(-Colombo, July 08, 2024-)
ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (UNICEF) இலங்கைப் பிரதிநிதி திரு. Christian Skoog மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் தோழர் ஹரினி அமரசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (08) முற்பகல் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
எதிர்காலத்தில் நடாத்தப்படவுள்ள தேர்தல் காலப்பகுதிக்குள் சிறுவர்களுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைத்துக்கொள்ளல் மற்றும் பிள்ளைகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துதல் சம்பந்தமாக அரசியல் கட்சிகளுக்கு விழிப்புணர்வூட்டுவதற்கான UNICEF நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு படிமுறையாகவே இந்த சந்திப்பு இடம்பெற்றது. தேர்தல் காலத்தில் சிறுவர்களின் உரிமைகள் மீறப்படாதிருப்பதற்காக மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பிற்கான தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் பற்றி இதன்போது UNICEF பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டதோடு எதிர்கால இலங்கையில் சிறுவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகின்ற சமூகமொன்றை தாபித்தல் தேசிய மக்கள் சக்தியின் எதிர்பார்ப்பு எனவும் வலியுறுத்தப்பட்டது.
இந்த சந்தர்ப்பத்தில் UNICEF இலங்கை அலுவலகத்தின் தொடர்பாடல் பிரதானி திரு. Bismarck Swangin அவர்களும் இணைந்திருந்ததோடு UNICEF இலங்கை அமைப்பினால் சிறுவர்களின் பாதுகாப்பிற்காக தயாரிக்கப்பட்ட கொள்கைச் சட்டகம் இதன்போது தேசிய மக்கள் சக்தியிடம் கையளிக்கப்பட்டது.