-Colombo, January 04, 2024-
தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் என்றவகையில் நிகழ்காலத்தில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் பற்றியும் வெலிகமவில் இடம்பெற்ற பொலீஸ் உத்தியோகத்தரின் படுகொலை சம்பந்தமாகவும் விழிப்புணர்வூட்டுவதற்காகவே இந்த ஊடக சந்திப்பு நடைபெறுகின்றது. தேசிய மக்கள் சக்தி கொள்கையென்றவகையில் ஊழல், மோசடி, குற்றச்செயல்களை கண்டிக்கின்ற ஓர் இயக்கமாகும். பாதாள உலகிற்கு, போதைத் தூளுக்கு, போதைப் பொருட்களுக்கு எதிராக பொலீஸாரினால் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளுக்கு சட்டத்தரணிகள் என்றவகையிலும் தேசிய மக்கள் சக்தி என்றவகையிலும் எமது ஒத்துழைப்பு கிடைக்கின்றது. எமது அரசாங்கத்தின் கீழும் இந்த பாதாள உலகத்தை அடக்குவதற்காக சரிவர முன்நோக்கிச்செல்லத் தயார்.
இலங்கை பொலீஸார் மிகவும் திறமையான ஒரு குழுவென்பதோடு எந்தவொரு குற்றச்செயலையும் கண்டுபிடிக்கவல்ல ஆற்றல் படைத்ததாகும். அதைப்போலவே அவசியமான உட்கட்டமைப்பு வசதிகள் இருக்கின்றன. எனினும் பொலீஸாரால் கண்டுபிடிக்க இயலாமல் போன ஒவ்வொரு குற்றச்செயலின் பின்னாலும் அரசியவாதியொருவர் இருக்கிறார். நாங்கள் இந்த இடத்தில் போதைப்பொருள் தலைப்பினை சுருக்கி எடுத்துக்கொள்கிறோம். லங்காதீப செய்தித்தாளில் அண்மையில் வெலிகம சம்பவம் தொடர்பாக தலைப்புச் செய்தியில் ” “பொலீஸாரால் பொலீஸாருக்கு” துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. நாங்கள் இதுவரை வரலாற்றில் இராணுவத்தினால் இராணுவத்திற்கு துப்பாக்கிப் பிரயோகம்செய்து அல்லது பொலீஸாரால் பொலீஸார்மீது துப்பாக்கிப் பிரயோகம்செய்து மனிதப்படுகொலை செய்யப்பட்டமையைக் கேள்விப்படவில்லை. பொலீஸிற்குப் பொறுப்பான அமைச்சர் இந்த செயல் சம்பந்தமாக நட்டஈடு வழங்குவதாகவும் அமைச்சரும்கூட உயிரைத் தியாகம்செய்து செயலாற்றத் தயார் எனவும் நாங்கள் தொலைக்காட்சி செய்திகள் மூகமாகக் கண்டோம். பொலீஸிற்கப் பொறுப்பான அமைச்சரின் ஒரு யுனிற் மற்றுமொரு யுனிற்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தமையே இந்த சம்பவம். அதாவது வலது கையால் இடது கைமீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தமையாகும். இந்த சம்பவத்தின்போது அமைச்சர் மார்தட்டிக்கொள்ளலோ அல்லது உயிர்த்தியாகத்துடன் செயலாற்றுகிறார் என்றோ கூறிவிட இயலாது. இத்தகைய பாரதூரமான குற்றச் சம்பவமொன்று எவ்வாறு இடம்பெற்றதென்பது பற்றி தெளிவான விசாரணையொன்று மேற்கொள்ளப்பட்டே ஆகவேண்டும்.
இறந்த பொலீஸ் உத்தியோகத்தரின் குடும்பத்தவர்களுக்கு இறப்பு சம்பந்தமாக நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்தால் இந்த நட்டஈட்டு வழக்கின் பிரதிவாதிகளாக மாறப்போவது யார்? இவ்விதமாக சட்டத்தைக் கையிலெடுத்து, சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி, அரசியல்வாதிகளுக்கு தேவையானவகையில் “யுக்திய” (நீதி) தொழிற்பாட்டின் நடவடிக்கைகளை அமுலாக்கி மேற்கொள்கின்ற குற்றச்செயல்களுக்கு எமது எதிர்ப்பினையும் விமர்சனத்தையும் முன்வைக்கிறோம். இந்த செயல்களை இடைநிறுத்துதல் மேற்கொள்ளப்படல் வேண்டும். நாட்டு மக்களை அச்சுறுத்துவதற்காக ஆயுதங்களை கொண்டு வருதல், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளல், நீதித்துறை சாராத இறப்புகளுக்காக செயலாற்றுதல் போன்ற அரச பயங்கரவாதம் அமுலாக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற இந்த செயற்பாட்டினை தேசிய மக்கள் சக்தி வன்மையாக கண்டிக்கின்றது. போதைப்பொருட்களையும் குற்றச்செயல்களையும் நிறுத்துவதற்காக நீங்கள் நம்பிக்கை வைக்கக்கூடிய ஒரே குழு தேசிய மக்கள் சக்தியுடன் மாத்திரமே இருக்கின்றது என்பதைக் கூறவேண்டியுள்ளது.
“நீதியின் பெயரால் அநீதி இடம்பெற இடமளித்தலாகாது. இந்த மண்ணில் நீதியை நிலைநாட்டுவது நீதிமன்றமேயொழிய பொலீஸ் அல்ல.“
–சட்டத்தரணி அகலங்க உக்வத்த–
தொழில்சார் சட்டத்தரணிகள் என்றவகையிலும் தேசிய மக்கள் சக்தி என்றவகையில் எமது கூட்டமைவும் நீதி பரிபாலனத்திற்காக மோசடிகள், ஊழல்கள், போதைப்பொருள் மற்றும் பாதாள உலகம் போன்ற ஒட்டுமொத்த குற்றச் செயல்களையும் தடுப்பதற்காக மேற்கொள்கின்ற செயல்களுக்கு எமது பாராட்டுக்களையும் அதற்கான எமது ஒத்துழைப்பினையும் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த நீதிக்குள் பதில் பொலீஸ் மா அதிபரின் பதிற்கடமைக்குள் நீதிக்காக அநீதி ஏற்படுமாயின் அதற்காக குரல்கொடுப்பதற்கான உரிமை சட்டத்தரணிகள் என்றவகையில் எமக்கு இருக்கின்றது. “ஏதேனுமிடத்தில் இடம்பெறுகின்ற அநீதி எல்லாவேளையிலும் நீதிக்கு எதிராக இடம்பெறுவதாகும்” என மார்டின் லூதர் கிங் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு விடயங்களை நான் கேள்விக்குறியாக சுருக்கமாகக் காட்டுகிறேன். அமைச்சரினதும் பதிற்கடமையாற்றுகின்ற பொலீஸ் மா அதிபரினதும் 2006 தொடக்கம் 2009 வரையான காலப்பகுதிக்குள் அவர் மிரிஹானையின் எஸ்.எஸ்.பி. அவர் நுகேகொட டிவிஷனில் இருந்து தென்மாகாண நடவடிக்கைக்காக சென்று அதைப்போலவே இருவரோ அல்லது ஒருவரோ படுகொலை செய்யப்பட்டார். அவ்வேளையில் 2006 தொடக்கம் 2009 வரை இருந்த ஐ.ஜீ. தான் திரு. இலங்கக்கோன். “ஏதேனும் சந்தர்ப்பத்தில் தனது பொலீஸ் ஆளுகைப் பிரதேசத்திற்கு வெளியில் சென்று சுற்றிவளைப்பொன்றை மேற்கொள்வதாயின் கட்டாயமாக பிரதேச பொலீஸ் ஆளுகை எல்லைக்குள் இருக்கின்ற பொலீஸ் நிலையத்திற்கு விழிப்புணர்வூட்டுதல் வேண்டும்” என அன்று புரிந்த அந்த தவறுக்காக திரு. இலங்கக்கோன் சுற்றறிக்கையொன்றை வெளியிட்டார். தற்போது தேசபந்து தென்னக்கோன் பதிற்கடமையாற்றுகின்ற பொலீஸ் மா அதிபரென்றவகையில் இருக்கின்றவேளையில் தனக்கு அன்று இடம்பெற்ற தவறுடன் தொடர்புடைய சுற்றிக்கையை மீண்டும் அவராலேயே மீறப்பட்டுள்ளது. அவர் பொலீஸின் மிகவும் உயர்ந்த அதிகாரியாவார். பொலீஸ் மா அதிபர் விடுத்துள்ள கட்டளைச்சட்டத்திற்கு ஐ.ஜீ. மாத்திரமன்றி பதில் ஐ.ஜீ. உம் கடப்பாடு கொண்டுள்ளார்கள். டீ.ஐ.ஜீ., ஏ.எஸ்.பி. போன்ற கீழ் மட்டத்திலுள்ள உத்தியோகத்தர்கள் அனைவரும் கடப்பாடு கொண்டவர்களாவர். ஐ.ஜீ. இற்கு எந்தவிதமான சிறப்புரிமையும் கிடையாது. விடுபாட்டுரிமையும் கிடையாது.
வெலிகம சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றவியல் பிரிவின் கே.டி.எச் வாகனமொன்றில் வந்த சம்பந்தப்பட்ட டபிள்யு ஃபிப்டீன் எனும் ஹோட்டலில் சுற்றிவளைப்பு ஒன்றினை மேற்கொள்கின்ற தருணம்பற்றி வெலிகம பொலீஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கவில்லை. ஊடகப் பேச்சாளரின் முதலாவது நிலைப்பாடாக அமைந்தது சம்பந்தப்பட்ட போதைத்தூள் வியாபாரியின் கையாட்களும் அவருடன் தொடர்பினை பேணிவந்த ஒருவரும் மாத்தறை தெற்கு பிரதேசத்தைச்சேர்ந்த இருவரில் ஒருவர் அந்த இடத்தில் தங்கி இருந்தார். அதனால் 2023 திசெம்பர் 31 அந் திகதி இரவில் அதிகாலையில் அங்கு சென்றார். அந்த ஹோட்டல் திசையில் இருந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. அதற்கு அவர்கள் பிரதிபலிப்புச் செய்தார்கள். எனினும் இந்த புலன்விசாரணையின்போது ஹோட்டல் திசையிலிருந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படவில்லை என்பது வெளியாகியது. ஹேட்டலில் தங்கி இருந்தவர்கள் துப்பாக்கிப் பிரயோக சம்பவம் பற்றிய பிரச்சினை வந்ததும் 119 இற்கு அழைத்துள்ளார்கள். 119 இல் வெலிகம பொலீஸுடன் தொடர்புகொண்ட பின்னர் வெலிகம பொலீஸார் அத்தருணமாகும்வேளையிலும் யுக்திய நடவடிக்கைக்கு இராணுவ உத்தியோகத்தர்களை இணைத்துள்ளார்கள். அவர்கள் வந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்துகொண்டிருந்த வேன்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார்கள். இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் அவர்கள் தப்பியோடுகிறார்கள். இறுதியாக இமதூவவில் அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலில் பிரவேசித்தவேளையில் அந்த இடத்தில் இருந்த உத்தியோகத்தர் இந்த வாகனத்தை நிறுத்துகிறார். வாகனத்தின் பின்புறத்தில் இரத்தம் பெருக்கெடுத்த ஒருவரையும் உயிருடன் போராடிக்கொண்டிருந்த ஒருவரையும் கண்டுள்ளார். அந்த உத்தியோகத்தர் வாகனத்தைச் செல்லவிடாமல் அம்பியுலன்ஸ் வண்டியொன்றை அழைப்பித்து காயமுற்றவர்களை வைத்தியசாலைக்கு அனுப்புகிறார். வாகனத்தை விடுவித்தல் சம்பந்தமாக சீ.சீ.ரீ.வீ. இன் பிரதான பணிப்பாளரின் அழைப்பொன்று கிடைத்தமைக்கான தகவல்கள் இருக்கின்றன.
இந்த இடத்தில் கேள்வியொன்று இருக்கிறது. கராபிட்டிய வைத்தியசாலைக்குச் செல்ல ஏன் இமதூவவிற்கு போட்டார்கள்? மனிதனொருவன் உயிருக்காக பேராடிக்கொண்டிருக்கையில் வைத்தியசாலைக்கு அனுப்புவதென்றால் அருகில் உள்ள வைத்தியசாலைக்கா அனுப்பவேண்டும், அல்லது தொலைவில் உள்ள வைத்தியசாலைக்கா? அருகிலேயே மாத்தறை மற்றும் வெலிகம வைத்தியசாலைகள் இருக்கின்றன. இமதூவ வரை வருகின்றமை எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. எமக்கு இருக்கின்ற பிரச்சினை என்னவென்றால் (யுக்திய) நீதியின் மறைவில் மேற்கொள்ளப்படுகின்ற (அயுக்திய) அநீதியாகும். கிடைத்துள்ள தகவல்களின்படி கே.டீ.எச். இல் உள்ள நம்பர் பிளேற் கூட போலியானதாகும். இமதூவவில் நிறுத்தியிராவிட்டால் இந்த சம்பவம் முற்றாகவே மூடிமறைக்கப்பட்டிருக்கும். வெலிகம பொலீஸார் வந்திராவிட்டால், பொலீஸாருக்கும் பொலீஸாருக்கும் இடையில் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றிராவிட்டால், ஹோட்டலில் எவராவது இறந்திருப்பின், அந்த பொறுப்பினை ஏற்பது யார்? அது களத்திற்கு வரமாட்டாது. இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க ஊடகப் பேச்சாளருக்குத் தெரியாது.
எஸ்.சீ.எஃப்.ஆர். அடிப்படை உரிமை வழக்கில் 107/2011 இன் கீழ் பதில் பொலீஸ் மா அதிபருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் கட்டளையொன்று பிறப்பிக்கப்பட்டது. சொந்தப்பணத்தில் ஐந்துஇலட்சம் ரூபா செலுத்துமாறு கூறப்பட்டது. மிகவும் கொடூரமாகவும் மனிதாபிமானமற்றவகையிலும் நடத்தியதாக அந்த மனுதாரர்கள் கூறினார்கள். அப்படிப்பட்ட ஒருவரை பொலீஸ் அமைச்சரால் பாதுகாக்க முடியுமா?
தேசபந்து தென்னக்கோன் மேல்மாகாண வடக்குப் பிரிவுக்குப் பொறுப்பாக 2015 இல் நியமிக்கப்பட்டார். தற்போது 09 வருடங்களாகின்றன. இந்த போதைப்பொருள் நடவடிக்கையை மேற்கொள்ள பொலீஸ் மா அதிபராகவே வேண்டுமா? இந்த பதில் பொலீஸ் மா அதிபரை எந்தகைய நிலைமையிலும் நீக்க இடமளிக்கமாட்டேன் என பொலீஸிற்குப் பொறுப்பான அமைச்சர் பகிரங்கமாகவே கூறினார். எனினும் உயர்நீதிமன்றம் SCFR/107/2011 இலக்கமுடைய அடிப்படை உரிமைகள் வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்றம் தேசபந்து தென்னக்கோனுக்கு குற்றத்தீர்ப்பளித்து கொடூரமாகவும் நிந்திக்கத்தக்கவகையிலும் செயலாற்றியுள்ளதாக தீர்ப்பளித்தது. முறைப்பாட்டாளருக்கு சொந்தப்பணத்தில் ஐந்து இலட்சம் ரூபா நட்டஈட்டினை செலுத்தி அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் தீர்ப்பளித்தது. நீதிமன்றத்தினால் இத்தகைய தீர்ப்பளிக்கப்பட்ட உத்தியோகத்தர் ஒருவரை பொலீஸில் வைத்துக்கொள்ளலாமா? அவ்வாறான தீர்ப்பு வேறோருவருக்கு வந்திருந்தால் பதவியிறக்கம் செய்வார்கள். அதைப்போலத்தான் மே 09 ஆந் திகதி போராட்டம்மீது தாக்குதல் நடாத்தியமை போன்றே சனாதிபதி மாளிகையில் இருந்து கண்டெடுத்த பணத்தை முறையான செயற்பாங்கின் மூலமாக கையளிக்காமையுடன் தொடர்புடைய இரண்டு வழக்குகள் அவருக்கு எதிராக நிலவுகின்றன.
இவ்வாறான ஒருவரை பதில் பொலீஸ் மா அதிபராக நியமித்து எந்தவொரு நிலைமையின்கீழும் அந்த பதவியில் இருந்து நீக்கமாட்டேன் என அரசியல் தலைமை கூறுகின்றது. அப்படிப்பட்ட ஒரு நாட்டுக்கு நீதிமன்றம் எதற்காக? நாட்டின் தலைவர் பிணைமுறி சம்பந்தமான குற்றச்சாட்டுக்கு இலக்காகி, அரசாங்கக்கட்சி முதற்கோலாசான் கப்பம் வாங்கியமைக்காக குற்றவாளியாகி, மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பயங்கரவாத அமைப்பொன்றுக்கு நிதி வழங்கி இருக்கையில், பொலீஸ் மா அதிபர் அடிப்படை உரிமைகளை மீறியிருக்கையில் தொடர்ந்தும் அவர்கள் நாட்டை ஆட்சிசெய்வதனால் குடிமகனுக்கு நீதி கிடைக்குமா? பொலீஸாரால் நீதியை நிலைநாட்ட முடியாது, அதற்காகவே நீதிமன்றம் இருக்கின்றது. சம்பந்தப்பட்ட புலன்விசாரணைகளை முறைப்படி மேற்கொண்டு நீதிமன்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவே பொலீஸ் இருக்கின்றது. இந்த மண்ணில் நீதியை நிலைநாட்டுவது நீதிமன்றமேயன்றி பொலீஸ் அல்ல. யுக்திய (நீதி) நடவடிக்கை எனும் பெயரால் கைதுசெய்யப்படுகின்ற ஒவ்வோர் ஆளும் சந்தேகிக்கப்படுகின்ற ஒருவரேயன்றி குற்றவாளியல்ல. எப்படிப்பட்ட கூத்தினை நடாத்தியேனும் பதில் பொலீஸ் மா அதிபர் பொலீஸ் மா அதிபராவது பெரியதொரு செயலா? வெலிகமவில் சூடுபட்டு பொலீஸ் உத்தியோகத்தர் உபுல் சமிந்தவின் பிள்ளைகளுக்கு தந்தையை இழக்கச்செய்வித்து தேசபந்து தென்னக்கோன் பொலீஸ் மா அதிபராகவேண்டியது பெரிய விடயமா? அந்த மனைவிக்கு கணவனை இழக்கச்செய்வித்து தேசபந்து பொலீஸ் மா அதிபராவது பெரிய விடயமா? எமது கேள்வி அதுதான்.
“மனித உயிர்களை புழுதியாக மாற்றுகின்ற போதைப்பொருள் தொல்லையில் இருந்து நாட்டைக் காப்பாற்றவேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டுதான் நாங்கள் இங்கு பேசுகிறோம்.“
–தேசிய மக்கள் சக்தி சட்டத்தரணிகள் அமைப்பின் சட்டத்தரணி சுனில் வட்டகல–
வெலிகம சம்பவம் தொடர்பாகவும் சர்ச்சைக்குரிய நடவடிக்கை சம்பந்தமாகவும் நிலவுகின்ற சட்டரீதியான கோட்பாடு என்ன? வெலிகம துப்பாக்கிச் சூட்டின் மறைவில் இருக்கின்ற கதையைப் பற்றி பிரதான ஊடகத்தில் போலவே சமூக வலைத்தளங்களிலும் பாரிய கதைகள் அடிபடுகின்றன. இந்த ஊடகங்களில் தோன்றியுள்ள உரையாடல்களில் வெளியாகின்ற விடயங்கள் சம்பந்தமாக மேற்கொள்ளப்படுகின்ற விசாரணை என்ன?
வெலிகம துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் தெகிவல ஹோட்டலொன்றை இடித்து அகற்றுகின்ற நாடகம் அரங்கேற்றப்பட்டது. அந்த ஹோட்டல் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் பொலீஸ் அமைச்சர் சரத் வீரசேகர, மதுர விதானகே, ஜயந்த கெட்டகொட, ஏ.எம்.எஃப். பௌஸி போன்ற முன்னாள் அமைச்சர்களின் பங்கேற்புடன் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. ஹோட்டல் சம்பந்தமாக பெறப்படவேண்டிய அனைத்து அனுமதிப் பத்திரங்களையும் பெற்றுள்ளதாக ஹோட்டல் தொடர்பில் விடயங்களை முன்வைக்கின்ற தரப்பினர்கள் கூறுகிறார்கள்.
அதைப்போலவே மேலும் மூன்றாவது சம்பவமொன்றும் இருக்கின்றது. அந்த சம்பவம் நாட்டு மக்களில் மிகஅதிகமானோரைப் பாதிக்கின்றது. மனித உயிர்களை புழுதியாக மாற்றுகின்ற போதைப்பொருள் தொல்லையில் இருந்து நாட்டைக் காப்பாற்றவேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டுதான் தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகளாகிய நாங்கள் இங்கு பேசுகிறோம். ஆனால் தற்போது இடம்பெறுவதோ போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்பற்ற ஆட்களைக்கூட பொலீஸ் நிலையங்களில் தடுத்துவைத்தலாகும். தாம் வசிக்கின்ற பிரதேசத்தில் பொதுமக்களுக்காக மனுக்களில் கையொப்பம்பெற்ற பெண்களைக்கூட போதைப்பொருள் குற்றச்சாட்டின்பேரில் பொலீ்ஸ் நிலையங்களில் தடுத்து வைத்திருக்கிறார்கள். இன்றளவில் நாட்டில் நிலவுகின்ற பாரிய அரசாங்க எதிர்ப்பினைச் சுற்றிக் குழுமிவருகின்ற மக்களை பயமுறுத்துகின்ற கதவினைத்தான் இவர்கள் தட்டிவருகிறார்கள்.
மின்சார சபையை துண்டாடி விற்பனை செய்வதற்கு எதிராக பாரிய எதிர்ப்பு இயக்கமொன்று நடாத்தப்பட்டு வருகின்றது. அவர்களை பயமுறுத்த பொய்யான சுற்றறிக்கைகளை வெளியிடுகிறார்கள். போதைப்பொருள் நடவடிக்கையின் நாமத்தால் அவ்வாறான நடவடிக்கையைத்தான் இவர்கள் புரிந்து வருகிறார்களா எனும் பாரிய சந்தேகம் எமக்கு நிலவுகின்றது. மனிதர்களை பாரியளவில் பயமுறுத்தி வைக்க முன்னெடுத்து வருகின்ற முயற்சியா எனும் சந்தேகம் எம்மிடம் நிலவுகின்றது.
வெலிகம நடவடிக்கையை உள்ளிட்ட நடவடிக்கைகளின்போது இந்துருவே ஆச்சாரிக்கு நேர்ந்த சம்பவத்தைப்போன்ற ஒன்றுதான் நேர்ந்துள்ளது. நீதிமன்றத்திடமிருந்து பெற்ற “A” அறிக்கையொன்றைக்கூட பெறாமலேயே வெலிகம நடவடிக்கைக்கு வெளியிடத்திலிருந்து பொலீஸ் உத்தியோகத்தர்கள் அனுப்பப்படுகிறார்கள். ஹோட்டலை இடித்து தகர்ப்பதற்காக பெறப்பட்ட நீதிமன்றக் கட்டளை இருக்கவில்லை. யுக்திய (நீதி) எனும் பதத்தை முன்னால் போட்டுக்கொண்டு வேறு நடவடிக்கைகள், குறுகிய தனிப்பட்ட நோக்கங்களை ஈடேற்றிக்கொள்ள முயற்சி செய்கிறார்களா எனும் சந்தேகத்தை தேசிய மக்கள் சக்தி கிளப்புகின்றது. முன்னெடுத்து வருகின்ற இந்த செயற்பாடுகள் ஊடாக சனநாயகத்தை சட்டத்தின் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்துகிறார்களா எனும் பாரிய சந்தேகம் எம்மிடம் நிலவுகின்றது.