–2023.11.17 – தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு–
ராஜபக்ஷாக்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு நாட்டை ஒப்படைத்த பின்னர் இற்றைவரை பயணித்த பாதையை மாற்றியமைக்க வேண்டுமென பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டி இருந்தோம். எனினும் எந்தவிதமான மாற்றமுமின்றி இற்றைவரை பயணித்த பாதையிலேயே பயணித்து மக்களால் வாழமுடியாத அளவுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் முன்னிலையில் மண்டியிட்டு எதேனும் தொகையை பெற்றுக்கொள்ள செயலாற்றுவதோடு ஒட்டுமொத்த நெருக்கடியின் சுமையை மக்கள் மீது திணிப்பதே சமர்ப்பித்துள்ள வரவுசெலவில் அடங்கியுள்ளது. வரவுசெலவுக்குள்ளேயோ அதற்கு வெளியிலோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கான எந்தவொரு நடைமுறைச்சாத்தியமான வேலைத்திட்டமும் கிடையாது. ரணில் விக்கிரமசிங்காக்கள் பொறுப்புக்கூறவேண்டிய நெருக்கடியின் சுமையை மென்மேலும் மக்கள்மீது திணித்து ஒருவருட காலத்திற்குள் மின்கட்டணம் மூன்றுதடவைகளில் 400% இற்கு மேல் அதிகரிக்கப்பட்டது. இதனால் மக்களால் மின்கட்டணத்தை தாங்கிக்கொள்ள முடியாததைப்போன்றே கைத்தொழில்கள் சீரழியவும் காரணமாக அமைந்துள்ளது. மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டமை, எண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டமை மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாடு காரணமாக ஏறக்குறைய 2000 கைத்தொழில்களும் தொழில் முயற்சிகளும் மூடப்பட்டுள்ளதாக ஊடகங்கள் அறிவித்திருந்தன. இதனால் கடந்த ஒன்றரை வருட காலப்பகுதிக்குள் ஏறக்குறைய பதினைந்து இலட்சம் பேருக்கு தொழில்கள் அற்றுப்போயின. வங்கிக்கடன்பெற்ற 556 தொழில்முயற்சிகள் வங்கிகளுக்கு சொந்தமாகிவிட்டன. நாட்டின் பொருளாதாரத்தை மென்மேலும் பலவீனப்படுத்துகின்ற செயற்பாங்கில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளமை இந்த தரவுகளின்படி தெளிவாகின்றது. நாட்டை மீட்டெடுப்பதற்கான நோக்கு, திட்டம் அல்லது தேவை அரசாங்கத்திற்கு கிடையாது. அன்றைய பொழுதினைக் கழித்து மக்கள் பாரிய அழுத்தத்திற்கு இலக்காக்கப்பட்டுள்ளார்கள்.
மீண்டுமொரு சுற்றில் பாரியளவில் வரிச்சுமை அதிகரிக்கப்பட்டமையால் மற்றுமொரு சுற்றில் பண்டங்களின் விலைகள் அதிகரிக்கின்றன. பொதுமக்கள் மீது இந்த வரிச்சுமையை அதிகரித்து அரசாங்கத்தைச் சுற்றியுள்ள செல்லங்களுக்கு பாரிய சலுகைகளை வழங்கி இருபத்தைந்து சதமாக விளங்கிய சீனி வரியை ரூபா 50 வரை அதிகரித்தமை போன்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஒட்டுமொத்த நெருக்கடியையும் மக்கள்மீது திணித்து அழிவுமிக்க பாதையிலேயே இழுத்துச்சென்று அழுத்தத்தை மென்மேலும் மக்கள்மீது சுமத்தி அரசாங்கம் வேறு நடிப்புகளில் ஈடுபட்டு வருகின்றது. இலங்கை பொதுஜன பெரமுனவினதும் மகிந்த ராஜபக்ஷவினதும் இந்த வரவுசெலவு பற்றிய நிலைப்பாட்டினை மக்களிடம் முன்வைக்கவேண்டும். ஒவ்வொருவரும் தாம் விடுபட்டுக் கொள்வதற்காக பலவிதமான கதைகளைக் கூறிவருகிறார்கள். அவ்வாறான கேலிக்கூத்துகளால் மக்களை இனிமேலும் ஏமாற்ற முடியாது. இந்த நெருக்கடிக்கு மகிந்த ராஜபக்ஷாக்களும் ரணில் விக்கிரமசிங்காக்களும் இணையாக பொறுப்புக்கூறவேண்டும். உயர்நீதிமன்றம்கூட அவர்கள் பொறுப்புக்கூறவேண்டுமெனத் தீர்மானித்துள்ளது. நீதிமன்றம் என்னதான் கூறினாலும் அவர்கள் பொறுப்பினை ஏற்கப்போவதும் கிடையாது: அதிகாரத்தைக் கைவிடவும் போவதில்லை. மிகவும் சாதகமான வாழ்க்கையை எதிர்பார்த்து இவர்களிடம் அதிகாரத்தைக் கையளித்த பொதுமக்களுக்கு எந்தவிதமான நிவாரணத்தையும் வழங்க நடைமுறைச்சாத்தியமான எதனையும் செய்வதில்லை. அரசாங்க ஊழியர்களுக்கு ஏப்பிறல் மாதத்தில் இருந்து ரூபா 10,000 சம்பளத்தை அதிகரிப்பதாக கூறினாலும் சனவரி மாதத்தில் இருந்தே வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமைகளுக்கு எதிராக வீதியில் இறங்குகின்ற மக்களை அடக்குவதற்கான பங்கரவாத தடுப்புச் சட்டம், சமூக வலைத்தள கட்டுப்பாட்டுச் சட்டம் போன்ற சட்டங்களை கொண்டுவரத் தொடங்கியுள்ளார்கள். தமது உரிமைகளுக்காக கல்வி அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்செய்த ஆசிரியர்கள், அதிபர்கள்மீது தாக்குதல் நடாத்தினார்கள். நாட்டைக் கட்டியெழுப்புவதற்குள்ள இயற்கை வளங்களையும் மனித வளங்களையும் அழித்து வருகிறார்கள்.
எஞ்சியுள்ள இறுதி வளங்களையும் வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு விற்று வருகிறார்கள். தபால் அலுவலகத்தையும் விற்றுத்தீர்க்கப் போகிறார்கள். நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக இருக்கின்ற கைத்தொழில் அதிபர்களை மின்கட்டணம், எரிபொருள் விலை, வரிச் சுமையை அதிகரித்து வீழ்த்துகிறார்கள். ஏற்றுமதியாளர்களை வீழ்த்துகிறார்கள். நாட்டை கட்டியெழுப்புவதற்காக இடையீடுசெய்யக்கூடிய பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட தொழில்வாண்மையாளர்கள் மீது பாரிய வரிச்சுமையைத் திணித்து நாட்டைக் கைவிட்டுச் செல்கின்ற நிலையை ஏற்படுத்தி உள்ளார்கள். மக்களுக்கு எதிரான, மக்களை வதைக்கின்ற சர்வாதிகாரத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். இலங்கைக்கு உலகின் முன்னிலையில் ஏதேனும் நன்மதிப்பினைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்த அனைத்து துறைகளையும் அழித்து வருகிறார்கள். அதற்காக இருந்த கிரிக்கெற் விளையாட்டினையும் எமது கலாசாரத்தையும் கைத்தொழில்களையும் அழித்து நாட்டை வெற்றுத் தரிசுநிலமாக மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த அழிவுமிக்க பயணப்பாதைக்கு ஒட்டுத் தீர்வுகள் கிடையாது. ரணில் விக்கிரமசிங்காக்களையும் இந்த அழிவுமிக்க வழிமுறையையும் தோற்கடித்து மக்கள்நேயமுள்ள ஆட்சியை உருவாக்குவதை விடுத்து வேறு பதில் கிடையாது. இந்த ஆட்சியைத் தோற்கடித்திட பிரமாண்டமான மக்கள் பலத்தை உருவாக்க வேண்டியுள்ளது. அதேவேளையில் மக்களின் உரிமைகளுக்காக போராடவும் வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.
இந்த ஆட்சியைத் தோற்கடித்திட பிரமாண்டமான மக்கள் பலத்தை உருவாக்க வேண்டியதே மக்களின் பொறுப்பாக அமைந்துள்ளது. மறுபுறத்தில் மக்களுக்கு எதிரானவகையில் செயலாற்ற வேண்டாமென நாங்கள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை செய்ய வேண்டியுள்ளது. அரசாங்கம் மீது இருந்த நம்பிக்கை 9% வரை வீழ்ச்சியடைந்துள்ளமை மதிப்பாய்வு அறிக்கையொன்றில் அண்மையில் வெளியாகி இருந்தது. இந்த நிலைமையில் ரணில் விக்கிரமசிங்காக்கள் அரசியலமைப்பின் மறைவில் இருந்துகொண்டு பலவந்தமாக அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆட்சிசெய்து வருகிறார்கள். தேசிய மக்கள் சக்திக்கு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான திட்டமொன்றும் மக்கள் பலமும் சேர்ந்திருக்கின்றது. மிகுந்த ஒழுக்கத்துடனும் ஒழுங்கமைந்தவகையிலும் நோக்கமொன்றைக் கொண்டதாகவும் அரசாங்கம் மீதான எதிர்ப்பினை வெளிக்காட்ட வேண்டியுள்ளது. அரசாங்கத்தின் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை தோற்கடிப்பதற்கான ஆர்ப்பாட்ட இயக்கத்தையும் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக மக்களை அணிதிரட்டுவதற்கான செயற்பாடுகளையும் தேசிய மக்கள் சக்தி அமுலாக்கி வருகின்றது. தனித்த போராட்டங்களுக்குப் பதிலாக ஒட்டுமொத்த மக்களையும் சேர்த்துக்கொண்ட செயற்பாடுகள் மூலமாக இந்த ஆட்சியை முடிவுறுத்தி மக்கள்நேயமுள்ள ஆட்சியை நிறுவுவதற்கான இலக்கினைக் கொண்டதாக செயலாற்றுதல் வேண்டும். அதற்கான எதிர்கால செயற்பாடுகளில் ஒரு படிமுறையாக நுகோகோடவில் பாரிய எதிர்ப்பு பேரணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மிகுந்த சனநாயகரீதியாக ஒழுக்கத்துடன் இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதுவரை முன்நோக்கிப் பயணிக்கவேண்டியுள்ளது. மக்களை அல்லற்படுத்த ரணிலுக்கு இடமளித்து வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க எவருக்கும் உரிமை கிடையாது. அமைதிவழியில் எதிர்ப்பினைக் காட்டுவதற்கான மக்களின் உரிமையைப் பாவித்து மக்களை வதைக்கின்ற ஆட்சிக்கு எதிராக தமது எதிர்ப்பினைக் காட்டுவதை நுகேகொடவில் தொடங்குகிறோம். மக்கள் பலத்தை அரசாங்கத்திற்கு வெளிக்காட்டுவதற்காக அனைவரும் நுகேகொடவிற்கு வந்து அரசாங்கத்தை தோற்கடிக்கின்ற போராட்டத்தில் ஒன்றுசேருமாறு கேட்டுக்கொள்கிறோம்.ල්ලා සිටිනවා.
“அரசாங்கத்தின் காலத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டுமென மக்கள் தீர்மானித்து விட்டார்கள்” –தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய–
இந்த ஆட்சியானது தமது அதிகாரக் கருத்திட்டத்திற்காக தமது வழியுரிமைக்காக மாத்திரம் இயங்கிவருகின்ற அரசாங்கமென்பது மிகவும் நன்றாக உறுதியாகி உள்ளது. அரசாங்கத்தின் பல்வேறு தரப்பினர்களுமே அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சித்தாலும் தீர்வுக்கட்டமான விடயங்களின்போது அரசாங்கத்தை தோற்கடித்திட செயலாற்றுவதில்லை என்பது மிகவும் தெளிவாகின்றது. மக்களை அல்லற்படுத்திய அவர்களுக்கு எதிராக மக்களிடமிருந்து கிடைக்கின்ற தண்டனையை காலந்தாழ்த்த அவர்கள் செயலாற்றி வருகிறார்கள். சனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவருக்கு பழக்கமான டீல் அரசியலில் ஈடுபட்டு செயலாற்றி வருகின்ற விதம் தெளிவானதாகும். பௌத்த சமயத்தையும் பல்வேறு நூல்களையும் மேற்கோள்காட்டி அவர் பலவிதமான ஒப்புதல் வாக்குமூலங்களை முன்வைக்கிறார். மாபெரும் உன்னதமான கதைகளைக் கூறினாலும் விற்றுத் தின்கின்ற மற்றும் மற்றும் டீல் அரசியலைத் தவிர வேறு பதில் ரணில் விக்கிரமசிங்கவிடம் கிடையாது. மாறியுள்ளதாக குறிப்பால் உணர்த்துவதற்காக ஒப்புதல் வாக்குமூலத்தைக் கொடுத்தாலும் நடைமுறையில் தெளிவாகின்ற விடயம் கடுகளவேனும் மாறத் தயாரில்லை என்பதாகும். வரவுசெலவு பற்றிய கேள்விகளை எழுப்புகையில் ஐ.எம்.எஃப். நிபந்தனைகள் காரணமாக ஒன்றையுமே செய்யமுடியாது எனக் கூறுகிறார். அப்படியானால் நிதி அமைச்சரோ அல்லது அரசாங்கமோ எதற்காக? சர்வதேச தாபனங்களுடன் செயலாற்றுகையில் நாட்டுக்கு அவசியமான மக்களின் பக்கத்தில் இருந்து சிந்திக்கின்ற நிகழ்ச்சிநிரலை அமுலாக்குவதற்காகவே அரசாங்கமும் அமைச்சரவையும் நியமிக்கப்படுகின்றது. சர்வதேச தாபனங்களின் நிகழ்ச்சிநிரல்களையும் விளங்கிக்கொண்டு எமது நிகழ்ச்சிநிரலை வெற்றியீட்டச் செய்விக்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
இந்த அரசாங்கத்தின் காலத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென மக்கள் தீர்மானித்து விட்டார்கள். தேர்தலொன்று கிடைக்கின்ற முதலாவது தருணத்திலே அரசாங்கம் விரட்டியடிக்கப்படுமென்பதை அறிந்த அரசாங்கம் மக்கள் அபிப்பிராயத்திற்குப் பயந்து ஒளிந்து இருக்கின்றது. இந்த நிலைமையில் பிரசைகள் என்றவகையில் எமக்கு பாரிய பொறுப்பு இருக்கின்றது. இந்த நாட்டின் எதிர்காலம், சனநாயகம், எமது உரிமைகளை பாதுகாத்துக்கொள்வதற்காக பிரசைகளே முன்வரவேண்டும். ஆட்சியாளர்கள் பொறுப்பினை கைவிட்டுள்ள தருணத்தில் பிரசைகள் ஏனைய நாட்களைவிட பலம்பொருந்தியவகையில், துணிச்சலுடன், திடங்கற்பத்துடன், நோக்கமொன்றுடன் அதற்காக செயலாற்ற வேண்டியுள்ளது. தேசிய மக்கள் சக்தி அற்காகவே எந்நேரமும் மக்களுடன் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றது. பிரசையின் பொறுப்பினை ஈடேற்றுவதற்காக ஓர் அரசியல் இயக்கமென்றவகையில் பிரசைகளுக்கு அவசியமான ஒழுங்கமைத்தல் பலத்தையும் தலைமைத்துவத்தையும் வழங்கி முன்நோக்கி நகரும்பொருட்டு மிகுந்த திடசங்கற்பத்துடன் செயலாற்றி வருகின்றது. நீண்டகாலம் கழிவதற்கு முன்னர் மக்கள்நேயமுள்ள ஆட்சியொன்றை உருவாக்குகின்ற வரலாற்றுரீதியான மாற்றத்திற்காக திடசங்கற்பத்துடன் செயலாற்றி வருகின்றது. அதுவரை நிலவுகின்ற ஆட்சிக்கு தலைசாய்த்துக்கொண்டு இருக்கவேண்டியதில்லை. எமது உரிமைகளுக்காக நுகோகொடவில் நடாத்தப்படுகின்ற எதிர்ப்பு பேரணியில் பங்கேற்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். குறிப்பாக மக்கள் ஆணையற்ற அரசாங்கத்திற்காக, ரீலோட் பொலிஸ் மா அதிபரின்கீழ் சட்டமுறையற்ற செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாமென நாங்கள் பாதுகாப்புப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு கூறிக்கொள்கிறோம்.