Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

அம்பாந்தோட்டை ரன்ன பிரதேசத்தில் நடைபெற்ற பிரத்தியேக போதனா வகுப்பு ஆசிரியர்களின் சந்திப்பு – 2024.03.05தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய

(-Colombo, March 07, 2024-)

எமது நாட்டின் பொருளாதார நெருக்கடியானது நீண்டகாலமாக சீரழிந்து கொண்டிருந்த செயற்பாங்கின் பெறுபேறாகும். ஏதோ தற்செயல் நிகழ்வு காரணமாக இவ்விதம் வங்குரோத்து அடையவில்லை. பலதசாப்தங்களாக படிப்படியாக வீழ்த்தப்பட்ட பொருளாதாரத்தின், சமூகத்தின் மற்றும் அரசியல் கலாசாரத்தின் இறுதிவிளைவுதான் இது. இந்த நெருக்கடியான நிலைமையை போன்றே புதிய திசையை நோக்கி நாட்டை வழிப்படுத்தவும், புதிய வரலாற்றினைத் தொடங்கவும் எமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இத்தகைய நெருக்கடிகள் ஊடாக மக்களுக்கு கிடைக்கின்ற அனுபவங்களிலிருந்து புதியதொரு சமூகத்தைக் கட்டியெழுப்பக்கூடியதாக அமைகின்றது. சிதைவுற்ற பயணப்பாதை பற்றி நன்றாக சிந்தித்துப் பார்த்து புதிதாக அமைத்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நாட்டுப் பிரஜைகளின் இடையீட்டினால் நாட்டை வித்தியாசமான பாதையில் வழிப்படுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

அவ்விதமாக நோக்கினால் நாங்கள் தற்போது இரண்டு பொருளாதார முறைமைகளுக்குள் ஒரு தெரிவினை மேற்கொள்ள வேண்டியுள்ளது. எமது வாழ்க்கையை ஓரளவுக்கு முடிச்சுபோட்டுக்கொண்டு செல்வதற்கான இயலுமை இருக்கமாயின் என்ன ஆனாலும் பரவாயில்லை போன்ற கருத்தினைக் கொண்டவர்களாக நடுநிலையில் இருக்கமுடியாது. தெளிவாகவே ஒரு தெரிவினை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஒரு சனநாயக நாட்டில் முன்னேறவேண்டுமாயின் ஆட்சியாளர்களுக்கும் பிரஜைகளுக்கும் இடையில் சமூக இணக்கப்பாடொன்று அவசியமாகின்றது. நாங்கள் ஓர் எதிர்பார்ப்புடனேயே மக்கள் பிரதிநிதிகளை நியமிக்கிறோம். இந்த எதிர்பார்ப்பனை ஈடேற்றுவார்கள் என்ற நம்பிக்கையுடனேயே. ஆனால் அந்த இணக்கப்பாடு முற்றாகவே சிதைவடைந்துவிட்டது. ஆட்சியாளர்களை, அரச பொறியமைப்பினை, அரசியலை மக்கள் அவநம்பிக்கையுடனேயே நோக்குகிறார்கள். அதன்மூலமாக இடம்பெறுவது மற்றுமொரு மனிதனை சந்தேகத்துடன் நோக்குகின்றநிலை அதிகரிப்பதாகும். மனித உறவுகள் மிகவும் பலவீனமான கட்டத்தை அடைந்துவிட்டன. அரசியல், பொருளாதாரம் மாத்திரமன்றி சமூக வழியுரிமைக்கு அவசியமான அனைத்து துறைகள்மீதும் இது பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கல்வியை அது கடுமையாக பாதித்துள்ளது.

இந்த கல்வியிலிருந்து பெற்றுக்கொள்ளக்கூடியவை பற்றிப் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நம்பிக்கையில்லாத மற்றுமொரு துறையாக மாத்திரமே அமைந்துள்ளது. கல்வி சம்பந்தமாக பாரிய நோக்கோ நம்பிக்கையோ கிடையாது. நிலவிய அரசியலால் உருவாக்கப்பட்ட நிலைமையே இது. கல்வியை இந்த இடத்திலிருந்து விடுவித்துக்கொள்ள வேண்டுமாயின் நிலவுகின்ற அரசியல் கலாசாரத்தையும் பொருளாதாரத்தையும் இதிலிருந்து விடுவித்துக்கொள்ள வேண்டும். அந்த மாற்றம் உலக வரலாற்றில் புரட்சிகள், தேர்தல்கள், சுதந்திரப் போராட்டங்கள் ஊடாக பல்வேறு விதமாக இடம்பெற்றுள்ளன. தேர்தலால் தெரிவுசெய்யப்படுகின்ற அரசாங்கத்தினூடாக இந்த மாற்றத்தைசெய்ய நாங்கள் தெரிவுசெய்துள்ளோம். அதனால் தற்போது கழிந்துகொண்டிருப்பது ஒரு தனித்துவமான தருணமாகும். தேர்தல் மூலமாக மாத்திரம் அந்த மாற்றத்தை எற்படுத்திக் கொள்வது மிகவும் அரிதானதாகும். எனினும் 2024 என்பது இலங்கைக்கு ஒரு தனித்துவமான தருணமாகும். 2022 இல் மக்கள் மத்தியில் உருவாகிய போராட்டத்தின் பின்னர் விழித்தெழலுடன் மாற்றமடைந்த மற்றும் மாற்றமடைந்து வருகின்ற பல்வேறு அரசியல் அனுபவங்களையும் புரிந்துணர்வினையும் பெற்றுக்கொண்ட பிரஜைகளின் சக்தியானது ஒழுங்கமைகின்ற வாக்காளர்களுடன் இந்த தேர்தலுக்கு தயாராகி வருகின்றது.

பாராளுமன்றத்திற்குள்ளேயும் அதற்கு வெளியிலும் அரசியல்வாதிகளின் பாவனை பற்றி மக்கள் பகிரங்கமாகவே விமர்சிக்கத்தொடங்கி உள்ளார்கள். அவர்களை எதிர்க்க இனிமேலும் பயப்படவேண்டியதில்லை. முன்னேற்றமடைந்த பிரஜைகளும் அதனை விளங்கிக்கொள்ளாமல் பழைய அமைப்பினையே பேணிவர முயற்சிசெய்கின்ற குழுவினைப்போன்றே மக்களின் அபிலாஷைகளுடன் செயலாற்றுகின்ற அரசியல் இயக்கமொன்றினை சந்திக்கின்ற தனித்துமான தருணமே இது. புதிய அரசியல் கலாசாரத்தைக் கொண்டிருப்பதாலேயே பாரியளவிலான மக்களின் கவர்ச்சி திசைகாட்டி தொடர்பில் நிலவுகின்றது.

ஐந்தாந்திகதி பசில் ராஜபக்ஷ இலங்கைக்கு வந்தமை பற்றி பிரதான ஊடகங்களில் பிரதான செய்தியாக கூறப்பட்டிருந்தது. மீண்டுமொருதடவை நாட்டைக் காப்பாற்றிக்கொள்ள ஏழு மூளைகள் படைத்த ஒருவரின் மீள்வருகையை வரவேற்க, பசில் ராஜபக்ஷவை தோள்மீது சுமந்து வருவதைப்போல்தான் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. எனினும் அப்படியொன்றுமே இடம்பெறவில்லை. பசில் ராஜபக்ஷ பிரதிநிதித்துவம் செய்கின்ற அரசியல் மக்களுடன் ஏற்புடையதல்ல என்பதை விளங்கிக்கொள்ள இந்த சம்பவமே போதும். மக்கள் வெறுக்கின்ற அரசியலைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற அனைவருக்காகவும் அந்த கருத்திட்டத்தை முன்னெடுத்துவருகின்ற மல்லுக்கட்டுகின்ற ஒருசிலர் பசில் ராஜபக்ஷவை வரவேற்கச் சென்றிருந்தார்கள். பிரஜைகள் அங்கே இருக்கவில்லை.

மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் சனாதிபதியாகி நாட்டை மீட்டெடுக்கின்ற வீரன் எனக் கூறிக்கொள்கிறார். கொவிட், தவாறான விவாசாயக் கொள்கை என்பவை கோட்டாபயவின் காலத்தில் இருந்திராவிட்டால் நாடு சீரழிந்திருக்க மாட்டாதென அவர்கள் கூறுகிறார்கள். இந்த சீரழிந்தவேளையில் தீயிலிருந்து தோன்றி வீரனைப்போல ரணில் விக்கிரமசிங்க வந்ததாக கூறுகிறார். சர்வதேச உறவுகள் இருக்கின்ற, பொருளாதாரம் பற்றிய பரந்த அறிவுபடைத்த ரணில் விக்கிரமசிங்கவிற்கு மாற்றுவழி கிடையாதெனவும் கூறுகிறார். ஆனால் உண்மைநிலை அதைவிட முற்றிலும் வேறுபட்டது. பொருளாதாரம் சிதைவடைந்ததன் பாரதூரமான நி்லைமை இப்போதுதான் மக்களை நெருங்கியுள்ளது. கல்வித்துறையில் உயர்தர வகுப்புகளில் குறிப்பாக மாணவர்கள் இன்மை பிரதானமான சிக்கலாகும். அவர்களிடம் உள்ள ஒரே நோக்கம் இந்த நாட்டைவிட்டுச் செல்வதாகும். எமது இளமைக்காலத்தில் எண்பத்திமூன்றில் கறுப்பு ஜுலை, யு.என்.பி. பீதிநிலை, யுத்தத்தின் மத்தியிலேயே நாங்கள் இருந்தோம். அன்றைய இளைஞர் தலைமுறையின் பலம்பொருந்திய அபிப்பிராயம் நாட்டைவிட்டுச் செல்வதல்ல. போராடி நாட்டை சீராக்க முடியுமென்ற உணர்வு எங்கள் தலைமுறைக்கு இருந்தது. தற்போது எமது இளைஞர் தலைமுறையினருக்கு அவ்வாறான ஓர் உணர்வுகூட எஞ்சுகின்ற சமூகமொன்று, நாடு தற்போது கிடையாது. ரணில் விக்கிரமசிங்கவின்கீழ் நாடு உறுதிநிலையடைகின்றது எனும் கேலிக்கூத்து இத்தகைய நிலையிலேயே இடம்பெறுகின்றது.

மற்றுமொரு பக்கத்தில் உணவுப்பாதுகாப்பின்மையும் சுகாதாரப் பாதுகாப்பின்மையும் மக்கள் வாழ்க்கையை நேரடியாகவே பாதித்துள்ளது. பொருளாதாரம் பற்றி தரவுகளில் பேசுவதைவிட மக்களின் வாழ்க்கைபற்றி யதார்த்தமாக நோக்கவேண்டும். அவ்வாறு நோக்கும்போது இந்த பொருளாதாரம் உறுதியானதல்ல. முன்னேறுகின்ற பாதையில் இல்லை. மக்களின் நல்வழியுரிமை பாதுகாப்பான மட்டத்தில் இல்லை. மிகவும் நிலைதளர்ந்து எந்த நேரத்தில் சீரழிந்துவிடுமோ, மேலும் துன்பம்நிறைந்த தருணம் எப்போது ஏற்படுமோ என்ற சுற்றுச்சூழலே இருக்கின்றது. தேசிய மக்கள் சக்தி அத்தகைய சுற்றுச்சூழலில் இடையீடுசெய்வது ஒவ்வொரு துறையையும் எடுத்து தனித்தனியாக மீட்டெடுப்பதற்காக அல்ல. ஒரு நாட்டுக்கு முதலில் நோக்கும் தேசிய திட்டமும் அவசியமாகும். ஒரு நாடு என்றவகையில், சமூகமென்றவகையில் எந்த இடத்திற்குச் செல்லவேண்டும், அந்த இடத்திற்குச்செல்ல என்ன செய்யவேண்டும்? அந்த பயணத்தின்போது கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் சம்பந்தமாக தனியாகவும் விரிவான ஒருங்கிணைந்த வழிமுறைகளும் இருக்கவேண்டும். அதற்காக விழிப்புணர்வினைக்கொண்ட பிரஜைகளை நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் தொடர்புபடுத்திக்கொள்ள வேண்டியதும் முதன்மைப் பணியாகும்.

மக்களை பங்கேற்கச்செய்வித்த கூட்டான இலக்கினைநோக்கிப் பயணிக்கவேண்டிய பாதையை தெரிவுசெய்துகொண்டு நாமனைவரும் தத்தமது வகிபாகத்தை ஈடேற்றவேண்டுமென்பதாலேயே தேசிய மக்கள் சக்தி புதிய மறுமலர்ச்சியை, தேசிய வேலைத்திட்டமொன்றை பற்றிப் பேசுகிறது. எம்மனைவருக்கும் கையளிக்கப்பட்டுள்ள அந்த பணியைத் திட்டமிட்டு சமூகமயப்படுத்தி நடைமுறைப்படுத்துவதே ஒர் அரசியல் இயக்கமென்றவகையில் எமது பொறுப்பாகும். ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில்வாண்மையாளர்களாகிய உங்களிடமும் கையளிக்கப்பட்டுள்ள பிரதான பகுதியொன்று இருக்கின்றது. இந்த மாற்றத்திற்கு அவசியமான பிரஜையை உருவாக்குகின்ற பிரதன நிறுவனம் கல்வியாகும். இந்த கல்வித்திட்டம் உருவாக்குவது நாட்டுக்கு அவசியமான பிரஜையை அல்ல. நாட்டின் அபிவிருத்தியுடனும் சமூக அபிலாஷையுடனும் பிணைந்த மனிதநேயமும் கருணையும் படைத்த கூருணர்வுமிக்க சமூகத்திற்கான விரிவான மனித வளத்தை உருவாக்குவதை கல்வியின் பிரதான செயற்பொறுப்பாகக் கொள்ளவேண்டும். பரீட்சையை மையமாகக்கொண்ட, மனப்பாடம் செய்கின்ற இந்த கல்வியில் இருந்து நாங்கள் எதிர்பார்க்கின்ற முன்னேற்றமடைந்த பிரஜைகளை உருவாக்க முடியாது. அதற்குப் புறம்பாக முன்னேற்றமடைந்த பிரஜைகளை உருவாக்குகின்ற கல்வியைத் திட்டமிட்டு அமுலாக்குவது மாத்திரமன்றி கல்வியானது நாட்டின் அபிவிருத்தி மற்றும் சமூக மாற்றத்தின் ஊடாக புதிய மறுமலர்ச்சி யுகத்தை உருவாக்குதிலும் முனைப்பாக இடையீடுசெய்ய வேண்டும். இதற்காக நாங்கள் மென்மேலும் உரையாடலில் ஈடுபட்டு புரிந்துணர்வுடன் உங்களிடம் கையளிக்கப்பட்டுள்ள பங்கினை ஈடேற்றுவதற்காக அணிதிரளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.