(-தேசிய மக்கள் சக்தியின் தோ்தல் கண்காணிப்பு நிலையத்தின் ஊடக சந்திப்பு – 2024-09-11-)
ஜனாதிபதி தோ்தல் பிரகடனம் செய்யப்பட்டுள்ள தருணத்தில் செய்யவேண்டிய மற்றும் செய்யக்கூடாத செயல்கள் 1981 இல் 15 ஆம் இலக்கமுடைய ஜனாதிபதியொருவரை தெரிவு செய்வதற்கான சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற வேட்பாளரும் மேலும் பலரும் இந்த சட்டத்தை தொடர்ச்சியாக மீறுதல் பற்றி மொத்தமாக 358 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. சட்டவிரோத பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பான 178 முறைப்பாடுகளும், சட்டமுறையான தோ்தல் இயக்கங்களுக்கு தடை ஏற்படுத்துதல் தொடர்பான 06 முறைப்பாடுகளும், வன்முறை செயல்கள் சம்பந்தமாக 26 முறைப்பாடுகளும், மக்கள் அபிப்பிராயம் மீது முறைதகாதவகையில் அழுத்தம் கொடுத்தல் பற்றிய 104 முறைப்பாடுகளும், அரச வளங்களின் துஷ்பிரயோகம் சம்பந்தமாக 62 முறைப்பாடுகளும், அரச உத்தியோகத்தர்களை தோ்தல் நடவடிக்கைகளில் முறை தகாதவகையில் ஈடுபடுத்துதல் சம்பந்தமாக 33 முறைப்பாடுகளும் என்ற வகையில் இவை கிடைத்துள்ளன.
இந்த அனைத்து முறைப்பாடுகள் சம்பந்தமாகவும் தோ்தல்கள் ஆணைக்குழுவிற்கும் பொலிசுக்கும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அது தொடர்பில் சாதகமான பிரதிபலிப்புக்கள் கிடைத்து சட்டவிரோத செயல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தோ்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்டு வருகிறது. அரச ஆதனங்கள் எனும் பதத்தில் தோ்தல்கள் சட்டத்திற்கிணங்க உத்தியோகத்தர்களும் உள்ளடங்குவர். ரணில் விக்கிரமசிங்கவின் தோ்தல் இயக்கத்தின் மேம்பாட்டுப் பணிகளுக்காக அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவது முனைப்பான ஒரு விடயமாக அமைந்துள்ளது. ரணவிரு சேவா அதிகார சபை மூலமாக இராணுவ வீரர்களை அழைப்பித்து அவர்கள் பிரச்சார நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்த தயாராகி வருவது உறுதியாகி இருக்கிறது. நாளை (12 ஆம் திகதி) ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரச்சார அலுவல்களை மேம்படுத்துவதற்கான மாநாடொன்றினை நடாத்த ஏற்பாடு செய்துள்ளார். அரசாங்க வாகனங்களும் உத்தியோகத்தர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். இதனை ஏற்பாடு செய்தவர் ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவராவார். அதைப்போலவே அரசாங்கத்திற்கு சொந்தமான வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் எல்.ஆர்.டி.சி. பாதுகாப்பு கம்பெனியின் ஊழியர்களையும் கடமைக்கு சமூகமளித்த பின்னர் இந்த மாநாட்டில் பங்கேற்குமாறும் போக்குவரத்து வசதிகளை வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
“போலி ஆவணம் தயாரித்தவர்கள் மாத்திரமல்ல பிரச்சாரம் செய்த சமூக ஊடகங்களும் பொறுப்புக்கூறவேண்டும்.”
-தேசிய மக்கள் சக்தி தோ்தல் கண்காணிப்பு அமைப்பின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி அகலங்க உக்வத்த-
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு சுயேட்சை வேட்பாளராக தோ்தலில் போட்டியிட முன்வந்துள்ளபோதிலும் சுயாதீனத்தன்மையை வெளிப்படுத்தாமல் அரச வளங்கள், ஆதனங்கள், அரச உத்தியோகத்தர்கள், இராணுவ உத்தியோகத்தர்கள், விமான நிலைய உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியாக ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். எனினும் அந்த செயல்களை நிறுத்துவதற்கான ஆக்கமுறையான பிரதிபலிப்பு தென்படவில்லை. ஐக்கிய மக்கள் சக்தியை போன்றே சுயேட்சை வேட்பாளர் ஆகிய இருவரும் ஊடகங்களை பாவித்து தொடர்ச்சியாக பொய்யான விடயங்களையும் சேறு பூசல்களையும் மேற்கொண்டு வருகிறார்கள். அவ்வாறான செயல்கள் தோ்தல் தொடங்கப்பட்ட ஆரம்ப காலத்தில் ஆங்காங்கே பதிவாகியபோதிலும் இன்றளவில் அன்றாடம் பல சம்பவங்கள் பற்றி பதிவாகி வருகின்றது. பிரச்சார நடவடிக்கைகளுக்காக எஞ்சியுள்ள ஒரு வாரகாலத்திற்குள் இந்த நிலைமை தொடர்ந்தும் வளர்ச்சியடைவதற்காக செயலாற்றிக் கொண்டிருப்பதும் எமக்கு அறியக்கூடியதாக உள்ளது.
அந்த விடயங்கள் சம்பந்தமாக முறைப்பாடு செய்வதே எங்களுடைய பொறுப்பாகும். புலனாய்வு செய்வது தோ்தல்கள் ஆணைக்குழுவிற்கும் பொலிசுக்கும் பொறுப்பான விடயமாகும். இது சம்பந்தமாக துரிதமாக சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் 22 ஆம் திகதிக்கு பின்னரேனும் பெற்றுக்கொள்ள வேண்டிவரும். போலியாவணம் பிரச்சாரம் செய்தல் மும்முரமாக இடம்பெற்று வருகிறது. இவை தண்டனைச் சட்டகோவையின் 154 தொடக்கம் 159 வரையான பிரிவுகளில் உள்ளடக்கப்பட்ட கடுமையான விடயங்களாகும். தோ்தல் காலத்தின் பின்னர் இது சம்பந்தமாக சிக்கலொன்று ஏற்படமாட்டாதென சமூக ஊடகங்களை பாவித்து இந்த சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுபவர்கள் நினைத்துக்கொண்டிருப்பார்களாயின் அது அப்படியல்ல. போலியாவணம் புனைந்தவர்கள் மாத்திரமல்ல அவற்றை பிரச்சாரம் செய்த சமூக ஊடகங்களும் பொறுப்புக்கூற வேண்டும். தண்டனைச் சட்டக்கோவை அமுலில் இருக்கிறது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் காலை நேர நிகழ்ச்சிகள் பற்றியும் விசேட கவனம் செலுத்தினால் நீண்டகாலமாக சமூகத்தில் துர்நாற்றம் வீசுகின்ற ஒரு நிகழ்ச்சியாக இனம்காணப்பட்டிருந்தது. இப்பொழுது அது மிகவும் அருவருக்கத்தக்க வித்தத்தில் ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவரால் தேசிய மக்கள் சக்தியின் தலைவரையும் அரசியல் இயக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டு பொய்யான விடயங்களையும் தோ்தலை அடிப்படையாகக் கொண்டு மக்களின் மனங்களை திரிபுபடுத்தவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக தனித்துவமான முறைப்பாடொன்று நாளையதினம் மேற்கொள்ளப்படும். அவரால் தலைவர் வகிபாகத்தை தோ்தல் காலத்தில் முறைப்படி ஈடேற்ற முடியாவிட்டால் தகுதிவாய்ந்த அதிகாரியின் கீழ் கொண்டுவருமாறு கோரிக்கை விடுக்க நேரிடும். இந்த துர்நாற்றத்தை தாங்கிக் கொள்வது சமூகத்திற்கு மிகவும் சிரமமானதாகும். அதனை நீக்கவேண்டும். அரச நிறுவனமொன்றான ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இந்த செயற்பாடு சம்பந்தமாக ஏற்கெனவே எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதென்பதை அறியக்கூடியதாக இருக்கிறது. தோ்தல் சட்டம் மாத்திரமன்றி குற்றவியல் சட்டத்தையும் மீறி ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் புரிகின்ற இந்த செயல்கள் சுதந்திரமானதும் நியாயமானதுமான தோ்தல் நடைமுறைக்கு தடையாக அமைந்துள்ளது.
“பொதுமக்கள் சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தோ்தலையே எதிர்பார்க்கிறார்கள்”
-தேசிய மக்கள் சக்தியின் இளைப்பாறிய பொலிஸ் கூட்டமைவின் பிரதானி இளைப்பாறிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனெவிரத்ன-
கடந்த 30 ஆம் திகதிவரை எமக்கு பதிவாகிய தோ்தல் வன்செயல்கள் மற்றும் சட்டமீறல்கள் சம்பந்தமாக பொலிஸ் தலைமையகத்தின் தோ்தல் தொழிற்பாடுகள் பணியகத்தில் முறைப்பாடு செய்திருக்கிறோம். அந்த முறைப்பாடுகள் பற்றி ஆக்கமுறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென நாங்கள் எதிர்பார்க்கிறோம். மக்கள் எதிர்பார்ப்பது சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தோ்தலையே. அரசியல் இயக்கமென்ற வகையில் நாங்களும் சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தோ்தல் இயக்கத்திற்காக முழுமையாக எங்களை அர்ப்பணித்துள்ளோம். எனினும் ஒரு சில சந்தர்ப்பங்களில் தேசிய மக்கள் சக்தியை இலக்காகக் கொண்டு வன்முறை செயல்கள் புரியப்படுவது பதிவாகியுள்ளது. கல்கிஸ்ஸ பிரதேசத்தில் ஒரு வீட்டுக்குச் சென்று இவ்வாறு அச்சுறுத்தியிருக்கிறார்கள். ராஜகிரியவிலும் மருதானையிலும் இரண்டு அச்சகங்களில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரை இலக்காகக் கொண்டு சேறுபூசும் போஸ்டர்கள் அச்சிடப்பட்டு வருவதாக இன்று காலை பதிவாகியது. அது சம்பந்தமாக சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ள நாங்கள் தயாராகிவருகிறோம்.
அதைப்போலவே கழிந்த 07 நாட்களுக்குள் இடம் பெற்றுள்ள சட்டவிரோதமான செயல்கள் பற்றிய விபரமொன்றை சமர்ப்பிக்கிறேன். செப்டெம்பர் 03 ஆம் திகதி மகாஓயா பிரதேச செயலாளர் பிரிவில் பொல்லபெத்த பிரிவில் அமைந்திருந்த தோ்தல் அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே நோனாகம உஹபிட்டகொடவில் அமைந்திருந்த தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தின் முன்னால் காணப்பட்ட பதாகையை உடைத்து எடுத்துச் சென்றிருக்கிறார்கள். செப்டெம்பர் 07 ஆம் திகதி ஹாரிஸ்பத்துவ, உகுரெஸ்ஸபிட்டிய அலுவலகம் மீதும் கம்பொல, தெல்பிட்டிய அலுவலகத்திற்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே பிபில பொலிஸ் பிரிவில் “அதிட்டன” இளைப்பாறிய முப்படை அங்கத்தவரொருவரின் வீட்டுக்கு கல்லெறிந்து சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. அதைப்போலவே செப்டெம்பர் 08 ஆம் திகதி நாத்தண்டிய, இரணவில பிரதேசத்தின் அலுவலகம் தாக்கப்பட்டுள்ளது. செப்டெம்பர் 10 ஆம் திகதி கம்பொல, அட்டபாகே அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அன்றையதினமே திஸ்ஸமஹாராம, ரன்மிணிதென்ன பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களால் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த முறைப்பாடுகளை நோக்கும்போது தோ்தல் சார்ந்த வன்முறை சம்பவங்களின் தெளிவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை தெளிவாகிறது. தேசிய மக்கள் சக்தியை சோ்ந்தவர்களின் முழுமையான ஒத்துழைப்பு தோ்தல்கள் செயலகத்திற்கும் பொலிசுக்கும் வழங்கப்படுகிறது. சுதந்திரமான, நீதியான மற்றும் அமைதியான தோ்தலை நடத்துவதே எம்மனைவரின் எதிர்பார்ப்பாகும். தோ்தல்கள் ஆணைக்குழு அந்த எதிர்பார்ப்பினை ஈடேற்றுமென எதிர்பார்க்கிறோம்.