(-பெருவெற்றிக்கான களுத்துறை கூட்டம் – 18-09-2024-)
இன்று பிரச்சார வேலைத்திட்டத்தின் இறுதி நாள். தோ்தல் சனிக்கிழமை. பெறுபேறு ஞாயிற்றுக்கிழமை என்ன நடக்கும்? இது வெற்றிபெறக்கூடிய ஒரு தோ்தல் நிச்சயமாக தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறும். நீண்ட காலமாக எமது நாட்டு மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்திருந்தார்கள். அதற்காக அயராது உழைத்தார்கள். பல காலமாக பல்வேறு இன்னல்களை மக்கள் எதிர்நோக்கினார்கள். நீதி, நியாயத்திற்காக போராடினார்கள். பல விதமான போராட்டங்களை நடாத்தினார்கள். ஆனால் எங்களால் இறுதி வெற்றியை பெற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் இந்த செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி அந்த வெற்றியை எங்களால் பெற்றுக்கொள்ள முடியுமென நினைக்கிறோம். உண்மையை எடுத்துக்கொண்டால் எமது மூதாதையர் எங்களுடைய பழைய தலைமுறையினர் இந்த துன்பங்களிலிருந்து விடுபட அநீதிக்கு எதிராக நியாயமான ஒரு சமூகத்திற்காக இந்த அநாகரிகத்திற்கு பதிலாக நாகரிகத்திற்காக நீண்டகாலமாக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டார்கள். அந்த முயற்சிகளுக்கான பெறுபேறு எதிர்வரும் 21 ஆம் திகதி கிடைக்குமென்பது நிச்சயம். இந்த வெற்றியின்போது நாங்கள் ஆற்றிய ஒரு பணி இருந்தது. நாங்கள் திட்டங்களை வகுக்கிறோம். வேலைத்திட்டத்தை வகுக்கிறோம். வேலையை செய்யக்கூடிய குழுவினரை இனங்காண்கிறோம். கருத்தியலை சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்வதற்காக இவ்வாறான கூட்டங்களை நடாத்துகிறோம். அது எங்களின் பங்கு. ஆனால் இந்த வெற்றிக்கான மிக பெரிய பங்கினை எங்கள் முன் இருக்கின்ற நீங்கள் தான் செய்கிறீர்கள். நீங்கள் பல வருடங்களாக வட்டார சபைகளை அமைத்து, பெண்கள் சபைகளை அமைத்து, வீடுவீடாகச் சென்று எத்தனை தடவைகள் மக்களை சந்திக்க போயிருப்பீர்கள். நாங்கள் ஒவ்வொருவரையும் சந்தித்து இந்த கட்டத்தை அடைந்திருக்கிறோம்.
தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை பிரார்த்திக்கின்ற மக்களின் முகங்களில் தெரிகின்ற எதிர்பார்ப்பினை நீங்கள் பாருங்கள்
இதற்கு முன்னர் தோ்தல் தினம் பற்றி நாட்களை எண்ணிக்கொண்டிருந்தவர்கள் அரசியல்வாதிகள் தான். ஆனால் இலங்கையில் முதல் தடவையாக தோ்தல் எப்போது நடைபெறும் என இந்த தடவை மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அது வரலாற்றில் முதல் தடவையாகும். ஒரு சிலர் கூறுகிறார்கள் தேசிய மக்கள் சக்தியின் இந்த எழுச்சி ஒரு வகையான பகைமையின் வெளிப்பாடு என்று. ஏனைய கட்சிகள் மீதான பகைமை. அத்துடன் விரக்தியே இதற்கான காரணமென கூறுகிறார்கள். அது ஆரம்ப காலகட்டமாக அமையலாம். ஏனைய இயக்கங்களிலிருந்து பிரிந்து செல்ல, விலகிச் செல்ல விரக்தி நிலை காரணமாக அமையக்கூடும். ஆனால் இன்று தேசிய மக்கள் சக்தியைச் சுற்றி குழுமியிருக்கும் மக்கள் விரக்தி அல்லது பகைமை காரணமாகவன்றி எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்பு காரணமாகவே மக்கள் எம்மைச் சுற்றி குழுமியிருக்கிறார்கள். நீங்கள் பாருங்கள் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை பிரார்த்திக்கின்ற மக்களின் முகங்களில் தெரிகின்ற எதிர்பார்ப்பினை. எதிர்காலம் பற்றிய கனவு அவர்களுடைய முகங்களில் தெரிகின்றது. அதனாலேயே இலட்சக்கணக்கான மக்கள் எம்மைச் சுற்றி குழுமியிருக்கிறார்கள்.
நீண்ட ஒரு பயணத்திற்கான காரணம் முதலாவது சிறிய அடியெடுப்பே என்பது எங்களுக்கு தெரியும்
செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி அதற்கான முதலாவது அடியெடுப்பு வைக்கப்படும். நீண்ட ஒரு பயணத்திற்கான காரணம் முதலாவது சிறிய அடியெடுப்பே என்பது எங்களுக்கு தெரியும். அது தான் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி அடியெடுப்பு. நாங்கள் மக்களிடம் கேட்டுக்கொள்வது 21 ஆம் திகதி காலையிலேயே வாக்களிப்பு நிலையத்திற்கு செல்லுங்கள். திசை காட்டியின் முன்னால் புள்ளடியிட்டு வாக்குகளை பதிவு செய்யுங்கள். 1, 2, 3 அதைப்பற்றியெல்லாம் யோசிக்க வேண்டாம். பெயர் இருக்கிறது சின்னம் இருக்கிறது. புள்ளடியிடுங்கள் அது போதும். அவ்வளவு தான். பெறுபேறுகள் வெளிவரும்போது நாங்கள் வெற்றியடைந்திருப்போம். வெற்றிக்கு பின்னர் நாங்கள் எந்த விதமான மோதலிலும் ஈடுபடக்கூடாது. ஏனைய கட்சியைச் சோ்ந்தவர்களுக்கு ஏனைய கட்சிக்காக உழைத்தவர்களுக்கு எந்த விதத்திலும் தொந்தரவு செய்ய வேண்டாம். நாங்கள் எமது நாட்டின் அரசியல் கலாச்சாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். நாங்கள் தோ்தல் காலத்தில் அவர்களுக்கு விடயங்களை எடுத்துக்கூறுகிறோம். மாற்றமடையுமாறு வேண்டுகோள் விடுக்கிறோம். ஆனால் வேறொரு கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதற்கான அவர்களுடைய உரிமையை வாக்களிப்பதற்கான உரிமையை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஏனென்றால் அது சனநாயக ரீதியான உரிமை. எனவே எமது வெற்றிக்கு பின்னர் வரலாற்றில் இடம்பெற்றது போல் தாக்குதல், துப்பாக்கிச் சூடுகள், சீரீபீ என்றால் கறுப்பெண்ணை ஊற்றுதல், துறைமுகமென்றால் கடமைக்கு வரவிடாமை, சமுர்த்தி வெட்டுதல், இடமாற்றம் செய்வதாக அச்சுறுத்துதல் இவை எதுவுமே இடம்பெறலாகாது. ஏனென்றால் தோ்தல் வரை நாங்கள் பிரிந்திருக்கலாம். தோ்தலுக்கு பின்னர் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காக நாங்கள் அவர்கள் அனைவரையும் ஒன்றுசோ்த்துக் கொள்ளவேண்டும்.
வாகனங்கள் புடைசூழ மக்களின் பணத்தை விரயமாக்கிக் கொண்டு பயணிக்கின்ற இந்த கலாச்சாரத்தை இல்லாதொழிப்போம்.
எனவே எதிர்தரப்பினர் திட்டமிட்ட அடிப்படையிலான சதிவேளைகளில் ஈடுபட்டு மோதல்களை உருவாக்க எத்தனித்தால் நீங்கள் ஒருபோதுமே அதில் பங்கேற்க வேண்டாம். நாங்கள் பொலிஸாரிடம், முப்படையினரிடம் அவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகார எல்லைக்குள் மோதல்கள் ஏற்படுவதை தடுப்பதற்காக அவர்களின் கடமையை ஈடேற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம். எமது நாட்டு அரசியலில் மோசடி, ஊழல், விரயம் என்பவையே மையப்பொருளாக இருக்கிறது. நாங்கள் அவை ஒழிக்கப்பட்ட ஒரு கலாச்சாரத்தை இலங்கை அரசியலில் அறிமுகம் செய்வோம். அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆட்சியாளர்கள் மக்களுக்கு மேலாக இருக்கின்ற நிலைமை தான் காணப்படுகிறது. அவர்கள் சட்டத்திற்கு மேலாக இருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரும் சட்டத்திற்கு கட்டுப்படுகின்ற அரசியல் நிலைமையை நாங்கள் உருவாக்குவோம். வாகனங்கள் புடைசூழ மக்களின் பணத்தை விரயமாக்கிக் கொண்டு பயணிக்கின்ற இந்த கலாச்சாரத்தை இல்லாதொழிப்போம். பிரஜைகளுடன் சமமாக இருக்கக்கூடிய அரசியலை தேசிய மக்கள் சக்தி உருவாக்கும். இதனை நாங்கள் கட்டம் கட்டமாக சாதிப்போம். எமது நாட்டில் எந்தவொரு நேரத்திலும் எந்தவொரு இடத்திலும் இனவாதத்திற்கு, மதவாதத்திற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம். இனவாத, மதவாத முரண்பாடுகள், அவ்வாறான கூற்றுக்கள், கருத்தியல்கள் இனிமேல் இலங்கையில் நிலவ முடியாது. இலங்கையில் தேசிய ஒற்றுமை பற்றிய எதிர்பார்ப்பு மாத்திரமே நிலவ முடியும். நாங்கள் எங்கள் தோ்தல் இயக்கத்தில் அந்த முன்மாதிரியை நன்றாகவே வெளிக்காட்டியிருக்கிறோம். எங்களுடைய தோ்தல் மேடையில் இனவாத, மதவாத போராட்டக்கோஷங்களுக்கு இடமில்லை.
பிறரது கலாச்சார அடையாளங்களை எமது அரசியலுக்கு பிரயோகித்துக்கொள்வது இந்த யுகத்தின் தலைசிறந்த அரசியல் எடுத்துக்காட்டாகும்.
ஆனால் இறுதிக்கூட்டத்தில் கவலையுடனேனும் தெரிவித்துக்கொள்ள வேண்டிய விடயம் சஜித் பிரேமதாசவின் ஒட்டுமொத்த பாசறையுமே இனவாத, மதவாத முரண்பாட்டுக்கான கருத்தியலை விதைத்து வருகின்றது. நாங்கள் வந்ததும் பெரஹேராக்களை நிறுத்துவோமாம். பிக்குமார்களுக்கு தானம் கிடைக்காமல் போய்விடுமாம். தேசிய கொடியை மாற்றியமைத்தல், மதச்சார்பற்ற நாட்டை உருவாக்குதல் போன்ற மிகவும் கீழ்த்தரமான குறைகளைக் கூறத்தொடங்கினார்கள். பிக்குமார்களுக்கு தானம் கொடுக்கும்போது யு.என்.பி., ஸ்ரீலங்கா எனப் பிரிந்தா கொடுக்கிறார்கள்? மறுபுறத்தில் முஸ்லீம் மக்கள் மத்தியில்சென்று ஹஜ்ஜி, ரமழான் ஆகிய இரண்டு வைபவங்களை நடாத்த விடாமல் ஒன்றுக்கு மாத்திரம் மட்டுப்படுத்துவதாக கூறுகிறார்கள். ஐந்து தடவைகள் தொழுவதை ஒரு தடவைக்கு மட்டுப்படுத்துவதாக கூறினார்கள். ஒருபோதுமே தேர்தல் மேடைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாத இனவாத, மதவாத, பழங்குடிவாத போராட்டக் கோஷங்களை சஜித் பிரேமதாசவின் தேர்தல் இயக்கத்தில் பிரயோகி த்தார்கள். ஒருவிதத்தில் நான் வியப்படையப் போவதில்லை. சஜித் பிரேமதாசவிற்கு இந்த நாட்டின் பொருளாதாரம், சனநாயகம் உள்ளிட்ட ஆழமான எண்ணக்கருக்கள் பற்றிய கருத்து கிடையாது. அவருடைய அரசியல் சேறுபூசுதலும் பொய் கூறுவதும் தான். யானைகளின் அட்டகாசம் நிலவுகின்ற பிரதேசங்களுக்குச்சென்று யானை மந்திரம் மனனம்செய்வித்தல் மூலமாக தீர்வு பெற்றுக்கொடுப்பதாக ஆழமான நோக்கினைக்கொண்ட ஒருவர் கூறுவாரா? எமது நாடு முகங்கொடுத்துள்ள ஆழமான தோற்றுவாய்கள், அவை வளர்ந்தவிதம், தீர்வுகளைக் காணுதல் பற்றிய எந்தவிதமான கருத்தும் கிடையாது. பிறரது கலாச்சார அடையாளங்களை எமது அரசியலுக்கு பிரயோகித்துக்கொள்வது இந்த யுகத்தின் தலைசிறந்த அரசியல் எடுத்துக்காட்டாகும். தேசிய மக்கள் சக்தியே அதனைக் பெற்றுக்கொடுத்தது என்பதையிட்டு மகிழ்ச்சி அடைகிறோம். நாங்கள் வடக்கிற்கு சென்று இந்த கதையை எவ்வாறு கூறுகின்றோமோ அதேபோல்தான் கிழக்கிற்கும் போய் கூறுகிறோம். தெற்கிற்கும் அதைத்தான் கூறுகிறோம். தேசிய மக்கள் சக்தியால் மாத்திரமே அவ்வாறு கூறமுடியும். நாங்கள் அதற்காக மகிழ்ச்சியடைகிறோம். ஆரம்பத்தில் எமக்கு தெற்கில் மாத்திரம்தான் வெற்றிகிடைக்குமென்ற ஐயப்பாடு நிலவியது. தெற்கில் மாத்திரம் பெறுகின்ற வெற்றி எமது எதிர்கால அரசியல் இலக்குகளுக்கு போதுமானதாக அமையமாட்டாது. அண்மையில் நாங்கள் கிழக்கிலங்கையில் பல நகரங்களில் கூட்டங்களை நடாத்தினோம். அந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் இதனையொத்த வகையில் எமக்கு செவிசாய்க்க வந்திருந்தார்கள். யாழ்ப்பாணம் சென்று பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், வங்கி உத்தியோகத்தர்களை உள்ளிட்ட தொழில்வாண்மையாளர்களை நாங்கள் சந்தித்தோம். பெருந்தொகையான வடக்கு மக்கள் தேசிய மக்கள் சக்திமீது விருப்பம்கொண்டவர்களாக இருப்பதாக அவர்கள் கூறினார்கள். வடக்கை பிரதிநிதித்துவம் செய்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் தபால்மூல வாக்களிப்பபு எமக்கு எப்படி எனக் கேட்டேன். ஆரம்பத்தில் நூற்றுக்கு 10 சதவீதமாக அமையுமென நினைத்தாலும் இப்போது அது நூற்றுக்கு 40 வீதத்தை விஞ்சிசென்றுவிட்டதாக அனுமானிப்பதாகக் கூறினார்.
கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, வீடமைப்பு, உணவு என்பவை ஓர் அரசாங்கத்தால் கைவிட முடியாத பொறுப்பாகும்.
குறுகிய காலத்திற்காக உயிர்வாழ்வதில் சிரமங்களை எதிர்நோக்குகின்ற மக்களுக்கு ரூபா 10,000 இல் இருந்து ரூபா 17,500 வரையான கொடுப்பனவினை செலுத்துவோம். ஆசியாவில் மிகவுயர்ந்த மின் கட்டணம் எமது நாட்டிலேயே அறவிடப்படுகின்றது. உணவு, சுகாதாரம், கல்வி ஆகியவற்றுக்கு முழுமையாகவே வரிவிலக்கு அளிப்போம். பொருளாதாரம் பற்றிய ஆழமான மாற்றங்களை ஏற்படுத்த முன்னராக மக்களுக்கான இந்த நலன்புரி பணிகளைச்செய்வோம். கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, வீடமைப்பு, உணவு என்பவை ஓர் அரசாங்கத்தால் கைவிட முடியாத பொறுப்பாகும். குறுகிய காலத்தில் பயணிகள் போக்குவரத்தில் நூற்றுக்கு 70 வீதத்தை பொதுப்போக்குவரத்தில் அடக்குவது எமது நோக்கமாகும். ஆரோக்கியமான வாழ்க்கைக்காக சிறந்த சுகாதாரசேவையை வழங்கவது எமது நோக்கமாகும்.
நெருக்கடியின் சிருஷ்டிகர்த்தா ரணில் விக்கிரமசிங்க ஆவார்
அடுத்த 21 ஆந் திகதி வெறுமனே ஆட்சியாளர்களை மாற்றியமைப்பது மாத்திரம் இடம்பெறப் போவதில்லை. பலநூற்றாண்டு காலமாக நாங்கள் கண்ட கனவினை ஈடேற்றுவதே எமது நோக்கமாகும். இதைவிட சிறந்த நாட்டை உருவாக்குகின்ற யுகப் புரட்சியையே நாங்கள் செய்யப்போகிறோம். உற்பத்திக்கு உயிர்கொடுக்கக்கூடிய அனைத்து இடங்களையும் இனங்கண்டு மீளவும் உயிர்கொடுத்து மறுமலர்ச்சியை ஏற்படுத்துவோம். அதற்காக கமக்காரன், மீனவன், தொழிலாளி, இளைஞன் மாத்திரமன்றி அரச ஊழியர்களைப்போன்றே பொலீஸாரை உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் தத்தமது துறைகளில் இலக்ககளைக் கொண்டவர்களாக இயங்குவார்கள். அடிமட்டத்திற்கே விழுந்த நாட்டை கட்டியெழுப்புவதையே நாங்கள் செய்வோம். அந்த பயணத்தின்போது தேசிய மக்கள் சக்தி அதிகாரத்திற்கு வந்தால் எரிவாயு இல்லாமல் போய்விடும், எரிபொருள் இல்லாமல் போய்விடும் என ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார். அவர் என்ன எரிவாயுப் படிவுகளின் உரிமையாளரா? உண்மையை எடுத்துக்கொண்டால் இந்த எல்லா வரிசைகளினதும் மூலகர்த்தா ரணில் விக்கிரமசிங்க ஆவார். அப்பாவி கோட்டாபய தலையைக் கொடுத்தார். உண்மை அதுதான். 2022 ஏப்பிறல் மாதத்தில் கடனைச்செலுத்த முடியாமல் ஆப்பு வைத்தவர் ரணில்தான். அதற்கான காரணம் சர்வதேச இறையாண்மை முறிகள் மூலமாக பெறப்பட்ட கடன்களை மீளச்செலுத்த முடியாமல் போனமையாகும். மின்சாரத்தை பிற்பிக்க எரிபொருள் கொண்டுவர பணம் இல்லாமல் போயிற்று. நெருக்கடியின் சிருஷ்டிகர்த்தா ரணில் விக்கிரமசிங்க ஆவார். மக்களுக்கு எஅத்தியாவசிய பண்டங்கள் இடையறாமலும், தரமிக்கவையாகவும், தட்டுப்பாடின்றியும் வழங்குவதற்காகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறுவப்படுகின்றது. நாட்டில் டொலர் தட்டுப்பாட்டிளை உருவாக்கிய ரணில் விக்கிரமசிங்க இன்று கூறுகிறார் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் ஒரு டொலர் ரூபா 400.00 ஆக மாறுமென்று. ஆனால் அந்த நிலைமையை உருவாக்கியவர்கள் ரணில் விக்கிரமசிங்கவே. சேனைகளும் வயல்வெளிகளும் பாழடைந்தன. கங்குங் கீரை, வெங்காயம், பயறு, உளுந்து, கவ்பி, குரக்கன் , முட்டை, விதையினங்கள், மருந்துவகைகள் எல்லாமே வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டமையே ரணில் விக்கிரமசிங்க கடைப்பிடித்த பொருளாதாரக் கொள்கையாகும். எல்லாவற்றையும் சீரழித்து பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை மாத்திரமே டொலர்களை ஈட்டுவதற்கான ஒரே வழிவகையாக மாற்றிக்கொண்டார். பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைப்பதை டொலர் ஊற்றாக மாற்றிக்கொண்டார். டொலர் தட்டுப்பாடு தோன்றுகையில் இருப்பவற்றை விற்று டொலர்களை கடனாகப் பெற்றார். பொருளாதாரம் அவ்வாறுதான் வீழ்ச்சியடைந்தது.
பலநூற்றாண்டு காலமாக கைநழுவிய வெற்றியைப் பெற்றுக்கொள்ள கைதளராமல் ஒன்றுசேருமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த நிலைமையை திசைதிருப்பி டொலர் வெளியில் பாய்ந்துசெல்வதை தடுத்து டொலர் உள்ளே பாய்ந்துவருகின்ற நிலைமையை வளர்த்துக்கொள்கின்ற வழிமுறைகளை அமுலாக்கும். 1977 இல் பாராளுமன்றத்திற்கு வந்து எந்த நாட்டை ஒரு சப்பலாக மாற்றிக்கொண்டு இற்றைவரை பல்வேறு பதவிகளை வகித்து இன்னமும் பற்றிப்பிடித்துக்கொண்டு இருக்கிறார். மகிந்த ராஜபக்ஷாக்கள் பாராளுமன்றத்திற்கு வந்து ஐந்து வருடங்களுக்கு மேலாகின்றது. அவரும் நாட்டை ஒரு சப்பலாகவே பாவித்து வருகிறார். பழங்குடிடவாத, தோல்விகண்ட நாடாக மாற்றிய ஆட்சியாளர்களிடமிருந்டது 21 ஆந் திகதி விடுவித்துக்கொள்வோம். கோட்டாபய நிர்க்கதியுற்றவராக இந்த நாட்டை நிர்க்கதி நிலைக்கு ஆளாக்கினார். 69 இலட்சம் மக்களே வெட்கித் தலைகுனிந்தார்கள். 2015 இல் ரணில் – மைத்திரி ஹைபிரிட் அரசாங்கத்தை அமைத்துக்கொள்ள இலட்சக்கணக்கில் வாக்குகளை அளித்தவர்களும் நிர்க்கதி நிலையை அடைந்தார்கள். இந்த நிலைமைகள் அனைத்தையும் மாற்றியமைத்திட 2024 செப்டெம்பர் மாதம் 21 அந் திகதி வாக்குகளை அளித்ததாக பல தசாப்தங்களுக்குப் பின்னரேனும் பெருமிதமாகக் கூறக்கூடியவகையில் இந்த நாட்டை மாற்றியமைத்திவோம். பலநூற்றாண்டு காலமாக கைநழுவிய வெற்றியைப் பெற்றுக்கொள்ள கைதளராமல் ஒன்றுசேருமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.