(-Colombo, August 08, 2024-)
நேற்று (08) முற்பகல் மவிமு தலைமை அலுவலகத்தில் இலங்கையின் எல்லா மாவட்டங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வேலையற்ற பட்டதாரிகள் சிலர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்களை சந்தித்தனர்.
இதன்போது வேலையில்லா பட்டதாரிகள் தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அதைப்போலவே, இதுவரையில் வேலையில்லாத பட்டதாரிகள் எதிர்கொள்கின்ற சிக்கல்கள் குறித்தும் அதற்கான தீர்வு குறித்தும் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.