Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

“புதிய பாராளுமன்றம் கூடும்வரை அரசியலமைப்பிற்கிணங்க நாட்டை ஆட்சிசெய்வோம்” -தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க-

(-”நாடு அநுரவோடு” தேசிய மக்கள் சக்தியின் பெருவெற்றிக்கான கூட்டம் – ஜாஎல – 2024.09.04-)

Anura Kumara Dissanayake At The Victory Rally Of Ja-Ela

அவர்கள் தற்போது தோல்வியை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்பதே உண்மை.

கடந்த காலத்தில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி பற்றிய விடயங்களை நாங்களே முன்வைத்தோம். இப்போது அவர்கள்தான் எமது வெற்றியை உறுதிசெய்கிறார்கள். ஒருவாரத்திற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகிய தலதா அத்துகோரள சஜித் – ரணில் ஒன்றுசேராவிட்டால் அவர்கள் தோல்வியடைவார்கள் எனக் கூறினார். இன்று (04) அருந்திக்க பர்னாந்து ஒன்றுசேராவிட்டால் அவர்கள் தோல்வியடைந்துவிடுவதாக பாராளுமன்றத்தில் உரத்தகுரலில் கூறினார். அதனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் பாராளுமன்றத்தில் சுயாதீன உறுப்பினராக செயற்படப்போவதாக கூறினார். அடுத்ததாக தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை தடுக்க முடியாதென ரணில் கூறுகிறார். அதனால் சஜித்திற்கு வாக்களிக்காமல் தனக்கு வாக்களிக்குமாறு அவர் கூறுகிறார். ‘ரணில் எப்படியும் தோல்வியடைவார். தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறுவதை தடுக்கவேண்டுமானால் சஜித்திற்கு வாக்களியுங்கள்’ என சஜித்தின் ஆட்கள் கூறுகிறார்கள். இவை அனைத்திலிருந்தும் தெளிவாகின்ற விடயம் என்ன? அவர்கள் தற்போது தோல்வியை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்பதே உண்மை. அதனால் எமக்கு எதிராக கதைகளை சோடிக்க, குறைகூற, பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்ற நிலையை அவர்கள் அடைந்திருக்கிறார்கள். என்னதான் செய்தாலும் தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ள இந்த வெற்றியை எவராலும் திசைத்திருப்ப முடியாது.

People At The Victory Rally Of Ja-Ela

இந்த வெற்றியை எவராலும் திசைதிருப்ப முடியாது.

தற்போது எமது தேர்தல் இயக்கத்தை மேற்கொள்வதை பொதுமக்கள் பொறுப்பேற்று விட்டார்கள். முன்னர் அவர்கள் கூறிக்கொண்டு இருந்தார்கள் “ஐயோ தேசிய மக்கள் சக்தி 3% அல்லவா. அது எப்படி 51% ஆகும் ” என. நாங்கள் வெற்றிபெற்றால் நாடு ஆபத்தில் என்று தற்போது ரணில் கூறத்தொடங்கி இருக்கிறார். தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றால் 22 ஆந் திகதி பாரிய கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார்கள் என்று குருநாகல் பக்கத்தில் உள்ள ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூறுகிறார். நாங்கள் வெற்றிபெற்றால் 6 மாதங்கள்கூட அரசாங்கத்தை கொண்டுநடாத்த முடியாதென ஐக்கிய மக்கள் சக்தியின் மற்றுமொரு பெண் கூறுகிறார். வெற்றிபெறுவது ஒருபுறமிருக்க நினைத்துப்பார்க்ககூட முடியாது என அவர்கள் முன்னர் கூறினார்கள். இப்பொழுது “வெற்றிபெற்றால்” எனக் கூறுகிறார்கள். “தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றால் உங்களின் பன்றிக்கொட்டில் இல்லாமல் போய்விடும்” எனக் கூறுகிறார். அதாவது கொட்டிலுக்குள் அவர்கள் வந்துவிடுவதாக நினைத்தா எனத் தெரியாது. ஜாஎலவில் உள்ள பன்றிக்கொட்டில்களை மூடி அவர்களை பன்றிக்கொட்டிலில் கட்டிவிடுவார்களா என்ற பயம்தான் காரணமோ தெரியவில்லை. எம்மால் வெற்றிபெற முடியாதென தேர்தல் இயக்கத்தின் ஆரம்பத்தில் அவர்கள் கூறினார்கள். இடைநடுவில் ‘வெற்றிபெற்றால்” எனக் கூறுகிறார்கள். “22 ஆம் திகதி ” அப்பச்சி அவர்கள்தான் வெற்றிபெறுவார்கள்” எனக் கூறுவார்கள். இந்த வெற்றியை எவராலும் திசைதிருப்ப முடியாது. அதனால் வெற்றியின் பின்னர் நாங்கள் நாங்கள் பயணிக்கின்ற பாதைபற்றி சற்று பேசுவோம்.

AKD At The Victory Rally Of Ja-Ela

அரசியலமைப்பின்படி ஜனாதிபதியால் அனைத்து அமைச்சுக்களினதும் பொறுப்பினை தனக்குக்கீழ் எடுத்துக்கொள்ளமுடியும்.

நாங்கள் வெற்றிபெற்றதன் பின்னர் எங்கள் மக்கள் ஆணைக்கும் பாராளுமன்றத்தின் மக்கள் ஆணைக்கும் இடையில் துரித திரிபுநிலையொன்று தோன்றும். மொட்டுக்கு வாக்களித்து நாலக்க கொடஹேவாவிற்கு விருப்புவாக்கினைக் கொடுத்தார்கள். இப்போது அவர் சஜித்திடம். எனவே இப்போது 2020 மக்கள் ஆணை எங்கே? அது ஒழிந்துவிட்டது. அதனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தொடக்கத்திலேயே இந்த பாராளுமன்றத்தை கலைத்துவிடும். அவ்வாறு செய்து அடுத்த பாராளுமன்றம் உருவாகும்வரை அமைச்சரவைக்கு என்னநேரிடுமென அவர்கள் கேட்கிறார்கள். பதற்றப்பட வேண்டாம். அரசியலமைப்பிற்கு அமைவாக நாங்கள் அந்த இடைக்காலத்தில் நாட்டை ஆட்சிசெய்வோம். எப்படி? ஒன்றுதான் நாங்கள் வென்றதும் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகும். வேறொருவர் அதற்காக நியமிக்கப்படமுடியும். நால்வரைக்கொண்ட அமைச்சரவையை அமைக்கலாம். அது அரசியலமைபிற்கு அமைவானதாகும். அவ்வாறில்லாவிட்டால் அரசியலமைப்பின்படி ஜனாதிபதியால் அனைத்து அமைச்சுக்களினதும் பொறுப்பினை தனக்குக்கீழ் எடுத்துக்கொள்ளமுடியும். அப்படியும் இல்லாவிட்டால் காபந்து அரசாங்கமொன்றையும் அமைத்துக்கொள்ளலாம். மூன்றுவிதமாக செயலாற்றலாம். அதனால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய பாராளுமன்றம் நியமிக்கப்படும்வரை நாங்கள் அரசியலமைப்பிற்கு அமைவாக நாட்டை ஆட்சிசெய்வோம்.

Crowd At The Victory Rally Of Ja-Ela

இப்போது இருக்கின்றவர்களில் 2/3 பங்கினர் அடுத்த பாராளுமன்றத்தில் இல்லையென்பது எமக்குத்தெரியும்.

அடுத்ததாக பாராளுமன்றத் தேர்தல் வரும். இந்த பாராளுமன்றத்தில் இருக்கின்ற உறுப்பினர்களின் பெரும்பகுதியினரை வீட்டுக்கு அனுப்பிவைக்க வேண்டுமென்ற பாரிய உரையாடலொன்று தற்போது நாட்டில் நிலவிவருகின்றது. இப்போது இருக்கின்றவர்களில் 2/3 பங்கினர் அடுத்த பாராளுமன்றத்தில் இல்லையென்பது எமக்குத்தெரியும். அதன்படி அந்த 2/3 பங்கினரின் இறுதி பாராளுமன்ற அமர்வுதினமே இன்று. அதன்பின்னர் தேசிய மக்கள் சக்தியின் பெரும்பாலான உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு வருவார்கள். அதில் 25 பேரை உச்ச அளவினராகக்கொண்ட அமைச்சரவையொன்றை நாங்கள் நியமிப்போம். இன்றைய பாராளுமன்ற அமர்வின் பின்னர் அடுத்த ஒக்டோபர் மாதம் முதலாந் திகதியே பாராளுமன்ற அமர்வு நடைபெறும். 25 பேரைக்கொண்ட அமைச்சரவைக்கு அறிவியல்ரீதியாக விடயத்துறைகள் பகிரப்படும். இதுவரை காலமும் அமைச்சுக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அல்ல. தமக்கிடையே பகிர்ந்து கொண்டார்கள். நாங்கள் அந்தந்த விடயத்துறைகளுக்கு பொருந்தக்கூடிய ஒருங்கிணைப்புகளைச்செய்து அமைச்சுக்களை பிரித்தொதுக்குவோம்.

The Victory Rally Of Ja-Ela Crowd

நாங்கள் அமைச்சர்களுக்கு கார் பேர்மிட் வழங்குவதை நிறுத்துவோம்

நாங்கள் அமைச்சர்களுக்கு கார் பேர்மிட் வழங்குவதை நிறுத்துவோம். “மரிக் கார் பேர்மிட்” ஐயும் நிறுத்துவோம். இந்த தடவை சரியாக புள்ளடி இடுக. அப்போதுதான் வீட்டுக்கு அனுப்பவேண்டியவர்களை வீட்டுக்கு அனுப்ப முடியும். இந்த 21 ஆந் திகதி இடுகின்ற புள்ளடிமூலமாக வீட்டுக்குப்போவது ரணில் மாத்திரமல்ல: இது மிகவும் பலம்பொருந்திய புள்ளடியாகும். நாங்கள் நீண்டகாலமாக இந்த அரசியலில் ஈடுபட்டிருக்கிறோம். சிரமங்களை எதிர்கொண்டிருக்கிறோம். குறைகூறல்களுக்கு இலக்காகி இருக்கிறோம். 06 மாதங்களில் வீட்டுக்குச்செல்வதற்கான ஒரு அரசாங்கத்தை நாங்கள் அமைப்போமா? இல்லை. நாங்கள் இந்த நாட்டின் மிகஉறுதியான அரசாங்கத்தை அமைப்போம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். எமது வெற்றி உறுதியானது. அந்த உறுதிநிலையை ஏற்கெனவே இந்த நாட்டுமக்கள் எற்கெனவே உறுதிசெய்துவிட்டார்கள்.

Mahinda Pathirage At The Victory Rally Of Ja-Ela
JMK Mark At The Victory Rally Of Ja-Ela