Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

“இந்த நேரத்தில் வேலைநிறுத்தம் என்பது மக்களை ஆட்சியாளர்களை நோக்கித் தள்ளிவிடுவதாகும்”-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் கே. டீ. லால்காந்த-

(-தேசிய தொழிற்சங்க நிலையத்தின் மறுமலர்ச்சியின் வருகைக்கான வேலைத்திட்டத்தை மக்கள்மயப்படுத்துதல் – 2024.07.11-)

NTUC

மூன்றாவது உலகத்தில் முன்னேற்றமடைந்து வருகின்ற ஒரு நாடு என நாங்கள் நீண்டகாலமாக பேசிவந்தோம். நான் பாடசாலை செல்கின்ற காலத்தில் அந்தக் கதையைக் கேட்டதும் எனக்கு 60 வயதாகின்ற வேளையிலாவது முன்னேற்றமடையுமென நினைத்தேன். எமது பிள்ளைகள் இளமைப் பருவத்தை அடையும்போது நாடு முன்னேற்றமடைந்திருக்குமென்ற ஓர் உணர்வு தோன்றியது. எனினும் 2022 ஏப்பிரல் மாதத்தில் நாங்கள் வங்குரோத்து அடைந்த நாடு என பிரகடனம் செய்யப்பட்டது. இப்போது நாங்கள் பொருளாதார, சமூக, கலாச்சாரம் ஆகிய எல்லாத்துறைகளிலும் சீரழிந்த வங்குரோத்து அடைந்த ஒரு நாடாவோம். ஆட்சியாளனும் உத்தியோகபூர்வமாக அதனை ஏற்றுக்கொண்டான். உழைக்கும் மக்கள் என்றவகையில் அரச பிரிவு, அரச ஆதிக்கமுடைய பிரிவு மற்றும் பொருளாதாரத்தின் மிகமுக்கியான பகுதியான தனியார் பிரிவும் பெருந்தோட்டப் பிரிவும் இருக்கின்றது. அதைப்போலவே இளைப்பாறியவர்களின் வாழ்க்கை சம்பந்தமாகவும் பேசப்படவேண்டும். இந்த அனைத்துத் துறைகளும் சீரழிந்துள்ளன. தொழிற்சங்கக் கோரிக்கைகளை அடிப்படையாகக்கொண்ட அனைத்துப் போராட்டங்களும் இடம்பெறுவது முன்னர்கூறிய வங்குரோத்து நிலைமையின் கீழாகும். இதற்கு முன்னர் அவ்வாறான நிலைமையொன்று இருக்கவில்லை.

வங்குரோத்து நிலைமைக்கு உள்ளாகியதன் காரணமாகவே 2022 இல் அதுவரை நிலவிய அரசியல் காரணமாக மக்கள் பிளவுபட்டு பிரிந்தார்கள். அதன் ஒரு விளைவுதான் கோட்டாபய ராஜபக்ஷ பதவியைக் கைவிட்டு தப்பியோடவேண்டி ஏற்பட்டமை. போராட்டத்தின்போது மக்கள் அரசியல் கலாச்சாரத்தினால் பிளவுண்டு பிரிந்தார்கள். 2022 மே மாதம் 09 ஆந் திகதி பிரதமர் தப்பியோடினார். இந்த நாட்டில் நிலவிய அரசியலில் இருந்து பிளவுபட்டு பிரிந்துசென்ற மக்கள் வீதியில் இறங்கி போராட்டமொன்றை நடாத்தியதால் வித்தியாசமான நிலைமையொன்று உருவாகியது. பொருளாதார, அரசியல், சமூக, கலாச்சார சீரழிவினைப்போன்றே ஆட்சியாளர்கள் தப்பியோடியதால் அரசியலில் புதிய நிலைமையொன்று உருவாகியது. இன்றளவில் ஆட்சியாளர்கள் விரட்டியடிக்கப்பட வேண்டுமென்று உழைக்கும் மக்கள் அணிதிரண்டுள்ள அரசியலொன்று உருவாகி இருக்கிறது. சீரழிவிற்கான பதிலென்றவகையில் ஆட்சியாளர்களை விரட்டியடிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். ஆட்சியாளர்களைத் தவிர ஏனைய அனைவரும் பொதுவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதனால் ஆட்சியாளர்களை விரட்டியடித்து நாட்டுக்கு புதியதொரு நிலைமையை, மறுமலர்ச்சியை, இதற்கு முன்னர் எமது நாட்டில் தோன்றியிராத புதிய நிலைமையொன்றை உருவாக்கிக்கொள்ள நிர்மாணிக்கவேண்டிய தேவையுடன் முழுநாடுமே துடித்துக்கொண்டிருக்கிறது. அதற்கான போராட்டமொன்று நாட்டில் அமுலாகிக்கொண்டிருக்கிறது. அது தேர்தல் களத்தின் போராட்டமாகும்.

தேர்தல் களத்தின் போராட்டத்தினால் இதுவரை இருந்த ஆட்சியாளர்களால் வெற்றிபெற முடியாதென்பதை ஆட்சியாளர்களும் மக்களும் விளங்கிக்கொண்டுள்ளார்கள். உள்ளூரதிகாரசபைத் தேர்தலை பிற்போட்டமை, மாகாண சபைகள் தேர்தல் பற்றி ஒருவார்த்தைகூட பேசாதிருப்பது, ஜனாதிபதித் தேர்தலை நெருங்கிக் கொண்டிருக்கையில் பல்வேறு நடிப்புகள் மூலமாக வெற்றிபெற இயலாதென்பதை தெளிவாக உணர்ந்துகொண்டிருக்கிறார்கள். ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக பொதுத்தேர்தலை நடாத்துவது எனும் உரையாடலில் ஆரம்பித்த பல்வேறு கலந்துரையாடல்களை இன்னமும் களத்திற்கு கொண்டுவருகிறார்கள். பெரும்பாலும் ஒக்டோபர் 05 ஆந் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடாத்தப்படுமென நம்பப்படுகின்றது. இதுவரை காலமும் இருந்த ஆட்சியாளர்களை விரட்டியடித்து உழைக்கும் மக்களை முதன்மையாகக்கொண்ட முற்போக்கான மக்களின் ஆட்சியை அமைத்துக்கொள்வதை நாங்கள் நெருங்கிக்கொண்டிருக்கிறோம். அதனால் எமது தொழில்சார் போராட்ட நடவடிக்கைகளை இந்த நிலைமையை நன்றாக அலசிப்பார்த்தே தெரிவுசெய்வோம். அப்படியில்லாமல் போராட்ட நடவடிக்கைகளை தெரிவுசெய்வதற்கான உரிமை எவருக்கும் கிடையாது. உழைக்கும் வர்க்கத்திற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் தமக்கே உரியதாக ஆட்சியை தாபித்துக்கொள்ள நெருங்கிக்கொண்டிருக்கையில் எந்தவொரு வேண்டுகோள் சம்பந்தமாகவும் இந்தப் புதிய அரசியல் நிலைமை பற்றிக் கவனத்திற்கொள்ளப்பட்டே ஆகவேண்டும். நிலைமைகளுக்குப் புறம்பான போராட்டங்கள் கிடையாது.

அரச பிரிவு, அரச ஆதிக்கமுடைய பிரிவு, தனியார் பிரிவும் மற்றும் பெருந்தோட்டப் பிரிவும் போன்றே இளைப்பாறியவர்களின் போராட்டங்களுக்கு பதில்களை கண்டறிவது எப்படியென நிலவுகின்ற இந்த நிலைமையின் கீழேயே கருத்திற்கொள்ள வேண்டும். அதிலிருந்து விலகிய தீர்மானங்களை எடுக்க முற்போக்கான எவருக்குமே இயலுமை கிடையாது. சம்பள முரண்பாட்டு பிரச்சினை மற்றும் வேறு விடயங்களை அடிப்படையாகக்கொண்டு புகையிரத வேலைநிறுத்தமொன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. ரூபா 25,000 வரையான கொடுப்பனவினை பெற்றுக்கொள்வதற்காக மற்றுமொரு போராட்டம் நடைபெற்று வருகின்றது. அதற்கு முன்னர் மருத்துவர்களுக்கான ரூபா 25,000 கொடுப்பனவினை ரூபா 70,000 வரை அதிகரித்தார்கள். அது அதிகரிக்கப்பட வேண்டும். அது தொடர்பில் எந்தவிதமான சிக்கலும் கிடையாது. பதவிநிலைத் தரத்தில் உள்ளவர்களுக்கும் அதிகரிக்கப்பட்டது. அதேவேளையில் ஏனையோருக்கும் அதிகரிக்கப்பட வேண்டுமென்ற போராட்டமும் சரியானதே. ஆசியரியர்களின் போராட்டத்தின்போது தொழிற்சங்க கூட்டமைப்பொன்று இருக்கிறது. இந்தக் கூட்டமைப்பு வேலைநிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இற்றைவரை பெறப்படவேண்டிய சம்பள அதிகரிப்பின் 2/3 பகுதியை பெற்றுக்கொள்ள முன்வந்தார்கள். சுகாதாரத்துறையில் வேலைநிறுத்தமல்லாத ஆர்ப்பாட்டங்கள் இன்னமும் இடம்பெற்று வருகின்றன. இங்கு அனைத்து தொழிற்சங்கங்ககளும் முன்வைத்துள்ள கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவையாகும்.

NTUC

இந்த நிலைமையயில் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களின் எதிர்பார்ப்பு நிலவுகின்றது. குறிப்பாக கல்வி சம்பந்தமான சிக்கல் பாரதூரமானதாகும். கொரோனா பிச்சினையில் இருந்து பொருளாதார நெருக்கடி நிலைமை வரை பிள்ளைகளின் கல்வி சீரழிந்துள்ளது. இவ்வாறான நிலைமையில் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்தால் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் வலிக்கின்றது. இந்த ஆட்சியாளர்களை விரட்டியடித்து புதிய ஆட்சியாளர்களை நிறுவுவதற்கான போராட்டத்தில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பிள்ளைகள் அனைவரும் ஒரு பக்கத்திலேயே இருக்கிறார்கள். வேலைநிறுத்தத்தில் அது இரண்டாக பிளவுபடுகின்றது. பெற்றோர்களும் பிள்ளைகளும் ஒரு பக்கத்தில் நின்றுகொண்டு அதிபர்களும் ஆசிரியர்களும் மற்றைய பக்கத்தில் நிற்கிறார்கள். பற்றிக்கொள்ள வைக்கோல்கூட இல்லாதிருக்கின்ற ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஆட்சியாளர் கும்பல் பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளின் பக்கத்தில் நிற்கிறார்கள். பொதுமக்களின் சார்பில் தோற்றுவதற்காக வைக்கோலில்கூட தொங்கிக்கொள்ள ஆளுங் கும்பல் முயற்சிசெய்கின்றது. அதிபர் ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்தை ரணில் விக்கிரமசிங்க பற்றிப்பிடிப்பதற்கான கொடியாக மாற்றிக்கொள்கிறார்கள். தேசிய தொழிற்சங்க நிலையத்தின் தூரநோக்கின்படி இந்த நேரத்தில் ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் ஆட்சியாளர்களுக்கு தொங்கிப்பிடிப்பதற்கான வாய்ப்பினையும் பொதுவான போராட்டத்திற்கு பாதகமான நிலைமையையும் உருவாக்குகின்றது. இந்த ஆட்சியாளர்களை விரட்டியடிப்பதற்காக போராடுவோம் என்றே நாங்கள் அதிபர் ஆசிரியர்களுக்கு கூறுகிறோம். ஆம், இந்த ஆட்சியாளர்களிடமிருந்து 2/3 சம்பள அதிகரிப்பினை வென்றெடுக்கவும் முடியாது.

நாங்கள் வேலைநிறுத்தம் செய்யாமல் வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமென முன்மொழிகிறோம். எனினும் தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோமென கூறிவருகின்றன. தோழர் மகிந்த போன்ற ஒருவர் அப்படிப்பட்ட இடத்தில் வர்க்கத்தின் ஒற்றுமையை வைத்துக்கொள்வதற்கான நிலைமையை சமநிலைப்படுத்த வேண்டும். பொது நடவடிக்கைகளில் இருக்கவும் வேண்டும். இந்த தொழிற்சங்கங்களின் நோக்கினை தேசிய போராட்டமொன்றை நோக்கிக் கொண்டுவர உள்ளகப் போராட்டமொன்றை மேற்கொள்ள வேண்டியுள்ளது. வேலைநிறுத்தத்திற்குப் பதிலாக ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களை இணைத்துக்கொண்ட ஏனைய எதிர்கால நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளார்கள். அது ஒரு நல்ல நிலைமையாகும். சுகாதாரத்துறையின் கோரிக்கைகளைப் பெற்றுக்கொள்வதற்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபடவேண்டுமென முன்மொழியப்பட்டவேளையில் நாங்கள் அது பொறுத்தமற்றதெனக் கூறினோம். நாமனைவரும் ஒன்றுசேர்ந்து “கோரிக்கைகளை பெற்றுக்கொடுக்கமுடியாத ஆட்சியாளர்களை விரட்டியடிப்போம்” எனும் போராட்டக் கோஷத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டும். புகையிரத வேலைநிறுத்தமொன்றை மேற்கொள்வதானால் சில தினங்களுக்கு முன்னராக அதனை அறிவிக்குமாறு நீண்டகாலமாக நாங்கள் அந்த தோழர்களிடம் சுட்டிக்காட்டி இருக்கிறோம். வேலையை முடித்துக்கொண்டு பிற்பகல் வீடுசெல்ல வரும்போது வேலைநிறுத்தம் செய்யப்பட்டிருப்பின் பொதுமக்கள் எல்லையற்ற சிரமங்களை அனுபவிப்பார்கள். தொழிற்சங்க இயக்கம் இந்த விடயங்கள் பற்றி அதிக கவனம் செலுத்தவேண்டும்.

இந்த ஆட்சியாளர்கள் உழைக்கும் மக்களுக்கு பெற்றுக்கொடுத்த போராட்டக்களங்கள் இருந்தன. நடுவீதி ஒரு போராட்டக் களமாகும். நடுவீதியின் போராட்டத்தை தேசிய மட்டத்திற்கு கொண்டுவந்தால் அது வேலைநிறுத்தத்தைவிட பலம்பொருந்தியதாகும். ஆர்ப்பாட்டங்களுடன் பொதுமக்கள் இணைவார்களேயொழிய எதிர்க்கமாட்டார்கள். எனினும் ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டால் பெற்றொர்களும் பிள்ளைகளும் எதிர்ப்பதைப்போன்றே ஆட்சியாளர்களுக்கு தொங்கிப்பிடிக்க வைக்கோலும் அகப்பட்டுவிடும். கல்வி வெள்ளையறிக்கையைக் கொண்டுவந்து கல்வியை நாசமாக்க நடவடிக்கை எடுத்த ரணில் விக்கிரமசிங்க பிள்ளைகளின் கல்விக்காக தோற்றுகின்ற வீரர்களாக மாறவும் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொள்கிறார்கள். வேலை நிறுத்தத்தினூடாக சமூகம் இரண்டாக பிளவுபடுகிறது. ஆர்ப்பாட்டத்தின் பலம்பொருந்திய தன்மை சரியான கருத்தியல் வெற்றியின் மூலமாக கொண்டுவரப்படுகிறது. 5/6 பெருன்பான்மை பலத்தை கொண்டிருந்த அரசாங்கத்துடன் பொதுமக்கள் இருந்த 1980 ஜுலை வேலை நிறுத்த தருணத்தில் ஆட்சியாளர்களால் அதனை தாக்கி அடக்க இயலுமாயிற்று. இன்று பொதுமக்கள் அணிதிரண்டிருப்பது ஆட்சியாளர்களை விரட்டியடிப்பதற்காகும். அத்தகைய தருணத்தில் பொதுமக்களிடமிருந்து விலகி போராட்டத்தை கொண்டு செல்வதென்பது அறிந்தோ அறியாமலோ ஆட்சியாளனுக்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதாகும்.
இற்றைவரை பல்வேறு போராட்டக்களங்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோதிலும் பொதுமக்கள் போராட்டக்களத்தில் வெற்றிபெற முடியவில்லை. ஒன்றில் சக்திகள் அவற்றை அடக்கின. கட்சிகளை தடைசெய்தார்கள். எனினும் இலங்கையில் முதல் தடவையாக அவர்களின் போராட்டக்களமான தோ்தல் களத்திற்கு மிகவும் ஒழுங்கமைந்த வகையில் பொதுமக்கள் பிரவேசித்துள்ளார்கள். அதனால் தொழிற்சங்கங்களுக்கும் மக்களுக்குமிடையே பிளவினை ஏற்படுத்த ஆட்சியாளர்கள் அடிக்கடி முயற்சி செய்கிறார்கள். எனினும் ஆட்சியாளர்கள் வேறு வழியில் சென்று மக்களின் உரிமைகளை வழங்காமல் தோ்தலை பிற்போட முயற்சி செய்வார்களாயின் போராட்டக்களத்தை பலப்படுத்தி முன்கொண்டு செல்லவேண்டும். அவ்வாறு செய்யாமல் ஆட்சியாளர்களுக்கு பற்றிக்கொள்ள கொடியை வழங்க குறிப்பாக சுகாதாரம் மற்றும் கல்வித்துறையில் இடமளிக்கக்கூடாது. தொடர்ச்சியான வேலை நிறுத்தம் கிடையாது, தொடர்ச்சியான போராட்டங்கள் இருக்கின்றன. இப்பொழுது இடம்பெற்றுக்கொண்டிருப்பது கோல்பேஸ் போராட்டத்தின் மற்றுமொரு கட்டாகும். கோல்பேஸில் நிறைவு செய்ய முடியாமல் போன வெற்றியை தோ்தல் போராட்டக்களத்தில் பெற்றுக்கொள்ள அண்மித்து வருகிறோம். ஜனாதிபதி பணியாட்டொகுதியில் சம்பளம் பெறுகின்ற தொழிற்சங்க தலைவர்களென கூறிக்கொள்கின்றவர்கள் மக்களை பாதிக்கின்ற தொழிற்சங்க போராட்டங்களை வெளியில் போடுவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். புகையிரத வேலை நிறுத்தம் அப்படிப்பட்ட ஒன்றா என்கின்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது. பழைய மரபுகளை அடிப்படையாகக் கொண்டு போராடுகின்ற யுகமல்ல தற்போது இருப்பது. வித்தியாசமான நிலைமையே காணப்படுகின்றது. இந்த நிலைமையுடன் வித்தியாசமானதாக இருந்து புதிய போராட்டங்களை அறிமுகம் செய்யமுடியாவிட்டால் அது இதுவரை நிலவிய தொழிற்சங்க போராட்டங்களுக்கும் புரிகின்ற அநியாயமாகும். அறிந்தோ அறியாமலோ போராட்டத்தின் வெற்றிக்கொடியை ஏந்துவதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வார்களாயின் அதுவொரு துரோகச் செயலாகும்.

NTUC

மறுமலர்ச்சி யுகத்தை பெற்றுக்கொள்வதற்காக புதிய நிலைமைகளுடன் மாற்றமடைவதையே செய்ய வேண்டும். இந்த இடத்திற்கு அப்பால் மக்கள் நேயமுள்ள ஆட்சியொன்றை நிறுவுகின்ற சுற்றுச்சூழலில் தொழிற்சார் போராட்டங்கள் அனைத்தையும் மேற்கொண்டு வருகின்ற அதேவேளையில் தேசிய தொழிற்சங்க நிலையம் எந்தவிதமான வேலை நிறுத்தத்திலும் பங்கேற்காமை உறுதியானதாகும். ஏனைய தொழிற்சங்கங்களுக்கு நாங்கள் முன்மொழிவது அனைவரும் ஒன்றுசோ்ந்து இந்த ஆட்சியாளர்களை விரட்டியடிப்போம் என்பதாகும். உலக வரலாறு பூராவிலும் நிலவிய அனைத்துப் போராட்டங்களும் முற்போக்கானவையல்ல. பிற்போக்கான போராட்டங்களும் இருந்திருக்கின்றன. முற்போக்கான பகுதிகளுக்கிடையில் பிற்போக்கின் பகுதிகளும் போராடி வருகின்றன. போராட்டமொன்றை நடத்தக்கூடாத ஒரு நேரத்தில் அதிகமான போராட்டங்களை வேண்டி நிற்பது பிற்போக்கான குழுக்களே. இந்த நிலைமையை எம்மால் இனங்காணக்கூடியதாக இருக்கவேண்டும். ரணில் ராஜபக்ஷாக்களை ஒட்டுமொத்தமாக விரயடிப்பதற்கான வேலை நிறுத்தமொன்றுக்கு அழைப்பு விடுத்தாலேயொழிய தேசிய தொழிற்சங்க நிலையம் வேறு கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட போராட்டங்களில் ஈடுபடமாட்டாது. அதற்குப் பதிலாக போராட வேண்டிய எத்தனையோ விடயங்கள் இருக்கின்றன. கடந்த நாட்களில் “வேலை நிறுத்தம் செய்து கொண்டே போராடுவோமேயொழிய வேலை செய்து கொண்டு போராடுவதில்லை.” எனும் போராட்டக் கோஷமொன்று வந்தது. இந்த போராட்டக் கோஷம் ரணில்களின் இல்லாவிட்டால் ஐ.ம.ச. யின் ஒன்றே அன்றி பொதுமக்களின் ஒன்றல்ல. மேலெழுந்தவாரியாக நோக்கும்போது முற்போக்கான ஒன்றாக இருந்தாலும் ஆழமாக பார்த்தால் இந்தப் போராட்டக்கோஷம் மிகவும் பிற்போக்கானது. மஹிந்தாக்களை கோட்டாபயக்களை விரட்டியடித்தது வேலை செய்து கொண்டே முன்னெடுத்த போராட்டங்கள் மூலமாகவே.

ஆசிரியர்களின் பிள்ளைகளின் தேவைகளுக்காக பெற்றோர்களால் வீதியில் இறங்க முடியும். குறிப்பாக இந்த நேரத்தில் வேலை நிறுத்தம் என்பது மக்களை துரோகத்தனமான ஆட்சியாளர்களை நோக்கி தள்ளிவிடுவதாகும். அதாவது ஆட்சியாளர்களுக்காக புரிகின்ற போராட்டமாகும். எனினும் எங்களுடைய கோரிக்கைகளை பெற்றுக்கொடுக்க முடியாத ஆட்சியாளர்களை விரட்டியடிப்பதற்காக பொதுவான போராட்டமொன்றை செய்தோம். கோல்ஃபேஸ் போராட்டத்தை அரைவாசியில் நிறைவு செய்யாமல் பாராளுமன்றத்தைச் சுற்றி வளைக்கின்ற இடத்திற்கு ஒட்டுமொத்த மக்களையும் கொண்டுவந்திருப்பின் அந்தப் போராட்டம் நிறைவடையும். எனினும் கோல்ஃபேஸ் போராட்டத்தின் ஒரு சில தலைவர்கள் அந்தப் போராட்டம் முன்னேறிச் செல்ல இடமளிக்காதிருந்தது மாத்திரமல்ல அறிவித்தல்களைக்கூட வெளியிட்டார்கள். ஜனாதிபதியை விரட்டியடித்து பாராளுமன்றத்தை வைத்துக்கொண்டதன் மூலமாக மீண்டும் கட்டியெழுப்பிய ஜனாதிபதி பதவி காரணமாகவே மக்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கோல்ஃபேஸ் போராட்டத்தை அரைகுறையாக செய்தமையால் ரணில் விக்கிரமசிங்க எனப்படுகின்ற ஆட்சியாளர் ஒருவர் தொடர்ச்சியாக கொடிய பாராளுமன்றத்தினால் கட்டியெழுப்பப்பட்டு இற்றைவரை செயலாற்றி வருகிறார். 76 வருடகால ஆட்சியை விரட்டியடிக்க சரிவர செயலாற்றாவிட்டால் கோல்ஃபேஸ் போராட்டத்தைப் போன்றே இந்த வாய்ப்பும் கருச்சிதைவு அடையமுடியும். நாங்கள் அதற்கு இடமளிக்கக்கூடாது.

தோ்தல் போராட்டக்களத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் உயர்த்தி வைக்கின்ற வெற்றியின் கொடி ஏற்றிவைக்கப்படுவது முட்டாள்தனமான வேலை நிறுத்தங்களால் மீண்டும் செயலிழக்கக்கூடும். முட்டாள்த்தனமானவை எனக்கூறப்படுவது பொதுமக்களை பிளவுபடுத்துகின்ற செயற்பாடுகளுக்காகும். கோல்ஃபேஸ் போராட்டம் கருச்சிதைவு அடைந்ததுபோல் இந்த போராட்டமும் கருச்சிதைவடைந்தால் அது பாரிய அநியாயமாகும். தற்போது தொழிற்சங்க போராட்டத்தின் பிற்போக்காளர்கள் அளவுக்கு வேறு எவருமே போராட்டக்குணம் பொருந்தியவர்களல்ல. தோ்தல் களத்தில் போராட்டத்தை குற்றுயிராக்க தொழிற்சங்க பிற்போக்கான தன்மை வருமாயின் நாங்கள் அந்த கூட்டமைவுகளிலிருந்து வெளியேறி எங்களுடைய நிலைப்பாட்டின் பேரில் சரியான நடவடிக்கைகளை கொண்டு போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டும். உழைத்துக்கொண்டே போராட்டத்தில் ஈடுபடுகின்ற அடிப்படை போராட்டக்களத்தை பலப்படுத்துவதற்கான புதிய நடவடிக்கைகளை தேடிடுவோம். உழைக்கும் மக்களின் பலத்தை நிறுவி எங்களுடைய உரிமைகளை வென்றெடுப்போம்.