Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

“ஊர்மக்களின் பிரச்சினைகளை எளிமையாக தீர்த்துக்கொள்வதற்கான வழிமுறை இருப்பின் அதனை ஆராய்ந்து ஊர் மக்களுக்கு நியாயமான, பொருத்தமான வழிமுறையொன்றை நாங்கள் அமைத்துக் கொடுப்போம்…”-சட்டத்தரணி சுனில் வட்டகல-

(தேசிய மக்கள் சக்தி சட்டத்தரணிகளின் ஊடக சந்திப்பு – 2024.05.10)

pressnppl

இந்த தருணம் தேசிய மக்கள் சக்திக்கும் அதன் தலைமைத்துவத்திற்கும் கணிசமான அளவிலான அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற தருணமாகும். ரணிலை முதன்மையாகக்கொண்ட ஐக்கிய தேசிய கட்சித் தலைவர்கள், மொட்டு மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி தரப்பினர்கள் ஒன்றுசேர்ந்து எமது தலைவர்கள் பிரயோகிக்கின்ற வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்திற்குப் பதிலாக திரிபான அர்த்தத்தை முன்வைத்து தொங்கிக்கொண்டு இருக்கிறார்கள். கடந்த தினமொன்றில் தேசிய மக்கள் சக்தியின் தோழர் லால் காந்த மே தினத்தில் கூறிய கூற்றினை தொடர்புபடுத்திக்கொண்டு சேறு பூசுகின்ற தாக்குதல் நடாத்தப்பட்டு வருகின்றது. ஒட்டுமொத்த கதையினதும் அர்த்தத்திற்குப் பதிலாக பிரித்தடுத்த ஒருசில பகுதிகளை மேற்கோள் காட்டி உண்மையான அர்த்தத்தை மூடிமறைக்க முயற்சிசெய்து வருகிறார்கள். தோழர் லால் காந்த “ஊருக்கு நீதித்துறை தத்துவத்தை வழங்குவோம். நீதி நிருவாகத்திற்கான உரிமையை ஊருக்கு வழங்குவோம்” எனக் கூறியதாக குற்றச்சாட்டுசார்ந்த அபிப்பிராயமொன்றை முன்வைக்கிறார்கள். மேடையில் ஆற்றிய ஒட்டுமொத்த உரையின் கருப்பொருளை முன்வைக்காமல் எதிரான அரசியல் குழுக்கள் திரிபுநிலையுற்ற அபிப்பிராயமொன்றை சமூகமயப்படுத்த விளைகிறார்கள்.

தேசிய மக்கள் சக்தி என்றவகையில் நிலவுகின்ற இந்த சட்டக்கட்டமைப்பு மாற்றமடைய வேண்டுமென நாங்கள் நினைக்கிறோம். அதுமாத்திரமல்ல எமது ஆட்சியின்கீழ் புதிய அரசியலமைப்பு ஒன்றினையும் வகுப்போம். நாங்கள் அதிகாரத்திற்கு வந்ததும் உடனடியாக அரசியலமைப்பு ஒன்றினை முன்வைப்பது சிரமமானதாகும். அதனால் நிலவுகின்ற அரசியலமைப்பிற்குள்ளே சிறிது தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அவ்வாறு பயணிக்கையில் இந்த அரசியலமைப்பில் மக்களுக்கு சாதகமான வழிமுறை இருப்பின் அதனை தேசிய மக்கள் சக்தி கடைப்பிடிக்கும். ஊர்மக்களின் பி்ரச்சினைகளை எளிமையாக தீர்த்துக்கொள்கின்ற வழிமுறையொன்று இருப்பின் அந்த வழிமுறையை ஆராய்ந்து ஊர் மக்களுக்கு நியாயமான வழிமுறையொன்றை நாங்கள் அமைத்திடுவோம். அது இடம்பெற வேண்டும். தோழர் லால் காந்தவின் உரையின் ஒட்டுமொத்த அர்த்தத்தை எடுத்துக்கொண்டால் அது மிகவும் நன்றாக தெளிவாகின்றது.

அரசியலமைப்பின் 3 வது அத்தியாயத்தில் மக்களின் இறைமை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பில் காட்டப்பட்டுள்ளவாறு ” இலங்கை குடியரசின் இறைமைத் தத்துவம் மக்களுக்குரியதாகும். இறைமைத் தத்துவத்தை பாராதீனப்படுத்த முடியாது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இறைமைத் தத்துவம் சனநாயக நாடுகளில் ஆட்சியின் வசதிகருதி நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை, நீதித்துறை என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. “நீதிமன்றம்” அரசியலமைப்பின் மூன்றாவது பிரிவுக்கிணங்க அமுலாக்கப்படுகின்ற நிறுவனமாகும். மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்காக ஆட்சியின் வசதிகருதி பல பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதியுர் நிலையில் உயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், மேல் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், நீதவான் நீதிமன்றம் என கீழ்நோக்கி முறைமையொன்று வியாபித்துச் செல்லக்கூடியவகையில் அமைந்துள்ளது. நீதிவான் நீதிமன்றத்திற்குக் கீழாக அமுலாகின்ற நீதிமன்றத்திற்கு உதவி புரிகின்ற ஒருசில கூறுகள் நிலவுகின்றன.

உதாரணமாக கமநல சேவைகள் சட்டம் நீதவான் நீதிமன்றத்தில் அமுலாக்கப்படுவதில்லை. கமக்காரனின் “வாய்க்கால்” பிரச்சினை கிராமத்திலுள்ள கமக்காரர் சங்கத்தினாலேயே தீர்க்கப்படுகின்றது. அதற்கான அதிகாரம் ஊரிலுள்ள கமக்காரர் சங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறை சம்பந்தமான சிக்கல் தோன்றியவிடத்து அறுதியிடுகின்ற வாக்கெடுப்பினை நடாத்தி அந்த சிக்கலைத் தீர்த்துக்கொள்ள கூட்டுறவுத்துறை சட்டத்திற்குள்ளே ஏற்பாடுகள் நிலவுகின்றன. அதைப்போலவே மத்தியஸ்த சபைகள் ஊடாகவும் சிக்கலுக்குத் தீர்வுகாண்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தினால் மத்தியஸ்த சபையின் சான்றிதழ் கோரப்படுகின்றது. ஒருசில சிக்கல்கள் நீதிமன்றத்தைப் போன்றே பொலீஸாலும் மத்தியஸ்த சபைக்கு ஆற்றுப்படுத்தப்படுகின்றது. அதன்போது மத்தியஸ்த சபைக்கு” தீர்க்கப்படாமைக்கான சான்றிதழை” வழங்குவதற்கான அதிகாரம் இருக்கின்றது. “நடுத்தீர்ப்பு” என்பதும் அத்தகைய ஒரு செயற்பாடாகும். கீழ் மட்டத்தில் உள்ள பொலீஸின் தரத்தை மேலும் அதிகரித்துக் கொள்வதற்கான இயலுமை நிலவுமாயின் அதனை எவருமே விரும்பாதிருக்கப் போவதில்லை. அதோ அந்த கருத்தில் எதேனுமொரு கட்டமைப்பினை உருவாக்கி அதற்கு அதிகாரத்தை வழங்குவதையே தோழர் லால் காந்த குறிப்பிட்டார். தேசிய மக்கள் சக்தியின் அங்கத்தவர்களுக்கு அதிகாரத்தை வழங்க மேற்கொள்ளப்படுகின்ற முயற்சி என எதிரிகள் அதற்கு பொருள்கொடுக்க தாழ்ந்த மட்டத்திலான முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.

தேசிய மக்கள் சக்தி எந்த இடத்தில் இருக்கின்றதென அனைவரும் அறிவார்கள். எதிரிகள் மிகவும் பதற்றமடைந்துள்ளார்கள். அதனாலேயே எமது வார்த்தைகளை திரிபுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். எதிரியின் இந்த குறைகூறல்களை நாங்கள் புறந்தள்ளுகிறோம். அதைப்போலவே தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் என்றவகையில் எமது ஆட்சியின்கீழ் முறையான சட்டமுறைமையொன்றை எவ்வாறு கொண்டுவருவது எனும் விடயம் பற்றி ஆராய்ந்து வருகின்றது. சனாதிபதி தேர்தல் அண்மிக்கையில் எமது கொள்கை வெளியீட்டினை முன்வைப்போம் அதனை வாசித்துப் பார்க்குமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்.

pressnppl

“”உண்மையின் பயணத்தை தொடர தயாரகும்வேளையில், பொய் உலகத்தைச் சுற்றி மூன்று தடவைகள் அலைந்துவந்து வீட்டுக்கும் வந்துவிட்டது” என ஒரு கூற்று இருக்கின்றது.”
-சட்டத்தரணி ஹர்ஷண நானாயக்கார-

ஒரு கூற்று இருக்கின்றது “உண்மையின் பயணத்தை தொடர தயாரகும்வேளையில், பொய் உலகத்தைச் சுற்றி மூன்று தடவைகள் அலைந்துவந்து வீட்டுக்கும் வந்துவிட்டது” என. தற்போது திசைகாட்டிக்கு எதிரான எதி்ரிகள் பொய்களை சமூகமயப்படுத்தப்படுகின்ற வேகம் அதிகரித்துள்ளது.

லால் காந்தவின் உரையை தொடக்கத்தில் இருந்தே கேட்குமாறு நான் முதலில் கூறுகிறேன். ஒட்டுமொத்த உரை 42 நிமிடங்களாகும். வகுத்த தொகுத்தமைத்த உரையின் ஒன்றரை நிமிட பகுதியையே நீங்கள் கேட்டிருப்பீர்கள். லால் காந்த முன்வைப்பது மிகவும் முன்னேற்றகரமான பிரதிநிதித்துவ சனநாயக பண்பினையாகும். அதிகாரம் என்பதால் மக்களை எவ்வாறு பலப்படுத்துவது எனும் விடயத்தையாகும். அதிகாரம் கீழ்நோக்கி பகிர்ந்து செல்வதன் கருத்து ஊரிலுள்ள ஐந்துபேர் மதகொன்றின்மீது அமர்ந்து வழக்கு விசாரிப்பதல்ல. எனினும் எதிரானவர்கள் ஊடகத்திற்கு வந்து கூற முயற்சிசெய்வது அதைத்தான். சட்டத்தின் ஆட்சியில் உள்ள பிரதான அம்சம்தான் நீதிக்கான அணுகலுக்கு இருக்கின்ற வாய்ப்பு (Access to Justice). ஆளொருவர் அரசாங்கத்திற்கோ அல்லது பொலீஸிற்கோ எதிராக தனது சட்டமுறையான உரிமையை உறுதிப்படுத்துகின்ற நிலைமையை எற்படுத்துதல். நீதியை அணுக முயற்சிசெய்கின்றபோது தோன்றுகின்ற பிரதானமான தடைதான் அதற்கான மிகையான செலவும் காலமும். அதனால் ஆட்கள் தமது உரிமைகள் மீறப்பட்டால் தீர்வு காண்பதற்காக நீதிமன்றம் செல்ல முனைவதில்லை. யாழ்ப்பாணத்தில், அம்பாந்தோட்டையில், அநுராதபுரத்தில் ஆட்கள் சுப்ரீம் கோர்ட்டுக்கு ஆஜராக கட்டாயமாக கொழும்பிற்கு வரவேண்டும். அது மிகவும் சிரமமான நிலைமையாகும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் மக்களிடம் நீதியை எடுத்துச்செல்வதற்காக எம்மால் மாகாணத்திற்கும் ஓர் சுப்ரீம் கோர்ட்டினை பெற்றுக்கொடுக்கமுடியுமா எனும் உரையாடலுக்குச் செல்லமுடியும்.

இந்த வழிமுறையை இந்த நாடு பயணித்த பாதையை மாற்றியமைத்திட வேண்டுமென்பதை தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகளாகிய நாங்கள் அறிவோம். அதன் பிரதானமான பகுதிதான் சட்டத்தின் ஆட்சி. சட்டத்திலும் நீதிமன்றங்களிலும் பலவீனங்கள் நிலவுமாயின் அவற்றை மாற்றியமைத்திட நடவடிக்கை எடுக்கவேண்டும். தேசிய மக்கள் சக்தியைச்சேர்ந்த நாங்கள் எந்தவொரு சட்டத்தையும் ஒருதலைப்பட்சமாக தீர்மானித்து அமுலாக்க எத்தனிக்கமாட்டோம். சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களுடனும் கலந்துபேசியதன் பின்னரே தீர்மானிப்போம். இந்தியாவிலும் பங்களாதேஷிலும் நீதிக்கான அணுகலை வசதிப்படுத்துவதற்காக கிராமங்களில் நீதிமன்றம் (Village Courts) இருக்கின்றது. இவற்றில் சட்டமுறையான பயிற்சியைப் பெறுகின்ற உத்தியோகத்தர்கள் ஊடாக ஊரில் இடம்பெறுகின்ற சிறியஅளவிலான குற்றச்செயல்களை தீர்த்துக்கொள்கிறார்கள். அத்தகைய நீதிவழங்குவதை கீழ்நோக்கி கொண்டுசெல்வதைத்தான் தோழர் லால் காந்த அன்று தெளிவுபடுத்தினார். அதனால் ஆகின்ற செலவு குறைவடைதல், பிரதான நீதிமன்றங்களில் வழக்குகள் குவிவதற்கான போக்கு குறைவடைதல் போன்ற சாதகமான நிலைமைகள் உருவாகும். நீதிக்கான அணுகல் என்பது இந்த நன்மைகள் மாத்திரமல்ல. மக்களை வலுவூட்டுவதற்கான சட்ட உதவிகளின் அளவினை அதிகரிக்க வேண்டியநிலை ஒருசிலவேளைகளில் இடம்பெறும். சட்டத்தின் உதவி நீதவான் நீதிமன்றத்திற்கு கட்டாயமானதல்ல. மக்களை வலுவூட்டுவதற்கு அவசியமான நிருவாகக் கட்டமைப்புகளை உருவாக்கிக்கொள்ள நாங்கள் முயற்சி செய்கிறோம். எனினும் ஐமச உள்ளிட்ட அரசியல் எதி்ரிகள் அதனை திரிபுபடுத்தி வருகிறார்கள். அதைப்போலவே நேர்காணலொன்றின்போது சட்டத்தரணிகளை நீதிமன்றத்தை அவமதித்ததாக கதையொன்றை புனைந்து வருகிறார்கள். ஒருசில சட்டத்தரணிகளின் கூற்றுகளை அவர் விமர்சித்தார். அவர்கள் அரசியல் இலாபத்திற்காக உண்மைகளை திரிபுபடுத்தி வருகிறார்கள்.

நாங்கள் ஊரில் உள்ள மீனவர் சங்கமொன்றை உதாரணமாக கொள்வோம். மீனவர்களின் சிக்கல்களை அவர்களின் மீனவர் சங்கங்கள் ஊடாக நீதிமன்றமல்லாத கட்டமைப்பு ஊடாக தீர்த்துக்கொள்ள முடியும். அது நீதிமன்ற முறைமையைவிட வித்தியாசமானது. கிராமம் வரை வியாபித்துச்சென்ற மக்களுக்கு வலுவூட்டுகின்ற நிருவாக மாதிரியொன்றே அவசியமாகின்றது. புதிய மாதிரிகள் பற்றி நாங்கள் கலந்துரையாடிக் கொண்டிருக்கிறோம். எதிர்காலத்தில் நீதி நிருவாக வழிமுறைகள் எவ்வாறானதாக அமையவேண்டுமென கலந்துரையாடிப் பார்ப்போம்.

pressnppl

“பிரதேசவாரியாக சட்டத்தை அமுலாக்குவது தவறானதெனில் முதலில் இவர்கள் மாகாண மேல்நீதிமன்றங்களை நிறுவுகையில் எதிர்த்திருக்கவேண்டும்.”
-சட்டத்தரணி ஹேமக்க சேனாநாயக்க – தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் அமைப்பின் கொழும்பு மாவட்டத் தலைவர்-

அதிகாரப் பகிர்வு எண்ணக்கருவின் ஆழமான நிலைமையையே தோழர் லால் காந்த விளக்க முற்பட்டார். இலங்கையில் அதிகாரப் பகிர்வு பற்றி நீதிமன்றம் பற்றி மாத்திரமல்ல நாங்கள் பல தசாப்தங்காளக கலந்தரையாடி வருகிறோம். தோழர் விஜேவீர வடக்கு கிழக்கில் நிலவுகின்ற சிக்கலுக்கான தீர்வு என்னவென்பது பற்றி “ஈழப் போராட்டத்திற்கான தீர்வுகள்” எனும் நூலில் விடயங்களை முன்வைத்துள்ளார். அதிகாரப் பகிர்வு பற்றி 1988 இல் இருந்தே பேசப்பட்டு வருகின்றது. அதற்கான தீர்வு என்றவகையிலேயே மாகாணசபைகள் அறிமுகஞ் செய்யப்பட்டன. நாட்டு மக்களின் இறைமைத் தத்துவம் மக்களிடமே இருக்கின்றது. அதனைப் பாராதீனப்படுத்த முடியாது. இறைமைத் தத்துவம் நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை மற்றும் நீதித்துறை ஊடாக அமுலாக்கப்படுகின்றது.

நீதிமன்றங்களில் நீதி நிருவாகத்திற்காக கழிகின்ற காலம் மற்றும் அதற்காக செலவாகின்ற நிதிசார் செலவுகள் சம்பந்தமாக தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் என்றவகையில் நாங்கள் கவனஞ்செலுத்தி இருக்கிறோம். எமது நாட்டில் பிரிகையிடல் வழக்கொன்று காணி வழக்கொன்று தொடரப்பட்டால் முழுப்பரம்பரையுமே வழக்காடவேண்டிய நிலையேற்படும். ஏன் இவ்வளவு காலம் எடுக்கின்றது? இது சம்பந்தமாக வழக்காடுகின்ற பணிகளை மிகவும் வினைத்திறனுடையதாக்குவதற்காக முன்மொழிவுகளை சமர்ப்பிக்க நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். நீதிமன்றங்களில் அலுவலக வசதிகள் கிடையாது, ஊழியர்களின் வசதிகள் பற்றிய சிக்கல் நிலவுகின்றது. சுருக்கெழுத்தாளர்களின் பிசுக்கல்மார்களின் பாரிய தட்டுப்பாடு நிலவுகின்றது. பல தசாப்தங்கள் பழமையான 1977 இல் ஆக்கப்பட்ட பிரிகையிடல் வழக்குச் சட்டங்களுடன் 2024 இலும் செயலாற்றி வருகிறோம். பிரிகையிடல் வழக்குகளில் தம்பட்டமடித்தல் இடம்பெறுகின்றது. இயந்திரங்கள் பல மாதங்களாக உடைந்துபோயுள்ளன. இதனால் பணம் செலவாகின்றமையும் காலம் விரயமாதலும் இடம்பெறுகின்றது. ஒருசில வழக்குகளும் ஒருசில சட்ட நிலைமைகளும் கொழும்பில் மாத்திரமே விசாரிக்கப்படுகின்ற நிலைமையின் காரணமாக ஆட்களுக்கு ஏற்படுகின்ற நட்டமும் காலம் விரயமாதலும் கடுமையாக அதிகரித்துள்ளது. மாகாண மேல் நீதிமன்றங்கள் நிறுவப்படமுன்னர் மாவட்ட நீதிமன்றங்களுக்கும் நீதவான் நீதிமன்றங்களுக்குமே அதிகாரம் இருந்தது. மேன்முறையீடு செய்கின்ற அதிகாரம் நீதிமன்றத்திற்கும் அதற்கு மேலாக உயர்நீதிமன்றத்திற்கும் அதிகாரம் இருந்தது. வழக்குகளிலான தாமதம் ஒருசில சந்தர்ப்பங்களில் பத்து வருடங்கள், பன்னிரண்டு வருடங்கள் வரை நீண்டுசெல்லத் தொடங்கின. இதனைக் கண்ட சட்டத்துறையைச் சேர்ந்தவர்கள் சட்டமும் நீதியும் நிலைநாட்டப்படுகின்ற முறையியல் ஊருக்கு கொண்டுசெல்லப்பட வேண்டுமென தீர்மானித்தார்கள்.

தோழர் லால் காந்த மேடையில் முன்வைத்ததது நீண்டகாலமாக இந்த நாட்டில் இடம்பெற்ற விடயத்தையாகும். பிரதேசரீதியாக வழக்காடுவது தவறானதெனில் மாகாண மேல்நீதிமன்றம் நிறுவப்படுகையிலேயே இவர்கள் எதிர்ப்பினைத் தெரிவித்திருக்க வேண்டும். நீதிமன்றமொன்றில் சட்டம் அமுலாக்கப்படுதல் தாமதிக்கின்ற அளவுக்கு நீதி நிலைநாட்டப்படுவதும் தாமதமாகின்றது. அதனால் மாகாண மேல்நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன. மாகாண மேல்நீதிமன்றங்கள் நிறுவப்பட்டமையால் வழக்கு விசாரிப்பதிலான தாமதங்கள் பாரியளவில் குறைவடைந்தன. அத்துடன் மாகாண மேல் நீதிமன்றங்களில் சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றங்கள் நிறுவப்பட்டமையால் அதிகாரமளித்தல் மேற்கொள்ளப்பட்டது. கொழும்பில் குவிந்திருந்த அதிகாரம் ஊருக்குச் செல்லத் தொடங்கியது. அதனால் மேன்முறையீட்டு விசாரணைக்காக அநுராதபுரத்தில் இருந்து வந்தவர் ஹோட்டலில் தங்கியிருந்து பலநாட்களைக் கழித்து திரும்பிச் செல்வது நின்றுவிட்டது. இதுபோன்ற செயற்பாங்கே மத்தியஸ்த சபை ஊடாகவும் இடம்பெறுகின்றது.

இந்தியாவில் பஞ்சாயத்து முறையியல் மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதனால் பிரதேசரீதியாக நீதியை நிலைநாட்டுவதற்கான மிகவும் முக்கியமான தெளிவான முறையியலுக்கு செல்லவேண்டுமென நாங்கள் நம்புகிறோம். அடிப்படை உரிமைகள் பற்றிய வழக்கினை விசாரிப்பதற்கான அதிகாரம் கொழும்பிற்கு மாத்திரமே இருக்கின்றது. இந்த அதிகாரம் மாகாணங்களுக்குச் செல்லவேண்டுமென்ற உரையாடல் நிலவிவருகின்றது. பண்டையகாலத்தில் உயர்நீதிமன்றம் பிரதேசரீதியாக செயலாற்றியது. இந்த நீதியை நிலைநாட்டுதல் பிரதேரரீதியாக பயணித்தல் ஊடாகவும் அவர்களுக்கு நன்மை விளைகின்றது. வழக்கொன்றின்போது பொலீஸ் முறைப்பாட்டினை எடுக்க வழியில்லை, திட்டமொன்றை எடுப்பதற்கான விளக்கம் கிடையாது. வழக்காடச் சென்றதும் ஆட்கள் பாரிய துன்பங்களை அனுபவிக்கிறார்கள். அதனாலேயே மக்கள் நீதிமன்றத்திற்குச் செல்வதிலான சிக்கலொன்று தோன்றியுள்ளது. இதற்கிணங்க அதிகாரப் பகிர்வு இடம்பெற வேண்டும்.

தற்போது விசாரிக்கவேண்டியது இவ்வாறான பிரச்சினைளையல்ல. டயனாவின் வழக்கு தொடர்பான தீர்ப்பினை வழங்க எவ்வளவு காலம் சென்றது? அவர் எவ்வாறு தேசிய பட்டியலில் விழுந்தார்? சனாதிபதி வெளிநாட்டுப் பெண்ணெருவரை எவ்வாறு இராஜாங்க அமைச்சராக்கினார்? அவர் எவ்வாறு கட்சியொன்றின் செயலாளர் ஆகினார்? அவர் இ்ந்த நாட்டில் இருக்கின்ற பாராளுமன்ற சிறப்புரிமைகள், அமைச்சரின் சிறப்புரிமைகளை எவ்வாறு அனுபவித்தார்? இவைதான் பாரதூரமான பிரச்சினைகள். “வேலியில் சென்ற ஓணானை பிடித்து வேட்டிக்குள் போட்டதைப்போல்” சம்பவங்கள் இடம்பெறக் கூடாது. ஐக்கிய மக்கள் சக்தி அவர் ஒரு வெளிநாட்டுப் பெண்மணி என்பதை அறிந்திருந்தும் பாராளுமன்ற ஆசனமொன்றை எவ்வாறு வழங்கியது? நாட்டுக்கு உல்லாசப் பயணத்திற்காக வந்த ஒரு பெண்ணை சனாதிபதி இராஜாங்க அமைச்சராக நியமித்துள்ளார். இது மிகவம் பாரதூரமான மிகவும் பயங்கரமான அத்துடன் கண்டனம் தெரிவிக்கப்படவேண்டிய நிலைமையாகும். இது உங்களதும் எனதும் வாழ்க்கை பற்றிய பிரச்சினையாகும். தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் என்றவகையில் இத்தகைய விடயங்கள் பற்றிக் கவனஞ் செலுத்தப்படவேண்டுமென்பது எனது முன்மொழிவாகும்.

pressnppl

“நீதித்துறை தத்துவத்தை பன்முகப்படுத்துவது தொடர்பில் பயப்படவேண்டிய காரணம் என்ன?”
-சட்டத்தரணி அகலங்க உக்வத்த-

அதிகாரம் ஓரிடத்தில் குவியாமல் பன்முக்கப்படத்தப்படவேண்டுமென மே தினத்தன்று ஒட்டுமொத்த உரையில் தோழர் லால் காந்த கூறுகையில் 1600 – 1700 களில் இருந்த சார்ள்ஸ் மொன்டெஸ்கியு நீதி சுதந்திரமானதாக அமையவேண்டுமாயின் ஓரிடத்தில் குவிந்துவிடக்கூடாது எனக் கூறியுள்ளார். 2024 இல் அதிகாரம் பன்முகப்படுத்தப்பட வேண்டுமெனக் கூறும்போது அதற்கெதிராக கூற்றுகளை வெளியிடுகிறார்கள், பொய்யான பயத்தை உருவாக்குகிறார்கள். பிரதிநிதித்துவ சனநாயகத்தை நாங்கள் எவ்வாறு உயர்த்திப்பிடிப்பது மற்றும் எவ்வாறு வலுப்படுத்துவது எனும் விடயம் ஒட்டுமொத்த உரையிலுமே பொதிந்திருந்தது. நேரடி சனநாயகத்தை எவ்வாறு நிலைநாட்டுவதென்பது. நிலைநாட்டப்பட்டிராத விடயமொன்றைப் பற்றியும் கூறினார். பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறவேண்டிய பிரதமரொருவரை நியமித்துக்கொள்ள வேண்டுமெனக் கூறினார். இது சீனாவோ கியுபாவோ அல்ல, அது பலகட்சி முறையை ஏற்றுக்கொள்கிறது, இது தொடர்ந்தும் இந்த நாட்டில் இருக்கவேண்டுமெனக் கூறினார். இவை எல்லாவற்றையும் கூறி, நீதித்துறை தத்துவத்தை பன்முகப்படுத்த வேண்டுமெனக் கூறியதும் அதனைப் பிடித்துக்கொண்டு அல்லோலகல்லோலப் படுத்துகிறார்கள். சமூகத்தில் எம்மைப் பற்றிய பயத்தை உருவாக்குகிறார்கள்.

நாங்கள் இவையனைத்தையும் செய்வது நாங்கள் அதிகாரத்திற்கு வந்து அடுத்த நாளிலேயே அல்ல, புதிய அரசியலமைப்பின் ஊடாகவே இது சாதிக்கப்படும். புதிய அரசியலமைப்பினை ஆக்கும்போது எம்மால் ஏதேனும் முன்மொழிவு செய்யப்படுமாயின் அதற்காக நிபுணத்துவ ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்வோம். பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுகின்ற சட்டங்கள் ஊடாக மாத்திரமே இவை இடம்பெறும். அதனால் நாங்கள் பிரதிநிதித்துவ சனநாயகத்தை வலுப்படுத்த வேண்டுமென்பதை ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் பலகட்சி முறைமையை எற்றுக்கொள்கிறோம். பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறுகின்ற பிரதமரை ஏற்றுக்கொள்கிறோம். அதனால் சமூகத்தில் எந்தவிதமான பீதியையும் ஏற்படுத்தவேண்டாம். பாராளுமன்றத்திற்கு மக்களின் விருப்பத்தினால் தெரிவுசெய்யப்பட்டு வருகின்ற எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் நாங்கள் சமர்ப்பிக்கின்ற சட்டத்திற்கு சார்பாகவோ எதிராகவோ வாதங்களை முன்வைத்து ஆதரவு வழங்கவோ எதிர்ப்பு தெரிவிக்கவோ வாய்ப்பு உண்டு. இவை பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்படுகின்ற சட்டங்கள். இங்கு நேரடி சனநாயகம் பற்றி கூறப்படுகின்றது. ஒருசில விடயங்களுக்காக மக்களின் விருப்பத்தை நேரடியாக பெறமுடிகின்றது. தோழர் லால் காந்தவின் ஒட்டுமொத்த உரை பற்றியும் கலந்துரையாடலுக்கு இலக்காக்குங்கள். அதில் சிறியதொரு துண்டினை எடுத்துக்கொண்டு காலவதியான பழைய கீழ்த்தரமான அரசியல் பிரயோகங்களை பாவிக்க வேண்டாம்.

யூத் ஃபோ ஜஸ்டிஸ் எனப்படுகின்ற அரசசார்பற்ற அமைப்பொன்றின் சட்டத்தரணியொருவர், நானறிந்தவகையில் அவர் அரச தலைவரின் ஆலோசகர் கூறுகிறார் அவருக்கு புலனாகியதாம் இது 88 – 89 காலத்தில் போன்ற ஒன்றை செய்யப்போவதாம். அவர் பயந்துபோய் இருந்தாராம். அவருக்கு அப்போது நடந்தவை ஞாபகமிருக்கிறதாம். என்னைவிட அவருக்கு நான்கு வயது குறைவு. அக்காலத்தில் எனக்கும் வயது ஒன்பது. இ்ந்தக் காலத்தில் அவருக்கு ஞாபகம் இருக்கிறதாம். என்ன கேலிக்கூத்துகள் இவை. போராட்டத்தில் நடந்தவற்றை இலத்திரனியல் ஊடகங்கள் இருந்தமையால் நாங்கள் கண்டோம். 88 – 89 இல் இந்த இலத்திரனியல் ஊடகங்கள் இருக்கவில்லை. அன்று இடம்பெற்ற உண்மைச் சம்பவங்கள் எமக்குத் தெரியாது. நாங்கள் சனநாயக வழியில் 40 வருட காலத்தில் எம்மில் எந்தவிதமான தவறுமே கிடையாது என்பதை சமூகம் அறியும். நிரூபித்திருக்கிறோம். ஆனால் அவர்களின் தவறுகளை இந்த ஒட்டுமொத்த சமூகமுமே கண்டிருக்கிறது.

நாட்டின் சட்டத்தில் நீதி நிருவாகத் திட்டம் நிலவிய காலத்தில் “சூல நீதிமன்றம்” “முதனிலை நீதிமன்றம்” கொண்டிருந்த அதிகாரத்தை அதன் பின்னர் நீதவான் நீதிமன்றத்திற்கு கொடுத்தார்கள். 1992 இல் மாகாண நீதி மன்றங்கள் வந்தன. அந்த மாகாண நீதிமன்றங்கள் வரும்போது ஒருசிலர் எதிர்த்தார்கள். எனினும் வழங்குக் காலம் நீடிக்கின்றமை, மேன்முறையீடுகள் தாமதிக்கின்றமை ஓரளவுக்கு குறைந்திருந்தது. மத்தியஸ்த சபைகளுக்கு இருந்த நிதி அளவு 25000 வரை அதிகரிக்கப்பட்டது. நாங்கள் கூறுவது அத்தகைய ஒரு முறையியலையாகும். மத்தயஸ்த சபைகளுக்கு, கமநல சபைகளுக்கு, கிராமோதய சபைகளுக்கு, கூட்டுறவுச் சங்கத்திற்கு நாங்கள் அதிகமாக அதிகாரங்களை வழங்குவோம். நீதிமன்ற வளாகத்திற்குள் தீர்க்கப்பட வேண்டியதல்லாத சிறிய சிறிய விடயங்களுக்காக அந்தந்த இடங்களில் தீர்ப்பளித்து அகற்றிக்கொள்வோம்.

pressnppl

“யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் அடிப்படை உரிமைகள் மனுவொன்றை தாக்கல்செய்ய கொழும்பிற்கு வரவேண்டும்…”
-சட்டத்தரணி உபுல் குமரப்பெரும-

மாகாண சபை முறை வந்த பின்னர் நாட்டின் நிருவாகம் எவ்வாறு பன்முகப்படுத்தபட்டது எனும் விடயத்துடன் மற்றமொரு விடயத்தையும் சேர்க்கிறேன். கொழும்பில் குவிந்திருந்த அதிகாரம் மாகாண சபை முறைமை ஊடாக மற்றமொரு அடுக்கில் கொழும்பிற்கு வெளியில் சென்றது. அரசியலமைப்பிற்கான 13 வது திருத்தத்தின்படி மூன்று நிரல்கள் இருக்கின்றன. மூடப்பட்ட நிரல், மாகாணசபை நிரல், ஒருங்கிணை நிரல். மாகாண சபையுடன் தொடர்புடைய விடயங்கள், மத்திய அரசாங்கத்துடன் தொடர்புடைய விடயங்கள் மற்றும் மாகாண சபைகளுடனும் மத்திய அரசாங்கத்தடனும் தொடர்புடைய விடயங்கள். கொழும்பில் குவிந்திருந்த அதிகாரம் மாகாண சபைகளுக்கு கொண்டுசெல்லப்பட்ட விதம் அதில் சுட்டிக்காட்டப்படுகின்றது. தோழர் லால் காந்த கூறுவதன்படி அதிகாரத்தை எவ்வாறு கீழ்நோக்கி கொண்டுசெல்வது என்கின்ற விடயத்தில் ” நீதித்துறை தத்துவத்தை கீழ்மட்டத்தில் ஊரில் உள்ளவர்களுக்கு கொடுத்தால் என்ன நேரிடும்” எனும் விடயத்தை தான் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற குழுவினர் முதன்மையாகக் கொண்டுள்ளார்கள். இவர்கள் இதனை 88 – 89 உடன் இணைக்க முயற்சிசெய்து வருகிறார்கள்.

அமெரிக்காவில் யூரர் சபை முறைமை இருக்கின்றது. குற்றவியல் வழக்கொன்றுக்காக நீதி மன்றத்திற்கு வருகின்ற பிரஜையின் தலைவிதியை தன்னைப்போன்ற வேறுசில பிரஜைகளே தீர்மானிக்கிறார்கள். இலங்கையிலும் யூரர் சபை முறைமை இருக்கின்றது. இலங்கையில் யூரர் சபை என்பது சட்டமுறைக் கல்வியைப் பெற்றிராத, சட்டத்தரணிகள் அல்லாத, சாதாரண பிரஜைகள் ஏழு போ் முறைப்பாட்டாளர் நெறிப்படுத்துகின்ற சாட்சிகள், பிரதிவாதி நெறிப்படுத்துகின்ற சாட்சி மற்றும் அந்த சாட்சிகள் சம்பந்தமாக நீதிபதி வழங்குகின்ற கருத்தினை எடுத்துக்கொண்டு தமது தீர்ப்பினைக் கொடுப்பதாகும். அந்த ஏழு பேராலும் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்க இயலும் இன்றேல் விடுதலைசெய்ய இயலும். பிரஜைகளால் தீர்ப்பளிக்கப்படுதல் (kaudge by pierce) என்பது உலகில் உள்ள ஒர் எண்ணக்கருவாகும். தோழர் லால் காந்த திட்டவட்டமாகக் கூறுகிறார் ஒருசில விடயங்களை ஊரிலேயே தீர்த்துக்கொள்ள முடியுமென. இவை ஏற்கெனவே சட்டத்தில் இருக்கின்ற விடயங்களாகும். உதாரணமாக கமநல அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் “கமக்காரர் பிணக்குகள்” கமநல சேவைகள் நிலையத்தில் உத்தியோகத்தர்களால் சமரசத்திற்கு கொண்டுவர சட்டத்திலேயே ஏற்பாடுகள் நிலவுகின்றன. கூட்டுறவுடன் நாட்டின் பிரஜைகள் பிணக்குகளை ஏற்படுத்திக்கொண்டால் கூட்டுறவுச் சட்டத்தின் பிரகாரம் அதனை நடுத்தீர்ப்பாளர் ஒருவரிடம் ஆற்றுப்படுத்த இயலுமை இருக்கின்றது. மேற்படி தீர்ப்பிற்கு எதிராக ஆட்சேபனை தெரிவிக்க நீதிமன்றத்திடம் ஆற்றுப்படுத்த முடியாது. “கஸ்டம்ஸில்” சுங்கக் கட்டளைச் சட்டத்தின்கீழ் சுங்கம்சார்ந்த தவறொன்று சம்பந்தமாக சுங்க அதிகாரிகளின் தலைமையில் விசாரணைகளை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுடுபடைக்கலன் கட்டளைச் சட்டத்தின்கீழ் துப்பாக்கியொன்றின் உரிமத்தை இற்றைப்படுத்தாவிட்டால் பாதுகாப்பு செயலாளரிடம் மேன்முறையீடு செய்யலாம். பாதுகாப்புச் செயலாளர் மூவரைக்கொண்ட சபையொன்றை அதனை பரிசீலனை செய்வதற்காக நியமிப்பார். அந்த தீர்மானத்தின்படிதான் மேன்முறையீட்டினை சமர்ப்பிக்கலாம். அதைப்போலவே சூழல் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் உரிமமமொன்று மறுக்கப்பட்டால் அதன் மேற்முறையீடு செயலாளருக்கே உண்டு. அந்த தீர்மானத்தின் பேரில்தான் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கோ அல்லது உயர்நீதிமன்றத்திற்கோ வழக்குத் தொடருவதற்கான இயலுமை கிடைக்கின்றது. இந்த விடயத்தை முன்வைத்து தோழர் லால் காந்த அது மேலும் விஸ்தரிக்கப்பட வேண்டுமெனவே கூறுகிறார். நான் இண்டுமூன்று வருடங்களுக்கு முன்னர் பிரிகையிடல் வழக்கொன்றை முடிவுக்கு கொண்டுவந்தேன். 1971 மே மாதத்திலேயே இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது. நான் பிறந்தது 1971 இல். வழக்கு நிறைவடையும்போது 49 வருடங்கள் கழிந்திருந்தன. எனக்கும் வயது 49 ஆகும்.

அதைப்போலவே யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற ஒருவர் கொழும்பிற்கு வந்து உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் வழக்கொன்றை தாக்கல்செய்ய அல்லது மேன்றையீடொன்றை சமர்ப்பிக்க அதிக செலவாகின்றது. இறுதி மேன்முறையீட்டு நீதிமன்றத் தத்துவம் உயர்நீதிமன்றத்திற்கே உண்டு. யாழ்ப்பாணத்தில் இருந்து வருகின்ற ஒவ்வாரு மேன்முறையீடும் மொழிபெயர்க்கப்பட வேண்டும். அவற்றின் சாட்சிக் குறிப்புகள் தமிழ் மொழியிலேயே இருக்கின்றன. இந்த ஏற்புடைய உத்தியோகபூர்வ மொழிபெயர்ப்புக் குறிப்புகளைப் பெற்றுக்கொள்ள ஒருவடத்திற்கு மேற்பட்ட காலம் எடுக்கும். தொலைதூரப் பிரதேசத்தைச்சேர்ந்த ஒருவர் பெறுமதி ஒரு இலட்சத்திற்கு குறைவான காணிக்காக கொழும்பிற்கு வந்து வழக்காடுவது நீதியானதா, அநீதியானதா என்பது எமக்கு விளங்குகின்றது. இது சட்டத்தரணிகள் சமூகம் அறியாத விடயமல்ல. தோழர் லால் காந்த கூறுவது இந்த விடயத்தைதான். அது பயப்படவேண்டிய ஒரு விடயமல்ல. தாக்குபவர்கள் நல்லெண்ணத்துடன் கூறுகின்ற கதையல்ல இது. இத்தருணத்தில் தேசிய மக்கள் சக்தி இருக்கின்ற இடம் பற்றிய புரிந்துணர்வுடன் அத்துடன் அந்த இடத்தில் இருந்து கீழே இழுத்துப்போடுவதற்கான தேவையுடன் புரிந்த சதிவேலைதான் இது.