒரு இன்ஜெக்ஷன் மூலமாக இவற்றில் நுண்ணங்கிகளை உட்புகுத்தியதாக கூறுகிறார். தமது பணியை முறைப்படி ஈடேற்றிய தொழில்வாண்மையாளர்களுக்கு சமூகத்தின் முன்னிலையில் அச்சுறுத்தலையும் அபகீர்த்தியையும் ஏற்படுத்தினார்கள். அந்த தொழில்வாண்மையாளர்கள் தமது நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்ளாமல் எமது நாட்டின் சுற்றாடல் முறைமையை பாதுகாப்பதற்காக மேற்கொள்கின்ற முயற்சிகள் தொடர்பில் நாங்கள் நன்றிக்கூற கடமைப்பட்டிருக்கிறோம். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இந்த சம்பந்தப்பட்ட விடயத்தை முறைப்படியே பிரித்தொதுக்களுக்கு இலக்காக்குவோம். கால்நடை வளங்கள் பற்றிய அபிவிருத்தித் தொடர்பான திட்டங்களை வகுக்க, அமுலாக்க, வழிகாட்டல்களை வழங்கவேண்டியது அமைச்சரல்ல. அதனை செய்யவேண்டியவர்கள் அது பற்றிய முறைமைச் சார்ந்த கல்வியறிவு பெற்றுள்ள அனுபவம்வாய்ந்த நீங்களேயாவீர்கள்.

நாட்டு மக்களின் போஷாக்கிற்கு அவசியமான பால், இறைச்சி, முட்டை, மீன் மற்றும் விவசாய உற்பத்திகளை கால்நடை வளங்கள் துறைமூலமாகவே பூர்த்தி செய்து கொள்கிறோம். நாங்கள் போஷாக்கு தேவை தொடர்பான பாரிய நெருக்கடியிலேயே இருக்கிறோம். வயது 5 வருடங்களுக்கு குறைவாக பிள்ளைகளின் 19% போஷாக்கின்மைக்கு இறையாகியுள்ளார்கள். கர்ப்பிணித் தாய்மார்களில் ஏறக்குறைய 22% வீதத்திற்கு கிட்டிய எண்ணிக்கை கொண்டோர் இரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். எடைகுறைந்த பிள்ளைகளின் பிறப்பு எண்ணிக்கை துரிதமாக அதிகரித்து வருகிறது. பிரஜை ஒருவரின் நாளாந்த பால் தேவை 200 மில்லிமீற்றராகும். ஒருவருடத்திற்கு 1600 மில்லியன் லீற்றர் பால் அவசியம். 2022 இல் சமர்ப்பித்த அறிக்கைக்கிணங்க 380 மில்லியன் இருந்தாலும் 2023 இல் 345 மில்லியன் லீற்றரே இருந்தது. ஒரு சிலர் பால் நுகரப்படுகின்ற அளவின்படியே கணிப்பிடுகிறார்கள். அதன்படி நாங்கள் 40% வீதத்தை உற்பத்தி செய்துள்ளதாக கூறுகிறார்கள். அது சரியான கணிப்பீடு அல்ல. எதிர்காலத்தில் நுகரப்படுகின்ற பாலின் அளவு மேலும் குறைவடையும். அதிலிருந்து கோரமுடியாது. பால் உற்பத்தி அதிகரித்துவிட்டதென எம்மால் கூறமுடியாது. நுகரப்படுகின்ற அளவு போதுமானதா என்பதைத்தான் நாங்கள் பார்க்கவேண்டும். அதற்கிணங்க நாங்கள் பாலில் தண்ணீரைவு கண்டுவிட்டோம் என எம்மால் கூறிவிட இயலாது. மக்களின் போஷாக்கு தேவையை நிறைவு செய்வதற்காக எமக்கு கால்நடை வளங்கள்துறை மிகவும் முக்கியமானது.

Vet-Summit

எமது நாட்டின் பால் உற்பத்தியில் 90% வீதத்திற்கு கிட்டிய அளவினை சிறிய உற்பத்தியாளர்களே வழங்குகிறார்கள். அந்த உற்பத்தியாளர்களின் ஏறக்குறைய 80% வீதமானவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே இருக்கிறார்கள். அது அவர்களின் பொருளாதாரத் தரத்தை பலப்படுத்த போதுமானதாக அமையவில்லை. எமது நாடு எதிர்நோக்கியுள்ள பிரதானமான பிரச்சினை வறுமையாகும். பாரம்பரிய ரீதியான வறுமை, ஏதேனும் அனர்த்தம் காரணமாக ஏற்படுகின்ற வறுமை, எதிர்பாராத நிலைமைகள் காரணமாக ஏற்படுகின்ற வறுமை, தொலைதூர கிராமிய குடியேற்றங்களில் பிறந்தமை காரணமாக பொருளாதார வாய்ப்புகளை இழந்துள்ளமையால் ஏற்பட்டுள்ள வறுமை என்பன அவையாகும். இந்த வறுமையை சமூகத்திலிருந்து ஒழித்துக்கட்டுவது எவ்வாறு என்பது நாங்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினையாகும். வறுமை நிலைக்குள்ளான மக்களை பொருளாதாரச் செயற்பாடுக்குள் அழைக்கவேண்டுமானால் அவர்களுக்கு தான் ஈடுபடுகின்ற பொருளாதார சாத்திய வளம் தமக்கு பலம்பொருந்திய வருமானத்தை பெற்றுக்கொடுக்கின்ற சாத்தியவளமாக விருத்தி செய்யப்படல் வேண்டும். வறுமையை ஒழித்துக் கட்டுவதற்காக பொருளாதார வாய்ப்புக்கள் அற்ற குழுக்களுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை விலங்கு வேளாண்மை கால்நடை வளங்கள் துறைமூலமாக உருவாக்கிக் கொடுக்கலாம். அதற்கான சாத்தியவளம் அதில் நிலவுகின்றது. கிராமிய வறுமைநிலையை ஒழித்துக்கட்டுவதற்காக கால்நடை வளத்துறைக்கு பாரிய பொறுப்பு கையளிக்கப்படுகின்றது. ஒரு காலகட்டத்தில் அரசாங்கத்தினால் இறக்குமதி செய்த ஒரு பசுவின் பெறுமதி நாலரை இலட்சமாக அமைந்தது. அரசாங்கம் இரண்டரை இலட்சம் மானியத்தை விவசாயி ஒருவருக்கு வழங்க தீர்மானித்தது. மிகவும் அதிகமான மானியத்தை இரண்டு அமைச்சர்களே பெற்றுக்கொண்டார்கள். அந்த அமைச்சர்களே வறுமையை ஒழித்துக்கொண்டார்கள். வறுமையை ஒழிப்பதற்காக அந்தந்த பொருளாதார சாத்தியவளங்கள் இலக்குகளைக் கொண்டதாக மக்களுடன் பயணிக்கவேண்டும்.

தமக்கு அவசியமான உணவு பொருட்களை அந்தந்த நாடுகள் உற்பத்தி செய்துகொள்ளவேண்டியதன் அவசியத்தை எமக்கு கொவிட்டுக்கு பிற்பட்ட நிலைமையினால் நிரூபிக்கப்பட்டுள்ளது. தேசிய பொருளாதாரத்திட்டமொன்றில் தமது அத்தியாவசியமான உணவுகளை தாம் உற்பத்தி செய்து கொள்ளவேண்டும் என்கின்ற எண்ணக்கரு முழுஉலகிலும் பேசப்பட்டு வருகின்றது. அதனால் புதிய பொருளாதாரத் திட்டமொன்றுக்கு நாங்கள் செல்லவேண்டும். எமது பொருளாதார நெருக்கடியின் இரண்டு தோற்றுவாய்கள் இருக்கின்றன. ஒன்று திறைசேரி வருடமொன்றுக்கு தேவையான அளவிலான ரூபாவை ஈட்டுவதில்லை. எமது வருமானம் ஆண்டொன்றுக்கு 4168 பில்லியன் ரூபாவாகும். கடன் செலுத்துதல், கடன் தவணை செலுத்துதல், அரசாங்க செலவினம் அனைத்தினதும் கூட்டுத்தொகை 11,277 பில்லியன் ரூபாவாகும். நாங்கள் திறைசேரிக்கு அவசியமான ரூபாவின் அளவினைப்போன்றே நாட்டுக்கு அவசியமான டொலர் அளவினையும் ஈட்டுவதில்லை. இதுவரை கடைப்பிடித்த பொருளாதாரக் கொள்கையின் பெறுபேறுதான் இது அரசாங்கம் செல்வத்தை ஈட்டுவது கிடையாது. வெளியில் உற்பத்தி செய்யப்படுகின்ற செல்வத்தின் ஒரு பகுதியை அரசாங்கம் எடுத்து செலவிட்டு வருகின்றது. கம்பெனிகளிடமிருந்து அதன் இலாபம் மீது வரி விதித்து ஒரு பகுதியை எடுத்துக்கொள்கிறது. வெளியிலுள்ள பொருளாதாரத்தை விருத்தி செய்து விரிவடையச் செய்விப்பதன் மூலமாக மாத்திரமே நெருக்கடிக்கு தீர்வினை கண்டறிய முடியும். வெளியிலுள்ள பொருளாதாரத்தை வளர்த்துக்கொள்ள வேண்டியது எமது திட்டமாக அமையவேண்டும். வெளியிலுள்ள பொருளாதாரத்தை வளர்த்துக்கொள்வது எப்படி? வெளியிலுள்ள பொருளாதாரத்தின் சாத்திய வளம் நிலவுகின்ற ஒரு இடம் தான் கால்நடை வளங்கள் துறை. அதனைச் சார்ந்த வகையில் பல கைத்தொழில்களை ஆரம்பிக்க முடியும். அந்தக் கைத்தொழில்களிலிருந்து தேசிய செல்வத்தை பிறப்பித்தவிடத்து அதில் ஒரு பங்கினை அரசாங்கத்தால் எடுத்துக்கொள்ள முடியும். பால் மற்றும் பால்சார்ந்த உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்காக 2022 ஆம் ஆண்டில் 68 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. (6,800 கோடி) இந்த உற்பத்தியை நாங்கள் அதிகரித்துக்கொண்டால் 200 மில்லியன் டொலருக்கு கிட்டியளவினை சேமித்துக்கொள்ள முடியும்.

Vet-Summit

15 ஆம் நூற்றாண்டிலிருந்து 19 ஆம் நூற்றாண்டுவரை கலைஞர்கள், விஞ்ஞானிகள், அரசியல் சிந்தனையாளர்கள் போன்றவர்கள் எதிர்கால உலகம் பற்றி சிந்தித்துப் பார்த்தார்கள். அவ்வாறு சிந்தித்துப் பார்த்த எதிர்காலம் இருபதாம் நூற்றாண்டிலே பௌதீக ரீதியாக கட்டியெழுப்பப்பட்டது. தொழிநுட்பத்தின் விஞ்ஞானத்தின் முன்னேற்றத்தினால் மனிதர்களுக்கு உண்ணக்கொடுக்க முடியுமென்ற நம்பிக்கை உருவாக்கப்பட்டது. அதைப்போலவே விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பத்துறைகளில் பாரிய மாற்றங்கள் இ்டம்பெற்றன. அந்த மாற்றத்திற்கு நோரொத்த வகையில் உலகின் பெரும்பாலான நாடுகள் தனது பொருளதாரத்தை வகுத்துக்கொண்டன. எமது பொருளாதாரத்தையும் அதற்கிணங்க வகுத்துக் கொள்வதற்கு பதிலாக நாங்கள் அவற்றின் நுகர்வோர்களாக மாறினோம். பாரிய ஔடத முன்னேற்றமொன்று இடம்பெற்றது. சுகாதாரம் பற்றி கண்டறிவதற்காக நவீன உபகரணங்கள் உருவாகின. எனினும் நாங்கள் செய்ததோ அவற்றை கொண்டு வந்து நுகர்ந்தது மாத்திரமே. விஞ்ஞானத்தில், தொழிநுட்பத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தை எங்களுடைய பொருளாதார அபிவிருத்திக்கான உபாகமார்க்கமாக எடுத்துக்கொள்வதில் நாங்கள் தோல்வியடைந்தோம்.

உற்பத்திக் கிரயத்தை குறைத்துக் கொள்ளவும், தரத்தை அதிகரித்துக்கொள்ளவும், உற்பத்தியிலும் இடையறாத தன்மையை பாதுகாத்துக்கொள்ளவும் தொழில்நுட்பத்திலும் விஞ்ஞானத்திலும் இடம்பெற்ற மாற்றத்தை நாங்கள் இணைத்துக்கொள்ள வேண்டும். போஷாக்கு தேவையை நிவர்த்தி செய்தல், வறுமையை ஒழித்துக்கட்டுதல் தேசிய பொருளாதாரம் எதிர்நோக்கியுள்ள சிக்கல்களை தீர்த்துக்கொள்வதற்காக கால்நடை வளங்கள் துறையை முக்கியமாக கருதுகிறோம். செல்லப்பிராணிகளின் பாதுகாப்பு மூலமாக தொழில்வாய்ப்புகளை பிறப்பிப்பதற்காகவும் கால்நடை வளங்கள் துறை முக்கியமானதாக அமைகின்றது. வெளியில் பொருளாதாரமொன்று கட்டியெழுப்பப்பட்டால் மாத்திரமே தொழில்வாய்ப்புகள் பிறக்கும். அதைப்போலவே நிகழ்கால இளைஞர் தலைமுறையினரின் உளப்பாங்குகள் சுதந்திரமான தொழில்களையே நோக்கியதாக இருக்கிறது. புதிய இளைஞனின் உளப்பாங்குகளுக்கு ஒத்துவரக்கூடிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுப்பதில் நாங்கள் தோல்வியடைந்திருக்கிறோம். எமது தேசிய பொருளாதாரத்திட்டத்தின் முக்கியமான ஒரு துறையாக கால்நடை வளங்கள்துறை வழங்கப்படுகிறது. எவ்வாறு நாங்கள் கால்நடை வளங்கள் துறையை அபிவிருத்தி செய்வது? உங்களை அதன் தொழில்நுட்ப வினைஞர்களாக, விஞ்ஞானிகளாக, ஆராய்ச்சியாளர்களாக இனங்கண்டுள்ள சரியானவற்றை அமுலாக்குவதற்கு அவசியமான அரசியல் தலைமைத்துவத்தை வழங்குவதுதான் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைச் சோ்ந்த எங்களின் பொறுப்பு. இந்த தொழிற்றுறையை விருத்தி செய்வதற்காக ஏற்கெனவே திட்டமொன்றை நாங்கள் வகுத்துள்ளோம்.

இந்த இடத்தில் மிகவும் முக்கியமானதாக அமைவது மனித வளமாகும். எமது உழைப்பு படையணியின் தொழில்வாண்மைத்துறையில் 15% வீதமானவர்களே இருக்கிறார்கள். தொழில்சார் உழைப்பு மூலமாகத்தான் ஏனைய உழைப்புகள் உற்பத்தித்திறன் மிக்கதாக அமையும். தொழில்சார் உழைப்புகளை நிர்மாணித்துக்கொள்வதற்காக நீண்ட நேரத்தையும் பாரிய செலவுச் சுமையையும் நாங்கள் வகிப்போம். பயிற்றப்பட்ட இந்த தொழில்சார் துறையை பாதுகாத்துக்கொள்ள வேண்டியது அரசியல்வாதியினதும் கொள்கைவகுப்போரதும் பொறுப்பாகும். தொழில்வாண்மையாளர்களின் உரிமைகளை நாங்கள் பாதுகாக்க வேண்டும். துறைசார்ந்த பாரிய அனுபவம் வாய்ந்த ஆராய்ச்சியாளர்களான நீங்கள் எமக்கு ஒரு திட்டத்தை தயாரித்துக் கொடுங்கள். நாங்கள் அவசியமான தலைமைத்துவத்தை வழங்குகிறோம். ஒரு இடத்தில் நாங்கள் முடிச்சுப்போட்டுக்கொள்ளுவோம். இந்த நாட்டை கட்டியெழுப்ப அனைவருக்கும் உண்மையான தேவை இருக்க வேண்டும். தோன்றியுள்ள இந்த அனர்த்தத்திலிருந்து இந்த தாய் நாட்டையும் எமது நாட்டு மக்களையும் மீடெடுக்க வேண்டு மென்ற ஒரே நூலினால் நாங்கள் முடிச்சுப்போட்டுக்கொள்வோம். நாங்கள் அனைவரும் ஒரே இணக்கப்பாட்டில் இருந்துகொண்டு நாட்டை புதிய திசைக்கு நிலைநாட்டுவோம். அதற்கான அனைவரையும் ஒன்றுசேருமாறு அழைப்பு விடுக்கிறோம்.

Vet-Summit