-Colombo, January 02, 2024-
‘நாட்டுக்கு கூறாமல் மறைக்கின்ற விற்றுத் தீர்ப்பதன் உண்மைநிலை’- கருத்தரங்கு , கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரி
இந்த வருடம் எமது நாடடு மக்களுக்கு மிகவும் தீர்வுக்கட்டமான வருடமாகும். இதுவரை முன்னெடுத்துவந்த பயணத்தை துரிதப்படுத்தி எமது நாட்டின் தேசிய சொத்துக்களை அழிவின் விளிம்பிற்கு எடுத்துச்செல்ல அரசாங்கம் தயாராகி வருகின்றது. சனவரி மாதத்திற்குள் மின்சார சபையை துண்டாடி விற்பனை செய்வதற்கு அவசியமான சட்டம், காப்புறுதிக்கூட்டுத்தாபனம், ரெலிகொம் நிறுவனம் போன்ற நிறுவனங்களை விற்பனை செய்வதற்கான செயற்பாங்கினை மேற்கொள்ள உள்ளது. அதற்கு எதிராகத் தோன்றுகின்ற மக்கள் ஆர்ப்பாட்டங்களை அடக்கியாள்வதற்கான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், சமூக வலைத்தளங்களை அடக்கியாள்வதற்கான சட்டம் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட உள்ளது. இந்த நாட்டை மீளத்திருப்ப முடியாத விதத்திலான பாரிய பல செயற்பாடுகளை வேகமாக மேற்கொள்ள அரசாங்கம் தயாராகி வருவதோடு ஓர் அரசியல் இயக்கமென்றவகையில் நாங்கள் எமது நாட்டில் ஒரு புத்தெழுச்சியை ஏற்படுத்தி உற்பத்திப் பொருளாதாரமொன்றை கட்டியெழுப்பி மக்களை அதனோடு இணைத்துக்கொண்டு அவர்களுக்கு நன்மைகளை வழங்குகின்ற புதிய பொருளாதாரப் பயணமொன்றில் பிரவேசிப்பதற்கான கருத்தியலை சமூகமயப்படுத்தி வருகிறோம். குற்றச்செயல்களைத் தடுப்பதற்காக சட்டத்தின் ஆட்சியை எவ்வாறு நிலைநாட்டுவது என நாங்கள் திட்டங்களை வகுத்து வருகிறோம். எமது மக்களையும் நாட்டையும் அழிவில் தள்ளிவிட்ட பாரியளவிலான மோசடிகள், ஊழல்கள் மலிந்த அரசியல் கலாசாரத்தை மாற்றியமைத்து புதிய பயணத்தில் பிரவேசிப்பதற்கான உரையாடல்களை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இலங்கை வரலாற்றின் அரசியல் கட்டமைப்பின் கடுமையான மோதல் எதிர்வரும் ஏழுஎட்டு மாதங்களுக்குள் உருவாகும். Do or Die பாணியிலான போராட்டமாகும்.
இந்த போராட்டத்தில் நாங்கள் தோல்வியுற்றால் எமது நாடும் மக்களும் அவமதிப்பினதும் நிர்க்கதிநிலைமையினதும் அடிமட்டத்திற்கே வீழ்ந்துவிடும். நாங்கள் இந்த போராட்டத்தில் வெற்றிபெற்றால் புதிய எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகள் சகிதம் இந்த நாட்டை புதிய திசையில் வழிப்படுத்த முடியும். அதனால் வளர்ந்துவருகின்ற இந்த அரசியல் சாதாரண அரசியலைப் போன்றதன்று. இலங்கை வரலாற்றின் தீர்வுக்கட்டமான பிரிகையிடலின்போது தேசிய மக்கள் சக்தியாகிய நாங்கள் மக்களுடன் எத்தகைய பொது உடன்பாட்டுக்கு வரவேண்டுமென விரிவாக உரையாடி வருகிறோம். உழைக்கும் மக்கள், தொழிலதிபர்கள், கைத்தொழில் உரிமையாளர்கள், மதத் தலைவர்கள், புலமைசாலிகள் என்றவகையிலான நாமனைவரும் இந்த நாட்டை மீட்டெடுப்பதற்கான பொது இணக்கப்பாட்டுக்கு வருவதற்கான உரையாடலில் பிரவேசித்துள்ளோம். அதேவேளையில் ஏனைய பாசறைகள் குப்பைகளை சேகரித்துக் கொண்டிருக்கின்றன. தீர்வுக்கட்டமான பெருவெற்றியுடன் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவோம் எனும் திடசங்கற்பத்துடனேயே நாங்கள் இந்த வருடத்தில் காலடி எடுத்து வைத்துள்ளோம். அதனால் எம்மனைவருக்கும் ஓய்வுநேரமின்றி மாற்றத்திற்காக பாடுபடவேண்டியுள்ளது. நிலவுகின்ற நெருக்கடியின் காரணமாகவே அவர்கள் விற்றுத் தீர்ப்பதை மேற்கொண்டு வருகிறார்கள். வந்துள்ள பொருளாதார பயணத்தினால் உருவாக்கப்பட்ட நெருக்கடியின் விளைவுதான் விற்றுத் தீர்த்தல். மறுபுறத்தில் விற்றுத் தீர்ப்பதும் இந்த பொருளாதார நெருக்கடிக்கு காரணமாகும். இந்த விற்றுத் தீர்த்தல் ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. இதுவரை கடைப்பிடித்த பொருளாதாரச் செயற்பாங்கின் பெறுபேறாகும்.
இதுவரை வற் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்த பல துறைகள் இந்த நெருக்கடியினாலேயே வற் வரியில் உள்ளடக்கப்பட்டுள்ளன. எரிபொருள் விலையேற்றம் ஒட்டுமொத்த பொருளாதாரம் மீதும் தாக்கமேற்படுத்தி உள்ளமையால் இதுவரை வற் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தது. எண்ணெய் விலையேற்றம் எண்ணெய் பாவனையாளர்களுக்கு மாத்திரமன்றி ஒட்டுமொத்த பொருளாதார தேகத்திற்கும் தாக்கமேற்படுத்துகின்ற கூருணர்வுமிக்க விடயமாகும். பாடசாலை உபகரணங்களின் விலைஅதிகரிப்பு காரணமாக பிள்ளைகளின் கல்வித்துறைமீது கூருணர்வுமிக்க பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது. சுகாதார உபகரணங்கள், ஔடத உற்பத்தி மூலப்பொருட்கள், சுகாதார சேவை வற் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தமைக்கான காரணம் அவை மக்கள் வாழ்க்கையை நெருக்கமாக பாதிப்பதாலாகும். எனினும் நெருக்கடியினால் இந்த அனைத்து துறைகளுக்கும் புதிதாக வற் வரி விதிக்கப்பட்டுள்ளது. அரச செலவினங்கள், கடன் செலுத்துதல் மற்றும் வட்டித் தவணைகளை செலுத்துதல் என்பவற்றுக்காக இந்த வருடத்தில் பதினோராயிரத்து ஐநூற்று பதினான்கு பில்லியன் செலவாகின்றது. எனினும் வற் வரியை உள்ளிட்ட இந்த அனைத்துவிதமான பாதிப்புகளையும் மக்கள் மீது சுமத்தி பெற்றுக்கொள்ளக்கூடிய மொத்த வருமானம் நாலாயிரத்து நூற்றி அறுபத்தி நான்கு பில்லியன் ரூபா மாத்திரமேயாகும். கடன் தவணை செலுத்துவதை ஒருபுறம் வைத்தாலும் ஏழாயிரத்து எண்ணூற்றி இருபத்தாறு பில்லியன் இந்த வருடத்தின் செலவுக்காக தேவைப்படுகின்றது. 3000 பில்லியனுக்கு மேற்பட்ட தொகையைக் கடனாகப் பெறவேண்டி நேரிடுகின்றது. இந்த நெருக்கடி நிலவுவது தரவுகளுக்குள்ளே மாத்திரமன்றி சமூக வாழ்க்கைக்குள்ளேயும் நிலவுகின்றது. சென்மதி நிலுவைப் பற்றாக்குறை, வரவுசெலவுப் பற்றாக்குறை போன்ற பாரிய பொருளியல் பதங்களில் மறைந்துள்ள நெருக்கடி சமூக வாழ்க்கைக்கு தாக்கமேற்படுத்தி வருகின்றது. அண்மையில் வெளியிட்ட உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களுக்கு அமைவாக பாடசாலைப் பிள்ளைகளில் 57% புத்தகங்களை உள்ளிட்ட கல்விச் சாதனங்களை கொள்வனவுசெய்வதை நிறுத்தியோ அல்லது குறைத்தோ இருக்கிறார்கள். மேலும் 19% ஐ அண்மித்தோர் பிரத்தியேக போதனா வகுப்புகளுக்குச் செல்வதை நிறுத்திவிட்டார்கள். பொருளாதார நெருக்கடியினால் சமூகம்மீது எற்படுத்துகின்ற தாக்கம் பிள்ளைகளின் கல்விச் சீரழிவுவரை பயணித்துள்ளது.
அதைப்போலவே குடிமக்களின் வாழ்க்கை பாதுகாப்பற்ற நிலைமைக்கு வீழ்ந்து முறைப்படி சிகிச்சை பெறுவதை தவிர்த்து வருகிறார்கள். பாரியளவில் தொழில்களை இழக்கச் செய்வித்தல், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்களின் சீரழிவு போன்ற துறைகளில் நெருக்கடி தாக்கமேற்படுத்தி உள்ளது. பராட்டே சட்டத்திற்கிணங்க சிறிய மற்றும் நடுத்தர அளவிலான 1183 தொழில்முயற்சியாளர்களின் ஆதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த தொழில்முயற்சிகள் பல்வேறு சிரமங்களின் மத்தியில் சிலவேளைகளில் பல பரம்பரையினரின் அர்ப்பணிப்பினால் கட்டியெழுப்பப்பட்டவையாகும். சரியான பொருளாதார நோக்கு, அரச இடையீட்டின் கீழ் இந்த தொழில்முயற்சிகள் கட்டியெழுப்பப்பட்டிருக்கவில்லை. அவர்களின் தனிப்பட்ட அர்ப்பணிப்பு மற்றும் பெருமுயற்சியின் அடிப்படையில் அவை கட்டியெழுப்பப்பட்டிருந்தன. இந்த நெருக்கடியினால் மக்கள் வாழ்க்கை சீரழிதல் இத்தகைய பல்வேறு துறைகள்மீது தாக்கமேற்படுத்தி இருக்கின்றது. விற்றுத் தீர்த்தல் மிகச்சிறந்த பொருளாதார உபாயமார்க்கத் திட்டமென அரசாங்கம் கூறுகின்றது. உண்மை அதுவல்ல. விற்றுத் தீர்த்தலும் இதே பொருளாதார நெருக்கடியின் பெறுபேறாகும். ஔடதங்களை கொண்டுவருகையில், வரி அறவிடுகையில் திருடுவதைப்போன்றே விற்பனைசெய்கின்ற வேளையிலும் ஊழல் மோசடிகளின் சொர்க்கபுரியாக மாறியுள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக விற்றுத் தீர்ப்பதைப்போலவே கள்ளத்தனமான கொடுக்கல் வாங்கல்களுக்காகவும் அவர்கள் விற்றுத்தீர்ப்பதை பயன்படுத்தி வருகிறார்கள். விற்பனை செய்வதன் மறைவில் இருக்கின்ற உண்மையான தேவை இதுவாகும்.
வரவுசெலவுப் பற்றாக்குறையினால், வெளிநாட்டுக் கடன்களை செலுத்தமுடியாததால், தொழில்வாண்மையாளர்களை உள்ளிட்ட குழுவினர் நாட்டைவிட்டு வெளியேறி வருவதன் மூலமாக பொருளாதார நெருக்கடியின் ஆழமே வெளிக்காட்டப்படுகின்றது. பொருளாதார நெருக்கடியின் ஆழம் காட்டப்படுவது தரவுகளுக்குள்ளே மாத்திரமல்ல. ரணில் விக்கிரமசிங்கவிற்கு பொருளாதார நெருக்கடி என்பது தரவுகள் மாத்திரமே என்பதால் அவருடைய தீர்வு கணக்குகளை இணக்கஞ் செய்வதாகும். எனினும் தேசிய மக்கள் சக்திக்கு இந்த நெருக்கடி என்பது தரவுகளில் காட்டப்படுவதற்குப் பதிலாக சமூக மக்கள் வாழ்க்கையின் வேதனைகள் பற்றி அனுபவவாயிலாக கூறப்படுவதாகும். தரவுகளுக்குள்ளே போன்று மக்களின் வாழ்க்கைக்குள்ளேயும் நாங்கள் நெருக்கடியைக் காண்கிறோம். ரணில் விக்கிரமசிங்க மக்கள் வாழ்க்கையில் நெருக்கடியைக் காண்பாராயின் ஔடதங்களுக்கு பாடசாலை உபகரணங்களுக்கு வரி விதிக்கமாட்டார். வற் வரி மூலமாக மக்கள் வாழ்க்கைக்கு ஏற்பட்டுள்ள மரணம்விளைவிக்கின்ற தன்மையை நாங்கள் எடுத்துக்கூற வேண்டியதில்லை. அவர்கள் அதனை அனுபவித்து வருகிறார்கள். நாங்கள் நெருக்கடியைக் காண்பது மாத்திரமல்ல அதற்கான தீர்வினைக் காணவும் பிரயத்தனம் செய்கின்ற இயக்கமாவோம்.
விற்றுத் தீர்ப்பதற்கான காரணங் காட்டுகின்ற ஐயாமார்கள் எமக்கு ஒருசில விடயங்களைக் கூறிவருகிறார்கள். மக்களிடமிருந்து சேகரித்துக்கொள்கின்ற வரி வருமானத்தை நட்டத்தில் இயங்குகின்ற அரச நிறுவனங்களை பராமரிக்க செலவிடுவதில்லையாயின் சுகாதார வசதிகள், கல்வி வசதிகளை வழங்க ஈடுபடுத்த முடியுமெனக் கூறுகிறார்கள். இதனைப்போன்ற கதைகளைக்கூறுவது இன்று மாத்திரமல்ல. யுத்தம் நிலவிய காலத்திலும் இவ்வாறான கதைகளைக் கூறினார்கள். யுத்தத்தின்போது 24 நாட்கள் பல்குழல் தோட்டாக்களுக்காக உறப்படுகின்ற செலவுகளை நிறுத்தினால் இரண்டு வைத்தியசாலைகளை நிர்மாணிக்க முடியுமென மைத்திரிபால சிறிசேன கூறினார். எனினும் அவ்வாறு நேர்ந்ததா? நட்டமடைகின்ற நிறுவனங்கள் பற்றியும் இன்று கூறுவது அதே கதையைத்தான். யுத்தம் முற்றுப்பெற்றதும் செல்வம் நிறையுமெனக் கூறிய அவர்கள் அரச நிறுவனங்களை விற்றுத் தீர்ப்பதன் மூலமாக செல்வம் செழிக்குமென இன்று கூறுகிறார்கள். எனினும் அது பொய்யானதாகும். எமது நாட்டின் அரச பெருந்தோட்டங்களை 21 தனியார் கம்பெனிகளுக்கு விற்பனை செய்தார்கள். அதில் 18 கம்பெனிகள் நட்டத்தில் இயங்குகின்றன: வங்கிகளுக்கு பொல்லு வைத்துவிட்டன. அதைப்போலவே வேலைசெய்கின்ற ஊழியர்களுக்கு 1000 ரூபா சம்பளம் செலுத்த முடியாவிட்டால் அந்த தனியார்மயமாக்கலில் உள்ள பிரயோசனம் என்ன? அதைப்போலவே இன்று எமது நாட்டின் தேயிலைத் தொழிற்றுறை தாழ்நில சிற்றுடைமையாளர்களின் கைகளிலேயே தங்கியிருக்கின்றது. விற்றுத் தீர்ப்பதன் மூலமாக வெற்றி கிடைக்குமாயின் ஏன் இவ்வாறு நடைபெறுகின்றது?
ஏழு நிதிக் கம்பெனிகள், 41 கைத்தொழில்கள், 21 பெருந்தோட்டங்கள், எனைய 23 நிறுவனங்கள் என்றவகையில் இன்றளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. விற்பதற்கு உள்ள எண்ணிக்கையைப் பார்க்கிலும் விற்பனை செய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகமானதாகும். விற்பனை செய்யப்பட்ட சிலோன் ஒக்சிஜன், தோற்பொருள் கூட்டுத்தாபனம், லக்ஸ்பிறே நிறுவனம், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமானதாக இருந்த நைலொன் கம்பெனி, மத்தேகொட நெசவாலை, எண்ணெய் மற்றும் கொழுப்புக் கூட்டுத்தாபனம், மகாவலி மெரீன் கம்பெனி, ஹிங்குரான சீனி, கடதாசிக் கூட்டுத்தாபனம் போன்ற பல நிறுவனங்கள் விற்கப்பட்டன. இன்று அவற்றில் எதாவது இருக்கின்றதா?
திறைசேரிக்கு மிகையான செலவுச்சுமையை ஏற்க நேரிட்டுள்ள நிறுவனங்களை விற்றதாகவே அவர்கள் கூறினார்கள். எனினும் அதுவும் பொய்க் கதையாகும். அதேவேளையில் கடந்த வருடத்தில் பன்னிரண்டாயிரம் மில்லியன் இலாபமீட்டிய காப்புறுதிக் கூட்டுத்தாபனம், தேசிய பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானதாக அமைகின்ற ரெலிகொம் நிறுவனம் 10,000 மில்லியன் ரூபா இலாபமீட்டியது. இந்த நிறுவனங்களையும் விற்பனைக்காக போட்டுள்ளார்கள். போட்டித்தன்மைமிக்கதெனக் கூறுகின்ற இரண்டு கேஸ் கம்பெனிகளில் அரசாங்கத்திற்குச் சொந்தமான கம்பெனி சனவரி 01 ஆந் திகதி தொடக்கம் 685 ரூபாவினால் விலையை அதிகரித்தது. தனியார் கம்பெனி 755 ரூபாவினால் அதிகரித்தது. 2023 செத்தெம்பர் வரை அரசாங்க கேஸ் கம்பெனி 5639 மில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளது. அரசாங்கத்தற்கு கேஸ் கம்பெனி இருந்திராவிட்டால் என்ன நடந்திருக்கும்? தற்போது அரசாங்கம் இரண்டு பிரதான வங்கிகளையும் விற்பனைசெய்ய தயாராகி வருகின்றது. இலங்கை வங்கிக்கும் மக்கள் வங்கிக்கும் இலங்கை பூராவிலும் ஏறக்குறைய 300 கிளைகள் இருக்கின்றன. அவை மத்தியில் ஏறக்குறைய 100 கிளைகள் நட்டத்தில் இயங்குகின்றன. வங்கிச் சேவையை வழங்குவதற்கான பொறுப்பு அரசாங்கத்தைச் சார்ந்ததாகும். தனியார்துறை செய்வதோ ஈடுபடுத்துகின்ற பணத்திற்கு இலாபத்தை பிறப்பித்துக் கொள்வதாகும். நகரத்தில் வங்கித் தொழிற்பாட்டினால் கிடைக்கின்ற இலாபம் கிராமங்களில் கிடைப்பதில்லை. கிராந்துருகோட்டே இலங்கை வங்கிக் கிளை நட்டமடைகின்றது. எனினும் அந்தப் பிரதேச மக்களுக்கு வங்கிச் சேவைகளை வழங்கவேண்டும். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் பதவியா போகஸ்சந்தியின் இலங்கை வங்கிக்கிளை ஒரு கொள்கலனுக்குள்ளேயே தொடங்கப்பட்டது. குடிமக்களுக்கு வங்கிச் சேவைகளை வழங்க வேண்டுமென்பதற்காகவே அவ்வாறு செய்தார்கள். தனியார் துறையின் வங்கிக்கிளை அதற்குப் பின்னரே வருகின்றது. அரசாங்க கணக்குகளைப் பேணிவருகின்ற இலங்கை வங்கியினதும் மக்கள் வங்கியினதும் இரண்டு கணக்குகளின் மேலதிகப்பற்று 7000 பில்லியன் ரூபாவாக அமைகின்றது. திறைசேரியில் பணமும் இல்லாத நிலையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு எண்ணெய் வழங்குவதில் இரண்டு அரச வங்கிகள் இடையீடு செய்தன. சுகாதார அமைச்சிற்கும் அப்படித்தான். எம்மைப்போன்ற சிறிய பொருளாதாரத்தின் அரச பிரிவில் இந்த வங்கி முறைமையை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். 2022 இலங்கை வங்கியின் வரி செலுத்திய பின்னர் இலாபம் 32 பில்லியன் ரூபாவாகும். அரசாங்கத்திற்கு 13 பில்லியன் ரூபா வரி செலுத்தியுள்ளது. மக்கள் வங்கி 14 பில்லியன் ரூபா இலாபமீட்டியுள்ளது. 08 பில்லியன் ரூபா வரி செலுத்தி உள்ளது.
அதைப்போலவே இலங்கை வங்கியின் செயலற்ற கடன் 325 பில்லியன் ரூபா மற்றும் மக்கள் வங்கியில் 300 பில்லியன் ரூபா என்றவகையில் இரண்டு வங்கிகளிலும் 625 பில்லியன் ரூபா நிலவுகின்றது. 62,500 கோடி ரூபா செயலற்ற கடனாக நிலவுவதோடு அதில் அரைவாசியை அறவிட்டுக்கொண்டால் இந்த இரண்டு வங்கிகளையும் பலப்படுத்த முடியும். தயா கமகேவின் கம்பெனி மக்கள் வங்கிக்கு மாத்திரம் 160 கோடி ரூபா செயலற்ற கடன் செலுத்தவேண்டி உள்ளது இவர் சம்பத் வங்கிக்கும் மூன்று பில்லியன் பொல்லு வைத்துள்ளார். மென்டிஸ் சாராயக் கம்பெனி மக்கள் வங்கிக்கு 350 கோடி ரூபாவுக்கு பொல்லு வைத்துள்ளது. அரசாங்கத்தின் அன்பர்களுக்கு இவ்விதமாக கடன்களை வழங்கியதன் மூலமாக அந்த செயலற்ற கடன் அளவு சேர்ந்துள்ளது. அதைப்போலவே தனியார்மயமாக்கலின் மறைவில் தவறான வெளியுறவுக் கொள்கையொன்று நிலவுகின்றது. இந்தியாவுக்கு ஓரளவு முதலீட்டுப்பகுதி வரும்போது சீனாவுக்கும் கொடுக்கவேண்டும். கொழும்புத் துறைமுகத்தின் இறங்குதுறைகளை விற்றது ஓர் உதாரணமாகும். செழிப்பான 28,000 எக்கர் காணி கால்நடை வளங்கள் சபையிடம் இருக்கின்றது. இந்த நிறுவனங்களை சீரழித்து “அமூல்” கம்பெனிக்கு விற்கத் தயாராகி வருகிறார்கள். இவ்விதமாக நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்தால் நாங்கள் அதிகாரத்தைப் பெறுவதில் பிரயோசனமில்லைதானே என ஒருசிலர் கேள்வி கேட்கிறார்கள். அதனால் இந்த விற்பனை செயற்பாங்கினை தடுத்துநிறுத்த போராடுவதைப்போலவே அதற்கு இணையாக தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியொன்றை அமைத்திடவும் போராட வேண்டியுள்ளது. இந்த நாட்டைக் கட்டியெழுப்புவது எளிதானல்ல என்பது உண்மையாகும். மிகவும் அடிமட்டத்திற்கே வீழ்ந்துள்ள படுகுழிக்குள் இருக்கின்ற ஒரு நாடே எமக்கு கிடைக்கும். இதிலிருந்து வசதியான வாழ்க்கை மூலமாக எம்மால் கரைசேர முடியாது. எமது நாட்டின் ஒவ்வொரு குடிமகனிடமும் புத்தெழுச்சியொன்றின் அவசியப்பாடு நிலவுகின்றது. நாட்டைக் கட்டியெழுப்புகின்ற திடசங்கற்பத்துடனான புதிய தேசிய எழுச்சியொன்று அவசியமாகும்.
எமக்கு இருப்பது தேசிய புத்தெழுச்சியால் நிர்மாணிக்கப்பட்ட ஒரு நாடு அல்ல. இந்தியாவில் பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக நேரு, மகாத்மா காந்தி, பட்டேல், சுபாஷ் சந்திரபோஸ் முன்னெடுத்துவந்த ஒருங்கிணைந்த தேசிய போராட்டமொன்று இருந்தது. இந்தியாவைக் கட்டியெழுப்புகின்ற எழுச்சியாக அமைந்தது அந்த தேசிய இயக்கமாகும். இரண்டாம் உலகமகா யுத்தத்தின்போது குண்டுத்தாக்குதலால் அழிக்கப்பட்ட ஜப்பானை கட்டியெழுப்பவதற்கான உறுதியான திடசங்கற்பம் அவர்களிடம் இருந்தது. சிலகாலம் ஜப்பானிய பேரரசின் காலனித்துவமாக மாறி அரச பரம்பரையினால் பாதிக்கப்பட்ட சீனா புதிய தேசிய உணர்வுடன் போராடியது. இன்று சீனா உலகின் மிகப்பிரமாண்டமான பொருளாதாரப் பலத்தைக் கைப்பற்றியுள்ளது. பிரித்தானியாவிற்கு எதிராக ஐக்கிய அமெரிக்காவில் தேசிய போராட்டமொன்று நிலவியது. வியட்நாமில் ஐக்கிய அமெரிக்காவிற்கு எதிரான தேசிய போராட்டமொன்று நிலவியது. ரஷ்யாவில் சார் ஆட்சிக்கு எதிராக போராட்டமொன்று நிலவியது. உலகம் பூராவிலும் மக்களுக்கு புதிய தேசிய எழுச்சியை ஏற்படுத்துகின்ற சுதந்திரப் போரட்டங்கள் இருந்தன. அந்த தேசிய எழுச்சியால் நாடுகள் அபிவிருத்தியில் முன்நோக்கி நகர்ந்தன. எனினும் எமது நாட்டில் 1848 இல் இருந்து 1948 வரை வெள்ளைக்காரன் ஆட்சிசெய்’த காலத்தில் எந்தவிதமாக எழுச்சியும் இடம்பெறவில்லை. அதனால் எமக்கு தேசிய புத்துணர்ச்சி இருக்கவில்லை. இந்தியாவில் நேரு இருந்தவேளையில் எமக்கு ஜுனியஸ் றிச்சர்ட் இருந்தார். இந்தியாவில் பட்டேல் இருக்கையில் எமக்கு சொலமன் டயஸ் இருந்தார். எமக்கு அத்தகைய அடிமைத்தனமான தலைவர்களே இருந்தார்கள்.
கமக்காரர், மீனவர், மருத்துவர், பொறியியலாளர் தம்மைப்பற்றி மாத்திரமே சிந்தித்து செயலாற்றுவதற்குப் பதிலாக புதிய தேசிய எழுச்சியுடன் செயலாற்றவேண்டி உள்ளது. 2024 என்பது தேசிய உணர்வுகொண்ட மக்கள் அதற்கு ஏற்புடைய அரசியல் தலைமைத்துவம்கொண்ட தேசிய மக்கள் சக்தியின் கையில் சுக்கானைக் கொடுக்கின்ற வருடமாகும். இந்த வருடத்தில் தேசிய உணர்வுடன் புத்தெழுச்சிபெற்று நாமனைவரும் கூட்டு முயற்சியுடன் செயலாற்றுவோமென கேட்டுக்கொள்கிறோம்.
“சட்டவிரோதமான அரசாங்கம் மனிதத்திற்கு எதிரான குற்றச்செயல்களைப் புரிந்துகொண்டிருக்கின்றது…“
–தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பேராசிரியர் அனில் ஜயந்த–
பொருளாதார, சமூக ரீதியாக மிகவும் முக்கியமான பல வெளிப்படுத்தல்களை செய்வதற்காகவே இந்த கருத்தரங்கு நடைபெறுகின்றது. இது வெறுமனே தகவல்களை வெளிப்படுத்துவதைவிட முன்நோக்கிச் செல்கின்ற ஒன்றாகும். பொதுமக்களுக்குச் சொந்தமான சொத்துக்களை தெரிவுசெய்த ஆட்கள் குழுமமொன்றுக்கு வழங்குதல் வெறுமனே ஒரு பொருளாதாரக் கொடுக்கல் வாங்கலாக அமையமாட்டாது. அதனாலேயே அந்த கதையின் உண்மையை வெளிப்படுத்திக்கொண்டு நாங்கள் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் என்னவென்பது பற்றி உரையாட வேண்டும். பலவிதமான தொழில்நுட்ப வரைவிலக்கணங்களின் ஊடாக தனியார்மயமாக்கல் எனும் பொருளாதார செயற்பாங்கினை முற்றாகவே தனியார் துறையிடம் கையளிக்க வேண்டுமென்ற அபிப்பிராயத்தை ஏற்படுத்துகிறார்கள். உண்மையிலேயே தனியார் துறையிடம் பொருளாதாரத்தின் பாரிய செயற்பொறுப்பு நிலவுகின்றதென்பது உண்மையாகும். அந்த உண்மைக்குப் பின்னால் மறைந்திருந்து பொதுமக்களுக்குச் சொந்தமான பாரிய சொத்துக்களை சொச்சத்தொகைக்கு விற்றுத் தீர்க்கின்ற தீத்தொழிலில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. விற்றுத் தீர்ப்பதற்காக அவர்கள் அரசதுறை வினைத்திறனற்றது எனவும் தனியார்துறை வினைத்திறனுடையதெனவும் கூறிவருகிறார்கள். குறிப்பாக அரசதுறை அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளமையால் வினைத்திறமையின் சிக்கல்கள் நிலவக்கூடும். மறுபுறத்தில் தனியார்துறையினரிம் கையளித்தால் போட்டித்தன்மை அதிகரித்து புதிய பிறப்பாக்கங்கள் உருவாகி சமூகத்திற்கு சாதகமான பெறுபேறுகள் கிடைப்பதாகவும் கூறப்படுகின்றது.
மறுபுறத்தில் எடுத்துக்கொண்டால் பொதுமக்களின் பலத்துடன் அரசாங்கமொன்றை அமைத்துக்கொண்டு பொருளாதார, அரசியல் அலுவல்கள் நெறிப்படுத்தப்படுவதோடு ஒருசில தனித்துவமான பிரிவுகளை மிகுந்த பொறுப்புடன் அரச சொத்தாண்மையுடன் நெறிப்படுத்துதல் வேண்டும். இத்தகைய பிரிவுகளின் குறிக்கோள் இலாபத்தை விஞ்சிச்சென்ற நோக்கங்களாகும். பொருளாதாரத்தை சரியான திசைக்கு கொண்டுவருதல், பொறுளாதாரத்தை உறுநிலைப்படுத்துதல் மற்றும் பொருளாதாரச் செயற்பாங்கிற்கு அத்தியாவசியமான உட்டகட்டமைப்பு வசதிகளை வழங்குதல் போன்ற அலுவல்கள் இலாபத்தை நோக்கமாகக் கொள்ளாமல் அரச துறையால் பேணிவரப்படல் வேண்டும். இற்றைவரை மேற்கொண்ட விற்பனைகள் மற்றும் மீள அரசாங்கத்திற்கு கையகப்படுத்திக் கொள்ளலானது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துகின்ற நோக்கத்துடன் செய்யப்படவில்லை: நிலவுகின்ற அரசாங்கத்திற்கு எதாவதொரு தொகையைப் பெற்றுக்கொண்டு கொள்ளைக்கார வளையத்திற்கு அதிகமான அநுகூலங்களைப் பெற்றுக்கொடுப்பதற்காகும். தேசியமயமாக்கல் அல்லது தனியார்மயமாக்கல் ஆகிய இரண்டுமே அந்த குறுகிய நோக்கத்துடனேயே நடைமுறைப்படுத்தப்பட்டன. நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடியில் இருந்து மக்களை மீட்டெடுப்பதன்றி அதிகாரத்தில் இருக்கின்ற குழு தொடர்ந்தும் அதிகாரத்தைப் பேணிவருவது எவ்வாறு எனும் கேள்விக்கான பதிலைக் கண்டுபிடிப்பதற்காக ஐ.எம்.எஃப். பணிப்புரைக்கிணங்க அவர்கள் செயலாற்றி வருகிறார்கள். ஒரே பதில் ஐ.எம்.எஃப். மாத்திரமே என்பதை மக்கள்மயப்படுத்த முயற்சி செய்கிறார்கள். வேறு மாற்றுவழிகள் கிடையாது, வேறுவிதமாக செயலாற்ற முடியாது எனும் கருத்தியலை உருவாக்குவதே சனநாயக விரோதமான செயலாகும். அவர்கள் மூடநம்பிக்கையை சமூகமயப்படுத்தி மறைத்துவைத்துள்ள பல பிரதான விடயங்கள் ஐ.எம்.எஃப். அறிக்கையில் இருக்கின்றன.
வருமானக் கட்டுப்பாட்டினையும் செலவு முகாமைத்துவத்தையும் மேற்கொள்ளவேண்டுமென ஐ.எம்.எஃப். பணிப்புரை விடுத்துள்ளது. பொருளாதாரம் பயணிக்கின்ற திசை, மக்களின் வாழ்க்கைத்தரம் சீரழிதல், தொழில்முயற்சிகள் சீர்குலைதல் போன்ற விடயங்கள் அவர்களுக்கு ஏற்புடையதல்ல. விவேகமின்றி வற் வரி போன்ற வரிகள் அதனாலேயே விதிக்கப்படுகின்றன. நிலவுகின்ற ஊழல்மிக்க பொருளாதார முறைமைக்குள்ளே அவர்களின் மதிப்பீடுசெய்யப்பட்ட இலக்குகளைக்கூட நெருங்க முடியாது. நேரில் வரிகளை நூற்றுக்கு நூறு வீதம்வரை அதிகரித்து வருமானத்தை உயர்த்திக்கொள்வதற்காக அவர்கள் மேற்கொள்கின்ற முயற்சி வெற்றியளிக்கமாட்டாது. மறுபுறத்தில் செலவு முகாமைத்துவத்துடன் தொடர்புடையதாக வினைதிறனின்மையையும் விரயத்தையும் குறைத்துக்கொள்ள அவர்கள் முயற்சி செய்வதில்லை. வருமானத்தை அதிகரித்துக் கொள்ளல் மற்றும் செலவுகளைக் குறைத்துக்கொள்ளல் தொடர்பான தந்திரோபாயங்கள் இரண்டில் ஒன்றையேனும் இந்த அரசாங்கத்தால் இலகுவாக சாதித்துக்கொள்ள முடிவதில்லை. ஐ.எம்.எஃப். மூன்று பிரதான அளவுகோல்களை அரசாங்கத்திற்கு கொடுத்துள்ளது. முதலாவதாக 2025 ஆண்டளவில் முதனிலைக் கணக்கின் மீதி 2.3 நேர்க்கணியமாக வளர்த்துக்கொள்ள வேண்டும். இரண்டாவதாக 2032 இற்கு முன்னர் அரசாங்கத்தின் ஒட்டுமொத்த கடன்சுமையை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமென்றவகையில் 95% குறைத்துக்கொள்ளவும் வருடாந்த கடனெடுத்தல் அவசியப்பாட்டினை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக 14% வீதம் வரை 2030 ஆம் ஆண்டளவில் குறைத்துக்கொள்ளவும் வேண்டும்.
அரசாங்கத்தின் வருமானம் மற்றும் செலவு முகாமைத்துவத்தினால் இந்த இலக்கினை நிறைவுசெய்ய முடியாது. அதனால் கட்டாயமாக எமது கடல், நிலம் உள்ளிட்ட எதனையும் விற்பனைசெய்ய முயற்சிசெய்கிறார்கள். இந்த விற்பனையினால் இரண்டு நோக்கங்களை ஈடேற்றிக்கொள்கிறார்கள். ஐ.எம்.எஃப். இன் மூன்று அளவுகோல்களை நிறைவுசெய்கின்ற அதேவேளையில் டொலர்களுக்காக விற்பனை செய்வதன் மூலமாக அரசாங்கத்தின் செலவுகளுக்கான பணத்தை தேடிக்கொள்வதைப்போலவே வெளிநாட்டு ஒதுக்கங்களை கட்டியெழுப்பவும் தூண்டப்படுகின்றது. நெருக்கடி நிலவுகின்றவேளையில் ஒரு நாட்டுக்கு முதலீடுகள் வரமாட்டாது. வருவதாயின் வருவது அரசியல் இடையீடுகள் சம்பந்தமான ஆர்வம் காட்டுகின்ற வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மாத்திரமே. விற்பனை செய்யப்போகின்ற அரசாங்க நிறுவனங்கள் சம்பந்தமான ஓர் உதாரணமாக ஸ்ரீலங்கன் எயார் லயின் கம்பெனியை எடுத்துக்கொண்டால் 2023 இல் 40 பில்லியன் ரூபா தொழிற்பாட்டு இலாபம் ஈட்டப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் முகாமைத்துவத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற தவறான தீர்மானங்கள் மற்றும் அரசியல் தீர்மானங்கள் காரணமாகவே நட்டமடைகின்றது. இந்த நிறுவனம் ஊழியர்களின் பிரச்சினைகள் காரணமாக நட்டமடைவதில்லை. ஊழியர் குழாத்தினை எடுத்துக்கொண்டால் இந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்தச் செலவில் 6% ஆகும். பலவருடங்களில் இந்த நிறுவனத்தின் நட்டம் 612 பில்லியன் ரூபாவாக சேர்ந்துள்ளது. முதலாவது தருணத்தில் இருந்தே முகாமைத்துவம் அது சம்பந்தமாக தீர்மானங்களை மேற்கொண்டிருப்பின் இவ்வாறான நிலைமைக்கு வீழ்ந்திருக்கமாட்டாது. மறைந்துள்ள கதைக்குப் பின்னால் இது போன்ற பல விடயங்கள் இருக்கின்றன.
அதன் மறைவில் இருப்பது பொருளாதாரகக் குற்றச்செயல்களாகும். அதேவேளையில் மேலும் பல அயோக்கியத்தனமான வேலைகளைச்செய்ய தயாராகி வருகிறார்கள். கணக்கியல் வித்தைகள் மூலமாக 102 பில்லியனை திறைசேரியிலிருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு முதலீடு செய்வதற்கான தயார்நிலை காணப்படுகின்றது. பொதுப்பணத்தை தாம்விரும்பியவாறு ஈடுபடுத்துகின்ற இவ்வாறான குற்றம்நிறைந்த பல செயல்கள் மலிந்து காணப்படுகின்றன. இந்த உதாரணத்தை மாத்திரம் எடுத்துக்கொண்டால் பொருளாதாரம் வீழ்ந்துள்ள படுகுழியில் இருந்து மீட்டெடுத்து மக்களின்வாழ்க்கையை உயர் மட்டத்திற்கு மாற்றமாட்டார்கள் என்பது உறுதியாகின்றது. அநாவசியமான தனியார்மயமாக்கலை மேற்கொள்வதன் மூலமாக பாரிய சீர்குலைவுகள் ஏற்பட்டுள்ளமை உலகளாவிய உதாரணங்கள் மூலமாக தெளிவாகின்றது. குறிப்பாக வலுச்சக்தி, நிதி போன்ற துறைகளில் அரச பிரிவின் இடையீடு மிகவும் முக்கியமானது. ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் மக்களின் வாழ்க்கைக்கும் இந்த துறையானது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. ஐ.எம்.எஃப். இல் இறுகிய கிறீஸ் அவர்கள் வசமிருந்த புகையிரதம், துறைமுகம் போன்ற நிறுவனங்களை விற்று பதில்தேட முயற்சி செய்தது. எனினும் பாரிய மக்கள் எதிர்ப்பு அந்நாடுகளில் தோன்றியுள்ளது. இந்த ஊழல்மிக்க குழுக்கள் எப்படியாவது விற்பதற்காக மேற்கொள்கின்ற முயற்சிகளை எப்படியாவது தோற்கடித்திடவே நாங்கள் முயற்சிசெய்ய வேண்டும். சட்டரீதியான அல்லது நெறிமுறைசார்ந்த எந்தவிதத்திலும் அதிகாரத்தில் இருக்க உரிமையற்ற அரசாங்கங்கள் மனித்திற்கு எதிரான குற்றச்செயல்களை புரிந்து வருகின்றன. இந்த அனைத்துச் செயற்பாடுகளினதும் இறுதிமுடிவாக அமைந்துள்ளது அவர்கள் மனிதத்திற்கு எதிரான குற்றச்செயல்களைப் புரிவதாகும். இந்த நிலைமையிலிருந்து விடுபடுவதற்கான கூட்டு நடவடிக்கையை நாமனைவரும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.