தமது வாழ்க்கைக்கு, வேலைத்தலத்திற்கு புதிய ஆரம்பத்தைப் பெற்றுக்கொள்வதற்காக உலகம் பூராவிலுமுள்ள இந்துக்களான தமிழ் மக்களுடன் ஒன்றுசேர்ந்து இலங்கைவாழ் தமிழ் மக்களால் கொண்டாடப்படுகின்ற தைப்பொங்கல் தினம் (15) இன்றைய நாளாகும்.
புது வருடமொன்றின் தொடக்கம் புதிய எதிர்பார்ப்பின் தொடக்கமென்ற வகையிலேயே கலாசார வாழ்க்கையுடன் தொடர்புபடுகின்றது. அதைப்போலவே அது இதுவரை நிலவிய பழக்கவழக்கங்கள், உளப்பாங்குகளை மேலும் சாதகமானதாக அமைத்துக்கொள்ளல் பற்றிய, வெற்றிகொள்ள இயலாமல்போன சவால்களை வென்றெடுத்தல் பற்றிய எதிர்பார்ப்புகள் புதுவடிவம் பெறுகின்ற தருணமாகும். முந்திய 75 வருடகால பேரிடர்களின் மற்றுமொரு நீடிப்பாக அமைய இடமளியாமல் புதிய வருடத்தை வெற்றிகரமான வருடமாக அமைத்துக்கொள்வதற்காக அர்ப்பணிப்புடனும் ஊக்கத்துடனும் அதில் தடையேற்படுத்துகின்ற சவால்களை வெற்றிகொள்ள போராட வேண்டி உள்ளது.
புதிய வருடம் புதிய எதிர்பார்ப்புகளையும் புதிய வாய்ப்புகளையும் எமக்கு எடுத்துவந்துள்ளது. பிறந்த தைப்பொங்கல் தினம் மேற்படி புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவும் புதிய பாதையில் பயணிக்கவும் இலங்கைவாழ் இந்து அடியார்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் தருகின்ற தினமாக அமைய நல்வாழ்த்து தெரிவிக்கிறோம்.
அநுர குமார திசாநாயக்க
தலைவர்
தேசிய மக்கள் சக்தி
2024.01.15