Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

“இந்த கொடிய ஆட்சிக்குள் உயிர்வாழ்கின்ற இறுதிப் பம்பரையினர் நாங்கள்தான் ” -மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா-

2023.11.18 – தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்புப் பேரணி – நுகேகொட

நாங்கள் நுகேகொடவில் குழுமியிருப்பது  ரணில் விக்கிரமசிங்கவிற்கும் மகிந்த ராஜபக்ஷ கும்பலுக்கும் இறுதி அறிவித்தலைக் கொடுப்பதற்காகும்: “எமது நாட்டை எங்களுக்கு எஞ்சவைத்து, இறங்கிப்போங்கள்” எனக் கூறுவதற்காகவே: இந்த கொடிய ஆட்சிக்கு முற்றுப்புள்ளிவைத்து, தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியால் நாட்டை மீட்டெடுப்பதை உறுதிசெய்யவும் அதற்காக நாட்டுமக்கள் அனைவரும் கைகோர்த்திருக்கிறார்கள் எனும் செய்தியைக் கொடுப்பதற்காகவுமே. எமது நாட்டின் பொருளாதாரம், விவசாயம், சுகாதாரம் என ஓரிரண்டு துறைகளை வீழ்த்தியிருப்பின் மீட்டெடுப்பது இலகுவானது. எனினும் கடந்த காலப்பகுதி பூராவிலும் நாடு பொருளாதாரரீதியாக, அரசியல்ரீதியாக, சமூகரீதியாக மற்றும் கலாசாரரீதியாக அனைத்துப் பிரிவுகளிலும் சிதைக்கப்பட்டுள்ளது. அத்தகைய ஒரு நாட்டை கொள்கைகளால் மாத்திரம் மீட்டெடுக்க முடியாது.  அதனை மீட்டெடுக்க பல  நற்பண்புகள் அவசியமாகின்றன. அவையனைத்துமே பொதிந்திருப்பது தேசிய மக்கள் சக்தியிடம் மாத்திரமே என்பது இந்த ஒழுக்கத்தை மதிக்கின்ற போராட்டத்தன்மைமிக்க ஊர்வலத்தினால் நிரூபிக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஒரே நோக்கத்துடன் ஒரே போராட்டக் கோஷத்தை எழுப்பி ஒழுக்கமும் அடக்கமும் நிறைந்தவர்களாக தனிப்பட்ட நோக்கங்களுக்காகவன்றி பொதுநோக்கமொன்றுக்காக பேரணியில் இந்த இடத்திற்கு வந்திருக்கிறோம். எம்மிடம் இருப்பது தனித்தனியாக பிரத்தியேக நோக்கங்களன்றி  வீழ்த்திய நாட்டைக் கட்டியழுப்புகின்ற  பொதுவான ஒரே நோக்கமே என்பதை உறுதிப்படுத்தினோம்.  வேறு கட்சிகளின் ஊர்வலங்களில் ஒவ்வொருவரினதும் முகங்களைப் போட்டுக்கொண்டு ஒவ்வொருவரை வெற்றியீட்டச் செய்விப்பதற்காக வருகின்ற பிரிவினரே இருக்கிறார்கள். நாங்கள் எவருக்கும் பின்னால் செல்வதற்காக இங்கு வரவில்லை. நாசமாக்கியுள்ள  எமது தாய்நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக போராட, அர்ப்பணிக்கத் தயார் என்பதை நிரூபிப்பதற்காகவே. அதற்கு அவசியமான பண்புகள், வலிமை, ஆன்மீகம் இருப்பது தேசிய மக்கள் சக்தியிடம் மாத்திரமே.

நாடு எக்கேடுகெட்டாலும் தற்போதுள்ள ஆட்சியாளர்களுக்கு பிரச்சினை கிடையாது. நாட்டுமக்கள்  உணவின்றி, மருந்துகளின்றி, கல்விகற்பதற்கான வசதிகளின்றி இருக்கையில் ஆட்சியாளர்கள் பாரியளவிலான ஊழல் – மோசடிகளில் ஈடுபட்டுள்ளார்கள்.  மனிதர்களை மனிதன் நேசிக்கின்ற, தமக்கு தனிப்பட்டமுறையில் எதனையும் எதிர்பார்க்காமல் 75 வருடகாலமாக பாதிப்படையச் செய்வித்துள்ள  மக்களை நேசிக்கிறோம் என்பதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம்.  இந்த நாட்டைக் கட்டியெழுப்ப அவசியமான அனைத்துவிதமான அர்ப்பணிப்புகளையும் செய்ய நாங்கள் தயார் என்பதை மீண்டும்மீண்டும் உறுதிசெய்துள்ளோம்.  இங்கே இருப்பது வெறுமனே மண்டைகள் மாத்திரமல்ல: எமது நாட்டில் இருக்கின்ற மிகச்சிறந்த பண்புகளைக்கொண்ட துணிச்சல்மிக்க பல்லாயிரக்கணக்கான மனிதர்களே. சிலகாலம் பொய்யாக பிரிந்துநின்று, நாடகமாடி, தற்போது ஒன்றாகக்கூடி பழைய வரலாற்றின் இறுதிக் காட்சியை அவர்கள் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். எமது நாட்டின் வரலாற்றினை புதிதாக எழுதவல்ல சக்தியே இந்த இடத்தில் குழுமி இருக்கின்றது. நாங்கள்  கடந்துவந்த தூரப் பயணத்தைப்போன்றே  அடக்கமாக, ஊக்கத்துடன் முன்நோக்கிச் செல்கின்ற பொறுப்பு எம்மிடம் இருக்கின்றது.

இங்கே இன்று குழுமியிருப்பவர்கள் வெற்று மனிதர்கள் அல்லவென்பதாலேயே எதி்ரி தேசிய மக்கள் சக்திக்கு பயந்துபோயுள்ளார்கள்: வெறுமனே வாக்காளர் மாத்திரம் அல்லவென்பதாலேயே. ஒரு தீர்மானத்தை எடுத்தால் கற்பாறையிலும் சாகுபடி செய்யக்கூடிய ஆற்றல் படைத்த மனிதர்களே இங்கு குழுமியிருக்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்காக்கள்,  மகிந்த ராஜபக்ஷாக்கள் மக்கள் அபிப்பிராயத்திற்கு அஞ்சுகிறார்கள். தேர்தல்கள் மூலமாக மக்கள் அபிப்பிராயம் வெளிப்படுவதற்கு அஞ்சுகின்ற  ரணில் விக்கிரமசிங்காக்கள்,  மகிந்த ராஜபக்ஷாக்கள் தேர்தலை பிற்போட்டுள்ளார்கள். அதற்கெதிராக உயர்நீதிமன்றத்தில் நாங்கள் தாக்கல் செய்துள்ள வழக்கு பிற்போடப்பட்டு வருகின்றது.  அதேவேளையில் அரசாங்கம் தேர்தலுக்கு முன்னராகவே மக்கள் அபிப்பிராயம் வெளிபடுத்தப்படுகின்ற சமூக வலைத்தளங்களை அடக்குவதற்காக சட்டங்களக் கொண்டுவந்துள்ளது. மக்கள் அபிப்பிராயம் வெளிப்படுத்தப்படுகின்ற  ஆர்ப்பாட்டங்களுக்குப் பயந்து பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டுவரத் தயாராகி வருகின்றது. எவருடன் அந்த விளையாட்டை நடாத்தினாலும் மாபெரும் மக்கள் பலத்தைக்கொண்ட ஒழுக்கமும் திடசங்கற்பமும்கொண்ட தேசிய மக்கள் சக்தியுடன் விளையாட இயலாதென ரணிலுக்கும் அவருடைய கையாட்களுக்கும் கூறிவருகிறோம். ரணில் விக்கிரமசிங்கவிற்கு எஞ்சியிருப்பது அதிகபட்சமாக இன்னும் பத்து மாதங்களில் படுக்கையைச் சுருட்டிக்கொண்டு  போவது மாத்திரமே என்பதை வலியுறுத்துகிறோம். ராஜபக்ஷாக்களுக்கும் அப்படித்தான். அரசாங்கங்களை மாற்றி மெச் விளையாடிய எதிரிகளின் யுகம் முடிந்துவிட்டது. தற்போது பிறந்துள்ளது மக்களின்   யுகமாகும்.  இந்த யுகத்தை எமது கைகளால் நிர்மாணிப்போம் என்பதைக் கூறுவதற்காகவே நாங்கள் இங்கு குழுமியிருக்கிறோம். அதனை நிறுத்தவல்ல எந்தவொரு சக்தியும் கிடையாது.

பல மாதங்களுக்கு முன்னர் “மகிந்தவுடன் எழுந்திடுவோம்” என ஒன்றைப் போட்டுப் பார்த்தார்கள்.  சரிவரவில்லை என்பதால் “நாமலுடன் எழுந்திடுவோம்” எனப் போட்டார்கள். தற்போது பசிலுடன் எழ எத்தனிக்கிறார்கள், எனினும் முடியவில்லை. அவர்களின் காலம் கடந்துவிட்டது. இப்போது மக்களின் யுகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.   நாட்டை வீழ்ச்சியுறச் செய்வித்து திசைமாறி பயணித்துக் கொண்டிருந்த மக்களுக்கு தமக்கு என்ன நேர்ந்ததென்பதை திரும்பிப் பார்க்கமாறு ஆட்சியாளர்களால் நிர்ப்பந்திக்கப்பட்டது. இவ்விதமாக நிர்ப்பந்திக்கின்ற தருணத்தில் மக்களுக்கு உண்மையை எடுத்துரைத்து பயணப்பாதையைக் காட்ட தேசிய மக்கள் சக்தி இருந்தது. திருடனைப்பார்த்து திருடன் என்று நாட்டு மத்தியில் வெளிபடுத்திய ஒரே தலைவர் அநுர குமார திசாநாயக்க மாத்திரமே. ஒரு காலத்தில் அவர்களின் ஆட்கள் “திருடினாலும் வீதிகளை அமைத்தார்களே” போன்ற அபிப்பிராயங்களை தெரிவித்து வந்தார்கள். இன்று மக்களுக்கு அந்த வீதிகளில் பயணிக்க வாகனங்களுக்கு எரிபொருள் அடிக்கக்கூட முடியாது.  இதனால் திருடர்களுக்கு மீண்டும்  வாய்ப்பினை அளிக்காதிருக்க மக்கள்  திசங்கற்பத்துடன் இருக்கிறார்கள். மக்களை வென்றெடுக்கின்ற போராட்டத்தின் மிகப்பெரிய ஆயுதம் கருத்துக்களே. எம்மிடம் சரியான கருத்துக்கள் இருப்பதைப்போலவே எம்மொவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கின்றது. நாம் ஒவ்வொருவரும் கொண்டுள்ள அந்த சரியான கருத்து ஏனைய அனைத்தையும்விட பலம்பொருந்தியது. தேசிய மக்கள் சக்தியின் கருத்துக்களுடன் போராடக்கூடிய எந்தவொரு சக்தியும் இலங்கையில் கிடையாது. ஒழுங்கமைத்தல் கோணத்தில் பார்த்தாலும் தோல்விதான். தனியொரு தலைவனின் பின்னால் செல்கின்ற ஒரு குழுவினரை நாங்கள் அமைக்கவில்லை. அநுர தோழரின் தலைமையில் நாமனைவரும் ஒன்றுசேர்ந்து வெற்றிதோல்வியை தாங்கிக்கொண்டு நம்பிக்கையுடன் பயணிக்கின்ற கூட்டான தலைமைத்துவத்தை அமைத்தோம். இந்த கூட்டுமனப்பாங்கிற்கு வெற்றியீட்ட முடியுமென்பது தற்போது நிரூபிக்கப்பட்டுவிட்டது.

அவர்களால் கூட்டாக சாதிக்கக்கூடியது திருடுவதை மாத்திரமே. கருத்தியல்ரீதியாகவும் ஒழுங்கமைத்தல் திறனிலும் நாங்கள் அவர்களை தோற்கடித்துவிட்டோம். அரசியலமைப்பில், சனாதிபதி பதவியில் மற்றும் பாராளுமன்றத்தில் மாத்திரமே அவர்களுக்கு அதிகாரம் இருக்கின்றது. அதிலும் அடுத்த வருடம் அக்டோபர் மாதத்தில் சனாதிபதி தேர்தலில்  எமது நாட்டு வரலாற்றில் முதல்த்தடவையாக பொதுமக்கள் தலைவரொருவரை வெற்றியீட்டச் செய்விக்க நாமனைவரும் தயார். சனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதும் உடனடியாக இந்த கொடிய, ஊழல்மிக்க பாராளுமன்றத்தைக் கலைத்து  அந்த அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டு நாட்டை சரிக்கட்டுவதை தொடங்குவோம். நாட்டை சரிக்கட்டுவதைப்போலவே கள்வர்களைப் பிடிக்கவும் வேண்டியுள்ளது. கள்வர்களுக்கு நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கவும் வேண்டியுள்ளது. எம்மைச்சுற்றி நம்பிக்கைவைத்து ஒன்றுசேர்கின்ற பிரமாண்டமான மக்கள் சக்தி புதியதொரு நாட்டைக் கட்டியெழுப்புவதை நிச்சயமாக செய்யும்.  உழைக்கும் மக்கள், கமக்காரர்கள், மீனவர்கள், கைத்தொழிலதிபர்கள், இளைய தலைமுறையினர் மற்றும்  நீதியைக்கோரி கண்ணீர்வடிக்கின்ற பெண்களின் சக்திகள் எம்மைச் சுற்றிக் குழுமி இருக்கின்றன.  இந்த நாட்டைக் கட்டியழுப்புகின்ற அறிவும் விருப்பமும் கொண்ட தீத்தொழில் புரிபவரல்லாத அனைத்து தொழிலதிபர்களினதும் ஒன்றிணைதல் இடம்பெறுகின்றது. கடந்த நாட்களில் எம்முடன் புதிதாக சேர்ந்தவர்கள்  முப்படையிலிருந்து இளைப்பாறிய அதிகாரிகளை உள்ளிட்ட அனைவருமாவர்.  அவர்கள் மாபெரும் சக்தியாக திடசங்கற்பத்துடன் ஒன்றுசேர்ந்துள்ளார்கள். மகிந்த ராஜபக்ஷாக்கள், ரணில் விக்கிரமசிங்காக்களுடன் இருக்கின்ற திருட்டுக் கும்பலைத் தவிர  புதிய அனைத்துச் சக்திகளும் தேசிய மக்கள் சக்தியை சுற்றிக் குழுமிவிட்டன. இன்றளவில் மக்கள் கருத்து ஆய்வின்படி 50% ஐ விஞ்சிய  வெற்றி தேசிய மக்கள் சக்திக்கு  கிடைப்பது உறுதியாகியுள்ளது. அரசாங்கம் மீதான விருப்பம் 9%  வரை வீழ்ச்சியடைந்துள்ளது.  இன்றளவில் கத்தரிக்கப்பட்டுள்ள சனநாயக பிரவாகத்தில் எம்மால் வெற்றிபெற முடியும். அது தொடர்பில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது.  அதனால் தாம் விரும்புகின்ற ஆட்சியை அமைத்துக்கொள்ள மக்கள்கொண்டுள்ள உரிமைமீது கைவைக்க தயாராக வேண்டாமென நாங்கள் ரணிலிடம் கூறுகிறோம். கைவைத்தால் கோட்டாபய சென்ற பாதையிலேயே ரணில் விக்கிரமசிங்கவையும் அனுப்பிவைக்க மக்கள் செயற்படுவார்கள் என்பதில் ஐயம் கிடையாது.  

நாங்கள் எவருமே தற்போது பொறுப்புடையவர்களாக அரசியலில் ஈடுபடவேண்டும்.  கிராமங்களுக்கு புதிய தலைமைகளை அறிமுகஞ்செய்து  தேசிய மக்கள் சக்தியை பலப்படுத்த வேண்டும்.  பௌத்த, கத்தோலிக்க, இஸ்லாம், இந்து சமயங்களைச்சேர்ந்த மக்களை இலங்கையர்கள் என்றவகையில் ஒன்றுசேர்க்க வேண்டும். சிங்கள, தமிழ், முஸ்லீம்களாகிய நாமனைவரும் எமது கைகளால் இலங்கைத் தேசத்தைக் கட்டியெழுப்புவோமென்ற திடசங்கற்பத்துடன் ஒன்றுசேர்வோம். எவராலும் தோற்கடித்திடமுடியாத நாட்டை சரிக்கட்டுகின்ற பிரமாண்டமான மக்கள் பலத்தை நாங்கள் கட்டியெழுப்புவோம்.  அதற்காக கூட்டுமனப்பான்மை, சகோதரத்துவம், பொதுநலம் போன்ற சிறந்த பண்புகளை ஒன்றாக சேர்த்திடுவோம். கிடைக்கின்ற முதலாவது தருணத்திலேயே ரணில் விக்கிரமசிங்காக்களை மகிந்த ராஜபக்ஷாக்களை விரட்டியடித்து வீழ்த்தப்பட்ட நாட்டை கட்டியழுப்புவதற்காக அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள  நாங்கள் தயார். நாட்டின் அனைத்து மக்களும் சந்தோஷமாக வசிக்கின்ற நாளைய தினத்தை எம்மால் உருவாக்க முடியும். அதற்காக போராட, அர்ப்பணிப்புச்செய்ய, உழைத்திட நாங்கள் தயார். எங்கள் கைகளால் எமது நாட்டைக் கட்டியெழுப்புவோம். எமது தலைமுறையினர் நாட்டின் வரலாற்றினை புதிதாக எழுதுவார்கள்.   இந்த கொடிய ஆட்சிக்குள் வசிக்கின்ற இறுதிப் பரம்பரை நாங்கள்தான்.   அனைவருக்கும் வெற்றிகிட்டட்டுமாக!