-Colombo, January 05, 2024-
இன்றளவில் எமது நாட்டு மக்கள் எதிர்நோக்குகின்ற பிரதானமான பிரச்சினை தாங்கமுடியாத வகையில் பொருட்களின் விலை அதிகரித்தலாகும். குடும்பப் பெண்கள், எமது தாய்மார்கள் பொருட்களின் விலையேற்றத்தை அதிகமாக உணர்கிறார்கள். முழு நாட்டிலும் இருக்கின்ற பெண்களைச் சுற்றி பற்றியெரிகின்ற குடும்பங்களின் தீயினை ஆட்சியாளர்கள் கடுகளவேனும் உணரவில்லை. 2024 ஆம் ஆண்டு பிறக்கையில் மாபெரும் பொருளாதார வீழ்ச்சியின் சாயலையே ஒவ்வொருவரும் உணர்ந்தார்கள். நாளைய தினத்தில் வாழ்வது எவ்வாறு, வற் வரிக்கு தாக்குப் பிடிப்பது எவ்வாறு எனும் பாரிய அதிர்ச்சி அனைவருக்குமே இருந்தது. செய்தித்தாளில் ஒருபக்கத்தில் புதுவருட நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் மறு பக்கத்தில் சனவரி மதலாந் திகதியன்றே வற் வரி விதிக்கப்படுகின்ற விதமும் இருந்தது. ” 97 வகையான பண்டங்களுக்கு புதிதாக வற் வரி விதிக்கப்படுகின்றது, டீசல், பெற்றோல், எரிவாயுவுக்கும் வற் விதிக்கப்படுகின்றது, அதனால் பணவீக்கம் அதிகரிக்கின்றது” போன்ற பல்வேறு தலைப்புகளில் செய்திகள் வெளியாகி இருந்தன. தாய்மார்கள் பட்டினியுடன் இருந்து பிள்ளைகளுக்கு ஒன்றுவிட்டு ஒருவேளையேனும் உணவு கொடுக்கத் தூண்டப்படுகின்ற அளவுக்கு துன்பந்தருகின்ற பணவீக்கமே நிலவுகின்றது. பிள்ளைகளின் துயரங்கள், பெண்களின் துயரங்கள் , வாழ்க்கைச் சுமையை அரசாங்கத்தினால் அமைச்சர்களால் உணரமுடியாது.
மக்களின் வருமானம் ஒரு ரூபாவினால்கூட உயரவில்லை. அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை ரூபா 10,000/- அதிகரிப்பதாகக் கூறினாலும் ஏனைய மக்கள் அனைவர்மீதும் சுமத்தப்படுகின்ற வற் வரிச் சுமையை எவ்வாறு தாங்கிக்கொள்வது? 2024 வரவு செலவினை நிறைவேற்றிக்கொள்ள வாக்குகளை அளித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தவளைகள்போல் தாவத்தொடங்கி உள்ளார்கள். எனினும் அவர்கள் அங்கீகரித்துக்கொடுத்த வரவுசெலவின்படி பண்டங்கள் மற்றும் சேவைகள்மீது இவ்வருடத்தில் 2235 பில்லியன் ரூபாவை அறவிட்டுக்கொள்ள தயாராகி வருகிறார்கள். இதுவரை 15% ஆக நிலவிய வற் வரியை 18% வரை அதிகரித்து மேலும் 97 வகையான பண்டங்கள் மற்றும் சேவைகளை புதிதாக சேர்த்து ஒரேயடியாக 18% வரியை விதித்ததன் மூலமாக இந்த 2235 பில்லியன் ரூபாவை அறவிட்டுக்கொள்ள எதிர்பார்க்கிறார்கள். இந்த வரி விதிக்கப்படுவது நாட்டின் அபிவிருத்திக்காகவல்ல.
சனவரி மாதத்தில் இருந்து ஒருவர் மாதத்திற்கு 38,000 ரூபா கடன் வட்டியை செலுத்தவேண்டி நேரிட்டுள்ளதென பேராதனை பல்கலைக்கழக பொருளியல் கற்கைப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள சுட்டிக்காட்டி உள்ளார். அபிவிருத்தியின் மறைவில் இருந்துகொண்டு கடன்வாங்கி கொள்ளையடித்தமையாலேயே நாங்கள் செலுத்துகின்ற வரியிலிருந்து இவ்வளவு பெருந்தொகையான கடன்வட்டியை செலுத்தவேண்டி நேரிட்டுள்ளது. அரசாங்க வருமானத்தின் 93% ஐ வரி ஊடாக பெற்றுக்கொள்ள அரசாங்கம் செயலாற்றி உள்ளது.
இவ்விதமாக உணவு உள்ளிட்ட அத்தியாவசிய நுகர்வுப் பண்டங்கள் மீது வரி விதித்து மக்களுக்கு புல்லை சாப்பிடுமாறா கூறுகிறார்கள்? எமது நாட்டு மக்கள்மீது வரிவிதித்து களைத்துப்போகச் செய்வித்து, துன்புறுத்தி, மௌனிகளாக்கி வைக்க அரசாங்கம் தயாராகி வந்தாலும் மக்கள் அதற்குத் தயாரில்லை. தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் என்றவகையில் ஊர்ஊராகச் சென்று பொருளாதார கொலைஞர்கள் யாரென மக்களுக்கு தெளிவுபடுத்துகிறோம். இந்த வரியை சேகரித்ததும் எமது நாட்டின் போசாக்கின்மைக்கு கர்ப்பிணித் தாய்மார்களின் இரத்தச்சோகைக்கு என்ன நேரிடும்? பிள்ளைகளின் எதிர்காலம் பாதுகாப்பற்றது. எமது தாய்மார்களின் வயிற்றைக் கட்டிக்கொள்ளுமாறு கூறுகின்ற ஆட்சியாளர்கள் அனைத்துவிதமான சுகபோகங்களையும் அனுபவித்து வருகிறார்கள். அந்த முறையியலை மாற்றியமைத்து பொருளாதாரக் கொலைஞர்களுக்கு தண்டனை வழங்குவதற்கான காலம் தற்போது எமக்கு பிறந்துள்ளது. பொருளாதாரக் கொலைஞர்கள் கட்சி தாவிக்கொண்டு ஆடைகளை மாற்றிக்கொண்டு ஆட்சிக்குவர தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நிலைமையை மாற்றியமைத்திட பெண்களாகிய எம்மிடம் துணிச்சல் மாத்திரமே எஞ்சியுள்ளது. இந்த துணிச்சலுடன் புதிய தேசமொன்றைக் கட்டியெழுப்பிட தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றுசேருமாறு நாங்கள் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.
“ரணில் ராஜபக்ஷ அரசாங்கம் எம்மீது தொடர்ச்சியாக சுமத்துகின்ற இந்த சுமையை தொடர்ந்தும் மௌனமாக தாங்கிக்கொண்டிருக்க வேண்டியதில்லை.”
–தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் விராய் கெலீ பல்தசார்–
புதுவருட நல்வாழ்த்து அனுப்பிவைக்கப்படுகின்ற காலத்தில் எமக்கு குறுந்தகவலாக கிடைத்ததோ பண்டங்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிப்பு பற்றிய செய்தியாகும். அதனூடாக இந்த வருடத்தை நலமானதாக அமைத்துக்கொள்ள எவ்வாறு அணிதிரள்வது என்பதைத்தான் நாங்கள் கலந்துரையாட வேண்டியுள்ளது. வற் வரி அதிகரிக்கப்பட முன்னர் குடித்தொகை, புள்ளிவிபரவியல் திணைக்களம் அண்மையில் மேற்கொண்ட ஆய்வின் பெறுபேறு வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் 60.5% வீடுகளின் மாதாந்த வருமானம் வீழ்ச்சியடைந்து எமது 91% வீடுகளின் மாதாந்த செலவுகள் அதிகரித்துவிட்டன. இந்த புள்ளிவிபரத் தரவுகளில் 91% எனக் கூறினாலும் நூற்றுக்கு நூறுவீதமான வீடுகளிலும் இவ்வாறான நிலைமையே காணப்படுகின்றது. 03 – 21 வருட வயதிற்கிடைப்பட்ட எமது பிள்ளைகளின் கல்வி 54.9% ஆல் வீழ்ச்சியடைய பொருளாதார நெருக்கடி ஏதுவாக அமைந்துள்ளதென மேற்படி ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. அன்றாட கூலியைப் பெறுகின்றவர்கள் இன்றும் ரூபா 1500/- – 2000/- இற்கு இடையிலான வருமானத்தையே பெறுகிறார்கள். மேலும் சிலர் நாளொன்றுக்கு ரூபா 1000/- இற்கும் குறைவான வேலையையே செய்துவருகிறார்கள். நூளொன்றில் ரூபா 2000/- வீதம் பெற்றாலும் முழுமாதத்திற்குமே கிடைப்பது ரூபா 60,000/- மாத்திரமே. லயிற் பில், தண்ணீர் பில் போக்குவரத்து பில் என்பவற்றைத் தாங்கிக்கொண்டு எவ்வாறு உணவைக்கூட எவ்வாறு பெற்றுக்கொள்வது? பிள்ளைகளும் பெற்றோர்களும் இருக்கின்ற குடும்பங்களில் இந்த ரூபா 60,000/- உயிர்வாழப் போதாதென்பதால் பாட்டிமார்களும்கூட வேலைதேடிச் செல்கிறார்கள்.
எமது மனைப்பெண்கள், பெண்கள், குடும்ப அமைப்பு அத்தகைய நெருக்கடிக்குள் இருப்பதோடு திடீரென நோயுற்றால் அரசாங்க வைத்தியசாலையில்கூட செய்துகொள்ள முடியாத பரிசோதனைகளை தனியார் துறையில் செய்துகொள்ள வேண்டும். மருந்துகளை விலைக்குவாங்க வேண்டும். இதனால் வருடத்தின் பின்னரைப்பகுதியில் தங்க ஆபரணங்களை அடகுவைத்து கடன்பெறுதல் பெருமளவில் அதிகரித்துள்ளது. முன்னர் தங்க நகைகளை அடகுவைத்து கடன்பெற்றது அவசரத் தேவைகளுக்காகவே. ஆனால் தற்போது அன்றாட உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக, லயிற் பில் கட்டுவதற்காக அடகுக்கடன் பெறவேண்டிய நிலையேற்பட்டுள்ளது.
பாடசாலைத் தவணையை புதிதாக தொடங்கும்போது புதிய புத்தகப் பட்டியலுக்கு ரூபா இருபதாயிரம் தொடக்கம் இருபத்தையாயிரம்வரை பணத்தை செலவிட நேர்ந்துள்ளது. இரண்டு மூன்று பிள்ளைகள் இருக்கின்ற குடும்பங்கள் இந்த சுமையை எவ்வாறு தாங்கிக்கொள்வது? எமது குடும்பங்களில் உடல்ரீதியான அழுத்தத்திற்கு, உளரீதியான அழுத்தத்திற்கு இலக்காகி குடும்ப உறவுகளைப் பேணிவருவதும் சிக்கலாக மாறியுள்ளது. சமூக உறவுகள் முற்றாகவே சிதைவடைந்துவிட்டன. சேகரிக்கப்படவேண்டியபோதிலும் சேகரித்துக் கொள்ளப்படாத வரி 900 பில்லியன் ரூபாவை விஞ்சியுள்ளதென ஒருசில அறிக்கைகள் குறிப்பிட்டுள்ளன. சாதாரண பொதுமக்கள் மீது புதிதாக வற் வரி விதிப்பது இதோ இந்த விதத்தில் ஊழல், திருட்டு, மோசடிகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள இடமளித்துள்ள பின்னணியிலேயே ஆகும். தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் என்றவகையில் முழுநாட்டினதும் பெண்களாகிய நாங்கள் நாட்டின் பெண்களை உள்ளிட்ட அனைவருக்கும் விழிப்புணர்வூட்டி முன்நோக்கி நகர்கின்றோம். தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக அச்சமின்றி இந்த பயணத்தை தொடர வருமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம். மகிழ்ச்சி என்பது எமது உரிமையாகும். ரணில் ராஜபக்ஷ அரசாங்கம் எம்மீது தொடர்ச்சியாக சுமத்துகின்ற இந்த வரிகளை மௌனமாக இனிமேலும் தாங்கவேண்டியதில்லை.
“சர்வதேசத்திற்கு ஐ.எம்.எஃப். இற்கு மெஜிக் காட்டி மகிழ்விக்கின்ற அடிப்படையில் அரசாங்கம் செயலாற்றி வருகின்றது.“
–தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய–
ஒரு நாட்டின் வரிக்கொள்கையை நடைமுறைப்படுத்துகையில் கவனத்திற் கொள்ளவேண்டிய சில அடிப்படை விடயங்கள் உள்ளன. நியாயமானதாக அமைதல், ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக அமைதல், வெளிப்படைத்தன்மை கொண்டதாக அமுலாக்குதல், முறைகேடுகள் குறைவடையத்தக்கதாக அமுலாக்குதல் மற்றும் வரி செலுத்துபவர்களுக்கு நன்மைகள் கிடைக்கின்றவகையில் அமைதல் வேண்டும். இந்த எந்தவிதமான கோட்பாடும் இன்றளவில் எமது நாட்டில் அமுலில் இல்லை. இன்றளவில் மிகவும் அநீதியானவகையில் அமுலாக்கப்பட்டுள்ள வரிக்கொள்கையின் அடிப்படையில் வற்வரி விதிக்கப்பட்டுள்ளது. இற்றைக்கு இரண்டு வருடங்களாக அமுலில் உள்ள பொருளாதாரத்தைச் சுருக்குகின்ற கொள்கைக்குள் மக்களின் கொள்வனவு ஆற்றல் முற்றாகவே அழிக்கப்பட்டுவிட்டது. பொருளாதாரத்தில் பங்கேற்பதற்கான ஆற்றல் மக்களுக்கு முடக்கப்பட்டு பயணிக்கின்ற இந்த பயணம் மக்களின் பக்கத்தில் அல்ல. இன்றளவில் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட இந்த அரசாங்கம் வரி மற்றும் பொருளாதாரம் பற்றி சிந்திப்பது கணக்குகளை இணக்கஞ்செய்யும் பக்கத்தில் இருந்து மாத்திரம்தான். பொருளாதாரம் இறுதியாக தாக்கமேற்படுத்துகின்ற மனித வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த பிரசைகள் பற்றி எந்தவிதமான கரிசனையும் கிடையாது. மனிதர்களும் வெறுமனே புள்ளிவிபரங்கள் மாத்திரமே என ஆட்சியாளர்கள் நினைப்பார்களாயின் அத்தகைய ஆட்சியாளர்கள் இவ்விதமான பொருளாதார தீர்மானங்களைத்தான் எடுப்பார்கள். இந்த அரசாங்கத்திற்கு மனிதர்கள் அல்லது மனிதர்கள் உயிர்வாழ்வது பற்றி எந்தவிதமான ஏற்புடைமையும் கிடையாது. சர்வதேசத்திற்கு ஐ.எம்.எஃப். இற்கு மெஜிக்காட்டி மகிழ்விக்கின்ற அடிப்படையில் அரசாங்கம் செயலாற்றி வருகின்றது.
புதிதாக விதித்த வரி காரணமாக மக்களுக்கு தொல்லைகள் ஏற்படுவதைப்போலவே ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் பாரிய தாக்கம் ஏற்படுகின்றது. எல்லாவற்றையும் வெட்டிவிட்டு ஆகக்குறைந்ததில் சீவிப்பது பற்றியே எல்லோரும் சிந்திக்கிறார்கள். தேங்காய் சம்பலுக்ககு வெங்காயம் போடுவது எப்படியென மனைப்பெண்கள் சிந்திப்பது போன்றே பொருளாதாரத்துடன் சம்பந்தப்பட்ட தொழிலதிபர்களும் சிந்திக்கிறார்கள். இதுவரை பெற்றோர்கள் “என்ன செய்யாவிட்டாலும் பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டும்” என நினைத்தார்கள். ஆனால் இன்றளவில் பிள்ளைகளை கல்வியில் இருந்து வெளியேற்றுகிறார்கள். எப்படியாவது வருமானத்தை தேடிக்கொள்ளும் இடத்திற்கு 15 – 16 வயதுடைய பிள்ளைகள் வழிப்படுத்தப்பட்டுள்ளார்கள். மக்களின் அன்றாட அழுத்தங்கள் பற்றி எந்தவிதமாக கூருணர்வுமற்றவர்கள் என்பது அவர்கள் சொல்கின்ற செய்கின்றவற்றிலிருந்து தெளிவாகின்றது.
மாற்றீடு கிடையாதென சனாதிபதி கூறுகின்ற கதை அயோக்கியத்தனமான கதையாகும். எந்தவொரு பிரச்சினைக்கும் மாற்றீடு இருக்கின்றது, பதில் கிடைக்கின்றது. எந்த மாற்றீட்டினை தெரிவுசெய்வது என்பது தீர்மானிக்கப்படுவது நாங்கள் வகிக்கின்ற கருத்தியல் மற்றும் மக்களுடன் நிலவுகின்ற தொடர்பின் அடிப்படையிலாகும். மக்கள் மீது சுமையேற்ற வேண்டுமென்ற முடிவினை ரணில் விக்கிரமசிங்க எடுத்துள்ளார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கமொன்றின்கீழ் நியாயமான வரித்திட்டமொன்றை உருவாக்குதல், வரி காரணமாக பொருளாதாரம் சுருங்காமை மற்றும் வரிமுறைமையை வெளிப்படைத்தன்மை கொண்டதாக அமுலாக்குவதற்காக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். பாவனையாளரிடமிருந்து அறவிடப்படுகின்ற வற் வரி அதேவிதத்தில் திறைசேரியை சென்றடைகின்றதா என்பதை ஆராய்வதற்கான முறையியல்கள் இருக்கின்றனவா? மக்களை வரிச்சுமையால் பிழிந்தெடுத்தபோதிலும் அந்த வரியை திறைசேரிக்கு எடுப்பதற்கான தொழில்நுட்பம் அமுலாக்கப்படவில்லை. தொடர்ந்தும் தமது அதிகாரத்தை பாதுகாத்துக்கொள்வது பற்றி மாத்திரமே அவர்கள் சிந்திக்கிறார்கள். இந்த நாட்டுப் பெண்கள் துணிச்சல்மிக்க, திராணியுள்ளவர்கள் என்பதை வரலாற்றுக்காலம் பூராவிலும் நிரூபித்துள்ளார்கள். எமது நாடு அபாயநேர்வினை சந்தித்த எல்லாவேளைகளிலும் பெண்கள் முன்னணிக்கு வந்துள்ளார்கள். மீண்டும் அத்தகைய தருணமொன்று வந்துள்ளது. பெண்களாகி நாங்கள் தலைமைத்துவம் பெறவேண்டும். மேலும் ஒழுங்கமைந்து இந்த வருடத்தில் மூர்க்கத்தனமான ஆட்சியை முடிவுறுத்துவதற்காக முனைப்பாக முன்வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளக்கான பதில்கள்…
கேள்வி: வற்வரியை சில காலத்திற்காக விதித்துள்ளதாக சனாதிபதியை உள்ளிட்ட அரசாங்கம் கூறுகின்றது. அதனை ஏற்றுக்கொள்ள முடியுமா?
பதில்: எமது நாட்டில் வரிக்கொள்கை குறைந்த இடைவெளியில் மாற்றப்படுகின்றது. அவ்வாறு மாற்றுவதே ஒரு பிரச்சினையாகும். நிலையான வரிக்கொள்கையொன்று இல்லாமை பாரிய பிரச்சினையாகும். மறுபுறத்தில் வரி அறவிட்டு பொருளாதாரத்தை பலப்படுத்த முடியாது. வரி என்பது ஒட்டுமொத்த பொருளாதாரத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். வருமானத்தை சேகரிக்கின்ற ஒரே மார்க்கம் வரியெனில் அந்த பொருளாதாரத்தினால் கரைசேர முடியாது. கடன் சுமை மற்றும் பொருளாதாரம் சுருங்குதல் ஆகிய இரண்டு பிரதான சிக்கல்களை நாங்கள் எதிர்நோக்கிஇருக்கிறோம். வருமானத்தை தேடுகின்ற ஒரே மார்க்கம் வரி என நினைப்பதாயின் அதைப்போன்ற முட்டாள்த்தனமான சிந்தனை வேறோன்றும் கிடையாது.
கேள்வி: வயது 18 வருடங்களுக்கு மேற்பட்டவர்களுக்கு வரி அறவிடுவதற்கான பின் இலக்கமொன்று வழங்கப்பட வேண்டுமென விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்படுகின்ற பிரதிவிளைவுகள் என்ன?
பதில்: பொருளாதாரம் பாரிய நெருக்கடிக்கு இலக்காகியுள்ள வேளையில் மக்கள் ஒரு திட்டத்திற்குள் சேர்த்துக்கொள்ளவேண்டிய திட்டமொன்று அரசாங்கத்திற்கு இருக்கின்றது. தொடர்ச்சியாக தலைக்கனத்தை வெளிக்காட்டுகின்ற அரசாங்கத்தினால் மக்களை ஒன்றுசேர்த்துக்கொண்டு பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது. ஒட்டுமொத்தமாக டெக்ஸ் பைஃல் ஒன்று இருப்பதை ஏற்றுக்கொள்ளமுடிந்தபோதிலும் எமது நாட்டுக்கு அதனை அறிமுகஞ் செய்வது மனிதர்களின் வாழ்க்கையை மிகவும் குழப்பியடித்து துன்பத்தில் ஆழ்த்தியுள்ள பின்னணியிலாகும்.