-Colombo, January 12, 2024-
அரசாங்கம் கொண்டுவரவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக அமைவதாகவும் தெரிவித்து அச்சட்டத்திற்கு எதிராக இன்று (12) தேசிய மக்கள் சக்தி அடிப்படை உரிமைகள் மனுவொன்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் தோழர் விஜித ஹேரத் அவர்கள் மனுதாரராவார். அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சட்டத்தரணி தோழர் சுனில் வட்டகல உள்ளிட்டவர்கள் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.