Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

“கோப் குழுத் தவிசாளரின் போலியான சிங்கத்தோல் கழன்றது…  உண்மையான ஹந்துன்னெத்திகளை திசைகாட்டியால் மாத்திரமே உருவாக்கிட முடியும்…” -தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனெவி-

2023.11.18 – தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்புப் பேரணி – நுகேகொட

இந்த மாநாட்டின் உட்பொருள் இன்றேல் வழங்குகின்ற மிகவும் குறுகிய செய்தியாக அமைவது “ரணில் முடிந்துவிட்டார்” என்பதாகும். எனினும் இலங்கை முடிவடையவில்லை என்பதாகும். தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த நாங்கள் தொடங்கியது மாத்திரமே. அனைவரையும் படுகுழிக்குள் இழுத்துப்போட்ட மிருகத்தனமான பொருளாதாரக் கொலைஞர்களின் பட்டியல் நாட்டின் மீயுயர் நீதிமன்றத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.  அப்படியானால் எமது வாழ்க்கையை இந்த அனர்த்தத்திற்கு இலக்காக்கியமைக்கு பொறுப்புக்கூறவேண்டியவர்கள் பற்றி எமக்கு எந்தவிதமான சந்தேகமும் நிலவ முடியாது. சிறியதொரு குறைபாடு லிஸ்ற் இன்னமும் நிறைவுசெய்யப்படவில்லை. ரணில் விக்கிரமசிங்காக்கள், அர்ஜுன மகேந்திரன்களின் பெயர்களையும் சேர்த்து அந்த லிஸ்ற்றை நிறைவுசெய்ய தேசிய மக்கள் சக்தி தயார்.

இவர்கள் நாசமாக்கி இருப்பது இரண்டரைகோடி ஒட்டுமொத்த இலங்கை மக்களின் கனவுகளையாகும்: வாழ்க்கையையாகும்.  அவர்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நீதிமன்றம் கூறுகிறது. முறைப்படி பார்த்தால் இத்தரணமாகும்போது இரண்டரைகோடி மக்கள் மனுக்களை தாக்கல் செய்திருக்கவேண்டும். எங்கள் ஒவ்வொருவரினதும் வாழ்க்கை பாரிய அழிவுக்கு தள்ளப்பட்டு விட்டது. நாங்கள் நிச்சயமாக இரண்டரை கோடி மக்கள் சக்தியாக முகாமைத்துவம் செய்வோம். அதற்காகத்தான் தூரநோக்குடைய, தேசிய தலைமையைக்கொண்ட, தேசிய கொள்கைத் திரட்சியைக்கொண்ட தேசிய மக்கள் சக்தி தயாராக இருக்கின்றது.  

கலை, கலாசாரம், கல்வித்துறையை உள்ளிட்ட எமது நாட்டின் அனைத்து மக்கள் நிரல்களிலுள்ள புத்திஜீவிகள்,  பேராசிரியர்கள், மருத்துவர்கள், பொறியிலாளர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்களை உள்ளிட்ட அனைவரும் இந்த தருணத்தை விளங்கிக்கொள்ள வேண்டியுள்ளது. நீங்கள் மனிதர்கள் என்றவகையில் எடுக்ககூடிய உன்னதமானதும் சரியானதும் அரசியல் கணப்பொழுதே தற்போது உருவாகி இருக்கின்றது. இதுவரை இந்த நாட்டின் அரசியல் பெருநிலம், இந்த மக்கள் பிரமிட்டின் உச்சியும் அடித்தளமும் இவ்விதமாக தயாரிக்கப்படவில்லை. அழுத்தம் எங்கள் வாழ்க்கையின் உச்சிக்கே வந்துவிட்டது. இந்த அழுத்தத்தை உருவாக்கிய அரசியல் அதிகாரக் கூட்டமைப்புகள் பலதிசைகளில் பரந்துள்ளன. தேசிய மக்கள் சக்தி மக்களை ஒழுங்கமையச் செய்விக்கின்றது.  அதைவிட சிறப்பான தருணம் உருவாகப் போவதில்லை. சிசேரியன் அறுவைசிகிச்சைக்காக வைத்தியசாலையில் தனது மனைவியை அனுமதித்த கணவனுக்கு  அந்த மனைவியின் அறுவைசிகிச்சைக்காக அவசியமான நூலை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லவேண்டிய நிலையேற்பட்டுள்ளது.  எமது பல்கலைக்கழகங்கள் சீரழிந்துவிட்டன. எனது பல்கலைக்கழகத்தில் 650 பேர் இருக்கவேண்டிய கல்விசாரா  பணியாட்டொகுதியில் தற்போது இருப்பவர்களின் எண்ணிக்கை 300 பேர் மாத்திரமே. ரணில் விக்கிரமசிங்க டெம்பரியொன்றை இழுத்துச்சென்றாலும் பல்கலைக்கழகங்களை அவ்விதமாக ஓட்டிச்செல்ல முடியாது. எமது பிரவாகத்தில் சேர்ந்துகொண்ட புத்திஜீவிகளிடமும் கலைஞர்களிடமும் எம்முடன் ஒன்றிணையுமாறும் கூருணர்வுகொண்டவர்களாகவும் மாறுங்கள் என மிகவும் வினயமாக கேட்டுக்கொள்கிறோம்.

மின்சாரம் இல்லாத கிராமத்தில் விளக்கு வெளிச்சத்தில் உயர்தரம் கற்றவன் நான். இன்று இலங்கையின் ஒரு பல்கலைக்கழக பேராசிரியர்.  2023 ஆம் ஆண்டில்  பத்து மாதங்களாக நான்பெற்ற சம்பளத்தில் மாதத்திற்கு எழுபதாயிரம் வீதம் வரியாக மாத்திரம் ஏழு இலட்சத்தை வெட்டியுள்ளார்கள். இந்த ஏழு இலட்சம் என்னிடம் இருந்திருப்பின் எனது விருப்பத்தின்படி பிள்ளைகளுக்கு புலமைப்பரிசிலொன்றை வழங்க, நிர்க்கதியுற்ற புற்றுநோயாளிகளுக்கு உதவக்கூடியதாக இருந்திருக்கும். எனினும் அந்த பணத்தில் ஒரு ரூபாவையேனும் இந்த கல்வர்கள் கும்பலை, கொள்ளையடித்த நாட்டை, பொருளாதாரக் கொலைஞர்கள் என நீதிமன்றத்தினால்  பெயர்குறித்த நாட்டை ஆட்சிசெய்கின்ற அரசாங்கத்திற்கு கொடுக்க நான் விரும்பமாட்டேன்.

தேசிய ஒற்றுமைக்காக, பெண்கள்,  பிள்ளைகளுக்காக முழு வாழ்நாளையும் அர்ப்பணித்த நான் அறிந்த தலைசிறந்த பெண் கலைஞர் ஒருவர் வெகுசனஊடக கலைஞரொருவர் தற்போது புற்றுநோயுடன் போராடிக்கொண்டு இருக்கிறார். இறந்த நோயாளர்களிடம் எஞ்சியிருந்த மருந்துகளிலிருந்தே அவருக்கு அவசியமான ஊசி மருந்து கடந்த இரண்டு மூன்று மாதங்களாக தேடிக்கொள்ளப்பட்டது. ஒரு மாதம் அவருக்கு காலாவதியான ஊசி மருந்தினையே ஏற்ற நேரிட்டது.  75 வருடங்களாக உருவாக்கிய இந்த நாடு இந்த நிலைமையை அடைவதை நீங்கள் விரும்புகிறீர்களா?  சபரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் பேராசிரியர் கூறினைக்  கோருவதற்காக கொழும்புக்கு வந்து உயிரியல் பயின்று மூன்று “ஏ” சித்திகளைப்பெற்ற பிள்ளைகள்மீது இந்த அரசாங்கம் தாக்குதல் நடாத்தியது.   அவர்களை கைது செய்தது.  ஏறக்குறைய 35 பிள்ளைகள் அடுத்த நாளன்று பிணை அனுமதிக்கப்பட்டு என்னுடன் பேசினார்கள். அவர்கள் பெலிஹுல்ஓயாவிற்குப் போகவேண்டும். பெலிஹுல் ஓயாவிற்கான அவர்களின் பஸ் கட்டணம் 30,000/-. பேராசிரியர் கூறு ஒன்றினை கோர வந்தவர்கள் எந்தவிதமான தவறினையும்  புரியாத பிள்ளைகளாவர்.  இந்த வரலாற்றினை நாங்கள் மாற்றியமைத்திட வேண்டும்.

அண்மையில் ரணில் விக்கிரமசிங்கவின் கோப் குழுவினால் ராஜபக்ஷாக்களின் காலத்தின் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருவதை நீங்கள் கண்டிருப்பீர்கள். கோப் குழுவின் தலைவர்களின் போலியான சிங்கத்தோல் கழன்று குள்ளநரி வெளிப்பட்டது. அண்மையில் கோப் குழுவிற்கு சுனில் ஹந்துன்னெத்தி தோழர் கொடுத்த எடுத்துக்காட்டினைக் கடைப்பிடிப்பதை மாத்திரமே செய்யவேண்டி ஏற்பட்டது.   தலைசிறந்த அரசியல் நோக்கினைக்கொண்ட மனிதனொருவன் பிறரது கட்டமைப்பிற்குள்ளே தற்காலிகமாகவேனும் வேலைசெய்யவேண்டி கிடைத்த தருணமென்றில் அந்த ஒட்டுமொத்த கட்டமைப்பு மீதும் தாக்கமேற்படுத்தத்தக்கவகையில் சுற்றுச்சூழலை மாற்றியமைத்திடுவான். உண்மையான ஒரு ஹந்துன்னெத்தியை உருவாக்க எந்தவொரு காலத்திலும்  இந்த அரசாங்கங்களால் முடியாது.  இத்தகைய ஓர் இயக்கத்தினால் மாத்திரமே அதனை சாதிக்கமுடியும்.  ஊழல்பேர்வழிகள் ஒருபோதுமே ஊழல் புரிந்தவர்களைத் தண்டிக்கமாட்டார்கள். ராஜபக்ஷாக்களின் வழக்குகளை ரணில் தற்காலிகமாக விசாரிக்கட்டும். இந்த இருசாராரினதும் வழக்குகளை தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்றின்கீழ் குறுகிய எதிர்காலத்தில் நாங்கள்  விசாரிப்போம்.  இந்த இனிமையான கனவுக்கான பலமும் விவேகமும் உங்கள் அனைவருக்கும் கிடைக்கட்டுமாக! புத்திஜீவிகளே, மக்களே தேசிய மக்கள் சக்தியின் உன்னதமான வேலைத்திட்டத்துடன் ஒருங்கிணையுங்கள். இந்த நாட்டின் வரலாற்றினைப் புதுப்பிப்போம்.