(-Colombo, August 12, 2024-)
இலங்கைக்கான பாலஸ்தீனத்தின் தூதுவர் கலாநிதி சுஹய்ர் ஷயிட் அவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (12) பிற்பகல் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.
தனது பதவிக்காலம் நிறைவடைந்து சொந்த நாட்டுக்கு திரும்புவதாகக் கூறிய தூதுவர், பாலஸ்தீனத்தில் காசாவில் இடம்பெற்று வருகின்ற மனிதாபிமானமற்ற படுகொலைகளுக்கு எதிராக குரல் எழுப்பியதற்காகவும் பாலஸ்தீனத்தினத்திற்காக ஒத்துழைப்பு வழங்கியதற்காகவும் இதன்போது நன்றி தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் பிமல் ரத்நாயக்க கலந்துகொண்டிருந்தார்.