(-ஊடக சந்திப்பு – 2024.06.12-)
இன்று இந்த ஊடக சந்திப்பில் ரெசாங்கம் தொடரந்தும் கடனெடுத்து நாட்டைக் கடன் நெருக்கடிக்குள் அமிழத்’திவிடுதல் பற்றி கருத்துரைக்க எதிர்பார்க்கிறேன். 2022 ஏப்பிறல் 12 ஆந் திகதி இலங்கை பொருளாதாரரீதியாக வங்குரோத்து நிலையுற்ற நாடாக மத்திய வங்கி ஆளுனரால் உத்தியோகபூர்வமாக பிரகடனஞ் செய்யப்பட்டது. இந்த வங்ரோத்து நிலையை அடைய பிரதான காரணம் நாங்கள் வாங்கிய கடனை செலுத்து முடியாத நிலைக்கு நாடு வங்குரோத்து அடைந்தமையாகும். அரசாங்கம் கூறியவகையில் நெருக்கடி தோன்றுகின்ற வேளையில் எமது ஒட்டுமொத்த கடன்சுமை, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுரீதியாக 83 பில்லியன் டொலர்களாக அமைந்திருந்தது. (83,000 மில்லியன் டொலர்) இந்த கடள் நெருக்கடி நாட்டை தொடர்ச்சியாக பொருளாதாரப் படுகுழிக்குள் வீழ்த்தியது.
இந்த கடன் நெருக்கடியைத் தீர்த்துக்கொள்ள சர்வதேச நாணய நிதியத்திற்குச் சென்றார்கள். சர்வதேச நாணய நிதியத்திற்குச் சென்றமைக்கான பிரதான நோக்கம் நாங்கள் பெற்றுக்கொண்ட வெளிநாட்டுக் கடன்களை மறுசீரமைத்துக்கொள்ள உதவி பெறுவதாகும். அதற்காக ஐஎம்ஃப் இலங்கை அரசாங்கத்துடன் ஓர் உடன்படிக்கையை செய்துகொண்டது. இந்த உடன்படிக்கை மூலமாக பல்வேறு முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டன. அரசாங்கம் ஐஎம்எஃப் முன்மொழிவுகளை அமுலாக்கியது. அதற்கிணங்க மக்கள்மீத வரிச்சுமையை அதிகரித்தல், வலுச்சக்தி விலையை அதிகரித்தல், மின்சாரம், எரிபொருள், எரிவாயு விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது. மக்கள்மீத வரிச்சுமை அதிகரிக்கப்பட்டு, சேவைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டு மக்கள்மீதான அழுத்தம் அதிகரிக்கப்பட்டது. வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு ஒருபுறமிருக்க உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது. ஈபிஎஃப் நிதியத்தின் பெரும்பகுதி வெட்டிவிடப்பட்டது. சர்வதேசரீதியாக பெறப்பட்ட டொலர்கடன்களில் ஒன்றுகூட வெட்டிவிடப்படவில்லை. அன்று நிலவிய 83 பில்லியன் டொலர் கடன்நெருக்கடியைத் தீர்த்துவைக்க வந்த ரணில் விக்கிரமசிங்க கடந்த இரண்ட வருடங்களக்குள் அந்த கடன் அளவினை மேலும் அதிகரித்து கடன் நெருக்கடிக்குள் சிறைப்படுத்தி இருக்கிறார். இந்த வருடத்தின் மார்ச்சு மாதத்தில் முடிவடைகின்ற கடன் அறிக்கைக்கிணங்க எமது கடன் அளவு 100 பில்லியன் டொலர் (100,000 மில்லியன்) வரை அதிகரித்துள்ளது.
பெறப்பட்ட கடன் அளவினை அதிகரித்துக்கொள்ள அரசாங்கள் உள்நாட்டக் கடனை அதிகரித்துள்ளது. அவர்களின் அறிக்கைகளின்படி உள்நாட்டக் கடன் அதிகரிக்கையில் திறைசேரி முறிகள் 37,182 மில்லியன் டொலர்களிலிருந்து 41,522 மில்லியன் டொலர் வரை அதிகரித்துள்ளமை சுட்டிக்காட்டப்படுகின்றது. கடந்த திசெம்பர் மாதமளவில் எமது கடன் 96 பில்லியன் டொலர்களாகும். அந்த கடன் அளவு இந்த வருடத்தின் மதல் மூன்று மாதங்களில் 04 பில்லியன் டொலர்களால் அதிகரிக்கின்றது. 2024 முதலாவது காலாண்டில் 4300 மில்லியன் டொலர் கடன் பெறப்படுகின்றது. இலங்கையில் திறைசேரி முறிகளை விநியோகிப்பதன் மூலமாக புதிதாக 4.3 பில்லியன் டொலர் கடன் பெறப்பட்டுள்ளது. முன்று மாதங்களுக்கான கடன் இப்படியென்றால் 12 மாதங்கள் நிறைவடைகையில் 16 பில்லியன் டொலர் அளவிலாக கடன் கடன்பெறவேண்டியநிலை அரசாங்கத்திற்கு ஏற்படும். இவ்விதமாகத்தான் கடன் நெருக்கடியை அதிகரித்துள்ளார்கள்.
அஸ்வெசும திட்டத்தை அமுலாக்க உலக வங்கியிடமிருந்து 500 மில்லியன் டொலர் கடன்பெறப்பட்டது. அதைப்போலவே எரிவாயுவின் விலையை ஒரு மட்டத்தில் பேணிவரவதற்காக 70 மில்லியன் டொலர்களை உலக வங்கியிடமிருந்து கடனாகப் பெற்றார்கள். அதனால் கடன் நெருக்கடி அதிகரிக்கப்பட்டுள்ளது. நாட்டை பொருளாதாரரீதியில் கட்டியெழுப்புவதாகக்கூறி ஆட்சிக்க வந்த ரணில் ராஜபக்ஷ இந்த குறுகிய காலத்தில் செய்திருப்பதோ மேன்மேலும் கடன் சுமையை அதிகரிப்பதையாகும். பெற்ற அந்த கடன்களை இந்த காலத்தில் செலுத்தவும் போவதில்லை. அதனால் கடனுக்காக செலுத்தவேண்டிய வட்டியின் அளவும் செலுத்து வேண்டிய கடன் அளவும் அதிகரிக்கும். அவர்களின் அறிக்கைகளின்படி செலுத்தவேண்டியுள்ள வட்டி அளவு 6.4 பில்லியன் டொலர்வரை அதிகரித்துள்ளது. இந்த நெருக்கடி மிகவும் பாரதூரமானது. ரூபா உறுதியடைந்துவிட்டது: பணவீக்கம் குறைந்தவிட்டது என அவர்கள் மேலெழுந்தவாரியாக கூறுகிறார்கள். எனினும் உண்மையிலேயே ரணில் ராஜபக்ஷ இந்த குறுகிய காலத்தில் முன்பு இருந்ததைப் பார்க்கிலும் பாரிய கடன் நெருக்கடிக்குள் எம்மை வீழ்த்தி இருக்கிறார்கள்.
நாட்டு மக்களின் கடன்சுமை, வரிச் சமையை அதிகரித்து, பண்டங்கள் மற்றும் சேவைகளின் விலைகளை அதிகரித்து, மக்களை நாளுக்குநான் பிரச்சினையில் போட்டு, ரணில் விக்கிரமசிங்கவின் செலவுத் தலைப்பினை மேலும் 875 கோடியால் அதிகரித்துக்கொள்ள குறைநிரப்பு மதிப்பீட்டினைக் கொண்டுவருகிறார்கள். 2023 இல் சமர்ப்பித்த வரவுசெலவில் 600 கோடி ரூபா சனாதிபதியின் செலவுத் தலைப்பிற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. அதற்கு மேலதிகமாக இந்த குறைநிரப்பு மதிப்பீட்டினை எதிர்வரும் 18 ஆந் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக ஒழுங்குப் பத்திரத்திற்கு ஆற்றுப்படுத்தி இருக்கிறார்கள். ஓர் இராஜாங்க அமைச்சர் சனாதிபதியின் வெளிநாட்டு விஜயங்களுக்காக நிதியை ஒதுக்கீடு செய்வதாகக் கூறினார். கடந்த 24 மாதங்களில் சனாதிபதி 25 தடவைகள் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்டார். இந்த விரயமான செலவுகள் நாட்டை மென்மேலும் நெருக்டிக்குள் தள்ளுகின்றன. நாட்டில் பாரிய நெருக்கடி நிலவுகையில் இருக்கின்ற சனாதிபதிக்கு பெருந்தொகையான நிதி ஒதுக்கப்படுகின்றது. அதைப்போலவே முன்னாள் சனாதிபதிமார்களை பராமரிப்பதற்காகவும் கோடிக்கணக்கில் பணத்தை ஒதுக்கீடு செய்கிறார்கள்.
முன்னாள் சனாதிபதிமார்களின் வேதனாதிகள், படிகள் யாவையென வினவியவேளையில் அளித்த பதிலில் சந்திரிக்கா குமாரதுங்க அம்மையாரின் ஓய்வூதியம் 97,500 ரூபா. செயலாளர் கொடுப்பனவு 100,000 ரூபா. மாதாந்த எரிபொருள் படி 500,000 ரூபா. இது பாதுகாப்பு மற்றும் வீட்டுவதிகளை உள்ளடக்கவில்லை. மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஓய்வூதியம் ரூபா 97,500. செயலாளர் கொடுப்பனவு ரூபா 50,000. மாதாந்த எரிபொருள் படி ரூபா 704,100. மைத்திரபால சிறிசேன அவர்களுக்கு ஓய்வூதியம் ரூபா 97,500. செயலாளர் கொடுப்பனவு ரூபா 100,000. மாதாந்த எரிபொருள் படி ரூபா 704,100. பொதுமக்களால் விரட்டியடிக்கப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு ஓய்வூதியம் ரூபா 97,500. செயலாளர் கொடுப்பனவு ரூபா 100,000. விரட்டியடிக்கப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பொதுப் பணத்தில் மாதாந்த எரிபொருள் படி ரூபா 704,100. இந்த ஆட்சியாளர்கள் பொதுமக்களின் பணத்தை இவ்வாறுதான் விரயமாக்குகிறார்கள்.
ஐந்த வருடங்களைவி-ட ஒருநாள்கூட பதவியில் இருக்க முடியாதென உயர்நீதிமன்றம் பொருள்கோடல் வழங்கியது. ஆறு வருடங்களுக்கு நியமிக்கப்பட்ட ஒருவரும் அதற்கு மேலாக இருக்கமுடியாதென தீர்ப்பளித்தது. அவ்வாறு இருக்கையில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எப்படியும் இருக்க முடியாது. 30: 2 பிரிவின்படி இருக்ககூடிய காலம் ஐந்து வருடங்களாகும். இந்த காலப்பகுதியாக அமைவது இந்த வருடத்தின் நவெம்பர் 17 ஆந் திகதியாகும். அதற்கப்பால் ஒருநாள்கூட இருக்கமுடியாது. நாங்கள் நாட்ட மக்குளக்கு கூறுவது இந்த